நாம் தமிழர் கட்சி - விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரவீணா அவர்களின் சகோதரர் மருத்துவப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பிரவேஷ் மற்றும் அவரது இணையர் சேர்மக்கனி ஆகியோர் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் வேதனையுற்றேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் புரட்சிகரப் படையான நாம் தமிழர் கட்சியில் குடும்பத்துடன் இணைந்து களப்பணியாற்றி வந்த அன்புத்தம்பி பிரவேஷ் மற்றும் அன்புத்தங்கை சேர்மக்கனி ஆகியோரின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பி பிரவேஷ் , தங்கை சேர்மக்கனி ஆகியோரை இழந்து பெருந்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் கட்சி சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பிரவேஷ் மற்றும் தங்கை சேர்மக்கனி ஆகியோருக்கு என் கண்ணீர் வணக்கம்!
Seeman
Senthamizhan Seeman () (born 8 November 1966) is an Indian politician, actor and former filmmaker. He is the leader and chief-coordinator of the Naam Tamilar Katchi political party in Tamil Nadu. He is a strong advocate for regional autonomy and Tamil nationalism. More on Wikipedia
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூத்த களச்செயற்பாட்டாளர் ஐயா பொன்மலை இரவிச்சந்திரன் அவர்களின் மருமகள் சுவாதி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மருமகளை இழந்து வாடும் ஐயாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தங்கை சுவாதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர் முன்னணி மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி புத்தாம்பூர் அன்பழகன் அவர்களின் தாயார் அம்மா மீனாட்சி அம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா மீனாட்சி அம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கண்ணீர் வணக்கம்!
ஈழத்தாயகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக்காலம் தொட்டு தமிழின விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துப் போராடியவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ம.க. சிவாஜிலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த வீரமிகு வல்வெட்டித்துறை மண்ணில் பிறந்து, இளம்வயதிலேயே தமிழீழ விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தமிழினத்தின் விடுதலைக்காகப் போராட்ட வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தொடக்கக்காலப் போராளியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, வடக்கு மாகாண சபை உறுப்பினராக, வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தபோதும், பதவிகளைக் கடந்து தமிழின விடுதலையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு இறுதிமூச்சுவரை பயணித்த பெருந்தகை அவர்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவற்ற பற்றும் பெருமதிப்பும் கொண்டிருந்த ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள், தேசியத்தலைவரின் தமிழீழ விடுதலை இலட்சியத்திற்கு உறுதுணையாக நின்றவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் ஆதரவையும், தமிழினத்தின் தன்னாட்சி உரிமைக்கான குரலையும் எந்தச் சூழலிலும் கைவிடாதவர். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், எத்தனை அச்சுறுத்தல்கள் எழுந்தாலும், தமிழினத்தின் உரிமைக்காக உரக்கக் குரலெழுப்புவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காத பெருந்துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தாயகமே அச்சத்திலும் அடக்குமுறையிலும் உறைந்திருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளை அழித்தொழிக்க முயன்றவர்களுக்கு எதிராகத் துணிந்து நின்றவர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள். மாவீரர் நாள் நினைவேந்தல்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்கள், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் என எதற்கும் அஞ்சாது முன்னின்று களமாடியவர். விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அழித்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு, அதை நினைவுகூர்ந்து காப்பதும் ஒரு போராட்டம்தான் என்பதைத் தன் வாழ்வால் உணர்த்தியவர்!
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் உடல்நலிவுற்று மருத்துவச் சிகிச்சைக்காகத் தவித்தபோது, அவருக்கு உரிய மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சிகள் எவராலும் மறக்கவியலாதவை. அன்னையார் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுவதற்காகப் பல்வேறு தடைகளையும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடியதோடு, இறுதிக்காலத்தில் அவரை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்ட அவரது மனிதநேயப் பேருள்ளம் என்றும் போற்றுதலுக்குரியது.
தமிழீழ விடுதலைக்காக மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும் அக்கறைகொண்டு செயல்பட்ட ஐயா அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மீதும் அதன் கொள்கை இலட்சியங்களின் மீதும் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய அரசியல் தமிழகத்தில் வலுப்பெற வேண்டும் என்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். என் மீதும் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பையும் பாசத்தையும் அக்கறையையும் கொண்டிருந்தவர். அரசியல் உறவையும் கடந்து ஓர் அன்புமிகு மூத்த உறவாக அவர் காட்டிய நேசமும், என் மீது கொண்டிருந்த அக்கறையும் என் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அரசியல் தலைவராக, ஒரு விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்ல; தமிழீழ விடுதலை எனும் உயரிய இலட்சியத்தை இறுதிமூச்சுவரை இதயத்தில் சுமந்த தமிழினத்தின் உண்மையான பற்றாளராக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள்!
தமிழினத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்துப் போராடிய பெருமதிப்பிற்குரிய ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஈழத்தாயக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, அவருக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா?
@CMOTamilnadu @TVKVijayHQ
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருத்தணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தப் பொறுப்பாளர்கள் அன்புத்தம்பி அ.அரிபிரசாத், அ.அருண்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா மு.அம்மாவாசை அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மு.அம்மாவாசை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆர்மீனிய அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கதுரை நடராஜனை தாயகம் மீட்டுவர இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கதுரை நடராஜன் அவர்கள் ஆர்மீனிய அரசால் உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆர்மீனிய அரசு மேற்கொண்டுள்ள இக்கைது நடவடிக்கை குறித்து முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டதால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
குடும்ப வறுமை காரணமாக வேலை வாய்ப்பு தேடி சென்ற தங்கதுரை நடராஜன் ஆர்மீனிய அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறியாது, குறிப்பிட்ட இடத்தை விளையாட்டாக எடுத்த ஒரு புகைப்படத்திற்காக இத்தகைய கடுமையான குற்றம் சுமத்தப்பட்டு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெருங்கொடுமையாகும். தங்கதுரை நடராஜன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன, அதன் மீதான உண்மைத்தன்மை என்ன, அவருக்கு எத்தகைய சட்ட உதவிகள் செய்வது என்பது குறித்து எவ்வித அக்கறையுமின்றி அலட்சியமாகச் செயல்படும் தவெக அரசு, அவரைத் தாயகம் மீட்டுக் கொண்டுவருவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்துக்குரியது. நாட்டின் குடிமகன் ஒருவர் அயல்நாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பையும், அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் முதன்மைக் கடமையாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தங்கதுரை நடராஜன் அவர்களை விடுவிக்கத் தேவையான சட்ட மற்றும் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வழக்கு விசாரணை நிலை குறித்த தகவல்களை அவருடைய குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குழந்தைகளின் சின்னஞ்சிறு விழிகளில் ஆயிரம் கனவுகள்!
கள்ளமில்லாச் சிரிப்பில் உலகின் அத்தனை அழகுகள்!
அன்பும் அறிவும் நிறைந்து, அச்சமின்றி விளையாடி, விரும்பியதைக் கற்று, கனவுகளை நோக்கி மகிழ்வுடன் வளரட்டும் நம் குழந்தைகள்!
அவர்களின் கேள்விகளுக்குச் செவிகொடுப்போம்; திறமைகளை ஊக்குவிப்போம்; பாதுகாப்பான, சமத்துவமான உலகை அவர்களுக்காக உருவாக்குவோம்!
குழந்தையின் கையில் புத்தகமும், நெஞ்சில் துணிவும், விழிகளில் கனவும் இருக்க வேண்டும்! பசியும் வறுமையும் அச்சமும் அவர்களின் பிஞ்சுப் பருவத்தைப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது!
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சக மனிதரை நேசிக்கவும், தாய்மொழியைப் போற்றவும், இயற்கையைக் காக்கவும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!
கேள்வி கேட்கும் குழந்தைகளை ஊக்குவிப்போம்! அவர்களின் தனித்திறனை மதிப்போம்! நம் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகளுக்குத் துணை நிற்போம்!
அன்புக் குழந்தைகளே!
தாய்த்தமிழை நேசியுங்கள்! உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள்! அறிவோடும் அறத்தோடும் வளருங்கள்!
நீங்கள் எண்ணித் துணியும் நற்செயல்களிலிருந்தே ஒரு புதிய உலகம் பிறக்கட்டும்!
என் உயிருக்கினிய அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை நிறைவேற்றாமல் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கும் மத்திய அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்திய அரசியலமைப்பின் கூறு 348(2) மற்றும் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கு வழிவகை செய்கின்றன. இதன் அடிப்படையில் 1950, 1969, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் முறையே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கப்பட்டது.
ஆனால், மேற்குறிப்பிட்ட மாநிலங்களைப் போலவே வங்காளம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் முறையே 1997, 2006, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் தங்களது மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரிக்கை வைத்தும், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கோரிக்கைகளை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் மத்திய அரசு தொடர்ந்து முடக்கி வைத்திருப்பது மொழிச் சமத்துவத்திற்கு எதிரான செயலாகும்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டத்தில், மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவது தொடர்பாக மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால் அதனைப் பரிசீலிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 21.05.1965 அன்று மத்திய அமைச்சரவையிலும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழக சட்டமன்றம் 06.12.2006 மற்றும் 03.09.2026 ஆகிய தேதிகளில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல், தமிழ்நாடு அரசின் கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழர்கள் தங்களது தாய்மொழியிலேயே வழக்காடவும், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும், நீதியை எளிதாகப் பெறவும் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது இன்றியமையாததாகும். தாய்மொழியில் நீதி பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமையோடு தொடர்புடையதாகும்.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது வெறும் மொழி சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல; அது தமிழர்களின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, நீதிக்கான உரிமை ஆகியவற்றை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமையாகும்.
மேலும், தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரி MHAA தாக்கல் செய்துள்ள W.P. No. 43981/2026 பொதுநல வழக்கில், தமிழ்நாட்டின் பெருமை வாய்ந்த வழக்கறிஞர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து தங்களைத் தரப்பினராக இணைத்துக்கொண்டு, தமிழின் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை வலுப்படுத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஊடகவியலாளர் அன்புத்தம்பி ஐயப்பன் ராமசாமி அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ராமசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தாயை இழந்துவிட்ட நிலையில், தந்தையையும் இழந்து பெருந்துயருற்றுள்ள தம்பிக்கு உளவியல் துணையாக உடன்நிற்கிறேன்.
ஐயா ராமசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
என்னுடைய பிறந்தநாளையொட்டி (ஐப்பசி 22 | 08-11-2026), வாழ்த்துச்செய்தி அனுப்பிய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!
@CMOTamilnadu @TVKVijayHQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கண்டனி கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி கோவிந்தன் அவர்களின் அன்புமகன் ஸ்ரீ பாலா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்புமகனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் ஸ்ரீ பாலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பேரன்பிற்கு நன்றி!
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த,
முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், பேராசான் பெருமதிப்பிற்குரிய அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கும்,
எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா தா.ரா.பாரிவேந்தர் அவர்களுக்கும்,
முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான மதிப்பிற்குரிய அம்மையார் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கும்,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,
புதிய நீதிக்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும்,
மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா சு.ப.வேலுமணி அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், திமுக கரூர் மாவட்டச் செயலாளரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி செந்தில்பாலாஜி அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,
கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும்,
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், We The Leaders அமைப்பின் முதன்மை சேவகருமான அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,
அரசியல் திறனாய்வாளர் அன்பிற்குரிய அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சருமான அன்புத்தம்பி வன்னிஅரசு அவர்களுக்கும்,
இலட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதுச்சேரி - காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கும்,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலச் செயலாளர், பேரன்பிற்குரிய அண்ணன் கராத்தே தியாகராஜன் அவர்களுக்கும்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,
தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் இயக்குநர் வ.கௌதமன் அவர்களுக்கும்,
பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புத்தம்பி எஸ்.ஜி.சூர்யா அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் அன்புத்தம்பி திருமாறன் அவர்களுக்கும்,
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும்,
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் அன்புத்தம்பி பூவை ஜெகன் மூர்த்தி அவர்களுக்கும்
முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி கவிக்குமார் அவர்களுக்கும்,
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் அவர்களுக்கும்
டாக்டர் எம்ஜியார் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெ.ஹரிப்ரசாத் அவர்களுக்கும்,
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும்,
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.வி.பூமிநாதன் அவர்களுக்கும்,
திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராஜீவ்காந்தி அவர்களுக்கும்,
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அன்புத்தம்பி செந்தில் தொண்டமான் அவர்களுக்கும்,
திரைத்துறை
முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும்,
புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும்,
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா
முனைவர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும்,
அன்பு நண்பன் இயக்குநர் செலவபாரதி அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் அமீர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும்,
தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் தனுஷ் அவர்களுக்கும்,
தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் சூரி அவர்களுக்கும்,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புத்தம்பி ம.தமிழ்க்குமரன் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய குரு இயக்குநர் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும்,
திரைக்கலைஞரும், ஒளிப்பதிவாளருமான அன்பு மாமா இளவரசு அவர்களுக்கும்,
அன்பு அண்ணன் இயக்குநர் கே.எஸ்.அதியமான் அவர்களுக்கும்,
திரைத்துறை மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு அவர்களுக்கும்,
அன்புத்தம்பி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்களுக்கும்,
இயக்குநரும் கவிஞருமான அன்புத்தம்பி தபூ சங்கர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் கீரா அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் அருள்ராஜன் அவர்களுக்கும்,
திரைக்கலைஞர் அன்புமாமா சௌந்தர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சண்முகம் முத்துசாமி அவர்களுக்கும்,
பாசமிகு தம்பி இயக்குநர் ஆதம் பாவா அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் ஜெகன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி கவிஞர் கவிபாஸ்கர் அவர்களுக்கும்,
தயாரிப்பாளரும் திரைக்கலைஞருமான அன்புத்தம்பி இரா.க.சுரேஷ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் முரளி மனோகர் அவர்களுக்கும்,
சமூகச் செயற்பட்டாளரும் திரைக்கலைஞருமான கஸ்தூரி அவர்களுக்கும்,
திரைக்கலைஞர் அம்பிகா அவர்களுக்கும்,
திரைகலைஞர் சாயாதேவி அவர்களுக்கும்
அன்புத்தம்பி திரைக்கலைஞர் சுகுமார் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி திரைக்கலைஞர் 'கலக்கப் போவது யாரு' பாலா அவர்களுக்கும்
அன்புத்தம்பி எழுத்தாளர் ஏர் மகராசன் அவர்களுக்கும்,
அன்புத்தங்கை மருத்துவர் ஆஷா லெனின் முத்துராஜ் அவர்களுக்கும்,
சூழலியல் செயற்பட்டாளர் அன்புத்தம்பி நிமல் ராகவன் அவர்களுக்கும்
சமூகச் செயற்பட்டாளர் அன்புச்சகோதரி ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய தம்பிகள் மாதேஷ், அருள்மொழிவர்மன், கிஷோர் கே.சாமி, அருண் மாணிக்கம், மகாபிரபு, தமிழ் அரசு சரவணன், கயல் தேவராஜ், பிரகாஷ் மகாதேவன், கார்த்திக் ரவிவர்மன், எஸ்.சுந்தர் ராமன் ஆகியோர்க்கும்,
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சேயோன் படக்குழுவினருக்கும்
கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் கைதியின் டைரி படக்குழுவினருக்கும்
மலேசியா நம்பிக்கை சாகுல் அவர்களுக்கும்
மலேசியா சிவம் அவர்களுக்கும்
அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும்,
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும்,
புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், நியூஸ் தமிழ் 24×7, ABP நாடு, மாலைமலர், சமயம் தமிழ், BEHINDWOODS, GALATTA சாட்டை, எங்கள் தேசம், 4th Estate உள்ளிட்ட செய்தி ஊடகங்களுக்கும்,
நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும், செய்தி அனுப்பியும் அன்பைப் பகிர்ந்து கொண்ட உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.
பேரன்பின் நெகிழ்வில்,
உங்கள் சீமான்
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பேரன்பிற்கு நன்றி!
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்?
@CMOTamilnadu
@TVKVijayHQ
தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும்.
வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது?
தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா?
தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இருள் நீங்கி ஒளி பிறப்பதுபோல, நம் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும்! வறுமை அகன்று வளமை பெருகட்டும்! கவலைகள் மறைந்து கனவுகள் நனவாகட்டும்!
இனிய மனங்கள் இணைந்து கொண்டாடும்
இத்தீப ஒளித்திருநாளில்
உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உயர்வும், ஏங்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் நம்பிக்கையும், ஒவ்வொரு இல்லத்திற்கும் மகிழ்ச்சியும் கொண்டுவரட்டும்!
உங்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் பெருகட்டும்!
இயற்கையைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சக உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல், அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும் இனிய தீப ஒளித் திருநாளாக இந்நாள் திகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்!
அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அமீரா!
படைப்பு வெற்றிவாகை சூடட்டும்!
#ameerateaser 🔥
youtu.be/oDbietZM9JM
@studio9_suresh
@Seeman4TN
@Vairamuthu
@iAnuSitara
#msbhaskar
#rksivakumar
@Studio9Prodctn
@studio9music
#planet9pictures
@sudhasubbu
#cheziyan
@Composer_Vishal
#bhuvansrinivasan
#muthamsiva @johnmediamanagr
#selvanseeman
#basheer
@sravankuma97895
#mayapandian
@bypostoffice
@divomusicindia -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஐந்து வயதில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து,
இன்றுவரை தீராத கலைத்தாகத்தோடு வாழும் கலைஞன்!
எத்தனை சாதனைகள் படைத்தாலும், அடுத்ததாக என்ன புதுமையைப் படைக்கலாம் என்று தேடிக்கொண்டே இருக்கும் பசி அடங்காப் படைப்பாளி!
தன் நடிப்பால் பாத்திரங்களுக்கு உயிரூட்டி, தன் படைப்புகளால் தமிழ்த்திரையின் எல்லைகளை
விரிவாக்கி, கலை சிறக்கத் திரையுலகில்
ஆட்சி செய்யும் கலைவேந்தன்!
கலையின் நுட்பங்களை அறிந்து ஒவ்வொரு படைப்பிலும்
திரைக்கலைக்குப் புதுப் பாதை திறக்கும் கலைஞானி!
தமிழ்த்திரையின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி, தனது நடிப்பால் மொழிகளைக் கடந்து மக்களின் உள்ளங்களை வென்ற உலக நாயகன்!
பார்போற்றும் பறம்பை
மண்ணின் மைந்தன், தமிழ்த்திரையுலகின் பெருமை, அன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த
பிறந்தநாள் வாழ்த்துகள்!
@ikamalhaasan
அண்ணனின் நடிப்பில் புதிதாக
உருவாகி வரும் ‘சண்டியர்’
திரைப்படம் மக்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றியடைய அண்ணனுக்கும், படக்குழுவினருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகள்!
அன்பு அண்ணன் அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று,
மங்காப் புகழுடனும் மாபெரும் வெற்றிகளுடனும் வாழ்க!
உங்கள் கலைத்தாகம் இன்னும் பல
புதுப் படைப்புகளாய் மலர்க!
வாழ்த்துகள்!
அன்பின் நெகிழ்வோடு,
சீமான் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதா? அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதிலேயே மிகப்பெரும் மோசடியா?
@CMOTamilnadu @TVKVijayHQ
கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்தேடலுக்கான இடமான நூலகத்திலேயே, தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் அக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்த நூல்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தது யார்? அவற்றின் விலையை ஏற்றுக்கொண்டது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியது யார்? நானூறு வெண்பாக்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு கவிஞராகச் சித்தரிப்பதும், மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாருக்குப் பதிலாக இல்லாத பெயர்களையும், வரலாற்றையும் முன்வைப்பதும் எத்தகைய அபத்தம்? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே தவறாக எழுதி வைத்துள்ள நூல்களை மாணவர்களும், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களும் படித்தால் என்ன ஆகும்? அறியாமையை அகற்ற வேண்டிய நூலகத்தில், அறியாமையையே அச்சடித்து அடுக்கி வைப்பதுதான் அரசின் சாதனையா? நூல்களின் பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் போலியானவை என்றும், ஆசிரியர்களின் அடையாளங்கள் மற்றும் பதிப்பக முகவரி குறித்துச் சந்தேகங்கள் இருப்பதாகவும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு உடனடியாக விளக்கமளிக்க முன்வர வேண்டும். தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற இம்மாபெரும் முறைகேடு ஆட்சியின் அவல நிலைக்கான சான்றாகும்.
ஒருபக்கம், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது தவெக அரசு. மற்றொரு பக்கம், அறிவுக்கண்ணைத் திறக்க வேண்டிய நூலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது. மக்களைப் பொழுதுபோக்கில் மூழ்கடித்துவிட்டு, அவர்களின் அறிவுத்தேடலையும் மோசடிபேர்வழிகளிடம் ஒப்படைக்க முனைவது பெரும் அவலம் இல்லையா? திரையரங்கத்தில் திரைப்படக்காட்சிகளை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது நூலகங்களின் தரத்தை உறுதிசெய்வதில் காட்டியிருக்க வேண்டாமா? மக்கள் எத்தனை காட்சிகள் திரைப்படம் பார்க்க வேண்டும் எனச் சிந்திக்கும் அரசு, அவர்கள் எத்தகைய நூல்களைப் படிக்கிறார்கள் என்று சிந்திக்காதது ஏன்?
நூலகத்தின் பெருமை என்பது அதன் உயரமானக் கட்டிடத்திலும், பளபளப்பான அலமாரிகளிலும் இல்லை; அதற்குள் இருக்கும் நூல்களின் தரத்தில்தான் இருக்கிறது. தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும் மாபெரும் முறைகேடாகும். முந்தைய திமுகவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடையப் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அதேபோல, திட்டத்தை உருவாக்கிய பெருமையை உரிமைகோரும் முந்தைய திமுகவின் ஆட்சியாளர்களும், கொள்முதல் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். எந்தக் காலக்கட்டத்தில், யாருடைய ஒப்புதலுடன் முறைகேடுகள் நடந்திருந்தாலும், அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டியது பேரவசியமாகும்.
ஆகவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான தேர்வுக்குழு விவரங்கள், பரிந்துரைகள், வழங்கல் ஆணைகள், நூல்களின் பட்டியல், விலை மற்றும் பணப்பட்டுவாடா விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், எழுத்தாளுமைகளைக் கொண்ட குழுவின் மூலம் நூல்களின் தரத்தை ஆய்வுசெய்து, தவறான தகவல்கள் கொண்ட போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணையும், சிறப்புத் தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள், விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு வெறும் 7 இலட்சம் நிவாரணமா? 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கின்றன. கடலை நம்பி உழைக்கச் சென்ற உறவுகள், கரைக்குச் சடலங்களாகத் திரும்பும் கொடுந்துயரத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவ மக்கள் சுமப்பது? உயிரிழந்த மீனவச் சொந்தங்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்தி, அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து, இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
முரசு புயலால் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக படகுக்குள் தண்ணீர் புகுந்து, நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்ததால், ஆபத்தில் சிக்கிய மீனவர்கள் உதவி கோரிய நிலையில், தக்க நேரத்தில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாததால் மீனவர்கள் உயிரிழந்துள்ளது மிகுந்த மனவலியை தருகிறது. மீனவர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மீனவர்கள் எப்போது உதவி கோரினர்? அவர்களின் அபயக்குரல் எப்போது அரசின் செவியை எட்டியது? அதன்பேரில், அரசு என்னென்ன மீட்பு நடவடிக்கைகள் எடுத்தது? அவர்களை உயிருடன் கரைசேர்ப்பதில் எங்கு தவறு நேர்ந்தது? என்பவற்றை தவெக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். புயல் எச்சரிக்கையை அறிவித்துவிட்டால் மட்டும் அரசின் கடமை முடிந்துவிட்டதா? ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்துவிட்டதை அரசு உறுதிசெய்ய வேண்டாமா? மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு தவெக அரசு அரசின் பதிலென்ன?
மீனவர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதிலும் காட்டுங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே! மீனவர்கள் வாழும் கடற்கரை நிலம் அரசின் கண்களுக்குத் தெரிகிறது; அந்தக் கடலில் அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் கடின வாழ்க்கை தெரியவில்லையா? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முந்தைய அரசு 10 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது. கரூரில் உங்களை பார்க்க வந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 20 இலட்ச ரூபாயும், அரசு வேலையும் கொடுத்த முதல்வர் விஜய் அவர்கள், தங்களின் சொந்த குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்ற பொறுப்போடு உழைக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு துயர்துடைப்பு நிதியாக வெறும் ஏழு இலட்ச ரூபாய் மட்டும் தருவது நியாயம்தானா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைவிட, கரூரில் உங்களை பார்க்க வந்து உயிரிழந்தவர்களைவிட, நடுக்கடலில் உழைக்க சென்று உயிரிழந்தவர்களின் உயிர் ஒன்றும் மலினமாகபோய்விடவில்லையே? எப்படி பார்த்தாலும் உழைக்க சென்று, அரசின் உதவி உரிய நேரத்தில் கிடைக்காததால் உயிரை இழந்தவர்கள் உயர்ந்தவர்களே! அவர்கள் வீட்டிலும் படிக்கும் பிள்ளைகள், திருமணமாக வேண்டிய பெண்கள், வயதான பெற்றோர் இருப்பார்கள்தானே? அவர்களுக்கு உரிய துயர் துடைபு உதவியை செய்வது அரசின் கடமையல்லவா? அதை முழுமையாக செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்? மேட்டூர் அணையைத் திறக்கவே 6 கோடி செலவு செய்யும் நீங்கள், மீனவச்சொந்தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதை எது தடுக்கிறது?
கடலில் மீனவர்களின் இருப்பிடத்தைத் தொடர்ந்து கண்டறியும் வசதி, ஆழ்கடலிலும் செயல்படும் தகவல்தொடர்புக் கருவிகள், அவசர அபாய அறிவிப்புக் கருவிகள், தரமான உயிர்காக்கும் மிதவை ஆடைகள் உள்ளிட்டவற்றை அனைத்து மீனவர் பெருமக்களுக்கும் வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். படகுகளின் பாதுகாப்புக் கருவிகளை முறையாகப் பரிசோதிப்பதுடன், இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களை தொடங்க வேண்டும். அண்டை மாநிலங்கள் மற்றும் கடலோரக் காவல்படையுடன் இணைந்த ஒருங்கிணைந்த மீட்புத் திட்டத்தை தொடங்கி, இனியும் மீனவர்கள் உயிரிழக்கும் இத்தகைய கொடுந்துயரங்கள் தொடராதவாறு தமிழ்நாடு அரசு தடுத்திட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு தன்னுடைய அலட்சியத்திற்குப் பொறுப்பேற்று புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணன் சிவா மற்றும் ஐயா தனஞ்செயன் அவர்களுக்கு,
@tfapatn @TSivaAmma @Dhananjayang
வணக்கம்!
புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.
வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியாகும்போது, அவற்றைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். திரைப்பட உருவாக்கத்தின் பின்னாலுள்ள உழைப்பையும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் திரைத்துறையைச் சேர்ந்தவனாக நானும் அறிவேன். தமிழ்த் திரையுலகம் நலிவடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை; அது வளர வேண்டும் என்பதே எனது விருப்பமும். நாங்கள் அரசமைத்தால், ‘திரைக்கலை மேம்பாடு’ என்பதன் கீழ் தமிழ்த் திரையுலகம் மேம்படப் பல திட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவர விரும்பி தமிழில், தமிழ் மொழி, பண்பாடு மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் திரைப்படங்களுக்கு அரசு பொருளாதார உதவி வழங்குவதோடு, சிறந்த திரைப்படங்களை அரசே வாங்கி வெளியிடுவது; திரைப்படங்களை இணையத்தில் அத்துமீறி வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது; திரையரங்குக் கட்டணம், ஊர்தி நிறுத்தக் கட்டணம், உணவுப்பொருட்களின் விலையை முறைப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை எங்களது ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் முன்வைத்திருக்கிறோம்.
சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் கொண்டுள்ள ஆழமான பற்றுதலும் அக்கறையுமே எனது எதிர்ப்பிற்குக் காரணம் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படம் மகிழ்ச்சியையும் சிந்தனையையும் தரும் ஓர் உயர்ந்த கலை. அந்தக் கலையின் மீது எனக்கிருக்கும் நேசத்திற்கு இணையாக, அதைக் காணும் மக்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது.
பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்ற கேள்வியைத்தான் முன்வைத்தேன்.
வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளந்தலைமுறைப் பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது. இதுபோன்ற மிதமிஞ்சிய கேளிக்கைகளில் ஈடுபட மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது எத்தகைய சமூகச் சூழலை உருவாக்கும் என்பதே என் பெருங்கவலை.
அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே எனது அறிக்கையில் கேள்வி எழுப்பினேன். ஆகவே, தங்கள் கோரிக்கையின் நோக்கத்தை அறியாமல் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கருத வேண்டாம். திரைத்துறையின் தேவையை மட்டும் தாங்கள் முன்வைப்பதுபோல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி எனது கருத்தை முன்வைத்தேன்.
காலை 6 மணிக் காட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் கூறியுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து மேலும் ஏதும் கருத்துச் சொல்லாமல் மௌனமாகிறேன்.
தமிழ்த் திரையுலகமும், அதனை வாழவைக்கும் தமிழ் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?
@CMOTamilnadu @TVKVijayHQ
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது.
திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா?
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?
அதிகாலை எழுந்து படியுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள்! அறிவை விரிவாக்குங்கள்! உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்! உழைத்து உயருங்கள்! என்று இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சிமுறையா? 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?
மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆகவே, புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பட்டாளர் அன்புத்தம்பி ஜெய்சங்கர் அவர்களின் அன்புமகள் யுவஸ்ரீ அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்புமகளை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகள் யுவஸ்ரீ அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக!
@CMOTamilnadu @TVKVijayHQ
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவர்களிடம் முறையாகக் கருத்துகளைக் கேட்டறியாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் அழைத்துக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் முயன்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் வாழ்வுரிமை தொடர்பான விவகாரத்தில்கூட வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படும் தவெக அரசின் அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியது.
பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே அப்பகுதி மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதா என்று கேள்வி எழுப்பிக் கருப்புக்கொடி ஏந்திப் போராடியிருக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும், அங்கேயே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியே தீருவோம் எனத் தவெக அரசு பிடிவாதம் காட்டுவது மீனவ மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள 12 மீனவ கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அந்தக் கிராமங்களுக்கும், தொடர்ந்து போராடிவரும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவதுதானே முறையான அணுகுமுறை?
அதைவிடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, “கிராமத்திற்கு ஒருவர் வந்தால் போதும்” என்று கூறியதாக மீனவர் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு கடுமையானது! ஒரு கிராமத்தின் சார்பாக யார் பேச வேண்டும் என்பதை அந்தக் கிராம மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர, அதிகாரிகள் எப்படி முடிவுசெய்யலாம்? போராடும் சங்கப் பிரதிநிதிகளை அழைக்காமல் நடத்தப்படும் கூட்டத்தில் யாருடைய கருத்தைக் கேட்கப் போகிறீர்கள்?
அரசுக்குச் சாதகமானவர்களை மட்டும் அழைத்துக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழும் அளவிற்கு நடந்துகொண்டது ஏன்? மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான கூட்டமா இது? அல்லது மக்கள் ஏற்றுக்கொண்டதாகக் கணக்குக் காட்டுவதற்கான ஏற்பாடா?
12 கிராமங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுக்க வேண்டுமென்று மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கடிதம் கொடுத்த பின்னரே கூட்டம் நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி தெரிவிக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கும் அழைப்புக் கடிதம் வரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான முறையான அழைப்பைக்கூட மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா? இதுதான் மக்களை மதிக்கும் ஆட்சியின் இலட்சணமா?
“கருத்துக்கேட்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; எங்கள் கருத்துகளை வலுவாக எடுத்துவைப்போம்; அந்த இடம் மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்பதை ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்று மீனவப் பிரதிநிதிகள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். இவ்வளவு பொறுப்புடன் பேசும் மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
கடலை நம்பி வாழும் மக்களுக்குக் குடியிருப்பும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் வாழ்விடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவது கொடுமையானது. புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், போக்குவரத்து நெரிசல், கடலுக்குச் சென்று திரும்புவதிலான இடையூறுகள் குறித்த அச்சங்களுக்கு என்ன பதில்? தங்கள் சொந்த மண்ணிலேயே உரிமைகளை இழந்துவிடுவோமோ என்று மக்கள் அஞ்சும் நிலையை ஏன் உருவாக்குகிறீர்கள்?
தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வேறு இடமே இல்லையா? மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்று மக்கள் ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில், அந்த இடத்தில்தான் கட்டுவோம் என்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதம்? வாக்குக் கேட்கும்போது தேவைப்பட்ட மீனவ மக்களின் குரல், ஆட்சிக்கு வந்த பிறகு கேட்கவில்லையா?
எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தையும் அதற்கான தொடர் நடவடிக்கைகளையும் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். 12 மீனவ கிராமங்களுக்கும், அக்கிராம மக்கள் தேர்வுசெய்யும் பிரதிநிதிகளுக்கும், போராடிவரும் மீனவர் சங்கங்களுக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு விடுத்து, வெளிப்படையாகக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். மக்கள் முன்வைக்கும் கருத்துகளையும் ஆவணங்களையும் முழுமையாகப் பதிவுசெய்து, அவற்றிற்கு அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்ற அவர்களின் கோரிக்கையையும் ஆதாரங்களையும் உரிய முறையில் பரிசீலித்து, அம்மக்களின் குடியிருப்பு உரிமையையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பேசத் துணியாத கதையைப் பேரழகுத் திரைக்காவியமாக்கிய ‘டோரதி’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில், இசை இறைவன் இளையராஜா இசையில் வெளிவந்திருக்கும் டோரதி திரைப்படத்தை கண்டேன். 1990களில் சாதிய வன்முறை நிலவும் கிராமப்புற தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டு சமூகம் பேசத் தயங்குகிற, பலரும் சொல்லத் துணியாத இயற்கையின் பாலியல் மாற்றத்தை பற்றிய கதையைக் கையில் எடுத்து, அதனை உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த அழகிய திரைப்படைப்பாக உருவாக்கியிருக்கும் அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
மனிதர்களை அவர்களது இயல்போடும் உணர்வுகளோடும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்ப்பதே கலையின் உயர்ந்த பணி. புறக்கணிக்கப்படும் மனிதர்களின் வலியை உணரவும், அவர்களது அன்பையும் வாழ்வுரிமையையும் மதிக்கவும் வைக்கிற படைப்புகள் காலத்தின் தேவையாகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக கலை மாறும்போது அது புனிதமாகிறது. அந்த வகையில், பார்வையாளனின் மனச்சாட்சியோடு உரையாடும் படைப்பாக ‘டோரதி’யைப் படைத்திருக்கும் தம்பி கார்த்திக் சுப்புராஜின் படைப்புத் துணிவுக்கும் மனிதநேயத்திற்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதற்குரிய திரைமொழியை உருவாக்குவது வரை, படைப்பாளனின் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும். சொல்ல வந்த கருத்தின் ஆழமும், அதைச் சொல்லும் விதத்தின் அழகும் ஒன்றிணையும்போதுதான் சிறந்த திரைப்படம் பிறக்கிறது. அத்தகைய அக்கறையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கும் தம்பியின் கலைப்பயணம் மேலும் பல உயரங்களைத் தொடட்டும்!
இப்படம் இசை இறைவன், எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா இளையராஜா அவர்களின் அளப்பரிய இசைப்பேராற்றலால், திரையில் சொல்லப்படும் உணர்வுகளுக்கு உயிரூட்டி, ஒரு சிறந்த திரைப்படத்தைக் காவிய அனுபவமாக உயர்த்துகிறது! காலங்கள் மாறலாம்; தலைமுறைகள் மாறலாம்; இசையை ரசிக்கும் முறைகளும் மாறலாம். ஆனால், மனித மனத்தின் ஆழத்தை தொட்டு உணர்வினை உசுப்பும் எங்கள் இசை இறைவனின் இசை வலிமை என்றும் மாறுவதில்லை. இன்றைய தலைமுறையும் ரசித்து மகிழும் பாடல்களை வழங்கியிருக்கும் இசை இறைவனின் படைப்பாற்றல் நம்மை மீண்டும் வியக்க வைக்கிறது. தலைமுறைகளைக் கடந்து தமிழர்களின் உணர்வுகளோடு பயணிக்கும் அவரது இசைக்கு தமிழினம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.
தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை உள்வாங்கி, அதற்கு உயிர்கொடுத்திருக்கும் அன்புத்தம்பி சனத் நடித்திருக்கிற விதம் பெரிதும் பாராட்டத்தக்கது. ஒரு மனிதரின் அக உலகத்தைப் பார்வையாளனிடம் கொண்டுசேர்ப்பதற்கு நுட்பமான நடிப்பும் ஆழமான புரிதலும் வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நகரும் திரைக்கதையில் பாலின மாற்றத்தை படிப்படியாக தனது ஆகச்சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் தம்பிக்கு எனது பாராட்டுகள். இயல்பான நடிப்பின் வழியே தனது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையையும் உணர்வுச் செறிவையும் அளித்திருக்கிறார் அன்புத்தம்பி ரிஷிகாந்த். கதையோடு ஒன்றிப்போகும் அவரது நடிப்பும், உணர்வுகளை வெளிப்படுத்தும் நேர்த்தியும் அவரது திறமைக்கு சான்று. தனது அனுபவமும் நடிப்பாற்றலும் அசாத்திய உடல் மொழியும் கொண்டு கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து விசில் வீரைய்யாவாக வாழ்ந்திருக்கிறார் அன்புத்தம்பி முத்துகுமார். ஒரு பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்குரிய அழுத்தத்தைத் திரையில் கொண்டுவரும் அவரது திறன் பாராட்டுக்குரியது. டோரதியாக வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு முதன்மையளித்துத் தனது நடிப்பால் படைப்பிற்கு மேலும் அழகுசேர்த்திருக்கிறார். ஒளியையும் நிழலையும் உணர்வுகளின் மொழியாக்கி, கதையின் சூழலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் திரு கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும், சொல்லப்படாத வலிகளையும் காட்சிகளின் வழியே உணர்த்தி, படைப்பிற்கு மேலும் உயிரூட்டியிருக்கிறார். அத்தோடு இப்படைப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர்கள், படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், வன்முறை , ஆவணக் கொலைகள் போன்ற சகிக்க முடியாத கொடூரங்களும் அநீதிகளும் பெருகி , ஆழமாகப் பதிந்துள்ள ஓர் உலகில், சிறுவயதிலிருந்தே பிரிக்கமுடியாத நண்பர்களாக வளரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஊடாக அனைத்தையும் காட்டி பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை என மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், இதுவரை தமிழ்த்திரையில் விரிவாக பேசப்படாத மூன்றாம் பாலினத்தவரின் உலகை பொதுச் சமூகம் நேர்மையாக அறிந்து கொள்ளவும், எல்லாவற்றையும் தாண்டி நம்மோடு சரிசமமாக வாழும் சக மனிதரை உளப்பூர்வமாக நேசிக்கவும், துயர் சூழ்ந்த அவர்களது வாழ்வை ஏற்று மதிக்கவும் துணைநிற்கும் இதுபோன்ற மதிப்பு மிகுந்த படைப்புகள் தமிழ்த்திரையில் மேலும் பெருகட்டும்!
ஏற்கனவே திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "டோரதி" இப்போது தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அனைவரது பெரும் வரவேற்பிற்கு உள்ளாகி வருவது எனக்கு நெகிழ்வை தருகிறது.
'டோரதி’ மக்களின் பேரன்பைப் பெறட்டும்!
அற்புதமான கலைப் படைப்புகள் மூலம் தன்னை தமிழ்த் திரையின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒருவராக நிலைநிறுத்தி வருகிற தம்பி கார்த்திக் சுப்புராஜின் முயற்சிகள் என்றும் வெற்றியால் மிளிரட்டும் !
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#dorothy @karthiksubbaraj @ilaiyaraaja @iam_rishikanth @Sananth__ @KeerthyOfficial -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சோதனைப்பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசன் போதைக் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu @TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தளவாய் கிராமத்தில் நள்ளிரவில் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை போதைக்குற்றவாளிகள் தலையில் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டில் பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய பாதுகாவல் படையினருக்கே பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல் உருவாகியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனின் குழந்தைகளான தமிழ்ச்செல்வன், அர்ச்சனா இருவரும் ஏற்கனவே தாயை இழந்துவிட்ட நிலையில் தற்போது தந்தையையும் இழந்து தவித்து நிற்பது மிகுந்த மனத்துயரை அளிக்கிறது. தவெக அரசின் அலட்சியத்தால் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை, ஒரு குடும்பத்தையே முற்று முழுதாகச் சிதைத்துவிட்டதுதான் பெருங்கொடுமை. போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த தவறி, இன்னும் எத்தனை குடும்பங்களைச் சிதைக்கத் தவெக அரசு நினைக்கிறது?
ஊர்க்காவல்படை காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருப்பது, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கான கேள்வியை எழுப்புகிறது. இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் காவலர்களைத் தாக்கும் அளவிற்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்தது எப்படி? அந்த அளவிற்கு தவெக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதே இப்படுகொலை நிகழ முதன்மைக் காரணமாகும். போதைப்பொருள் பயன்பாட்டையும், போதை ஆசாமிகளின் அட்டூழியங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? காவலர்களுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசு, பொதுமக்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்? பொதுமக்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பில் தவெக அரசு அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது.
ஆகவே, ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை படுகொலை செய்த போதை குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, போதைப்பொருள் புழக்கத்தையும், போதையால் நிகழும் குற்றங்களையும் தடுக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயிரிழந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசன் குடும்பத்திற்கு வெறும் 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தவெக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல; தாயையும் இழந்து, அரசின் அலட்சியத்தால் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி தொகுதி, மேலப்பனையூர் ஊராட்சி, மேலமருதூரைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர், கட்சியின் மாவட்டத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ம.கோதண்டராமன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த ஐயா ம.கோதண்டராமன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் ஐயாவின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ம.கோதண்டராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாலை முரசு தொலைக்காட்சியின் நெறியாளரும், முன்னணி ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பரத்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அரசியல், திரைத்துறை, விளையாட்டு என வெவ்வேறு துறைகள் சார்ந்து கருத்தாடும் அறிவுத்திறனும், பக்கச்சார்பின்றி நெறியாளுகை செய்து விவாதங்களைத் திறம்பட நடத்தும் ஆற்றலும் கொண்ட தம்பி பரத்தின் திடீர் மறைவுச்செய்தி பெரும் மனவேதனை அளிக்கிறது.
தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!
தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!
இன்சொல்லாலும், புன்சிரிப்பாலும் எல்லோரையும் ஆரத்தழுவி அரவணைத்து, போர்க்களத்திலும் புன்னகைத் தவழ களமாடிய மாசற்ற போராளி!
‘உயிர் உன்னதமானதுதான்! அதனினும் உன்னதமானது எமது உரிமை, சுதந்திரம், கௌரவம்’ எனும் தேசியத் தலைவனின் சத்திய மொழிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த மாவீரர்!
தமிழீழ நாட்டின் தலைமை தூதுவன்! தலைவனின் வார்ப்பு!
அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது, அரசுப்பணிக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுஞ்செயல்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர் நிலை வரையிலான பணிகளுக்கு தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்ய வெளிநாட்டு மனிதவளக் கழகத்தை (Overseas Manpower Corporation Limited) முகமையாக நியமித்து, அரசுப் பணியாளர்களை இனி தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அரசுப் பணி கனவுடன் பல ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, தங்களது இளமையையும் உழைப்பையும் செலவிட்டு காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, இருக்கின்ற அரசுப் பணியிடங்களையும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்? இதுதான் தவெக அரசு ஏற்படுத்திய மாற்றமா? இதற்கு பெயர்தான் தூயசக்தியா? அரசுப் பணிகளையே வெளிமுகமை வழியாக நிரப்ப முற்படுவது, அரசுப்பணிக்காக இரவுபகல் பாராமல் படித்து, அயராது முயலும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தினை இருளாக்கும் கொடுஞ்செயல் இல்லையா? தமிழக இளைஞர்கள் பட்டப்படிப்புகளை படிப்பது எதற்காக? தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எதற்காக? இரவு பகல் பாராது அரசுப் பணிக்காக உழைப்பது எதற்காக? நிரந்தர வேலை வாய்ப்புக்காகதானே? அதைக்கூட தவெக அரசால் தரமுடியாமல், இருக்கும் வாய்ப்பையும் தடுத்து கெடுப்பது என்ன நியாயம்? தவெக அரசு ஆட்சிக்கு வந்தது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கா? அல்லது இருக்கின்ற வேலைவாய்ப்புகளைக்கூட நிரந்தரமற்றதாக மாற்றுவதற்கா?
அரசுப்பணிகள் அனைத்தையும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தாரை வார்த்துவிட்டு, அரசு போட்டித்தேர்வு வயது வரம்பை உயர்த்துவதால் யாருக்கு என்ன பயன்? அரசுப் பணிகளை வெளிமுகமை மூலம் நியமித்தால் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று எதற்கு? கலைத்துவிடலாமே? எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அரசு எதற்கு? ஆட்சி நிர்வாகம்தான் எதற்கு? அரசுப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கு அரசுக்கு என்ன தடை? தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசுக்கு என்ன தயக்கம்? அரசுப் பணிகளை வெளிமுகமைகளிடம் ஒப்படைப்பதால் பயன்பெறப்போவது வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களா? அல்லது பணியாளர் வழங்கும் நிறுவனங்களா? தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்குரிய ஊதியம், பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுமே? தற்காலிக ஒப்பந்த பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு பறிபோகுமே? அதற்கெல்லாம் தவெக அரசு என்ன பதில் கூறப்போகிறது? இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியா? வெட்கக்கேடு!
அரசின் அடிப்படைக் கடமையான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலிருந்து விலகி, நிரந்தரப் பணியிடங்களை ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்து, தமிழக இளைஞர்களின் அரசுப்பணி வாய்ப்பை சிதைக்கும் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஆகவே, அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த முறையில் நியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிடுவதோடு, காலியாக உள்ள பணியிடங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து, பல இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப்பணி வாய்ப்பையும், சமூகநீதி இட ஒதுக்கீட்டையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான மதிப்பிற்குரிய ஐயா கலை அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, தன்னுடைய பார்வையையும், கருத்தையும் ஆணித்தரமாக முன்வைக்கும் ஐயா கலை அவர்கள் தனிப்பட்ட முறையில் என் மீதும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியின் மீதும் பெரும் அக்கறைகொண்டவராவார். அவருடைய மறைவுச்செய்தி பெரும் வேதனையளிக்கிறது.
ஐயா கலை அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம் தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.
தமிழ்நாடு என்ற சொல்லாடல் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
என்று சிலப்பதிகார காட்சிக் காதையில் பாடும் இளங்கோவடிகள்
“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
என்று வாழ்த்துக் காதையில் பாடுகிறார்.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.” என்று பாடுகிறது பரிபாடல்
தொல்காப்பியத்திற்கு பதினொராம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர் தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு தெளிவாக வரையறுக்கிறார்.
“மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்” என்றும்
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்” என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! என்று தமிழ்நாடு தமிழ்நாடு என்று கொண்டாடுகிறார் பெரும்பாவலர் பாரதியார்.
அப்பெருமை மிக்க வரலாற்றுப் பெயரை மீண்டும் சென்னை மாகாணத்திற்கு இடக்கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 79 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம்.
‘தமிழ்நாடு’ என்று பெருமிதத்தோடு அழைத்தாலும் தமிழர் நிலத்தில், தமிழர்களுக்கான முதன்மைத்துவம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதன் பெருங்கொடுமை. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கன்னடர் ஒருவரை நியமித்துள்ள அநீதி தவெக அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உச்ச பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழர் அல்லாத பிறமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தவெக அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்கள் அனைவரும் பிற மாநிலத்தவர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் ஏதுமற்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லைதான். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது.
ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலையுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் எங்கும் விரவிக் கிடக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் சட்டசபையிலயே வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் அவலத்தையும், அமைச்சர் பெருமக்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தப்பும் தவறுமாக தமிழைப் பேசும் அவலத்தையும் தமிழ்நாடு காண்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டு தாய்மொழிக் கல்வி முற்றாக சிதைந்துள்ளது.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பிறகும், அதைவிட மோசமானநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். அத்தகு பிறமொழி கலக்கும் அவலநிலை நீங்கி தாய்த் தமிழ்மொழி ஆட்சி அதிகார மொழியாக உண்மையான மாட்சிமை பெற்றிட தமிழ்நாடு நாளில் உளமாற உறுதியேற்போம்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தெய்வத்திருமகன் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2026 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்வணக்கம் செலுத்தினேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதியைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை குவைத் & ஆன்றோர் அவையத் துணைத் தலைவர் அன்புத்தம்பி காஜா மைதீன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ச.சர்புதீன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ச.சர்புதீன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, புதுப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர் அன்புத்தம்பி செல்லா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி செல்லா அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி செல்லா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர் அன்புத்தம்பி ஆக்ஸன் அவர்களின் சகோதரன், தம்பி நவ்ரோஜ்கான் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி நவ்ரோஜ்கான் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அரியலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சண்முகம் அவர்களின் துணைவியார் ச.கனிமொழி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
உற்ற துணையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை ச.கனிமொழி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கி, தாய்த்தமிழையே தான் வாழும் தேசமென கொண்டாடிய தன்மானத்தமிழர்..!
"பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற சாதியப் பாகுபாடு கூடவே கூடாது” என்று போதித்த சமத்துவ நாயகர் தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தோன்றிய திருநாள் இன்று!
அடிமை வாழ்வினைவிட விடுதலைச்சாவு மேலானது; விடுதலை அல்லது வீரமரணம் என முடிவெடுத்து, தம் இளம் வயதிலேயே போராட்டக் களம் கண்ட விடுதலைப்போராளி..!
கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்று கிளர்ச்சி செய்த புரட்சியாளர்..!
"தவறுகள் நடப்பது தீயவர்களால் அல்ல; அதை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் நல்லவர்களால்தான்!" என்றும்,
"நான் யாரையும் எதிரியாகக் கருதுவபவனில்லை; தவறுகள் நடப்பதைக் கண்டிக்கும் என்னை எதிரியாகப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!" என்றும்,
"தான் வாழ, பதவி தேவை என்று எண்ணுபவர்களிடம் உண்மைக்குப் புறம்பானவற்றைத்தான் எதிர்பார்க்க முடியும்!" என்றும்,
"பதவியை ஒரு சேவையாகக் கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால், மக்களுக்கு நலன் என்பது வெறும் பகல் கனவுதான்" என்றும்,
எக்காலத்திற்கும் பொருந்தும் அரசியல் மொழிகளை அருள்மொழிகளாக அள்ளித்தந்த கால ஞானி..!
“தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ - ஆயுதமோ இல்லை!” என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர்..!
“எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது!” என்று வாழ்ந்த எளிய மகன்..!
"பணத்திற்கு மயங்கி வியாபார அரசியலுக்கு இடம் கொடுத்துவிடாது; விவசாய அரசியலை அமைத்து, நாட்டின் பண்பாட்டையும், ஏழை மக்களின் நல்வாழ்வையும் பாதுகாக்க வேண்டும்!" என்று முழங்கிய மக்கள் தலைவர்..!
"உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு! நீயே உண்மையான வீரன்..!" என்று கற்பித்த பெருந்தகை..!
"மலர்மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!" என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன்..!
"தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென" வாழ்ந்து, தீரமிக்க விடுதலைப் போராளிகளைத் தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன்..!
தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய திருப்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
மதிப்புமிக்க நம்முடைய தாத்தா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
( நவம்பர் 01, 2026 | ஐப்பசி 15 )
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம்தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு, தமிழகம், தமிழர் தேயம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய்நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். நாம் தமிழர் கட்சியும், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவித்திட வேண்டுமென தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 15 (01.11.2019) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வந்த திமுக அரசு தமிழ்நாடாய் மீண்டும் உருவெடுத்த நாளை விடுத்து, தமிழ்நாடு என மீண்டும் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என நம்முடைய கடுமையான எதிர்ப்பினையும் மீறி வலிந்து திணித்தது. அதையே தற்போதையே தவெக அரசும் அப்படியே தொடர்வதுதான் பெருங்கொடுமை.
தமிழ்த்தேசிய அரசியல் புத்தெழுச்சிப் பெற்று, புரட்சிகர அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் ஏற்படும் நாளில் தமிழ்நாடு நாள் குழப்பநிலை துடைத்து எறியப்படும். உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சி, ஐப்பசி 15 (01.11.2026) ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியாகக் கொண்டாடவிருக்கின்றது.
ஆகவே, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்!
அதோடு, நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், “மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை”என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளைக் கடந்தும், அதைவிட மோசமான அவலநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய்க்கு நிகழ்ந்துவரும் அப்பேரவலத்தை, பெருந்துயரைத் துடைத்து, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற நிலையை உருவாக்கிட தமிழ்நாடு நாள் அன்று, என்னுடைய உயிருக்கினிய உறவுகள், அன்புத்தம்பி தங்கைகள், அருகில் உள்ள சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தாய்த்தமிழில் பெயர்பலகை வைக்க அன்புடன் கோரிக்கை வைப்போம்.
தமிழ்நாடு முழுவதிலும் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை, அறிவிப்பு பலகை வைப்பதற்கான கோரிக்கையை துண்டறிக்கையில் அச்சடித்து அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்குவோம். அதனை நாம் பிறந்த பெருமைமிக்க தமிழ்ப்பேரினத்திற்கான இனமான கடமையாக எண்ணி தமிழ்நாடு நாளில் செயல்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு,
உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பேராசிரியர் தம்பி கலையரசனை அதிகாலையில் அழைத்துச் சென்று அச்சுறுத்துவதா? காவல்துறை மக்களுக்கானதா? ஆளுங்கட்சிக்கானதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான அன்புத்தம்பி கலையரசனை, ஓர் போலி இன்ஸ்டாகிராம் பதிவைக் காரணமாகக் கூறி அதிகாலையில் வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அவர் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லாநிலையிலும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கனகச்சிதமாகப் பின்பற்றும் தவெக அரசின் ஆணவப்போக்கை கண்டிக்கிறேன். மேலும் புகாரின் அடிப்படையைக்கூட விளக்காமல், தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் அவரை குற்றவாளிபோல் நடத்திய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவல்துறைத் தலைமை இயக்குநருக்குத் தம்பி கலையரசன் எழுதியுள்ள கடிதத்தில், அக்டோபர் 28 அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், தனது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு, புகார் நகலையோ முதல் தகவல் அறிக்கையையோ காட்டாமல் வாடகைக் காரில் அழைத்துச் சென்றதாகவும், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூட உடனடியாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பேராசிரியரை இவ்வாறு பயங்கரவாதி போல நடத்த வேண்டிய அவசரமும் அவசியமும் என்ன?
பல்லாவரம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குறித்த இழிவான பதிவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் தம்பி கலையரசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது புகைப்படத்தைப் பயன்படுத்திய வேறொரு பெயரிலான கணக்கின் பதிவுக்காக அவரையே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவரின் அண்மை நேர்காணலுக்காகப் போடப்பட்டதுதான் இந்தப் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பது உறுதியாகிறது.
அவரின் உலக பொருளாதார அறிவும், இந்திய பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதலும் நாம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு தொடர்பான அவரது தர்க்கரீதியான கருத்தை சகித்துக்கொள்ளாமல், அவரை காவல்துறை கொண்டு முடக்க நினைப்பது பச்சை அயோக்கியத்தனமாகும். இதையேதான் இந்திய ஒன்றிய பாஜக அரசும், அண்மையில் ஜன்தர்மந்தர் போராட்டத்தில் அறிவுசார் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் மிரட்டி ஒடுக்க பொய்வழக்குகளைப் புனைந்து ஒடுக்குமுறையை ஏவியது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்த ஓர் இன்ஸ்டாகிராம் பதிவுக்காக அதிகாலையிலேயே இவ்வளவு வேகமாகச் செயல்படும் காவல்துறை, என் மீதும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் தொடர்ச்சியாகப் பரப்பப்படும் அவதூறுகளில் இதே வேகத்தைக் காட்டாதது ஏன்? என் மீதான அவதூறுகள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டதே ஏன்? அதன் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணை எந்த நிலையில் உள்ளது? தொடர்புடையவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? காவல்துறை வெளிப்படையாக விளக்குமா?
எங்களையும் எங்கள் கட்சியினரையும் தவெகவினர் மிகக் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை எல்லாம் எதில் சேர்ப்பது? அவற்றின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆளுங்கட்சியினரைப் பற்றிய பதிவென்றால் உடனடி நடவடிக்கை; ஆளுங்கட்சியினர் பிறரை இழிவுபடுத்தினால் அமைதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நடைமுறையில் இருக்கிறதா?
அவதூறையும் ஆபாசத்தையும் யார் பரப்பினாலும் அதனை ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். அதேவேளை, அரசியல் விமர்சனத்தையும் மாற்றுக்கருத்தையும் குற்றமாகக் கருதி, ஒரு குற்ற வழக்கை உருவாக்க, போலி கணக்கு மூலம் ஒருவரை அதிகாலை அழைத்துச் சென்று மிரட்ட முற்படுவது, சனநாயகதிற்கு விடுக்கப்படும் சவாலாகும். ஆளுங்கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றுவது காவல்துறையின் கடமையல்ல; சட்டப்படி மக்களின் உரிமைகளைக் காப்பதே அதன் கடமை!
ஒன்றிய பாஜக அரசுபோல் காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்துவதுதான் தவெகவின் நல்லாட்சியா? தம்பி ஜோசப் விஜயின் தூய ஆட்சியா? இவ்விவகாரத்தில் முந்தைய அரசுகள் குப்பை என்றால், இந்த அரசு அழுகிய குப்பையாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், ஒன்றிய பாசக அரசைபோல் அடக்குமுறையை ஏவிவிட்டு, ஜனநாயக விரோதப்போக்கை கையிலெடுப்பது வெட்ககேடானது!
தம்பி கலையரசன் அளித்துள்ள புகார் மீது நடுநிலைமையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்திய கணக்கை இயக்கியவர் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அழைத்துச் சென்ற நடவடிக்கைக்கு யார் உத்தரவிட்டார்கள், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையும் விசாரித்து, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அறிவுத்தளத்தில் இயங்குவோரையும் பொதுவெளியில் கருத்துரைப்போரையும் அச்சுறுத்தும் இத்தகைய அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். புகார் அளிப்பவரின் கட்சியைப் பார்த்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் மக்களாட்சி விரோதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா?
ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள்; சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை!
ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தால் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா?
தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கினார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா?
ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு?
சோப்பு, ஷாம்பு கலந்த வீட்டுக் கழிவுநீர்தான் காரணம் என்றாலும், அதுவும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பது அரசின் நிர்வாகத் தோல்விதானே? அந்த விளக்கத்தைச் சொல்வதன் மூலம் தமது துறையின் தோல்வியை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா?
மக்கள் கேட்பது, “எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?” என்ற விளம்பர விளக்கமல்ல; “எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்பதற்கான பதில்!
தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம்!
ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள்; சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள்; விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள்! மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது!
இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்!
@CMOTamilnadu @TVKVijayHQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - குளச்சல் சட்டமன்றத் தொகுதி, கல்லுக்கூட்டம்- வேம்படிவிளை பகுதியைச் சேர்ந்த களச்செயல்பாட்டாளர் அன்புத்தம்பி பெரின் கோல்ட் ஜோயல் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி பெரின் கோல்ட் ஜோயல் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பெரின் கோல்ட் ஜோயல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - செய்யூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயல்பாட்டாளர் அன்புத்தம்பி த.அருள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி த.அருள் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி த.அருள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் தம்பி கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்கு தள்ளுவதா? தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வது கொடுங்கோன்மை!
2016ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை, இந்தி ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும்.
தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கி பெருமைபடுத்துகின்றன. ஆனால்,. பத்து கோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி - விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும்.
இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே?
இனவெறி நாடான இலங்கைக்குத் துணைநின்று ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்கள் ஏதிலியாக காரணமான இந்திய அரசு, இன்றைக்கு தஞ்சம் கேட்டு நிற்கையில், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்? குறைந்தபட்சம் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்காவது செல்ல அனுமதிக்கலாமே? அதைக்கூட மறுப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு தடுக்கத்தவறி வேடிக்கைப்பார்ப்பது தமிழினத்திற்கு செய்கின்ற துரோகமாகும். இதுதான் தவெக அரசு தமிழர்களை பாதுகாக்கும் முறையா? பெருங்கொடுமை!
ஆகவே, ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இனவாத நாடான இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்குள் தள்ளியதுபோல, தம்பி சுபாஷ்கரனையும் திருப்பி அனுப்பும் முடிவை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தபோது,
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் திருநாளையொட்டி,
இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்திய நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு.This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் திருநாளையொட்டி,
இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்னைத்தமிழ் நிலம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைபட்டு விடக்கூடாது என்பதற்காக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இழந்த நிலத்தை மீட்டெடுத்த எங்கள் வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியார் அவர்களின் வீரமிகு வெற்றித்தளபதிகளாகத் திகழ்ந்தவர்கள் எங்கள் பாட்டன்கள் பெரிய மருதுவும், சிறிய மருதுவும்.
பிறகு நம்முடைய பாட்டியார் வேலுநாச்சியார் ஓய்வை நாடியபோது, இந்நாட்டைப் பாதுகாக்க மருது இருவரை விட்டால் வேறு எவர் இருக்கிறார் என்று பெருநம்பிக்கையுடன் மக்களிடத்திலே எடுத்துரைத்து, அவர்களிடத்திலே நாட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். சிவகங்கைச்சீமையின் காளையார்கோயிலைக் களமாகக் கொண்டு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர்கள் மருதிருவர்கள் நடத்திய ஆகச்சிறந்த ஆட்சியில் ஏரும், போரும் சிறந்தோங்கியது எனவும், 200 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் மிகச் சுவையான ஆரஞ்சு பழங்கள் விளைவிக்கப்பட்டன என்பதும் வரலாறு!
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜம்புத்தீவு பிரகடனத்திலே எங்கள் பாட்டன் சிறிய மருது "எவனுக்கு ஐரோப்பிய இரத்தம் ஓடவில்லையோ, அவனெல்லாம் என்னோடு போருக்கு வா!" என்று அறைகூவல் விடுத்து, படையை நடத்தி போகும்போது விடுதலை உணர்வோடு உழைக்கும் உழவர் குடிமக்கள் பலரும் படையில் திரண்டு பெரும்படையாக உருவெடுத்ததனால் தான் 150 நாட்கள் இடைவிடாமல் வீரப்போரிட்டுள்ளனர்.
இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, கைது செய்யப்பட்டபோது, மண்டியிட மறுத்து தூக்குக் கயிற்றைத் துணிந்து ஏற்றவர்கள் எங்கள் மருதிருவர்கள்! "அடிமை வாழ்வினும் உரிமைச்சாவு மேலானது!", "சரணடைந்து வாழ்வதை விடச் சண்டையிட்டுச் சாவதே மேலானது!" என்று தான் எம்மின முன்னோர்களின் வரலாற்று வழித்தடங்கள் எங்களுக்குக் கற்பிக்கின்றன. அதே வழியில் தான் எங்கள் தலைவரும் கிளர்ந்தெழுந்து எம்மின விடுதலைக்குப் புரட்சி செய்தார். அதனால் தான் "ஒரே இரத்தம்! அதே வீரம்!" என்று நாங்கள் முழங்குகிறோம்!
இன்று எங்கள் நிலமெங்கும் மலை வளம், நில வளம், மணல் வளம், நீர் வளம், கனிம வளம் என அனைத்தும் கண்முன்னே களவு போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலத்தைக் காக்க எங்கள் முன்னோர்கள் செய்த உயிரீகங்கள் வீணாகாமல் இருக்க, களத்தில் நின்று போராடி மீட்டு அடுத்தத் தலைமுறைக்குப் பாதுகாப்பாகக் கையளிப்போம் என்கிற உறுதியை வீரப்பெரும்பாட்டன்களின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் ஏற்போம்.
உலகத்தமிழ் மக்களின் உணர்வோடு இணைந்து நம் வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியருக்கு நம்முடைய வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பிற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய ஐந்து மாவட்டப் பாசன விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா கே.எம். அப்பாஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணையும், நீரையும் காப்பதே மக்களைக் காப்பதாகும் என்பதற்கேற்ப முல்லைப்பெரியாறு அணையின் உரிமைக்காகவும், உழவர் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் ஓயாது களமாடிய மண்ணின் போராளி ஐயா கே.எம். அப்பாஸ் அவர்கள், ஐந்து மாவட்ட மக்களின் உயிர்நாடியான முல்லைப்பெரியாறு அணையைக் காக்க அவர் முன்னெடுத்த உரிமைப் போராட்டங்களும், ஆற்றிய அரும்பணிகளும் என்றும் போற்றுதலுக்குரியவை. ஐயா அவர்களின் மறைவு ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கும், நீர் உரிமைப் போராட்ட களத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஐயா கே.எம். அப்பாஸ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உழவர் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிய ஐயா கே.எம். அப்பாஸ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி, கூமாப்பட்டி நகரச் செயலாளர் அன்புத்தம்பி மு.வீமன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி மு.வீமன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி மு.வீமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சமையல் கலையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தனது திறமையாலும், உழைப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் மக்களின் அன்பைப் பெற்ற சமையல் கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா தாமு அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்று, சமையல் கலையை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல், ஓர் உயரிய கல்வியாகவும், கலையாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தனது தனித்திறமையால் சமையல் துறையில் தனி அடையாளத்தை உருவாக்கிய அவரது மறைவு, சமையல் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் கலைத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா தாமு அவர்களுக்கு என் புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா?
அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா?
வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை.
ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டப் போராட்டத்தில் வெற்றி!
பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!
தில்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தங்கை கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகள், அன்புத் தம்பி கரூர் நன்மாறன் அவர்களுக்கும், அவருடன் களத்தில் இணைந்து நின்ற தம்பிகள் கோவை வழக்கறிஞர் சூர்யா, தாராபுரம் முகம்மது உசேன், ஈரோடு வழக்கறிஞர் கார்த்தி, அவினாசி வழக்கறிஞர் பகவத், தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம், கரூர் வழக்கறிஞர்கள் பார்த்திபன், இளமாறன், திண்டுக்கல் வழக்கறிஞர் மாதவன், திருப்பூர் வழக்கறிஞர்கள் சரவணன், சிராஜுதீன், நத்தம் சிவசங்கரன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டப் போராட்டத்தில் உடனிருந்து உறுதுணையாக நின்ற திருப்பூர் வழக்கறிஞரும் எனது அன்பு இளவலுமான தம்பி உமர்கயான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
இந்தப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தம்பி மணிசெந்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமையகச் செயலாளர் வழக்கறிஞர் தம்பி செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான
உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும் !
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல் மரபினத்தின் வாழ்வியலையும், பண்பாட்டு நகர்வுகளையும், வரலாற்றுத் தடங்களையும் பெருமிதத்தோடு பொன் எழுத்துகளால் எழுதப்பட்டது. அதில் தன் ஆளுமைத்திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் பல கட்டி கடலைக் கடந்து, தன் வீர மறத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்ப்பேரரசன் எங்கள் பாட்டன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஐப்பசி திருநாள் இன்று!
கடற்படை கட்டி அலைகடல் மீது படைபல நடத்தி, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் மூன்றாம் பெரும் வல்லரசை நிறுவிய மாமன்னன்!
காலவெள்ளத்தால் அழியாத வண்ணம், வானை முட்டும் கோபுரத்தோடு தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பி, வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா?
@CMOTamilnadu @TVKVijayHQ
காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தமிழ்மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே தமிழ்நாடு காவல்துறையில் இடமில்லாத நிலையை தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது வெட்கக்கேடானது.
கடந்த 29.09.2026 அன்று இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, 04.10.2026 அன்று தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை வெளியிட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழைத் தவிர்த்துவிட்டு இந்தியை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது ஏன்? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? இந்தியும் ஆங்கிலமும்தான் தவெக ஆட்சியின் இருமொழிகொள்கையா? தமிழ்நாட்டின் காவல்துறையினர் அணியும் ஒரு சிறிய வில்லையில்கூடத் தமிழுக்கு இடமளிக்க முடியாதென்றால், தவெக அரசுக்கு தமிழ் உணர்வு என்ற ஒன்று அணுவளவாவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் போராடி உயிர் ஈகம் செய்துள்ளனர். மொழிப்போர் ஈகியர்களின் ஈகத்தால் காக்கப்பட்ட தமிழ்மொழியை, ஒன்றிய அரசின் ஒரு கடிதத்திற்காகப் புறக்கணிப்பது அப்போராளிகளின் ஈகத்திற்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.
தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமளிப்பதற்குக்கூட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டுமா? தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறையின் சீருடையில் தமிழ் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசுக்கு என்ன உரிமையிருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முதன்மையானத் துறையாகும். அத்துறையில்கூடத் தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட முடியாமல், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் விஜய் அடிபணிந்துள்ளது தமிழ்நாட்டிற்கு நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தலைகுனிவும், அவமானமுமாகும். தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் அன்னைத் தமிழ்மொழியைப் புறக்கணித்துள்ள வரலாற்றுப் பிழைக்கு தவெக அரசு தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக மன்னிப்புகோர வேண்டும்.
ஆகவே, இருமொழிகொள்கையின்படி, கடந்த திமுக ஆட்சி வரை உறுதியாக கடைபிடிக்கப்பட்டுவந்த, தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இடம்பெற வேண்டும். தமிழ் இடம்பெறாத வில்லையை அணிய அறிவுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்மொழிக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தனித்துவமான குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த பின்னணிப் பாடகர் ஐயா ஆர்.கிருஷ்ணராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பொற்காலம் படத்தில் ஐயா கிருஷ்ணராஜ் அவர்கள் பாடிய ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஐயா செல்லப்பன் ராமநாதன் (எஸ்.ஆர்.நாதன்) அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இளைப்பாறுதலைத் தந்து, அவர் மறைவின்போது அந்நாட்டின் சார்பாக இசைக்கப்படும் அளவிற்கு பெருமை பெற்றது. அந்த அளவிற்கு தமிழ் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் உணர்வுகளையும் தனது இனிய குரலில் உயிரோட்டமிக்க பாடல்களாக தந்த ஆகச்சிறந்த பாடகர் ஐயா கிருஷ்ணராஜ் அவர்கள். என்னுடைய இயக்கத்தில் வெளிவந்த 'இனியவளே' திரைப்படத்தில், நான் எழுதிய 'கண்ணீருக்கு காசு' பாடலையும், 'அன்னக்கிளி வண்ணக்கிளி' பாடலையும் பாடிச் சிறப்பித்தவர். அவரோடு இணைந்து பணியாற்றிய நாட்களும், அவரது குரலில் உயிர்பெற்ற பாடல்களும் என்றும் என் நினைவுகளில் நிலைத்திருக்கும்.
ஐயா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இசைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா கிருஷ்ணராஜ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ் ஊடகப் பரப்பில் புதியதொரு பயணமாக, ABP குழுமம் எண்மத் (Digital) தொழில்நுட்பம் (Smart TV மற்றும் App) மூலம் 24 மணிநேர நேரடிச் செய்தி ஒளிபரப்பை தமிழில் தொடங்கியிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள், வெறுமனே செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு நின்றுவிடாமல், எளிய மக்களின் உரிமைகளுக்காக வலிமையாக ஒலிக்க வேண்டியது காலத்தின் பெருங்கடமையாகும்.
அதிகாரத்தின் குரலாக அல்லாமல், மக்களின் குரலாக உண்மையை உரக்கச் சொல்வதும், அறத்தின் பக்கம் உறுதியாக நிற்பதுமே ஊடகத்தின் உயரிய மாண்பாகும். அந்த வகையில், தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளை நடுநிலையோடும், நேர்மையோடும் மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழினத்தின் மொழி, நிலம், வளம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் மற்றும் உரிமைகள் சார்ந்த செய்திகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து, ஊடக அறத்தைக் காத்து, மக்கள் நலனை முன்னிறுத்தி, சிறப்பான ஊடகப் பணியாற்றிட நெஞ்சம் நிறைந்த
நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் ஊடக உலகில் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கும் @abpnadu செய்தித் தொலைக்காட்சிக்கும், அதன் நிர்வாகிகள், செய்தியாளர்கள், ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய,
திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,
அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும்,
திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா கி.வீரமணி அவர்களுக்கும்,
திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலத்தலைவர் அன்பு மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும்,
பாமகவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா அன்புமணி இராமதாசு அவர்களுக்கும்,
தேமுதிகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும்,
அமமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டிடிவி.தினகரன் அவர்களுக்கும்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா மு.வீரபாண்டியன் அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான என் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,
திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அம்மையார் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கும்,
முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான மதிப்பிற்குரிய அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும்,
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும்,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும்
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும்,
'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களுக்கும்,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா அச.உமர் பாரூக் அவர்களுக்கும்,
இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தடா ரஹீம் அவர்களுக்கும்,
கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும்,
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும்,
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பிற்குரிய சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும்,
காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தங்கை ஜோதிமணி சென்னிமலை அவர்களுக்கும்,
சமூகச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி எவிடென்ஸ் கதிர் அவர்களுக்கும்,
தமிழர் தேசம் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலப் பொருளாளர் அன்புச்சகோதரர் எஸ்.ஆர். சேகர் அவர்களுக்கும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி பனையூர் பாபு அவர்களுக்கும்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் அன்புத்தம்பி திருமாறன் ஜி அவர்களுக்கும்,
புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியச் செயற்பாட்டளர் அண்ணன் அ.வியனரசு அவர்களுக்கும்,
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும்,
வீரகுல அமரன் இயக்கத்தின் தலைவர் சகோதரர் கி. இரா.முருகன் அவர்களுக்கும்,
உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்!
தவறான ஒரு செயல் நடக்கும் பொழுது அதை எல்லோரும் கட்சிகளை எல்லாம் கடந்து ஒன்றாக முன்னின்று கண்டித்து குரல் எழுப்புவது சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது.
மக்களாட்சியின் மாண்புகளைத் காலில் போட்டு மிதித்து, அதிகார மமதையுடன் அடக்குமுறைகளை ஏவும் ஆளும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சனநாயக ஆற்றல்களின் உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கட்டும்!
அடக்குமுறை வீழட்டும்!
சனநாயகம் வெல்லட்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்களைக் காக்கும் காவலர்களின் உயிரையும் உரிமைகளையும் காப்பதே அவர்களது ஈகத்திற்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்!
மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் உயரிய கடமையில் ஈடுபட்டு, இன்னுயிரை ஈந்த காவலர்கள் அனைவருக்கும் அக்டோபர் 21 - காவலர் வீரவணக்க நாளில் எனது நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அன்பையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் நிம்மதியாக உறங்குவதற்காகத் தங்கள் உறக்கத்தைத் துறப்பவர்கள் காவலர்கள். நாம் குடும்பத்தோடு விழாக்களைக் கொண்டாடும்போது, தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வீதிகளில் காவல் நிற்பவர்கள் அவர்கள். கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பேரிடரிலும், பெருந்தொற்றிலும் மக்களுக்காகக் களத்தில் நிற்கும் காவலர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அளப்பரியவை. ஆனால், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவலர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய அரசுகள், அவர்களது அடிப்படைத் தேவைகளில் போதிய அக்கறை காட்டுகின்றனவா என்ற கேள்வியை இந்நாளில் எழுப்ப வேண்டியுள்ளது.
இராணுவத்தில் பணியாற்றுவோர் தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர் வரை அனைவருக்கும் ஓய்வும் விடுப்பும் இன்றியமையாத உரிமைகளாக இருக்கும்போது, காவலர்களுக்கு மட்டும் அவற்றை நடைமுறையில் பெறுவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்? வார விடுமுறையைக்கூட உறுதியாகத் திட்டமிட முடியாமலும், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமலும் காவலர்கள் தவிக்கும் நிலை தொடரலாமா? நீதி வழங்கும் நீதிமன்றகளுக்கே திட்டமிடப்பட்ட விடுமுறைகள் இருக்கும் பொழுது அதை கட்டிக்காக்கும் காவலர்களுக்கும் அது தேவை தானே?
காவலர்களும் மனிதர்கள்தானே! அவர்களுக்கும் குடும்பம், உறவுகள், உடல்நலம், மனநலம் இல்லையா? சீருடை அணிந்துவிட்டால் ஓய்வே தேவையில்லை என்று அரசு கருதுகிறதா? காவல்துறை இடையறாது இயங்க வேண்டிய துறை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக ஒவ்வொரு காவலரும் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்? போதிய எண்ணிக்கையில் காவலர்களை நியமித்து, முறையான சுழற்சிப் பணியை ஏற்படுத்தி, அனைவருக்கும் வார ஓய்வும் உரிய விடுப்பும் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும்.
எனவே, காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, வரையறுக்கப்பட்ட பணிநேரத்தையும் கட்டாய வார ஓய்வையும் உறுதிசெய்ய வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் விடுமுறை நாளில் பணியாற்ற நேரிட்டால், மாற்று ஓய்வு வழங்கப்பட வேண்டும். குடும்ப அவசரங்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான விடுப்பைத் தாமதமின்றி வழங்குவதோடு, மனநல ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நலத்திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்.
பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி, குழந்தைகளின் கல்விப் பாதுகாப்பு, தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கான வேலைவாய்ப்பு ஆகியவை காலதாமதமின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மக்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பிலுள்ள காவல்துறை, சட்டத்திற்கும் மனிதநேயத்திற்கும் உட்பட்டு, அரசியல் தலையீடின்றிச் செயல்படுவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும். காவலர்களின் நலனும் மக்களின் உரிமைகளும் ஒருசேரப் பாதுகாக்கப்படுவதே நல்லாட்சிக்கு அடையாளமாகும்.
உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைப்பதோடு அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. உயிரோடு பணியாற்றும் காவலர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிசெய்வதே அந்தத் ஈகத்திற்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.
கடமையின் பாதையில் இன்னுயிரை ஈந்த காவல் வீரர்களுக்கு வீரவணக்கம்!
மக்களைக் காக்கும் காவலர்களின் உழைப்புக்கும் ஈகத்திற்கும் தலைவணங்குகிறேன்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, ஊரக்குடி கிராமத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர்கள் அன்புத்தம்பி ஆ.சரவணன் ஆ.சந்திரசேகரன் அவர்களின் தாயார் அம்மா ஆ.இந்திரா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஆ.இந்திரா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, அஞ்செட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஸ்ரீகாந்த் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu @TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அனைவருக்கும் 'கல்வித்திருநாள்' கலைமகள் விழா வாழ்த்துகள்!
கல்வியைப் போற்றுவோம்! அறிவை வளர்ப்போம்! புத்தகங்களைத் தொழுது படிப்போம்!
“அறிவொன்றே தெய்வமென்று ஓதி அறியீரோ?” என்று அறிவின் உயர்வைப் போற்றிப் பாடினார் பாட்டன் பெரும்பாவலர் பாரதி.
“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை” என்று கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தினார் புரட்சிக்கவிஞர் தாத்தா பாரதிதாசன்.
மனிதனை மனிதனாகச் செதுக்குவதும், அறியாமை இருளை அகற்றி அறிவொளி ஏற்றுவதும் கல்வியே! தனிமனிதனின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, ஒரு இனத்தின் எழுச்சிக்கும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைவது கல்வியும், அறிவுமே ஆகும்.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு விதைநெல்லுக்குச் சமமானது. விதைநெல்லை எவ்வாறு அடுத்த தலைமுறையின் விளைச்சலுக்காகப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே புத்தகங்களையும் அவை தாங்கியிருக்கும் அறிவுச் செல்வத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்காகப் பாதுகாத்து வழங்க வேண்டும்.
போர்க்களத்தில் ஏந்தப்படும் ஆயுதங்களைவிடவும் வலிமைமிக்கவை புத்தகங்கள். ஆயுதங்கள் மனிதர்களை வீழ்த்தக்கூடும்; ஆனால், புத்தகங்களால் மனித மனங்களை வெல்ல முடியும். ஆயுதங்கள் அழிவை ஏற்படுத்தக்கூடும்; புத்தகங்களோ அறிவையும் ஆக்கத்தையும் உருவாக்கும். சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், உண்மையைத் தேடவும், உரிமைக்காகப் போராடவும் மனிதனைத் தயார்ப்படுத்தும் பேராற்றல் புத்தகங்களுக்கே உண்டு.
“கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று அறிவுறுத்துகிறார் அறிவு மூதாட்டி ஔவை. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னனுக்கும் அவனது அமைச்சர்களுக்கும் அந்த நாட்டின் எல்லைக்குள்தான் அதிகாரமும் செல்வாக்கும் இருக்கும். ஆனால், கல்வி கற்ற அறிஞனுக்கு உலகெங்கும் மதிப்பும் சிறப்பும் இருக்கும் என்பதை காலம்கடந்து நிற்கும் அவ்வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
பாட்டன் அதிவீரராம பாண்டியர் தமது வெற்றிவேற்கை நூலில்,
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே!”
என்று கல்வியின் உயர்வை எடுத்துரைக்கிறார்.
அதுபோலவே, நம்முடைய பெரும்பாட்டன் திருவள்ளுவப் பெருமானார்,
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.”
என்றும்,
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
என்றும் அறிவுச் செல்வத்தின் அளப்பரிய சிறப்பை கல்வி, கேள்வி, கல்லாமை உள்ளிட்ட அதிகாரங்கள் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவாக விளக்குகிறார்.
மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரப்பதைப்போல, கற்கக் கற்க அறிவும் பெருகிக்கொண்டே இருக்கும். ஆகவே, மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கற்பதைத் தொடர வேண்டும்.
உலகில் மனிதன் ஈட்டக்கூடிய செல்வங்களிலேயே ஆகச் சிறந்தது கல்விச் செல்வமும் அறிவுச் செல்வமும்தான். பிற செல்வங்களைப் பிறர் பறித்துக்கொள்ள முடியும்; ஆனால், கற்ற கல்வியையும் பெற்ற அறிவையும் எவராலும் பறித்துக்கொள்ள முடியாது.
அத்தகைய அறிவுச் செல்வத்தை வளர்க்கின்ற ஆகப்பெரிய கருவிகளாக விளங்கும் புத்தகங்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
“நூலகம் இல்லாத வீடு, இதயம் இல்லாத வெறும் கூடு” என்று நூலகத்தின் இன்றியமையாமையை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்ற கருத்து, புத்தகங்களின் சமூக மாற்ற ஆற்றலை உணர்த்துகிறது.
எனவே, நூலகங்களை வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களாகக் கருதாமல், அறிவுத் திருக்கோயில்களாகப் போற்றி வளர்க்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் பெருக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள் நிறைய வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் நல்ல நூல்கள் தவழ வேண்டும்.
நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதி,
“அமிழ்தில் இனியதடி பாப்பா – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!”
என்று பாடியதோடு,
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!”
என்றும் அறிவுறுத்துகிறார்.
தமிழ்மொழியைத் தொழுது படிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பாரதியின் வழியில், நாமும் நமது தாய்மொழியையும் அறிவை வளர்க்கும் புத்தகங்களையும் தொழுது போற்றிக் கற்க வேண்டும்.
கலைமகள் விழாவாக வழிபடும் இந்நன்னாளில், கல்விக்கும், கலைக்கும், அறிவுக்கும் அடிப்படையாக விளங்கும் நூல்களை வணங்கிப் போற்றுவதே இவ்விழாவின் உயர்ந்த நோக்கமாக அமையும்!
புத்தகங்களை வணங்குவது மட்டுமல்ல; அவற்றைப் படிப்பதும், படித்தவற்றைச் சிந்திப்பதும், பெற்ற அறிவை வாழ்வில் கடைப்பிடிப்பதும், அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதுமே உண்மையான கல்வி வழிபாடாகும்.
ஆகவே, கலைமகள் விழாவைக் கல்வித் திருநாளாக அனைவரும் கொண்டாடுவோம்!
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அறிவை வளர்ப்போம்! அறியாமையை அகற்றுவோம்! நூல்களைப் போற்றுவோம்! நூலகங்களைப் பெருக்குவோம்! கல்வியால் நம் இனத்தையும் நாட்டையும் உயர்த்துவோம்!
உங்கள்அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான 'கல்வித்திருநாள்' கலைமகள் விழா நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலக ஊடகப் பிரிவு ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி ச.த.தாயன்பன் அவர்களின் தந்தை
மதிப்பிற்குரிய ஐயா சு.சம்பத் குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி ச.த.தாயன்பன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சு.சம்பத் குமார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆயுத வழிபாட்டுத் திருநாள் வாழ்த்துகள்!
"பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,
வாளோடு முன் தோன்றி மூத்த குடி!"
என்று சங்க இலக்கியமான புறப்பொருள் வெண்பாமாலை பாடுவதுபோல, தொல்தமிழ்ப்பேரினத்தின் மக்களாகிய நாம் நம் உடலோடு இணைந்த கையையும், காலையும் போல, கையில் வாளையும், வேலையும் கொண்டு வளர்ந்து, வாழ்ந்த வீரமிக்க பண்பாட்டுச் செழுமைக்குரியவர்கள்.
150 கோடி மக்கள் வாழும் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் நாட்டின் எல்லையில் 15 இலட்சம் வீரர்கள் ஆயுதம்தாங்கி எல்லை காத்து நிற்பதுதான் காரணம்!
ஒவ்வோரு நாளும் இரவு பகல் பாராமல், பசி தூக்கம் இன்றி ஆயுதம் ஏந்தி நம்முடைய காவலர்கள் காப்பதுதான் மக்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்கப்படுகிறது.
"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்று ஆயுதம் செய்து தருவதும் தமிழர் வாழ்வியலில்
முதன்மையான கடமையாக இருந்துள்ளதை புறநானூற்றின் 312 வது பாடலில் பாடுகிறார்
அறிவுப்பெருமகள் பொன்முடியார்.
வலியதுதான் வாழும் எனும் இயற்கை கோட்பாட்டிற்கிணங்க உலக முழுமைக்கும் வீரமிக்க தலைமுறையை தந்த இனங்கள்தான் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வாழ்கிறது.
வரலாறு என்பது வீர்ர்களுக்கானதே தவிர கோழைகளுக்கானது அல்ல;
மனித இனத்திற்கு அறிவின் கூர்மை எப்படி இன்றியமையாததோ அதைப்போலவே உடல் வலிமையும் மிக அவசியமானது.
அதனால்தான் தமிழர்கள் ஐயனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் உள்ளிட்ட தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களை ஆயுதம் ஏந்தி நிற்கும் காவல் தெய்வங்களாக வழிபட்டனர். அந்தப் பண்பாட்டின் நீட்சிதான் நமது வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், மருது சகோதார்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சுந்தரலிங்கம், வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் உள்ளிட்ட நம்முடைய இன முன்னோர்களின் சிலைகளையும் வாள் வேலோடு நாம் இன்றும் போற்றுகிறோம்.
போருக்குச் செல்லும் முன் ஆயுதஙகளை வழிபடும் தொன்று தொட்ட நம் வழக்கத்தின் தொடர்ச்சியே 'ஆயுத பூசை' விழாவாக இன்றும் தொடர்கிறது.
எனவேதான் “ஏரும் போரும் எமக்குத் தொழில்” என்ற எம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியைப் போற்றி, உழைப்புக் கருவிகளையும், தற்காப்பின் அடையாளங்களையும் மதிக்கும் நாளாக ஆயுத வழிபாட்டு நாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது.
ஏர் என்பது உணவளிக்கும் உழைப்பின் அடையாளம்; போர் என்பது உயிரையும் உடைமையையும் மண்ணையும் மானத்தையும் காக்கும் மறத்தின் அடையாளம். நிலத்தை உழுது உயிர்களை வாழவைத்ததும், அந்த நிலத்திற்கும் மக்களுக்கும் கேடு வந்தபோது எதிர்த்துநின்று காத்ததும் எம் முன்னோர்களின் வாழ்வியல் அறம். பிறர் நிலத்தைப் பறிப்பதற்காக அல்ல; தம் நிலத்தைப் பாதுகாப்பதற்காக எழுந்த வீரத்தையும், பசியைப் போக்குவதற்காக நிலத்தில் சிந்திய வியர்வையையும் ஒருசேர நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பு.
உழவரின் ஏரும், தச்சரின் உளியும், கொல்லரின் சுத்தியலும், நெசவாளரின் தறியும் வெறும் கருவிகளல்ல; மனித வாழ்வை உருவாக்கிய உழைப்பின் சான்றுகள். உலகிற்கு உணவிடும் உழவு செய்ய பயன்படும் கடப்பாரை, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட ஒவ்வொன்றும் நம் ஆயுதங்கள்தான். ஆயுதம் அழிவுக்கருவியல்ல; உலகை ஆக்குவதற்கும், காப்பதற்கும் பயன்படுவதுதான் ஆயுதங்கள்!
அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம்; ஆனால், அவற்றை இயக்கும் மனித உழைப்பின் மதிப்பு என்றும் மாறுவதில்லை. எழுதுகோல் முதல் கணினி வரை, எந்திரம் முதல் படப்பிடிப்புக் கருவி வரை, நம் அறிவையும் ஆற்றலையும் படைப்பாக மாற்றும் ஒவ்வொரு கருவியும் போற்றுதலுக்குரியதே!
கருவிகளைப் போற்றும் இந்நாளில், அவற்றைக் கையாளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் உயர்த்த உறுதியேற்போம். கருவிகளுக்குச் செய்யும் சிறப்போடு, தொழிலாளர்களுக்குரிய மதிப்பையும் வழங்குவோம். உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு, சம உரிமை ஆகியவை ஒவ்வொரு உழைப்பாளருக்கும் கிடைக்க வேண்டும். எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்காமல், உழைப்பின் மாண்பைப் போற்றும் சமத்துவச் சமூகத்தைப் படைப்போம்.
நிலத்தை உழும் ஏரைப் போற்றுவதோடு, விளைநிலங்களையும் காப்போம்! தொழிற்கருவிகளைப் போற்றுவதோடு, நம் மரபுத் தொழில்களையும் மீட்டெடுப்போம்! உற்பத்தியைப் பெருக்குவதோடு, மண்ணும் நீரும் காற்றும் மாசுபடாமல் பாதுகாப்போம்! நமது தேவைகளை நாமே நிறைவு செய்யும் தற்சார்பு வாழ்வை நோக்கி முன்னேறுவோம்!
அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும், அநீதியை எதிர்க்கவும், எளியவர்களைக் காக்கவும் நமது திறன்களைப் பயன்படுத்துவோம். உழைப்பில் செழிப்பையும், ஒற்றுமையில் வலிமையையும், உரிமை காப்பதில் உறுதியையும் பெறுவோம்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ஆயுத வழிபாட்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆயுத வழிபாட்டுத் திருநாள் வாழ்த்துகள்!
"பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,
வாளோடு முன் தோன்றி மூத்த குடி!"
என்று சங்க இலக்கியமான புறப்பொருள் வெண்பாமாலை பாடுவதுபோல, தொல்தமிழ்ப்பேரினத்தின் மக்களாகிய நாம் நம் உடலோடு இணைந்த கையையும், காலையும் போல, கையில் வாளையும், வேலையும் கொண்டு வளர்ந்து, வாழ்ந்த வீரமிக்க பண்பாட்டுச் செழுமைக்குரியவர்கள்.
150 கோடி மக்கள் வாழும் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் நாட்டின் எல்லையில் 15 இலட்சம் வீரர்கள் ஆயுதம்தாங்கி எல்லை காத்து நிற்பதுதான் காரணம்!
ஒவ்வோரு நாளும் இரவு பகல் பாராமல், பசி தூக்கம் இன்றி ஆயுதம் ஏந்தி நம்முடைய காவலர்கள் காப்பதுதான் மக்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்கப்படுகிறது.
"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்று ஆயுதம் செய்து தருவதும் தமிழர் வாழ்வியலில்
முதன்மையான கடமையாக இருந்துள்ளதை புறநானூற்றின் 312 வது பாடலில் பாடுகிறார்
அறிவுப்பெருமகள் பொன்முடியார்.
வலியதுதான் வாழும் எனும் இயற்கை கோட்பாட்டிற்கிணங்க உலக முழுமைக்கும் வீரமிக்க தலைமுறையை தந்த இனங்கள்தான் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வாழ்கிறது.
வரலாறு என்பது வீர்ர்களுக்கானதே தவிர கோழைகளுக்கானது அல்ல;
மனித இனத்திற்கு அறிவின் கூர்மை எப்படி இன்றியமையாததோ அதைப்போலவே உடல் வலிமையும் மிக அவசியமானது.
அதனால்தான் தமிழர்கள் ஐயனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் உள்ளிட்ட தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களை ஆயுதம் ஏந்தி நிற்கும் காவல் தெய்வங்களாக வழிபட்டனர். அந்தப் பண்பாட்டின் நீட்சிதான் நமது வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், மருது சகோதார்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சுந்தரலிங்கம், வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் உள்ளிட்ட நம்முடைய இன முன்னோர்களின் சிலைகளையும் வாள் வேலோடு நாம் இன்றும் போற்றுகிறோம்.
போருக்குச் செல்லும் முன் ஆயுதஙகளை வழிபடும் தொன்று தொட்ட நம் வழக்கத்தின் தொடர்ச்சியே 'ஆயுத பூசை' விழாவாக இன்றும் தொடர்கிறது.
எனவேதான் “ஏரும் போரும் எமக்குத் தொழில்” என்ற எம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியைப் போற்றி, உழைப்புக் கருவிகளையும், தற்காப்பின் அடையாளங்களையும் மதிக்கும் நாளாக ஆயுத வழிபாட்டு நாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது.
ஏர் என்பது உணவளிக்கும் உழைப்பின் அடையாளம்; போர் என்பது உயிரையும் உடைமையையும் மண்ணையும் மானத்தையும் காக்கும் மறத்தின் அடையாளம். நிலத்தை உழுது உயிர்களை வாழவைத்ததும், அந்த நிலத்திற்கும் மக்களுக்கும் கேடு வந்தபோது எதிர்த்துநின்று காத்ததும் எம் முன்னோர்களின் வாழ்வியல் அறம். பிறர் நிலத்தைப் பறிப்பதற்காக அல்ல; தம் நிலத்தைப் பாதுகாப்பதற்காக எழுந்த வீரத்தையும், பசியைப் போக்குவதற்காக நிலத்தில் சிந்திய வியர்வையையும் ஒருசேர நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பு.
உழவரின் ஏரும், தச்சரின் உளியும், கொல்லரின் சுத்தியலும், நெசவாளரின் தறியும் வெறும் கருவிகளல்ல; மனித வாழ்வை உருவாக்கிய உழைப்பின் சான்றுகள். உலகிற்கு உணவிடும் உழவு செய்ய பயன்படும் கடப்பாரை, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட ஒவ்வொன்றும் நம் ஆயுதங்கள்தான். ஆயுதம் அழிவுக்கருவியல்ல; உலகை ஆக்குவதற்கும், காப்பதற்கும் பயன்படுவதுதான் ஆயுதங்கள்!
அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம்; ஆனால், அவற்றை இயக்கும் மனித உழைப்பின் மதிப்பு என்றும் மாறுவதில்லை. எழுதுகோல் முதல் கணினி வரை, எந்திரம் முதல் படப்பிடிப்புக் கருவி வரை, நம் அறிவையும் ஆற்றலையும் படைப்பாக மாற்றும் ஒவ்வொரு கருவியும் போற்றுதலுக்குரியதே!
கருவிகளைப் போற்றும் இந்நாளில், அவற்றைக் கையாளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் உயர்த்த உறுதியேற்போம். கருவிகளுக்குச் செய்யும் சிறப்போடு, தொழிலாளர்களுக்குரிய மதிப்பையும் வழங்குவோம். உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு, சம உரிமை ஆகியவை ஒவ்வொரு உழைப்பாளருக்கும் கிடைக்க வேண்டும். எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்காமல், உழைப்பின் மாண்பைப் போற்றும் சமத்துவச் சமூகத்தைப் படைப்போம்.
நிலத்தை உழும் ஏரைப் போற்றுவதோடு, விளைநிலங்களையும் காப்போம்! தொழிற்கருவிகளைப் போற்றுவதோடு, நம் மரபுத் தொழில்களையும் மீட்டெடுப்போம்! உற்பத்தியைப் பெருக்குவதோடு, மண்ணும் நீரும் காற்றும் மாசுபடாமல் பாதுகாப்போம்! நமது தேவைகளை நாமே நிறைவு செய்யும் தற்சார்பு வாழ்வை நோக்கி முன்னேறுவோம்!
அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும், அநீதியை எதிர்க்கவும், எளியவர்களைக் காக்கவும் நமது திறன்களைப் பயன்படுத்துவோம். உழைப்பில் செழிப்பையும், ஒற்றுமையில் வலிமையையும், உரிமை காப்பதில் உறுதியையும் பெறுவோம்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ஆயுத வழிபாட்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆறுமுகனேரி பொறுப்பாளர் அன்புத்தம்பி லெ.மாரியப்பன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பு.லெட்சுமணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி லெ.மாரியப்பன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பு.லெட்சுமணன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருத்தணி கார்த்திகேயபுரத்தில் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ஏறத்தாழ 838 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 35 இலட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கிளிங்கர் அரவை ஆலையை அமைத்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலை சீரழிக்க தமிழ்நாடு அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, அப்பகுதி மக்களின் நலன், நீர்வளம், விவசாயம் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டியதும், அப்பகுதி மக்களின் கருத்தினைக் கேட்க வேண்டியதும் மிகவும் இன்றியமையாததாகும். அதனை விடுத்து, கிளிங்கர் அரவை ஆலையில் கிளிங்கர் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற காரணத்தைக் காட்டி, கிளிங்கரால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்துவிட முடியாது. கிளிங்கர் அரவை ஆலையில் மூலப்பொருட்களைக் கையாளுதல், சிமெண்ட் அரவை, தூசு பரவல், கனரக வாகனப் போக்குவரத்து, ஒலி மாசு மற்றும் நீர்வளப் பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் மதிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் திணிப்பது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்களின் வாழ்வுரிமையைவிடத் தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கம் என்பது முதன்மையானது அல்ல. சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி மக்களின் கடமையோ, அதைப்போலவே, இயற்கையைப் பாதுகாப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமையாகும். சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் அரசு அனுமதியளிக்கக்கூடாது.
ஆகவே, தமிழ்நாடு அரசு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன்!
ஆயுதமேந்தி, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திட்டபோதும் கண்ணியமும், ஒழுக்கமும் துளியும் பிறழாது வாழ்ந்த ஒழுக்கச்சீலன்! வாசாத்தி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றம் கொண்டு நீதிகேட்ட எல்லைச்சாமி!
உயிரைவிட உரிமை உன்னதமானது எனும் உயரியக் கோட்பாட்டுக்கேற்ப, காவிரி நதிநீர் உரிமைக்காகப் போர்க்குரல் எழுப்பிய போராளி! கர்நாடகாவில் தமிழின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடும் இனக்கலவரத்தை எதிர்த்து நின்ற மானத்தமிழன்!
கர்நாடகாவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் குரலெழுப்பிய பெருமகன்!
அரச வன்முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஒருநாளும் அஞ்சாது, வீரத்தின் உருவாய் காட்டுக்குள் நின்ற மாவீரன்!
தமிழர் நிலத்தையும், வனத்தையும் ஐயனாராய் காத்து நின்ற எல்லைக்காவலன் எங்கள் ஐயா வீரப்பனார் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ப.பாலு அவர்களின் தந்தை ஐயா மோ.பஞ்சநாதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா மோ.பஞ்சநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்திரையிசை உலகில் தனக்கெனத் தனித்துவமான இசை முத்திரையைப் பதித்து, தமிழ் மக்களின் இல்லங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் அன்பிற்குரிய ஐயா ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த ஐயா தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும்.
என்னுடைய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய ஐயா தேவா அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக்கலைஞன் ஐயா தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
போற்றுதற்குரிய பெருமகன் ஐயா தேவா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும் களப்போராளி!
தனது கூர்மையான மதிநுட்பத்தாலும், அளப்பெரிய தர்க்க அறிவாலும் தமிழ்த்தேசியம் எனும் ஒப்பற்ற கருத்தியலை அறிவுத்தளத்திலும், மக்கள் மனத்திலும் நிலைநிறுத்தும் பேரறிவாளர்!
தமிழ்த்தேசிய அரசியலில் எங்களுக்கு முன்னத்தி ஏராக திகழ்கின்ற பெருமகன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவரை தவெக அரசு இதுவரை நியமனம் செய்யாதது ஏன்? அதிமுக்கியப் பதவியை நிரப்பாமல் அலட்சியம் செய்வது தமிழ்நாட்டின் நீருரிமையைக் காவுகொடுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
தமிழ்நாட்டின் உயிராதாரமான நீருரிமைகளைப் பாதுகாக்கும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியும் அனுபவமும் கொண்ட அதிகாரியை இதுநாள் வரை நியமிக்காமல் காலந்தாழ்த்திவரும் தவெக அரசின் நிர்வாக அலட்சியம் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கடந்த 09.10.26 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண்: 71இல், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவிற்கு இதுவரை முழுநேர துணைத்தலைவரை தவெக அரசு நியமிக்காததால், உயர்மட்ட முடிவெடுத்தலிலும், பணித்தொடர்ச்சியிலும் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் சொந்த ஆவணமே இவ்வளவு தெளிவாக எச்சரித்தும், உரிய நியமனத்தை தவெக அரசு இதுவரை செய்யாமல் இருப்பது ஏன்? காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் முந்தைய துணைத்தலைவர் கடந்த 28.06.26 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாத இறுதியில் காலியான அம்முக்கியப் பதவியை நிரப்ப அக்டோபர் மாதம்வரை தவெக அரசு அனுமதி வழங்காதது ஏன்?
தற்போது அனுமதி வழங்கிய பிறகும் இன்றுவரை அப்பொறுப்பிற்குப் பொறியாளரை நியமனம் செய்யாததற்கு என்ன காரணம்? பதவியை நிரப்ப அனுமதி வழங்குவதோடு அரசின் கடமை முடிந்துவிட்டதா? கோப்புகளில் அனுமதி வழங்கிவிட்டு, களத்தில் பணியிடம் காலியாக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பதவியை நிரப்புவதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அதிமுக்கிய பதவியை நிரப்புவதற்கு அப்படியே கூடுதல் செலவு ஏற்பட்டால்தான் என்ன? எதற்காக இந்த தாமதம்? காவிரி ஆற்றில் போதுமான நீர் வராத நிலையிலும், வெற்று விளம்பரத்திற்காக நீரை திறக்கிறேன் என்றுகூறி சென்னையிலிருந்து மேட்டூர் வரை சென்று வருவதற்கு மட்டுமே 6 கோடி ரூபாய் செலவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தம்முடைய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் காவிரி தொழில்நுட்பக் குழுமத் துணைத்தலைவரை நியமித்தால் கூடுதல் செலவாகும் என்று காரணம் கூறுவது வெட்கக்கேடானது.
காவிரி தொழில்நுட்பக் குழுமம் என்பது வழக்கமான வெறும் நிர்வாக அலுவலகம் மட்டுமல்ல. காவிரி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம்–ஆழியாறு, பாலாறு, பெண்ணையாறு, நெய்யாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீருரிமைச் சிக்கல்களைக் கையாளும் கோடிக்கணக்கான மக்களுடன் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய அதிமுக்கிய நிர்வாக அமைப்பாகும். மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடனான நீர் சிக்கல்களில் தமிழ்நாட்டின் வாதங்களுக்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களைத் தயாரிக்கும் பெரும்பொறுப்பை வகிக்கும் அமைப்பாகும். அதன் தலைமைப் பொறுப்பை ஏற்பவருக்கு நிலுவையிலுள்ள 30க்கும் மேற்பட்ட நதிநீர்ச் சிக்கல் வழக்குகளைத் திறம்படக் கையாளும் பொறுப்புணர்வும், உடனடி முடிவெடுக்கும் திறனும், துறைசார் அனுபவத் தொடர்ச்சியும் அவசியம் என்று அரசாணையே வலியுறுத்துகிறது.
அத்தனை அதிமுக்கிய அமைப்பின் முக்கியப் பதவியைக் காலியாக வைத்திருப்பது தமிழ்நாட்டின் நதிநீர் சட்டப் போராட்டங்களைப் பலவீனப்படுத்தி எதிர்த்தரப்பு மாநிலங்களுக்கு சாதமாக்கிவிடாதா? மேகதாது உள்ளிட்ட தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையைப் பறிக்கும் வழக்குகள் நமக்கு எதிராக அமைந்துவிடாதா? அதைத்தான் விரும்புகிறதா தவெக அரசு? அதற்குத்தான் திட்டமிட்டு இப்பதவியை நிரப்பாமல் வைத்துள்ளதா? தமிழ்நாட்டின் நீருரிமையைப் பாதுகாக்கும் அதிமுக்கியப் பொறுப்பிற்குத் தகுதியான ஒருவரை நியமிப்பதற்கே தவெக அரசு இத்தனை காலதாமதம் செய்கிறது என்றால், தமிழ்நாட்டின் நதிநீர் சிக்கல்களைத் தீர்த்து, நம்முடைய நதிநீர் உரிமையைப் பெறுவதுதான் எப்போது? இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டின் நீரூரிமையைக் காக்க அளிக்கும் முன்னுரிமையா? இதுதான் தமிழ்நாட்டு விவசாயிகளைக் காக்கும் முறையா? தவெக அரசின் நிர்வாகத்திறமையின்மையும், அலட்சியச்செயல்பாடும் தொடர்ந்தால் தமிழ்நாடு தன்னுடைய உரிமைகளை இழக்கும் பேராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
எனவே, அரசாணை 71 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நீர் விவகாரங்களைக் கையாளும் அறிவும் அனுபவமும் கொண்ட, தகுதியான தலைமைப் பொறியாளரை காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவராக உடனடியாக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures @vidya_balan @iam_SJSuryah #mithunchakraborty #surajvenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #pallavisingh @valentino_suren @Alagiakoothan #santoshraju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #jailer2 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வணிகர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி லெட்சுமணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ராம.நெல்லியான் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராம.நெல்லியான் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தனது ஒப்பற்ற தனித்திறனாலும், வீரியமிக்கப் பேச்சாற்றலாலும் வெகுமக்களைக் கவர்ந்து, கடைக்கோடி மக்களுக்கும் கருத்துகளைக் கடத்தி, அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆதிக்கம் செய்யும் வல்லமை கொண்ட பேராற்றலாளன்!
கடும் அடக்குமுறைகளையும், கொடிய அவதூறுப்பரப்புரைகளையும் எதிர்கொண்டபோதிலும் கொண்ட கொள்கைக்காக, ஏற்றுக்கொண்ட தலைமைக்காகத் தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமற்று நிற்கும் உளத்தூய்மையும், உள்ளத்துணிவும் கொண்ட துடிப்புமிக்கச் செயற்பாட்டாளன்!
எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கும் படைத்தளபதிகளுள் ஒருவன்! நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர்!
என்னுடைய ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
@Saattaidurai -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தாய்மொழியில் பயின்று தம்முடைய கூர்த்த அறிவாற்றலால் இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர்..!
தம் அறிவியல் தொழில்நுட்பத் திறன் கொண்டு இந்தியப் பெரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய ஏவுகணை நாயகன்..!
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து, குடிசையில் வாழும் மக்களின் குரலாக ஒலித்த பெருந்தகை!
முதல்முறையாக இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் உயர்வுக்காகவும் சிந்தித்த ‘இந்தியாவின் முதல் குடிமகன்’!
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பாத சுமையைக் குறைத்த அறிவியல் மாமேதை..!
மாணவ கண்மணிகளை மகத்தான இலட்சியங்களைக் கனவு காண அறிவுறுத்திய மாபெரும் தலைவர்..!
அறிவியலாளர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், மனிதநேய மிக்க மாண்பாளர், எளிய மக்களிடம் எவ்வித பகட்டும் இன்றி இனிமையாகப் பழகும் உயர்ந்த பண்பாளர்..!
இந்திய விண்வெளி திட்டங்களின் விடிவெள்ளி, தமிழினத்தின் அறிவியல் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல்கலாம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் வயலில் வேளாண் பணி செய்து கொண்டிருந்த அன்புச்சகோதரிகள் பிரான்சிஸ் என்ற சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி ஆகிய 2 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எதிர்பாராத இயற்கை பாதிப்பில் உயிரிழந்த சகோதரிகள் இருவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். எளிய பின்புலம் கொண்ட சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி இருவரும் விவசாயப்பணி செய்து வாழ்ந்து வந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்ததால் அப்பெண்களை நம்பியிருந்த அவர்களுடைய குடும்பம் ஆதரவற்று நிற்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் பல இலட்சங்கள் இழப்பீடு அறிவிக்கும் தமிழ்நாடு அரசு, மக்கள் பசி தீர்க்கும் உயர் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயற்கை சீற்றத்தால் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்கி, அவர்களின் குடும்பத்தை சூழ்ந்துள்ள இப்பெருந் துயரிலிருந்து மீள்வதற்கு உதவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மின்னல் தாக்கி உயிரிழந்த பிரான்சிஸ் என்ற சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி இருவருக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இரா.இராஜாராம் அவர்களின் சகோதரர் தம்பி இரா.அன்பழகன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி இரா.அன்பழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்!
சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும்.
‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும்.
ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்களிடம் ஏற்கனவே பன்மடங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலித்து வரும் நிலையில், ஓர் அலகு மின்சாரம் 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தப்போகிறீர்கள்? மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 இலட்சம் கோடிகள் அளவிற்கு கடனில மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும். உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது? இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட்டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல்லையா? அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தாதது ஏன்?
கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் கையூட்டுக்காக (கமிசன்) திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கையூட்டு (கமிசன்) வாங்க? தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழல் முறைகேடுக்கு வழிவகுத்தது என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய் அவர்கள், அதைவிட அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்வது ஏன்? அன்று தவறு என்று சொன்ன கொள்கை, இன்று ஆட்சிக்கு வந்ததும் சரியாகிவிட்டதா? 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மின்சாரம் ஓர் அலகு 4.85 ரூபாய் முதல் 5.85 ரூபாய் வரை அளவிற்குத் தனியாரிடம் வாங்கப்பட்டது. அவசரத் தேவைக்காக அதனை 21 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வாங்கிய பொழுது திமுக அரசை கடுமையாக எதிர்த்தோம். ஆனால், முந்தைய திமுக ஆட்சியின் கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய தவெக அரசின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது எப்படி? அதற்கான நியாயத்தை மக்களிடம் விளக்க தவெக அரசு தயாரா?
தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 5 மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக அல்லல்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில், இப்பொழுது ஓர் அலகு 35 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தால், அதனை காரணமாக வைத்து மேலும் எத்தனை மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள்? மின்தேவை அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசரமாக அதிக விலைக்கு வாங்குவதற்கு அரசு எதற்கு? நிர்வாகம் எதற்கு? தனியாக மின்துறைதான் எதற்கு?
அரசினுடைய மின் நிலையங்களில் நிறுவப்பட்ட உற்பத்தித்திறன் எவ்வளவு? தற்போது பயன்படுத்தப்படும் திறன் எவ்வளவு? முழுமையாக உற்பத்தி செய்ய முடியாததற்கான காரணங்கள் என்ன? தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்திலேயே, மின்வெட்டு ஏற்படும் அளவிற்குத் தமிழ்நாடு மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய தவெக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அவற்றையெல்லாம் செய்யாமல் ஆய்வு என்ற பெயரில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் சென்று வந்தது தங்கள் கட்சியின் விர்சுவல் வாரியர்ஸ் ரீல்ஸ் போடுவதற்கு மட்டும் தானா?
மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த அவசரத் தேவையைக் காரணமாக்கி எந்த விலையிலும் மின்சாரம் வாங்கலாம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறைந்த செலவில் மின்சாரம் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகள் ஆராயப்பட்டனவா? கொள்முதல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு மின்சாரம், எத்தனை நாட்களுக்கு வாங்கப்படுகிறது? இதனால் ஏற்படும் மொத்தக் கூடுதல் செலவு எவ்வளவு? ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூயசக்தி என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தவெக அரசு வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
இந்தக் கூடுதல் செலவை எப்படியாயினும் நாளை மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப் போகிறீர்கள். ஆக அரசின் திட்டமிடல் குறைபாட்டிற்காக எளிய மக்களும் விவசாயிகளும் சிறு தொழில்முனைவோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா? தனியார் மின் நிறுவனங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கா மக்கள் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்? என்ற என்னுடைய கேள்விகளுக்கு தவெக அரசிடம் என்ன பதில் உள்ளது?
ஆகவே, அரசின் மின் நிலையங்களைச் சீரமைத்தல், நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்று மின் உற்பத்தி திட்டங்களையும், மின்சேமிப்பு வசதிகளையும் விரிவுபடுத்துதல், மின் விநியோக இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அதிக விலையிலான மின் கொள்முதல் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்து, தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதோடு, கூடுதல் கொள்முதல் செலவை மக்கள்மீது சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்,
பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய வாழ்க்கை நிலவவேண்டும். மக்களின் துன்பங்களைத் தீர்க்க அரசே முன்வரவேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி!
நமது ஐயா சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று!
இங்கு நாடு தமிழ்நாடாக ஆகியிருக்கிறது; ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடாக மாறியிருக்கிறது!
ஆட்சி மொழியாக, அதிகார மொழியாக, பேச்சு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக, பண்பாட்டு மொழியாக எவ்விடத்திலும் தமிழ் இல்லை! வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை!
இந்நிலையை மாற்றி எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற நிலையை உருவாக்குவதுதான் நம் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.
உணர்வுப்பூர்வமாக அப்பெருமகனின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும் அதை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை ஏற்பதுதான் நாம் செலுத்துகிற உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நமது ஐயா ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமை பாதுகாப்புக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்!
@draramadoss -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம்; அரசுக்கு வேறு சட்டமா? பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றுவதற்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இடநெருக்கடி மிகுந்த பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவச்சொந்தங்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் நிலையில், நிலப் பயன்பாடு மாற்ற நடவடிக்கைகளை தவெக அரசு முன்னெடுப்பது, மக்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்காத ஆணவப்போக்கையே காட்டுகிறது.
குடியிருப்பு, பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளி வகைப்பாடுகளில் இருந்த நிலத்தை இடைத்தேர்தல் முடிந்த அடுத்தநாள் வணிகப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தவெக அரசுக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் இடைத்தேர்தலுக்கு முன்பே ஏன் மாற்றவில்லை?
ஒருபுறம் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை விதி மீறல் என்றுகூறி மக்கள் கட்டிய 129 கட்டிடங்களை காலி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.
மறுபுறம் கடற்கரை பகுதியான பட்டினப்பாக்கத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைச் செயலகம் கட்ட வேக வேகமாக அரசே முயல்வது நியாயம்தானா? கடற்கரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு மட்டும்தானா? அரசுக்கு இல்லையா? மக்களுக்கு ஒரு நீதி? அரசுக்கு வேறு நீதி என்பது நீதியல்ல; பெரும் அநீதி!
தனியார் கட்டடங்களுக்குக் கடலோரப் பாதுகாப்பு விதிகளைச் சுட்டிக்காட்டும் அரசு, தனது திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை அனுமதிகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளை மக்களின் பார்வைக்கு முன்வைக்க வேண்டாமா? நிலப் பயன்பாட்டின் பெயரை மாற்றிவிட்டால் மட்டும் கடற்கரையின் இயற்கைத் தன்மையும் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளும் மாறிவிடுமா?
பட்டினப்பாக்கம் என்பது அரசின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட வெறும் நிலப்பரப்பு அல்ல! அது மீனவ மக்களின் வாழ்வோடும் தொழிலோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த உயிர்நாடி பகுதி. எனவே, கடலுக்குச் செல்லும் வழிகள், படகுகளை நிறுத்தும் இடங்கள், மீன்பிடித் தொழிலுக்கான தேவைகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் ஆகியவை உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதை பாதிக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சியும் அதிகாரமும் வழங்கப்படுகிறதே தவிர, அவர்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி, வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டங்களைத் திணிப்பதற்காக அல்ல. மக்கள் கொடுத்த ஆட்சியை வைத்துக்கொண்டு மக்களையே வஞ்சிப்பது மாபெரும் துரோகம்!
ஆகவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தி, அந்நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றும் ஒப்புதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மீனவச்சொந்தங்களின் துணையுடன் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசுக் கட்டடத்தின் பிரம்மாண்டத்தைவிட மக்களின் வாழ்வும் உரிமைகளுமே உயர்ந்தவை! மக்களை வஞ்சிக்கும் வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மார்ட்டின் அவர்களின் மாமாவும் மாவட்டப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி ஜா.அல்போன்ஸ் ஜெயராஜ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி ஜா.அல்போன்ஸ் ஜெயராஜ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஜா.அல்போன்ஸ் ஜெயராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆட்சிக்கு வந்து முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனை நிறைவேற்றக்கோரினால் கைது செய்வதா? செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராடிய செவிலித் தங்கைகளை காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நோயுற்ற மக்களை இரவும் பகலும் கண் விழித்து காக்கும் தாயினும் சிறந்த செவிலியர்களை, உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. செவிலியர் தங்கைகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை ஏவி அடக்கி ஒடுக்கி கைது செய்வது வெட்கக்கேடானது!
கடந்த ஆட்சியில் இதே வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகச் செவிலியர்கள் போராடியபோது ஆதரவு தெரிவித்த தவெக, ஆட்சிக்கு வந்தால் முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்தது. அன்று நியாயமாகத் தெரிந்த செவிலியர் கோரிக்கைகள், இன்று அதிகாரத்தில் அமர்ந்ததும் செல்லாததாகிவிட்டதா?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; ஆளுங்கட்சியானதும் இன்னொரு நிலைப்பாடு என்பதுதான் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியலா? கொரோனா காலத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்த செவிலித்தங்கைகளை காயப்படுத்துவது நியாயம்தானா? அன்றைக்கு தேவதைகளாக தெரிந்தவர்கள் இன்றைக்கு தேவையில்லாதவர்கள் ஆகிவிட்டார்களா? அதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர்களின் ஐந்து பிரதிநிதிகளைக் கைது செய்ய தவெக அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களைக் கைது செய்வது, இனி அரசின் வார்த்தையை மக்கள் நம்ப முடியாத நிலையை உருவாக்கும் கொடுஞ்செயல்! பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டப் பிரதிநிதிகளைச் சிறைப்பிடிப்பது சனநாயக அரசுக்கு இழுக்காகும்.
வாக்குகளைப் பெறுவதற்கு ஆதரவு! வாக்குறுதியை நிறைவேற்றக் கேட்டால் கைது! இதுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறிய மாற்று அரசியலா? இதுதான் தவெக அரசு பெண்களை காக்கும் முறையா? வீதியில் கதறும் செவிலித்தங்கைகளின் கண்ணீருக்கு முதல்வர் விஜய் அவர்கள் என்ன பதில் கூறிப்போகிறார்? செவிலியர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அவர்களையே காவல்துறையால் அடக்குவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம் இல்லையா? இதுபோன்ற துரோகங்களை அரசு செய்தால் அரசின் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? வருங்கால இளந்தலைமுறை பிள்ளைகள் இனி அரசின் வார்த்தையை நம்ப எப்படி மக்கள் தொண்டு செய்ய முன்வருவார்கள்?
அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தர நிதி இருக்கும் அரசிடம், அந்த குழந்தைகளை நல்லபடியாக பிறப்பிக்கும் செவிலித்தாய்களுக்கு உரிமை வழங்க பணம் இல்லையா? மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களுக்குத் தங்களுடைய பணிக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு கேட்க உரிமை இல்லையா? அவர்களின் உழைப்பைப் பெறத் தெரிந்த அரசுக்கு, அந்த உழைப்பிற்குரிய ஊதியத்தையும், மரியாதையையும் வழங்கத் தெரியாதா?
ஆகவே, தவெக அரசு இனியும் வெற்று வாய்மொழி உறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாமல், பணிநிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட செவிலியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் செவிலித்தங்கைகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி ராஜா ( எ ) முத்துக்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராமையா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராமையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது.
தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்?
எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?
படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்?
எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல!
இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாகப் பசியில் இருப்போர்க்கு வயிறார உணவு கொடுப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்று கற்பித்து வடலூரில் அணையா அடுப்பை ஏற்றி வழிகாட்டிய வள்ளல்..!
வாடிய பயிரைக் கண்டு வாடிய உயிர்ம நேயர்..!
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்ட புரட்சியாளர்..!
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக! அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க! என்று முழங்கிய பேராண்மையாளர்!
தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர்..!
உண்மை ஒளியைக் காண வடலூர் பெருவெளியை அமைத்த அருளாளர்..!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கவென திருவருட்பா அருளிய தெய்வத் திருமகன்..!
‘தமிழர் மெய்யியல் மீட்பர், திருவருட்செல்வர் வள்ளலார் பெருமானார் திருப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴நேரலை 04-10-2026 தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் - காமராஜபுரம் | மு.கார்த்திகா x.com/i/broadcasts/1DGleVNoNqRJL
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் தம்பி மோகன் - லதா இணையரின் 11 வயதான நிறைமதி என்ற பெண் குழந்தையும், 6 வயது பால பிரவீன் என்ற ஆண் குழந்தையும் கடந்த (30.09.2026) அன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (RO Plant) ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து வேதனையுற்றேன்.
உயிருக்கும் மேலாக நேசித்து வளர்த்த இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டு ஆற்றமுடியாத பெருந்துயரத்தில் வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
இந்த விபத்துக்கு காரணமான, அந்த RO Plant-க்கு அரசு மின் இணைப்பு இல்லாமல் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்த ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கடந்த 8 ஆண்டு காலமாக மின்சாரத் திருட்டை ஆதரித்த மின்வாரிய அலுவலர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக, செயல்படாமல் இருந்த RO Plant -ல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ள மின்கசிவைச் சரிசெய்யக்கோரி அந்த கிராம இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய் இருக்காது.
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரும், தொடர்புடைய மின்வாரிய ஊழியர்களுமே இந்த இரண்டு பிஞ்சுகளின் உயிரிழப்புக்கு முதன்மை காரணமானவர்கள்.
இதனால் தமிழக அரசு உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 25 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ரூபாய் 50 லட்சத்தைத் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் எனவும்,
புகார் அளித்தும் கவனக்குறைவாகச் செயற்பட்ட அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴நேரலை 03-10-2026 தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் - குண்டடம் | மு.கார்த்திகா x.com/i/broadcasts/1AGRnZqPkvRGl
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அன்புத்தங்கை மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து இன்று 02-10-2026 தென்தாரை பெரிய காளியம்மன் கோவில் அருகில் நடைபெற்று வரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்.
🔴நேரலை : x.com/i/broadcasts/1rxmqpvapBNxy -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴நேரலை 02-10-2026 தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் - தென்தாரை | மு.கார்த்திகா x.com/i/broadcasts/1rxmqpvapBNxy
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - குளச்சல் சட்டமன்றத் தொகுதி, கப்பியறை பேரூராட்சியைச் சேர்ந்த இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சிஜாந்த் அவர்களின் தாயார் அம்மா ஓமனா சிங்காராஜன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஓமனா சிங்காராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்!
சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி!
தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!
நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்!
நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் இன்று (01-10-2026).
அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ப.சிவராஜ் அவர்களின் சகோதரர் தம்பி ப.சிவகுமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ப.சிவகுமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴நேரலை: மதுராந்தகம் இடைத்தேர்தல் சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் - அச்சிறுப்பாக்கம் x.com/i/broadcasts/1wxWjlkZqbNJQ
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மேகதாது அணை கட்ட விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்ற கர்நாடக முதல்வரின் ஆணவப்பேச்சு இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது! கர்நாட அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது!
@CMOTamilnadu @TVKVijayHQ
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து, 16,745 கோடி ரூபாய் மதிப்பிலான மேகதாது அணைத் திட்டத்திற்கான அனுமதிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், மத்திய நீர் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, விரைவில் ஒன்றிய அரசு அனுமதியளிக்கும் என்று உறுதிபட பேசி இருப்பது ஆணவத்தின் உச்சம்; இந்திய கூட்டாட்சிக்கு எதிரான கர்நாடக முதல்வரின் வரம்பு மீறிய பேச்சுக்கு, இந்திய ஒன்றிய அரசு எந்த மறுப்பும் தெரிவிக்காதது தமிழ்நாட்டிற்கு செய்கின்ற பெருந்துரோகம். மேகதாது திட்டத்தை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு காட்டும் இத்தகைய தொடர் முனைப்புகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
காவிரி கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமான நதி இல்லை. அது தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்த வாழ்வாதார உரிமை!
காவிரியின் கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் நீருரிமையையும், இலட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தையும் புறந்தள்ளிவிட்டு கர்நாடகம் தன்னிச்சையாக புதிய அணையைக் கட்ட முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெறுவதற்கே ஆண்டுதோறும் போராட வேண்டியிருக்கும் நிலையில், மேலும் ஒரு மிகப்பெரிய அணையை காவிரியின் குறுக்கே கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும்.
மேகதாது அணைக்கு தொழில்நுட்ப அனுமதியோ, சுற்றுச்சூழல் அனுமதியோ உள்ளிட்ட எவ்வித ஒப்புதலையும் இந்திய ஒன்றிய அரசு வழங்கக்கூடாது என்றும், ஒன்றிய நீர் ஆணையம் கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிக்கக்கூடாது என்றும்
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அத்தீர்மானத்தை தகர்க்கும் வகையில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசு திட்டத்தை முன்னெடுக்க முயலும்போது, தவெக அரசு அடுத்தகட்டமாக எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
கர்நாடக முதலமைச்சர் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து அனுமதி கோருகிறார்; தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி உரிமையைக் காக்க ஒன்றிய அரசிடம் என்ன அரசியல் மற்றும் சட்ட அழுத்தத்தை உருவாக்கியுள்ளார்?
மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று ஒன்றிய அரசிடம் வெறும் கோரிக்கை வைத்து வழக்கம்போல் கடிதம் எழுதுவதோடு முதல்வர் விஜய் அவர்கள் கடமையை முடித்துக்கொள்வாரா?
கர்நாடக அரசு தனது மாநிலத்தின் நலனுக்காகத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் நலனுக்காக அதே உறுதியையும் வேகத்தையும் தவெக அரசு காட்ட வேண்டாமா?
காவிரி நீர் உரிமையை இழந்த பிறகு போராடி என்ன பயன்? அணைக்கு அனுமதி கிடைப்பதற்கு முன்பே அதைத் தடுத்து நிறுத்துவதுதானே ஒரு பொறுப்புள்ள தமிழ்நாடு அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்?
மேகதாது என்பது வெறும் ஓர் அணை சிக்கல் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் நீருரிமை, உணவு உற்பத்தி, டெல்டா உழவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய மிக முக்கியமான உரிமைப் பிரச்சினையாகும்.
எக்காரணம் கொண்டும், எத்தகைய அழுத்தம் வந்தாலும், தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதிக்கும் மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய ஒன்றிய அரசின் அனுமதியை பெறவும் விடக்கூடாது.
எனவே, கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மேலும் உறுதியாக்கி, ஒன்றிய அரசு எந்தவிதமான அனுமதியையும் வழங்காமல் தடுப்பதற்குத் தேவையான சட்ட, நிர்வாக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 4×400 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அன்புத்தங்கை வித்யா ராமராஜ் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், அன்பு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்றிருக்கும் தங்கை வித்யா ராமராஜின் சாதனை அளப்பரியது. 4×400 மீட்டர் கலப்பு தொடரோட்டத்தில் வெள்ளிப்பதக்கம், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம், தற்போது மகளிர் 4×400 மீட்டர் தொடரோட்டத்தில் தங்கப்பதக்கம் என மூன்று போட்டிகளிலும் மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதிலும், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி, இந்திய தடகள வரலாற்றின் பெருமைக்குரிய வீராங்கனை பி.டி. உஷா அவர்கள் 42 ஆண்டுகளுக்கு முன்பு 1984ஆம் ஆண்டு பதிவு செய்த 55.42 விநாடி தேசிய சாதனையை, 2023ஆம் ஆண்டிலேயே சமன் செய்திருந்த தங்கை வித்யா ராமராஜ், தற்போது 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி அதனை முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது தங்கை வித்யா ராமராஜின் சாதனைப் பயணத்தில் தனித்துவமான மகுடமாகும்.
கோவை மண்ணில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தங்கை வித்யா ராமராஜின் இந்த உயரம் வெறும் பதக்கங்களால் மட்டும் அளவிடப்படக்கூடியதல்ல. வாகன ஓட்டுநராகப் பணியாற்றிய தந்தையின் உழைப்பும், தனது பிள்ளைகள் விளையாட்டில் உயர வேண்டும் என்று ஊக்கப்படுத்திய தாயின் கனவும், எண்ணற்ற பொருளாதாரச் சிரமங்களையும் தடைகளையும் கடந்து தொடர்ந்து பயிற்சி செய்த வித்யாவின் விடாமுயற்சியுமே இன்று அவரை ஆசியாவின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
வசதிகள் இருந்தால்தான் சாதிக்க முடியும்; வாய்ப்புகள் கிடைத்தால்தான் உயர முடியும் என்ற எண்ணங்களைத் தகர்த்து, “வறுமை தடையல்ல; விடாமுயற்சியும் இலட்சிய உறுதியும் இருந்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் உயரத்தை எட்ட முடியும்” என்பதை தனது வாழ்க்கையாலும் சாதனையாலும் மெய்ப்பித்திருக்கிறார் தங்கை வித்யா ராமராஜ்.
தான் களம் கண்ட ஒவ்வொரு போட்டியிலும் பதக்கத்தைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் அவரது சாதனை, குறிப்பாக விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் கிராமப்புற மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளம் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும். தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தங்கை வித்யா ராமராஜ் மிகச்சிறந்த முன்னத்தி ஏர்!
வெற்றி என்பது பணத்தால் வாங்கப்படுவதில்லை; வியர்வையால் வென்றெடுக்கப்படுகிறது! அதனைத் தனது ஒவ்வொரு ஓட்டத்திலும் உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் தமிழ்மகள் வித்யா ராமராஜ்.
ஆசிய விளையாட்டுக் களத்தில் மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டின் பெயரையும் இந்திய நாட்டின் பெருமையையும் உயர்த்தியுள்ள அன்புத்தங்கை வித்யா ராமராஜ் அவர்கள், எதிர்வரும் உலக தடகளப் போட்டிகளிலும் ஒலிம்பிக் களத்திலும் இன்னும் பல சாதனைகளைப் படைத்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென பேரன்போடு வாழ்த்துகிறேன்!
தங்கை வித்யா ராமராஜ் சாதனைப் பயணம் தொடரட்டும்!
உலக அரங்கில் தமிழரின் புகழ் ஓங்கட்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
98 மலைக்கிராம மக்களை வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சி கொடுங்கோன்மை! கடமலைக்குண்டில் போராடும் மேகமலை மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தேனி மாவட்டம் மேகமலை – வருசநாடு பகுதிகளிலுள்ள 98 மலைக்கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 5,000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது கொடுங்கோன்மையாகும். தங்கள் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்காகக் கடமலைக்குண்டில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் நேற்று பலர் மயங்கி விழுந்த செய்தி பெரும் வேதனையளிக்கிறது.
வீடுகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மக்கள் வெயிலில் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு உறுத்தவில்லையா?
காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில், அங்கு வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் குடியிருப்பு, வாழ்வாதாரம், நில ஆவணங்கள், சட்டப்படி கோரக்கூடிய உரிமைகள் ஆகியவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்யாமல், அனைவரையும் ஒரே சொல்லில் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று அழைப்பது எவ்வகையில் நியாயம்?
மக்கள் வாழும் வீடும், அவர்கள் உழைக்கும் நிலமும், குழந்தைகள் பயிலும் பள்ளியும்,
வெறும் கணக்கெடுப்புப் பதிவுகளா? காடுகளைக் காப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றும்போது மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுடையதா? இல்லையா?
இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், மலைக்கிராம மக்களின் உண்மை நிலையை முழுமையாக முன்வைப்பதும், அவர்களுக்கு உள்ள சட்டப்பூர்வமான வழிவகைகளைப் பயன்படுத்துவதும் தமிழ்நாடு அரசின் கடமை. மக்களின் கோரிக்கைப்படி சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை தவெக அரசு உடனடியாக சட்ட ஆய்வு செய்ய வேண்டும். வன உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள், பட்டா மற்றும் பிற ஆவணங்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தி, பாதிக்கப்படும் குடும்பங்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க, தொன்றுதொட்டு வாழும் மக்களின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும்.
வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களை அச்சுறுத்துவதையும், அன்றாடப் போக்குவரத்து மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையற்ற இடையூறு ஏற்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். போராட்டத்தில் மயக்கமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்வதுடன், குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் மலைக்கிராம மக்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தவெக அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையை கேட்டறிய வேண்டும்.
ஆகவே, மேகமலை மலைக்கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், அவர்களது வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். தங்கள் மண்ணில் வாழும் உரிமைக்காக அறவழியில் போராடும் மக்களுடன் நாம் தமிழர் கட்சி உறுதியாகத் துணைநிற்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அனுபவமற்ற தனியார் நிறுவன பணியாளர்களை நியமித்தால் மின்கணக்கீடு மேலும் குளறுபடியாகாதா? வீடுகளுக்கான மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகப் பணியிடங்களை நிரப்பாமல், பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க தவெக அரசு முடிவெடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மின்சாரம் என்பது வெறும் வணிகப்பொருள் மட்டுமல்ல; மக்களின் அன்றாட வாழ்வோடு நேரடியாகப் பிணைந்துள்ள அடிப்படைத் தேவையாகும். அதன் பயன்பாட்டைக் கணக்கிடும் மிக முக்கிய பணியைத் தனியாரிடம் தாரைவார்ப்பது எவ்வகையில் நியாயமாகும்?
மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்றால், அந்த காலிப்பணியிடங்களை இத்தனை மாதங்களாக ஏன் அரசு நிரப்பவில்லை? மின்துறையில் போதிய பணியாளர்களை நியமிக்காதது யாருடைய தவறு? அரசின் நிர்வாகத் தவறுக்கு, அரசுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பது எப்படி தீர்வாகும்? அரசு வேலைக்காக இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கையில், அவர்களுக்கு நிரந்தரப் பணியை வழங்காமல், இருக்கின்ற பணிகளையே ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதுதான் தவெக அரசின் வேலைவாய்ப்புக் கொள்கையா? இதுதான் மக்களுக்கான மாற்றமா?
தவெக ஆட்சியில் அனுபவமிக்க மின்வாரிய பணியாளர்கள் எடுத்த கணக்கீடுகளிலேயே இலட்சக்கணக்கான வீடுகளில் குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், அனுபவமற்ற தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும்போது, தவறான கணக்கீடு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
மின் கணக்கீடு தாமதமாகி அதனால் மக்களுக்கு மேலும் அதிக கட்டணம் செலுத்த நேரிடாதா? அதிகப்படியான மின் கட்டணம் விதிக்கப்பட்டால் மக்கள் யாரிடம் முறையிட வேண்டும்? தனியார் நிறுவனத்திடமா? தவெக அரசிடமா? ஒப்பந்த நிறுவனம் தவறு செய்தால் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் பொதுமக்களின் நுகர்வு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு!
பணியாளர்கள் பற்றாக்குறை என்றால், அதற்கான தீர்வு பணியாளர்களை நியமிப்பதுதானே தவிர தனியார்மயம் அல்ல என்பதை அரசு எப்போது உணரப்போகிறது? இன்றைக்கு மின் கணக்கீட்டுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை மின்வாரியமே தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? வானூர்தி நிலையம் முதல் மின்வாரியப் பணிகள் வரை எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு, அரசு எதை நிர்வாகம் செய்யப்போகிறது? வாடகைக்கு விடும் வேலையையா?
இதற்கு எதற்கு ஆட்சி? அரசு? அமைச்சரவை? முதலமைச்சர்? அவற்றையும் தனியாரிடம் கொடுத்தால் வீண்செலவு குறையுமே! பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணம் மிச்சமாகுமே!
தமிழ்நாட்டில் உள்ள 3.5 கோடி குறைந்த மின்னழுத்த இணைப்புகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 2.5 கோடி வீட்டு மின் இணைப்புகளாக உள்ளன. கோடிக்கணக்கான மக்களுடன் நேரடித் தொடர்புடைய பணியை மேற்கொள்ள போதிய நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, தற்காலிக ஒப்பந்த முறையைத் தேர்வு செய்வது மிகமோசமான நிர்வாக நடவடிக்கையாகும்.
எனவே, மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட மின்வாரியத்தின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எளிய மக்களின் நீதிக்கான குரலாக ஒலிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படக் குழுவினருக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
மண்ணையும் ஆற்றையும் தங்கள் வாழ்வாகக் கொண்ட மக்களின் வலியைப் பேசும் படமாக ‘லெனின் பாண்டியன்’ வெளிவந்துள்ளது. அதிகாரமும் பணபலமும் துணைநிற்கும் மணல் கொள்ளையை எதிர்த்து, ஓர் எளிய மனிதர் நீதிக்காக நிற்கும்போது அவர் சந்திக்கும் அச்சமும் அவமானமும் எத்தனை பெரியவை என்பதை இப்படம் உணர்த்துகிறது. தன் தோற்றத்தால் ஒதுக்கப்பட்ட ஓர் இளம் காவலர், இன்னொருவருக்குத் துணையாக நிற்கும்போது தன் கடமையையும் தன்னம்பிக்கையையும் கண்டடைவது கதைக்கு மேலும் நெகிழ்ச்சியைத் தருகிறது.
நம் ஆறுகளில் அள்ளப்படுவது மணல் மட்டுமல்ல; அது நாளைய தலைமுறையின் வாழ்வாதாரம். அந்தக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எளிய மக்களின் பக்கம் கலை நிற்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் முதல் படத்திலேயே கதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் தம்பி டி.டி. பாலச்சந்திரனை மனமாரப் பாராட்டுகிறேன்.
நீதியைத் தேடும் முதியவரின் அன்பையும் வேதனையையும் காட்டும் அப்பா கங்கை அமரன் நடிப்பை கண்டு மெய்மறந்தேன். அவருக்குத் துணையாக நிற்கும் பெண்ணின் பாசத்தையும் உறுதியையும் அண்ணி ரோஜா செல்வமணி இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் மூலம் திரைக்கு அறிமுகமாகும் தமிழ் கலையுலக அடையாளம் எங்கள் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் ஆருயிர் தம்பி தர்சன் கணேசன், தன் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்; இந்த நல்ல தொடக்கத்தின் மூலம் அன்னை இல்லத்தின் பெருமையை அடுத்தக் கட்டத்திற்கு என் தம்பி தர்சன் கொண்டு செல்வார் என நம்புகிறேன். அன்புத்தம்பி தர்சனுக்கு என் வாழ்த்துக்கள்..
நீதிபதியாக ஜார்ஜ் மரியான், சட்டத்தின் மீது எளிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முகம் கொடுக்கிறார். ஸ்ரிதா ராவ் இளம் தலைமுறையின் உணர்வுகளை நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அர்ச்சனா ரவிச்சந்திரன் தனக்குக் கிடைத்த காட்சிகளில் அழுத்தமான தடம் பதிக்கிறார். ஆடுகளம் நரேன், யுகேந்திரன் வாசுதேவன், போஸ் வெங்கட் ஆகியோர் தங்கள் பாத்திரங்களின் வழியே கதையின் மோதலுக்கும் உணர்வுக்கும் வலுச் சேர்த்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் என் பாராட்டுகள்.
இசை இறைவன் இசைஞானி இளையராஜாவின் இசை காட்சிகளின் உணர்வோடு இணைந்து பயணிக்கிறது; முதல் மரியாதையில் வரும் "பூங்காற்று திரும்புமா" பாடலை மீண்டும் திரையில் கேட்கையில் எப்பொழுதும் போல் இசை ஞானியின் இசையில் நம்மை மறந்து படத்தோடு ஒன்றிவிடுகிறோம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வரிகளும் படைப்புக்குத் துணை நிற்கின்றன. மானாமதுரை மண்ணின் வாழ்வியலைக் காட்சிகளாகப் பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய், கதையின் உலகத்தை உருவாக்கியுள்ள கலை இயக்குநர் அதுரி ஜெயகுமார் ஆகியோரின் உழைப்பு பாராட்டுக்குரியது. எப்பொழுதும் நல்ல கதை, தரமான பட உருவாக்கம், பணியில் ஒழுங்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ஐயா சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் இத்தகைய சமூக அக்கறையுள்ள கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்தமைக்கு ஐயாவிற்கும், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் என் வாழ்த்துகள்.
எளிய மனிதனின் குரல் அதிகாரத்தின் முன் சிறிதாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் குரலைக் கேட்கச் செய்வதே கலையின் கடமை. அக்கடமையை உணர்ந்து ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் என் அன்பையும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@ilaiyaraaja @ddb2411 @gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao
@singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #athuurijaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @aimsathishpro @teamaimpr @riseandroar_inc @SathyaJyothi -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அகிம்சையின் அடையாளமான தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய இலங்கை காவல்துறையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது!
தியாகதீபம் திலீபனின் நினைவுநாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. தங்களுக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் காவல்துறை தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது.
உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.
ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.
இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது.
உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்? ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.
தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..!
தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..!
கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..!
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஒரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து, சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..!
காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..!
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும்
மதுராந்தகம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அன்புததம்பி கோ.ஜானகிராமன் அவர்களை ஆதரித்து இன்று 26-09-2026 மதுராந்தகம் தேரடி தெருவில் நடைபெற்று வரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்.
x.com/i/broadcasts/1DxLdZXPkYyxm -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴நேரலை:26-09-2026 | மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி | சீமான் பொதுகூட்டம் | மதுராந்தகம் தேரடி x.com/i/broadcasts/1DxLdZXPkYyxm
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஊனை உருக்கி உயிரை எரித்து, விடுதலை வேள்வி நடத்திய மாவீரன்..!
ஒரு சொட்டு நீர் அருந்தாமல் விடுதலைப்பசிக்குத் தன்னைத்தானே புசிக்க தந்த பெருமகன்..!
மருத்துவப் படிப்பைக் கைவிட்டு, இன அடிமை இடர் தீர்க்க,
தமிழ்த்தேசியத் தலைவர் தடம் பற்றிய தமிழீழத் தலைமகன்..!
புத்தன், காந்தி பெயரைச் சொல்லி இரத்தம் குடித்த ஓநாய்களின் முகத்திரை கிழித்த புலி வீரன்..!
ஆயுதம் ஏந்திய போராட்டக் களத்தில் அகிம்சையை ஆயுதமாக்கிய புரட்சியாளன்..!
கூர்த்த பெரும் அறிவாற்றலால் அரசியல் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்று, விடுதலைப்படையை வீறுகொள்ளச்செய்த தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தளபதி..!
லெப்டினண்ட் கர்னல், ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பழனிபாபா பாசறையின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா கலிமுல்லா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
புனிதப்போராளி பழனி பாபா அவர்களின் புரட்சிக் கருத்துக்களையும், போர்க்குணத்தையும் இளைய தலைமுறையிடம் விதைக்கும் பெரும்பணி புரிந்த ஐயா அவர்களின் மறைவு தமிழ்ச்சமுகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், பழனிபாபா பாசறையைச் சேர்ந்த உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய ஐயா கலிமுல்லா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஏகநாதன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி ஏகநாதன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஏகநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி குரு.சக்தி அவர்களின் தாயாரும், பாபநாசம் மண்டலச் செயலாளர் அன்புத்தங்கை நளினி சக்தி அவர்களின் மாமியாருமான அம்மா குரு.கல்யாணி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா குரு.கல்யாணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu @Chief_Secy_TN @jagadeshwarioff @VanniTamizhVCK @tnpoliceoffl
சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன; பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது. பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது. மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும். இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன. பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன. குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது? என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும். ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும். இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும், இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை பொறுப்பாளர் அன்புத்தம்பி சிவக்குமார் அவர்களின் அன்புமகன் சி.மனோஜ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்புமகனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் சி.மனோஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ச.தாமோதரக்கண்ணன் அவர்களின் தாயார் அம்மா ச.பச்சவர்ணம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ச.பச்சவர்ணம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோசுவா அவர்களின் அன்புமகன் ஜோகனாஸ் மாஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்பு மகனை இழந்து வாடும் தம்பி ஜோசுவா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
அன்புமகன் ஜோகனாஸ் மாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அன்புத்தங்கை மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து 21-09-2026 அன்று தாராபுரம் அருள்மிகு திருமுருகப்பெருமான் கோயில் அருகில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டம்.
youtu.be/ZyE0b-CMyLc -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அன்புத்தங்கை மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து 21-09-2026 அன்று தாராபுரம் அருள்மிகு திருமுருகப்பெருமான் கோயில் அருகில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை
youtu.be/ZyE0b-CMyLcThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத் தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா? கள்ளுக்கான தடையைத் தவெக அரசு நீக்க மறுப்பது பனை தொழிலாளர்களின் வாழ்வினை அழிக்கும் கொடுஞ்செயல்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
‘கள்’ தமிழர்களின் தொன்மையான வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்ததாகும். பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட பல்வேறு பனைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசு, அதே பனையிலிருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையைத் தொடர்வது ஏன்? தமிழ்நாட்டின் மாநில மரம் பனை என்பது தவெக அரசுக்கு தெரியுமா? தெரியாதா? ‘கள்’ போதைப்பொருள் என்றால், அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத்தீர்த்தமா? அரசு விற்கும் மலிவு விலை மதுதான் மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கிறதே அன்றி, நம் நாட்டு ‘கள்’ அல்ல; மது விற்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களைத் திறப்பதும், இணையம் வாயிலாக மதுவிற்பனை செய்வதும்தான் தவெக அரசு மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் முறையா? அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத்தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா?
‘கள்’ உற்பத்தியில் கலப்படம் ஏற்படும் ஆபத்து மற்றும் விற்பனையை கண்காணிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை தமிழக அரசு தடைக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது வெட்கக்கேடானது. உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையையும், தரத்தையும் ஒழுங்குபடுத்த முடிகிற அரசால், ‘கள்’ உற்பத்தியை மட்டும் உரிய உரிமம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் கீழ் கொண்டுவர முடியாதா? கலப்படம் நடைபெறுகிறது, சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறது என்றால் அவற்றை அரசு தடுக்க வேண்டும். அதற்கு மாறாக, கள்ளுக்கு தடை விதித்து பனை தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது கொடுங்கோன்மை இல்லையா? கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக அரசால் மலிவு விலையில் மதுவிற்க முடியுமென்றால், கலப்படக் கள்ளை தடுக்க, அரசால் தூய கள்ளை விற்க முடியாதா? கள்ளுக்குத் தடையை நீக்காமல், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று தவெக அரசு கூறுவது அப்பட்டமான ஏமாற்றாகும்.
பனை விவசாயிகள் பயன்பெறும் ‘கள்’ விற்பனைக்கு அரசு ஏன் செயல் திட்டம் வகுக்கக்கூடாது? என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய, ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையமும் தனது ஆய்வறிக்கையில், இயற்கை பானமான ‘கள்’ விற்பனையை அனுமதிக்கப் பரிந்துரைத்தது. நாம் தமிழர் கட்சியும், பனைதொழிலாளர்களும் ‘கள்’ தடையை நீக்கப் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, தவெக அரசு கள்ளின் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உடனடியாக திரும்பப்பெற்று, பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘கள்’ மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ம.ஜார்ஜ் ஸ்டீபன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளராகக் களப்பணியாற்றிவந்த தம்பி ம.ஜார்ஜ் ஸ்டீபன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ம.ஜார்ஜ் ஸ்டீபன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சேலம் மேற்கு தொகுதி, இரண்டாவது கோட்டத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி சஞ்சய் அவர்களின் தாயார் அம்மா ராதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி சஞ்சய் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ராதா அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி,
கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி காளியப்பன் அவர்கள் மறைவெய்திய
துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில்
தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த
தம்பி காளியப்பன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த
மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி காளியப்பன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம் வாழ்வு முழுவதையும் தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய எழுச்சிக்காகவும், தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்து தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எமக்கு முன்னத்தி ஏராக விளங்கிய என்னுயிர் தாய்மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
நான் திரைத்துறையில் இருந்த தொடக்க காலம் தொட்டு என் மீது பேரன்பு கொண்டு பேருதவிகள் பல புரிந்த பெருந்தகை மாமா சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி தொடங்கியவுடன் என் தோளுக்கு துணையாக நின்று, தன்னைவிட வயதில், அரசியல் அனுபவத்தில் இளையவன் என்ற பாகுபாடு இன்றி, ஒரு சிறு முரணுக்கோ, முணுமுணுப்பிற்கோ இடமளிக்காது நான் இட்டப்பணியை தம் வாழ்நாள் கடமையாக ஏற்று செயல்பட்ட பேரன்புக்காரர்!
தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ இதழை பல ஆண்டுகளாக நடத்தியப் பெருமைக்குரியவர்.
ஈழத்தாயகத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட மாமா சாகுல் அமீது அவர்கள், 2002ஆம் ஆண்டு, தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலைத் திறனாய்வு செய்ய, சென்னையில் திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் வதைப்பட்டார். ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்கொட்டடியிலும், இன மீட்சிப் போராட்டக் களத்திலும், வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த மாமா சாகுல் அமீது அவர்கள், பெரும் செல்வந்தராக சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்க இருந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித்தள்ளி, அளப்பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து, ஒன்றரை ஆண்டுக்கு மேலாய் சிறையில் வாடியபோதும் எவ்வித சமரசத்திற்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது, இறுதிவரை உறுதியாக களத்திலேயே நின்ற ஆகச்சிறந்த தமிழ்த்தேசியப் பெரும் போராளி!
நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைப் போராட்டங்களில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பங்கெடுத்ததுடன், தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைப் பரப்பிய பெருமைக்குரியவர்.
தமிழினத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் அளவற்ற பற்று கொண்ட தமிழ்த்தேசியப் போராளி, அன்பிற்குரிய தாய்மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர், உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி வேலு அவர்களின் தாயார் அம்மா மல்லிகா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா மல்லிகா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்சி மாவட்டத்தின் பொருளாளரும், ஓவரூர், திருவாசககுளம் பகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளருமான அன்புத்தம்பி ரூபன் (எ) பிரியதர்ஷன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தம்பியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ரூபன் (எ) பிரியதர்ஷன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி..!
“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!
வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..!
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..!
அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
நிலங்களின் மீதான ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுவதுமாகப் பறித்து, அவற்றை நேரடியாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் வளர்ச்சி, நில மேம்பாடு என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைப் பறித்து தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தைத் தவெக அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள நில கையகப்படுத்தல் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்காக ஓர் ஊராட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தும் போது அந்த ஊராட்சியில் அதற்காகத் தீர்மானம் போட வேண்டும். ஊர் மக்கள் அதை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும். தவெக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்திருத்தம் உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவர முடியும் என்ற குறைந்தபட்ச சனநாயக வழிமுறையையும் துடைத்தெறிந்துள்ளது. இப்புதிய திருத்த வரைவின் படி, விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைக் கையகப்படுத்த இனி ஊராட்சி அமைப்புகளிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ, தொடர்புடைய விவசாயிகளிடமோ, கருத்துக்கேட்கவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை. மேலும், விளைநிலங்களை, வேறு பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும்போது முடிவெடுக்கும் அதிகாரம் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்துவந்தது. அதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, நிலத்தை விரைந்து கையகப்படுத்த வசதியாக, நகரத் திட்ட இயக்குநரே இனி நேரடியாக முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கலாம் என்று அதிகாரத்தை மாற்றி வரையறுக்கிறது இப்புதியச் சட்டத்திருத்தம்.
அரசு நினைத்தால் எந்த இடத்திலும் யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் தொடங்க தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கலாம் என்பது கொடுங்கோன்மை இல்லையா? விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக்கும் இப்படியொரு எதேச்சதிகார சட்டத்திருத்தத்தை தவெக நிறைவேற்றியது ஏன்? தமிழ்நாட்டு விவசாயிகளை விடவும், தனியார் பெருமுதலாளிகளின் நலன் மட்டும்தான் தவெக அரசுக்கு முதன்மையானதா? பரந்தூரில் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிப்பதை, தடுத்து நிறுத்துவோம், வேளாண்மையைக் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதியளித்த மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதலின்றி அபகரிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவர எப்படி அனுமதித்தார்? பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் ஒப்புதல் இன்றித் தலைமைச்செயலகம் கட்டுவதற்காகவா? இதுதான் ஜனநாயகமா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகன் ஆட்சியா? எத்தனை சட்டங்கள் கொண்டுவந்து வந்து எம் மக்களை அச்சுறுத்தினாலும் நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் இருக்கும்வரை ஏழை எளிய மக்களின் நிலங்களை, அவர்களின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாகப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்காது.
நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு சொற்பொழிவாளர்!
இதழியல் மொழிநடையை உருவாக்கி தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை!
அரசியல், இலக்கியம், சமயம் என பல்துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த தமிழறிஞர்!
இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, தொழிலாளர் உரிமைபெறத் தோள்கொடுத்துத் துணைநின்ற புரட்சிப்போராளி!
செந்தமிழும், சிவநெறியும் போற்றி வளர்த்த சைவப் பேரறிஞராகத் திகழ்ந்தபோதும் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இசுலாம் உள்ளிட்ட பல மதக்கோட்பாடுகளையும் கற்றுத்தேர்ந்த சமயப் பேதமற்ற சமூகச் சிந்தனையாளர்!
அரசியல் அறிஞர், ஆகச்சிறந்த ஆசிரியர், படைப்புத் திறன்மிக்கப் பத்திரிகையாளர், தனித்தமிழியக்க முன்னோடி, பெண்ணுரிமைப் போராளி, சாதிய தீண்டாமையை எதிர்த்துப் போராடிய தீரர், சமரச சன்மார்க்க அருளாளர், காந்தியவாதி, பொதுவுடைமை சிற்பி என்ற பன்முகச் சிறப்பிற்குரிய பெருந்தகையாளர்!
தமிழாகவே வாழ்ந்த, தமிழர் நலத்திற்காகவே வாழ்ந்த, தமிழ்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகவும், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தன் வாழ்வெலாம் அரும்பாடுபட்ட நம்முடைய தாத்தா தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்நாட்டில் தற்போது தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
வழக்கம்போல இந்தத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களத்தில் எதிர்கொள்கிறது. தேர்தல் களத்தை விட்டு வெளியேறுவது எங்களுடைய அரசியல் அல்ல. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரத் தோல்வியாகப் பார்ப்பதில்லை; தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம். எப்போதும்போல எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு இம்முறையும் தனித்துக் களத்தில் போட்டியிடுகிறோம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தம்பி கோ.ஜானகிராமன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தங்கை மு.கார்த்திகா, புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியில் அன்புத்தங்கை ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களம் காண்கிறார்கள்.
எங்களிடம் படை இருக்கிறது; கருத்து இருக்கிறது; களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. எல்லாம் இருந்தும் எங்களுக்கிருக்கிற ஒரே பின்னடைவு பொருளாதார வலிமைதான்.
எப்போதுமே எமது மக்கள்தான் சிறுகச் சிறுக நிதிப் பங்களிப்பை அளித்து எங்களை வலிமைப்படுத்தி, அரசியல் களத்தில் பணியாற்ற வைத்திருக்கிறார்கள். இம்முறையும் எமது மக்கள் அதனைச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மக்கள் இயக்கத்திற்கு இனமாகவும், பணமாகவும், வளமாகவும், வலிமையாகவும் மக்கள்தான் துணை நிற்க வேண்டும். ஏனெனில், மக்களிடமிருந்தே மக்களுக்காக வந்த அரசியல் இயக்கம்தான் நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரோ, வெறும் அடையாளமோ அல்ல. அது நாம் பிறந்த பெருமைமிக்க தமிழினத்தின் அடையாளம்.
ஒரு இனத்தின், நிலத்தின் அரசியல் என்பது மொழி, இனம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம் ஆகியவற்றைப் பேசாமல் இருக்க முடியாது. இந்நிலத்தில் மொழி என்றும், இனம் என்றும், இனத்தின் நலம் என்றும், நிலம் என்றும், வளம் என்றும் தொடர்ந்து பேசுகின்ற அரசியல் இயக்கமாக நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது.
எமது மக்கள் பன்னெடுங்காலமாக அனுபவித்து வரும் துன்பங்களையும் துயரங்களையும் எடுத்துப் பேசி, அவற்றிற்கான விடிவையும் முடிவையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது.
இந்தத் தேர்தலை ஒரு சாதாரண இடைத்தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் எதற்காக வந்தது என்பதை மக்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை விட்டு விலகுகிறார்கள். அதன் பிறகு வேறொரு கட்சியில், குறிப்பாக ஆளும் கட்சியில் இணைந்து, மீண்டும் அதே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.
அப்படியானால் அவர்களுக்கு மக்களுக்கான சேவை முதன்மையா? அல்லது தங்களுக்கான தேவை முதன்மையா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
அதே பதவி! அதே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு! ஆனால் கட்சியை மட்டும் மாற்றிக்கொண்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவது எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிவார்ந்த எமது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவரின் பதவி விலகலால் மீண்டும் ஒரு தேர்தல் மக்கள்மீது திணிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலை நடத்த பல கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது. நேரமும் காலமும் செலவாகிறது. அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. தொடர்புடைய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.
மக்கள் பணம் இப்படித் தேவையில்லாமல் செலவிடப்படுவதற்கு காரணமானவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா?
“ஆளும் கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்” என்று கூறினால், எதிர்க்கட்சி எதற்காக? எதிர்க்கருத்து எதற்காக?
ஒரு சட்டமன்றத்திற்குள் எதிர்க்கருத்தே இல்லாமல் போனால் அது எத்தகைய ஜனநாயகம்?
மக்கள் மன்றத்திற்குள் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்ய உறுப்பினர்களே இல்லாமல் அனைவரும் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலை உருவாவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
நாம் தமிழர் கட்சி முன்வைக்கின்ற அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்று.
மக்கள் கொடுத்த பதவியிலிருந்து இடையில் விலகிவிட்டு கட்சி மாறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அவருடைய பதவி விலகலால் ஏற்பட்ட இடைத்தேர்தலுக்கான செலவை முதலில் அவரிடமே வசூலிக்க வேண்டும்.
ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகிறது என்றால், தனிப்பட்ட அரசியல் விருப்பத்தால் அந்தத் தேர்தலை உருவாக்கியவர் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மக்கள் பணத்தில் அந்தச் செலவைச் செய்யக்கூடாது.
அதன் பிறகே தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுத்தொகையைச் செலுத்த அனுமதிக்கும் விதியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
அப்படியொரு அமைப்பு மாற்றம் வந்தால், மக்கள் கொடுத்த பதவியை எளிதில் யாரும் தூக்கி எறிய மாட்டார்கள். மக்கள் அளித்த பொறுப்பை மதித்து, அந்தப் பதவியில் இருந்து பணியாற்றுவார்கள்.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று, ஒரு நம்பிக்கையோடு வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அந்தப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறொரு கட்சியில் சேர்ந்துவிட்டு, மீண்டும் அதே பதவிக்கு வந்து வாக்குக் கேட்பது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும்.
“நாங்கள் எங்கு நின்றாலும், எதைச் செய்தாலும் மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்” என்ற மெத்தனப்போக்கோடு மக்களைக் குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையதல்ல.
இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த இடைத்தேர்தல் களத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தும்.
பல கட்சிகளுக்கும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை.
மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்றதால் என் மீது மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. எமது பிள்ளைகளும் பல்வேறு வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 15 ஆண்டுகளில் மக்களின் எந்தப் பிரச்சினையையும் நாம் தவிர்த்துவிட்டோம் என்று சொல்ல முடியாது.
மக்களோடு மக்களாக மழையிலும், பனியிலும், வெயிலிலும் நின்று, மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசி, உறக்கத்தைத் தொலைத்து, அவர்களுக்காகப் போராடியிருக்கிறோம்.
அப்படிப்பட்ட எங்களை இன்று ஆட்சியில் இருப்பவர்கள் “ஜீரோ” என்று சொல்கிறார்கள்.
ஆனால், இந்த ஜீரோவைப் பார்த்துத்தான் அந்த ஹீரோக்கள் பயப்படுகிறார்கள்!
எதுவுமே இல்லாதவர்கள், கட்டுத்தொகையைக்கூட பெற முடியாதவர்கள் என்று எங்களைப் பேசுபவர்கள், நாம் முன்வைத்த அரசியல் இன்று தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் பேசிய அரசியலின் தேவை இன்று மக்களுக்குப் புரிகிறது!
குடிப்பதற்குத் தூய நீர் இல்லை. உணவு நஞ்சாகிறது. தூய காற்றைச் சுவாசிக்க முடியாத நிலை உருவாகிறது. புவி வெப்பமடைகிறது. பருவநிலை மாறுகிறது.
இவையெல்லாம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே இல்லாதவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த நிலையிலும் நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் தொடர்ந்து இந்த அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.
எப்போதும்போல எமது மக்கள் வலிமையாகவும், வளமாகவும், இனமாகவும், பணமாகவும் எம்மோடு இணைந்து நின்று எங்கள் கைகளை வலிமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி!
திரள்நிதி திரட்டல்: donate.naamtamilar.org/let_naamtamilar_roar_in_tn_assembly
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சிThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு உரிய ஊதியம் உட்பட அடிப்படை உரிமைகள் அனைத்தும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் 2397 வனக்காப்பாளர்கள், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய 332 வன ஓட்டுநர்கள், 1305 வனக்காவலர்கள் உள்ளிட்ட 4037 வன பணியிடங்களில் பணியாற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருவதால் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது வருத்தமளிக்கிறது. நெடுங்காலமாகப் போராடிவரும் வனத்துறை ஊழியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாதது வன்மையான கண்டனத்துக்குரியது.
வனக்காப்பாளர்களின் கல்வி தகுதியோ பன்னிரெண்டாம் வகுப்பு எனும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ நிலை 5 ஐந்து மட்டுமேயாகும். இந்த ஊதியமானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – 4 (Group 4) தேர்வில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைக்காட்டிலும் குறைவாகும். முன்பு தமிழ்நாடு வனச்சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்தின் மூலம் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக TNPSC தொகுதி 4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே தொகுதி - 4 (Group 4) தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைத்து துறை பணியாளர்களும் பெறும் ஊதியம் நிலை 8 என்றிருக்க சிறப்புக் கல்வி தகுதியுடன் தேர்வாகிய வனக்காப்பாளர்கள் பெறும் ஊதியம் வெறும் நிலை 5 (level 5) மட்டுமேயாகும்.
வனவிலங்குகளின் பேராபத்திற்கு இடையில் மழையையும், வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல், இரவும் பகலும் காடுகளைப் பேணி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வனத்துறை ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டியது தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு வனத்துறையில் பணியாற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைருக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிய பெருந்தீரர்!
பாட்டாளி மக்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழர்!
பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சகப் பொறுப்பேற்று நல்லாட்சிக்குத் துணைநின்ற நாயகர்!
பல நூறு ஏக்கர் தம் சொந்த நிலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாரி வழங்கிய வள்ளல்!
விடுதலைப் போராட்ட வீரர், பெருந்தமிழர், நம்முடைய தாத்தா சிவசிதம்பர ராமசாமி படையாட்சியார் அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்தநாளில் ஐயா ஆற்றிய மகத்தான மக்கள் பணிகளை நினைவுகூர்ந்து ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
#biggboss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?
மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?
தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.
அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@VijaySethuOffl -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!
மனிதா! மனிதனாக வேண்டுமா?
மரத்திடம் வா..!
ஒவ்வொரு மரமும் போதிமரம்.! என்று பாடுகிறார் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து.
"மரங்களை அழிப்பது என்பது பூமியின் சுவாசப் பைகளை நாமே சேதப்படுத்துவதற்குச் சமம்." என்கிறார் ஃப்ரங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
ஒரு மரத்தை நடுவது என்பது மனித குலத்தின் எதிர்காலத்திற்குச் செய்யும் மிகச்சிறந்த முதலீடு என்ற கொள்கை முழக்கத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுப் பேணி வளர்ப்பதிலும், விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்டு, மரங்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர்!
ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் ஐயா அவர்களின் அரும்பணியைப் போற்றி வணங்குகிறேன்!
இன்றைய நாளில் தத்தம் பகுதியில் ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்!
மரம் மண்ணின் வரம்!
அதை வளர்ப்பதே நம் அறம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கம்பம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஐயா சு.சின்னவெளியப்பன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த ஐயா சு.சின்னவெளியப்பன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் ஐயாவின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சு.சின்னவெளியப்பன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழினம் தன்னை மறந்து, தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர். அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று நினைத்தனர்.
இத்தகைய இருண்டகாலத்தே நம்முடைய தாத்தா 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் அவர்கள் இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார்.
தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சிறப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் பேசி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை.
திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார். திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்!
தனித்தமிழ் அறிஞர் நம்முடைய தாத்தா மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டின் உயர்கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டின் உயர்கல்வியை வணிகமயமாக்கும் வகையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக்கூட்டத் தொடரின் இறுதிநாளில் அவசர அவசரமாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும், ரூ.50 கோடி நிரந்தர வைப்புத்தொகை தர வேண்டுமென்ற விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. அந்த விதிகளைத் தளர்த்தி, தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நில அளவு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கராகவும், ஊரகப் பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 கோடியாக இருந்த நிரந்தர வைப்புத் தொகை ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழிவகுப்பதே இச்சட்டத்திருத்தத்தின் முதன்மையான நோக்கமாகும்.
இதேபோன்று, தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாகி இலாபமீட்டுவதற்குச் சாதகமாக, கடந்த 2008 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு கொண்டுவர முயன்ற தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட வரைவானது கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது. முந்தைய திமுக அரசால் கைவிடப்பட்ட தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டத்தை எவ்வித தயக்கமும் இன்றி, ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட வரைவு – 2026’ என்ற பெயரில் தற்போதைய தவெக அரசு வேகவேகமாக நிறைவேற்றியுள்ளது தமிழ்நாட்டு ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் கொடுஞ்செயலாகும். உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று முடிந்த இரு வாரங்களுக்குப் பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் இப்படியொரு சட்டத்திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? யாருடைய உத்தரவின் பேரில், யாருடைய இலாபத்திற்கு இப்படியொரு திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது?
தவெக அரசு கொண்டு வந்துள்ள இத்திருத்தச்சட்டத்தின்படி தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஏறத்தாழ 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளானது, தங்களை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இதுவரை, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உதவிபெறும் கல்லூரிகளுக்கு சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதோடு, ஏழை மாணவர்களுக்கான கட்டண சலுகையை வழங்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. ஆனால், அவை தனியார் பல்கலைக்கழகங்களாக மாறிவிட்டால், இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், நன்கொடை என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் விருப்பம்போல மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளும் சூழலும் உருவாகும். இதனால் தமிழ்நாட்டுக் கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவானது, இனி கலைந்து கானல் நீராகும். மேலும், 100 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளின் மருத்துவ இடங்கள், அவை மருத்துவப் பல்கலைக்கழங்களாக மாறினால் அரசு ஒதுக்கீட்டிற்கு 50 முதல் 65 விழுக்காடு இடங்களை மட்டும் கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையும் உருவாகும்.
அதுமட்டுமின்றி, கல்வி கட்டணம், பாடத்திட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரைத் தனியார் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணிப் பாதுகாப்பை இழக்கும் ஆபத்தும் உள்ளது. ஏற்கனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் 5000க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்கப்படாத நிலையில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சட்டப்படியான பணிப்பாதுகாப்பும், சலுகைகளும் நிர்வாகங்களால் மறுக்கப்படும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள தனியார் சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தற்போதைய விதிமுறை தளர்வுகளைப் பயன்படுத்தித் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறினால், அவை மாணவர்களுக்கான கல்விச் சேவை என்பதிலிருந்து தடம்மாறி, முழுக்க முழுக்க இலாபமீட்டும் வணிக நிறுவனங்களாகவே மாறிவிடும். இதனால் உயர்கல்வியின் தரம் குறைந்து, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையும் உருவாகிவிடும்.
இச்சட்டத்திருத்தம் மூலம் ஆட்சிப்பொறுப்பெற்ற 100 நாட்களில் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைத்துள்ளதுதான் தவெக அரசின் மிகப்பெரிய சாதனையாகும். நாட்டின் எதிர்காலத் தலைமுறையினருக்கு அடிப்படையாக வழங்க வேண்டிய கல்வியைக் கூட வழங்க முடியாமல் தனியாருக்கு தாரைவார்ப்பதுதான் மக்களுக்கான ஆட்சியா? ஒரு புறம் சமூக நீதி அரசு என்று பெருமை பேசிக்கொண்டு, மறுபுறம் இது போன்ற கொடும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீடு முறையை ஒழித்து, ஏழை எளிய மாணவர்களை வஞ்சிப்பது தான் தூயசக்தியா? அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கி, விதிமுறைகளை தளர்த்தி, தனியார் முதலாளிகள் இலாபமீட்ட வழிவகுப்பதுதான் ஊழல், இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? வெட்கக்கேடு!
தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பைச் சிதைத்து, ஏழை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பைப் பறித்து, கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகின் மூத்தக்குடியான தமிழினம், இயற்கையை இறையாகப் போற்றி, மண்ணையும் மரபையும் உயிரெனக் காத்து, தனக்கே உரித்தான பண்பாட்டு வாழ்வியலைப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிவரும் பெருமைக்குரிய தேசிய இனமாகும்.
மனித வாழ்வின் ஒவ்வொரு தொடக்கமும் நல்வழியில் அமைய வேண்டும்; இடையூறுகள் அகல வேண்டும்; எண்ணிய செயல்கள் இனிதே நிறைவேற வேண்டும் என்ற நம்பிக்கையோடு முழுமுதற் கடவுளாக பிள்ளையார் எனும் விநாயகப் பெருமானை வணங்கும் வழக்கம் நமது மக்களின் வாழ்வியலோடு நீண்டகாலமாகப் பின்னிப்பிணைந்திருக்கிறது.
இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட உரிமை. ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை மற்றவர் மதிப்பதும், அவரவர் வழிபாட்டு உரிமையை ஏற்றுக்கொள்வதும், வேறுபட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வதுமே உயர்ந்த அறமாகும்.
தமிழர் மண்ணில் பிறந்து வளர்ந்த பல்வேறு வழிபாட்டு மரபுகளும், விழாக்களும், சடங்குகளும் நமது மக்களின் பண்பாட்டு நினைவுகளின் ஒரு பகுதியாகவே தலைமுறைகளைக் கடந்து தொடர்கின்றன. அவற்றை மதவெறிக்கும், மனிதர்களைப் பிரிக்கும் அரசியலுக்கும் கருவியாக மாற்றாமல், மக்களை இணைக்கும் பண்பாட்டு நிகழ்வுகளாகப் பேண வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று உலகிற்கே மானுடநேயத்தைப் போதித்த தமிழினம், சாதி, மதம் என எந்தப் பெயராலும் பிளவுபடாது, அன்பாலும் அறத்தாலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய காலம் இது.
பிள்ளையார் பெருமாளைக் கொண்டாடும் இந்நன்னாளில், தமிழர் வாழ்வில் நிலவும் வறுமை, துயரம், அடிமைத்தனம், அநீதி உள்ளிட்ட அனைத்து இடர்களும் அகலட்டும்! உழைக்கும் மக்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்! நல்லோர் எண்ணங்கள் வெற்றி பெறட்டும்! நமது தாய்மொழியாம் தமிழ் செழிக்கட்டும்! தமிழர் நிலம் வளம் பெறட்டும்! தமிழ்த்தேசிய இனம் உலகின் தலைசிறந்த இனமாக உயர்ந்து நிற்கட்டும்!
மண்ணையும், மக்களையும், மொழியையும் நேசித்து வாழும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நன்மையும் நலமும் நிறைந்திட வேண்டுமென இந்நன்னாளில் மனதார வாழ்த்துகிறேன்.
பிள்ளையார் பெருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் வாழும் என் உயிர்க்கினிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்!
“பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்;
கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே!
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!!”
– அறிவுப் பெரும்பாட்டி ஒளவையார் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
35. மதுராந்தகம்
கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
101. தாராபுரம்
மு.கார்த்திகா B.E.
இளநிலை பொறியியல்
09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக்கலை வல்லுநர்
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்புத்தம்பிகளின் ‘மண்டாடி’யைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் மக்கள் – பெருமகிழ்ச்சி!
கடலோடு பிறந்து, அலையோடு வளர்ந்து, புயலோடு போரிட்டு வாழும் நம் நெய்தல் நிலத்து மக்களின் வாழ்வியலையும், வீரத்தையும், மரபையும் திரைமொழியில் உயிர்ப்பித்திருக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தமிழ் மக்கள் பேரன்போடு வரவேற்று கொண்டாடி வருவது அளப்பரிய மகிழ்ச்சியளிக்கிறது. கடல்சார் வாழ்வியலான பாய்மர படகு போட்டியை பெருந்திரையில் பெருமையோடு பதிவு செய்திருக்கும் ‘மண்டாடி’, தமிழ்த் திரையுலகில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான படைப்பாக அமைந்திருக்கிறது.
கதைநாயகனாக நடித்திருக்கும் என் அன்புத்தம்பி சூரி, தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு கலைப்பயணத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருகிறார். ‘மண்டாடி’ திரைப்படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் கடின உழைப்பை, அர்ப்பணிப்பையும் மக்கள் தங்கள் பேரன்பால் அங்கீகரித்துக் கொண்டாடுவது தம்பி சூரியின் கலைப்பயணத்திற்குக் கிடைத்த மகத்தான வெகுமதி.
நம் மண்ணுக்கே உரித்தான கடல்சார் வாழ்க்கையையும், கடலோடி மக்களின் வீர விளையாட்டையும் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்து, அதனைப் பெருந்திரைக்கான படைப்பாக வடித்திருக்கும் என் அன்புத்தம்பி, இயக்குநர் மதிமாறன் புகழேந்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கடல் அலையின் பேரிரைச்சலையும், போட்டியின் பரபரப்பையும், மண்ணின் மணத்தையும், மனிதர்களின் உணர்ச்சியையும் தனது இசையின் வழியே பார்வையாளர்களின் இதயத்திற்குக் கடத்தி,‘மண்டாடி’யின் உணர்வுக்கும் வேகத்திற்கும் தனது இசையால் உயிரூட்டியுள்ள என் அன்புத்தம்பி இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
கரையிலிருந்து கடலைப் படம் பிடிப்பதோடு நின்றுவிடாமல், கடலுக்குள் சென்று அலைகளோடும் படகுகளோடும் பயணித்து அதன் பேரழகையும் பேராற்றலையும் திரையில் உயிரோவியமாகப் பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
ஒரு படைப்பின் கனவை நம்பி, அதற்குத் தேவையான பெரும் பொருட்செலவையும் தயங்காது ஏற்று, மிகப்பெரிய படைப்பாக ‘மண்டாடி’யைத் தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களின் துணிவும் கலை மீதான நம்பிக்கையும் மிகுந்த பாராட்டுக்குரியது.
உலகத்தின் கதைகளைத் தமிழில் சொல்வதைக் காட்டிலும், தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே தமிழ்த் திரையுலகின் பெருவெற்றியாகும். அத்தகைய படைப்புகளைத் தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள்; தங்கள் பேரன்பால் தோளில் தூக்கிச் சுமப்பார்கள் என்பதற்கு ‘மண்டாடி’ திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் மக்களின் கொண்டாட்டமே சான்றாகும்
‘மண்டாடி’ திரைப்படத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து உழைத்த தம்பி சூரி, அண்ணன் சத்யராஜ், சுஹாஸ், தம்பி பாலா சரவணன், நாயகி மஹிமா, இயக்குனர் மதிமாறன் புகழேந்தி, இசையமைத்த ஜீ.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் , தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளையும் அன்பு நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரன்பின் நெகிழ்வுடன்,
உங்கள்
சீமான்
#mandaadi @sooriofficial @MathiMaaran #sathyaraj @gvprakash #suhas @Mahima_Nambiar @RavindraVijay1
@MithunJS5 @bala_actor @Kritika_Bala
@elredkumar @rsinfotainment @PeterHeinOffl
@dhilipaction @maheshmathewMMS
@pavijaypoet #vmmahalingam
@JayashreeRD @ra_vaaheesan #ameerjamalkhan
@Azarchoreo @srkathiir @KiranDrk
@pradeepERagav @magesh_ggg
#thiralsankar @MohanaVasanthan
@mani_rsinfo @dineshmoffl #ronexxavier #srinath
@AKunjamma @ikrishhassan @mudwayrecords
@ProRekha -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மேகமலை – மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை மீட்க,
தென் இந்திய ஃபார்வார்டு பிளாக் (தமிழ்நாடு) கட்சியின் ஒருங்கிணைப்பில், மதுரை பழங்காநத்தம், ஜெயம் திரையங்கம் எதிரில் இன்று ஆவணி 26ஆம் நாள் சனிக்கிழமை (12-09-2026) மாலை நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று ஆற்றிய கண்டன உரை.
youtube.com/live/jj1kCqiTS3YThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவினை அன்னைத்தமிழிலும் நடத்தக்கோரிப் போராடிய தெய்வத்தமிழ்ப்பேரவையினர் மீது தவெக அரசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது அடக்குமுறையின் உச்சம்!
@CMOTamilnadu @TVKVijayHQ
நாளை (12.09.2026) காலை நடைபெறவிருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவினை, உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் நடத்த வேண்டுமெனப் போராடிய தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் மீது தவெக அரசின் காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மதுரை உயர் நீதிமன்றத்தீர்ப்பின்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவினை சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென்ற உத்தரவை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை முறையாகப் பின்பற்றாமல், திருக்குடமுழுக்குக்காகத் தொடங்கப்பட்ட வேள்விச்சாலையில், தமிழுக்குச் சரிபாதி இடங்களை ஒதுக்காமல், கணக்குக் காட்டுவதற்காக ஒரு சில தமிழ் ஓதுவார்களை வேள்விச்சாலைக்கு வெளியே நிறுத்தி தமிழ்த்தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது தாய்த்தமிழையும், தமிழினத்தையும் அவமதிக்கும் செயலாகும். அதனைக் கண்டித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழில் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தக் கோரியும், தமிழில் அர்ச்சனை - குடமுழுக்கு ஆகியவற்றை அனைத்துக் கோயில்களிலும் உறுதிப்படுத்த, தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோரியும், மதுரையில் இன்று (12.09.2026) தெய்வத்தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்த தவெக அரசின் காவல்துறை, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த அம்மா சிம்மம் சத்தியபாமா, ஐயா குச்சனூர் கிழார், ஐயா சித்தர் மூங்கிலடியார் உள்ளிட்டவர்களையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரையும் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளது அதிகாரத்திமிரின் உச்சமாகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட வேண்டுமென்று சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்த மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள், அதே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் தமிழிலும் குடமுழுக்கு நடத்த உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? கடந்த திமுக அரசைப்போலவே, தவெக அரசும், முழுக்க சமஸ்கிருதத்திலேயே குடமுழுக்கு நடத்துமானால், இதில் எங்கே இருக்கிறது தமிழர் உரிமை மீட்பு? எங்கே இருக்கிறது மக்களுக்கான மாற்றம்? முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், அதன் தலைவரராக இருந்தருளிய தமிழர் ஆதிபாட்டன் சிவனுக்கு, தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயிலில், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவைக்கூட தவெக அரசால் முறையாக நடைமுறைப்படுத்த முடியாதா? இதுதான் தவெக அரசு அன்னைத்தமிழுக்கு கொடுக்கும் மதிப்பா? இதுதான் தமிழினத்தின உரிமையைக் காக்கும் முறையா? ஒவ்வொரு குடமுழுக்கின் போதும் தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துப் போராடினால்தான் தமிழில் குடமுழுக்கு நடத்துமா தமிழ்நாடு அரசு? தவெக ஆட்சியில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று போராடக்கூட அனுமதியில்லையா? இதற்குப் பெயர்தான் சனநாயகமா? இதுதான் சமூகநீதி அரசா? வெட்கக்கேடு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவினை அன்னைத் தமிழிலும் நடத்தக்கோரிப் போராடிய தெய்வத்தமிழ்ப்பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 இலட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்வர் விஜய் அவர்களே?
உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா?
எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்?
தான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது.
ஆகவே, முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்!.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அவிநாசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறையின் பொறுப்பாளர் அன்புத்தம்பி விக்னேஷ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையான இளைஞர் பாசறையில்தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த விக்னேஷ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி விக்னேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் கைவிட வேண்டும்!
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அருகில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து 2000 ஏக்கர் பரப்பளவில் 38,000 கோடி முதலீட்டில், தென்கொரிய நிறுவனத்தின் மூலம் புதிதாகக் கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக அரசு அறிவித்துள்ள 2000 ஏக்கரில் ஏறத்தாழ 1000 ஏக்கர் நிலமானது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஏழை எளிய மக்கள் பாரம்பரியமாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களாகும். அவற்றில் பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள் என்றாலும் அவை உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, கருணை அடிப்படையில் உப்பு உற்பத்திக்காகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்களாகும். அவற்றைக் கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வதென்பது கொடுங்கோன்மையாகும்.
வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வேளாண்மை செய்யும் விளைநிலங்கள், உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள், மீன்பிடி தளங்கள் அமைந்துள்ள கடற்கரைகள், மக்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், இயற்கையின் அருங்கொடைகளான ஆறுகள், அருவிகள், காடுகள், மலைகள் என அனைத்தையும் அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயலாகும். வேளாண்மை முதல் உப்பளங்கள் வரை இந்த நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழித்துவிட்டு எதை வளர்த்தெடுக்கப் போகிறீர்கள்? அடுத்த தலைமுறையிடம் எவற்றைக் கையளிக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு உணவாக எதைக்கொடுக்கப்போகிறீர்கள்?
உணவுகள் அனைத்துக்கும் அடிப்படையானது உப்பு. உப்பினை உப்பளங்களங்களில்தான் உற்பத்தி செய்ய முடியுமே தவிர, கப்பல்கட்டும் தளங்களில் அல்ல; எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது, அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதனை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உணவு உற்பத்தி நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து, அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து இரத்தம் குடிப்பதற்குச் சமமாகும்.
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட்ட தவெக அரசு, ஓசூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிடாதது ஏன்? தற்போது தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து உப்பளங்கள் மீது கப்பல்கட்டும் தளம் அமைக்க முயல்வது ஏன்? அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நவீனம், நாகரீகம் என்ற பெயரில் அவர்கள் நாட்டுத் தொழிற்சாலை உற்பத்திகளைக் கொண்டுவந்து குவித்து, நம் நாட்டின் கைவினைத் தொழில்களை அழித்து முடித்தனர். விடுதலை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு அழைத்துவந்து மீதமிருக்கும் பாரம்பரிய உணவு உற்பத்தி தொழில்களையும் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கின்றனர். இதில் எங்கே இருக்கிறது விடுதலை? எங்கே இருக்கிறது மக்களின் ஆட்சி?
அரசு, ஆட்சி, அதிகாரம், தொழில், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டதே தவிர, தொழிற்சாலைகளுக்காக மக்கள் தோன்றவில்லை. தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள் இன்றி மக்களால் வாழ முடியும். ஆனால், மக்கள் இன்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்காது. மக்களை அழித்தொழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் அனைத்தும் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறிநிற்கும்.
ஆகவே, தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இல்லையென்றால், பாதிக்கப்படும் தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான் reposted
Raaj Kamal Films International
@RKFI
வீரத்தின் வெற்றிப் பயணத்தில் இரண்டாம் கட்டம் நிறைவு
#சேயோன் #seyon #vetrivelveeravel #varendi
#kamalhaasan #sivakarthikeyan
@ikamalhaasan @Siva_Kartikeyan #mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @Seeman4TN @anbariv #disney #bhagyashriborse @RajbShettyOMK @RKFI @turmericmediaTM @Actor_ArulDass @bala_actor #singampuli @vidhu_ayyanna @Sanlokesh #arunvenjaramoodu #dineshmanoharan @tuneyjohn @valentino_suren @alagiakoothan @spectre_post @APIfilms @homescreenent @narendrancm @idiamondbabu @prosathish @S2MediaOfficial @magizhmandramThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முதுபெரும் தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான, மதிப்பிற்குரிய ஐயா, பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்கின்ற உலக நாடுகள் பலவற்றிலும், அறிவுக்கு விருந்துபடைக்கும், இலக்கிய சுவைமிகுந்த, பட்டிமன்றங்களை நடத்தி, தமிழும், பேச்சுக்கலையும் வளர்த்த அவருடைய அரும்பணிகள் போற்றுதற்குரியது.
எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மறையாம் திருக்குறளுக்கு எளிய தமிழில் உரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு
தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ்ப்பற்றாளர்களுக்கும், பட்டிமன்ற ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப் போராடிய பெருந்தமிழர்! சமூகநீதிப் போராளி நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் நடைபெற்றுவரும் நினைவுநாள் பெருநிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆவணி 25ஆம் நாள் (11-09-2026) காலையில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப் போராடிய பெருந்தமிழர்! சமூகநீதிப் போராளி நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் நடைபெற்றுவரும் நினைவுநாள் பெருநிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆவணி 25ஆம் நாள் (11-09-2026) காலையில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை இழிவுபடுத்திக் கொடூரமாகத் தாக்கிய தனித்துணை ஆட்சியரை கைது செய்யாதது ஏன்?
@CMOTamilnadu @TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் ஜெகநாதனை தனித்துணை ஆட்சியர் கலைமன்னன் காலணியால் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. நம்மை நாடி வந்த தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாட்டு அரசு அதிகாரியே, காலணியால் தாக்கியுள்ளதை எண்ணும்போது இரத்தக்கண்ணீர் வருகிறது. முகாமில் வசிப்பவர்களைக் காலணியால் தாக்க யார் அதிகாரம் கொடுத்தது? யாருடைய உத்தரவின்பேரில் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுகின்றன. ஈழத்தமிழ்ச் சொந்தங்களைத் தாக்கினால் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற அலட்சியமா?
சிங்கள இனவெறி ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு இன்றளவும் இந்த நாடு குடியுரிமை வழங்க மறுத்து அடிமைகள்போலத் திறந்தவெளி சிறை முகாம்களில் அடைத்து வதைக்கிறது. வாழும் உரிமைக்காக நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் போராடும் ஈழத்தமிழ்மக்களை, அரசு அதிகாரிகளும் கொடுமைப்படுத்தினால் அவர்கள் இங்கு வாழ வழிதான் என்ன? சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த திபெத்தியர்களை எண்ணற்ற வசதிகளோடு வாழ்விக்கும் இந்த நாடு, அவர்களுக்கு இழைக்காத கொடுமைகளை எம் தமிழ் மக்களுக்கு மட்டும் இழைப்பதேன்? இத்தகைய கொடுமைகளை பாகிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களுக்கோ, சீனாவிலிருந்து வந்த திபெத்தியர்களுக்கோ செய்ய முடியுமா? நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஐரோப்பிய நாடுகள் கூட அடைக்கலம் தேடி ஏதிலிகளாய் சென்ற இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை அள்ளி அரவணைத்துக் குடியுரிமை வழங்குகின்றதே? அவர்களை விடவும், தங்கள் தந்தையர் நாடென நம்பி வந்த ஈழத்தமிழ் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் - கடமையும் பத்துகோடி தமிழர்கள் நாங்கள் வரி செலுத்தி, வாக்கு செலுத்தி நேசித்து நிற்கும் இந்நாட்டிற்கு இருக்கிறதா? இல்லையா?
பிறக்க ஒரு நாடு, உயிர் பிழைக்க ஒரு நாடு என்று அரசியல் காரணங்களால் அகதியாக்கப்பட்ட மனிதர்களை, அடித்துத் துன்புறுத்தி அடிமைகளாக நடத்தி, 'வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்' என்கிறீர்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் இதேபோல் கொடுமைகள் செய்தால் அகதியான மக்கள் எங்கே சென்று வாழ்வது? அகதியாக்கப்பட்டது அவர்கள் குற்றமா? அகதியாக்கிய நாட்டில் அவர்கள் பிறந்ததுதான் குற்றமா? அல்லது அடைக்கலம் தேடி இந்த நாட்டை நம்பி வந்ததுதான் குற்றமா? இதில் எங்கே இருக்கிறது மனித உரிமை? எங்கே இருக்கிறது மானுட அறம்? புத்தனும், காந்தியும் போதித்தது இதைத்தானா? அசோகரின் தர்மசக்கரத்தைக் கொடியிலும், காந்தியை தேசப் பிதாவாகவும் கொண்டிருக்கும் நாடு இப்படிச் செய்வது முறைதானா? இதுதான் இந்த நாட்டின் சட்டம், நீதி என்றால் அதில் எங்கே இருக்கிறது மானுட நேயம்? அன்றைக்கு இத்தகைய கொடுமைகள் நடந்திருந்தால் நேபாளத்தில் பிறந்த புத்தர் இந்தியாவிலுள்ள புத்த கயாவிற்கும், குஜராத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருக்கத்தான் முடியுமா? உலகம் தழுவி நேசித்து மனிதப்புனிதர்களாக அவர்கள் உயர்ந்திருக்கத்தான் முடியுமா? உலகிற்கு அன்பையும், அறத்தையும் கற்பித்த ஞானிகள் பலர் வாழ்ந்த இந்த நாடானது, நம்மைப்போல இரத்தமும், சதையும், உயிரும், உணர்வும் கொண்ட சக மனிதர்களிடம் இப்படி வெறுப்புகாட்டி விரட்டுவது முறைதானா? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எந்தக் கூடுதல் சலுகையும் இந்த நாடு தரவேண்டாம். குறைந்தபட்சம் நம்மை மனிதர்கள் என்பதற்காவது மனிதநேயத்தோடு நடத்தலாமே?
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் ஜெகநாதனை காலணியால் தாக்கிய தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், இராமநாதபுரத்தில் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சாதிகள் இல்லையடி பாப்பா என்று,
சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்!
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா; என்று,
பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி, கவிப்புரட்சிக்கு வித்திட்ட பைந்தமிழ் பாவலன்!
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? என்று,
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்துப் பாடச்செய்த கவிவேந்தன்!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! என்று பாடி,
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோமென
தரணி எங்கும் தமிழ்ப் புகழ் பாடிய சொல்லின் செல்வன்!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு! என்று,
செந்தமிழ் நாட்டினைப் பைந்தமிழ் பாட்டினில்
வைத்துப் போற்றிய பெரும்பாட்டன்!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! என்று,
தெள்ளு தமிழில் தேச விடுதலைக்குப்
பள்ளு பாடிய தென்தமிழ் நாட்டான்!
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடீ! என்று,
கஞ்சிக்கில்லாது அதன் காரணம் அறியாது
துஞ்சி மடிவோரைக் கண்டு நெஞ்சு பொறுக்காது
வெஞ்சினம் கொண்டு வெகுண்ட கவிவேங்கை!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி, இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு
நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; என்று
மண் விடுதலை பாடிய வாயால்
பெண் விடுதலையும் பாடி பெண்ணியம் போற்றிய பெருங்கவி!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? என்று,
தேமதுர தமிழோசை உலகெலாம் பரவிட
இறவாத புதுக்கவிதை நூல்கள் இயற்றி
தெருவெலாம் தமிழ் முழக்கம் செய்த செந்தமிழ்ப் பாவலன்!
பெரும்பாவலர் நம்முடைய பாட்டன் பாரதியார் அவர்களின் தமிழ்ப்புகழைப் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப்போராடிய பெருந்தமிழர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகை!
சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளர்!
நம்முடைய தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம்!
சமூகநீதிப் போராளி தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, குமாரபுரம் பேரூராட்சியைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மைக்கேல் அவர்களின் தாயார் அம்மா மரிய ரீத்தா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா மரிய ரீத்தா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருத்தணி சட்டமன்றத் தொகுதி, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி இரா.அறிவழகன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராஜவேல் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராஜவேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இனஅழிவின்போது என்னுடன் கரம்கோர்த்து, இன விடுதலைக்கான அரசியல் பெரும் பயணத்தில் என் தோளுக்குத் துணையாக நிற்கும் முன்களத் தளபதி!
தன்னுடைய எழுத்தாளுமை, பேச்சாற்றல், களச்செயல்பாடு என எல்லா திறன்களையும் கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட ஆற்றலாளன்!
தனது அன்பொழுகப் பழகும் பாங்காலும், அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையாலும் எல்லோரது அன்பையும் பெற்ற பண்பாளன்!
எப்போதும் என்னுடைய எண்ணவோட்டமறிந்து, செயல்திறன் ஆற்றும் அன்பு இளவல்!
என்னுடைய உயிர்க்கினிய உடன்பிறந்தான்!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்,
ஆருயிர் தம்பி வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களுக்கு என்னுடைய அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
@manisenthilntk -
செந்தமிழன் சீமான் reposted
Raaj Kamal Films International
@RKFI
சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள்
@Seeman4TN
#சேயோன் #seyon #vetrivelveeravel #varendi
#kamalhaasan #sivakarthikeyan
@ikamalhaasan @Siva_Kartikeyan #mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @anbariv #bhagyashriborse @RajbShettyOMK @RKFI @turmericmediaTM @Actor_ArulDass @bala_actor #singampuli @vidhu_ayyanna @Sanlokesh #arunvenjaramoodu #dineshmanoharan @tuneyjohn @valentino_suren @alagiakoothan @spectre_post @APIfilms @homescreenent @idiamondbabu @prosathish @S2MediaOfficial @magizhmandramThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இயன்முறை மருத்துவத்துறையில் பெருந்தொண்டாற்றி, உலகெங்கிலும் பலகோடி மக்களின் உடலியக்கத்தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து, உடலை இயக்கும் திறன் பெற்ற இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூரும் நாள் இன்று..!
இயன்முறை மருத்துவர்களின் மகத்துவம் போற்றும் இந்நாளில், இன்றளவும் மருத்துவத் துறையில் தங்கள் உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் இயன்முறை மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
இயன்முறை மருத்துவர்களின் நெடுங்கால கோரிக்கைகளை அங்கீகரித்து, தனி ஆணையம் அமைத்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தமிழ்நாடு அரசின் முதன்மைக் கடமையாகும். தற்போது அமைந்துள்ள புதிய அரசு இயன்முறை மருத்துவர்களின் நியாயமானக் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த ஆண்டாவது விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.
முடியாது என்ற எண்ணம் தகர்த்து, வாதம் என்னும் விலங்கை உடைத்து, உலகெங்கும் மருந்தில்லா மருத்துவம் செய்து மக்களை காக்கும் இயன்முறை மருத்துவர்கள் அனைவருக்கும்..,
என்னுடைய அன்பு நிறைந்த இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க,
அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி,
இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்!
தான் உயிரோடு இருந்த நாள் வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி!
தாயகம் காக்க விடுதலை நெருப்பாய் வெடித்துச் சிதறிய மாவீரன் சுந்தரலிங்கனாரின் இணையில்லா வீரத்தையும், ஈடில்லா ஈகத்தையும்
போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று தாய்மண்ணைக் காப்போம் என்ற உறுதியினை ஏற்போம்!
வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டிலுள்ள கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை
நவம்பர் முதல் நாளிற்குள்
தமிழில் மாற்ற வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை மனமார வரவேற்கின்றேன். வரலாற்றுச்சிறப்பு மிக்கத் தீர்ப்பினை அளித்த மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் எங்குமே தமிழ் இல்லை. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பதே அரிது.
தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டின் பொதுவெளிகளில் தமிழுக்கு உரிய முதன்மையைப் பெற்றுத்தரவும் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐயா மருத்துவர் இராமதாசு, அண்ணன் தொல்.திருமாவளவன் தலைமையில் நான் மற்றும் பல நூறு தமிழ் உணர்வாளர்கள் இணைந்து தொடங்கிய தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்தல், தமிழ்மொழியைப் பொதுப்பயன்பாட்டு மொழியாக நிலைநிறுத்துதல், பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியது.
தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுவெளிகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போராட்டங்களின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இயக்கங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்ட இக்கோரிக்கையை இன்று உயர்நீதிமன்றமே காலக்கெடு விதித்து நிறைவேற்ற உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஓட்டல் இருக்கிறதே தவிர உணவகம் இல்லை. டீ ஷாப் இருக்கிறதே தவிர தேநீர் கடை இல்லை. லாட்ஜ் இருக்கிறதே தவிர தங்கும் விடுதி எங்கும் இல்லை. பேங்க் இருக்கிறதே தவிர வங்கி இருப்பதில்லை. ஜுவல்லரி இருக்கிறதே தவிர நகைக்கடை இல்லை. ஸ்டேஷனரி இருக்கிறதே தவிர எழுதுபொருளகம் இல்லை. எலக்ட்ரிக்கல்ஸ் எலக்ட்ரானிஸ் ஹார்டுவேர் உண்டு. ஆனால், மின்பொருளகமும், வன்பொருளகமும் இல்லை. ஆப்டிகல்ஸ் உண்டு. கண் அணியகம் இல்லை. மெடிக்கல்கள் நிறைய உண்டு. மருந்தகங்கள்தான் இல்லை. ஹோல்சேல், ரீட்டைல், ரிப்பேர் சேல்ஸ் & சர்வீஸ் உண்டு. மொத்த சில்லரை விற்பனையகமோ, பழுது நீக்ககமோ எங்குமே காணக்கிடைப்பதில்லை. நீலக்கல் என்பதைக்கூட ப்ளூ ஸ்டோன் என்று தமிங்கலத்தில் எழுதுவதுதான் இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் சாப்பாடு கிடைப்பதற்கு பதிலாக மீல்ஸ்தான் கிடைக்கின்றது. லெமன் சாதம் ரெடி என்று வடமொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து வணிக பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்படுகொலையே நடக்கிறது.
‘மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் பாரதிதாசன் வருந்திப்பாடி 75 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் அதே அவலநிலை நீடிக்கிறது.
இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டனர். தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.
தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற இழிநிலை; தாழ்வு மனப்பான்மையால், தமிழர் தன் சொந்த நிலத்திலேயே வாழ்விழந்து, தன் மொழியின் உரிமையிழந்து தவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மாணவர்கள் முதல்
மாண்புமிகு அமைச்சர்கள்வரை தமிழில் பிழையின்றி எழுதப்படிக்க தெரியாமல் தடுமாறும்நிலை இருப்பது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டுத் தெருக்களிலுள்ள பெயர்ப்பலகைகள் கூட தமிழில் இல்லை என்பதைவிட தமிழினத்திற்கு வேறென்ன இழிவு இருக்க முடியும்? கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் கன்னட மொழியிலேயே பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றி அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழில் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வழக்கத்தைத் தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தமிழறிஞர் மறைமலை அடிகள் என்று, அவருடைய பிறந்தநாளில் புகழுரை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களே, தான் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதுதான் பெருங்கொடுமை. பிறமொழி கலவாது மறைமலையடிகள்
தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்! ஆம், சரிதான். ஆனால் நீங்கள் எதற்கு வழிகாட்டியாக திகழ்கிறீர்கள் முதல்வர் அவர்களே? தமிங்கலம் பேசுவதற்கா?
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடுமொழியாக்க நீங்கள் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்தது வரவேற்கத்தக்கதுதான்! ஆனால், உங்கள் ஆட்சியில் தமிழ்த்தெருவில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க காலக்கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே? அதை எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள்?
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்கத்தான் உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், உங்களுடைய அரசு நினைத்தால் இப்போதே தமிழ்நாட்டிலுள்ள தெருக்களில் தமிழில் பெயர்பலகை வைக்க முடியும்.
தற்போது, உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், உடனடியாக தமிழ்நாட்டு தெருக்களில் தமிழில் பெயர்பலகை வைப்பதை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி பேராசிரியர் அருளினியன் அவர்களின் தாயார் அம்மா பானுமதி அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி அருளினியன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பானுமதி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்? பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி, 'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த உறங்காப்புலி..!
களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர்..!
உசிலம்பட்டி, நீலித்தநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி, மதம் பாராது ஏழை குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த வள்ளல்..!
வட இந்தியாவில் குடியேறும் அகதிகளைவிட தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவான நிதி ஒதுக்குவதாக அன்றே இந்திய அரசை கண்டித்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்த பெருந்தகை..!
இந்திய கட்சிக்குத் தலைமையேற்றபோதிலும், இந்தியைத் திணித்தால் இந்நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசை துணிவுடன் எச்சரித்த தீரர்..!
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும்(1965), கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவந்து சென்னையின் குடிநீர் தேவை தீர்க்க வேண்டும் (1969), தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் (1975), நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் (1969) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்கத்தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர் நம்முடைய தாத்தா மூக்கையாத்தேவரின் நினைவைப்போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும், நேர்மையுமாக நின்று மண்ணுக்கும், மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்!
'தேவர் தந்த தேவர்' உறங்காப்புலி தாத்தா மூக்கையாத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன நலன் காக்கும் பயணத்தில்
இமைப் பொழுதும் அயராமல்
எமை காக்கும் இனியவன்!
புரட்சிகர அரசியலில்
என்னோடு கரம் கோர்த்து,
என் கனவுகளுக்கும் கொள்கைகளுக்கும் உயிரூட்டித் துணைநிற்கும் தூயவன்!
என் பணிகளைத் தன் பணிகளாக ஏற்றுக்கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, என் சுமைகளையெல்லாம் தன் தோளில் சுமந்து நிற்கும் செயல் வீரன்!
சந்திக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் அன்பை மட்டுமே பரிசாக அளித்து, இருளையும் ஒளியாக்கும் பேரன்பன்..!
அறிவிலும், எண்ணத்திலும், செயலிலும் தமிழர் நலனையே திசைகாட்டியாகக் கொண்டு, இனத்தின் உயர்வுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இயங்கும்
என் நம்பிக்கை!
எனது ஆருயிர் தம்பி
நாம் தமிழர் கட்சியின்
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
சே.பாக்கியராசனுக்கு
மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@PackiaSe -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!
ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள்.
நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள்!
ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள்.
அறிவு விழியால் அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள்தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள்.
அறிவை விரிவாக்கி என்னை வளர்த்தெடுத்த என் ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும், மதிப்போடும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன்!
மாணவர்களின் அறிவையும், ஆற்றலையும் வளர்த்து அவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருமே நல்லாசிரியர்தான். அந்த வகையில் நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன்!
ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!
இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..!
மண் விடுதலைக்காக மக்களிடம் முழங்கிய ஆகச்சிறந்த சொற்பொழிவாளர்..!
பன்மொழிப் புலமைப்பெற்ற பேரறிஞர், திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்..!
கவிநயம் மிகுந்த தமிழ்செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்ற தமிழ் இலக்கிய - இலக்கண வித்தகர்..!
தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை அழியாமல் காத்த பெரும்புலவர்!
தமிழ் தேசம் என பொருள்படும் தமிழ் நேசன் இதழ் நடத்திய பத்திரிகையாளர்..!
ஏழை மக்களுக்கு இலவசமாக வாதாடிய நேர்மைமிகு வழக்கறிஞர்..!
தற்சார்பு பொருளாதாரம் போற்றிய புரட்சியாளர்..!
6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணைப்பெற்று கொடுஞ்சிறை கண்ட விடுதலை வீரர்..!
வணிகர், கட்டுரையாளர், நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், பதிப்பாளர், தத்துவவாதி என்று பன்முக ஆற்றல் பெற்ற நம்முடைய பெரும்பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தாயக விடுதலைக்காக தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, கடைசி காலத்தில் ஊர் ஊராய் சென்று மண்ணெண்ணெய் விற்கும் வறிய நிலையில் வாடினார் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம்!
தாய் நிலத்தில் ஒரு பிடி மண்ணையும் அந்நியர் கொள்ளை கொண்டு போகக்கூடாது என்று செக்கிழுத்து, சிறைபட்டு, சொத்திழந்த பெருந்தமிழனின் ஈகப்பெருவாழ்வைப் போற்றுகின்ற இந்நாளில், நம்முடைய வீரமிகு பாட்டனார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தனது செறிவான எழுத்தாளுமைத்திறனாலும், நேர்த்தியான படைப்பாக்கத்தாலும் தரமான திரைப்படங்களைத் தந்து, தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச் செய்யும் ஒப்பற்றப் படைப்பாளன்!
அறிவியலின் நவீனக்குழந்தையான திரைப்படம் எனும் வெகுமக்கள் ஊடகத்தை சமூக விழிப்புக்கு பயன்படுத்தும் ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!
வாசிப்பாற்றலாலும், அரசியல் புரிதலும், இனமான உணர்வும் கொண்டு, சமூக அவலங்களை எதிர்த்து, மக்களுக்காகப் போராட்டக் களத்தில் நிற்கத் துணியும் மண்ணின் மகன்!
என்னுடைய ஆருயிர் இளவல் வெற்றிமாறன் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருப்போரூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ராம் அவர்களின் தாயார் அம்மா ப.கோவிந்தம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ப.கோவிந்தம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று.
முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம்.
பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.”
“எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், தமிழ் பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன், ‘மாயோன்' பெரும்புகழ் போற்றி! போற்றி!’
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற்கு?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.
நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?
மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள். அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?
சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?
முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா?
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?
நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?
மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!
அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்!
சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!
தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும், மொழிப்பற்றும் ஊட்டி தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத்தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை!
மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப் பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு! ஆனால், அதையே வாய்ப்பாக்கிக்கொண்டு, செல்லும் இடமெல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ்ப்நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!
நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாப், பா.செயப்பிரகாசம் என 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மை தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா இலக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச்செல்வங்களே!
அன்னைத்தமிழைப் பயிற்சி மொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணைநின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து, அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரி தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ்மறவர் நம்முடைய ஐயா இலக்குவனார் அவர்கள்!
மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும்புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினை போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்த வழிநின்று ‘தமிழ் மொழியையும், மண்ணையும் விழியென காப்போம்’ என உறுதியேற்போம்!
‘மொழி காத்த தமிழ் மறவர்’ ஐயா இலக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ்மறை முழங்கட்டும்! உயர்நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றி, மரபு மரியாதைகளைக் காத்திட வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் தலைநகராம் மதுரையில், உலகப்புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் – சொக்கநாதர் திருக்கோயிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வருகின்ற செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெறவிருப்பது பெருமகிழ்ச்சிக்குரியதாகும்.
தமிழரின் தொன்மை, கலை, பண்பாடு, இறைநெறி, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகிய அனைத்திற்கும் பெரும் அடையாளமாகத் திகழும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் என்பது வெறுமனே ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமன்று; அது தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாகும்.அத்தகைய பெருமைக்குரிய திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஒதுக்கப்படுவதையோ, தமிழ்த் திருமுறைகளுக்கும் தமிழ் வேத மந்திரங்களுக்கும் உரிய இடம் மறுக்கப்படுவதையோ ஒருபோதும் ஏற்க முடியாது.
தமிழ்வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமா அவர்கள், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கின்போது கோபுரக் கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளையும் தமிழ் வேத மந்திரங்களையும் ஓதுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.அவ்வழக்கில் 24.08.2026 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலசம், கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய இடங்களில் சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதப்படும் அதேவேளையில், தமிழ் திருமுறைகளையும் தமிழ் மந்திரங்களையும் ஓதுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவை வெறும் கடமைக்காக நிறைவேற்றாமல், அதன் உண்மையான நோக்கத்தையும் உணர்வையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
தமிழர்களின் இறைவனுக்கு தமிழில் வழிபடுவதற்கு நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலையே தமிழினத்திற்கு நேர்ந்துள்ள மிகப்பெரிய அவலம் அல்லவா?
தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுறைகள் என நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடிப் பரவியது தமிழில்தானே?அப்படியிருக்க, தமிழர் மண்ணில், தமிழர் கட்டிய திருக்கோயிலில், தமிழர் வணங்குகின்ற இறைவனிடம் தமிழில் பாடுவதற்கும், தமிழில் மந்திரம் ஓதுவதற்கும் இடமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
தமிழ் இறைவனுக்கு ஆகாத மொழியா?
தமிழில் இறைவன் கேட்டமாட்டாரா?
தமிழில் வழிபட்டால் இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டாரா? என்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் தமிழுக்கும் உள்ள உறவு இன்று நேற்று உருவானதன்று. அது ஆயிரமாயிரம் ஆண்டுகாலத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது. மீனாட்சி அம்மனின் வரலாற்றைப் பாடுகின்ற திருவிளையாடல் புராணமே,
இறைவனின் வாக்கு
மன்னவநின் நிருமகட்கு மைந்தர்போற்
சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென்
றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னனையா டனக்கிறைவன் வரும்பொழுதோர்
முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவர னருளாலோர் திருவாக்கு
விசும்பிடைநின் றெழுந்த தன்றே
என்று எம் அன்னை மீனாட்சியான தடாதகைப் பிராட்டியின் தோற்றத்தையும் இறைவாக்கையும் எடுத்துரைக்கிறது.அதனைத் தொடர்ந்து,
அன்னையின் ஆட்சி
வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
விரைசெய் தார்முடி வேய்ந்துதன் குடைமனு வேந்தன்
கரைசெய் நூல்வழ கோல்செலக் கன்னியாம் பருவத்
தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு
என்று அன்னை மீனாட்சியே பாண்டிய நாட்டை ஆண்ட அரசியாகத் தமிழிலக்கியம் பெருமையோடு பதிவு செய்கிறது.
அத்தகைய தமிழ் மரபின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மனின் திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முதன்மையும் மரியாதையும் வழங்கப்பட வேண்டியது சலுகை அல்ல; தமிழர்களுக்குரிய மொழி மற்றும் வழிபாட்டு உரிமையாகும். எனவே, உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவின்படி கோபுரக் கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளும் தமிழ் வேத மந்திரங்களும் தெளிவாக ஒலிப்பதை தமிழ்நாடு அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், இவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழில், காலங்காலமாக மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் உரிய மரபு மரியாதை பெற்றவர்களையும், திருக்கோயிலோடு தலைமுறைத் தொடர்புடையவர்களையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கோயில் என்பது எந்த ஓர் ஆட்சிக்கும், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானதன்று. அது மக்களுடையது; இறைநம்பிக்கையாளர்களுடையது; தலைமுறை தலைமுறையாக அதனைப் பேணிக்காத்த மரபுடையவர்களுடையது. ஆட்சி மாறலாம்; அமைச்சர்கள் மாறலாம்; அதிகாரிகள் மாறலாம்; ஆனால் நூற்றாண்டுகளாகத் தொடரும் திருக்கோயில் மரபையும் மாண்பையும் விட்டுவிட முடியாது. எனவே, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக உரிய மரியாதை பெற்றவர்களையும், அறங்காவல் மற்றும் திருக்கோயில் மரபோடு தொடர்புடையவர்களையும் முறையாக அழைத்து, அவர்களுக்குரிய மரியாதையை வழங்கி, எவ்வித அரசியல் வேறுபாடும் பாரபட்சமும் இன்றி குடமுழுக்கு விழாவை அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும்.
தமிழ்த்தாய் வளர்த்த மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் குடமுழுக்கில் தமிழே புறக்கணிக்கப்படக்கூடாது!
சங்கம் வளர்த்த தமிழின் தலைநகரில்,
மீனாட்சி அன்னையின் திருக்கோயிலில்,
தேவாரம் ஒலிக்கட்டும்!
திருவாசகம் முழங்கட்டும்!
திருமுறைகள் இசைக்கட்டும்!
மதுரை மீனாட்சி அன்னையின் திருக்குடமுழுக்கில் தமிழ்மறை முழங்கி, தமிழின் பெருமை விண்ணதிரட்டும்!
- செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, கமுதி ஒன்றியத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி சுபாஷ் அவர்களின் சகோதரர் தம்பி ஆகாஷ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி ஆகாஷ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஆகாஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா ஆகியோரின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக மூவர் நினைவைப் போற்றும் கூட்டம் இன்று ஆவணி 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (01-09-2026) காலை மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை - திருமோகூர் சாலையில் உள்ள A.P.வளையாபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
youtu.be/6KtfuuJv1G8 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை, கத்தாரின் மூத்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பெ.மரியலூயிஸ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அ.பெரியநாயகம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அ.பெரியநாயகம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி, மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.பாலசுப்பிரமணி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ப.சுப்பையா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ப.சுப்பையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴தற்போது நேரலையில்...
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா ஆகியோரின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக மூவர் நினைவைப் போற்றும் கூட்டம் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை - திருமோகூர் சாலையில் உள்ள A.P.வளையாபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது.
x.com/i/broadcasts/1YGNrbBOqlPGw -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிவகாசி சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி வினோத்குமார் அவர்களின் தாயார் அம்மா பழனியம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பழனியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்திய நாள்!
'தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லைதான்!’ ஆனால் ஒவ்வொரு முறையும் யார் தீக்குச்சியாக்கப்படுகிறார்கள்? என்பதுதான் கேள்வி; அப்படி ஒரு தீக்குச்சியாகி கல்வி உரிமை மீட்புக்கான புரட்சித்தீயைத் தமிழ் மண்ணில் பற்ற வைத்த மானமறத்தி அன்புத்தங்கை அனிதா!
அந்த எளிய மகள் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாட்டில் பேரதிர்வை உண்டாக்கிய போதிலும், அவரைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகள் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்ட போதிலும், இன்றுவரை நீட் தேர்வினை இம்மண்ணை விட்டு அகற்றமுடியவில்லை என்பதுதான் சமகால வரலாற்று பெருங்கொடுமை!
ஆட்சிகள் மாறுகிறது. காட்சிகள் மாறுகிறது. அவலங்கள் என்றும் மாறுவதே இல்லை. மக்கள் துயரங்கள் மட்டும் தீருவதே இல்லை.
அன்புத்தங்கை அனிதாவின் ஈகத்தைப் போற்றுகின்ற இந்நாளில், அவருடைய உடன் பிறந்தாராகிய நாம் தொடர்ச்சியாகப் போராடி, அவர் கண்ட பெருங்கனவை நிறைவேற்றுகின்ற உறுதியை ஏற்போம்!
கல்வி உரிமைப்போராளி அன்புத்தங்கை அனிதா அவர்களுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் தமிழரசன் வீரப்புகழ் போற்றுவோம்!
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி!’ என்கிறார். ‘அடிமை வாழ்வினும்; உரிமைச்சாவு மேலானது!’ என்பது மானத்தமிழ் முன்னோர்கள் கொண்டிருந்த உயிர்க்கோட்பாடு!
அந்த வழிவழியே வந்த வீரத்தமிழ்மறவர்தான் பொன்பரப்பியில் பூத்த புரட்சி தீ, எங்களைப்போன்ற பிள்ளைகளின் முன்னத்தி ஏர், மூத்த வழித்தடம், தமிழ்த்தேசிய இனப்போராளி அண்ணன் தமிழரசன் அவர்கள்!
மற்ற மொழிவழி தேசிய இனங்களைப்போல தமிழினமும் உரிமைப்பெற்று பெருமையோடு வாழ்ந்துவிடாதா? என்று ஏங்கிய எமது முன்னவர்களில் முதன்மையானவர்.
‘சாதியை ஒழிக்காமல் தமிழ்ச்சமூக ஓர்மைஇல்லை; தமிழ்ச்சமூக ஓர்மை இல்லாமல் அதிகார வலிமை இல்லை; அதிகார வலிமை இல்லாமல் தமிழர் விடுதலை இல்லை’ என்கிற அடிப்படை அரசியல் புரிதலோடு பெரும்படை கட்டி எழுப்பிய மாவீரன்!
அண்ணன் தமிழரசன் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் தாங்கிபிடித்த தமிழ்த்தேசிய தத்துவ வழி நிற்கும் உடன் பிறந்த உறவுகளான நாங்கள் அவ்வீரத்தமிழ் மறவனின் நினைவைப்போற்றுவதில் பெருமையடைகிறோம்!
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..!
பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..!
தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!
அன்னைத்தமிழ் நிலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுகிடந்தபோது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த மாவீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் மாமன்னன் பூலித்தேவன் அவர்கள்!
'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்!
எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் மாமன்னர் பூலித்தேவன். அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.
பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூத்த களச் செயற்பாட்டாளர் ஐயா பொ.மதிவாணன் அவர்களின் தகப்பனாரும், மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பொறியாளர் அ.அன்பு அவர்களின் தாத்தாவுமாகிய
மதிப்பிற்குரிய ஐயா ராம.பொன்னழகு அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
ஐயாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ராம.பொன்னழகு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி ஜெனித் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ராஜகுமாரன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ராஜகுமாரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க அறப்போர் புரிந்து சிறை சென்ற எல்லை மீட்புப் போராளி..!
அறநெறித்தமிழ்க்கழகம் நிறுவி ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலங்கியங்களைக் கற்பித்து தமிழ்ப்பேரறிஞர்களாக உருவாக்கிய பெருந்தகை..!
தமிழ்ப்பொழில், தமிழ்நாடும் வடவெல்லையும் உள்ளிட்ட அருந்தமிழ் நூல்கள் பல இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி செய்த தமிழ்ப்பெருந்தொண்டர்..!
'தமிழர் மாநாடுகள்' நடத்தி தமிழின உணர்வை வளர்த்தெடுத்த தன்மானத்தமிழர்..!
வடவெல்லைக் காத்த தமிழ் முனிவர்! 'தமிழ்ப்பெரியார்' நம்முடைய தாத்தா மங்கலங்கிழார் அவர்களின்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?
இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும்
துணிவு எங்கிருந்து உங்களுக்கு
வந்தது?
குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை;
காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா?
மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை;
காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்;
ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,
இதை எல்லாம் அறியாமல்,
அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல்,
அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,
“இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?
அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?
ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?
மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?
தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல;
அது எமது மண்ணின் அடையாளம்!
அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல;
மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எனவே, தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்!
தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அதைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தன் உடலுக்குத் தீயிட்டு, ஒரு புரட்சித்தீயை இந்த நிலத்தில் பற்றவைத்த பெரும் நெருப்பு!
தமிழர் பண்பாட்டு மரபில் தன்னைச் சார்ந்தவர் நலன் காக்க தம்முயிர் துறந்து தெய்வங்களான தமிழின முன்னோர்கள் போல, இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து உலகத்தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழும் நம் இனத்தின் காவல் தெய்வம்!
தம்முயிரையே ஈகம் தந்த புனிதப்போராட்டத்தின் மூலம் எழுவர் விடுதலைக்கு வித்திட்ட வீரத்தமிழச்சி தங்கை செங்கொடிக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், 700-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனும் பெருந்துயரச் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
திடீரென பெருக்கெடுத்த ஆற்று வெள்ளம் இருகரைகளில் இருந்த வீடுகளையும், அவற்றில் வசித்த மக்களையும், செயற்கை கட்டுமானங்களையும் மூழ்கடிக்கும் காட்சிகள் நெஞ்சைப் பதறச்செய்கிறது. எத்தனை அறிவியல் வளர்ச்சியை ஏற்படுத்தி, விண்வெளிக்கே சென்றாலும் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை அவ்வப்போது இயற்கை நமக்கு உணர்த்தி வருகிறது.
புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட காலநிலை மாற்றம், திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டி வரும் உலகின் மிகப்பெரிய அணை கட்டமைப்பிற்காக அழிக்கப்பட்ட மரங்களால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களை இயற்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி பார்த்தாலும் இயற்கைக்கு எதிராக மனிதன் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் மனித இனத்திற்கு எதிராகத் திரும்பும், பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அவ்வப்போது நிகழும் இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் மூலம் நமக்கு உணர்த்தி வருகிறது.
மலையும், மரமும், மணலும், மழையும், ஆறும், அருவியும், காடும், கடலும் நன்றாக இருந்தால்தான் மனித இனம் நன்றாக இருக்க முடியும் என்ற பேருண்மையை, வளர்ச்சி என்ற பெயரில் அவற்றை அழித்து தொழிற்சாலைகளையும், வானூர்தி நிலையங்களையும் அமைக்க முயலும், நாட்டின் ஆட்சியாளர்கள் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையென்றால் அதற்காக மிகப்பெரிய விலையை உலகில் மானுட இனம் கொடுக்க நேரிடும்.
நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி
காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
நேபாளப் பெருவெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu @Tnpcbofficial @TPRDtCollector @Chief_Secy_TN @moefcc @byadavbjp @BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?
@CMOTamilnadu @TVKVijayHQ
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .
2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்மைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை?
இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்?
தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?
ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu @TVKVijayHQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வெ.முத்துராமன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா மு.வெட்டும் பெருமாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மு.வெட்டும் பெருமாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி சரவணன் அவர்களின் தாயார் அம்மா லட்சுமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இறைவன் திருப்பெயரால் அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் கற்பித்த மகத்தான வழிகாட்டி!
போற்றுதற்குரிய பெருமகனார் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட 'மீலாதுன் நபி' திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய எல்லாம்வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் கிடைக்கப்பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகள்!மலையாள மண்ணின் பண்பாட்டுப் பெருவிழாவாகவும், உழைக்கும் மக்களின் மகிழ்ச்சித் திருநாளாகவும் கொண்டாடப்படும் ஓணம் நன்னாளை மகிழ்வோடும், உணர்வோடும் கொண்டாடும் உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரிக்காது, அனைவரும் சமமாக வாழ்ந்த பொற்காலத்தின் நினைவாக மாவேலி மன்னனை வரவேற்கும் ஓணம் திருநாள், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகிய உயரிய பண்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஓணம் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; தலைமுறைகளைக் கடந்து வாழும் ஒரு மக்களின் பண்பாட்டு அடையாளம்.மேற்குத் தொடர்ச்சி மலையின் இருபுறமும் வாழும் தமிழர்களும் மலையாளிகளும் நிலத்தாலும், நீராலும், மொழிகளாலும், பண்பாட்டாலும், வரலாற்றாலும் நெடுங்காலமாக உறவாடி வாழ்ந்து வருகிறோம்.
எல்லைகள் நம்மைப் பிரித்தாலும், மனித உறவும் மண்ணின் பாசமும் நம்மை எப்போதும் இணைத்தே வைத்திருக்கின்றன. இயற்கையைப் போற்றி, உழைப்பை மதித்து, சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஓணம் திருநாளின் உயரிய செய்தி உலகெங்கும் பரவட்டும்!மலையாள உறவுகளின் இல்லங்களிலெல்லாம் மகிழ்ச்சி மலரட்டும்!
அன்பும் அமைதியும் நிறையட்டும்!
செழிப்பும் வளமும் பெருகட்டும்!
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
ஓணம் நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு சொற்பொழிவாளர்!
இதழியல் மொழிநடையை உருவாக்கி தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை!
அரசியல், இலக்கியம், சமயம் என பல்துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த தமிழறிஞர்!
இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, தொழிலாளர் உரிமைபெறத் தோள்கொடுத்துத் துணைநின்ற புரட்சிப்போராளி!
செந்தமிழும், சிவநெறியும் போற்றி வளர்த்த சைவப் பேரறிஞராகத் திகழ்ந்தபோதும் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இசுலாம் உள்ளிட்ட பல மதக்கோட்பாடுகளையும் கற்றுத்தேர்ந்த சமயப் பேதமற்ற சமூகச் சிந்தனையாளர்!
அரசியல் அறிஞர், ஆகச்சிறந்த ஆசிரியர், படைப்புத் திறன்மிக்கப் பத்திரிகையாளர், தனித்தமிழியக்க முன்னோடி, பெண்ணுரிமைப் போராளி, சாதிய தீண்டாமையை எதிர்த்துப் போராடிய தீரர், சமரச சன்மார்க்க அருளாளர், காந்தியவாதி, பொதுவுடைமை சிற்பி என்ற பன்முகச் சிறப்பிற்குரிய பெருந்தகையாளர்!
தமிழாகவே வாழ்ந்த, தமிழர் நலத்திற்காகவே வாழ்ந்த, தமிழ்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகவும், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தன் வாழ்வெலாம் அரும்பாடுபட்ட நம்முடைய தாத்தா தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தென்கொரிய நாட்டின் சியோல் நகரில் பன்னாட்டு அளவிலான இளையோருக்கான டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவர்கள் 5 வெண்கல பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
அன்பு பிள்ளைகள் ஐவரும் மேலும் பல பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களுடைய 74வது பிறந்தநாளில், அவருடைய நற்செயல்பாடுகளை போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கல்வி, மருத்துவம் இரண்டிலும் ஏழை - எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும், பணம் செலுத்த முடியாதவர்களின் நிலை அறிந்து இலவசமாகவும் சேவையாற்றி வரும் ஐயாவின் அறப்பணிகள் மிகுந்த போற்றுதற்குரியது.
கல்வி வள்ளல், பெருந்தமிழர் ஐயா பாரிவேந்தர் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்தோடும், உள்ள நிறைவோடும் வாழ்ந்து தமிழ்ப்பேரினத்திற்கு அருந்தொண்டு ஆற்றிட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@PaarivendharTR -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத்
தொகுதி, புள்ளம்பாடி வடக்கு [பெருவளப்பூர்] மாவட்டத் தலைவர்
அன்புத்தம்பி த.தமிழழகன் அவர்கள் மறைவெய்திய
துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில்
தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த
தம்பி த.தமிழழகன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த
மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி த.தமிழழகன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி வல்லம் ஒன்றியம் தளவாளப்பட்டு கிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி க.இராம்குமார் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி க.இராம்குமார் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி க.இராம்குமார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? இதுதான் தவெக அரசு மாநில உரிமைகளைக் காக்கும் முறையா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
யாருடைய உத்தரவின் பேரில் அரசுப் பள்ளியில் வட மாநிலத்தவர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்?
தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்களுக்குப் புரிதல் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா?
நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தபோதே நம் நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது? என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதைப்போலவே தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய அளவிலான போட்டித் தேர்வில் வெல்ல வேண்டும் என்று வடமாநிலத்தவருக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது?
அண்மையில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நிலையில், அதனைக் கெடுப்பதற்காகவே வட மாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை இப்பொழுது அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் நியமனம் தொடங்கி ஆசிரியர் பணி நியமனம் வரை வெளிமாநிலத்தவர்களுக்குக் கொடுத்துப் பறிப்பது என்ன நியாயம்?
தமிழ்நாட்டில் இத்தகைய தேர்வு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவும், திறனும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களே இல்லையா? பல இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டுகளாக வேலையின்றி வீதியில் போராடிக் கொண்டிருக்கும்போது, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் ஆசிரியர்களாக நியமிப்பது ஏன்?
தூய்மைப்பணியாளர்கள், நடத்துநர்கள், ஆசிரியர்கள் என்று அடுத்தடுத்து அரசுப் பணியிடங்கள் அனைத்துமே தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார்கள் என்றால் அரசுத்துறைகளின் வேலைதான் என்ன? அனைத்துமே தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில், அரசுக்கு பொதுப்பணி, போக்குவரத்து, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என்று தனித்தனி துறைகள் எதற்கு? தனித்தனி அமைச்சர்கள் எதற்கு? இது என்ன மாதிரியான மாற்று?
ஏற்கனவே, முதலமைச்சரிடம் முதன்மையாக எந்தத் துறைகளும் இல்லை. அனைத்து முக்கியத் துறைகளும் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் மூன்று நான்கு முதன்மையான துறைகளை வைத்துள்ளார்கள். எல்லாத் துறைகளையும் அமைச்சர்களிடம் அளித்துவிட்டால் முதலமைச்சரின் வேலை என்ன? ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவது மட்டும்தானா?
வேளாண்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். நீர்வளத்துறைப் பற்றிக் கேள்வி கேட்டால் அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். சுற்றுலா குறித்த கேள்விக்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் பதில் சொல்கிறார். யாருக்கு எந்த அமைச்சகம்? யார் எந்தத்துறையின் அமைச்சர் என்பதே இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படவில்லை. இப்போது அமைச்சர்களுக்கும் எந்த வேலை இல்லை என்ற அளவிற்கு, அனைத்து துறைகளின் பணிகளுமே தனியார் நிறுவனம் மூலம் வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழிளம் தலைமுறைப்பிள்ளைகள் இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இத்தகைய கொடுமைகள் தொடர்ந்தால் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பழம்பெரும் திரைக்கலைஞர், பெருமதிப்பிற்குரிய அம்மா சௌவுகார் ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மகளாக, கதாநாயகியாக, தாயாக பல்வேறு கதாபாத்திரங்களில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, மக்களை மகிழ்வித்த அம்மா அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதலுக்குரியது.
அம்மா சௌவுகார் ஜானகி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுகின்றேன்.
அம்மா சௌவுகார் ஜானகி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?
அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா?
விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா?
மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?
தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?
சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?
அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில் போரிட்ட முதல் விடுதலைப் போராட்டவீரர் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் படையணியில் வீரமும், தீரமும் மிக்க படைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
எதிரிகளின் படைமுகாமிற்குள் ஒற்றை ஆளாகச் சென்று, அனைவரையும் அழித்து, வெற்றிவாகைச் சூடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் 'ஒண்டிவீரன்' என மக்களால் போற்றப்பட்டவர்.
பல போர்களில் வென்று வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, போர்க்களத்திலேயே வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட மாவீரர்!
விடுதலைப் போராட்ட மாவீரர் வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
100 நாள் ஆட்சியில், 6 காவல்நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை!
@CMOTamilnadu @TVKVijayHQ
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச்சேர்ந்த ஐயா பரமசிவம் அவர்களை, விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையததில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. 100 நாள் ஆட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் காவல்நிலைய மரணங்களை தடுக்கத்தவறி தவெக அரசு வேடிக்கைப்பார்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து, தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையிலும் ஐயா பரமசிவம் அவர்கள், அளித்துள்ள மரண வாக்குமூலக் காணொளி இதயத்தை உறையச்செய்கிறது. வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்னையில், தன்னுடைய மனைவி அய்யம்மாளுடன் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற ஐயா பரமசிவத்தை, காவல் நிலையத்திற்குள் வைத்தே கடுமையாகத் தாக்கிய சிந்தாமணி காவல்துறையினர், தாக்குதல் குறித்து வெளியில் சொன்னால் கஞ்சா வழக்கில் குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், ஐயா பரமசிவத்தை மிரட்டியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை. தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
தவெகவின் நூறுநாள் ஆட்சியில் ஆறு விசாரணை சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில் நடைபெற்ற காவல்துறை மரணங்களின்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தமோ, ஆறுதலோ தெரிவிக்காதது ஏன்? தனது கட்சி கூட்டத்தில் வந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கே அரசு வேலை தருகின்ற முதல்வர் விஜய், தனது ஆட்சியில், தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் மக்கள் மீது நிகழ்த்திவரும் அடக்குமுறை கொடுமைகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்குத் துயர்துடைப்பு உதவியோ, அரசு வேலையோ வழங்க மறுப்பதேன்? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்கள் கேட்கவில்லையா? தான் ஆட்சிக்கு வந்தால் கடந்த திமுக ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத்தராது இருப்பது முறைதானா முதல்வர் அவர்களே? கொடுங்குற்றம் புரிந்த குற்றவாளியாக, இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத்தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் எந்தவொரு நாட்டிலும் நிகழக்கூடாத மனிதப் பேரவலம்!
ஆகவே, மதுரை சிந்தாமணி காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ள ஐயா பரமசிவம் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும் வழங்க வேண்டும். அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய விசாரணை மரணங்கள் இனியும் தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உத்தரப்பிரதேச தனியார் நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர்களை நியமிப்பது தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் (MTC) பேருந்துகளில் காலியாகவுள்ள 1,797 நடத்துநர் பணியிடங்களை, 61.56 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 'எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்' (S.S. Enterprises) என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அரசுப்பணியிடங்களில் ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதைக் கைவிட்டு, நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று போராடி வரும் வேளையில், உத்தரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளித்துள்ள ஊழியர்களின் உரிமைப்பறிப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயலாகும்.
தமிழ்நாட்டில் பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களை உத்தரப்பிரதேச மாநில நிறுவனத்தின் மூலம் நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதற்குத்தான் இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா முதல்வர் அவர்களே? உத்தரப்பிரதேச நிறுவனம் தமிழக இளைஞர்களைப் பணியமர்த்துமா? அல்லது இந்தி பேசும் வடமாநில இளைஞர்களைப் பணியமர்த்துமா? அப்படியென்றால் அது மறைமுக இந்தி திணிப்பிற்கு வழிவகுக்காதா? ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள், தொடர்வண்டி நிலையங்கள், அஞ்சலகங்கள் உட்பட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்தி பேசும் அதிகாரிகளால் தமிழ்நாடு மக்கள் பாதிப்புக்கு ஆளாவது போதாது? தமிழ்நாடு பேருந்துகளிலும் இனி மொழி புரியாத வடமாநிலத்தவரால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்க வேண்டுமா?
தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்தபோதே நாம் தமிழர் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதற்கான பலனை கர்நாடக முதல்வரின் பதிலடியால் தற்போது தவெக அரசு எதிர்கொள்கிறது. கர்நாடக வனத்துறையால் 3 தமிழர் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் கண்டனம் தெரிவித்ததற்கு, எங்கள் மாநில விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று காட்டமாக கர்நாடக முதல்வர் எதிர்வினை ஆற்றும் அளவுக்கு, மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவர் தலையிடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு இறுக்கமாக இருக்கின்றது. கர்நாடக முதல்வரின் அடாவடி பதில் ஏற்புடையது இல்லை என்றாலும், அரச நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவரின் தலையீடு இருக்க கூடாது என்ற அத்தகைய உறுதியான நிலைப்பாடு தவெக அரசுக்கு ஏன் வரவில்லை? தவெக அரசு எந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது? இது மாநில இறையாண்மைக்கும், தன்னாட்சிக்கும் எதிரானது இல்லையா? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப்பணியிடங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்துவோம், என்று வாக்குறுதியளித்த தவெக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது வேலையில்லாமல் திண்டாடும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
அரசுப்பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்த்துவிட்டு, வேலையில்லா தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாய் உதவித்தொகை தருவோம் என்று தவெக அரசு ஏமாற்றுவது வெட்கக்கேடானது. இது அரசுப்பணிக்காக இரவும் பகலும் அயராது படிக்கும் தமிழிளம் தலைமுறை பிள்ளைகளுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர் பணியிடங்களை உத்தரபிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நிரந்தர அரசுப் பணியாளர்களாக, தமிழ்நாடு அரசே தெரிவு செய்து நியமிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசுவதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர்களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பாக்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.
மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு. கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது? கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்வராக இருக்கலாம். எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல பெருமக்களே! தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரின் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.
தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்களை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.
ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி போகலூர் ஒன்றியம் சேமனூர் கிராமத்தைச் சேர்ந்த பொறுப்பாளர், அன்புத்தம்பி மலர்வண்ணன் அவர்களின் தாயார் அம்மா இரா.வாசுகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி மலர்வண்ணன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இரா.வாசுகி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வந்தவாசி சட்டமன்றத் தொகுதி,
வந்தவாசி நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இரா.சுரேஷ் அவர்களின் தந்தை ஐயா வா.இராஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி சுரேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராஜேந்திரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆதித்தமிழ்க் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறனால் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதி பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்! தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும்!
இன்று (17-08-2026) அண்ணன் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தமிழ்த்தேசிய மாநாடு வெல்லட்டும்..!
@thirumaofficial -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கர்நாடக வனத்துறையால் 3 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயல்! மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா?
@CMOTamilnadu @TVKVijayHQ
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட அனூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சிறிதும் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. வழிதவறிய தங்களின் மாடுகளை தேடி வந்தவர்களை வேட்டையாட வந்தவர்கள் என்றுகூறி கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.
வழிதவறிய மாடுகளை தேடி வந்த தமிழர்களை, மானை வேட்டையாட வந்தவர்கள் என்று கர்நாடக வனத்துறை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறது? அப்படியே வேட்டையாட வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சுட்டுக்கொல்ல கர்நாடக வனத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டனைப்பெற்று தருவதை விடுத்து, எந்த விசாரணையும் இன்றி சுட்டுக்கொன்றது ஏன்? மானை சுட்டார்கள் என்றால் சுடப்பட்ட மான் எங்கே? மானை சுட்டவர்களுக்கு மரண தண்டனை? மனிதர்களை சுட்டவர்களுக்கு என்ன தண்டனை? மானின் உயிரை மலிவாகிவிட்டதா சகமனிதனின் உயிர்? மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா? மனிதநேயம் பேசும் நியாயவான்கள், மனித உரிமை ஆர்வலர்கள் யாருமே இதைப்பற்றி பேசாமல் கடந்து செல்வது சரிதானா? விலங்குகளை வேட்டையாடினால்கூட கேட்பதற்கு வனத்துறையும், வனவிலங்கு ஆர்வலர்கள் இருக்கிறார்கள்? தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு எந்த நாதி இருக்கிறது? வனவிலங்குகளை வேட்டையாடுவது கொடுங்குற்றம் என்றால் தமிழர்களை சுட்டுக்கொல்வது புனித சட்டமா?
தமிழர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றால், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சுட்டுக்கொல்கிறது.
தமிழர்கள் கூலி வேலைக்கு சென்றால் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திர காவல்துறை சுட்டுக்கொன்றது. தற்போது மாடுகளை தேடி சென்ற தமிழர்களை வேட்டையாட வந்ததாக கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது. இலங்கை ராணுவம்தான் இனவெறியுடன் தமிழர்களை கொல்கிறது என்றால் ஆந்திர, கர்நாடக வனத்துறை தமிழர்களை மட்டும் குறிவைத்து சுட்டுக்கொல்வதற்கு பெயரென்ன? அண்டை நாடான இலங்கையிடம் இருக்கும் அதே இனவெறியும், வெறுப்பும் அண்டை மாநிலங்களிடமும் இருந்தால் ஒரு நாட்டிற்குள் நாம் இருப்பதற்கான அர்த்தம் என்ன?
சொந்த நாட்டு குடிமக்களை சகோதர மாநில வனத்துறையினர் எவ்வித விசாரணையும் இன்றி சிறிதும் மனச்சான்றின்றி, சுட்டுக் கொல்வார்கள் என்றால், இதில் எங்கே இருக்கிறது தேச ஒற்றுமை? எங்கே இருக்கிறது இந்திய ஒருமைப்பாடு? தேசபக்தி குறித்து பாடமெடுத்தவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? திராவிடம் பேசும் திருவாளர்கள் இதற்கு வாய்த்திறவாமல் அமைதி காப்பது ஏன்? இந்திய ஒன்றியத்தை பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் இதுவரை கர்நாடக அரசை கண்டிக்காது வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. பாகிஸ்தான் கடற்படையால் ஒரு குஜராத் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் பதறித்துடிக்கும் பாஜக அரசு, கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் எந்த சலனமும் இன்றி அமைதியாக இருப்பது ஏன்? இதனை பிரதமர் மோடியோ, காங்கிரசு மூத்த தலைவர் ராகுல்காந்தியோ இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழர்களுக்கான ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரவிய வதந்திக்கே அம்மாநில சட்டமன்றம் அதிர்ந்தது. ஆய்வுக்குழுவை அனுப்பி பீகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்தது. அந்த அக்கறையில் அணுவளவாவது தவெக அரசிற்கு இருக்கிறதா?
3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தவெக அரசு இதுவரை ஆற்றிய எதிர்வினை என்ன? தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் ஆகியோரின் கருத்து என்ன? அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு அரசு வழங்கப்போகும் நிதியுதவி என்ன? அவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு வேலை வழங்குமா?
காவிரி சிக்கல் போல, இதிலும் கர்நாடக காங்கிரசு அரசை கண்டிக்க தவெக அரசுக்கு துணிவில்லையா? ஆட்சிக்கு ஆபத்துவந்துவிடுமோ என்று அஞ்சுகிறதா? இதுதான் தமிழர் உரிமையை தவெக அரசு காக்கும் முறையா? கர்நாடகாவை சேர்ந்தவரை தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தவெக அரசு நியமித்ததறகு பரிசுதான், 3 அப்பாவி தமிழர்களை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளதா?
இன்னும் எத்தனை எத்தனை துயரங்களைத்தான் தமிழினம் தாங்குவது? பெருங்கொடுமை!
கர்நாடக வனத்துறையால் 3 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புவதுடன், கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்கு பதிந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எண்ணூர் கழிமுகத்திலும் கொற்றலை ஆற்றிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் வெறும் சுற்றுச்சூழல் பேரழிவு மட்டுமல்ல, எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @Chief_Secy_TN @srinathtvk @Tnpcbofficial @CPCB_OFFICIAL @narendramodi @byadavbjp
இதுவரை கண்டிராத மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரிடராக, எண்ணூர் கழிமுகத்திலும் கொற்றலை ஆற்றிலும் இன்று 16.08.2026, டன் கணக்கில் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதந்து கரை ஒதுங்கி வரும் சீரழிவு நடந்தேறியுள்ளது. இந்த நச்சு மாசுபாட்டால் தங்களின் வாழ்வாதாரமே ஒட்டுமொத்தமாக அழிந்துபோன நிலையில், சம்பவம் நடந்து இத்தனை மணி நேரமாகியும் எந்தவொரு அரசு அதிகாரியோ அல்லது ஆட்சியாளர்களோ தங்களை நேரில் வந்து சந்திக்காதது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், உடனடியாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலம் காலமாக அனல்மின் நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் நச்சுக் கழிவுகள் கொற்றலை ஆற்றில் கலக்கப்பட்டு, அந்நிலப்பரப்பே சீரழிக்கப்பட்டு வருகிறது. தற்போது வேதிப்பொருள் கழிவுகளால் பல்லாயிரக்கணக்கான மீன்களும், நண்டு, இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் செத்து மடிந்து மிதப்பது அப்பகுதி மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய சூழலியல் சீரழிவு தொடர்ந்து நடப்பதற்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில Pollution Control Board (TNPCB) அமைப்பின் அலட்சியமும், போலி கண்காணிப்புமே முதன்மை காரணம். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை நாசமாக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து தண்டிப்பதற்குப் பதிலாக, பெரு நிறுவனங்களுக்கு துணைபோகும் கடந்த திமுக அதிமுக ஆட்சியாளர்களின் போக்கையே தற்போதைய தவெக அரசும் பின்பற்றுவது மாற்றம் என்று வாக்களித்த மக்களுக்கு செய்யும் அநீதியாகும். குற்றமிழைத்த தொழிற்சாலைகள் மீது சட்டப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை அந்த நச்சு நிறுவனங்களிடமிருந்தே பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'வளர்ச்சி' என்ற பெயரில் சுற்றுச்சூழல் விதிகளையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளையும் தளர்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆற்றுப்படுகைகளையும் கழிமுகங்களையும் நச்சுக் கிடங்காக மாற்ற ஒன்றிய பாஜக அரசு வழிவகுத்துள்ளது. மாநிலத்தின் இயற்கை வளங்களையும், பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமையையும் பலியிடும் இந்தச் சுற்றுச்சூழல் துரோகத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒன்றிய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்காமல், கொற்றலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூர் கழிமுக மாசுபாட்டால் வாழ்வாதாரமிழந்து தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் நீதிக்காகப் போராடி வரும் மீனவ கிராம மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட எளிய மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வரை இந்த அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தோளோடு தோள் நின்று இறுதிவரை களமாடும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்ச்சமூகத்தின் பெரும்பற்று கொண்ட படைப்பாளி, இனமான இயக்குநர் என்னுயிர் தம்பி சண்முகம் முத்துச்சாமி அவர்களின் தாயார் அம்மா இராணி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
இக்கொடுந்துயர் மிகுந்த சமயத்தில் உடன்பிறந்தவனாக தம்பிக்குத் துணைநிற்கிறேன்.
உயிர்ப்பால் ஊட்டி வளர்த்த தாயை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - நெய்வேலி சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இரா. அறிவுக்கரசன் அவர்களின் தாயார் அம்மா இரா.வாசுகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி அறிவுக்கரசன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும்
எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இரா.வாசுகி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி, கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இராமகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி இராமகிருஷ்ணன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி இராமகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி இராமகிருஷ்ணன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாடானை தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை குவைத் - ஆன்றோர் அவையத் தலைவர் அன்புத்தம்பி முருகேசன் தேவகி அவர்களின் அண்ணன் மதிப்பிற்குரிய ஐயா பூ.இராசு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அண்ணனை இழந்து வாடும் தம்பி முருகேசன் தேவகி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பூ.இராசு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
"நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது...
உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறி விடுவது என் கடமை..!
எவன் ஒருவன் தானே சரணடையாமல்,
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல்,
அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ?
அவனே சுதந்திர மனிதன்!" - என்கிறார் புரட்சியாளர் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர்.
"சுதந்திரம் இல்லாத நாட்டிற்கு எந்தப் பெருமையும் இல்லை!" - என்கிறார் ரூசோ.
"சுதந்திரம் இல்லாத நாடு; வெறும் காடு!" - என்கிறார் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
"சுதந்திரம் என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாத உயிர்களுக்கும் சுதந்திரம் தேவைப்படுகிறது!" - என்கிறார் ஹோ சே மார்த்தி.
"சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை!" - என்கிறார் பால கங்காதர திலகர்.
"கொஞ்சம் இரத்தம் தாருங்கள்; நிறைய சுதந்திரம் தருகிறேன்!" - என்கிறார் மாவீரன் சுபாஷ் சந்திர போஸ்.
"சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை, புரட்சி என்பது மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை." என்கிறார் புரட்சியாளர் பகத்சிங்
"சுதந்திரமற்ற மனித வாழ்க்கை அர்த்தமற்றது!" - என்கிறார் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
அப்படி பல்லாயிரம் வீரமறவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, செக்கடியிலும் சிறைச்சாலையிலும் வதைபட்டு, மிதிபட்டு, அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இன்று அனைவருக்கும் சரியாக, சமமாக இருக்கிறதா? கிடைக்கிறதா?
எந்த நோக்கத்திற்காக இந்த நாடு விடுதலைப்பெற்றதோ? அந்த இலட்சியம் நிறைவேறிவிட்டதா?
கல்லூரியில் படிக்கும் பெண் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவர் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
வீட்டருகே விளையாடும் பெண் குழந்தைகூட வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்.
படிக்க வசதியற்ற குழந்தைகள்...
போதையில் தள்ளாடும் இளைய தலைமுறை...
ஆதரவற்று நிற்கும் பெண்கள்...
வறுமையில் வாடும் முதியோர்கள்...
வியாபாரப் பண்டம் போல் விற்கப்படும் மருந்துவம், கல்வி...
லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்,
ஊழலில் திளைக்கும் ஆட்சியாளர்கள்,
மது விற்கும் அரசு என எதுவொன்று இங்கு சரியாக, முறையாக இருக்கிறது? இயங்குகிறது?
அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கி,
தனியார் முதலாளிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று கட்டமைக்கும் அரசு,
அரசின் தவறுகளை எதிர்த்துப் போராடினால், கேள்வி கேட்டால் கொடுஞ்சிறை என்றால்
எங்கே இருக்கிறது கருத்து சுதந்திரம்?
எங்கே இருக்கிறது பேச்சு சுதந்திரம்?
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு,
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு,
மணிப்பூரில் மதக்கலவரம்,
பஞ்சாப்பில் பதற்றமான சூழல்,
ஆந்திராவில் அடக்குமுறை,
கர்நாடகாவில் காவிரி நீர் தர மறுத்து கடையடைப்பு,
குஜராத்தில் குண்டுவெடிப்பு,
கொல்கத்தாவில் கொடூரக் கொலைகள்,
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
என சுடுகாடாய் மாறி நிற்கும் நாட்டில் எங்கே இருக்கிறது சுதந்திரம்?
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ?
நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப்போமோ?
ஆண்பிள்ளைகள் அல்லமோ? உயிர் -வெல்லமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரை கண்ணீராற் காத்தோம்! கருகத்திருவுளமோ?
என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகள் உள்ள வலி நம் உள்ளத்திலும் ஆறாமல் அப்படியே இருக்கிறது.
பசி-பஞ்சமற்ற, ஊழல்-இலஞ்சமற்ற, பாலியல் வன்புணர்வு, பெண் அடிமைத்தனமற்ற, வர்க்க பேதமற்ற, சாதிய இழிவு தீண்டாமையற்ற, அடக்குமுறை-ஒடுக்குமுறையற்ற, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் பொருளாதார விடுதலைப்பெற்ற சமத்துவ சமுதாயம் பெறுவது எப்போது? அமைப்பது யார்?
பாலுக்கு அழாத குழந்தை..,
கல்விக்கு ஏங்காத மாணவன்..,
வேலைக்கு அலையாத இளைஞன்..,
இதுவே என்னுடைய கனவு இந்தியா..!
அடிமை இந்தியாவில் அன்று மாவீரன் பகத்சிங் கண்ட கனவு
சுதந்திர இந்தியாவில் இன்றும் நிறைவேறாமல் அப்படியே இருக்கிறது!
அந்தக் கனவை நிறைவேற்றி உண்மையான சுதந்திரத்தை நாம் ஒன்றுகூடி போராடிப் பெற்றிட விடுதலை திருநாளில் உறுதியேற்போம்!
விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துகள்!
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
#நூறுசாமி
அன்புத்தம்பி விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத் தயாரிப்பில், அன்பு இளவல் சசி எழுதி - இயக்கி, அன்புத்தம்பி விஜய் ஆண்டனி, அன்புத்தம்பி கருணாஸ், சுவாசிகா ஆகியோரது சிறப்பான நடிப்பில் வெளியான ‘நூறு சாமி’ திரைப்படத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். நேற்றிரவு அத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு, இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அந்த அளவிற்கு இத்திரைப்படம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்ணின் மறுமணம் என்பதுதான் என்னுடைய 'பசும்பொன்' திரைக்கதையின் மையக்கரு என்பதால், 'நூறு சாமி' படத்தைப் பார்க்கும்போது அதன் காட்சிகள் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. படத்தின் இயக்குநர் தம்பி சசியை அழைத்துப்பேசிய பிறகுதான் அந்த தாக்கத்திலிருந்து ஓரளவு விடுபட்டேன்.
உள்ளத்தை உருக்கும் உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன், சமூகத்தில் மாற்றத்தை விதைக்கும் படைப்பாக வந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் தமிழில் அண்மையில் வெளிவந்த ஆகச்சிறந்த திரைக்காவியமாகும்.
கணவனை இழந்த பெண் கடைசிவரை தனியாகவே வாழ வேண்டும் மறுமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற சமூக அவலம் இன்றைக்கு ஒழிந்துள்ளது என்றாலும், கணவனை இழந்து குழந்தைகள் இருக்கும் பெண் மறுமணம் செய்துகொள்வது இன்னமும் இயல்பானதாக மாறவில்லை. அப்பெண் சார்ந்துள்ள குடும்பமும் அதற்கு விடுவதில்லை, சமூகமும் அதனை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதில்லை. அரிதினும், அரிதாக அங்கொன்றும், இங்கொன்றுமாக அப்படியான மறுமணங்கள் நடைபெறுகின்றனவே தவிர, மனைவியை இழந்துவிட்ட பிறகு குழந்தைகள் உள்ள ஆண்கள் மறுமணம் செய்துகொள்ளும் அளவிற்கு, குழந்தைகள் உள்ள பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்பதைத்தான் நடைமுறையில் காண்கிறோம். அப்பெண்ணிற்கு விருப்பம் இருந்தாலும் குடும்பத்தினரும், உறவினர்களும் என்ன சொல்வார்களோ என்று பயந்து தங்கள் ஆழ்மனதின் மறுமண விருப்பத்தை உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்துவிடுகின்றனர். மற்ற எல்லோரையும்விட தங்கள் குழந்தைகள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே வாழ்நாள் தண்டனை கொடுத்துக்கொள்கின்றனர். அந்த சமூக நெருடலை உணவுப்பூர்வமான காட்சிகளோடு திரைப்படைப்பாக்கி தந்துள்ள தம்பி சசி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நூற்றாண்டு கருத்துப்புரட்சிக்குப் பிறகு பெண்ணின் மறுமணம் என்பது எப்படி இன்று இயல்பான ஒன்றாகிப்போனதோ, அதுபோல குழந்தைகள் உள்ள பெண்ணின் மறுமணமும் இயல்பானததாக வேண்டும். அப்படியான மாற்றத்தை மண்ணில் நிகழ்த்துவதற்கான புரட்சிகர ஆயுதம்தான் இதுபோன்ற கலைப்படைப்புகள். 'நூறு சாமி' திரைப்படத்தை இயக்கிய தம்பி சசி போன்ற படைப்பாளிகள் இருப்பதால்தான் தமிழ்த்திரைத்துறை இன்னமும் உயிரோட்டமாக இருக்கிறது.
கணவனை இழந்த பெண்ணின் உணர்வுக்கும், ஒரு தாயின் தவிப்பிற்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தை வெளிப்படுத்தும் நடிகை சுவாசிகா கள்ளக்குறிச்சி கிராமத்து பெண் செல்வியாகவே வாழ்ந்துள்ளார். சுவாசிகாவின் அபாரமான நடிப்பும், அழுத்தமான உரையாடல் உச்சரிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம். தம்பி கருணாஸ் வழக்கம்போல தன்னுடைய இணையற்ற நடிப்புத்திறனால் மிரட்டுகிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தம்பி விஜய் ஆண்டணியும் தன் இயல்பான நடிப்புத்திறனால் நம் மனதில் நிறைகிறார். அவர்களைப் போலவே படத்தில் நடித்துள்ள பாலாஜி சக்திவேல், அஜய் திஷன், சக்தி, லிஜோமோல் ஜோஸ், தம்பி அருள்தாஸ், தம்பி முனிஷ்காந்த், பக்ஸ், வினோதினி, அர்ல்டோஸ், காவ்யா அனில், பாடினி குமார் உள்ளிட்ட படத்தில் நடித்த ஒவ்வொருவருமே தங்களின் நடிப்புத்திறனால் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றனர். கொலை செய்தவனுக்கே ஆயுள் தண்டனைதான் கொடுக்குறீங்க, எனக்கு எதுக்கு வாழ்நாள் தண்டனை? ஒரு செருப்பு அறுந்து போயிடுச்சுனா இன்னொரு செருப்புக்கு எதுக்கு தண்டனை? என்று சுருக்கென்று தைக்கும் பொருள்பொதிந்த ஆழமான உரையாடல்களும், அதற்கேற்ற காட்சி அமைப்புகளும் படத்தை ஆகச்சிறந்த காவியமாக்கியுள்ளது. தம்பி பாலாஜி ஸ்ரீராமின் மனதை வருடும் இசையும், தம்பி தர்ஷன் கிர்லோஷின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி ஹரீஷ் யுவராஜின் அருமையான படத்தொகுப்பும், படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘நூறு சாமி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..!
‘நூறு சாமி’ திரைப்பட இயக்குநர் அன்பு இளவல் சசி அவர்களுக்கும் தம்பிகள் கருணாஸ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@vijayantony #directorsasi @vijayantonyfilm
@AJDhishan990 @karunaasethu #balajisakthivel #swasika @jose_lijomol @Sakthi_Raj7
@kavyaanil_ @padinekumar_ofl
@VinodhiniUnoffl #bucks
@dhivakargj @murugan_vadivel
#thamaraiselvi @imbalajisriram
@DarshanKirlosh @sasikumarartdi1
#harishkarthi #ramkumar #durgapriya #maheshjayachandran @sugaa14 @viyaki_s
@onlynikil @PROSaiSatish @KvMothi @Decoffl_ #noorusaami -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!
வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்கு எல்லாமுமாக இருந்த என்னுயிர் அண்ணன்!
நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர், என்னுடைய பேரன்பிற்குரிய அண்ணன், சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்கள், தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை உயிரென சுமந்த இன விடுதலை எனும் புனிதக்கனவை நிறைவேற்ற, நம்முடைய மதிப்பிற்குரிய மூத்தவரின் மூன்றாமாண்டு நினைவு நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் அயராது உழைப்போம் என உறுதியேற்போம்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
போதைப்பொருட்களின் பழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. நட்பையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய வேண்டிய கல்விக்கூடங்களிலேயே மாணவர்களிடையே பகைமையும், வெறுப்பும், போதைப்பழக்கமும் உருவாகி, அது ஒரு உயிரைப் போக்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது எதிர்கால தலைமுறையினர் குறித்தான அச்சத்தை ஏற்படுத்துகிறது. தம்பி அமுதனை இழந்து, ஆற்ற முடியாதப் பெருந்துயரத்தில் சிக்குண்டு வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்துக் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாலேயே மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதாக, அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோவை, செட்டிப்பாளையம் காவல்நிலையத்திற்கு மாணவர் அமுதன் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடமிருந்து போதைப்புழக்கம் குறித்தத் தகவல்களைக் காவல்துறையினர் பெற்றுள்ளனர் என்பதும், அதற்குப் பிறகே, ஏறக்குறைய 20 மாணவர்களால் அமுதன் அடித்தே கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பதுமான செய்திகள் பெற்றோரின் குற்றச்சாட்டை உறுதிசெய்கின்றன. அப்படியிருக்கையில், போதைப் பொருட்களின் புழக்கம் எனும் முதன்மைக்காரணத்தை மூடி மறைத்து, மாணவர்களிடையேயான தகராறு என வழக்கின் கோணத்தையே மாற்ற முற்படும் தவெக அரசின் போக்கு அநீதிக்குத் துணைபோகும் துரோகம் இல்லையா? ‘குழு மோதல்’ எனக் கொஞ்சமும் கூச்சமில்லாது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் கூறியதெல்லாம் மோசடித்தனம் இல்லையா? 20 பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வதற்குப் பெயர் குழு மோதலா? அலைபேசி பறித்ததால் வந்த சண்டை, குழுமோதல் என்றால் மட்டும் இப்படுகொலை நியாயமாகிவிடுமா? இல்லை இது படுகொலையே இல்லை என்றாகிவிடுமா? அரசு தன் மீது குற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு கொடுங்குற்றத்தை மூடி மறைக்கலாமா? பறிபோன மாணவனின் உயிரைவிட உங்கள் ஆட்சியின் மீதான நற்பெயர்தான் முதன்மையானதா? பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனையே இல்லை என்கிறதா அரசு? அண்மையில் ஒரு பள்ளியில் கஞ்சாபோதையில் சக மாணவனை தாக்கும் காணொளியை ஆட்சியாளர்கள் பார்க்கவில்லையா? பரப்புரைக்கூட்டங்களில் தன்னை, ‘தாய் மாமன்’ எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், படுகொலை செய்யப்பட்டு இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு தாய் மாமனாக என்ன சொல்லப் போகிறார்? என்ன நீதியைப் பெற்றுத் தரப் போகிறார்? தனது மகனை இழந்தப் பரிதவிப்பில் பெருங்குரலெடுத்து ஓலமிடும் பெற்றோருக்கு என்ன சொல்ல விளைகிறார்? நடந்தவைகளை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் வேலையைச் செய்கிறது கல்லூரி நிர்வாகம். போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும், இக்கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு. இதுவெல்லாம் வெளிப்படையாகக் செய்யப்படும் சனநாயகத்துரோகம் இல்லையா? வெட்கக்கேடு! பேரவலம்!
ஆகவே, தம்பி அமுதனின் படுகொலையில் நீதிவிசாரணை செய்யப்பட்டு, தொடர்புடைய கொலையாளிகள் யாவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில் ஒருவரான அன்புத்தம்பி பிரேம் அவர்களின் தாயார் அம்மா ஜெயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனத்துயருற்றேன்.
அன்னையை இழந்து வாடும் அன்புத்தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஜெயலட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வாணியம்பாடியில் பொதுவுடைமைப் போராளி ஐயா ஜீவானந்தம் அவர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது ஏற்கமுடியாத பெருங்கொடுமை; புதிய சிலையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுவ வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
வாணியம்பாடியில் பொதுவுடைமை பிதாமகன் ஐயா ஜீவானந்தம் அவர்களின் மார்பளவு சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மண்ணுக்கும் மக்களுக்குமாக வாழ்ந்து மறைந்த மகத்தான தலைவரின் சிலையை அலட்சியமாக குப்பையில் வீசியுள்ள செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
நாட்டு விடுதலைக்கு போராடி சிறையில் வதைப்பட்ட வீரர், பொதுவுடைமை தத்துவத்தை தமிழ்நாடு முழுவதும் விதைத்த போற்றுதற்குரிய பெருமகன் நம்முடைய ஐயா ஜீவானந்தம் அவர்கள். தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்த பெருந்தகை. சுடுகாட்டில் கூரையமைத்து, இடுப்பில் கட்டிய ஒற்றை வேட்டியோடு, ஒழுகும் குடிசையில் புத்தகங்களின் நடுவே உண்மையும், எளிமையும், நேர்மையுமாக வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிய பெருந்தமிழர். அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும், தூய அரசியல் மாண்பிற்கும் மறுவடிவமாக வாழ்ந்து மறைந்த ஐயா ஜீவானந்தம் அவர்களின் சிலையை குப்பையில் வீசியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் நாட்டிற்கு உழைத்த மாபெரும் தலைவருக்கு தவெக அரசு காட்டும் நன்றியா? செலுத்தும் மரியாதையா?
நாட்டின் போற்றுதற்குரிய தலைவர் பெருமக்களில் ஒருவரான ஐயா ஜீவானந்தம் அவர்களின் 119வது பிறந்த நாள் வருகின்ற 21.08.2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சிலையைக் குப்பையில் வீசியவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, ஐயாவின் புதிய சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, தொழிற்சங்கப் பேரவையின் பொறுப்பாளர் அன்புத்தம்பி சாரல்மாரி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சுப.மெய்யப்பன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சுப.மெய்யப்பன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டம், வைரவல்லியைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி செந்தமிழ்செல்வன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி செந்தமிழ்செல்வன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி செந்தமிழ்செல்வன் அவர்களுக்கு என்து கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ்! அந்த உயிர்மொழியினை அன்பைப் போதிக்க வில்லையெனக் கூறி, அமைச்சர் மரியவில்சன் அவமதிப்பு செய்வதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக
மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்!
நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுக்கட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே!
உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும்,
பாரடா உன் மானுடப் பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும்,
புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும்,
"உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?
காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்! என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?
தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே!
எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்;
தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது.
பெரும்பாவலர் பாட்டன் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.
'வாடியப்பயிரை கண்டு வாடிய'
வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ்!
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.
அதே அவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.
கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு?
இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.
*நீங்கள் பிறந்த மதம் கிறித்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.
அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற
அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறித்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுச்சேரி மாநிலம், திருபுவனை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி க.இரஞ்சித் அவர்களின் தாயார் அம்மா க.சிவஜோதி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா க.சிவஜோதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ்! அந்த உயிர்மொழியினை அன்பைப் போதிக்க வில்லையெனக் கூறி, அமைச்சர் மரியவில்சன் அவமதிப்பு செய்வதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களைச் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக
மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்!
நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுகட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே!
உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும்,
பாராடா உன் மானுட பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும்,
புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும்,
"உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?
காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்! என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?
தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே!
எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்;
தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது.
பெரும்பாவலர் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.
'வாடியப்பயிரை கண்டு வாடிய'
வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ்!
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.
அதே அவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.
கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு?
இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.
*நீங்கள் பிறந்த மதம் கிறித்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.
அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற
அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறித்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடக்கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் வரவேற்புக்குரியது!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
மொழியை ஏற்றிருக்கிற நிலம்தான் தேசமாகவும், மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம்தான் தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் எல்லாம் மொழியிலிருந்துதான் பிறக்கிறது. அதனால்தான், மொழியைத் தாயென்று போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தப்பட வேண்டியது தமிழர் நிலத்தை ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில், தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய முன்வர வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும்.
வேறுபட்ட மொழி, பண்பாடு, வாழ்வியல் கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒரே நாட்டுக்குள் வாழ்வதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டின் பன்மைத்துவம் போற்றப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட அதிக மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்நாட்டில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு, உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு
ஏற்றதாகும். மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே இராணுவத்தளபதி, ஒரே உணவுச்சந்தை என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை வலியத் திணிப்பதும், தேசிய இனங்களின் மொழியைப் போற்றும் பாடலை பின்னுக்குத் தள்ளுவதுமானப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப்பாடலாகப் பாடப்பட வேண்டும் எனும் தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்களுக்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழிச்சோழன், ஆடி திருவாதிரை நாளில் பெற்றெடுத்த புவி ஆண்ட புலி மைந்தன் நம்முடைய பெரும்பாட்டன் பேரரசர் அரசேந்திரச் சோழன் பிறந்த ஆடி திருவாதிரை திருநாள் இன்று!
கடற்போரில் சிறந்து விளங்கிய கடற்புலி! வடநாடு வரை படையெடுத்து வங்காளத்தை ஆண்ட மகிபாலனை வென்று கங்கை கொண்டச் சோழன்!
இன்றைய இந்தியப் பெருநிலத்தில் சட்டீஸ்கர், ஒரிசா வரை இருந்த எண்ணற்ற தேசங்கள், மலேயா, சிங்கப்பூர் சுமத்ரா தீவுகள், கம்போடியா, இந்தோனேசியா என தென் கிழக்கு ஆசியா முழுவதும் சோழப் பேரரசை விரியச் செய்து, தெற்காசியப் பெருங்கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினை வென்றெடுத்து ஆளுகை செய்த செந்தமிழ்ச்செல்வன்!
நீர் மேலாண்மையை வெற்றிகரமாகக் கையாண்டு வேளாண்மையை செழிக்கச்செய்து பஞ்சம் தீர்த்து மக்கள் வறுமை போக்கிய அருந்தமிழ் அரசன்!
வறண்ட நிலப்பகுதியாக காட்சி தரும் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் மாபெரும் தலைநகரை உருவாக்கி அதற்கென ஏறக்குறைய இருபது மைல் நீளமுடைய, பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஏரியினைக் கட்டி பல்லுயிர் சூழல் காத்த உயிர்மநேயர் மாமன்னர் அரசேந்திரச் சோழன்!
இன்றளவும் நம் கண்கள் முழுக்க ஆச்சரிய கனவாக விரிந்து வானை முட்டி உயர்ந்து நின்று, தமிழர்களின் படைப்பாற்றலை உலகிற்குப் பறை சாற்றி ஆயிரமாயிரம் பிறை கண்ட கருங்கல் அதிசயத்தை, தமிழர் மெய்யியல் தேடலை விளக்கும் கலைப்பெட்டகமான பெருவுடையார் கோயிலை மிகச்சரியாக 1000 ஆண்டுகளுக்கு முன் கி.பி1025 ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் எழுப்பி காலத்தை வென்று நின்ற பெருமாவீரன்!
அலைகடல் மீது படைபல நடத்தி, கங்கையும், கலிங்கமும், கடாரமும், இலங்கையும் வென்று, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின் கீழ் கொண்டுவந்து, உலகின் நான்காவது பெரும் பேரரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரச்சோழனின் பிறந்தநாளில், போற்றி வணங்குவதில் பெருமிதமடைகிறோம்!
தமிழர்களின் வீரத்தையும், தீரத்தையும், அறத்தையும், அறிவையும், ஆற்றலையும் பார்போற்றப் பறைசாற்றி, தமிழினத்தைப் புகழின் உச்சியில் ஏற்றிய தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளில் வீரப்பாட்டனின் பெரும்புகழ்போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த, குவைத் வாழ் தமிழுணர்வாளரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், அறத்தமிழ் நெறியாளருமான ஐயா தமிழ்த்திரு. தமிழ்நாடன் (எ) மோகன்ராசு அவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த்தேசியம் ஆகியவற்றின் மீது அளவற்ற பற்றுடன் செயலாற்றிய ஐயா அவர்கள் ஆற்றிய அளப்பரிய தமிழ்த்தொண்டுகளை மிகுந்த நன்றியுடனும், பெருமிதத்துடனும் நினைவுகூர்கிறேன்.
பல தமிழ் இளைஞர்களுக்குத் தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்ததோடு, “பொங்கு தமிழ் மன்றம்” என்ற தமிழ் அமைப்பை நிறுவி, இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார், தமிழ்த்தேசிய ஆளுமை ஐயா நன்னன், தமிழ் கடலியல் ஆய்வாளர் ஐயா ஒடிசா பாலு, பாவலர் அறிவுமதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஆளுமைகளை குவைத்திற்கு அழைத்து, அவர்களின் சிந்தனைகளையும் தமிழ்த்தேசியக் கருத்துகளையும் குவைத் வாழ் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த திசைகாட்டியாகத் திகழ்ந்தவர் ஐயா தமிழ்நாடன் அவர்கள்.
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்து, கொள்கை உறுதியுடனும், இனப்பற்றுடனும் தமிழ்த் தேசியப் பாதையில் பயணித்த பெருமைக்குரிய ஐயாவின் மறைவு, குவைத் தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ்த்தேசிய உறவுகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஐயா தமிழ்நாடன் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குவைத் வாழ் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, அவர்களின் துயரில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
ஐயா தமிழ்த்திரு. தமிழ்நாடன் (எ) மோகன்ராசு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வரும் 5000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பழங்குடி மக்கள் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம பகுதியில் உள்ள நிலங்களில் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும்.
மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும் அவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலனாய் வாழ்ந்து வருகின்றனர். பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற அப்பெருங்குடி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் சார்ந்தே இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் ஒருபோதும் இயற்கையை அழிப்பதாகவோ, சிதைப்பதாகவோ இருந்ததில்லை. அந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மலைவாழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் தீர்ப்பானது இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எவ்வகையிலும் பாதுகாப்பதாய் அமையாது.
உண்மையில் அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகள் வணிக நோக்குடன் அமைக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கம்பிவடம் பதித்தல், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும் அவற்றை நம்பி வாழும் வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது, தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மென்மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொரு நாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதோடு, மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் அன்புத்தம்பிகள் வே.ரெனிஸ், வே.மனோஜ் லியோ ஆகியோரின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அ.வேளாங்கண்ணிஅவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அ.வேளாங்கண்ணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர் அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா சரஸ்வதி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சரஸ்வதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக அண்ணன் நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
கரூரில் நடைபெற்ற பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் தெரிவித்ததற்காக நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்தப் பத்திரிக்கையாளருமான அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் மீது வழக்குத் தொடுத்திருக்கும் தவெக அரசின் செயல் குடிமகனின் அடிப்படை சனநாயக உரிமையானக் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் கொடுஞ்செயலாகும். மாற்றுக்கருத்துத் தெரிவிப்போர் மீது வழக்குத் தொடுத்து அச்சுறுத்துவதும், எல்லாவற்றிற்கும் எடுத்த எடுப்பிலேயே கைதுநடவடிக்கையைப் பாய்ச்சுவதுமானப் போக்கு கண்டனத்திற்குரியது.
கரூர் கோர விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒன்றியப் புலனாய்வு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் காவல்துறையினர் மக்களைக் கொன்றுகுவித்தனர் என மனம்போன போக்கில் வாய்க்கு வந்ததைத் துளியும் பொறுப்புணர்வின்றிப் பேசும்போது வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசு, ‘எங்கள் தேசம்’ வலையொளியின் நேர்காணலில் அண்ணன் கோபால் அவ்விபத்து குறித்த தனது கேள்விகளையும், ஐயங்களையும் முன்வைத்ததற்கே வழக்குத் தொடுப்பது வெளிப்படையான அச்சுறுத்தலின்றி, வேறில்லை. இதுவெல்லாம் பாசிச வெறியாட்டத்தின் தொடக்க நிலையாகும். இதனைக் கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆகவே, அண்ணன் நக்கீரன் கோபால் மீது தேவையற்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், கருத்துரிமைக்கு எதிரான கொடுங்கோல்போக்கைக் கைவிட வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி மருவத்தூர் சி.கேசவன் அவர்களின் தாயார்
அம்மா சி.இளஞ்சியம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி கேசவன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இளஞ்சியம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு சகோதரர் பி.ஆர். சுந்தரைக் கைதுசெய்வதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் சகோதரர் பி.ஆர்.சுந்தர் அவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்து, கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கையாகும். தனிநபர் பகை தீர்க்க, மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடாகும்
அரசையோ, அரசியல் இயக்கத்தையோ விமர்சித்துப் பேசுவதற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை என்பது மிக மிக அடிப்படையான சனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையையே முற்றாக மறுக்கும் வகையில், அதிகாரத்தைக் கொண்டு வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான அதிகார முறைகேட்டினை கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆகவே, சகோதரர் பி.ஆர். சுந்தர் மீது உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு சகோதரர் பி.ஆர். சுந்தரைக் கைதுசெய்வதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் சகோதரர் பி.ஆர்.சுந்தர் அவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்து, கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கையாகும். தனிநபர் பகை தீர்க்க, மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடாகும்
அரசையோ, அரசியல் இயக்கத்தையோ விமர்சித்துப் பேசுவதற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை என்பது மிக மிக அடிப்படையான சனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையையே முற்றாக மறுக்கும் வகையில், அதிகாரத்தைக் கொண்டு வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான அதிகார முறைகேட்டினை கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆகவே, சகோதரர் பி.ஆர். சுந்தர் மீது உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
காவிரியில் நமக்கு தர வேண்டியது உபரி நீர் அல்ல; உரிமை நீர்! உரிய நீர்! என்பதை வலியுறுத்தியும்,
மேகதாட்டுவில் அணைக்கட்டியே தீர்வோம் என்ற கர்நாடக அரசினுடைய முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டம் நடக்கவிருக்கிறது.
நாள் 07-08-2026 வெள்ளிக்கிழமை நேரம் சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு
இடம்: சென்னை - எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில்
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
வணக்கம்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது. தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது.
முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு. இத்தோடு, உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. இவ்வாறாக, கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது. தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!
தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவைக் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு. மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.
சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும். பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப் பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது, தங்க மோதிரம் மூலம் நாடச் செய்வதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம்.
மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத் தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு, அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தங்கு தடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால், நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது.
மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
@CMOTamilnadu @TVKVijayHQ
காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல.
அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் மாண்புமிகு நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?
என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும்.
மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.
சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பகவதியம்மாள் அவர்களின் தாயார் அம்மா இசக்கித்தாய் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இசக்கித்தாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் குணாளன் நாடார் அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி புகழ்வணக்க உரையாற்றினேன்.
youtu.be/YlZeaPK84Go
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தாயக விடுதலைக்கு தன்னுயிர் ஈந்த மாவீரன்..!
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக மானத்தமிழ்ப் படைக்கு மறக்கலையை பயிற்றுவித்த பேராசான்..!
திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்வையே பிறந்த பொன்னாட்டிற்கு தந்த பெருவீரன்..!
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினே முன்னோன்..!
தீரன் சின்னமலையின் வீரப்படைத்தளபதி..
'கட்டுத்தடிக்காரர்' குணாளன் நாடார் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர் வணக்கம் செலுத்தினேன்.
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மானமும், வீரமும் உயிரென வாழ்ந்து, தாய் மண் காக்க தன்னுயிர் ஈந்த தன்மானத்தமிழன்..!
சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என வீரக்கலைகள் யாவிலும் வெற்றி வாகை சூடிய தீரன்..!
மதம் கடந்து, சாதி கடந்து தாயக விடுதலைக்கு தமிழர் ஓர்மை படை கட்டிய தமிழ்த்தேசியப் பேரொளி..!
பவானி, சென்னிமலை, அரச்சலூர் என்று ஆங்கிலேயே பெரும்படையை
மூன்று முறை தோற்கடித்து வெருண்டோட செய்த மாவீரன்..!
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் எரிமலையாய் வெடித்தெழுந்த விடுதலைப்போராளி..!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன்
தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் - மகளிர் பாசறைச் செயலாளர் அன்புத்தங்கை அனிதா அவர்களின் மாமனார் மதிப்பிற்குரிய ஐயா மு.தயாளன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மாமனாரை இழந்து வாடும் தங்கை அனிதா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மு.தயாளன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருப்பூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பிரேம் அவர்களின் தந்தையும், மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை அபிநயா அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா நா.குருசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,தங்கைக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நா.குருசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் வல்வில் ஓரி அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி புகழ்வணக்க உரையாற்றினேன்.
youtu.be/Ljhi1j_PvEY
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கொல்லிமலையையும் அதைச் சுற்றி அமைந்த வளப்பூர், வாழவந்தி, திண்ணனூர், சேலூர், அரியூர், குண்டூர், தேவானூர், குண்டுனி, ஆலந்தூர், திருப்புலி, எடப்புலி, சித்தூர், பைல், பெரக்கரை உள்ளிட்ட 14 மலைநாடுகளை அரசாண்ட மாவீரன்...!
புறநானூறு, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட
சங்கத்தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழும் பெருவீரன்..!
இல்லை என்று வந்த புலவர்களுக்கும், பாணர்களுக்கும், இசைவாணர்களுக்கும்
அள்ளிக்கொடுத்து தமிழ் மண்ணில் நிலைத்த வள்ளல்..!
விற்போரில் சிறந்து விளங்கிய
வீரத்தமிழ்மகன் வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கொல்லிமலையையும் அதைச் சுற்றி அமைந்த வளப்பூர், வாழவந்தி, திண்ணனூர், சேலூர், அரியூர், குண்டூர், தேவானூர், குண்டுனி, ஆலந்தூர், திருப்புலி, எடப்புலி, சித்தூர், பைல், பெரக்கரை உள்ளிட்ட 14 மலைநாடுகளை அரசாண்ட மாவீரன்...!
புறநானூறு, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட
சங்கத்தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழும் பெருவீரன்..!
இல்லை என்று வந்த புலவர்களுக்கும், பாணர்களுக்கும், இசைவாணர்களுக்கும்
அள்ளிக்கொடுத்து தமிழ் மண்ணில் நிலைத்த வள்ளல்..!
விற்போரில் சிறந்து விளங்கிய
வீரத்தமிழ்மகன் வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தாயக விடுதலைக்கு தன்னுயிர் ஈந்த மாவீரன்..!
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக மானத்தமிழ்ப் படைக்கு மறக்கலையை பயிற்றுவித்த பேராசான்..!
திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்வையே பிறந்த பொன்னாட்டிற்கு தந்த பெருவீரன்..!
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினே முன்னோன்..!
தீரன் சின்னமலையின் வீரப்படைத்தளபதி..
'கட்டுத்தடிக்காரர்' குணாளன் நாடார் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மானமும், வீரமும் உயிரென வாழ்ந்து, தாய் மண் காக்க தன்னுயிர் ஈந்த தன்மானத்தமிழன்..!
சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என வீரக்கலைகள் யாவிலும் வெற்றி வாகை சூடிய தீரன்..!
மதம் கடந்து, சாதி கடந்து தாயக விடுதலைக்கு தமிழர் ஓர்மை படை கட்டிய தமிழ்த்தேசியப் பேரொளி..!
பவானி, சென்னிமலை, அரச்சலூர் என்று ஆங்கிலேயே பெரும்படையை
மூன்று முறை தோற்கடித்து வெருண்டோட செய்த மாவீரன்..!
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் எரிமலையாய் வெடித்தெழுந்த விடுதலைப்போராளி..!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன்
தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
மாறுவோம்!மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சிகர அரசியலை நோக்கி
நாம் தமிழர் கட்சியில் புதிய உறவுகள் இணைந்த விழா
பல்லாவரம் | 02-08-2026
youtu.be/e9JxTLNUpZA -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴தற்போது நேரலையில்...
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சிகர அரசியலை நோக்கி
நாம் தமிழர்'கட்சியில் புதிய உறவுகள் இணையும் விழா
பல்லாவரம் | 02-08-2026
x.com/i/broadcasts/1rxmqqMZAqVxy -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் நடப்பு மாதம் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவெக அரசு 200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது. தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 அலகிற்கு மேல் அதிகமானதால், 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர் அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மின்கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளும், தாமதமான மின்கணக்கீடும்தான் தற்போதைய தாறுமாறான கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணமாகும்.
தவெக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 அலகுகள் இலவசம் என்றும், அதுவும் 500 அலகுகள்வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது போதாதென்று தற்போது, மின்கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தைவிடப் பன்மடங்கு மின்கட்டணம் உயரவும் காரணமாகியுள்ளது பெருங்கொடுமையாகும். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்துவதும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்துவதும் மட்டுமே இதுபோன்ற குளறுபடிகள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் பயன்படுத்தும் அளவிற்கான உண்மையான மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பன்மடங்கு தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக, கர்நாடகத்திற்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதா? போராடிப் பெற்ற உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம்!
@CMOTamilnadu @TVKVijayHQ
காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இப்போக்கு பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயலாகும். கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை. காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனத் தன்முனைப்பின் உச்சமாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கானத் தார்மீக உரிமையை மறுத்து வருகிறது என்பதே மறுக்கவியலா பேருண்மை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒருநாளும் ஏற்றதில்லை. முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது, அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து, தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும், அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து, அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு. உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
கபினி, ஏமாவதி, ஏரங்கி என விதிகளை மீறி அணைகளைக் கட்டிய கர்நாடகா, அதேபோல தற்போது மேகதாதுவிலும் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழர்களுக்கும், காவிரிக்குமுள்ள வரலாற்றுவழிப்பட்ட உயிர்த்தொடர்பு முற்றாக அறுந்துபோகும்; காவிரிப்படுகைப் பாலைவனமாக மாறும். கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்? காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா? இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிடம் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது? உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா? உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2012ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடகத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தப் பயனும், தீர்வும் கிடைக்கப்பெறாது திரும்பி வந்ததெல்லாம் முதல்வர் விஜய்க்குத் தெரியாதா? ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுபோல, முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்து, விஜய்யின் அரசியல் பிம்பத்தை நிலைநாட்டுவதைத் தாண்டி, இச்சந்திப்பில் வேறென்ன பயன் விளையப் போகிறது? காவிரி நதிநீர் உரிமைப் பங்கீட்டுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், கருத்துக்களையும் பெற முயற்சி எடுக்காத தவெக அரசு, முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் துடியாய் துடிக்கிறது? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசைக் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் வைத்துக் கொண்டு, அங்கு போய் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் ஊடகச்செய்தியைத் தாண்டி, உருப்படியாக எந்தப் பயனையும் இது தரப்போவதில்லை.
கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால், சூன் 12ஆம் தேதி தண்ணீருக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி காவிரிப்படுகையில் மொத்தமாகப் பொய்த்துப் போனது. அடுத்தப் போகமான, சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதில் எவ்வித உறுதிப்பாடுமில்லை. காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும்கூட, அதனை ஏற்க மறுத்து, மேல்முறையீட்டுக்குச் செல்கிறது கர்நாடக அரசு. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்கப் போகிறார்? எதற்கு இந்த வறட்டுப்பிடிவாதம்? ஏற்கனவே, பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாது ஏமாற்றி, விவசாயிகளின் வயிற்றிலடித்த தவெக அரசு, இப்போது காவிரி நதிநீர்ச்சிக்கலையும் மிகுந்த மெத்தனப்போக்கோடும், அலட்சியப்போக்கோடும் கையாள்வது ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதற்கு நடுவர் மன்றம் கோரி, புதிய சிக்கலை இழுத்துவிடத் துணிந்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகா செல்வது வரலாற்றுப் பெருந்தவறாகும். இப்போது சூழல் சரியில்லாததால், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாமென்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார். எப்போதும் கர்நாடகாவுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையே செய்ய வேண்டாமென்று நாங்கள் கூறுகிறோம். தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.
ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு தாரைவார்த்துட்டு, அதில் 50% மீள கிடைக்கும் என்ற தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தவெக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை முன்வைக்கக்கூட தவறியுள்ளது தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இந்திய ஒன்றிய அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது. அதனை எதிர்த்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில், நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற, கடந்த 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவினால், தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டது. தவெக அரசின் அலட்சியத்தால் 151 மருத்துவ இடங்கள் பறிபோவதை கடுமையாக கண்டித்து கடந்த 03.06.2026 அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், இந்திய ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்கினை திறம்பட தவெக அரசு நடத்தாதன் விளைவே தற்போது மீண்டும் தனது தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய முதன்மைக்காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவக் கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் சாதித்தது. அதனை தனது வாதத்தில் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை முழுமையாக மீண்டும் திருப்பித்தர வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க வேண்டும். அதனை விடுத்து, ஒருவேளை இரண்டாம் சுற்று கலந்தாய்வும் முடிந்து, நீட் மதிப்பெண் வரம்பினைக் குறைக்க நேரிட்டால், அப்போது 50% இடங்களை அதாவது 151 இல் பாதி இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏதோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுபோல அமைச்சர் அருண்ராஜ் கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்கும் முறையா?
உண்மையில் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 இடங்கள் பறிபோயுள்ளது. அதில் பாதி, அதாவது 151 இடங்களில் நிரம்பியதுபோக, மீதமுள்ள இடங்களில் பாதி இடங்கள், அதுவும் நீட் மதிப்பெண்ணைக் குறைக்க நேரிட்டால் மட்டுமே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், NEET SS cut-off குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின் போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் இந்த 151 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, அவை உச்சநீதிமன்றம் 75 இடங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தாலும், அதுகூட மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு மிகமிக குறைவே. தமிழ்நாட்டின் உரிமையை இழந்துள்ளோம் என்பதைக் கூட அறியாமல், அதனை ஏதோ பெரிய சாதனை போல தவெக அரசு கொண்டாடுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு மருத்துவர்களுக்கான இழப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, நம்முடைய அரசு மருத்துவர்களின் உயர் மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை முறையான அனுமதி பெறாமல் தனியார் நிறுவனம் அமைத்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத மாற்று மின்பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்வின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே காலநிலை மாற்றம், பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் முறையா? அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்கக்கூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உரிமை கேட்டு போராடும் எம்ஆர்எஃப் (MRF) தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் மக்களுக்கான மாற்றமா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
பெரம்பலூரில் அமைந்துள்ள, எம்ஆர்எஃப் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 730 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு கடந்த 27 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் எம்ஆர்எஃப் நிறுவனம் அவர்களுக்கு உரிய ஊதியம் தர மறுத்து வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களைத் துன்புறுத்தி அடித்து, மிரட்டும் தவெக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச்சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களைக் கூவி கூவி அழைத்து ஒப்பந்தம் போடும் தமிழ்நாடு அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா? தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் பேச்சுவார்த்தை நடத்தி நம் தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் நலன் காக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் தலையாயக் கடமையாகும்.
அதை விடுத்து, நாங்கள் மக்களை காக்க வந்த காவலர்கள், மாற்றத்தைத் தர வந்த மனிதப் புனிதர்கள் என்று தற்பெருமை பேசும் தவெக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பெரம்பலூர் எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மாணவர் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அ.செர்லிமான் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி அ.செர்லிமான் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி அ.செர்லிமான் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப் பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள்
யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்!
@draramadoss -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி, மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி உ.இரா.மணிகண்டன் அவர்கள் மறைவெய்திய
துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி உ.இரா.மணிகண்டன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி உ.இரா.மணிகண்டன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும். ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.
கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி வேலாயுதம் போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? தம்பி வேலாயுதம் போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை தவெக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?
ஆகவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ மாநகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த அன்புத்தம்பி ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது.
அன்புத்தம்பி ராஜா முத்துப்பாண்டி மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தாய்மொழியில் பயின்று தம்முடைய கூர்த்த அறிவாற்றலால் இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர்..!
தம் அறிவியல் தொழில்நுட்பத் திறன் கொண்டு இந்தியப் பெரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய ஏவுகணை நாயகன்..!
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து, குடிசையில் வாழும் மக்களின் குரலாக ஒலித்த பெருந்தகை!
முதல்முறையாக இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் உயர்வுக்காகவும் சிந்தித்த ‘இந்தியாவின் முதல் குடிமகன்’!
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பாத சுமையைக் குறைத்த அறிவியல் மாமேதை..!
மாணவ கண்மணிகளை மகத்தான இலட்சியங்களைக் கனவு காண அறிவுறுத்திய மாபெரும் தலைவர்..!
அறிவியலாளர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், மனிதநேய மிக்க மாண்பாளர், எளிய மக்களிடம் எவ்வித பகட்டும் இன்றி இனிமையாகப் பழகும் உயர்ந்த பண்பாளர்..!
இந்திய விண்வெளி திட்டங்களின் விடிவெள்ளி, தமிழினத்தின் அறிவியல் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல்கலாம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள் என்றென்றும் தமிழ் மக்களால் போற்றப்படும்!
ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலமுடனும் மனமகிழ்வுடனும் வாழ்ந்து, இனிவரும் தலைமுறை பிள்ளைகளுக்கும் வழிகாட்டவும், தொடர்ந்து அரசியல் தெளிவூட்டவும் வேண்டுமென அன்புடன் கோருகிறேன்.
அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அயராது உழைத்திட்ட, சமூகநீதி போராட்டக் களத்தின் நாயகர் மருத்துவர் ஐயா இராமதாசு அவர்களுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காவிரி பாசன நீர் வராததால் தமிழ்நாட்டு விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது!
@CMOTamilnadu
@TVKVijayHQ
வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீர் இல்லாததால் இதுநாள் வரை திறக்கப்படாததால் வேதனையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிதான் பொய்த்துப்போனது, குறைந்தபட்சம் சம்பா சாகுபடிக்காவது காவிரி பாசன நீர் திறக்கப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், ஒரு சொட்டு நீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகாவை ஆளும் காங்கிரசு அரசு கை விரித்துவிட்டது. காங்கிரசு கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. கூட்டணிக் கட்சியான காங்கிரசு ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா?
அண்மையில் காவிரி நீர் இருப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் முடிந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் முதல் வாரம் கூடி ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தது கண்டு, வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆலோசனை நடத்துவதற்கு ஏன் ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டும்? பேச்சுவார்த்தையோ, சட்டப்போராட்டமோ விரைந்து நடவடிக்கை எடுத்து, காவிரிப்பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்தாகும். அதைவிடுத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிப்பது காவிரிப்பாசன விவசாயிகளைக் கண்ணீர் கடலில் தவிக்கவிடும் கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும்பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.
ஆகவே, கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் மாதம் வரை காத்திராமல், அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கி, விரைந்து காவிரிப்படுகை விவசாயிகளின் கண்ணீர் துடைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பரந்தூரிலிருந்து புதிய வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற, தவெக அரசு இதுவரை ஒன்றிய அரசிடம் கோராதது ஏன்?
@CMOTamilnadu @TVKVijayHQ
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை ஒன்றிய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் வானூர்தி நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வானூர்தி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய வானூர்தி நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை ஒன்றிய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய் அவர்களுக்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன?
ஆகவே, பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தூத்துக்குடி, தென்பாகத்தில் அருணாச்சலம் எனும் சிறைவாசி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இறப்பதற்கு முன்பு, மரண வாக்குமூலமாகத் தான் தாக்கப்பட்டது குறித்து அருணாச்சலம் கூறும் காணொளி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. சிறைக்குள் சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்துக் கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே, அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெகவின் ஆட்சியில் நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில், காவல்துறை மரணங்களின்போது ஆளும் வர்க்கத்துக்கு எதிராகச் சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவோ செய்யாதிருப்பது அதிகாரத்திமிரின்றி வேறென்ன? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா? தன்னுடைய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நிறுத்தி வைத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு, அநியாயமாய் போன ஒரு உயிருக்கான நீதியைப் பெற்றுத்தர மனமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்களும், ஒப்பாரியும், ஓலமும் உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லையா? திமுகவின் ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத் தராது, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதுதான் மிக இழிவான செயல் இல்லையா? ஆளும் தவெக அரசின் இத்தகையப் போக்கு ஒருபோதும் ஏற்புடையதில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக, கொலையாளியாக இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் குடிமைச்சமூகத்தில் நிகழக்கூடாத அவலம்!
ஆகவே, காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறைவாசி அருணாச்சலம் மரணத்தைக் கொலைவழக்காகப் பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
Not Just Investigating Irregularities; The Fraudulent NEET Itself Must Be Completely Abolished!
As a continuation of the massive youth protest held in Delhi against the irregularities and bungling in the National Eligibility cum Entrance Test (NEET), while protests are spreading across Northern states, the TVK government’s action of suppressing Tamil Nadu's students and youth using the police when they attempt to take to the streets in protest is deeply condemnable. The state government's tendency to suppress the spontaneous protest of the younger generation against NEET, while claiming to oppose the exam itself, is a betrayal of democracy.
Is it fair for Chief Minister Vijay—who brands himself a. "Democrat" (Jananayagan) on screen—to unleash state violence through the police on students and youth on the ground, committing a brutal murder of democracy? Is he a democrat only in movies? While Northern youth stand on the streets of Delhi fighting for their right to education, keeping Tamil Nadu youth lined up outside cinema halls is an unacceptable cruelty. On one hand, claiming to condemn the BJP government's suppression of the youth protest in Delhi, while on the other, attempting to crush the youth protests against NEET in Tamil Nadu—is this not double standards by the TVK government?
Calling the BJP an ideological enemy while secretly serving their interests—is this not indirect service by the TVK government? What a farce!
While protests in Northern states condemn the irregularities in NEET, it is only in Tamil Nadu that protests emphasize that the NEET system itself is a fraud. When a system brought in under the pretext of producing quality doctors—claiming to be better than the previous method—suffers from so many irregularities, confusions, and bunglings, what is the purpose of this examination system? What guarantee is there that irregularities did not occur in this same NEET system in the past?
Therefore, not only investigating the irregularities in NEET, but completely abolishing this fraudulent NEET system altogether is the best opportunity to safeguard the healthcare infrastructure of this country. In a country lacking uniform learning opportunities and facilities, conducting a standardized entrance examination is inherently unequal. Thus, Naam Tamilar Katchi strongly opposes the anti-equality NEET system.
When political parties and movements lead protests against NEET, they are often viewed merely as symbolic demonstrations. However, when students, youth, and the general public take to the streets to protest, it explodes into a democratic revolution, forcing the ruling class to submit and fulfilling their demands. I fully support and welcome the peaceful struggle of the youth gathering working toward this goal.
May the peaceful struggle of the youth in Tamil Nadu triumph!
May the NEET be completely abolished!
My wishes and love to all my brothers and sisters fighting with a militant spirit against injustice!
- Senthamizhan Seeman
Chief Coordinator | NTK
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும்.
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும்.
திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து!
வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறும்
இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்!
நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்!
அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும்.
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும்.
திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து!
வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறும்
இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்!
நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்!
அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி, விளையாட்டு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பிளாவியோ அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சண்ணி எப் மிராண்டா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சண்ணி எப் மிராண்டா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா?
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும்.
ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்!
சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி!
வாழ்வின் துன்பங்களை மறக்கடித்து, மக்களின் மனங்களை மகிழ்விக்கும் நடிப்புக்கலையின் பிதாமகன்,
உடலசைவில் நவரசங்களையும் வெளிப்படுத்தும் வல்லமை பெற்ற தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்,
நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நம்முடைய ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! அந்த மகத்தான மேதைக்குப் பெருமையோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை மேற்கு மாவட்ட குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஹெலின் அவர்களின் அக்கா சகோதரி சுஜிதா இன்பராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அக்காவை இழந்து வாடும் தம்பி ஹெலின் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி சுஜிதா இன்பராஜ் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்திரையின் முன்னணி நடிகர், அன்புத்தம்பி தனுஷ் அவர்கள் 'கேப்டன் மில்லர்' படத்திற்காக இந்திய அரசின்
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும், தான் தயாரித்து, இயக்கி, நடித்த 'ராயன்' படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ள செய்தி மிகுந்த மகிழ்வையும் பெருமிதத்தையும்
தருகிறது.
சிறந்த நடிகருக்கான விருதை மூன்று முறையும், சிறந்த திரைப்படங்களுக்கான விருதை தயாரிப்பாளராக இருமுறையும், இயக்குநராக ஒரு முறையும் என
தம்பி தனுஷ் ஆறாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்றிருப்பது அவருடைய கடின உழைப்பிற்கும், ஒப்படைப்பு மிக்க கலைப்பணிக்கும் கிடைத்துள்ள உயரிய அங்கீகாரமாகும்.
ஏற்ற பாத்திரம் எதுவாயினும் அதன் அசலாகவே வாழ்கின்ற
அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தும் தம்பி தனுஷ் அவர்கள், இயக்கம், தயாரிப்பு என திரைத்துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் தம்முடைய பன்முகத்திறனை வெளிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்புகள் பல தந்து, தமிழ்த்திரைக்கலையை உலக அரங்கில் உயர்த்தும் உன்னத சாதனைப் படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@dhanushkraja -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் அன்புத்தம்பி தமிழன் காளிதாஸ் அவர்களின் தாயார் அம்மா அம்சம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா அம்சம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அமரன் திரைப்படத்தின்
சிறந்த பின்னணி இசைக்காக
இந்திய அரசின் விருது வென்ற
ஆருயிர் இளவல்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துகள்!
தமிழ்த்திரைத்துறையில் தன்னுடைய மனதை மயக்கும் இன்னிசையால் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த அன்புத்தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார், மூன்றாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்று தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தமக்கு பிடித்தமானத் துறையில் தம்முடைய விடாமுயற்சியாலும், அயராத உழைப்பாலும் தனித்திறனை வளர்த்து, அளப்பரிய சாதனை புரிந்து வளரிளம் தமிழ்த்தலைமுறைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இசைத்துறையில் வழங்கப்பெறும்
உலக அளவிலான விருதுகளையும் வென்று வரலாறு படைக்க
என்னுடைய அன்புத்தம்பி
ஜி.வி.பிரகாஷ் குமார்
அவர்களுக்கு என்னுடைய
அன்பும், வாழ்த்துகளும்!
@gvprakash -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அன்பு இளவல் நா.ஜெயவேல் மற்றும் நா.சிலம்பரசன் ஆகியோரின் அன்புத் தந்தையார் பெருந்தமிழர் ஆ.நாகராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ஆ.நாகராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி ச.அழகுசுந்தரம் அவர்களின் தாயார் அம்மா ச.முத்துராக்கு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ச.முத்துராக்கு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி,மீமிசல் கோபால பட்டினத்தைச் சேர்ந்த செந்தமிழர் பாசறையின் சவுதி ரியாத் பகுதி பொறுப்பாளர் அன்புத்தம்பி கசாலி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அப்துல் முத்தலிப் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி கசாலி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அப்துல் முத்தலிப் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வெ.குணசேகரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, சாக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி கா.ஐயனார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த கா.ஐயனார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கா.ஐயனார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
I urge the Union Government to immediately hold talks with activist Sonam Wangchuk, who is on a hunger strike protesting against the NEET exam irregularities, to ensure his well-being, and take measures to fulfill the students' demands.
@narendramodi @AmitShah @dpradhanbjp @EduMinOfIndia
In the Jantar Mantar area of the capital city, Delhi, for more than the past 18 days, Sonam Wangchuk - an educational revolutionary and environmentalist from the land of Ladakh - has been putting himself through immense suffering without consuming food, standing on the brink of death to wage a righteous protest. This fasting protest he is undertaking, disregarding his own life to protect the educational rights of crores of poor, simple, and middle-class students who represent the future of this nation, is shaking the very soul of the entire Indian Union. However, the ruling class of this country remaining silent and indifferent, feigning ignorance even while witnessing a man's life hanging in the balance, is highly condemnable.
Naam Tamilar Katchi has been warning from the very beginning that this Nationwide examination system like 'NEET' propagated by the Union BJP Government is a massive daylight robbery that shatters the medical dreams of poor and simple students. The question paper leaks and irregularities that unfolded this year have proven our warnings absolutely true. This exam board has turned into a massive educational marketplace, ruining the future of lakhs of students who lost their sleep studying for months and years. This is not just an administrative failure; it is an act of violence inflicted upon the entire educational system of this country and its future generation.
It is against this injustice, and by insisting that the Union BJP Government's Education Minister Dharmendra Pradhan must immediately resign taking responsibility for the question paper leak, that Sonam Wangchuk has taken to the field, joining hands with the youths protesting in Delhi. Due to the hunger strike exceeding 18 days, his body weight has dropped by over 9 kg, resulting in muscle loss and a weakened heart, leaving him in a critical condition. It is a matter of great shame that this nation, which watched the movie '3 Idiots' inspired by his life and clapped in admiration saying "education is not about rote learning, it is about stimulating thought," is now changing TV channels and watching silently when the real-life great man is fighting on the brink of death for that very same ideology.
It is also deeply regrettable that Chief Minister Vijay, who acted and succeeded in the Tamil adaptation of the same movie, remains silent on the tyranny of the BJP government and has failed to raise his voice for Sonam Wangchuk.
Without delaying any further, the Union Government must immediately hold talks with Sonam Wangchuk and the student representatives protesting at Jantar Mantar. On behalf of the Naam Tamilar Katchi, I urge the Union Government to completely scrap dominant exam systems like NEET and take strict legal action against those responsible for the question paper leak and the Ministry of Education that oversees it.
Education is not a commercial commodity; it is the livelihood right of ordinary people! While appealing to him to end his hunger strike, Naam Tamilar Katchi extends its absolute support to the righteous struggle of Sonam Wangchuk, who is striving to protect the future of our children.
- Senthamizhan Seeman
Chief Coordinator | NTK
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
@narendramodi @AmitShah @dpradhanbjp @EduMinOfIndia
தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லடாக் மண்ணின் கல்விப் புரட்சியாளரும், சூழலியல் அறிஞருமான மதிப்புக்குரிய சோனம் வாங்சுக் அவர்கள். ஒரு நாட்டின் எதிர்காலமாகத் திகழக்கூடிய கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பதற்காக, தன்னுயிரைத் துச்சமென மதித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த உண்ணாநிலை அறப்போர், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ எவ்வித சலனமும் இன்றி, ஒரு மனிதனின் உயிர் போகும் நிலையைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒன்றிய பாசக அரசு கொண்டு வந்த இந்த 'நீட்' (NEET) போன்ற ஒற்றைச் சாளரத் தேர்வு முறையானது, தகுதி, திறமை என்ற பெயரால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ஒரு பெரும் பகற்கொள்ளை என்பதை நாம் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறோம். இந்த ஆண்டு அரங்கேறிய வினாத்தாள் வெளியீடுகளும், முறைகேடுகளும் நமது எச்சரிக்கையை முற்றிலும் உண்மையாக்கியுள்ளன. மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் தூக்கத்தைத் தொலைத்து, படித்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு மாபெரும் கல்விச் சந்தையாக இந்தத் தேர்வு வாரியம் மாறியிருக்கிறது. இது வெறும் நிர்வாகத் தோல்வி அல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் நடத்தப்பட்ட ஒரு வன்முறை.
இந்த அநீதிக்கு எதிராகவும், வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய பாசக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார். 18 நாட்களைக் கடந்த உண்ணாநிலையின் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோவுக்கும் மேல் குறைந்து, தசை இழப்பு ஏற்பட்டு, இதயம் பலவீனமடைந்து கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருடைய வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட '3 Idiots' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, "கல்வி என்பது மனப்பாடம் செய்வதல்ல, அது சிந்தனையைத் தூண்டுவது" என்று கைதட்டி இரசித்த இந்த நாடு, உண்மை வாழ்க்கையில் அதே சிந்தனைக்காக ஒரு மாமனிதன் சாவின் விளிம்பில் போராடும்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது பெரும் அவமானம். அதே படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வெற்றிகண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள் பாசக அரசின் கொடுங்கோன்மைக் குறித்து அமைதி காப்பதும், சோனம் வாங்சுக் குறித்து குரல் எழுப்பாததும் பெரும் வருத்தமளிக்கிறது.
ஒன்றிய அரசு இனியும் காலங்கடத்தாமல், ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீட் போன்ற ஆதிக்கத் தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
கல்வி என்பது வர்த்தகப் பண்டமல்ல அது எளிய மக்களின் வாழ்வாதார உரிமை! உண்ணாநிலை போராட்ட முறையை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையோடு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கப் பாடுபடும் சோனம் வாங்சுக் அவர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
@narendramodi @AmitShah @dpradhanbjp @EduMinOfIndia
தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லடாக் மண்ணின் கல்விப் புரட்சியாளரும், சூழலியல் அறிஞருமான மதிப்புக்குரிய சோனம் வாங்சுக் அவர்கள். ஒரு நாட்டின் எதிர்காலமாகத் திகழக்கூடிய கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பதற்காக, தன்னுயிரைத் துச்சமென மதித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த உண்ணாநிலை அறப்போர், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ எவ்வித சலனமும் இன்றி, ஒரு மனிதனின் உயிர் போகும் நிலையைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒன்றிய பாசக அரசு கொண்டு வந்த இந்த 'நீட்' (NEET) போன்ற ஒற்றைச் சாளரத் தேர்வு முறையானது, தகுதி, திறமை என்ற பெயரால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ஒரு பெரும் பகற்கொள்ளை என்பதை நாம் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறோம். இந்த ஆண்டு அரங்கேறிய வினாத்தாள் வெளியீடுகளும், முறைகேடுகளும் நமது எச்சரிக்கையை முற்றிலும் உண்மையாக்கியுள்ளன. மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் தூக்கத்தைத் தொலைத்து, படித்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு மாபெரும் கல்விச் சந்தையாக இந்தத் தேர்வு வாரியம் மாறியிருக்கிறது. இது வெறும் நிர்வாகத் தோல்வி அல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் நடத்தப்பட்ட ஒரு வன்முறை.
இந்த அநீதிக்கு எதிராகவும், வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய பாசக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார். 18 நாட்களைக் கடந்த உண்ணாநிலையின் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோவுக்கும் மேல் குறைந்து, தசை இழப்பு ஏற்பட்டு, இதயம் பலவீனமடைந்து கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருடைய வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட '3 Idiots' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, "கல்வி என்பது மனப்பாடம் செய்வதல்ல, அது சிந்தனையைத் தூண்டுவது" என்று கைதட்டி இரசித்த இந்த நாடு, உண்மை வாழ்க்கையில் அதே சிந்தனைக்காக ஒரு மாமனிதன் சாவின் விளிம்பில் போராடும்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது பெரும் அவமானம். அதே படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வெற்றிகண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள் பாசக அரசின் கொடுங்கோன்மைக் குறித்து அமைதி காப்பதும், சோனம் வாங்சுக் குறித்து குரல் எழுப்பாததும் பெரும் வருத்தமளிக்கிறது.
ஒன்றிய அரசு இனியும் காலங்கடத்தாமல், ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீட் போன்ற ஆதிக்கத் தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
கல்வி என்பது வர்த்தகப் பண்டமல்ல அது எளிய மக்களின் வாழ்வாதார உரிமை! உண்ணாநிலை போராட்ட முறையை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையோடு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கப் பாடுபடும் சோனம் வாங்சுக் அவர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாடறியப்பட்ட ஊடகவியலாளர் விஜயனை வழக்கு விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்துவதா? அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு, அலைக்கழிப்பு செய்து, மிக மோசமாக நடத்துவதா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி, நெறியாளுகை செய்து வரும் ஊடகவியலாளர் அன்பிற்கினிய தம்பி விஜயன் அவர்களை விசாரணை எனும் பெயரில் தவெக அரசின் காவல்துறை அழைக்கழிப்பு செய்வதும், அச்சுறுத்துவதுமான போக்கு அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவரை நேர்காணல் செய்தாரென்பதற்காகவே தம்பி விஜயனைக் காவல்நிலையத்துக்கு அழைத்து மிக மோசமாக நடத்துவதும், அவரது அலைபேசியைக் பிடுங்கி வைத்துக் கொள்வதும், கண்ணியக்குறைவாக நடத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
நாடறியப்பட்ட ஊடகவியலாளரான தம்பி விஜயன் மீது விசாரணை எனும் பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை மற்ற ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டல். 60 நாட்களிலேயே தவெக அரசின் நிர்வாகச்சீர்கேடு வெட்ட வெளிச்சமாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், அதனைப் பேசுபொருளாக மாற்றும் ஊடகவியலாளர்கள் யாவரும் குறிவைக்கப்படுவதும், அரசின் கம்பிவடத் தொலைக்காட்சியிலிருந்து காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதுமானப் போக்குகள் கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத்தாக்குதலாகும்.
திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்! பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற ஆளுமைமிக்கப் பெருந்தலைவர்களின் பெயர்களையெல்லாம் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும் இன்றி, காட்டாட்சியை ஏவிவிடுவது பாசிச வெறியாட்டமாகும். தவெக அரசின் இந்தக் கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளாவிடில், சனநாயக ஆற்றல்கள் மூலம் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
ஆகவே, தம்பி விஜயன் அவர்களுக்கு காவல்துறையின் மூலம் விசாரணை எனும் பெயரில் எவ்வித நெருக்கடியும் தராது, உடனடியாக அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகேயிருக்கும் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்திருக்கும் பதற்றச்சூழலும், மோதல்போக்கும் வேதனை அளிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதாய் வடிவமைக்கப்பட்டு இருப்பதாலேயே அச்சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சமாகும். தமிழ்ப்பேரினம் எண்ணற்ற சிக்கல்களையும், உரிமை இழப்புகளையும், வளச்சுரண்டலையும், அடையாள அழிப்பையும், வரலாற்றுத் திரிபையும் நாள்தோறும் எதிர்கொண்டு வரும் தற்காலச்சூழலிலும், ஒன்றுபட்டு ஓரினமாய் நிற்காது, சாதியின் பெயரால் பிளவுப்பட்டு நிற்பதும், தன்னினப்பகை கொண்டு வீழ்வதும் சமகாலத்தில் நிகழும் பேரவலமாகும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதிக்கானவர் இல்லை; ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமானவர்; அறிவாசான் அம்பேத்கர் அவர்கள் உலகம் பார்த்து வியந்த மாபெரும் கல்வியாளர்; சமூக விடுதலைக்காகப் பாடுபட்ட ஒப்பற்றப் புரட்சியாளர். அவரை ஒடுக்குமுறைக்கு எதிரானப் பொதுக்குறியீடாகவும், அறிவுலக மாமேதைகளில் உச்சம் தொட்டப் பேராசானாகவுமே பார்க்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமாகப் போராடவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமாகத்தான் பாடுபட்டார். இடைநிலைச்சமூகங்களுக்கென வகுப்புவாரிப்பிரதிநிதித்துவப் பங்கீட்டில் இருக்கும், ‘இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர்’ எனும் வகைப்பாட்டை உருவாக்கித் தந்தது அம்பேத்கர்தான். சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கென ஆணையம் அமைக்க வில்லை என்பதைப் பதவி விலகலுக்கானக் காரணங்களில் ஒன்றாகக் குறிப்பட்டவரும் அம்பேத்கர்தான். வெள்ளைய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகங்களைக் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் அம்பேத்கரும் முதன்மையானவர். இதுமட்டுமல்லாது, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம்தான் வேலை எனச் சட்டம் கொண்டு வந்தவரும், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை எனச் சட்டமியற்றியவரும் அம்பேத்கர்தான். அவர் ஆதிக்குடிகளுக்காக மட்டும் போராடவில்லை; பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், விளிம்புநிலை மக்கள், பெண்கள் என சமூகத்தின் அத்தனைத் தரப்பினரின் நலன்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுமைக்கும் பாடுபட்டப் பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் ஆவார். எந்த மக்களுக்காக அவர் பாடுபட்டாரோ, அந்த மக்களில் ஒரு பகுதியினரே அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவருக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு இன்றைக்கு நிற்பதெல்லாம் வரலாற்றுத்துயரமாகும்.
2021ஆம் ஆண்டு ஓதியத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாது கிடப்பில் போடப்பட்டது வெட்கக்கேடானது. சமூக நீதியென்று வாய்கிழியப் பேசும் திமுகவின் ஆட்சியில் அம்பேத்கரின் சிலையைத் திறக்கக்கூட வழிசெய்யாது வாக்கரசியலுக்காக சமரசம் செய்துகொண்டது மோசடித்தனமாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கொள்கைத் தலைவரெனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெகவின் ஆட்சியிலும், அச்சிலையை முறையாகத் திறக்கவும், சமூகப் பதற்றத்தைத் தணிக்கவும் நடவடிக்கைகளை எடுக்காது, சிக்கலை மேலும் பெரிதாக்குவது கடும் கண்டனத்திற்குரியது. சாதியவாதத்தாலும், புரிதலின்மையாலும் எழுந்திருக்கும் இச்சிக்கலைக்கூட தீர்க்க இயலாது திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா? கேலிக்கூத்து!
ஆகவே, சேலம் மாவட்டம், ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறக்க வேண்டுமெனவும், தேவையற்ற சமூகப்பதற்றமும், மோதலும் ஏற்படுவதை முற்றாகத் தடுத்து, ஓர்மையும், நல்லிணக்கமும் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மாம்பலத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி சுரேஷ்குமார் வடிவேல் அவர்களின் மூத்த சகோதரர் வ.செந்தில்குமார் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்பிற்குரிய அண்ணனை இழந்து வாடும் தம்பி சுரேஷ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி வ.செந்தில்குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மதச்சார்பின்மைக்கு எதிரான, ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதா? ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காது தவெக அரசு அமைதி காப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை நாட்டின் அடையாளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
1882ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட 'ஆனந்தமடம்' புதினத்தின் மூலம் புகழ்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடல் நாட்டுப்பற்றை வலியுறுத்துவது எனக் கூறப்பட்டாலும், அப்பாடலில் இந்து மதத்தின் கடவுளர்களைப் பற்றிய வரிகள் இருப்பதால், எல்லா சமயத்தவரும் அதனை ஏற்க முடியாது என்பதைக் கருதியே, அப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்படாது தவிர்க்கப்பட்டது. அப்படியிருக்கையில், அதனை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கித் திணிப்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் கொடுஞ்செயலாகும்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, ‘ஜன கண மன’ எனும் பாடல் நாட்டுப்பண்ணாக இருக்கையில், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வலியத் திணித்துப் பாடக் கோருவது தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகும். ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் இத்தகைய எதேச்சதிகாரப்போக்கு நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட பதிவுசெய்யாது அமைதிகாப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ என்பதைக் கொள்கையாக அறிவித்துவிட்டு, மதச்சார்பின்மைக்கு ஒன்றிய அரசால் அச்சுறுத்தல் வரும்போது அதனை எதிர்க்காது முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.
ஆகவே, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, ‘வந்தே மாதரம்’ எனும் மதச்சார்புக் கொண்டப் பாடலை அரசு நிகழ்வுகளில் கட்டாயமாக்கும் முடிவைப் பின்வாங்க வேண்டுமெனவும், அதனைச் செய்யக்கோரி தவெக அரசு எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பொதுவுடைமைத்தத்துவத்தை ஏற்று, பாட்டாளி வர்க்கத்துக்காகப் போராடிய போராளி! அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்த மக்கள் தலைவர்! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்! பெருமதிப்பிற்குரிய ஐயா சித்தமல்லி எஸ்.ஜி. முருகையன் அவர்களின் மனைவி அம்மா நாகம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன். பெற்ற தாயை இழந்து வாடும் சகோதரர்கள் தமிழ்ச்செல்வன், ரமேஷ், லெனின், பூபேஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
மக்களுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த போராளியைத் தனது வாழ்க்கைத்துணையாக ஏற்ற அம்மா நாகம்மாள் அவர்களின் மறைவு ஈடுஇணையற்றது.
அம்மாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழினம் தன்னை மறந்து,
தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர்.
அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று நினைத்தனர்.
இத்தகைய இருண்டகாலத்தே இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார் நமது ஐயா 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் அவர்கள்.
தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சிறப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் பேசி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை.
திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார்.
திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்!
தனித்தமிழ் அறிஞர் நம்முடைய ஐயா மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும். எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது.
முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா? திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது? சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா? திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!
@CMOTamilnadu @TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின் கையைக் கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனிதப் பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா?
பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது?
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக்கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது. போதைப்பொருள் ஒழிப்பு நாளில் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே ஒழிந்துவிடாது முதல்வர் அவர்களே! டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்? சட்டம் ஒழுங்கை சீரழித்து, சமூகத்தின் அனைத்து குற்றச்செயலுக்கும் காரணமான மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும்.
ஆகவே, அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தவெக அரசின் காவல்துறை தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்பு பிள்ளைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன். கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராகச் சிறிய வயதிலும் சமூகப் பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதி, அரிமளம் நடுவண் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி வெ.முருகேசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, பாலூர் கிராமத்தைச் சார்ந்த, செந்தமிழர் பாசறை வளைகுடாவின், வணிகர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி சுல்தான் அவர்களின் தாயாரும், செந்தமிழர் பாசறை வளைகுடா துணைத் தலைவர் தங்கை ஆயிஷா சுல்தான் அவர்களின் மாமியாருமான அம்மா ஜம்ரூத் பீவி அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த அம்மாவை இழந்து வாடும் தம்பி சுல்தான் மற்றும் சகோதரி ஆயிசா சுல்தான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஜம்ரூத் பீவி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இயற்றமிழ் மூலம்
இசைத் தமிழ் தந்த
தமிழ்ப் பெருங்கவி!
சங்கத்தமிழ் சாறெடுத்து
தங்கத்திரை தட்டில் வைத்து
கவித்தமிழ் அமுதூட்டிய
ஆண் அன்னை!
செந்தமிழ் சொல்லெடுத்து
தேன்மொழி வார்த்த
தென்மொழிப் பாவலன்!
காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால்,
ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால்,
இறவா இலக்கியம் படைத்து
சிகரங்களைத் தொட்டு
கள்ளிக்காட்டு இதிகாசம் கண்டு,
கருவாச்சி காவியம் வடித்து,
மூன்றாம் உலகப்போர் தொடுத்து,
தண்ணீர் தேசம் நிறைத்து,
தமிழாற்றுப்படை கண்ட
எங்கள் கவியாற்றுப்படை!
கவி உலகின் தமிழ் அடையாளம்!
மகாகவிதையாய் வீசி மனங்களை வருடிய வடுகப்பட்டியின் தமிழ்த் தென்றல்!
வையம் உள்ளவரை ஐயா வைரமுத்துவின் வைரத் தமிழ் உலகில் உலவும்!
ஞாலத்து விருதுகளையெல்லாம் தம் ஞானத்துச் செறிவால் தமிழ் அன்னையின் காலடியில் சேர்ப்பித்த
ஈடு இணையற்ற என் மண்ணின் கவிஞன்!
முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
@Vairamuthu -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பூமணி (எ) பூ.மாணிக்கவாசகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
வெக்கை, அஞ்ஞாடி வரப்புகள், வாய்க்கால், நூறென் உள்ளிட்ட நாவல்களையும், வயிறுகள், ரீதி, நொறுங்கல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்தளித்து ஈரம் உறைந்த கரிசல் மண்ணின் வீரம் நிறைந்த மனிதர்களின் மகத்தான வாழ்வியலை தரிசிக்கத் தந்த ஆகச்சிறந்த தமிழ் இலக்கிய முன்னோடி ஐயா பூமணி அவர்களின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா பூமணி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இலக்கிய நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
தம் எழுத்தின் வல்லமையால் மனித மனங்களை உழுது மகத்தான சமூக மாற்றத்தை மண்ணில் விதைத்த போற்றுதற்குரிய முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஐயா பூமணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஜென்கின்ஸ் அவர்களின் தாயார் அம்மா லீலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி ஜென்கின்ஸ் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும்
எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லீலா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு விரைந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் மாவட்டம்,
மன்னார்குடி வட்டம், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி அரிகிருஷ்ணன் (எ) குவிரன் அவர்களின் தந்தை ஐயா நாடிமுத்து சுப்ரமணியம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து
மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி குவிரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நாடிமுத்து சுப்ரமணியம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம் இனிய குரலால்
பல்லாயிரம் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட பின்னணி பாடகி, இசையரசி அம்மா ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இசையமைக்கும் வல்லமையும் பெற்ற அம்மா ஜானகி அவர்கள்,
ஏறத்தாழ 17 மொழிகளில் பல்லாயிரம்
பாடல்கள் பாடி, சிறந்த பாடகிக்கான இந்திய அரசின் விருதை 4 முறையும், நந்தி விருதினை 10 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதை 33 முறையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.
தாமதமாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்த அம்மா ஜானகி அவர்களின் போர்க்குணம் போற்றத்தக்கது.
காற்றில் மிதந்து காதுகளில் நிறைந்து
காலத்தை வென்ற இசையரசியின் மறைவு, ஈடு செய்யவியலாத பேரிழப்பாகும்.
அம்மா ஜானகி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அவருடைய இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
இனிய குரலால் இதயங்களை வென்ற இசையரசி அம்மா ஜானகி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அசல் மனிதர்களின் வாழ்வியலை திரைமொழியில் மிகையில்லாது காட்சிப்படுத்தி, உயிரோட்டமானப் பாத்திரங்களைப் படைத்து, மாந்த உணர்வுகளை வலிமையாகக் கடத்தி, காலங்கடந்து நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி!
அப்பா பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்று, நடிப்பு, திரைமொழி எல்லாவற்றுக்குமானப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் தன்னிகரற்ற கலை ஆளுமை!
தனது திரைப்படங்களின் மூலம் அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தலைசிறந்த படைப்புகளின் மூலம் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச் செய்யும் பெருமைக்குரிய திரைக்கலைஞர்!
தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் பெருமித அடையாளங்களை ஏற்று, தாய் நிலத்தின் மீது பற்றோடும், தமிழ்த்தேசிய இன உணர்வோடும் திகழும் மண்ணின் மகன்!
தமிழ்த்திரையுலகின் பெருமிதத்திற்குரிய கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது ஆருயிர் இளவல் பாலா அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்
இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..!
விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துகோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முன்னணி ஒளிப்பதிவாளரும், தேசிய விருதுபெற்ற இயக்குநருமான தம்பி இரா.செழியன் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் தனது கலைப்பணிகள் மூலமாக மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்.
தமிழ்த்திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான என் ஆருயிர் இளவல் இரா.செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவரது மனைவி பிரேமா, உடன்பிறந்த சகோதரர்களான தம்பிகள் இளங்கோ, சரவணன் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மதிப்பிற்குரிய ஐயா பி.சி.ஸ்ரீராம் அவர்களின் பட்டறையில் பயின்று, கல்லூரி, தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி உள்ளிட்டத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, தனது தனித்திறன் ஆற்றலாலும், துறை சார்ந்த நிபுணத்துவத்தாலும் பெயர் பெற்ற தம்பி செழியன் அவர்கள், தம்பி பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திற்காக இலண்டனில் நடைபெற்ற சர்வதேசத் திருவிழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார். ‘டு லெட் (To Let)’ எனும் திரைப்படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றதன் மூலம் ஆகச்சிறந்த இயக்குநராகவும் மிளிர்ந்தார். தனது திரைப்படங்கள் குறித்தான அறிவைப் பகிரும்பொருட்டு, ‘உலக சினிமா’ எனும் பெயரில் நூலும் எழுதியவராவார். திரைத்துறை சார்ந்த ஆழமான அறிவையும், நுட்பமான கலைத்திறனையும் கொண்டிருந்த தம்பி செழியன் அவர்களின் இழப்பு தமிழ் கலையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு கொண்டிருந்தவர் தம்பி செழியன். என்னுடைய ‘தம்பி’ திரைப்படத்தின் ஆக்கத்துக்கும், வெற்றிக்கும் பெரும் உழைப்பைச் செலுத்தினார். தமிழ்த்தேசியம் குறித்தும், நாம் தமிழர் கட்சி குறித்தும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தம்பி செழியன், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைக்குப் பெரும் பங்காற்றியவராவார். எப்போதும் என்னோடு அன்பொழுகப் பழகும் என்னுடைய அன்புத்தம்பி செழியன் அவர்களை இனி எப்போதும் காணவே முடியாது என்பதை உள்ளம் ஏற்க மறுக்கிறது. அவரது மறைவுச்செய்தி என்னை முற்றாக நிலைகுலையச் செய்திருக்கிறது. எனது உடன்பிறந்தவனை இழந்துவிட்டு ஆற்ற முடியாத ரணத்தோடும், வலியோடும் தவிக்கிறேன். தம்பி செழியன் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் மூலமாகக் காலங்கடந்து மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்.
தமிழ்த்திரையுலகின் கலை ஆளுமை என்னுடைய தம்பி செழியன் அவர்களின் நல்லுடல் கலையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் இறுதி வணக்கம் செலுத்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் வைக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த கலைஞனான தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களின் திருவுடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அப்பாவின் பண்ணை வீட்டில் இன்று 09-07-2026 நடைபெற்ற 30ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை.
ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும்.
ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல் மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும்கூட முந்தைய அரசுகள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும்.
உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது.
ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன் உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும்.
கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே முடியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது?
கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், இன்றைக்கு முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்தநொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது, தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல.
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu @TVKVijayHQ @Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆதித்தமிழர் எழுச்சிநாள்
ஆனி 23 (07-07-2026)
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி..!
“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!
வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..!
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..!
அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
‘ஆதித்தமிழர் எழுச்சி நாளில்’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி,
மெலட்டூர் மாவட்ட பொறுப்பாளர் அன்புத்தம்பி
மு.மூவேந்தன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி மு.மூவேந்தன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி மு.மூவேந்தன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உசிலம்பட்டி தொகுதியைச் சார்ந்த
செந்தமிழர் பாசறை ஓமன் - இணையதளப் பாசறை செயலாளர் சிவராமன் அவர்களின் தந்தை
வீர. ஆண்டிச்சாமி அவர்கள் இன்று (05-07-26) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி சிவராமன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா வீர. ஆண்டிச்சாமி
அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அறிவாயுதம் ஏந்துவதே உறுதியான இறுதி தீர்வாகும் என்பதை உளமார நம்பியதோடு, அதனையே தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கற்பித்தவர். அதனை அடியொற்றியே, தங்கள் மீது பூட்டப்பட்ட சமூக விலங்கை உடைத்தெறிந்து, தான் பிறந்த சமூகம் மேன்மையுற வேண்டும், அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.
‘தமிழர்கள் நாம் ஒன்றாகாதவரை நமக்கென்று தனித்த அரசியல் வலிமையையோ, அதிகார வலிமையையோ ஒருபோதும் பெறமுடியாது’ என்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் ஓர்மை கோட்பாட்டையே, தாம் பயணித்த அரசியல் தளத்தில் நின்று முழங்கியவர். அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடறிந்த அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அதிகாரமிக்கப் பதவியும் வகிக்காத போதிலும், புரட்சிகர சிந்தனையுடன் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் ஆற்றிய சமூகப் பணிகள்தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.
அநீதி இழைக்கும் அதி ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய இடையூறாகவும் தடைக்கல்லாகவும் இருந்த காரணத்தினால்தான் அரசியல் போராளி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் உயிரைப் பறிக்கும் சதிச்செயல் நடந்தேறியது.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல
அக்கொடுஞ்செயல் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்றளவும் நீதி கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. அக்கொடூர நிகழ்வில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
வாழ்நாள் முழுவதும் குரலற்ற எளிய மக்களின் குரலாக, பாதுகாப்பு அரணாக திகழ்ந்த அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் இன்று நம்மோடு இல்லாதபோதிலும், அவர் கையளித்து சென்றுள்ள மக்கட் பணிகளை தடைபடாமல் தொடர்வதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
மறைந்த பகுஜன் ஜமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் பிறந்து ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காகப் போராடிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமூகப் போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் நலிவுற்றிருந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களை பொய் வழக்கில் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி, அவரது உடல்நலனை மேலும் குன்றச் செய்த பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டின் விளைவாகவே ஐயா ஸ்டான் சுவாமியின் மரணம் நிகழ்ந்தது, நடுக்கவாத நோயால் நீரருந்தக்கூட முடியாது அவதிப்பட்டு வந்தவருக்கு உறிஞ்சுக்குழாய் கொடுப்பதற்கு நீதிமன்றத்தில் காலநேரம் கேட்டு, பிறகு, அதனையும் தரமுடியாதென மறுத்தது பாஜக அரசு.
தேசியப் புலனாய்வு முகமைக் குற்றஞ்சாட்டிய 44 ஆவணங்களும் ஐயா ஸ்டான் சுவாமியின் கணினியில் அவருக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டவை என்பது ‘அர்செனல் கன்சல்டிங்’ எனும் அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டுபிடித்தின் மூலம் அவர் மீதான கைது நடவடிக்கை ஆளும் பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என்பது உறுதியானது. .ஐயா ஸ்டான் சுவாமியின் மரணமென்பது சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி பாஜக அரசு செய்த பச்சைப்படுகொலை. கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற சனநாயகம் காக்க தங்கள் இன்னுயிரை பறிகொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள் வரிசையில் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களும் இணைந்த நாள் இன்று.
வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் ஈகம் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும்!
ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கும்மிடிப்பூண்டி தொகுதி, கோங்கல்மேடைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அ.சத்யபிரகாஷ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி சத்யபிரகாஷ் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சத்யபிரகாஷ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மேற்கு பகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.ஜெகதீஷ் அவர்களின் தந்தை ஐயா ரா.முனிராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ரா.முனிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சேலம் அண்ணல் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான டேக்வாண்டா தற்காப்புக் கலை போட்டிகளில் ஈரோடு மாவட்டம் சார்பாக பங்கேற்ற மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள செய்தியறிந்து மகிழ்ந்தேன். இதில், நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலக ஊடகப்பிரிவைச் சேர்ந்த அன்புத்தம்பி சுரேஷ்குமார் வடிவேல் அவர்களின் அன்புமகன் மனு முகில் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
அன்புமகன் மனு முகில் அவர்கள் தனது தனித்திறனை வளர்த்துக்கொண்டு மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, உலக அளவில் சாதனைகள் படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பிரான்சு தேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இளம் வயதிலேயே தமிழ்த்தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டு, சமூகப்போராளியாக, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக களப்பணி புரிந்த என்னுடைய பேரன்புமிக்கத் தம்பி அழகேந்திரராசா சுஜித் அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்யவியலா பேரிழப்பாகும்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாய்த்தமிழ் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரினை பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu @drtkprabhu_TVK @CTR_Nirmalkumar @DAEIndia @moefcc @byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தங்கள் உடலையும், உயிரையும் பொருட்படுத்தாது, இரவு - பகல் பாராது, மக்கள் உயிர்காக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உலகம் முழுவதும் அரும்பாடாற்றும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவரும் மிகுந்த போற்றுதலுக்குரியவர்கள்; வணங்கத்தக்கவர்கள்!
உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை உலகம் போற்றி வருகின்றது.
மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
#doctorsday -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu @drtkprabhu_TVK @CTR_Nirmalkumar @moefcc @byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - குளச்சல் சட்டமன்றத் தொகுதி, நுள்ளிவிளை ஊராட்சி கண்டன்விளை பகுதியை சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி பெலிக்ஸ் அவர்களின் தந்தை ஐயா
பீட்டர் லூயிஸ் துரைராஜ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி பெலிக்ஸ் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பீட்டர் லூயிஸ் துரைராஜ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி சுஜின் அவர்களின் தந்தையார் ஐயா சுந்தரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி சுஜின் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சுந்தரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.ஜெகதீஷ் அவர்களின் தந்தை ஐயா இரா.முனிராஜ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெகதீஷ் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முனிராஜ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மதுரை கிழக்கு தொகுதி, எஸ்.மீனாட்சிபுரம், வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த
களப்போராளி அன்புத்தம்பி ஆனந்த் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி ஆனந்த் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஆனந்த் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆனி 13ஆம் நாள் 27-06-2026 அன்று சென்னை தி.நகரில் உள்ள பென்ஸ் பார்க் (Benzz Park)அரங்கத்தில் நடைபெற்ற சமூக ஊடக ஆளுமைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் இன்று (27-06-2026) மறைவெய்தியதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினேன்.
ஐயா பாக்யராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயா பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அம்மா பூர்ணிமா, தம்பி சாந்தனு, தங்கை சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும், திரைத்துரையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
என்னுடைய அப்பா பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, திரைமொழி பயின்று, ‘திரைக்கதை மன்னன்’ எனப் புகழாரம் சூட்டுமளவுக்கு திரைக்கதை வடிவமைப்பிலும், படைப்பு ஆக்கத்திலும் சிறந்துவிளங்கி, அத்துறையில் ஒரு பேராசிரியராகத் திகழ்ந்தவர் ஐயா பாக்யராஜ் அவர்கள். அவர் இயக்குநராக மக்கள் விரும்பும் தரமானப் படைப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, நடிப்பில் கதாநாயகனாகவும் வெற்றிவாகை சூடி, பலருக்கு கதையின் நாயகனாக நடிக்கலாம் எனும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்தவராவார். பல நடிகர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி, கலையுலகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்குத் திரையுலக வாழ்வுதந்தவராவார்.
சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்ன வீடு, தாவணிக் கனவுகள், தூறல் நின்னுப்போச்சு, சுந்தர காண்டம், ராசுக்குட்டி எனக் காலத்தால் அழியாது, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பற்பல படைப்புகளைத் தந்த பெருந்தகை ஐயா பாக்யராஜ் அவர்கள். சீரான திரைக்கதை, இயல்பான காட்சியமைப்புகள், உயிரோட்டமான வசனங்கள், மிகையில்லாத நடிப்பு எனும் இலக்கணத்தோடு மாறுபாட்ட படைப்புகளைத் தந்து, தமிழ்த்திரையுலகை வேறு ஒரு கோணத்திற்கு நகர்த்தி, கலையுலகுக்கு அவர் ஆற்றிய அரியப் பங்களிப்பினை எவ்வளவு போற்றினாலும் தகும். இத்தோடு, ஐயா எம்.ஜி.ஆர். அவர்களால் ‘கலையுலக வாரிசு’ என அறிவிக்கப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் ஐயா பாக்யராஜ் அவர்கள் மட்டும்தான். அவரது மறைவானது தமிழ்த்திரையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். நம்மைவிட்டு அவர் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயா பாக்யராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயா பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அம்மா பூர்ணிமா, தம்பி சாந்தனு, தங்கை சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும், திரைத்துரையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
என்னுடைய அப்பா பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, திரைமொழி பயின்று, ‘திரைக்கதை மன்னன்’ எனப் புகழாரம் சூட்டுமளவுக்கு திரைக்கதை வடிவமைப்பிலும், படைப்பு ஆக்கத்திலும் சிறந்துவிளங்கி, அத்துறையில் ஒரு பேராசிரியராகத் திகழ்ந்தவர் ஐயா பாக்யராஜ் அவர்கள். அவர் இயக்குநராக மக்கள் விரும்பும் தரமானப் படைப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, நடிப்பில் கதாநாயகனாகவும் வெற்றிவாகை சூடி, பலருக்கு கதையின் நாயகனாக நடிக்கலாம் எனும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்தவராவார். பல நடிகர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி, கலையுலகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்குத் திரையுலக வாழ்வுதந்தவராவார்.
சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்ன வீடு, தாவணிக் கனவுகள், தூறல் நின்னுப்போச்சு, சுந்தர காண்டம், ராசுக்குட்டி எனக் காலத்தால் அழியாது, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பற்பல படைப்புகளைத் தந்த பெருந்தகை ஐயா பாக்யராஜ் அவர்கள். சீரான திரைக்கதை, இயல்பான காட்சியமைப்புகள், உயிரோட்டமான வசனங்கள், மிகையில்லாத நடிப்பு எனும் இலக்கணத்தோடு மாறுபாட்ட படைப்புகளைத் தந்து, தமிழ்த்திரையுலகை வேறு ஒரு கோணத்திற்கு நகர்த்தி, கலையுலகுக்கு அவர் ஆற்றிய அரியப் பங்களிப்பினை எவ்வளவு போற்றினாலும் தகும். இத்தோடு, ஐயா எம்.ஜி.ஆர். அவர்களால் ‘கலையுலக வாரிசு’ என அறிவிக்கப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் ஐயா பாக்யராஜ் அவர்கள் மட்டும்தான். அவரது மறைவானது தமிழ்த்திரையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். நம்மைவிட்டு அவர் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயா பாக்யராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தாத்தா மயிலை பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று!
தமிழ்நாட்டின் வடக்கெல்லை காக்க அரசியல் அறப்போர் புரிந்த வீரர்..!
திருப்பதி கேட்டு, திருத்தணி மீட்டு தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்..!
முதன் முதலில் மாநில தன்னாட்சி முழக்கமிட்ட தனிப்பெருந்தலைவர்!
தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகு சுதந்திர அரசியல் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டென உரைத்து, தமிழ்த்தேசிய அரசியல் காக்க தமிழரசு கழகம் கண்ட தன்மானத்தமிழர்..!
தன்னிகரில்லா தமிழ்ப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை தம் எழுத்தாலும், சொல்லாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெலாம் கொண்டு சேர்த்ததோடு, ஆண்டுதோறும் 'சிலப்பதிகார விழா' எடுத்தும் பெருமை சேர்த்த பெருந்தகை..!
சிலப்பதிகாரம் குறித்து 13 நூல்கள், பாட்டன் பாரதி பற்றி 10 நூல்கள், தாத்தா வ.உ.சி பற்றி 3 நூல்கள் என இன்னும் பற்பல நூல்கள் இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி சேர்த்த இலக்கியப் பேரறிஞர்..!
வடக்கெல்லை காத்த வீரர்!
பெருந்தமிழர்!
நம்முடைய தாத்தா ம.பொ.சி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கொடுங்கோல் மன்னன் யசீத் ஆட்சியில் நிகழ்ந்த அடக்குமுறை அநீதிகளுக்கு எதிராக, அறத்தின் வழி நின்று, தீரத்துடன் போராடி, தன்னையும், தன் குடும்பத்தையும் கர்பாலா பாலைவன நிலத்திற்கு ஈகம் செய்த, இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரன் இமாம் உசேன் அவர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும், ஈகத்தையும் போற்றி, நினைவுகூரும் புனித 'மொகரம்' திருநாளில், என்னரும்
இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் நல்லருள் கிடைக்கப்பெறட்டும்!
ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக அஞ்சாது போராடும் உள உறுதி எல்லோரிடத்தும் எப்போதும் நிலைக்கட்டும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டைப்பகுதியில் இயங்கி வரும் ராஸ்-லஃபான் எரிகாற்று நிறுவனத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித், சஜித்குமார், சுவின் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட 12 இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.
இளம் வயதில் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்கச் சென்றவர்களை இழந்து நிற்கும் மூன்று குடும்பங்களுடைய எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்புத்தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின் நெகிழ்வோடு காலத்தைக் கடந்து நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒப்பற்ற ஒர் திரைக்காவியம்.
இன்றும் என் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற அந்த வலியை ஒரு சிறு சிதைவுமின்றி மிக நேர்த்தியான ஒரு படைப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அரிதினும் அரிதாக எப்போதாவது தான் இது போன்ற படைப்புகள் தமிழ்த்திரையுலகில் வெளிவருகிறது. அதில் மிக மிக குறிப்பிடத்தக்க ஒரு அரிய படைப்பாக இத்திரைப்படத்தை நான் பார்க்கிறேன்.
இப்படைப்பு மாபெரும் வெற்றியடைந்து, இதற்காக உழைத்த அனைவருக்கும் பெரும்புகழைச் சேர்க்க வேண்டுமென்று எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவிடம் துவா செய்கிறேன்.
படக்குழுவினருக்கு என் அன்பும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்.
youtube.com/watch?v=N-h1-7QzDv8
#habeebi
@meerafilmdr @Romeopictures_ @mynameisraahul
@gksbroscompany #nesamentertainment
@SamCSmusic @MMuthuswami
@esha_actor #malavikamanoj #directorkasthuriraja #vsmohamedameen @SureshChandraa
@AbdulNassarOffl @DoneChannel1
@promoworkstudio @Udaykumar_Mix
@edit_mathi @YugabhaarathiYb
@MashookRahman #karthiknetha #appunnisajan #anusreyarajan #dhanasreesudhakaran #ismathbanu #rekhakumanan #jayashreebinuraj #gangaThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ஜான் பிரிட்டோ அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அருள் தாஸ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அருள் தாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!
@CMOTamilnadu @TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.
கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.
காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்புத் தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின் நெகிழ்வோடு காலத்தைக் கடந்து நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒப்பற்ற ஒர் திரைக்காவியம்.
இப்படைப்பு மாபெரும் வெற்றியடைந்து, இதற்காக உழைத்த அனைவருக்கும் பெரும்புகழைச் சேர்க்க வேண்டுமென்று எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவிடம் துவா செய்கிறேன்.
படக்குழுவினருக்கு என் அன்பும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்.
www.youtube.com/watch?v=N-h1-7QzDv8
#habeebi @meerafilmdr -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளார் அன்புத்தம்பி கொணலை பல்தசார் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையான சுற்றுச்சூழல் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி கொணலை பல்தசார் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி கொணலை பல்தசார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கொணலை பல்தசார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மூத்த நிர்வாகி மற்றும் செந்தமிழர் பாசறை வளைகுடா வீரத்தமிழர் முன்னணி தலைவர் அன்புத்தம்பி சித்திக் அவர்களின் தாயார் அம்மா ஷாஜாத்தி பேகம் அவர்கள் இன்று (22-06-2026) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தாயாரை இழந்து வாடும் தம்பி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஷாஜாத்தி பேகம்
அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, செல்லம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளார் அன்புத்தம்பி இரா.கனி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையான உழவர் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி இரா.கனி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி இரா.கனி அவர்களுக்கு என்து கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காரைக்குடி தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர் அன்புத் தம்பி சுரேஷ் சத்தியநாதன் அவர்களின் தாயார் ச.சந்தன மேரி அவர்கள் இன்று (21-06-26) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தாயாரை இழந்து வாடும் தம்பி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ச.சந்தன மேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மண்டலம், கறம்பக்குடி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி கி.சரவணன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த கி.சரவணன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கி.சரவணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தான் பார்க்காத உலகத்தையும், தன்னை பார்க்காத உலகத்தையும் தம் குழந்தைகள் கண்டுவிட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சிய வேட்கையுடன் பெற்ற பிள்ளையை தம் தோளில் தூக்கி உயர்த்தி உலகை காட்டும் உன்னத வழிகாட்டிகள்..!
தம் குழந்தைகள் நிம்மதியாக நிமிர்ந்து நடக்க,
தான் படும் துயரங்கள் தம் குழந்தைகள் பட்டுவிடக் கூடாதென்று, கைகளில் காயங்களுடனும் கண்களில் சிரிப்புடனும்
தான் குனிந்து, வளைந்து உழைத்து
நம் கண் முன்னே நடமாடும் ஒப்பற்ற தெய்வங்கள்..!
கண்டிக்கும் நேரத்தில் காவலனாய்..
கற்பிக்கும் நேரத்தில் ஆசானாய்..
அரவணைக்கும் நேரத்தில் அன்னையாய்..
தவிக்கும் நேரத்தில் தோழனாய்.. ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையை கற்றுத்தரும் உலகின் முதல் நாயகர்கள்..!
'கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் அவரின் முகம் ..
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் அவரின் முகம் ..
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே ..!
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் ..
தந்தை அன்பின் பின்னே ..!'
என்ற என்னுயிர்த் தம்பி நா.முத்துக்குமாரின் உள்ளத்தை நெகிழச்செய்யும் பாடல் வரிகளுக்கு ஏற்ப
தம் குழந்தைகளின் வெற்றியையே தன்னுடைய வெற்றியாக கருதி
வாழும் நாள் வரை குழந்தைகளை உள்ளத்தில் சுமந்து, குடும்பத்தின் உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேயும் உன்னத அப்பாக்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த தந்தையர் நாள் நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ஜி.இராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஐயா இராஜன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், இளையவர் ரவி பச்சமுத்து அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
ஐயா ஜி.இராஜன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும், என் பேரன்பிற்குரிய அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய விருதான 'யுவ புரோஸ்கர்' விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
கலைத்துறையில் அளப்பரிய சாதனைகள் புரிந்துள்ள அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொல்லி, ஊழல், இலஞ்சம் என எவ்வித முறைகேடுகளும் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை..!
பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரையும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை.
அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை பேரப்பிள்ளைகளாகிய நாம் இன்றைய நாளில் ஏற்போம்.
பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக, மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ‘தூய அரசியலின்’ நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட தம்பி அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தம்பி ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா?
பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.
ஆகவே, தம்பி ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி தம்பிதுரை அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி தம்பிதுரை அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி தம்பிதுரை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை, காலத்தால் நிலைத்து நிற்கும் திரைப்படைப்புகளாகத் தந்து, இலட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட என் பேரன்பிற்குரிய அண்ணன், ஒளிப்பதிவாளர் கே.வி மணி அவர்களின் 80ஆவது அகவை நாளில் என்னுடைய நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் கே.வி.மணி அவர்கள் நல்ல உடல் நலமுடனும், உள மகிழ்வுடனும் வாழ்வாங்கு வாழ்ந்திட என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழினத்தினுடைய பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்களின் 140வது பிறந்தநாள் இன்று.
இந்த நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது, அதன் விடுதலைக்காக அரும்பாடாற்றிய விடுதலைப்போராளி. தொல்தமிழ் மருத்துவக்குடியில் பிறந்து, இசைக்கலையில் தனக்கிருந்த தனித்துவமிக்க பேராற்றலினைப் பயன்படுத்தி, பாடல் இயற்றுவது, மெட்டமைத்து இனிமையாகப் பாடுவது, அசாத்தியமாக நடிப்பதன் மூலம் மங்கிக்கிடந்த நாட்டு விடுதலை உணர்வை, தன் பாட்டின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் மண்ணின் மக்களுக்கு ஊட்டிய ஒரு மகத்தானக் கலைஞர் நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்கள். தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் முழு வடிவமாகவே மாறி அந்த வேடத்தில் கரைந்து நடிக்கும் ஆற்றல் பெற்ற சிறப்புக்குரியவர்.
ஒரு காலகட்டத்தில், பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களின் நாடகம் நடக்கிறது என்றாலே அங்கே மக்கள் தன்மான உணர்வு பெற்று எழுச்சிக் கொள்கிறார்கள் என்று அறிந்துக்கொண்ட ஆங்கிலேயே அரசு பாட்டனாரை காவலர்கள் மூலம் சிறைபிடிப்பது பிறகு விடுதலை செய்வது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தது. அத்தகைய
கடுஞ்சூழலில் தொடர்ச்சியாக நம்முடைய
பாட்டனார் அவர்கள் சிறைப்பட்டதால் தன் குடும்பத்தைச் சரிவர கவனிக்க முடியவில்லை. அதன் காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில், அவர் பரம்பரையாக வாழ்ந்த வீடும் ஏலத்திற்கு வந்தது.
அன்றைய மாநகரத் தந்தையாக இருந்த வாசுதேவ் அவர்கள், “நீங்கள் துன்பப்படக்கூடாது, இந்த வீட்டிற்கு என்ன தொகை வருமோ அதை நானே கட்டி உங்கள் வீட்டை மீட்டுத் தருகிறேன். அதனை நீங்களே பயன்படுத்துங்கள்” என்று கூறியபோது, “என்னால் புல்லை உண்ண முடியாது” என்று தன்மானத்தோடு கூறி மறுத்த தீரர் நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்கள்.
மக்களின் உடற்பிணி தீர்த்து உயிர்காக்கும் உன்னத மருத்துவக்குடியினர் பின்னாட்களில் தாழ்ந்த குலம் என இழிவுப்படுத்தப்பட்டனர். அதனால், நாவிதக் குலத்தில் பிறந்த விஸ்வநாததாசுடன் நாங்கள் நடிக்கமாட்டோம் என்று அவருடைய சக நடிகர் நடிகைகள் பலர் மறுத்தது நம் பாட்டனாருக்கு மிகுந்த வலியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியது. இந்த மண்ணில் பிறந்த மகனாக, இந்த நாட்டின் உரிமைக்கு, அதன் விடுதலைக்குப் போராடுகிற ஒரு மனிதனைத் தாழ்த்தப்பட்டவன் என்று ஒதுக்கும் கொடியவர்களும் வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருந்தவர்கள்தான். அத்தகு நெருக்கடி நிலையை எதிர்கொண்ட நம்முடைய பாட்டனார், தனது நாடகத்தில் “தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவோர் உண்டோ?, மண்ணில் ஏங்குவோர் உண்டோ?” என்றெல்லாம் வருந்திப்பாடி தன்னுடைய மனக்காயத்தினைக் கொண்டே தமிழர் இனக்காயத்திற்கும் மருத்துவம் செய்த பெருந்தகை.
தொடர்ச்சியாக நாடகத்தில் நடித்த நம்முடைய பாட்டனார் உடல் நலிவுற்ற நிலையில், இறுதியாக இன முன்னோன் முப்பாட்டன் முருகன் வேடமிட்டு நடித்தபோது, அந்த மேடையிலேயே முருகன் வேடத்திலேயே தம்முடைய இன்னுயிரை இழந்தார்.
இம்மண்ணின் விடுதலைக்கு அளப்பரிய ஈகத்தைச் செய்த பாட்டனார் விஸ்வநாததாஸ் போன்றவர்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டதற்கு அரை நூற்றாண்டிற்கும் மேலாக இந்த மண்ணை ஆண்ட திராவிடக் கட்சிகள் அரசியல் மற்றும் ஆட்சி -& அதிகாரத்தில் கடைபிடிக்கும் தீண்டாமையே முதன்மையான காரணமாகும்.
ஈடு இணையற்ற நடிப்பாற்றல் கொண்ட நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களைப் போன்ற பெருமைமிகு நம் இன முன்னோர்களை, வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியக் கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கிறது.
அந்தவகையில் விடுதலைப் போராட்ட ஈகி,
நம் பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களின் புகழை, அவர் ஆற்றிய அளப்பெரும் பணியை என்றென்றும் உளமாரப் போற்றுவோம்!
நம்முடைய பாட்டனார்
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அவர்களுக்கு நம்முடைய புகழ் வணக்கத்தைச்
செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆகச் சிறந்த களப்பணியாளரும், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளருமான அன்புத்தம்பி கரம்பக்குடி மோகன் அவர்களின் தாயார் அம்மா சி.அமிர்தம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சி.அமிர்தம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
@CMOTamilnadu @TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தையின் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வேண்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது.
கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலாளியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது.
ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீதான அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது.
ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது!
@CMOTamilnadu @TVKVijayHQ
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்!
பொதுவுடைமைக் கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் விதைத்த பெருங்கலைஞர்!
இனமான இயக்குநர்
அப்பா மணிவண்ணன் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளரும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத்தம்பி ராமு அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தம்பி கராத்தே மாஸ்டர் ரவி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச்சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
தம்பி கராத்தே மாஸ்டர் ரவி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#worldblooddonorday -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..!
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி மாரிமுத்து அவர்களின் தாயார் அம்மா லட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘இயக்குநர் இமயம்’ எங்கள் அப்பா பாசத்திற்குரிய பாரதிராஜா அவர்களுக்கு வீரவணக்கம்!
This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
@CMOTamilnadu
@TVKVijayHQ
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?
செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.
உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில
இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே!
அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu @TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#releasemaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
மாமனிதர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவேந்தல் நிகழ்வு.
வைகாசி 23 | 06-06-2026
இடம்: தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் - சென்னை.
புகழ்வணக்க உரை: youtu.be/kk9dRe8E0x4 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே சதுரங்க தொடர் - 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ஆட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்!
@rpraggnachess -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர், என்னுடைய அன்புத்தம்பி முத்து.ரமேஷ் அவர்களின் அன்புத்தந்தை ஜெ.முத்துலிங்கம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி முத்து ரமேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
பெருமதிப்பிற்குரிய அப்பா முத்துலிங்கம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026
தியாகராயர் நகர் சென்னை. x.com/i/broadcasts/1mxPaaELQODKN -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#worldenvironmentday -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
The Sri Lankan racist state must immediately release singer Sangeethsan who has been arrested under the Prevention of Terrorism Act!
The arrest of our beloved brother, Hip Hop Sangeethsan, by the Sri Lankan racist state under the Prevention of Terrorism Act — for expressing through his songs the Tamil Eelam homeland, the glorious history of its liberation struggle, the martyrs who sacrificed their lives for the homeland’s freedom, and the cultural greatness of the Tamil people — is strongly condemnable.
The Sri Lankan government, which arrogantly boasted that it had completely eradicated terrorism, is now terrified of a single individual’s song even years after the armed struggle has fallen silent. If singing a song in a temple is considered deadly terrorism, how can Tamils live in peace under the Sri Lankan state?
Is honouring the valour of our departed ancestors and remembering their sacrifices considered terrorism? Is this what Marx and Engels taught the Janatha Vimukthi Peramuna (JVP) government, which calls itself a communist government under Anura Kumara’s leadership? Is this the path shown to them by Che Guevara, Fidel Castro, Lenin, and Ho Chi Minh?If Tamils remembering their liberation struggle ancestors is terrorism, then is the JVP remembering its own leaders who were hunted down and massacred by previous Sri Lankan governments also terrorism? Or not?Is this the ethnic harmony and national unity practised by the JVP government, which claims to follow leftist ideology? The arrest of Thambi Sangeethsan has torn off the mask of the JVP party, which has been practising racism for decades under a leftist guise. This arrest once again reveals to the world that the events conducted by the JVP government — such as permitting remembrance on Maaveerar Naal (Martyrs’ Day) — were all mere dramas, and that no matter which government comes to power in Sri Lanka, it will not deviate even an atom from Sinhalese racist policy.
What answer will the international countries, which once destroyed the armed Tamil liberation struggle claiming it was an obstacle to peace, give now? Is this degraded condition of the Tamil people the “peace” that the world countries desired? If even singing a song is treated as an act of terrorism under the Prevention of Terrorism Act, how can Tamils ever live together with Sinhalese? The United Nations and the international community must now recognise the racist, monstrous face of Sri Lanka and stand in support of the Tamil people’s liberation.
Tamil Members of Parliament in the Sri Lankan Parliament must raise their voices demanding the release of Thambi Sangeethsan.There is no greater racist atrocity than preventing people from honouring their own ancestors. There is no worse form of slavery than denying permission for arts, including songs, by labelling them as terrorism.Therefore, I strongly demand that the Sri Lankan racist state immediately release Thambi Sangeethsan, who has been arrested under the Prevention of Terrorism Act.
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
ஈழத்தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் பற்றியும், தமிழர் பண்பாட்டு பெருமைகள் குறித்தும் தன் பாடலின் மூலம் வெளிப்படுத்திய அன்புத்தம்பி ஹிப்ஹாப் சங்கீத்சன்னை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பயங்கரவாத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசு, ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு பயப்படுவது ஏன்? கோயிலில் பாட்டு பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்படி?
மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா? கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அனுரா குமரா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா அரசிற்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா? இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும், லெனினும், ஹோசிமின்னும் தங்களுக்கு காட்டிய வழியா? தமிழர்கள் தங்கள் விடுதலை போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதம் என்றால், கடந்த காலங்களில் முந்தைய இலங்கை அரசுகளால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட தங்கள் கட்சியின் முன்னவர்களை ஜெவிபி நினைவுகூர்வது பயங்கரவாதமா? இல்லையா? இடதுசாரி தத்துவத்தை ஏற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் ஜெவிபி அரசு கடைப்பிடிக்கும் இன நல்லிணக்கம் இதுதானா? ஏற்படுத்தியுள்ள இன ஒற்றுமை இதுதானா? இடதுசாரி போர்வையில் காலங்காலமாக இனவாதத்தையே கடைப்பிடித்து வரும் ஜெவிபி கட்சியின் முகமூடியை தம்பி சங்கீத்சன்னின் கைது கிழித்தெறிந்துள்ளது. மாவீரர் நாளில் நினைவுகூற அனுமதி என்பது போன்று ஜெவிபி அரசு நடத்தியது அத்தனையும் நாடகம் என்பதையும், இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், அது சிங்கள இனவாத கொள்கையிலிருந்து அணு அளவும் மாறாது என்பதையும் இக்கைது மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துகிறது.
அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலை போராட்டம்தான் அமைதிக்கு தடை என்று அழித்தொழித்த உலக நாடுகள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? தமிழ் மக்களின் இந்த இழிநிலைதான் உலக நாடுகள் விரும்பிய அமைதியா? பாடல் பாடினால்கூட பயங்கரவாதச் சட்டம் என்றால் சிங்களர்களுடன் தமிழர்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும்? இலங்கையின் இனவாத கோர முகத்தை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் இப்போதாவாது உணர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு துணைநிற்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தில் தம்பி சங்கீத்சன்னின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தங்கள் முன்னோர்களை போற்றக்கூடாது என்பதைவிடவும் இனவாதக் கொடுமை வேறில்லை. பாடல்கள் உள்ளிட்ட கலைகளை பயங்கரவாதம் என்றுகூறி அனுமதி மறுப்பதை விடவும் கொடிய அடிமைநிலை வேறு இல்லை.
ஆகவே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
ஈழத்தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் பற்றியும், தமிழர் பண்பாட்டு பெருமைகள் குறித்தும் தன் பாடலின் மூலம் வெளிப்படுத்திய அன்புத்தம்பி ஹிப்ஹாப் சங்கீத்சன்னை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பயங்கரவாத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசு, ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு பயப்படுவது ஏன்? கோயிலில் பாட்டு பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்படி?
மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா? கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அனுரா குமரா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா அரசிற்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா? இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும், லெனினும், ஹோசிமின்னும் தங்களுக்கு காட்டிய வழியா? தமிழர்கள் தங்கள் விடுதலை போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதம் என்றால், கடந்த காலங்களில் முந்தைய இலங்கை அரசுகளால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட தங்கள் கட்சியின் முன்னவர்களை ஜெவிபி நினைவுகூர்வது பயங்கரவாதமா? இல்லையா? இடதுசாரி தத்துவத்தை ஏற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் ஜெவிபி அரசு கடைப்பிடிக்கும் இன நல்லிணக்கம் இதுதானா? ஏற்படுத்தியுள்ள இன ஒற்றுமை இதுதானா? இடதுசாரி போர்வையில் காலங்காலமாக இனவாதத்தையே கடைப்பிடித்து வரும் ஜெவிபி கட்சியின் முகமூடியை தம்பி சங்கீத்சன்னின் கைது கிழித்தெறிந்துள்ளது. மாவீரர் நாளில் நினைவுகூற அனுமதி என்பது போன்று ஜெவிபி அரசு நடத்தியது அத்தனையும் நாடகம் என்பதையும், இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், அது சிங்கள இனவாத கொள்கையிலிருந்து அணு அளவும் மாறாது என்பதையும் இக்கைது மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துகிறது.
அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலை போராட்டம்தான் அமைதிக்கு தடை என்று அழித்தொழித்த உலக நாடுகள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? தமிழ் மக்களின் இந்த இழிநிலைதான் உலக நாடுகள் விரும்பிய அமைதியா? பாடல் பாடினால்கூட பயங்கரவாதச் சட்டம் என்றால் சிங்களர்களுடன் தமிழர்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும்? இலங்கையின் இனவாத கோர முகத்தை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் இப்போதாவாது உணர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு துணைநிற்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தில் தம்பி சங்கீத்சன்னின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தங்கள் முன்னோர்களை போற்றக்கூடாது என்பதைவிடவும் இனவாதக் கொடுமை வேறில்லை. பாடல்கள் உள்ளிட்ட கலைகளை பயங்கரவாதம் என்றுகூறி அனுமதி மறுப்பதை விடவும் கொடிய அடிமைநிலை வேறு இல்லை.
ஆகவே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆங்கிலேயர்களிடம் நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது தாயக விடுதலைக்கு போராடிய தகைமையாளர்..!
"நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இசுலாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி" என்று இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய மாமனிதர்..!
பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன்.,!
உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று முகமது அலி ஜின்னா கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று நம்பிக்கையுடன் கூறிய பெருவீரர்..!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை..!
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், 20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்று ஏற்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்து பொதுவாழ்வில் தூய பெருவாழ்வு வாழ்ந்த
நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி, பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி காதர் மொய்தீன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த காதர் மொய்தீன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி காதர் மொய்தீன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்
அன்புத்தம்பி இராம்குமார் அவர்களின் தாயார்
அம்மா பவானி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி இராம்குமார் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பவானி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப்பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, இந்திய ஒன்றிய அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNMOA) மாநிலம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பதில் அன்றைய அதிமுக அரசு காட்டிய அலட்சியம் காரணமாக, அரசு மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் (Incentive Marks) முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், அது அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான வாய்ப்பை பெற்றுத்தரவில்லை.
அதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு (MCI) எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மருத்துவர் பெருமக்கள் இழந்த தங்கள் உரிமையை மீண்டும் பெற்று வந்தனர்.
ஆனால் 2025 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் 151 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் கடந்த 29.5.26 அன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் தங்கள் படிப்பை முடித்த பின் ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவ கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் தற்போது சாதித்துள்ளது. ‘நீட்’ மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிப்பதென்பது மாநில உரிமையை பறிக்கும் அப்பட்டமான சூழ்ச்சியாகும்.
தமிழ்நாடு அரசு தன் வசம் உள்ள அரசு மருத்துவர்களுக்கான உயர் மருத்துவ இடங்களை தானே நிரப்பலாம் என்று உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியிருந்த நிலையிலும், ஒன்றிய அரசு இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு மூலம் மாநில இடங்களை கைப்பற்ற முயல்வது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் கொடுஞ்செயலாகும்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாட்டின் பொதுசுகாதார கட்டமைப்பையும், ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவம் பெறும் உரிமையையும் நேரடியாக பாதிக்கும். மேகதாது அணைபோல, அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயிலும் விவகாரத்திலும் தவெக அரசு மெத்தனமாக இருப்பது தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் சிறிதும் பொறுப்பற்றச் செயலாகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தியது முதலாக அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் நீட் தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. எனவே நீட் தேர்வு மதிபெண்ணை அடிப்படையாக கொண்டு உயர் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை பறிப்பது அரசு மருத்துவப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
ஆகவே, நம்முடைய அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயில, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 50% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
இசையில் உருவெடுத்த உலகின் முதல் தத்துவம்!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!
மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்! தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் துயரில் தவிக்கும் மனிதனை, உடைந்து கிடக்கும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் காற்றில் மிதந்தபடி, கைபிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
உலகிற்கே இன்னிசை புகட்டும் தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, அவருக்குள் ஊற்றெடுக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என இப்பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.
ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@ilaiyaraaja -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி நடுவண் கிழக்கு மாவட்ட செய்தி பிரிவு செயலாளர் இரா.தீபக் சரவணா அவர்களின் பாட்டி அம்மா க.பாண்டியம்மாள் அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய பாட்டியை இழந்து வாடும் தம்பி தீபக் சரவணா அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பாண்டியம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சங்ககிரி சட்டமன்றத் தொகுதியைச்
சேர்ந்த களப்போராளி அன்புத்தங்கை சோபனா அவர்களின் மாமியாரும், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான
அன்புத்தம்பி சரவணன் அவர்களின் தாயாருமான அம்மா வெள்ளையம்மாள் குப்புசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தாயை இழந்து வாடும் தம்பி சரவணன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா வெள்ளையம்மாள் குப்புசாமி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அந்தியூர் சட்டமன்றத் தொகுதி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தங்கை நிர்மலா அவர்களின் கணவர் அன்புத்தம்பி திருமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய கணவனை இழந்து வாடும் தங்கை நிர்மலாவுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும்
எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி திருமலை அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்...!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்...
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாநில வழக்கறிஞர் பாசறையின் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ப.ரஜீஸ்குமார் அவர்களின் தந்தை ஐயா ச.பன்னீர்செல்வம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ச.பன்னீர்செல்வம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து உண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது.
அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு இனியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி & விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சாந்தி அவர்களின் கணவர் கா.மணிகண்டன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் அன்புத்தங்கை சாந்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்பங்கெடுக்கிறேன்.
தம்பி கா.மணிகண்டன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருநாளினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சு.ந.ஆறுமுகம் அவர்களின் தாயார் அம்மா ந.ஜானகி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ந.ஜானகி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டு நிற்கும் இனமான இயக்குநர்! என் பேரன்பிற்கினிய இளவல் அன்புத்தம்பி சேரன் அவர்களின் தாயார் பாசத்திற்குரிய அம்மா கமலா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் மறைவென்பது ஈடு செய்ய இயலாப் பேரிழப்பு; தாங்கொணாத் துயரம். அந்தத் தாயை இழந்துப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டு நிற்கும் தம்பியின் நிலைகண்டு உடன்பிறந்தவனாய் மனம் கலங்குகிறேன். இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர மூத்தவனாய் தம்பியோடு இத்தருணத்தில் உடன்நிற்கிறேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கமலா பாண்டியன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@CheranDirector -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கி.குமார் அவர்களின் அண்ணி அன்புச்சகோதரி வெண்ணிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பெருந்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி வெண்ணிலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..!
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..!
தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..!
கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..!
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஒரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து,
சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..!
காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..!
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்!
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
வைகாசி 10 | 24-05-2026 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி இணையரின் அன்புமகள் சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. செவிலியர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவந்த அன்புமகளை இழந்து வாடும் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புமகள் சீதாலட்சுமி மூக்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்து மாணவி உயிரிழக்க காரணமாகியுள்ள மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அன்புமகள் சீதாலட்சுமி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு. தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் நடந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும். எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தங்கை அகல்யா ஹரிதாஸ் அவர்களின் பாட்டி இரா.பொன்னம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து பெருந்துயரில் வாடும் அகல்யா ஹரிதாஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் இரா.பொன்னம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், 'புதிய விடியல்' நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தேர்வில் தோல்வியுற்ற மாணவ-மாணவியர் கலங்க வேண்டாம். அன்புப்பிள்ளைகள் சோர்ந்துவிடாது, மனந்தளராது தொடர்ந்து முயற்சி செய்து அடுத்துவரும் துணைத்தேர்வு வாய்ப்புகளின் மூலம் வெற்றி பெற்று, விருப்பமான மேற்படிப்பினைக் கற்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கஸ்பார் அவர்களின் தாயார் அம்மா ஜெயமேரிஅவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ஜெயமேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, கொரடாச்சேரி-ஆர்ப்பாவூரைச் சேர்ந்த தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செல்வ.ஸ்டாலின், செ.சக்திவேல் அவர்களின் தாயார் அம்மா செ.ஜெயம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா செ.ஜெயம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழர் நிலத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழியுணர்வு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, இந்தி மொழி எதிர்ப்பு, வகுப்புவாரி இடப்பங்கீடு, அதிகாரத்தில் பங்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண் விடுதலை, சனாதன எதிர்ப்பு, தீண்டாமைக்கொடுமை, சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்த சமூகநீதிப்போராளி!
ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப்பெற்றிட தம் வாழ்வினையே ஒப்புவித்த இலட்சியவாதி!
'தமிழன்' எனும் இதழை நடத்தி பகுத்தறிவையும், சமத்துவத்தையும் போதித்து, இனமான உணர்வு ஊட்டிய பெருந்தமிழர்!
பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வர்ணாசிரம கோட்பாட்டினைத் தகர்த்தெறிய 'தமிழர்கள் இந்துக்கள் அல்லர்' என்பதை அறுதியிட்டு நிறுவிய பெருந்தகை!
'சென்னை ஐஸ் ஹவுஸ்' தொழிலாளர்களைத் திரட்டி ஆங்கிலேயே அரசின் கொடுமைக்கு எதிராக இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த புரட்சியாளர்!
பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இல்லாதிருந்த தமிழர் மறையாம் திருக்குறளை, தன் குடும்பச் சேமிப்பு ஓலைச்சுவடிகளிலிருந்து தேடி எடுத்து ஆங்கிலேய அதிகாரி எல்லிஸ் மூலம் அச்சு பதிப்பித்து, அடுத்த தலைமுறையிடம் கையளித்த தகைமையாளர்!
தமிழ்ச்சித்த மருத்துவ மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாமேதை!
முருகக்கடவுள் வரலாறு, விபூதி ஆராய்ச்சி, நந்தன் சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நூல்களை இயற்றி அன்னை தமிழுக்கு அணிசேர்த்த தமிழ்ப்பேரறிஞர்!
தமிழர்களின் உண்மையானப் பெரியார்!
சமூக சீர்த்திருத்தங்களின் தந்தை!
பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை?
@CMOTamilnadu @TVKVijayHQ
இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளவாய் கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் அன்புத்தம்பி பரத்குமார் அவர்களின் தந்தை ஐயா ச.குமாரசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ச.குமாரசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.
www.youtube.com/live/OuSxI14Jvtg -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி கா.ரமேஷ் அவர்களின் மனைவி ர.ஆனந்தி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் பாலு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்பங்கெடுக்கிறேன்.
தங்கை ர.ஆனந்தி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈழத்தாயகத்தில் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை தமிழினம் எதிர்கொண்ட பெருந்துயரச்சூழலில், இனமான உணர்ச்சிகொண்ட ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பற்றி எரிந்த உணர்வுத்தீயின் உந்துதலால் என் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய என் ஆருயிர் இளவல்!
தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட அளப்பரிய பெரும்பற்றின் காரணமாக தமிழ்த்தேசியமே தம் வாழ்வென வரித்துக்கொண்ட அன்புத்தம்பி!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து அணுவளவும் அகலாமல், என் தோளுக்குத் துணை நிற்கும் போர்ப்படை தளபதி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும், அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரன்!
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல் இல்லான், இன்முகம் கொண்ட நன்மனத்தான், உள்ளும் புறமும் யாவர்க்கும் யாதொரு தீங்கும் எப்போதும் நினையாத பெருங்குணத்தான், என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ அன்புநிறைந்த வாழ்த்துகள்..!
@idumbaikarthi -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கி.பாலு அவர்களின் அன்புச்சகோதரர் தம்பி கி.பாண்டியன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கி.பாண்டியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த ஒப்பற்ற களத்தளபதியுமான ஆருயிர் தம்பி கா.பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
மண் மீதும், மக்கள் மீதும் அளப்பெரிய பற்றுகொண்டு, தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டு, இனமானப் பணியாற்றிய தம்பியின் மரணம் என்னைப் பெரிதும் வாட்டுகிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கா.பிரபாகரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து' என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப
நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக திகழ்ந்து, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவுமிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலியத் தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகள் சிறக்கட்டும்!
@EPSTamilNadu -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சியைச் சேர்ந்த குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோ.அந்தோணி ஆல்டன் அவர்களின் அன்புச்சகோதரர் ராஜேஷ் தம்பி ஜோ.வில்சன் செல்வதாஸ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஜோ.வில்சன் செல்வதாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை!
தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்!
தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்!
திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்!
தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
தமிழ்த்தேசியப் பேராசான்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார்
அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்!
'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!' என்கிறார் அபிரகாம் லிங்கன்.
'தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!' என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
'அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!' என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம்.
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!
மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!
நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்!
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள் கோவில் கிராமத்தையைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாவட்ட இணைச்செயலாளர் அன்புத்தம்பி மு.ஆனந்தராஜ் அவர்களின் தந்தை ஐயா ஆ.முத்துராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ஆ.முத்துராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்டத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி மு.பிரபாகரன் அவர்களின் தந்தை ஐயா முருகேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா முருகேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி, தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்!
தோல்வி என்பது தோல்வி அல்ல; அதுதான் வெற்றிக்கான முதல் படி!
இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப் போவதில்லை!
தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காதவரை!
உலகில் வெற்றியின் சிகரங்கள் தொட்ட சாதனையாளர்கள் யாவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள் தான்!
மதிப்பெண்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மந்திர எண்கள் அல்ல! அவை குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் பயின்றதை அளவிடும் வெறும் அளவீட்டு எண்கள்தான்!
மதிப்பெண்கள் மட்டுமே மனித அறிவையும், ஆற்றலையும் தீர்மானிப்பதில்லை!
ஆகவே, என்னருமை தம்பி-தங்கைகள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்! உறுதியாக வெற்றி பெறுவீர்கள்!
வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களின் கணவர் சின்னசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சின்னசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ராஜசிவம் அவர்களின் அன்புச்சகோதரர் ராஜேஷ் தம்பி ராஜேஷ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி ராஜேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய அப்பா ஆர்.பி.சௌத்ரி அவர்கள் வாகன விபத்தில் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஆருயிர் தந்தையின் மறைவால் பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பிகள் ஜீவா, ரமேஷ் ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
என்னுடைய திரைத்துறை பயணத்தில் என் மீது பெரும் நம்பிக்கை கொண்டு, அன்பும், அக்கறையும் பாராட்டியவர் அப்பா சௌத்ரி அவர்கள். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் வாட்டுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பற்பல வெற்றிப்படங்களை தயாரித்த அப்பா ஆர்.பி.சௌத்ரி அவர்கள் நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பும், வாழ்க்கையுமளித்து, புதிய படைப்பாளிகளைத் திரைத்துறைக்குத் தந்தப் பெருந்தகை ஆவார். மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குக்குப் படையெடுக்கும் வகையில், காலத்தால் அழியாத ஆகச்சிறந்தப் படைப்புகளைக் கொடுத்த அவரது மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
அப்பா சௌத்ரி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் 29 பேர் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களில்
இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த சகோதரர் காமராஜ், அவருடைய மனைவி கார்குழலி, அன்புமகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன் மற்றும் சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
இந்திய துணைக்கண்டம் முழுதும் கோடைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத்தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தொடர்புடைய மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மத்தியபிரதேச மாநில படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட
மண்டபம் ஒன்றியத்தின் முன்னாள் தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் அன்பு அண்ணன் தாமரைக்குளம் பா.அருளொளி முருகன் அவர்களின் தாயார் அம்மா லோகம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
உயிருக்கினிய தாயை இழந்து வாடும் அண்ணன் அருளொளி முருகன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லோகம்மாள் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகத்தொழிலாளர் நாளில்
உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!
”காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே உலகெங்கும் தொழிலாளர் பெருமக்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.
19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து 1886 ஆம் ஆண்டு மே 1 அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மே - 4 அன்று அமெரிக்காவின் சிகாகோ ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. எனினும் தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்த அமெரிக்க வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில், பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 1890 ஆம் ஆண்டு மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நம்முடைய பாட்டன், பொதுவுடமை போராளி ஐயா சிங்காரவேலர் தலைமையில் உழைப்பாளர் நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்று தொடங்கி இன்றுவரை தொழிலாளர் நாள்தான் கொண்டாடப்படுகின்றதே தவிர தொழிலாளர்களை உலகம் கொண்டாடவில்லை. கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக தொழிலாளர்களை நடத்தவும் இல்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும்.
விவசாயம் முதலாக வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளப்பூர்வமாக ஒப்புவித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களைச் சுரண்டி பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு சேவை புரியும் தரகு நிறுவனங்களாகவே ஆளும் அரசுகள் செயல்படுகின்றன. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைத் தட்டிப்பறித்து முதலாளித்துவக் கைகூலிகளாக செயல்படும் அரசுகளுக்கு எதிராக, தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி, தீயதை எதிர்த்து போராடும் துணிவும் – வலிமையும் பெற்ற பேராற்றலாகவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடும் பேராளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும். ஆளும் அரசுகள் தொழிலாளர் உழைப்பினைச் சுரண்டி, உரிமைகளைப் பறிக்க முயன்றால், அத்தகைய கொடுங்கோன்மை அரசுகளைத் தூக்கி எறியவும் சிறிதும் அச்சமின்றி தொழிலாளர் வர்க்கம் துணை நின்றுள்ளனர் என்பதே கடந்தகால வரலாறாகும்.
ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு உலகமயம், தாராளமயம் என முதலாளித்துவம் நம்மை அச்சுறுத்தும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக உழைப்பாளர் உரிமைபெற்ற 'மே நாளில்' உழைப்புச் சுரண்டலுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!
இனியும் வெறும் நாளினை மட்டுமே கொண்டாடாமல், உழைக்கும் மக்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தஞ்சை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ஒரத்தநாடு மு. கந்தசாமி அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கேற்கிறேன்.
அன்புத்தம்பி கந்தசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!
கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது.
சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை.
இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும்.
சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை.
ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும்.
தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!'
'நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!'
"செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே'
‘சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்;
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்
பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு;
போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!' என்று பாடி, உணர்வற்று உறங்கி கிடந்த தமிழ்ச் சமூகத்தை உணர்ச்சிமிக்கப் பாக்களால் உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலர் நம்முடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று!
தமிழ்த்தேசிய உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி வருகிற இளந்தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, உணர்வு பெற்று, பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
தாத்தா பாரதிதாசன் புரட்சிக் கனவை எந்தச் சமரசமுமின்றி நிறைவேற்றிட தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம்.
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர்..!
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல்..!
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த விடுதலைப் பாணர்..!
பாசறைப்பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் இன்று 29-04-2026 பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தினேன்.
அப்பா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப் பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 28-04-2026 பிற்பகல் படப்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில்
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில்
கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம்
முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்?
மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா?
யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க,
கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர், ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல், விடுதலைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாயகப்பற்றாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருத்துறைப்பூண்டி தொகுதி, கரையங்காடு ஊராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி அன்பழகன் அவர்களின் தந்தையார் ஐயா தம்புசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆகச்சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி அவின்குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். இளம் வயதிலேயே இன்னுயிரை இழந்த தம்பியின் இறப்புச்செய்தி என்னைப் பெரிதும் வேதனையடைய செய்துள்ளது.
பேரிழப்பில் சிக்குண்டு தவிக்கும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத் தம்பி ராஜ்குமார் அவர்களின் தாயார் அம்மா கி.ராஜகுமாரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி ராஜ்குமார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில்
அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்?
ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து
இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும்.
இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
21.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/d6r_ozUuHdA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 இறுதிக்கட்டப் பரப்புரை
20-04-2026 | காரைக்குடி வாகனப் பேரணி
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1pKdRbPNaXgJW -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
21.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! வாகனப் பேரணி
🔴 நேரலை: www.youtube.com/live/J5qgd_6sEys
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
20.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்! | சருகனி
🔴 நேரலை: www.youtube.com/live/HVxzkPJptuA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
20.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை! | கீழ் உச்சாணி
🔴 நேரலை: www.youtube.com/live/Ad3224WsJ9A
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
20-04-2026 | காரைக்குடி (அமராவதி புதூர் சந்திப்பில் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1oKMvRlrmpYGQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
20.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை! | அமராவதிபுதூர்
🔴 நேரலை: www.youtube.com/live/PdHV4t5NcPA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026
இங்குப் போட்டி ஊழல்-இலஞ்சத்திற்கும், உண்மை-நேர்மைக்கும் தான்!
பணத்துக்கு வாக்கு!
இனத்துக்கு தூக்கு!
வாக்குக்குப் பணம் என்றால் மாண்புமிக்க ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.
கேடுகெட்ட பணநாயகம் பல் இளித்து சிரிக்கிறது. அதற்கு நாம் உடன்பட முடியாது. அது சரி வராது. அது ஜனநாயக துரோகம்.
பணம் அரசியல் ஆகும்போது அங்கு பண்பாடு ஒழுக்கம் செத்து போகும்.
பணம் அரசியலானால் அங்கு மக்கள் சேவை செத்து, இலாபத் தேவை வந்துவிடும்,
சாதி அரசியலானால் அங்கு சகோதரத்துவம் செத்துவிடும்,
மதம் அரசியலானால் மனிதநேயம் செத்துவிடும்,
எல்லா தடைகளையும் தாண்டி வெல்வதுதான்
சாதனை!
எல்லா சோதனைக்கும், எல்லா வேதனைக்கும், எல்லா காயங்களுக்கும் ஒரே மருந்துதான் சாதனை!
சாதனைக்கு ஒரே வழி கடுமையான உழைப்பு!
உழைப்பின் பரிசுதான் வெற்றி!
வெற்றியைத் தொடுவோம்!
நம்பிக்கையோடு களத்தில் நில்லுங்கள்!
புரட்சி எப்போதும் வெல்லும்!
நம் வெற்றி அதை சொல்லும்!
நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
நாம் தமிழர்!
#வெல்வான்_விவசாயிThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
19-04-2026 அன்று மாலை காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, தேவகோட்டை
ஒத்தக்கடை பகுதியில் விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வாகனப் பரப்புரை மேற்கொண்டபோது.!
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026
இங்குப் போட்டி ஊழல்-இலஞ்சத்திற்கும், உண்மை-நேர்மைக்கும் தான்!
பணத்துக்கு வாக்கு!
இனத்துக்கு தூக்கு!
வாக்குக்குப் பணம் என்றால் மாண்புமிக்க ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.
கேடுகெட்ட பணநாயகம் பல் இளித்து சிரிக்கிறது. அதற்கு நாம் உடன்பட முடியாது. அது சரி வராது. அது ஜனநாயக துரோகம்.
பணம் அரசியல் ஆகும்போது அங்கு பண்பாடு ஒழுக்கம் செத்து போகும்.
பணம் அரசியலானால் அங்கு மக்கள் சேவை செத்து, இலாபத் தேவை வந்துவிடும்,
சாதி அரசியலானால் அங்கு சகோதரத்துவம் செத்துவிடும்,
மதம் அரசியலானால் மனிதநேயம் செத்துவிடும்,
எல்லா தடைகளையும் தாண்டி வெல்வதுதான்
சாதனை!
எல்லா சோதனைக்கும், எல்லா வேதனைக்கும், எல்லா காயங்களுக்கும் ஒரே மருந்துதான் சாதனை!
சாதனைக்கு ஒரே வழி கடுமையான உழைப்பு!
உழைப்பின் பரிசுதான் வெற்றி!
வெற்றியைத் தொடுவோம்!
நம்பிக்கையோடு களத்தில் நில்லுங்கள்!
புரட்சி எப்போதும் வெல்லும்!
நம் வெற்றி அதை சொல்லும்!
நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
நாம் தமிழர்!
#வெல்வான்_விவசாயி
youtu.be/Ss97S7zDjrU -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
19.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை! | தேவகோட்டை இராம் நகர் (அழகப்பா பூங்கா)
🔴 நேரலை: www.youtube.com/live/avsCW34R0b8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
19.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை! | தேவகோட்டை ஒத்தக்கடை
🔴 நேரலை: www.youtube.com/live/8DhhB9XLItg
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 இலட்சம் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்!
@CMOTamilnadu
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்து கொள்கிறார்கள். விதிமீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 25 ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடி விபத்துகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்த பெருந்துயரம் இன்றுவரை நீண்டு கொண்டே வருகிறது.
பட்டாசு ஆலை விபத்துகளில் தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கும் குடும்பங்கள் எத்தனை? அதனால் கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் எத்தனை பேர்? பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் இக்கொடுமைகளை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கப்போகிறது? உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்க விடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும்தான் பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.
மனித உயிர்களை பலி வாங்கும் இத்தகைய கொடும் வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசானது பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுத்து அவர்களின் மறுவாழ்விற்கு உதவிடுவதே நிலைத்த தீர்வாக அமையும் என்று அறிவுறுத்துகிறேன். மேலும், தற்போது விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடனடியாக நீதி விசாரணை செய்வதோடு, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு, தலா 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும், படுகாயமடைந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதியும், உரிய உயர் மருத்துவமும் வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
19.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் சந்திப்பு!
🔴 நேரலை: www.youtube.com/live/TW6bz-ilfYQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
19.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | கண்ணங்குடி பேருந்து நிறுத்தம்
🔴 நேரலை: www.youtube.com/live/q5HYCBckJFE
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
18.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | அனுமந்தகுடி கிராமம்
🔴 நேரலை: www.youtube.com/live/yc3kwJ8TZ_8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
18.04.2026 | திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/-F2JS3b3jMU
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
18-04-2026 | திருப்பத்தூர் பொதுக்கூட்டம்
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1kJzDMvYYqWKv -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
18.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | மித்ராவயல்
🔴 நேரலை: www.youtube.com/live/8aCtT0v1TzA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
18.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | பனம்பட்டி
காணொளி இணைப்பு: www.youtube.com/live/bmSNdfq70-Q
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
18.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | கழனிவாசல்
காணொளி இணைப்பு: www.youtube.com/live/DMSG_JWJTm4
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆசியாவிலேயே மிகப் பெரிய வழக்கு.
17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை.
167 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
தனி நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என 27 ஆண்டுகளாகத் தொடரும் சட்டப் போராட்டம்.
சிறைவாசிகள் மட்டுமின்றி மூன்று தலைமுறைகளாக அவர்தம் குடும்பத்தாரும் அலைக்கழிக்கப்படும் பேரவலம்.
மறுக்கப்படும் விடுதலைக்குப் பின்னுள்ள அரசியலை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படம்.
நாம் தமிழர் கட்சி
வழங்கும்
திற
youtu.be/QYnHUKk3r3c
இசுலாமியச் சிறைவாசிகள் விடுதலைக்காக...
எழுதி இயக்கியவர் - ச. முரளி மனோகர் @kalaiyalan
இசை: ச. பிரபாகரன் @yazhprabakaran
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன் @PackiaSe
படத்தொகுப்பு: இர. கோவிந்தராஜ் @R_Govindaraj
வடிவமைப்புகள்: பா. அரிகோபி @harigophi
தயாரிப்பு: நாம் தமிழர் கட்சி
@NaamTamilarOrg -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
18-04-2026 | காரைக்குடி வாகனப் பரப்புரை)
#வெல்வான்_விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1nGeLynpeVrKX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
17.04.2026 | காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/DMSG_JWJTm4
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
17.04.2026 | பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/bUGKgc9xrnc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
17.04.2026 | மதுரவாயல் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/h1ClZ-td5rU
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
17.04.2026 | தி.நகர், சைதாப்பேட்டை & விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/-xaW0vw-kqw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
17.04.2026 | திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/DnwvomBfryk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
17.04.2026 | செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/KEH4mW5Z17g
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
17-04-2026 | தாம்பரம் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1nxnRYzNlBwxO -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'நம்மை நாமே
ஆளும் நாளில்
தமிழின் ஆட்சி நாட்டில் நிறைய...'
செந்தமிழர் பாசறை - வளைகுடா
நாம் தமிழர் கட்சி
வழங்கும்
வேடன் வந்தான்
youtu.be/UKDphTCiynQ
எழுதி இயக்கியவர்: ச. முரளிமனோகர் @kalaiyalan
இசை: ச. பிரபாகரன் @yazhprabakaran
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன் @PackiaSe
படத்தொகுப்பு: இர. கோவிந்தராஜ் @R_Govindaraj
காட்சி வடிவமைப்பு: பா. அரிகோபி @harigophi
கணினி வரைகலை: அ.ப. வெங்கடேஷ் @yeapee_
தயாரிப்பு: செந்தமிழர் பாசறை - வளைகுடா, நாம் தமிழர் கட்சி
@stp_valaikuda
@NaamTamilarOrg -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
16.04.2026 | தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/oiuE898yitE
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
16.04.2026 | ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/tvtRlzFbblY
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
16-04-2026 | பாபநாசம் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1PJqrEzwzrNxb -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
16.04.2026 | பாபநாசம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/tZCTm2SvIus
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
16.04.2026 | கும்பகோணம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/JqFwKKIusZ4
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
16-04-2026 | மயிலாடுதுறை வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1AKEmOqVeqVKL -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
16.04.2026 | திருவாரூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/Tp2P8gskBx4
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
16-04-2026 | கீழ்வேளூர் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1nxeLynWNgLJX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
16.04.2026 | கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/tfG6Htz2mho
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
16.04.2026 | நாகப்பட்டினம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/Rnxdi0RPyZ8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
15.04.2026 | வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/FEMa-vUYZ18
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
15.04.2026 | திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/O62oBYD2aug
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
15.04.2026 | ஒரத்தநாடு, மன்னார்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/CO2pgD9t2UY
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
15-04-2026 | மன்னார்குடி வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1dKrPEwmBPAJX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
15.04.2026 | பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/OPWt5y-xnNk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
15.04.2026 | ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/isyAZNo8w_o
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
15.04.2026 | புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/m3xOZsmL-VQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
14-04-2026 | இராமநாதபுரம் பொதுக்கூட்டம்
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1kJzDMvBYjqKv -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
14.04.2026 | இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம் .!
🔴 நேரலை: www.youtube.com/live/YBvJh0Pioqg
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
14.04.2026 | முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம் .!
🔴 நேரலை: www.youtube.com/live/SkRBh-jFsHQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
14.04.2026 | பரமக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/twUYj19VULc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
14.04.2026 | சிவகங்கை சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | திருப்புவனம்
🔴 நேரலை: www.youtube.com/live/Htn4EPmG7yc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
14.04.2026 | மானாமதுரை சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | திருப்புவனம்
🔴 நேரலை: www.youtube.com/live/PMEv14SSyUE
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
14-04-2026 | திருச்சி (காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1qGoNeZNjwgKv -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
14.04.2026 | திருச்சுழி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/u-WEWhtoPOY
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடு!
சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது; நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை; கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல;
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிகைப் பந்தலுக்கு ஒப்பானது! என்பது போன்ற புரட்சிகர சிந்தனைகளை எங்களைப் போன்ற பிள்ளைகளின் நெஞ்சில் விதைத்த அரசியல் பேராசான்..!
அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை..!
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்!
அன்பும் - நற்பண்பும் ஓங்கி,
அறமும் – மறமும் சிறந்து,
வளமும் - நலமும் பெருகி,
ஊர்தோறும் திருவிழாக்கள்,
உவகை தரும் பெருவிழாக்கள்
என நாள்தோறும் களிப்பூட்டும்
சித்திரை மாதத்தின் முதல் நாளினை
இன்பமுடன் கொண்டாடி மகிழும்
உலகத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசியல் விமர்சகர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். உயிருக்கினிய தாயை இழந்து வாடும் தம்பி சங்கருக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
13-04-2026 | மதுரை (ஒத்தக்கடை பொதுக்கூட்டம்)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1qxoNeOomNgJv -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
13.04.2026 | சோழவந்தான் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/eMOHaqn1sAU
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
13.04.2026 | மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/Z529wROWacY
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
#tn2026 திரைப்படக் குழுவினருக்கு அன்பும் வாழ்த்துகளும்!
This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
13.04.2026 | மேலூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/TfChtVuPKos
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
13.04.2026 | நத்தம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/HwOC5EC-6nI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
13.04.2026 | வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/CwV5GZUYplA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
13-04-2026 | வேடசந்தூர் (எரியோடு வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1oKMvRYZrXjGQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
12.04.2026 | திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/Cn91xRHK860
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
12.04.2026 | ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.! | செம்பட்டி |
🔴 நேரலை: www.youtube.com/live/eYUzgADkBXQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
12.04.2026 | போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/08U8QXBvvFs
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
12.04.2026 | கம்பம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/j9E5HEKu8d8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
12.04.2026 | ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/LRTxuKS9Fww
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
12.04.2026 | உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/SjdRAZvrHp0
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
11.04.2026 | திருமங்கலம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.! | பேரையூர்
🔴 நேரலை: www.youtube.com/live/4z3F1VN6CWs
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருட்டுநிதியை விட திரள்நிதி மேன்மையானது!
என் பெற்றோர்கள், உடன் பிறந்தார்களிடம் கையேந்துவதில் எந்த அவமானமோ, இழிவோ இல்லை!
donate.naamtamilar.org/election_campaign_2026This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
11.04.2026 | திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/RDeQ_AyvVwI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! x.com/i/broadcasts/1oKMvRYpAYXGQ
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
11.04.2026 | இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/IJFJZe68Yzg
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
11-04-2026 | இராஜபாளையம் வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1dJrPEmogWwKX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
11-04-2026 | சங்கரன்கோவில் வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1mxPaLEnzrgKN -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
11.04.2026 | கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/OzYmtKpw0uk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
11-04-2026 | தென்காசி (பாவூர் சத்திரம் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!
x.com/i/broadcasts/1mxPaLEnzrgKN -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் சட்டமன்றத் தொகுதி கொரடாச்சேரி ஒன்றிய செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி முகமது மர்ஜுக் அவர்களின் தந்தையார் ஐயா சாகுல் ஹமீது அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி முகமது மர்ஜுக் அவர்களுக்கும், குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சாகுல் ஹமீது அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவால் சிறிதும் மனிதத்தன்மையற்று துப்பாக்கியால் சுடப்பட்ட தம்பி மணிகண்டனின் உடல்நிலை கண்டு பெருந்துயருற்றுள்ள தம்பியின் பெற்றோர் ஆலங்குளத்தில் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்து தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.
சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’ இறக்கும் உரிமையை மீட்கவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், தம்பி மணிகண்டனுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தரவும் இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்து ஆறுதல் தெரிவித்தேன்.
youtu.be/Lo5FqT8y16k?t=2994
கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
11.04.2026 | ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/79gbwQTAk_I
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
10.04.2026 | பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/IdFHu_CXUh8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
10.04.2026 | திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/OSSfR00SCA8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
10.04.2026 | தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/YhmAchtfjpw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வீ.கிருஷ்ணகுமார் அவர்களின் தாயார் அம்மா வீ.கிருஷ்ணவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தாயை இழந்து வாடும் தம்பி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கிருஷ்ணவேணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ரித்தீஷ்குமார் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த தம்பி ரித்தீஷ்குமார் அவர்கள்
நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பி ரித்தீஷ்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ரித்தீஷ்குமார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
10.04.2026 | விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/RKE7QlLuGl8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
10-04-2026 | கோவில்பட்டி வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1pJkOyjDnNXJj -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
09.04.2026 | இராதாபுரம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.! | வள்ளியூர் |
🔴 நேரலை: www.youtube.com/live/VdeUibjzNeY
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
09-04-2026 | நாகர்கோயில் பொதுக்கூட்டம்
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1PKqrElgAyeGb -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
09.04.2026 | நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/ou6FREPE_v4
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
09.04.2026 | கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | ஆரல்வாய்மொழி
🔴 நேரலை: www.youtube.com/live/fdg292cI-QM
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
09.04.2026 | குளச்சல் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/j_2hN3bD35c
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
09-04-2026 | தக்கலை வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1qxvvkALOyRxB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
09.04.2026 | கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/741nLlkQKuw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
08-04-2026 | தண்டையார் பேட்டை பொதுக்கூட்டம் | இராயபுரம் - ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1OxwblDdAmMJB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
08-04-2026 | தச்சூர் (பொன்னேரி) வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!
x.com/i/broadcasts/1jxXgeDVnyLJZ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
08.04.2026 | பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/onMp6KKSopw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தென்காசியில் பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல்!
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த பிறகும் தமிழ்நாடு காவல்துறையினர் எந்த பாடமும் கற்றுக்கொள்ளாது, மனச்சான்று இன்றி அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது வெட்கக்கேடானது.
கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல்துறை, கள் இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல தேடித்தேடி வேட்டையாடுவது கொடுங்கோன்மையாகும். அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால்,
சட்டம் - ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும்.
உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனிதத் தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மருத்துவ குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு "ரி001" வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளன. உலகின் பல நாடுகளும் தங்களின் பாரம்பரிய உணவாக கள்ளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கத் தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை எதற்கு? கள்ளின் மீதான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 23.01.26 அன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் பனைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, பொய் வழக்கு புனைந்து கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 20ஆம் நாள் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்ததோடு ‘ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் காவல் நிலையத்தில் அமரவைத்ததோடு, பனைத் தொழிலாளர்கள் எளிதில் பிணையில் விடுதலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக, கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமலே உள்நோக்கத்துடன் ‘நச்சு கலந்த கள்ளை விற்பனை செய்ததாக’ பொய் வழக்கு புனைந்தனர். அதிகார மமதையோடு காவல்துறை நிகழ்த்திய அக்கொடுமைகளை அப்போதே நான் கடுமையாக கண்டித்ததோடு, திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளும் பனைத் தொழிலாளர்களை விடுவிக்க போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு கொடுத்தது யார்? யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது? சாராய முதலாளிகளின் தூண்டுதலாலேயே பனைத் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமைகள் நாளும் அரங்கேறுகின்றன. இக்கொடுமைகளை எதிர்த்து, பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் சாராய ஆலைகளை நடத்துவதே திமுக, அதிமுக
கட்சியினர்தானே?
பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக போராடி, அவர்களின் நியாயமான உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒற்றைப் பெரும் அரசியல் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது. (1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கள் இறக்குவதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக போராடியும் வருகிறது. சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும்.
பனைத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் புரிகின்ற இக்கொடுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள். வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தம்பி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது, கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்வதோடு, வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
08-04-2026 | ஆலந்தூர் வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1wxWjaDYnymJQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
08.04.2026 | ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/lfhRuulMOpU
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
07.04.2026 | சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/WyUUD1RaxcQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
07.04.2026 | வேளச்சேரி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/ufjVD3xbPWk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
07.04.2026 | ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/y51EZk38H50
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதி, வேலூர் ஊராட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர் சகோதரர் மோகன் அவர்களின் அன்புமகள் வினோதினி அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்பு மகளை இழந்து வாடும் சகோதரர் மோகன் அவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
16 வயதேயான மகள் வினோதினி அவர்களின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
அன்புமகள் மோ.வினோதினி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம் ! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
07.04.2026 | அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/ypMRgyoAycE
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
07-04-2026 | மயிலாப்பூர் (மந்தைவெளி சந்தை) வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1dKrPEQvBYXJX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
07.04.2026 | மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/O56tsDhRHhQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
06.04.2026 | திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/UwTKIMd_nwc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
06.04.2026 | மயிலம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/JXKiUf0pbAI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴நேரலை 06-04-2026 கிளியனூர் | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் பரப்புரை x.com/i/broadcasts/1YxNrZDjWXQxw
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
06.04.2026 | புதுச்சேரி மாநிலம் | அண்ணா சிலை அருகில் வாகனப் பரப்புரை பரப்புரை!
🔴 நேரலை: www.youtube.com/live/45mzMFlIFvw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
06.04.2026 | புதுச்சேரி மாநிலம் | மேட்டுப்பாளையம் பரப்புரை!
🔴 நேரலை: youtube.com/live/woDebcOgu…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
06.04.2026 | புதுச்சேரி மாநிலம் | வில்லியனூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை!
🔴 நேரலை: www.youtube.com/live/_AWshjxVHSc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
06.04.2026 | புதுச்சேரி மாநிலம் | தவளைகுப்பம் பரப்புரை!
🔴 நேரலை: www.youtube.com/live/DZvc641J99k
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
05.04.2026 | கடலூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/EvPIyQB_Fbw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
05.04.2026 | சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/eHn6RFCwEGI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
05.04.2026 | நெய்வேலி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/8OtY0tZc3_4
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
02.04.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் குன்னூர் தொகுதி வேட்பாளர் தீனு, கூடலூர் தொகுதி வேட்பாளர் கார்த்திக், உதகை தொகுதி வேட்பாளர் ரகுபதி பீமன் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போது.!
காணொளி இணைப்பு: youtu.be/1c8DwHOKBYs
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
01.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் சு.கோபாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றியபோது.!
காணொளி இணைப்பு: youtu.be/v_NdTInoe0g #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
05.04.2026 | வடலூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/tC5YibQkdwc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
05-04-2026 | திட்டக்குடி வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1qKVmQDkAvdxB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
05.04.2026 | திட்டக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/smUwKCNNJIM
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
05.04.2026 | பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/7km4Jt73u5Q
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
04.04.2026 | அரியலூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/q05Ae6n96yI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
04.04.2026 | லால்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/aWUvLNvu4GM
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
04.04.2026 | திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/gPrbyneqGeQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
04.04.2026 | மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 காணொளி இணைப்பு: www.youtube.com/live/cvec0CLAIoI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
04.04.2026 | குளித்தலை சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 காணொளி இணைப்பு: www.youtube.com/live/E286Bun6i0s
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
04-04-2026 | மண்ணச்சநல்லூர் வாகனப் பரப்புரை
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1AKEmOwPZrZKL -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம்பி தங்கைகளுக்குப் புரட்சி வாழ்த்துகள்! x.com/i/broadcasts/1pKkOyDRWeNKj
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
04-04-2026 | கிருஷ்ணராயபுரம் (சித்தலவாய் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1nGnRYWqRRVGO -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
04.04.2026 | கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴நேரலை: www.youtube.com/live/FZC9n3Xm5GI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன்னும் கொஞ்சம் பொறுங்கப்பா...
தமிழர் கூட்டம் வருதப்பா...
#விவசாயி சின்னம் பார்த்து
ஓட்டு கொஞ்சம் போடப்பா..!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எப்பா எப்பா எப்பப்பா...
மண்ணைக் காக்க வாரோம்ப்பா..!
விவசாயி சின்னம் பார்த்து
ஓட்டை கொஞ்சம் போடப்பா..!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
03-04-2026 | கரூர் பரப்புரைப் பொதுக்கூட்டம்
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1rGmqojBpYvGy -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
03.04.2026 | பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴நேரலை: www.youtube.com/live/tmmTZMRHX1Q
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
03.04.2026 | நாமக்கல் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴நேரலை: www.youtube.com/live/7fuPZ2W9JZ8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
01.04.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் ரஜபு நிசா அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்டபோது.!
காணொளி இணைப்பு: youtu.be/91UnjToK3io
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026!
01.04.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பேரறிவாளன் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:youtu.be/nYE40WJpA90
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
01.04.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செ.பானுப்பிரியா அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/6EI4blWk6y8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
03-04-2026 | காங்கேயம் (வெள்ளக்கோவில் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1nKOLEXyjPkGR -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
01.04.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கு.நேருஜி அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/28vbveypZOs
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
01.04.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/WUIuoRrFzMM
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
03.04.2026 | தாராபுரம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/_SpI145O_wE
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
03.04.2026 | பல்லடம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/bXUCZEqdA5M
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
02-04-2026 | திருப்பூர் பொதுக்கூட்டம்
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1DxLdvwyWWvxm -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
02.04.2026 | பெருந்துறை சட்டமன்றத் தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/c5jlhEL95vo
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
02.04.2026 | கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/NGydU3VWiKg
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
02.04.2026 | பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/BIF_b8Q-_rU
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
02-04-2026 | குன்னூர் பொதுக்கூட்டம்
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1RKZzjyOgPzKB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
01-04-2026 | மேட்டுப்பாளையம் (காரமடை பொதுக்கூட்டம்)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1RJZzjyAALvJB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
01.04.2026 | மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்!
🔴 நேரலை: www.youtube.com/live/Clg57_lBEho
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
01.04.2026 | தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 காணொளி இணைப்பு: www.youtube.com/live/WBalpuNKvNA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
01.04.2026 | கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 காணொளி இணைப்பு: www.youtube.com/live/TyD9SdGDMwE
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
01.04.2026 | கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 காணொளி இணைப்பு: www.youtube.com/live/f7ZfR0WcG2A
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴காணொளி இணைப்பு: www.youtube.com/live/LmxLYXGulQE
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
01-04-2026 | கோவை தெற்கு (புலியகுளம் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1RJZzjyAALvJB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
01-04-2026 | கவுண்டம்பாளையம் (காளப்பட்டியில் வாகனப் பரப்புரை)
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! x.com/i/broadcasts/1qxvvkWZlwlxB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/84LLO5D_0fc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
31-03-2026 | சூலூர் பொதுக்கூட்டம்
x.com/i/broadcasts/1vJpPrBZmjMJE -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
27.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் திருக்கோவிலூர் வேட்பாளர்
ஹேமராஜன் மற்றும் ரிசிவந்தியம் தொகுதி வேட்பாளர் ராதிகா ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: www.youtube.com/live/ujV8_Mw5o5c
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
27.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் சங்கராபுரம் வேட்பாளர் க.ரமேஷ் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது..!
காணொளி இணைப்பு: youtu.be/wIp1hKRiRWo
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
25.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் பாப்பிரெட்டிபட்டி வேட்பாளர் அர்ச்சனா தமிழருவி, அரூர் வேட்பாளர் அனிதா,
தர்மபுரி வேட்பாளர் சாந்தலட்சுமி, பென்னாகரம் வேட்பாளர் பழனியம்மாள், பாலக்கோடு வேட்பாளர் பூபதி ஆகியோரை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போது.!
காணொளி இணைப்பு: youtu.be/ZCTm8_cUh9g
#எங்கள்திருநாட்டில்எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
25.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் தருமபுரி வேட்பாளர் சாந்தலட்சுமி அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/0Bta_L8ilVI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026.!
25.03.2026 அன்று,#நாம்தமிழர் கட்சியின் பாலக்கோடு வேட்பாளர் பூபதி , பென்னாகரம் வேட்பாளர் பழனியம்மாள் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/x3RayIVLT_M
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
26.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் ஆத்தூர் வேட்பாளர் சி.மோனிசா அவர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போது.!
காணொளி இணைப்பு: youtu.be/kN6ylHv5otc
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் - 2026!
26.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் நாகம்மாள் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போது..!
காணொளி இணைப்பு: youtu.be/FSA-qlGS84o
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
30.03.2026 அன்று, காரைக்குடி சட்டமன்றத் தொகுதி முப்பையூரில் #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/Sd8tyt5MwT8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
30.03.2026 அன்று, காரைக்குடி சட்டமன்றத் தொகுதி புலியால் பகுதியில் #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/mKGFl1HcvXI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/Wg9qc2aAGYQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
30-03-2026 | காரைக்குடி பொதுக்கூட்டம் x.com/i/broadcasts/1DxLdvwYlORxm -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! | முப்பையூர்
🔴நேரலை: youtu.be/Sd8tyt5MwT8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
30-03-2026 | காரைக்குடி (புலியால்) x.com/i/broadcasts/1XxygmQBgRdGM -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴நேரலை: www.youtube.com/live/KgOGKaAC6I0
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நான் இன்று (30-03-2026) தேவகோட்டை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தேன்.!
நேரலை:www.youtube.com/live/cYcZmKK3nus
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
29.03.2026 அன்று, நான் வேட்பாளராக போட்டியிடுகின்ற காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, புதுவயலில் நடைபெற்ற மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய போது.!
காணொளி இணைப்பு: youtu.be/RmLmxBNXMn0
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
29.03.2026 அன்று, காரைக்குடி சட்டமன்றத் தொகுதி கண்டனூரில் #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/-eJrSr_fL_A
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
29.03.2026 அன்று, காரைக்குடி சட்டமன்றத் தொகுதி அரியக்குடியில் #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/yed3JYF3zLk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காரைக்குடி சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம் | புதுவயல்
🔴நேரலை: www.youtube.com/live/cVBGeXAvjs8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
29-03-2026 | காரைக்குடி (புதுவயல் பொதுக்கூட்டம்) x.com/i/broadcasts/1qJVmQnYrwLGB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/ntLeViPxP8I
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
29-03-2026 | காரைக்குடி (அரியக்குடி)
x.com/i/broadcasts/1lKQRvgDDAXGE -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
26.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் ஏற்காடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மா.பழனிச்சாமி அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/Jw2oarB7Llo
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
26.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார், வடக்கு தொகுதி வேட்பாளர் குணசீலா, தெற்கு தொகுதி வேட்பாளர் சோபியா, வீரபாண்டி தொகுதி ராஜேஷ் குமார் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:youtu.be/qTOulp3v1cQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
ஆவடி சட்டமன்றத் தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/BNrGFxteJJ0
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
26.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் ஓமலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சிவசக்தி, எடப்பாடி தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி மற்றும் சங்ககிரி வேட்பாளர் நித்தியா அருண் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:youtu.be/q3KkCE9uaLw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
26.03.2026 அன்று #நாம்தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது!
காணொளி இணைப்பு:youtu.be/N-8gjvLJQjk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/T-2xVDRQxyA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/NJh8LENtDrY
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
28-03-2026 | பூந்தமல்லி (குமணன்சாவடி)
x.com/i/broadcasts/1lJQRvgyjZZxE -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/DbWPiLzeuYU
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/FN61QshvOf8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/7KVxP_A7a8A
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
போளூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை!
🔴நேரலை: www.youtube.com/live/ulfYbm8VEYQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
27.03.2026 | செஞ்சி சட்டமன்ற தொகுதி பரப்புரை
🔴 நேரலை: www.youtube.com/live/XlI1vG7cEMQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழீழத்தாயக விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு இன உணர்வுடன் தாயகப் பணியாற்றிய விடுதலைப் போராளி..
தமிழின விடுதலையையே தம் உயிர் மூச்சாக வரித்துக்கொண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தமிழ், தமிழர், தமிழீழத்தாயக மீட்சிக்காகவே ஒப்படைத்து வாழ்ந்த பெருந்தகை..
தான் மட்டுமல்லாது, தன் குடும்பத்தையும் தாயக உணர்வுடன் வழிநடத்தி விடுதலைப்பணியில் ஈடுபடுத்திய புரட்சிப் பெண்மணி..
தம் சிந்தை முழுதும் ஈழம், தலைவர், மாவீரர்கள் எனும் உணர்வு நிறைத்து, தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அப்பழுக்கற்ற பேரன்பும், பெருமதிப்பும் கொண்டு வாழ்ந்த பெருமாட்டி..
ஈழப் போரின் பின்னடைவு காலங்களில் இனம் துவண்டு நின்ற வேளையிலும்
தீரத்துடன் செயல்பட்ட வீரத்திருமகள்..
தமிழீழத் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, நாம் தமிழர் இயக்கத்திலும் தம்மை இணைத்துக் கொண்டு, என்னையும், நாம் தமிழர் கட்சியையும், தமிழ் மக்களையும் பேரன்பு கொண்டு நேசித்து நின்ற போற்றுதற்குரிய தாய் முதுசம் சுமதி சீவரட்னம்
அம்மா அவர்கள் மறைவெய்திய செய்தி இதயத்தை கனக்கச் செய்கிறது.
அம்மா அவர்களின் இழப்பு தனிப்பட்ட அவருடைய குடும்பத்திற்கான இழப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழினத்திற்கு நேர்ந்துள்ள பேரிழப்பாகும்.
இனமானத் தாயை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாயகப்பற்றாளர்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழீத்தாயக விடுதலைப்பேரொளி
அம்மா முதுசம் சுமதி சீவரட்னம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
27-03-2026 | திருவண்ணாமலை
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி x.com/i/broadcasts/1OGwblWgbBdKB -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி பரப்புரை.!
🔴நேரலை: www.youtube.com/live/ujV8_Mw5o5c
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம்
27-03-2026 | சங்கராபுரம் x.com/i/broadcasts/1qKDzPajOdLJV -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி பரப்புரை!
🔴நேரலை: www.youtube.com/live/mf0AMFCnehQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/dbF11gEFqJM
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴 நேரலை: www.youtube.com/live/nwAe4qzjg8M
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்ற தேர்தல் 2026.!
வாழப்பாடி சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴நேரலை: www.youtube.com/live/L7Jm2qTD8Uk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
25.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுகந்தி பார்த்திபன் மற்றும் பர்கூர் தொகுதி வேட்பாளர் கவின் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:youtu.be/sskQiqy5QWo
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
25.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் தளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நரசிம்மன் மற்றும் ஒசூர் தொகுதி வேட்பாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:youtu.be/dRCoM2v5_bg
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
ஓமலூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: www.youtube.com/live/9wp37b8MyZk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி #நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் அவர்களை ஆதரித்து பரப்புரை.
🔴நேரலை: www.youtube.com/live/fi7goScHifw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
24.03.2026 அன்று #நாம்தமிழர் கட்சியின் ஊத்தங்கரை வேட்பாளர் மேகலா அவர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போது.!
காணொளி இணைப்பு: youtu.be/sX8QFLtxttk
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026
பாப்பிரெட்டிப்பட்டி மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டம்.!
🔴நேரலை: www.youtube.com/live/alM9o8P0mdA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
தருமபுரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் சாந்தலட்சுமி அவர்களை ஆதரித்து வாகன பரப்புரை. 🔴நேரலை: youtu.be/0Bta_L8ilVI
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பரப்புரை!
🔴 நேரலை: www.youtube.com/live/vrdi6H5T_EY
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
24.03.2026 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் #நாம்தமிழர் கட்சியின் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் ஆறுமுகம் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்றியபோது..!
காணொளி இணைப்பு:youtu.be/swj5HojMN4A
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
24.03.2026 அன்று #நாம்தமிழர் கட்சியின் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அப்சியா நஸ்ரின்,
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
முருகேசன் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்டபோது.!
காணொளி இணைப்பு: youtu.be/I3M-Dn2mjCs
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
24.03.2026 அன்று #நாம்தமிழர் கட்சியின் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அப்சியா நஸ்ரின்,
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
முருகேசன் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்டபோது.!
காணொளி இணைப்பு: youtu.be/I3M-Dn2mjCs
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வழக்கறிஞரும், அரசியல் ஆய்வாளருமான என் அன்பிற்குரிய அண்ணன் இரவீந்திரன் துரைசாமி அவர்களின் அன்பு தந்தை, மதிப்பிற்குரிய ஐயா து.ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
என் மீதும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியின் மீதும் பெரும் அக்கறைகொண்ட அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்கள்,
பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் இத்துயர்மிகு சூழலில், அவருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, துயரிலும் பங்கெடுக்கின்றேன்.
அன்பு அப்பா து.ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
தளி சட்டமன்றத் தொகுதி பரப்புரை!
🔴 நேரலை: www.youtube.com/live/1XLiB_VAS_k
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
24.03.2026 அன்று குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி #நாம்தமிழர் கட்சி வேட்பாளர் இமலன் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர் கலையேந்திரி ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:youtu.be/eWtk4H7qsG4
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
கிருஷ்ணகிரி தொகுதி வாகனப் பரப்புரை
🔴நேரலை : www.youtube.com/live/Gf8nypSgQRo
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
#வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
24.03.2026 அன்று வேலூர் சட்டமன்றத் தொகுதி #நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சோனியா, காட்பாடி தொகுதி வேட்பாளர் சா.திருக்குமரன் மற்றும் அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: youtu.be/4kXGQCQ8kpw
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
ஊத்தங்கரை பரப்புரை பொதுக்கூட்டம் நேரலை: www.youtube.com/live/WhTqf0Q4wn8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்ட நேரலை: www.youtube.com/live/DMDxtFkAJyM
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை நேரலை: www.youtube.com/live/qfTsPHeUEa8
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி காரைக்குடி மண்டல பொறுப்பாளர் தம்பி மலை.இளங்கோ ஆகியோர் மீது திமுக முரடர்கள் நடத்தியுள்ள கொலைவெறித் தாக்குதல் அதிகார ஆணவத்தின் உச்சம்!
@CMOTamilnadu
@mkstalin
நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடகம் தமிழ்நாடு முழுவதும் மிகச்சிறப்பாக நடத்திவரும் 'தேர்தல் பயணம்' விவாத நிகழ்வின் ஒரு பகுதியாக
காரைக்குடியில் நடைபெற்ற விவாத நிகழ்வின்போது திமுக அரசின் குறைகளை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி கேள்விகளால் துளைத்தெடுத்த ஆருயிர் இளவல் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற, திமுகவின் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கைமாறன், தன்னுடன் அழைத்துவந்த திமுக முரடர்களை தூண்டிவிட்டு, தம்பி இடும்பாவனம் கார்த்திக்கை பேசவிடாது தடுத்து தாக்க முயன்றதுடன், நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி மண்டலச்செயலாளர் அன்புத்தம்பி மலை.இளங்கோ மற்றும் நிகழ்ச்சியை நெறிபடுத்திய அன்பு இளவல் ராஜேஷ் அவர்களின் தலையை உடைத்து இரத்தம் கொட்டும் அளவிற்கு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
குறிப்பாக திமுக மாவட்டச் செயலாளர் சேங்கைமாறன்
திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து மூடி மறைக்க முயன்றது,
திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் மதுக்கூடம் நடத்தி வருவது,
ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பினாமிகள் மூலம் வளக்கொள்ளையில் ஈடுபடுவது ஆகிய மக்கள் விரோதச் செயல்களை ஆதாரங்களோடு தம்பி கார்த்திக் அம்பலப்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாததே, திமுகவினரின் வன்முறை வெறியாட்டங்களுக்கு முழுமுதற் காரணமாகும். இரத்தம் சொட்ட சொட்ட நெறியாளர் தம்பி ராஜேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் காட்சிகள் நெஞ்சைப் பதறச் செய்கிறது.
நான் போட்டியிடுகின்ற காரைக்குடி தொகுதி என்பதாலேயே திமுக அரசின் கொடுமைகளை மக்களுக்கு தெரியாமல் மூடி மறைக்க எப்படியாவது நிகழ்ச்சி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டே குண்டர்களை தொண்டர்கள் என்ற பெயரில் அரங்கத்திற்குள் திமுக பொறுப்பாளர் சேங்கைமாறன் அழைத்து வந்துள்ளது நடைபெற்ற கொடுந்தாக்குதல் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
திமுக அரசின் வன்முறை காட்டாட்சியின் ஒட்டுமொத்த அவலத்தையும் தோலுரிக்கும் ஒற்றை சாட்சிதான், நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளரின் தலையையே உடைத்து நடத்திய கொலைவெறித் தாக்குதல் காட்சியாகும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி முழுவதுமே திமுகவினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள், அதிகார அத்துமீறல்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை ஆசாமிகளின் தாக்குதல், பாலியல் வன்கொடுமைகள் என்று கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்து கிடந்தது.
எப்படி திமுக ஆட்சியில் பாலியல் கொடுமைகளை தடுக்க வேண்டிய காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைகள் புரிந்தனரோ, பெண் காவலர்களே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்களோ, பொதுமக்களை காக்க வேண்டிய காவலர்களே அப்பாவிகளை அடித்துக் கொன்றனரோ அதுபோல, திமுக காட்டாட்சியின் வன்முறைகளை நாளும் வெளியிட்டு வந்த செய்தி ஊடகத்தினரே திமுகவினரால் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகள் அக்கொடுமைகளின் உச்சமாகும்.
ஆட்சி அதிகார மமதையோடு 5 ஆண்டு காலமாக திமுக அரசு மக்களுக்கு புரிந்த கொடுமைகள் போதாதென்று, ஆட்சி முடிந்த பின்னரும் திருந்தாமல், திமுவினர் புரியும் வன்முறை வெறியாட்டங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள். வருகின்ற ஏப்ரல் - 23 அன்று நடைபெறும் வாக்குப் பதிவின்போது, திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தமிழ்நாடு காவல்துறை நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி மண்டலச்செயலாளர் மலை.இளங்கோ, நியுஸ் தமிழ் 24/7 ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உடனடியாக கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
23.03.2026 அன்று ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி #நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை தாரிக்கா சல்மான் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் உரையாற்றியபோது..!
காணொளி இணைப்பு:youtu.be/2OMDw9lf664
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.!
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பரப்புரை நேரலை: www.youtube.com/live/24CVfM3rG2Q
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்விவசாயி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026.
23.03.2026 அன்று #நாம்தமிழர் கட்சியின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் அசோக் குமார் மற்றும் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோரை ஆதரித்து #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேர்த்து சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது..!
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
காணொளி இணைப்பு:youtu.be/yE_RzXUyDbk -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டமன்றத் தேர்தல் 2026!
23.03.2026 அன்று திருத்தணி முருகனை வழிபட்டு,நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் சூ.ச.சந்திரன் அவர்களை ஆதரித்து "விவசாயி" சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
காணொளி இணைப்பு: youtu.be/Lwfru1VGbrk -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருச்சி காவல்துறையினர் பனைத்தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்கி, பொய் வழக்கில் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மையாகும்!’
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ள நிகழ்வு வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கள்’ இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் திருச்சி காவல்துறையினர் சிறையில் அடைத்து வைத்திருப்பது கொடுங்கோன்மையாகும்.
மருத்துவக் குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்க கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தபடும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு "K001" வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளன. உலகின் பல நாடுகளும் தங்களின் பாரம்பரிய உணவாக கள்ளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கத் தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை எதற்கு? கள்ளின் மீதான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
அதிலும், தற்போது திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ள பனைத் தொழிலாளர்கள் எளிதில் பிணையில் விடுதலை ஆகிவிடக் கூடாது என்பதற்காக, உள்நோக்கத்துடன் ‘நச்சு கலந்த கள்ளை விற்பனை செய்ததாக’ சமயபுரம் காவல்துறையினர் பொய் வழக்கு புனைந்துள்ளது எதேச்சாதிகாரப் போக்கின் உச்சமாகும். கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமலே அதில் நச்சு கலந்தது என்ற முடிவுக்குக் காவல்துறை வந்தது எப்படி? இதிலிருந்தே காவல்துறையின் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் யாவும் முற்றிலும் புனையப்பட்ட நாடகம் என்பது உறுதியாகிறது.
உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனித தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல்துறை, பனையேறும் தொழிலாளர்களைத் தேடித்தேடி வேட்டையாடுவது வெட்கக்கேடானது. அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால், சட்டம் - ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும். சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும்.
ஆகவே, திருச்சி மாவட்டம் இலால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்டதற்காக, பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பனைத் தொழிலாளர்களையும் தமிழ்நாடு காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மார்க்கத்தின் வழியாக மனிதத்தை வாழ்விக்க மகத்தான நன்னெறியினை மொழிந்த இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள், “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்” என்கிறார்.
மேலும், தம்முடைய அருள்மொழியில், “தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது; இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம். பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்” என்றும் கூறுகிறார். “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்றும் தம்முடைய இறுதிப் பேருரையில் குறிப்பிடுகிறார்.
போற்றுதலுக்குரிய நபி பெருமானார் காட்டிய அத்தகைய அன்புவழி நின்று, அறநெறி பற்றி, ஐந்து முதன்மைக் கடமைகளில் ஒன்றாக, புனித ரமலான் மாதத்தில் இறைவனை எண்ணி உணவும், நீரும் துறந்து, உடலையும், உள்ளத்தையும் பண்படுத்தி, 30 நாட்கள் நோற்ற நோன்பு முழுமைபெறும் திருநாளாம், ‘இரம்ஜான் பெருநாளை’ பெருமகிழ்வோடு கொண்டாடும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் நிறையட்டும்; உங்களின் உளப்பூர்வமான நோன்பினையும், வழிபாட்டையும், வணக்கத்தையும் நற்கொடையையும், நற்செயல்களையும் இறைவன் ஏற்றுக்கொள்ளட்டும். இப்புனித நாள் உங்கள் இதயத்தில் அமைதியையும், வாழ்வில் மகிழ்ச்சியையும், குடும்பத்தில் அன்பையும் கொண்டுவரட்டும்.
இல்லாதவருக்கு ஈயும் இன்பத்திருநாளான, ஈகைப்பெருநாளைக் கொண்டாடும் இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சேலம் மாவட்டம், அரியானூர் அருகே அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட, 7 பேர் மரணித்த துயர நிகழ்வறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் பன்மடங்கு அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கின்றது. 5 ஆண்டுகால திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால், முறையாக பாராமரிக்கப்படாத அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாகப் பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாவது ஏற்றுக்கொள்ள இயலாத பெருங்கொடுமையாகும்.
சாலை ஓரத்தில் சென்ற வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி நிகழ்த்திய விபத்து குறித்து தமிழ்நாடு அரசு உரிய நீதி விசாரணை நடத்துவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய துயர் துடைப்பு நிதியினையும் வழங்க வேண்டும்.
உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜா.கமலேஷ் அவர்களின் தந்தை ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் நிர்வாகி அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்கள் அன்னைத் தமிழ் காக்க தன் இன்னுயிரை இழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ? என்ற புரட்சி பாவலர் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உணர்ச்சிமிகு பாவரிகளுக்கு ஏற்ப தாய் மொழிக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தலையை கொடுத்தேனும் அதனை தடுத்து நிறுத்துவதுதான் தமிழர் மரபு என்றபோதிலும், அத்தகைய ஈகத்தால் வரும் இழப்பினை ஏற்க மனம் மறுக்கிறது. வலிக்கிறது!
சகோதரர் சிவா திலீபன் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து இந்தியைத் திணிக்கும் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக இன்னும் வலுவான பற்பல வீரியப் போராட்டங்களை முன்னெடுத்து, அன்னைத்தமிழை அழியாது காக்கும் அரணாக களத்தில் நின்றிருக்க வேண்டும் என்கிற சிந்தனையே இத்துயர்மிகு சூழலில் உள்ளத்தில் எழுகிறது.
இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள்
இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதையே இனிவரும் தலைமுறையினருக்கும் அறிவுறுத்தலாகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
அன்புச்சகோதரர் சிவா திலீபன்
அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மே 17 இயக்கத்தினருக்கும், தமிழ் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
தாய்த்தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026
தரவிறக்கம் செய்ய
www.makkalarasu.com
#ntkmanifesto2026
#நாம்தமிழர்_ஆட்சிவரைவு -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026 நூல் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு பங்குனி 05 (19-03-2026) காலை 10 மணி முதல் சென்னை கிண்டி-கத்திப்பாறை சந்திப்பில், அண்ணா சாலையில் அமைந்துள்ள லீ ராயல் மெரிடியன் (Le Royal Meridien) உண்டுறை விடுதி அரங்கில் நடைபெற்றுவருகிறது.
www.youtube.com/live/XWs0Nbr2lk8 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்
நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு-2026 வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு
19-03-2026 | சென்னை - கிண்டி x.com/i/broadcasts/1XxygmPRnYVGM -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி அ.அறிவழகன் அவர்களின் தாயார் அம்மா பத்மாவதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பத்மாவதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள்.
வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!
பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம்.
எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.
donate.naamtamilar.org/election_campaign_2026
திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
புரட்சி எப்போதும் வெல்லும்!
நம் வெற்றி அதைச் சொல்லும்!
நம் இலக்கு ஒன்றுதான்!
இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சிThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆகச்சிறந்த ஆய்வு நூலுக்காக, அன்பிற்குரிய அண்ணன் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. 1920 முதல் 1970 வரையிலான தமிழ்ச் சிறுகதைகளின் அரை நூற்றாண்டு வரலாற்றை ஆவணப்படுத்திய ‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ நூல், நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியையும் நிமிர்வையும் காட்டும் காலப் பெட்டகமாகும்.
சிறந்த இலக்கியப் படைப்புக்கான உயரிய சாகித்திய அகாடமி விருதினைப் பெறும் அன்பிற்குரிய அண்ணன் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, 'விவசாயி' சின்னத்தில் வாக்கு சேகரித்து, மக்களிடம் இடையறாது பரப்புரையில் ஈடுபட்டு வரும் அன்பு உறவுகள் அனைவருக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தேர்தல் பரப்புரையில் உங்களின் ஈடு இணையற்ற உழைப்பைக் காட்டும் காணொளிகள் பெருமிதத்தை தருகின்றன.
‘புதியதொரு தேசம் செய்வோம், மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்’ என்ற இலட்சிய முழக்கத்தோடு தாய்த்தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை நிகழ்த்திட, தொடர்ச்சியாகக் களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி. தன்னிகரில்லா தமிழ்த்தேசிய தத்துவத்தோடும், தனித்துவத்தோடும், மக்களின் துணையோடும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு, ஒவ்வொரு தேர்தலிலும் உயர்வதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும், ஒப்படைப்பும் அளப்பரியது. போதிய பொருளாதாரப் பலம் இன்றி, போதிய ஊடக வெளிச்சமின்றி, கடுமையான புறக்கணிப்புகளுக்கு நடுவில், ஊண் உறக்கமின்றி, சோர்வுறாது, அயராது களத்தில் புலியெனப் பாயும் உங்களின் கடின உழைப்பும், உறுதியும்தான் நாம் தமிழர் கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக உருமாற்றியது. அரசியல் சூழ்ச்சியால் சின்னம் பறிக்கப்பட்டபோது உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்புதான் நம்மை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்த்தி, விவசாயி சின்னத்தை நமக்கான நிரந்தரச் சின்னமாக்க உற்றதுணையாக நின்றது.
‘அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டும்தான்; அதிகாரம் மிக வலிமையானது’ என்கிறார் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதனை அடைந்துவிட்டால் அனைத்தும் மிக எளிமையானது என்கிறோம் நாம். ஆகவே, அங்கீகாரத்தை பெற்ற நாம் தமிழர் கட்சி, அடுத்த படிநிலையாக அதிகாரத்தை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது. தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை நெஞ்சில் சுமந்து நிற்கும் எளிய பிள்ளைகளாக, தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் உண்மையும் - நேர்மையுமாக நிற்கும் தமிழ்த்தேசியத் தத்துவக் கூட்டத்திற்கும், ஊழல், லஞ்சம், இலவசம், திரைக்கவர்ச்சி என்று நிற்கும் தீய திராவிடக் கூடாரத்திற்கும் இடையே நடைபெறும் அதிகாரப் போர்தான் இந்தத் தேர்தல்.
வளர்ச்சி அரசியலுக்கும், வெற்று விளம்பரக் கவர்ச்சி அரசியலுக்கும் இடையே நடக்கும் இப்போட்டியில் நாம் வரலாற்று வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, என் அன்புப் பிள்ளைகள் களத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் சந்தித்த அவமதிப்புகள், இழிசொற்கள், துரோகங்கள் யாவற்றையும் துடைத்தெறிய, அதிகாரத்தை வெல்ல வேண்டிய அதிமுக்கிய தேர்தல் இது என்பதை உணர்ந்து ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும். எனவே, முன் எப்போதும் இல்லாத வகையில் நாம் தமிழர் பிள்ளைகள் தங்களின் முழு ஆற்றலையும் ஒன்றுதிரட்டி, நம் உயிரினும் மேலான தலைவரையும் மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி, அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தங்களை முழுவதுமாக ஒப்படைத்துக் களப்பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
அதே நேரத்தில், மண்ணையும் மக்களையும் மீட்டுக் காக்க அயராது உழைப்பினை நல்கும் என்னிலும் இளைய என் தம்பி தங்கைகள், பேரன்பிற்குரிய என் பெற்றோர்கள் உள்ளிட்ட என் அன்பிற்கினிய உறவுகளுக்கு அண்ணன் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடு முழுவதும் தற்போது மிகக்கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே இத்தகைய கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், இனி வரும் நாட்களில் இன்னும் வெப்பம் பன்மடங்காக அதிகரிக்கக் கூடும். ஆகவே, தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என் அன்பு உறவுகள் காலை நேரத் தேர்தல் பரப்புரையை முற்பகல் 11 மணிக்கு முடித்துவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பின்னர் பகல் உணவையும், போதிய ஓய்வினையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச்சரியாக மாலை 4 மணிக்கு அன்பு உறவுகள் மீண்டும் பரப்புரையினைத் தொடங்கி இரவு 10 மணி வரை பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். பரப்புரைக்குச் செல்லும்போது அனைவரும் தண்ணீர் போத்தல்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். உடலுக்குக் குளிர்ச்சிதரும் பழங்களையும், நுங்கு, இளநீர், பதநீர், மோர் உள்ளிட்ட இயற்கைப் பானங்களையும், பரப்புரை இடை வேளைகளில் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்களிடம் நம்முடைய கருத்துகளையும், கொள்கைகளையும், ஆட்சி வரைவு திட்டங்களையும் கொண்டுசென்று வாக்குகளைப் பெறுவதில் காட்டும் வேகத்தையும், அக்கறையையும் உங்களின் உடல்நலனை கவனித்துக்கொள்வதிலும் காட்ட வேண்டும். அடுத்து வரும் 35 நாட்களும் களத்தில் இடையறாது பணியாற்ற உடல்நலன் சீராக இருப்பது மிக மிக அவசியம். நான் எப்போதும் சொல்வதுபோல, ‘நம்முடைய பாதுகாப்பே, நாம் பெரிதும் நேசிக்கும் நாட்டின் பாதுகாப்பு’ என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். முறையான திட்டமிடல், எளிதான பயணம், சீரிய செயல் இவையே, நம் கடின உழைப்பின் பயனை முழுமையாகப் பெற உதவிடும் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள்.
எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வழிதான், அது கடின உழைப்பு மட்டுமே!
உங்களின் உடல்நலப் பாதுகாப்பு கடின உழைப்பினை செலுத்த வழிவகுக்கும்!
உங்களின் சோர்வில்லாத கடின உழைப்பு உறுதியாக நம்மை வெல்ல வைக்கும்!
புரட்சி எப்போதும் வெல்லும்! நம்முடைய வெற்றி அதனைச் சொல்லும்!
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
நாம் தமிழர் !
அன்பின் நெகிழ்வுடன்
உங்கள் அண்ணன்
சீமான் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாடானை சட்டமன்றத் தொகுதி, மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி செல்வக்கனி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த செல்வக்கனி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி செல்வக்கனி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வே.அனந்தகுமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, மாணவர் பாசறையில் களப்பணியாற்றிவந்த வே.அனந்தகுமார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி வே.அனந்தகுமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி ம.சூர்யா அவர்களின் தந்தை ஐயா ம.மதியழகன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ம.மதியழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தேவகோட்டை ஜமாத் உறவுகளுடன் சந்திப்பு 14-03-2026
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் வழிபாடு
14-03-2026 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இந்தியாவின் அதி உயரிய இலக்கிய விருதான, ஞானபீடம் விருதினை இவ்வாண்டு பெறுவதற்கு தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம், ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.
பல்லாயிரம் ஆண்டுகால
மரபு செய்யுட்பாக்கள்
உயிர் கொள்ளும்
அடைகாப்பு..!
நூற்றாண்டு கண்ட
புதுக்கவிதைப் பூக்கள்
நடை பயிலும்
குயில் தோப்பு..!
மரபு கவிதை
விதிகள் மீறாமலும்
புதுக்கவிதை
மரபுகள் மாறாமலும்
தீந்தமிழ் திரையிசைப்
பாடல்கள் ஈன்று தரும்
இனிய யாப்பு..!
கருவாச்சிகளுக்கும் காவியம் எழுதி,
கள்ளிக்காடுகளுக்கும் இதிகாசம் எழுதி,
வடுகப்பட்டி முதல் வால்கா வரையில்
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் வடித்து
தமிழ் இலக்கியப் பீடத்தில்
பேரரசனாய் வீற்றிருக்கும்,
முத்தமிழ்ப் பேரறிஞர் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மணிமகுடத்தில் ஒளிவீசும் வைரமாய் ஞானபீடம் விருது எந்நாளும் மின்னிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
@Vairamuthu -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும்!
இறையாண்மை மிக்க ஈரான் நாட்டின் மீது, நோன்பு காலம் என்றும் பாராமல் அநியாயப் போரைத் தொடுத்த அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து வருவது வெட்கக்கேடானது. வல்லாதிக்க நாடுகளின் அதிகாரப் பசிக்காகத் தொடங்கப்பட்ட இந்த அநியாயப் போர், ஆதரவளித்த வளைகுடா நாடுகளை நேரடியாகவும், போரோடு தொடர்பில்லாத உலகின் ஏனைய நாடுகளை மறைமுகமாகவும் பாதிக்கத் தொடங்கியுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது.
இக்கொடும் போரினால் ஒவ்வொரு நாளும் கேட்கும் மக்களின் மரண ஓலம் மிகுந்த துயரத்தைத் தருகிறது. போரினால் பாதிக்கப்படும் இருநாட்டு மக்களும் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வால் தவித்துவரும் காட்சிகள் மிகுந்த வேதனைக்குரியவை. அதே சமயம் போருக்கு தொடர்பில்லாத உலகின் ஏனைய நாடுகளில் வாழும் மக்களும் எரிபொருள் இன்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது பரிதாபகரமானதாகும்.
ஈரான் நாட்டு உச்ச தலைவர் மதிப்பிற்குரிய மாவீரர் அயத்துல்லாஹ் கொமைனி
அவர்களை அநியாயமாக கொன்று, அந்நாட்டின் மீது திணித்த அநீதியான போரினை, இறையாண்மையைக் காக்கும் வலுவான எதிர்ப்புப்போராட்டத்தால், உலக நாடுகளின் மீதான போராக மாற்றியுள்ளது ஈரான் பெருந்தேசம். ஈரான் முதுகில் விழும் ஒவ்வொரு அடியும் உலக நாடுகள் ஒவ்வொன்றின் மீதும் விழும் அடியாக மாறியுள்ளது. வளைகுடா நாடுகளின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாக முடங்கி, ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டாலர் வர்த்தகம் நட்டமாகி, அந்நாடுகளின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. போரினை கண்டிக்காது அமைதி காத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இப்போது எரிபொருள் பற்றாக்குறையால் பெரும் இன்னலுக்கு ஆளாகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் மீதான அநியாயப் போரினைக் கண்டிக்காத ஒவ்வொரு நாடும் இப்போரின் குற்றவாளிகள்தான். நடுநிலைமை என்ற பெயரில் அமைதி காப்பதும் ஆபத்தானதாகும். உலகில் எங்கு அநீதி நடந்தாலும், அதை யார் செய்தாலும் நீதியின் பக்கம் நின்று கண்டிக்க வேண்டியது எந்த அளவிற்கு முதன்மையானது என்பதை இப்போரின் மூலம் உலக நாடுகள் உணர்ந்திருக்கும். கண்முன்னே நடக்கும் அநீதியைக் கண்டு, இதுவரை இருந்ததுபோல் இனி உலக நாடுகள் கண்டும் காணாமல் இருந்திட முடியாது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அத்தகைய ஒரு பாடத்தை ஈரான் பெருந்தேசம் இப்போரின் மூலம் உலகிற்கு புகட்டியுள்ளது.
இனியேனும் உலக நாடுகள் தங்கள் தவறை உணர்ந்து ஈரான் மீதான அநீதியான போரினை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். உடனடியாக அமெரிக்க - இஸ்ரேல் நாடுகளிடம் ஈரான் மீதான போரினைக் கைவிட ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, எரிபொருள் பற்றாக்குறையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளில், முதன்மையாக உள்ள இந்தியப் பெருநாடு, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளிடம் தமக்குள்ள நல்லுறவினை பயன்படுத்திப் போர் நிறுத்தம் ஏற்படவும், மீண்டும் அமைதி திரும்பவும் வழிவகுக்க வேண்டும்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவகங்கள் முடக்கம் உள்ளிட்ட அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்கு நியாயத்தின் பக்கம் நின்று அமைதிக்கான முன்முயற்சியை எடுப்பது ஒன்றே ஒற்றைத் தீர்வாகும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி அக்ரஹாரம் மாவட்ட மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி ம.சூர்யா அவர்களின் தந்தை ஐயா ம.மதியழகன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ம.மதியழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், மதுராந்தகம் அருகே கடந்த 09.03.26 இரவு 16 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தியும், சென்னை அடையாறில் 22 வயது கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியும் அதிர்ச்சியையும், பெரும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்கு, ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை நிகழ்வும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் நாளும் அரங்கேறுகின்றது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுநிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பிறகும் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததே கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அவலம் நிகழ காரணமாகியது. அதன் பிறகும் திமுக அரசின் தொடர் அலட்சியமே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரியில் 2 வயது
குழந்தையும், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும், தற்போது மதுராந்தகத்தில் 16 வயது சிறுமியும், சென்னையில் 22 வயது கல்லூரி மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்தேற காரணமாகும். திமுக ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட போகிறார்களோ என்ற பேரச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்காமல் இந்த குற்றங்களை ஒழிக்கவே முடியாது. மதுவையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கக்கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? இதுதான் பெண்களின் வாழ்வை முன்னேற்றும் திமுக அரசின் செயல்முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? தேர்தல் அறிவிக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே கூட்டணி பேரத்தில் காட்டும் ஆர்வமும் அக்கறையும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காட்டாதது ஏன்?
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்குகள் எத்தனை? அவற்றில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? எத்தனை வழக்குகள் கைவிடப்பட்டன? போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய வழக்குகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பம் என்பதிலிருந்தே அந்த சட்டத்தையும், பெண்களின் பாதுகாப்பையும், மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு.
1000, 2000, 2500 என்று உரிமைத்தொகை தரும் திராவிட கட்சிகள் பெண்களின் பாதுகாப்பிற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் அறிவிக்காதது ஏன்? பெண்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் உறுதிப்படுத்துவதே பெண்களுக்கு வழங்கும் உண்மையான உரிமையாகும்.
ஆகவே, விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை புரிந்து படுகொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி மற்றும் மதுராந்தகம் அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியையும், சென்னை அடையாறில் கல்லூரி மாணவியையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுங் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென
ஒன்றிய - மாநில அரசுகளைக்
கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்புச் சகோதரர் ஹரிதாஸ்- துர்காதேவி இணையரின் ஒன்றரை வயதேயான அன்புமகள் தனன்யா அரிய வகை முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால்[Spinal Muscular Atrophy – SMA (Type 2)] பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து விடுபட்டு, முற்றிலும் குணமடைய தேவைப்படும் மருந்தின் விலை இந்திய மதிப்பில் சுமார்
9 கோடி ரூபாய். நடுத்தரக் குடும்பத்தைச்
சேர்ந்த ஹரிதாஸ் & துர்காதேவி இணையர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நோய் தீர்த்து உயிர்காக்கும் ஊசியை செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாக்க முடியும்.
சிறிய வயதில் கொடுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் அன்புமகள் தனன்யாவிற்கு நடப்பு மார்ச் மாதத்திற்குள் மருந்தினை செலுத்திட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், விரைந்து 9 கோடி ரூபாய் திரட்ட வேண்டிய அவசர அவசியத் தேவை உள்ளது. பிஞ்சு குழந்தையின் உயிர் காத்திட மருத்துவ நிதியுதவிக்கான திரள் நிதி பரப்புரையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து அன்புமகள் தனன்யாவை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்ற உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
அரிய வகை முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் இன்னுயிர் காக்கும் மருந்தின் விலை எளிய மக்களால் செலுத்த முடியாத வகையில் 9 கோடி ரூபாய் என்ற அளவில் பெருந்தொகையாக இருப்பதை கருத்திற்கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவத்திற்கான முழு செலவையையும் ஏற்கும் சிறப்பு கொள்கை
முடிவை எடுக்க வேண்டும்.
தேவையற்ற இலவசங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கும் தமிழ்நாடு அரசு, ஏதுமறியா பிஞ்சு குழந்தைகளின் இன்னுயிர் காக்கும் இத்தகைய இன்றியமையாத மருத்துவச் செலவினை ஏற்பதில் எவ்வித தயக்கமோ, காலதாமதமோ செய்திடாது விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
வங்கி கணக்கு விபரம்:-
Ac No: 8215828115
INDIAN BANK
Ac Name: H D DHANANYA
IFSC CODE: IDIB000M318
MICR CODE: 611019011
GPAY : 84380 04274
தொடர்புக்கு: 9789514174 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ராஷ்டிரிய உலமா கவுன்சில் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் அக்ரம்கான் மற்றும் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் இன்று 11-03-2026 நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்தித்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சிக்கு தங்களது இயக்கங்கள் சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி - தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலும் பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும். எனவே, என் அன்பிற்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள்!
உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள்!
உங்கள் அனைவருக்கும் அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
"சங்ககிரி பகுதியில் பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும் என்ற அப்பகுதி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை, திமுக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
சங்ககிரியில் 20,000-க்கும் மேற்பட்ட பாரவுந்துகள் வாடகைக்கு இயங்கி வருகின்றன. பாரவுந்துகள் நிறைந்த பகுதி என்பதால், சங்ககிரியில் இயங்கி வரும் 1000-க்கும் மேற்பட்ட பாரவுந்து பழுதுபார்க்கும் பணிமனைகளை நம்பி, ஏறத்தாழ 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. சங்ககிரி முழுவதும் சிதறிக் கிடக்கும் பாரவுந்து பழுதுபார்க்கும் பணிமனைகளில் பெரும்பாலானவை தனியாருக்குச் சொந்தமான வாடகை இடங்களில் இயங்கி வருவதால், வருமானத்தில் பாதியை வாடகைக்கே செலவிடப்படும் நெருக்கடியான சூழல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த நிதிச்சுமைக்கு ஆளாகின்றனர்.
சங்ககிரியில் மாதந்தோறும் 2 கோடி ரூபாய் அளவிற்குப் பணிமனைக்கான வாடகைக்கே செலவிடப்படும் நிலையிலும்; பணிமனைகளில் சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லாமல் தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவது மிகுந்த கவலையளிக்கின்றது.
தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன், நியாயமான வாடகையில் ஒரே இடத்தில் 'ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்புப் பணி மையம்' அமைத்துத் தர வலியுறுத்தி, பாரவுந்து பழுது பார்க்கும் தொழிலாளர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன், அமைச்சர்கள் முதல் ஆட்சியர் வரை அதிகார மையங்களிடம் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். இருப்பினும், அதிகார மமதையுடன் திமுக அரசு இன்றுவரை அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பது, உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கும் கொடும்போக்காகும். இதற்குப் பெயர்தான் 'விடியல் தரும் திராவிட மாடல்' அரசா?
ஆகவே, சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்களின் நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசு உடனடியாக 'ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்புப் பணி மையம்' அமைத்துத் தருவதுடன், கொங்கணாபுரத்தில் பாரவுந்து வாகன பழுது பார்க்கும் சங்கத்தின் இலச்சினை பொருந்திய நினைவுக்கோபுரமும் அமைத்துத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் உணவின்றி சிக்கித்தவிக்கும் மீனவச்சொந்தங்கள் உட்பட தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கடும் போர் மூண்டுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
அரசுகளுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போரில் அதிகம் பாதிக்கப்படுவதும், பலியாவதும் அங்கு வாழும் அப்பாவி மக்கள்தான். ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசாவிலும், உக்ரைனிலும் நடைபெறும் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சம் மக்கள் பசியிலும் வறுமையிலும் உணவுக்காக அலைகின்ற காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றது. இந்நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையே தற்போது மூண்டுள்ள போரால் மேலும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் துயரமும் நிகழ்ந்தேறுகின்றது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து குடும்ப வறுமைச்சூழல் காரணமாகப் பொருளாதாரம் தேடி, இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்குப்
பணிக்குச் சென்றுள்ள தங்கள் உறவினர் நிலையறியாது அவர்களுடைய குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறிப்பாக ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற பல நூறு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அங்கிருந்து தாயகம் திரும்ப போதிய பணமின்றி தவித்து வருகின்றனர். இத்தனை பெரிய கடற்பரப்பு இருந்தும் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ வழியின்றி கடல்கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று மீன்பிடித்தொழில் செய்ய வேண்டிய அவலநிலை நிலவுவது வரலாற்றுப்பெருந்துயரம்.
தங்கள் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்ள முடியாது கண்ணீர் சிந்தும் மீனவச்சொந்தங்களின் நிலை மிகுந்த பரிதாபகரமானதாகும்.
ஆகவே, ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கித்தவிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டுவந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசும், வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சகத்தின் மூலமும், இந்திய ஒன்றிய அரசின் தூதரகங்கள் மூலமும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமெனவும், பயணச்செலவை ஒன்றிய – மாநில அரசுகளே முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி, இராமானுஜம் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த தலைமை ஊடகப்பிரிவு ஓட்டுநர் அன்புத்தம்பி ஆதி நாராயணன் அவர்களின் தாயார் அம்மா சரசுவதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா சரசுவதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் காவல்துறை விசாரணை மரணங்களை தடுக்கத்தவறி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவது பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 12 விசாரணை மரணங்களும், 2025ஆம் ஆண்டு 6 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது.
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில்,
தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் திமுக அரசு, காவல் விசாரணை படுகொலையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தான் என்ன? ஒன்றுமில்லையே! காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பதுதான் திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்.
சமூக விரோதிகளால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் போதாதென்று, குற்றவாளிகளை பிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரின் விசாரணையில் நடைபெறும் படுகொலைகளால் மக்கள் சிந்தும் வேதனைக் கண்ணீரே திமுக அரசின் அவல ஆட்சியை வீழ்த்தும் ஆயுதமாகும்!
மதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மனிதப் பேரவலத்தின் உச்சம்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில்
60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடுஞ்செய்தி
நெஞ்சை உலுக்குகிறது. திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் உலக மகளிர் நாளில் நிகழ்ந்துள்ள இக்கொடுமைகள் வன்மையான கண்டனதுக்குரியது.
குமாரபாளையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு சிறுமியின் நிலை குறித்து வெளியே தெரியாமல் மூடி மறைக்க முயல்வது வெட்கக்கேடானது. திமுக அரசு குற்றத்தை மறைப்பதில் காட்டும் ஆர்வத்தையும், அக்கறையையும் தடுப்பதில் காட்டியிருந்தால் சட்டம் ஒழுங்கு என்றைக்கோ சீரடைந்திருக்கும். ஏதும் அறியாத சிறுமிக்கு நிகழ்ந்துள்ள இக்கொடுமை அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித்தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய மனிதப்பேரவலமாகும். பெற்ற குழந்தைக்கு நேர்ந்த பெருங்கொடுமையைச் சொல்லி அழும் பெற்றோரின் கதறல் ஒலி
நெஞ்சைப் பிளக்கிறது.
தங்களின் அன்பு குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி நெஞ்சம் குமுறும் பெற்றோர்க்கு என்ன ஆறுதல் கூறி தேற்ற முடியும்? அப்பிஞ்சு நெஞ்சின் உள்ளத்தில் உண்டான கொடுங்காயம் வாழ்நாள் முழுவதும் வடுவாக நின்று வாட்டுமே? யார் அதற்கு மருந்திடுவது? வருங்காலத் தலைமுறைகளின் நெஞ்சத்தில் எதை விதைக்கின்றோம்? எவற்றை நாம் கற்பிக்கின்றோம்? யார் இப்பேரவலத்திற்குப் பொறுப்பேற்பது? திமுக அரசு பொறுப்பேற்குமா? திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்களா?
அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியரில், 70 வயது கணவரை கொன்று அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள துயர நிகழ்வு மற்றுமொரு கொடுமையாகும். குற்றவாளிகளை இதுவரை பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறுவதுதான் நிகழ்ந்த வன்கொடுமையை விடவும் மிகப்பெரிய வன்கொடுமை! வீட்டில் இருக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு இல்லை, வீட்டிற்கு வெளியே விளையாடும் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லையென்பது தமிழ்நாட்டில்
சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
திமுக ஆட்சியில் 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முகாம் தலைவராக இருந்த சகோதரர் சிவகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பல்லாவரத்தை அடுத்த திரிசூலத்தில் ஆறுமுகம், சதீஷ் ஆகிய இரு இளைஞர்கள் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. இத்தனை சமூகப்பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஆட்சியை, நல்லாட்சி, பொற்கால ஆட்சி, சாதனை ஆட்சி, யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதெல்லாம் வெட்கக்கேடானது. போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாது, மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான், நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாகும்.
ஆகவே, ஊத்தங்கரையில் கணவரை கொன்று 60 வயது மூதாட்டியையும், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை தர வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்தேறாமல் தடுக்க போதைப்பொருள் மற்றும் மது விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
வன்கொடுமைக்கு இலக்காகியுள்ள சிறுமி மற்றும் மூதாட்டிக்கு உரிய மருத்துவம் அளிப்பதுடன், உளவியல் ரீதியாக நம்பிக்கையுடன் மீண்டுவர தேற்றுவதும் அரசின் கடமையாகும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 7 வயது மகளும்,
60 வயது தாயும் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் -2026இல் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் (14 பெண்கள் - 14 ஆண்கள்) அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய மாபெரும் பொதுக்கூட்டம் மாசி 23 (07-03-2026) அன்று மாலை 04 மணியளவில் பாண்டிச்சேரி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்றது.
www.youtube.com/live/Fk1Ni2Y0XMw -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெண்மையைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!
உலகின் உயிராற்றலாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாளில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
“பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவிட முடியும்” என்கிறார் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர்!
"பெண்கள் ஒடுக்கப்படும் வரை எவராலும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டுப் பெண்கள் நடத்தப்படும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது." என்கிறார் ஆப்ரிக்க மக்களின் விடுதலைக்குப் போராடிய நெல்சன் மண்டேலா!
"எந்தவொரு நாடு பெண்களை மதிக்கவில்லையோ, அந்த நாடு எக்காலத்திலும் உயர்ந்த நிலையை அடைய முடியாது. ஒரு பறவை ஒரு இறக்கையை மட்டும் வைத்துக்கொண்டு பறக்க முடியாது என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்!
“தையலை உயர்வு செய்” என்கிறார் நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதி!
"மங்கையர் அறிவால் இந்த மாநிலம் உயரும்!" என்கிறார் புரட்சிப்பாவலர் தாத்தா பாரதிதாசன்!
‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழத்தாயகத்தில் சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முடைய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர்தம் பிள்ளைகள் அதனை தமிழ்நாட்டில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம்.
ஐக்கிய நாடுகள் அவை 2026-ஆம் ஆண்டு மகளிர் நாளுக்கான மையக்கருத்தாக "எண்ணியல் யுகத்தில் பாலின சமத்துவம்: பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் புதுமை" என்ற முழக்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே உலகில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்திடாத செயற்கரிய செயலாக தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தேர்தலில் சரி பாதி இடங்களில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி, உண்மையான பாலின சமத்துவம் என்பது பெண்களுக்கான அதிகாரமளித்தல்தான் என்ற உண்மையைச் செயலில் நிறுவியது. அது வெறும் சோதனை முயற்சியல்ல, சாதனை முயற்சி என்பதை அடுத்து வந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்து உலகிற்கு உணர்த்தியது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அந்த சாதனையைத் தொடர்கிறது நாம் தமிழர் கட்சி. இது பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி தரும் சலுகை அல்ல; பெண்களுக்கான உரிமையை பெண்களையே எடுத்துக்கொள்ளச் செய்யும் நம் இனத்திற்கான பெருமை.
அடிமைத் தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாக, அண்மைக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்வினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களுக்கு எதிரான இக்கொடுமைகள் ஒழிய பெண்களுக்கு அரசியல் அதிகாரப்பகிர்வை தருவது மட்டுமே நிலைத்த தீர்வாக அமையும். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளும் அரசோ மாதம் 1000 ரூபாய் தொகையைத் தருவதை மகளிர் உரிமைத் தொகை என்கிறது. ஏற்கனவே ஆண்ட கட்சியோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்கிறது. ஒரு நாளைக்கு அரசு வழங்கும் வெறும் 33 ரூபாய் தொகைதான் மகளிர்க்கான உரிமையா? அந்தத் தொகையும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான், வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் கிடையாது என்கிறது அரசு. எந்த வேலைக்குச் செல்லும் பெண் வீட்டில் வேலை செய்யாமல் இருக்கிறார்? உண்மையில் அவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்த குறைந்தபட்ச தொகையும் பெற தகுதி இல்லை என்பதை எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கிறது அரசு? மகளிர்க்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத்தொகையில் இல்லை. மக்கள் தொகையில் சரிபாதி உள்ள ‘மகளிர் தொகை’க்கேற்ப சம அதிகாரம் அளிப்பதே உண்மையான மகளிர் உரிமையாகும்.
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டும் சரிபாதி பெண்கள் அல்ல; கட்சி கட்டமைப்பிலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் முதல் மண்டலச் செயலாளர் வரை பெண்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குகின்றது நாம் தமிழர் கட்சி. உலகத்திலேயே பாலின சமத்துவத்தைக் கடைபிடிக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இதை ஏதோ வீண் பெருமைக்காகச் செய்யவில்லை. இது எங்களின் வரலாற்றுக் கடமை என எண்ணிச் செய்கிறோம்.
பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தரவேண்டும், எவ்வளவு தர வேண்டும் என்ற அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, சட்டங்களை ஆண்களே இயற்றுவது அல்ல பாலின சமத்துவம்; தங்களுக்குத் தேவையான சட்டத்தைத் தாங்களே இயற்றிக்கொள்ளும் அதிகாரத்தைப் பெண்களிடம் அளிப்பதுதான் உண்மையான பாலின சமத்துவமாகும். எனவேதான் நாம் தமிழர் கட்சி ஆணுக்குப் பெண் சமமல்ல; ஆணும் பெண்ணும் சமம்! என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து அரசியல் களத்தில் நிற்கிறது. அதன் அடுத்த படிநிலையாக பெண்கள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய வகையில் பெண்களுக்கெனத் தனிச் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையும் முன்வைத்து நாம் தமிழர் கட்சி போராடுகின்றது.
எமக்கு ஒரு பெருங்கனவு உண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும், இந்திய பெருநாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சரிபாதி பெண்கள் அமர்ந்து அவைகள் நடைபெற வேண்டும் என்ற பெருங்கனவு எனக்கு உண்டு. அந்த நாள் வருகின்ற நாளே இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் உண்மையான சம உரிமைப்பெற்ற நாளாகும். அதற்கான வரலாற்று வழிதடத்தை நாம் தமிழர் கட்சி தம்முடைய கட்சி கட்டமைப்பு முதல் தேர்தல் வேட்பாளர்கள் வரை சரிபாதி பெண்களை நிறுத்தும் செயல்களால் செப்பனிட்டு வருகிறது.
ஒரு நாட்டில் வாழும் குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல்; எனவே கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு பெறுவது மட்டுமல்ல; அதிகார மையமான அரசியலில் பெண்கள் சம வாய்ப்பை பெற்று சம பங்களிப்பை என்றைக்கு செய்கிறார்களோ அந்த நாள்தான் உண்மையான மகளிர் நாளாக அமையும்.
அத்தகைய பெருமைமிக்க நாள் விரைவில் மலர்ந்திட உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்!
பெண்மையை போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(1/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாலூரில் கேரள மாநில அரசு மலையாள மொழியில் எல்லை அறிவிப்புப் பலகை வைத்ததை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டம் நடத்தி அகற்றிய நிலையில், நேற்று மீண்டும் கேரள அரசு அத்துமீறி அறிவிப்புப் பலகை வைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அத்துமீறி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைப்பதை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, கேரள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தமிழ்நாட்டின் தாலூர் எல்லைக்குள் 200 மீட்டர் தூரம் அத்துமீறி நுழைந்து, அவ்விடம் வரை தங்களுக்கு சொந்தமானது என்றுகூறி கேரள மாநில அரசு மலையாள மொழியில் அறிவிப்பு பலகையை வைத்தது. தமிழக எல்லையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அப்பலகையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து அகற்றியதோடு, தமிழ்நாட்டின் எல்லையை காக்கத் தவறிய திமுக அரசை கண்டித்துக் கடும் எதிர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தது.
கேரள அரசு மீண்டும் அகற்றப்பட்ட அறிவிப்பு பலகையை வைக்க முயன்றபோது, நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் விழிப்படைந்த தாலூர் மக்களும் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராடி அதனை வைக்க விடாமல் மண்ணுரிமை மீட்டனர். அதன்பிறகு நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரிகள் அவ்விடத்தை அளந்து, அது கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தமிழகத்தின் எல்லை என்பதை உறுதிப்படுத்தியது. அதனையடுத்து கேரளா தனது ஆக்கிரமிப்பு முயற்சியைக் கைவிட்ட நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் கேரள அரசு தமிழக எல்லைக்குள் அறிவிப்பு பலகையும் பேருந்து நிலையமும் அமைக்க முயன்றதையும் நாம் தமிழர் கட்சி போராடி தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில், நேற்று மீண்டும் தமிழக எல்லைக்குள் தமிழ்நாடு அரசு தமிழில் வைத்த அறிவிப்பு பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்பு பலகையை அத்துமீறி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள மாநில அரசு கேரள காவல்துறையினரை குவித்து, தமிழக எல்லைக்குள் அத்துமீறி நடப்பட்ட அறிவிப்பு பலகையைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு எல்லை பலகையை காக்கத் தவறிய தமிழ்நாடு காவல்துறையோ, எல்லை மீட்புக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்துகின்றது. தமிழ்நாடு எல்லையைப் பாதுகாக்க திறனற்ற திமுக அரசு போராடும் நாம் தமிழர் கட்சியினரை அடக்கி ஒடுக்குவது ஏன்? இதுதான் திமுக அரசு மண்ணையும், மானத்தையும் காக்கும் முறையா?
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஒரு மரத்தைக்கூட வெட்ட அனுமதிக்காத கேரள மாநில அரசு, எந்தக் காலத்திலும் எவராலும் உருவாக்க முடியாத இயற்கையின் அருங்கொடையான தமிழ்நாட்டின் மலைவளத்தை கனிம வளங்களாக கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் வெட்டி ஏற்றப்படுவதை திமுக அரசு தடுத்து நிறுத்தாதது ஏன்? கேரளாவிலிருந்து தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் குப்பைகளும், மருத்துவக்கழிவுகளும் கொட்டப்படுவதையும் திமுக அரசால் தடுக்க முடியாதது ஏன்? மின்னிலக்க அளவீடு (டிஜிட்டல் சர்வே) என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு சொந்தமான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை கேரள எல்லைகளாகக் குறிப்பிட்டு அத்துமீறி எல்லைக்கல் நிறுவியபோதும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்தது ஏன்? முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக சென்ற தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதை திமுக அரசு தட்டிக்கேட்காது ஏன்? திமுக கூட்டணி கட்சிகள் ஆளும் கேரள அரசிடம் குறைந்தபட்ச பேச்சு வார்த்தைகூட திமுக அரசு நடத்தாது ஏன்? காங்கிரசிடமும், கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தேர்தலில் போட்டியிடும் இடங்களைத் தீர்மானிப்பதற்காக பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி கடும் பேரத்தில் ஈடுபடும் திமுக, அதில் அணுவளவு அக்கறையும் தமிழ்நாட்டின் உரிமையை மீட்கும் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் காட்டாதது ஏன்? இதுதான் தமிழ் மண்ணின் மீதும், மக்களின் மீதும் திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா?
தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகளின் கடந்த 60 ஆண்டுகால அவல ஆட்சியில்தான் கண்ணகி கோட்டத்தின் நில உரிமையையும், முல்லைப் பெரியாற்று நீர் உரிமையையும் கேரளாவிடம் தமிழ்நாடு இழந்தது. இன உணர்வும், மான உணர்வும் அற்ற இரு திராவிடக் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் விளைவே, தற்போது தமிழக எல்லையை தங்கள் எல்லைகளாக குறிப்பிட்டு அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் துணிவை கேரள மாநில அரசிற்குக் கொடுத்துள்ளது. இனியும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியை கேரளாவிற்கு தாரைவார்க்குமானால் அது ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, நீலகிரி மாவட்டம் தாலூரில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு அத்துமீறி வைத்துள்ள எல்லை பலகையை உடனடியாக அகற்றி, உடைத்து எறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பலகையை உடனடியாக நிறுவ வேண்டும். இதுபோன்ற எல்லை தாண்டிய அத்துமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கேரள அரசிடம் கடும் எதிர்வினை ஆற்றிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
உடனடியாக, கேரள அரசின் அறிவிப்புப்பலகை அகற்றப்படாவிட்டால் கூடலூர் மக்களைத் திரட்டி மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி தாலூர் எல்லையில் முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஆ.ஜஸ்டின் வளனரசு அவர்களின் தந்தை ஐயா அ.ஆல்பர்ட் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அ.ஆல்பர்ட் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி பகுதி பொறுப்பாளர் அன்புத்தம்பி குப்புசாமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றிவந்த தம்பி குப்புசாமி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி குப்புசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நீடாமங்கலம் நகரச் செயலாளர் அன்புத்தம்பி சி.பிரபு ( எ ) பிரகதீஸ்வரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த தம்பி சி.பிரபு ( எ ) பிரகதீஸ்வரன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சி.பிரபு ( எ ) பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴தற்போது நேரலையில்...
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை மண்டலங்களின் சார்பாக,
மாசி 20 (04-03-2026) அன்று மாலை 04 மணியளவில்
சென்னை - சைதாப்பேட்டை, சின்னமலையில்
(வேளச்சேரி சாலை)
‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டம் x.com/i/broadcasts/1dxYljaOEmoJX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
*தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்' என்று கற்பித்த ஐயா வைகுண்டரின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!*
முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார்!
'கோயிலுக்குள் நுழையாதே தீட்டு' என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்த கோயிலே எனக்கு தீட்டு என்று முழங்கி, 'கண்ணாடி முன் நின்று, உன்னை நீயே வழிபடு! நீதான் கடவுள்!' என்று தனிவழியைத் தோற்றுவித்த உண்மையான மெய்யியல் பேரறிஞர்!
பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னுடைய சொந்த நிலத்தில் தனிக் கிணறு வெட்டி, அதில் அனைத்து மக்களையும் நீர் எடுக்க அனுமதித்து, அதையே பொதுக்கிணறாக்கிய உண்மையான பொதுவுடைமைவாதி!
முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளைத் தகர்க்க, அதைத் தலையில் கட்டிக்கொள்ளச் செய்து, தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திய உண்மையான சமயப்புரட்சியாளர்!
'தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்' என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!
ஐயா வைகுண்டர் அவர்கள் தமிழ் மண்ணில் தோன்றியத் திருநாளில், ஐயாவின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைத்து தமிழ் மக்களால் வணங்கப்பெறும்
போற்றுதற்குரிய
ஐயா வைகுண்டரின் அருட்கொடையை நினைந்து போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
சுற்றுச்சூழலை சீர் கெடுக்காத மாற்று மின் பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்வின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு திமுக அரசு அனுமதித்தது எப்படி? தமிழ்நாட்டில் ஏற்கனவே பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் திமுக அரசு பாதுகாக்கும் முறையா?
அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்ககூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாங்குநேரியில் போதை கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் இருவர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்த துயர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில்
9 பேர் கொண்ட போதை கும்பல் அப்பாவி பொதுமக்களைக் கொடூர ஆயுதங்களால் தாக்கிய துயர நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. போதைக்கும்பலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயமடைந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பன்மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் புழக்கத்தால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. போதைக்கும்பலின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரர் ஜான் மற்றும் வடமாநிலத் தொழிலாளர் இருவரின் குடும்பத்திற்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய உயர் மருத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு உயிர் காக்க வேண்டும்.
இக்கொடூர கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் போதையிலிருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள இக்கொடூர குற்றத்திற்கு மூல காரணமாகும். தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து படுகொலைகளும், வன்முறை நிகழ்வுகளும் முன்பகையால் திட்டமிட்டு நடப்பவை என்று காரணம் கற்பித்த திமுக அரசு, எந்தவித காரணமும் இன்றிப் போதைக்கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான இப்படுகொலைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது? அண்மையில் தலைநகர் சென்னையில் பீகார் தொழிலாளியின் குடும்பம் மொத்தமும் மதுபோதை கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட துயரம், நாங்குநேரியில் நடைபெற்றுள்ள இக்கொடூர நிகழ்வும் தமிழ்நாடு முழுவதுமே போதைப்பொருள் புழக்கத்தால் முற்றுமுழுதாக சீர்கெட்டுள்ளதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. நாட்டில் நடக்கும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையைத்தான் திமுக அரசால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அரசு நடத்தும் மதுக்கடைகளை மூடுவதில் திமுகவிற்கு என்ன தயக்கம்? நாட்டு மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை விடவும் அரசின் வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா?
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும், போதைப்பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டுமென்று தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி போராடி வருகின்றது. ஆனால், ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை மக்கள் முற்று முழுதாக இழந்துவிட்டனர். கட்டுக்கடங்காது நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையும், அதன் காரணமாக நடைபெறும் கொடூர படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியம் மீதமிருக்கும் நாட்களில் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொள்ளப்போகிறதோ என்று மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்படுத்தாது, தமிழ்நாட்டை பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றி நிறுத்தியுள்ள திமுக அரசிற்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இக்கொடிய குற்றத்தில் ஈடுபட்ட போதைக்கும்பலை தமிழ்நாடு காவல்துறை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கிராமப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஊர்ப்புற நூலகர்களில் பெரும்பாலானோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களைப் பல ஆண்டுகளாக அலைக்கழிப்பது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இயங்கிவரும் நூலகங்களில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக, ஏறத்தாழ 1512 நூலகர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களை, தற்போதுள்ள சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து, காலமுறை ஊதியத்திற்கு மாற்றிப் பணி நிரந்தரம் செய்யுமாறும், உரிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கிடுமாறும் கோரி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், முந்தைய அதிமுக அரசு அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வயிற்றில் அடித்தது. ஊர்ப்புற நூலகர்களுக்கு அதிமுக அரசு செய்த அதே துரோகத்தை திமுக அரசும் செய்து வருவது பெருங்கொடுமையாகும்.
ஊர்ப்புற நூலகர்கள் கடந்த 17 ஆண்டுகளாகப் பணியாற்றியும்கூட, இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாததால் அவர்கள் அரசு ஊழியர்களாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கக்கூடிய விழாக்கால ஊக்கத்தொகை, பணிக்கொடை, பணப்பலன், உரிய ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு ஆகியவை ஊர்ப்புற நூலகர்களுக்கு கிடைக்கப்பெறாமல் தவித்து வருகின்றனர். ஒரு நூலகம் திறக்கப்படும்போது பல சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற பொன் மொழிக்கு ஏற்ப, அறிவை வளர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டு வரும் நூலகர் பெருமக்களை வறுமையில் வாடவிடுவதும், அடிப்படை உரிமை கேட்டு வீதியில் இறங்கிப் போராடவிடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
உள்ளாட்சித்துறை சொத்துவரியில் மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு 2% ஆக இருந்த சொத்துவரி தற்போது 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே சொத்துவரி 2000 கோடியாக உள்ள நிலையில் அதில் நூலக வரி 200 கோடியாகும். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் மேலும் 1000 கோடி ரூபாய் வருமானம் நூலகங்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்திடும்போதிலும், வெறும் 1500 நூலகர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக அரசு மறுப்பது, அறிவை வளர்க்கும் நூலகர் பெருமக்களின் வயிற்றில் அடிக்கும் செயலன்றி வேறென்ன? ஒவ்வொரு மாவத்திலும் கலைஞர் நூலகம் அமைக்க தலா 500 கோடி ரூபாய் செலவிடும் திமுக அரசு, கிராமப்புற கிளை நூலகங்களை தரம் உயரத்தாமலும், நூலகர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமலும் தொடர்ந்து ஏமாற்றி வருவது ஏன்? இதற்குப் பெயர் திராவிட மாடல் அல்ல கொடுங்கோன்மை மாடல்!
ஆகவே, தமிழ்நாடு அரசு ஊர்ப்புற நூலகர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து உரிமைகளும் நூலகர் பெருமக்களுக்கும் கிடைக்கவும் ஆவன செய்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!
இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது.
*உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. ‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நாம் ஏற்க வேண்டிய மாந்தநேய கோட்பாடு.* மாறாக இந்நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை தவறாகக் காட்டி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சாதியும், மதயும் எப்படி ஒரு நாட்டில் அரசியலாகும்?. பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால், ஒழுக்கமும், பண்பாடும் இருக்காது. அதேபோன்று சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால் அந்த நாட்டில் மனிதம் என்பதே மரித்துபோய், மக்களுக்கானசேவை என்பதே இல்லாமல் போகும். நாட்டின் குடிகளுக்குள் பகை ஏற்பட்டால் தீர்த்து வைத்து, சமாதானம் ஏற்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களே, சாதி, மதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் எதைச் சாதிப்பார்கள்? மதத்தைப் பார்ப்பவர்கள் மனிதத்தை எப்படிப் பார்ப்பார்கள்? படிக்கத் தரமான கல்வி இல்லை, குடிக்கத் தூய குடிநீர் இல்லை, தலைநகரிலேயே தூய காற்று இல்லை. அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி தின்றுவிட்டு அதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியும் எழுந்துவிடாது, மக்களின் கண்ணை மறைப்பதற்காகவே, தொடர்ச்சியாகச் சாதிப்போதை, மதப்போதை, சாராயப்போதை, இதைப்போன்று திரைபோதையும் பின்புலத்திலிருந்து ஆட்சியாளர்களால் மக்களுக்குள் ஏற்றப்படுகிறது. மதப்பிரிவினையை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பாஜக ஆளும் மாநில அரசுகள் வரி தள்ளுபடி செய்து ஊக்கப்படுத்துவதும், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் அதியுயர் அமைச்சர்களே ஆதரித்து விளம்பரம் செய்வதும், விருது கொடுப்பதும் நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் சிதைக்கவே வழிவகுக்கும்.
இசுலாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன? அதே போன்று நிகழ்வுகள் நடந்து நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதா? நடக்காதவற்றைத் திரைப்படமாக எடுப்பவர்களுக்கு, நம் கண்முன்னே நடைபெற்ற மணிப்பூர் கலவரத்தையும், குஜராத் கலவரத்தையும் திரைப்படமாக எடுக்கும் துணிச்சல் உண்டா? குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைப் பிபிசி நிறுவனம் எடுத்தபோது அதைத் திரையிட பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்?
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ்டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இது மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் உள்நோக்கமுடையது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும் காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை. படைப்புச்சுதந்திரத்தைவிட முக்கியமானது இந்த நாட்டு மக்களின் உணர்வும், உரிமையும், ஒற்றுமையும், ஒருமைப்பாடுமாகும். அதைச் சீர்குலைக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கலை மனங்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களைத் துண்டாடுவதாக இருக்கக்கூடாது. இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த கடந்த 12 ஆண்டுகளில் இசுலாமியர்களையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுப்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது எதேச்சையானதல்ல. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது.
இந்த அளவிற்கு மதவெறுப்பையும், மனித வெறுப்பையும் கடைபிடிக்கும் எவரும் கிறித்துவ, இசுலாமிய நாடுகளோடு தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? உலகம் முழுவதும் சுற்றிவந்து ஒவ்வொரு கிறித்துவ, இசுலாமிய நாடாக ஓடோடிச் சென்று நட்பு பாராட்டும் நாட்டின் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? மோடி அரசு இசுலாமிய நாடுகளுக்கு மாட்டுக்கறியை ஏற்றமதிசெய்து, எரிபொருளை இறக்குமதி செய்வதை எதிர்த்து என்றைக்காவது போராட்டம் நடத்தியதுண்டா? இசுலாமிய – கிறித்துவ நாடுகளுடன் வணிகம், தொழில், இராணுவம் என்று ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இங்கு வாழும் இசுலாமிய, கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது ஏன்?
'கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று திமுக அரசிற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா? இல்லையா? அதன்பிறகும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது ஏன்? தமிழ்நாட்டை உண்மையிலேயே ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா?. இசுலாத்தையும், இசுலாமிய பெருமக்களையும் இழிவுப்படுத்தும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தை தடை செய்யக் கேரள மாநில அரசு நீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தும் நிலையில், அத்திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு முழுதும் திரையிட திமுக அரசு அனுமதிப்பது ஏன்? இது குறித்து, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள இசுலாமிய அமைப்புகள் இதுவரை வாய்த் திறவாமல் கள்ள அமைதிகாப்பது ஏன்? ஓரிரு சட்டமன்ற இடங்களுக்காக ஒட்டுமொத்த இசுலாமிய மக்களின் உரிமையையும் அடகு வைத்துவிட்டீர்களா? கிறித்துவ மதக் கோட்பாட்டை இழிவுப்படுத்திய டாவின்சி கோட் திரைப்படத்தை ஐயா கருணாநிதி அவர்களும், இசுலாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்த விசுவரூபம் திரைப்படத்தை அம்மையார் ஜெயலலிதா அவர்களும் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதித்த வரலாற்றைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துத் தமிழ்நாடு அரசு ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், எப்படி ‘கேரளா ஸ்டோரி1’ திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி போராடி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தியதோ, அப்படி ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
என் அன்புச்சொந்தங்கள் குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் இத்திரைப்படத்தை முற்று முழுதாகப் புறக்கணிப்பதோடு, திரைப்படம் திரையிடப்படாமல் பெருந்திரளாகத் திரண்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்ச் சமூகத்திற்காகப் பன்னெடுங்காலமாகப் போராடி வரும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அப்பா கோ.க.மணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைத் தொடர்ந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மீனவப்பெருமக்கள் சாகும்வரை பட்டினிப்போராட்டம் முன்னெடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் உடனடியாக மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவ மக்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
இராதாபுரம் அடுத்துள்ள தோமையார்புரம் கடற்கரை கிராமத்தில் ஏறத்தாழ 160க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மீனவச் சொந்தங்கள் நாட்டுப் படகின் மூலம் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தோமையார்புரத்தில் முறையான தூண்டில் வளைவு இல்லாத காரணத்தால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அவலநிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு சுவர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகள் காரணமாக தோமையார்புரத்தில் கடல் அரிப்பு அதிகமாகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்திக் கடந்த 15 ஆண்டுகளாக மீனவச்சொந்தங்கள் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தம், பட்டினிப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாகப் போராடி வரும் தோமையார்புரம் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆளும் திமுக அரசு நிறைவேற்ற முன்வராதது, மீனவ மக்கள் மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது.
மாண்புமிகு தமிழ்நாட்டின் சபாநாயகர் ஐயா அப்பாவு அவர்களின் சொந்த தொகுதியான இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவ மக்களையே வாழ்வாதாரக் கோரிக்கைக்காக இத்தனை ஆண்டுகள் அலைக்கழிப்பது ஏன்? கடந்தமுறை போராட்டம் நடத்தியபோது முதலமைச்சர்வரை அழைத்துச்சென்று அலைக்கழித்து, மீன்பிடி தூண்டில் அமைக்கப்படும் என்று மாண்புமிகு சபாநாயகர் அப்பாவு அவர்கள் அளித்த வாக்குறுதி என்னானது? மீனவ மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் திமுக அரசிற்கு இத்தனை அலட்சியம் ஏன்? இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? எளிய மக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? பெருங்கொடுமை!
ஆகவே, திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரம் மீனவச் சொந்தங்களின் 15 ஆண்டுகாலக் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் நாம் தமிழர் கட்சி மீனவச்சொந்தங்களுக்கு ஆதரவாக மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை விரைவில் முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
தங்களின் வாழ்வாதார கோரிக்கைக்காக மீனவ மக்கள் நடத்தும் அறப்போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து, உரிமை வென்றிட துணைநிற்கும். எனினும் தற்போது கல்லூரி மாணவிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட எம்மீனவச் சொந்தங்கள் சாகும்வரை பட்டினிப்போராட்டங்களை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல. உரிமைக்கான போராட்டம் அனைத்தும் உங்களின் நலமிக்க வாழ்விற்கு எனும்போது, உயிரை இழந்து உரிமையை பெற போராட்டம் நடத்தும் கடுமையான போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டுமென உங்கள் மீதான அக்கறையுடனும், அன்புடனும் கோருகிறேன். நாம் அனைவரும் இணைந்து போராடி தூண்டில் வளைவினை உறுதியாகப் பெறுவோம்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை மண்டலங்களின் சார்பாக,
மாசி 20 (04-03-2026) அன்று மாலை 04 மணியளவில்
சென்னை - சைதாப்பேட்டை, சின்னமலையில்
(வேளச்சேரி சாலை)
‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி - தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலும் பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும். எனவே, என் அன்பிற்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள்!
உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள்!
உங்கள் அனைவருக்கும் அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழர் இன அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியம் என்ற தன்னகரில்லா கோட்பாட்டை முன்னிறுத்தி தன்னலமில்லாமல் தொடர்ந்து களத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோபிசெட்டிபாளையத்தில் 01-03-2026 அன்று நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுவில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதாக தீர்மானம் இயற்றியிருப்பது மிகப்பெரிய பெருமையையும் , பேருவுவகையையும் எங்களுக்கு அளிக்கிறது.
தமிழ்த் தேசிய தத்துவக் களத்தில் எங்களது முன்னத்தி ஏராக தமிழ்த் தேசிய இன நலனுக்காக எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த பெருமக்களின் இந்த ஆதரவு நாம் தமிழர் கட்சியின் தொடர் இனப்பணிக்கு கிடைத்திருக்கிற மகத்தான விருதாகவும், தமிழர் இன உரிமை அரசியல் நகர்வில் ஒரு மைல் கல்லாகவும் கருதி பெருமிதம் அடைகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழர் இன நலன்களுக்காக போராடி வருகிற எங்களுக்கு, பேரறிவும் பெரும் தொண்டும் நிரம்பிய எங்களது மூத்தவர்கள் அளித்திருக்கிற பெருமைமிக்க அங்கீகாரமாக கருதி நெஞ்சம் மகிழ்கிறோம்.
இந்த தீர்மானத்தை இயற்றிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் எம் பெரு மதிப்பிற்குரிய தமிழ்த் தேசிய தத்துவ பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்த் தேசிய பேரறிஞர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களுக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், வரலாற்றுப் பெருமை வாய்ந்த சிறப்பு பொதுக் குழுவில் பங்கேற்ற பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் , மனம் நிறைந்த நன்றிகளை நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது. நாம் தமிழர் கட்சியின் மீது தமிழ்த் தேசியப் பேரியக்கம் கொண்டிருக்கின்ற பெரும் நம்பிக்கையை எப்போதும் நாங்கள் காப்பாற்றுவோம் என்பதை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உறுதியாக
தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் தமிழர் இன அரசியல் களத்தில் இன்னும் தனித்துவத்தோடும், எவ்வித சமரசம் இல்லாமலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது.
எங்களது பகைவர் எங்கோ மறைந்தார்..!
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
அன்பு நிறைந்த நன்றியுடன்...
செந்தமிழன் சீமான் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கிராம உதவியாளர்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் கிராம உதவியாளர்களின் பணிகளானது மிகமிக இன்றியமையாததாகும். தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 12,500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் பணியிடங்களில், 1500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் போக, தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், பணியாற்றி வருகின்றனர். கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல், அரசின் சான்றிதழ்களைப் பெறுதல், கிராமத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்களைப் பதிவு செய்தல், நிலவரி உள்ளிட்ட உள்ளூர் வரிகளை வசூலித்தல், கிராமக் கணக்குகளை பராமரிப்பதிலும், நில அளவை ஆவணங்களைச் சரிபார்ப்பதிலும், பொதுமக்கள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களுக்கான உண்மைத்தன்மையை உறுதி செய்தல், நிலங்களை அளவீடு செய்ய நில அளவையர்களுக்கு உதவி செய்தல், அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவுதல், புயல், வெள்ளம் அல்லது விபத்து போன்ற காலங்களில் பாதிப்புகளை உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுதல், கிராமத்தில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து வட்டாட்சியர் மற்றும் காவல் துறைக்குத் தகவல் அளித்தல், நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் தகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தல், வறட்சி அல்லது இயற்கைச் சீற்றங்களால் பயிர் சேதம் ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களைக் கணக்கெடுத்தல், கிராம சபை மற்றும் இதர அரசு கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளை மேற்கொள்வதில் கிராம நிர்வாக அலுவலருக்கு, கிராம உதவியாளர்களே பெருந்துணையாகத் திகழ்கின்றனர். இரவு பகல் பாராமல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களையும் பொருட்படுத்தாது மக்களுக்கும் அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்து பெருந்தொண்டு ஆற்றும் கிராம உதவியாளர்களின் பணி மிகுந்த போற்றுதற்குரியது.
தன்னலம் கருதாது மக்கள் நலன் காக்கும் கிராம உதவியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையை நிறைவேற்றித் தர வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். அதனைச் செய்யாமல் கடந்த 5 ஆண்டுகாலமாக திமுக அரசு ஏமாற்றி வருவது கிராம உதவியாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். தங்களின் உரிமைக்காகக் கிராம உதவியாளர்களை வீதியில் இறங்கிப்போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது கொடுங்கோன்மையாகும். மக்களுக்கும், அரசுக்கும் அளப்பரிய பணிகள் செய்யும் கிராம உதவியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? கிராம உதவியாளர்கள் பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் காலமுறை ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றுவது ஏன்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதற்குப் பெயர்தான் விடியல் அரசா? பெருங்கொடுமை!
ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கிராம உதவியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளான, காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தல், கிராம உதவியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை விரைந்து நிரப்புதல், 10 ஆண்டுகள் பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி வருவாய் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி நேரத்தை முறைப்படுத்தல், பட்டப்படிப்பு முடித்த கிராம உதவியாளர்களுக்குத் தகுதிக்கேற்ப உயர் பதவிகள் வழங்குதல், மணல் கடத்தல் தடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற களப்பணிகளின் போது கிராம உதவியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க 'சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டம்' இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தன்னுடைய இனிய குரல் வளத்தாலும், தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரை கவரும் கவின்மிகு தோற்றத்தாலும், தமிழ்த்திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரமாய் ஒளிர்ந்து ரசிகர்களால் நெஞ்சம் நிறைந்து நேசிக்கப்பட்ட சிம்மக்குரலோன்..!
கவலை தீர்க்கும் கலைப்பணி மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் பல செய்த வள்ளல்..!
ஆங்கிலேயரையும் தன் நடிப்புத்திறனுக்கு அடிமையாக்கிய ஆற்றல் மிகு கலைஞர்..!
முதன் முதலாக ஓராண்டைக் கடந்து திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமான சிந்தாமணி தொடங்கி, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து திரையிடப்பட்ட ஹரிதாஸ் வரை புகழ்மிக்க திரைக்காவியங்கள் பல தந்து சரித்திர சாதனை படைத்த வெற்றி நாயகன்..!
நம்முடைய தாத்தா, ஏழிசை ஏந்தல் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் எனும் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களின் காலத்தால் அழியாத கலைப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புதியதோர் உலகம் செய்வோம் –
கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
என் பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் இறைவனை எண்ணி உணவும் நீரும் துறந்து நோன்பு நோற்கும், புனிதமான ரமலான் மாதத்தில், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மிகுந்த கவலையையும், போர் பதற்றத்தையும் அளிக்கிறது.
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகளைத் தீரத்துடன் எதிர்த்து நிற்கும் ஈரான் பெருந்தேசத்திற்கும் இடையே மூண்டுள்ள கடும் போரில், இருபுறமும் உள்ள பல நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் செய்திகள் பெருந்துயரத்தை தருகிறது. அதுமட்டுமின்றி, இப்போருக்கு நேரடி தொடர்பில்லாத ஐக்கிய அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நடைபெறும் ஏவுகணை தாக்குதல்களும், அங்குப் பல்லாயிரக்கணக்கில் பணிபுரிந்து வரும் என்னரும் தமிழ்ச்சொந்தங்கள் உட்படப் பல இலட்சக்கணக்கான மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ள செய்திகளும் இதயத்தைக் கனக்கச்செய்கிறது. என் நினைவுகள் முழுவதும் வறுமை காரணமாக வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் சென்று, தற்போது பெரும் பதற்றத்தில் உள்ள என்னரும் தம்பி தங்கைகள் மற்றும் அவர்களின் நிலையை எண்ணி தமிழ்நாட்டில் தவித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர் பற்றியே உள்ளது. என் உயிருக்கினிய தம்பி தங்கைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது துணிவுடனும், மன உறுதியுடனும் இருங்கள். ஈழத்தாயகத்தில் போர்ச்சூழலை நேரில் கண்டு, கடந்து வந்தவன் என்பதால், உங்களின் மனநிலையை என்னால் முழுமையாக உணர முடிகிறது. இதைவிடக் கடுமையான போரினை எதிர்கொண்ட இனத்தின் பிள்ளைகள் நாம். நம்பிக்கையுடன் கவலை இன்றி இருங்கள். விரைவில் இப்போர் முடிவுக்கு வந்து, இயல்பு நிலை திரும்பும். தாங்கள் வசித்து வரும் நாடுகள் மற்றும் அந்தந்த நாடுகளில் இருக்கும் நம் நாட்டு தூதரகங்கள் தரும் அறிவுறுத்தல்கள் படி பாதுகாப்பாக இருங்கள். தமிழ்நாட்டில் அச்சத்தில் ஆழ்ந்துள்ள உங்கள் பெற்றோருக்கும், மனைவி, குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், ஆறுதலும் பெரும் நம்பிக்கையும் தாருங்கள். நீங்கள் தரும் துணிவே வெகுதொலைவில் கவலை தோய்ந்து தவித்து நிற்கும் அவர்களை மனதளவில் வலிமைப்படுத்தும்.
இந்திய பெருநாடு இருபுறமும் உள்ள ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்க நாடுகளிடம் பேசி போரினை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர, உடனடியாக அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். ஐநா அவையும் ஐரோப்பிய நாடுகளும் ஏற்படும் பேரழிவைத் தடுக்க, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முனைய வேண்டும்.
விரைவில் இக்கொடியப் போர் முடிவுறட்டும்!
ஆதிக்கமும், ஆக்கிரமிப்பும், அடிமை நிலையும் அடியோடு ஒழியட்டும்!
புதியதோர் உலகம் செய்வோம் –
கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் கேட்போம்
புனிதமோடு அதையெங்கள் உயிரென்று காப்போம்!
-புரட்சிப்பாவலர் தாத்தா பாரதிதாசன் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைப் புரிந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
மாசி 23 07-03-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு,
பாண்டிச்சேரி மாநிலத்தினுடைய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்
இடம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடல் (முருகா திரையரங்கம் அருகில்)
பாண்டிச்சேரி இன உறவுகள் எல்லோரும் மறக்காமல் கூடுவோம்! மாற்றத்தை நாடுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
donate.naamtamilar.orgThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி
மஞ்சூர் கிளைத் தலைவர் கோ.முருகன் அவர்களின் தந்தை ஐயா கோபால் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி முருகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கோபால் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஊர்க்காவல் படையினர் அனைவரையும் உடனடியாக
பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2,800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் ஊர்க்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது முதல் பாதுகாப்புப் பணி வரை அனைத்துவகைக் காவல் பணிகளிலும் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். புயல், வெள்ளம் போன்ற நெருக்கடி சூழ்ந்த இயற்கைப் பேரிடர் காலங்களிலும், தேர்தல் மற்றும் பெருந்திருவிழாக் காலங்களிலும் இரவு பகல் பாராத அவர்களின் அர்ப்பணிப்புமிக்கப் பணியென்பது மிகுந்த போற்றுதற்குரியது.
குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலும், தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதிலும் ஊர்க்காவல் படையினரின் ஓய்வறியாத உழைப்பு என்பது ஈடு இணையற்றதாகும். ஆனால் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றுவரை வழங்கப்படவில்லை பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் வாடும் ஊர்க்காவல் படையினர், குடும்ப வறுமை தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 2017ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், நாளொன்றுக்கு 150 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, 560 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டது.
ஆனால், அதுவரை 25 நாட்களாக இருந்த பணிநாட்களை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து முந்தைய அதிமுக அரசு வஞ்சித்தது. பின்னர், பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்தபோதும் அது போதுமானதாக இல்லை. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஊர்க்காவல் படையினரின் பணி நாட்கள் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது பச்சைத் துரோகம் செய்ததால், ஊதியம் உயர்ந்த பிறகும், அதன் முழுப்பயனை பெறமுடியாமல் ஊர்க்காவல் படையினர் இன்றுவரை தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதுதான் கொடுமையின் உச்சம். அதுமட்டுமின்றி, வெறும் 10 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் ஊர்க்காவல் படையினர் ஊதியமின்றி மாதம் முழுவதும் வேலை செய்ய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது.
கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு 18000 ரூபாய் அளவுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உரிய ஊதியம் வழங்கப்படாததோடு, அவர்களுக்கென எவ்வித ஊக்கத்தொகையோ, ஓய்வூதியமோ இல்லாமல் பணிபுரிய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊர்க்காவல் படையினருக்கான பணியை வரன்முறைப்படுத்த உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும், உரிய மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கத் தவறியதே தற்போது ஊர்க்காவல் படையினர் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் முதன்மைக் காரணமாகும்.
ஆகவே, ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமெனவும், அவர்களது பணி நாட்களை மாத முழுமைக்கும் உயர்த்தி காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், காவலர்களுக்கு வழங்கப்படுவதுபோல் பயணப்படி, ஊக்கத்தொகை, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஊர்க்காவல் படையினருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.ப.மதன் அவர்களின் பாட்டி அம்மையார் பாப்பாத்தி அம்மாள்
அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து வாடும் தம்பி மதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் பாப்பாத்தி அம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு நிதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத்தொகுதி சத்திரக்குடியில் 33 குழந்தைகள் உட்பட 45 பேர் பயணித்த தனியார் பள்ளி வாகனம் மீது கருங்கற்கள் ஏற்றி வந்த கனரக வாகனம் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயமடைந்தோடு, அதில் பயணித்த 35 குழந்தைகளும் உடலின் வெவ்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இத்துயர நிகழ்வு தொடர்பாக கனரக வாகன ஓட்டுநர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பிற்கான துயர்துடைப்பு நிதியை வழங்க கனரக வாகன உரிமையாளரோ, அரசோ வழங்க முன்வரவில்லை என்பது கண்டனத்துக்குரியது. இதனால் சத்திரக்குடி விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ஆகவே, சத்திரக்குடி தனியார் பள்ளி வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய உயர் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதி, சேக்காடு மாவட்ட பொறுப்பாளர் அன்புத்தம்பி நிஜந்தன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த தம்பி நிஜந்தன் அவர்கள்
நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பி நிஜந்தன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி நிஜந்தன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருத்தணி நகரின் பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையத்தின் பெயரை, கருணாநிதி பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு கைவிடாவிட்டால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu @mkstalin
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, ஐயா கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு ஐயா கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய திமுக அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அறிவித்தது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையத்தின் பெயரையும், ஆடுதுறை தாத்தா காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடியின் பெயரையும் கருணாநிதி பெயரில் எதேச்சதிகாரமாக திமுக அரசு மாற்றுவதை நான் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட பிறகு திமுக அரசு பின்வாங்கியது.
கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்த்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருவது என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும். அக்கொடும்போக்கின் நீட்சியாக தற்போது, திருத்தணி நகரில் அமைத்திருந்த எல்லை காத்த மாவீரர்
ம.பொ.சிவஞானம் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையத்தின் பெயரை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்ற முயல்வது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். ஐயா கருணாநிதிக்கும், திருத்தணிக்கும் என்ன தொடர்பு உள்ளது? அவரது பெயரை சூட்ட வேண்டிய அவசியமென்ன?
தன்னிகரில்லா தமிழ்ப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை தம் எழுத்தாலும், சொற்பொழிவுகளாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருந்தகை. தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகு சுதந்திர அரசியல் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டென உரைத்து, தமிழ்த்தேசிய அரசியல் காக்க தமிழரசு கழகம் கண்ட தன்மானத்தமிழர், Ôதலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்Õ என்று காத்திட்ட தீரர். திருத்தணியை அரசியல் பெரும்போர் நடத்தி மீட்டு வடவெல்லை காத்த வீரர் பெருமதிப்பிற்குரிய தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள். அவருடைய ஈகத்தினை போற்றும்விதமாகவே திருத்தணி பேருந்து நிலையத்திற்கு ம.பொ.சிவஞானம் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. அத்தகைய வரலாற்று அடையாளத்தை அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது பெருந்தமிழர் ம.பொ.சி.யின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும்.
ஆகவே, புனரமைக்கப்பட்டு திறக்கப்படவிருக்கும் திருத்தணி நகரின் பேருந்து நிலையத்தின் பெயரை, பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையம் என்பதிலிருந்து கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசின் முதன்மைத் துறைகளில் ஒன்றான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர் பெருமக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைக்காக நெடுங்காலமாக போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றித்தர மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இரவு, பகல் பாராது, மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் பாராது தங்களை முழுமையாக ஒப்புவித்து, அரசின் வருவாயை பெருக்கிட அல்லும் பகலும் பாடுபடும் ஊழியர்களின் நலனை பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமையாகும். அதனை நிறைவேற்றாமல் திமுக அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரியும் ஊழியர்களை வீதியில் இறங்கி போராடச் செய்துள்ளது பெருங்கொடுமையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு...
1)வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், அவர்களை தாக்கும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் "சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை" உடன் இயற்ற வேண்டும்.
2)வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்கிட வேண்டும்.
3)தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை இரத்து செய்திட வேண்டும். 2003ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று மீள வழங்கிட வேண்டும். ஜிகிறிஷி திட்டத்தில் கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
4)அரசுப் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% ஆக நிர்ணயிக்க வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும்.
5)வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத் துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளி முகமை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
6)பொது மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
7)வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதிதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும். வருவாய்த்துறையின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
8)தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, விரைவான போக்குவரத்து வசதிகள் மற்றும் கிராம நிருவாக அலுவலர்களுக்கு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாத நிலையில், பேரிடர் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கிராம நிருவாக அலுவலர்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
9)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும்.
ஆகிய நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தங்களின் வாழ்வாதார உரிமைக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் 25.02.2026 முதல் முன்னெடுக்கும் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து கோரிக்கை வெல்ல துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
பதின்ம பருவத்திலேயே பொதுவுடைமை தத்துவத்தில் பெரும் ஈர்ப்பு கொண்டு, 18 வயதிலேயே பொதுவுடைமை கட்சியில் இணைத்துக்கொண்டு பயணித்த பொதுவுடமை பேராசான்..!
வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து, ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்..!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி..!
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..!
சாதிய ஒடுக்குமுறைக்கும், சமூக தீண்டாமைக்கும் எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சாதி ஒழிப்பு போராளி..!
தேர்தலின் வெற்றி தோல்விகள் மக்கள் தொண்டிற்கும், தூய பொதுவாழ்விற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்பதை தம்முடைய அயராத அரசியல் பணிகளால் உலகிற்கு உணர்த்திய மாண்பமை தலைவர்..!
ஐயா அவர்களை நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் மீது பேரன்புகொண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..!
பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு புலிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கச்செய்து, ஐயாவின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரை நாம் தமிழர் கட்சி பகிர்ந்துகொள்கிறது.
பொதுவுடைமை பிதாமகன், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்!
ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த
பொதுவுடைமை பிதாமகன்!
பெருமதிப்பிற்குரிய ஐயா #நல்லகண்ணு அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, ஐயா நம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மாவட்டம்,
திருப்புல்லாணி மேற்கு மாவட்டப் பொருளாளர்
அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களின் தாயார்
அம்மா மு.ராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ராணி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - துறையூர் சட்டமன்றத்
தொகுதியின் மேற்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களின் மனைவி தங்கை சாந்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
வாழ்க்கைத்துணையை இழந்து வாடும் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
தங்கை சாந்தி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அரூர் சட்டமன்ற தொகுதி
குருதி கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சதீஷ்குமார் அவர்களின் தாத்தா ஐயா அண்ணாமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தாத்தா அண்ணாமலை அவர்களை இழந்து வாடும் தம்பி சதீஷ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அண்ணாமலை அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியின் மண்டலச் செயலாளர் மற்றும் கல்லுக்கூட்டம் பேரூராட்சி பத்தாவது வார்டு கவுன்சிலருமான அன்புத்தம்பி ரூபன் பொன்னுமணி அவர்களின் தாயார் அம்மா ரெத்தினம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி ரூபன் பொன்னுமணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ரெத்தினம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் பிள்ளைகள் அறிவிற் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண நூலகத்தை, சிறு விதையிலிருந்து உயர்ந்தோங்கும் ஆலமரம் போல தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்து தொடங்கி நடத்திய மாமனிதர்..!
நவீன அறிவியலோ, வளர்ந்த தொழில்நுட்பமோ, இன்றைக்கு உள்ள இணைய வசதியோ ஏதும் இல்லாத, ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த சோதனைமிக்க காலகட்டத்தில் ஈழத்தாயகத்தில் வாழும் ஏழைக்குழந்தைகளும் கல்வி பெற வேண்டும்,
உலக அறிவு எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்லாயிரம் நூல்களுடன் பரந்து விரிந்த பெரும் நூலகம் சிங்கள இனவெறித் தீயில் எரிந்த பிறகும், உலகத்தமிழர்களின் ஆன்மச் சின்னமாக மறையாத வடுவாகத் திகழ்ந்து, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் போல, மீண்டும் உயிர்ப்புடன் திகழும் யாழ். நூலகமே தமிழர்களின் அறிவுக்கருவூலமாகும்.
யாழ். பொது நூலகத்தை அமைப்பதற்குத் தம்முடைய இல்லத்தையே கொடையாகக் கொடுத்து, கிடைத்தற்கரிய பல ஓலைச்சுவடிகளையும், அறிவூட்டும் நூல்களையும் தேடி தேடி சேகரித்து அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்து ஆலயம் அமைத்த போற்றுதற்குரிய பெருந்தகை..!
பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தொல்தமிழர் அறிவு மரபின் தொடர்ச்சியாகவும், தமிழ் அறிவு புரட்சியின் முன்னோடியாகவும் திகழ்ந்த பெருந்தமிழர், நம்முடைய பாட்டன் தமிழ்க்காவலர், ஈழத்தாயகத்தின் தமிழ்ச்செல்வர் க.மு.செல்லப்பா அவர்களின்
130வது பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-29 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட, என்னுடைய ஆருயிர் இளவல் கோ.க.ம.தமிழ்க்குமரன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழ்த் திரைக்கலையின் தரம் மென்மேலும் உயர்ந்து, திரைக்கலைஞர்களின் வாழ்வு செழித்திடும் வகையில் சிறப்புற பணியாற்றி சாதனை படைத்திடவும், ஏற்ற பொறுப்பிற்குப் பெருமை சேர்த்திடவும், அன்புத்தம்பி கோ.க.ம.தமிழ்க்குமரனுடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய துணைத்தலைவர்கள் ஐயா கமலக்கண்ணன் மற்றும் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ், புதிய செயலாளர்கள் அன்புத்தம்பி Five Star கதிரேசன் மற்றும் ஐயா ராதா கிருஷ்ணன், புதிய பொருளாளர் ஆருயிர் தம்பி சுபாஷ் சந்திரபோஸ், புதிய இணைச்செயலாளர் பாசத்திற்குரிய அம்மா சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
21.02.2026 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பேரெழுச்சியாக எமது இனச்சொந்தங்கள் கூடியிருந்தீர்கள். இது ‘நம் இனத்தின் திருவிழா, எல்லோரும் கூடுவோம், தமிழ்ப்பேரினப் பெருவிழா வென்று வாகை சூடுவோம், குடும்பம் குடும்பமாய் கூடுவோம், கொடிய அரசியலை மூடுவோம்’ என்று உங்கள் பிள்ளைகள் அழைத்த அந்த அன்பு அழைப்பை ஏற்று உலகெங்கும் இருக்கின்ற பல்வேறு நாடுகளிலிருந்து எனது அன்புச்சொந்தங்கள் அந்த மாநாட்டிற்கு வந்து பங்கேற்றீர்கள்.
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலிருந்தும் பேரெழுச்சியாக எமது இனச் சொந்தங்கள், இந்த எளிய பிள்ளைகளின் கொள்கையை, அவர்கள் முன்வைக்கிற அரசியலைப் புரிந்துகொண்டு பேரெழுச்சியாகக் கூடியிருந்தீர்கள். இது தமிழரின வரலாற்றில் பெரும் மாறுதல்; ஒரு மாபெரும் புரட்சி! அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும்; அங்கே நீங்கள் குடும்பம் குடும்பமாக வந்ததைப் பார்த்து, நான் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கும் பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அந்த மாநாடு தந்தது.
பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்.
நம்முடைய பணி தொடரட்டும். இது ஒரு தொடக்கம்தான், களத்திலே வென்று முடிப்பதில்தான் நமது இலக்கு இருக்கின்றது. எல்லோரும் ஈடுபாட்டோடு அரும்பாடாற்றி நாம் வெற்றியைத் தொடுவோம். எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது, அது சாதனை. அந்த சாதனைதான் வெற்றி. எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழிதான் இருக்கிறது, கடுமையான உழைப்பு. அந்த உழைப்பைக் கொடுத்து நமது வெற்றியை அடைவோம்.
நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்!
புரட்சி எப்போதும் வெல்லும், நம் வெற்றி அதைச் சொல்லும்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
எல்லோருக்கும் என்னுடைய அன்பும், வணக்கமும், நன்றியும்!
நாம் தமிழர்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி
செந்தமிழர் பாசறை - வளைகுடா
வழங்கும்
தீ
என்னில் உண்டு!
பாடல் காணொளி
#எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியில்
youtu.be/kk93A2NOzws
எழுதி இயக்கியவர் - ச. முரளி மனோகர் @kalaiyalan
இசை - ச. பிரபாகரன் @yazhprabakaran
படத்தொகுப்பு: இர.கோவிந்தராஜ் @R_Govindaraj
காட்சி வடிவமைப்பு: பா.அரி கோபி
@pharigopi
நிர்வாகத் தயாரிப்பு: சே.பாக்கியராசன் @PackiaSe
தயாரிப்பு: செந்தமிழர் பாசறை - வளைகுடா @stp_valaikuda -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடந்த 5 நாட்களுக்கு முன் IND TN 12 MM 6865 என்ற எண்கொண்ட விசைப்படகில் மீன்பிடிப்புக்குச் சென்ற மணப்பாடைச் சேர்ந்த, மீனவர்கள் 10 பேர், 5 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது அவர்களின் குடும்பத்தினரிடமும், அப்பகுதி மீனவ மக்களிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன மீனவர்களை தேடித்தருமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மீனவ மக்கள்
பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காத காரணத்தால் மீனவ மக்கள் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் உறவினர்களின் நிலையறியாது தவித்து நிற்கும் மீனவச்சொந்தங்களின் வேதனையைத் தீர்க்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு கடலோர காவற்படை மூலம் காணாமல் போன மீனவர்களை தேடுவதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? 5 நாட்களாகியும் காணாமல் போன 10 மீனவர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசிடம் பேசி உரிய தேடுதல் பணிகளை முடுக்கி விடாதது ஏன்? இதுதான் மீனவ மக்களின் நலன் மீது திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா? இதுதான் நம் மீனவச்சொந்தங்களை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா?
முதலமைச்சரோ, அமைச்சர் பெருமக்களோ, தொழிலதிபரோ வானூர்தி விபத்தில் காணாமல் போனால் பதறித்துடிக்கும் இந்த நாடும், அரசும், ஊடகங்களும், நடுக்கடலில் மீனவர்கள் காணாமல்போனால் எந்த சலனமும் இன்றி இருப்பதேன்?
அதிகாரத்தில் இருப்பவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும்தான் இந்த நாட்டில் மனிதர்களா? அவர்களுடைய உயிர் மட்டும்தான் மதிப்புடையதா? எளிய மீனவ மக்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா? அவர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லையா? வெட்கக்கேடு!
பணக்காரனுக்கு ஒரு நீதி, பாமரனுக்கு வேறு நீதி என்பது சமூக நீதி அல்ல, அது மனித குலத்திற்கு மாபெரும் அநீதி!
காணாமல்போன மீனவச் சொந்தங்களை விரைந்து மீட்டு அவர்களின், குடும்பத்தினரின் துயர்போக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரகளின் தலையாயக்கடமையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் இனியேனும் சீரியக் கவனமெடுத்து, இந்திய ஒன்றிய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் துரிதப்படுத்தி, மீனவர்களை விரைந்து மீட்கவேண்டுமென வலியுறுத்துகிறேன் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாசி 09, 21-02-2026 அன்று
மாலை திருச்சி ஆலம்பட்டிபுதூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற,
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
www.youtube.com/live/L1jTEUpXu4w
www.youtube.com/live/z35tEkvD3l0 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நம்முடைய பாதுகாப்பே..
நாட்டின் பாதுகாப்பு..!
நாளை மாசி 09 (21.02.26) திருச்சி ஆலம்பட்டிபுதூரில் நம்முடைய நாம் தமிழர் கட்சி பேரெழுச்சியாக நடத்தவிருக்கும்
மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ பெருந்திரளாக வருகை தரவிருக்கும் என்னுயிர்ச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்..!
'மற்றுமொரு அரசியல் கட்சியல்ல; மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி' என்கிற எழுச்சிமிகு முழக்கத்துடன் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, அடிப்படை - அரசியல் - அமைப்பு மாற்றத்தினை ஏற்படுத்தி தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்றத்தை தந்திட நடத்துகின்ற மாபெரும் மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க பேராவலுடன் காத்திருக்கிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பெருநிகழ்வில் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வருகை தரும்
என் பேரன்பிற்குரிய பெற்றொர்கள், என் உயிருக்கினிய தம்பி-தங்கைகள்
அனைவரும் மிகவும் பாதுகாப்பாக தங்கள் வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரம் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, வாகனங்களில் பொறுமையுடனும், பொறுப்புடனும் பயணித்து வரவேண்டுமெனவும், அதற்கேற்றவாறு தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்க வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன்.
வரும்வழியில் ஆரவாரம் ஏதுமின்றி, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு அமைதியான முறையில் உங்கள் பயணம் கட்டுகோப்பான இனிய பயணமாக அமைய வேண்டும்.
தலைக்கவசம் மற்றும் இடவாறு அணிதல், சாலைவிதிகளை சரியாக கடைப்பிடித்தல், அவசர ஊர்தி உள்ளிட்ட முந்தி செல்லும் வாகனங்களுக்கு வழிவிட்டு சாலை ஒழுங்கை கடைப்பிடித்தல், போக்குவரத்தை சீர்செய்யும் காவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, நீங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வருகை தந்து, மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்ற செய்தியை அறிந்த பிறகுதான் என் மனம் நிம்மதி அடையும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநாட்டு திடலிலும், வாகன நிறுத்துமிடங்களிலும், இருக்கையிலும், முன்னுரிமை வழங்க வேண்டும். அவரவர் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே, வாகனங்களை நிறுத்தவும், இருக்கைகளில் அமரவும் வேண்டும். நம் பாதுகாப்பு பாசறையினருக்கு ஒத்துழைப்பு நல்கி, அவர்கள் ஒழுங்கமைத்த வழி நடந்திடவும் வேண்டும்.
நம்முடைய பாதுகாப்புதான் நாம் பெரிதும் நேசிக்கும் நாட்டின் பாதுகாப்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
'ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் உயிரினும் மேலாக கடைப்பிடித்து தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிரை ஈந்த பல்லாயிரம் மாவீரர்களை கொண்ட மக்கள் இராணுவத்தை' கட்டுப்கோப்புடன் வழிநடத்திய மகத்தான தலைவன் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிநிற்கும் பிள்ளைகள் நாம். தமிழ்த்தேசிய தலைவரின் மீது நீங்கள் கொண்டுள்ள பேரன்பும், பெருமதிப்பும் சத்தியமானால், அந்த மாதலைவனின் பெரும்புகழுக்கு சிறுகளங்கமும் ஏற்படாதவாறு இத்தனை நாட்கள் எத்தகைய ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடுடனும் நடந்துகொண்டீர்களோ, அதையே உலகத் தமிழினமே உற்றுநோக்கும் இம்மாபெரும் மாநாட்டிலும் கடைப்பிடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இம்மாபெரும் மாநாட்டில், நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை அன்பு உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். உங்கள் அனைவரையும நாளை மாநாட்டுத்திடலில் சந்திக்க பெரும் உணர்வெழுச்சியுடனும் உற்சாகத்துடனும் காத்திருக்கிறேன்!
மற்றவை நேரில்…
உங்கள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வணக்கம்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
நாம் தமிழர்!
- உங்கள் அண்ணன்
சீமான் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நாளை (21-02-2026) மாலை சரியாக 03 மணிக்கு திருச்சியில்
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
திருச்சியில் கூடுவோம்!
திருப்பத்தை நாடுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மீண்டும் 22 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர்? விடிவு காலம் எப்போது?
@CMOTamilnadu
@mkstalin
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 18-02-26 அன்று மீன்பிடிக்கச் சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வழக்கம் போலத் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 143 மீனவர்களும், 2022 ஆம் ஆண்டு 229 மீனவர்களும், 2023 ஆம் ஆண்டு 220 மீனவர்களும், 2024 ஆம் ஆண்டு 528 மீனவர்களும், 2025 ஆம் ஆண்டில் 90 மீனவர்களும், நடப்பு 2026 ஆம் ஆண்டில் தற்போது வரை 30க்கும் மேற்பட்ட மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.
நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்?
அகண்ட பாரதம் பேசும் பாஜக, காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?
தமிழ்நாட்டு மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பேரவலத்துக்கு கட்சத்தீவை மீட்பது ஒன்றே நிலைத்த தீர்வாக அமையும்.
ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, நாடாளுமன்றத்தில் தமக்குள்ள உறுப்பினர்கள் பலத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஓலைச்சுவடிகளில் ஒடுங்கி இருந்த தமிழுக்கு அச்சுப்பதிப்பெனும் அரியாசனம் தந்த பேராசான்..!
அழிவின் விளிம்பிலிருந்த அருந்தமிழ் நூல்களைப் பதிப்பித்துக் காத்த பெருமகன்..!
சங்கத்தமிழ் நூல்களான சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு நூல்கள், பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், திருக்குற்றாலக் குறவஞ்சி உள்ளிட்ட பல சிற்றிலக்கிய நூல்களை அரிதின் முயன்று பதிப்பித்து அடுத்த தலைமுறைக்குக் கையளித்த தமிழ்க்காவலர்..!
செய்யுள் நூல்கள் பல இயற்றி செழுந்தமிழுக்கு வளம் சேர்த்த பேரறிஞர்..!
சங்கத்தமிழ் இலக்கிய மீட்சிக்காகத் தம்முடைய வாழ்வினையே ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை..!
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
#எங்கள்தேசம்
வலைத் தொலைக்காட்சிக்கு
அளித்த சிறப்பு நேர்காணல்
பகுதி - 1
youtu.be/4--but5dPsw
எங்கள் தேசம்!
ஒரு இனத்தின் பெருங்கனவு!
இது உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!
மானத் தமிழினத்தின் மனசாட்சி!
youtube.com/@EngalThesamTV
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி முகேஷ் குமார் அவர்களின் தந்தை ஐயா ரவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி முகேஷ் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ரவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் 9 மீனவர்கள் உட்பட சிறைபட்ட 11 மீனவச்சொந்தங்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும் 9 தமிழ்நாட்டு மீனவர்களை தாயகம் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழ்நாட்டு மீனவர்களில் 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் கடந்த 03.02.26 அன்று விடுவித்த நிலையில், படகை இயக்கிய 3 மீனவர்களுக்கு மட்டும் 6 மாத கடுங்காவல் தண்டனையும், 11.60 இலட்சம் தண்டமும் விதித்ததோடு, தண்டத்தை செலுத்த தவறும்நிலையில் மேலும் 3 மாதகாலம் கூடுதல் சிறைதண்டனையும் விதித்த கொடுமையும் அரங்கேறியது.
ஆனால், நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட 9 மீனவச்சொந்தங்களையும் இதுவரை தாயகம் திரும்ப அனுமதிக்காமல் இனவெறி இலங்கை அரசு மிரிஹானா தடுப்பு முகாமில் அடைத்துவைத்து பெருங்கொடுமை புரிந்துவருகிறது. இதனால் சிறைபட்டுள்ள மீனவச்சொந்தங்களின் உறவினர்கள் பெரும் கவலையும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 மீனவர்களின் குடும்பத்தினர் ஏழ்மைநிலை காரணமாக தண்டத்தொகை செலுத்த வழியின்றியும் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படாமல் தடுக்கத்தான் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும், ஒன்றிய - மாநில அரசுகள் இதுவரை எடுக்கவில்லை.
குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை தாயகம் மீட்கக்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்,
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, இனவெறி மிகுந்த இலங்கை அரசின் தடுப்பு முகாமில் வதைபட விடுவது பேரவலமாகும். இது தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மேலும் மேலும் துன்புறுத்தும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். குஜராத், ராஜஸ்தான் மீனவர்கள் என்றால் பதறித்துடிக்கும் பாஜக அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால் அலட்சியம் செய்வது தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு அன்றி வேறென்ன?
தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் மீனவச்சொந்தங்களை விடுவிக்க, வழக்கம்போல ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டும் எழுதி அமைதிகாப்பது மற்றுமொரு பெருங்கொடுமையாகும். திமுக
ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் முழுவதும் கடிதம் மட்டுமே எழுதியதனால் தமிழக மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தண்டத்தொகையை செலுத்தி மீனவச்சொந்தங்களை மீட்பதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட திமுக, தமிழ்நாட்டு மீனவர்களின் நலனைக் காக்க இதுவரை எடுத்த நடவடிக்கைதான் என்ன? ஒன்றுமில்லையே! இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்நாட்டு மீனவர்களை திமுக அரசு இப்படி ஏமாற்றப்போகிறது? இதுதான் திமுக அரசு தமிழ் நாட்டையும் மக்களையும் காக்கும் முறையா?
ஆகவே, இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் 9 மீனவர்கள் உட்பட, மேலும் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத்தொகையை அரசே செலுத்தி, சிறையிலிருந்து விடுவித்து, 11 மீனவச்சொந்தங்களையும் விரைந்து தாயகம் மீட்டு, தவித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்திட ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி
செந்தமிழர் பாசறை - வளைகுடா
வழங்கும்
தீ
என்னில் உண்டு!
விரைவில்...
@stp_valaikuda -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்கள் தேசம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு!
உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!
இது மானத் தமிழினத்தின் மனசாட்சி!
youtube.com/@EngalThesamTV
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்கள் தேசம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு!
உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!
இது மானத் தமிழினத்தின் மனசாட்சி!
www.youtube.com/@EngalThesamTV
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தர்மபுரி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தர்மபுரி மாநகரில் ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம் 3.97 ஏக்கரில் 1980 ஆம் ஆண்டிலும் நகர பேருந்து நிலையம் 1996 ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டது. இந்த இரண்டு பேருந்து நிலையம் மொத்த பரப்பளவு 34720 சதுர மீட்டர் (8.57 ஏக்கர்கள்)ஆகும்.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வரும் மக்கள் இப்பேருந்து நிலையங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு பொதுமருத்துவமனை, வன அலுவலகம், ஆவின் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மின்சார அலுவலகம், வேளாண்மை அலுவலகம், பொதுப்பணித்துறை, வணிக வரித் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மாவட்ட மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட தீயணைப்பு நிலையம், சிவில் சப்ளைஸ் துறை,
நெடுஞ்சாலைத்துறை, மருத்துவப் பணிகள் துறை, சுற்றுலா மாளிகை மற்றும் இலக்கியம்பட்டி
பஞ்சாயத்து ஆகிய இடங்களை எளிதில் அடையலாம்.
மேலும் இப்பகுதிகளின் அருகில் மக்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை தேவைக்காக எளிதில் அணுகும் வகையில் இப்பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் 05.02.2026 அன்று திறக்கப்பட்டு, தனியார் வசம் ஒப்பட்டைக்கப்பட்டது. அது சமயம், அனைத்து பேருந்துகளும் நேரடியாக தனியார் பேருந்து நிலையத்திற்கே செல்வதால் பொதுமக்கள், சிறுகுறு வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக மக்கள் மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டது.
தற்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளானதால் வர்த்தகம் முடக்கம் ஏற்பட்டு ஊடகம் வாயிலாக எதிர்ப்பு எழுந்த பிறகு, தேர்தல் கண்துடைப்பாக சிறிய மாற்றம் செய்து கடந்த 09.02.26 முதல் தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஊத்தங்கரை, அரூர் பேருந்துகள் இயங்குமாறு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக ஏற்பாடு போதுமானதல்ல, இதனால் மக்களின் சிக்கல் நிரந்தரமாக தீரப்போவதுமில்லை.
இந்த பேருந்துகள் மாற்றத்தால் வியாபாரிகளுக்கும் பெரிய வருவாய் இழப்பும், நகராட்சிக்கு ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகிறது என்பதையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு தர்மபுரி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது திமுக அரசு; பணத்தைக் கொடுத்து வாக்கைப் பறிக்க முனையும் திமுகவின் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
@CMOTamilnadu @mkstalin
மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் எந்த மாதமும் இல்லாமல், திடீரென்று இன்று 5000 ரூபாயை முன்பணமாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது திமுக அரசு. மக்களின் வரிப்பணம்தான் மீண்டும் மக்களுக்கே வழங்கப்படுகிறது என்றாலும் கடந்த 4 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் 3 மாத முன்பணம், கோடைகால முன்பணம் என்றெல்லாம் வழங்குவது, தேர்தல் வருவதைக் கணக்கிட்டு மக்களின் வாக்கைப் பறிக்கும் சூழ்ச்சியாகும்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, முதல் இரண்டரை ஆண்டுகள் அதனைத் தராமல் ஏமாற்றியது. முதல் 30 மாதங்களுக்குத் தரவேண்டிய 30 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிவிட்டு, தற்போது தேர்தல் வருவதை முன்னிட்டு வெறும் 2000 ரூபாயை மட்டும் கூடுதலாகக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 28,000 ரூபாயை ஏமாற்ற நினைப்பது மக்களை முட்டாளுக்கும் இழிசெயலாகும். அதுமட்டுமின்றி, அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக, பின்னர் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே தருவோம் என்று சுருக்கி, இன்றுவரை பல்லாயிரம் பெண்களுக்குத் தராமலும் ஏமாற்றி வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை, கோடைக்காலச் சிறப்புத்தொகை அனைத்தையும் வழங்கும் திமுக அரசு, இதையெல்லாம் சென்ற ஆண்டு வழங்காதது ஏன்? இந்த ஆண்டுதான் மக்களின் துன்பம் திமுக அரசின் கண்களுக்குத் தெரிகிறதா? தேர்தல் வரும்போதுதான் மக்களின் வேதனைக்குரல் திமுக அரசின் காதில் விழுகிறதா? கடந்த 2001 முதல் 2021 வரை தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திமுக - அதிமுக அரசுகள் வாங்கிய தமிழ்நாட்டின் மொத்த கடன் 5 இலட்சம் கோடியாகும். ஆனால், கடந்த 5 ஆண்டுகால திமுக அரசு, தன்னுடைய மிக மோசமான நிர்வாகத்தால், மேலும் 5 இலட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் தலையில் 10 இலட்சம் கோடிகள் கடனை சுமத்திவிட்டு, தற்போது ஒரே நாளில் மேலும் 6,500 கோடி கடன் சுமையை ஏற்றியுள்ளது நிர்வாகத்திறனற்ற திமுக அரசு.
நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து ஒரே நாளில் 1.31 கோடி வங்கிக்கணக்குகளில் 5000 ரூபாய் செலுத்துவதில் மிகவும் நேர்த்தியாகச் செயல்பட்ட திமுக அரசு, இத்தனை கவனத்தையும், பொறுப்பையும் சட்டம் ஒழுங்கை காப்பதில் ஏன் காட்டவில்லை? இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசுப்பணி தேர்வுகளைச் சரியாக நடத்துவதில் இத்தனை பொறுப்புடன் திமுக அரசு செயல்படாதது ஏன்? நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுப்பதில் இத்தனை வேகமாகச் செயல்படாதது ஏன்? பல்கிப் பெருகியுள்ள போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இத்தனை வேகமாகச் செயல்படாதது ஏன்? சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதிலும், இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதிலும் இத்தனை வேகத்தை காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் வீதிக்கு வீதி ஆசிரியர் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், ஊரகத் திட்டப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், கிராம சுகாதாரப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நூலகர்கள், ஊர்க்காவல்படையினர் என அனைத்து தரப்பினரும் தங்களின் பணிப்பாதுகாப்பிற்கும், ஊதிய உயர்விற்கும் அன்றாடம் போராடி வருகின்றனர். நிதிநிலையைக் காரணம் காட்டி அதனையெல்லாம் நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசு, தேர்தலை முன்னிட்டு ஒரே நாளில் 6,500 கோடி ரூபாயை வாரியிறைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இப்போது மட்டும் நிதி சிக்கல் இல்லாமல் போனது எப்படி? மக்களின் நன்மை குறித்த எந்தச் சிந்தனையும் இன்றி, வெறும் வாக்கு வங்கியை மட்டும் குறிவைத்துச் செயல்படும் திமுக அரசின் இத்தகைய தேர்தல்கால நாடகங்கள் வெட்கக்கேடானது.
தமிழ்நாடு அரசின் தற்போதைய மொத்த கடன்சுமை 9.30 இலட்சம் கோடிகளாகும். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (நிஷிஞிறி) இக்கடன் சுமை 26% ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் 56,000 கோடி ரூபாயை (21%) வாங்கிய கடனுக்கு வட்டியாகவே தமிழ்நாடு அரசு செலவிடுகிறது. நடப்பு 2025-26 நிதியாண்டில், மேலும் 1,62,000 கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு நிதிப்பொறுப்புச் சட்டத்தின்படி 3%-க்குள் இருக்க வேண்டிய நிதிப்பற்றாக்குறை, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் கடந்த 2023-24 நிதியாண்டில் வரம்பை கடந்து 90,430 கோடியாக (3.32%) அதிகரித்தது. அதுமட்டுமின்றி, 2022-23 நிதியாண்டில் 36,215 கோடியாக இருந்த தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை, 2023-24 நிதியாண்டில் 45,121 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பல்லாயிரம் கோடி நிதியை, திமுக அரசு முறைகேடாக உரிமைத்தொகை வழங்கச் செலவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, திமுக அரசு கடனாக வாங்கும் பல இலட்சக்கணக்கான கோடிகளை மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களில் பயன்படுத்தாமல், தொலைநோக்கு இல்லாத வெற்றுக் கவர்ச்சித் திட்டங்களில் வீணடிப்பதாக இந்தியத் தலைமை கணக்கு அறிக்கையும் (சிகிநி) சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உபரி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும் நல்ல அரசுகூட, இத்தனை கோடிகளை ஒரே நாளில் வீணடிக்காது. ஆனால், பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் திமுக அரசு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே, மேலும் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கும் மோசமான நிலையில் தமிழ்நாட்டை வைத்துள்ள திமுக அரசு இப்படி 6,500 கோடி ரூபாயை எந்தத் தொலைநோக்கு சிந்தனையும் இல்லாமல் ஒரே நாளில் வாரியிறைப்பது, மக்களை ஏமாற்றி அடுத்த அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்குச் செய்கின்ற அப்பட்டமான சூழ்ச்சியேயாகும்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கடனை முழுமையாக இரத்து செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றாமல், பல இலட்சக்கணக்கான மாணவர்களை ஏமாற்றி வரும் திமுக அரசு, தற்போது தேர்தல் வருவதை முன்னிட்டு 5000 ரூபாய் பணத்தைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி வாக்கைப் பறிக்க முனையும் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புரட்சித் தமிழகம் கட்சி பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், உண்மையான எழுச்சிக்கும் அயராது பாடுபட்டுவரும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பொதுத்தொண்டு புரிந்திட எனது அன்பும், வாழ்த்துகளும்!
@airportmoorthy -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 8000க்கும் மேற்பட்ட கௌர விரிவுரையாளர்கள் பணி நிலைப்படுத்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ப்போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் திமுக அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் எனப் பெயரளவில் கூறப்பட்டாலும் தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் மிகவும் இழிவான நிலையிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். தங்களது கல்வித்தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் எனும் பெரும் நம்பிக்கையிலேயே அவர்கள் சொற்ப ஊதியத்திற்கு இப்போதுவரை பணியாற்றி வருகின்றனர். அதுவும் மே மாதம் விடுத்து, 11 மாதங்களுக்கே அவர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், துறைத்தலைவர்கள் இல்லாத பல கல்லூரிகளில் இவர்கள்தான் தூணாக நின்று தாங்கிப் பிடித்து, இலட்சக்கணக்கானப் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றனர்.
பல்கலைக்கழக மானியக்குழு கௌர விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதனை சென்னை, உயர் நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிசெய்திருக்கிறது. இருந்தும், அம்முடிவு இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை. ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது முதுமொழி. ஆனால், இங்கு கற்பிக்கும் ஆசிரியப்பெருந்தகைகளுக்கே மதிப்பில்லை என்பதுதான் புறச்சூழலாகும். பல ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கோரிப் போராடி வரும் இவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு செய்யப்படாது, தற்காலிகப்பணி என்பதுதான் நிரந்தரமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அறிவுக்கருவறையாகத் திகழ்பவைக் கல்விக்கூடங்கள். அதனையுணர்ந்தே, மேலை நாடுகளில் ஆசிரியர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு ஆசிரியப் பெருமக்களே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராட வேண்டிய மோசமான நிலையிருப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆகவே, அரசுக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்து, பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த 57,500 ரூபாய் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், முழுமையாக 12 மாத ஊதியமும், முறையான வருங்கால வைப்பு நிதியும், பணிக்கொடையாக 25 இலட்சமும், விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
கௌரவ விரிவுரையாளர் பெருந்தகைகள் தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி முன்னெடுக்கும் தொடர் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு கோரிக்கைகள் வெல்ல உறுதியாக துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அடிப்படை உரிமை கேட்டுப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பெண்கள் என்றும் பாராமல் அடக்குமுறையை ஏவி கைது செய்வது கொடுங்கோன்மையின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையை மூலம் அடக்குமுறையை ஏவி சிறையில் அடைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வாழ்வாதார உரிமையை வழங்க மறுக்கும் திமுக அரசு, அறவழியில் போராடக்கூட அனுமதி மறுப்பது கொடுங்கோன்மையாகும்.
2005ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த பணியாளர்களாக ஏறத்தாழ 12000 சகோதரிகள் ஊரக / நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களாக ஒப்படைப்பு உணர்வோடு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்டு பணியாற்றி வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழு முதல் மாநில - ஒன்றிய அரசின் அனைத்துத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க, நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றும் திட்டப் பணியாளர்களின் பங்கு அளப்பரியதாகும். படிப்பறிவற்ற கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்களை விளக்கி, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முதுகெலும்பாகத் திகழும் ஊரக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்களின் பணி மிகுந்த போற்றுதலுக்குரியது.
தங்களின் உடல் நலனைப் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் கடின உழைப்பைச் செலுத்தி அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகத் திகழும் சிறப்புமிக்க ஊரக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கி, உரிய ஊதியம் வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயப் பொறுப்பும், கடமையுமாகும். அதனைச் செய்யத்தவறி, மக்கள் பணியாளர்களான சகோதரிகளை அடிப்படை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராட விடுவது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதிய உயர்வு வழங்காமலும் திமுக அரசு ஏமாற்றி வருவதால் 12,000 பணியாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். விலைவாசி பன்மடங்கு அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்ற ஊதிய உயர்வு வழங்க மறுப்பதால் அவர்களின் குடும்பம் வறுமையில் வாடும் அவலநிலை மிகுந்த வேதனைக்குரியது.
திமுக அரசு போராடும் திட்டப்பணியாளர்களுக்கு வாழ்வாதார உரிமைகள்தான் வழங்கவில்லை. குறைந்தபட்சம் உரிமைக்கேட்டு போராடக் கூட அனுமதி தர மறுப்பது அரச அடக்குமுறையின் உச்சமாகும். அறவழியில் போராடுவது என்பது அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதைக்கூட திமுக அரசு அனுமதிக்க மறுத்துப் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையை மூலம் அடக்குமுறையை ஏவி, கைது செய்வது என்பது கொடுங்கோன்மையாகும்.
இதுதான் திமுகப் பெற்றுத்தந்த சம உரிமையா? கட்டிக்காத்த சமூக நீதியா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதற்குப் பெயர்தான் விடியல் ஆட்சியா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? வெட்கக்கேடு!
ஆகவே, அடிப்படை உரிமை கேட்டுப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக் கைவிட்டு, அவர்களின் வாழ்வாதார உரிமையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் எனதருமை சகோதரிகளான ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும்வரை, நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்துத் துணைநின்று போராடும் என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தங்கை பிரியா பிரபாகரன் அவர்களின் தந்தையும் வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களின் மாமனாருமான ஐயா மாதேஷ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத் தங்கை பிரியா, அன்புத் தம்பி பிரபாகரன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா மாதேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வேளாண் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் அழித்து வேலூர் மகிமண்டலம் பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
வேலூர் மாவட்டம் மகிமண்டலம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து, தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், தாதிரெட்டி பள்ளி, அம்மாவார்பள்ளி, பாலாமத்தூர், மகிமண்டலம் ஆகிய பகுதிகளில் வேளாண்மையை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளிடம் எவ்வித கருத்துக் கேட்பும் நடத்தாமல் தொழிற்பேட்டை (சிப்காட்) அமைத்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
திமுக அரசின் திட்டப்படி இப்பகுதியில் நாசகார நச்சு ஆலைகளை அமைக்க அனுமதித்தால் சற்றேறக்குறைய 50 கி.மீ. சுற்றளவுக்கு நிலம், நீர் மற்றும் காற்று மாசுபடுவதோடு, பன்னெடுங்காலமாக நிலைத்து வாழ்கிற பூர்வகுடி மக்கள் தங்கள் வாழ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவலநிலையும் ஏற்படும். மேலும், இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் ரசாயன கழிவுகள் நிறைந்து விசமாகி மக்கள் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறிவிடும். இதனால் ஏறத்தாழ பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலம், நீர், காற்று அனைத்தும் நஞ்சாக மாறிவிடும். அதிகாரத் திமிரிலும், பசப்பு வார்த்தைகளிலும் மக்களை ஏமாற்றிச் சொந்த நிலத்திலேயே அதிகாரமற்ற அடிமைகளாக, ஏதிலிகளாக மாற்ற முயலும் திமுக அரசின் திட்டமிட்ட சதிச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்குப் பெயர்தான் விடியல் தரும் திராவிட மாடலா?
விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி வேளாண் பரப்பளவு குறைந்துகொண்டே போகும் தற்காலச் கொடுஞ்சூழலில், அரச அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் மக்களை அடக்கி - ஒடுக்கி வானூர்தி நிலையம், எட்டுவழிச்சாலை, நிலக்கரி சுரங்கம், தொழிற்பேட்டை அமைப்பது என ஆளும் அரசுகளும் தன் பங்கிற்கு விளைநிலங்களை அழிப்பது இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படவே வழிவகுக்கும். ஏற்கனவே அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், விளை நிலங்களைப் பறித்து அரசே நச்சுத் தொழிற்சாலைகள் அமைப்பது மக்களை வாழவே முடியாத வறுமை நிலைக்குத் தள்ளிவிடும்.
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என ‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்’ பிரிவு - 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடிநீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்வளாகம் அமைக்க முயல்வது விவசாயிகளுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, வேலூர் மாவட்டம் மகிமண்டலம் சுற்றுவட்டாரப் பகுதி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரிக்கும் கொடுங்கோன்மையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயற்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக்கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள்போல நடத்தும் தமிழ்நாடு அரசின் வன்செயல் கொடுங்கோன்மையாகும்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகாலக் கோரிக்கை என்ற போதிலும், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் 27000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது.
கடந்த 23 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிவரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்றுவரை தொகுப்பூதியத்தின் கீழ் மிகக் குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இதர விற்பனைப் பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாகப் பணி நிரந்தரமும் செய்திட வேண்டும்.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மதுக்கூடங்களை நடத்தும் ஆளுங்கட்சியினர் விற்பனை நடவடிக்கைகளில் தலையிட்டு ஊழியர்களை மிரட்டி, தாக்கும் போக்கினையும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். கடந்த 2021 சட்டமன்றப் பொதுதேர்தலின்போது 10 ஆண்டுகள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 153 இன் படி டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? இதுதான் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முறையா?
ஆகவே, தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனைக்கூட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு, ஓய்வூதியம், சுழற்சிமுறையில் பணி மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும், இனியும் காலந்தாழ்த்தாமல் விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பாண்டு பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 10 ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதது அன்னை தமிழுக்கு செய்கின்ற பெருந்துரோகம்.
தமிழ் கற்றல் சட்டம் 2006 – பிரிவு ‘3’ இன்படி, தமிழ்நாட்டில் 2006-07 ஆம் கல்வி ஆண்டிலிருந்து அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, பத்தாண்டுகளுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் பகுதி1-இல் தமிழ் மொழிப்பாடத் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.
ஆனால், அவ்வரசாணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடையும், பின் 2023ஆம் ஆண்டு வரை அத்தடையை நீட்டித்தும் உத்தரவிட்டது. இத்தனை தடைகளையும் கடந்து, ‘தமிழ் கற்றல் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பு கல்வி ஆண்டு முதலாவது நடைமுறைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு இந்த ஆண்டும் பிறமொழியினரின் கோரிக்கையை ஏற்று 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ்ப் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஏற்கனவே, தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ‘குழந்தைகள் தாங்கள் வாழும் மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களின் நலனுக்கு மிகவும் நல்லது; மாறாக வாழும் மாநில மொழியைக் கற்றுக்கொள்ள மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ எனவும், இதனால் பிற மொழியினரின் எந்த உரிமையும் பறிபோய்விடாது எனவும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி வேண்டுமென்றே தமிழ்ப்பாடத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்குப் பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு விலக்கு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது தமிழ் மொழி மீது சிறிதும் பற்றின்மையையே காட்டுகிறது. தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் பெற்று இயங்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகள், தமிழைக் கற்பிக்க மறுப்பதும், அதற்கு திமுக அரசு துணைபோவதும் தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்ற பெருந்துரோகமாகும். பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இருக்கக்கூடாது, பள்ளிகளில் தமிழ்மொழித் தேர்வு இருக்க கூடாது என்று செயல்படுவதுதான் திமுகவின் தமிழ் பற்றா? ‘இந்தி நெவர், இங்கலிஷ் எவர்’ என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றது.
இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்றதெல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்கின்ற திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பதும், ‘மும்மொழி கொள்கை எப்படி மோசடி கொள்கையோ, அப்படி இருமொழி கொள்கை திமுகவின் ஏமாற்று கொள்கை என்பதும் மீண்டும் ஒமுறை நிறுவப்பட்டுள்ளது. ‘தமிழ் வாழ்க’ என்று அரசு கட்டிடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது; அதற்கு அரசு சட்டங்களில் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டில் வாழும் மக்களின் இதயச் சுவரில் எழுத வேண்டும் என்பதை திமுக அரசு இனியாவது உணர வேண்டும்.
ஆகவே, தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதை கைவிட்டு, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அளப்பரிய இன உணர்வுடன் தமிழ்த்தேசிய அரசியல் மீதும்,
நாம் தமிழர் கட்சி மீதும் பெரும் பற்றுகொண்டு நேசித்து, அரசியல் களத்தில் என்னுடைய தோளுக்குத் துணைநிற்கும் என் ஆருயிர் இளவல், தமிழ்நாடு முழுவதும் மருத்துவத் தேவைக்காகக் குருதி வேண்டும் பல இலட்சக்கணக்கான மக்களின் இன்னுயிர் காக்க தொடர்ச்சியாகக் களத்தில் நின்று காலத்தினாற் பேருதவி புரியும்
நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறையின் தளபதியாக முன்னிற்கும் அன்புத்தம்பி அரிமா.செந்தில்நாதன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பேரன்புகொண்டு வாழ்த்துவதில் பெரிதும் மகிழ்கிறேன்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட சமகாலத்தில் மக்கள் மறந்த புரட்சிப்புலி’ என்று அறிஞர் அண்ணாவால் புகழப்பட்ட புரட்சியாளர்..!
தாயக விடுதலைக்குப் போராடி சிறை சென்ற தன்னலமற்ற விடுதலை வீரர்..!
இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘சென்னை தொழிலாளர் சங்கத்தை’ 1918 ஆம் ஆண்டு தொடங்கிய பொதுவுடைமை பிதாமகன்..!
இந்திய துணைக்கண்டத்திலேயே முதன் முறையாகத் தொழிலாளர் நாளை ( மே 1 ) கொண்டாடிய தொழிற்சங்கவாதி..!
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலன் காக்க 1923 ஆம் ஆண்டுத் தொழிலாளர் விவசாயக் கட்சியையும், 1925 ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடைமை கட்சியையும் தொடங்கியப் பெருமகன்..!
1928 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தென்னிந்தியத் தொடர்வண்டி வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் உரிமை போராட்டங்களை முன்னின்று நடத்தியதற்காக ஆங்கிலேயே அரசால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் போராளி..!
சுயராஜ்யம் யாருக்கு?, மனிதனும் பிரபஞ்சமும், பகுத்தறிவென்றால் என்ன? என்பன உள்ளிட்ட பற்பல நூல்களை இயற்றியதோடு, பிறமொழி நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்து அன்னைத் தமிழுக்கு வளம் சேர்த்த பேரறிஞர்..!
“போர்க்குணம் மிகுந்த நற்செயல் முன்னோடி, பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றிப் புகழப்பட்ட பெருந்தகை...!
பொதுவுடைமைப் போராளி, நம்முடைய பாட்டன், ‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலர் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் (NHM) ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதாரத் திட்டத்தில் ( National Health Mission) பணியாற்றும் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடி வரும் நிலையில் அவர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் தேசிய சுகாதாரத்திட்டத்தின் மருத்துவர் அலுவலர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படாத காரணத்தால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தேசிய சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல், அவர்களின் குடும்பங்களைக் கடுமையான வறுமையில் வாடும் அவலநிலைக்கு ஆளாக்கியுள்ளது பெருங்கொடுமையாகும்.
ஆகவே, தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் நீண்ட காலமாகப் போராடி வரும் கோரிக்கைகளான,
• 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
• 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் மாற்றுத் திறனாளி தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு போக்குவரத்துப்படி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும்.
• ஒவ்வொரு ஆண்டும் 10% வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
• அகவிலைப்படி, மற்றும் விழாக்காலச் சிறப்பூதியம், முன்பணம், காப்பீடு ஊக்கத்தொகை, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும்.
• ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதம் சார்ந்த விடுப்புகள், பணி மூப்புடன் கூடிய விருப்ப பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
• கூடுதல் பணி செய்யும் ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
• தேசிய சுகாதாரப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எவ்வித விளக்கமும், கேட்கப்படாமல் எவ்வித விசாரணையும் நடத்தப்படாமல் பணி நீக்கம் செய்யும் முறையை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட, கிராம சுகாதாரப் பணியாளர்களின் (NHM) அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உரிமைக்காகப் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக் கைவிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை
திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
பார்வை மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுத்தும் கூட கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போல, தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவதுடன் கடந்த ஒரு வார காலமாக உரிமை கேட்டுப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சிறிதும் மனச்சான்று இன்றி காவல் துறையை ஏவி, தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..
அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பார்வை மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் அரசு வேலை வழங்க வேண்டும். தேர்ச்சி மதிப்பெண்களாக 40% மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்.
பட்டம் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் (பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 1% உட்பட) மாற்றுத்திறனாளிகளுக்கு
5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு
4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி மற்றும் தேர்வு
கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.
பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தந்து, அனைவரையும் போலவே பார்வை மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 292 கெளரவ பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் நான்கு ஆண்டு முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 292 கெளரவ விரிவுரையாளர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிக்கா ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய புதுச்சேரி மாநிலத்தை ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
புதுச்சேரி மாநிலத்தில் 34 கெளரவ விரிவுரையாளர்கள், 62 கெளரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள், 24 பிற பாடங்கள் கெளரவ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 172 பாலசேவிக்கா ஆசிரியர்கள் என புதுவை கல்வித்துறையில் பணியாற்றும் 292 ஆசிரியர் பெருமக்களும், ஆட்சேர்ப்பு விதிகளின் படியும், இடஒதுக்கீடு முறை, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளின் படியும் முறைப்படி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர் பெருமக்களை வீதியில் போராட விடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த நான்கு ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக நேரடி நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பெருமக்களை மறுபடியும் புதியதாகத் தேர்வு எழுதினால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறும் புதுச்சேரி அரசு கூறுவது கேலிக்கூத்தானது. அப்படியென்றால் தகுதியற்றவர்களை ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுத்ததா புதுச்சேரி அரசு. இத்தனை ஆண்டுகளாகத் தகுதியற்ற ஆசிரியர்களை வைத்துதான் மாணவர்களுக்கு பயிற்றுவித்ததா புதுச்சேரி மாநில அரசு? குறைந்த ஊதியத்தில் அவர்களின் உழைப்பினை உறிஞ்சி அடிமைகள்போல நடத்தும்போது நல்லாசிரியர்களாகத் தெரிந்தவர்கள், பணி நிரந்தரம் கேட்டுப் போராடும்போது தகுதியற்றவர்கள் ஆகிவிட்டார்களா? அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு, இட ஒதுக்கீடு முறை, முறையான ஆள் சேர்ப்பு விதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, தினக்கூலியாகவோ ஒப்பந்த அடிப்படையிலோ தொடர்ந்து பணி செய்து வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்யலாமென்று பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றமும் வழிகாட்டுதல் வழங்கி உள்ளது. ஆகவே, புதுச்சேரி அரசு 292 ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய மறுப்பது சட்ட விரோதமான கொடுஞ்செயலாகும்.
புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 2012 முதல் 2022 வரையிலான காலங்களில் பணி புரிந்த ஒப்பந்த ஆசிரியர்களைப் புதுச்சேரி மாநில அரசு கொள்கை முடிவெடுத்து ஐந்து முறை பணி நிரந்தரம் செய்துள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு கல்வித்துறை அமைச்சர் 25.03.2025 அன்று சட்டசபையில் கெளரவ ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்த நிலையில் இன்று வரையில் அதனை மட்டும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு நிறைவேற்ற மறுத்து வருவது பெருங்கொடுமையாகும்.
புதுச்சேரி அரசு அறிவித்தபடி 292 ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெருமக்களைப் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அழைத்துப்பேசி பொங்கல் விழா முடிவதற்குள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார் அதையும் புதுச்சேரி அரசு நிறைவேற்றவில்லை என்பதால், தங்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி கல்வித்துறை வளாகத்தில் கடந்த பதினேழு நாட்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று, வருவதோடு புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 05.2.2026 அன்று கூடிய புதுச்சேரி அரசின் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் பணியினை மேலும் ஆறு மாதம் ஒப்பந்த காலம் நீட்டிப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசின் இத்தகைய துரோகச் செயல்பாடுகள் மூலம் வருங்காலத் தலைமுறையினரை உருவாக்கும் அறிவார்ந்த ஆசிரியர் பெருமக்களை ஏமாற்றும் செயலில் புதுச்சேரி அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 292 கெளரவ விரிவுரையாளர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிக்கா ஆசிரியர்களை இனியும் ஏமாற்றி, அவர்களின் குடும்பங்களை வறுமையில் வாடவிடாமல் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் தமிழர் கட்சி துணைநின்று, போராட்ட கோரிக்கைகள் வெல்ல வலிமைச்சேர்க்கும் என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிராக மீனவ கிராமங்களின் சார்பில் இன்று (09.02.2026) நடைபெற்ற போராட்டத்தினை ஏற்று தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினைக் கைவிட வேண்டும்.
@mkstalin @TThenarasu @supriyasahuias @ARROffice @katpadidmk @thamoanbarasan
சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற மற்றும் வெள்ளத் தடுப்பு ஆகிய காரணங்களைக் கூறி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை இடையிலுள்ள கோவளம் உப்பங்கழிப் பகுதியில் ஒரு புதிய நன்னீர் தேக்கத்தை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏறக்குறைய 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,375 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்தத் திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் (CRZ) அனுமதி கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், சென்ற 19.01.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதன் சூழலியல் மற்றும் மீனவர் வாழ்வாதார சிக்கல்களை சுட்டிக்காட்டி இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்த்து வருகின்றனர். கடந்த 18.01.2026 அன்று நாம் வெளியிட்ட அறிக்கை முதல், இத்திட்டத்திற்கு எதிராக போராடும் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று 09.02.2026, கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு வரையிலான 16 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரப் பாதிப்புகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், மீன்வளத்துறையைக் கண்டித்தும், மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவளம் உப்பங்கழியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
காலம் காலமாக உப்பங்கழிகளை நம்பி மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்களின் மரபுவழி "பாாடு" உரிமைகளை இந்தத் திட்டம் முற்றிலுமாகப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசு தனது திட்ட அறிக்கையில் இந்த இடங்களை "வெற்று நிலம்" என்று குறிப்பிட்டிருப்பது மீனவ சமூகத்தை வஞ்சிக்கும் செயலாகும். இயற்கை வளங்களையும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மக்களாட்சிக்கு எதிரான செயலாகும். இதுவரை அளித்துவரும் ஆதரவின் நீட்சியாக, மீனவகுடி பெருமக்களின் இன்றையப் போராட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஐயா அம்பேத் ராஜன் அவர்கள் தலைமையில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கெடுப்பார்கள் எனவும், இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் தடுப்பதற்கான அனைத்து அறவழி போராட்ட வடிவங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் அறிவிக்கிறேன். மீனவ மக்களின் அறப்போராட்டம் வெற்றியடையட்டும். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.அரவிந்தன் அவர்களின் தாயார் அம்மா வீ.கல்யாணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தாயை இழந்து வாடும் தம்பி அரவிந்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கல்யாணி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் தை 23ஆம் நாள் 06-02-2026 சென்னை போரூர் உள்ளரங்கத்தில் நடைபெற்றது.
youtu.be/ne5mjpTWBgw -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இரத்து செய்யும் அளவிற்கு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள குரூப்-2 தேர்வு, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய Group–2 தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்ந்து மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 828 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று நடைபெற்ற குரூப் - 2 தேர்வு, அரசு தேர்வாணையத்தின் குளறுபடிகளால், தேர்வர்கள் பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில் தேர்வையே முழுமையாக இரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது பெருங்கொடுமை.
தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியிருந்ததால் குழப்பம் ஏற்பட்டு, தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, பின் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட குளறுபடிகளால் மாணவர்கள் மிகுந்த பதட்டத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தேர்வு எழுத முடியாத அசாதாரண சூழலும் தேர்வாணையத்தின் அலட்சியத்தால் உருவானது. அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு முன்கூட்டியும், பல மாணவர்களுக்கு மிகத் தாமதமாகவும் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வின் சமநிலை என்பது முற்றாகச் சீர்குலைந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் - 2 முதல்நிலைத்தேர்வு, இதே போன்று தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் நடைபெற்றதால், கடும் கண்டனம் எழுந்த பிறகு இரத்து செய்யப்பட்டது. அதன் பிறகாவது திமுக அரசும், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையமும் விழிப்புற்று, முழுமையான பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டிருக்காது.
தொடர்ச்சியாக திமுக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது பெருங்கொடுமையாகும். இரவு பகல் பாராது, கண்துஞ்சாது படித்து, தங்களின் கடின உழைப்பைச் செலுத்திய தமிழ்நாட்டு தம்பி-தங்கைகளின் அரசுப்பணி கனவினை சுக்கு நூறாக்கியுள்ள திமுக அரசு, அவர்களது குடும்பத்தையும் மீளா வறுமை சூழலில் தள்ளியுள்ளது. வெற்று விளம்பரங்களுக்கும், வீண் ஆடம்பரங்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை நிர்வாகப் பணிகளை சரியாகச் செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் திமுக அரசு காட்டத்தவறுவது ஏன்? மக்கள் நலனை பாதுகாப்பதே மக்களாட்சியின் மகத்தான மாண்பாகும். அதனை செய்யத்தவறிவிட்டு, கோடிகளை கொட்டி நல்லாட்சி செய்வதாக விளம்பரம் செய்தால் அதனால் நாட்டு மக்கள் அடைந்த நன்மை என்ன? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
நிர்வாக திறமையின்மை மற்றும் பொறுப்பின்மை காரணமாக
தமிழிளந்தலைமுறையின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசின் அலட்சியப்போக்கிற்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் முரளி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த தம்பி முரளி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பி முரளி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி முரளி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத்தம்பி இரா.சுந்தரவந்தியத்தேவன் அவர்களின் தாயார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அம்மா இரா.ரஞ்சிதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி சுந்தரவந்தியத்தேவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ரஞ்சிதம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி நம்முடைய தமிழ் மொழிதான் என்பதை ஆய்வுகள் வழி சான்றுகளுடன் நிறுவிய பல்மொழி வித்தகர்..!
40க்கும் மேற்பட்ட மொழிகளின் வேர்ச்சொற்களை ஆய்வு செய்த மொழியியல் வல்லுநர்..
தனித்தமிழ் இதழாக வெளிவந்த தென்மொழி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று அன்னைத் தமிழ் வளர்த்த பெருமகன்..
இந்தி திணிப்புக்கு எதிராகத் தீரத்துடன் களம் கண்ட மொழிப்போர் வீரர்..
அன்றைய ஆட்சியாளர்கள் தமிழர்களிடம் இருந்த தமிழ்ப்பற்றைத் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டு, தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபடாமல் ஏமாற்றுவதைக் கண்டு வருந்தி, உலகத் தமிழ் கழகத்தினை உருவாக்கிய பெருந்தகை..
தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், தமிழர் மதம், தமிழ் வரலாறு, திருக்குறள் தமிழ் மரபுரை உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் படைத்தளித்த தமிழ் அறிஞர்...
வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி மீட்சிக்கும், வளர்ச்சிக்கும், அயராது பாடுபட்ட “தமிழ்ப் பெருங்காவலர்” “செந்தமிழ்ச் செல்வர்” மொழியியல் பேரறிஞர், நம்முடைய தாத்தா மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பெரும்புகழ் போற்றுவோம்..! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - செய்யூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி இரா.பிரவீன்குமார் அவர்களின் தாயாரும், செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் பாசறை அன்புத்தங்கை சே.சுவாதிலஷ்மி அவர்களின் மாமியாருமான அம்மா இரா.சாவித்ரி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் இரா.பிரவீன்குமார், சே.சுவாதிலஷ்மி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா இரா.சாவித்ரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மண்டபம் மாவட்ட இளைஞர் பாசறையின் துணைச் செயலாளர் அன்புத்தம்பி மு.இனியபாபு அவர்களின் தந்தை ஐயா சி.முத்திருளாண்டி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா சி.முத்திருளாண்டி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்பிற்குரிய சகோதரர் லலித்குமார் அவர்களின் @7screenstudio நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அன்புத்தம்பி
சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில்,
அன்பு இளவல் தமிழ் அவர்களின் ஆகச்சிறந்த கதை, திரைக்கதை, உரையாடலில், அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார் ஆகியோர் நாயகர்களாக நடித்து வெளியான வெற்றிப்படைப்பான ‘சிறை’ திரைப்படத்தினை அண்மையில் கண்டு மெய் சிலிர்த்தேன்.
1980களில் நடந்த உண்மை நிகழ்வைத் தழுவி அன்புத்தம்பி தமிழ் அவர்கள் எழுதிய கதையை, ஆகச்சிறந்த திரைப்படைப்பாகத் தந்துள்ள சுரேஷ் ராஜகுமாரி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இயக்குநர், நடிகராக மட்டுமின்றி கதாசிரியராகவும் தம்பி தமிழ் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
காவல்துறையில் பணியாற்றிய தம்முடைய அனுபவத்தின் மூலம் காவல்துறையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான உண்மைகளை ஆகச்சிறந்த கலைப்படைப்புகளாக ஆக்கித்தந்து, சமூகத்தின் இருண்ட பக்கங்களுக்கு புதுவெளிச்சம் பாய்ச்சும்
தம்பி தமிழின் அளப்பரிய கலைத்திறன் மிகுந்த போற்றுதற்குரியது.
‘சிறை’ பொதுவாக வலியையும் வேதனையையும் தரும் என்பார்கள். ஆனால், இந்த ‘சிறை’ திரைப்படம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. வேலை பளு காரணமாக திரைப்படம் வெளியான உடனேயே காணக்கூடிய சூழல் அமையாத நிலையில், இப்படி ஒரு நல்ல படத்தை இத்தனை நாட்கள் பார்க்காமல் தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தும் அளவிற்கு ஆகச்சிறந்த கலைப்படைப்பாக சிறை திரைப்படம் அமைந்துள்ளது மிகுந்த மனநிறைவைத் தந்தது. கதையின் நாயகனுக்கு அப்துல் ரவூப் என்ற பெயர் வைத்ததற்காவே தம்பி தமிழ் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்.
ஒரே ஒரு பெயர் அதிகாரவர்க்கத்தின் பார்வையிலும், சிந்தனையிலும் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது ‘சிறை’ திரைப்படம்.
சாமானிய மனிதர்கள் அவர்கள் சார்ந்துள்ள சாதி, மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் என்ற உண்மையை வெகு இயல்பாக உணர்த்துகிறது ‘சிறை’ திரைப்படம். இசுலாமியப் பெயர் வைத்திருந்தாலே எந்த அளவிற்கு அவர்கள் சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை ஐயா அப்துல் கலாம் முதல் இந்தி
நடிகர் ஷாருக்கான் வரை நாம் செய்திகளாக கேள்விப்பட்டு அறிந்தோம்.
அத்தனை உயரத்திற்கு சென்ற புகழ் பெற்ற ஆளுமைகளுக்கே அந்த நிலைமை என்றால்
இந்த மண்ணில் வாழும் சாமானிய இசுலாமியச் சொந்தங்கள் எத்தகைய துயரங்களையும், வேதனைகளையும் அதிகார மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் சந்திக்க நேர்கிறது என்பதைப் பார்க்கும் அனைவருக்கும் கடத்துகிறது ‘சிறை’ திரைப்படம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாகவே சிறையில் இசுலாமியச் சொந்தங்கள் மனதளவிலும், உடலளவிலும் அனுபவித்து வரும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!
காவல்துறையிலும், நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் கலந்தே உள்ளனர் என்பதையும்,
துறை ரீதியாக அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள், அரசியல் அதிகாரத்தின் அழுத்தத்தால் வேறு வழியின்றி அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய சூழல்கள் என அனைத்தையும் கதையின் போக்கிலேயே வெளிப்படுத்தி புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது சிறைத் திரைப்படம்.
ஈழமக்களின் துயர் துடைக்க தன் இன்னுயிர் ஈந்த மானத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு ‘தழல் ஈகி’ அப்துல் ரவூப் அவர்களின் ஈகத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாக, நாம் தமிழர் கட்சி தம் மாணவர் பாசறையின் குறியீடாக அப்துல் ரவூபின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது. ஆனால், இப்படத்தின் ஒரே ஒரு உரையாடல் மூலம் அனைத்து
மக்களுக்கும் அப்துல் ரவூபின் ஈகத்தை தம்பி தமிழ் சேர்த்துள்ளது மனதை நெகிழச் செய்துவிட்டது.
விக்ரம் பிரபு உண்மையான காவல்துறை அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடனும், அதிகார தோரணையுடனும் காவலர் கதிரவனாக தம்பி விக்ரம் பிரபு நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். டாணாக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு தம்பி விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களும் தம்பி தமிழ் அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளாகும். அவரைப்போலவே படத்தின் நாயகனாக வரும் தம்பி அக்ஷய்குமார் அறிமுக நாயகன் என அறியாத அளவிற்கு, தன்னுடைய திறமையான நடிப்பாற்றலால் கதையின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். இறுதிக் காட்சியில் அவரின் அழுகை நெஞ்சை உருகச் செய்துவிட்டது.
80களில் வாழ்ந்த சிவகங்கை மண்ணின் மகளாக வரும் நாயகி அனிஷ்மா சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா ஏற்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதிபதியாக வரும் தேனப்பன், காவல் ஆய்வாளராக வரும் தம்பி மூணாறு ரமேஷ், ரகு உள்ளிட்ட அனைவருமே தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர். அழுத்தமான உரையாடல்களும், அதற்கேற்ற காட்சி அமைப்புகளும் படத்தை ஆகச்சிறந்த காவியமாக்கியுள்ளது.
தம்பி ஜஸ்டின் பிரபாகரின் மனதை வருடும் இசையும், தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி பிலோமின் ராஜின் அருமையான படத்தொகுப்பும், படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘சிறை’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..!
நீதிமன்றங்களே இந்த நாட்டில் வாழும் எளிய மக்களின் இறுதி நம்பிக்கை என்பதையும், காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டால் இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு குடிமகனும் அநியாயமாகத் தண்டிக்கப்படாமல் காக்க முடியும் என்பதையும் காட்சிகளால் கற்பிக்கிறது ‘சிறை’ திரைப்படம்.
சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத கலைப்படைப்பு வீணானதே. நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘சிறை’ திரைப்படம், சமகால மனிதர்களின் சிந்தனையில் நல்ல மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுபோன்ற ஆகச்சிறந்த திரைப்படைப்புகளுக்கு நாம் தரும் ஆதரவும், வரவேற்புமே, படைப்பாளிகளுக்குப் பெரும் ஊக்கத்தையும், மேன்மேலும் இதுபோன்ற கலைப் படைப்புகளைத் தரவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்து, தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பாக அமையும்.
1984ஆம் ஆண்டு அம்மா லட்சுமி அவர்களின்
நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் வெற்றிப் படைப்பானது போல, அன்பு இளவல் சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படைப்பானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது!
‘சிறை’ திரைப்பட இயக்குநர் அன்பு இளவல்
சுரேஷ் ராஜகுமாரி, திரைக்கதை ஆசிரியர்
அன்புத்தம்பி தமிழ், நாயகர்கள் அன்புத்தம்பி
விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார், நாயகி அனிஷ்மா உள்ளிட்ட ‘சிறை’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
சிறை பார்க்கும்
ரசிகர்களின்
மனம் நிறை!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#sirai @iamVikramPrabhu @directortamil77 #sureshrajakumari @lk_akshaykumar @iamanishma
@anandasayani @madheshmanickam
@justin_tunes @philoedit @PC_stunts
@proyuvraaj #lkvishnukumar #sslalitkumar -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியினுடைய தமிழ் மீட்சிப் பாசறை இணைச் செயலாளரும், ஒப்பற்ற களச்செயற்பாட்டாளருமான அன்புத்தம்பி செ.மணிகண்டன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் கள்ளிகுப்பம் மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி கோ.ராஜா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த தம்பி வீ.ஆர்.கணேஷ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கோ.ராஜா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே கலைத்துறையின் பல்வேறு கூறுகளை சிறப்புற கற்றுத் தேர்ந்து, பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற கலைஞன்!
தமிழ்த்திரையுலகில் மிளிரும் முன்னனி திரை நட்சத்திரம்!
தனித்துவமான கலைத்திறனால் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரை ஆளுமை!
என்னுடைய ஆருயிர் இளவல் சிலம்பரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
தொடர்ந்து பல நல்ல திரைப்படைப்புகளை தந்து மக்களை மகிழ்விக்கவும், கலைத்துறையில் சாதனை படைக்கவும் அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!
@SilambarasanTR_ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடன் வாங்குவதே நாட்டின் வளர்ச்சி, அதற்கான வட்டி கட்டுவதே மக்களுக்கான நலத்திட்டம் என்று ஆட்சியாளர்கள் கட்டமைப்பது நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பெருந்துரோகம்!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லாது, நாட்டினை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விளம்பர அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கையாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாது வழக்கம்போல தமிழ்நாட்டை முற்று முழுதாக புறக்கணிக்கும் மற்றுமொரு ஏமாற்று நிதிநிலை அறிக்கையாகவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடுமையான வரிகள் மூலம் நாட்டின் குடிமகனை வலுவற்றவனாக்கிவிட்டு, 'ஏழ்மையை ஒழிப்போம்' என்று நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் கூறுவது வேடிக்கையானது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அரசின் வருவாயில் கோடிக்கணக்கான ஏழை தனிமனிதர்களை கசக்கிப் பிழிந்து பெறப்பட்ட வரி வருவாய் பங்கு 21% என்று கூறும் பாஜக அரசு, பல்லாயிரம் கோடிகள் சலுகையின் மூலம் பல இலட்சம் கோடிகள் இலாபமீட்டும் பெருநிறுவனங்கள் தரும் வரிவருவாய் பங்கு வெறும் 18% மட்டும்தான் என்பதும், பொதுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டபடி தனியார் மயமாக்குவோம் என்பதும், இந்த அரசும்-அதிகாரமும் பாமர மக்களுக்கானது அல்ல பெருமுதாலாளிக்கானது மட்டும்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மீள உருவாக்க முடியாத கனிம வளங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வரும் நிலையில், அதனை புறந்தள்ளி கனிம வளங்களை வெட்டி எடுத்துச் செல்ல கடற்கரையை ஒட்டி புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது நாட்டினை வளவேட்டையாட வழிவகுக்கும் பெருங்கொடுமையாகும்.
நாட்டின் பாதுகாப்பிற்கும், போக்குவரத்திற்கும் தலா 6 இலட்சம் கோடிகள் (11%) அளவிற்கு நிதியை ஒதுக்கியுள்ள பாஜக அரசு, வேளாண்மைக்கு 2 விழுக்காடும், கல்வி, மருத்துவத்திற்கு் 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, உயிர் காக்கும் வேளாண்மைக்கும், உடல் நலன் காக்கும் மருத்துவத்திற்கும், அறிவை வளர்க்கும் கல்விக்கும் எந்த அளவு குறைவான முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டுகிறது. சமூக நலத்திட்டங்களுக்கு வெறும் 62 ஆயிரம் கோடியை மட்டுமே பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. மக்களின் அடிப்படை தேவையான வேளாண்மை, கல்வி, மருத்துவத்தைவிட பெருமுதலாளிகளின் இலாப வேட்டையில் எவ்வித தேக்கமும் ஏற்பட்டுவிடாதபடி போக்குவரத்து சேவை செய்வதே பாஜக அரசிற்கு முதன்மையானதா?
நாட்டின் மொத்த வருவாயில் 24 விழுக்காட்டை கடனாக வாங்கியுள்ளதாக அறிவித்துவிட்டு, மொத்த கடனுக்கு வட்டியாக 20 விழுக்காடு செலவிடுவதாக தனது நிதிநிலை அறிக்கையில் கூறும் அரசு எப்படி நல்ல அரசாக இருக்க முடியும்? இந்திய ஒன்றிய அரசு மக்கள் திட்டங்களுக்காக செலவிடும் (17%) தொகையைவிடவும், வாங்கியுள்ள மொத்த கடனுக்கு செலுத்தும் (20%) வட்டி அதிகம். இதற்குப் பெயர்தான் வளர்ச்சியா? இதற்குப் பெயர்தான் நாட்டின் முன்னேற்றமா? அலைபேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கு
வரி குறைப்பு செய்துவிட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, குளம்பி தூள் (காப்பி பொடி) ஆகியவற்றின் மீதான வரியை அதிகரித்திருப்பது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
அதுமட்டுமின்றி, நடப்பு நிதிநிலை அறிக்கையில் வேளாண் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும் உர மானியத்தில் 16 ஆயிரம் கோடிகளும், உணவு மானியத்தில் 500 கோடிகளும், எரிபொருள் மானியத்தில் 3000 கோடிகளும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியை 1000 கோடிகளும் பாஜக அரசு குறைத்துள்ளது ஏன்? மானியங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்து, 2026-27ஆம் ஆண்டிற்குள் 'மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதி பற்றாக்குறையை' 4.5%க்கும் கீழ் குறைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று பாஜக அரசு பெருமை பேசுவது வெட்கக்கேடானது. உற்பத்தியை பெருக்குவதன் மூலம் வருவாயை அதிகரித்தும், கடன் வாங்குவதை குறைத்தும், நிதிப்பற்றாக்குறையை போக்க வேண்டுமே தவிர, மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார மானியத்தை குறைத்துவிட்டு நிதிப்பற்றாக்குறையே இல்லை என்று நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் கூறுவது அப்பட்டமான ஏமாற்றாகும்.
மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 50% நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, கடந்த ஆண்டைப்போல வெறும் 41% மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது மாநில உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். கடந்த ஆண்டு பீகார் மாநில தேர்தலுக்கு முன்பான நிதிநிலை அறிக்கையில் அம்மாநிலத்திற்கு பல்லாயிரம் கோடிகளை சிறப்புத் திட்டங்களுக்காக கொட்டிக்கொடுத்த மோடி அரசு, இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் தமிழ்நாட்டிற்கு, தேர்தலுக்காகவாது எந்தவொரு சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காதது, என்ன செய்தாலும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை வாங்க முடியாது என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. அதிக வரிவருவாய் தரும் தமிழ்நாட்டை பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது தமிழர்களுக்கு செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், சிறுகுறு வணிகர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் முற்று முழுதாக புறக்கணித்துவிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நிதிநிலை அறிக்கை, தனியார் பெருமுதலாளிகளின் வளவேட்டைக்கு நாட்டை தாரைவார்க்க அரசே எழுதி தந்துள்ள அதிகார சாசனமாகும்.
மொத்தத்தில் ஏழ்மையை ஒழிக்கவும், வேளாண்மையை மீட்கவும்,
பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும், அதிக வரி விதித்து அமெரிக்க அரசு தரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாது, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக திட்டங்களை வாரி வழங்கியும், பாஜக ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை, தொலைநோக்குப் பார்வை ஏதும் இல்லாத, நாட்டினை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மற்றுமொரு வெற்று ஏமாற்று அறிக்கையாகும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி நல்லான் அவர்களின் தந்தை ஐயா சண்முகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் நல்லான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சண்முகம் அவர்களுக்கு
எனது கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பாட்டாளி மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கும், முன்னேற்றத்திற்கும் தம் வாழ்வினை ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை!
வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்!
அன்பிற்கினிய அண்ணன் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் பிறந்த நாளில் என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகின்றேன்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன்!
திருமுருகப்பெருமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்!
உலகத் தமிழர் அனைவருக்கும்
தைப்பூசத் திருநாள்
வாழ்த்துகள்!
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி, நம் தமிழ் மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று பண்பாட்டு செழுமைமிக்க தமிழ்ப் பேரினத்தின் இறையோன் நம்மின மூதாதை முப்பாட்டன் முருகப்பெருமானாவார்.
தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலங்கள் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக முப்பாட்டன் முருகப்பெருமான் திகழ்கிறார்.
உலகம் முழுமையும் எங்கெல்லாம் தமிழர்கள் பெருமளவு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.
ஈழம், சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார்.
‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களே தமிழர் பண்பாடாகியது.
அப்படி நமது மூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர் வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும்.
அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு சிறப்புறும் வகையில் திருமுருக
வழிபாட்டுத் திருநாளான
தைப்பூசப் பெருவிழாவினை
உலகெங்கும் தாய்த்தமிழ் சொந்தங்கள் கொண்டாடி,
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன்!
திருமுருகப்பெருமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்!
உலகத் தமிழர் அனைவருக்கும்
தைப்பூசத் திருநாள்
வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி, நம் தமிழ் மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று பண்பாட்டு செழுமைமிக்க தமிழ்ப் பேரினத்தின் இறையோன் நம்மின மூதாதை முப்பாட்டன் முருகப்பெருமானாவார்.
தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலங்கள் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக முப்பாட்டன் முருகப்பெருமான் திகழ்கிறார்.
உலகம் முழுமையும் எங்கெல்லாம் தமிழர்கள் பெருமளவு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.
ஈழம், சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார்.
‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களே தமிழர் பண்பாடாகியது.
அப்படி நமது மூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர் வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும்.
அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு சிறப்புறும் வகையில் திருமுருக
வழிபாட்டுத் திருநாளான
தைப்பூசப் பெருவிழாவினை
உலகெங்கும் தாய்த்தமிழ் சொந்தங்கள் கொண்டாடி,
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன்!
திருமுருகப்பெருமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்!
உலகத் தமிழர் அனைவருக்கும்
தைப்பூசத் திருநாள்
வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வடகிழக்கு மாவட்ட தமிழ்மீட்சிப்
பாசறை செயலாளர் ஐயா கணேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து
மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கணேசன் அவர்களுக்கு
எனது கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வாசுதேவநல்லூர்
சட்டமன்றத் தொகுதி தலைவன்கோட்டையைச் சேர்ந்த
செந்தமிழர் பாசறை அமீரகம்- புஜைரா மண்டல செயலாளர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தந்தை ஐயா எ.கிருஷ்ணசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி மணிகண்டன் அவர்களுக்கும், குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கிருஷ்ணசாமி அவர்களுக்கு
எனது கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி, நம் தமிழ் மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று பண்பாட்டு செழுமைமிக்க தமிழ்ப் பேரினத்தின் இறையோன் நம்மின மூதாதை முப்பாட்டன் முருகப்பெருமானாவார்.
தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலங்கள் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக
முப்பாட்டன் முருகப்பெருமான் திகழ்கிறார்.
உலகம் முழுமையும் எங்கெல்லாம் தமிழர்கள் பெருமளவு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.
ஈழம், சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார்.
‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களே
தமிழர் பண்பாடாகியது.
அப்படி நமது மூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர்
வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும்.
அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு சிறப்புறும் வகையில் திருமுருக
வழிபாட்டுத் திருநாளான
தைப்பூசப் பெருவிழாவினை
உலகெங்கும் தாய்த்தமிழ் சொந்தங்கள் கொண்டாடி,
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன்!
திருமுருகப்பெருமமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்!
உலகத் தமிழர் அனைவருக்கும்
தைப்பூசத் திருநாள்
வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற News தமிழ் 24/7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது
கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய அடியாட்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராம பகுதியில் செயல்படும் கல்குவாரியில், சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக கனிமவளம் அள்ளப்பட்டு வருகிறது. நாள்தோறும் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்து, செய்தி சேகரிக்க சென்ற News தமிழ் 24/7 ஊடகத்தின் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி முறைகேடாக கல்குவாரியை நடத்தும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிதான் தனது அடியாட்களுடன், அதிகார மமதையுடன் இக்கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஏன் உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத
கொடுஞ்சூழல் நிலவுவதுதான் பெருங்கொடுமை.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாக சீரழிந்துள்ளது. திமுக ஆட்சியில் கடன் வாங்குவதிலும், கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், கனிமவளக் கொள்ளையிலும்தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறிநிற்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மணற்கொள்ளையை தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு - கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது முதல், கடந்த ஆண்டு கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடிய திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருமயம் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். தற்போது ழிமீஷ்s தமிழ் 24/7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது வரை கனிமவளக் கொள்ளையர்கள் நிகழ்த்தும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதனை தடுத்து நிறுத்தாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.
சமூக அவலங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலை என்ன? கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்களை அரசே கைது செய்வதும், கூலிப்படைகள் மூலமாக கொல்லப்படுவதும் தொடர்கதையாகிவிட்ட திமுக ஆட்சி மக்களுக்கானதா? அல்லது கனிமவளக் கொள்ளையர்களுக்கானதா? அரசு அலுவலர் முதல் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் வரை உண்மையும் நேர்மையுமாக மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா? என்ற
கேள்வி எழுகிறது.
ஆகவே, கனிமவளக்கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற News தமிழ் 24/7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய அடியாட்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கைது செய்வதோடு சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்...
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, இன்று தை 17ஆம் நாள் 31-01-2026 சென்னை கோயம்பேடு சிம்சன் உண்டுறை விடுதியில் (SIMSAN HOTEL) நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. x.com/i/broadcasts/1MnGnPMvarexO -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
போற்றுதற்குரிய கல்வியாளர், சமூகநல ஆர்வலர், பல்லாயிரம் மாணவர்களின் அறிவுக்கண்களை திறந்த இமாம் ஷாபி பள்ளியின் தாளாளர், ஷிபா மருத்துவமனை நிறுவனர், பெருமதிப்பிற்குரிய ஐயா ஜனாப் எம்.எஸ்.தாஜூதீன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக
கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஐயா எம்.எஸ்.தாஜூதீன் அவர்கள் ஆற்றியுள்ள அரும்பணிகள் என்றென்றும் நினைவுக்கூரத்தக்கவை!
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய, குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரால் பயன்பெற்ற மாணவர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
போற்றுதற்குரிய பெருந்தகை
ஐயா ஜனாப் எம்.எஸ்.தாஜூதீன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாகப் பசியில் இருப்போர்க்கு வயிறார உணவு கொடுப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்று கற்பித்து வடலூரில் அணையா அடுப்பை ஏற்றி வழிகாட்டிய வள்ளல்..
வாடிய பயிரைக் கண்டு வாடிய உயிர்ம நேயர்..
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்ட புரட்சியாளர்...
தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர்..
உண்மை ஒளியைக் காண வடலூர் பெருவெளியை அமைத்த அருளாளர்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கவென திருவருட்பா அருளிய தெய்வத் திருமகன்..
‘தமிழர் மெய்யியல் மீட்பர், திருவருட்செல்வர் வள்ளல் பெருமானார் திருப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்...
இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக தை 15ஆம் நாள் (29-01-2026) சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கிருஷ்ணசாமி தெருவில் (சி.என்.கே) மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது
x.com/i/broadcasts/1LyGBXnDelMxN -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாம் தமிழினப் படுகொலையின்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் பாராமுகம் தாளாமல், மௌனித்திருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்த 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழத்தில் தமிழினம் சிங்கள இனவெறிக்குப் பலியாவது பொறுக்காமல், அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்ட அன்றைய ஆட்சியாளர்களைக் கண்டும், உணர்வற்று கிடந்த மக்களை கண்டும் மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து பேரெழுச்சித் தீயைப் பற்ற வைத்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான்.
’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்ளுக்கும், ’தமிழரை அழிப்பதற்கு துணைநின்ற இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் தன் உயிராயுதத்தால் பாடம் புகட்டினான். தன் இன்னுயிரை ஈந்து உறங்கிக்கிடந்த தமிழ் இனத்தை உணர்வு சூடேற்றி உசுப்பினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். இனத்தைக் காக்க பறிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து அன்றைக்கு 20 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் அன்றைய திமுக ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும், அதிகாரத்திமிரும் முடிந்து போகவில்லை, இன்றுவரை தொடர்கிறது என்பதே நிகழ்காலம் நமக்கு உணர்த்தும் உண்மை.
முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்றளவும் இலங்கையின் இனவாத வெறி பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது. அதன் நீட்சியாகவே ஒவ்வொரு நாளும் கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.
நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு நம் சிந்தைகளில் இன்றளவும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. முத்துக்குமாரின் உயிர் ஈக லட்சியம் இன்றில்லையேலும் என்றாவது அடைவது உறுதி. எத்தனை தடை வந்தபோதிலும் தளராத உறுதியுடன் அவரின் லட்சியப் பயணத்தை தொடர்வதே அந்த மாவீரனுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.
வீரமும் விவேகமும் மானமும் கொண்ட துடிப்பு மிக்க இளைஞன் முத்துக்குமாரின் அளப்பரிய ஈகத்தை போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை குறியீடாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது.
தமிழீழத் தாயகம் காக்க தன்னுயிர் தந்த தனல் ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமார் அவர்களுக்கு வீரவணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் மனிதநேய மருத்துவர் போற்றுதற்குரிய ஐயா இலரா.பாரதிச்செல்வன், தமிழ்த்தேசிய எழுத்தாளர் ஐயா இலரா.மோகன் ஆகியோரின் மூத்த சகோதரியும், கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா இராம.அரவிந்தன் அவர்களின் தாயாருமான அம்மா சுந்தராம்பாள் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.
அவரை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா இராம.அரவிந்தன், ஐயா மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன், ஐயா இலரா.மோகன் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் மற்றும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சுந்தராம்பாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாம் தமிழினப்படுகொலையின்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் பாராமுகம் தாளாமல், மௌனித்திருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்த 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழத்தில் தமிழினம் சிங்கள இனவெறிக்குப் பலியாவது பொறுக்காமல், அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்ட அன்றைய ஆட்சியாளர்களைக் கண்டும், உணர்வற்று கிடந்த மக்களை கண்டும் மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து பேரெழுச்சித் தீயைப் பற்ற வைத்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான்.
’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்ளுக்கும், ’தமிழரை அழிப்பதற்கு துணைநின்ற இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் தன் உயிராயுதத்தால் பாடம் புகட்டினான். தன் இன்னுயிரை ஈந்து உறங்கிக்கிடந்த தமிழ் இனத்தை உணர்வு சூடேற்றி உசுப்பினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். இனத்தைக் காக்க பறிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து அன்றைக்கு 20 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் அன்றைய திமுக ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும், அதிகாரத்திமிரும் முடிந்து போகவில்லை, இன்றுவரை தொடர்கிறது என்பதே நிகழ்காலம் நமக்கு உணர்த்தும் உண்மை.
முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்றளவும் இலங்கையின் இனவாத வெறி பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது. அதன் நீட்சியாகவே ஒவ்வொரு நாளும் கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.
நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு நம் சிந்தைகளில் இன்றளவும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. முத்துக்குமாரின் உயிர் ஈக லட்சியம் இன்றில்லையேலும் என்றாவது அடைவது உறுதி.
எத்தனை தடை வந்தபோதிலும் தளராத உறுதியுடன் அவரின் லட்சியப் பயணத்தை தொடர்வதே அந்த மாவீரனுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.
வீரமும் விவேகமும் மானமும் கொண்ட துடிப்பு மிக்க இளைஞன் முத்துக்குமாரின் அளப்பரிய ஈகத்தை போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை குறியீடாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது.
தமிழீழத் தாயகம் காக்க தன்னுயிர் தந்த தனல் ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமார் அவர்களுக்கு வீரவணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தலைநகர் சென்னையில் பீகார் இளைஞர் கௌரவ் குமார் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu
@mkstalin
சென்னை அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தம்பி கௌரவ் குமார், அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. மது போதையில் வடமாநில இளைஞர்கள் கௌரவ் குமாரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளதோடு, தடுக்க முயன்ற கௌரவ் குமாரையும், ஏதுமறியா அவர்களது 2 வயது குழந்தையையும் கொன்றுள்ள கொடூர நிகழ்வு நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது.
தலைநகரிலேயே நடைபெற்றுள்ள இக்கொடூர நிகழ்வு காவல்துறை என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா? இயங்குகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டில் பட்டப்பகலில் கூட மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுமையான சூழல் நிலவுவது, திமுக ஆட்சியில் எந்த அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத, உலகமே வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மிகச்சிறப்பான ஆட்சியா? வெட்கக்கேடு!
இக்கொடூர கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வடமாநிலத்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள கொடூர குற்றத்திற்கு மூல காரணமாகும். அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள மதுக்கடைகளை மூடுவதில் திமுக அரசிற்கு இன்னும் என்ன தயக்கம்? நாட்டு மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை விடவும் அரசின் வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா? ஈவு இரக்கமின்றிக் கொலை செய்யப்பட்ட தம்பி கௌரவ் குமாரின் 2 வயது குழந்தையின் உடல் குப்பைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட கொடுமை நெஞ்சை உலுக்குகிறது.
தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் உள்நுழைவுச் சீட்டு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சி போராடி வரும் கோரிக்கையானது, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு மட்டுமானதல்ல: வேலை தேடி வரும் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை உறுதி செய்வதற்கும் உள்நுழைவுச் சீட்டு மிகமிக இன்றியமையாததாகும். ஒன்றிய, மாநில அரசுகள் உள்நுழைவுச் சீட்டு முறையை முழுமையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் தற்போது அடையாறில் கொலையுண்டவர்கள் மற்றும் குற்றத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் குறித்த தகவல்களைத் தேடி அலைந்த அவலநிலை தமிழ்நாடு காவல்துறைக்கு ஏற்பட்டிருக்காது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும், போதைப்பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும், வடமாநிலத்தவர் குறித்த உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி போராடி வருகின்றது. ஆனால், ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் மீதமிருக்கும் இரண்டு மாதங்களில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை மக்கள் முற்று முழுதாக இழந்துவிட்டனர். கட்டுக்கடங்காது நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையும், அதன் காரணமாக நடைபெறும் கொடூர படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொள்ளப்போகிறதோ என்று மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
திமுக அரசை அகற்றி நல்லதொரு அரசை நிறுவுவது ஒன்றே தமிழ்நாட்டு மக்கள், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான ஒற்றை வழியாகும்.
ஆகவே, சென்னையில் பீகார் இளைஞர் தம்பி கௌரவ் குமார் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட கொடூர குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு சட்டத்தின் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள்: தை 15 | 29-01-2026 வியாழக்கிழமை மாலை சரியாக 05 மணிக்கு
இடம்: சி.என்.கிருஷ்ணசாமி தெரு (சி. என்.கே.) சென்னை - திருவல்லிக்கேணி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கோரிக்கைப் போராட்டத்தை வென்று வாகை சூடுவோம்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'நீர் இன்றி அமையாது உலகு'
என்றார் நம்முடைய வள்ளுவப் பெரும்பாட்டன். 'நீ இன்றி அமையாது நீர்நிலைகள்'
என்று சொல்லுமளவுக்கு
தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை செம்மைப்படுத்தி
பல்லுயிர் வாழவும் பாடுபடும்
அன்புத்தம்பி நிமல் ராகவன் - சுஜிதா
இணையருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்!
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்று தமிழ்மறை கூறும் அறநெறிக்கேற்ப ‘செம்புலப்
பெயல்நீர்’ போல அன்புடை நெஞ்சம் தான் கலந்து, எல்லா வளங்களும் நலன்களும் பெற்று, இல்லறத்தில் நல்லறம் கண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்!
@being_nimal -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அடக்குமுறைகளுக்கும், அதிகார அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பரந்தூர் புதிய வானூர்தி நிலைய போராட்டத்தை தொடர்ந்து முன்னின்று நடத்திய போராளியும், ஏகானாபுரம் கிராம ஊராட்சிமன்றத் தலைவர் சகோதரி சுமதி அவர்களின் கணவருமான மதிப்பிற்குரிய சகோதரர் சரவணன் அவர்கள் திடீர் உல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தான் பிறந்த மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் அயராது போராடிய சகோதரர் சரவணன் அவர்களின் மறைவு, பரந்தூர் ஏகானாபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
சகோதரர் சரவணனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஏகனாபுரம் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில. பங்கெடுக்கின்றேன்.
பரந்தூர் வானூர்தி நிலைய எதிர்ப்புப் போராளி பெரு மதிப்பிற்குரிய சகோதரர் சரவணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘கண்முன்னே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடுபவன் எவனோ அவனே உண்மையானப் புனிதப்போராளி’ என்ற பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களின் மறைமொழிக்கிணங்க, தான் பிறந்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் வாழ்வின் இறுதிநொடிவரை நேர்மையாக நின்று போராடிய புனிதப்போராளி!
அநீதியை எதிர்க்கத் துணிவில்லாதவன் சகித்துக்கொள்கிறான். தொடர்ச்சியாக சகித்துக்கொள்பவன் அடிமையாகிறான். அப்படி தானும், தான் பிறந்த சமூகமும் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக போராடிய பெருந்தகை!
ஒரு காலம் வரும் அப்போது எழுச்சி மிக்க இளைஞர் சமுதாயம் உருவாகும். அது எழுந்துவந்து என்னை புதைத்த இடத்தில் என் எலும்புகூடுகளை தோண்டி எடுத்து எனக்கு நன்றி செலுத்தும்; ஏனேன்றால் நான் பேசுவதெல்லாம் கனிகள் அல்ல; அவ்வளவும் விதைகள்; அது முளைத்து வரும்நாளில் வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று முழங்கிய புரட்சியாளர்!
தென்தமிழ்நாட்டு இளம்பிள்ளைகள் உயர்கல்வி பெரும்பொருட்டு பெருந்தமிழர் மூக்கையாத்தேவர் அவர்கள் கல்லூரி தொடங்க எண்ணியபோது, அவர் தொடங்கிய மூன்று கல்லூரிகளுக்கும் பெருநிதியை வாரி வழங்கி உதவிய வள்ளல்!
தமிழர்களே! நீங்கள் மதமாக நின்றால் ஆளப்படுவீர்கள், அச்சுறுத்தப்படுவீர்கள், ஆனால், இனமாக நின்றீர்களேயானால் வலிமைபெறுவீர்கள்.. ஆகவே, தமிழர்களே, இனப்பற்று போதாது. இனவெறி கொள்க! இல்லாவிட்டால், ஆளப்படுவாயே ஒழிய, ஒருபோதும் ஆளமாட்டாய் !"
சிறுபான்மை என்று சொன்னால்; சலுகைகள் கிடைக்குமேயொழிய, உரிமைகள் கிடைக்காது..! எனவே, நாம் தமிழர்களாக ஒன்றிணைவோம்! நாங்கள் இங்குதான் இருந்தோம். மார்க்கம்தான் எங்களிடத்தில் வந்தது. நாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் என்ற உண்மையை உலகிற்கு உரக்கச்சொன்ன தமிழினப்போராளி.
தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக, உரிமை மீட்பிற்காக, இசுலாமிய சமூக மக்களை அரசியல் படுத்துவதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் ஒப்புவித்து வாழ்ந்த ஈக மறவர்;
அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாது, ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்களால், அவர் கருத்துக்கு எதிர் கருத்து வைக்க திறனற்றவர்களால் புனிதப்போராளி பழனிபாபா அவர்களின் உடல் மண்ணில் வெட்டி வீழ்த்தப்பட்டபோதும், அவர் கொண்டிருந்த உன்னத இலட்சியங்கள், உயரிய கொள்கைகள் வரலாற்றில் நிலைபெற்று, தமிழிளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறது!
அவர் காட்டிய வழிதடத்தைப் பின்பற்றி அநீதிகளுக்கு எதிராக, அடிமைப்படுத்தப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எளிய மக்களின் விடுதலைக்காக, அவர்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்காக சமரசமற்று போராட உளமார உறுதியேற்பதே அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.
புரட்சியாளர் அண்ணன் பழனிபாபா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
இராதாபுரம் அடுத்துள்ள தோமையார்புரம் கடற்கரை கிராமத்தில் ஏறத்தாழ 160க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மீனவச் சொந்தங்கள் நாட்டுப் படகின் மூலம் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தோமையார்புரத்தில் முறையான தூண்டில் வளைவு இல்லாத காரணத்தால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அவலநிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு சுவர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகள் காரணமாக தோமையார்புரத்தில் கடல் அரிப்பு அதிகமாகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்திக் கடந்த 10 ஆண்டுகளாக மீனவச்சொந்தங்கள் மீண்டும், மீண்டும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாகப் போராடி வரும் தோமையார்புரம் மக்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க ஆளும் திமுக அரசு முன்வராதது, மீனவ மக்கள் மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் திமுக அரசிற்கு இத்தனை அலட்சியம் ஏன்? இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? எளிய மக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? மாண்புமிகு தமிழ்நாட்டின் சபாநாயகர் ஐயா அப்பாவு அவர்களின் சொந்த தொகுதியான இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவ மக்களையே வாழ்வாதாரக் கோரிக்கைக்காக இத்தனை ஆண்டுகள் அலைக்கழிப்பது பேரவலம்!
ஆகவே, திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரம் மீனவச்சொந்தங்களின் பத்தாண்டுகாலக் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மதுரை கிழக்கு குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி அருண் சக்ரவர்த்தி அவர்களின் தந்தையும், மாநில செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி பாக்கியராசன்.சே அவர்களின் சித்தப்பாவுமான மதிப்பிற்குரிய ஐயா மு.குமரேசன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா மு.குமரேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில் சாதித்த திருத்தணி ஓதுவார் ஐயா சுவாமிநாதன், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக்கலையை மீட்டெடுத்த
ஓவியக் கலைஞர் ஐயா நீலகிரி கிருஷ்ணன், வெண்கல சிலை வடிப்பதில் சாதித்த சிற்பக் கலைஞர் ஐயா சேலம் காளியப்ப கவுண்டர், இசைத்துறையில் சாதித்த மிருதங்கக் கலைஞர் ஐயா திருவாரூர் பக்தவத்சலம், சிலம்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ள புதுச்சேரி சிலம்ப கலைஞர் ஐயா கே.பழனிவேலு, பொறியாளர் ஐயா காமகோடி, கலைத்துறையில் சாதித்த சகோதரிகள் காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் அவர்களோடு, பத்மபூஷண் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐயா
களியப்பட்டி ராமசாமி, ஐயா பழனிசாமி, ஐயா மயிலானந்தன் மற்றும் மலையாள நடிகர் அன்புச்சகோதரர் மம்மூட்டி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நல்வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கால்நடை மருத்துவ ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணியமூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திரைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி நடிகர் மாதவன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொடர்ந்து பல ஆகச்சிறந்த கலைப்படைப்புகள் தந்து மென்மேலும் சாதனை படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@ActorMadhavan -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சமகால ஊடக ஆளுமைகளுக்கு முன்னத்தி ஏர்!
செய்தி ஊடகத்துறையில் கனவுகளோடு கால் பதிக்கும் தமிழிளம் தலைமுறைக்கு ஆகச்சிறந்த வழிகாட்டி!
36 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் நிறைந்த மூத்த தமிழ் பத்திரிக்கையாளர்..!
சமரசமற்று உண்மையும், நேர்மையுமாக போராடும் ஊடகப்போராளி சகோதரர் பா.ஏகலைவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பணம், பதவி, அதிகாரத்திற்கு விலைபோகும் அவலம் பெருகி, ஊடகத்துறையில் நடுவுநிலைமை என்பதே கேள்விக்குறியாகியுள்ள தற்கால கொடுஞ்சூழலில், அவற்றுக்கெல்லாம் தம்மை ஒப்புக்கொடுக்காதும், ஏற்றுக்கொண்ட கொள்கையை அணுவளவும் விட்டுக்கொடுக்காதும், உண்மையின் பக்கம் நின்று மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகத்துறையின் உன்னத அறத்தினை காத்திட போராடும் சகோதரர் பா.ஏகலைவன் அவர்களின் பெரும்பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அரசியல் அதிகார அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டபோதும், அவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்த துணைநிற்கும் அவருடைய உழைப்பும், ஒப்புடைப்பும் மிகுந்த போற்றுதலுக்குரியது.
இராவணா வலையொளியின் நிறுவனர், என் அன்புச்சகோதரர், ஐயா பா.ஏகலைவன் அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், உள்ள உறுதியுடனும் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று நலமுடன் வாழவும், ஊடக அறப்பணி சிறக்கவும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@eagalaivanp -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்
மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தை 11ஆம் நாள் (25-01-2026) காலை நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்க நிகழ்வு .
www.youtube.com/live/VPyEtcTqEPQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு என்ற சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காக பெருந்தமிழர் சங்கரலிங்கனார் பட்டினி போராட்டம் நடத்தி தன் இன்னுயிர் ஈந்தார். சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும், அனைத்து மொழிகளையும் அலுவல்மொழிகள் ஆக்கிட வேண்டும், நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த நம்முடைய தாத்தா ஈகி சங்கரலிங்கனர் பிறந்த நாள் இன்று!
ஆனால், அப்பெருமகனின் ஈகத்தை மறைத்து தமிழ்நாட்டிற்கு நாங்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்று பெருமை பேசிய திராவிடத் திருவாளர்கள், இன்றைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை அழித்து இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’ என்று அறிவித்தவர்கள், தமிழ்நாடு என்ற பெயரை அரசின் பேருந்துகளில் எழுத மறுக்கின்றனர். மாநிலத்தின் பெயரைத் தவிர பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் தமிழ்நாடு பெயரை எடுத்துவிட்டு வெறும் அரசு கல்லூரி, அரசு மருத்துவமனை என்று மட்டும் எழுதியுள்ள அவலநிலை இன்று உள்ளது. அரசு என்றால் எந்த அரசு? ஒன்றிய அரசா? ஆந்திர அரசா? அல்லது கர்நாடக அரசா? தமிழ்நாடு அரசுதானே! அதனை முழுதாய் எழுதுவதில் என்ன தயக்கம். அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாட்டன் பாடியது போல நமக்கெல்லாம் என்றைக்கும் இனிக்கும் ‘தமிழ்நாடு’ பெயர் திமுக அரசுக்கு மட்டும் கசக்கிறது. ஆட்சி அதிகார துணைகொண்டு நடைபெறும் இந்த அட்டூழியங்கள் அனைத்திற்கும் விரைவில் முடிவு கட்டுவோம்.
தாத்தா சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், எதன் பொருட்டும் உயிர் நிகர் ‘தமிழ்நாடு’ பெயரை விட்டுத்தர மாட்டோம். மீண்டும் அனைத்து இடங்களிலும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை நிலைப்பெறச் செய்வோம் என்ற உறுதியை ஏற்பதுதான் அப்பெருமகனுக்கு நாம் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.
தமிழ்நாடு பெயர் சூட்டத் தன்னுயிர் ஈந்த போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நம்முடைய தாத்தா ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மன்னராட்சி மறைந்தது..
மக்களாட்சி மலர்ந்தது..
என்பதை ஏட்டளவில் மட்டும்
எழுதி வைத்த
குடியரசு திருநாள் இன்று..!
கொடுங்கோன்மை அடக்குமுறை
கொள்ளை போகும் கனிமவளம்
துறை தோறும் ஊழல் இலஞ்சம்
எதிர்த்து கேட்டால் தேசத்துரோகம்
தடுக்க நினைத்தால் குண்டர் சட்டம்
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
மலிவு விலை மதுக்கடையில்
அரசாங்கமே மது விற்கும்
போதைப்பொருள் விற்பனையை
தடுக்காது ஊக்குவிக்கும்
சீரழியும் இளந்தலைமுறையை
சிந்திக்காத கொடிய அரசு
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
பல்லாயிரம் கோடி கடனாளி
சொகுசாக வெளிநாட்டில்,
பயிர் வைக்க கடன் வாங்கி
உயிர் இழக்கும் விவசாயி;
ஏற்றத்தாழ்வு குறையவில்லை
ஏதும் மாற்றம் நிகழவில்லை;
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
வெளிநாட்டு நிறுவனங்களை
வரவேற்று முரசு கொட்டும்;
அம்பானிக்கும் அதானிக்கும்
கூடுதல் சலுகை காட்டும்;
தாங்க முடியாத வரி விதித்து
நாட்டு மக்களை ஒழித்துக்கட்டும்;
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
பட்டப்பகலில் படுகொலைகள்
பாலியல் வன்கொடுமைகள்,
பள்ளிக்கூட சிறுமிகளுக்கும்
பாலியல் கொடுந்தொல்லைகள்,
வேடிக்கை பார்க்கும் கொடிய அரசு
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
கடவுள் பெயரால் கலவரங்கள்
மதத்தின் பெயரால் பிரிவினைகள்
சாதிச்சண்டைகள் ஏராளம்
சமய சண்டைகள் தாராளம்
தூண்டிவிடும் கொடும் அரசு..
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
ஓட்டுக்கு காசு கொடுக்கும்
இலஞ்சம் மட்டுமே தேசிய மயம்
ஆயிரம் ஐநூறு இலவசம் தரும்
ஊழல் மட்டுமே சட்ட மயம்
சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசி
கொள்ளையடிக்க கூட்டு வைத்தால்
அதன் பெயர் கொள்கை கூட்டணி
ஏனென்றால் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தால் மன்னராட்சி..
சங்கம் வைத்து சாதி வளர்த்தால் மக்களாட்சி..!
வாரிசுகளுக்கே மன்னர் பதவி
அது முடியரசு..
வாரிசுகளுக்கே முதலமைச்சர் பதவி
அது குடியரசு..!
இக்கொடுமைகள் யாவும் நீங்கி,
பணநாயகம் வீழ்ந்து
சனநாயகம் வென்று
உண்மையான குடிகளின் அரசு
விரைவில் மலர்ந்திட
நாட்டு மக்கள் அனைவருக்கும்
குடியரசு நாள்
நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறையினருக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் தை 10 ஆம் நாள் 24-01-2026 அன்று காலை தாம்பரம் அன்னை அருள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வேளச்சேரி சாஸ்திரி நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை வேளச்சேரி சாஸ்திரி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நெடுங்காலமாகப் போராடி வரும் நிலையில் திமுக அரசு தர மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
வேளச்சேரியில் அம்பேத்கர் நகர் மற்றும் கக்கன் நகர்ப் பகுதி மக்களுக்கு ஏற்கனவே மாதாந்திர தவணை முறையில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதைப்போலத் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று சாஸ்திரி நகர் மக்களும் போராடி வரும் நிலையில், அதனை வழங்காமல் திமுக அரசு பாகுபாடு காட்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
தமிழ் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கெல்லாம் உடனடியாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், உள்ளிட்ட அனைத்தும் வழங்கி, எவ்வித தங்கு தடையுமின்றி நிலம், வீடு வாங்கி வசதியாக வாழ வகை செய்யும் தமிழ்நாடு அரசு, இம்மண்ணின் பூர்வகுடி தமிழ் மக்களுக்கு மட்டும், அவர்கள் பல தலைமுறைகளாக நிலைத்து வாழும் வாழ்விடங்களில் வீட்டு மனை பட்டா வழங்க மறுப்பதும், ஆக்கிரமிப்பு என்று கூறி காவல்துறை மூலம் அவர்களை மிரட்டி விரட்டுவதும் என்பது இந்த ஆட்சியும் அதிகாரமும் யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது. இதுதான் திமுக அரசு தமிழ் மண்ணையும், தமிழ் மக்களின் மானத்தையும் காக்கும் முறையா? இதுதான் தமிழர்களின் உரிமையைப் பெற்றுத்தந்த முறையா? தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையின் மையப்பகுதியில் வாழும் தமிழ்த்தொல்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக அரசு விரட்டுவது என்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, வேளச்சேரி சாஸ்திரி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு விரைந்து வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உயிர் நிகர் தாய்த்தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த மொழிப்போர் மறவர்களது பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்!
மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது தலைமுறைகள் வாழ்வதற்கு மூதாதைகள் விட்டுச் செல்கிற பண்பாட்டு மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் பரிணாமத்தின் மாபெரும் பாய்ச்சல்.
மொழி என்பது ஒரு மனிதனின் உயிரையும் உடலையும் ஒலி வழியாக இணைக்கும் உருவமற்ற ஒழுங்கின் வடிவம்! பல்லாண்டு காலமாக நம் மூதாதையர் தம் எண்ணங்களையும், கருத்துக்களையும் கடத்த தொடர்ச்சியாக பயன்படுத்தும் வரையறுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஒலி குறிப்புகளின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பு மொழியாகும். மொழி என்பது வெறும் மொழி குறிப்புகளாக மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட மக்களின் வாழ்வியலை தன்னகத்தே சேமித்து வைத்துள்ள கொள்கலன் ஆகும். ஒரு மொழி எத்தனை பழமையானதோ அந்த இனமும் அத்தனை பழமையானது! அதன் வரலாறும், பண்பாடும், கலை, இலக்கியமும் அத்தனை பழமையானது; செம்மையானது!
உலகின் மிகப் பழமையான மூத்த முதல் மொழியும், உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியுமான,
அன்னைத் தமிழின் பிள்ளைகளான நாம்தான் உலகின் மூத்த தொல்குடி மக்களாவர்.
மொழியை உலகிலுள்ள உயிர்களில் மனிதர்களுக்கு மட்டுமேயான அமுதச்சுரபி என்கிறார்கள். தேசப்பரப்பை வரையறுக்கிறபோது நிலப்பரப்பை வைத்தோ, மதங்களை வைத்தோ வரையறுப்பதில்லை. மொழியை வைத்துத்தான் தேசங்களும், தேசிய இனங்களும் வரையறை செய்யப்படுகின்றது. தமிழர் என்ற தேசிய இனத்தின் முகமாக, முகவரியாக விளங்குவது நம் தாய்மொழி தமிழேயாகும். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடினார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். உயிருக்கு நிகரான தமிழ்மொழிக்கு இந்தி மொழித்திணிப்பினால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக பல நூற்றுக்கணக்கான வீரமறவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தாய்மொழி காக்கத் துணிந்தனர். ‘செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபம் உண்டோ?’ எனப் பாடிய புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப ஏப்ரல் 21, 1934 அன்று ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க அரசாணை வெளியிட்டபோது தமிழர்கள் கொதித்தெழுந்து தமிழ்மொழி காக்க, தன்னுயுயிரைத் தாரைவார்க்க வீதிகளில் திரண்டனர்.
சென்னையில் மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கு சென்ற ஐயா நடராசன் அவர்கள் தன் உடல்நலம் குன்றியபோதும் போராட்டத்தில் இருந்து பின்வாங்காது சாவுக்குத் துணிந்து நின்றார். மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்வதாக அரசு அறிவித்தும் கூட மன்னிப்புக் கேட்க மறுத்து, சனவரி 15, 1939 அன்று சிறையிலேயே வீரச்சாவைத் தழுவினார். மொழிப்போராட்டக்களத்தில் ஐயா நடராசன் அவர்கள் செய்த உயிரீகம் இலட்சக்கணக்கான தமிழர்களைத் தட்டியெழுப்பியது. அதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தைச் சேர்ந்த ஐயா தாளமுத்துவும் சனவரி 13, 1939 அன்று சென்னை சிறையில் உயிர்நீத்தார். இவ்விரண்டு உயிரீகங்களால் போராட்டம் மேலும் தீவிரம் அடையவே இந்தியை பயிற்று மொழியாக்குவது தொடர்பான அரசாணையை அப்போதைய மதராஸ் மாநில அரசு பிப்ரவரி 21, 1940 அன்று திரும்பப்பெற்றது.
இந்திய துணைக்கண்டம் விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஐயா ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்து, மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால் அரசு பின்வாங்கியது. பாராளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக தொடரும் என அளித்த உறுதிமொழியால் போராட்டம் அப்போதைக்கு மௌனித்தது.
மீண்டும் 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கின்ற ஆட்சிமொழி சட்ட மசோதாவால் மீண்டும் தமிழ்நாடு போராட்டக்களமானது. கீழப்பழுவூர் சின்னசாமி சனவரி 25, 1964 அன்று தமிழ் மொழி காக்க திருச்சி தொடர்வண்டி நிலையம் எதிரே தீக்குளித்து உயிரீகம் செய்தார். அவரது வரிசையில் பல தமிழர்கள் இன உணர்வினால் தன் தாய்மொழி காக்க தன்னுயிர் தந்து தமிழின வரலாற்றில் விதைகளாக மாறிப்போனார்கள். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி என தமிழ் மொழி காக்க தன்னுயிர் தந்த மொழி ஈகிகளின் பட்டியல் நீளுகிறது.
இவ்வாறு தன் தாய்மொழிக்காக தன் உயிரை இழக்கத் துணிந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லை என்கிற தனித்த வரலாற்றுப்பெருமை நம் இனத்திற்குண்டு. ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள் Ôஎங்கேயும் இல்லை தமிழ்Õ என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
தமிழ்நாடு அரசு என்ற பெயரை பேருந்துகள் முதல் மருத்துவமனை, கல்லூரி, பல்கலைக்கழகம் வரை வைக்கச் சொல்லி போராடும் நிலையே இன்றைக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது. நம்ம சிலீமீஸீஸீணீவீ, நம்ம ஷிநீலீஷீஷீறீ என்று ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலை இன்றுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் விரவிக் கிடக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை புகுத்தி தாய்மொழிக் கல்வியை சிதைத்துள்ளது திராவிட மாடல் அரசு. இந்தி ழிமீஸ்மீக்ஷீ, இங்கிலீஷ் ணிஸ்மீக்ஷீ என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. மும்மொழி கொள்கை எப்படி மோசடி கொள்கையோ, அதைப்போலவே இருமொழி கொள்கையும் ஏமாற்று கொள்கையே ஆகும்.
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘பேருந்துகளில் தமிழ்நாடு என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்று கேட்டால் எழுத்து நீளமாக வரும், மருத்துவமனை, கல்லூரி என்று எல்லா இடங்களிலும் எழுத வேண்டும் என்று கேட்பார்கள்’ என்று திமுக அமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவிக்கின்றார். நாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம், பிறகு ஏன் எழுத வேண்டும்? என்றும் கேட்கிறார்.
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என எல்லா இடங்களிலும் தமிழ்நாடு அரசு என்று எழுதினால் என்ன தவறு? தலைமைச் செயலகம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறது? அமைச்சர் கூறுவது போல அங்கு ஏன் வெறும் அரசு தலைமைச்செயலகம் என்று எழுதாமல் தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம் என்று எழுதப்பட்டுள்ளது? முதலமைச்சர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார்? அரசின் முதலமைச்சர் என்று மட்டும் கூறாமல், ஏன் வார்த்தைக்கு வார்த்தை தமிழ்நாடு முதலமைச்சர் என்று அதே அவையில் அமைச்சர் கூறுகிறார்? இவர்கள்தான் தமிழ்நாடு என்று நாங்கள்தான் பெயர் வைத்தோம் என்று மார்தட்டியவர்கள். தமிழில் பெயர் வைக்கக்கோரி தண்டவாளத்தில் தலை வைத்தவரின் வழிவந்த வாரிசுகள் என்று பூரிப்பவர்கள்.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. ‘மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்தும் இன்றும் அதே அவல நிலையே நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற இழிநிலை; தாழ்வு மனப்பான்மையால், தமிழர் தன் சொந்த நிலத்திலேயே வாழ்விழந்து, தன் மொழியின் உரிமையிழந்து தவித்து வருகிறார்கள்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குப் பிறகான காலகட்டத்தில் தமிழர் என்கின்ற தன்மான உணர்ச்சி தமிழ்நாட்டில் எழுச்சிபெற்று வருகிறது. தமிழ் இளையோர் தம் மொழி காக்க, நிலம் காக்க, ‘நாம் தமிழர்’ என ஓர்மையுடன் அணி வகுக்கின்ற காலம் உருவாகி இருக்கிறது. மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும்; இன உணர்வு இருந்தால்தான் நாம் நம் நிலத்தில் நிலைத்து வாழ முடியும்’ என்கின்ற புரிதலும், பொறுப்புணர்வும், வரலாற்று அறிதலும் தமிழருக்கு ஏற்படவேண்டும். அதற்கு மொழிப்போர் ஈகிகளது வரலாற்றை உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரது தார்மீகக்கடமை என்பதை உணர வேண்டும்.
நாவில் வாழாத தமிழ்நாட்டில் எப்படி வாழும்? ஆகவே, என்னரும் தமிழ்ச் சொந்தங்கள் நல்ல தமிழில் பேசுவோம்; நல்ல தமிழில் எழுதுவோம்; வணிக நிறுவனங்களுக்கு நல்ல தமிழ் பெயர் வைப்போம்; நம் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம்!
தூங்குதல் போன்றது சாக்காடு - பின்னர்த் தூங்கி விழிப்பது நம் பிறப்புத் தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் - உயிர் தித்திப்பை
எண்ணிடப் போவதில்லை! மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை -
நமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை! ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே - உயிர் இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிகர பாடல்வரிகளை
நெஞ்சில் ஏந்தி தன்னலம் இல்லாமல், தன் குடும்பம் பாராமல்,
நம் மொழி காக்க தன்னுயிரை தந்த மான மறவர்களான
மொழிப்போர் ஈகியர்களை நினைவில் சுமந்து, அவர்கள் எந்த புனித நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தார்களோ, அன்னைத் தமிழுக்கு ஓர் இன்னல் நேராமல் என்றும் காத்திடுவோம் என உறுதியேற்போம்!
உயிர் நிகர் தாய்த்தமிழ் காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த
மொழிப்போர் மறவர்களின் பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எழுச்சி கொள்!
புரட்சி செய்!
திருச்சி நோக்கி புறப்படு..!
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
மாசி 09 | 21-02-2026 | திருச்சி
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
திரள்வோம்! திரள்வோம்!
திருச்சியில் திரள்வோம்!
தீந்தமிழ் இனத்தீரே..!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வடலூர் நகரம், சுற்றுச்சூழல் பாசறையின் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெயராமன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் சுற்றுச் சூழல் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி ஜெயராமன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி ஜெயராமன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி ஜெயராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தற்போது நேரலையில்...
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் 24-01-2026 தாம்பரம் அன்னை அருள் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. x.com/i/broadcasts/1eaKbjrLrWdKX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தங்கை மாரி சாரதா அவர்களின் சகோதரர் தம்பி மாரி குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
தம்பி மாரி குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ் மீட்சிப் பாசறையின்- மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செல்வ.ஸ்டாலின் அவர்களின் தந்தை ஐயா க.செல்வராசு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா க.செல்வராசு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, மாவட்டச் செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி ஜெகதீசன் அவர்களின் தந்தை ஐயா கணேசன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா கணேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி
மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை
இரா.சித்ரா அவர்களின் அப்பாவும், கையூட்டு ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இரா.முரளி அவர்களின் மாமனாருமான ஐயா இராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஐயா இராமன் அவர்களை இழந்து வாடும் தங்கை சித்ரா மற்றும் தம்பி முரளி ஆகியோருக்கும்,
அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராமன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதுதான் 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!
@CMOTamilnadu @mkstalin
திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் நான்கு பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல், இருவரை அடித்துக் கொன்ற கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், சென்னை வேளச்சேரியில் உணவு வழங்கும் இளைஞரை கஞ்சா போதையில் 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டும் காணொளி இதயத்தை உறையச் செய்கிறது. கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாட்டில் நாள் தோறும் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்கள் நாம் நாகரீகம் அடைந்த நாட்டில்தான் வாழ்கின்றோமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை விற்பனையின் உச்சத்தை எட்டியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கிலோ கணக்கில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதும், அதனால் அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்பதும் மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை கஞ்சா உள்ளிட்ட விற்பனை கட்டுக்கடங்காது அதிகரித்துள்ளது. ஏற்கனவே, மதுபானங்களை அரசே விற்பதன் மூலம் தமிழகக் குடும்பங்களைச் சீரழித்தது போதாதென்று, தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டினை கட்டுப்படுத்தத் தவறி, வளரிளம் தலைமுறைகளின் எதிர்காலத்தையே திமுக அரசு அழித்தொழிக்கிறது.
அதுமட்டுமின்றி, அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டால் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்ற நிகழ்வுகளும் பெருமளவு அதிகரித்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாகச் சீரழியவும் காரணமாகியுள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் வன்முறைகளில் இந்தியாவிலயே தமிழ்நாடு முதலிடம் பெறும் அளவிற்கு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பல இலட்சம் கிலோ போதைப்பொருள் விற்பனை,
பல்லாயிரக்கணக்கில் போதைப்பொருள் குற்ற வழக்குகள் என்பதே 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனையாகும்.
கடந்த காலங்களில் பெருநகரங்களில் மிக மிக ரகசியமாக மட்டுமே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு என்றிருந்த நிலை மாறி, தற்போது தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களில்கூட மிக சாதாரணமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவது தமிழிளந்தலைமுறையினரின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அண்டை மாநிலங்களிலிருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்குள் கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக கடத்தப்படும் நிலையில், அதனைத் தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கட்டுக்கடங்காத போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியாதது அதன் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர், கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது மட்டுமே அவ்வப்போது கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, போதைப்பொருள் உற்பத்தி முதலாளிகள் மீது தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்தான் தமிழ்நாட்டில் இன்றுவரை போதைப்பொருள் பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
மேலும், போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்கும் ‘போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவலர்கள் பிரிவில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையும் தமிழ்நாட்டில்
கஞ்சா விற்பனையை முழுவதுமாகத் தடுக்க முடியாததற்கு மற்றுமொரு முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு ஊரிலும் அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்துவிட்டு, போதைப்பொருளை ஒழிப்போம் என்று திராவிட மாடல் அரசு பேசுவது வெட்கக்கேடானது.
ஆகவே, போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம் என்று காணொளி வெளியிடுவதாலோ, ஆண்டுக்கு ஒரு முறை போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பதாலோ மட்டும் போதைப்பொருள் ஒழிந்துவிடாது என்பதை இனியேனும் உணர்ந்து, காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரழிந்து வரும் தமிழ் இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முழுவதுமாக ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நெடும்பரம் கிராம மக்கள் நெடுஞ்சாலையை
கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்து தருவதோடு, நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நெடுஞ்சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே நெடும்பரம் கிராம மக்களிடம் வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறித்த தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. அதுமட்டுமன்றி நெடுஞ்சாலையைக் கடப்பதற்கு சுரங்க வழிப்பாதை அமைத்துத் தராமல், பள்ளி கல்லூரி செல்லும் 300 மாணவ மாணவியர் உள்பட நெடும்பரம் கிராமத்தில் வாழும் 2000 மக்கள் 5 கி.மீ சுற்றிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளது பெருங்கொடுமையாகும்.
ஆட்சியாளர்களிடம் நெடுஞ்சாலைக்காகத் தங்களின் நிலங்களை இழந்துவிட்டு, அதற்கு தண்டனையாக தினமும் 5 கி.மீ சுற்றிச் செல்லும் நிலைக்கு நெடும்பரம் மக்களை ஆளாக்கி இருப்பதுதான் வளர்ச்சியா? பெருநகரங்கள் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில், இதுபோன்று பாதை அமைத்துத் தராமல் நெடுஞ்சாலையை சுற்றிச் செல்லுமாறு அரசு கூறிவிட முடியுமா?
படித்த மக்களுக்கு ஒரு நீதி? பாமர மக்களுக்கு வேறு நீதியா? குரலற்ற எளிய மக்கள் என்றால் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்காதா? அவர்களின் உரிமைக்குரல் அரசின் செவிகளில் விழாதா? எல்லோரும் இந்த நாட்டு குடிமக்கள்தானே? அவர்கள் வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்கு செலுத்தவில்லையா? அவர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு ஏற்க மறுப்பது ஏன்? தங்களின் நியாயமான உரிமைக்காகப் போராடிய மக்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து அலைக்கழிப்பதும், காவல்துறையை ஏவி மிரட்டுவதற்கும் பெயர்தான் திராவிட மாடலா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய நெடும்பரம் கிராம மக்களை இனியும் ஏமாற்றாமல், உடனடியாக நெடுஞ்சாலையை கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்துத் தருவதோடு, நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மறைந்த போற்றுதற்குரிய தமிழறிஞர், மெய்யியலாளர், கவிஞர், பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன் அவர்களின் இல்லறத்துணை, மதிப்பிற்குரிய அம்மா பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ் மொழி, பண்பாடு, மெய்யியல் குறித்த ஆய்வுகளுக்காக தம் வாழ்வினை ஒப்புவித்து வாழ்ந்து மறைந்த ஐயா நெடுஞ்செழியன் அவர்களுக்கு உற்றதுணையாக இருந்து, ஐயாவின் தமிழத்தொண்டு சிறக்க உதவிய பெருமாட்டி, அம்மா சக்குபாய் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழீழத்தாயக விடுதலைக்கு தான் ஈன்ற மகனை ஈகம் புரிந்த மதிப்பிற்குரிய பேராசிரியர் அம்மா சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பொறுப்பாளர் அன்புத்தம்பி ரமேஷ் (எ) கண்ணாமணி அவர்களின் தந்தை ஐயா பன்னீர் செல்வம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா பன்னீர் செல்வம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி ராதா பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
‘நாம் தமிழர்’ எனும் இனமானப் பெரும்படையில் தன்னை
இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றிய
அன்புத்தம்பியின் இழப்பு பெருந்துயரத்தைத் தருகிறது. கட்சியின் வேர்களாகத் திகழும் களப்போராளிகளின் இழப்பென்பது ஈடு இணையற்றது. மறைந்தாலும் தம்பியின் கனவுகளும், இலட்சியங்களும் நம்மோடுதான் இருக்கும். அதனை ஈடேற்ற உறுதியேற்போம்.
தம்பி ராதா பிரபாகரன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தங்கள் மாநிலக்கொடிக்கு பெருமதிப்பு தரும் கன்னட மக்களின் இனப்பற்றினைப் போற்றி, பின்பற்ற வேண்டுமே தவிர, புரிதலற்று வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது!
தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது.
கர்நாடக மாநில முதல்வர் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் வேளையில், அருகிலேயே கர்நாடக மாநிலக் கொடியையும் ஏற்றுகின்றார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே தன்னுடைய அரசு வாகனத்தில் இந்திய கொடியுடன், கர்நாடக மாநிலக் கொடியையும் பொருத்தியுள்ளார். கோலார் தங்கவயல் சுரங்கங்களில் அணுக்கழிவை பாதுகாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது இதே கன்னடக்கொடியை ஏந்தியே ஒற்றுமையுடன் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அச்சதியை கன்னட மக்கள் முறியடித்தனர்.
அண்டை மாநிலங்களுடனான எல்லைச்சிக்கல், நதிநீர் சிக்கல்,
இந்தி திணிப்பு எதிர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட எந்தவொரு மாநில உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் கர்நாடக கொடியை ஏந்தியே கன்னட மக்கள் உரிமை மீட்கின்றனர். கர்நாடக உரிமைப்போராட்டங்கள் யாவிலும் சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி கன்னட மக்கள் அனைவரும் கட்சி கொடிகளை விடுத்து, மஞ்சள் சிகப்பு வண்ணங்களுடனான கர்நாடக கொடியை தங்களின் ஒற்றை அடையாளமாக்கி போராடும் அளவிற்கு அக்கொடி மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும்.
கன்னட மக்களின் உணர்வுடன் இரண்டற கலந்து, அவர்களது ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக திகழும் கர்நாடக மாநில கொடியை கன்னட மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெருமையோடு தங்கள் கைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொருத்துகின்றனர். அது அவர்களின் அடிப்படை உரிமையுமாகும்.
கன்னட மக்களின் அத்தகு இன உணர்வை மதித்து நாம் போற்ற வேண்டும். அவர்களிடமிருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும்.
இத்தகு வன்முறையில் ஈடுபடுவோர்கள், கன்னட மக்கள் மீதும், கர்நாடக கொடியின் மீதும், உங்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டுவதற்கு பதிலாக இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டும், தமிழ்நாட்டிற்கென்று தனித்த கொடி உரிமையை வாங்கி தராத திமுக, அதிமுக கட்சிகள் மீது உங்கள் கோபம் இருந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டு உரிமையை பறித்த பாஜக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும், அதற்கு துணைநின்றவர்கள் மீதும் உங்கள் வெறுப்பும், எதிர்ப்பும் இருந்திருக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ்நாட்டிற்கு வரும் அப்பாவி கன்னட மக்களை வெற்று வெறுப்புணர்வு கொண்டு தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஒரு சிலரின் இதுபோன்ற தேவையற்ற அடாவடிச் செயல்களால் கர்நாடகாவில் எழுந்துள்ள பதற்றமும், இதை சாதகமாக பயன்படுத்தி கன்னட அமைப்புகள் சில, அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக செய்யும் வெறுப்பு பரப்புரைகளும் பெருங்கவலையைத் தருகிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாட்டின் விடுதலைக்குப் போராடி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வதைபட்ட விடுதலை வீரர்..!
தமிழ் பண்பாட்டையும், இலக்கியத்தையும் பொதுவுடைமை மேடைகளில் முதன் முதலில் அரங்கேற்றி, தாய் மொழியையும் மண்ணையும் பேசாத எந்த அரசியலும் வெல்லாது என்பதை உணர்த்திய உண்மையான பொதுவுடைமைப் போராளி..!
வைக்கம் முதல் சுசீந்திரம் வரை பல்வேறு தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களில் பங்கேற்று நடத்திய புரட்சியாளர்..!
'பாரதியார்' மகாகவி வரிசையில் வரமாட்டார் என்ற வாதங்கள் வைக்கப்பட்டபோது, தன் சொற்பொழிவுகள் வாயிலாகவும், பாரதி வழி என்றொரு நூல் எழுதியும் பாட்டன் பாரதியை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்த பெருந்தமிழர்..!
எந்த தலைவரின் பெயரால் சிராவயலில் ஆசிரமம் நடத்தினாரோ அந்த காந்தியையும், சுயமரியாதை மரியாதை இயக்கத்தில் இணைந்து பின் விலகி, ஈரோட்டு பாதை சரியா? என்ற நூல் எழுதி ஈ.வே.ராவையும் விமர்சன பார்வையோடு அணுகிய பேரறிஞர்..!
நான் ஏன் நாத்திகனானேன்?' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தற்காக, மானத்துடனும், வீரத்துடனும் மன்னிப்பு கேட்க மறுத்து ஆங்கிலேயர்களால் அடக்கு முறைக்கு ஆளான தீரர்..!
உழைக்கும் மக்களின் உரிமைக்காக தொழிற்சங்கங்களை நிறுவிய பாட்டாளிகளின் தோழன்..!
விடுதலைப்போராட்ட வீரர், தீண்டாமை ஒழிப்பு போராளி, பொதுவுடமைவாதி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், பத்ரிகையாளர் என பல்வேறு தளங்களில் நாட்டு மக்களுக்காக
அரும்பாடுபட்ட பன்முக ஆற்றலாளர்..!
இடிப்பில் கட்டிய ஒற்றை வேட்டியுடன், சுடுகாட்டு நிலத்தில் ஒழுகும் குடிசையில் புத்தகங்களுக்கு நடுவே, மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த பொதுவுடைமை பிதாமகன் நம்முடைய தாத்தா பா.ஜீவானந்தம் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தின் தொலைநோக்கு சிக்கல்களையும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினையும் சூழலியல் சமன்பாட்டினையும் கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தையும் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@mkstalin @TThenarasu @supriyasahuias @ARROffice @katpadidmk
சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் எனும் காரணங்களுக்காக என்று முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3ம் தேதி (03-12-2025) வழங்கப்பட்டது. நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும். இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை (CRZ Notification 2019, Annexure-IV) படி, மீன்பிடி இடங்கள் (பாடு) தெளிவாக வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்திற்கான அனுமதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் "வெற்று நிலம்" (Vacant Land) எனத் தவறாகக் காட்டப்பட்டுள்ளது. உப்பங்கழிகளில் காலம் காலமாக மீன்பிடித்து வரும் மீனவர்கள் மற்றும் பழங்குடி இருளர் மக்களின் வாழ்வாதார உரிமையை இத்திட்டம் பறிக்கிறது. மேலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பக்கிங்காம் கால்வாயின் போக்கை மாற்றுவது மழைக்காலங்களில் நீரோட்டத்தைத் தடுத்து, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது. நெடுங்கால சீரழிவுகளில், கடலோடு கால்வாய் கொண்டுள்ள இயற்கை தொடர்பைத் துண்டிப்பது, கடல்சார் சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும்.
உப்பங்கழிகள் என்பது கடல் நீர் புகுந்து செல்லும் உவர்நீர் பகுதிகள். இங்கு நன்னீரைத் தேக்குவதால், இயற்கையான உப்புத்தன்மை மாறும் அதன் விளைவாக இறால் மற்றும் மீன்களின் இனப்பெருக்கச் சுழற்சியை அழித்துவிடும். இப்பகுதி பல புலம்பெயர் பறவைகளுக்கும், அரிதான கடல்வாழ் உயிரினங்களுக்கும் வாழ்விடமாகும். நன்னீர்த் தேக்கம் உருவானால், இந்த ஒட்டுமொத்த உயிரினச் சூழலும் அழிந்துவிடும். இதே பகுதியில் தமிழக அரசின் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் கடல்நீரைத் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தையும் வைத்துக்கொண்டு, இயற்கை உப்பங்கழிகளை அழிக்கும் வகையிலும் திட்டம் முன்மொழிவது எதற்கு என்கிற கேள்வி எழுகிறது. மறுபுறம், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும் முன்பே திட்டப்பணிகளுக்கான ஏற்பாடுகள் நடப்பது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான செயலாகும்.
சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், பயன்பாட்டில் இருக்கும் நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை கலக்காது வழிவகுத்தல் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தாலே அதிக அளவில் நன்னீரைச் சேமிக்க முடியும். உப்பங்கழிகளை அழிக்காமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம். வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது. 16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச்செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் பாசறையின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி லெ.பூமிநாதன் அவர்களின் அக்கா அம்மா லெ.நாகலெட்சுமி நாச்சியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசத்திற்குரிய அக்காவை இழந்து வாடும் அன்புத்தம்பி பூமிநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய
ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லெ.நாகலெட்சுமி நாச்சியார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம், அவையம் ஒன்றியப் பொறுப்பாளர் மனிதநேயர் ஐயா ஐ.கஸ்பார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். இந்தத் துயரச் செய்தி நம்மை மிகுந்த வேதனையிலும்,
அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. ஐயாவை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
‘நாம் தமிழர்’ எனும் இனமானப் பெரும்படையில் தன்னை
இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றிய ஐயாவின் இழப்பு பெருந்துயரத்தைத் தருகிறது. கட்சியின் வேர்களாகத் திகழும் களப்போராளிகளின் இழப்பென்பது ஈடு இணையற்றது. மறைந்தாலும் ஐயாவின் கனவுகளும், இலட்சியங்களும் நம்மோடுதான் இருக்கும். அதனை ஈடேற்ற உறுதியேற்போம்.
மனிதநேயர் ஐயா கஸ்பார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி மாணவர்
பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி க.ஹரிஹரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். இந்தத் துயரச் செய்தி நம்மை மிகுந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. நமது தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
‘நாம் தமிழர்’ எனும் இனமானப் பெரும்படையில் தன்னை
இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றிய தம்பியின் இழப்பு பெருந்துயரத்தைத் தருகிறது. கட்சியின் வேர்களாகத் திகழும் களப்போராளிகளின் இழப்பென்பது ஈடு இணையற்றது. மறைந்தாலும் தம்பியின் கனவுகளும், இலட்சியங்களும் நம்மோடுதான் இருக்கும். அதனை ஈடேற்ற உறுதியேற்போம்.
தம்பி ஹரிஹரன் அவர்களுக்கு என்னுடைய
கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அறமும், ஆற்றலும் கொண்ட விடுதலைப்போராளி..!
போரும் சமாதானமும் கண்ட புலிப்படை தளபதி..!
தமிழ்த்தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரிய நண்பன்..!
கால்களில் ஒன்றை இழந்த பின்னும் விடுதலை போராட்டத்தை தாங்கி நின்ற தலைமகன்..!
வல்லாதிக்க சூழ்ச்சியில் வீழ்ந்த மானத்தமிழ்மகன்..!
வீரத்தின் விளைநிலம் கேணல் கிட்டுவின் வீரப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன்றுவரை மனிதச் சமூகத்திற்கான நீதியையே உலகின் மற்ற இனங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உயிர்மநேயம் பாடிய உயர் தமிழன்..!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்று பாடிய உலகின் முதல் பொதுவுடைமை சிந்தனையாளன்..!
'உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை' என்று நாட்டில் வாழும் எளிய வேளாண் குடிமகன் முதல்,
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' என்று நாட்டை ஆளும் பேரரசன் வரை அனைவருக்கும் வாழ்வியல் நீதி வகுத்த பேராசான்!
இல்லறம், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், அடக்கமுடைமை, நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, நாணுடைமை, சான்றாண்மை,
கல்வி, கேள்வி, ஈகை, புகழ், வாய்மை, வெகுளாமை, நிலையாமை, துறவு, கல்வி, கேள்வி, வலியறிதல், இடனறிதல், காலமறிதல், குறிப்பறிதல், அவையறிதல்,
கொடுங்கோன்மை, செங்கோன்மை, சொல்வன்மை, அமைச்சு, நாடு, அரண், குடிமை, மானம், பெருமை, ஒற்றாடல், படைமாட்சி, படைச்செருக்கு, இடுக்கண் அழியாமை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, மருந்து, உழவு
காதற் சிறப்புரைத்தல், கனவுநிலையுரைத்தல், ஊடலுவகை என்பன உள்ளிட்ட
133 அதிகாரங்களாக தொகுத்து,
மனித வாழ்வியலை அறம், பொருள், இன்பம் என்று வகுத்து
உலகப்பொதுமறை தந்த
திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன்றுவரை மனிதச் சமூகத்திற்கான நீதியையே உலகின் மற்ற இனங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உயிர்மநேயம் பாடிய உயர் தமிழன்..!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்று பாடிய உலகின் முதல் பொதுவுடைமை சிந்தனையாளன்..!
'உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை' என்று நாட்டில் வாழும் எளிய வேளாண் குடிமகன் முதல்,
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' என்று நாட்டை ஆளும் பேரரசன் வரை அனைவருக்கும் வாழ்வியல் நீதி வகுத்த பேராசான்
இல்லறம், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், அடக்கமுடைமை, நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, நாணுடைமை, சான்றாண்மை,
கல்வி, கேள்வி, ஈகை, புகழ், வாய்மை, வெகுளாமை, நிலையாமை, துறவு, கல்வி, கேள்வி, வலியறிதல், இடனறிதல், காலமறிதல், குறிப்பறிதல், அவையறிதல்,
கொடுங்கோன்மை, செங்கோன்மை, சொல்வன்மை, அமைச்சு, நாடு, அரண், குடிமை, மானம், பெருமை, ஒற்றாடல், படைமாட்சி, படைச்செருக்கு, இடுக்கண் அழியாமை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, மருந்து, உழவு
காதற் சிறப்புரைத்தல், கனவுநிலையுரைத்தல், ஊடலுவகை என்பன உள்ளிட்ட
133 அதிகாரங்களாக தொகுத்து,
மனித வாழ்வியலை அறம், பொருள், இன்பம் என்று வகுத்து
உலகப்பொதுமறை தந்த
திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எம் மக்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!
தமிழ்மொழி மீட்க,
தமிழர் நலன் காக்க,
தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,
தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,
தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட
தை மகளே வருக!
தமிழர் நலம் பெறுக!
உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!
அன்பின்
வாழ்த்துகளுடன்...
உங்கள் சீமான்This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எம் மக்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!
தமிழ்மொழி மீட்க,
தமிழர் நலன் காக்க,
தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,
தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,
தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட
தை மகளே வருக!
தமிழர் நலம் பெறுக!
உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!
அன்பின்
வாழ்த்துகளுடன்...
உங்கள் சீமான் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தைத்திங்களில் தமிழர்களின் மாபெரும் பண்பாட்டுத் திருவிழாவினைக்கூட கொண்டாட முடியாமல் தமிழ்நாடே போர்க்களம்போல காட்சியளிக்கிறது.
உலகிற்கு உணவளிக்கும் வேளாண் பெருங்குடி மக்கள் உரிய கொள்முதல்விலையும், மழையில் மூழ்கி வீணான பயிர்களுக்கு உரிய இழப்பீடும் கேட்டு போராடுகின்றனர். வெயிலிலும் மழையிலும் வெம்பாடு பட்டு குருதியை வியர்வையாக சிந்தி விளைவித்த விளைப்பொருட்கள்
வீதியில் கொட்டப்படுவதைக் கண்ணீர் சிந்தும் விவசாயிகள், சேமிப்பு கிடங்குகள் அமைத்து பாதுகாக்க கோரி
போராடுகின்றனர்.
அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம் கேட்டுப்போராடுகின்றனர்.
உயிரைக் காக்கும் மருத்துவர் - செவிலியர்கள் உரிய ஊதியம், பணிநிரந்தரம் கோரி போராடுகின்றனர்.
ஊரைத் தூய்மையாக்கி உடல் நலத்தை காக்கும்
தூய்மைப்பணியாளர்கள் நிரந்தரப் பணி கேட்டுப்போராடுகின்றனர்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் போராடுகின்றனர்.
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை
கொண்டு போகவோ? நாங்கள்-சாகவோ? என்று பாட்டன் பாரதி வருந்திப் பாடியதற்கேற்ப நாளும் கொள்ளை போகும்
கனிமவளங்களை காக்க சமூக ஆர்வலர்கள் போராடுகின்றனர்.
இரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் முதல் தொகுப்பூதிய பேராசிரியர்கள் வரை
பழைய ஓய்வூதியம் கேட்டு ஓய்வின்றி போராடுகின்றனர்.
இவற்றையெல்லாம் காணும்போது பெருந்துயரம் நெஞ்சை சூழ்கிறது. புத்தாண்டு கூட தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு திண்டாட்டமாக உள்ளது. பெருவிழா கூட தமிழர்களுக்கு பெருந்துயரமாக உள்ளது மிகுந்த மனவேதனையளிக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் பழந்தமிழர் கூற்றுக்கு இணங்க
இக்கொடுமைகளுக்கு எல்லாம் விரைவில் முடிவு ஏற்பட்டு நல்விடிவு பிறக்கட்டும்.
கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது – மத போதை, நிலவளச் சுரண்டல், கனிமவள கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்ணடிமைத்தனம் இவைகளுக்கு எதிரான மாபெரும் அரசியல் புரட்சி இம்மண்ணில் பூக்கட்டும்!
வையம் போற்றும் தைத்திருநாளில் தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!
எம் மக்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!
தமிழ்மொழி மீட்க,
தமிழர் நலன் காக்க,
தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,
தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,
தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட
தை மகளே வருக!
தமிழர் நலம் பெருக!
உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!
அன்பின்
வாழ்த்துகளுடன்...
உங்கள் சீமான் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை கொடுங்கோன்மையின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதற்காக தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு நள்ளிரவில் கைது செய்துள்ளது கொடும் அதிகார அடக்குமுறையின் உச்சமாகும்.
ஏற்கனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத பெரும் கொடுமையாக தம்பி அருள் ஆறுமுகம் உள்ளிட்ட ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து துன்புறுத்திய திமுக அரசு, கடும் எதிர்ப்பிற்கு அஞ்சி 6 பேர் மீதான குண்டர் சட்டத்தைத் திரும்பப்பெற்ற போதும், தம்பி அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் திரும்பப்பெற மறுத்தது.
கடந்த டிசம்பர் மாதம் திமுக இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக சரளை மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீது பொய் வழக்கு புனைந்து மீண்டும் கைது செய்து திமுக அரசு சிறையில் அடைத்தது.
மேல்மா, பரந்தூர், ஓசூர், மதுரை, கடலூர், கோவை என எங்கெல்லாம் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை காக்கவும் வாழ்வாதார உரிமைக்காகவும் போராடுகின்றனரோ அவர்களை எல்லாம் சிறிதும் மனச்சான்று இன்றி கொடுங் குற்றவாளிகள் போல கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
தமிழில் பெயர்ப்பலகை வைக்கவும், தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் என்று பெயர் வைக்கவும், கனிம வளக்கொள்ளைக்கு எதிராகவும் போராடும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை கைது சிறையிலடைக்கும் திமுக அரசு. கரூரில் 41 பேர் மரணத்திற்கு காரணமானவர்களை வழக்கு பதிந்து கைது செய்யவில்லை.
தமிழ்நாடு என்ற பெயர் திமுக அரசிற்கு ஏன் அவ்வளவு உறுத்துகிறது? தமிழ்நாடு முதல்வர் என்று குறிப்பிடாமல் வெறும் அரசின் முதல்வர் என்று மட்டும் குறிப்பிடுவீர்களா? நாங்கள் தான் 'தமிழ்நாடு' என்ற பெயரையே வைத்தோம் பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா? இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா?
இந்த நாட்டில் உள்ள மதிப்புமிக்க தலைவர்களையும், அவர்கள் வீட்டு பெண்களையும் தரக்குறைவாக விமர்சிக்கும் திமுகவின் வாடகை வாய்களாக செயல்படும் வலையொளியாளர்களை வழக்கும் பதிந்து கைது செய்யவில்லை. பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருள் விற்போர் உள்ளிட்ட கொடுங்குற்றவாளிகளை கைது செய்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த திறனற்ற திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்குத் தொடுத்து கைது செய்து சிறையில் அடைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் வேளாண்மையும், விவசாயிகளையும் திமுக அரசு பாதுகாக்கும் முறையா? இதுதான் திமுக அரசு மண் காக்கும், மானம் காக்கும் முறையா? பேரவலம்!
‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை’ எனும் வள்ளுவப் பாட்டன் வாக்கிற்குக்கிணங்க பயிர் வளர்த்து உயிர் காக்கும் விவசாயிகளை கொடுஞ்சிறையில் அடைப்பது பஞ்சத்தில் நாடு நாசமாகவே வழிவகுக்கும்.
ஆகவே, கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 விவசாயிகள் மீதான வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற்று, அவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்தேசியப் பெருநெருப்பு கொண்டு தமிழ்நாட்டில் மண்டி கிடக்கும் திராவிடக் குப்பையை எரித்து போகியைக் கொண்டாடுவோம்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
"மண்ணின் மைந்தர்களே மண்ணை ஆள வேண்டும்" என்பதே ஒவ்வொரு தேசிய இனத்தின் இறையாண்மை கொள்கை! ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான உரிமை! அம்முழக்கங்களை முன்வைத்து மராட்டிய மாநில உரிமைக்காக சிவசேனா, போராடுவது 100 விழுக்காடு சரியானதே!
அதேபோன்று மராத்திய மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போரிடும் சிவசேனா கட்சியின், தாய்மொழி கொள்கையும் 100 விழுக்காடு சரியானதே! தேசிய இனங்களின் உரிமைக்காக போராடும் அனைத்து தேசிய இன மக்களின் கருத்தோடும் உடன்படுகின்றோம். தேசிய இனங்களின் உரிமை மீட்புக்கான போராட்டத்தில் மராத்திய மாநில உரிமைக்காக குரல் கொடுக்கவும், துணை நிற்கவும் தயாராக உள்ளோம்!
ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது, அம்மண்ணில் நின்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, 'மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்' என்று பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அதை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவரின் சனநாயக உரிமை! ஆனால், மும்பைக்கு வந்தால் தம்பி அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி அண்ணாமலையின் கருத்தியல், கோட்பாடு அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். அதற்கு நேர் எதிரான, அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
இருப்பினும், தம்பி அண்ணாமலையின் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, தம்பி அண்ணாமலை மும்பையில் கால்வைத்தால் வெட்டுவேன் எனும் கொடும்போக்கு ஒரு போதும் ஏற்புடையதல்ல.
அண்ணாமலை ஒரு தனி நபர், ஒரு கட்சியைச்சேர்ந்தவர், குறிப்பிட்ட கொள்கையை ஏற்றவர் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல; ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல;
கடந்த காலங்களில் ஆந்திர காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் கேட்க நாதியில்லை; நடுக்கடலில் மீனவர்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் கேட்க நாதியில்லை; அப்படி ஒரு நிலை தமிழ் மண்ணில் இன்று இல்லை. அண்ணாமலை தனி நபரல்ல; முதலில் அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன்.
தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம். தம்பி அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@annamalai_k -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகிற்கு உணவிடும்
உன்னதப் பெரும்பணிக்கு
உறுதுணை புரிந்திட்ட இயற்கைக்கும்,
இன்னும் பிற உயிர்களுக்கும்
உழவர் மக்கள் நன்றி கூறும்
ஒப்பற்ற பெருநாள்!
உயிர்மநேயம் போற்றிடும்
உலகத்தமிழர் திருநாள்!
'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்'
என்று பழந்தமிழ் பாடல் கூறும்
பண்பாட்டு கூற்றினைப்
பாருக்குப் பறைசாற்றும்
தொல்தமிழர் கொண்டாடும்
பண்பாட்டுத் திருவிழா!
அமிழ்தினும் இனிய எங்கள்
அன்னைத் தமிழ்ப் பெருவிழா!
ஊரெங்கும் விழாக்கோலம்
இளம் பெண்கள் மலர்க்கோலம்
புதுப்பானை, புத்தரிசி,
தேன்சொட்டும் புது வெல்லம்,
மண்மணக்கும் மஞ்சளுடன்,
நெஞ்சினிக்கும் இஞ்சியுடன்
தமிழ்ப்பெண்கள் பொங்கலிட
தை மகளே வந்திடுக!
தமிழர் வாழ்வில் வளம் யாவும் தந்திடுக!
தித்திக்கும் செங்கரும்புடன்
சின்னஞ்சிறார் சிரிப்பொலியும்,
புத்தாடை தான் உடுத்தி
புதுப்பொலிவு காட்டிடும்
இளம்வஞ்சியர் வளையொலியும்,
தெருவெங்கும் எதிரொலிக்க
தமிழ்த்தாயின் தலைமகளே..!
தைத்திங்கள் திருமகளே..!
தளரிளம் நடைபயின்று
வளர்பிறைபோல் வந்திடுக..!
தமிழர் வாழ்வில் நலம் யாவும் சேர்த்திடுக..!
உலகெங்கும் பரவி வாழும்
தமிழ்ச்சொந்தங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
தைத்திங்கள் முதல் நாளாம், தமிழ்ப்புத்தாண்டில் பொங்கட்டும்
புரட்சிகர தமிழ்ப்பொங்கல்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
போராடும் ஆசிரியர் பெருமக்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்களின் நியாயமான உரிமைக்காக போராடும் ஆசிரியர் பெருமக்களை அதிகாரத் திமிரில் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்.
கடந்த 2009ஆம் ஆண்டு சூன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்குமுன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட 3000 ரூபாய் அளவிற்குக் குறைவானதாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது ஐயா கருணாநிதி அவர்கள் தலைமையிலான அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக மொத்த ஊதியமானது ரூபாய் 15000 அளவிற்குக் குறைவாக இன்றளவும் வழங்கப்படுகிறது. அதன்பின் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும், இடைநிலை ஆசிரியரிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்?
ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் பெருமக்கள் கடந்த 26.04.2018 அன்று சென்னை – வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் முன்னெடுத்த தொடர்போராட்டத்தில் தோள்கொடுத்துத் துணை நிற்கும் விதமாக நேரில் சென்று ஆதரவளித்தேன். அதன்பின்னர், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டபோதிலும், எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்விதத் தீர்வும் வழங்கப்படாத நிலையில் மீண்டும் 27-12-2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியப் பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும், அதே கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததையும் நம்பி ஆசிரியப் பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், திமுக அரசு தான் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, சம ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருவதைக் கண்டித்து மீண்டும் ஆசிரியப் பெருமக்கள் கடந்த 2022 டிசம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2023 அக்டோபர் மாதம் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், போராட்டக் கோரிக்கைகளுக்கு நேரில் சென்று ஆதரவளித்தேன். ஆனால், வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய திமுக அரசு அமைத்த குழு என்னானது? அக்குழு அமைத்த பரிந்துரைகள் என்ன? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வழக்கம்போல் இக்குழுவும் கிடப்பில் போடும் நாடகமா?
ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 15 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சிகளினது அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக எத்தனை அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை.
கடந்த முறை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பெருமக்களின் போராட்டத்தில் பங்கேற்க நான் சென்றபோது அனுமதி மறுத்த திமுக அரசு, தற்போதும் நான் இடைநிலை ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்க செல்வதை அறிந்து அவசர அவசரமாக ஆசிரியர் பெருமக்கள் மீது அடக்குமுறையை ஏவி கைது செய்துள்ளது அதிகாரத்திமிரின் உச்சமாகும்.
நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் என்னைக் கண்டு அரசு ஏன் பயப்பட வேண்டும்? ஆசிரியர் பெருமக்களை நேரில் சந்தித்து அவர்கள் போராட்டத்திற்கு நான் துணை நிற்பதை திமுக அரசு தடுப்பது ஏன்?
மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாக பெருமைப்படும் திமுக அரசு, மாணவர்களுக்கு நல்ல கல்வியை தரும் ஆசிரியர் பெருமக்களுக்கு உரிய ஊதியம் தர மறுப்பது ஏன்? மாணவர்களுக்கு மடிக்கணினி தருவதாக கூறும் திமுக அரசு, அறிவைப்புகட்டும் ஆசிரியர் பெருமக்களை அடக்கி ஒடுக்குவது ஏன்? இதற்கு பெயர்தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? மாணவர்களுக்கு தேவை பணமல்ல நல்ல கல்விதான் என்பதை திமுக அரசு உணரப்போவது எப்போது?
தங்களின் நியாயமான உரிமைக்காகப் போராடிவரும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கை வெல்ல நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிக்கிறது.
ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி வை.சிவா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
‘நாம் தமிழர்’ எனும் இனமானப் பெரும்படையில் தன்னை
இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றிய அன்புத்தம்பியின் இழப்பு பெருந்துயரத்தைத் தருகிறது. கட்சியின் வேர்களாகத் திகழும் களப்போராளிகளின் இழப்பென்பது ஈடு இணையற்றது. மறைந்தாலும் தம்பியின் கனவுகளும், இலட்சியங்களும் நம்மோடுதான் இருக்கும். அதனை ஈடேற்ற உறுதியேற்போம்.
தம்பி சிவா அவர்களுக்கு என்னுடைய
கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபெற்ற பச்சைப் படுகொலை சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரசவ பிரிவு அருகே தன் மனைவியைக் காணச்சென்ற கொளத்தூரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை 3 பேர் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு பாதுகாப்பாகத் தப்பிச்சென்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மிக முக்கிய இடங்களில் ஒன்றான
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றுள்ள இப்படுகொலை தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கு தக்கச்சான்றாகும்.
தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், அரசுப்பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர்கள், பள்ளி - கல்லூரிப் பெண்கள், சாமானிய மக்கள், சமூக விரோத குழு மோதல்கள் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறித் தாக்குதல்கள் யாவும் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழ்நாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகலில் நாள்தோறும் நிகழும் படுகொலைகள், பெருகி ஓடும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை மாற்றி நிறுத்தியுள்ளதுதான் திமுக அரசின் 5 ஆண்டு காலச்சாதனையாகும்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. இந்த கொடூரக் கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா? வெட்கக்கேடு!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் கொடூரப் படுகொலைகள் யாவும் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே மக்களுக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது!
ஆகவே, திமுக அரசு இனியும் அலட்சியமாக செயல்படாது, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபெற்ற கொடூரப் படுகொலையைப் புரிந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கிணத்துகடவு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி ஆனந்தன் மணி அவர்களின் தந்தை ஐயா ப.சுப்பிரமணி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ப.சுப்பிரமணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்கள் விடுதலை பாவலர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏ.பி.நாயகம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேனையும் அடைந்தேன்.
பாவலர், பாடகர், மரபிசைக் கலைஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என பன்முகத்திறன் படைத்த ஐயா நாயகம் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு அரும்பாடு ஆற்றிய பெருந்தகையாவார்.
நாட்டுப்புற கலைஞர்களோடு இணைந்த சம கால அரசியல் மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக ஐயா நாயகம் அவர்கள் ஆக்கித்தந்த இசைப்பாடல்கள் அனைத்தும்
மிகுந்த போற்றுதலுக்குரியவை.
புரட்சிகர சிந்தனைகள் எளிய மக்களையும் சென்றடையும் வண்ணம் மக்கள் இசை பாடல்களாக வரித்து தந்த தமிழ் பெருங்கலைஞனின் மறைவு ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும்.
ஐயா நாயகம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
மக்கள் விடுதலை பாவலர்
ஐயா ஏ.பி.நாயகம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தலைச்சிறந்த நூல்களை வாசிப்பதுதான் அவைக்கு அஞ்சாமல் தர்க்க வாதத்தில் வெல்வதற்கான வழி என்பதை, ‘ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு’ என்ற குறளின் மூலம் தெளிவுப்படுத்துகிறார் தமிழ்மறை தந்த வள்ளுவப்பெரும்பாட்டன்.
‘வாசிப்பு மனித ஆன்மாவை சமநிலைப்படுத்தும்’ என்கிறார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ.
‘இன்றைய வாசிப்பாளன் நாளைய தலைவன்’ என்கிறார் மார்கரெட் புல்லர்.
‘நான் என் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட எல்லா நல்ல விஷயங்களும் புத்தகங்கள் மூலமாகத்தான்’ என்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்
புத்தகங்கள் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம்; தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்!
தலைகுனிந்து படித்தவர்களே உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்!
அறிவை விரிவாக்கு! என்பதே நம்முடைய கொள்கை முழக்கத்தின் முதல் வரி!
எனவே, என்னருந் தமிழிளந்தலைமுறை பிள்ளைகள், தாய்த் தமிழ் உறவுகள் சுவாசிப்பதைப் போல வாசிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதற்கு ஆகப்பெரும் வாய்ப்பாக தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி அமைந்துள்ளது. வருகின்ற 08.01.26 முதல் 21.01.26 வரை நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு என்னரும் தம்பி-தங்கைகள் ஒவ்வொருவரும் அவசியம் சென்று, நல்ல புத்தகங்களைத் தேடி வாங்கி சேகரித்து வாசித்து, தர்க்க வாதத்தில் தலைசிறந்தவர்களாகத் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அன்புடன் அறிவுறுத்துகிறேன்.
அதோடு, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தாருக்கு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கே. கே. நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையத்தில் ஜனவரி 9 முதல் 31 வரை தள்ளுபடி விலையில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஆகவே, சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் அன்பு உறவுகள் மறக்காமல், டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையத்திற்கும் சென்று அறிவை வளர்க்கும் நல்ல புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆருயிர் இளவல் யுவராஜ் அவர்களின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அன்புமகன் இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரை ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டு, மாபெரும் வெற்றிப்படைப்பான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்
98வது ஆஸ்கர் விருதிற்கான சிறந்த திரைப்படத்திற்கான பொதுப் பட்டியலில்உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இயல்பான அழகியலுடன் மிக நேர்த்தியாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கிய அன்புமகன் 25 வயது இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களின் அளப்பரிய கலைத்திறனுக்கும்,தம்பி சசிக்குமார், சிம்ரன், அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி யோகிபாபு ஆகியோரின் ஒப்படைப்பு மிக்க நடிப்பிற்கும்,
படக்குழுவினரின் கடின உழைப்பிற்கும் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரமாகவே இத்தேர்வினை பார்க்கின்றேன்.
ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர துன்பங்களை எண்ணி எண்ணி 'என்று தணியுமோ எங்கள் சுதந்திர தாகம்' என்று உள்ளுக்குள் அழும் ஒவ்வொரு தமிழனின் உள்மன உணர்வுகளை உலகிற்கு உணர்த்து மாபெரும் கலைப்படைப்பான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஆஸ்கர் விருதினை வென்று, அதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, ஈழத்தாயக விடுதலைக்கான பேராதரவை பெற்றுத்தர வேண்டும் என்ற பேராவல் மனதை தொற்றிக்கொண்டுள்ளது.
உலகத்தமிழ்ச்சொந்தங்களின் ஒருமித்த ஆதரவுடன் 'டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்' சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றெடுக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
#touristfamily @MillionOffl @SasikumarDir
@abishanjeevinth @iYogiBabu @RSeanRoldan @SimranbaggaOffc -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களையும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு இணைக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இதுகுறித்து கிராம ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத திமுக அரசு, சென்னையில் போராட்டத்தை முன்னெடுத்த கிராம ஊராட்சி செயலாளர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி, கைது செய்வது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊராட்சியின் அன்றாடச் செயல்பாடுகளைக் கவனிப்பதோடு, ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களையும் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர். குறிப்பாக, குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், சுகாதாரம், வரிவசூல் உள்ளிட்ட அனைத்து மக்கள் திட்டங்களையும் நிறைவேற்றும் அரசுப்பணியாளராகச் சிறப்புற செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, உள்ளாட்சி மன்றத்தேர்தல் தாமதப்படும் நேரங்களில் ஊராட்சிகளின் முழு நிர்வாகப்பணிகளையும் ஊராட்சி செயலாளர்களே கவனித்து வருகின்றனர்.
அத்தகு பொறுப்புமிகு கிராம ஊராட்சி செயலாளர்களுக்குத் தற்போது ஓய்வூதியமாக 2000 மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு தற்போது பதிவு எழுத்தர்களுக்கு இணையான கால முறை ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பதிவு எழுத்தர்களை தமிழ்நாடு அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் இணைத்துள்ள திமுக அரசு, அதே அளவில் ஊதியம் பெறும் ஊராட்சி செயலாளர்களை இணைக்க மறுப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடும் கிராம ஊராட்சி செயலாளர்களை காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு கட்டிக்காத்த சமூக நீதியா? பெற்றுத்தந்த சம உரிமையா?
ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உடனடியாக இணைக்க வேண்டுமெனவும், ஏற்கனவே ஓய்வுபெற்ற கிராம ஊராட்சி செயலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 15,000 ரூபாய் வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கிராம ஊராட்சி செயலாளர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, உரிய ஊதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
பத்தாண்டிற்கும் மேலாகப் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திட வேண்டுமென வலியுறுத்திப் போராடிவரும் அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. தங்களின் நியாயமான உரிமைக்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்து வரும் அங்கன்வாடி பணியாளர்கள் பெண்கள் என்பதையும் பாராமல் காவல்துறை மூலம் கண்ணியக்குறைவாக, கடுமையான அடக்குமுறையை ஏவி திமுக அரசு கைது செய்வது கொடுங்கோன்மையாகும்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டிலுள்ள மழலையர்கள் பசியால் வாடுவதைத் தடுக்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலனை பேணுவதற்காகவும் தமிழக கிராமங்கள் தோறும் பால்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றிய அரசின் ஊட்டச்சத்து திட்டத்துடன் சேர்க்கப்பட்டு அங்கன்வாடி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாட்டிலுள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் என ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கன்வாடி பணிகள் மட்டுமின்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி பணிகள், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட ஒன்றிய - மாநில அரசுகளின் திட்டங்கள் சார்ந்த பணிகளையும் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோய்ச் சேர்ப்பதில் அங்கன்வாடி பணியாளர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும், கடந்த 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும்கூட, அங்கன்வாடி பணியாளர்கள் இன்றுவரை திட்டப் பணியாளர்களாகவே இருத்தப்பட்டுச் சிறப்புக் காலமுறை ஊதியமாக மாதம் 3000 முதல் 11000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தினமும் 8 மணி நேரம் பணிபுரிந்தும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் முறையான ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுவதில்லை என்பது அப்பட்டமான உழைப்புச்சுரண்டலாகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய மறைந்த முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அங்கன்வாடி ஊழியர்களை 7வது ஊதியக்குழுவில் அரசுப் பணியாளர்களாக நிலைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். இன்றுவரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலின்போது தமிழ்நாடு முதல்வர் ஐயா மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று அளித்த வாக்குறுதி என்னானது? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது அங்கன் வாடி ஊழியர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆகவே,
* அங்கன்வாடி ஊழியரை 3ஆம் நிலை அரசு ஊழியராகவும், உதவியாளர்களை 4ஆம் நிலை அரசு ஊழியராகவும் பணி வரன்முறை செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்.
* அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
* அங்கன்வாடி மையங்கள் சிறப்பாகச் செயல்படவும், அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கவும் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும்.
* 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
* பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பும், காலி பணியிடங்களை வழங்குவதற்கு முன்பும் உள்ளூர் பணியிட மாறுதல், வாரிசு பணி ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.
* குழந்தைகள் நலம் கருதி மே மாதம் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தங்களின் வாழ்வாதார உரிமைக்காக அங்கன்வாடி ஊழியர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து கோரிக்கைகள் வெல்ல துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழ்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 20% பயிற்சி மருத்துவ இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழ் மாணவர்களுக்கு உரிய அளவில் பயிற்சி மருத்துவ இடங்களை ஒதுக்காததோடு , தகுதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் ஒன்றிய மாநில அரசுகளின் செயல் வன்மையான கண்டனதுக்குரியது.
இந்தியாவில் மருத்துவம் பயில கட்டாய நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிலிருந்து பிலிப்பைன்ஸ், ரஷ்யா, கிர்கிஸ்தான், சீனா, உக்ரைன், ஆர்மீனியா, ஜோர்ஜியா, உஸ்பெகிஸ்தான், மொரிஷியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது. ஆனால், வெளிநாட்டில் மருத்துவம் முடித்த தமிழ்நாட்டு பட்டதாரிகள் (Foreign Medical Graduate FMG) ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றபோதும் பல்வேறு இன்னல்களை தற்போது சந்திந்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற அனைவரும் இந்தியாவில் ஒரு வருட கட்டாய மருத்துவ பயிற்சி முடித்த பிறகே, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் (TNMC) நிரந்தர பதிவு வழங்கும் நிலை உருவாக்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆணையத்தின் முடிவின்படி ஒரு வருட கட்டாய மருத்துவ பயிற்சி மேற்கொள்ள வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள பயிற்சி மருத்துவ இடங்களில் 7.5% இடஒதுக்கீடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், இந்திய ஒன்றிய அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் தற்காலிகத் தகுதிச் சான்றிதழ் (Provisional Eligibilty Certificate - PEC) பெற வேண்டும். பிறகு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate - NOC) பெற்று, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் மருத்துவக் கல்லூரியில், ஓராண்டு மருத்துவப் பயிற்சி செய்யவேண்டிய சேர்வதற்கான ஆணையைப் பெற வேண்டும். பிறகு தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் தற்காலிக பதிவுச் சான்றிதழ் (Provisional Registration Certificate -PRC) செய்த பிறகே கட்டாய மருத்துவப் பயிற்சியைத் (CRMI) தொடங்கிட இயலும்.
கடந்த 2020-ஆம் ஆண்டு வரை இந்த தற்காலிகத் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பித்தல் முதல் தற்காலிக பதிவு பெறுதல் வரையிலான நடைமுறைகளுக்கு இரண்டு மாதகாலம் ஆனது. அதன்பின், ஓராண்டு கட்டாய மருத்துவ பயிற்சியை முடித்து, மருத்துவ கழகத்தில் நிரந்தர பதிவு (Permanent Registration PR) செய்த பின்னரே மருத்துவராக தொழில் புரிய முடியும். இந்த நடைமுறைகள் காரணமாக, இந்தியாவில் மருத்துவம் பயிலும் மாணவர்களைவிட, வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவராக தொழில் தொடங்க ஓரிரு ஆண்டுகள் கூடுதலாக கால தாமதம் ஆகின்றது. அதனை மேலும் தாமதிக்கும் விதமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு வரை தற்காலிகத் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பித்தல் முதல் தற்காலிக பதிவு பெறுவது வரை இரண்டு மாதத்தில் முடிந்த நிலையில், தற்போது இது ஓராண்டுக்கும் மேலாக திட்டமிட்டு வேண்டுமென்றே தாமதிக்கப்படுகிறது. இக்காலதாமதம் காரணமாக வெளிநாட்டில் மருத்துவம் பயின்று வந்த தமிழ்நாட்டு மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் அடைந்துள்ளனர்.
ஆகவே, இந்திய ஒன்றிய மருத்துவ ஆணையமும், தமிழ்நாடு மருத்துவ கழகமும்,
1) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்.
2) மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட வேண்டும்.
3) தமிழ்நாடு அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகள் பயிற்சி மருத்துவம் பெற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மீண்டும் பயிற்சி மருத்துவம் செய்ய உரிய அனுமதி வழங்கிட வேண்டும்.
4) வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG) தற்காலிக தகுதிச் சான்றிதழ் (Provisional Eligibility certificate - PEC) வழங்குவதில் தமிழ்நாடு மருத்துவக் கழகம் தேவையற்ற காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும்.
5) மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், இந்திய மருத்துவ ஆணைய விதிகளுக்கு எதிராக, தமிழ்நாட்டில் மட்டும் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களில் பலருக்கு, 2 அல்லது 3 ஆண்டுகள் மருத்துவராக பயிற்சி பெற வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கழக உத்தரவை உடனடியாக கைவிட வேண்டும்.
6) பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கும் விடுதி வசதி மற்றும் உதவி மையங்களை உருவாக்கிட வேண்டும்.
உள்ளிட்ட வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்திய ஒன்றிய அரசும் மற்றும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கன்வாடி பணிகளோடு கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணிகளில் கிராமப்புற செவிலியர்களுடன் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் காரணத்தினால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அங்கன்வாடி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் கிராம சுகாதாரச் செவிலியருக்கான சிறப்புப் பயிற்சியையும் தமிழ்நாடு அரசு அளித்து வந்தது. அவ்வாறு சிறப்புப் பயிற்சிபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பணி நியமனத்தில் முன்னுரிமையும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களைக் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்வதை நிறுத்தி வைத்ததோடு, இனி தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே கிராம சுகாதாரச் செவிலியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது. இதனால், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிராம சுகாதார செவிலியராகப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்காலம் இருண்டுபோனது. அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் அங்கன்வாடி பணியையும், வருமானத்தையும் விடுத்து 2 ஆண்டுகள் சுகாதாரப் பயிற்சிபெறச் சென்றதால் அங்கன்வாடி பணியில் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் கிடைக்கப்பெறாமல் தடைபட்டுப்போனது. இதனால் செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது.
மேலும், கிராம சுகாதார செவிலியர்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய முயன்ற திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தடையாணையும் பெற்றனர். இந்நிலையில் அவ்வழக்கினை காரணம் காட்டியே தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், அங்கன் வாடி ஊழியர்களின் தொடர்ப் போராட்டத்தை அடுத்து கடந்த ஆண்டு 1200 அங்கன்வாடி ஊழியர்களை மட்டும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்தது. தற்போது தமிழ்நாடு முழுவதும் மீதமுள்ள காலிப்பணியிடங்களில் 1200 செவிலியர் சிறப்பு பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டுமென அங்கன்வாடி பணியாளர்கள் போராடி வரும் நிலையில், வெறும் 200 பணியாளர்களை மட்டும் கிராமப் சுகாதார செவிலியராகப் பணிநியமனம் செய்யப்போவதாக வெளிவரும் செய்திகளால், 2021–23, 2022 – 24 ஆம் ஆண்டுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கிராம செவிலியர் பணி நியமனத்தில் திமுக அரசு பாகுபாடு காட்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது தேர்தல் நேரத்து வாக்குறுதியை நிறைவேற்றாமல், சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு, சிறப்புப் பயிற்சி பெற்ற 1200 அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும், எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணிநியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். சென்னையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 06-01-2026 மாலை 05 மணியளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் அமைந்துள்ள ராயல் எம்பசி உண்டுறை விடுதி (Hotel Royal Embassy) அரங்கில் நடைபெற்றது.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி சார்பாக, மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) அன்று மாலை 04 மணியளவில் மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெற்ற பெரியாரைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை
youtu.be/xku2iBO-WS0 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'வாழ்க்கை மகத்தானது; மக்களுக்காக வாழும்போது!' எனும் மாமேதை காரல் மார்க்சின் கூற்றுக்கிணங்க, வாழ்ந்து மறைந்திட்ட பெருந்தகை!
பொதுவுடைமைத் தத்துவத்தை ஏற்று, உண்மையும், நேர்மையுமாக உழைத்த மகத்தான மக்கள் தலைவர்!
பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்குப் பெருந்தொண்டு செய்திட்ட அப்பழுக்கற்ற பெருமகன்!
சாதிய ஒழிப்புக்காகவும், பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடிய களப்போராளி!
பெருந்தமிழர் எங்கள் ஐயா சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தோட்டக்கலைத்துறையைச் சீரழிக்கும் வகையில், அதனை மற்ற துறைகளுடன் இணைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கீழ் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 4 துறைகளையும் ஒருங்கிணைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
பழங்கள், காய்கறிகள், பூக்கள், காளான்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் தோட்டக்கலைத்துறையை, மற்ற துறைகளுடன் ஒன்றாக இணைப்பது அதன் தனித்துவத்தை இணைக்கச் செய்யும் கொடுஞ்செயலாகும்.
அரசு வேளாண் துறையின் கீழ் ஒரு வேளாண் அலுவலர் சராசரியாக 6 கிராமங்களைக் கவனித்துவரும் நிலையில், வேளாண் துறையின் உட்பிரிவு துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு அலுவலருக்கு 3 கிராமங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால், விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை எளிதில் அணுக முடியும் என்று அரசு கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.
ஏனெனில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளில் தனித்தனி நிபுணத்துவம் பெற்றவர்கள். கடந்த 17 ஆண்டுகளாகத் தங்கள் துறைகளில் அனுபவம் பெற்ற அதிகாரிகளிடம், அவர்களுக்குத் தொடர்பில்லாத மற்றொரு துறையின் தொழில்நுட்ப ஆலோசனைகளைக் கேட்கச் சொல்வது, விவசாயிகளைத் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்லும் ஆபத்துடையதாகும்.
தமிழ்நாடு அரசால் கடந்த 2008ஆம் ஆண்டு வேளாண் துறையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட தோட்டக்கலைத் துறை, கடந்த 17 ஆண்டுகளாக வேளாண் உற்பத்தியில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வெறும் 14 விழுக்காடு சாகுபடி பரப்பில் மட்டுமே தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டாலும், மொத்த வேளாண் உற்பத்தியில் 32.5 விழுக்காடும், விளைபொருள் ஏற்றுமதியில் 65 விழுக்காடும் பங்களிக்கிறது. இச்சூழலில், தனித்துவமிக்கத் துறைகளை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது மறைமுகமாக தோட்டக்கலைத் துறையின் சீரான வளர்ச்சியை முடக்கும் செயலாகும்.
ஏற்கனவே, தமிழ்நாட்டின் வேளாண்துறை திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற செயல்பாடுகளால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்கும் முன் கடந்த 2020-21ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியானது நடப்பாண்டில் - 0.09 விழுக்காடு என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 2021-22 நிதியாண்டில் 10 விழுக்காடாக இருந்த தானிய உற்பத்தி தற்போது 2 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வேளாண்மை பெருமளவு சீரழிந்துள்ள நிலையில், முற்று முழுதாக வீழ்ந்துவிடாமல் காக்கும் துறையாகத் தோட்டக்கலைத் துறையே உள்ளது. அதனையும் அழிக்கும் திமுக அரசின் முயற்சியே தோட்டக்கலைத் துறையை மற்ற துறைகளுடன் ஒன்றிணைக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 ஆகும். இந்தத் திட்டத்தால் தோட்டக்கலைத்துறையின் தனித்துவம், நிபுணத்துவம் முற்றாகப் பாதிக்கப்படும்.
திமுக அரசிற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் மீதும், வேளாண் துறை வளர்ச்சியின் மீதும் அக்கறை இருக்குமாயின், வேளாண் துறைகளை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, வேளாண் துறையில் ஏற்கனவே காலியாக உள்ள வேளாண் உதவி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதே விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பதாக அமையும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில், வேளாண் துறைகளை ஒன்றிணைப்பதைக் கைவிட்டு, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருப்போரூர் சட்டமன்ற தொகுதி,
வடக்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி முத்து அவர்களின் தந்தை ஐயா வெ.சுடலைமுத்து அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சுடலைமுத்து அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி – இராதாபுரம் மண்டலம், சமூகரெங்கபுரம் மாவட்டச் செயலாளர் அன்புச்சகோதரர் மி. லாரன்ஸ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த சகோதரர் லாரன்ஸ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
சகோதரர் லாரன்ஸ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் மி.லாரன்ஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடற்கரை மக்கள் ரசிப்பதற்கான இடம்தானே தவிர வணிக வளாகம் நடத்துவதற்கான இடம் இல்லை என்கிறது மாண்பமை நீதிமன்றம்!
கடற்கரை மக்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்கிறது தமிழ்நாடு அரசு!
கடற்கரை பொழுதுப்போக்குவதற்கான இடம் மட்டும்தான், வியாபாரம் நடத்துவதற்கான இடம் இல்லை, போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்றால், கடற்கரை புதைப்பதற்கான இடமா? உலகப்புகழ்பெற்ற கடற்கரை ஒரு சிலரின் கல்லறையாக மாறியது எப்படி?
நில ஆக்கிரமிப்பு, ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு எல்லாம் குற்றம் என்றால் கடற்கரை ஆக்கிரமிப்பு மட்டும் சட்டப்படி சரியா? என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு? -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
www.ottplus.in/v/17PgoU1b5m
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அவசர சுற்றறிக்கை:
அன்பு உறவுகளுக்கு வணக்கம்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 66 இலட்சம் பேர் முகவரி இடம் மாறி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு சனவரி 18-ந்தேதி வரை ஒரு மாத காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நாளையும் (03-01-2026 சனி), நாளை மறுநாளும் (04-01-2026 ஞாயிறு) தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே, நமது கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் வாக்கக நிலை முகவர்கள் (BLA1) ஆகியோர் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்ககங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர் இடம்பெறாமல் போனவர்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான வழிகாட்டு உதவிகளைச் செய்துகொடுத்து, நம் உறவுகளின் வாக்குரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும், தங்கள் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்ககங்களுக்கும் கட்சி சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்கக நிலை முகவர்கள் (BLA2) பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணையத்தில் வழங்கி பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே வழங்கிய BLA2 பட்டியல் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மற்றும் BLA2 பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு உரிய முறையில் தெரிவித்து, இப்பணியைச் சிறப்புற செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த 2009ஆம் ஆண்டு சூன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்குமுன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட 3000 ரூபாய் அளவிற்குக் குறைவானதாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது ஐயா கருணாநிதி அவர்கள் தலைமையிலான அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக மொத்த ஊதியமானது ரூபாய் 15000 அளவிற்குக் குறைவாக இன்றளவும் வழங்கப்படுகிறது. அதன்பின் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும், இடைநிலை ஆசிரியரிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்?
ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் பெருமக்கள் கடந்த 26.04.2018 அன்று சென்னை – வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் முன்னெடுத்த தொடர்போராட்டத்தில் தோள்கொடுத்துத் துணை நிற்கும் விதமாக நேரில் சென்று ஆதரவளித்தேன். அதன்பின்னர், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டபோதிலும், எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்விதத் தீர்வும் வழங்கப்படாத நிலையில் மீண்டும் 27.12.2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியப் பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும், அதே கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததையும் நம்பி ஆசிரியப் பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவதைக் கண்டித்து மீண்டும் ஆசிரியப் பெருமக்கள் கடந்த 2022 டிசம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2023 அக்டோபர் மாதம் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2024, 2025 ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த போராட்டங்களின் போதும் நேரில் சென்று ஆதரவளித்தேன். ஆனால், வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.
ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 15 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சி அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக எத்தனை அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் தங்களின் நியாயமானக் கோரிக்கைகள் வெல்ல கடந்த 26.12.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிக்கிறது.
ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் – 892)
- பாட்டன் வள்ளுவப் பெருமகனார்
நாம் தமிழர் கட்சி சார்பாக,
நாளை மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) மாலை 04 மணியளவில்
பெரியாரைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026!
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
தீய ஆட்சிமுறை ஒழிய
தூய ஆட்சிமுறை மலர
கேடுகெட்ட பணநாயகம் ஒழிய
மாண்புமிக்க ஜனநாயகம் மலர...
அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சி எப்போதும் வெல்லும், நமது வெற்றி அதைச் சொல்லும்!
21-02-2026
திருச்சியில் திரள்வோம்! தீந்தமிழ் இனத்தீரே!
நாம் தமிழர்!
பேரன்பின் அழைப்பில்
உங்கள் சீமான்
donate.naamtamilar.org/peoples_convention_2026.html -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கடலூர் சிதம்பரம் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செ.தமிழ் மற்றும் அன்புத்தம்பி செ.தமிழரசன் ஆகியோரின் தாயார் அம்மா திருஞானசுந்தரி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா திருஞானசுந்தரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தஞ்சாவூர், திருவையாறு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சி.ஜாபர் சாதிக் அவர்களின் தந்தையும், மண்டலச் செயலாளர் அன்புத்தங்கை தல்சத் அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா சிராஜூதின் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா சிராஜூதின் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி, வேர்க்கிளம்பி பேரூராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி விசு (எ) விஜயன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த விசு (எ) விஜயன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி விசு (எ) விஜயன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புத்தம் புதிய ஆண்டின்
தொடக்க நன்னாளில்,
மக்கள் உள்ளங்களில்
நம்பிக்கையும், பேரன்பும்
புது வெள்ளமாய் பரவட்டும்!
இல்லங்கள் தோறும்
வளமும், நலமும் பெருகட்டும்!
மாற்றம் பிறக்கட்டும்!
மகிழ்ச்சி நிலைக்கட்டும்!
அன்பு உறவுகள் அனைவருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் நிர்வாகியுமான மதிப்பிற்குரிய ஐயா தமிழருவி மணியன் அவர்களது மனைவி அம்மையார் பிரேமகுமாரி மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தனது உயிர்த்துணையை இழந்து வாடும் ஐயா தமிழருவி மணியனுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பிரேமகுமாரிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நம் பெரும் பாட்டன்
வீரத்தியாகி
சி.சு.விஸ்வநாத தாஸ்
பெரும்புகழ் போற்றுவோம்!
மார்கழி 16 | 31-12-2025
தொல்தமிழ் மருத்துவக்குடியில் பிறந்து, இசைக்கலையில் தனக்கிருந்த தனித்துவமிக்க பேராற்றலினால் தானே பாடல் இயற்றி, இனிமையாகப் பாடி, அசாத்தியமாக நடிக்கும் ஆற்றலும் உடைய பல்திறன் படைத்த படைப்பாளி..!
மங்கிக்கிடந்த நாட்டு விடுதலை உணர்வை, தன் பாட்டின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் மண்ணின் மக்களுக்கு ஊட்டிய பெருங்கலைஞர்..!
தான் ஏற்றிருக்கும் கதை மாந்தரின் முழு வடிவமாகவே மாறி அவ்வேடத்தில் கரைந்து நடிக்கும் ஆற்றல் பெற்ற சிறப்புக்குரியவர் நம் பெரும் பாட்டன் சி.சு.விஸ்வநாத தாஸ் அவர்கள்.
பாட்டன் விஸ்வநாததாஸ் அவர்களின் நாடகம் நடக்கிறது என்றாலே அங்கே தன்மான உணர்வு பெற்று மக்கள் எழுச்சிக் கொள்கிறார்கள் என்று அறிந்துக்கொண்ட ஆங்கிலேய அரசு காவலர்கள் மூலம் பாட்டனாரைச் சிறைபிடிப்பது, பிறகு விடுதலை செய்வது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தது.
அத்தகைய கடுஞ்சூழலில் தொடர்ச்சியாக நமது பாட்டனார் அவர்கள் சிறைப்பட்டதால் தன் குடும்பத்தைச் சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்று, அவர் பரம்பரையாக வாழ்ந்த வீடும் ஏலத்திற்கு வந்த நெருக்கடி நிலை உருவானது.
அன்றைய மாநகரத் தந்தையாக இருந்த வாசுதேவ் அவர்கள், “நீங்கள் துன்பப்படக் கூடாது, இந்த வீட்டிற்கு என்ன தொகை வருமோ அதை நானே கட்டி உங்கள் வீட்டை மீட்டுத் தருகிறேன். அதனை நீங்களே பயன்படுத்துங்கள்” என்று கூறியபோது, “என்னால் புல்லை உண்ண முடியாது” என்று தன்மானத்தோடு மறுத்த தீரர் நம்முடைய பாட்டன் விஸ்வநாததாஸ் அவர்கள்.
மக்களின் உடற்பிணி தீர்த்து உயிர்காக்கும் உன்னத மருத்துவக்குடியினர் பின்னாட்களில் தாழ்ந்த குலம் என இழிவுபடுத்தப்பட்டனர். அதனால், நாவிதக் குலத்தில் பிறந்த விஸ்வநாததாசுடன் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று அவருடைய சக நடிகர் நடிகைகள் பலர் மறுத்தது நம் பாட்டனாருக்கு மிகுந்த வலியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியது.
இந்த மண்ணில் பிறந்த மகனாக, இந்த நாட்டின் உரிமைக்கு, அதன் விடுதலைக்குப் போராடுகிற ஒரு மனிதனைத் தாழ்த்தப்பட்டவன் என்று ஒதுக்கும் கொடியவர்களும் வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருந்தவர்கள்தான். அத்தகு நெருக்கடி நிலையை எதிர்கொண்ட நம்முடைய பாட்டனார், தனது நாடகத்தில் “தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவோர் உண்டோ?, மண்ணில் ஏங்குவோர் உண்டோ?” என்றெல்லாம் வருந்திப்பாடி தன்னுடைய மனக்காயத்தினைக் கொண்டே தமிழர் இனக்காயத்திற்கும் மருத்துவம் செய்தார்.
தொடர்ச்சியாக நாடகத்தில் நடித்த நம்முடைய பாட்டனார் உடல் நலிவுற்ற நிலையில், இறுதியாக நம்மின முன்னோன் முப்பாட்டன் முருகன் வேடமிட்டு நடித்தபோது, மேடையில் முருகன் வேடத்திலேயே தம்முடைய இன்னுயிரை இழந்தார்.
இம்மண்ணின் விடுதலைக்கு அளப்பரிய ஈகத்தைச் செய்த நமது பாட்டனார் விஸ்வநாததாஸ் போன்றவர்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டதற்கு அரை நூற்றாண்டிற்கும் மேலாக இந்த மண்ணை ஆண்ட திராவிடக் கட்சிகள், ஆட்சி - அதிகாரத்தில் கடைபிடிக்கும் அரசியல் தீண்டாமையே முதன்மையானக் காரணமாகும்.
கேடுகெட்ட அவ்வதிகாரத்தைத் துடைத்தெறிந்து, தமிழர் அதிகாரத்தை நிறுவி நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களைப் போன்ற பெருமைமிகு நம் இன முன்னோர்களை, வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியக் கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு மானத்தமிழ் மகனுக்கும் இருக்கிறது.
அடிமைப்பட்ட நம் தாயக விடுதலைக்கு அரும்பாடாற்றிய விடுதலைப்போராளி, தமிழினத்தின் பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி சி.சு.விஸ்வநாத தாஸ் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான போதை சிறார்களின் கொலைவெறித் தாக்குதல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு!
@CMOTamilnadu @mkstalin
திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தம்பி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது. திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது. அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது.
வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவது, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்குற்றமோ அதே அளவிற்கு, குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகிவருகின்றன. சொந்த இரத்த உறவுகள் கூடச் சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது. அதுமட்டுமின்றி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மது மற்றும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது. எனவே அரசு மது விற்பனையைத் தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும். அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் காரணமாகத் திகழும் மது விற்பனையைத் தடை செய்வதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன்? அதிமுக ஆட்சியில் குட்காவுக்கு எதிராக சட்டமன்றம் வரை பேசிய திமுக, தன்னுடைய ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை குறித்து வாய் திறவாதது ஏன்?
‘போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம்’ என்று காணொளி பேசினால் மட்டும் போதைப்பொருட்கள் புழக்கம் ஒழிந்துவிடுமா? அல்லது தமிழ்நாட்டு இளைஞர்கள் அதைப் பயன்படுத்தாமல் தடுத்திடத்தான் முடியுமா? இளம் சிறார்கள் போதையில் கொடூர ஆயுதங்களுடன் தாக்கிய காணொளிக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? மது, கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தாது இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலி கொடுக்கப்போகிறது? பட்டப்பகலில் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு போதைப்பொருட்கள் புழக்கத்தால் முற்று முழுதாகச் சீரழிந்துள்ள நிலையில், திமுக அரசு கஞ்சா விற்பனையைத் தடுக்காததும், மது விலக்கை நடைமுறைப்படுத்த மறுப்பதும் ஏன்? மக்களின் நலனைவிட மதுவினால் வரும் வருமானம்தான் திமுக அரசிற்கு முதன்மையானதா? இதற்குப் பெயர்தான் திராவிட மடலா? வெட்கக்கேடு?
ஆகவே, வடமாநில தொழிலாளி தம்பி சிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதல்போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுத்திடவும், சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காத்திடவும், மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதோடு, கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கை அன்னையைப் போற்றிக் கொண்டாடிய பெருந்தமிழர்!
அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன்!
உழவாண்மையின் தேவையை உலகுக்கு உணர்த்திய பெருந்தகை!
நஞ்சில்லா உணவு, அதுவே எம் கனவு! என்ற பெருங்கனவை நமக்குள் விதைத்த வேளாண் பேரறிஞர்!
"விதைத்துக்கொண்டே இரு! முளைத்தால் மரம்; இல்லையேல், மண்ணுக்கு உரம்!" என்று இளந்தலைமுறைக்குக் கற்பித்த பேராசான்!
மண்ணைக் காக்கவும், பாரம்பரிய விதைகளை மீட்கவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய மண்ணுரிமைப் போராளி!
வேப்ப மரத்தின் காப்புரிமையைப் போராடி பெற்று தந்த பேரரண்!
'விதைகளே பேராயுதம்’ என்று வீரமுழக்கமிட்ட தமிழ்ப்பெருங்குடியோன்!
இளந்தலைமுறைப் பிள்ளைகளை இயற்கை வேளாண்மையை நோக்கியும், தாய் மண்ணை நோக்கியும் திரும்பச் செய்த எங்களின் முன்னத்தி ஏர்!
இயற்கையின் மொழியறிந்து வாழ்வியலைப் பேணுவதற்கு தற்காலத் தமிழ்ப்பிள்ளைகளுக்குப் பாடமாய் இருக்கிற வேளாண்மை வேதம்!
எங்களின் பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள் இணைந்து நடத்தும் தமிழ்நாடு செளராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு – 2025, மார்கழி 13ஆம் நாள் (28-12-2025) மாலை 04 மணியளவில் மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினேன்.
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள் இணைந்து நடத்தும் தமிழ்நாடு செளராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு – 2025, மார்கழி 13ஆம் நாள் (28-12-2025) மாலை 04 மணியளவில் மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினேன்.
youtu.be/vrrULkeBHrQ -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தேமுதிக நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் 28-12-2025 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
27-12-2025 அன்று காலை, சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் பேரெழுச்சியாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம்.
youtu.be/JdjZZiH7hZM -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதியவர் ஏழுமலை மரணமடைந்துள்ளது மனிதப்பேரவலம்!
@CMOTamilnadu
@mkstalin
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம்,
அத்திமாஞ்சேரி அடுத்து கர்லம்பாக்கம் கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததை, அறியாது குடித்த கிராம மக்களின் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டு,
40 க்கும் மேற்பட்டவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
முதியவர் ஏழுமலை உயிரிழந்த துயரநிகழ்வு நடந்தேறியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மக்கள் பயன்படுத்தும் குடிநீரில், கழிவுநீர் கலக்கும் அளவிற்கு அலட்சியமாக செயல்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த ஜூன் மாதம்
சென்னை சைதாப்பேட்டை அபித்காலனியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச்சேர்ந்த ராஜேஷ்குமார் - சுமன்குமாரி இணையரின் 11 வயது மகன் யுவராஜ் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழந்த பெருந்துயரம் நடந்தேறிய நிலையில், அதிலிருந்து தமிழ்நாடு அரசு எவ்வித படிப்பினையும் பெறாதது ஏன்? அதன் பிறகாவது தமிழ்நாடு முழுவதும் மக்கள் பருகும் குடிநீரில் கழிவுநீர் கலக்காமலிருக்க கடும் நடவடிக்கை எடுத்து, உரிய வழிகாட்டலை வழங்கியிருந்தால் தற்போது மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்குமா? இப்படி அலட்சியமாக செயல்பட்டு இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலிகொள்ளப்போகிறது? உயிர் காக்கும் குடிநீரே, உயிரைக்கொல்லும் விசமாக மாறியது எப்படி? மாற்றியது யார்? இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும்
திராவிட மாடலா? மக்களின் உயிர்த்தேவையான சுத்தமான குடிநீரைக்கூட வழங்க முடியாத அரசால், வேறு எதை வழங்கிவிட முடியும்?
சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் பயன்படுத்திய குடிநீர் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளிவரும் முன்பே, சிறுவன் யுவராஜின் மரணத்திற்கு குடிநீர் காரணமில்லை என்று அறிவித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை தற்போது என்ன காரணம் சொல்லப்போகிறது? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விடயத்தில் முதலில் 5 பேர் பாதிக்கப்பட்டச் செய்தி வெளியானபோது அவர்களின் மரணத்திற்கு கள்ளச்சாரயம் காரணம் இல்லை என்ற அரசுத்தரப்பின் அவசர விளக்கமே, மேலும் 60 உயிர்களை பலிகொள்ள காரணமாகியது; அதிலிருந்து எவ்வித படிப்பினையும் பெறமாமல், குடிநீர் ஆய்வு முடிவுகள் வெளவரும் முன்பே சிறுவன் மரணத்திற்கு குடிநீர் காரணமில்லை என்ற அரசின் அறிவிப்பால் மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். மக்களின் உடல் நலனையும், உயிர்ப்பாதுகாப்பையும்விட
தன்மீதான குற்றங்குறைகளை மூடி மறைப்பதுதான் திமுக அரசிற்கு முதன்மையாக இருந்தது. அதுபோன்ற துயரங்கள் தற்போது தொடராமலிருக் கர்லம்பாக்கம் குடிநீர் ஆய்வு முடிவுகள் வெளிவரும்வரை, அப்பகுதி குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்ததற்கு உண்மையான காரணம் என்னவென்பதை எவ்வித ஒளிவுமறைவுமின்றி மக்களுக்கு விரைந்து தெளிவுபடுத்துவதோடு , அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்ட கர்லம்பாக்கம் மக்களுக்கு உரிய நிவாரண உதவியும், மரணமடைந்த ஐயா ஏழுமலை குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
ஏழை எளிய மக்கள் உயிர்வாழ குடிக்கும் நீரே, உயிரைக் கொல்லும் விசமாகி சிறுவன் யுவராஜ், முதியவர் ஏழுமலை போன்று இனி வருங்காலத்தில் எந்தவொரு உயிரும் பறிபோகாமலிருக்க, பாதுகாப்பான தூய குடிநீரும், உயிர்காக்கும் உயர்தர மருத்துவமும் அனைத்து மக்களுக்கும் சமமாக, தரமாக கிடைப்பதை தமிழ்நாடு அரசு இனியாவது உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி மேலானூர் கிராமத்தில் இளைஞர் பாசறை மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இளங்கோவன் அவர்களின் தாயார் அம்மா வேண்டா என்கிற ஜெய மேரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா வேண்டா என்கிற ஜெய மேரி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி நம்புதாளை கிராமத்தை சேர்ந்த அன்புத்தம்பி விஷ்ணுவரதன் - மனிஷா தம்பதியரின் குழந்தை பிறந்த இரண்டு நாளில் இறந்துவிட்டது என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்ற குழந்தையை இழந்து வாடும் தம்பி இளங்கோவன் மனிஷா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி விஷ்ணுவரதன் - மனிஷா தம்பதியரின் குழந்தைக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி இணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜெகதீஸ்குமார் அவர்களின் தந்தை ஐயா மாரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்ற தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெகதீஸ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மாரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் கோரத்தாக்குதலின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
இயற்கையின் பெருஞ்சீற்றத்துக்கு தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் பல்லாயிரக்கணக்கில் பலியான நம்மினச்சொந்தங்களைக் கண்ணீரோடு நினைவுகூர்கிறேன்.
குடும்பத்தாரையும், உறவுகளையும் இழந்து, அவர்களின் நினைவுகளோடு வாழும் நம்மின மக்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்து வரும் பெருந்தமிழர்!
ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் உண்மையான பொதுவுடைமைவாதி!
பொதுவுடைமை பிதாமகன்
பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா நல்லக்கண்ணு அவர்களின் நூற்று ஒன்றாவது பிறந்த நாளில் ஐயாவைப் போற்றி வணங்குகிறோம்; வாழ்த்தி மகிழ்கிறோம்!
ஐயாவுக்கு என்னுடைய அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, மண்டபம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தப் பொருளாளர் அன்புத்தம்பி துளசிதாஸ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த துளசிதாஸ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி துளசிதாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வடமாநிலங்களில் கிறித்துவப்பெருமக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித்தாக்குதல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைகுனிவு!
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உலகம் முழுமைக்கும் கிறிஸ்துமஸ் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், இந்தியப் பெருநாட்டில் கிறித்துவ மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுந்தாக்குதல் உலகரங்கில் இந்திய நாட்டின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. என்ன செய்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம்? ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை கண்டனத்தைக்கூட தெரிவிக்காது, கள்ளமௌனம் சாதிப்பதேன்? வெட்கக்கேடு!
ஒன்றியத்தில் பாஜகவானது ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இசுலாமியர்கள், கிறித்துவர்கள், ஆதித்தொல்குடிகள், பழங்குடிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதன் நீட்சியே, தற்போது நடந்தேறிய கோரச்சம்பவங்களாகும். இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பெரும் தலைகுனிவாகும். இந்திய நாட்டின் ஒப்பற்ற மனித வளமோ, பூமிக்கடியில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளமோ, ஓங்கி உயர்ந்த மலைகளோ, குறுக்கும், நெடுக்குமாகப் பாயும் ஆறுகளோ இந்நாட்டின் பெருமிதங்கள் அல்ல; மதச்சார்பின்மையும், பன்மைத்துவமும்தான் இந்நாட்டின் உயரிய அடையாளங்கள். அதனை மொத்தமாகச் சிதைத்தழிக்கும் வகையிலான மதவெறிச்செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.
உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா என பாஜக ஆளும் மாநிலங்களில் கிறித்துவ, இசுலாமியப் பெருமக்கள் மீது தொடரும் மதவெறித்தாக்குதல்களெல்லாம் திட்டமிடப்பட்ட இனஒதுக்கல் கோட்பாட்டின் செயல்வடிவமேயாகும். அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும், வழிபடவும், தங்களது மதம்சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடவுமான அடிப்படை உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அந்த உரிமையையே முற்றாக மறுத்து, மதவெறித்தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தும் மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. மதவெறியர்களின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மைச்செயல்பாடுகள் மன்னிக்கவே முடியாத படுபாதகமாகும். ‘தாங்கள் வாழ்கிற நாட்டைவிட சார்ந்திருக்கிற மதமே பெரிதென எண்ணிக்கொண்டு செயல்படத் தொடங்குவார்களேயானால் நாடு சுக்குச் சுக்காகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது’ எனும் அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கையைத்தான் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு இச்சமயத்தில் நினைவூட்டுகிறேன்.
ஆகவே, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கிறித்துவ மக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித் தாக்குதல்களை அம்மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அதனை உறுதி செய்யவும் வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, மார்கழி 10ஆம் நாள் (25-12-2025) இன்று காலை 10 மணியளவில் சிவகங்கை அரண்மனை வாயிலில் உள்ள வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கும், அரண்மனைக்குள் இருந்த திருவுருவச்சிலைக்கும், மணிமண்டபத்திலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தினேன்.
www.youtube.com/live/MAlSs-zAwgUThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) அன்று மாலை 04 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் செய்துங்கநல்லூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மாவீரத்தைப் போற்றுவோம் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை
youtu.be/qMVknKVvfG8 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று,
கொடைக் கைகளை விரித்து நீட்டி,
அருள்நெறி பொழிந்த பெருமகன்..!
‘உன்னைப்போல் உன் அயலானையும் நேசி’ என்று கற்பித்து, உலக நன்மைக்காக எல்லையற்ற கருணையும், ஈடில்லா
பேரன்பும் கொண்டு தம்மையே
ஈகம் செய்த இறைமகன்..!
மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன்.
அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே
என் விருப்பம் என்று மக்களின் மனங்களில் புரட்சி செய்த மகான்..!
‘உன் இனத்தான் ஒருவனையே
உன் அரசனாக்குவாய்; உன் இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே’ என்று மானுட குலத்திற்கே இறையாண்மை கற்பித்த இறைமகன் ஏசுபிரான் அருளிய
மணிமொழி பற்றி, நானிலம் எங்கும் நன்மை தரும் அரசும், சமூகமும் மலர்ந்திடவும்,
அன்பும், அமைதியும் நிலைத்திடவும்,
இறைமக்கள் எல்லோரும் இந்நன்னாளில் ஒருமித்து வழிபட விழைகிறேன்.
பெருமகனார் ஏசு பிரான்
பிறந்திட்ட இப்புனித நாளில்
உலகெங்கும் வாழும்
கிறித்துவப் பெருமக்கள்
அனைவருக்கும் என்னுடைய
நெஞ்சம் நிறைந்த
நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி..!
இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வென்ற முதல் பெண்ணரசி..!
தம்முடைய பேரன்பிற்குரிய கணவர் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைப் படுகொலை செய்த ஆங்கிலேயரை கொன்று பழி தீர்த்த மாதரசி..!
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி, பெண்ணியத்தின் பெரு வடிவமாய் நின்ற தமிழினப் பேராளுமை, போர்க்களம் புகுந்து மறப்போர் புரிந்து இழந்த தாய்மண்ணை மீட்ட விடுதலை வேங்கை நம்முடைய வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, இன்று மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04 மணியளவில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் செய்துங்கநல்லூரில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
வீரப்பெரும்பாட்டியாரின் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்ச் சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழர் வரலாற்றுப் பெரியார்..!
என் பேச்சில், என் எழுத்தில், என் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை வளர்த்தெடுத்த போற்றுதற்குரிய பேராசிரியர்..!
எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியோடு தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் ஊட்டிய மாமனிதர்..!
நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்த பெருந்தகை..!
அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்களை தமிழினத்திற்குப் படைத்தளித்த பெருமகன்..!
மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞர்..!
காலத்தால் அழியாத ஐயா தொ. ப அவர்களின் ஆய்வு நூல்களும், அவர் கற்பித்த பாடங்களும் தலைமுறை கடந்தும் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் வல்லமை பெற்றவை..!
கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய மகத்தான எழுத்தாளுமை..!
தமிழ்ப்பண்பாட்டுப் பேரறிஞர் நம்முடைய ஐயா பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
We, Naam Tamilar Katchi urge the Union Government to review its definition that reduces the Area of the Aravalli Mountain Range.
@narendramodi @AmitShah @byadavbjp @moefcc
In November 2025, the Supreme Court of India accepted the new definition for the Aravalli Hills recommended by the Union Government’s Expert Committee. According to this, only land areas with an elevation of 100 meters and above from the surrounding terrain will be recognized as "Aravalli Hills." This change in definition threatens to lead to the destruction of one of India's oldest and most vital mountain ranges. According to data from the Forest Survey of India (FSI), out of the 12,081 hillocks in the Aravalli range, only 1,048 (about 8.7%) are above 100 meters in height. This means that 91% of the hill areas will no longer be legally classified as "hills." This poses a risk of completely losing these hills to mining and construction.
The Aravalli range acts as a great "Natural Barrier" preventing the spread of the Thar Desert eastward. It is also the small hillocks and continuous ridges under 100 meters that collectively prevent sandstorms and desert expansion. Removing these areas risks the desertification of Delhi and North India.
Furthermore, the Aravalli hills function as a massive "Water Absorber." If these catchment areas, which recharge groundwater, are destroyed, the groundwater level in Gurugram, Faridabad, and several districts of Rajasthan will become much worse than the current situation. Excluding an ecologically significant area based on the single criterion of "height" affects the right to life of the people depending on the ecosystem.
The government must protect natural resources as a public trust. This re-definition, which favors illegal mining cartels, is a failure of the government's duty.
The definition should be based on the ecological role, wildlife corridors, and groundwater recharging capacity of the hills, not just their height. The Central Government should reverse this decision, which was taken merely for administrative convenience, and appoint a new committee consisting of geological and ecological experts to bring out a proper demarcation.
On behalf of the Naam Tamilar Katchi party, we urge the Central Government to declare the hillocks under 100 meters as "Ecologically Sensitive Zones" and take necessary action to put an end to all mining activities in those areas.
- Senthamizhan Seeman
Chief Coordinator
Naam Tamilar Katchi
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆரவல்லி மலைத்தொடரின் பரப்பளவினைக் குறைக்கும் வகையிலான ஒன்றிய அரசின் வரையறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@narendramodi @AmitShah @byadavbjp @moefcc
நவம்பர் 2025இல், இந்திய உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசின் நிபுணர் குழு பரிந்துரைத்த ஆரவல்லி மலைகளுக்கானப் புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து 100 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே "ஆரவல்லி மலைகள்" என அங்கீகரிக்கப்படும். இந்த வரையறை மாற்றம், இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிக முக்கியமான ஒரு மலைத்தொடரின் அழிவிற்கு வழிவகுக்கும் ஆபத்துள்ளது.
இந்திய வன ஆய்வு நிறுவனத்தின் (FSI) தரவுப்படி, ஆரவல்லி தொடரில் உள்ள 12081 மலைக் குன்றுகளில் வெறும் 1048 (சுமார் 8.7%) மட்டுமே 100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளன. அதாவது, 91% மலைப்பகுதிகள் இனி சட்டப்படி "மலைகள்" அல்ல. இது அம்மலைகளைச் சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானங்களுக்கு முழுமையாக இழந்திடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தார் பாலைவனப் பரப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் ஒரு பெரும் "இயற்கை அரணாக" ஆரவல்லி உள்ளது. 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட சிறு குன்றுகளும், தொடர்ச்சியான மேடுகளும் சேர்ந்துதான் மணல் புயல்களையும், பாலைவன விரிவாக்கத்தையும் தடுக்கின்றன. இவற்றை நீக்கினால், டெல்லி மற்றும் வட இந்தியா பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
மேலும், ஆரவல்லி மலைப்பகுதிகள் ஒரு மாபெரும் "நீர் உறிஞ்சியாக" செயல்படுகின்றன. மழைநீரை நிலத்தடிக்குக் கொண்டு செல்லும் இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அழிக்கப்பட்டால், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் இப்போதிருப்பதைவிட மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை "உயரம்" என்ற ஒற்றை அளவுகோலை வைத்து நீக்குவது மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கிறது. இயற்கை வளங்களை அரசு ஒரு பொது சொத்தாகப் பாதுகாக்க வேண்டும். இந்த மறுவரையறை சுரங்க கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைவது அரசின் கடமையிலிருந்து தவறுவதாகும்.
மலைகளின் உயரத்தை மட்டும் பார்க்காமல், அதன் சூழலியல் பங்கு, வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரையறை அமைய வேண்டும். வெறும் நிர்வாக வசதிக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை மாற்றி, நிலவியல் மற்றும் சூழலியல் வல்லுநர்கள் கொண்ட புதிய குழுவை அமைக்க வேண்டும். 100 மீட்டருக்குக் குறைவான குன்றுகளையும் "சூழலியல் உணர்திறன் மண்டலங்களாக" அறிவித்து, அங்கு சுரங்கப் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கையை ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆரவல்லி மலைத்தொடரின் பரப்பளவினைக் குறைக்கும் வகையிலான ஒன்றிய அரசின் வரையறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@narendramodi @AmitShah @byadavbjp @moefcc
நவம்பர் 2025இல், இந்திய உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசின் நிபுணர் குழு பரிந்துரைத்த ஆரவல்லி மலைகளுக்கானப் புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து 100 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே "ஆரவல்லி மலைகள்" என அங்கீகரிக்கப்படும். இந்த வரையறை மாற்றம், இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிக முக்கியமான ஒரு மலைத்தொடரின் அழிவிற்கு வழிவகுக்கும் ஆபத்துள்ளது.
இந்திய வன ஆய்வு நிறுவனத்தின் (FSI) தரவுப்படி, ஆரவல்லி தொடரில் உள்ள 12081 மலைக் குன்றுகளில் வெறும் 1048 (சுமார் 8.7%) மட்டுமே 100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளன. அதாவது, 91% மலைப்பகுதிகள் இனி சட்டப்படி "மலைகள்" அல்ல. இது அம்மலைகளைச் சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானங்களுக்கு முழுமையாக இழந்திடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தார் பாலைவனப் பரப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் ஒரு பெரும் "இயற்கை அரணாக" ஆரவல்லி உள்ளது. 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட சிறு குன்றுகளும், தொடர்ச்சியான மேடுகளும் சேர்ந்துதான் மணல் புயல்களையும், பாலைவன விரிவாக்கத்தையும் தடுக்கின்றன. இவற்றை நீக்கினால், டெல்லி மற்றும் வட இந்தியா பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
மேலும், ஆரவல்லி மலைப்பகுதிகள் ஒரு மாபெரும் "நீர் உறிஞ்சியாக" செயல்படுகின்றன. மழைநீரை நிலத்தடிக்குக் கொண்டு செல்லும் இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அழிக்கப்பட்டால், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் இப்போதிருப்பதைவிட மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை "உயரம்" என்ற ஒற்றை அளவுகோலை வைத்து நீக்குவது மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கிறது. இயற்கை வளங்களை அரசு ஒரு பொது சொத்தாகப் பாதுகாக்க வேண்டும். இந்த மறுவரையறை சுரங்க கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைவது அரசின் கடமையிலிருந்து தவறுவதாகும்.
மலைகளின் உயரத்தை மட்டும் பார்க்காமல், அதன் சூழலியல் பங்கு, வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரையறை அமைய வேண்டும். வெறும் நிர்வாக வசதிக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை மாற்றி, நிலவியல் மற்றும் சூழலியல் வல்லுநர்கள் கொண்ட புதிய குழுவை அமைக்க வேண்டும். 100 மீட்டருக்குக் குறைவான குன்றுகளையும் "சூழலியல் உணர்திறன் மண்டலங்களாக" அறிவித்து, அங்கு சுரங்கப் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கையை ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியினுடைய பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி திருவேற்காட்டில் ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகின்ற பிள்ளைகளுக்கு உணவளிக்க நிதி தேவைப்படுகிறது. எப்பொழுதும் எங்களுக்கு நிதி உதவி அளித்து, எங்களை வலிமைப்படுத்தி, வளமைப்படுத்துகின்ற எங்கள் அன்பு உறவுகள் உங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். வணக்கம்!
நிதிப்'பங்களிக்க:
donate.naamtamilar.org/general_committee_meeting.htmlThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்பிவித்து வாழ்ந்த பெருந்தகை, திராவிட திரிபுவாதம் குறித்து தமிழினம் விழிப்புணர்வுப் பெற தம் வாழ்வின் இறுதிவரை 'எழுகதிர்' என்ற தமிழ்த்தேசிய மாத இதழை தொய்வின்றி நடத்திய பெருந்தமிழர், இனத்திற்கு தீங்கு விளைவித்த போலிப்பெரியார்களை அம்பலப்படுத்திய தமிழ்ப்பெரியார், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு கழகத்தின் தலைவர், போற்றுதற்குரிய தமிழறிஞர், நம்முடைய ஐயா அருகோ அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அண்மையில் ஐயா அருகோ அவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிய அவருடைய இல்லத்திற்கு சென்றபோது நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் என்னை பெரிதும் நெகிழச்செய்கின்றன. நோயினால் உடல் நலிவுற்ற நிலையிலும் தன்னலம் கருதாது, தமிழினம் இன்னும் அரசியல் விடுதலை பெறவில்லையே என்று வருந்திய ஐயாவின் மொழி, இனப்பற்று அளப்பரியது. என் கைகளை பற்றிக்கொண்டு உங்களை நம்பித்தான் தமிழ்த்தேசிய அரசியலை விட்டுச்செல்கிறேன்.. உங்களுடைய காலத்திலாவது தமிழ்த்தேசியத்தை வெல்ல வைக்க வேண்டும் என்று ஐயா இறுதியாக என்னிடம் கூறிய வாய்மொழிகள் ஒவ்வொன்றும்.என்னை உறங்கவிடாமல் இனவிடுதலை இலக்கினை நோக்கி இன்னும் வேகமாக ஓடச்செய்யும் அருமருந்தாகும். சமகால அரசியல் வரலாற்றின் உயிர்ச்சான்றாக திகழ்ந்த ஐயா அருகோ அவர்களின் மறைவு தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
வாழ்நாள் முழுவதும் தமிழ்த்தேசிய அரசியல் போராளியாக திகழ்ந்து, நிறைவேறாத தமிழ்த்தேசிய பெருங்கனவோடு வாழ்ந்து மறைந்த நம் முன்னவர்களில் ஐயா அருகோ அவர்களும் ஒருவராகிவிட்டார் எனும் செய்தி பெருந்துயரத்தை தருகிறது, என்றாலும் ஐயா அவர்களின் பெருவிருப்பமாக, வாழ்நாள் இலட்சியமாக இருந்த தமிழ்த்தேசிய அரசியலை நம் சமகாலத்தில் உறுதியாக வெல்ல வைப்போம் என்று உளமார நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்பதே ஐயா அருகோ அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கமாக அமையும்!
ஐயா அருகோ அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
வாழ்வின் இறுதிநாள் வரை தமிழ்த்தேசியராகவே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருந்தகை நம்முடைய ஐயா அருகோ அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்று இன்று அதிகாலை 23-12-2025 மறைவெய்திய மூத்த தமிழ்த்தேசியவாதியும் எழுகதிர் ஆசிரியருமான ஐயா அருகோ அவர்களின் திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுத்தேன்.
சென்னை கோடம்பாக்கம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொல்லி, ஊழல், இலஞ்சம் என எவ்வித முறைகேடுகளும் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை..!
பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரையும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை. அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை பேரப்பிள்ளைகளாகிய நாம் இன்றைய நாளில் ஏற்போம்.
பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக, மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ‘தூய அரசியலின்’ நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெண் எனும் பேராற்றல்!
அதுவே உலகின் உயிராற்றல்!
21-12-2025 அன்று திருச்சி டி.எம்.ஆர்.மகால் (TMR Mahal) மண்டப அரங்கில் பேரெழுச்சியாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்.
youtu.be/HIreNhUVGwI -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் - இலுப்பூரைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் சேவை மையப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கருணாகரன் அவர்களின் தாயாரும், செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத்தலைவர் அன்புத்தங்கை இராஜலெட்சுமி கருணாகரன் அவர்களின் மாமியாருமான அம்மா பிச்சம்மாள் அவர்கள் இன்று (22-12-2025) மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தாயாரை இழந்து வாடும் தம்பி கருணாகரன் மற்றும் தங்கை இராஜலெட்சுமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பிச்சம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் – 892)
- பாட்டன் வள்ளுவப் பெருமகனார்
நாம் தமிழர் கட்சி சார்பாக,
வருகின்ற மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) மாலை 04 மணியளவில்
பெரியாரைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தேர்தல் அறிக்கையில் அளித்த பணிநிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்!
@CMOTamilnadu @mkstalin
2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமலும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமலும் தமிழ்நாடு அரசு காலம் கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, உரிமையை தர மறுப்பதோடு, வீதியில் இறங்கிப் போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் இரக்கமற்ற கொடுங்கோன்மையாகும்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன் 2014-15 ஆம் ஆண்டுகளிலும் , கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலும் ஏறத்தாழ 11000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முந்தைய அதிமுக அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இரவு-பகல் பாராது மக்களின் இன்னுயிர் காக்கும் அரும்பணியில் அயராது ஈடுபட்டு வந்த செவிலியர்கள், அரசு உறுதியளித்தபடி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி கடந்த மூன்று ஆண்டிற்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யாததோடு, அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித உரிமையோ, சலுகையோ வழங்காமல் மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி கொத்தடிமை போல் நடத்தியது அன்றைய அதிமுக அரசு. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து அதிகாரத்தை அடைந்த திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த நான்கு ஆண்டுகளாகியும் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி செவிலியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியதோடு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்காகும். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு எவ்வித மனச்சாட்சியும் இன்றி திமுக அரசு பணி நீக்கமும் செய்தது.
தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளும் அதிக நோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு நோயாளிகளுக்கான படுக்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் அதிகரிக்கப்படாமலும், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமலும் இருப்பதால் நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்கப்பெறாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், மிக அதிகமான பணிச்சுமையினால் செவிலியர்களும் உடல் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாவதால் நோயாளிகளைச் சரிவரக் கவனிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழலும் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் செவிலியர்களது சேவை தேவைப்படும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதிய செவிலியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் (எண்:356) உறுதியளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், கடந்த 6 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் செவிலியர்களை காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது எவ்வகையில் நியாயமாகும்? இதுதான் கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை திமுக அரசு நிறைவேற்றிய முறையா? கொரோனா காலத்தில் தமிழ்நாடு அரசுக்கு தேவதைகளாக தெரிந்த செவிலியர்கள் இன்றைக்கு தேவை இல்லாதவர்களாகிவிட்டனரா? அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிறைவேற்ற மறுத்து, வீதியில் இறங்கிப் போராடச் செய்வதற்குப் பெயர்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்கின்ற திராவிட மாடலா?
ஆகவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள 8,322 ஒப்பந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்வதோடு, காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான பணியிடமாற்ற கலந்தாய்வு, வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்தல், தேவையற்ற பணிச்சுமையைத் திணிப்பதைத் தவிர்த்தல், உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து செவிலியர்களுக்கும் வழங்குதல், கொரானா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்த்தல் உள்ளிட்ட செவிலியர்களின் மிக நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி ஏழை மக்களுக்கான மருத்துவச் சேவை தடைபடாமல் தொடர வழிவகைச் செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
போற்றுதலுக்குரிய செவிலித்தாய்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக தமிழ்நாடு முழுவதும் தற்போது முன்னெடுத்து வரும் தொடர் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி, கோரிக்கைகள் அனைத்தும் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன்?
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 'தமிழ்நாடு' பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
ஆரம்ப காலங்களில் 'தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? வண்ணப்பூச்சு தீர்ந்துவிட்டதா? அல்லது அரசுக்கு தெரியாமல் வண்ணப்பூச்சு ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா? அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா?
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன்? யாருடைய உத்தரவின் பேரில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்படுகிறது? தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு? இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
தமிழ்நாடு என்ற பெயர் ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு. இச்சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்தார். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா? போக்குவரத்து கழகப் பெயரிலிருந்து தமிழ்நாடு என்பதை திமுக அரசு நீக்கி இருப்பதன் மூலம் ‘தமிழ்நாடு’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என்று வம்படியாக அறிவித்தது தற்புகழ்ச்சிக்கானதே தவிர, தமிழ்நாடு என்ற பெயரின் மீதான பற்றுதலினால் அல்ல என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நாங்கள்தான் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்ற பெயரையே வைத்தோம் பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா?
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசுப்பேருந்துகள் அனைத்திலும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்' என்று முழுமையாக எழுத வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், 'தமிழ்நாடு' பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, அய்யம்பேட்டையைச் சேர்ந்த தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அ.நிக்சன் அவர்களின் தாயார் அம்மா அ.பிரகாசம் மேரி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா அ.பிரகாசம் மேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இளையோர் படை எழுக!
இன விடுதலை வெல்க!
மார்கழி 05ஆம் நாள் (20-12-2025) அன்று காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் பேரெழுச்சியாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்.
youtu.be/36PuMK2ePVo -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மலையாளத் திரையுலகின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சகோதரர் சீனிவாசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயர் அடைந்தேன்.
நடிகர், இயக்குநர், உரை ஆசிரியர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி சகோதரர் சீனிவாசன் அவர்களின் மறைவு மலையாளத் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும். அவருடைய மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் சீனிவாசன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருப்பெரும்புதூர் செயிண்ட் ஜோசப் சட்டக் கல்லூரி மாணவி அன்பு மகள் பாரதி தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் இயங்கி வரும் செயிண்ட் ஜோசப் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த அன்பு மகள் பாரதி தேர்வில் பார்த்து எழுதியதாகக் கூறி, தேர்வு எழுத அனுமதிக்க மறுத்ததோடு, வேறு வகுப்புக்கு மாற்றப்படுவாய் என்றும் கல்லூரி நிர்வாகம் கடுமையாக மிரட்டியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மகள் பாரதி தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பெற்ற மகளை இழந்து வாடும் பாரதியின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கின்றேன்.
பாரதியின் பெற்றோர் நேரில் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, மகள் மீதான கடும் நடவடிக்கையை கைவிட வேண்டி கோரிக்கை விடுத்தும், கல்லூரி நிர்வாகம் உரிய பதிலை அளிக்கவில்லை. வேறு வழியின்றி கல்லூரியை விட்டு விலகிக்கொள்கிறேன் என்று பாரதியின் பெற்றோர் தெரிவித்த பிறகும் கட்டணத்தைத் திருப்பித் தர இயலாது என்று கூறி, விலகவும் அனுமதி மறுத்து கல்லூரி நிர்வாகம் கடுமையாக எச்சரித்ததன் காரணமாக, பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான மகள் பாரதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறிய தவறுக்கு மிகக் கடுமையாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தின் சிறிதும் மனச்சான்று இல்லாத கொடும்போக்கே அன்பு மகள் பாரதியின் தற்கொலைக்கு முழுக்காரணமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அன்புமகள் பாரதி தற்கொலைக்குக் காரணமான திருப்பெரும்புதூர் செயிண்ட் ஜோசப் சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தருமபுரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை; குற்றவாளியோடு, குற்றத்தை மூடி மறைக்கத் துணை நின்றவர்களையும் கைது செய்து தக்க தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தருமபுரி மாவட்டம் குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன் 9ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அதிர்ச்சியும் மிகுந்த, மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாகப் பள்ளி படிக்கும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் இதயத்தை நொறுக்குகிறது. கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம் காரணமாக ஒட்டுமொத்த சமூகமும் குற்றச் சமூகமாக மாறிநிற்பதே பாலியல் வன்கொடுமை உட்பட நாட்டில் நடைபெறும் அனைத்து கொடுங்கொடுங்குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாகும். அக்கொடுமைகளின் தொடர்ச்சியே தர்மபுரியில் நடைபெற்ற பள்ளி சிறுமி மீதான பாலியல் தொல்லையுமாகும். அதைவிடவும் பெருங்கொடுமை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் துணையுடன் சிறுமியின் பாமர பெற்றோரை ஏமாற்றிக் கட்டப்பஞ்சாயத்துப் பேசி அக்கொடுஞ்செயலை மூடி மறைக்க முயன்றதாகும்.
இக்கொடுமை குறித்த தகவல் வெளிவந்தவுடன் கொதித்தெழுந்த ஊர் பொதுமக்கள் நடத்திய தொடர்ப் போராட்டத்தின் விளைவாக, தற்போது பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட போதிலும், கட்டப்பஞ்சாயத்துப் பேசி குற்றத்தை மறைக்க முயன்ற கயவர்களைத் தப்பிக்க விட்டிருப்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் இக்குற்றத்திற்குத் துணை நின்றிருப்பது மன்னிக்க முடியாத கொடுமையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு தருமபுரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளி மற்றும் அதனை மறைக்கத் துணைநின்ற கயவர்கள் அனைவருக்கும் எவ்வித அதிகார தலையீட்டுக்கும், அரசியல் அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் நேர்மையான, விரைவான நீதி விசாரணை நடத்தி மிகக்கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெண் எனும் பேராற்றல்!
அதுவே உலகின் உயிராற்றல்!
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற
21-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி டி.எம்.ஆர்.மகால் (TMR Mahal) மண்டப அரங்கில் தலைமையில் நடைபெறவிருக்கிறது. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முதலாம் மொழிப்போரை முன்னின்று நடத்தி சிறை சென்ற முதன்மைப் போராளி..!
ஐயா ஈ.வே.ரா புகுத்திய திராவிட திரிபுவாதத்திற்கு எதிராக தமிழ்த்தேசிய அரசியல் காக்க ‘தமிழர் கழகம்’ கண்ட தன்மானத்தமிழர்..!
‘தமிழர் நாடு’ இதழ் நடத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருந்தகை..!
தமிழர் மரபு திருமண இயக்கம் நடத்தி ஐயாயிரம் சாதி வேறுபாடற்ற தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்த சமூகச் சீர்திருத்தவாதி..!
ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி திருவானைக்காவல், மாயவரம் கோயில்களில் ஆதித்தமிழ்க்குடி மக்களை வழிபடச் செய்த பெருந்தமிழர்..!
தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்திட அடிகோலிய தகைமையாளர்..!
தமிழகப் புலவர் குழுவினை நிறுவி அறிஞர் பலரை ஒருங்கிணைத்து தமிழ் வளர்த்த செம்மல்..!
35 க்கும் மேற்பட்ட அருந்தமிழ் நூல்கள் பல இயற்றி தமிழன்னைக்கு அணி சேர்த்த தமிழறிஞர்..!
தம்முடைய எழுத்து, சொல், செயல் யாவற்றையும் தமிழுக்கும், தமிழர் நலனுக்கும் ஒப்புவித்து, வாழ்வின் இறுதிநாள் வரை தமிழ்த்தேசியராகவே வாழ்ந்து மறைந்த, நம்முடைய தாத்தா முத்தமிழ் காவலர்
கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இளையோர் படை எழுக!
இன விடுதலை வெல்க!
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் மார்கழி 05ஆம் நாள் (20-12-2025) அன்று காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி
மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.முருகேஸ்வரி அவர்களின் மாமியார் அம்மா கா.பாலம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
பாசத்திற்குரிய மாமியாரை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா கா.பாலம்மாள் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியைத் திமுக அரசு உடனடியாகக் கைவிடுவதோடு, கிடங்கு அமைவதை எதிர்த்து போராடும் மக்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
@TPRDtCollector @mkstalin @TThenarasu @supriyasahuias @Chief_Secy_TN @Subramanian_ma @tnpoliceoffl
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருகின்றது. திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியதாகும்.
முதலிபாளையம், காளாம்பாளையம், சிறுபூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் ஆகிய பகுதியில் கைவிடப்பட்ட கல் குவாரியில் கொட்டிய குப்பையை அகற்றாமல் , தற்போது இடுவாயில் புதிய குப்பைக் கிடங்கு அமைத்து மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிரிக்கப்படாதக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது துளியும் பொறுப்பின்றி செயல்படும் ஆட்சிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குப்பையைத் தொடக்கத்திலேயே பிரிக்காமல், அறிவியல் அடிப்படையில் அகற்றாமல் கிராமங்களைக் குப்பைத் தொட்டியாக மாற்றும் பணியைத் திமுக அரசு செய்து வருகிறது .
மேலும் அரசின் இந்த செயலால் திருப்பூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகளான அனுப்புர்பாளையம் சாலை, காந்தி நகர், வேலம்பாளையம், அங்கேரிபாளையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு மிகவும் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.
மேலும் திருப்பூர் நகரின் முதன்மைப் பகுதியான நொய்யல் ஆற்றங்கரையோரம் அனைத்துக் குப்பைகளையும் கொட்டி, அதனைத் தீயிட்டுக் கொளுத்திக் காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாட்டினை அரசே ஏற்படுத்தி வருகின்றது.
இடுவாய் கிராமத்தில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் மற்றும் சுற்றியுள்ள 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இடுவாய் சின்ன காளிபாளையத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல் துறை தனது அடக்குமுறையால் பெண்கள் வயதானவர்கள் என்றும் பாராமல் கைது செய்து அடைத்துவைத்து குப்பையை மக்களுக்கு தெரியாமல் கொட்டும் செயலை செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காலையில் கைது செய்து பின்னர் இரவு நேரங்களில் விடுவித்து பிறகு மீண்டும் கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் பின்பற்றாமல், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறியாமல் அவர்களின் உடல் நலன் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாகத் தனது தவறுகளை சரி செய்து கழிவு மேலாண்மை விதிகளை முழுவதுமாக செயல்படுத்திட வேண்டும்.
இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திமுகவின் மணல் திருட்டுக்கு எதிராக போராடிய தம்பி அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீது பொய் வழக்கு புனைந்து திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்!
@CMOTamilnadu
@mkstalin
திமுகவின் இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக சரளை மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 22விவசாயிகள் மீது பொய்வழக்கில் கைது செய்து திமுக அரசு சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தன்னுடைய தவறுகளை மூடி மறைக்க ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அடக்குமுறையை ஏவி மண்ணையும், மண்ணின் வளங்களையும் காக்கப் போராடும் வேளாண்பெருங்குடி மக்களை சிறைப்படுத்துவது கொடுங்கோன்மையாகும்.
திருவண்ணாமலையில் கடந்த 14.12.25அன்று தமிழ்நாடு முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற இடத்தை சமப்படுத்துவதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பம்பாடி ஏரியிலிருந்து 2,000லோடு சரளை மண் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, திமுகவினருக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரா சர்க்கரை ஆலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி ஏரிக்கரையில் 30அடி தார் சாலையும் அமைக்கப்பட்டது. இம்முறைகேடுகளை எதிர்த்து உழவர் உரிமை இயக்கம் சார்பாக தம்பி அருள் ஆறுமுகம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனு கொடுத்தும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து உழவர் உரிமை இயக்கத்தின் சார்பில் 14.12.25 அன்று 2000விவசாயிகளை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
திமுகவின் திருட்டுத்தனத்தைத் தோலுரிக்கும் அப்போராட்டத்தை முடக்கும் நோக்கத்துடன், முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசு காவல்துறையை ஏவி உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22விவசாயிகளின் அலைபேசியைப் பறித்துக்கொண்டு, அதிகாலையிலேயே கைது செய்து போளூர் காவல் நிலையத்தில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் திமுக இளைஞர் அணி மாநாடு முடிந்ததும் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென போளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயி அருள் ஆறுமுகம் தலைமையில் சட்டவிரோதமாகக் கூடியதாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும் காவல் உதவி ஆய்வாளர் அளித்த பொய் புகாரின் பேரில் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போது 22விவசாயிகளையும் வேலூர் சிறையில் திமுக அரசு அடைத்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
ஏற்கனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத பெரும் கொடுமையாக தம்பி அருள் ஆறுமுகம் உள்ளிட்ட ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து துன்புறுத்திய திமுக அரசு, கடும் எதிர்ப்பிற்கு அஞ்சி 6 பேர் மீதான குண்டர் சட்டத்தைத் திரும்பப்பெற்ற போதும், தம்பி அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் திரும்பப்பெற மறுத்தது. தற்போது அருள் ஆறுமுகத்தை குறிவைத்து தொடரும் அடக்குமுறைகள் யாவும் கடந்தகால அரசியல் காழ்ப்புணர்வின் நீட்சியேயாகும். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இதே தம்பி அருள் ஆறுமுகத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நிலத்தையும் நீர்நிலைகளையும் காப்பதற்கு விவசாயியாக இருக்க வேண்டியதில்லை, நெஞ்சில் ஈரம் இருந்தால் போதும் என்று பேசிய ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களே, தம்பி அருளை குண்டர் சட்டத்தில் அடைக்கும்போது உங்கள் நெஞ்சின் ஈரம் எங்கே போனது? ஆட்சி அதிகாரம் இல்லாதபோது உங்கள் நெஞ்சில் இருந்த ஈரம், பதவி, பகட்டு வந்தவுடன் வறண்டு போனது ஏன்? பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருள் விற்போர் உள்ளிட்ட கொடுங்குற்றவாளிகளை கைது செய்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த திறனற்ற திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்குத் தொடுத்து கைது செய்து சிறையில் அடைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் வேளாண்மையும், விவசாயிகளையும் திமுக அரசு பாதுகாக்கும் முறையா? இதுதான் திமுக அரசு மண் காக்கும், மானம் காக்கும் முறையா? பேரவலம்!
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை எனும் வள்ளுவப்பாட்டன் வாக்கிற்குக்கிணங்க பயிர் வளர்த்து உயிர் காக்கும் விவசாயிகளை கொடுஞ்சிறையில் அடைப்பது பஞ்சத்தில் நாடு நாசமாகவே வழிவகுக்கும்.
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆகவே, தமிழ்நாடு அரசு மண்ணின் வளங்களைக் காக்கப் போராடிய அன்புத்தம்பி அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீதான பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற்று, அவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆற்றல்மிகு செயற்பாட்டாளன் ஆருயிர் இளவல் முனைவர் செந்தில்நாதன் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தம்பி து.ஆசைத்தம்பி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
தனது அண்ணனை இழந்து வாடும் தம்பி செந்தில்நாதனுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஆசைத்தம்பி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி,
இளைஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி
பிச்சுவா மணி அவர்களின் தந்தையார்
ஐயா மனோகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா மனோகரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் மாவட்டம், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி க.அரிபிரசாத் அவர்களின் மாமியார் அம்மா ஞா.விமலா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் சகோதரிக்கும், தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ஞா.விமலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வால்பாறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி மா.பிரகாஷ் அவர்களின் தந்தை ஐயா மு.மாதேஸ்வரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா மு.மாதேஸ்வரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவள்ளூரில் அரசுப்பள்ளி சுவர் இடிந்துவிழுந்து அன்புமகன் மோகித் உயிரிழப்பு; அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல் இன்னும் எத்தனை மாணவச்செல்வங்களை திமுக அரசு பலிகொடுக்கப்போகிறது?
@CMOTamilnadu @mkstalin
திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவந்த அன்புமகன் மோகித் மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உயிழந்த செய்தியறிந்து பெரும் அதிச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பெற்ற பிள்ளையை பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பில் தவிக்கும் மோகித் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரசுப்பள்ளி சுவர்கள், மேற்கூரைகள் இடிந்துவிழுவதும், அதில் பள்ளி மாணவ – மாணவியர் படுகாயமடைவதும் தொடர்கதையாகிவிட்டது. கடந்த 05.12.25 அன்று புதுக்கோட்டை மாவட்டம் சிறுநாவூர்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிறு காயங்களோடு மாணவர்கள் உயிர் தப்பினர். கடந்த 21.09.25 துறையூர் சிங்களாந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளி திறந்து 9 மாதமே ஆன பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்துபோது பள்ளி விடுமுறை என்பதால் பெரும் விபத்திலிருந்து மாணவர்கள் உயிர் தப்பினர். கடந்த 03.08.25 அன்று செங்கல்பட்டு அடுத்த அஞ்சூரில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 அடி தூரத்திற்கு இடிந்து கீழே விழுந்தது. சுவர் இடிந்து விழுந்தது இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த 03.04.25 அன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வரும் நிலையில், திடீரென பள்ளி கட்டட மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் 5 பள்ளி மாணவர்கள் தலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.
கடந்த 03.01.25 அன்று இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகே தென்கடப்பந்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ் படுகாயமடைந்தான். கடந்த 23.03.23 அன்று தஞ்சாவூர் மாவட்டம், பருத்திக்குடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3ஆம் வகுப்பு மாணவர் அன்புமகன் விஷ்ணு தலையில் 20 தையல்கள் போடும் அளவிற்குப் பலத்த காயமடைந்த துயரம் அரங்கேறியது. அதே ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, ஒன்றாம் வகுப்பு மாணவி அன்புமகள் சுபிஸ்னாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவையெல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஒரு சில பள்ளி கட்டிட விபத்துகள் மட்டுமே. ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பழுதான பள்ளியின் சுவர்களும், மேற்கூரைகளும், சிமெண்ட் காரைகளும் தொடர்ந்து இடிந்து விழுகின்றது. அதுமட்டுமின்றி, இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை பல்லாயிரமாகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து 8ஆம் வகுப்பு படித்துவந்த 3 மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனே, வழக்கம்போல அனைத்து பள்ளிக்கூடங்களின் தரத்தையும் ஆராய ஒரு குழுவினை அமைத்தது திமுக அரசு. கடந்த நான்கு ஆண்டுகளில் அக்குழு ஆராய்ந்து அளித்த அறிக்கை எங்கே? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இடிந்து விழும் நிலையிலிருந்த எத்தனை தரமற்ற பள்ளி கட்டிடங்கள் இழுத்து மூடப்பட்டது? எத்தனை பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டன? மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பள்ளிகள் எத்தனை? என்ற கேள்விகளுக்கு திமுக அரசின் என்ன? முறையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாத, பள்ளிகள் எத்தனை? படிக்க பாதுகாப்பான கட்டிடம் இன்றி நாள்தோறும் மரத்தடியில் நடக்கும் வகுப்புகள் எத்தனை என்றாவது திமுக அரசுக்கு தெரியுமா?
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை அரசுப்பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன? ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளிகள் மூடப்படுவது ஏன்? இந்த ஆண்டு மட்டும் 208 அரசுப்பள்ளிகளை திமுக அரசு மூடியது ஏன்? திராவிட மாடல் ஆட்சியில் 45 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 56 இலட்சம் மாணவ மாணவியர் படிக்கும் நிலையில், வெறும் 13000 தனியார் பள்ளியில் 64 இலட்சம் மாணவர்கள் படிப்பது எப்படி? ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டும், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டும் செல்வதும் ஏன்? உயர் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதை பெரும் சாதனையாக பெருமை பேசும் திமுக அரசால் அரசுப் பள்ளி - கல்லூரி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க முடியாதது ஏன்? அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஒரு இலட்சம் காலிப்பணியிடங்களை திமுக அரசு இதுவரை நிரப்பாதாது ஏன்? அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைச் சீரமைக்காமலும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராமலும், போதிய ஆசிரியர்களை நியமிக்காமலும் ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று திமுக அரசு நடிகர்களை வைத்து வெற்று விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது.
கடந்தகாலத் துயர நிகழ்வுகளைப் படிப்பினையாகக் கொண்டேனும் திமுக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி போன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் சீர் செய்யப்பட்டு அவற்றின் தரமானது மேம்பட்டிருக்கும். ஆனால், அதனைச் செய்யத் தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்கே, தற்போது அன்புமகன் மோகித் உயிரிழக்க முதன்மைக் காரணமாகும். பழுதான பள்ளிகளை சீரமைக்காமல் அலட்சியப்படுத்தி இன்னும் எத்தனை மாணவச்செல்வங்களை திமுக அரசு பலிகொடுக்கப்போகிறது? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? மெட்ரோ திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை கொட்டும் திமுக அரசிடம் பள்ளிக்கூடம் கட்ட நிதி இல்லையா? கார் பந்தயம் நடத்தவும், கலைஞர் அரங்கம் கட்டவும் பல நூறு கோடிகளை வீண்விரயம் செய்யும் திமுக அரசிடம் பள்ளிக்கூடங்களை தரமானதாக மாற்ற நிதி இல்லையா? பல்லாயிரம் குடும்பங்களை சீரழிக்கும் மதுக்கடைகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் பல நூறு கோடிகளைச் செலவு செய்யும் திமுக அரசு, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதற்கு மட்டும் தனியார் முதலாளிகளிடம் கையேந்தி நிற்பது அவமானகரமானதாகும்.
ஆகவே, ஒவ்வொரு முறையும் பள்ளிக்கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஏதுமறியா அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த பிறகு, பெயரளவில் ஆய்வுக்குழு அமைக்கும் கண்துடைப்பு நாடகத்தை திமுக அரசு இனியாவது கைவிட வேண்டும். உடனடியாக முதுநிலை பொறியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளின் உறுதித்தன்மை குறித்து முறையாக ஆய்வுசெய்ய வேண்டும். நிபுணர் குழு அளிக்கும் தகுதிச் சான்றிதழை பெற்றுள்ள பள்ளி, கல்லூரிகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், மாணவ கண்மணிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த அன்புமகன் மோகித் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களுடைய உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நம்முடைய நாம் தமிழர் கட்சியினுடைய பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் (மார்கழி 12) 27-12-2025 சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸ் (GPN Palace) என்கிற திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. என் அன்பு உறவுகள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.
இந்த நிகழ்வை நடத்துவதற்கு நமக்கு பெரும் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. வழமையாக என் அன்புச் சொந்தங்கள் திரள்நிதி திரட்சியின் மூலமாக நீங்கள் நிதியளித்து எங்களுடைய கைகளை வலிமைப்படுத்துவீர்கள். அதைப்போல இம்முறையும் எங்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
நாம் தமிழர்!
நிதிப் பங்களிக்க: donate.naamtamilar.org/general_committee_meeting.htmlThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி, பெருநகர் கிளைச் செயலாளர் அன்புத்தம்பி மா.அருண்குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த மா.அருண்குமார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி மா.அருண்குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மாதவரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பா.கார்த்திக் பாபு அவர்களின் தாயார் அம்மா பா.சங்கரி அம்மாள் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா பா.சங்கரி அம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மாதவரம் சட்டமன்றத் தொகுதி, பால்பண்ணையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ரவிக்குமார் அவர்களின் தாயார் அம்மா த.அழகுவள்ளி அம்மாள் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா த.அழகுவள்ளி அம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழீழ உறவுகளின் உயிர் காக்க தன்னுயிர்த் தந்த ஈகைத்தமிழன்
பொழுபோக்கிலும் கேளிக்கையிலும் நாட்டம் கொண்ட மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்ய முடியாது என்பதற்காக, தன்னை எரித்து இனத்தின் அறியாமை இருள் போக்கிய வெளிச்சக்கீற்று..!
முத்துக்குமாருக்கு மூத்த முதல் நெருப்பு..!
தமிழ் ஈழ உறவுகளின் உயிர் காக்க
தன்னுயிர்த் தந்த ஈகைத்தமிழன்..!
சிங்கள இனவெறி கொடுமையிலிருந்து
தமிழீழ மக்களை காப்பாற்ற
தமிழக மக்களை தட்டியெழுப்பிய தழல் ஈகி..!
இனமானத்தமிழன் அப்துல் ரவூப் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்
திசையைத் தீர்மானித்த தீர்க்கத்தரிசி!
தலைசிறந்த தர்க்கவாதத் திறனால் ஆயுதப்போருக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளைத் தகர்த்தெறிந்த
தமிழீழ நாட்டின் தத்துவப் பேரறிஞர் !
தமிழர்களின் விடுதலைக் குரலாய்
பன்னாட்டு அரங்கில் முழங்கிய அரச வித்தகர் !
போரும் சமாதானமும் கண்ட விடுதலைப் பேரொளி!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தன்னிகரில்லா அரசியல் ஆலோசகர்!
புலிகள் நடுவே உலவிய ஒற்றைச் சிங்கம்
‘தேசத்தின் குரல்’ ஐயா அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதி, செய்யாறு குமரன் தங்க மாளிகை மற்றும் குமரன் துணிக்கடை உரிமையாளரும், சிறந்த தொழிலதிபருமான ஐயா செல்வராஜ் அவர்களின் அன்புமகன் தம்பி செ.விக்னேஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய மகனை இழந்து வாடும் ஐயா செல்வராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி விக்னேஷ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாடானை சட்டமன்றத் தொகுதி,
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பழனிச்சாமி அவர்களின் தந்தையார் ஐயா கா.அழகர்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி பழனிச்சாமி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா அழகர்சாமி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி சட்டமன்ற தொகுதி
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் அனுமந்தபுரம் கிளை பொறுப்பாளர் ஐயா முனுசாமி அவர்களின் அன்பு மகன் அன்புத்தம்பி மனோஜ் குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய மகனை இழந்து வாடும் ஐயா முனுசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி மனோஜ்குமார் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி,
சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தம்பி முத்துக்குமார் அவர்களின் தந்தையார்
ஐயா முருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா முருகன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@TTVDhinakaran -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல;
படைப்பதற்கும்தான்!
இன்று 13-12-2025 காலை, திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எளிய மக்களின் வாழ்வியலை மண்மணம் மாறாது, திரைமொழியில் பதியமிடும் ஆகச்சிறந்த படைப்பாளி!
மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதைக் கவர்ந்த பெருங்கலைஞன்!
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்ட தலைசிறந்த மானுடன்!
தமிழ்ப்படைப்புலகின் பெரும் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனதன்பு இளவல் சேரன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
@CheranDirector -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் சாதிய ஆணவப்படுகொலை வழக்கில் அலட்சியம் காட்டுவதுதான் சமூக நீதியா? சாதிய வாக்கரசியலுக்காக வழக்கைத் திட்டமிட்டுத் தாமதம் செய்வதா?
@CMOTamilnadu @mkstalin
தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கின் மேல்முறையீட்டில் திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கு பெரும் ஏமாற்றமளிக்கிறது. சமூக நீதி அரசென மூச்சுக்கு முந்நூறு தடவை தற்பெருமை கொள்ளும் திமுக அரசு, ஆணவப்படுகொலை வழக்கில் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய நீதியையே பெற்றுத் தராது இழுத்தடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
ஒருவருக்கொருவர் விரும்பி, மனமொத்து திருமணம் செய்து கொள்பவர்களை சாதியின் பெயரால் வெட்டி வீழ்த்தும் சாதிய ஆணவப்படுகொலைகள், நவீன அறிவியல் யுகமான தற்காலச் சூழலிலும் நடந்தேறி வருவது ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான தலைகுனிவாகும். சாதியின் பெயரால் சொந்த இனத்துக்குள் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களும், பச்சைப்படுகொலைகளும் சகித்துக் கொள்ளவே இயலா பெருங்கொடுமையாகும்.
நாடி, நரம்பு, இரத்தம், சதை, பசி, உறக்கம், கனவு என எல்லாம் கொண்ட சகமனிதனை சாதியின் பெயரால் ஒதுக்கித் தள்ளுவதை மனநோய் என்றுரைத்தார் அண்ணல் அம்பேத்கர். சாதியை சமூக நோய் எனச் சாடினார் பாட்டனார் அயோத்திதாசப்பண்டிதர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்ம சமத்துவம் போதித்தார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார். சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்! எனக் கேட்டார் சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர். பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ? என வினவினார் சித்தர் சிவவாக்கியர். சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்! அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே என்று அறிவுறுத்தினார் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார். சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! என அறச்சீற்றம் கொண்டார் பெரும்பாவலர் பாட்டன் பாரதி. சாதிவெறி சமயவெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோயே! இடைவந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! எனச் சமத்துவம் போற்றினார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்! ஆக மொத்தம் நீயும், நானும் பத்து மாசம்தான் எனப் பேதங்களைச் சாடினார் மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சமத்துவத்தையும், சமதர்மத்தையும், பொதுமைச்சிந்தனையையும் எல்லோருக்கும் முன்பே, உலகுக்குப் போதித்த மரபு தமிழர்களுடையது. அத்தகைய இனத்தின் மக்கள் இன்றைக்கு சாதியின் பெயரால் பிளந்து பிரிந்து நிற்பதும், தன்னினப்பகைக்கு ஆட்பட்டு வீழ்வதும் வரலாற்றுப் பெருந்துயரமாகும். சாதி, மத உணர்ச்சிகள் முழுவதுமாகப் பட்டுப் போய், தமிழர் எனும் இனஉணர்ச்சி என்றைக்கு மேலோங்குகிறதோ அன்றைக்குத்தான் தமிழ்த்தேசிய இனம் உயர்ந்து சிறக்கும்.
சாதியத்தை திராவிடக்கட்சிகள் ஒருநாளும் எதிர்க்காது; மாறாக, ஊட்டி வளர்க்கும்; தமிழர்களைப் பிளந்து, பிரிக்கும். தமிழின மக்கள் சாதி, மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறபோது சிந்துகிற இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாகத்தான் திராவிட ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்கவியலா பேருண்மையாகும். சாதிய ஆணவப் படுகொலைகளைக் கடும் சட்டங்களின் மூலமாகவும், உச்சபட்சத் தண்டனைகளை உறுதிசெய்வதன் மூலமாகவுமே முற்றாக ஒழிக்க முடியும்.
சாதிய ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடி வரும் தங்கை கௌசல்யா அவர்களின் ஆதங்கமும், வருத்தமும் மிக நியாயமானது. வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, ஐந்தாண்டுகளாகியும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருப்பதும், ஆளும் திமுக அரசு எவ்வித ஈடுபாட்டையும் வழக்கில் காட்டாததும் தற்செயலானதல்ல. சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றாது ஆணையம் அமைத்து காலங்கடத்தும் திமுக அரசு, தற்போது சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திட்டமிட்டு அலட்சியம் காட்டுகிறது. இதுதான் திமுக அரசு போற்றிக் கொண்டாடும் சமூக நீதியா? வழக்கை விரைந்து நடத்தித் தண்டனையைப் பெற்றுத் தர, திமுக அரசின் சார்பில் எவ்வித விரைவு மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதோடு, வழக்கின் ஆவணங்களை ஐந்தாண்டுகளாக மொழிபெயர்க்காதுவிட்டுவிட்டு, நீதிமன்றத்தில் இன்னும் ஆறுமாதம் மொழிபெயர்க்கக் காலம் கோருவது வெட்கக்கேடானது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களின் ஊழல் வழக்குகளுக்கும், திமுக ஆட்சியை விமர்சனம் செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்டவர்களின் வழக்கில் பிணைக்கு எதிராகவும் பல இலட்சங்களைக் கொட்டியிறைத்து, மிக மூத்த வழக்கறிஞர்களைக் களமிறக்கும் திமுக அரசு, சாதிய வாக்கரசியலுக்காக தம்பி சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் இயல்பான நடைமுறைகளையே பின்பற்ற மறுத்து, தாமதம் செய்வது நம்பிக்கைத்துரோகம் இல்லையா? திராவிட ஆட்சியாளர் பெருந்தகைகளே! இதுதான் உங்களது சாதி ஒழிப்பா? சமத்துவம் போற்றும் திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்!
ஆகவே, தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை விரைந்து நடத்தி, கொலையாளிகள் யாவரும் தண்டிக்கப்பட்டு, நீதிநிலைநாட்டப்பட திமுக அரசு துணைநிற்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவைக் கைவிட்டு, எதேச்சதிகாரப்போக்கோடு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தின் கீரிப்பாறை பிரிவில் சுமார் 18 ஹெக்டேர் ரப்பர் தோட்டத்தை வனத்துறையின் கீழ் மாற்றியிருப்பதோடு, அந்த நிலத்தில் உள்ள ரப்பர் தோட்ட பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரைவார்த்து அரசு தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை தமிழ்நாடு அரசு கேள்விக்குள்ளாக்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 1964 ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராசர் அவர்களது ஆட்சிக் காலத்தில், தொழிற்வாய்ப்புகள் குறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தோடு கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை உள்ளிட்ட 9 கோட்டங்களில் அரசு ரப்பர் தோட்டக் கழகம் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 5000 ஹெக்டர் பரப்பளவில், 5000 தோட்டத் தொழிலாளர்களுடன் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த அரசு ரப்பர் கழகம் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையினால் தற்போது முற்று முழுதாகச் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை ஊதியம் உள்ளிட்ட எவ்வித உரிமையும் வழங்காத காரணங்களினால் தற்போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் தினக்கூலிகளாகப் பணிபுரிந்து வரும் 900 தொழிலாளர்களை வேலையில்லை என்று கூறி வாரத்தில் பல நாட்கள் அதிகாரிகள் திருப்பி அனுப்பும் கொடுமைகளும் அரங்கேறுகின்றது. ரப்பர் தோட்டங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமானம் வரும் நிலையில், கூலி உயர்வு தரமறுத்து தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் செயல் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலேயாகும்.
இந்நிலையில், கீரிப்பாரை கோட்டத்தில் 18 ஹெக்டேர் ரப்பர் தோட்டத்தை வனத்துறைக்குக் கையளிக்கும் அரசின் முடிவை எதிர்த்தும், அம்முடிவிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 110 ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பணி நீக்க ஆணை பிறப்பித்திருக்கும் ரப்பர் கழகத்தின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்தும் தொடர்ச்சியாக, தொழிலாளர்களுடன் நாம் தமிழர் கட்சி போராட்டக் களத்தில் நிற்கின்றது. ரப்பர் கழக அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தொழிலாளர்களுடன் இணைந்து அரசு ரப்பர் கழக அலுவலகத்தின் முன் நாம் தமிழர் கட்சி போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது. ஆனால், ரப்பர் கழகத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் திமுக அரசு, போராடும் தொழிலாளர்களை மிரட்டி உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முனைவது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும். சமத்துவம், சமூகநீதி என்று பேசும் திமுக அரசு உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை காக்கும் முறை இதுதானா? இதற்குப் பெயர்தான் யாரும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் அரசா?
ஆகவே, தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினை வனத்துறைக்குக் கையளிக்கும் முடிவைக் கைவிடுவதோடு, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். ரப்பர் கழகத் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாட்டிலுள்ள விவசாயிகளை அகதிகளாக்கி, வேளாண்மையைத் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் ‘விதை’ சட்ட வரைவு - 2025ஐ இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
வேளாண் பெருங்குடி மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ‘விதை’ சட்ட வரைவு - 2025 என்ற புதிய சட்ட வரைவினை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வேளாண்மையைப் பெருநிறுவன (கார்ப்பரேட்) தொழிலாக்கி, உணவளித்து உயிர் காக்கும் விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றும் சதித்திட்டமே இக்கொடும் சட்ட வரைவாகும்.
இந்திய விதைச் சட்டம் 1966 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றை மாற்றி, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு விற்கப்படும் அனைத்து விதைகளின் தரம், உற்பத்தி, விற்பனை மற்றும் வாங்குதலை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் ‘விதை’ சட்ட வரைவு - 2025 என்ற புதிய வரைவினை பாஜக அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகின்றது.
இப்புதிய வரைவின் படி, இனி நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட விதைகளை மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய முடியும். அவ்வாறு விற்கப்படும் விதைகளின் முளைப்பு விகிதம் உள்ளிட்ட பிற விவரங்களை ஆய்ந்தறிந்து ஒட்டுத்தாள்களில் வெளியிட வேண்டும் என்ற வரைவு விதியின் மூலம் பெருநிறுவனங்கள் மட்டுமே இனி விதைகளைச் சந்தைகளில் விற்க முடியும் என்ற நிலையை உருவாக்க முனைகிறது இந்திய ஒன்றிய அரசு. இதன் மூலம் காலம்காலமாகத் தங்களுக்கு வேண்டிய விதைகளைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வேளாண் பெருங்குடி மக்களின் தற்சார்பு வாழ்வியல் உரிமையை அழித்தொழித்து, அவர்களை விதைகளுக்காகக் கையேந்தி நிற்க வைக்கும் நிலையை உருவாக்குவது பேரவலமாகும்.
மேலும், விதைகளின் விற்பனை விலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை இச்சட்ட வரைவு இந்திய ஒன்றிய அரசிற்கு மட்டுமே வழங்குவதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். மேலும், அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய விதைகளை அரும்பாடுபட்டு மீட்டெடுத்து சேகரிக்கும் மறைந்த ஐயா நெல் ஜெயராமன் போன்ற வேளாண் தன்னார்வலர்களின் முயற்சியை இல்லாதொழிக்கவும் இச்சட்ட வரைவு வழிவகுப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
இப்புதிய சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், இனி இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு வேளாண் பெருங்குடி மகனும், எந்தவொரு விதையை வாங்க வேண்டும் என்றாலும் ஒன்றிய அரசு அங்கீகரித்த அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்களிடம் மட்டுமே வாங்கி விதைக்க முடியும். அதுமட்டுமின்றி மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் ஒரு முறை மட்டுமே முளைக்கும் திறன் பெற்ற விதைகள் என்று, இனி விதை விற்பனை நிறுவனங்கள் முடிவு செய்யும் விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகும். மேலும், விதைக்கேற்ற வகையில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் ஆகியவற்றையும் விதை விற்பனை நிறுவனங்களே தீர்மானிக்கும். விதைகள் முதல் விளைபொருள் வரை, விதைப்பது முதல் விற்பனை வரை இந்நாட்டின் விவசாயிகள் இனி எதை விதைக்க வேண்டும், எதை விளைவிக்க வேண்டும் என்பதைத் தனியார் பெருநிறுவனங்களே முடிவு செய்யும்.
தனியார் நிறுவனங்கள் தருவதுதான் விதை, அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை என்ற நிலையை உருவாக்குவது, பெரும் பஞ்சம் ஏற்பட வழிவகுத்து நாட்டினை பேரழிவினை நோக்கியே இட்டுச்செல்லும். எப்படி ஒன்றிய அரசு விண்ணூர்திகளைத் தனியாருக்கு தாரைவார்த்து, நாட்டு மக்களை விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாகத் தவிக்கவிட்டதோ அதைப்போல, விதை உரிமையை மொத்தமாகத் தனியாருக்குத் தாரை வார்த்து, நாட்டு மக்கள் நாளை நீண்ட வரிசையில் உணவுக்குக் கையேந்த வைக்கும் கொடுமையும் நம் கண் முன்னே அரங்கேறுவதற்கான தொடக்கமே இப்புதியச் சட்ட வரைவாகும்.
இனி, இந்திய ஒன்றிய அரசுதான் விதைகளுக்கான விற்பனை விலையை நிர்ணயிக்கும் என்று இப்புதிய சட்ட வரைவு இன்றைக்குக் கூறினாலும், எரிபொருள் விலை நிர்ணயம்போல எதிர்காலத்தில் விதைகளின் விலை நிர்ணயமும் தனியார் பெருநிறுவனங்களிடம் அரசு ஒப்படைக்காது என்பது என்ன நிச்சயம்? அப்படி ஒரு நிலை உருவானால், அது சிறு, குறு விவசாயிகளை வேளாண்மையை விட்டே முற்று முழுதாக வெளியேற்றவே வழிவகுக்கும்.
ஆகவே, விளைநிலங்களைப் பறித்து, விவசாயிகளை அகதிகளாக்கி, வேளாண்மையைத் தனியார் பெருநிறுவனத் தொழிலாக்கும் ‘விதை’ சட்ட வரைவு - 2025ஐ இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக்கூடாது என்றும், உடனடியாக இப்புதிய சட்ட வரைவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான நடையுடை, பாவனைகளாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று தலைமுறையினரை காந்தமாய் ஈர்ப்பதால் தான் என்னவோ அவரது பெயரிலேயே காந்தம் வந்ததமைந்ததோ என்று எண்ணும் அளவிற்குப் பெயருக்குப் பொருத்தமாய் வாழும் மேதை..!
இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு வல்லமை படைத்த திரை ஆளுமை..!
தமிழ்த்திரையுலகில் எல்லோராலும் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக அரை நூற்றாண்டாகத் திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களின் 75 வது பிறந்தநாளில் அன்புநிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
இன்றைய நாளில் நம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து மாபெரும் வெற்றிப்படைப்பாக சாதனை படைத்த 'படையப்பா' திரைப்படம் மறுதிரையிடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியையும், திரையில் மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. அதோடு, படையப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'நீலாம்பரி' என்ற பெயரில் உருவாவது குறித்த ஐயா ரஜினிகாந்த் அவர்களின் முன்னறிவிப்பும் பேராவலைத் தூண்டுகிறது. அத்திரைப்படமும் விரைவில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
தமிழ் மக்களின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெற்ற மாபெரும் திரை ஆளுமை பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
@rajinikanth -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தொகுதி செயலாளர் அன்புத்தம்பி க. சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா கருப்பையா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா கருப்பையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அன்புமகள் கீர்த்தனா அவர்கள், மாலத்தீவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான உலக வாகையர் சுண்டாட்டம் (கேரம்) போட்டியில் மகளிர் பிரிவில் பங்கேற்று ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப்போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றதுடன், உலக சுண்டாட்ட வாகையர் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ள செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பிள்ளைகள் தங்களின் தனித்திறனை வளர்த்து கபடி, சதுரங்கம், சுண்டாட்டம் என அடுத்தடுத்து உலகளாவிய போட்டிகளில் பதக்கங்கள் பல வென்று சாதனை படைப்பதன் மூலம் தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்ப்பது மிகுந்த பெருமிதம் அளிக்கின்றது.
ஏழ்மையான சூழலிலும் மனம் தளராது, சோர்வுற்று பின்னடையாது, தம்முடைய அயராத முயற்சியாலும், கடுமையான பயிற்சியாலும் தடைகள் யாவையும் தாண்டி சாதனை படைத்துள்ள அன்புமகள் கீர்த்தனா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
விளைநிலங்களை அழித்தொழிக்கும் ஓ.என்.ஜி.சி.(ONGC) நிறுவனத்திற்கு எதிராகப் போராடியதற்காக ஐயா பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது கொடுங்கோன்மை!
திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் கிராமத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் கழகத்திற்கு (Oil and Natural Gas Corporation) நிறுவனத்திற்கு எதிராகப் போராடியதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. விளைநிலங்களைக் காக்க விவசாயிகளை ஓரணியில் திரட்டி தொடர்ந்து போராடும் ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களின் மீது உள்நோக்கத்துடன் பொய் வழக்கு தொடுத்துச் சிறை தண்டனை பெற்றுத்தந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆளும் அரசுகள் இழைக்கும் அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போராடுவது அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். போராடுவதற்கு அனுமதி மறுப்பதும், வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும் இந்த நாட்டின் அரசமைப்புக்கு எதிரானதாகும். தங்கள் வாழ்வாதாரமான வேளாண் விளைநிலங்களைக் காக்க விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது இது மக்களாட்சி நாடுதானா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரிப்படுகையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மீத்தேன், ஈத்தேன், எரிகாற்று எடுத்து விளைநிலங்களைச் சீரழிக்கத் தடைவிதித்த நிலையில், அதற்கு முன்பே, கடந்த 2015ஆம் ஆண்டே காவிரிப்படுகையைப் பாதுகாக்க ஐயா பி.ஆர்.பாண்டியன் முன்னெடுத்த போராட்டம் எப்படித் தவறானதாகும்? அரசு செய்தால் அது சட்டம்? அதையே சாமானிய குடிமகன் செய்தால் குற்றமா? கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாதது போல் திமுக அரசு அமைந்த பிறகும், அரசின் நிலைப்பாடு மாறவில்லை என்பதாலேயே இத்தனை கடுமையான தண்டனையைக் கீழமை நீதிமன்றம் விதித்துள்ளது. விளைநிலங்களைக் காக்கப் போராடிய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த திமுக அரசிடம் எப்படி கருணையை எதிர்ப்பாக்க முடியும்?
ஓ.என்.ஜி.சி குழாய்களைச் சேதப்படுத்தியதாகச் சொல்லப்படும் குற்றத்திற்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை என்றால், எங்கள் முன்னோர்கள் அரும்பாடுபட்டுக் காட்டைக் கழனியாக்கி செதுக்கி சீர்படுத்தி, தலைமுறை தலைமுறையாகத் தாய்போல உணவளித்த உயிரினும் மேலான எங்கள் விளை நிலங்களை மீளவும் உருவாக்க முடியாத அளவிற்கு மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று அழித்தொழிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அரசப் பெருநிறுவனத்தின் உடைமை என்றால் ஒரு நீதி, அப்பாவி ஏழை விவசாயிகளின் உடைமை என்றால் வேறு நீதி என்றால் அதற்குப் பெயர் நீதியல்ல மாபெரும் அநீதி!
விளைநிலங்களைக் காக்கப் போராடியது கொடுங்குற்றம் என்றால் அதற்கான தண்டனையை உடனடியாகத் தர வேண்டியதுதானே? இத்தனை ஆண்டுகாலத் தாமதம் ஏன்? பத்தாண்டு காலம் இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதிக்கு ஒப்பானது இல்லையா? இத்தனை ஆண்டுகாலம் ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, வழக்கு தொடர்பான அலைச்சல், அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்பட்ட மன உளைச்சல் அதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்குவது எப்படிச் சரியான நீதியாக இருக்க முடியும்? அதிலும் தங்கள் சொந்த நிலங்களைக் காக்கப் போராடியது குற்றமே அல்ல எனும்போது அதற்கு இரட்டைத் தண்டனை என்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு விளைநிலங்களைக் காக்கப் போராடியதற்காகச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐயா பி.ஆர்.பாண்டியனை வழக்கிலிருந்து விடுவிக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களின் வருகையையொட்டி உறுதிசெய்யப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலைய முழுப் பயன்பாட்டு முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
@narendramodi @AmitShah @DrSJaishankar @DAEIndia @byadavbjp @mkstalin @supriyasahuias @TThenarasu
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அண்மையில் இந்தியாவுக்கு வந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு, குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையத் (KKNPP) திட்டத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. இதுகுறித்துப் பேசியுள்ள இரஷ்ய அதிபர் புடின் அவர்கள் "இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தை கட்டமைக்கும் திட்டம்" குறித்தும், "ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. இந்த அணுமின் நிலையத்தை முழு மின் உற்பத்திக்கு கொண்டு வருவது இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்." என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் விளைவாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது உலைக்கான முதல் தொகுதியாகிய அணு எரிபொருளை இரஷ்யாவின் ரோஸாடோம் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, அணு உலை 3ஐ விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியப் படியாகும். அத்துடன், அணு உலை 3 மற்றும் 4க்குத் தேவையான எரிபொருளை அவற்றின் முழு சேவை ஆயுட்காலத்திற்கும் வழங்க இரஷ்யா நீண்டகால ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டு நலனை பாதிக்கும் திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்குக்கூட முற்படாமல் இரஷ்ய அதிபர் முன்மொழிவதும், அதை இந்திய ஒன்றிய அரசு முனைந்து முன்னெடுப்பதும் அடிப்படை இயற்கை நீதிக்கே முரணானது.
செயல்பாட்டில் உள்ள உலைகளின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் வகையில், ரோஸாடோம் வழங்கியுள்ள மேம்பட்ட எரிபொருள் மூலம், அணு உலைகளின் செயல்பாட்டுச் சுழற்சி 12 மாதங்களிலிருந்து 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செர்னோபில் போன்ற ஒரு பெரிய விபத்துக்கான பேராபத்தும் அன்றாட செயல்பாடுகளால் ஏற்படும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளும் உள்ளடக்கிய திட்டத்தினைத் தமிழர் நிலத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கும் ஒன்றிய அரசின் கொள்கை முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
அணு உலைகளைக் குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கடல் நீர், உலைகளுக்கு வெளியேற்றப்படும்போது அதன் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த சூடான நீர், நேரடியாகக் கடலில் கலப்பதால், அந்தப் பகுதியின் கடல் நீரின் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கிறது. இதனால் கடலில் உள்ள வெப்பநிலை மாறுபாடு, அந்தச் சூழலில் வாழும் மீன்கள், சிப்பிகள், பவளப்பாறைகள், மற்றும் பிற நுண்ணுயிர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும். மேலும், கதிர்வீச்சு கொண்ட, பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருள், புளூட்டோனியம் போன்ற அணுக்கழிவுகளை தற்காலிகமாக உலைகளுக்குள்ளேயே சேமித்து வைக்கின்றனர். ஆனால், இதற்கான நிரந்தர சேமிப்புத் தளம் அமைப்பது குறித்துத் தெளிவான, சூழலுக்கு பாதிப்பற்றத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நிலவியல் மற்றும் நீர்வள பாதிப்புகளைக் கொண்டுள்ள அணுமின் நிலையத்தின் தற்போதைய அலகுகளையே மூடிட வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அணுஉலையை விரிவாக்கம் செய்திட திட்டம் மேற்கொள்வது எளிய மக்களின் வாழ்வை பெரும் ஆபத்து நோக்கி தள்ளும் செயலாகும்.
அணு ஆற்றலில் முன்னோடியாகத் திகழ்ந்த பல நாடுகள், காலப்போக்கில் தங்கள் அணுமின் நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. செர்னோபில் (1986) மற்றும் ஃபுகுஷிமா (2011) போன்ற அணு உலை விபத்துகளால் எழுந்த பொதுமக்கள் பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் அணுக்கழிவு மேலாண்மை குறித்த காரணங்களால் அணு ஆற்றல் முறையை பல நாடுகள் கைவிட்டு வருகின்றன. குறிப்பாக ஜெர்மனி, 2011 ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகு, படிப்படியாக அணுசக்தியை முழுமையாகக் கைவிடும் முடிவை எடுத்து, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகளுக்கு மாறுவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பல பழைய அணுமின் நிலையங்களை அவற்றின் செயல்பாட்டு ஆயுட்காலம் முடிந்ததால் மூடிவிட்டன. இந்த நாடுகள், சுற்றுச்சூழல் காரணங்களைக் கருத்தில் கொண்டு, அணு ஆற்றல் துறையில் முதலீட்டினைக் குறைத்து, அதிக பாதுகாப்புத் தரங்கள் மற்றும் அதிக செலவு காரணமாகப் பழைய நிலையங்களை மூடி, புதிய உலைகளைத் தொடங்குவதைக் குறைத்து வருகின்றன.
பேராபத்தினை சந்திக்கும் முன்னர், பிற நாடுகள் சந்தித்த வரலாற்று நிகழ்வுகளின் வழியே இந்திய ஒன்றியம் சிந்தித்து, அணு ஆற்றல் தொடர்பான அனைத்து முன்னெடுப்புகளையும் கைவிட வேண்டும். தொடர்ச்சியாக அழிவுத் திட்டங்களைத் தமிழ்நாட்டில் பரிசோதித்து பார்க்கும் சூழ்ச்சிகர முடிவினை பாஜக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்க மேம்பாட்டு முன்னெடுப்புகளை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், திமுக அரசு ஒன்றிய அரசின் எவ்வித முன்னெடுப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிடக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அறிவொன்றே தெய்வமென்றும்
அன்பொன்றே ஆகச்சிறந்த வழிபாடென்றும் முண்டாசு கட்டி
முரசு கொட்டிய ஞானதந்தை..!
மூன்று மத கடவுளர்க்கும் வாழ்த்து பாடிய தமிழின் முதற் பாவலன்..!
'ஆகா! என்றெழுந்தது பார் யுகப்புரட்சி!' என்றும், 'முப்பது கோடி சனங்களின் முழுவதும் பொதுவுடமை' என்றும் பாடி புரட்சி, பொதுவுடமை போன்ற அருந்தமிழ் சொற்களை ஆக்கி தந்து தமிழுடமை ஆக்கிய பெருங்கவிஞன்..!
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
என்று பலநூற்றாண்டுகளாக பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்கு புது இரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு வித்திட்ட பெருங்கவிஞன்..!
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
என்று
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்து பாடச்செய்த பாவலன்..!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந்
தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
என்று
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோமென
தரணி எங்கும் தமிழ் புகழ் பாடிய பெருமகன்..!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்ததமிழ்நாடு !
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு !
என்று
செந்தமிழ் நாட்டினைப் பைந்தமிழ் பாட்டினில்
வைத்துப் போற்றிய பெரும்பாட்டன்..!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே !
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே !
மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே!
என்று
தெள்ளு தமிழில் தேச விடுதலைக்கு
பள்ளு பாடிய தென்தமிழ் நாட்டான்..!
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி கிளியே!
மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே
பேணி இருந்தாரடீ!
சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே!
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடீ!
என்று கஞ்சிக்கில்லாது அதன் காரணம் அறியாது துஞ்சி மடிவோரைக் கண்டு நெஞ்சு பொறுக்காது வெஞ்சினம் கொண்டு வெகுண்ட தமிழ்க்கவி..!
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
என்று
மண் விடுதலை பாடிய வாயால்
பெண் விடுதலையும் பாடிய பெருந்தகை..!
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்.
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்..!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
என்று தேமதுர தமிழோசை உலகெலாம் பரவிட இறவாத புதுக்கவிதை நூல்கள் இயற்றி தெருவெலாம் தமிழ் முழக்கம் செய்த
பைந்தமிழ்ப் புலவன்..!
பெரும்பாவலன்
நம்முடைய பாட்டன் பாரதியாரின் பெரும்புகழ் போற்றுவோம்..!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்றுள்ள மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ அவர்களை இன்று 10-12-2025 காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.சிவா அவர்களின் தாயார் அம்மா சு.செல்வி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா சு.செல்வி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி இரா.சுரேஷ் அவர்களின் தந்தை ஐயா ராஜேந்திரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ராஜேந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி சார்பாக,
07-12-2025 அன்று மாலை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பேரெழுச்சியாக நடைபெற்ற
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும், தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடலில் விழுந்து காணாமல் போயுள்ள மீனவர் ஆரோக்கிய கிங்சனை விரைந்து கண்டறியவும், அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகள் புரியவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் வசிக்கும் மீனவர் அன்புத்தம்பி ஆரோக்கிய கிங்சன் கடந்த 06.12.2025 அன்று காலை இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் (IND TN 10 M02104) மீன்பிடிக்கச் சென்றபோது மாலை 3 மணியளவில் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள துயரச்செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். நான்கு நாட்களாகியும் காணாமல்போன தம்பி ஆரோக்கிய கிங்சன் நிலை என்னவானது என இதுவரை அறிய முடியாமல் தவித்து நிற்கும் அவருடைய குடும்பத்தின் நிலை பெருந்துயரைத் தருகின்றது. அவருடைய குடும்பத்திற்கு நம்பிக்கையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். தம்பி ஆரோக்கிய கிங்சன் காணாமல்போய் 4 நாட்களாகியும் அவரை மீட்க எவ்வித தீவிர நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
அன்றாடம் மீன்பிடி தொழிலுக்குச் சென்று தனது குடும்பத்தைப் பராமரித்து வந்த தம்பி ஆரோக்கிய கிங்சன் மட்டும்தான், வயதான ஏழை பெற்றோர் மற்றும் உடல் நலிவுற்ற தங்கை மெர்சிலின் ஆகிய மூவருக்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அந்த ஒரே மகனும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து வாழ வழியின்றி தவிக்கும் குடும்பத்தினர் அரசின் உதவிக்காக ஏங்கி நிற்கிறார்கள்.
வறுமை மற்றும் அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உதவிக்கோரக்கூடத் தெரியாத அறியாமை நிலையில் இருக்கும் தம்பி ஆரோக்கிய கிங்சன் குடும்பத்தினரை வேறு எந்த அரசியல் கட்சியும் சந்திக்காத நிலையில், நாம் தமிழர் கட்சி உறவுகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உதவிகள் புரிந்து உற்ற துணையாக இருந்து வருகின்றனர்.
ஆகவே, தமிழ்நாடு அரசு கடலில் விழுந்து காணாமல்போன மீனவர் ஆரோக்கிய கிங்சனை விரைந்து கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மகன் நிலை என்னவென்று அறியாது பெருந்துயரில் தவிக்கும் அவருடைய குடும்பத்திற்கு மாத உதவித்தொகை உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் புரிய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி பொன்மனை பேரூராட்சி தொழிற்சங்கப் பேரவை செயலாளர் அன்புத்தம்பி மகேஷ் அவர்களின் தந்தை
ஐயா மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி மகேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா மணி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - அரியலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்துறையார் கட்டளை ஊராட்சியைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி க.கவியரசன் அவர்களின் தாயார் அம்மா செந்தமிழ்ச்செல்வி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா செந்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பாரம்பரிய நெல் வகைகளைச் சேமித்துக் காத்திட்ட பெருமகன்!
பெருந்தகப்பன் நம்மாழ்வாரின் வழியில் நின்ற இயற்கை விவசாயி!
'நெல்' ஜெயராமன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடு!
சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது!
நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை; கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல!
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிப் பந்தலுக்கு ஒப்பானது! என்பது போன்ற புரட்சிகர சிந்தனைகளை எங்களைப் போன்ற பிள்ளைகள் நெஞ்சில் விதைத்த அரசியல் பேராசான்..!
அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை..!
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்..!
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - காட்டுமன்னார்கோவில்
குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ப.சரவணன் அவர்களின்
அன்புமகன் ரிஷ்வந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பெற்ற மகனை இழந்து வாடும் தம்பி சரவணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
அன்புமகன் ரிஷ்வந்த் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
துணைப் பொதுச்செயலாளர் தம்பி வன்னியரசு அவர்களின் தாயார் அம்மா புஷ்பா ரத்தினசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி வன்னியரசு அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா புஷ்பா ரத்தினசாமி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!
மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும். சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.
முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. ‘உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு’ எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, ‘சிக்கந்தர் மலை’ எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்!
சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. ‘இந்துக்களின் விரோதி’ என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில், காலங்காலமாக தீபமேற்றும் இடத்தைவிடுத்து, தர்காவுக்கு அருகில் புதிய இடத்தில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற ஒன்றாகும். பொதுமக்கள் தங்களது மனஅமைதிக்காகவும், மெய்யியல் நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே பதற்றத்துக்குரிய இடமாக மாற்றுவது இழிவான அரசியலாகும்.
‘நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றம் எனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டால், அரசியலமைப்புச்சட்டம் தோல்வி அடைந்ததாகப் பொருள் என்கிறார்’ அண்ணல் அம்பேத்கர். அத்தகைய நிலையில், தற்காலச்சூழல் மாறியிருப்பது கெடுவாய்ப்பானதாகும். மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்துச் சமத்துவத்தை நிலைநாட்ட மண்ணின் மக்கள் தமிழர் எனும் இன உணர்வோடு திரள்வதே ஓர்மைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகும்.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதுரையில் மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை சாதி, மதம் கடந்து மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன அடையாளத்தோடு ஒற்றுமை உணர்வுடன் ஓரணியில் நின்று முறியடிப்போம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும்,
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும்,
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: உளுந்தூர்பேட்டை (பெருந்தலைவர் தாத்தா காமராசர் சிலை அருகில்) கள்ளக்குறிச்சி மாவட்டம்
நாள்: கார்த்திகை-21 | 07-12-2025
ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் தமிழ்நாடு அரசு 60க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க அனுமதியளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் ஏற்கனவே அமைந்துள்ள சாயப்பட்டறைகளால் கொங்கு மண்டலத்தில் நிலம், நீர்நிலைகள், ஆறுகள், நிலத்தடி நீர் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சாயப்பட்டறைகளை அமைக்க திமுக அரசு முயல்வது கொங்கு மண்டலத்தை மக்கள் வாழவே முடியாத நரகமாக மாற்றிவிடும்.
ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தினால் வெள்ளக்கல்பட்டி, செட்டிச்சாவடி, கருப்பூர், கொல்லப்பட்டி, மூங்கில்பாடி, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, செங்கரடு, வட்டக்காடு, சங்கீதப்பட்டி, மாமாங்கம், நரசோதிப்பட்டி, ரெட்டிபட்டி, மல்லமூப்பம்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, அய்யம்பெருமான்பட்டி, தளவாய்பட்டி, சேலத்தம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, நெரிஞ்சிப்பட்டி, மோட்டூர், அரியக்கவுண்டம்பட்டி, சோழம்பள்ளம், சூரமங்கலம், அம்மாபாளையம், ரெட்டியூர், அழகாபுரம், திருவாகவுண்டனூர், சிவதாபுரம், பாகல்பட்டி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் மாநகராட்சியின் பெரும்பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாக நாசமடைந்து, வேளாண்மை முற்றாகப் பாதிக்கப்படுவதோடு, மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பல்வேறு கொடுநோய்கள் ஏற்படும் பேராபத்தும் உள்ளது.
சாயப்பட்டறை அமைக்கும் பகுதிகளில் முறையான கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படாமல், இத்திட்டத்தை முன்னெடுக்க திமுக அரசு அனுமதித்தது எப்படி? மேட்டூரிலிருந்து குடிநீர் வரத்துக் குறையும் காலங்களில் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியிலிருந்தே மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சேலத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் இப்பகுதியை சாயக்கழிவு நீரால் நாசப்படுத்த அரசு நினைப்பது ஏன்? இந்த நாசகரத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 கி.மீ சுற்றளவில் நிலம், நீர், காற்று மாசடைந்து, நீராதாரம் அழிந்து, குடிநீர் பற்றாக்குறையால் சேலம் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை திமுக அரசு உணரத்தவறியது ஏன்? இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏறத்தாழ 4000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவது குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லாதது ஏன்?
அருகில் பல பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ள நிலையில், சாயப்பட்டறைகளால் ஏற்படும் மாசுபாடு காரணமாக, பள்ளி குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் கொடும் நோய்களுக்கு ஆட்படும் வாய்ப்புள்ளதை திமுக அரசால் மறுக்க முடியுமா? மாநகராட்சி எல்லைக்குள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாசு விளைவிக்கும் திட்டங்கள் கொண்டுவரக்கூடாது என்ற விதியை திமுக அரசு கடைப்பிடிக்கத் தவறியது ஏன்?
மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடமானது அரியவகை மெக்னசைட்டுக் கனிமம் நிறைந்த பகுதியாகும். பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள கனிமங்கள் இப்பகுதியின் பூமிக்கடியில் உள்ள நிலையில், சாய்ல் (SAIL) நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இந்த இடத்தில் கனிமங்கள் ஏதும் இல்லை என மாவட்ட வருவாய் அலுவலர் பொய்யான அறிக்கை வழங்கி அரசிற்கு பல லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட வழிவகுத்துள்ளது யாருடைய லாபத்திற்காக?
தமிழ்நாட்டில் ஏற்கனவே சாயப்பட்டறைகள் இயங்கும் பல பகுதிகளில், சாயக் கழிவுகளுக்கான முறையான சுத்திகரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மாறாக, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சாயக் கழிவுகள் நேரடியாகப் பூமிக்குள் விடப்படுகின்றன. அண்மையில் பள்ளிபாளையம் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளில் சாயக்கழிவுகள் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் உடல்நிலை மட்டுமல்லாது அவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதற்கு பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் மிகப்பெரும் சான்றாகும். அங்கு 15 கிமீ சுற்றளவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று மாசடைந்து, புற்றுநோய், தோல் நோய், மூச்சுத்திணறல் போன்ற கொடுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஒரே ஒரு சாயப்பட்டறை இருந்தபோதே, கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி, அத்தொழிற்சாலையை அகற்றினர். தற்போது அதே இடத்தில் 60க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க திமுக அரசு ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். சாயப்பட்டறை தொழிற்சாலையானது இந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தியபடி சுற்றுச்சூழலுக்குத் தீவிர ஆபத்தை விளைவிக்கும் சிவப்புப் பிரிவில் வகைப்படுத்தப்பட்ட தொழிலாகும். உலகளவில் 20% தொழில்துறை நீர் மாசுபாட்டிற்கு, சாயத்தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர்தான் முதன்மைக்காரணமாகும்.
ஆகவே, மக்கள் நலனைப் புறக்கணித்து, வருங்காலத் தலைமுறையின் நல்வாழ்வைக் கெடுக்கும் வகையில் சேலம் மாநகராட்சியின் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஜாகிர் அம்மாபாளையத்தில் குடியிருப்பு பகுதியின் நடுவே, சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கும் சாயப்பட்டறைகள் சிப்காட் அமைக்கும் நாசகார திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், சேலத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தொழிற்சங்கப் பாசறையின் இணைச் செயலாளர் என்னுடைய ஆருயிர் இளவல் நெய்வேலி ரமேஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட தொடக்கக் காலந்தொட்டு கட்சியைத் தனது பகுதியில் வளர்த்தெடுக்க அரும்பாடாற்றி உழைத்தவர் தம்பி ரமேஷ். அவர் அயலகத்தில் பணிபுரிந்தபோதிலும் அங்கிருந்து கொண்டே தாயகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கான பணிகளை திட்டமிட்டு செயலாற்றிய தீவிர செயற்பாட்டாளர் ஆவார். இனமானம் காக்கும் போரினில் தானே பொருளாதாரத்தைச் செலவிட்டு, களத்திலும் முன்நின்று கட்சியின் நலனுக்காக பெரிதும் உழைத்த களத் தளபதியான தம்பி நெய்வேலி ரமேஷின் இழப்பு என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. கட்சியின் நலனுக்காக அயராது உழைத்த தம்பி ரமேஷின் மறைவு நாம் தமிழர் கட்சிக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
தம்பி நெய்வேலி ரமேஷ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மதுரை மாவட்டம் கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மூட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கல்லணை, அட்சங்குளம், டி.புதூர் மற்றும் நெடுங்குளம் பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக 300 அடிக்கும் மேல் ஆழமாகத் தோண்டப்பட்ட 15 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 3 கல்குவாரிகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். ஏற்கனவே உள்ள கல்குவாரிகளையே மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நெடுங்காலமாகப் போராடி வரும் நிலையில், அதனைச் சிறிதும் மதியாது புதிதாக 3 கல்குவாரிகளை அமைக்க திமுக அரசு அனுமதித்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
திருமங்கலம் பகுதியில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் முற்றாகக் குறைந்து 800 ஏக்கர் பாசன விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது கிராம காவல் தெய்வமான மலை மேல் உள்ள ஐயனார் கோவில் அழியும் நிலையில் உள்ளதாகவும், குவாரி உரிமையாளர்கள் இந்தப் பகுதி விவசாய நிலங்களுக்கு வரும் தண்ணீரைத் திறக்க விடாமல் சதி செய்து வருவதாகவும் கல்லணை கிராமப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அனுமதியின்றி அதிகளவில் பள்ளம் தோண்டுவதோடு, வெடிகளை வைத்து தகர்த்துக் கற்களை வெட்டி எடுப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு, குவாரி தூசிகளால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களையும் அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தும், அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, கல்குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக மக்களின் அறப்போராட்டத்தை திமுக அரசு அடக்க முனைவது இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது.
இரு திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களான மலைகள், ஆறுகள், ஏரிகள், காடுகள், விளைநிலங்கள் ஆகியவை தொடர்ந்து கொள்ளை போகக் கூடிய சூழல் உருவாக்கப்படுவதும் அதனை எதிர்த்துப் போராடுவதுமே தொடர்கதையாகி விட்டது. வளத்தைச் சுரண்டுவது எப்படி வளர்ச்சியாகும்? அதிலும் மனிதர்களால் உருவாக்கவே முடியாத இயற்கை அன்னையின் கொடைகளான மலைகள், ஆறுகள் போன்றவற்றை முற்றாக அழிக்கும் செயலில் ஈடுபடுவதும், ஈடுபடுவோரை அனுமதித்து அரசே வேடிக்கை பார்ப்பதென்பதும் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந்துரோகமாகும்.
திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் கல்குவாரிகளுக்காகவும், மலை மணலுக்காகவும், கிரானைட் உள்ளிட்ட கனிம வளத்திற்காகவும் ஏராளமான மலைகள் மற்றும் குன்றுகள் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டன. அறியாமையால் மக்கள் அதனைத் தடுத்து நிறுத்த தவறியதால் இன்றளவும் அதற்காக வருந்திக்கொண்டிருக்கின்றோம். ஆனால், நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் வந்த பிறகு சுற்றுச்சூழல் குறித்து ஏற்படுத்திய தொடர் பரப்புரையின் விளைவாக விழிப்படைந்துள்ள மக்கள் தற்போது தாங்களே போராடத் தொடங்கியுள்ளனர். ஆனால், அதனையும் திமுக அரசு அதிகார கொடுங்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க முனைவது கொடுங்கோன்மையாகும்.
கடந்த காலங்களில் வெட்டப்பட்ட மலைகள், அழிக்கப்பட்ட ஆறுகள், காவு கொடுக்கப்பட்ட காடுகள், மூடப்பட்ட நீர்நிலைகள் ஆகியவற்றால் காலநிலை மாற்றம், புவி அதிக வெப்பமாதல் ஆகிய பாதிப்புகளை இன்று நாம் சந்தித்து வருகின்றோம். சாதி, மதத்தைக் காப்பாற்றுவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் இங்கு பல கட்சிகள், இயக்கங்கள் உண்டு; ஆனால் இயற்கை அன்னையை, பூமித்தாயைக் காப்பாற்ற எவரும் முன்வருவதில்லை. அதற்காக எவரும் குரல் கொடுப்பதுமில்லை. இயற்கை வளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டு அடுத்த தலைமுறையின் நல்வாழ்விற்கு நாம் எதனை விட்டுச்செல்லப் போகிறோம்? என்ற கேள்விக்கு இங்கு எவரிடத்தில் பதில் இருக்கின்றது.
ஆகவே, மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மதுரை மாவட்டம் கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மூட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முதுபெரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பெரியவர் ஐயா மெய்யப்பச் செட்டியார் மறைவிற்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை கட்டி காத்து பல்லாயிரம் திரைக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த பெருந்தகை.
தமிழ்த் திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பத்தின் புதுமைகள் பல புகுத்தி, புகழின் உச்சம் தொட்ட பல நூற்றுக்கணக்கான திறமைமிகுந்த திரைக்கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்!
காலத்தால் அழியாத காவிய படைப்புகள் பல தந்து தமிழ்த்திரைக்கலையை தரம் குன்றாது தற்காத்த பெருந்தமிழர்!
ஐயா ஏவிஎம் சரவணன் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழ்த்திரையுலகின் உண்மையான கதாநாயகன் கலைமாமணி ஐயா ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
#ripavmsaravanan -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி - நம்புதாளை மீனவ மக்களின் நெடுநாள் கோரிக்கையான படகுகளைக் கட்டி நிறுத்துவதற்கான தளத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு அமைத்துத் தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 17 வயதேயான அன்புமகன் தொண்டீஸ்வரன் கடந்த 24.11.2025 அன்று புயலின் தாக்கத்திலிருந்து படகைக் காப்பதற்காக கடலில் இறங்கிச் சென்றபோது காற்று வேகமாக வீசியதாலும், அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். உயிரிழந்த தொண்டீஸ்வரன் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
நம்புதாளை கிராம மக்கள் பல ஆண்டுகாலமாக கோரி, போராடி வரும் ஆற்றுவாய் கால்வாயை, தூர்வாரி சுத்தப்படுத்திப் படகுகள் கட்டுவதற்கான தளம் அமைக்காததே அன்புமகன் தொண்டீஸ்வரன் மரணிக்க முதன்மைக் காரணமாகும். திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
நம்புதாளை படகுகள் கட்டப்படும் ஆற்றுவாய் கால்வாய் நெகிழிக் கழிவுகளால் தூர்வாரப்படாமல் மிக மோசமான நிலையில் உள்ளது. அதனைத் தூர்வாரி படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவான இடமாக சரி செய்து விட்டால் மீனவர்கள் படகை நிறுத்துவதற்கும் மீன்பிடிப்பதற்கும் ஏதுவாக கால்வாய்ப் பயன்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை இயக்குநரிடம் நம்புதாளை மக்கள் தொடர்ந்து மனு அளித்த நிலையில், நாம் தமிழர் கட்சியும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தது. அதுமட்டுமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து (wp.no.20116/24) ஆற்றுவாய்க் கால்வாயை தூர்வார உத்தரவும் பெற்றது. ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆற்றுவாய்க் கால்வாய் சுத்தப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது டிட்வா புயல் வந்ததால் படகு கட்டுவதற்கு ஏதுவான வசதியில்லாத காரணத்தினாலேயே அன்புமகன் தொண்டீஸ்வரன் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
ஆகவே, அரசின் அலட்சியத்தால் பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்து வறுமையில் வாடும் தொண்டீஸ்வரன் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மேலும், இனியும் இதுபோன்று அநியாயமாக மீனவர் பெருமக்கள் உயிரிழப்பதை திமுக அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தித் நம்புதாளை கிராமத்திற்கு, புயல் வெள்ளம் போன்ற காலங்களில் படகுகளைக் கட்டி நிறுத்துவதற்கான ஆற்றுவாய் கால்வாயைத் தூர்வாரி சுத்தப்படுத்தி, படகுகள் கட்டுவதற்கான தளம் அமைத்துத்தர வேண்டும்.
அதுமட்டுமின்றி, மன்னார் வளைகுடா கடல் பகுதி மீனவ கிராமங்களான தொண்டி, புதுக்குடியிருப்பு, நம்புதாளை, சோழியகுடி, லாஞ்சியடி, புதுப்பட்டினம், காரங்காடு, முள்ளிமுனை, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி தேவிபட்டினம், பழனிவலசை, சித்தார்கோட்டை. இரணியன் வலசை, உச்சிப்புளி, மண்டபம் உள்ளிட்ட கடற்கரை மீனவ கிராமங்களில் இயற்கையாக இருந்த ஆற்றுவாய் பகுதிகள் முறையான பராமரிப்பு இன்மை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாகச் சேதமடைந்ததால், புயல், பெருமழை காலங்களில் மீனவர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகவே, தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் ஒவ்வொரு மீனவக் கிராமத்திலும் உள்ள ஆற்றுவாய் கால்வாய்களை சுத்தப்படுத்தி, படகுகள் கட்டுவதற்கு ஏற்ற தளம் அமைத்துத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்'
என்று தமிழ்மறை கூறும் அறநெறிக்கேற்ப, உள்ளத்தில் உண்மை ஒளிகொண்டு குற்ற இருளகற்றி, மக்களுக்கும் மண்ணுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் அத்தனை அநீதிகளுக்கும் எதிராக நீதியை நிலைநாட்ட, தம்மையே ஒப்படைத்து காவலரணாக திகழும் வழக்கறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வழக்கறிஞர்கள் நாள் நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சேரன்மகாதேவியில் சூறைக்காற்றால் அடியோடு சாய்ந்த 3.5 இலட்சம் வாழை மரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; காவிரிப்படுகை மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, மக்காச்சோளம் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தீவிர வடகிழக்குப் பருவமழை மற்றும் சூறைக்காற்று காரணமாகச் சேரன்மகாதேவி வட்டத்தில் பயிரிடப்பட்ட 3.5 இலட்சம் வாழைமரங்கள் முறிந்து விழுந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பயிரிட்டு பாராமரித்த வாழைமரங்கள் குலை விடும் நிலையில் முறிந்து விழுந்ததால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து வீசிய சூறைக்காற்றுக் காரணமாக சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல், பிராஞ்சேரி, சொக்கலிங்கபுரம், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராகியிருந்த 3.5 இலட்சம் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ஒரு வாழை மரத்திற்கு 100 ரூபாய் முதல் 125 ரூபாய் என்ற அளவில் பல இலட்ச ரூபாய் செலவிட்டு பராமரித்த விவசாயிகள், தற்போது அனைத்தையும் இழந்துள்ள நிலையில், வாழை மரம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 50 ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசோ வாழை மரம் ஒன்றுக்கு 10 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என்று அறிவித்துள்ளதால் வாழை விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் மற்றும் வாழை பயிரிடும் முழுப் பருவம் எனத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளை மேலும் நெருக்கடியில் தள்ளித் துன்புறுத்தும் விதமாக குறைந்தபட்ச இழப்பீடு கூட வழங்காமல் திமுக அரசு ஏமாற்றுவது வாழை விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
அதுமட்டுமின்றி காவிரி படுகை மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பெய்த கனமழையால் பல்லாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத்தொடங்கியுள்ளதோடு, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம் போன்ற வேளாண் பயிர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியீடாதது ஏன்? கடந்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்படைந்த குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா, தாளடி இளம் பயிர்களுக்கான இழப்பீட்டை கூட திமுக அரசு இதுவரை இதுவரை வழங்காமல் ஏமாற்றி வருவது ஏன்? வேளாண்துறை மூலம் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுப்பைக் கூட திமுக அரசு இதுவரை மேற்கொள்ளாதது ஏன்?
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கும் துயர்நிதி வழங்குவதில் திமுக அரசு காட்டிய அக்கறையும், வேகமும், பயிர் வளர்த்து நம் அனைவரின் உயிர் காக்கும் விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்குவதில் காட்டாதது ஏன்? பெருநகரங்களில் மழைநீரை வெளியேற்ற நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் திமுக அரசு, விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி பயிர்களை காக்க வடிகால்களை சீரமைக்கத் தவறியது ஏன்? பயிர்களை அழியவிட்டு, விவசாயிகளை பெரும் நட்டத்திற்கு ஆளாக்கி, உரிய இழப்பீடும் வழங்காமல் தவிக்க விடுவதுதான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு விவசாயிகளையும், வேளாண்மையும் பாதுகாக்கும் முறையா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை கூட வழங்காத திமுக அரசு வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவதால் விளைந்த நன்மை என்ன? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?
ஆகவே, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக அடியோடு சாய்ந்த வாழை மரங்களால் பெரும்பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு, வாழை மரம் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். மறு விதைப்பு செய்த குறுவை நெல் மகசூல் பாதிப்புக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடும், சம்பா மற்றும் தாளடி பயிர்களின் பாதிப்புக்கு ஏற்ற அளவில் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். மேலும், விளைநிலங்களில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றிட, வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாது என்ற திமுக அரசின் அரசாணை மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம்!
@CMOTamilnadu @mkstalin
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கடந்த 2 ஆண்டுக் காலமாக ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது அதனை ஒருபோதும் நிரப்ப முடியாது என்று சத்தமின்றிப் புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உதவித்தொகை உயர்வு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது கொடுங்கோன்மையாகும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 21.04.23 அன்று “அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் விரைவில் கண்டறியப்பட்டு, அவை சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வின் மூலம் நிரப்பப்படும்” என்று அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து கடந்த 24.07.23 அன்று அதற்கான அரசாணையும் (எண் 20/2023) பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த இரண்டாண்டு காலமாகச் சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வுக்கான பணிகள் நடந்து வருகின்றன, விரைவில் நிரப்பப்படும் என்று பச்சைப் பொய்யை மீண்டும் மீண்டும் கூறி மாற்றுத்திறனாளி பெருமக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது அந்த அரசாணையைச் செயல்படுத்த இயலாது என்று கூறி, அதனை இரத்துச் செய்வதாக மற்றொரு அரசாணையை நிறைவேற்றியுள்ளது மாற்றுத்திறனாளி பெருமக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம் ஆகும்.
அத்தோடு, ‘அரசுத்துறையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்’ எனக் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையையும் (எண் 151) ரத்து செய்துவிட்டு, தொகுப்பூதியத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் போட்டித்தேர்வில் பங்கேற்றால், அவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் மாற்றுத்திறனாளிகளை அரசுப்பணிகளிலேயிருந்தே அகற்றும் கொடுஞ்செயலாகும்.
இவ்விரு புதிய அரசாணைகள் மூலம் திமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை சிதைத்து, அவர்களை மீள முடியா இருளில் தள்ளியுள்ளது. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? இதற்குப் பெயர்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? தன்னுடைய ஆட்சியில் ‘ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது’ என்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் அவர்கள், ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும் பெருந்துயரத்தில் தள்ளியது ஏன்? இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக அரசு இப்படி போலி வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றப்போகிறது? மாற்றுத்திறனாளி பெருமக்களுக்கு அரசால் வழங்கப்படுவது சலுகைகள் அல்ல, அது அவர்களின் அடிப்படை உரிமைகள் என்பதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படும்போதுதான் உண்மையான சமூகநீதியை மண்ணில் மலரச் செய்ய முடியும்.
ஆகவே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் இரண்டு புதிய அரசாணைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, அரசுத்துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பழையபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், முதல்வர் வாக்குறுதி அளித்தபடி அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பறிக்கும் தமிழ்நாடு அரசின் இரண்டு அரசாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் பார்வை மாற்றுத்திறனாளி சங்கங்கள் இன்று (03.12.2025) உலக மாற்றுத்திறனாளிகள் நாளினை கருப்பு நாளாக கடைபிடித்து முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவை அளித்துக் கோரிக்கை வெல்லும்வரை துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மூவேந்தரும் போய், முச்சங்கமும் போய்ப், பாவேந்தருங் குறைந்துபழைய நூலுரைகளும் மறைந்து, படிப்பாரும் கேட்பாரும் இன்றிதமிழ்த்தாய் தளர்ந்து மெலிந்த காலத்தில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி அன்னைத் தமிழ் காத்த அருந்தமிழ்ச்செல்வர்..!
வறுமையில் வாடிய பைந்தமிழ் புலவர்களை ஆதரித்து பரிசில் பல தந்ததுடன், தமிழ்த்தாத்தா உ.வே.சா, சைவப் பேரறிஞர் தாத்தா ஆறுமுக நாவலர், தாத்தா சிங்காரவேலு உள்ளிட்ட தமிழறிஞர்களின் நூற்பதிப்பு பணிக்குப் பொருளுதவி புரிந்த வள்ளல்..!
செந்தமிழ்க் கலாசாலை என்ற தமிழ்க் கல்லூரி நிறுவியும், பாண்டியன் நூலகம் மற்றும் தமிழ் ஆய்வு மையம் அமைத்தும், செந்தமிழ் இதழ் நடத்தியும்,செழுந்தமிழ் நூல்களை இயற்றியும், தொகுத்தும், பதிப்பித்தும் தாய்த்தமிழை வளர்த்த தன்னிகரில்லா தமிழறிஞர்..!
கப்பலோட்டிய பெருந்தமிழர் பாட்டன் வ.உ.சி அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவிய தாயகப் பற்றாளர்..!
நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி நற்றமிழ் வளர்த்த செந்தமிழ்ச் செம்மல் நம்முடைய பாட்டனார் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முதுநிலை ஆசிரியர் தேர்வெழுதிய 85000 பேர் தமிழ் மொழிப் பாடத்தில் 20 மதிப்பெண்கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்திருப்பதுதான், 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா?
தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.10.2025 அன்று 1,996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்திய பணித்தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுதிய 2,36,000 பேரில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது. தேர்வு எழுதிய மூன்றில் இரண்டு பங்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தாய்த்தமிழ் சரிவர தெரியாமலே பட்டம் பெற்றுள்ளனர் என்பதுதான் மிகப்பெரும் கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் தமிழ்மொழி தெரியாத பிற மாநிலத்தவர் பல்லாயிரக் கணக்கில் பணியில் சேர்ந்ததால் எளிய தமிழ் மக்கள் தங்கள் வாழ்வாதார சிக்கல்களை முறையிட்டு தீர்க்க முடியாத மிக மோசமான அவலநிலை பல ஆண்டுகளாக நிலவியது. அதனை மாற்றும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அரசுப்பணியில் சேர்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ் மொழித் தேர்வில் உள்ள மொத்தம் 50 மதிப்பெண்களில், குறைந்தப்பட்சம் 20 மதிப்பெண்கள் எடுத்து வெற்றிப்பெற்றால் மட்டுமே அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அவ்விதியின் மூலம் தமிழ்நாட்டில் தாய்த்தமிழ் மொழி எந்த அளவிற்கு தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறையினர் தாய்த்தமிழ் மொழி தெரியாமலே பட்டம் பெற முடியும் என்ற மோசமான நிலையை உருவாக்கியதுதான் 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியின் சாதனையாகும். உயிரினும் மேலான தாய்த்தமிழ் மொழியைகூட முறையாக கற்பிக்க முடியாத கல்விமுறை திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வருவது பெருங்கொடுமையாகும். இதுதான் திராவிடம் தமிழை வளர்த்த முறையா?
தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் அன்னை தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவும் இல்லை. வழக்காடு மொழியாகவும் இல்லை. பண்பாட்டு மொழியாகவும் இல்லை. பயன்பாட்டு மொழியாகவும் இல்லை. ஆட்சி மொழியாகவும் இல்லை. பேச்சு மொழியாகவும் இல்லை. தாய் தமிழ் மொழியானது தமிழ்த்தெருக்களில் மட்டுமல்ல கல்வி நிலையங்களில், வழிபாட்டுத்தலங்களில், அரசு அலுவலகங்களில், வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில், நீதிமன்றங்களில் என எங்கும் தமிழ் மொழிக்கு இடமில்லை. அதன் உச்சமாக இளைய தலைமுறை பிள்ளைகளின் இதய சுவரிலிருந்தும், அறிவுத் திறனிலிருந்தும் அன்னைத் தமிழ்மொழி முற்றாக அகற்றப்பட்டுள்ளது பெருங்கொடுமையாகும்.
தமிழர்களின் பெருத்த தாய்நிலமான தமிழ்நாட்டிலேயே உயிருக்கும் மேலான நம் தாய்மொழிக்கு இடமில்லாத நிலை என்பது வரலாற்றுப் பெருந்துயரமாகும். தமிழ், தமிழர் எனக் கூறி ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி காலங்களில்தான் தமிழ்மொழி முற்று முழுதாகச் சிதைத்து அழிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் முதுநிலை ஆசிரியர் தேர்வெழுதிய 85000 பேர் தற்போது தோல்வி அடைந்திருப்பதாகும். இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வசனங்கள் எல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பது மீண்டும் உறுதியாகிறது.
‘ஒரு இனத்தை அழிப்பதற்கு, அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதுமானது’ என்கிறார் மொழியியல் ஆய்வறிஞர் ஐயா தேவநேய பாவாணர் அவர்கள். அப்படி நம் தாய்மொழியான தமிழ்மொழியை சிறிது சிறிதாக திட்டமிட்டு அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் தமிழ்நாட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் தமிழ் மொழிக்கான இடம் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டதும், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டதும் ஆகும். அதன் மூலம் தமிழ்மொழியை கற்காமலேயே கல்லூரி கல்வி முடித்து பட்டம் பெறமுடியும் என்ற அவலநிலையை உருவாக்கியுள்ளது அக்கொடுமைகளின் உச்சமாகும். இது முழுக்க முழுக்க திராவிட கட்சிகள் கடந்த அரை நூற்றாண்டாக மேற்கொண்ட மறைமுக தமிழின அழிப்பாகும்.
ஆகவே, ‘தமிழ் வாழ்க’ என்று அரசு கட்டிடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது என்பதை தமிழ்நாடு அரசு இனியாவது உணர்ந்து, தமிழ்நாட்டில் தாய்த் தமிழ்மொழியை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக தாய்மொழி வழிக்கல்விக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிப்பதோடு, தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அது எவ்வகை பாடத்திட்டம் என்றாலும் தமிழ்மொழி பாடம் கட்டாயம் கற்பிக்கப்படுவதையும், தமிழ் மொழித்தேர்வில் மாணவச்செல்வங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிப்பெறுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழர்கள் தாய் தமிழ்மொழியில் முறையாக எழுதவோ, படிக்கவோ தெரியாமல் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலையை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக இல்லாதொழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவினை அன்னைத்தமிழில் நடத்திட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பாணையை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி, தெய்வத்தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக, கடந்த 05.02.2020 அன்று அருந்தமிழ் பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நிகழ்வானது தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றோம். நீதிமன்ற ஆணையை அரசு ஏற்று அன்றைய அதிமுக அரசு தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கினை தமிழ் வழியில் நடத்த ஆவன செய்தது.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கரூர் பசுபதீசுவரர் ஆலயக் குடமுழுக்கு குறித்தும் முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணி சார்பாகத் தமிழ்வழியில் குடமுழுக்கு கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு “தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது தமிழில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதை நிறைவேற்றத் தவறும் கோவில் நிர்வாகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள்.
அதன் பிறகு, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலின் குடமுழுக்கையும் தமிழில் நடத்த முதலில் திமுக அரசு மறுத்தபோதும், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு வேறுவழியின்றித் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதேபோன்றே மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் என்று அடுத்தடுத்து தமிழ் முன்னோர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் திருக்கோயில்களில் நடைபெற்ற திருக்குடமுழுக்கிலும் அதே நிலையே தொடர்கின்றது. இந்நிலையில் வருகின்ற 08.12.2025 அன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு ப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் அதனைத் தமிழில் நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பும் இதுவரை கோயில் நிர்வாகம் வெளியிடாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தக் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் திட்டமிட்டுள்ளதோ எனவும் ஐயமுறத் தோன்றுகிறது.
தமிழ் மொழி காப்போம், மண் காப்போம், மானம் காப்போம், ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்கான திமுகவின் தேர்தல்கால வெற்று முழக்கங்கள் என்பதையே குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த ஆணை பிறப்பிக்காமல் அலட்சியப்படுத்தும் திமுக அரசின் ஆணவப்போக்கு காட்டுகிறது. குறிப்பாக திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டு கோயிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ச்சியாக அன்னைத்தமிழை புறக்கணித்து, அமைச்சர் சேகர்பாபு மூலம் வடமொழிக்கு சாமரம் வீசுவது வெட்கக்கேடானது. இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்ற கேள்வி எழுகின்றது.
ஆகவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய அதுகுறித்த அறிவிப்பாணையை முன்கூட்டியே வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கினை தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுக்குமாயின், தமிழ்ச்சைவ இறை அடியார்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும், திமுக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு நடத்த சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம் வட்டம், அல்லியந்தல் கிராமத்தைச் சார்ந்த
மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர்
இரா.அலெக்ஸ் பாண்டியன் அவர்களின் தந்தை
ஐயா த.இராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா த.இராஜா அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 மாசி 09ஆம் நாள்
(21-02-2026) மாலை 04 மணியளவில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில்
தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும்.
திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின்
அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.
'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள
ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
@rajinikanth -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடைப் பாசறை மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி அரிமா மு.ப.செந்தில்நாதன் அவர்களின் அன்புச்சகோதரர் தம்பி திருச்செந்தூரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தம்பியை இழந்து வாடும் செந்தில்நாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி திருச்செந்தூரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருப்பத்தூர் சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி - திருப்பத்தூர் சாலையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கொடும் விபத்தில் 11 பேர் உயிரிழந்து, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் பன்மடங்கு அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கின்றது. குறிப்பாக பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாவது ஏற்றுக்கொள்ள இயலாத பெருங்கொடுமையாகும்.
இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதன்மை இடம் வகிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாகும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு அரசு சாலை விதிகள் குறித்த போதிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதோடு, போக்குவரத்து காவலர்கள் மூலம் அவை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ந்து களமாடி வரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்!
பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் பெ.ஜான் பாண்டியன் அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@JohnPandianTMMK -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தேனி மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் செல்வகுமார் அவர்களின் தந்தை சு.முருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா சு.முருகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈழத்தாயகத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களைக் காக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும், புலம்பெயர் தமிழர்களும் வாழ்வாதார உதவிகள் புரிவோம்!
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழைப்பொழிவில் சிக்கி ஈழம் மற்றும் இலங்கையில் வாழும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு வாழும் தமிழ் மக்கள் பலர் தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.
பாதுகாப்பாக தங்க வைக்க போதிய முகாம்கள் கூட இல்லாத நிலையில் மட்டைப்பந்தாட்ட மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிகழ்வு மனதைக் கனக்கச்செய்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தங்கள் உடமைகளை இழந்து தவிக்கும் தமிழர்களை இப்பேரிழப்பிலிருந்து மீட்க தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உடனடியாக உரிய வாழ்வாதார உதவிகள் புரிய வேண்டுமெனவும், அதோடு, இலங்கை வானூர்தி நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக உணவு கூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாப்பாக தாயகம் மீட்டுவரவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உடனடியாக வழங்கவும் ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச்சொந்தங்கள், கனமழை வெள்ளத்தால் ஈழத்தாயகத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்விற்குத் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகள் புரிய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கூடலூரில் மக்களைத் தாக்கும் ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த 24.11.2025 அன்று ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மலைவாழ் பழங்குடியினரான அம்மா நாகியம்மாள் அவர்களை ஆட்கொல்லி புலி தாக்கி கொன்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அம்மா நாகியம்மாள் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கின்றேன்.
கூடலூர் பகுதிகளில் மக்கள் வாழ்விடப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைந்து மக்களைத் தாக்கி கொல்வது தொடர் கதையாக மாறி வருகிறது. வனவிலங்கு தாக்குதல்களால் மக்கள் உயிர் இழக்கும் பெருந்துயர நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது அரசு மற்றும் வனத்துறையின் அலட்சியப்போக்கைக் காட்டுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்வதாலும், வனவிலங்குகளின் உணவுத் தேவையை வனப்பரப்புக்குள் நிறைவு செய்வதாலும் மட்டுமே வனவிலங்கு தாக்குதல் படுகொலைகளை நிரந்தரமாகத் தடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு உணரவேண்டும்.
குறிப்பாக யானைகளின் மிக முக்கிய உணவு ஆதாரமான மூங்கில் மரங்கள் கொத்துக் கொத்தாக அழிந்து வருகிறது. மீண்டும் காடுகளில் மூங்கில் மரங்களை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் வாழ்விடப் பகுதிகளின் அருகாமையில் மூங்கில்கள் அழிந்த இடங்களில் முட்புதர்கள் போலக் காடுகள் மண்டி கிடப்பதும் புலி,சிறுத்தை போன்ற வனவிலங்குகள் ஊடுருவி மனிதர்களைத் தாக்க வழிவகைச் செய்யும். எனவே நீலகிரி மாவட்டம் முழுவதும் மக்கள் வாழ்விடப் பகுதிகளின் அருகாமையில் இது போன்ற இடங்களைக் கண்டறிந்து முட்புதர் காடுகளை உடனே தாமதிக்காமல் அகற்ற வேண்டும்.
தமிழ்நாடு வனத்துறையின் அலட்சியத்தால் நீலகிரி மலைப்பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி மனிதர்கள் இறப்பது மட்டுமின்றி, வனத்திற்குள் போதிய உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் இறப்பதும் தொடர்ந்து நடைபெறுவது மிகப்பெரிய கொடுமையாகும். இந்த மாதம் மட்டும் மூன்று யானைகள் கூடலூருக்கு உட்பட்ட வனச்சரகப் பகுதிகளில் இறந்துள்ளது தமிழ்நாடு வனத்துறையின் மெத்தன போக்கையே காட்டுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் ஆட்கொல்லி புலியை விரைந்து பிடித்து அடர்வனப் பகுதியில் விட வேண்டுமெனவும், வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு தேவைகளை வனத்திற்குள் கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து உணவின்றி வனவிலங்குகள் இறப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள முட்புதர் காடுகளை அகற்றுவதன் மூலம் வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் துயரங்கள் இனியும் தொடராமல் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
கூடலூரில் ஆட்கொல்லி புலி தாக்கியதில் உயிரிழந்த அம்மா நாகியம்மாள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 மாலை 04 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பேரெழுச்சியாக நடைபெற்றது. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
இன்று மாவீரர் நாள்..!
மங்காப் புகழ் கொண்ட தமிழர் என்ற தேசிய இனத்தின் தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக தாய் மண்ணில் விதைத்த மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள்.
தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவில் நிறுத்தி போற்றுகின்ற புனித நாள்.
தாயக விடுதலை என்கின்ற உச்ச இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமாக மாறிப்போன மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள்.
அடிமை காரிருளை நீக்க, தங்களையே எரித்து விடுதலை வெளிச்சம் தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, காந்தள் மலரும் இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் நிறுத்தி இனத்தின் விடுதலை என்கின்ற இலக்கிற்கு வழிகாட்டுகிற ஒளிவிளக்குகளாக நினைத்து போற்றி வணங்குகிற பொன்னாள்.
இந்த நாள் விடுதலை என்கின்ற மகத்தான கனவிற்காக இன்னுயிரை ஈந்தவர்களை நினைத்து அழுது, புலம்பும் நாள் அல்ல; மாறாக எந்த புனித கனவிற்காக, எந்த தமிழீழ நாட்டை அமைப்பதற்காக, நம் மாவீரர்கள் தங்கள் உயிரை ஈந்தார்களோ, அந்த புனிதக் கனவை நம் நெஞ்சத்தில் நிறைத்து வீழ்வதெல்லாம் எழுவதற்கே என நமக்கு நாமே உறுதி ஏற்றுக் கொண்டு மண்ணின் விடுதலைக்காக களமாடிட பற்றுறுதி கொள்கின்ற வரலாற்று நாள்.
நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என்றார் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன். ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு இறையாண்மை தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும் என அரசியல் அறிவியல் கூறுகிறது . அத்தகைய வரலாற்று புகழ்வாய்ந்த ஒரு தேசிய இனத்திற்காக, மண் விடுதலை எனும் இலட்சிய இலக்கினை அடைய, தலைவர் வழி நின்று தன்னிகரற்ற போர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் இதுவரை உலகம் கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள்.
தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதி எதிர்ப்புக்கு என்று இயக்கம் கட்டியவர்கள் இருந்த தாயகத் தமிழகத்தில் கூட சாதிக்க முடியாத சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு இணைந்து , பெண் விடுதலை, பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதை கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.
தமிழ்ப் பேரினம் மட்டுமல்ல, உலக மானுட இனத்தில் இப்படிப்பட்டவர்கள் எப்படி தோன்றினார்கள் என்று உலகம் வியக்கும் அளவிற்கு பெரும் வீரர்களை தமிழ் மக்கள் இராணுவமான விடுதலைப் புலிகள் அமைப்பு பெற்றிருந்தது. அத்தகைய வீரமும், அறிவும் ஒருங்கே இணைந்த ஆற்றல் மிகு மறவர் கூட்டம் கொண்ட மனித ஆற்றலை, அறிவுத்திறனை இந்த இனம் இழந்துதான் நிகழ்ந்ததிலேயே ஆகப்பெரும் இழப்பு என்கிற வலி எப்போதும் எனக்குள் இருக்கிறது.
ஆயுதங்களை கைவிடுங்கள், நாங்கள் சமாதானம் தருகிறோம் என்று உலகத்தார் தந்த உறுதிமொழிகளை போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழர்களின் துயரங்களுக்கு ஒரு அரசியல் தீர்வை உலக சமூகம் வழங்கவில்லை என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. 2009இல் சிங்கள பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை போரின் போது காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணை என்ற பெயரில் கடத்தப்பட்டோரெலாம் என்ன ஆனார்களோ என எம்மினத் தாய்மார்கள் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இதுகுறித்து ஆட்சி மாறினாலும் அதிகாரத்தில் இருக்கின்ற கட்சி மாறினாலும் சிங்கள ஆட்சியாளர்கள்
எவ்வித பதிலையும் அளிப்பதில்லை.
சமீபத்தில் கூட புதிதாகக் கண்டறியப்பட்ட , இன்னும் புதிது புதிதாக கண்டறியப்பட்டு கொண்டே இருக்கின்ற ,செம்மணி உள்ளிட்ட தமிழர்களை அநியாயமாக கொன்று புதைத்த மனித புதைகுழிகள் தமிழ் இனப்படுகொலைக்கு மிகப்பெரிய ஆதாரமாக வலுசேர்க்கின்றன. ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுத்த உலக நாடுகளும் ஐ.நா. மன்றமும் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
ஒவ்வொரு ஐநா மன்ற அமர்வின் போதும் இனப்படுகொலை விசாரணை குறித்து தமிழர்கள் எழுப்பும் எந்த ஒரு குரலுக்கும் உலக சமூகம் மௌனத்தையே பதிலாக தருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு மிகப்பெரிய துரோகமாகும். இன்றளவும் தொடர்ச்சியாக தமிழர்ப்பகுதிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை திணித்து, தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ தாயகத்தில் முற்று முழுதாக ஒழிக்க முயல்கின்றார்கள்.
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இலங்கைத் தன்னை ஒரு ஜனநாயக நாடு என சொல்லிக் கொண்டாலும், தமிழர்களின் தாய் நிலமான, எம் தமிழீழ மண்ணில் போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் கூட சிங்கள படையணிகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. சனநாயகத்தின் வாயிலாக தேர்தல் மூலம் பொறுப்பிற்கு வந்த ஈழ மண்ணின் தமிழின தலைவர்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டு இருப்பது சிங்கள இனவாத அரசு ஒருபோதும் மக்கள் சனநாயகத்தை மதிக்காது என்கிற நிலையை தெளிவாக காட்டுகிறது. தன் சொந்த நிலத்திலேயே எம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக அடிப்படை வசதிகள் ஏதுமற்று, ஒரு காலத்தில் எம் தேசியத் தலைவரின் புனிதமான ஆட்சியின் கீழ், தமிழீழ தேசத்தில் வாழ்ந்த அந்தக் கனவு வாழ்க்கையை நினைத்து ஏங்கித் தவித்து வருகிறார்கள். இன்று சிங்கள தேசம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டதற்கு முதன்மையான காரணம் எம் தமிழினத்தின் மீது அவர்கள் அநீதியாக நடத்திய போர் தான் என்பதை சிங்களர்களே ஒத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
ஈழத்தில் அரசியல் சூழல்கள் முழுதாக மாறி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் தமிழர்களும் தமிழீழ விடுதலைக்கான தங்களது வியூகங்ளை மாற்றி அமைக்க வேண்டிய கடமை இருக்கிறது. மாறி வருகிற உலக ஒழுங்குக்கு ஏற்ப நாமும் நமது தாயக விடுதலைக்கான வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டும். புதிதாக அமைந்திருக்கின்ற வல்லாதிக்க அரசுகளின் ஆட்சி மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கு ஏற்றாற் போல் தமிழீழ நாட்டின் விடுதலைக்கான வழியை செப்பனிட வேண்டும்.இனியும் உலகத் தமிழர்கள் உதிரிகள் போல சிதறி, தனித்தனி குழுக்களாக, தனித்தனி அமைப்புகளாக, தனித்தனி நபர்களாக தான்மை உணர்வே மேன்மை என கருதி, பிரிந்து பிளந்து நின்றால் இன விடுதலையை அடைய முடியாது என்பதை இப்போதாவது உலகத்தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒற்றுமை ஒன்றே நமது வலிமை அதுவே நமது மாவீரர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நமக்கு வைத்திருக்கின்ற ஒரே வழி என்பதை உணர்ந்து தாயக விடுதலை புனித லட்சியத்திற்காக நாம் அனைவரும் கைகோர்த்து மாவீரர்கள் நமக்கு அளித்த ஆன்ம பலத்தோடு இனி நாம் பயணிக்க வேண்டும். ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் நமக்குள் இருக்கின்ற விடுதலைக்கு எதிரான அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் சாகடித்து விடுதலை என்ற ஒற்றை நோக்கத்தில் நாம் அனைவரும் அணி திரள வேண்டும்.
எம் ஈழ உறவுகளின் துயர் நீங்க சிங்கள அரசிற்கு கடுமையான அழுத்தங்கள் தரவேண்டிய கடமை எட்டு கோடிக்கும் மேலான தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வருகிற இந்திய அரசிற்கு உண்டு. தமிழர்களுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கை மாற வேண்டுமானால் இந்தியாவின் அரசியல் நிலைகள் மாற வேண்டும் அதற்கு முதன்மையாக தாயகத் தமிழகத்தில் தாய் மண்ணையும், தமிழ் மொழியையும் உயிராக நேசிக்கிற தமிழ்த் தேசிய அரசியல் மேன்மையுற வேண்டும் என்கின்ற எண்ணம் உலகம் முழுதும் வாழ்கின்ற தமிழர்களின் உள்ளத்தில் மலர தொடங்கி இருப்பதை நான் நம்பிக்கையாக பார்க்கிறேன். தாயக தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் மாபெரும் ஜனநாயக போர்க்களமான தேர்தல் களத்தில் வென்றால் ஒழிய, தமிழ்த் தேசிய இனத்திற்கென்று விடிவு இல்லை என்பதை புரிந்து கொண்டு இந்த புனிதமான மாவீரர் நாளில் தாய்த் தமிழ் உறவுகள் நாம் அனைவரும் வருகிற 2026 தேர்தல் களத்தில் புலிக்கொடி உயர்ந்து விவசாயி வெல்ல உறுதி ஏற்க வேண்டும்.
தொடர்ச்சியாக உலக அரங்கில் அசராது, தமிழீழ விடுதலை சார்ந்து நாம் தருகிற அழுத்தங்கள் மூலம் ஒரு பொது வாக்கெடுப்பிற்கு சிங்கள அரசை உட்படுத்த வேண்டும். இதற்கு ஏற்றாற் போல் ஒருங்கிணைந்த ஒற்றுமையோடு நமது நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதுதான் இந்த மாவீரர் நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதியாகும். அந்த உறுதியோடுதான் தாயக தமிழகத்தில் “நாம் தமிழர்” என்ற மகத்தான படையைக் கட்டி, எந்த அதிகாரத்தால் நாம் வீழ்ந்தோமோ அந்த அதிகாரத்தை கைப்பற்ற பெரும் பாய்ச்சலோடு பயணித்து வருகிறோம். போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இனி அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்று சொன்னவர்கள் கூட மாவீரர்கள் கண்ட கனவை என்ன விலை கொடுத்தேனும் நிறைவேற்றிட தாயகத் தமிழகத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு வருவதை வியப்பாக பார்க்கிறார்கள்.
ஆகவே, தமிழீழ நாட்டின் விடுதலையை நம் தலைமுறையிலேயே அடைவதற்கு, அரசியலாக நாம் வலிமை பெறுவதே ஒரே வழி. அதை நோக்கி தான் மாவீரர் தெய்வங்கள் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மரணம் கண்ணுக்கு முன்னால் நிற்கின்ற அந்தக் கால நொடியில், மங்கா புகழ் கொண்ட மாவீரர்களின் இமைக்காத விழிகளில் உறைந்திருந்த
தாயக விடுதலை என்கின்ற கனவு நம்மை ஒவ்வொரு நொடியும் இயக்கும்.
மண்ணின் விடுதலைக்கு உயிரே விலையானாலும் அந்த உயிரையும் தருவதற்கு துணிந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று ஒவ்வொரு நொடியும் எம் சிந்தையிலும், எம் செயலிலும் எம்மை வழி நடத்தும்.
(2/3)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தாய்மண் விடுதலைக்காக மாவீரர் சிந்திய குருதி என்றென்றும் எம் நினைவுகளில் உலராமல் உள்ளார்ந்த ஆன்ம ஆற்றலாய் ஒளிரும்.
உலகம் இருக்கும் வரை எமது மாவீரர்களின் புகழ் இருக்கும். அந்தப் புகழ் ஒளியில் எம் தலைவர் பிரபாகரன் கண்ட தமிழீழம் பிறக்கும்.
தாயக கனவில் சாவினை தழுவிய சந்தன பேழைகளான எம் மாவீரர் தெய்வங்களுக்கு எமது வீர வணக்கம்! வீர வணக்கம்!
மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி!
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!
(3/3) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திருமுக்கூடல் கிளைத் தலைவர் அன்புத்தம்பி சக்திவேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றி வந்த அன்புத்தம்பி சக்திவேல் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
அன்புத்தம்பி சக்திவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி சக்திவேல் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மயிலம் சட்டமன்றத் தொகுதி,
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சு.முனுசாமி அவர்களின் தாயார் சு.முனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி முனுசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா முனியம்மாள் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தலைவர் பிறந்த நாள்! தமிழர் எழுச்சி நாள்!
இந்த உலகத்தின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனத்திற்கென தனித்துவமான வரலாற்றுப் பெருமிதங்கள் பல இருந்தாலும், இருப்பதிலேயே மாபெரும் பெருமை எம் தலைவர், என்னுயிர் அண்ணன், மேதகு வே பிரபாகரன் அவர்களை தன் மகனாக தமிழன்னை ஈன்றெடுத்தது தான். காலத்தின் போக்கில் அடிமைப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட அன்னைத் தமிழினம், தான் பெற்றெடுத்த மகனால் தலை நிமிர்ந்ததுதான் நம் இனத்தின் வரலாறு. வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசிய இனம் மீண்டும் நிமிர்ந்து எழுந்த நன்னாள். நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் பிறந்த பொன்னாள் இன்று!
இந்த உலகம் முழுக்க பரந்து வாழும் 12 கோடி தமிழ்த்தேசிய மக்களின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 71 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.!
உலகில் தோன்றிய சில மகத்தானவர்களின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு’ என்கிறார் புரட்சியாளர் லெனின்.ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி, நிலம், பண்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றன.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய உலகின் மூத்த குடியான தமிழ்த்தேசியப் பேரினமும் பன்னெடுங்காலமாக தன்னுடைய தனித்துவமிக்க மொழி, நிலம், பண்பாட்டு அடையாளங்களைக் காத்துக்கொள்ள வரலாற்றின் வீதிகளில் நின்று போர் புரிந்து வருகிறது.
தமிழினத்தின் இருபெரும் தாய் நிலங்களான தமிழ்நாடும், தமிழீழமும், ஆர்ப்பரிக்கும் அலை கடலால் பிரிந்து இருந்தாலும், அன்னைத் தமிழ் மொழியின் பிள்ளைகள் என்கின்ற உறவால், குருதி முழுவதும் நிறைந்திருக்கின்ற மரபணுக்களின் ஒத்திசைவு உணர்வால், ஒற்றைத்தேசிய இனத்தின் மக்களாகவே தமிழர்கள் நாம் வாழ்கின்றோம்.
தொன்மை மிக்க பண்பாடு, நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி, எக்காலம் தோன்றியது என அறிய முடியாத இலக்கண, இலக்கியச் செழுமை மிக்கத் தாய்மொழி என்ற அளப்பரிய சிறப்புகள் தமிழினத்திற்கு இருந்தாலும், சகல விதமான உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் இல்லையே என்ற பெரும் தவிப்பு தமிழர் மனதிற்குள் நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது.
தமிழர்களின் பூர்வீக நிலங்களில் ஒன்றான ஈழத்தாயகத்தில், வந்து குடியேறிய சிங்கள இனவெறி ஆட்சியாளர்களால் உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு, பூர்வக் குடி தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டபோது, அறவழியில் போராடிய அரசியல் தலைவர்கள் மீதும் அடக்குமுறைகள் ஏவி, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அக்கொடுமைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்படி போராடத் துணிந்தவர்களும் வல்லாதிக்க நாடுகளின் வட்டார அரசியல் சூழ்ச்சிக்கு இரையாகி விலைபோனபோது, இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற லட்சியத்தை தன் ஆன்மாவில் பதித்துக் கொண்டு, தலையே போனாலும் விடுதலை போராட்டத்தை விட்டுத்தரமாட்டேன், உயிரே போனாலும் ,உன்னத இலட்சிய வேட்கையைக் கைவிடமாட்டேன் என்று சமரசமற்று களத்தில் நின்று சாதித்த சரித்திர நாயகர்தான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
அடிமை வாழ்வினும் உரிமைச் சாவு மேலானது என்ற இலட்சிய உறுதியுடன் இனவிடுதலை கனவினை நிறைவேற்றிட காலம் தந்த கரிகாலனாக, மறம் பேசியக் களத்தில், அறம் பேசி நின்ற சான்றோனாக தமிழ்த்தேசியத் தலைவர் அவர்கள் திகழ்கிறார்கள்.
பெருமைகளும், பெருமிதங்களும் பொங்கி நிறைந்து பூரித்து நிற்கிற தமிழர் இன வரலாற்றில், மாபெரும் வீரத்துடன் வேலெடுத்து பாய்ந்த முருகன் முதலாக, வாளெடுத்து சுழன்ற மூவேந்தர்கள் என காலப் பெருமையின் நீண்டு துலங்கும் பட்டியலில் மிளிர்ந்து சுடர்கின்ற அழல் ஞாயிறாய் இனத்தின் விடுதலை காக்க இன்முகத்தோடு களத்தில் நின்ற மாவீரன் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
ஓங்கி உயர்ந்த உயர் குணத்தால், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினால், எவர் உதவியும் இன்றி தன் சொந்த மக்களையே படையாக கட்டி, தான் பிறந்த தாய் மண்ணிலேயே நின்று போராடிய பெருமாவீரன் என்பதால் இதுவரை உலகில் தோன்றிய புரட்சியாளர்களில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன்மையானவர்.
படையின் எண்ணிக்கையில் வெற்றியல்ல; எண்ணத்தில்தான் வெற்றி என்பதை தம் ஈடு இணையற்ற போராட்ட வரலாற்றால் உலகிற்கு எடுத்துச் சொல்லி, எதிரியாலும் குற்றம் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற, வீரக்காவியமாகத் திகழும் தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்டமைத்த ஈழ சோசலிசக் குடியரசுதான், இதுவரை தோன்றிய உலக நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக மது, புகை, ஊழலற்ற, பெண்கள் பாதுகாப்பு, மக்கள் நலன் பேணுகின்ற, மொழி, பண்பாட்டு அடையாளங்களைப் போற்றி வளர்க்கின்ற, சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத, தாய்மைப் பொருளாதாரத்தைப் போற்றி வளர்த்த ஒரு பொதுமை அரசாக வரலாற்றில் திகழ்ந்தது.
ஒரு மக்கள் தலைவனின் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் எளிய வாழ்க்கை வாழ்ந்து, இறுதிவரை மக்களின் விடுதலைக்காகக் களத்திலே நின்று, எதிர்த்து நின்ற எதிரியைக்கூட உளப்பூர்வமாக வென்றுக் காட்டிய பெருந்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
ஈராயிரம் ஆண்டில் எவரும் கண்டிடா
போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்,
சீராயிரம் கண்ட செந்தமிழ் மரபினன்
தேராயிரம் பூட்டி திருவென்று வந்த பெருவீரன்,
உயிரினும் மேலான நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கரங்களில் இருந்த நம் ஈழத்தாயகத்தின் விடுதலைப் போராட்டம் இன்று உலகத் தமிழர்களின் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இப்பூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும்வரை, தாயக விடுதலைக்காக, இலட்சிய வேட்கையை இறுதிவரை ஏந்தி நிற்க வேண்டும் என்பதே நம் சத்தியத்தலைவரின் சாதனை வாழ்க்கையிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிற தத்துவமாக இருக்கிறது.
என்ன நிகழ்ந்தாலும், எத்தனை காலம் ஆனாலும், மன உறுதி குலையாமல், விடுதலை நோக்கம் சிதையாமல், தமிழீழ விடுதலைப்பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதுதான், நம்முயிர் தலைவர் மீதான நமது ஆழ்ந்த பற்றுறுதியை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரே வழி என்பதை அவர் பிறந்த இந்நாளில், நாம் உணர வேண்டும்.
தமிழீழம் என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல, அது உலகமெங்கும் வாழக்கூடிய 12 கோடி தேசிய இனத்தின் பெருங்கனவு என்பதை உணர்ந்து அதை வென்றெடுக்க தலைவர் பிறந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும்.
உலகெங்கும் வாழ்கின்ற எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு நம் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 71 ஆவது அகவை நாளில் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மாவீரர் நாள்!
விதையாய் விழுந்த தமிழ் மறவரின் வாழ்க்கையே நமது வரலாறு. அந்த மாவீரத் தெய்வங்களைப் போற்றுகிற ஒரு புனித நாள்!
27.11.2025 வியாழக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு ஆவுடைப்பொய்கை காரைக்குடி.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்! மாவீரர்களின் ஈகத்தைப் போற்றுவோம்!
எனது அன்புச் சொந்தங்களே, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பெருநிகழ்விலும் எங்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து நீங்கள் தான் உதவி செய்து எங்களை கரையேற்றி இருக்கிறீர்கள். இம்முறையும் திரள்நிதித் திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்து உங்கள் பிள்ளைகள் எங்களை வலிமைப்படுத்த வேண்டும் என்ற அன்போடு வேண்டுகிறேன்.
நன்றி!
வணக்கம்!
நாம் தமிழர்!
donate.naamtamilar.org/Heroes-day-2025.htmlThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கொடும் விபத்தில் 8 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கசிந்து உள்ளம் உருகும்
காதலின் மெய்ப்பொருளும் நீயே..!
நசிந்து போகாது
நாளும் காக்கும் வாழ்வின்
முதற்பொருளும் நீயே..!
மணக்கோலம் பூண்ட
நாள் முதலாக
போர்க்காலம் என்றாலும்
பூக்காலம் என்றாலும்
நீ
தருகின்ற அன்பினில்
குறையேதும் வைத்ததில்லையே..!
எந்தன் உயிர்த்துணை
உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?
இடம்மாற்றி கொண்ட
இதயத்தில் இருப்பவளே!
தடுமாறும் பொழுதிலும்
தடுத்தாளும் பரம்பொருளே!
இனமானப் பெரும்பணியில்
இடர்பாடுகள் யாவையும்
ஏற்றும் சுமந்தும்
யாதுமாகி நின்றாய் நீயே..!
எனக்கு நீ
இன்னொரு தாயே!
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துகள்
என்னுயிரே..! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இயக்குநரும், நடிகருமான ஆருயிர் இளவல் சண்முகம் முத்துச்சாமி அவர்களின் தந்தை அப்பா முத்துச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அஞ்சலகப் பணியாளராக இருந்து ஓய்வுபெற்ற அப்பா முத்துச்சாமி அவர்கள் தம்பி சண்முகத்தை மண் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட இன உணர்வாளனாக வளர்த்தெடுத்து, சமூகத்தின் மீது தனக்கு இருந்த பற்றை அடுத்தத் தலைமுறைக்கும் கடத்தியவராவார். அவரது திடீர் மறைவு ஈடு இணையற்றது.
அப்பாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ஐயா சோ.கந்தன் அவர்களின் துணைவியார் மதிப்பிற்குரிய அம்மா மாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
உற்றத் துணையை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா கந்தன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா மாலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதி, அரிமளம் மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி அடைக்கலம் அவர்களின் தாயார் அம்மா செல்லையா பார்வதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செல்லையா பார்வதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கவிஞர் தியாகன் அவர்களின் தந்தை ஐயா எ.ஜெகஜீவன்ராம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா எ.ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறார் இலக்கியம், ஐக்கூ, நாடகம், புதினம், கட்டுரை உள்ளிட்ட தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிணமித்த ஆகச்சிறந்த படைப்பாளி!
பள்ளி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர், திறனாய்வாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்படப் பாடலாசிரியர் என பன்முகத்திறன் படைத்த பேராளுமை!
தனித்துவமிக்க கவித்திறனால் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட முதுபெரும் தமிழ்க்கவிஞர் போற்றுதற்குரிய நம்முடைய ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடகமன்றம் மற்றும் அறிவியல் தமிழ்மன்ற உறுப்பினராக சிறப்புற பணியாற்றிய பெருந்தகை! 'வணக்கம் வள்ளுவ' எனும் ஆகச்சிறந்த கவிதைத்தொகுப்பிற்காக 'சாகித்ய அகாதமி' விருதை வென்ற பெருமைக்குரியவர். ஐயா அவர்களின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
போற்றுதற்குரிய முதுபெரும் தமிழ்க்கவிஞர் ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி விஜய் ஆனந்த் அவர்களின் பாட்டனார் மாணிக்கம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஐயாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி விஜய் ஆனந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மாணிக்கம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, ஆன்றோர் அவையப் பொறுப்பாளர் அப்பா முனைவர் ச.மணி அவர்களின் அவர்களின் மூத்த சகோதரரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களின் பெரிய தந்தையுமான, மூத்த எழுத்தாளர், பெருந்தமிழர் ஐயா ச.கலியாணராமன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
யாமறிந்த மொழிகளிலே, இன்பத்துள் இன்பம், சூடினர் இட்டப் பூ உள்ளீட்ட பல நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்த்தவர். அவரது பஞ்சம் பிழைக்க என்ற நாவல் தமிழக அரசின் விருது உள்ளீட்ட பல விருதுகளை குவித்தது. மொழி உணர்வும், எழுத்தாற்றலும் கொண்ட அவரது மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு.
ஐயா அவர்களை இழந்து வாடும் அப்பா மணி, தம்பி மணி செந்தில் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும்
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
எழுத்தாளுமை ஐயா ச.கலியாணராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, ஆன்றோர் அவையப் பொறுப்பாளர் அப்பா முனைவர் ச.மணி அவர்களின் அவர்களின் மூத்த சகோதரரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களின் பெரிய தந்தையுமான, மூத்த எழுத்தாளர், பெருந்தமிழர் ஐயா ச.கலியாணராமன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
யாமறிந்த மொழிகளிலே, இன்பத்துள் இன்பம், சூடினர் இட்டப் பூ உள்ளீட்ட பல நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்த்தவர். அவரது பஞ்சம் பிழைக்க என்ற நாவல் தமிழக அரசின் விருது உள்ளீட்ட பல விருதுகளை குவித்தது. மொழி உணர்வும், எழுத்தாற்றலும் கொண்ட அவரது மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு.
ஐயா அவர்களை இழந்து வாடும் அப்பா மணி, தம்பி மணி செந்தில் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும்
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
எழுத்தாளுமை ஐயா ச.கலியாணராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர் அன்புச் சகோதரி நிசா தாஸ் அவர்களின் தாயாரும், செந்தமிழர் பாசறை அமீரகத்தின் திட்டக்குழு இணைச்செயலாளர் அன்புத்தம்பி தாஸ் அவர்களின் மாமியாருமான அம்மா கிறிஸ்லெட் அன்னபாய் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் சகோதரிக்கும், தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா கிறிஸ்லெட் அன்னபாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணிச்சுமையால் கள்ளக்குறிச்சியில் கிராம உதவியாளர் தங்கை ஷாகிதா பேகம் தற்கொலை; திருத்தப்பணியை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்து இன்னும் எத்தனை பேரை திமுக அரசு பலி கொடுக்கப்போகிறது?
@CMOTamilnadu
@mkstalin
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் தாங்க முடியாத கடும் பணிச்சுமையை ஊழியர்கள் மீது வலிந்து திணித்ததால் கும்பகோணத்தில் அங்கன்வாடி ஊழியர் அம்மா சித்ரா அவர்கள் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, கனகனந்தலை சேர்ந்த கிராம உதவியாளர் அன்புத்தங்கை ஜாகிதா பேகம் தற்கொலை செய்து கொண்ட துயரச்செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த தங்கை ஜாகிதா பேகம் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
கடுமையான பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தப்பணிகளைப் புறக்கணிப்பு செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் விருப்பத்தின்படி வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத்தேர்தல் ஆணையம் அவசரகதியில் அறிவித்துள்ள திருத்தப்பணிகளை கடுமையாக எதிர்ப்பதாக கூறும் திமுக அரசு, கூடுதல் பணிச்சுமையால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அப்பணிகளை மேற்கொள்ள இயலாது என அறிவித்துள்ள அரசு ஊழியர்களின் அறப்போராட்டத்தை முடக்கும் விதமாக ஊதியம் தர மறுப்பது எவ்வகையில் நியாயம்?
ஒருபுறம் திருத்தப்பணிகளை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு, மறுபுறம் தங்கள் கட்சியினர் மூலம் வேக வேகமாக திருத்தப்பணிகளை மேற்கொண்டு திமுக அரசு இரட்டை வேடமிடுகிறது. அதைப்போலவே நீதிமன்றத்தில் திருத்தப்பணிகளை மேற்கொள்வது கடினம் என்று கூறிய திமுக அரசு, அதனை அடியொற்றி திருத்தப் பணிகளை மேற்கொள்ள மறுத்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்றும் அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது அரசு ஊழியர்களுக்கு செய்கிற பச்சைத் துரோகமாகும். இதன் மூலம் பாஜக அரசின் திருத்தச்சதிக்கு மறைமுகமாக திமுக அரசு துணை நிற்பது உறுதியாகிறது.
இதுதான் பாஜகவின் தேர்தல் முறைகேடுகளை திமுக அரசு எதிர்க்கும் முறையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கி முறைகேடுகளில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, அரசு அலுவலர்களை அடிமைகள்போல நடத்தி, தங்கள் கட்சியினர் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுகிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
மழைக்காலம், விழாக்காலம், கடுமையான பணிச்சுமை, குறைந்த காலக்கெடு, மக்கள் பாதிக்கப்படுவார்கள், தேர்தல் நெருங்கிவிட்டது, படிவங்களை நிரப்புவதில் குழப்பம் என்றெல்லாம் நீதிமன்றத்தில் திமுக அரசு கூறிய காரணங்கள் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாதா? திமுக அரசுக்கு ஒரு நியாயம், அப்பாவி அரசு ஊழியர்களுக்கு வேறு நியாயமா? அரசு ஊழியர்கள் என்ன திமுக அரசின் அடிமைகளா? திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றம் குறைகளைத்தானே அரசு ஊழியர்களும் முன்வைக்கின்றனர்? அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு துணைநிற்கும் அரசு ஊழியர்கள் பக்கமுள்ள நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, அவர்களின் அறப்போராட்டத்திற்கு துணைநிற்க வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக போராடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லையென்று தண்டிப்பது எவ்வகையில் நியாயம்? இதுதான் அரசு ஊழியர்களின் உரிமையை திமுக அரசு பாதுகாக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
இன்னும் எத்தனை காலத்திற்கு இத்தகைய ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்தப்போகிறது? கேரளா, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்த பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் நிகழ்ந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அடுத்தடுத்து அரசு ஊழியர்கள் தற்கொலைக்கு முயலும் கொடுமைகள் நிகழத் தொடங்கியுள்ளன.
வாக்காளர்ப் பட்டியல் சிறப்புத் திருத்த கடும் பணிச்சுமையாலும், ஆபாச வசைமொழிகளாலும் கும்பகோணத்தில் அங்கன்வாடி ஊழியர் அம்மா சித்ரா அவர்கள் தூக்க மாத்திரை உள்ளிட்ட பல்வேறு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற செய்தி வெளிவந்த பிறகாவது திமுக அரசு, வாக்காளர் திருத்தப்பணியை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதை கைவிட்டு, விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தால் அநியாயமாக ஓர் உயிர் பறிபோயிருக்காது?
(1/2)
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இரண்டு குழந்தைகளை உடைய தங்கை ஜாகிதா பேகம் மரணத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். திருத்தப் பணியை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர மறுப்பதன் மூலம், இருமடங்கு கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இன்னும் எத்தனை அரசு ஊழியர்கள் உயிரிழக்க திமுக அரசு காரணமாகப்போகிறது? ஆட்சியாளர்களின் அதிகாரப்பசிக்கு அப்பாவி அரசு ஊழியர்களை பலிகொடுப்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த கடும் பணிகளைப் புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்தும் முடிவை கைவிட்டு, விருப்பம் உள்ளவர்கள் பணிபுரியலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், பாஜக அரசு செயல்படுத்த முனையும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு மறைமுகமாக துணைபோவதை இனியேனும் திமுக அரசு கைவிட்டு, அரசு ஊழியர்கள் பக்கமுள்ள நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி அவசரகதியில் நடைபெறும் திருத்தப்பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த தங்கை ஜாகிதா பேகத்தின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
(2/2)
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இரண்டு குழந்தைகளை உடைய தங்கை ஜாகிதா பேகம் மரணத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். திருத்தப் பணியை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர மறுப்பதன் மூலம், இருமடங்கு கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இன்னும் எத்தனை அரசு ஊழியர்கள் உயிரிழக்க திமுக அரசு காரணமாகப்போகிறது? ஆட்சியாளர்களின் அதிகாரப்பசிக்கு அப்பாவி அரசு ஊழியர்களை பலிகொடுப்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த கடும் பணிகளைப் புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்தும் முடிவை கைவிட்டு, விருப்பம் உள்ளவர்கள் பணிபுரியலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், பாஜக அரசு செயல்படுத்த முனையும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு மறைமுகமாக துணைபோவதை இனியேனும் திமுக அரசு கைவிட்டு, அரசு ஊழியர்கள் பக்கமுள்ள நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி அவசரகதியில் நடைபெறும் திருத்தப்பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த தங்கை ஜாகிதா பேகத்தின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
(2/2)
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆவடி மாநகராட்சி கரியப்பா நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
ஆவடி மாநகரின் 14, 21, 22 ( வார்டு) சிறகங்கள் அமைந்துள்ள கரியப்பா நகரில் ஏறத்தாழ 1500 குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்கு குப்பைக் கிடங்கினை அமைக்க தமிழ்நாடு அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
குப்பைக் கிடங்கு அமைக்கும் பகுதிகளுக்கு அருகில் 500மீ வரை குடியிருப்புகள் இருக்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால், அதனைக் காற்றில் பறக்கவிட்டு, ஆவடியில் லட்சுமி நகர் - கரியப்பா நகர் என மக்கள் நெருக்கமாக வசிக்கும் இரண்டு குடியிருப்புகள் அருகில் குப்பைக் கிடங்கு அமைக்க முயல்வது அப்பட்டமான விதிமீறலாகும். அதுமட்டுமின்றி, 15 அடி நீளம் உள்ள மழைநீர் கால்வாயை அழித்து, அக்கிடங்கு அமைக்கப்படுவது அதைவிடப் பெருங்கொடுமையாகும்.
பள்ளிக்கூடம், வழிபாட்டுத்தலங்கள், வணிக தலங்கள், மக்கள் குடியிருப்புகள் அருகே உள்ள நிலையில் நிலத்தையும், நீரையும் நாசப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனிற்கும் கேடு விளைவிக்கும் குப்பைக் கிடங்கை திமுக அரசு அங்கே அமைப்பது ஏன்? அரசுக்குச் சொந்தமான யாரும் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான பல இடங்கள் உள்ள நிலையில், அவற்றையெல்லாம் விடுத்து மக்கள் நெருக்கமான இடங்களிலேயே கழிவுநீர் சுத்திகரிக்கவும், குப்பைகளை எரிக்கவும் திமுக அரசு இடம் தேர்வு செய்வது ஏன்? திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், சென்னையில் கொடுங்கையூரிலும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலும் குப்பைகளை மலைபோல் கொட்டி அந்த இடங்களை வாழத்தகுதியற்ற பகுதியாக மாற்றியது போதாதா?
மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களை நகரத்திற்குப் பல கிமீ தூரத்திற்கு வெளியே ஆள் அரவமற்ற இடத்தில் வைக்கும் திராவிட மாடல் திமுக அரசு, கழிவுநீர் ஆலை, குப்பைக்கிடங்குகளை நகரின் மையப்பகுதியில் அமைக்கத் துடிப்பது ஏன்? நகரத்தை தூய்மை செய்வதே மக்கள் நலனை காப்பதற்குதானே? கழிவுகளை அகற்றுவது எந்த அளவிற்கு முதன்மையானதோ, அதே அளவிற்கு மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதும் முதன்மையானது அல்லவா? மக்கள் நலனைக் கெடுக்கும் வகையில் குப்பைக்கிடங்கை அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கரியப்பா நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட்டு, அதனை மக்கள் பயன்படுத்தாத பகுதியில் அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிராக ஆவடி மக்களைத் திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராமேசுவரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பட்டப்பகலில் படுகொலை; பெண்கள் வாழமுடியாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதுதான் திமுக ஆட்சியின் சாதனை!
@CMOTamilnadu @mkstalin
இராமேசுவரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 12ஆம் மாணவி அன்புமகள் ஷாலினி, அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவனால் பட்டப்பகலில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அன்புமகள் ஷாலினியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
திராவிட மாடல் திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்கொடுமை, படுகொலை, நகை பறிப்பு உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு முற்று முழுதாகச் சீரழிந்துள்ளது. நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, கும்மிடிப்பூண்டி பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை என்று அடுத்தடுத்து தொடரும் பெண்கள் மீதான கொடுமைகளின் உச்சமாகத் தற்போது இராமேசுவரத்தில் பட்டப்பகலில் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுக்கும் துணிவு சமூக விரோதிகளுக்கு எங்கிருந்து வருகின்றது? பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு அதனை அலட்சியம் செய்வது ஏன்? ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு கடுமையான நடவடிக்கை எடுப்பது போலத் திமுக அரசு நடத்தும் நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரப்போகிறது? பெண்கள் மீதான வன்முறைகள் நடைபெறாமல் தடுக்கவும், குறைக்கவும் திமுக அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது? அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமான மதுக்கடைகளை மூடுவதற்குத் திமுக அரசிற்கு இன்னும் என்ன தயக்கம்?
பெண்கள் மீதான வன்முறையில் இந்தியாவிலே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கத்தால் சாமானிய மனிதரையும் சமூக விரோதியாக உருமாற்றியதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டுகாலச் சாதனையாகும். திமுக ஆட்சி தொடரும் கடைசி நாள்வரை பெண்கள் மீதான இத்தகைய கொடும் வன்முறைகள் தொடருமோ? என்று பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஆகவே, இராமேசுவரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி அன்புமகள் ஷாலினியை பட்டப்பகலில் படுகொலை செய்த கொடூரன் முனியராஜ் மீதான வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தாமல், அதிவிரைவாகக் கடும் தண்டனையைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியும், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான கொடும் வன்முறைகள் தொடராமல் தடுக்க உடனடியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்திச் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சென்னையில் இயங்கி வரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க திமுக அரசு முயல்வது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயல்!
@CMOTamilnadu
@mkstalin
சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பந்தாங்கல் பரணிபுதூர் கல்லூரி சாலையில் இயங்கிவரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடித்துவிடுவேன் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிரட்டல் விடுக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அன்பின் திருவுருவம் அன்னை தெரசா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுக் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கிவரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தற்போது 400க்கும் முதியோர்கள் பயன்பெற்று வரும் நிலையில், அதனை இடித்துவிடுவேன் என்று திமுக அமைச்சரே நேரில் சென்று மிரட்டல் விடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆதரவற்ற முதியோர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து, எவ்வித குறையுமின்றி அரவணைக்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். ஆனால், திராவிட மாடல் திமுக அரசு அதனைச் செய்யத்தவறியதோடு, தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் ஆதரவற்ற முதியோர்களை அரவணைக்கும் அரும்பணியையும் முடக்க முயல்வது வெட்கக்கேடானது.
கடந்த 35 ஆண்டுகளில் ஏறத்தாழ 10,00க்கும் மேற்பட்ட முதியோர்களை ஆதரித்து அரவணைத்த ‘லிட்டில் டிராப்ஸ்’ முதியோர் இல்லம் நகரின் முதன்மையான இடத்தில் அமைந்திருப்பதால் அதனை எப்படியாவது இடித்துவிட்டு, அவ்விடத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடனேயே இத்தகைய முயற்சிகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈடுபடுவதாக முதியோர் இல்லப் பொறுப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், முதியோர் இல்லத்தைச் சுற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்துள்ள தனியார் கட்டுமான பெருநிறுவனம், முதியோர் இல்லத்தை இடித்து அதன் வழியாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்க முயல்வதாகவும், அதற்கு அமைச்சர் துணைநிற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பெருமுதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக, தன்னலமற்று தொண்டு புரியும் முதியோர் இல்லத்தை முடக்குவதற்குப் பெயர்தான் திராவிட மடலா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, தனியார் கட்டுமான பெருநிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கைவிட்டு, ‘லிட்டில் டிராப்ஸ்’ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கரூர் வெண்ணைமலை பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கரூர், வெண்ணைமலை பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேல், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளைக் கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசு அகற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் அருகேயுள்ள 550 ஏக்கர் நிலங்களில் ஏறத்தாழ 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு என்றுகூறி வீடுகளை விட்டு அம்மக்களை திமுக அரசு வெளியேற்ற முயல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். கோயில்கள் நிறைந்த கரூர் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் ஜமீன் உரிமை வழங்கப்பட்டுக் கோயில் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஜமீன் உரிமை பெற்றிருக்கும் தேவஸ்தானத்திற்குக் குறிப்பிட்ட நிலங்களின் மேல் வரிவசூல் செய்யும் உரிமையானது 1802 முதல் சட்டப்படி வழங்கப்பட்டிருந்தது. குடியிருக்கும் உரிமையானது அனுபவத்திலிருந்த விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்டு, தேவஸ்தானத்திலிருந்து ஒவ்வொரு வருவாய் வருடத்திற்கும் வரி வசூல் செய்யப்படுவதோடு, விவசாயிகளுக்குப் பட்டா வழங்கப்பட்டுப் பத்திரப்பதிவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு விடுதலை பெற்ற பிறகு நில சீர்திருத்தச் சட்டங்கள், ஜமீன் ஒழிப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு குடி உரிமை பெற்றிருந்த விவசாயிகளுக்கு நில உரிமையை முழுமையாக்க வழிவகைச் செய்யப்பட்டது. ஆனால் தேவஸ்தான நிர்வாகிகள் சிலர் மக்களின் அறியாமையினைப் பயன்படுத்தி, நில சீர்திருத்தச் சட்டங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் தடுத்து விட்டனர். அதன் காரணமாக அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் சட்டப்படி பட்டா பெற உரிமை பெற்றிருந்தும் இன்றுவரை பட்டா பெற முடியாமல் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திச் சிலர் உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திமுக அரசு வலுவான வாதங்களை முன்வைக்கத் தவறியதன் காரணமாக, அவ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று முடிவு செய்த நீதிமன்றம் குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க நீதிமன்றத்தில் சரியான வாதங்களை வைக்கத் தீவிரம் காட்டாத திமுக அரசு, நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி மக்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற வீடுகளுக்கு முத்திரை வைக்கும் பணியை அதிவேகமாகச் செய்துவருவது, இந்த அரசும் ஆட்சியும் யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது. திமுக அரசிற்கு மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை மூலம் நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன் வைத்து, தக்க ஆவணங்களை அளித்திருந்தால் சொந்த நாட்டு மக்களையே அகதிகள் போல வெளியேற்றும் அவலநிலை ஏற்பட்டிருக்காது.
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.
ஆகவே, கரூரில் கோயில் நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அகற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட்டு, குடியிருப்புகளை அகற்றும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறன்.
தங்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வெண்ணைமலை பகுதி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவை அளித்துத் துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்களின் நல்வாழ்வை அழித்தொழித்து அமைப்பவை தொழிற்பேட்டைகள் அல்ல, கல்லறைத்தோட்டங்கள்; கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கடலூரில் ஏற்கனவே உள்ள அரசு தொழிற்பேட்டை (சிப்காட்) அருகே மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கடலூரில் ஏற்கனவே அமைந்துள்ள வேதிப்பொருள் தொழிற்சாலைகளால் கடலூர் நகரமே வாழத் தகுதியற்ற நரகமாக மாறிவரும் கொடுஞ்சூழலில் மீண்டுமொரு தொழிற்பேட்டை அமைப்பதென்பது கடலூர் நகரையே முற்றுமுழுதாக அழிக்கவே வழிவகுக்கும். திமுக அரசு பொறுப்பேற்ற நான்காண்டு ஆட்சிக்காலத்தில் உயிர் வாழ உணவளிக்கும் வேளாண் நிலங்களை அழித்து, அதன்மீது தொழிற்சாலைகளை நிறுவும் எதேச்சதிகாரப்போக்கு அடுத்தடுத்து தொடர்வது கொடுங்கோன்மையாகும்.
திமுக அரசு ஆட்சி அதிகார பலத்தைப் பயன்படுத்தி கோவை மாவட்டம் அன்னூரில் 3,500 ஏக்கர் விளை நிலங்களை அழித்து புதிதாகத் தொழிற்வளாகம், திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலங்களை அழித்து புதிய தொழிற்சாலைகள், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4550 ஏக்கர் நிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் 3034 ஏக்கரில் 5வது தொழிற்வளாகம், ஆவடி அருகில் குடியிருப்புகளை அழித்து புதிய தொழிற்வளாகம் என்று வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களையும், மக்கள் வாழும் குடியிருப்புகளையும் வலுக்கட்டாயமாகப் பறிக்கும் கொடுங்கோன்மைச்செயல்கள் தொடர்ந்து வருகிறது.
அக்கொடுஞ்செயல்களின் நீட்சியாக தற்போது கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தொழிற்பேட்டை அருகே மேலும் 1119 ஏக்கர் பரப்பளவில் மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்துள்ளது திமுக அரசு.
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என
‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்’ பிரிவு - 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடி நீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்ப்பதுபோல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு அடுத்தடுத்து வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்வளாகம் அமைக்க முயல்வது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஏற்கனவே, கடலூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள வேதிப்பொருள் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால் கடலூர் முழுவதும் நிலமும், நிலத்தடி நீரும் நச்சுத்தன்மை உடையதாக மாறி நிற்கிறது. வேளாண்மை செய்ய முடியாமலும், நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வேதிப்பொருள் தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகையாலும், கழிவுநீர் கலந்த மாசடைந்த குடிநீராலும் கொடுநோய்களால் கடலூர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டையையே இழுத்து மூட வேண்டுமென்று கடலூர் மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ப்போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதனை செய்ய மறுத்துவரும் திமுக அரசு, மீண்டுமொரு நச்சுத் தொழிற்பேட்டையை அமைக்க முயல்வது கடலூர் நகரத்தை வாழத்தகுதியற்ற பகுதியாக்கி அங்கு மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டியச் சூழலை ஏற்படுத்திவிடும்.
அரசு, ஆட்சி, அதிகாரம், தொழில், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் நாட்டு மக்களை நல்வாழ்விற்கானது தவிர, தொழிற்சாலைகளுக்காக மக்கள் தோன்றவில்லை. தொழிற்சாலை இன்றி மக்களால் வாழ முடியும். ஆனால், மக்கள் இன்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்காது. எனவே, மக்களை அழித்தொழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் அனைத்தும் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறிநிற்கும்.
ஆகவே, கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்து இரண்டாவது தொழிற்பேட்டையை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகின்றேன். இல்லையென்றால்
சிப்காட் தொழிற்பேட்டையை எதிர்க்கும் கடலூர் மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை
நாம் தமிழர் கட்சி என்னுடைய தலைமையில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து, சவுதி அரேபிய நாட்டின் மெக்கா நகருக்கு புனிதப்பயணம் சென்ற 45 இசுலாமியப் பெருமக்கள், மதினா நகர் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கி மரணித்த பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அவர்களில் 9 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 18 இசுலாமியச்சொந்தங்கள் மரணித்துள்ளனர் என்ற துயரச்செய்தி இதயத்தை கனக்கச்செய்கிறது.
இப்பெருந்துயர நிகழ்வில் மறைவெய்திய இசுலாமியப்பெருமக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
உயிரிழந்த இசுலாமியப் பெருமக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் 30,௦௦௦ காலிப்பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 4622 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்தால் 3.5 இலட்சம தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது ஆட்சியில் அமர்த்திய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசுத்துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் நிரப்பி வருகிறது. முந்தைய அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 4 இலட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இளைஞர்கள் பலரும் அரசுப்பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் மூன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 10,300 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்து ஏமாற்றியது. குறைந்தபட்சம் 15000 பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த திமுக அரசு, 2023 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு நடத்தாமல் போட்டித் தேர்வர்கள் வயிற்றில் அடித்தது. அதனைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 9532 காலிப்பணியிடங்களை மட்டுமே நிரப்பி வஞ்சித்தது. இந்நிலையில் ஆட்சி முடியும் நடப்பு கடைசி ஆண்டிலாவது திமுக அரசு குறைந்தபட்சம் 30,000 பணியிடங்களையாவது நிரப்பும் என்று தேர்வெழுதும் இளைஞர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு மிகமிக குறைந்த அளவாக வெறும் 3945 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவித்து திமுக அரசு அதிர்ச்சியளித்தது. அதன்பின், பிற்சேர்க்கையாக கூடுதலாக 747 இடங்களை சேர்த்து மொத்தம் 4622 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று தற்போது அறிவித்துள்ளது. இதனால் அரசுப்பணி கனவு நனவாகும் என்று நம்பிக்கையோடு, இரவு பகலாக கண்துஞ்சாது படித்து, கடுமையாக உழைத்த அன்பு தம்பி தங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் அரசுத்துறைகளில் பல இலட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப் 4 தேர்வில் அதிக காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு முன்வாராதது ஏன்? முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மிகக்குறைந்த பணியிடங்களை நிரப்புவது ஏன்? கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3.5 இலட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்குவோம் என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றப்போவது எப்போது? கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசால் நிரப்பப்பட்ட காலி பணியிடங்களை விட, ஓய்வு பெறுவதினால் உருவான காலி பணியிடங்கள் பன்மடங்கு அதிகம். அரசுத்துறைகள் சிறப்பாகச் செயல்பட ஊழியர் பற்றாக்குறையைப் போக்கி காலி பணியிடங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டுமா இல்லையா? திமுக அரசு இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் போட்டித்தேர்வு வாயிலாக அதிகளவு பணியிடங்களை நிரப்புவதில் உரிய அக்கறை காட்டாதது ஏன்? என்ற கேள்வி ஒவ்வொரு இளைய தலைமுறை பிள்ளைகளிடமும் எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு தங்களின் வாழ்நாள் இலட்சியமாக அரசுப்பணி போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, இன்று கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆதி நீயே!
ஆழித் தாயே!
கடல்சூழ் உலகு!
காப்பதே அழகு!
நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கூத்தன்குழியில் கடலம்மா மாநாடு-2025 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!
கடலம்மா மாநாடு சிறக்க வேண்டும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பூதலூர் வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்ற தண்ணீர் மாநாடு-2025
youtu.be/Dnn-m7qwrUE -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாலி நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
மாலி நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 5 தமிழர்களை அந்நாட்டுப் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திய செய்தி அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கின்றது. கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க இந்திய ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.
குடும்ப வறுமை காரணமாக மேற்கு ஆப்ரிக்க நாடான மாலி நாட்டிற்குப் பணிக்குச் சென்ற தென்காசி மாவட்டம், கடையநல்லூர், முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, கண்மணியாபுரத்தை சேர்ந்த தளபதி சுரேஷ், மற்றும் துாத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து உள்ளிட்ட 5 தமிழர்களை முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றதால், அவர்களின் குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கடத்தப்பட்டு 5 நாட்களாகியும், கடத்தப்பட்டவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் இதுவரை தொடர்புகொள்ள முடியாததால், அவர்களின் நிலை என்னவென்று அறியாது குடும்பத்தினர் தவித்துப்போயுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலமுறை புகாரளித்தும் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்துவது அவர்களின் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி, வறுமையில் வாடும் ஆப்ரிக்காவின் மாலி நாட்டிற்கு பிழைப்பு தேடி செல்லும் நிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை தள்ளியதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இரட்டை இலக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), பொருளாதாரத்தில் இரு மடங்கு வளர்ச்சி, பல்லாயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு, பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்றெல்லாம் வெற்று விளம்பரம் செய்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் இதுதானா?
மூன்று இலட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி என்னானது? அதனை திமுக அரசு நிறைவற்றியிருந்தால் இத்தகைய இழிநிலை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்குமா? உயிருக்கு ஆபத்தான மாலி நாட்டிற்கு வேலை தேடி செல்லும் நிலைக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களை ஆளாக்கியதுதான் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் மூலமும், இந்திய ஒன்றிய அரசு வெளியுறவுத்துறை மற்றும் மாலியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
டெல்லி, செங்கோட்டையில் வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 13 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தியானது பேரதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் தருகிறது. ஒட்டுமொத்த நாட்டையே பெருந்துயரத்திற்குள் ஆழ்த்தியிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். வெளிவரும் அப்பெருந்துயரின் காட்சிகள் யாவும் மனதைக் கலங்கச் செய்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, இத்துயரில் பங்கெடுக்கிறேன். காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
#redforttragedy:
The news that 13 people were killed and more than 20 were injured in a vehicle bomb blast near the Red Fort in Delhi is deeply shocking and extremely painful. This horrific incident, which has plunged the entire country into great sorrow, is an unacceptable atrocity. The emerging visuals of this great tragedy are deeply distressing.
I express my condolences to the families of those who lost their lives and share in their grief. I wish a speedy recovery for those who were injured and have been admitted to the hospital.
#delhiblast | #redfort
#delhiattack | #delhitragedy
#redfortattack -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து
இனமான பணியாற்றிடுவோம்!
அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!
தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்தநாளான 26-11-2025 அன்று,உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.
தலைவர் பிறந்த நாளினை, தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 10ஆம் நாள் 26-11-2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஏபிசா திருமண மண்டபத்தில் கொண்டாடப்படவிருக்கும் தமிழர் எழுச்சி நாள் விழாவில், குருதிக்கொடைப் பாசறை சார்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்படவிருக்கிறது.
அதேபோன்று, குருதிக்கொடைப் பாசறை ஒவ்வொரு ஆண்டும் தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் முகாம்களில் இவ்வாண்டும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்.
அதேபோன்று, தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் ஈகத்தைப் போற்றும் மாவீரர் நாளன்று (27-11-2025) முன்னெடுக்கப்படும் குருதிக்கொடை முகாம்களிலும், நம் குருதியைக் கொடையாகத் தந்து மக்கள் உயிர் காத்து, நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.
மாவீரர் சிந்திய குருதி! ஈழம் வெல்வது உறுதி!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த,
முன்னாள் முதல்வர், தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும்,
முன்னாள் முதல்வர், பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் பெருமதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், பேராசான் பெருமதிப்பிற்குரிய அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் கி.வெங்கட்ராமன் அவர்களுக்கும்,
முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான மதிப்பிற்குரிய அம்மையார் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும்,
தமிழ் மாநில காங்கிரசு தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா கோ.க.வாசன் அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கும்,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும்,
காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய மாமா சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும்,
எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா தா.ரா.பாரிவேந்தர் அவர்களுக்கும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும்,
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,
பாஜக தேசிய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய அண்ணன் இரா.சரத்குமார் அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா கோ.க.மணி அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் மதிப்பிற்குரிய சகோதரி ஸ்ரீ காந்தி இராமதாசு அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும்,
புதிய நீதிக்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா சு.ப.வேலுமணி அவர்களுக்கும்,
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா செங்கோட்டையன் அவர்களுக்கும்,
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி நெல்லை முபாரக் அவர்களுக்கும்,
அரசியல் திறனாய்வாளர் அன்பிற்குரிய அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கரு.நாகராஜன் அவர்களுக்கும்,
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலச் செயலாளர், பேரன்பிற்குரிய அண்ணன் கராத்தே தியாகராஜன் அவர்களுக்கும்,
முன்னாள் ஒன்றிய அமைச்சர் அன்பு அண்ணன் நெப்போலியன் அவர்களுக்கும்,
பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவனப்பிரிவு மாநில அமைப்பாளர் மதிப்பிற்குரிய ஐயா இரா.அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,
தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் இயக்குநர் வ.கௌதமன் அவர்களுக்கும்,
மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநிலச்செயலாளர் அன்புத்தம்பி கவிஞர் சினேகன் அவர்களுக்கும்,
பாமக இளைஞர் சங்கத்தலைவர் அன்புத்தம்பி ம.தமிழ்க்குமரன் அவர்களுக்கும்,
புரட்சி தமிழகம் தலைவர் அன்பு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும்,
சிறுபான்மை மக்கள் நலக்கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புச்சகோதரர் பேராயர் ஆர்.சாம் ஏசுதாஸ் அவர்களுக்கும்,
தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புத்தம்பி மு.யுவராஜா அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும்,
நமது மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் அன்புத்தம்பி ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கும்,
தமிழர் சேனைக் கட்சித் தலைவர் அன்பு அண்ணன் எரிமலை மு.இராமச்சந்திரன் அவர்களுக்கும்,
முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி கவிக்குமார் அவர்களுக்கும்,
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் அன்புத்தம்பி திருமாறன் அவர்களுக்கும்,
தமிழ்நாடு பரையர் சங்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் அ.சுதர்சன பரையனார் அவர்களுக்கும்,
சென்னை அரிமா சங்க ஆளுநர் ஐயா முகமது நவீன் அவர்களுக்கும்,
அன்பு அண்ணன் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும்,
தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும்,
சமூகச் செயற்பட்டாளரும் திரைக்கலைஞருமான கஸ்தூரி அவர்களுக்கும்,
அன்புத்தம்பி திரைக்கலைஞர் மீசை ராஜேந்திரன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சுப்ரமணியம் சிவா அவர்களுக்கும்,
அன்புத்தம்பி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அவர்களுக்கும்,
அன்பிற்குரிய இளவல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும்,
இயக்குநரும் எழுத்தாளருமான அன்புத்தம்பி பாலமுரளிவர்மன் அவர்களுக்கும்,
இயக்குநரும் கவிஞருமான அன்புத்தம்பி தபூ சங்கர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் கீரா அவர்களுக்கும்,
இயக்குநர் அருள்ராஜன் அவர்களுக்கும்,
இயக்குநர் சண்முகம் முத்துசாமி அவர்களுக்கும்,
பாசமிகு தம்பி இயக்குநர் ஆதம் பாவா அவர்களுக்கும்,
இயக்குநர் அன்புத்தம்பி ஜெகன் அவர்களுக்கும்,
மூத்த பத்திரிகையாளர் ஐயா பா.ஏகலைவன் அவர்களுக்கும்,
ஊடகவியலாளர் அன்புத்தம்பி அரவிந்தக்ஷன் அவர்களுக்கும்,
ஊடகவியலாளர் அன்புத்தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களுக்கும்,
எழுத்தாளர் அன்புத்தம்பி வாசு முருகவேள் அவர்களுக்கும்,
எழுத்தாளர் அன்புத்தம்பி ஏர் மகராசன் அவர்களுக்கும்,
சமூகச் செயற்பட்டாளர் அன்புச்சகோதரி ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய தம்பிகள் மாதேஷ், அருள்மொழிவர்மன், கிஷோர் கே சாமி, பாரிசாலன், வழக்கறிஞர் நெல்சன், மகா பிரபு, கெவின் பால், பிரதாப், சரவணன், ராகவேந்திரன், கயல் தேவராஜ் ஆகியோர்க்கும்,
அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும்,
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும்,
புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், நியூஸ் தமிழ் 24x7, ராஜ் நியூஸ், சத்யம், கலாட்டா, இராவணா வலையொளி, லைன்ஸ் மீடியா, டி.என். நியூஸ் 24/7 உள்ளிட்ட செய்தி ஊடகங்களுக்கும்,
நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும், செய்தி அனுப்பியும் அன்பைப் பகிர்ந்து கொண்ட உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.
பேரன்பின் நெகிழ்வில்,
உங்கள் சீமான் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குப்பை மேடான திருப்பூர்; கோயில் நகரத்தைக் குப்பை மேடாக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!
@CMOTamilnadu @mkstalin
5000 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமை வாய்ந்த தொன்தமிழ் நகரமான மதுரை மாநகரம் இந்தியாவின் தூய்மையற்ற நகரங்களில் முதலிடம் பிடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, பாண்டிய மன்னர்கள் கட்டிக்காத்த கோயில் மாநகரமாம் மதுரை திராவிட மாடல் ஆட்சியில் குப்பை நகரமாக மாறி நிற்பதுதான் வரலாற்றுப் பெருங்கொடுமை!
இந்திய ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட 'தூய்மை ஆய்வு 2025' அறிக்கையின்படி, அசுத்தமான நகரங்களில் மதுரை முதலிடத்தையும், தலைநகர் சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. சிங்கார சென்னை என்று சொல்லிச் சொல்லி 60 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நீர்நிலைகளை அழித்து, சுற்றுச்சூழலை சீர்கெடுத்து வாழத்தகுதியற்ற நகரமாகச் சென்னையை மாற்றியுள்ளது திராவிட மாடல் அரசு. வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னை முழுவதும் கொடுநோய்களை உண்டாக்கும் மோசமான தொழிற்கழிவுகளால் நிரம்பி வழிவது பேரவலத்தின் உச்சம்.
சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களும் கழிவுநீராலும், குப்பைகளாலும் நிரம்பி தமிழ்நாடே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. திராவிடக் கட்சிகள் 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை ஆண்ட பிறகும் கழிவுநீரை அகற்ற முறையான திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. மக்கள் பயன்படுத்தும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் எதுவும் தீட்டப்படவில்லை. நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீரை திராவிட அரசுகளால் தடுக்க முடியவில்லை. விளைவாக தமிழ்நாட்டிலுள்ள நகரங்கள் அனைத்தும் சுகாதாரம் சீர்கெட்டு மக்களுக்குக் கொடுநோய்களை ஏற்படுத்தும் நரகங்களாக மாறிநிற்கின்றன.
குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகள் கடந்த 15 ஆண்டுகளாக பாறைக்குழிகளிலேயே கொட்டப்படுகின்றன. இதனால், பாறைக்குழிகள் நிரம்பி, நிலம், நீர், காற்று ஆகியவை அனைத்தும் முற்று முழுதாகச் சீர்கெட்டுள்ளது. பொது மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக திருப்பூர் எல்லையைக் கடந்து, ஊத்துக்குளி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்ட முயற்சித்து, அதற்கும் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது வேறு வழியின்றி மீண்டும் பாறைக் குழிகளிலேயே கொட்டப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திமுக - அதிமுக இரு கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மழைநீரை வெளியேற்றவும், கழிவுநீரைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யவும், திடக்கழிவுகளை முறையாக அகற்றவும் உரிய உட்கட்டமைப்புகளைச் செய்யத்தவறியதோடு, ஆண்டுதோறும் அதற்கென ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடிகளை, ஊழல் முறைகேடு செய்ததன் விளைவே, தமிழ்நாட்டு நகரப்பகுதிகள் வாழத்தகுதியற்ற நிலமாக, கழிவு தேங்கிய நகரங்கள் என இழிவைத் தாங்கி நிற்பதற்கு முதன்மைக் காரணமாகும்.
ஆகவே, திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை மக்களுக்கு இடையூறு இல்லாது பாதுகாப்பாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியேனும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, கழிவுநீர், குப்பைகள், மழைநீர் தேக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் மக்களின் நல்வாழ்வினை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையை தம் கலைத்திறனால் கட்டி ஆளும் உலக நாயகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், என் பேரன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்!
நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்!
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி!
இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்,
திரைத்துறையின் பேராளுமை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
மாநிலங்களவை உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மக்களை மகிழ்விக்கும் கலைப்பணியோடு, அரசியல் பணியும் சிறக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@ikamalhaasan -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன்று ஐப்பசி 20ஆம் நாள் 06-11-2025 காலை சென்னை வடபழனியில் அமைந்துள்ள பீமாஸ் உண்டுறை விடுதி (Hotel Bhimaas Temple Tree) அரங்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, லீபுரம் ஊராட்சி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி பிரின்ஸ் அவர்களின் தாயார் அம்மா மேரி கிறேஸி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா மேரி கிறேஸி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கோவை மாநகராட்சி சொக்கம்புதூரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
திமுக அரசு கோவை மாநகராட்சி மூலம் சொக்கம்புதூரில் 2000 மாணவர்கள் படிக்கும் பள்ளியும், 5000 மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளதற்கு அருகில், பாதாள சாக்கடை கழிவுகளையும், மலக்கழிவுகளையும் கொண்டுவந்து கழிவுநீர் பண்ணை அமைத்து, சுத்திகரிப்புப் பணிகள் செய்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றானது பல்வேறு நுரையீரல் தொற்றுநோய்களை ஏற்படுத்துவதால் இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடுமையாகப் போராடியும், இன்றுவரை அதனை அகற்ற திமுக அரசு மறுத்து வருகின்றது. மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, வேறு எங்கும் இல்லாத பேரவலம்.
பள்ளிக்கூடம், வழிபாட்டுத்தலங்கள், வணிகதலங்கள், மக்கள் குடியிருப்புகள் அருகே உள்ள நிலையில் நிலத்தையும் - நீரையும் நாசப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனிற்கும் கேடு விளைவிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அங்கே அமைப்பது ஏன்? அரசுக்குச் சொந்தமான யாரும் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான பல இடங்கள் உள்ள நிலையில், அவற்றையெல்லாம் விடுத்து மக்கள் நெருக்கமான இடங்களிலேயே கழிவுநீர் சுத்திகரிக்கவும், குப்பைகளை எரிக்கவும் திமுக அரசு இடம் தேர்வு செய்வது ஏன்? என்ற அம்மக்களின் கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?
மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களை நகரத்திற்கு பல கிமீ தூரத்திற்கு வெளியே ஆள் அரவமற்ற இடத்தில் வைக்கும் திராவிட மாடல் திமுக அரசு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றை நகரத்திற்கு நடுவே மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அமைத்து மக்களின் நலத்தை மேலும் கெடுப்பதுதான் மற்றுமொரு பெருங்கொடுமை. நகரத்தை தூய்மை செய்வதே மக்களின் நலன் காப்பதற்குத்தானே? கழிவுநீரை அகற்றுவது எந்த அளவிற்கு முதன்மையானதோ, அதே அளவிற்கு மக்களின் உடல் நலனைக் காப்பதும் முதன்மையானது அல்லவா? மக்கள் நலனைக் கெடுக்கும் வகையில் கழிவுகளை அகற்ற முனைவது அறிவுப்பூர்வமாக இயங்கும் எந்த அரசும் செய்யாது.
ஆகவே, திமுக அரசு கோவை மாநகராட்சி சொக்கம்புதூரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாகக் கைவிட்டு, அதனை ஊருக்கு வெளியே மக்கள் பயன்படுத்தாத பகுதியில் அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் சிதைந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக சீரமைத்து தர வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
கடந்த 1972 ஆம் ஆண்டு பெருந்தமிழர் ஐயா சுப.துரைக்கண்ணு அவர்களின் முயற்சியால் சிவகங்கை மாவட்டம் சித்தலூரில் தொடங்கப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியானது தற்போது சிதைந்து இடியும் நிலையில் உள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஏழைக்குழந்தைகள் படிக்கும் பள்ளியைச் சீரமைக்கக்கோரிப் பல முறை பெற்றோர்கள் மனு அளித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
சித்தலூர் அரசுப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் படித்து வந்த நிலையில், அடிப்படை வசதிகள் சரிவரச் செய்து தரப்படாமையால் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்தது. போக்குவரத்து வசதி இல்லாததாலும், பழைய கட்டிடங்கள் இடியும் சூழலில் உள்ளதாலும் பக்கத்துக் கிராம மாணவர்கள் யாரும் படிக்க முன் வராததால் வெறும் 44 மாணவர்களே தற்போது பயில்கின்றனர். இந்நிலையில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த அப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வளர்ச்சி குழுவினை உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டி போக்குவரத்து வசதி ஏற்படுத்தியதால், மாணவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது, என்றாலும் அது போதுமானதாக இல்லை.
சிதைந்து நிலையிலிருந்த ஆரம்பப்பள்ளி பெருமழையின் காரணமாக மேலும் சேதமடைந்து, மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்ததால், ஆரம்பப்பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்று உயர்நிலைப்பள்ளியின் கணினி அறையில் கடந்த ஓராண்டாகப் பாடம் நடத்தி வந்தார்கள். தற்போது பெய்த மழையில் அக்கட்டிடமும் இடிந்து விழ தொடங்கியதால் தற்போது நாடகமேடையில் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பாடம் பயிலும் அவலநிலை பெருங்கொடுமையாகும்.
சித்தலூர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய குழந்தைகள் படிக்கும் பல ஆயிரம் பள்ளிகள் இத்தகைய மோசமான நிலையிலேயே உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைச் சீரமைக்காமலும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராமலும், திமுக அரசு நடிகர்களை வைத்துக் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வெற்று விளம்பரம் செய்வது நகைப்புக்குரியதாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் சிதைந்த நிலையிலுள்ள அரசுப்பள்ளிக்கூடத்தை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து, அவர்களின் 4 படகுகலையும் பறித்துள்ளது, வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுவதும், தாக்கப்படுவதும், உடைமைகள் பறிக்கப்படுவதும் என சிங்கள கடற்படையின் இனவெறி கொடுமைகள் தொடர்வது இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொள்வது ஏன்? வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்து பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?
இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவச்சொந்தங்களை இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவச்சொந்தங்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத், மராத்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்? காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்காதது ஏன்?
ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படை நம் மீனவச்சொந்தங்களை கைது செய்வது, தமிழ் மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். அக்கொடுமையினை ஒன்றிய - மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?
ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பா. விஜயகுமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றிவந்த பா.விஜயகுமார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி விஜயகுமார் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் ஜமீன்தார் மறைந்த போற்றுதற்குரிய ஐயா திருஞானசம்பந்தர் பந்தாரியார் அவர்களின் இளைய மகன் பெருமதிப்பிற்குரிய ஐயா
மகேந்திர பந்தாரியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஏழை எளிய மக்களுக்கு பேருதவிகள் பல செய்து மக்கள் தொண்டாற்றிவந்த
ஐயா மகேந்திர பந்தாரியார் அவர்களின் மறைவு, அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்டுள்ள ஈடுசெய்யவியலாத இழப்பாகும்.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், வேட்டவலம் பகுதிவாழ் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய ஐயா மகேந்திர பந்தாரியார் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கோவை மாநகரம் வானூர்தி நிலையம் அருகே நேற்றிரவு (02-11-2025) ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுகிறது. பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாடமுடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் நாளும் அரங்கேறுகின்றது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுநிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பிறகும் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததே தற்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அவலம் நிகழ அடிப்படை காரணமாகும்.
அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க முடியாமல் இந்த குற்றங்களை ஒழிக்கவே முடியாது. மதுவையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கக்கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? போதைப்பொருட்களை ஒழித்து சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டிய காவல்துறை ஆளும் கட்சியின் அதிகாரக் கண்ணசைவுக்குச் சேவை செய்யும் ஏவல்துறையாகச் செயல்பட்டு எதிர்க்கட்சியினரை, அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை, சமூக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு புனைந்து சிறைப்படுத்துவதையே முழு மூச்சாக செய்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? இதுதான் பெண்களின் வாழ்வை முன்னேற்றும் திமுக அரசின் செயல்முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
ஆகவே, கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ரா.காளிதாஸ் அவர்களின் தாயார் அம்மா ரா.உண்ணாமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆரூயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ரா.உண்ணாமலை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு, ஐப்பசி 15ஆம் நாள் 01-11-2025 அன்று மாலை 05 மணியளவில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாட்டுக் கொடியேற்றத்துடன் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
youtu.be/4gHXSJ9WI0Y -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி!
பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி!
நீரின்றி அமையாது உலகு!
நினைவில் நிறுத்திப் பழகு!
தண்ணீர் மாநாடு - 2025
நாள்: ஐப்பசி 29 | 15-11-2025
இடம்: வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடல்
பூதலூர், திருவையாறு -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!
தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!
இன்சொல்லாலும், புன்சிரிப்பாலும் எல்லோரையும் ஆரத்தழுவி அரவணைத்து, போர்க்களத்திலும் புன்னகைத் தவழ களமாடிய மாசற்ற போராளி!
‘உயிர் உன்னதமானதுதான்! அதனினும் உன்னதமானது எமது உரிமை, சுதந்திரம், கௌரவம்’ எனும் தேசியத் தலைவனின் சத்திய மொழிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த மாவீரர்!
தமிழீழ நாட்டின் தலைமை தூதுவன்! தலைவனின் வார்ப்பு!
அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி!
தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது வரலாற்று பெரும்பழியைச் சுமத்தியுள்ளது இனவெறி பாகுபாட்டின் உச்சமாகும். பிரதமர் மோடி தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே ஒடிசா மாநிலத் தேர்தலின்போது தமிழர்களைத் திருடர்கள் என்றும், ஓடிசாவை தமிழன் ஆளலாமா? என்றும் இன வெறுப்பை விதைத்த பிரதமர் மோடி, அதன் நீட்சியாக தற்போது தமிழர்களை வன்முறையாளர்களாக, கட்டமைப்பது, தமிழினத்தை இழிவுப்படுத்தும் கொடுஞ்செயலாகும். வந்தாரை வாழ வைத்ததோடு, ஆளவும் வைத்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகந்தழுவி நேசித்து நின்ற ஓர் இனத்தை திருடர்கள், வன்முறையாளர்கள் என குற்றம் சுமத்துவது தமிழ் இனத்திற்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக வெளியான காணொளிகள் அனைத்தும் பொய்யானது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது பிரதமர் மோடிக்கு தெரியாதா? உங்கள் கூட்டணியின் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அனுப்பிய ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் அப்படி எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தது தெரியாதா? அப்போலி காணொளிகளைப் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியாதா? பீகார் சட்டமன்றத்திலேயே அவை போலிக் காணொளிகள் என்று ஒப்புக்கொண்டதுதான் பிரதமருக்கு தெரியாதா? அவையெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு அவதூறை பிரதமர் மோடி பரப்புவது தமிழர் விரோதப்போக்கன்றி வேறென்ன?
உண்மையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதில்லை. பீகாரிகள் உள்ளிட்ட வடமாநிலத்தவரால் தமிழர்கள்தான் தாக்கப்படுகின்றனர் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியுமா? தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வடவர்கள்தான் என்பது பிரதமருக்குத் தெரியுமா? கலவரம் செய்தவர்களைக் கட்டுப்படுத்தச் சென்ற தமிழ்நாடு காவல்துறையினரையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கினர் என்பதாவது பிரதமருக்கு தெரியுமா? அப்போதெல்லாம் பிகாரிகள் தமிழர்களைத் தாக்குகின்றனர் என்று பேசாத பிரதமர் மோடி, வடவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் வன்முறைகள் தவறு என்று பேசாத பிரதமர் மோடி, தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற ஒரு பச்சை பொய்யைக் கூறுவது எதனால்? அற்ப தேர்தல் வெற்றிக்குத்தானே?
இராமநாதபுரத்தில் மீனவப்பெண் வடவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது வாய் திறவாத மோடி, அம்பத்தூரிலும், ஈரோட்டிலும் தமிழகக் காவலர்களை வடவர்கள் தாக்கியபோது பேசாத பிரதமர் மோடி, வட மாநிலங்களில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ்ப்பிள்ளைகள் வடவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, வடமாநிலங்களில் விளையாடச் சென்ற தமிழக கபடி வீரர்கள், வடவர்களால் தாக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத மோடி, முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொடர்வண்டி இருக்கைகளை ஆக்கிரமித்து வடவர்கள் அட்டூழியம் செய்தபோது அமைதி காத்த மோடி, ஆந்திராவில் 20 தமிழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், கேரளாவிலும் கர்நாடகாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டு அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டபோதும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும், சிறைப்படுத்தப்படுவதும் தொடர்வது குறித்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத பிரதமர் மோடி, எந்தவொரு குற்றமும் செய்யாத தமிழர்களை மட்டும் வன்முறையாளர்களாக, திருடர்களாகக் கட்டமைப்பது தமிழர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு அன்றி வேறென்ன? இத்தனை காலமும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து பிளந்த பாஜகவும், பிரதமர் மோடியும், இனி அது எடுபடாது என்று தெரிந்தவுடன் வடவர்களின் வாக்குகளைப் பெற இந்தி பேசும் மக்களிடம் இனவெறியைத் தூண்டுகின்றனர்.
இந்தியப் பிரதமரின் பொய்ப்பேச்சு, தமிழர்களைத் திருடர்கள், வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் எண்ண வழிவகுக்காதா? இந்திய அரசமைப்பின் மீது உறுதியேற்று, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களுக்குமான பிரதமர் ஓர் இனத்தை மட்டும் குறி வைத்து பொய்யைப் பரப்புவது உலக அரங்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே இத்தகைய அவதூற்றைப் பரப்பி வருகிறாரா?
இதுதான் பிரதமர் மோடி தமிழர்களுக்குத் தரும் மதிப்பா? இதுதான் இந்திய நாடு பேணும் ஒற்றுமையா? கட்டிக்காக்கும் ஒருமைப்பாடா? வெட்கக்கேடு! தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பிரதமர் பெருமையாகப் பேசுவது அனைத்தும், தமிழர்களை ஏய்த்து அவர்களின் வாக்குகளைப் பறிக்கும் மலிவான தந்திரம் என்பது மீண்டும் தெளிவாகிறது. இதிலிருந்து இந்திய நாடும், பிரதமரும், அரசும், ஆட்சியாளர்களும் இந்தி பேசும் மக்களுக்கானது மட்டுமே என்பதும், தமிழர்கள் இந்நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதும் மீண்டும் மீண்டும் உறுதியாகின்றது. இதையெல்லாம் காணும் தமிழ் இளையோருக்கு இந்த நாட்டின் மீதும், அதன் ஆட்சி முறையின் மீதும் வெறுப்புதான் வருமே அன்றி எப்படி பற்று வரும்?
இனியும் பிரதமர் மோடியின் தமிழர்கள் மீதான வெறுப்புப் பேச்சு தொடருமாயின், அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, நாட்டினைப் பெரும் அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறேன்.
ஆகவே, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற இனவெறுப்பு பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் ஒடிசா தேர்தலுக்காக தமிழர்களைத் திருடர்களாகவும், பீகார் தேர்தலுக்காக தமிழர்களை வன்முறையாளர்களாகவும் கட்டமைக்கும் பாஜகவுக்கு வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள, திட்டுவிளையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைக்காமல், திமுக அரசு திட்டமிட்டு தவிர்த்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்துத்துவ மதவெறியர்கள் கண்ணியமிகு தாத்தா காயிதே மில்லத் அவர்களை தேச விரோதி என்று அவதூறு சுமத்தி, அவருடைய பெயரைப் பேருந்து நிலையத்திற்குச் சூட்டக்கூடாது என்று போராட்டம் நடத்தியதற்கு அடிபணிந்த திமுக அரசு, தாத்தாவின் பெயரைச் சூட்டாமல் தவித்திருப்பது அப்பட்டமான பாசிசப்போக்காகும்.
இந்த நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
"நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி" என்று இந்திய நாடாளுமன்றத்திலேயே முழங்கிய மாமனிதர் தேச விரோதியா?
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளின் தலைவராகப் பதவி வகித்து, இந்த நாட்டில் வாழ்ந்த இசுலாமியப் பெருமக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்தி, இந்திய மக்களாட்சி முறைமையின் மாபெரும் தூணாக திகழ்ந்த தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்த தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
பாகிஸ்தான் பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன், தாத்தா காயிதே மில்லத் அவர்கள் தேசிய விரோதியா?
முகமது அலி ஜின்னா உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று ஜவஹர்லால் நேரு முன்னிலையிலேயே கூறிய தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
இந்த நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது எதிர்த்துப் போராடிய தாத்தா காயிதே மில்லத் தேச விரோதி? அதன் விடுதலைக்கு எந்த பங்களிப்பும் செய்யாத நீங்கள் தேசியவாதியா?
இந்த நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் கூட உள்ளனர். ஆனால், இந்த நாட்டின் விடுதலைக்கு போராடாத, எந்த பங்களிப்பும் செய்யாதவர்கள் நாடாளுமன்றத்திலும் பெரும் பதவிகளிலும் இருந்துகொண்டு மற்றவர்களுக்கு இந்நாட்டின் தேசப்பற்று குறித்து பாடமெடுப்பதும், யார் தேசியவாதி யார் தேசவிரோதி என சொல்வதும் தான் பெருங்கொடுமை.
இந்த நாட்டை மதத்தின் பெயரால் துண்டாடி ஒவ்வொரு நாளும் பிரிந்து பிளக்கும் நீங்கள் எல்லாம் தேசியவாதி, இந்த நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தம் வாழ்நாளை ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை தேச விரோதியா? மதவாதிகளின் இத்தகைய பொய்ப்பரைப்புரைக்கு திமுக அரசு துணைபோனது ஏன்? அப்படி என்றால் தாத்தா காயிதே அவர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தும் மதவாதிகளின் அவதூறு பரப்புரையை திமுக அரசு ஏற்கிறதா? திமுக அரசிற்கு ஏன் இந்த இரட்டை வேடம்?
இசுலாமியர் பெருமக்கள் பெருமளவில் வாழும் திட்டுவிளைப் பகுதி பேருந்து நிலையமானது, ஏற்கனவே தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் இயங்கியதுதானே? புதிதாகக் கட்டிய பேருந்து நிலையத்திற்கு அதே பெயரை வைப்பதற்கு திமுக அரசுக்கு என்ன தயக்கம்? ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை அப்படியே செயல்படுத்துவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதிலிருந்தே பாஜகவின் B Team ஆக செயல்படுவது திமுகதான் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகிறது.
ஆகவே, கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு, ஏற்கனவே சூட்டப்பட்டிருந்தபடி, கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர், ஆவடி மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ச.செல்வமணி அவர்களின் தாயார் அம்மா ச.தைனேஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆரூயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ச.தைனேஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி,
இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்திற்கு நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம், ரஹமத் நகரில் இசுலாமியச் சொந்தங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகள் மற்றும் பள்ளிவாசலை இடிக்க திமுக அரசு அறிவிக்கை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வீடுகள் இடிக்கும் உத்தரவை எதிர்த்து, அம்மாப்பட்டினத்தில் வாழும் இசுலாமியச்சொந்தங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது, திமுக அரசு சிறிதும் மனச்சான்றின்றி வீடுகளை இடிக்க முயல்வது கொடுங்கோன்மையாகும்.
கடந்த 50 ஆண்டுகளாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கும் செலுத்தி வாழ்ந்து வரும் இசுலாமியச் சொந்தங்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்றச் செயலாகும். சட்டமன்ற, நாடாளுமன்றத தேர்தலின்போது வீடு வீடாக இசுலாமிய மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள், இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? இசுலாமிய மக்களின் வாக்கு வேண்டும்? அவர்களுக்கென்று வாழ்விடம் வேண்டாமா? அதிகாரிகள் மூலம் அடக்குமுறைகளை ஏவி இசுலாமியச் சொந்தங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
அம்மாப்பட்டினம் முழுவதுமே பொது இடமாக இருந்து பின் குடியிருப்பாக மாறிய நிலையில் இரண்டு தலைமுறையாக இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை மட்டும் இடித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயல்வது ஏன் யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற, யாரை மகிழ்விக்க
முயல்கிறது? இது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் சிந்தனை இல்லையா? உத்திரப்பிரதேசத்தில் பாசிச பாஜக அரசு இசுலாமியச் சொந்தங்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்குவதற்கும், தமிழ்நாட்டில் திமுக அரசு அம்மாப்பட்டினத்தில் இசுலாமிய மக்களின் வீடுகளை மட்டும் இடிக்க முயல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
அதே, அம்மாப்பட்டினத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பகுதிகளையும் இடித்து அகற்றும் துணிவு திமுக அரசிற்கு இருக்கிறதா? ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கை காரணம் காட்டி ஒட்டுமொத்த இசுலாமியச் சொந்தங்கள் வாழும் இடங்களை மட்டும் இடித்து அகற்ற முயல்வது மதப்பாகுபாடு அன்றி வேறென்ன?
உண்மையில் திமுக அரசிற்கு மக்களின் மீதும், அவர்களின் வாழ்வுரிமையின் மீதும் அக்கறை இருக்குமாயின், வலிமையான வாதங்களை நீதிமன்றத்தில் வைத்து, எளிய மக்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறி, எளிதாக மக்களின் குடியிருப்புகளை காத்திருக்க முடியும். ஆனால், திமுக அரசு மக்களின் குடியிருப்புகளை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே சரியான வாதங்களை முன் வைக்கத் தவறுவதுடன், அதன் காரணமாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினை காரணம் காட்டியே மக்களை மிரட்டி வீடுகளை இடித்து, பச்சைத்துரோகம் புரிகின்றது.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஆகவே, புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குமாரபாளையம் எக்ஸெல் கல்லூரி உணவகத்தில் உணவு உண்ட 400 மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு: உரிய நீதி விசாரணை நடத்துவதோடு, தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி விடுதி உணவங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் கல்லூரியின் உணவகத்தில் உணவு உண்ட 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கின்றது.
சுகாதாரமற்ற உணவகத்தால் மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக அரசு, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி - கல்லூரி விடுதிகளில் உரிய ஆய்வை மேற்கொள்ளாத காரணத்தாலேயே குமாரபாளையம் தனியார் கல்லூரி மாணவர்களுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட அடிப்படை காரணமாகும்.
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று நடிகர்களை வைத்து நாடகம் நடத்தி, வெற்று விளம்பரம் தேடுவதில் திமுக அரசு காட்டிய ஆர்வத்தையும், செலவிட்ட பெருந்தொகையையும் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், முறையாக ஆய்வு செய்வதிலும் காட்டத் தவறிய திமுக அரசின் அலட்சியமே, தற்போது 400 மாணவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் அளவிற்குச் சூழலை மிக மோசமாக்கியுள்ளது.
ஆகவே, திமுக அரசு இதன் பிறகாவது, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கும் உணவகங்கள் மற்றும் விடுதிகளில், தயாரிக்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை ஆண்டிற்கு இருமுறையேனும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து மாணவ மாணவியரின் நலனை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், மாணவர்களின் உடல் நலத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுநிகழ்வு கல்லூரி நிர்வாகம் மற்றும் உணவக உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, நீதிவிசாரணையை விரைந்து நடத்தி மாணவர்களின் உடல் நலப்பாதிப்பிற்கு உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் நன்னிலம் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி மு.கலையரசன் அவர்களின் தந்தையும் திருவோணமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா முருகையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முருகையன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, இடைக்காட்டூரைச் சேர்ந்த குவைத் செந்தமிழர் பாசறையின் சமூக ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் அன்புத்தம்பி தாவூத் அக்கீம் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சே.கமருதீன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி தாவூத் அக்கீம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சே.கமருதீன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கி, தாய்த்தமிழையே தான் வாழும் தேசமென கொண்டாடிய தன்மானத்தமிழர்..!
"பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற சாதியப் பாகுபாடு கூடவே கூடாது” என்று போதித்த சமத்துவ நாயகர் தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தோன்றிய திருநாள் இன்று!
அடிமை வாழ்வினைவிட விடுதலைச்சாவு மேலானது; விடுதலை அல்லது வீரமரணம் என முடிவெடுத்து, தம் இளம் வயதிலேயே போராட்டக் களம் கண்ட விடுதலைப்போராளி..!
கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்று கிளர்ச்சி செய்த புரட்சியாளர்..!
"தவறுகள் நடப்பது தீயவர்களால் அல்ல; அதை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் நல்லவர்களால்தான்!" என்றும்,
"நான் யாரையும் எதிரியாகக் கருதுவபவனில்லை; தவறுகள் நடப்பதைக் கண்டிக்கும் என்னை எதிரியாகப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!" என்றும்,
"தான் வாழ, பதவி தேவை என்று எண்ணுபவர்களிடம் உண்மைக்குப் புறம்பானவற்றைத்தான் எதிர்பார்க்க முடியும்!" என்றும்,
"பதவியை ஒரு சேவையாகக் கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால், மக்களுக்கு நலன் என்பது வெறும் பகல் கனவுதான்" என்றும்,
எக்காலத்திற்கும் பொருந்தும் அரசியல் மொழிகளை அருள்மொழிகளாக அள்ளித்தந்த கால ஞானி..!
“தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ - ஆயுதமோ இல்லை!” என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர்..!
“எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது!” என்று வாழ்ந்த எளிய மகன்..!
"பணத்திற்கு மயங்கி வியாபார அரசியலுக்கு இடம் கொடுத்துவிடாது; விவசாய அரசியலை அமைத்து, நாட்டின் பண்பாட்டையும், ஏழை மக்களின் நல்வாழ்வையும் பாதுகாக்க வேண்டும்!" என்று முழங்கிய மக்கள் தலைவர்..!
"உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு! நீயே உண்மையான வீரன்..!" என்று கற்பித்த பெருந்தகை..!
"மலர்மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!" என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன்..!
"தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென" வாழ்ந்து, தீரமிக்க விடுதலைப் போராளிகளைத் தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன்..!
தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய திருப்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
மதிப்புமிக்க நமது தாத்தா தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
பைந்தமிழ் இனத்தில்
பசும்பொன் நிலத்தில் பிறந்த
பாரதம் காக்க
படை கட்டி சிறந்த
எங்கள் தாத்தா
தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவருக்குப்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
பேரப் பிள்ளைகள் பெருமையோடு செலுத்தும்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
குற்றப் பரம்பரை சட்டத்தை உடைத்த
கொற்றப் பரம்பரை வரலாற்றை படைத்த
தேசத்தின் விழியே!
தெய்வீக ஒளியே!
தென்னாட்டு புலியே!
தீந்தமிழ் மொழியே!
எதிர்காலத் தலைமுறை எங்களின் வழியே!
உங்களுக்கு எங்களின் புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
தென்பாண்டி நாட்டின் முத்தே!
விடுதலைப் போரின் வித்தே!
வீர மறவர்களின் சொத்தே!
சத்தியத்தின் பிறப்பே!
அறத்தின் சிறப்பே!
மாவீரன் நேதாஜியின் மறுவுருவே!
தெய்வத்தின் திருவுருவே!
உங்களின் திருப்புகழ் போற்றி
பேரப் பிள்ளைகள் நாங்கள்
பெருமையோடு செலுத்தும்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!
தீய அரசியல் ஒழிய!
தூய அரசியல் மலர!
கேடு கெட்ட பணநாயகம் ஒழிய!
மாண்புமிக்க ஜனநாயகம் மலர!
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!
தெய்வத்திருமகன் நமது தாத்தா
தேவர் பெருமகன் பெருமை போற்றி
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!
உங்கள் மொழியே! எங்கள் கீதை!
உங்கள் வழியே! எங்கள் பாதை!
உங்கள் நினைவைச் சுமந்து,
கனவை நோக்கி
எங்கள் பயணம்!
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
உங்களுக்கு எங்களின் புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர், பள்ளி ஆசிரியர், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, என் பேரன்பிற்குரிய தம்பி கவிஞர் சினேகன் அவர்களின் அன்புத்தந்தை சிவசங்கு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.
அன்பு அப்பாவை இழந்துவாடும் தம்பி சிநேகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய அப்பா சிவசங்கு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
@KavingarSnekan -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
இவ்வாண்டு, வருகின்ற ஐப்பசி 15ஆம் நாள்
01-11-2025 அன்று மாலை 05 மணியளவில்
நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்களின் மாவீரத்தைப் போற்றி உரையாற்றினேன்.
youtu.be/LCf80edGygY -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டையே சதய விழா ஆண்டாக கணக்கிடாமல் பதவியேற்ற ஆண்டினை கணக்கிட்டு கொண்டாடி வருவது வரலாற்றுப்பிழையாகும். தமிழ்நாடு அரசே அத்தவறை தொடர்ச்சியாக செய்து வருவது மக்களிடம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கிறது.
ஏற்கனவே தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தமிழின வரலாற்று பெருமைகள் பலவற்றில் இரண்டு தரவுகள் கூறப்பட்டு, இரண்டில் எதனை கடைப்பிடிப்பது என்ற குழப்பம் இன்றுவரை நீடிக்கின்றது. அதே போன்று தமிழ்நாடு தனிப்பெரும் நிலப்பரப்பாக உருப்பெற்ற நவம்பர் முதல் நாளினை தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதை மாற்றி, ஜூலை 18ஐ தமிழ்நாடு நாள் என கொண்டாடுமாறு தவறாகத் திணித்துள்ளது திமுக அரசு.
தமிழர் பெருமை கொள்ளும் அடையாளங்கள் ஒவ்வொரு ஒவ்வொன்றிலும் இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகள் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது. தமிழினத்திற்கு பின்னந்தோன்றிய பல இனங்களும், வரலாற்று தகவல்கள் ஏதும் சரிவர கிடைக்கப்பெறாத இனங்களும்கூட தங்கள் இனத்தின் பெருமையை எவ்வித குழப்பமும் இன்றி தெள்ளத்தெளிவாக கொண்டாடி வரும் நிலையில், தமிழினத்தில் மட்டுமே காணப்படும் இத்தகு குழப்பநிலை மிகுந்த மன வருத்ததை தருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் என்கின்ற இராஜராஜ சோழரின் பிறந்த ஆண்டை கி.பி.947 என உறுதிப்படுத்தியுள்ளது.
அதே போன்று தொல்லியல் துறை பரிந்துரை செய்த இராசராசன் துணுக்குகள் நூறு மற்றும் Indian Council of Historical Research பதிப்பகத்தில் வெளிவந்த நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் எனும் வரலாற்று நூலிலும் மாமன்னர் அருண்மொழிச் சோழன் அரியணை ஏறிய நாள் 25 ஜூன் 985 என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐப்பசி சதய விழாவானது அருண்மொழிச் சோழன் பிறந்த கி.பி.947ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, தற்போது 1078வது சதய விழா என்பதற்கு மாறாக, அவர் பேரரசராக முடி சூட்டிய 985ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, நடப்பாண்டு 1040வது சதய விழா என்று தவறாக கொண்டாப்பட்டு வருவது ஏற்கவியலாத வரலாற்றுத் திரிபாகும். அறியாமையால் இதுவரை நடந்துவரும் தவறைத் திருத்தி, இனியேனும் சரியான ஆண்டினை கணக்கிட்டு சதய விழா எடுப்பதே உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும். மாறாக தவறான கணக்கீடு அப்பெருமன்னனை அவமதிப்பு செய்வதாகவே இருக்கும்.
ஐப்பசி சதயம் என்பது பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழிச்சோழன் பிறந்த நாள், ஆண்டு, நேரத்தையே குறிப்பதாகும். ஒருவேளை பேரரசராக ஐப்பசி சதயம் அன்றே முடி சூடி இருந்தாலும்கூட அதுவும் பிறந்த நாளினை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்ட நிகழ்வாகவே இருக்க முடியும்.
மாமன்னர் அரேந்திரச்சோழர் எடுப்பித்த திருவாரூர் கல்வெட்டு, ‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐப்பசி சதயத்தில் அருண்மொழிச் சோழரும், ஆடித் திருவாதிரை நாளில் அவரது அருமை மகன் பேரரசன் அரசேந்திரச் சோழரும் பிறந்தவர்கள் என்பதையும், பிறந்தநாள், ஆண்டினை அடிப்படையாக வைத்தே கோயில்களில் விளக்கேற்றவும், விழாக்கள் எடுக்கவும், உரிய தானங்கள் வழங்கப்பட்டதற்கு திருவாரூர் கல்வெட்டு உறுதியான வரலாற்றுச் சான்று பகர்கிறது. எனவே ஐப்பசி சதயம் என்பது பிறந்த நாளினை குறிப்பது என ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.
ஆகவே, அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டு முதலே சதய விழாவினை கணக்கிட்டு அறிவித்து, அதனையே ஆண்டுதோறும் அனைவரும் கொண்டாடிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரையிடப்பட்ட, வரலாற்று ஆவணக்குறிப்புகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொளித் தொகுப்பு.
youtu.be/lxmfXLSjQwsThis media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, இளைஞர் பாசறையில் களப்பணியாற்றிவந்த பழ.வெற்றிநிலவன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2025 இல் தமிழ்நாட்டின் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அன்புமகள் கார்த்திகாவின் சிறப்பான பங்களிப்புடன் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ள செய்தி மிகுந்த பெருமிதமளிக்கிறது.
அதேபோன்று தமிழ்நாட்டைச்சேர்ந்த அன்புமகன் அபினேஷ் மோகன்தாஸ் இடம்பெற்றிருந்த இந்திய ஆடவர் கபடி அணியும் தங்கம் வென்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டைச்சேர்ந்த இளம்பிள்ளைகள் தங்கள் தனித்திறனை வளர்த்து, தம்முடைய கடுமையான பயிற்சினாலும், அயராத முயற்சியினாலும் அடுத்தடுத்து சாதனைகள் புரிவது, தமிழ் மண்ணிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்று பெருநிகழ்வாகும்.
அன்பு பிள்ளைகள் இருவரும் கபடி போட்டியில் தங்கள் பங்களிப்பை சிறப்புற தந்து பதக்கங்கள் பல வென்று மென்மேலும் சாதனை படைக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்பிவித்து வாழ்ந்த பெருந்தகை, திராவிட திரிபுவாதம் குறித்து தமிழினம் விழிப்புணர்வுப் பெற அரை நூற்றாண்டுகளாக 'எழுகதிர்' இதழைத் தொய்வின்றி நடத்திவரும் பெருந்தமிழர்,
போற்றுதற்குரிய நம்முடைய ஐயா அருகோ அவர்கள் உடல் நலிவுற்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பெருங்கவலையை அளிக்கிறது.
நம்முடைய ஐயா அருகோ அவர்கள் தமிழினம் போற்றி பாதுகாக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாவார். ஐயா அவர்கள் எந்நாளும், எவரிடத்தும், எதன்பொருட்டும், எதையும் எதிர்ப்பார்த்து நின்றிடாத மானத்தமிழர். பொதுவாழ்வில் எளிமையும், நேர்மையும் கொண்டு தமிழ்த்தொண்டு ஆற்றிவந்த ஐயா அவர்களின் குடும்பம் வறுமைச்சூழல் காரணமாக, உயிர் காக்கும் மருத்துவச் செலவினைக் கூட செய்ய இயலாத பெரும் பொருளாதார நெருக்கடியில் தற்போது தவித்து நிற்கிறது. திராவிடத் திருகுத்தனங்களைத் தோலுரித்து சமகால அரசியல் வரலாற்றின் உயிர்ச்சான்றாக திகழும் ஐயா அவர்களின் உயிர் காக்க உதவிட வேண்டியது ஒவ்வோரு தமிழரின் கடமையாகும்.
ஆகவே, என் அன்பிற்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் தங்களால் இயன்ற நிதியுதவி செய்து, ஐயா அருகோ அவர்களின் இன்னுயிர் காத்திட வேண்டுமென கோருகிறேன்.
நிதியுதவி செய்ய வேண்டிய
வங்கி கணக்கு எண் : 34915596308
பெயர்: அருகோ.தமிழ்ச்செல்வன் (G.Tamilselvan)
IFSC CODE : SBIN0011605
GPAY: 9566228370 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி வனக்காவலர் மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று காலை 18-10-2025 ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர் வணக்கம் செலுத்தினேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி மாவீரன் வீரப்பனார்
அவர்களின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த ஈகி பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனார் அவர்களினுடைய நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 27 (13-10-2025) காலை 10 மணியளவில் சென்னை கிண்டி, அண்ணல் காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.
youtu.be/DvT_z9hr7Js -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!
முடிசூடும் பெருமான் தாத்தா வைகுண்டர் தர்மபதி தேர்த்திருவிழா
மணலி புதூர் | 12-10-2025
www.youtube.com/live/UBmFdsbG9yo -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, பாபநாசம் நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சி.வெங்கடேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஜெ.சிவானந்தம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி வெங்கடேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா ஜெ.சிவானந்தம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி!
@CMOTamilnadu @mkstalin
காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் தனியார் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்துள்ள கொடுந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவலியையும் தருகின்றது.
“மருத்துவக் கட்டமைப்பில் வட மாநிலங்களைவிட முன்னேறி, முதலிடத்தில் இருக்கிறோம்” என்றெல்லாம் தற்பெருமை பேசும் திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்தது உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ சான் பார்மா (Shri Saan Pharma) நிறுவனத்தின் ‘Coldrif’ இருமல் மருந்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்ததே 20 இளந்தளிர்களின் இன்னுயிர் பறிக்கப்பட முதன்மைக் காரணம் என்பது தற்போதைய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் (Drug Control Department) நடத்திய ஆய்வில், அந்த நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முந்தைய அதிமுக அரசு மற்றும் தற்போதைய திமுக அரசுகளின் அலட்சியத்தால், ஸ்ரீ சான் பார்மா நிறுவனம் மொத்தம் 364 விதிமீறல்களைக் கடந்த 14 ஆண்டுகளில் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க கடந்த 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் நிலவும் ஊழல் முறைகேடுகளே அடிப்படை காரணமாகும். மருந்தகங்களில் மாதம் 1000 ரூபாயும், மருத்துவமனைகளில் மாதம் 2000 ரூபாயும், இலஞ்சமாக வசூலிக்கும் தமிழ்நாடு மருத்துவத் துறை அதிகாரிகள், இந்நிறுவனங்களிடமிருந்து இலட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ, மருந்துகளோ இருப்பதில்லை; அதனை சீர்செய்து ஏழை மக்களுக்கு தரமான மருத்துவத்தை திமுக அரசால் இன்றளவும் தர முடியவில்லை. தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் திருட்டினை தடுக்க முடியவில்லை; அம்முறைகேடுகளின் உச்சமாக தற்போது ஸ்ரீ சான் பார்மா போன்ற தனியார் மருந்து நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்து அவற்றில் நடைபெறும் மோசடிகளையும் கண்டறிந்து தடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 பிஞ்சு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது?
சுகாதாரத்துறையில் எந்தக்குறையும் இல்லை என்று மூடி மறைக்கும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்ரமணியன் இப்பெருந்துயரத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார்?
தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டோம் என்று சொன்ன தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் உலக அளவில் ஏற்பட்டுள்ள இத்தலைகுனிவிற்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா?
ஆகவே, 20 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தினைத் தடைசெய்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்துயரங்கள் நிகழாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்களில் முறையான ஆய்வுகள் தொடர்ச்சியாகச் செய்யப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காசாவுக்காக கண்ணீர் வடிக்கும்
திராவிட மாடல் 2.0 மானுட பற்றாளர்கள்
வாழ்க! வாழ்க!
பாலஸ்தீன தேசம் காசாவில் கொல்லப்படும் மக்களுக்காகக் ‘காசாவை காப்போம்’ என்ற முழக்கத்துடன் திராவிட மாடல் கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போராடத் துவங்கியுள்ளீர்கள்! வரவேற்கிறேன்!!
காசா பெருநிலத்தில் கொடூர இஸ்ரேல் நாடு நேற்றுதான் குண்டு மழை பொழியத் தொடங்கியதா? கொத்துக்கொத்தாக நேற்றிலிருந்துதான் மக்கள் மடியத் தொடங்கினார்களா? இதே அக்டோபர் மாதம் 2023 ஆம் ஆண்டுக் காசாவை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் 67 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள், பெண்கள் எனப் பாகுபாடு இன்றிப் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படாத நாளே இல்லை எனும் அளவில் ஒவ்வொரு நாளும் இனப்படுகொலை நிகழ்ந்தேறியது.
ஒரு சிறிய ரொட்டித் துண்டுக்காக ஒவ்வொரு வேளையும் பசிக்கொடுமையால் அலைந்து திரியும் குழந்தைகள் பல்லாயிரம் பேர். ஆட்டுமந்தை போல் அடைக்கப்பட்ட முகாம்களில் கொடிய இஸ்ரேல் குண்டு வீசியதில் கொல்லப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேர்! ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு ஈவு இரக்கமின்றி இந்த நூற்றாண்டின் இரண்டாவது மிகப்பெரிய இனப்படுகொலை காசாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையாகும். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மிகப்பெரிய மனித வேட்டை இப்போதுதான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? இப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்தீர்களா?
ஆப்ரேசன் சிந்தூர் என்று மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசி போர்தொடுத்த போது அதனை வரவேற்று முதலமைச்சர் தலைமையில் பேரணி நடத்திய திராவிட மாடல் திமுக அரசு, மணிப்பூர் கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக எந்தப் பேரணியும் நடத்தவில்லை. இருப்பினும் இன்றைக்குக் காசாவுக்காகக் கண்ணீர் வடிக்கிறீர்கள்! வரவேற்கிறோம்! இதேபோல 2009 இல் அருகிலிருக்கும் ஈழத்தாயகத்தில் கொடும்போரை நிகழ்த்தி இனவெறி சிங்கள அரசு இலட்சக்கணக்கில் எம்மினச்சொந்தங்களைக் கொன்று குவிக்கும்போது உங்கள் கண்கள் குருடாகி இருந்ததா?, அங்கே அலறிய மக்களின் குரல் விழாத அளவிற்கு உங்கள் காதுகள் செவிடாகிப் போயிருந்ததா? அன்றைக்கு நாங்கள் வடித்த கண்ணீர், சிந்திய ரத்தம், செத்து விழுந்த உடல்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? கதறிய கதறல்கள் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா?
பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் 5 குண்டுகள் நெஞ்சில் தாங்கி செத்து விழுந்தபோது, எங்கள் அருமை தங்கை இசைப்பிரியா கொடூர சிங்களர்களால் குதறி கொலை செய்யப்பட்டபோது, அக்கொடுமைகள் எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனது ஏன்? அதற்காக ஒரு சொட்டு கண்ணீரும் நீங்கள் சிந்தாதது ஏன்? ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கூட்டம், காசாவில் நடைபெறும் இனப்படுகொலையை இரண்டு ஆண்டுகளாகக் கைகட்டி வேடிக்கை பார்த்த திராவிட மாடல் கூட்டம், இப்போது திடீரென்று காசாவுக்காகக் கண்ணீர் சிந்த காரணமென்ன?
11.10.23 அன்றைக்கு இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் என்று பாலஸ்தீன மக்கள் படுகொலையை நியாயப்படுத்தித் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் செய்தி வெளியிட்ட நீங்கள் இன்றைக்குக் காசா மக்களுக்காகக் கதறித் துடிப்பது போல் நடிக்கக் காரணம் என்ன? காரணம், விரைவில் இங்கே தேர்தல் வருகின்றது. தமிழ்நாட்டு இசுலாமிய மக்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய வேண்டும். இங்கே இருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ‘ஓட்டா’ இருக்கிறது? என்று கேட்டு அன்று அவர்களுக்காகப் போராட முன்வராத நீங்கள், ஓட்டு இல்லாத காசாவில் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்காகப் போராடுவதற்குக் காரணம் இங்கு வாழும் இசுலாமிய மக்களுக்கு ஓட்டு இருக்கிறது என்பதன்றி வேறென்ன?
இசுலாமிய மக்களின் வாக்குகளை மொத்தமாகப் பறிப்பதற்கான திட்டம்தான் காசா மக்கள் மீதான திராவிட மாடல் திருவாளர்களின் திடீர் கருணையும், கண்ணீரும்! இந்தக் கேவல நாடக அரசியலை, ஏமாற்று அரசியலை, சூழ்ச்சி அரசியலை எத்தனை காலத்திற்குச் செய்து கொண்டே இருப்பீர்கள்? உண்மையிலேயே உங்களுக்கு மானுட பற்று இருந்தால், பிறர் துன்பத்திற்கு இரங்குபவர்களாக இருந்தால், அடுத்தவர் காயத்திற்கு, கண்ணீருக்கு கவலைப்படுபவராக இருந்தால், காசா மீது முதல் தாக்குதல் நடந்தவுடனே நீங்கள் கதறித் துடிக்காமல் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்தது எதனால்? இப்போது ஏன் இந்த கரிசனம்? நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது என்பதுதானே?
தொலைதூர பாலஸ்தீன மக்களுக்காக இன்றைக்குப் பேரணி நடத்தும் நீங்கள், அருகிலிருக்கும் பாகிஸ்தான் மக்கள் ஆப்ரேசன் சித்தூரில் தாக்கியழிக்கப்பட்டபோது அதனை வரவேற்று பேரணி நடத்தியது ஏன்?
தமிழர்களைக் கொன்று குவித்தாலும், தமிழன் இன உணர்வையும், மான உணர்வையும் விட்டுவிட்டுத் தங்களுக்கு வாக்குச் செலுத்திடுவான் என்ற நம்பிக்கையில், இலட்சக்கணக்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்வதைப்பற்றிக் கவலைப்படாமல், கொன்று குவித்தவர்கள் உடனேயே கூட்டணி வைத்து, இன்றளவும் அதிகாரத்தை, பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடூர மனம் படைத்த நீங்கள், இன்றைக்குக் காசாவுக்காகக் கருணை காட்டுவது போல், கண்ணீர் வடிப்பதுபோல் நடிக்கிறீர்கள்!
விழிப்புணர்வற்ற சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடமென்று உங்கள் முன்னாள் தலைமைச் செயலாளர் எங்கள் ஐயா இறையன்பு எழுதியதை போல் நன்றாக நடிக்கிறீர்கள்!
வளரட்டும் உங்கள் மானுடம்!
மலரட்டும் திராவிட மாடல் 2.0! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்!
@draramadoss -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாங்கள் சாதாரணமானவர்கள்; ஆனால் அசாதாரணமான ஒன்றைக் கனவு காண்பவர்கள்!
அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு!
சரியானது வென்றே தீரும்!
என்று முழங்கிய புரட்சியாளர் சே குவேரா அவர்களின் நினைவுநாள் இன்று (09-10-2025)
புரட்சி வணக்கம் எங்கள் தோழனே!
#cheguevara -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக!
தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா?
@CMOTamilnadu @mkstalin
கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்த
பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? அவ்வீரத்திருமகன் கழுத்திறுகி கசிந்து வெளியேறிய கடைசி மூச்சுக்காற்று அந்த மண்ணில் தானே உலாவிக்கொண்டு இருக்கிறது? நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காகத்தானே பாட்டன் தீரன் சின்னமலை உயிர் நீத்தார். அவர் பாதம் பட்ட மண்ணில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு அவருடைய பெயரைச்சூட்டி நாங்கள் நடமாடக்கூடாதா?
விடுதலை போராட்டக்களத்தில் தலையில் தடியால் தாக்கப்பட்டு தன்னுயிர் நீத்த பின்பும் விடுதலைக்கொடியை வீழ்ந்துவிடாமல் காத்த பாட்டன் கொடி காத்த குமரன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
மாடு கூட இழுக்கத் திணறுகிற செக்கை கோவை கொடுஞ்சிறையில் தாயக விடுதலைக்காக இழுத்து, தன் சொத்தை எல்லாம் இழந்து, இறுதியில் மண்ணெண்ணெய் விற்று மண்ணை விட்டு மறைந்த கப்பலோட்டிய தமிழர் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
இந்தி திணிப்பை எதிர்த்து 1938இல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 03.06.1938ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த மொழிப்போர் மறவர் பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதைத் தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல் கால்வாய் வெட்டி காவிரியின் துணை ஆறுகளான பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைத்து, உலகம் வியக்க கீழிலிருந்து மேலாக நீரைத் திருப்பி, வறண்டு கிடந்த கொங்கு மண்டலத்தைப் பொன் விளையும் பூமியாக, பயிர் செழித்து உயிர் செழிக்கும் தாய்நிலமாக மாற்றிய பெரும்பாட்டன் காலிங்கராயன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
கொங்கு நாட்டு மக்களால் அண்ணன்மார் சாமிகளாகப் போற்றி வணங்கப்பெறும் பண்பாட்டு நாயகர்களான பொன்னர் - சங்கர் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? உங்கள் தந்தையே அவர்களின்
புகழ் வரலாற்றை பொன்னர் - சங்கர் திரைப்படமாக உருவாக்கினார்கள்தானே? அப்பெயரை வைத்திருக்கலாமே?
இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று எப்படி கூறுகிறீர்கள்? எடிசன் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளில் அப்படி எதுவொன்று இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?
ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே?. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான் திமுக ஆட்சியாளர்கள் தமிழை வளர்க்கும் முறையா?
எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத்திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்? திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா?
சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவர் சாலை என பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இவ்வரசு பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?
பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி? நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா?
தமிழர்கள் நாங்கள் படையாட்சி, கவுண்டர், வாண்டையார், தேவர் என்று பேசினால், உடனடியாக சாதிவெறி என்று கூச்சலிடும் திராவிடத் திருவாளர்கள், ஜி.டி. நாயுடு என்று பெயர் வைப்பதற்கு மட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? இது சாதிவெறி அல்லாமல் சிரங்கு சொறியா? இதுதான் பகுத்தறிவு, முற்போக்கு பெரியார் உரி உரியென உரித்த வெங்காயங்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களை இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? ஊரில் உள்ள தமிழ் சாதியை எல்லாம் ஒழித்துவிட்டு தங்கள் சாதியை காப்பாற்றுவதுதான் திராவிடத்தின் சாதி ஒழிப்பா?
இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா? கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது திமுக அரசு. ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டிடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய திமுக அரசு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா? தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும்.
ஆகவே, கோவை - அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் பாட்டன்கள் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், அண்ணன்மார் சாமிகளான
பொன்னர் - சங்கர் ஆகியோரின் பெயர்களில்
ஒன்றைச் சூட்ட வேண்டுமென
வலியுறுத்துகிறேன்.
* செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ஒரு தொலைக்காட்சியையே இருட்டடிப்பு செய்யும் இப்போக்கு கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி மிரட்டல்!
சனநாயகம், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, ஊடகங்கள் மீது ஆதிக்கம் செய்வதும், அடக்குமுறைகளை செலுத்துவதும் வெட்கக்கேடானது.
ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறையைக் கைவிட்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரியும்படி அரசு கேபிளில் மீண்டும் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin @PttvNewsX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கூடலூர் பகுதியில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும் தொடர் உயிரிழப்புகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
நீலகிரி கூடலூர் பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களை வஞ்சிக்கும் வனவிலங்கு அச்சுறுத்தல் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
கூடலூர் பகுதிகளில் வனவிலங்கு தாக்குதல்கள், அதனால் ஏற்படும் படுகொலைகள் என்பது மக்களின் உயிராதார வாழ்வியல் சூழலை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதும், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதும் இந்த தொடர் உயிரிழப்புகள் தொடர்பாக எந்த நிரந்தர தீர்வையும் வனத்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகங்களால் ஏற்படுத்த முடியவில்லை என்பது மேற்கண்ட தாக்குதல்கள் அலட்சிய போக்கின் விளைவாக உருவாக்கப்பட்ட திட்டமிட்ட படுகொலைகள் என்பதும் உறுதியாகிறது. கடந்த 30.09.2025 அன்று மட்டும் ஒரே நாளில் மசினக்குடியை சேர்ந்த புட்டுநாதன் மற்றும் நெலாக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் காட்டு யானைகளால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த பெருந்துயர நிகழ்வு மூலம் வனத்துறையின் அலட்சியப்போக்கும், மாவட்ட நிர்வாகத்தினால் மக்கள் பாதுகாப்பு புறந்தள்ளப்படுவதும் உறுதியாகிறது.
விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வரும் கூடலூர் மக்களை அந்த விவசாய நிலங்களில் யானைகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதும், குடியிருப்புகளை உடைப்பதும் வாகனங்கள் போன்ற உடமைகளை சேதப்படுத்துவதும் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கி கொன்று வருகிறது. புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் கால்நடைகளை அடித்து கொன்று வருவதும் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வனவளத்தின் தேவையும் வனவிலங்குகளின்
பங்களிப்பும் மிக முக்கியம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், வனவளத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்படும் பல்லாயிரம் கோடிகள் அடர்வன பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறதா என்றால் இல்லை. அப்படி அடர் வன நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்டிருக்குமானால் மக்களின் வசிப்பிடங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து மக்களை தாக்கி கொல்லும் நிலை முற்றிலுமாக தடுக்கப்பட்டிருக்கும்.
தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை வனவிலங்குகளின் வாழ்விடச் சூழலுக்கு ஏற்ப பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்க தவறி தேக்குமர தோப்பையும், யூகாலிப்பிட்ஸ் மரங்களையும், பார்த்தீனியச் செடிகளையும், உன்னிச் செடிகளையும் வைத்து பணம் பார்க்கும் வனத்துறை. பல நூற்றாண்டுகளாக ஒரு நிலத்தில் நிலைத்து வாழக்கூடிய மக்களை தான்தோன்றித்தனமான வன சட்டங்களால் நில வெளியேற்ற நடவடிக்கைக்கான துவக்கமாகவே வனவிலங்கு தாக்குதல்கள், படுகொலைகளை வனத்துறை கட்டவிழ்த்து விடப்படிருப்பதை உணர முடிகிறது.
இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டு வரி செலுத்தி, வாக்கு செலுத்தி, அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய மக்களின் உயிராதார பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் வருவாய்த்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இருப்பதை கருத்தில் கொண்டு செயலாற்றியிருக்க வேண்டும். ஆனால் வனத்துறையின் அலட்சிய போக்கை மறைத்து துணை நிற்கும் பொருட்டு வனவிலங்கு தாக்குதல் படுகொலைகளை வேடிக்கை பார்ப்பதை மாவட்ட நிர்வாகம், அரசும் கைவிட வேண்டும். இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் வழங்குவதாலும் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகள் தடுப்பு நடவடிக்கைகள் மெத்தனமாக கையாளப்படுகிறதா என்கிற ஐயமும் எழுகிறது. வாழ்வாதார சிக்கல்களுக்கெதிராகவும் தன்னெழுச்சியாகவும் போராடும் இளைஞர்கள், பொதுமக்கள் அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் மீது பொய் வழக்குகள் பதிந்து போராட்டத்தை ஒடுக்க நினைப்பதும் எதேச்சதிகாரப்போக்காகும்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்வதாலும் வனவிலங்குகளின் உணவுத் தேவையை வனப்பரப்புக்குள் நிவர்த்தி செய்வதாலும் மட்டுமே வனவிலங்கு தாக்குதல் படுகொலைகளை நிரந்தரமாக தடுக்க முடியும் என்பதையும். 2006 வன உரிமை அங்கீகாரச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி பூர்வக்குடி பழங்குடி மக்களையும் மலைவாழ் மக்களையும் வெளியேற்றிவிட்டு வனங்களை பாதுகாக்க முடியாது என்பதை தமிழக வனத்துறை உணரவேண்டும்.
ஆகவே, மக்கள் நலனில் துளியும் அக்கறையற்ற மனித தன்மையற்ற கருத்துரிமையை முடக்கும் செயலை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மிரட்டி ஒடுக்கும் எண்ணத்தில் தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மேலும், கூடலூர் பகுதிகளில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியினங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் தொடர்ச்சியாக நடந்தேறிய வனவிலங்கு தாக்குதல் படுகொலைகள் குறித்தும் ஒரு முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையானது மிகமிக நியாயமானது. அதனை ஏற்க மறுத்து, வலுக்கட்டாயமாகத் தேர்வினை அறிவித்த தேதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதென்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பணிக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற தேர்வெழுதும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கை மிகமிக நியாயமானதும், அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். அதனை திமுக அரசு ஏற்க மறுப்பது பெருங்கொடுமையாகும். இதற்கு முன் பல அரசுப்பணி தேர்வுகளும், அதன் முடிவுகளும், பணி நியமன ஆணை வழங்குதலும் ஆண்டுக் கணக்கில் எவ்வித காரணமுமின்றி, ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தேர்வர்களின் நியாயமான கோரிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க மறுப்பது ஏன்? தேர்வு எழுதும் பட்டதாரி ஆசிரியர்களின் பக்கம் உள்ள நியாயத்தை திமுக அரசு உணரத் தவறியதேன்? அவசர அவசரமாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வினை நடத்தி முடிக்க திமுக அரசு திட்டமிடுவது, ஊழல் முறைகேடுகளை நிகழ்த்தும் சூழ்ச்சியோ என தோன்றுகின்றது.
ஆகவே, தேர்வு எழுதும் ஆசிரியப்பெருமக்களின் நலன் காக்கும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை தேவையான கால அவகாசம் வழங்கி, நடத்த வேண்டுமெனவும், 12.10.2025 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ள தேர்வினை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காரடர்ந்தகுடி குருநாதன் - கவிதா இணையரின் அன்புமகள் குரு.அனுஸ்ரீ அவர்கள்
தஞ்சாவூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மகிழ்ச்சியும், மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தனித்திறனை மென்மேலும் வளர்த்து, வாழ்வில் இன்னும் பல சாதனைகள் புரிந்து சிகரம் தொட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மண்டலம் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆயுஷ் மருத்துவர்கள் நலச்சங்க தலைவருமான அன்புத்தம்பி மருத்துவர் கு.மோ.செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் தந்தை சேயாறு வள்ளல் கா.ஆ.மோகனம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி
செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா கா.ஆ.மோகனம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எழுத்தறிவித்த இறைவன் நம் தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி சிவகாசியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, இன்று 02-10-2025 தாத்தா வாழ்ந்த விருதுநகர் இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு உள்ள தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஏரும், போரும் எமக்குத் தொழில்!
அன்பு உறவுகள் அனைவருக்கும்
ஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்!
வேல்! வேல்! வெற்றிவேல்!
வேல்! வேல்! வீரவேல்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
எழுத்தறிவித்த நம் இறைவன்!
தாத்தா
பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 02-10-2025 வியாழக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு
இடம்: பாவடி தோப்பு சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் அருகில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - செங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி க.இராசேந்திரன் அவர்களின் தாயாரும், மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சைலஜா அவர்களின் மாமியாருமான அம்மா க. சிந்தாமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் க.இராசேந்திரன், சைலஜா,அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா க.சிந்தாமணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கரூரில் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது;நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதி வழங்க கரூர் மருத்துவமனை விரைக!
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து
துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக!
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில்,
கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
உடனடியாக
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்!
தொடர்பு எண்: +917667412345 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஒரு சொட்டு நீர் அருந்தாமல்
விடுதலைப்பசிக்குத் தன்னைத்தானே புசிக்க தந்த பெருமகன்..!
மருத்துவப் படிப்பைக் கைவிட்டு, இன அடிமை கொடுநோய் தீர்க்க,
தமிழ்த்தேசியத் தலைவர் பின்னால் அணிவகுத்த தமிழீழத் தலைமகன்..!
ஊனை உருக்கி உயிரை எரித்து,
விடுதலை வேள்வி நடத்திய மாவீரன்..!
புத்தன், காந்தி பெயரைச் சொல்லி இரத்தம் குடித்த ஓநாய்களின் முகத்திரை கிழித்த புலி வீரன்..!
ஆயுதம் ஏந்திய போராட்டக் களத்தில் அகிம்சையை ஆயுதமாக்கிய புரட்சியாளன்..!
கூர்த்த பெரும் அறிவாற்றலால் அரசியல் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்று, விடுதலைப்படையை வீறுகொள்ளச்செய்த தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தளபதி..!
லெப்டினண்ட் கர்னல் ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் பேரீகத்தைப் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சீனாவில் நடந்த ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக வாகையர் தொடரில் ஆடவருக்கான 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டுவீரர் அன்புமகன் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம், அடைந்தேன்.
உலக வாகையர் தொடரில் முதலிடம் பிடித்ததன் மூலம் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் பெற்றுள்ளது பெருமகிழ்வைத் தருகின்றது.
அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் மேலும், பல பன்னாட்டு போட்டிகளில் வென்று சாதனை புரிவதன் மூலம், பிறந்த தமிழ் மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்க்க வேண்டுமென விழைகிறேன்.
அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம், மருத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
சென்னையில் உள்ள எம்.ஆர்.எப். நிறுவனத்தில் பயிற்சியாளர்களாக பணியில் சேருகின்ற தொழிலாளர்களை சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களை வெறும் பயிற்சியாளர்களாகவே உற்பத்தியில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டு இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
எம்ஆர்எஃப் நிறுவனத்தின் உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக
தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குழு மருத்துவக் காப்பீடானது நிர்வாகத்தின் பணத்திலிருந்து மேற்கொள்ளப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக தொழிலாளிர்களின் ஊதியத்திலேயே பிடித்தம் செய்யப்படுவது மற்றுமொரு பெருங்கொடுமையாகும். இது முழுக்க முழுக்க தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும்.
பயிற்சி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பாக தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும், எம்ஆர்எஃப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற காரணத்தால், தொழிலாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் எம்ஆர்எஃப் நிர்வாகமானது இந்த ஆண்டிற்கான மருத்துவ காப்பீட்டுக்கான முன் வைப்புத் தொகையை வழங்கவும் மறுக்கிறது.
அதனால், சென்ற ஆண்டு மருத்துவ காப்பீடு முடிவுபெற்று, கடந்த இரண்டு மாதங்களாக, மருத்துவ காப்பீடு
புதுப்பிக்கப்படாத சூழ்நிலையில் நோயுற்ற பல தொழிலாளர்கள் கடந்த இரு மாதங்களாக தங்கள் ஊதியத்தை செலவிட வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
மிகப்பெரிய உடல்நலப் பாதிப்புக்குள்ளான பல தொழிலாளர்கள் இலட்சக்கணக்கில் மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கொடுஞ்சூழலும் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
இது குறித்தும் தொழிலாளர் நிர்வாகத்தினர், எம்ஆர்எஃப் நிறுவனத்திடம் முறையீடு செய்துள்ளதுடன், தங்களின் அடிப்படை உரிமைக் காக்க போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும், இந்திய ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள 'நேப்ஸ்' திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டுக்காக தொழிலாளர்களை சேர்க்கும் எம்ஆர்எஃப் நிர்வாகம், தமிழ்நாட்டு இளைஞர்களை குறைந்த அளவில் சேர்த்துவிட்டு, அதிகளவில் வடமாநிலத்தவரை பணியில் சேர்க்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது,எனவே ஒன்றிய அரசின் நேப்ஸ் திட்டத்தைசெயல்படுத்துவதை நிறுத்தக்கோரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்கின்ற சூழல் ஏற்பட்டவுடன், எம்ஆர்எஃப் நிறுவனமானது போராட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் உடனடியாக தொழிலாளர்களின் உணவகத்தை மூடியதுடன், பேருந்து சேவையையும் நிறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறைக்கு எவ்வித அறிவிப்பும் தரமால் போராடிய தொழிலாளர்களை வெளியேற்றி கதவடைப்பும் செய்துவிட்டது.
தொழிலாளர் நலச்சட்டத்தின் விதிமுறைகள் எதுவொன்றையும்
பின்பற்றாத சென்னை எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதபோக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் சார்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் பல முறை மனு அளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்ப்பதுதான் கொடுமையின் உச்சமாகும்.
தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச் சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடும் திமுக அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா?
சமத்துவம், சம உரிமை, சமூகநீதி ஆகியவற்றின் காவலர்கள் தாங்கள்தான் என தற்பெருமை பேசும் திமுக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை எம்ஆர்எஃப் தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொழிலாளர் நலத்துறை மூலம், உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி,
தொழிலாளர்களின் பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கமுதி இசையரசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய கோடையிடி குற்றாலம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கோடையிடி குற்றாலம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சென்னை மதுரவாயல் மண்டலத்தைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சே.ஆனந்தன் அவர்களின் தந்தை செ.பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி நடராசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செ. பழனியம்மாள் அவர்களுக்குஎன் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தம் வாழ்வு முழுவதையும் தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய எழுச்சிக்காகவும், தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்து தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எமக்கு முன்னோடியாகவும், முன்னத்தி ஏராகவும் விளங்கும் என்னுயிர் தாய்மாமன் தமிழ் முழக்கம்
சாகுல் அமீது அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
நான் திரைத்துறையில் இருந்த காலம் தொட்டு என் மீது பேரன்பு கொண்டு பேருதவிகள் பல புரிந்த பெருந்தகை மாமா சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி தொடங்கியவுடன் என் தோளுக்கு துணையாக நின்று, தன்னைவிட வயதில், அரசியல் அனுபவத்தில் இளையவன் என்ற பாகுபாடு இன்றி, ஒரு சிறு முரணுக்கோ, முணுமுணுப்பிற்கோ ஒருபோதும் இடமளிக்காது நான் இட்டப்பணியை தம் வாழ்நாள் கடமையாக ஏற்று செயல்பட்ட பேரன்புக்காரர்!
தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ இதழை பல ஆண்டுகளாக நடத்தியப் பெருமைக்குரியவர். ஈழத்தாயகத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட மாமா சாகுல் அமீது அவர்கள், 2002ஆம் ஆண்டு, தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னையில் திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் வதைப்பட்டார். ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவை தவிர, பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றவர்.
சிறைக்கொட்டடியிலும், இன மீட்சிப் போராட்டக் களத்திலும், வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த மாமா சாகுல் அமீது அவர்கள், பெரும் செல்வந்தராக சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்க இருந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித்தள்ளி, அளப்பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து, ஒன்றரை ஆண்டுக்கு மேலாய் சிறையிலே கிடந்து வாடியபோதும் எவ்வித சமரசத்திற்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது நோய்வாய்ப்படும் காலம்வரை களத்திலேயே நின்ற தமிழ்த்தேசியப் பெரும் போராளி!
தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால் தமிழ்த்தேசியவாதியாகி உறுதியாக களத்தில் நின்றதனால், தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது 35 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழ் இனத்துக்காக பாடுபட்ட பேராளுமை!
நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தமிழ் மண்ணின் உரிமைப் போராட்டங்களிலும், தமிழர் வாழ்வாதாரப் போராட்டங்களிலும் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பங்கெடுத்ததுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைப்
பரப்பிய பெருமைக்குரியவர்.
தமிழினத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும்,
நாம் தமிழர் கட்சியின் மீதும் அளவற்ற பற்று கொண்டு மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் ஆற்றிய அளப்பரிய தமிழ்த்தேசியப் பெரும் பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்!
தமிழ்த்தேசியப் போராளி, அன்பிற்குரிய தாய்மாமன்
தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின்
நினைவைப் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴தற்போது நேரலையில்...
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, இன்று புரட்டாசி 02 (18-09-2025) நாம் தமிழர் கட்சி சார்பாக, சென்னை கிண்டி அண்ணல் காந்தியடிகள் மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் மணிமண்டபத்தில் நடைபெற்றுவரும் மலர்வணக்க நிகழ்வு
x.com/i/broadcasts/1eaJbjDzAbZJX -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், அன்புத்தம்பி இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான நீரினைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக அன்புச்சகோதரர் இராமலிங்கம் கார்த்தி அவர்கள் கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.
நீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்!
நீரில் எரியும் அடுப்பு எனும் அரிய கண்டுபிடிப்பினை மனித குல பயன்பாட்டிற்குத் தந்துள்ள HONC நிறுவனர் அன்பிற்குரிய சகோதரர் இராமலிங்கம் கார்த்தி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள பேரன்பிற்குரிய அண்ணன், நடிகர் சரத்குமார் மற்றும் இக்கண்டுபிடிப்பில் பங்காற்றிய ஆய்வுக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
@honcgas @realsarathkumar #honcgas #greenhydrogen -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்ட பெருந்தகை!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி!
“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை!” என்று முழங்கிய பெருந்தமிழர்!
"வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை!" என்று கற்பித்த புரட்சியாளர்..!
நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் காட்டிய சாதி-மதப் பேதமற்ற சமத்துவ வழியில் பயணிக்க வேண்டும் என்ற உள உறுதியோடு, தமிழ்த்தேசிய அரசியல் எனும் தன்னிகரில்லா தத்துவத் தடம்பற்றி, நாம் தமிழர் கட்சி என்ற புரட்சிகர அரசியல் படையைக் கட்டமைத்து, இனவிடுதலை என்ற உயர்ந்த இலட்சிய இலக்கினை நோக்கி நாம் பயணப்பட்டு வருகிறோம்.
அதன் காரணமாகவே இந்த ஆண்டு, தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாளினை "ஆதித்தமிழர் எழுச்சிநாள்" என இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சி சார்பாக கொண்டாடுவோம் என்ற வரலாற்றுச்சிறப்புமிக்க அறிவிப்பையும் வெளியிட்டு, பேரெழுச்சியாகக் கொண்டாடினோம்!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவுநாளான இன்று (18-09-2025) அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள திருத்தணி - பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையைச் சீரமைத்து உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனை திறந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையாகச் செயற்பாட்டிற்குக் கொண்டுவராதது வன்மையான கண்டனத்துக்குரியது.
பொதட்டூர்பேட்டை பணிமனைக்கு இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தரைதளம் அமைக்கப்படவில்லை. பணிமனையில் நிலவும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையால் பேருந்துகள் முறையாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றிப் பொதட்டூர்பேட்டை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள், உரிய நேரத்தில் உரிய மருத்துவ உதவி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் சரியான மருத்துவர்கள் இல்லை அவசர சிகிச்சைப் பிரிவும், மகப்பேறு மருத்துவமும் முறையாகச் செயல்படுவது இல்லை. எதற்கெடுத்தாலும் மேல் சிகிச்சைக்காகத் திருத்தணி அரசு மருத்துவமனை செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். 80,000 மக்கள் வாழும் பொதட்டூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் இப்பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, தமிழ்நாடு அரசு எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள திருத்தணி - பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையைச் சீரமைத்து உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையைப் போக்கி மக்களைக் காக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி குளச்சல் மண்டலத்தைச் சேர்ந்த, தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளரும் கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் 10வது மன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி ரூபன் பொன்னுமணி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பொன்னுமணி வேலாயுதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பொன்னுமணி வேலாயுதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்புமகன் சுதர்சன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் மகனை இழந்து வாடும் தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் சுதர்சன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிய பெருந்தீரர்!
பாட்டாளி மக்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழர்!
பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சகப் பொறுப்பேற்று நல்லாட்சிக்குத் துணைநின்ற நாயகர்!
பல நூறு ஏக்கர் தம் சொந்த நிலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாரி வழங்கிய வள்ளல்!
விடுதலைப் போராட்ட வீரர், பெருந்தமிழர்,
நம்முடைய தாத்தா சிவசிதம்பர ராமசாமி படையாட்சியார் அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்தநாளில் ஐயா ஆற்றிய மகத்தான மக்கள் பணிகளை நினைவுகூர்ந்து ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..!
வேளாண் மக்களின்
வாழ்வாதாரம் காக்கவும்,
அனைத்து உயிர்களின்
இன்றியமையாத உயிர்த்தேவையான
நீர் உரிமை காக்கவும்,
தன்னலம் விடுத்து
எரிதழலுக்குத் தன்னுயிர் ஈந்து
மண்ணுயிர் காத்த
மான மறவன்
அன்புத்தம்பி
காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவைப்போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு கொடுங்கோன்மையின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்து தண்டிக்க முனையும் திமுக அரசின் பழிவாங்கும்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரையாண்டுக் காலத்தில் திமுக அரசிற்கு எதிராகக் கருத்துகளைப் பகிரும் எதிர்க்கட்சியினரைப் பொய் வழக்குகள் மூலம் ஒடுக்க நினைக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்திய ஒன்றியத்தில் மதவாத பாஜக அரசால் அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் பத்திரிகையாளர்கள், மனித உரிமை போராளிகள் ஆகியோர் மீது எத்தகைய கொடூரமான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் ஏவப்படுகின்றனவோ அதற்கு சற்றும் சளைக்காமல், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் காவல்துறை, சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தியும் அடக்குமுறை கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன.
திமுக ஆட்சியில் நிலவும் அதிகார அத்துமீறல்களையும், சட்டம்-ஒழுங்கு சீரழிவினையும் ஊடகம் வாயிலாகத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்த புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விடுத்து, தாக்குதலுக்கு உள்ளான அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு புனைந்து கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. அக்கொடுமையின் நீட்சியாகத் தற்போது திமுக அரசு குண்டர் சட்டத்தினைத் தொடுத்துள்ளது கொடுங்கைகோன்மையின் உச்சமாகும்.
பேச்சுரிமை, கருத்துரிமை என்று மேடைக்கு மேடை சனநாயக மாண்புகள் பற்றி பாடமெடுக்கும் திராவிடத் திருவாளர்கள், தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்குறைகள், நிர்வாகத் தவறுகள், ஊழல் முறைகேடுகள் குறித்தான விமர்சனங்களைக் கூட ஏற்க மனமில்லாமல், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மீது பொய்வழக்கு புனைந்து அடக்கி ஒடுக்க முயல்வது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
பொய்ப்புகாரை வழக்காகப் பதிவு செய்து, கைது செய்து சிறையிலடைத்து ஊடகவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரையும் மிரட்டுவது என்பது, தமது அரசுக்கும், அதன் செல்வாக்குமிக்க அதிகார மையங்களுக்கும் எதிராக எவரும் எதிர்கருத்தோ, விமர்சனமோ செய்துவிடக்கூடாது என்ற திமுகவின் நடவடிக்கைகள் எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. திமுக அரசு எது செய்தாலும் சரி என்று ஆதரவு தாளம் போடும் ஒரு சில ஊடகங்களையும், ஒத்து ஊதும் கூட்டணி கட்சிகளையும் போலவே அனைத்து எதிர்க்கட்சிகளும் இருக்க வேண்டும் என்ற திமுக அரசின் எதேச்சதிகாரமனப்பான்மையால், தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் முற்று முழுதாக காவு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் நிலையானது எனும் மமதையில் திமுக அரசின் இத்தகைய ஆட்சி அதிகார அடக்குமுறைகளுக்கும், ஆணவப்போக்கிற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஆகவே, திமுக அரசு புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுக்கும் கொடும் முடிவை கைவிட்டு, அவர் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உன் இடத்தினை உறுதி செய்!
இனத்தை முன்னிறுத்து!
இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்!
என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14.09.2025) மாலை கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
youtu.be/iREZ9wJN8nY -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள்நிதிப் பங்களிக்க: donate.naamtamilar.org/convention_for_if_we_lose_land_los… -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
🔴 தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக தற்போது 11-09-2025 இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, பீஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் 'எது நமக்கான அரசியல்?' என்ற தலைப்பில் இஸ்லாமிய உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்வின் நேரலை
www.youtube.com/live/7K5-AE9nUI0 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் இன்று 11-09-2025 நடைபெற்று வருகின்ற நினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் நேரில் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப்போராடிய பெருந்தமிழர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகை!
சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளர்!
நம்முடைய தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம்!
சமூகநீதிப் போராளி தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சாதிகள் இல்லையடி பாப்பா என்று,
சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்!
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா; என்று,
பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி, கவிப்புரட்சிக்கு வித்திட்ட பைந்தமிழ் பாவலன்!
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? என்று,
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்துப் பாடச்செய்த பெருங்கவி!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! என்று பாடி,
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோமென
தரணி எங்கும் தமிழ்ப் புகழ் பாடிய பெருமகன்!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு! என்று,
செந்தமிழ் நாட்டினைப் பைந்தமிழ் பாட்டினில்
வைத்துப் போற்றிய பெரும்பாட்டன்!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! என்று,
தெள்ளு தமிழில் தேச விடுதலைக்குப்
பள்ளு பாடிய தென்தமிழ் நாட்டான்!
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடீ! என்று,
கஞ்சிக்கில்லாது அதன் காரணம் அறியாது
துஞ்சி மடிவோரைக் கண்டு நெஞ்சு பொறுக்காது
வெஞ்சினம் கொண்டு வெகுண்ட தமிழ்க்கவி!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி, இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு
நற்கடிப் பெண்ணின் குணங்களாம்; என்று
மண் விடுதலை பாடிய வாயால்
பெண் விடுதலையும் பாடிய பெருந்தகை!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? என்று,
தேமதுர தமிழோசை உலகெலாம் பரவிட
இறவாத புதுக்கவிதை நூல்கள் இயற்றி
தெருவெலாம் தமிழ் முழக்கம் செய்த
பைந்தமிழ்ப் பாவலன்!
பெரும்பாவலர் நம்முடைய பாட்டன் பாரதியார் அவர்களின் தமிழ்ப்புகழைப் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது!
@CMOTamilnadu @mkstalin
ஆவடி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு, வீரராகவபுரத்தில் புதிதாக மருத்துவமனை கட்ட 1.20 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாகச் செயற்பட்டு, அத்திட்டத்தை இடம் மாற்றிப் புளியம்பேடு பகுதியில் மருத்துவமனை கட்டி, மக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
திருவேற்காடு, காடுவெட்டி, வீரராகவபுரம் பகுதியில் 1967ஆம் ஆண்டு அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டப்பட்டது. பின், 2013ல் அதை விரிவாக்கம் செய்து அரசு ஆரம்பச் சுகாதார நிலையமாகச் செயற்பட்டு வருகிறது. இங்கு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை தோறும், 300 கர்ப்பிணிப் பெண்களும், மற்ற நாட்களில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் மருத்துவம் பெற்று வருகின்றனர். அதேபோல் 1500க்கும் மேற்பட்ட முதியவர்கள் நீரழிவு நோய், இரத்தக்கொதிப்புக்கு மாத்திரை வாங்கி வருகின்றனர். வீரராகவபுரம் பகுதியானது ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், திருவேற்காடு நகராட்சி மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள மேல்பாக்கம், கண்ணப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களும் எளிதாகப் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து மருத்துவம் பெற வாய்ப்பாக அமைந்திருந்தது.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டுத் தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீரராகவபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், திடீரென இத்திட்டம் அப்பகுதி பொதுமக்களுக்குத் தெரியாமல் வீரராகவபுரத்திலிருந்து புளியம்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனால் வீரராகவபுரத்தில் பல ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த மருத்துவமனை மூடப்பட்டு, இனி புளியம்பேட்டில் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது புளியம்பேடு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார நிலையம், திருவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும் அப்பகுதி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் பொதுப் போக்குவரத்து வசதி இல்லை, இதனால் ஏழை எளிய மக்கள், வேலப்பன்சாவடியில் இறங்கி 2 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. போதிய பாதுகாப்பு வசதியும் அப்பகுதியில் இல்லை. இதனால், பரிசோதனைக்காகவும், மருத்துவம் பெறவும் செல்லும் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
வீரராகவபுரத்தில் மருத்துவமனை கட்ட 1.2 ரூபாய் கோடி நிதி ஒதுக்கி திருவேற்காடு நகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாகச் செயற்பட்டு புளியம்பேடு பகுதியில் மருத்துவமனை கட்டி மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கி அலைகழிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. திருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்படும் ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை மிக மிக நியாயமானது.
ஆகவே, தமிழ்நாடு அரசு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதியோடு வீரராகவபுரத்தில் செயற்படும் ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடம் மாற்றாமல் மக்கள் பயன்பெறத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதே சமயம், திருவேற்காடு சுற்றுவட்டாரத்தில் மக்கள் தொகை ஒரு இலட்சத்தை எட்டியுள்ளதால், அதற்கேற்ப புளியம்பேடு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவமனையைத் துணை சுகாதார நிலையமாக மாற்றி இயங்கச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சென்னை, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சங்கிதா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ரமணா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ரமணா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - போளூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி கோபிநாத் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நாகராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நாகராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே, என் கரம்பற்றி என்னோடு கொள்கைவழியில் பயணிக்கும் ஆருயிர் இளவல்!
மங்காத இனஉணர்வுவைக் கொண்டு, தமிழ்த்தேசிய அரசியல் அரியணை ஏறுவதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்திடும் எனது பேரன்பிற்கினிய தம்பி!
எழுத்து, பேச்சு, நிர்வாக மேலாண்மை எனும் தனது ஒப்பற்ற தனித்திறன்களையும், பன்முக ஆற்றல்களையும் எல்லாம் இனத்தின் நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் நாளும் செலவழிக்கும் பேராற்றலாளன்!
தன்னை முன்னிறுத்தாது, மண்ணையும், மக்களையும், இலட்சியத்தையும், கனவையும் முன்னிறுத்தி, பொது நோக்கத்துக்காக அர்ப்பணிப்போடு உழைக்கும் உயர் தகுதிகள் கொண்ட எனது நம்பிக்கைக்குரிய முதன்மைத்தளபதி!
தனது அரவணைக்கும் பெருங்குணத்தாலும், இனிமையான அணுகுமுறையாலும், கனிவான சொற்களாலும் எல்லோரது அன்பையும், ஆதரவையும் பெற்றிருக்கும் உயர் பண்பாளன்!
எப்போதும் எனது மனவோட்டமறிந்து, அதற்கேற்ப செயலாற்றும் தன்மைகொண்ட என்னுடைய இதயத்துக்கு நெருக்கமான உடன்பிறந்தான்!
ஆருயிர் தம்பி வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களுக்கு என்னுடைய அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
@manisenthilntk -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகம் முழுவதும் இயன்முறை மருத்துவத் தொண்டாற்றி உடலியக்கத் தடைகள் போக்கும் இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூரும் நாள் இன்று (செப்டம்பர் - 08)!
மருந்துகள் தோற்கும் இடத்தில்
மருத்துவப் பயிற்சிகள் மூலம் உடலின் இடர் களைந்து துயர் தீர்க்கும் இயன்முறை மருத்துவர்களின் தொண்டுள்ளம் தாய்க்கு இணையானது.
மருத்துவத் துறையில் இயன்முறை மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரமும், மதிப்பும் ஒன்றிய - மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டும். இயன்முறை மருத்துவர்களின் கோரிக்கைகளை அங்கீகரித்து, தனி ஆணையம் (Physiotherapy Council) அமைத்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.
நலமிக்க முதுமை (Healthy Ageing) எனும் இந்த ஆண்டிற்கான கருப்பொருளுடன்
வாதம் என்னும் விலங்கை உடைத்து,
முடியாது எனும் எண்ணம் தகர்த்து,
மருந்தில்லா மருத்துவம் செய்யும் மந்திரக்காரர்களுக்கு
என் அன்பு நிறைந்த உலக இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
#worldphysiotherapyday2025 #healthyageing -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க,
அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி,
இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்!
தான் உயிரோடு இருந்த நாள்வரை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி!
தாயகம் காக்க விடுதலை நெருப்பாய்
வெடித்துச் சிதறிய மாவீரன்
சுந்தரலிங்கனாரின்
இணையில்லா வீரத்தையும்,
ஈடில்லா ஈகத்தையும்
போற்றுகின்ற இந்நாளில்
அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று
தாய்மண்ணைக் காப்போம் என்ற
உறுதியினை ஏற்போம்!
வீரமிகு நம் பாட்டனார் சுந்தரலிங்கம் குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
ஆவணி 23 | 08-09-2025 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் செயற்பாடு அடாவடித்தனமானது. காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கொடுக்கச் சென்ற அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது அதன் வாசலிலேயே வைத்து குண்டர்கள் தாக்குதல் தொடுத்ததும், தனியொரு ஆளாக நின்றவர் தற்காத்துக் கொள்ளவே முயன்றார் என்பதுமான காட்சிகள் காணொளிப்பதிவுகளாக ஊடகங்களில் வெளியானபோதும் பொய்வழக்கைப் புனைந்து, பாதிக்கப்பட்டவர் மீதே வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவது அதிகார அத்துமீறலின் உச்சம்; வெளிப்படையான பாசிச வெறியாட்டம்! இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகாரத்திமிரிலும், பதவிப்போதையிலும் ஆட்டம்போடும் ஆட்சியாளர் பெருமக்களே! உங்களுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. உங்கள் அரசும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
@CMOTamilnadu @mkstalin -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், பெருமதிப்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக வாசலியே நடைபெற்ற இத்தாக்குதல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கான மற்றுமொரு சான்றாகும். அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதான தாக்குதலை தடுக்காது அங்குள்ள காவலர்கள் வேடிக்கைப்பார்த்தனர் என்பது கொடுமையின் உச்சம். இதன்மூலம் காவல்துறை கலவரம் நடைபெறுவதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் விரும்புகிறதா? அதற்கு துணைபோகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள துணிவற்ற கோழைகளாலேயே இக்கொடுந் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
விமர்சனங்களை எதிர்கொள்ள துணிவற்று வன்முறைத்தாக்குதல் தொடுப்பதுதான் அரசியல் அறமா?
பகுஜன் சமாஜ் கட்சியின்
மாநிலத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை முதல் நேற்றைக்கு ஆடுதுறையில் பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்களின் மீது வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றதுவரை தமிழ்நாட்டில் மக்கள் பணியாற்றும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல்
நிலவுகிறது. அதன் உச்சமாக இன்றைக்கு தலைநகரில், தமிழ்நாடு காவல்துறையின் அதி உயர் அலுவலக வாசலில், காவல்துறையினர் கண் முன்னேயே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? திமுக ஆட்சியில் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா ? என்ற ஐயத்தை எழுப்புகிறது. சட்டம் ஒழுங்கை சீரமைக்க திமுக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுதான் நாள்தோறும் நடைபெறும் கொடுங்குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@airportmoorthy -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பசுமை மின்சாரம் என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கைப் பார்ப்பதா? கல்லத்திகுளம் சூரிய மின் ஆற்றல் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி வளப்பாதிப்பில்லா வேறு இடத்தில் நிறைவேற்ற ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
@mkstalin @TThenarasu @MRKPanneer @supriyasahuias @Chief_Secy_TN @narendramodi @AmitShah @moefcc @byadavbjp
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை ஊராட்சி, கல்லத்திகுளம் கிராமத்தில் VC Green Energy Pvt. Ltd. மற்றும் அதன் துணை நிறுவனங்களால் திட்டமிடப்பட்டுள்ளப் பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தித் திட்டம், மரங்களின் கொடூர அழிப்பாக மாறியுள்ளது. 264 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 10 லட்சம் மரங்களை வெட்டி அழிக்கும் இந்தத் திட்டம், அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் வேளாண் குடிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, சுற்றுச்சூழலை அழித்து, உயிரினங்களை அழிவுக்குத் தள்ளுகிறது. இது தனியார் சொத்து என்ற போர்வையில் நடைபெறும் சட்டவிரோதச் செயலாகும். இப்பகுதி மலைப்புறப் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தனை மரங்களைக் கொண்ட இந்நிலத்தை மறுவகைப்படுத்துதலுக்கு அனுமதி அளித்ததே தவறாகும்.
மா, பலா, சப்போட்டா, முந்திரி போன்ற பழ மரங்கள் 10 லட்சம் ஒரே நேரத்தில் அழிக்கப்படுவதால், இப்பகுதியில் சூழலியல் மாற்றம் தீவிரமாகும். இங்கு வாழும் மான், காட்டுப்பன்றி, மயில், உடும்பு போன்ற உயிரினங்கள் வாழிடத்தை இழக்கின்றன. ஒவ்வொரு மெகாவாட் சோலார் திட்டத்துக்கும் நாள் ஒன்றுக்கு 5000 லிட்டர் நீர்த்தேவை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அளவு குறைந்து சுற்றுப்புறங்களில் இருக்கும் வேளாண் குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பசுமை ஆற்றல் என்ற பெயரில் மரங்கள் அழிக்கப்படுவதால் வெளியாகும் கார்பன், மாற்று மின் உற்பத்தித் திட்டத்தின் பயனை நீர்த்துப்போக செய்யும். மேலும், சூரிய மின்னாற்றல் தகடுகளால் உயர் வெப்பம் ஏற்படும்.
இதுபோன்ற பெரிய அளவிலான திட்ட அனுமதிக்கு (10 லட்சம் மரங்கள் போன்றவை), 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின் கீழ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்படவேண்டும். ஒரு திட்டமானது 20 ஹெக்டேருக்கு மேல் இருந்தால் அல்லது B வகையின் கீழ் வந்தால் (5 மெகாவாட்டிற்கு மேல் சூரிய மின் ஆற்றல் திட்டங்களுக்குப் பெரும்பாலும் மாநில அளவிலான அனுமதி தேவைப்படும்.) இத்திட்டத்திற்கு இதுவரை மதிப்பீடு நடத்தப்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாற்று மின் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றாலும் தரிசு நிலங்களுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான மரங்கள் இருக்கக்கூடிய நிலங்களை அழிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சிக்கலில் தலையிட்டு மாற்று இடத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் தற்போது முன்னெடுக்கப்படும் நிலத்தில் இதுவரை அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி!
நமது போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட இத்திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு எல்லாம்வல்ல ஏகஇறைவனின் நல்லருள் கிடைக்கப் பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
#miladunnabi2025 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன விடுதலை
அரசியல் களத்தில்
இடையறாது
இன்முகத்தோடு
இயங்கும் பேரன்பன்!
என் தோளுக்குத்
துணையாய் நின்று
என் பணியை
தன் பணியாய் நினைத்து
உழைக்கும் என்
உள்ளத்துத் துணையன்!
தன்னை முன்நிறுத்தாது
தான் கொண்ட இலட்சியத்தை
முன்னிறுத்தித் துளியும்
தன்னலமில்லாமல்
இனநலம் போற்றும் என்
பேராற்றல் இணையன்!
உள்ளத்து உறுதி அகலாமல்,
உச்சிக் காலத்து நிழலென
ஒரு நொடி விலகாமல்,
கொண்டக் கொள்கையில்
அணுவளவும் பிறழாமல்
சிந்தை செழித்த இனியன்!
என்னுயிர் இளவல்
சே.பாக்கியராசனுக்கு
பேரன்புமிக்க பிறந்தநாள்
நல்வாழ்த்துகள்!
@PackiaSe -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!
இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..!
மண் விடுதலைக்காக மக்களிடம் முழங்கிய ஆகச்சிறந்த சொற்பொழிவாளர்..!
பன்மொழிப் புலமைப்பெற்ற பேரறிஞர், திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்..!
கவிநயம் மிகுந்த தமிழ்செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்ற தமிழ் இலக்கிய - இலக்கண வித்தகர்..!
தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை அழியாமல் காத்த பெரும்புலவர்!
தமிழ் தேசம் என பொருள்படும் தமிழ் நேசன் இதழ் நடத்திய பத்திரிகையாளர்..!
ஏழை மக்களுக்கு இலவசமாக வாதாடிய நேர்மைமிகு வழக்கறிஞர்..!
தற்சார்பு பொருளாதாரம் போற்றிய புரட்சியாளர்..!
6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணைப்பெற்று சிறை கண்ட விடுதலை வீரர்..!
வணிகர், கட்டுரையாளர், நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், பதிப்பாளர், தத்துவவாதி என்று பன்முக ஆற்றல் பெற்ற நம்முடைய பெரும்பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் ஈக வாழ்வினைப் போற்றும் திருநாள் இன்று!
தாயக விடுதலைக்காக தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த அப்பெருமகன், கடைசி காலத்தில் ஊர் ஊராய் சென்று மண்ணெண்ணெய் விற்கும் வறிய நிலையில் வாடினார் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம்!
இந்த நிலத்தில் ஒரு பிடி மண்ணையும் அந்நியர் கொள்ளை கொண்டு போகக்கூடாது என்று செக்கிழுத்து, சிறைபட்டு, சொத்திழந்த அப்பெருந்தமிழனின் ஈகப்பெருவாழ்வைப் போற்றுகின்ற இந்நாளில், கண்ணுக்கு முன் நம் மண்ணும், வளமும் நாட்டைஆளும் கொள்ளையர்களால் நாளும் களவுபோவதைத் தடுப்பதற்காகவாவது அரசியல் வலிமையும், அரசு உரிமையும் பெறுகின்ற பெரும்படையாக நாம் மாறுவோம் என்ற உறுதியை ஏற்போம்!
நம்முடைய வீரமிகு பாட்டனார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ் மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திட்டமிட்டு இழிவுபடுத்தி அவமதித்துள்ளதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான போட்டித் தேர்வில், ஐயா வைகுண்டர் குறித்த கேள்வியில் 'முடிசூடும் பெருமாள்' என்பதை ‘The god of hair cutting' என்று ஆங்கிலத்தில் மிகத்தவறாக மொழிபெயர்த்து இழிவுபடுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசு தொடர்ச்சியாகப் போற்றுதற்குரிய தமிழின முன்னோர்களையும், தமிழ்த் தலைவர்களையும் உண்மைக்குப் புறம்பான அவதூறு பொய்ப்பரப்புரைகள் மூலம் திட்டமிட்டு அவமதித்து வருவது தமிழர் வரலாற்றைத் திரிக்கும் வெளிப்படையான சூழ்ச்சியேயாகும்.
‘கோயிலுக்குள் நுழையாதே தீட்டு’ என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்தக் கோயிலே எனக்குத் தீட்டு என்று முழங்கி, ‘கண்ணாடி முன் நின்று, உன்னை நீயே வழிபடு! நீதான் கடவுள்!’ என்று தனிவழியைத் தோற்றுவித்த உண்மையான மெய்யியல் பேரறிஞர் ஐயா வைகுண்டர் அவர்கள். முதன் முதலாக ‘துவையல் விருந்து’ என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார். பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னுடைய சொந்த நிலத்தில் தனிக் கிணறு வெட்டி, அதில் அனைத்து மக்களையும் நீர் எடுக்க அனுமதித்து, அதையே பொதுக்கிணறாக்கிய உண்மையான பொதுவுடைமைவாதி. முழங்காலுக்குக் கீழ் வேட்டிக் கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளைத் தகர்க்க, அதைத் தலையில் கட்டிக்கொள்ளச் செய்து, தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திய உண்மையான சமயப்புரட்சியாளர். ‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர் ஐயா வைகுண்டர் அவர்களின் பெரும்புகழை அவமதிக்கும் போக்கினை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாடு தேர்வாணையத்தின் இத்தகைய அலட்சியப்போக்குப் பொறுப்பற்றத்தனத்தின் உச்சமாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் ஆங்கிலம் அறிந்த ஒருவர்கூட இல்லையா? அத்தனை கவனக்குறைவாகவா அரசுத்தேர்வாணையம் செயற்படுகிறது? அல்லது திமுக அரசால் திட்டமிட்டு வேண்டுமென்றே இதுபோன்ற கேள்விகள் திணிக்கப்படுகிறதா? திராவிட முன்னவர்களான பெரியார், அண்ணா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து இதுபோன்று அலட்சியமாகத் தவறான கேள்விகளைக் கேட்க முடியுமா? அதை திமுக அரசுதான் அனுமதித்து வேடிக்கைப்பார்க்குமா? உண்மைக்குப் புறம்பான இதுபோன்ற பொய்ப்பரப்புரைகளால் பேரருளாளர் முடி சூடும் பெருமாள் ஐயா வைகுண்டரின் பெரும்புகழை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.
ஆகவே, தமிழ்மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரைத் திட்டமிட்டு இழிவுபடுத்தியதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற அவதூறான கேள்வியை உருவாக்கியவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலத்தில் அரசுத்தேர்வுகளில் இதுபோன்ற திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் இடம் பெறாமல் கவனமுடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!
அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்!
சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!
தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும், மொழிப்பற்றும் ஊட்டி தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத்தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை!
மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப் பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு! ஆனால், அதையே வாய்ப்பாக்கிக்கொண்டு, செல்லும் இடமெல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ்ப்நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!
நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாப், பா.செயப்பிரகாசம் என 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மை தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா இலக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச்செல்வங்களே!
அன்னைத்தமிழைப் பயிற்சி மொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணைநின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து, அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரி தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ்மறவர் நம்முடைய ஐயா இலக்குவனார் அவர்கள்!
மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும்புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினை போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்த வழிநின்று ‘தமிழ் மொழியையும், மண்ணையும் விழியென காப்போம்’ என உறுதியேற்போம்!
‘மொழிப்போரை முன்னின்று நடத்திய பெரும்புலவர்' ஐயா இலக்குவனார் அவர்களுக்கு நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் அருவாள், சுத்தியல், மண்வெட்டி போன்ற இரும்புக் கருவிகளைத் தயாரிக்கும் இரும்பு கொல்லர் தொழிலாளர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்வதையும், விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதையும் கண்டித்து தாங்கள் முன்னெடுத்துவரும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவு கோரி, தென்காசி மாவட்டம் பாவா நகரைச் சேர்ந்த இரும்பு கொல்லர் தொழிலாளர் உறவுகள் 01-09-2025 அன்று திருநெல்வேலியில் என்னை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இரும்பு கொல்லர் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவர்களது வாழ்வாதாரப் பாதுகாப்புக்கான அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணைநிற்கும் என உறுதியளித்தேன்.This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 01-09-2025 அன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தும் முன்பு வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன்கோட்டையில் உள்ள தெய்வத்திருமகனார் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2025 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன்.
www.youtube.com/live/OlGCceLLsak -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி!’ என்கிறார். ‘அடிமை வாழ்வினும்; உரிமைச்சாவு மேலானது!’ என்பது மானத்தமிழ் முன்னோர்கள் கொண்டிருந்த உயிர்க்கோட்பாடு!
அந்த வழிவழியே வந்த வீரத்தமிழ்மறவர்தான் பொன்பரப்பியில் பூத்த புரட்சி தீ, எங்களைப்போன்ற பிள்ளைகளின் முன்னத்தி ஏர், மூத்த வழித்தடம், தமிழ்த்தேசிய இனப்போராளி அண்ணன் தமிழரசன் அவர்கள்!
மற்ற மொழிவழி தேசிய இனங்களைப்போல தமிழினமும் உரிமைப்பெற்று பெருமையோடு வாழ்ந்துவிடாதா? என்று ஏங்கிய எமது முன்னவர்களில் முதன்மையானவர்.
‘சாதியை ஒழிக்காமல் தமிழ்ச்சமூக ஓர்மைஇல்லை; தமிழ்ச்சமூக ஓர்மை இல்லாமல் அதிகார வலிமை இல்லை; அதிகார வலிமை இல்லாமல் தமிழர் விடுதலை இல்லை’ என்கிற அடிப்படை அரசியல் புரிதலோடு பெரும்படை கட்டி எழுப்பிய மாவீரன் அண்ணன் தமிழரசன் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் தாங்கிபிடித்த தமிழ்த்தேசிய தத்துவ வழி நிற்கும் உடன் பிறந்த உறவுகளான நாங்கள் அவ்வீரத்தமிழ் மறவனின் நினைவைப்போற்றுவதில் பெருமையடைகிறோம்!
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் பூலித்தேவன் அவர்கள்!
'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்! எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள்!
அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.
பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்தினாள்!
'தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லைதான்!’ ஆனால் ஒவ்வொரு முறையும் யார் தீக்குச்சியாக்கப்படுகிறார்கள்? என்பதுதான் கேள்வி; அப்படி ஒரு தீக்குச்சியாகி கல்வி உரிமை மீட்புக்கான புரட்சித்தீயைத் தமிழ் மண்ணில் பற்ற வைத்த மானமறத்தி அன்புத்தங்கை அனிதா!
அந்த எளிய மகள் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாட்டில் பேரதிர்வை உண்டாக்கிய போதிலும், அவரைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகள் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்ட போதிலும், இன்றுவரை நீட் தேர்வினை இம்மண்ணை விட்டு அகற்றமுடியவில்லை என்பதுதான் சமகால வரலாற்று பெருங்கொடுமை!
அனிதா வீட்டிற்கே சென்று ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம், நீட்டை ஒழிக்கும் இரகசியம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று சொன்னவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் இரகசியத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதுதான் நம்முடைய நீண்டநாள் கேள்வியாக இருக்கிறது.
அன்புத்தங்கை அனிதாவின் ஈகத்தைப் போற்றுகின்ற இந்நாளில், அவருடைய உடன் பிறந்தாராகிய நாம் தொடர்ச்சியாகப் போராடி, அவர் கண்ட பெருங்கனவை நிறைவேற்றுகின்ற உறுதியை ஏற்போம்!
கல்வி உரிமைப்போராளி அன்புத்தங்கை அனிதா அவர்களுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும் தலைவர்!
தமிழ்மாநில காங்கிரசு கட்சியை நிறுவி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பெருந்தகை!
அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்,
இருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,
நான்குமுறை நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரசு கட்சித் தலைவர்
என பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்து, இந்திய அரசியலின் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த போற்றுதலுக்கும் வணக்கத்திற்குமுரிய பெருந்தமிழர், மக்கள் தலைவர் நம்முடைய ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாளில் ஐயா அவர்களின் மக்கள் பணிகளை நினைவு கூர்ந்துப் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக்கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னைநாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் சரிசமமாக பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுள் ஒருவரான ஐயா க.மணியன் அவர்களின் மகளும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் அன்புச்சகோதரர் ச.கலைச்செல்வம் அவர்களின் துணைவியாருமாகிய தங்கை மனோரஞ்சிதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அன்பு மகளை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா க.மணியன் அவர்களுக்கும், உயிர்த்துணையை இழந்து பேரிழப்புக்கு ஆளாகியிருக்கும் சகோதரர் ச.கலைச்செல்வம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை மனோரஞ்சிதம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது, தமிழக மக்களின் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரலையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும். இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@mkstalin @TThenarasu @supriyasahuias @KanimozhiDMK @Chief_Secy_TN @moefcc @narendramodi @byadavbjp @PetroleumMin @OfficeofHSP
இராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்த நிலையில் அதற்கான சூழலியல் அனுமதியை மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம், அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தினை முன்னெடுப்பது மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரே கடல்சார் உயிர்கோளக் காப்பகம் மன்னார் வளைகுடாவாகும். இது அரிய மற்றும் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களை, குறிப்பாக பவளப் பாறைகள், மீன்கள், கடல் மிருகங்கள் மற்றும் பல்வேறு கடல் உயிரினங்களைக் கொண்டுள்ளது. திட்டமிடப்பட்டக் கிணறு தோண்டும் இடங்களுக்கு அருகில் உள்ள இந்தப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடியது. இந்த செயல்பாடுகள், கடல் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும். மேலும் இத்திட்டம், கிணறு தோண்டும் இடங்கள், குழாய்கள் மற்றும் செயலாக்க ஆலைகளுக்குப் பெரும் நிலப்பரப்பு தேவைப்படுத்துகிறது. இது கடற்கரையோர வாழ்விடங்களை அழித்து, உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கும்.
2019ல் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹைட்ரோகார்பன் திட்டத்தினை சட்டசபையில் எதிர்த்து அதிமுக அரசிடம் குரல்கொடுத்தது முதல், 2023ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்துக் கேள்வி எழுந்த நிலையில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிட மாட்டோம் என்று ஆளும் கட்சியாக உறுதியளித்தது வரையில் திமுக அரசு கூறிவந்த கூற்றுக்கு மாறாக தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசினால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பது மேலும் கண்டனத்திற்குரியதாகும். மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் முழு அதிகாரம் மாநில அரசிடம் இல்லை என தமிழ்நாடு அரசு கூறுமானால் அதனை மாற்றி அமைக்கும் முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லையா? மேலும் இவற்றை நிறுவக்கூடிய விதிகளான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006ஐ உருவாக்கியபோது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சராக திமுகவை சேர்ந்த ஆ.ராசா அவர்கள் இருந்த நிலையிலும் இதனைக் கருத்திற்கொள்ளவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது.
இனியும் மக்களை வெற்றுச் சொற்கள் கொண்டு ஏமாற்றாமல், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் திமுக அரசு முன்வர வேண்டும். இத்திட்டத்திற்கான சூழலியல் அனுமதியை திரும்பப்பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இத்திட்ட முன்மொழிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - தி.நகர் சட்டமன்றத் தொகுதி (132வது வட்டம்) மாவட்ட குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி இரா.கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்புத்தம்பி இரா.கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தம்பி கண்ணன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி
வழக்கறிஞர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி த.ஜெயகாந்தன் அவர்களின் தாயார்
த.சாவித்திரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய அன்னையை இழந்துவாடும் அன்புத்தம்பி ஜெயகாந்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா சாவித்திரி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - மாதவரம் சட்டமன்றத் தொகுதி,
மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி த.பிரவீன்குமார், ஒன்றியப் பொறுப்பாளர் த.சாமுவேல் ஆகியோரின்
தாயார் த.சந்திரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய அன்னையை இழந்துவாடும் அன்புத்தம்பிகள் பிரவீன்குமார், சாமுவேல் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா சந்திரா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக,
"மரங்களோடு பேசுவோம்!
மரங்களுக்காகப் பேசுவோம்!"
என்ற தலைப்பில்
வருகின்ற 30-08-2025 அன்று
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில்,
நடைபெறவிருக்கின்ற
மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை இன்று 20-08-2025 நேரில் சென்று பார்வையிட்டேன்.
www.youtube.com/live/dVEfraTTp9U -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் போர்ப்படைத் தளபதி!
மானத்தமிழினத்தின் வரலாற்று வெகுமதி!
வீரப்பெரும்பாட்டன்
ஒண்டிவீரன் வீரப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தாய்த் தமிழ்நாட்டின் தெற்கு எல்லையாம் குமரி மண்ணைக் காத்த முன்னவர்களில் முதன்மையான வீரர்..!
திருவாங்கூர் சமஸ்தான காங்கிரசு கட்சியில் புரையோடியிருந்த இனவெறி, சாதிவெறி மேலாதிக்கத்தை எதிர்த்து, தமிழர் உரிமைகள் காக்க உருவான திருவாங்கூர் தமிழர் காங்கிரசில் இணைந்து போராடிய பெருந்தகை..!
மக்களின் பேரன்பினாலும், பேராதரவினாலும் 1952ஆம் ஆண்டு சுயேட்சையாக திருவாங்கூர் - கொச்சி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இனவெறி தாண்டவமாடிய மலையாளச் சட்டமன்றத்தில், பட்டம் தாணு பிள்ளையின் கொடுங்கோன்மை அரசை எதிர்த்து முழங்கிய பெருந்தமிழர்..!
புரட்சித்தீயைப் பற்றவைக்கும் பேருரைகளால் தமிழ் இளையோருக்கு இனவிடுதலை உணர்வூட்டிய புரட்சியாளர்..!
'குமரித்தந்தை' தாத்தா மார்ஷல் நேசமணி போன்ற முன்னணித் தலைவர்கள் சிறைப்பட்ட காலத்தில் குமரி மண் மீட்புப் போராட்டத்தினைத் தடைபடாது தொடர்ந்து முன்னெடுத்த கட்டளை தளபதி..!
11-08-1954 அன்று தமிழர் விடுதலை நாள் ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்தி, காவல்துறை அடக்குமுறைகளுக்கும், தடியடிகளுக்கும் அடிபணியாமல் குருதி சிந்திப் போராடிய மாவீரர்..!
'தெற்கெல்லை மீட்புப் போராளி' தாத்தா குஞ்சன் நாடார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நாகை மாவட்டம், பனங்குடியில் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் (Chennai Petroleum Corporation Limited - CPCL) சிபிசிஎல் கடந்த 2019ஆம் ஆண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக விளைநிலங்களைப் பறித்து, நிலத்திற்கான இழப்பீட்டினைத் தராமல் ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடி வரும் அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி வருவது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டத்தில் உள்ள பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஎல் நிறுவனம் 620 ஏக்கர் நிலங்களைக் கேட்டபோதே அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களை வழங்க மறுத்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்ததோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, வேளாண் நிலங்களை அபகரித்து சிபிசிஎல் நிறுவனத்திடம் வழங்கிய தமிழ்நாடு அரசு, ஐந்து ஆண்டுகளாகியும் அதற்கான இழப்பீட்டினைப் பெற்றுத்தராமல் ஏமாற்றி வருவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். ஏற்கனவே 1992ல் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய 600 ஏக்கர் நிலத்தில் 400 ஏக்கர் நிலமானது கருவேலங்காடாக மாறி எவ்வித பயனும் இன்றிக் கேட்பாரற்றுக் கிடக்கிறது.
பொன் விளைந்த பூமியான விளைநிலத்தை ஒன்றும் செய்யாமல் கருவேலங்காடாக மாற்றிய சிபிசிஎல் நிறுவனம், மேலும் 620 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது ஏன்? விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுப்பது ஏன்? தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளைநிலங்களைப் பறித்துக்கொண்டு, உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வரும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண் பெருங்குடி மக்கள் போராடி வரும் நிலையில், கடந்த 2024ஆம்ஆண்டு மே மாதம், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் சட்டத்தின் ( Rehabilitation and Resettlement Act 2013) படி, குத்தகைத்தாரர்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் இழப்பீடு அறிவித்து, பயனாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திமுக அரசு அவர்களுக்கான இழப்பீட்டை இன்றளவும் பெற்றுத்தராமல் துரோகத்துக்கு துணைநிற்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
வேளாண் நிலங்களைப் பறித்து சிபிசிஎல் நிறுவனத்திற்குத் தருவதில் காட்டிய ஆர்வமும், அக்கறையும், விவசாயிகளுக்கு இழப்பீட்டினைப் பெற்றுத்தருவதில் தமிழ்நாடு அரசு காட்டாதது ஏன்? விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக, எண்ணெய் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதற்குப் பெயர்தான் சமூக நீதியா? இதுதான் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும் முறையா?
ஆகவே, நாகை மாவட்டம் பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்துக்கு தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து பறித்துக் கொடுத்த விளைநிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா டி.ஆர்.பாலு அவர்களின் மனைவியும், தொழிற்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான அம்மா ரேணுகா தேவி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரம் அடைந்தேன்.
தனது வாழ்க்கைத்துணையை இழந்து வாடும் ஐயா பாலுவுக்கும், ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி ராஜாவுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ரேணுகா தேவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@TRBRajaa -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப் பயனெனக் கருதி வாழ்ந்து, செந்தமிழ் தந்த செம்மாந்த புகழோடு மறைந்த அப்பா நெல்லை கண்ணன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்!
இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்!
தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட பெருந்தமிழர் அப்பா நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தலையாயக் கடமையாகும்.
தமிழ்க்கடல், இலக்கியப் பேராற்றல்
அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம்முடைய தமிழ்ப்புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களது சிற்றன்னை அம்மா செல்லம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து ஆழ்ந்த மனத்துயரமடைந்தேன்.
பெற்றெடுத்து வளர்த்த தந்தையையும், உயிருக்கு உயிரான சகோதரியையும் இழந்த நிலையில் தற்போது சிற்றன்னையையும் இழந்திருக்கிற அண்ணனின் நிலைகண்டு மனம் கலங்குகிறேன்.
தன்னைச் சீராட்டி வளர்த்த மற்றொரு தாயான சிற்றன்னையின் இழப்பால் வாடும் அண்ணனுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செல்லம்மாள் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@thirumaofficial -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, பெ.பொன்னேரி ஊரைச் சார்ந்தவரும் செந்தமிழர் பாசறை சவூதி அரேபியாவின் சுபைல் மண்டலப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி நடராசன் அவர்களின் தாயார் திருமதி செ.பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி நடராசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செ. பழனியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்கள் மறைவெய்தியதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று 16-08-2025 நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் எங்கள் மூதாதை மாயோன் இறைப்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி இன்று ஆடி 31 (16-08-2025) நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முல்லை நில இறைவன்!
ஆயர்குலத் தலைவன்!
எங்கள் மூதாதை
மாயோன் இறைப்புகழ் போற்றி! போற்றி!
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!
மாயோன் திருநாளையொட்டி, இன்று ஆடி 31 (16-08-2025) காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா கொண்டாடப்படவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - ரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சுத்தமலை பெருமாள் இராதாகிருட்டிணன் அவர்களின் தாயார் அம்மா இரா.சின்னப்பொண்ணு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இரா.சின்னப்பொண்ணு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பணி நிரந்தரம் செய்யக்கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் தொடர்ந்து 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை திமுக அரசு காவல்துறையினர் மூலம் இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, நகரின் 8க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக சிறைபடுத்தி அடைத்துவைத்துள்ளது. உறவுகளின் நிலை அறியவும், உடனடியாக விடுவிக்க வலியுறுத்தும் விதமாகவும் இன்று 14-08-2025 சென்னை வேளச்சேரியில் உள்ள மண்டபத்திற்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
தனியார்மயத்துக்கு ஆதரவாகவும், தனியார் முதலாளிக்கு ஆதரவாகவும் மண்ணின் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இத்தகைய கோரத்தாக்குதல்கள் திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்பது திண்ணம். திராவிட மாடலெனக் கூறி, அடக்குமுறை ஆட்சியைக் கட்டவிழ்த்துவிடும் ஆட்சியாளர்களே! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!
www.youtube.com/live/MsBLKg1PQic
www.youtube.com/live/WY5kEZem2WE -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்சியாளர்களே!
@mkstalin @PriyarajanDMK @Subramanian_ma @supriyasahuias @TThenarasu @MMathiventhan @chennaicorp @KN_NEHRU
தங்களது வாழ்வாதார உரிமைகோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, கொடும் தாக்குதல் தொடுத்து, திமுக அரசு ஏவியிருக்கும் அடக்குமுறையானது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம். விளிம்பு நிலை மக்களின் நியாயமானக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, அவர்கள் மீது பாய்ச்சப்பட்டுள்ள ஒடுக்குமுறையானது கடும் கண்டனத்திற்குரியது. ‘சமூக நீதி’ எனும் சொல்லாடலைத் தாங்கள்தான் பிரசவித்தது போல, மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! அடித்தட்டு உழைக்கும் மக்களின் மீது அதிகார வலிமைக் காட்டி, அடக்கி ஒடுக்குவதுதான் சமூக நீதியா? வாயிலும், வயிற்றிலடித்துக் கொண்டு கதறியழும் எளிய மக்களின் கண்ணீரும், ஓலமும் உங்கள் கல்மனதைக் கரைக்க வில்லையா? ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்றீர்களே, மொத்த தமிழ்நாடும் தூய்மைப்பணியாளர்கள் பக்கம் நிற்கிறது. நீங்கள் எந்த அணியில் நிற்கிறீர்கள்? ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்றீர்களே, எங்கள் உழைக்கும் மக்களோடு நிற்க மறுத்து, தனியார் முதலாளிக்கு எதற்கு வெண்சாமரம் வீசுகிறீர்கள்?
சென்னை எனும் மாநகரத்தைத் தங்களது உழைப்பினால் உருவாக்கியது; உருமாற்றியது ஆதித்தொல் குடிமக்கள். ‘சிங்காரச்சென்னை’ என இன்றைக்கு தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். அதனை உருவாக்க இரத்தத்தை வியர்வையாய் நாளும் சிந்தி, அரும்பாடு பட்டு உழைத்தது ஆதித்தொல்குடி மக்கள்தான்; சேரிகளிலும், குப்பங்களிலும் வாழும் மண்ணின் மக்கள்தான். அந்த மக்கள் இன்றைக்குத் தூய்மைப்பணியாளர்களாக நிற்கிறார்கள். அவர்கள் போராடியது பொன்னையோ, பொருளையோ கேட்டல்ல; அடிப்படை வாழ்வாதார உரிமையைக் கேட்டு! அதனை செய்துகொடுப்பதில் என்ன சிக்கல்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் திமுக அரசு, தமிழ்நாட்டில் தூய்மைப்பணியைத் தனியார்மயமாக்குவதற்காக இந்தளவுக்கு வரிந்துகட்டுவது ஏன்? இதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா? போராடும் தூய்மைப்பணியாளர்களை ஏறெடுத்தும் பாராத உங்களுக்குக் கம்யூனிசம், சோசலிசம் குறித்தெல்லாம் பேசுவதற்குக் கூச்சமாக இல்லையா? மானக்கேடு! ‘ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போல, மக்கள் அங்கே அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில், திரைப்படம் பார்த்துப் பொழுதுபோக்குவது ஒரு முதல்வருக்கு அழகா? இழிநிலை!
தூய்மைப்பணியாளர்களைக் கைதுசெய்து, 8 வெவ்வேறு இடங்களில் இரவோடு இரவாக அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தியது எல்லாம் பாசிசத்தின் வெறியாட்டம் இல்லையா? கைதுசெய்யப்பட்டு 10 மணி நேரத்தைக் கடந்தும் காவலில் வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது இல்லையா? போராட்டக்களத்தில் இருந்த சமூகச் செயற்பாட்டாளர்களான தங்கைகள் வளர்மதி மற்றும் நிலவுமொழி செந்தாமரை ஆகியோரை மிக மோசமாக அடித்துச் சித்ரவதை செய்ததில், நிலவுமொழிக்கு கை உடைந்திருப்பதும், வளர்மதி மயக்க நிலையில் இருப்பதுமான செய்திகள் வருகிறதென்றால் இங்கு நடப்பது மக்களாட்சியா? ஈவிரக்கமற்ற காட்டாட்சியா? பேரவலம்!
தூய்மைப்பணியாளர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, வேடமிட்டு நாடகமாடிய முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது செலுத்தியிருக்கும் அரச வன்முறை வெட்கக்கேடு இல்லையா? தனியார்மயத்துக்கு ஆதரவாகவும், தனியார் முதலாளிக்கு ஆதரவாகவும் மண்ணின் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இத்தகைய கோரத்தாக்குதல்கள் திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்பது திண்ணம். திராவிட மாடலெனக் கூறி, அடக்குமுறை ஆட்சியைக் கட்டவிழ்த்துவிடும் ஆட்சியாளர்களே! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!
கைதுசெய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்களை எவ்வித வழக்குகளுமின்றி, உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அவர்களது பணி நிலைப்பையும், வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், வரும் ஆண்டில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்கப் பாடத்தைப் புகட்டுவார்களென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைப் போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது. போராடும் தூய்மைப்பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவற்ற பெண்களாக இருப்பதை மாண்பமை நீதிமன்றம் கவனிக்கத் தவறியது வேதனை அளிக்கிறது.
@mkstalin @PriyarajanDMK @Subramanian_ma @supriyasahuias @TThenarasu @MMathiventhan @chennaicorp @KN_NEHRU
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், சென்னையில் போராட்டம் நடத்த அரசால் ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை மோசமான நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
தங்கள் உழைப்பினை உறிஞ்சி உரிமையைப் பறிக்கும் கொடுங்கோன்மைக்கு எதிராக பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி கடந்த 13 நாட்களாக அறவழியில் தொடர்ந்து போராடிவரும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்தும், அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்தும் தீர்வுகாண உரிய நீதியை வழங்குவதற்கு மாறாக, அவர்களின் போராட்டத்தை இடையூறாக நீதிமன்றம் கருதியது வேதனை அளிக்கிறது.
தூய்மைப் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக ஊண் உறக்கமின்றி உரிமைக்காகப் போராடும் நேரத்தில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அவர்களை அகற்ற முற்படுவது பொருத்தமற்றதாகும். நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளைக் கடைபிடிக்காத தமிழ்நாடு அரசு, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் மட்டும் விரைந்து முனைப்புக் காட்டுவது, இதற்காகவே காத்திருந்த திமுக அரசின் தீய நோக்கம் தெளிவாகிறது.
தாங்கள் போராடும் இடத்தை விட்டு அகல மாட்டோம் என்ற தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளிக்கிறது. தூய்மைப்பணியாளர்கள் வேறு எந்த தளத்தில், களத்தில் தம்முடைய போராட்டங்களைத் தொடர்ந்தாலும் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அறவழியில் போராடும் மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறை தம் கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி கரிகாலன் சூர்யா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா செ.ராஜசேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா செ.ராஜசேகர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்துகிற நம்முடைய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம்!
நாள்: 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு!
இடம்: செஞ்சி
(இந்தியன் வங்கி அருகில்) விழுப்புரம் மாவட்டம்.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று 11.08.2025 மீண்டும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன்.
www.youtube.com/live/dOMG_hBSolU -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களினுடைய 91ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 11-08-2025 சென்னை - அண்ணாசாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகப் படுகொலை செய்த வடமாநில கொலையாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அன்புத்தம்பி சரவணன், அங்குள்ள செங்கல் சூளையில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களால் கொலை கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனதுக்குரியது.
தமிழ்நாட்டின் மாநகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம்நிலை நகரங்கள், குக்கிராமங்கள் வரை இலட்சக்கணக்கில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை பறிபோவதோடு கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் அதிகமாகி, மக்கள் வெளியில் நடமுடியாத அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையையே தாக்கும் அளவிற்கு வடவர்களின் வன்முறை வெறியாட்டம் நடைபெறுவது எந்த அளவிற்குப் பேராபத்தான சூழலை நோக்கி தமிழ்நாடு தள்ளப்படுகிறது என்பதற்குச் சான்றாகும். வடவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தவுடனேயே குடும்ப அட்டை வழங்கி, அதன் மூலம் இருப்பிடச் சான்றும், ஆதார் அட்டையும் பெற்றதன் விளைவே, தற்போது வாக்குரிமை வரை பெறும் நிலைமை மிக மோசமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுகின்றது என்று பொய்ச் செய்தி பரவியதற்கே பீகார் சட்டமன்றம் வரை பிரச்சனை எழுப்பப்பட்டு, அம்மாநில அரசு தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பி, தம் மக்களின் நலன் உறுதிசெய்த நிலையில், வடவர்களால் அடுத்தடுத்து தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் எந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதுதான் தமிழ்நாட்டு மக்களை திராவிட மாடல் அரசு பாதுகாக்கும் செயலா? இதுதான் தமிழர் உரிமைகள் காக்கும் முறையா?
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தி, வருகையை ஆவணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் மட்டுமே வடவர்களால் தமிழ் மண்ணில் நடைபெறும் கொடும் குற்றங்களைத் தடுக்கவும், எளிதில் அடையாளம் காணவும் ஒற்றை வழியாகும். ஆனால், காவல்துறையினர் மீதான வடவர்களின் தாக்குதலுக்குப் பிறகும்கூட விழித்துக்கொள்ளாத தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தையும், கோரிக்கையையும் அலட்சியம் செய்ததன் விளைவே கும்மிடிப்பூண்டி பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை முதல் தற்போது ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணன் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டது வரை கொடுங் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்க முதன்மைக் காரணமாகும்.
ஆகவே, காவல்துறையை நேரடியாக நிர்வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள், முற்றுமுழுதாகச் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கினை சீரமைக்க இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வடமாநிலத்தவருக்கு உள்நுழைவுச் சீட்டு முறையினை உடனடியாக நடைமுறைப்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் இனியும் தொடராதவாறு தடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகக் கொலைசெய்த கொடூரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, விரைந்து மிகக்கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தம்பி சரவணன் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, சின்னபோரூர் வட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி தனசேகர் அவர்களின் துணைவியார் தங்கை மாலினி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
உற்றத் துணைவியாரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி தனசேகர் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை மாலினி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் பாலவாய் கார்த்திக் அவர்களின் மாமனாரும், மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கா.லெட்சுமிதேவி அவர்களின் தந்தையுமான ஐயா மேட்டுக்கோட்டகம் கோ.ஜெயராமன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரம் அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
@CMOTamilnadu @mkstalin
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த, ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு, முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து, அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.
வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q - பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விசமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியும் தருகிறது. வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும், ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.
தமிழ் இனத்திற்கும், நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து, தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன், ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி, நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும், ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானது? வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்?
இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு, எல்லையில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?
நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா?
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும், மானத்தையும், மண்ணையும், மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு, ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q - பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ, வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?
ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q - பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இதற்கு மேலும், Q - பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07.08.2025) அன்று மாலை, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை கீழரத வீதியில் நடைபெற்ற நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபொழுது,
youtu.be/AWmfWB-qQ-c -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும்,
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
ஆடி 25ஆம் நாள் (10.08.2025) காலை 10 மணியளவில்
சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அயராது பாடுபட்ட முதன்மைத்தளபதி!
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறை சென்றபோதும் துளியும் அஞ்சாது துணிவோடு நின்ற களப்போராளி!
தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக் கருத்தியலைத் தோளில் சுமந்து, மேடையில் முழங்கி, களத்தில் உழைத்து நெஞ்சமெல்லாம் நிறைந்து இருக்கிற என்னுடைய ஆருயிர் இளவல்!
என் அன்புத்தம்பி வா.கடல்தீபன் அவர்களது நான்காமாண்டு நினைவு நாளில், அவனின் கனவான தமிழ்த்தேசிய அரசியலை அரியணையேற்ற ஒற்றுமையுடன் பாடுபடுவோம். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும்!
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ள பெருந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் உட்பட மேலும் பலர் பெருவெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ள செய்தி சொல்லொணா துயரத்தைத் தருகின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தாராலி கிராமத்திற்கு அருகில் உத்தரகாசி - ஹர்ஷில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக அப்பகுதியிலிருந்த 10000 தேவதாரு மரங்களை (ஊசியிலை மரங்கள்) அரசு வெட்டியதே பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலச்சரிவு ஏற்பட முதன்மைக் காரணமெனக் கூறப்படுகிறது. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் நம்முடைய பாதுகாப்பு அரண்களாக விளங்கும் மலைகள், காடுகள், மரங்கள், நீர் வழிப்பாதைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிப்பது எத்தகைய பேராபத்தை ஏற்படுத்துகிறது என்பதை, இனியாவது நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
மக்கள் வசதியாக வாழ்வதைக் காட்டிலும் பாதுகாப்பாக வாழ்வது மிக முக்கியம். மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறவிட்ட பிறகு, மரங்களை வெட்டி, கோடிகளைக் கொட்டி அமைத்த நெடுஞ்சாலையால் யாருக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு?
ஆகவே, இனி வரும் காலங்களில் உயிர்கள் வாழ உகந்த நிலமாக நாம் வாழும் பூமியை அடுத்த தலைமுறையிடம் கையளிப்பதுதான் ஆகச்சிறந்த வளர்ச்சி என்பதை உணர்ந்து, தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்தொழிப்பதை இனியாவது ஒன்றிய-மாநில அரசுகள் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். உத்தரகாசி மலைச்சரிவு – பெருவெள்ளப் பேரழிவில் சிக்கியுள்ள மக்களைக் காக்க மீட்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Rescue the People Trapped in the Uttarakhand Landslide and Flood Disaster Immediately!
The sudden landslide and massive floods caused by a cloudburst in Tharali village, located in Uttarkashi district of Uttarakhand, have completely swept away residential areas, resulting in a tragic loss of lives. This devastating incident has deeply shocked and saddened me. The news that many, including army personnel involved in rescue operations, are missing in the flood adds to the unbearable grief. I extend my heartfelt condolences to the families of those who lost their lives and share in their sorrow.
It is being reported that the felling of 10,000 deodar trees (pine species) near Tharali village for the construction of the Uttarkashi–Harsil national highway is the primary reason behind this catastrophic landslide. In the name of development and progress, the destruction of our natural defenses — mountains, forests, trees, and waterways — is leading to grave disasters. It is high time the ruling authorities of this country realized the irreversible damage this causes.
More than living comfortably, it is crucial that people live safely. After turning a place uninhabitable for people, what use is a highway built by felling forests and spending crores of rupees? Who can truly answer this question?
Therefore, I strongly urge both the Union and State governments to abandon their practice of destroying natural resources in the name of industrial growth and national progress. True development lies in preserving the earth as a livable space for future generations. I appeal for immediate acceleration of rescue operations to save those who are still trapped in the Uttarkashi landslide and flood disaster. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சத்தீவை மீட்பது எப்போது?
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே, தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும், 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும், 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும், உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும், பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும், மார்ச் மாதம் 14 மீனவர்களும், ஜூன் மாதம் 8 மீனவர்களும், ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது.
இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா?
இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு,
படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்?
வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு, அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது!!
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க, ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்தி,
ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர் மறை மாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் ஆயர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை, நாம் தமிழர் கட்சி சார்பாக 05-08-2025 அன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மநேய அரசியலின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களும், ஆடு-மாடுகளும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உயிர் மற்றும் உரிமை காக்க வீரியமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஆளுகின்ற திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் அவற்றுடன் கூட்டணி கணக்கிடும் இன்னபிற கட்சிகளும் தேர்தல் வருவதற்கு ஓராண்டு காலத்திற்கு முன்பே, மக்கள் நலன் சார்ந்த சிக்கல்களுக்குப் போராடுவதை முற்று முழுதாய் விடுத்து, மக்களை ஆடு-மாடு மந்தையென நினைத்து வாக்குகளைப் பறிப்பதற்கான பரப்புரைகளைத் தொடங்கிவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியோ வாக்குரிமையற்ற ஆடு-மாடுகளுக்கும், மரங்களுக்கும், இன்னபிற உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிடாத புதிய அரசியல் புரட்சியாகும்.
தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து அவர்கள் உற்றுநோக்கும் உன்னத அரசியலாக உயர்ந்துள்ள, நாம் தமிழர் கட்சியின் உயிர்மநேய அரசியலை அனைவரையும் போல தாமும் கவனித்ததோடு, அதன் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துக்கூறி வரவேற்று அறிக்கையும் வெளியிட்டு உளமார பாராட்டியுள்ள தேனி மண்ணின் மகன், இயற்கை ஆர்வலர் என் ஆருயிர் இளவல் வி.ப.ஜெயபிரதீப் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@VPJayapradeep
Jayapradeep
@VPJayapradeep
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - கீழ்ப்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சின்ன ஓலைப்பாடி கிளையைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தினேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா க.ஏழுமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா க.ஏழுமலை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்!
அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழச் சோசலிசக் குடியரசை அடைவதற்கு இரத்தம் சிந்தி, உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து, உயிரை விலையாகக் கொடுத்து, உயிரீந்த மாவீரர்களின் ஒப்பற்ற வீரவரலாறே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். உலகின் எந்த இயக்கத்தினுடைய விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், அறநெறியையும் பின்பற்றி, போரியல் விதிகளையும், மாண்புகளையும் கடைப்பிடித்து, மரபுப்போர் புரிந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். போர் முடியும் கடைசித் தருவாயில்கூட, பழிவாங்கும் நோக்கோடு, சிங்கள மக்களை அழிக்க முற்படாது, அவர்களது குடியிருப்புகள் மீது தாக்குதல் நிகழ்த்த முனையாது, இறுதிவரை அறம்சார்ந்து நின்ற வீரமறவர்கள் விடுதலைப்புலிகள். சிங்கள இராணுவமானது, தமிழர்களது குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தமிழ் மக்கள் வாழ்விடங்களின் மீது வான்வழித்தாக்குதல் தொடுத்தது; தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி, தமிழின மக்களைப் பச்சைப்படுகொலை செய்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, தமிழர் நிலங்களை அபகரித்து, தமிழர் தேசத்தை சுடுகாடாக்கி, இனவெறியின் கோரத்தாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. எவ்விதப் போர் நெறிமுறையையும் பின்பற்றாது, இனஅழிப்பு நோக்கில் செய்யப்பட்ட அத்தாக்குதல்களின் மூலம், ஏறக்குறைய 2 இலட்சம் மக்களை மொத்தமாய் கொன்றுகுவித்தது சிங்கள இனவாத அரசும், அதன் இராணுவமும்.
ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளைக் கடந்தும், தமிழினத்தின் கோர இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஐ.நா. மன்றமும், சர்வதேச அரங்கும் தமிழர்களுக்கு எவ்விதத் தீர்வையும் பெற்றுத் தர முன்வரவில்லை. இனப்படுகொலை செய்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீது தலையீடற்ற பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், ஈழச்சொந்தங்களிடம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியுமாக பன்னாட்டு மன்றத்தில் நீதிகேட்டு, தமிழின மக்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை, எம்மினத்தின் இனப்படுகொலையை உலகரங்கில் எடுத்துரைத்து, எமது தரப்பு நியாயங்களை மற்ற தேசிய இனங்களுக்கு மெல்ல மெல்லக் கடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எம்மினத்தின் மாண்பையும், ஈழச்சொந்தங்களின் வலியையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ள கிங்டம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், மாவீரர் தெய்வங்களான விடுதலைப்புலிகளையும், எம்மினத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தையும், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் எதுவொன்றையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.
ஆகவே, ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிங்டம் திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது வீரமிகு படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன் சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி இன்று 03-08-2025 நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி மாவட்டம் அடவுப்பாறையில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான மாடுகளுடன் தடையை மீறி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு முன்னதாக மூன்று வீரப்பெரும்பாட்டன்களின் திருவுருவப்படத்திற்கும் மலர் வணக்கம் செலுத்தி வீரப்புகழ் போற்றியபோது,
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான பேரன்பிற்கினிய ஐயா மதன்பாப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நடிகர், இசைக்கலைஞர், நிகழ்ச்சித்தொகுப்பாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டு, மக்களை மகிழ்வித்த ஐயா மதன் பாப் அவர்களது மறைவு தமிழ்க்கலையுலகுக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும். அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும், என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயா மதன்பாப் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தேனி மாவட்டம், அடவுப்பாறையில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தில்...
www.youtube.com/live/5PsG8gKmEgA -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மானமும், வீரமும் உயிரென வாழ்ந்து, தாய் மண் காக்க தன்னுயிர் ஈந்த
தன்மானத்தமிழன்..!
சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என வீரக்கலைகள் யாவிலும் வெற்றி வாகை சூடிய தீரன்..!
மதம் கடந்து, சாதி கடந்து தாயக விடுதலைக்கு தமிழர் ஓர்மை படை கட்டிய தமிழ்த்தேசியப் பேரொளி..!
பவானி, சென்னிமலை, அரச்சலூர் என்று ஆங்கிலேயே பெரும்படையை
மூன்று முறை தோற்கடித்து வெருண்டோட செய்த மாவீரன்..!
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் எரிமலையாய் வெடித்தெழுந்த விடுதலைப்போராளி..!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன்
தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ராஜீவ் காந்தி அவர்களின் தந்தையாரும்,
மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கை கலையேந்திரி அவர்களின் மாமனாருமான, ஐயா சேட்டு (எ) வெங்கடேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், தங்கைக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா சேட்டு (எ) வெங்கடேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்.
www.youtube.com/live/nJ4wP7EHZ44 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்கிற முழக்கத்தை முன்வைத்து, தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, மாபெரும் பொதுக்கூட்டம்!
இன்று ஆடி 17 | 02.08.2025 சரியாக 4 மணிக்கு
இடம்: பங்களாமேடு, தேனி மாவட்டம்.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
கோரிக்கைகள் நிறைவேறும்வரை,
கோடி கைகள் கூடிப் போராடி வெல்வோம்!
நாம் தமிழர்!
#removedvkfromsclist -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
இந்தியத் தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர கதியில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், இலட்சக்கணக்கான வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதும் மக்களை முட்டாளாக்கி, மக்களாட்சி முறைமையைக் கேலிக்கூத்தாக்கும்
கொடுஞ்செயலாகும். பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு வாக்களிப்பவர்களை மட்டும் பட்டியலில் சேர்ப்பதோடு, பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை இனங்கண்டு நீக்கும் வகையில் செயல்படுத்தும் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தமானது’ தேர்தல் நடைமுறையையே வெற்று சடங்காக மாற்றும் எதேச்சதிகாரப்போக்காகும்.
அண்மையில் பீகார் மாநிலத்தில் நடந்து வந்த ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி’ நிறைவு பெற்ற நிலையில், அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள 36 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே இனி வாக்குரிமை தரப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது புலம் பெயர்ந்த 36 லட்சம் பீகார் மக்களில் ஏறத்தாழ 7 இலட்சம் பேர் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக வாக்குரிமை பெறவுள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய திட்டத்தின்படி தமிழ்நாட்டில் குடியேறியுள்ள 2 கோடி வட மாநிலத்தவர்கள் இனி தமிழக வாக்காளர்களாக எளிதாக வாக்குரிமை பெறமுடியும். ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையும் பறித்துவிடும். எப்படி இந்திய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தங்களுக்கு ஆதரவான எந்தவொரு தீர்மானத்தையோ, சட்டத்திருத்தத்தையோ நிறைவேற்ற முடியாதபடி, தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைத் தடுக்க முடியாதபடி சிறுபான்மையாக உள்ளனரோ, அதைப்போன்ற அவலநிலை, இனி வரும் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஏற்படும். அதன் மூலம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காத தடுப்பரணாக விளங்கிய தமிழர்களின் இறுதி ஆயுதமான ‘வாக்குரிமை பெரும்பான்மையையும்’ முற்று முழுதாக இழக்கின்ற பேராபத்தான நிலை ஏற்படும்.
‘ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கில் வந்திறங்கும் வடமாநிலத்தவர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும், இல்லையென்றால் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதியாக நேரிடும்’ என்று நான் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்த கொடுமைகள் தற்போது நம் கண்முன்னே நிகழத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச அரசியல் அதிகாரமுடைய இந்த ஒரு நிலத்தையும் நாம் இழந்துவிட்டால், அகதியாகச் செல்வதற்குக்கூட இன்னொரு தாய் நிலம் தமிழர்களுக்கு இல்லை என்ற வரலாற்றுப் பெருந்துயரத்திற்கு தமிழர்கள் விரைவில் ஆளாக நேரிடும்.
வடமாநிலத் தொழிலாளர்களால், தமிழ்நாட்டு தொழிலாளர்களின் ஊதிய உரிமை, பணி உரிமை ஆகியவைப் பறிக்கப்படும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து நான் போராட்டங்களை முன்னெடுத்தபோது, அதற்கெதிராக இந்திய தேசியம், கருத்துரிமை என்று பேசி வடமாநிலத்தவர் வருகையை ஆதரித்த பெருமக்கள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேறியவுடன் அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இன்றி ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டை வரை வழங்கியதன் விளைவே, தற்போது எளிதாக வாக்காளர் அட்டை பெறும் நிலைக்கு வந்துவிட்டனர். மற்ற அட்டைகளைப்போல வாக்காளர் அட்டை என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; அது தமிழ்நாட்டின் அரசாதிகாரத்தைத் தீர்மானிக்கும் உரிமை சாசனமாகும். அதனை பறிகொடுப்பது என்பது தமிழர்கள் தங்கள் இறையாண்மையையே இழப்பதற்கு ஒப்பானதாகும். இனி, தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் ஆற்றலாக வட மாநிலத்தவரே திகழ்வர் என்பது எத்தனை பேராபத்தானது என்பதை இப்போதாவது தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்திக்காரர்களைத் திணிக்கும் பாஜகவின் சூழ்ச்சியை இனியேனும் உணர்ந்து, நீண்டகாலமாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வரும் வடவர் வருகையை முறைப்படுத்தும் ‘உள் நுழைவுச்சீட்டு முறையை’ விரைந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது ஒன்றே நிகழவுள்ள பேராபத்திலிருந்து தமிழ்நாட்டையும், மக்களையும் தற்காப்பதற்கான ஒற்றைத் தீர்வாகும்.
(1/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சத்தீஸ்கரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள அருட்சகோதரிகள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களுக்குச் சேவை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவரையும் பொய் வழக்கு புனைந்து அம்மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
அருட்சகோதரிகள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த மூன்று இளம் பெண்களை செவிலியர் படிக்க வைக்க தேவையான உதவிகளை செய்த நிலையில், அவர்களை ஆக்ரா அழைத்துச் சென்று மதமாற்றம் செய்ய திட்டமிட்டிருந்ததாக, இந்துத்துவ மதவாத அமைப்பான பஜ்ரங்தள் உள்நோக்கத்துடன் அளித்த பொய்ப் புகாரின் அடிப்படையில், எவ்வித முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் சத்தீஸ்கர் மாநில அரசு அருட்சகோதரிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
‘தன்னைப்போல அயலானையும் நேசி’ என்ற இறைமகன் ஏசு பிரானின் அருள்மொழிக்கேற்ப சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களுக்குக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை புரியும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்த அருட்சகோதரிகளின் தொண்டுள்ளம் மிகுந்த போற்றுதலுக்குரியது. ‘எளிய மக்களுக்குச் செய்யும் சேவையே, இறைவனுக்குச் செய்யும் சேவை’ என்ற உன்னத இலட்சியத்திற்குத் தம் வாழ்வையே அர்ப்பணித்த அருட்சகோதரிகளின் பணியை அங்கீகரித்து ஊக்கமளித்திருக்க வேண்டிய சத்தீஸ்கர் மாநில அரசு அதனை செய்யத் தவறியதுடன், மதவெறி மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட பொய்ப்புகாரை ஏற்று கைது செய்து அவர்களின் மக்கட்பணியை முடக்க நினைப்பது பாசிச கொடுமைகளின் உச்சமாகும்.
அருட்சகோதரிகளை விடுவிக்கக்கோரி கேரளா உட்பட பல மாநிலங்களிலும் கிறித்துவ பெருமக்கள் மனகொந்தளிப்புடன் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களை விடுவிக்க மறுத்து கொடுங் குற்றவாளிகள் போல நடத்துவது மதவெறி அன்றி வேறென்ன? சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரசு ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மதமாற்ற தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்தியே தற்போதைய பாஜக அரசு அருட்சகோதரிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என்பது கொடுமைகளின் உச்சமாகும்.
இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 11 ஆண்டுகளாக இசுலாமிய, கிறித்துவ பெருமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. குறிப்பாக பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கிறித்துவ மக்கள் மீது பல மாதங்களாக நடைபெற்று வரும் கொடுந்தாக்குதல்கள் இன்றுவரை நின்றபாடில்லை. இந்திய நாட்டில் கிறித்துவ, இசுலாமிய மக்கள் நிம்மதியாக வாழ முடியாத கொடுஞ்சூழலை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. பிடித்த கடவுளை வழிபடுவதும், விரும்பிய மதத்தை பின்பற்றுவதும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்.
இசுலாமியர், கிறித்துவப் பெருமக்களை கண்டு பாஜக பயப்படுவது ஏன்? இத்தனை பதற்றம் கொள்வதுதான் ஏன்? அவ்வளவு பலகீனமாக உள்ளதா உங்கள் மதம்? மக்களுக்காக மதமா? அல்லது மதத்திற்காக மக்களா? அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அரசு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட மக்களுக்கு எதிராகவும் செயல்படுவது அரசியல் சாசனத்தை அவமதித்து, மக்களாட்சி முறைமையை குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயலாகும்.
மதத்தை பாதுகாக்க இத்தனை
போராடும் பாஜக ஆட்சியாளர்கள் நாட்டின் மக்களை வறுமை ஏழ்மையிலிருந்து பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நாட்டு மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டபோது தடுத்து காக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தீர்கள்? ஒன்றுமில்லையே!
மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்துப் பிளந்து, அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அடைந்துள்ள பாஜக அரசு, மதவெறிகொண்டு, மற்ற மதங்களின் சுதந்திரத்தைப் பறிக்க நினைப்பதும், மக்கட் பணியைத் தடுக்க முனைவதும் இந்த நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச் செல்லவே வழிவகுக்கும்.
ஆகவே, சத்தீஸ்கரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவரையும் அம்மாநில அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், இராவணா வலையொளி ஊடகவியலாளருமான ஐயா பா.ஏகலைவன் அவர்களின் தாயார் பா.அன்னப்பூரணி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிவணக்க நிகழ்வில், 31-07-2025 அன்று நேரில் சென்று மலர் வணக்கம் செலுத்தி, அம்மாவை இழந்து வாடும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுத்தேன்.
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் ஊர்க்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது முதல் பாதுகாப்புப் பணி வரை அனைத்துவகைக் காவல் பணிகளிலும் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். புயல், வெள்ளம் போன்ற நெருக்கடி சூழ்ந்த இயற்கைப் பேரிடர் காலங்களிலும், தேர்தல் மற்றும் பெருந்திருவிழாக் காலங்களிலும் இரவு பகல் பாராத அவர்களின் அர்ப்பணிப்புமிக்கப் பணியென்பது மிகுந்த போற்றுதற்குரியது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலும், தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதிலும் ஊர்க்காவல் படையினரின் ஓய்வறியாத உழைப்பு என்பது ஈடு இணையற்றதாகும். ஆனால் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றுவரை வழங்கப்படவில்லை பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் வாடும் ஊர்க்காவல் படையினர், குடும்ப வறுமை தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், நாளொன்றுக்கு 150 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, 560 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டது.
ஆனால், அதுவரை 25 நாட்களாக இருந்த பணிநாட்களை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து முந்தைய அதிமுக அரசு வஞ்சித்தது. பின்னர், பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்தபோதும் அது போதுமானதாக இல்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஊர்க்காவல் படையினரின் பணி நாட்கள் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது பச்சை துரோகம் செய்ததால், ஊதியம் உயர்ந்த பிறகும், அதன் முழுப்பயனை பெறமுடியாமல் ஊர்க்காவல் படையினர் இன்றுவரை தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதுதான் கொடுமையின் உச்சம். அதுமட்டுமின்றி, வெறும் 10 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் ஊர்க்காவல் படையினர் ஊதியமின்றி மாதம் முழுவதும் வேலை செய்ய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது.
கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு 18000 ரூபாய் அளவுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உரிய ஊதியம் வழங்கப்படாததோடு, அவர்களுக்கென எவ்வித ஊக்கத்தொகையோ, ஓய்வூதியமோ இல்லாமல் பணிபுரிய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊர்க்காவல் படையினருக்கான பணியை வரன்முறைப்படுத்த உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும், உரிய மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கத் தவறியதே தற்போது ஊர்க்காவல் படையினர் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் முதன்மைக் காரணமாகும்.
ஆகவே, ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமெனவும், அவர்களது பணி நாட்களை மாத முழுமைக்கும் உயர்த்தி காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், காவலர்களுக்கு வழங்கப்படுவதுபோல் பயணப்படி, ஊக்கத்தொகை, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஊர்க்காவல் படையினருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மக்களிடையே நற்கருத்துக்களை விதைப்பதன் மூலம்தான் சமூக மாற்றத்தையும், நல்லரசியலையும் படைக்க முடியும் எனும் நம்பிக்கை கொண்டு, அயராது பணியாற்றும் சமரசமற்ற ஊடகவியலாளர்!
இராவணா எனும் தனி ஒரு வலையொளியை உருவாக்கி, தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு வெளிச்சம்பாய்ச்சி வலிமைசேர்க்கிற
மூத்த பத்திரிக்கையாளர்!
உணர்வாகவும், உறவாகவும் எம்மோடு எப்போதும் இணைந்து நிற்கிற அன்பிற்கினிய ஐயா பா.ஏகலைவன் அவர்களின் தாயார் அம்மா பா.அன்னப்பூரணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தாயை இழந்து வாடும் ஐயாவிற்கும், உறவுகளுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@eagalaivanp -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கன்னியாகுமரி மூதாட்டி சூசைமரியாள் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சூசைமரியாள் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிவகங்கை மடப்புரம் அஜித்குமார் விசாரணை படுகொலையால் ஏற்பட்ட அதிர்வுகள் மறைவதற்குள், காவலர்கள் தாக்கியதில் கன்னியாகுமரியில் மூதாட்டி உயிரிழந்துள்ள கொடும் நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது. மூதாட்டி சூசைமரியாளை இழந்துவாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் விசாரணைப் படுகொலைகளைத் திமுக அரசு தடுக்கத் தவறுவது எதேச்சதிகார கொடுமைகளின் உச்சமாகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரப்பூர்வமாக நிகழ்ந்துள்ள 26 ஆவது விசாரணைப்படுகொலை இதுவாகும். ஆனால், விசாரணைக்காகப் பேரனை கைது செய்த காவல்துறையினரிடம் மன்றாடிய 80 வயது மூதாட்டி சூசைமரியாள், காவலர்களின் தாக்குதலில் மரணமடைந்தது குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, அவசர அவசரமாக அடுத்தடுத்து வெளியிட்ட இரண்டு மறுப்புச் செய்திகள் ஐயத்தை அதிகரிக்கவே செய்கிறது. படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி சூசைமரியாளுக்கு நீதி வேண்டி கருங்கல் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை உண்மையை மூடி மறைக்க முயல்வது வெட்கக்கேடானது.
தொடர்ச்சியாக காவல்துறை பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் அடித்துக்கொல்வதும், அதனை திமுக அரசு வேடிக்கைப்பார்ப்பதும்தான் திராவிட மாடலா? உயிரைப் பறிக்கும் அளவிற்கு 80 வயது மூதாட்டி புரிந்த குற்றமென்ன? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?
ஆகவே, தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மூதாட்டி சூசை மரியாளைத் தாக்கி அவரது மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்து நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால்,
மூதாட்டி மரணம் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவர நாம் தமிழர் கட்சி தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மெ.பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றி வந்த மெ.பிரபாகரன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருப்பது ஆற்ற முடியாதப் பேரிழப்பாகும்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி மெ.பிரபாகரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கோ.நாகராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ச.கோவிந்தராஜு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ச.கோவிந்தராஜு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.
ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.
ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் கடலரிப்பால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அப்பகுதி மக்கள் தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்காமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
புத்தன்துறை பகுதியில் கடலரிப்பால் மக்களின் வாழ்விடங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே அப்பகுதி மக்கள் ஆட்சியாளர்களிடம், அதிகாரிகளிடமும் மனு அளித்து முறையிட்டு வருகின்றனர். குறைந்தப்பட்சம் பாதிப்புகளிலிருந்து உடைமைகளை பாதுகாக்க ஒரு தற்காலிக அலை தடுப்பு சுவராவது அமைத்து தரவேண்டி கிராம மக்களும் மீனவர் நல அமைப்புகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால் இவை எவற்றையும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் இதையே காரணம் காட்டி மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்ற நினைப்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.
திமுக அரசின் அலட்சியம் காரணமாக புத்தன்துறையில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், கடல் அரிப்பால் தற்போது 13 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவச் சொந்தங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மீனவ மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையின்மையே, இன்று புத்தன்துறை மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வீதியில் இறங்கி போராட வேண்டிய துயரநிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பகுதிகளில் இடம் தருவதாக கூறி மீனவ மக்களை கடற்கரையை விட்டு வெளியேற்றுவது வெட்கக்கேடானது. ஒருபோதும் ஏற்க முடியாத கொடுங்கோன்மையாகும்.
கடல் சூழலியலை பாதிக்கும் கட்டுமானங்களை எவ்வித தடையுமின்றி செய்ய துணைநிற்கும் திமுக அரசு, இயந்திரங்கள், அதனால் ஏற்படும் சூழலியல் எதிர்விளைவான கடல் அரிப்பை தடுப்பதற்கான எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்காதது ஏன்? கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் எதிர்காலத்தில் கடலரிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகள் அனைத்தையும் ஆய்வு செய்து அப்பகுதிகளுக்கு தகுந்த கடலரிப்பு தடுப்பு நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் ஒற்றை கோரிக்கையாகும்.
ஆகவே, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி புத்தன்துறை மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் முடிவை கைவிட்டு, வீடுகளையும் விலைமதிப்பில்லா உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க உடனடியாக பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சட்டத்திற்குப் புறம்பாக நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை மிரட்டும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள சுமார் 80 கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்று, கடந்த 20-7-2025 அன்று வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் காரணமாக வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராமல் இழுத்தடித்த நிலையில், ஆனைமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மூலம் நேரடியாக அனுமதிப்பெற்றுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் காழ்ப்புணர்ச்சிகொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தன் வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சியினரை மிரட்டும் பணியில் ஈடுபட்டார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்த அதே நேரத்தில், அதே இடத்தில் வேண்டுமென்றே, இந்து முன்னணியின் ஊர்வலத்திற்கும் அனுமதியளித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைச் சிதறடிக்கும் செயலில் வால்பாறை காவல்துறை ஈடுபட்டது. காவல்துறையினரின் இத்தகைய எதேச்சதிகாரச் செயலினை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நிகழ்விடத்திலேயே கண்டித்து உரையாற்றினர்.
நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குத் தொடுக்க எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், அவர்களைக் காவல் நிலையம் வரவழைத்து அடித்துத் துன்புறுத்தி அடிபணியவைக்கும் நோக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு காவல்துறையின் அடாவடிச்செயல் சட்டத்திற்குப் புறம்பானதாகும். தமிழ்நாட்டு காவல்துறையின் பெயர் ஏற்கனவே இந்திய அளவில் சீர்கெட்டுப்போயுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைச் சீர் செய்வதற்குப் பதிலாக இதுபோன்ற முறைகேடான அத்துமீறலில் ஈடுபடுவது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
ஆகவே, மக்கள் நலன் காக்கும் நாம் தமிழர் கட்சியின் அறப்போராட்டத்தை முடக்கி, சட்டத்திற்குப் புறம்பாகப் பொறுப்பாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபடும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
1983ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசின் ஆதரவுடன் சிங்கள இனவெறியர்கள் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்து, உடைமைகளைக் கொள்ளையடித்து, தெருக்கள் தோறும் குருதியில் நனைய, வீடுகள் தோறும் பிணங்கள் வீழ, திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றழித்த கறுப்பு சூலை இனப்படுகொலை நாள் இன்று!
ஈழத்தாயகத்தில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல், அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்!
சிங்கள இனவெறிக்கு இலக்காகி கருப்பு சூலை இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, அலங்கானூர் கிளையைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மு.ராசசேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றி வந்த அன்புத் தம்பி மு.ராசசேகர் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருப்பது ஆற்ற முடியாதப் பேரிழப்பாகும்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி மு.ராசசேகர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உழைப்புச் சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, அடிமை வாழ்வென்னும் அடக்குமுறைக்கெதிராக, அடிப்படை உரிமையான உழைப்புக்கேற்ற உரிய கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மீது அன்றைய திமுக அரசு சிறிதும் மனச்சான்றின்றி, அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பச்சிளங்குழந்தை உட்பட 17 பேரைப் பச்சைப்படுகொலை செய்த துயரந் தோய்ந்த 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
சமத்துவம், சமூகநீதி, வர்க்க விடுதலை என்றெல்லாம் பாடமெடுத்துவிட்டு அமைதிவழியில் போராடிய மக்களை அன்றைய திமுக அரசு தனது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியும், தாமிரபரணி ஆற்றில் தள்ளி மூழ்கடித்தும் கொன்றது தமிழ்நாடு வரலாற்றில் இரத்தக்கறை படிந்த என்றும் அழியா கரும்புள்ளியாகும்!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்போராளிகளுக்கு என்னுடைய வீரவணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை
மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் மற்றும் அன்புத்தங்கை மருத்துவர் நந்தினி மோகன் ஆகியோர் இணைந்து விழுப்புரம் கே.கே.சாலையில் தொடங்கியுள்ள மருத்துவமனையை இன்று ஆடி 6 ஆம் நாள் (22.07.2025) திறந்து வைத்து வாழ்த்தியபோது, -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!
தன்னிகரற்ற நடிப்பாற்றலால் தமிழர்களின் கலைத்திறனை தரணிக்குக் காட்டிய தனிப் பெருங்கலைஞன்!
கலை இலக்கணம்
நமது ஐயா
சிவாஜி கணேசன்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த 14.07.2025 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளுடன், கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பர்வீன்பானுவை இழந்து, அவருடைய இரண்டு குழந்தைகள் தவித்து நிற்பது நெஞ்சைக் கனக்க செய்கிறது.
திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாட முடியாத கொடுஞ்சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் திமுக அரசின் காவல்துறை திணறி வருவது, மிகப்பெரிய பெருங்கொடுமையாகும்.
ஆகவே, தங்கை பர்வீன்பானுவை கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மேலும், தாயை இழந்து கையறு நிலையில் தவிக்கும் தங்கை பர்வீன்பானுவின் மகள்கள் இருவருக்கும் அரசு வேலையும், உரிய துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முன்னாள் முதலமைச்சர் ஐயா கருணாநிதி அவர்களின் மூத்தமகனும், பழம்பெரும் திரைப்பட நடிகருமான ஐயா மு.க.முத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஐயா மு.க.முத்து அவர்களின் மறைவால் துயருற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை!
@CMOTamilnadu @mkstalin
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில், பள்ளி முடிந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குத் தனியாக நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மனச்சான்றற்ற கொடூரன் தூக்கி சென்று வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்து, ஒரு வாரகாலமாகியும் இதுவரை அக்குற்றவாளியை காவல்துறை கைது செய்யாதது கடும் கண்டனத்துக்குரியது; அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித்தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய மனிதப்பேரவலமாகும்.
பெற்ற குழந்தைக்கு நேர்ந்த பெருங்கொடுமையைச் சொல்லி அழும் தாயின் கதறல் ஒலி நெஞ்சை பிளக்கிறது; எந்த குழந்தைக்கும் இனி நேரக்கூடாது என்ற அத்தாயின் தவிப்புக் கண்களில் இரத்தக்கண்ணீரைப் பெருக்குகிறது. அக்கொடூரன் அலைபேசியில் இந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்தபோது உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் தப்பி வந்த சிறுமி, வரும் வழியில், அவ்வழி செல்ல முயன்ற மற்றொரு சிறுமியை ‘அந்தப்பக்கம் போகாதே!’ என தடுத்துக் காப்பாற்றியச்செயல் இதயத்தை நெகிழச்செய்கிறது. பெற்றெடுத்து பேணி வளர்த்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி நெஞ்சம் குமுறும் பெற்றோர்க்கு என்ன ஆறுதல் கூறி தேற்ற முடியும்?
அப்பிஞ்சு நெஞ்சின் உள்ளத்தில் உண்டான கொடுங்காயம் வாழ்நாள் முழுவதும் வடுவாக நின்று வாட்டுமே? யார் அதற்கு மருந்திடுவது? வருங்காலத் தலைமுறைகளின் நெஞ்சத்தில் எதை விதைக்கின்றோம்? எவற்றை நாம் கற்பிக்கின்றோம்? யார் இப்பேரவலத்திற்குப் பொறுப்பேற்பது? திமுக அரசு பொறுப்பேற்குமா? திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்களா? புத்தகப் பையுடன் தனியாக நடந்து செல்லும் குழந்தையைக் கொடூரன் தூக்கிச்செல்லும் கண்காணிப்புக் கருவி காட்சிகளைக் காணும்போது ஏற்படும் பதைபதைப்பும், ஆற்றாமையும், அடக்கவியலா பெருங்கோபமும் வார்த்தைகளில் சொல்லக்கூடியதல்ல. கண்காணிப்புக் கருவி காட்சி இருந்தும், அக்கொடூரன் இந்தியில் பேசியதை சிறுமி தெரிவித்த பிறகும் குற்றவாளியை இதுவரை பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறுவதுதான் நிகழ்ந்த வன்கொடுமையை விடவும் மிகப்பெரிய வன்கொடுமை!
அப்பாவி அஜித்குமாரை சந்தேகத்தின் பேரில் விசாரணை என்ற பெயரில் அடித்தேக்கொன்ற திமுக அரசின் காவல்துறைக்கு உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஏன் இத்தனை காலதாமதம்? படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும், விசாரணை மரணங்களும் எல்லா ஆட்சியிலும் நடைபெறும் வழக்கம்தான் என்று திருவாய் மலர்ந்த திராவிடத்திருவாளர்கள், திமுக ஆட்சியில் குற்றவாளிகளைத் தப்பவிடுவதும், கைது செய்யாமல் அலட்சியப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
திருத்தங்கலில் மதுபோதையில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கும் அவலம் அரங்கேறுகிறது; திருப்பூரில் கஞ்சா அருந்திய சமூக விரோதிகள் அரிவாளோடு பள்ளி மாணவர்களைத் துரத்தும் கொடுமை நடக்கிறது. அறந்தாங்கியில் ஆடு மேய்க்கச்சென்ற தங்கை பர்வீன்பானு வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாமக்கலில் வறுமையைப் பயன்படுத்தி உடல் உறுப்புகள் கொள்ளை நடக்கிறது. இணையவழி சூதாட்டத்தால் இறந்தவர் எண்ணிக்கை 91ஐ கடந்துவிட்டது. 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நிகழ்ந்தேறுகிறது; மயிலாடுதுறையில் மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரி சாலையில் நடந்து போகிறார். இத்தனை சமூகப்பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஆட்சியை, நல்லாட்சி, பொற்கால ஆட்சி, சாதனை ஆட்சி, யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதெல்லாம் வெட்கக்கேடானது.
போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாது, மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான், நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாகும். வடவர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்யாத திமுக அரசின் அலட்சியம் அக்கொடுங்குற்றங்களை மேலும் பன்மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில், பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை இதற்கு மேலும் தாமதிக்காமல் விரைந்து கைது செய்து, மிகக்கடுமையான தண்டனை தரவேண்டுமெனவும், இனியாவது இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்தேறாமல் தடுக்க மது விற்பனையை முற்றாக நிறுத்திடவும், வடவர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்திடவும் வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள சிறுமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதுடன் உளவியல் ரீதியாக நம்பிக்கையுடன் மீண்டுவர தேற்றுவதும் அரசின் தலையாயக் கடமையாகும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அன்புமகள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டு கடற்பரப்பைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாட்டில் உள்ள 8 சிறு துறைமுகங்களை முழுமையாக தனியார் நிறுவனங்களிடம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு அளிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு, கடலையேக் கூறுகட்டி விற்கும் கொடுஞ்செயலாகும்.
மீனவ மக்களின் கருத்துக்களைக் கேட்காமல், சுற்றுச்சூழலை நாசமாக்கி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மை திட்டம் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 17 சிறு துறைமுகங்கள் உள்ளன. அவற்றில், செங்கல்பட்டு மாவட்டம் முகையூர், பனையூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலுார் மாவட்டம் சிலம்பிமங்களம், நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி, கன்னியாகுமரி ஆகிய எட்டு இடங்களில் உள்ள சிறு துறைமுகங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு, திமுக அரசு இணையவழி ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளதால் மீனவ மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறு துறைமுகங்களைக் குத்தகைக்கு அளிப்பதன் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும், கடல்சார் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றெல்லாம் போலி பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்றி, கடல் வளத்தையும், நிலத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நூற்றாண்டிற்குத் தாரைவார்ப்பது வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கடற்பகுதியைத் தனியார் நிறுவனங்களிடம் கையளிப்பதன் மூலம், இனி அப்பகுதிகளில் மீனவ மக்கள் மீன் பிடிக்க முழுதாக அனுமதி மறுக்கப்படும். மேலும், கடல் சுற்றுலா, போக்குவரத்து, கப்பல் கட்டுமான தொழில், மீன் உணவு தொழில்களைத் துவங்குவதற்காக மீனவ மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும் வாழ்விடங்களை விட்டு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுமைகளும் அரங்கேற வழிவகுக்கும்.
ஏற்கனவே, வடசென்னையிலுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி நிறுவனத்திற்குத் தாரை வார்த்துள்ளதன் மூலம் அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவமக்கள் இழந்து நிற்கின்றனர். அதுமட்டுமின்றி மீன்பிடி தளங்களில் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு, கடல்வாழ் உயிரினங்கள் அழிவதோடு, மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். ஏற்கனவே, ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் நாள்தோறும் சிறை பிடிக்கப்பட்டு, அவர்களின் படகுகளும், உடைமைகளும் சேதமாக்கப்படும் கொடுமைகளால் பேரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், கடற்கரைப் பகுதிகளும் துறைமுக மேம்பாடு என்ற பெயரில் தாரைவார்க்கப்பட்டால் மீனவர்கள் வாழ்வாதாரமே முழுவதுமாக அழிந்துவிடும்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தென்தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எரியெண்ணெய் மற்றும் எரிகாற்று எடுக்க அனுமதித்து, தமிழ்நாட்டின் கடல் வளத்தை நாசமாக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்துநிறுத்த எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தன் பங்கிற்கு மீன்பிடி தளங்களையும், கடற்கரைப்பகுதிகளையும் தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்கத்துடிப்பது எவ்வகையில் நியாயம்? துறைமுகங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து மீனவ மக்களிடம் திமுக அரசு கருத்துக்கேட்காதது ஏன்? வடவர்களை வேலையில் சேர்ப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள தனியார் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் என்பதெல்லாம் அப்பட்டமான ஏமாற்றாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் நாசகார ‘சாகர்மாலா’ திட்டத்தின் ஒருகூறான துறைமுகங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் கொடுந்திட்டத்திற்கு துணைபோவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு மீனவ மக்களை முன்னேற்றும் முறையா? தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்காக தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும்.
ஆகவே, கடல் வளங்களை அழித்து, மீனவ மக்களை வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற வழிவகுக்கும் கொடுந்திட்டமான, சிறு துறைமுகங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள பச்சைமலைக் குன்றுகளின் கீழக்கணவாய், செல்லியம்பாளையம் பகுதிகளில் இருந்து உருவாகி புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர் , நெடுவாசல் வழியே பாய்ந்தோடி வரும் மருதையாறானது பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் பல சிற்றோடைகளைத் தன்னகத்தே இணைத்து வழியெங்கும் வளம் சேர்க்கிறது.
பெரம்பலூரின் அடையாளங்களுள் ஒன்றாகவும் நீர்மேலாண்மையின் சிறந்த உதாரணமாகவும் விளங்கும் சங்கிலித்தொடர் ஏரிகளில் ஒன்றான துறைமங்கலம் பெரிய ஏரியை நிரப்பி வெளியேறும் நீரானது ஓடை வழியாக நெடுவாசல் பகுதியில் மருதையாற்றோடு இணைகிறது. அவ்வோடையின் கரையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சியில் அரணாரை, துறைமங்கலம் மற்றும் நகர்ப்பகுதிகளில் என மொத்தமுள்ள 21 வட்டங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் தோராயமாக வெளியேறும் 20 இலட்சம் லிட்டர் கழிவு நீரானது, கழிவுநீர்த் தொட்டிகள், கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளிட்டவைகள் மூலம் குழாய்கள் வழியே நெடுவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரானது ஓடையில் விடப்பட்டு மருதையாற்றில் கலந்து கல்பாடி எறையூர், பனங்கூர், குரும்பாபாளையம் வழியே கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்குச் செல்கிறது.
இக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்டு வெளிவரும் நீரைக் குளிக்கலாம்; குடிக்கலாம் என்ற போலி வாக்குறுதிகளை அன்றைய ஆட்சியாளர்கள் அளித்ததை நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடங்கிய சிறிது காலத்திலேயே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளிவரும் நீரில் துர்நாற்றம் வீசத்தொடங்கியதோடு, நீரும் கருமை நிறத்தில் வரத்தொடங்கியது. மேலும் அருகாமைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்கள் அனைத்திலும் நீரின் நிறமும், தரமும் மாறத் தொடங்கியது. இது தொடர்பாக நெடுவாசல் சுற்றுப்புற கிராம மக்கள் பலமுறை அரசிடம் மனு அளித்த பிறகும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்த பிறகும்கூட, மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
சுத்திகரிப்பு ஆலை நிர்வாகம் கழிவுநீரை சுத்திகரித்துதான் வெளியேற்றுகிறோம் என்றும், சிக்கல்கள் இருப்பின் சரி செய்யப்படும் என்றும், மாதம் ஒரு முறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து கழிவுநீரின் தரத்தை உறுதிப்படுத்துகின்றோம் என்பது உள்ளிட்ட பல்வேறு பதில்களைத் தொடர்ந்து நகராட்சி மூலம் கூறிவந்தது. ஆனால், கடந்த ஆண்டு பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாகவே போதிய நிதியில்லாத காரணத்தால் கழிவுநீர் சுத்திகரிக்காமல் மருதையாற்றில் விட வேண்டிய நிலையுள்ளதை வெளிப்படையாக அறிவித்திருந்தது பெரம்பலூர் மக்களிடைய பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு இயற்கையின் அருங்கொடையான நதிநீரை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலை நாசப்படுத்துவது, இயற்கைக்கும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதித்த மக்களுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
மருதையாற்றில் சுத்திகரிக்கப்படாத பாதாளச் சாக்கடைக் கழிவு நீர் கலப்பதால் நிலமும், நிலத்தடி நீரும் மாசுபட்டு மக்கள் கொடும் நோய்த்தொற்றுக்கும், கொசுக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அள்ளிப் பருகிய ஆற்று நீரில், காலை வைத்தாலே அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. வேளாண்மை செய்ய முடியாத மோசமான சூழல் நிலவுவதுடன், கால்நடைகளுக்கு உடல்நலக்கேடும் ஏற்படுகின்றது என்பது உள்ளிட்ட சொல்லொண்ணா இன்னல்களுக்கு இன்றளவும் நெடுவாசல் சுற்றுப்புற கிராம மக்கள் ஆளாகி வருகின்றனர்.
நெடுவாசலைத் தொடர்ந்து க.எறையூர், குரும்பாபாளையம் மற்றும் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கமும் இக்கழிவுநீரால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு சுகாதாரத் துறையோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, நீர்வளத்துறையயோ, மாவட்ட நிர்வாகமோ இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும்.
ஆகவே, பெரம்பலூர் மக்களின் துயர நிலையை உணர்ந்தும், நீர்நிலைகளைப் பாதுகாத்து, நிலம், நீர், காற்று மாசுபடாமல் தடுத்து, தூய்மையான வாழிடச் சூழலை மக்களுக்கு வழங்க வேண்டியது நல்ல அரசின் தலையாய கடமை என்பதை உணர்ந்தும், திமுக அரசு மாவட்ட நிர்வாகம், நகராட்சி, சுகாதாரத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அரச நிர்வாக அமைப்புகளின் மூலம் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, கழவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேறுவதை உறுதி செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்திகரிக்க இயலாவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தை நிரந்தரமாக மூடுவதோடு, மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி,
பிறர் உயிரைக் காக்க தன்னுயிரையே கொடையாகக் கொடுத்த வீரத்தமிழச்சி தங்கை செங்கொடியின் உருவத்தையே தங்களது இலச்சினையில் இலட்சிய உறுதியுடன் ஏந்தி நிற்கும் நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறையின் சார்பாக,
இன்று 17-07-2025 மாலை 04 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்!
வரதட்சணை கொடுமையால் இனி இதுபோன்று ஒரு உயிர் கூட போகாத வகையில் இம்மண்ணில் மாற்றம் நிகழட்டும்!
"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!"
என்ற பெரும்பாவலன் பாட்டன் பாரதியின் புரட்சி முழக்கத்திற்கேற்ப,
பெண்ணெனும் பெரு நெருப்பு பற்றி எரியட்டும் புரட்சித் தீயாக!
@ntkwomenswing -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்ப் பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ் மன்னராகிய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக மாற்ற மராத்திய மாநில அரசு முயல்வதும், அதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இவ்வரலாற்று திரிபை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு சிறிதும் உணர்வற்று வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
செஞ்சிக்கோட்டை தொல்தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய சொத்தாகும். யாராலும் எளிதில் கைப்பற்ற முடியாத அதன் அமைவிட சிறப்பால், மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தியே செஞ்சிக்கோட்டை புகழ்பெற்று விளங்கியது. சோழ மன்னர்களின் அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா நூலில், “கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்” என்ற பாடல் வரிகள் மூலம், ‘வலிமையான மதில்களை கொண்ட கோட்டைகளையும், வலிய போர் யானைகளையும் கொண்டவன் மன்னர் செஞ்சியர்கோன் காடவன்’ என்று வியந்து பாடுகிறார்.
சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராஜராஜ சோழனை சிறை பிடித்து, செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்த வரலாற்று நிகழ்வுகள், அக்குகையில் காணப்படும் சிற்பத்தின் மூலமும், அங்கு பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மூலமும் அறியமுடிகிறது. வயலூர் கல்வெட்டும் அவ்வரலாற்றுச் செய்தியை உறுதிப்படுத்துகிறது.
செஞ்சி கோட்டையை கி.பி.1190 முதல் மன்னர் ஆனந்தகோனும், கி.பி.1240 முதல் மன்னர் கிருஷ்ணகோனும், கி.பி.1270 முதல் மன்னர் கோனேரிக்கோனும் அதன் பிறகு அவருடைய வாரிசுகள் மன்னர் கோவிந்தகோன், மன்னர் வலியகோன், மன்னர் கோட்டியலிங்ககோன் ஆகியோர் தொடர்ச்சியாக ஆண்ட மிக நீண்ட வரலாற்றை உடையது. அதன் பிறகு, வரலாற்றின் போக்கில் செஞ்சி கோட்டை விசயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது. நாயக்க மன்னரிடமிருந்து செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கி.பி.1649இல் கைப்பற்றினார். 28 ஆண்டுகள் பிஜப்பூர் சுல்தான் ஆட்சிக்கு பிறகு 1677ஆம் ஆண்டுதான் மராத்திய மன்னர் சிவாஜி செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி, தன்னுடைய அரசுடன் இணைத்துக் கொண்டார்.
1698இல் செஞ்சிக்கோட்டை முகலாயர் வசம் வந்தது. முகாலய மன்னர் ஔரங்கசிப், செஞ்சி கோட்டையின் தலைவராக ராஜபுத்திரரான சரூப்சிங்கை நியமித்தார். 1714இல் சரூப்சிங் இறந்த பிறகு பட்டத்திற்கு வந்த அவருடைய மகன் தேசிங்கு, ஆற்காடு நவாப் உடனான போரில் வீரமரணம் அடைந்ததால், செஞ்சிக்கோட்டை ஆற்காடு நவாப் ஆளுகையின்கீழ் வந்தது. அதன்பிறகு செஞ்சிக் கோட்டையானது பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறிமாறி இருந்துவந்த நிலையில், 1780இல் ஐதர் அலி செஞ்சிக்கோட்டையை கைப்பற்றினார். இறுதியாக 1799இல் கோட்டை ஆங்கிலேயர் வசம் போனது.
மராத்தியர்கள் செஞ்சிக்கோட்டையை ஆண்டது வெறும் 22 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் 8 ஆண்டுகள் செஞ்சிக்கோட்டை முகலாயர்களின் முற்றுகையில் இருந்தது. மராத்தியர்கள் செஞ்சிக்கோட்டையில் வலுவான கட்டுமானங்கள் மேற்கொண்டதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. மராத்தியரை விடவும் அதிக ஆண்டுகள்
செஞ்சிக்கோட்டையை நாயக்கர் மன்னரும், ஆற்காடு நவாபும், பீஜபூர் சுல்தானும், முகலாயரும், ஆங்கிலேயரும் மாறி மாறி படையெடுத்து வந்து ஆண்டுள்ளனர். ஆனால், உண்மையிலேயே செஞ்சிக்கோட்டையானது தலைமுறை தலைமுறையாக அம்மண்ணை ஆண்ட பூர்வகுடி தமிழ் மன்னர்களாகிய கோனேரிக்கோன் முன்னோர்களுக்கு சொந்தமானது என்றே வரலாற்றில் பதிய வேண்டும்.
செஞ்சியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோட்டை அமைந்துள்ளது. மூன்று மலைகளை இணைத்து, 1,200 ஏக்கர் பரப்பளவில், 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களுடன், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், 800 அடி உயர மலை உச்சியில், கி.பி.1190ம் ஆண்டு காடவக்கோன் வாரிசுகளாலேயே வலிமை வாய்ந்த செஞ்சி கோட்டை கட்டடப்பட்டது என்பதே வரலாற்று பேருண்மையாகும். ஆனால், வரலாற்றை தொலைத்துவிட்டு ஆதரவற்று நிற்கும் தமிழினம், செஞ்சி பகுதியிலுள்ள குப்பம் கோனேரிகுப்பம் என்றும், கோட்டைக்கு தேசிங்குராஜா கோட்டை என்றும் அழைப்பதையும் அமைதியாக அனுமதித்ததன் விளைவே, தற்போது செஞ்சிக்கோட்டை மராத்தியர்களுக்கு சொந்தமானது என்று சொந்தம் கொண்டாடும் அளவிற்கு மோசமான வரலாற்று இழிநிலையை எட்டியுள்ளது.
தமிழ்நிலத்தில் தமிழர் மூதாதைகள் அரசாண்ட செஞ்சி கோட்டை தமிழர்களின் பாரம்பாரிய சொத்தாகும். அதனை மராத்தியர்கள் கோட்டைபோல பொய்யாக வரலாற்றை புனைந்து அதற்கு பன்னாட்டு நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற முயலும் மாராத்திய மாநில அரசின் முயற்சி அப்பட்டமான வரலாற்று திரிபாகும்.
தமிழர் வரலாற்றை இழிவுபடுத்தி, தமிழர் கோட்டையை அயலாரின் கோட்டை என்று அடையாளப்படுத்துவதை தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது? செஞ்சிக்கோட்டை மராத்தியரின் கோட்டை என்ற அவ்வரலாற்றுப் புரட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, வழிமொழிந்துள்ளது வெட்கக்கேடானது. கீழடி மட்டும்தான் தமிழர் அடையாளமா? செஞ்சிக்கோட்டை தமிழர் அடையாளம் இல்லையா? அது மராத்தியருடையது என்பதை எப்படி திமுக அரசு ஏற்கிறது? மாராத்திய மாநில பாஜக அரசும், இந்திய ஒன்றிய பாஜக அரசும் இணைந்து முன்னெடுத்துள்ள கூட்டுச்சதிக்கு தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு துணைபோவது தமிழர்களுக்கு இழைத்துள்ள பச்சைத்துரோகமாகும். இதுதான் திமுக அரசு பாஜகவை எதிர்க்கும் முறையா?
ஆகவே, தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை மராத்தியர்களின் கோட்டையென யுனஸ்கோ நிறுவனத்தின் மூலம் அறிவிக்கும் முயற்சியை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழர் வரலாற்றை திரிக்கும் இக்கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகம் போற்றும் மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்து தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பாக தாத்தா காமராசர் அவர்களின் அளப்பெரும் சாதனைகள் குறித்தும், கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும் பணிகள் குறித்தும் அறிய தரும் திறன் போட்டிகள் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்டு வந்தது.
பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அந்த நடைமுறையை மாற்றி, இந்த ஆண்டு, பெருந்தலைவர் காமராசர் பற்றி மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்து விட்டு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம் போன்ற ஒன்றிய - மாநில அரசுகளின் திட்டங்களைப் பற்றிப் போட்டிகளை நடத்த திமுக அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
@CMOTamilnadu @mkstalin
இது முழுக்க முழுக்கப் பெருந்தலைவர் காமராசரின் புகழை மறைத்து இருட்டடிப்புச் செய்யும் மலிவான செயலாகும். பெருந்தலைவர் பிறந்தநாளில் அவரது புகழைப்பற்றிப் பேசாமல், திமுக அரசின் திட்டங்கள் குறித்துப் பள்ளிக்குழந்தைகளைப் பேசச்சொல்லி கட்டாயப்படுத்துவது ஏன்? ஏற்கனவே, ஐயா கருணாநிதி, ஐயா ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாளில் பள்ளிக்குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி திமுக அரசின் திட்டங்களைப் பேசச்சொல்லி வதைத்தது போதாதா? பெருந்தலைவர் பிறந்தநாளிலும் அக்கொடுமைகளைப் பள்ளிக்குழந்தைகள் அனுபவிக்க வேண்டுமா?
ஏற்கனவே, 'பெருந்தலைவர்' என்றாலே அந்தப் பட்டம் தாத்தா காமராசர் அவர்களையே குறிக்கும் என்ற அளவில் மக்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டதை மறக்கடிக்கும் விதமாகவே, தங்களின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ஐயா கருணாநிதி அவர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள ஊராட்சிமன்றத் தலைவர்களை, 'ஊராட்சிமன்றப் பெருந்தலைவர்கள்' என்று அழைக்க வேண்டுமென்ற வழக்கத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார். தற்போது அவருடைய மகனாகிய தங்களுடைய ஆட்சிக்காலத்தில் ஐயா காமராசரைப்பற்றி வருங்காலத் தலைமுறையினர் அறியவிடாமல் தடுக்கும் இழிவானச் செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளில் பொற்கால ஆட்சி தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு இணையான இன்னொரு முதல்வர் இன்றுவரை யாரும் வரவில்லையென்று மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். அந்த அளவிற்கு மிகச்சிறப்பான ஆட்சியைத் தந்த அம்மாபெரும் தலைவரின் அழியாப் பெரும்புகழை இத்தகைய மலிவான முயற்சிகளின் மூலம் மூடிமறைத்துவிட முடியாது.
ஆகவே, இதுபோன்ற வலிந்து திணிக்கும் போலிப்புகழ்ச்சி உரைகளை உடனடியாகக் கைவிட பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் வழக்கம்போல அவர் ஆற்றிய அளப்பரிய சாதனைகள் மற்றும் மகத்தான மக்கள் தொண்டுகள் குறித்து அறிய தரும் திறன் போட்டிகளையே மாணவர்களிடையே நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழிசெய்த ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை, சேலம் உருக்கு ஆலை, நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை என 18 க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற வில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப் பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப்போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆனி 31 | 15.07.2025 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - போளுர் சட்டமன்றத் தொகுதி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜயகுமார் அவர்களின் தாயார் மணியம்மாள் அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தாயை இழந்துவாடும் அன்புத்தம்பி விஜயகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா மணியம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தம்பி வி.அருள்விக்டர் அவர்களின்
சகோதரி விமலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய சகோதரியை இழந்துவாடும் அன்புத்தம்பி அருள்விக்டர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரி விமலா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி ஆவின் பிரகாஷ் அவர்களின் தாயார் சிவகாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தாயை இழந்துவாடும் அன்புத்தம்பி ஆவின் பிரகாஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா சிவகாமி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சபாபதி அவர்களின் சகோதரர் கோவி மணிவண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய சகோதரரை இழந்துவாடும் அன்புத்தம்பி சபாபதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் கோவி மணிவண்ணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஸ்ரீசங்காரா தொலைக்காட்சியில் கடந்த ஏழு மாதங்களாக 'தமிழ் எங்கள் உயிர்மெய்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமியர் பங்குபெற்ற மாபெரும் பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்றில் தம்மோடு சேர்த்து ஆறு குழந்தைகளுடன் மேடையேறிய, நாம் தமிழர் கட்சியின்மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி புதுகை கு.ஜெயசீலன் அவர்களின் அன்புமகன் அதியன் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பேருவுவகையும் அடைகிறேன்.
அன்புமகன் அதியன் அவர்கள் பேச்சாற்றலில் தனக்கிருக்கும் தனித்திறனையும், அன்னைத்தமிழ் மீதுள்ள மொழியாளுமையையும் மேன்மேலும் வளர்த்துக்கொண்டு இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கவும், வாழ்வினில் சிறக்கவும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச்செயலாளர் மு.சந்தானகிருஷ்ணன் அவர்களின்
தந்தை கி.முனுசாமி அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி சந்தானகிருஷ்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா முனுசாமி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப் பெரும்பாட்டன்
தந்த அருந்தமிழ் மறைக்கு...
முத்தமிழ்ப் பேரறிஞர் சமகால பெருங்கவி
ஐயா வைரமுத்து அவர்கள்
எழுதி வெளியிடவுள்ள
அரும்பத உரை தரும் பெரும்பொருள்
அறிய பேராவல் கூடுகிறது..!
ஈன்றாள் பசி காண்பாராயினும்
அறவழியில் வழுவாது நின்று
ஈட்டுவதே நற்பொருள்... அப்பொருள் மூலம் கிட்டுவதே இறவாத பேரின்பம்..!
அறம்... பொருள்... இன்பம் எனும்
மனிதப் பெருவாழ்வின் பிரிக்கவியலா பேருண்மைகள் மூன்றையும் விளக்கி, காலங்கள் தோறும் திருக்குறளுக்கு தமிழ்ச்சான்றோர் பலர்
தக்கச் சான்றுகளோடு பாயிரம் பாடி ஆயிரம் உரைகள் படைத்த பின்னும், வானமளந்து அனைத்துமளந்த வள்ளுவன் பாட்டினை அவ்வளவு எளிதில் எவராலும் அளந்துவிட முடியவில்லை..!
ஆனால், இப்போது வள்ளுவப்பெருமானை
எளிய தமிழ், இனிய தமிழ், சங்கம் வைத்து வளர்த்த மதுரை தமிழ், வைகை தமிழ், வடுகப்பட்டி தந்த வைரமுத்தமிழ் எனும்
இலக்கிய தொலைநோக்கியால்
தெளிவுற கண்டு இன்புற
கண்கள் பூத்திருக்க உலகத் தமிழர்கள்
காத்திருக்கின்றோம்..!
உலகில் எழுதப்பட்ட எல்லா உரைகளும்
செய்யுளுக்கு பொருள் மட்டுமே தரும்..
ஆனால் தமிழர் மறையாம் திருக்குறளுக்கு
எழுதப்பட்ட உரைகள்தான் பொருளோடு
அறம், இன்பம் மூன்றையும் தரும்..! அதிலும்
முத்தமிழ் பேரறிஞர் வைரமுத்து அவர்களின்
மொழிப் புலமையும், இலக்கியச் செழுமையையும்,
அறிவு வளமையும் இணையும்போது,
அது வான்புகழ் வள்ளுவர் தந்த தமிழ் மறைக்கு..
கவிப்பேரரசு வைரமுத்து சூட்டும் தேன்தமிழ் உரை
மகுடமாய் திகழும் என்பது திண்ணம்!
வள்ளுவப் பெருமகனார்
நமக்கு தந்தருளிய முப்பாலையும்
பருகிப் பயன் பெறுவோம்..!
முத்தமிழ்ப் பேரறிஞர் கவிப்பேரரசர்
வைரமுத்து அவர்களின்
பணி சிறக்கட்டும்!
பாட்டன் பாரதி பாடியதுபோல
சொற்புதிதாய், பொருள் புதிதாய்,
சுவை புதிதாய், வளம் புதிதாய்,
சோதிமிக்க நல்லுரை, எந்நாளும் அழியாத
தெள்ளு தமிழ் தெளிவுரை
தமிழ்மறைக்கு தந்தமைக்கு
நன்றி நிறைந்த அன்பின் வாழ்த்துகள்..!
முத்தமிழ்ப் பேரறிஞர் வைரமுத்து அவர்களின்
புகழ்கொடி பறக்கட்டும்!
இப்பொழிப்புரை படித்து
தமிழ்க்குடி
சிறக்கட்டும்!
@Vairamuthu -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, இன்றளவும் அயராது மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த அரசியல் தலைவர்!
ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு,
சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பல்வேறு துறை அமைச்சராகவும், இந்திய ஒன்றிய இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராகவும், தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் இருந்தவர்.
பணநாயகமாக மாறிப்போயுள்ள சனநாயக ஆட்சிமுறையிலும் வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தனது மக்கள் நலப் பணிகள் மூலம் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வென்றவர்.
அன்பிற்குரிய மாமா சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - சென்னை அம்பத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி க.பூபேசு அவர்களின் அன்புத்தங்கை கல்பனா ஏசுதாஸ் அவர்கள் இன்று 12-07-2025 மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை கச்சினாங்குப்பம் கன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு,
நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி, அன்புத் தங்கையை இழந்து வாடும் தம்பி பூபேசு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, துயரில் பங்கெடுத்தேன்.
அன்புத் தங்கை கல்பனா ஏசுதாஸ் அவர்களுக்கு என் கண்ணிர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உரிமைக் குரல் எழுப்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டேன்சாமி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, தமிழர் தேசியக் கிறித்துவர் இயக்கம் சார்பில், இன்று (12-07-2025) சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருமண மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று சிறப்புரையாற்றியபோது,
youtube.com/live/MM443l5tACw -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் 30 ஆண்டுகாலக் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், அலியாளம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் வலதுபுறத்தில் 9 கி.மீ தொலைவிற்குக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிற்கு அக்கால்வாயை நீட்டிப்புச் செய்து, சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள 12 ஏரிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 13 ஏரிகள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் கிளை வாய்க்கால் வெட்ட வேண்டுமென்று கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியும் இதுவரை தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மறுத்துவருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பெருங்குடி மக்களால் கடந்த 2010 ஆம் ஆண்டு தென்பெண்ணைக் கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் தொடர்ச்சியாகக் கோரிக்கையையும் உழவர் பெருமக்கள் முன்வைத்தனர். அதுமட்டுமின்றி, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்பகுதி கிராம மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகவும் அளிக்கப்பட்டது. பின்னர் தமிழக உழவர் முன்னணி மற்றும் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்புகள் பல்வேறு வடிவிலான அறவழி போராட்டங்களையும் நடத்தியும் தமிழ்நாடு அரசு கிளை வாய்க்கால் அமைக்க முன்வரவில்லை.
அதனைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இத்திட்டத்தின் அவசியம் குறித்த விரிவான விளக்கத்துடன் கூடிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கிருஷ்ணகிரி மாநகரில் மாபெரும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மீண்டும் மனு அளிக்கப்பட்டதுடன், அதே ஆண்டு நவம்பர் மாதம் இராயக்கோட்டையில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டமும் நடைபெற்றது. அதில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதாக அரசு அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.
அதன்பிறகு, முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி திடலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அன்றைய முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு, முதற்கட்ட ஆய்விற்கான நிதியையும் ஒதுக்கினார். அதனைத் தொடர்ந்து திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு “Life Shell Labs India Private Limited" நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு 3 (3)-ன்படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு அரசால் 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 14.02.21 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதே ஆண்டு ஒப்பந்த ஏல அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது தற்போதைய முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் 18-01-21 அன்று தூள்செட்டி ஏரியில் கிராமசபைக் கூட்டம் நடத்தி, கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து, கடந்த 2023 ஆம் ஆண்டுதான் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அதன்பின் இன்றுவரை அத்திட்டம் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் முடங்கிக்கிடக்கிறது என்பதுதான் மிகப்பெரிய கொடுமையாகும்.
ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாகியும் நிலம் வழங்கும் சிறு குறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசு, அதையே காரணம் காட்டி கிளைவாய்க்கால் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பாகக் கடந்த 29.06.25 அன்று இராயக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தபோதும், திமுக அரசு அதனை அலட்சியப்படுத்தி, திட்டத்தை நிறைவேற்ற மறுத்துவருவது ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும்.
பரந்தூரில் விளைநிலங்களை அழித்துப் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்குப் பல நூறுகோடிகளைக் கொட்டி அவசர அவசரமாக நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்த முனையும் திமுக அரசு, அதில் காட்டும் ஆர்வத்திலும், வேகத்திலும் ஆயிரத்தில் ஒரு பங்காவது வேளாண்மையை வளர்க்கும் விவசாயிகளை வாழ்விக்கும் திட்டமான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் காட்டாதது ஏன்? வேளாண்மையை அழித்து, விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட மடலா? இதுதான் திமுக அரசு வேளாண்மையை வளர்க்கும் முறையா? என்ற கேள்விகளுக்கு ஆட்சியாளர்களின் பதிலென்ன?
ஆகவே, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அம்மக்களின் 30 ஆண்டுகாலக் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை இனியும் கால தாமதம் செய்யாமல் விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடிய அறப்போர் இயக்கத்தினைச் சேர்ந்த தம்பி ஜெயராமன் உட்பட 14 பேரை தமிழ்நாடு அரசு (10.07.2025) கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும்கூட போராடும் மக்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கைகள் மக்களாட்சி மாண்பையே சீர்குலைக்கும் செயலாக உள்ளது.
@mkstalin @Chief_Secy_TN @OfficeOfKRP @tnpoliceoffl
992 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கிறிஸ்டி நிறுவன குமரசாமியை கைது செய்யக் கோரி போராடிய நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், அது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு போராடியவர்களையே தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது. திமுக அரசானது ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்திருந்தாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக எதிர்க்குரல்களை அடக்கி, உண்மையை மறைக்கவே முனைகிறது.
அறப்போர் இயக்கம், தமிழ்நாட்டின் பொது விநியோகத் துறையில் நடந்த பெரும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இந்த ஊழல், பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி, அடிப்படை சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பாதித்திருக்கிறது. ஆனால், இந்த அரசு, ஊழலை விசாரிக்க வேண்டிய பொறுப்பைத் தவிர்த்து, உண்மையை வெளிப்படுத்தும் குரல்களை அடக்க முயல்கிறது. தம்பி ஜெயராமனின் கைது, தமிழ்நாடு அரசின் அரசியல் பழிவாங்கல் மற்றும் ஊழலை மறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த அரசு, ஊழலை எதிர்க்கும் குரல்களை அடக்குவதன் மூலம், தங்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. போராடும் பொது மக்களையும் தன்னார்வலர்களையும் கைது செய்யும் எதேச்சதிகாரப் போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது உடனடி நடவடிக்கையும் எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்!
வீரமிகு எங்கள் பாட்டனார்
அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள நினைவு மணிமண்டபத்தில் உள்ள
வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன்
அவர்களின் திருவுருவச் சிலைக்கு இன்று (11-07-2025) நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தியபோது,
www.youtube.com/live/5eYv0Z5KoYA -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் விரைவு நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியதாகும்.
@mkstalin @CMOTamilnadu @KanchiCollector @TRBRajaa @MRKPanneer @supriyasahuias @TThenarasu @Chief_Secy_TN
பரந்தூரில் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்கானத் திட்டத்தினை 1075 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் எதிர்த்து வரும் நிலையில், அதனைத் துளியும் மதிக்காமல் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்கின்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி உட்பட இன்னும் பல்வேறு அனுமதிகள் பெற வேண்டிய நிலையிலும் கூட பொதுமக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையினை தற்போது தமிழ்நாடு அரசு விரைவுபடுத்தியுள்ளது. கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையின்படி வரையறுக்கப்பட்ட நிலங்களுக்கான மதிப்பீட்டுத் தொகைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏகனாபுரத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களைக் கொண்டிருக்கும் வெளியூரைச் சேர்ந்த நில உரிமையாளர்களை அணுகி அவர்களுக்கு மதிப்பீட்டுத் தொகையினை வழங்கி தமிழ்நாடு அரசு நிலங்களைக் கையகப்படுத்தி உள்ளது. 5750 ஏக்கர் திட்ட அளவில், 17.5 ஏக்கர் என்கிற சொற்ப இடங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், பொதுமக்கள் அனைவரும் தங்கள் நிலங்களைத் தாமாக முன்வந்து வழங்கி அதற்கானத் தொகையினை உடனடியாகப் பெற்றுக் கொள்வது போன்ற போலி பிம்பத்தினை உருவாக்கிட இது குறித்த செய்தி குறிப்புகளையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
தொடர்ச்சியாக 1075 நாட்களுக்கு மேலாகப் போராடிவரும் பொது மக்களை ஒரு முறை கூடச் சந்திக்காத தமிழ்நாடு முதலமைச்சரின் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களை மடை மாற்றிட இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் தரமற்ற ஆட்சி முறையின் எடுத்துக்காட்டாகும். அரசானது மக்களுக்கான அரசு போல செயல்படாமல் பெரு நிறுவன கார்ப்பரேட் கட்டமைப்பு போல செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிவுகள், பொதுமக்களுக்கு எதிரான இன்னல்கள், வளக்கொள்ளைகள் முதலியவை பெருகிவரும் நிலையில் அவற்றைக் கண்டுகொள்ள நேரமில்லாத தமிழ்நாடு அரசுக்கு பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மட்டும் பல மடங்கு முனைப்பு காட்ட முடிகின்றது
இத்திட்டத்தை எவ்வாறேனும் கொண்டு வந்து விட வேண்டும் என்கின்ற குறுக்கு வழி நடவடிக்கைகளில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு விட்டுவிட்டு போராடும் பொது மக்களைச் சந்தித்து அவர்களின் இன்னல்களைக் கேட்டறிந்து இத்திட்டத்தினைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்றும் பேரறிவிப்பு செய்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும், மனவலியும் தருகிறது.
வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஊழியரின் கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை எண்ணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பை சந்தித்து பெருந்துயரக்கடலில் சிக்கித்தவிக்கும் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரை பகிர்ந்து கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். மொழி புரியாத வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணமாகும்.
தமிழர்களை இந்தி கற்கச்சொல்லி திணிப்பதில் காட்டும் அதிகாரத்தையும், ஆர்வத்தையும் தமிழ்நாட்டில் பணிபுரிய வரும் வடமாநிலத்தவருக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் ஏன் இந்திய ஒன்றிய அரசு காட்டுவதில்லை? தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் பணிவாய்ப்பு என்பது உரிமை பாதுகாப்பு முழக்கம் மட்டுமன்று; உயிர் பாதுகாப்பு முழக்கமுமாகும். அதனை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவே தற்போது 3 குழந்தைகள் பலியான துயரம் நிகழ்ந்தேறியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற கொடுமைகள் இனி எங்கும் நிகழாதவாறு தடுக்க இனியேனும் அந்தந்த மாநிலங்களில் அம்மண்ணின் மக்களை மட்டுமே பணியமர்த்த ஒன்றிய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த 3 குழந்தைகளுக்கும் என்னுடைய
கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, மஞ்சூர் கிளையை சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மகேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றி வந்த மகேந்திரன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருப்பது ஆற்ற முடியாதப் பேரிழப்பாகும்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி மகேந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மா.ரமேஷ் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா மாது ( எ ) மாதேஸ்வரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மாது (எ) மாதேஸ்வரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 07-07-2025 அன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்திலேயே ‘புரட்சி தமிழகம் கட்சி’ சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஆதித்தமிழர் பறையர் எழுச்சி நாள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தபோது,
youtube.com/live/pL2nEn9y_jo -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தம்பி அஜீத்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும்,
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக
நாளை 08-07-2025 அன்று மாலை 04 மணிக்கு
திருப்புவனம் சந்தை திடல் அருகில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
ஆனி23 (07-07-2025) | ஆதித்தமிழர் எழுச்சிநாள்
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள்!
“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!
வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று என்று கற்பித்த பெருந்தகை..!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் எழுதிய தன் வரலாறு புத்தகத்தில், லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கெடுக்கச் சென்றபோது, இங்கிலாந்து ராணி தன்னைச் சரிசமமாக அமர்த்தி உணவு பரிமாறினார்கள் என்பதை நெகிழ்வுடன் பதிவு செய்திருக்கிறார். இது போன்ற நிகழ்வு எங்கள் மண்ணில் நடக்காது என்று ராணியிடம் தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நானூறு பேர் படித்த இடத்தில் தான் மட்டும்தான் ஆதித்தமிழ்க்குடி என்றும், விளையாட்டில் ஆர்வம் இருந்தும், யாரும் விளையாட தன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், அதனால் திடலின் ஓரத்தில் நின்று மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பேன் என்று நம்முடைய தாத்தா கண்ணீருடன் பதிவு செய்துள்ள வார்த்தைகளில் உள்ள வலியை ஒரு நிமிடம் நாம் உள்வாங்கி, தமிழர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒன்றுபட்ட தமிழ்ச்சமுதாயமாகத் திகழந்திட அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் அயராது பாடுபட வேண்டும். அவர்காட்டிய சமத்துவ வழியில் பயணிக்க வேண்டும் என்ற உறுதியோடுதான், தமிழ்த்தேசிய அரசியல் என்ற தன்னிகரில்லா தத்துவத் தடம்பற்றி, நாம் தமிழர் கட்சி என்ற புரட்சிகர அரசியல் படையைக் கட்டமைத்து, இனவிடுதலை என்ற உயர்ந்த இலட்சிய இலக்கினை நோக்கி நாம் பயணப்பட்டு வருகிறோம்.
அதன் காரணமாகவே தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாளினை "ஆதித்தமிழர் எழுச்சிநாள்" என இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நாம தமிழர் கட்சி சார்பாக கொண்டாடுவோம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க அறிவிப்பையும் வெளியிட்டுள்ளோம்!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
ஆதித்தமிழர் எழுச்சி நாளில் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகம் முழுவதும் சென்று தமிழ் வளர்த்த பெருங்கவிக்கோ ஐயா வா.மு.சேதுராமன் அவர்கள் 05-07-2025 அன்று மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, ஐயாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபோது,
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு மதுரை விராதனூர் என்னும் இடத்தில் ஆடு-மாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.
"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கிறது।
மேய்ச்சல் புறம்போக்கு என்று ஒரு இடம் இருந்தது இன்றைக்கு அது சுத்தமாக இல்லை. மலை அடிவாரங்களில் காடுகளில் ஆடு-மாடுகள் மேய்க்கிற வாய்ப்பு இருந்தது அதுவும் இன்று தடுக்கப்பட்டிருக்கிறது. கால்நடை நம்முடைய செல்வங்கள் அது சார்ந்தது வேளாான் பெருங்குடி மக்களின் தற்சார்பு வாழ்க்கை.
தற்காலச்சூழலில் ஆடு-மாடுகள் வளர்ப்பது அவ்வளவு கடினமான ஒரு பணியாகி அதை விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு நம்முடைய உறவுகள் தள்ளப்படுகிறார்கள். அதில் எவ்வளவு இடையூறுகள் இருக்கிறது; அது சார்ந்து எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறது; என்பதை எல்லாம் விளக்கி இந்த மாபெரும் மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
எனவே, என் அன்பு உறவுகள் இந்த மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக நடந்து தமிழ்நாட்டை தாண்டி இந்திய பெருநிலத்தின் கவனத்தை இழுத்து, இதற்குொரு ஒரு முடிவைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்.
அதில் உணர்வெழுச்சியோடு என் அன்பு உறவுகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.
இது ஆடு மாடுகளின் உரிமை அல்ல; நம்முடைய உரிமை! நம் மண்ணின் உரிமை!
ஆடும், மாடும் நம் உடன் பிறந்தவைகள்; நம்முடைய செல்வங்கள்!
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று நம்முடைய மறையோன் வள்ளுவப் பெருமகனார் பாடிய குறளுக்குப் பொருள் கல்விதான் மானுடனுக்கு அழியாத செல்வம்; அதேவேளையில் மாடும் நம் செல்வம் என்கிறார்.
இந்த மாடு மாடல்ல; நம் செல்வம்! அதனால் பேசும் திறனற்ற அவர்களுக்காகப் பேசுவதற்கு நாம் கூடுவோம்.
இந்த நிகழ்விற்கான திரள்நிதி திரட்டலில் என் அன்பு சொந்தங்கள் இயன்றளவு நிதி உதவி அளித்து உங்கள் பிள்ளைகள் எங்கள் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.
donate.naamtamilar.org/cattle-conference.html
உங்கள் அனைவரின் வரவையும் ஆவலோடு எதிர்பார்த்து இந்த நிலத்தில் சூலை 10ஆம் தேதி காத்திருப்பேன்!
நன்றி! வணக்கம்!
நாம் தமிழர்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இன்று 05-07-2025 திருவள்ளூர் மாவட்டம், பொத்தூர் கிராமத்தில் நடைபெற்ற, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் நிகழ்வில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தி, உரையாற்றிய போது
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற
அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.
மிகச்சிறப்பாக விளையாடி கோப்பை வென்றுள்ள தமிழீழ கால்பந்து அணியினருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
புலம் பெயர்ந்து வாழ நேர்ந்த போதிலும், தங்களுடைய அயராத முயற்சியாலும், கடின உழைப்பாலும் கிடைக்கும் வாய்ப்புகளில், தமிழ்ப்பிள்ளைகள் சாதனை புரிவது ஒன்றுதான் நம் இனத்தின் வலியை, உலகின் முன் உரக்க மொழிவதற்கும் ஈழத்தாயகம் விடுதலை பெறுவதற்குமான வலிமையான வழியேயாகும்.
அந்த வகையில் இரண்டாவது முறையாக தமிழீழ கால்பந்தாட்ட அணி பெற்றுள்ள வெற்றி பெருமிதம் கொள்ளச்செய்கிறது.
அணிவீரர்கள் அனைவருக்கும், பயிற்சியாளருக்கும் என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும், தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழீழ கால்பந்து அணி மேலும் பல பதக்கங்கள் வென்று சாதனைபுரிய என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும், தற்கொலை முன் பேசிய ஒலிப்பதிவுகளும் மனச்சான்றுள்ள ஒவ்வொரு மனிதரின் இதயத்தையும் நொறுங்க செய்தது.
ரிதன்யா தற்கொலைக்கு காரணமான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது அரசியல் அழுத்தம் காரணமாக முறையாக பிரிவுகளின்கீழ் வழக்கு பதியவில்லை எனும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகள் மூவர் மீதும் எளிதில் பிணையில் வரக்கூடிய வழக்கு பதிந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி வேறுவழியின்றி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணைக் கொடுமைகளினால் பெண் பிள்ளைகள் மரணிக்கும் கொடுமைகள் நிகழ்ந்தேறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலமாகும். வரதட்சணை கொடுமைகளுக்கு பலியாகிய பெண்களில் தங்கை ரிதன்யாவின் மரணமே இறுதியானதாக இருக்கட்டும்!
ஆகவே, தங்கை ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமான மூவர் மீதும் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து, எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல் கடுந்தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி, மணலி புதுநகர் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெய்சன் அவர்களின் தாயார் அம்மா தனசெல்வி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா தனசெல்வி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று துணிவுடன் சாட்சியம் அளித்த தம்பி சக்தீஸ்வரன், அக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
தம்பி அஜித்குமார் படுகொலையால் மக்கள் மனங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, எதிர்கட்சிகள் கடுமையாகக் கண்டித்து, உயர்நீதிமன்றமும் தலையிட்ட பிறகு, வேறுவழியின்றி காவலர்கள் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்தது.
ஆனால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகும் முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சல் தொடர்புடைய காவலர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்த துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? காவல்துறை அதிகாரிகளா அல்லது உயர் அதிகாரத்தில் உள்ளவர்களா? அல்லது ஆளுங்கட்சிக்கு ஏற்படும் அவப்பெயரைத் தடுக்க அரசே மறைமுகமாக மிரட்டுகிறதா?
கோயில் கண்காணிப்புக் கருவி (சிசிடிவி) காட்சிகளைப் பறித்து சென்ற திமுக அரசின் காவல்துறை கரங்களில் சிக்காமல், தன்னிடமிருந்த காணொளி ஆதாரத்தை மிகப்பாதுகாப்பாக நீதிமன்றத்தில் கொண்டு சேர்த்த தம்பி சக்தீஸ்வரனின் புத்திசாலித்தனத்தையும், நேர்நின்று சாட்சியம் அளித்த நெஞ்சுரத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
காவல்துறையின் அதிகாரக் கொடுங்கரங்களுக்கு அஞ்சாமல் சாட்சியம் சொன்ன சக்தீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளுக்கும் உயிர்ப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.
நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளைத்தான் திமுக அரசால் தடுக்க முடியவில்லை; தன் கையில் உள்ள காவல்துறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடு. குறைந்தபட்சம் சாட்சிகளுக்காவது பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு உரிய பாதுகாப்பு வழங்க மறுப்பது மாண்பமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலோடு மட்டுமின்றி, திரைமறைவில் குற்றவாளிகளைத் தப்புவிக்க முயலும் சூழ்ச்சியாகும்.
ஏற்கனவே, கனிமவளக்கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி பாதுகாப்பு அளிக்க முறையிட்டும் உரிய பாதுகாப்பை திமுக அரசு அளிக்க தவறிய காரணத்தினால்தான் புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை செய்யப்பட்டார்.
ஆகவே, திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி கிடந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
முன்னதாக, அதே பகுதியில் மழைநீர் வடிகால் சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன் மற்றும் சின்ன குருசாமி ஆகிய இரு தொழிலாளர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய நிலையில், அதன் பிறகாகவது உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்வாரியம் எடுத்திருந்தால் அன்புமகன் நவ்பில் உயிர் பறிபோயிருக்காது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திருவொற்றியூர் கலைஞர் நகரில் சாலையில் தேங்கிருந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி கமலி உயிரிழந்தார். அக்கொடுநிகழ்வு நடைபெற்று நான்கு ஆண்டுகளை கடந்தும்,திருவொற்றியூரில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சரிவர மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தவறியதும்,
மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில், மின் கசிவுகளைச் சரிசெய்யாமல் மின் இணைப்பினைக் கொடுத்த மின்சார வாரியத்தின் அலட்சியமுமே திருவொற்றியூர் பகுதியில் தொடர்ச்சியாக மின்விபத்துகளும், அதன் காரணமான உயிரிழப்புகளும் ஏற்பட முதன்மைக்காரணமாகும்.
பெரும் வசதி படைத்தவர்கள் வாழும் நகரின் மையப்பகுதியில் வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்வதில் காட்டும் அக்கறையையும், வேகத்தையும், எளிய அடித்தட்டு மக்கள் வாழும் பின்தங்கியக் குடிசைப்பகுதிகளில் மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசின் வர்க்கப் பாகுபாடுகளுடன் கூடிய பொறுப்பற்றதனத்தால் ஏதுமறியா அப்பாவி பள்ளி சிறுவன் உயிரிழந்துள்ளது பெருங்கொடுமையாகும்.
ஆகவே, புறநகர்ப்பகுதிகளில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் நம் மண்ணின் குடிமக்கள்தான் என்பதைக் கருத்திற்கொண்டு, அனைத்து மக்களின் உயிரும் சமமதிப்புடையது என்பதை இனியாவது தமிழ்நாடு அரசு உணர்ந்து, அரசுத்துறைகளில் நடைமுறையிலுள்ள வர்க்கப்பாகுபாடுகளைக் களைவதுடன், பின்தங்கியப் பகுதிகளிலும் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
பெற்றெடுத்து, பேணிவளர்த்த அன்புமகன் நவ்பிலை இழந்துவாடும் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் என் ஆறுதலைக்கூறி, துயரில் பங்கெடுக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சேலம் மாவட்டம், வில்லியம்பட்டியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் மணல் கடத்தல் கும்பலால் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளான செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாடறியப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே மக்களின் கண்முன்னே செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளாகிறாரென்றால், இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? எனும் கேள்விதான் எழுகிறது. உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் நடைபெற்று வந்த இக்கொடுங்கோல் காட்சிகள் தமிழ்நாட்டிலும் அரங்கேறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கருத்துரிமை, சனநாயகம், மக்களாட்சி என்றெல்லாம் நாளும் பேசி வாய்ப்பந்தல் போடும் திமுக அரசு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை ஒட்டுமொத்தமாகச் சந்திச் சிரிக்கவிட்டு, கூலிப்படையினரையும், வளக்கொள்ளையர்களையும், சமூக விரோதிகளையும் ஆட்டம் போடவிட்டு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. மாநிலம் முழுமைக்கும் அதிகார வர்க்கத்தின் துணையோடு, கொடிகட்டிப் பறக்கும் வரம்பற்ற வளக்கொள்ளையையும், அத்துமீறி அடாவடித்தனம் செய்யும் வளக்கொள்ளையர்களையும் தடுக்க வக்கற்ற ஆளும் திமுக அரசின் இழிநிலையே இதற்கு முழுமுதற் காரணமாகும்.
ஜகபர் அலியையும், ஜாகீர் உசேனையும், லூர்து பிரான்சிசையும் சமூக விரோதக் கும்பலுக்குக் காவுகொடுத்த திமுக அரசு, இனியும் திருந்தவில்லையென்றால் நடப்பது மக்களாட்சியா? வளவேட்டையர்களுக்கானக் காட்டாட்சியா?
@CMOTamilnadu @mkstalin -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த கொடுநிகழ்வும், அதேபோன்று சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் தங்கும் விடுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த கொடுநிகழ்வும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஏதுமறியா பிஞ்சு குழந்தைகளின் மரணங்கள் நெஞ்சை கனக்கச்செய்கிறது. அண்மைக்காலமாக தமிழ்நாட்டு கல்விக்கூடங்கள் கொலைக்களமாக மாறிநிற்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சியில் பொதுவெளியில் போதைப்பொருட்கள் புழக்கம் கட்டுக்கடங்காது அதிகரித்த நிலையில், பள்ளிச்செல்லும் குழந்தைகளும் டாஸ்மாக் மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தும் கொடுமைகளும் அவ்வப்போது வெளியே தெரிய வருகின்றன. அதேபோன்று திமுக ஆட்சியில் பொதுவெளியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கத் தொடங்கி, பள்ளிச்சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் பெருந்துயரங்களும் அதிகளவில் நடக்கின்றன. அவற்றின் நீட்சியாக திமுக ஆட்சியில் பொதுவெளியில் அதிகரிக்க தொடங்கிய படுகொலைகளும், மர்ம மரணங்களும் தற்போது, பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியருக்கும் நேர்வதுதான் அக்கொடுமைகளின் உச்சமாகும்.
மக்களைக் காக்க வேண்டிய காவல் நிலையங்களே மக்களைக் கொல்லும் கொலைக்களங்களாக மாறிநிற்கிறது. நீதியைப் பெற்றுத்தர வேண்டிய அரசோ கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரிடம் கொல்லப்பட்ட உயிருக்கு பேரம் பேசுகிறது. அதன்விளைவுதான் நாட்டின் வருங்கால தூண்களாக மாணவச்செல்வங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணிக்கும் பெருந்துயரங்கள் தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரிக்க காரணமாகும். தீய திராவிட மாடல் ஆட்சியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றச்சமூகமாக மாறிநிற்பதன் வெளிப்பாடே தொடர்ந்து நடைபெறும் பள்ளிக்குழந்தைகளின் மர்ம மரணங்களாகும்.
மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்கள் இருப்பதும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதும், குழந்தைகளின் மரணங்கள் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.
ஆகவே, சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள இரு குழந்தைகளின் மரணங்களுக்கான உண்மையான காரணம் குறித்து விரைவான நீதிவிசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பெற்றெடுத்து பேணி வளர்த்த குழந்தைகளை இழந்துவாடும் பெற்றொருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, எளிதில் ஆற்றமுடியாத பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவினை, அவர்களின் பெரும்புகழ் போற்றும் புகழ்வணக்க பொதுக்கூட்டமாக நாளை மறுநாள் ஆனி 20 ஆம் நாள் (04.07.25) வெள்ளிக்கிழமை அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் பேரெழுச்சியுடன் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது.
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஒப்படைத்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய புரட்சியாளர் நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்கள். கல்லூரி பயிலும் காலத்திலேயே திருவையாறு அரசர் கல்லூரியில் நிலவிய சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன். வேலை கேட்டு இளைஞர்கள் போராடிக்கொண்டிருந்த காலத்தில் போராடுவதற்காகவே தம்முடைய வேலையை துறந்த பெருந்தகை.
பெண்ணாடம் பகுதியில் நிலவிய இரட்டைகுவளை முறை தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி. புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் சாகசங்கள் பல புரிந்து வரலாறு படைத்தவர். எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர். மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் சிறை விடுதலை கிடைக்கும் என்ற நிலை இருந்தபோதும் அதனை மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்.
”என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்திரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அணைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய மாவீரராவார்.
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார் நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டில் ஐயா அவர்களின் பெரும்புகழ் போற்றிடவும்,
அவரைப்போலவே நூற்றாண்டு விழா காணும் சமூகநீதிபெருங்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து அவர்கள் தம்முடைய வாழ்வின் இறுதி மூச்சு வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்ட சமூகநீதி ஆசானாவார். சமூகத்தின் மீது அக்கறையால் வீட்டிலிருந்த ஆடு மாடுகளையும், சேமிப்பு தானியங்களையும் தாயாரின் நகைகளையும் விற்று தனது 25 வயதில் குறள்மலர் என்கிற வார ஏட்டைத் தொடங்கினார். மக்கள் பணிக்காகத் தம்முடைய வாழ்வினை முழுமையாக அர்ப்பணிக்க 1952 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை விற்பனை சங்கத்தில் தான் ஏற்றிருந்த அரசுப் பணியையும் துறந்தார். .தமிழ்மறை திருக்குறள் கூறும் அறநெறியை தம் வாழ்வியல் நெறியாக வரித்துக்கொண்ட தாத்தா ஆனைமுத்து அவர்கள், 1957 ஆம் ஆண்டு குறள்முரசு என்கிற இதழையும், பிறகு 1974 ஆம் ஆண்டு முதல் சிந்தனையாளன் என்ற இதழையும் தொடங்கி நடத்திய பெருந்தகையாவர்.
தாயக விடுதலைக்குப் போராடிப் பெற்ற பிள்ளையுடன் சிறைக்களம் புகுந்த விடுதலைப்போராட்ட வீராங்கனை, தமிழ்ப்பெண்களின் பெருமைக்குரிய அடையாளம் அஞ்சலை அம்மாள் அவர்களிடம் அரசியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். தாத்தா ஆனைமுத்து அவர்களின் அறிவாற்றலையும், செயலாற்றலையும் உணர்ந்துகொண்ட ஐயா ஈவேரா அவர்கள் பேரறிஞர் என்று புகழ்ந்தார். இருப்பினும் எப்போதும் உண்மையாக இருந்து, உண்மையையே பேசியதால் 16.11.1975 ஆம் நாள் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 08.08.1976 ஆம் நாள் பெரியார் சம உரிமைக்கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி, 13.08.1988 ஆம் நாள் அவ்வமைப்பின் பெயரை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி என்றும் மாற்றினார். 1981 முதல் ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கிய தாத்தா ஆனைமுத்து அவர்கள் தான் மேற்கொண்ட ஈழ பயணத்தையொட்டி, "தமிழீழ தமிழரை, மலையக தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பேசுங்கள்!" என்கிற நூலையும் வெளியிட்ட பெருமைக்குரியவர்.
இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்தும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகநிலைகளில் பின்தங்கிய நிலையிலிருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடப்பங்கீடு வழங்குவதற்காக மண்டல் ஆணையம் அமைந்திடவும், அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்தவும் தொடர்ச்சியாகப் போராடி வெற்றி கண்டதால் தாத்தா ஆனைமுத்து அவர்கள் ‘மண்டல் ஆணையத்தின் நாயகர்’ என்று போற்றப்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகத் திகழ்ந்த தாத்தா ஆனைமுத்து அவர்கள், தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 31 விழுக்காடு இடப்பங்கீடு 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டதில் பெரும்பங்காற்றினார். அந்த வகையில் தமிழ்நாட்டின் இன்றைய 69 விழுக்காடு இடப்பங்கீட்டுக்கு மூல காரணமே தாத்தா ஆனைமுத்து அவர்கள்தான் என்பதே வரலாறாகும்.
வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மாநில அரசுப் பணிகளில் இடப் பங்கீடு இல்லாதிருந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த இரராம் அவதேஷ் சிங் அவர்களுடன் இணைந்து 31-10-1978 இல் பீகார் மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முதலாக 20 விழுக்காடு இடப் பங்கீடு வழங்க வழிவகைச் செய்தார். அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் பேரவையின் தலைவராகத் திகழ்ந்த தாத்தா ஆனைமுத்து அவர்கள் இந்தியா முழுவதும் சமூகநீதி பேரொளி பரவச்செய்த பெருமகனாவார்.
தேசிய இனங்களின் தன்னுரிமைக்காக இந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழிவழித்தேசங்களிலும் களம் கண்ட பெருமகன்.. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணிகளிலும் 27 விழுக்காடு இடப்பங்கீடு வழங்க வித்திட்ட செயல்வீரர் நம்முடைய தாத்தா வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டில் ஐயா அவர்களின் பெரும்புகழ் போற்றிடவும்,
அவ்விரு பெருந்தமிழ் தலைவர்களைப் போன்றே, சாதிய இழிவுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடிய சமூகநீதிப்போராளி, நம்முடைய தாத்தா இளையபெருமாள் ஆவார். பள்ளி பயிலும் காலத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வைக்கப்பட்டிருந்த தனிப்பானையை உடைத்தெறிந்து, பொதுப்பானை வைக்கும் முறையைக் கொண்டுவந்ததில் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தம்முடைய வாழ்நாள் முழுதும் சமரசமற்று போராடிய அரசியல் புரட்சியாளர்.
இளம் வயதிலேயே சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தாத்தா இளையபெருமாள் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக உயர்ந்த பெருந்தமிழராவார். தம்முடைய 27 ஆம் வயதில் முதன்முறையாக சிதம்பரம் தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாத்தா இளையபெருமாள் அவர்கள் 1967 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னலமற்று மக்கள் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற தாத்தா இளையபெருமாள் அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக 1989 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி மனித உரிமை கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கி உழைக்கும் மக்களின் உயர்வுக்குப் பாடுபட்ட பெருந்தகை.
1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையம் தொடங்கப்பட்டபோது அதன் முதல் தலைவராகச் சிறப்புற பணியாற்றிய தாத்தா இளையபெருமாள் அவர்கள், இந்தியா முழுமைக்கும் பயணித்துச் சாதிய தீண்டாமை கொடுமைகள் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை அளித்தார். அவரின் செயற்கரிய முயற்சியால் இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியக் கொடுமைகளை வெளிச்சமிட்டுக் காட்டியதோடு, அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். ஆனால் அந்த அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாகக் கிடப்பில் போடப்பட்டது. இருந்தபோதிலும், பின்னாட்களில் கொண்டுவரப்பட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டமும், அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் சட்டமும் நம்முடைய தாத்தா இளையபெருமாள் அவர்கள் ஆணையத்தலைவராக அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டதாகும்.
தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள் மற்றும் சமூகநீதி பெருங்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், அவ்விரு தலைவர்களுடன், அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்காக வாழ்நாள் முழுதும் போராடிய நம்முடைய தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு கடந்த பெரும்புகழைப் போற்றிடவும் மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தை, தாத்தா இளையபெருமாள் அவர்கள் பிறந்த கட்டுமன்னார்கோயில் மண்ணில் முன்னெடுப்பதில் நாம் தமிழர் கட்சி பெருமிதம் கொள்கிறது.
தமிழினத்தின் விடுதலைக்காக, அதன் நல்வாழ்விற்காக, சமூக மேம்பாட்டிற்காகத் தம்முடைய வாழ்வினை அர்ப்பணித்த முப்பெரும் தலைவர்களை நெஞ்சில் இருத்தி போற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையின் வரலாற்று பெருங்டமையாகும்
வரலாற்றில் மறைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்ட நம்மின முப்பெருந்தலைவர்களின், பெறுமதிமிக்கப் போராட்ட வாழ்வினை நன்றியுடன் நினைவுகூரும் நூற்றாண்டுப் பெருவிழாவில் என் பேரன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகள், என் உயிருக்கினிய தம்பி தங்கைகள் பேரெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்போம்!
போர்க்குணமிக்கத் தமிழினப் புரட்சியாளர்கள், போற்றுதற்குரிய தமிழ்த்தலைவர்கள் மூவருக்கும் பெருமிதத்துடனும், நன்றியுணர்வுடனும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
சென்னை குரோம்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புது வாழ்வு ஜெம்ஸ் பேராயத்தின் பேரன்பிற்குரிய தந்தை பேராயரும், திருமறைப் பேரறிஞருமான முனைவர் தயானந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
பேராயர் தயானந்தன் அவர்கள் தமிழ்க் கிறிஸ்தவ உலகில் முதுபெருந் தலைவராகவும் உலகத் தமிழ் கிறிஸ்தவர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டதுடன் ஆசிய சர்வதேச ஊழியர் பேராயத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ திருச்சபைகளின் மாமன்றத்தின் தந்தை பேராயருமாகச் செயற்பட்ட பெருந்தகை.
இறைப் பணியாளர்களின் ஒப்பற்ற ஊன்றுகோலாகவும், கிறிஸ்தவ உலகின் தன்னிகரற்ற தலைவராகவும், இறை நம்பிக்கையாளர்களின் தகப்பனாகவும் திகழ்ந்த பேராயர் ஐயா தயானந்தன் அவர்களின் ஒப்பற்ற வாழ்க்கையை நோக்கும்போது: "இறையன்பர்களின் சாவு கடவுளது பார்வையில் மிக மதிப்புக்குரியது" என்ற தாவீது அரசரின் கூற்று நினைவுக்கு வருகிறது.
ஐயா அவர்கள் விவிலியத்தைப் பகுத்துப் போதிக்கும் சிறந்த பேராசிரியர், பிரசங்க பீரங்கி என மக்களால் அழைக்கப்பட்டவர். எச்சூழலிலும் மகிழ்ச்சியின் குரலோடு, மார்தட்டி பேசும் மகத்துவ மனிதரின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகிறேன்.
பேராயரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், "நல்லாருக்கு ஒரு கேடும் வராது' என்ற விவிலிய வாசகத்தின்படி அன்னாரது குடும்பத்தாரை மனஅமைதி ஆட்கொள்ள நானும் இழப்பில் பங்கேற்கிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்!
@CMOTamilnadu @mkstalin
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (01.07.2025) நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த மகாலிங்கம், செல்லப்பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி, ராமஜெயம், வைரமணி ஆகிய 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பெருந்துயற்றேன். பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்து கொள்கிறார்கள். விதிமீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 25 ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடி விபத்துகளில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்த பெருந்துயரம் இன்றுவரை நீண்டு கொண்டே வருகிறது.
பட்டாசு ஆலை விபத்துகளில் தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கும் குடும்பங்கள் எத்தனை? அதனால் கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் எத்தனை பேர்? பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் இக்கொடுமைகளை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கப்போகிறது? உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்க விடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும்தான் பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.
மனித உயிர்களை பலி வாங்கும் இத்தகைய கொடும் வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசானது பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுத்து அவர்களின் மறுவாழ்விற்கு உதவிடுவதே நிலைத்த தீர்வாக அமையும் என்று அறிவுறுத்துகிறேன். மேலும், தற்போது விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடனடியாக நீதி விசாரணை செய்வதோடு, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள
4 இலட்ச ரூபாய் போதுமானதன்று. கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்கும் திமுக அரசு, கடின உடல் உழைப்பு புரிந்து வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வெறும் 4 லட்ச ரூபாய் அறிவித்துள்ளது போதுமானதன்று. ஆகவே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 இலட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும் துயர் துடைப்பு நிதியாக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பசமைலாரம் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதிப்பொருள் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 37 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ள கொடுந்துயர செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மாநில அரசுகளும், இந்திய ஒன்றிய அரசும் அவ்வப்போது தொழிற்சாலைகளில் முறையான ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் விபத்து நிகழ்ந்து பல தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து, அவர்களின் குடும்பத்தினர் நிற்கதியாய் நின்றபிறகு அவசர அவசரமாய் ஒப்புக்கு ஆய்வு மேற்கொள்வதினாலோ, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதினாலோ, மரணித்த ஒரு தொழிலாளர் உயிரைக்கூட மீட்டுத்தர முடியாது.
ஆகவே, தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்களைக் கடுமையாக்கி, விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்வதை ஒன்றிய - மாநில அரசுகள் உறுதிப்படுத்துவதின் மூலம் விபத்தினைத் தவிர்த்து, விலைமதிக்க முடியாத தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைச்சொல்லி, துயரில் பங்கெடுக்கின்றேன்.
படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
மருத்துவர்களின் ஈகம் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!
உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை உலகம் போற்றி வருகின்றது.
மருத்துவப் பெருமக்கள்தான் இவ்வுலகில் ஏற்பட்ட பல கொடுந்தொற்று நோய்களிலிருந்து கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர் என்பது மானுட சமூகத்தால் என்றென்றும் நன்றியுடன் போற்றத்தக்கதாகும்.
அவ்வகையில், இந்தியா முழுவதும் மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்ற இன்று ( சூலை 1), தங்கள் உடலையும், உயிரையும் துச்சமெனக் கருதி, மக்கள் உயிர்காக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அரும்பாடாற்றிவரும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அதேவேளையில், மக்களின் உயிர் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல மருத்துவப்பெருமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது, மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் கொடுஞ்செயலாகும்.
மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான ஒன்றிய அரசின் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பி பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@mkstalin
உயிர்காக்கும் உன்னதப் பணிபுரியும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#doctorsday2025 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி!
@CMOTamilnadu
@mkstalin
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை திருட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படவில்லை என்பதும், காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லாது வேறு இடத்தில் வைத்து கடுமையாக தாக்கி விசாரணை நடத்தினர் என்பதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
நகை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நபர்மீது
கொல்லப்படும் அளவிற்கு கொடுந்தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன பயங்கரவாதியா? என்று திராவிட மாடல் ஆட்சியின் முகத்தில் அறைந்ததுபோன்று மாண்பமை உயர்நீதிமன்றம் எழுப்புயுள்ள கேள்விக்கு தமிழ்நாடு அரசின் பதிலென்ன?
கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்டபோது கடுமையாக கண்டித்து கொதித்து கொந்தளித்த தற்போதைய முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, ஒரு திருட்டு புகாருக்காக, முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே விசாரணை என்ற பெயரில் தம்பி அஜித்குமாரை கொன்றது ஏன்? இரும்பு கம்பிகளை வைத்தும், மிளகாய் பொடி தூவியும் உயிர்போகும் அளவிற்கு தம்பி அஜித்குமாரை கடுமையாக தாக்கியது ஏன்? சாதாரண திருட்டு வழக்கிற்கு ஆறு தனிப்படை காவலர்களை வைத்து விசாரணை செய்தது ஏன்? காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லாமல், வேறிடத்தில் வைத்து இரண்டு நாட்கள் விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தம்பி அஜித்குமாரை நீதிபதி முன் நேர் நிற்க வைக்காதது எதனால்?
தம்பி அஜித்குமார் கொல்லப்பட்ட பிறகும் அவருடைய மரணத்தை குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் தாமதித்தது ஏன்? தம்பி அஜித்குமார் உடலில் தலை, கை, கால்கள் என 18 இடங்களில் கொடுங்காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்த பிறகும், இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் மீது இதுவரை திமுக அரசு கொலை வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
கொடிய போதை பொருள் விற்பன்னர்களும், கோடி கோடியாய் ஊழல் புரியும் திமுக அமைச்சர் பெருமக்களும்,
பொள்ளாச்சி முதல் அண்ணா பல்கலை வரை பாலியல் குற்றவாளிகள் பாதுகாப்பாக வாழும் அப்பாவின் ஆட்சியில்,
ஐயத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட
அப்பாவிகள் மட்டும் அடித்து துன்புறுத்தி கொல்லப்படுவது ஏன்? இதுதான் திமுக கட்டிக்காக்கும் சமுகநீதியா?
கொங்கு மண்டல தோட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளை தடுக்க திறனற்ற திமுக அரசின் காவல்துறை, அக்கொடுங்குற்றவாளிகள் மீது காட்டாத அடக்குமுறையும், கடைப்பிடிக்காத விதிமுறையும் ஏதுமறியா எளிய மக்கள் மீது காட்டுவது ஏன்? பல நூறு சவரன் நகைகள் காணாமலும் பதறாத காவல்துறையினர், பத்து சவரன் நகைக்காக வழக்குகூட பதியாத முறைகேடான விசாரணையில் உயிர்போகும் அளவுக்கு தாக்கியது எதனால்? எந்த சாரின் உத்தரவின் பேரில் இக்கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றது? எந்த சாரை மகிழ்விக்க தம்பி அஜித்குமாரின் உயிர் பறிக்கப்பட்டது? அவருடைய உறவினர்களிடம் பேரம் பேசி, உடலை வாங்கிச் செல்ல மிரட்டுவதும், உடலை விரைந்து புதைத்து ஆதாரத்தை அழிக்க காவல்துறையும், திமுக ஆட்சியாளர்களும் இத்தனை தீவிரம் காட்டியது எதனால்? எந்த சாரை தப்பவைக்க இத்தனை நாடகங்கள் அரங்கேறியது?
என்று அடுக்கடுக்காய் எழுப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மாண்புமிகு முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைதிகாப்பது ஏன்?
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில், தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின் கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் முதலமைச்சர், இதுவரை கடமை தவறிய காவலர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவதுதான் அப்பாவின் ஆட்சியின் அசைக்க முடியாத சாதனையாகும்.
(1/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் அன்புத்தம்பி சண்.மணிமாறன் அவர்களின் தந்தை ஐயா உ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு மூளையில் கட்டி காரணமாக அண்மையில் செய்யப்பட்ட உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு பகுதி மண்டை ஓடு நீக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் செய்தியறிந்துமிகுந்த வேதனையுற்றேன்.
அன்புத்தம்பி சண்.மணிமாறன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது தந்தையின் உயிர் காக்கும் மருத்துவச் செலவுகளுக்காக அவரது குடும்பத்தினர் கட்சி உறவுகளிடத்தில் உதவி கோரியுள்ளனர்.
தற்போது ஐயா சண்முகசுந்தரம் அவர்களுக்கு அகற்றப்பட்ட அந்த மண்டை ஓடு பகுதியைச் சரிசெய்ய Craniplasty என்ற முக்கிய அறுவை சிகிச்சைக்காக போதிய நிதியில்லாமல் அன்புத்தம்பி சண்.மணிமாறனும் அவரது குடும்பத்தினரும் அவதியுறுகின்றனர்.
உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு இதுவரையிலும் இலட்சக்கணக்கில் செலவாகியுள்ளது எனவும், மேற்கொண்டு 4 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால், உலகெங்கும் பரவிவாழும் தாய்த்தமிழ் உறவுகளும், பொருளாதார வலிமைப்படைத்த நல்ல உள்ளங்களும், தங்களால் இயன்ற தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தம்பி சண்.மணிமாறன் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி அவரது தந்தையின் உயிர்காக்க உதவிடுமாறு வேண்டுகிறேன்.
வங்கி கணக்கு விவரம்:
பெயர் : மணிமாறன் (Manimaran)
வங்கி கணக்கு எண் : 096101000017083
வங்கியின் பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( IOB Chakkarapalli Branch )
IFSC: IOBA0000961
G Pay UPI & தொடர்புக்கு: +91-9047903455 -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
திருபுவனம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது.
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தம்பி அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். காவல்துறை விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர்துடைப்பா?
திருட்டு புகாருக்காக தம்பி அஜித் அவர்களைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு காவல்துறை, தம்பி அஜித் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?
திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.
சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, தம்பி அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த தம்பி அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதோடு, தம்பி அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது,
குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வருங்காலங்களில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்தொழித்து ஒட்டுமொத்த நாட்டையும் மீட்கவியலா பெரும் பஞ்சத்தில் தள்ள வழிவகுக்கும் பாஜக அரசின் இக்கொடிய முடிவு சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
இந்தியப் பெருநாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக அரசு தற்போது கொண்டுவர முடிவு செய்துள்ள வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் கொள்கை முடிவானது முதன் முதலாக காங்கிரசு தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டதாகும். கடும் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் போட்ட அக்கொடுந்திட்டத்தை தற்போது பாஜக மீண்டும் கொண்டுவர முடிவு செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
வேளாண்மைக்கு நிலத்தடி நீர் எடுக்க மின்சாரம் இலவசம்; ஆனால் எடுக்கப்படும் நீருக்கு வரி என்பது முட்டாள்தனமில்லையா? நிலத்திற்கு வரி,
விளைவிக்கும் பயிருக்கு வரி, விளைபொருட்களை எடுத்துச்செல்ல சாலை வரி, சுங்க வரி, எரிபொருள் வரி, அதனை விற்பதற்கு விற்பனை வரி, போதாக்குறைக்கு ஜிஎஸ்டி வரி என்று வரிக்கு மேல் வரி செலுத்தி வரியால் விவசாயிகள் வயிறும், வாழ்வும் எரிந்து இருளாகி போயுள்ளது.
ஓரவஞ்சனையாக செயல்பட்டு இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரசு - பாஜக அரசுகள் தமிழ்நாட்டு நதிநீர் உரிமையை தட்டிப்பறித்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கியது போதாதா? முப்போகம் விளைந்த தமிழர் நிலத்தில், நிலத்தடி நீர் மூலம் ஒருபோகம் விளைவித்து வரும், தமிழக விவசாயிகளின் வயிற்றிலும் மோடி அரசு அடிக்க முயல்வது நியாயம்தானா?
நிலமும், நீரும், காற்றும், ஒளியும், மழையும், மலையும், கடலும், காடும் பாஜக ஆட்சியில் சட்டம் போட்டு உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டம் அல்ல; மாய, மந்திரங்கள் சொல்லி பெற்ற வரமும் அல்ல; அவை இயற்கை அன்னை அனைத்து உயிர்களுக்கும் தந்த அருட்கொடைகள்! நீருக்கு வரி, காற்றுக்கு வரி, சூரிய ஒளிக்கு வரி என்று கண்ணில் கண்ட எல்லாவற்றும் வரி என்றால் அதில் எங்கே இருக்கிறது அறநெறி? ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை (நிஷிஜி) வரியால் பாஜக அரசு நாட்டு மக்களை வாட்டி வதைப்பது போதாதா?
நின்றால், நடந்தால், நாட்டு மக்களுக்கு வரி; எதை விற்றாலும் வரி; எதை வாங்கினாலும் வரி; ஆனால், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு பறக்கும் விமானம் முதல் நாடாளுமன்ற உணவகத்தில் உண்ணும் உணவு வரை அனைத்திற்கும் சலுகை; இது யாருக்கான நாடு?
ஏற்கனவே இடுபொருட்கள், விதை, உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளின் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, புழு தாக்கம், பருவகால மாற்றம் என பல்வேறு தடைகள் சூழ்ந்து, வேளாண்மை செய்வதே விவசாயிகளுக்கு தற்காலத்தில் பெரும்பாடாகியுள்ளது. அத்தனை துன்பங்களையும் தாண்டி வேளாண்மை செய்து பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் பெரும்பான்மையான விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர். அதோடு, ஒன்றிய - மாநில அரசுகள் தங்கள் பங்கிற்கு, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்தும் வேளாண்மையை அழித்து வருகின்றது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நெடுங்காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்து, போராடி வரும் நிலையில், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத இந்திய ஒன்றிய அரசு நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது வேளாண்மையை முற்றாக அழிப்பதற்கே வழிவகுக்கும்.
வேளாண்மையை முற்று முழுதாக அழித்தொழித்து, விளைநிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றி, அதனை கார்ப்பரேட் கைகளில் ஒப்படைத்து நாட்டு மக்களை உணவிற்கு கையேந்த வைப்பதற்கான சூழ்ச்சியே நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் கொடுந்திட்டமாகும்.
(1/2) -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி காட்டுப்பிள்ளையார் கோயில், ஐயப்பன் நகர்
முன்னாள் செயலாளர் அன்புத்தம்பி
நா.மணிவண்ணன் அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்புத்தம்பி நா.மணிவண்ணன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும்
அவரது நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தம்பி நா.மணிவண்ணன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா?
ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி - சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது.
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின் படி 1995-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும், பத்திற்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு காரணமாக அவர் அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், வழக்கம்போல இலங்கை இனவெறி அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. செம்மணி மனித புதைகுழிகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் ஒரு சிலரின் உடல்களே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அதற்கான விசாரணையும்கூட முழுமையாக நிறைவடையவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள இனவெறி ராணுவ அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படவுமில்லை. அவ்வப்போது புதைகுழிகள் தோண்டப்படுவதும், விசாரணை நடைபெறுவதும், சில நாட்கள் ஊடகங்கள் அவை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு அவ்வழக்குகளும், விசாரணைகளும் நீர்த்துப்போவதும் வழக்கமான ஒன்றாகிப்போனதுதான் தமிழினத்திற்கு நேர்ந்த பேரவலம்.
கொல்லப்பட்டவர்கள் யார், யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? எப்போது கொல்லப்பட்டார்கள்? எப்படிக் கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்று எந்த விசாரணையும் இல்லாமல், எந்த நீதியும் கிடைக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் இனத்தில் பிறந்த ஒற்றைக்காரணத்திற்காகக் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் உடல்கள், செம்மணி புதைகுழிகளில் இன்றளவும் புதைந்து கிடக்கின்றன. மரிக்கும் முன் எழுப்பிய தங்களது இறுதி மரண ஓலங்களுக்கான நீதியானது, தமிழனாய் மரணித்த தங்களின் இறுதி பார்வைக்கான நியாயமானது, புதைக்கப்பட்ட தங்கள் எலும்புகள் முழுவதுமாய் அரிக்கும் முன்பாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் மண்ணுக்கடியில், ஈழத்தாய்மடியில் அவ்வுடல்கள் காத்து கிடக்கின்றன. செம்மணி மட்டுமல்ல ஈழத்தாயகம் முழுவதுமே சிங்கள இனவெறி ராணுவத்தாலும், இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதத்தாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் நிரம்பியுள்ளன.
இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான, பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மையோர் இப்படி சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும்.
2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் கண் முன்னே 2 இலட்சம் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ, உரிய நீதியையோ பெற முடியாமல், பன்னாட்டு அவைகளில் முட்டி மோதி முற்றாகச் சோர்ந்து போயுள்ளது தமிழினம். ஈழத்தாயக விடுதலைத்தான் பெறமுடியவில்லை குறைந்தபட்சம் இனப்படுகொலை செய்யப்பட்ட நீதியைக்கூடத் தமிழினத்தால் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம். 2 இலட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையையே பெற முடியாமல், அரசியல் அதிகாரம் ஏதுமற்றுத் தவித்துப்போயுள்ள தமிழினம், யாருக்கும் தெரியாமல் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கான நீதியை எப்படிப் பெறப்போகிறோம்? என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து நிற்கும் நிலைதான் மற்றுமொரு பெருங்கொடுமையாகும்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணம் அருகே அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது உலகத் தமிழர்களிடம் மிகப்பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஈழத்தாயக மக்கள் முன்னெடுத்த 'அணையா தீபம்' தொடர்ப்போராட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளை நேரில் கண்டு விசாரணை மேற்கொண்டது தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது.
செம்மணி மனித புதைகுழிகள் என்பது இனவெறி இலங்கை அரசு மேற்கொண்ட கடலளவு தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே; செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் மீது இனவெறி இலங்கை அரசு நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை உலக மானுட சமூகம் அறிய முடியும். தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போட்டு 2009 இல் 2 இலட்சம் தமிழ் மக்களைத் தம்மால் நேரடியாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான சுதந்திரமான நீதி விசாரணையையே நடைபெறவிடாமல் முற்று முழுதாக முடக்கியுள்ள இனவெறி இலங்கை அரசு, எவ்வித குற்றச்சாட்டும் இன்றி, எவ்வித விசாரணையும் இன்றி, எவ்வித காரணங்களும் இன்றி, எவ்வித ஆதாரங்களும் இன்றி, பல்வேறு காலகட்டங்களில், மறைமுகமாகக் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் குறித்தும், அப்படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் குறித்தும் முறையான நீதி விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியோ, ஒத்துழைப்போ வழங்கப்போவதில்லை.
ஆகவே, செம்மணி உட்பட ஈழத்தாயகத்தில் மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தத் தேவையான பொறிமுறையை உருவாக்கி, புதைகுழிகளை அகழாய்வு செய்து, இனப்படுகொலை குறித்த விசாரணையை அறிவியல் பூர்வமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென்று ஐ.நா.அவையின் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
அதன் மூலம் மட்டுமே இலங்கை அரசின் சிங்கள இனவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது என்பதையும், 2009 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடர்ச்சியாக, மிகக்கொடூரமாக ஈவு இரக்கமின்றி தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்வதற்கான மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாக அவை அமையும்.
தமிழர்களுக்கான தனித்த இறையாண்மை கொண்ட தமிழீழத் தாயகம் அமைவது ஒன்றே நிலைத்த, சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவும், ஆதரவளிக்கவும் செம்மணி புதைகுழிகள் குறித்த விசாரணை மிக முக்கிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித புதைகுழிகள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!
ஈழத்தாயகத்தில் நடைபெறும் நீதிக்கான தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கின்றோம்!
எங்களைக் கொன்று மண்ணில் புதைத்தாய்! - எங்கள் மண்ணைக் கொண்டுபோய் எங்கே புதைப்பாய்?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - நாமக்கல் மாவட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை க.கனிமொழி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ம.கணேசமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை க.கனிமொழி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ம.கணேசமூர்த்தி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி - திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தென்னூர் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி நிசார் அவர்களின் மாமியாரும், அன்புத்தங்கை நி.சர்மிளா பேகம் அவர்களின் தாயாரும் அம்மா ஜான் பேகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை நி.சர்மிளா பேகம் , தம்பிநிசார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஜான் பேகம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் இரு ஆட்சியாண்டுகளான 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து நிதியாண்டுகள் காலத்தில் சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக தமிழுக்கு ஓர் ஆண்டிற்கு சராசரியாக வெறும் 13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
இன்று நேற்றல்ல பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து வருவதும், அதற்கு தொடர்ச்சியாக தமிழ்நாடு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்வதும் வழமையானது என்றாலும் மோடி அரசு அதனைப் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் பெருங்கொடுமையாகும்.
பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை வாழ்விக்க முயல்வதன் மூலம், இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகச்சந்தையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் அவ்வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவையாவும் இந்துத்துவாவுக்குக் கிளைபரப்பவும், இந்தியாவைக் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமேயான நாடாக மாற்றவும் உதவுமே ஒழிய, இந்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் துளியளவும் நன்மை பயக்காது.
பத்தாயிரம் மக்கள் கூட பேசாத ஒரு மொழியை வளர்த்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது? இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் இணைந்து வாழக்கூடிய ஒன்றியம் என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மக்கள் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என்பதற்காக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று ஒவ்வொன்றாக ஒற்றைமயப்படுத்தி திணிக்கின்ற கொடுங்கோன்மை நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை. வடமொழி சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதியை அள்ளிக்கொடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, 50000 ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்மொழிக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிப்பதில்லையே ஏன்? அதிகளவில் வரி பங்களிப்பு செய்யும் தமிழ்நாட்டிற்கு இந்திய ஒன்றிய அரசு தரும் தண்டணை இதுவா?
இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்று இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடியே கூறுகிறார். உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்கிறார். ஆனால் இதுவரை இந்திய அரசு எதுவொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை தந்து அங்கீகாரம் அளித்துள்ளது? இது உதட்டில் தேன் தடவி, உணவில் விசம் தரும் கொடுஞ்செயலாகும்.
அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி உச்சநீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் ஒன்றிய அரசின் செயல் மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும். இந்த நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. உண்மையில் ஒரு மொழியைத் திணிப்பது, ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள். பல இனங்கள், பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் என்ற வரலாற்றுப் பேருண்மையை எப்போது உணரப்போகிறார்கள்?
ஆகவே, பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து, ஒரு மொழியை வளர்க்க, மற்ற மொழிகளை அழிக்க முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து, இனியேனும் அனைத்து செம்மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்மொழிக்கு கடந்த நிதியாண்டுகளில் குறைத்து வழங்கப்பட்ட நிதியையும் சேர்த்து ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய தம்பி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் நிகழ்வுக்கான அழைப்பிதழை அவரது இணையர் வழக்கறிஞர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் இன்று (26-06-2025) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து வழங்கியபோது,
-
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, ஓவரூர் ஊராட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்புத்தம்பிகள் அருள்சீலன், ஜான் பீட்டர் ஆகியோரது தந்தையார் அப்பா பிச்சையன் (எ) அந்தோணிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா பிச்சையன் (எ) அந்தோணிசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்! -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து
வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகின்ற ஆனி திங்கள் 20 ஆம் நாள் சூலை 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை
மாலை சரியாக 05 மணிக்கு
கடலூர் மாவட்டம்,
காட்டுமன்னார்கோயில்
(தாத்தா இளையபெருமாள் சிலை அருகில்)
நம்முடைய தாத்தாக்கள்
தமிழ்த்தேசிய அரசியலின் பேரொளி
தாத்தா கலியபெருமாள்
சமூக நீதிப் பெருங்காவலர்
தாத்தா ஆனைமுத்து
இருபெரும் ஆளுமைகளின் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
தமிழ்ப் பேரினத்தின் பெரியார்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற சூலை 10ஆம் தேதி மதுரையில் விராதனூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
ஆடு-மாடுகளின் மாநாடு!
'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது.
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்!
ஆடும் மாடும் நம் செல்வங்கள்!
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று நமது வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய மறைமொழியில்,
கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் மாடும் நம் செல்வங்கள் என்பதை வலியுறுத்தி பாடுகிறார்.
அந்த நம் செல்வங்களைப் பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம்!
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; ஆடும் மாடும் அற்ப உயிர்கள் அல்ல; நம் அருமைச் செல்வங்கள்!
அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்!
மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு
என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்!
நன்றி வணக்கம்!This media couldn't be displayed. See it on the original post. -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
5 ஆண்டுகள் கடந்தும் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏன்? நீதி வேண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயா ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏமாற்றமும், மனவேதனையும் அளிக்கிறது. விசாரணையை விரைந்து முடிக்காமல் இந்திய ஒன்றிய அரசின் குற்றப்புலனாய்வுத்துறை தொடர்ந்து காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 22.06.2020 ஆம் நாள் அப்படுகொலைகள் தமிழ்நாடு காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் சி.பி.சி.ஐ.டி முதலில் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், பின்பு இந்திய ஒன்றிய அரசின் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இப்படுகொலைகள் தொடர்பாக அன்றைய சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 105 சாட்சிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. கால அவகாசம் கோரியதன் விளைவாக, படுகொலை நிகழ்ந்து ஐந்தாண்டுகளாகியும் இதுவரை வழக்கு விசாரணை முடிவடையவில்லை.
அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டு நாட்டையே உலுக்கிய மிகக்கொடூர படுகொலை நிகழ்வான சாத்தான்குளம் படுகொலைகளின் வழக்கு விசாரணையே இத்தனை ஆண்டுகள் காலதாமதம் எனில், வெளியே தெரியாத சாமானியர்களின் கொலை வழக்குகளில் நீதி கிடைக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
கொலை செய்யப்பட்டவர்கள் யார், எங்கே கொலை செய்யப்பட்டார்கள், எப்படி கொலை செய்யப்பட்டார்கள், ஏன் கொலை செய்யப்பட்டார்கள், கொலை செய்தவர்கள் யார் என்ற அனைத்தும் தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தும், அதற்கான சாட்சிகள் அனைத்துமிருந்தும் ஐந்தாண்டுகள் ஆகியும் விசாரணை நிறைவடையாதது ஏன்? ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ கால அவகாசம் கேட்பதும், அதை மாண்பமை நீதிமன்றம் அனுமதிப்பதும் ஏன்? யாரைக் காப்பாற்ற, யாருடைய உத்தரவின் பேரில் சிபிஐ இப்படி காலதாமதம் செய்கிறது?
பொள்ளாச்சி பாலியல் வழக்கு முடிய 5 ஆண்டுகள், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலை வழக்கில் 5 ஆண்டுகள் என நாடறிந்த வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகின்றது எனில், உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யப்பட்டு இறுதி தீர்ப்பு கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
தாமதித்து வழங்கப்படும் நீதி அநீதிக்கு சமம் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், நீதிமான்களும் எப்போது உணரப்போகிறார்கள்? குற்றவாளிகளே மரணித்துபோகும் வரை, குற்ற வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பது என்பது இந்த நாட்டில் மட்டுமே நிகழும் மிகப்பெரிய சாபக்கேடாகும்.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத்தந்து ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உரிய நீதியை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
@EPSTamilNadu @AIADMKOfficial -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
போற்றுதற்கும், வணக்கத்திற்குரிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அண்ணன் ஜான்பாண்டியன் அவர்கள் பெரியார் குறித்து இன்று கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன்.
சரியான நேரத்தில் சரியான கருத்துகளைப் பதிவுசெய்த அன்பிற்கினிய அண்ணன் அவர்களுக்கு என்னுடைய அன்பும், நன்றியும்!
@JohnPandianTMMK -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்புத்தம்பி மேத்யூ அருளானந்து தயாரிப்பில், அன்புத்தம்பி சீனு ராமசாமி இயக்கத்தில், அன்புத்தம்பிகள் அறிமுக நாயகன் ஏகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடித்துள்ள 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தினைச் சிறப்புக்காட்சியில் கண்டுகளித்தேன்.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் என தமிழ் மக்களின் மண் சார்ந்த வாழ்வியலையே காலத்தால் அழியாத திரைக்காவியங்களாகப் படைத்தளிக்கும் அன்புத்தம்பி சீனு ராமசாமி அவர்கள், அண்ணன்-தங்கை பாசம் என்னும் உணர்வுப்பூர்வமான உறவின் மேன்மையை 'கோழிப்பண்ணை செல்லதுரை' எனும் உள்ளத்தை உருக்கும் திரைப்படத்தின் மூலம் நம் கண்முன் காட்சிகளால் வெளிப்படுத்தியுள்ளார்.
அன்பும் பாசமும் குறுகி, உறவுகள் அருகி, குடும்பங்கள் என்பதே தனித்தனி தீவுகளாக மாறிவரும் தற்காலச் சூழலில், 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தினைக் காண்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் உறுதியாக ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் விதையினை இப்படம் விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தினைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்.
அறிமுக நாயகன் என அறியாத அளவிற்கு அன்புத்தம்பி ஏகன் தன்னுடைய திறமையான நடிப்பாற்றலால் கதையின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். அன்புத்தம்பி யோகி பாபு வழக்கத்தைவிட சற்று மாறுதலான கதாபாத்திரத்தில் ஆகச்சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
கதையின் நாயகியாக வரும் பிரிகிடா, நாயகனின் தங்கையாக வரும் சத்யதேவி ஆகியோர் தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர்.
அண்ணன் பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், 'குட்டி புலி' தினேஷ், ரியாஸ், அன்புமகள் மானஸ்வி கொட்டாச்சி உள்ளிட்ட அனைவருமே ஏற்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தம்பி அசோக்ராஜின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி ஸ்ரீகர் பிரசாத்தின் அருமையான படத்தொகுப்பும், மனதை வருடும் என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்..!
செப்டம்பர் 20 அன்று வெளியாகவிருக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
@seenuramasamy #kozhipannaichelladurai @arulanandhu_d @iYogibabu @ActorAegan
@NRRaghunanthan @Brigidasagaoffl @vchproduction -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் #மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
‘மெய்யழகன்’ என்று திரைப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் (TEASER) என்று கூறிக்கொண்டிருக்க அதனை 'கிளர்வோட்டம்' என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்!
படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு.
#கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
தமிழில் மட்டும்தான் இப்படியான பொருள்பொதிந்த கலைச்சொற்களை உருவாக்க முடியும். மற்றமொழிகளில் இப்படியான கலைச்சொற்களை எளிதில் உருவாக்கிவிட முடியாது. பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால், பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லதனால் தான் தமிழ் உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படுகிறது.
இதற்காகவாவது இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டுமென நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றேன்!
@Suriya_offl | #jyotika | @Karthi_Offl | @thearvindswami | #premkumar | #மெய்யழகன்கிளர்வோட்டம் -
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்!
எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்!
திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
@maiamofficial @ikamalhaasan







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































