பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், ஜெயா தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் பணியாற்றியவருமான அன்புச் சகோதரர் திரு. ஸ்ரீகவி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனையும், வருத்தமும் அடைந்தேன்.
தனது கம்பீரமான குரல்வளத்தால் எண்ணற்ற பக்தி நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராகப் பணியாற்றி, அவற்றைச் சிறப்புறத் தொகுத்து வழங்கிய பெருமைக்குரியவர். ஜெயா தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அருள் நேரம்’ ஆன்மீக நிகழ்ச்சியை எழுதி, இயக்கி, தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். கலைமாமணி விருது பெற்ற திரு. ஸ்ரீகவி அவர்களின் மறைவு கலை மற்றும் ஆன்மீக உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது தனித்துவமான குரலும், ஆன்மீகப் பணிகளும் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
அன்புச் சகோதரர் திரு. ஸ்ரீகவி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆன்மீகச் சொற்பொழிவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
V. K. Sasikala
Sasikala Natarajan, born as Vivekanandan Krishnaveni Sasikala on 18 August 1954, is an Indian politician who was briefly the Chief Minister-elect of Tamil Nadu in February 2017. She was a close confidante of J. Jayalalithaa, the late chief minister of Tamil Nadu, who headed the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) from 1989 until her death in 2016. She is also the aunt of AMMK general secretary T. T. V. Dhinakaran. She is noted for her short-lived cult of personality in Tamil Nadu as a successor of Jayalalithaa before being convicted by the Supreme Court of India for money laundering. Her cadres revered her as their "Puratchi Thaai Chinnamma" (Revolutionary Small Mother). More on Wikipedia
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தந்தி தொலைக்காட்சி தனது 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி, எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் சார்ந்த பிரச்னைகள் மற்றும் நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் வழங்கி, அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்று, ஊடகத்துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து சிறப்புடன் செயல்பட்டு வரும் தந்தி தொலைக்காட்சி, தொடர்ந்து அதே அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் மக்கள் பணியாற்றிட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
தந்தி தொலைக்காட்சி மென்மேலும் வளர்ச்சியடைந்து, ஊடகத்துறையில் பல்வேறு உயரிய சாதனைகளைப் படைத்து, மேலும் பல ஆண்டுகள் சிறப்புடன் தொடர்ந்து பயணிக்கவும், இந்நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி எனப் பல்வேறு ஊடகத் தளங்களில் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பான முறையில் ஊடகப் பணியாற்றி வரும் அன்புச் சகோதரர் திரு. துரை கருணா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் மீதும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட திரு. துரை கருணா அவர்கள், திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றளவும் தனது விரல் நுனியில் வைத்திருக்கும் ஆற்றலும், ஆழ்ந்த அனுபவமும் கொண்டவர். புரட்சித்தலைவர் அவர்களின் மீது கொண்ட அளவற்ற பாசத்தின் காரணமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக அலுவலகத்திலும் திறம்படப் பணியாற்றியதை இந்நேரத்தில் பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் இயக்கம் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணித்திட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், கழகம் மீண்டும் வலிமைமிக்க பேரியக்கமாக மலர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சகோதரர் திரு.துரை கருணா அவர்களது உயரிய எண்ணம் ஈடேற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புச் சகோதரர் திரு.துரை கருணா அவர்களின் ஊடகப் பணி மேலும் பல ஆண்டுகள் சிறப்புடனும், வெற்றியுடனும் தொடரட்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது – தீபாவளி அன்று ஒரே நாளில் 12 கொலைகள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வரும்வேளையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 12 கொலைகள் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன. இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளதையே இச்சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
குறிப்பாக, தேனி மாவட்டம் சமதர்மபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் தாக்கப்பட்டதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை மிகவும் கண்டனத்திற்குரியது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற கொலை மற்றும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஆட்சிகள் மாறினாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அவலநிலை நீடிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டது. மேலும், அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்நிலையங்களில் எந்த கட்சியினரின் தலையீடும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் தன் சொந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் கூட காவல் நிலையங்களில் தலையிட அனுமதித்ததில்லை. காவல்துறையினர் சுதந்திரமாக தங்களது பணிகளை மேற்கொண்டனர். அம்மா அவர்களதுஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. இதனை இன்றைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாத வகையில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தீபாவளிப் பண்டிகை நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் இதர குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் இந்நன்னாளில் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தித்திக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள், இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்,சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.
இந்த மகிழ்ச்சிகரமான நாளில் அனைத்து மக்களும், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுக்கு பரிசளித்தும், பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக சிந்தை தளத்தில் செய்திகள் வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரிலேயே ஊழல் நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இத்தகைய ஊழலுக்கு பின் யார் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?, யார் இதற்கு காரணம்? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
கோவை மாவட்டத்தில் சமீபத்தில்தான் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு சுமார் 20 கோடி அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதாவது இல்லாத பதிப்பகத்தில் இருந்து நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய விஞ்ஞான ஊழலுக்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் கண்டறிந்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
கோவை பெரியார் அறிவுலக நூல்கள் வாங்கியதில் அரங்கேறியுள்ள ஊழலுக்கு காரணம் திமுக என தவெகவினரும், தவெக என திமுகவினரும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். மொத்தத்தில் ஊழல் நடைபெற்று இருப்பது நிரூபணம் ஆகிவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் ஒளிவு, மறைவு இல்லாத வெளிப்படையான விசாரணை மேற்கொண்டு உண்மையான ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் சின்னப்பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த கழகத் தொண்டர் திரு.ஏ.ஐ .ஜமால் சாஹிப் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.ஏ.ஐ.ஜமால் சாஹிப் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணக் கொள்ளையை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தீபாவளி பண்டிகையைத் தங்களது உறவினர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் தமிழக மக்களுக்கு, இந்தக் கட்டண உயர்வு தாங்க முடியாத கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தி பயணக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்வதற்கு ரூ.1,200 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.4,000-க்கும் அதிகமாகவும், திருநெல்வேலி செல்வதற்கு ரூ.1,100 ஆக இருந்த கட்டணம் ரூ.3,699 ஆகவும், திருச்சி செல்வதற்கு ரூ.900 ஆக இருந்த கட்டணம் ரூ.2,899 ஆகவும், கோவை செல்வதற்கு ரூ.1,500 ஆக இருந்த கட்டணம் ரூ.3,650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆம்னி பேருந்து கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரோ, ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டண உயர்வைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேட்டி அளித்து வருகிறார். பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பண்டிகைக்கு முன்பே ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவதில் என்ன பயன்?
தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகைக் காலங்களில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்குத் தேவையான அளவில் அரசு பேருந்துகளை தமிழக அரசு இயக்க வேண்டும். கடந்த திமுக தலைமையிலான ஆட்சியில் போதுமான அளவிற்குப் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை. தற்போது தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதாகக் கூறும் புதிய அரசு, பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொண்டு போதுமான எண்ணிக்கையில் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவையை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் தனியார் ஆம்னி பேருந்துகளை மட்டுமே பொதுமக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலையைத் தவிர்ப்பதுடன், கட்டண உயர்வையும் கட்டுப்படுத்த முடியும்.
எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான அளவில் கூடுதல் அரசுப் பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என்றும், தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வசூலிக்கும் அளவுக்கு அதிகமான கட்டணங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தி, பொதுமக்களிடம் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நியூஸ் டுடே மற்றும் மாலை முரசு தொலைக்காட்சி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள பிரபல பத்திரிகையாளர் திரு.பரத்குமார் அவர்கள் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பத்திரிகை துறையில் 26 ஆண்டுகளாக பணியாற்றியுள்ள நிலையில் மாலைமுரசு தொலைக்காட்சியில் நெறியாளராகவும் தனது சிறந்த பங்களிப்பினை அளித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு.பரத்குமார் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தவெக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கண்டிப்பாக பாதிக்கும். ஏற்கனவே அரிசி,பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை தாங்கமுடியாத அளவுக்கு ஏறிக்கொண்டிருக்கும் நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்துவது மேலும் அவர்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றுவதாகிவிடும்.
அதாவது ஆவினில் இன்றுமுதல் 200 மி.லி மோர் பாக்கெட்டின் விலை ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி அளவில் கிடைக்கும் 10 வகையான மில்க் ஷேக்குகளின் விலையும் ரூ.30-லிருந்து ரூ.35-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ தயிரின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராம் இனிப்பு பாக்கெட்டுகளின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு லிட்டர் நெய் பாக்கெட்டின் விலை ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய விலை உயர்வு சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த திமுக ஆட்சியில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாதா மாதம் உயர்த்திக்கொண்டே போனது. தற்போது புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட தவெக அரசும் ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி ஏழை எளிய சாமானியர்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வாழ வழியின்றி தவிக்கும் ஏழை எளிய சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட ஆவின் பால் பொருட்களின் விலையை உடனே திரும்ப பெற வேண்டும் என தவெக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தேனி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழக காவல்துறை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதைத்தான் காட்டுகிறது. இது போன்ற சம்பவங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. தமிழக காவல்துறை சிறையில் இருக்கும் கைதிகளையே பாதுகாக்க முடியவில்லையென்றால், வெளியில் இருக்கும் குற்றவாளிகளை தப்பித்துவிடாமல் எவ்வாறு பிடிக்க போகிறார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் குறைந்துவிட்டது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதிலும் தோல்வியடைந்துவிட்டது. செஞ்சியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சிறுமி மாயமாகி இன்றோடு 17 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் காவல்துறை கண்டுபிடிக்க முடியாமல் இன்றுவரை திணறிக்கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் குற்றச்செயல்கள் நடைபெறாதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவைத்தார்கள். ஆனால் அதன்பிறகு ஆட்சிகள் பல மாறினாலும் யாராலும் சட்டம் ஒழுங்கை காப்பாற்றமுடியவில்லை. தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலநிலை தான் இன்றுவரை உள்ளது. எனவே, தேனி சிறைச்சாலையில் இருந்து தப்பியவர்களை விரைவில் கண்டுபிடித்து மீண்டும் சிறையில் அடைக்கவேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல சமையல் கலைஞரும், “செஃப் தாமு” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட முனைவர் கே.தாமோதரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
சமையல் கலையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள செஃப் தாமு அவர்கள், 2010-ம் ஆண்டில், 24மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில், 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்த பெருமைக்குரியவர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் செஃப் தாமு அவர்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டதையும் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் செஃப் தாமு அவர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்ட உணவுகளின் தரத்தை மேம்படுத்தும் பணிகளிலும், அரசு நிறுவன சமையல்காரர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றியதை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரர், செஃப் தாமு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
துளசிமதி முருகேசன் அவர்கள், ஏற்கெனவே இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மகளிர் இரட்டையர் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. இதன் மூலம் ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது பெரும் பாராட்டுக்குரியது. தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று, இந்திய நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
அதேபோன்று, தடகளப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், பேட்மிண்டன் போட்டியின் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ள தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ அவர்களுக்கும், ஆண்கள் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ள தமிழக வீரர் நவீன் சிவக்குமார் அவர்களுக்கும், மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 114 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இத்தகைய மகத்தான வெற்றிகளை நாட்டிற்குப் பரிசளித்து வரும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்திட வேண்டுமென எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியின் 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று, இந்திய நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
அதேபோன்று, பேட்மிண்டன் விளையாட்டின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், இந்த வெற்றிக்குப் பக்கபலமாக விளங்கிய தமிழக வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வீரர் சிவராஜன் சோலைமலை அவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து, நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை 12 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 5-ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ள நமது இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்து, நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட வேண்டும் என எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம், இந்திய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில் நின்று விளையாடும் பிரிவில் முதன்முறையாகப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள பேபி சஹானா ரவி அவர்கள், மென்மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 9 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 6-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள நமது வீரர், வீராங்கனைகள் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து, நாட்டிற்குப் பெருமை சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நினைத்த காரியங்கள் அனைத்தும் எண்ணியபடி நிறைவேறிட, அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி”நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களால் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்கள், தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
ஜாதிமதங்களை கடந்து "செய்யும் தொழிலே தெய்வம்" என்னும் தாரக மந்திரத்தை மனதில் வைத்து, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி சந்தனம், குங்குமமிட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி ஆயுத பூஜை திருநாளினை அனைவரும் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அதேபோன்று, மகிஷாசுரன் என்னும் கொடிய அரக்கனை அன்னை பராசக்தி அழித்து வெற்றி வாகை சூடிய நாள் விஜயதசமி திருநாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. மேலும், விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு, நற்காரியங்களைத் தொடங்கிடும் வெற்றித் திருநாளாகவும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட எனது இனிய ஆயுதபூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தமிழக மக்கள் அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ் திரைப்பட பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் திரு.தேவா அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். உழைக்கும் மக்களின் இசையாக கருதும் கானாவை திரைப்படங்களில் அதற்கேற்ப மொழி நடைகளில் கொண்டு வந்து தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கச்செய்தவர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் திரு.தேவா அவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அவர் மெட்டமைத்து பாடிய பிரச்சார பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது . புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திரு.தேவா அவர்கள் நியமிக்கப்பட்டதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரர், திரு. தேவா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்து தற்போது 54ஆண்டுகளை நிறைவு செய்து, 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1972ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களால் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் அவர்கள். புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்கள். இதில் எனது பங்கும் அடங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் நேசித்த நம் இருபெரும் தலைவர்கள் தான்,நான் இந்த இயக்கத்தை சுவாசிக்க காரணமாக அமைந்தவர்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் பல்வேறு சறுக்கல்களையும், தோல்விகளையும் தான் இன்று வரை சந்தித்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்துவிட்டது. இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி இயக்கத்தை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அதே சமயம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றைக்கும் நம்பிக்கையோடும், உறுதியோடும்தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும். பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது? என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இது நாள் வரை “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.
“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இந்த இயக்கம்,ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்ய தமிழகஅரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மின் தேவையை சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 7ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் இவ்வளவு விலைக்கு மின்சாரம் வாங்குவது இதுவே முதல்முறை.
இதுவரை அதிகபட்சமாக சுமார் ரூ.22முதல் ரூ.30வரை கடந்த செப்டம்பர் மாதத்தில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்தால் மின்வாரியத்துக்கு கூடுதல்செலவு ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் இன்றைக்கு எல்லா இடங்களிலும் 4முதல்5 மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதும், ஆங்காங்கே மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் தலைமை செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டு பணிகள் முடங்கிபோகின்ற அவலநிலை நிலவுகிறது.
தமிழ்நாடு 35ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கும் இதேகாலக்கட்டத்தில், ஆந்திரபிரதேசம் 16ரூபாய் முதல் 20ரூபாய் என்கிற விகிதத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழக மின்சார வாரியம் அதன் நடவடிக்கைகளை சரிவர செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்கவும், கடுமையாக நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்கவும், அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை மற்றும் அதன் செலவின விவரங்களையும் பார்க்க வேண்டியிருப்பதால் இதில் மிகுந்தகவனமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியமாகிறது. இம்மாத மின்தேவைகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப மின்சாரக் கொள்முதல் நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது. மேலும், 2001-2006ஆம் ஆண்டு ஆட்சிகாலத்திலேயே வல்லூரில் 1,500மெகாவாட், தூத்துக்குடியில் 1,000மெகாவாட், வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600மெகாவாட், சிறுபுனல் மின்திட்டங்கள் மூலம் 36மெகாவாட் என மொத்தம் 3,136மெகாவாட் அளவிற்கான மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால்,அதன்பிறகு அமைந்த திமுக அரசு தங்களது சுயநலத்துக்காக இத்திட்டங்களை விரைந்து முடிக்கவில்லை. அதிக விலையில் மின்சாரத்தை தனியாரிடமிருந்தும், மின்பரிமாற்றத்திலிருந்தும் வாங்குவதற்காகவே இத்திட்டங்கள் எல்லாம் தாமதப்படுத்தப்பட்டன. 2011ஆம்ஆண்டு மீண்டும் அம்மா ஆட்சி அமைந்தபின் சுமார் 3,600மெகாவாட் அளவிலான புதிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கியதோடு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வரவேண்டும் என்றால், அதற்கான மின்வழித்தடம் வேண்டும். வடமாநிலங்களிலுள்ள மின்சாரத்தை இங்கே பெறுவதற்கு தேவையான மின்வழித்தடங்கள் அமைத்திட அன்றைய அம்மாஅரசு வலியுறுத்தியதன் காரணமாகவே மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரிலிருந்து திருவலம் இடையேயும் மற்றும் நரேந்திரா-கோலாப்பூர் இடையே 765கிலோவோல்ட் திறன்கொண்ட மின்வழித்தடங்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நாம் மின்சாரம் பெறமுடிகிறது.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின்இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சக்கட்ட மின்தேவையை நிறைவுசெய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின்நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக்கருத்தில் கொண்டு, 2016ஆம்ஆண்டு தமிழ்நாட்டில் ரூ.1,033 கோடியே 32லட்சத்து 44ஆயிரம் மதிப்பீட்டில் 35துணைமின்நிலையங்களை அம்மா அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
2016ஆம்ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் வீடுகளுக்கான மின்சாரம் 100யூனிட் இலவசம் எனும் திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்தார். இதன்மூலம் தமிழகத்தில் அன்றைக்கு இருந்த 1கோடியே 91லட்சம் வீட்டு மின் நுகர்வோர்கள் பயனடைந்தனர்.
எனவே, இன்றைய ஆட்சியாளர்கள் புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை நன்றாக அறிந்து கொண்டு செயல்படவேண்டும். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சியை நோக்கி முன்னேறும். தமிழக மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளை அவர்களுக்கு 2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் ஆழமான பாகுபாட்டை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கி, உலகளாவிய அமைதியை மேம்படுத்துவதற்கும், சர்வதேச சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டுவதற்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக, உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு நவநீதம் பிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையராக இருந்த போது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என நவநீதம் பிள்ளை அவர்கள் மிகத் துணிச்சலுடன் குரல் எழுப்பியதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
உலகளவில் அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் நவநீதம் பிள்ளை அவர்களின் சமுதாயப் பணி என்றென்றும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை கும்கும் மொஹோட் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, கோல்ஃப் போட்டியில் மகளிருக்கான தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை பிரணவி சரத் உர்ஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஆடவருக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, ஆடவருக்கான ஹாக்கிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் தர வரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் நமது இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று, உலக அரங்கில் இந்தியாவின் புகழை மேலும் உயர்த்திட வேண்டுமென எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் 44 ஆண்டுகால கனவு இன்று நிறைவேறியிருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி நேரடியாகத் தகுதி பெற்றிருப்பது மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டிய இந்திய மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், குத்துச்சண்டை போட்டியில் ஆடவருக்கான 80 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் அங்குஷ் பங்ஹால் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம், குத்துச்சண்டை போட்டியில் இன்று ஒரே நாளில் மூன்று தங்கப்பதக்கங்களை இந்தியா வென்றிருப்பது மிகுந்த பெருமையளிக்கிறது.
அதேபோன்று, ஆடவருக்கான மல்யுத்தப் போட்டியில் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் சுஜித் கல்கல் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 76 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தகைய வெற்றிகளை நாட்டிற்கு பரிசளித்து வரும் நம் இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை ரிகர்வ் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே மகளிர் ரிகர்வ் வில்வித்தையில் இந்தியா முதன்முறையாக தங்கப்பதக்கம் வெல்லக் காரணமாக விளங்கிய நமது இந்திய வீராங்கனைகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, குத்துச்சண்டைப் போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் (Lovlina Borgohain) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, தனது 29-வது பிறந்தநாளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 12 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தகைய பெருமைக்குரிய வெற்றிகளை நாட்டிற்கு பரிசாக அளித்து வரும் நமது இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று, இந்தியாவிற்கு மேலும் பல பெருமைகளைச் சேர்க்க வேண்டுமென எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு.பழ நெடுமாறன் அவர்களின் மகனும், புத்த துறவியுமான திரு.மாணிக்கம் நெடுமாறன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தமுற்றேன்.
தனது மகனை இழந்து வாடும் திரு.பழ நெடுமாறன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் நன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி, கலப்பு இரட்டையர் அணி மற்றும் இந்திய ஆண்கள் அணி ஆகியவை தனித்தனியாக தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளன. இதன்மூலம் ஒரே நாளில் வில்வித்தை போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, துப்பாக்கி சுடுதல் போட்டியின் டிராப் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்று, இன்றைய தினத்தில் மட்டும் நான்கு தங்கப்பதக்கங்களைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், 60 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை பிரியா கங்காஸ் அவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதற்கும் எனது பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 10 தங்கம், 21 வெள்ளி மற்றும் 27 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 58 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 7-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தகைய சிறப்பான வெற்றிகளை நாட்டிற்கு பரிசளித்து வரும் நம் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் பெற்று, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த இந்திய மகளிர் அணியினருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏற்கனவே கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் வித்யா ராம்ராஜ் அவர்கள் இடம்பெற்றிருந்தார். மேலும், 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் பி.டி. உஷா அவர்களின் 42 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்து, வெண்கலப்பதக்கம் வென்று ஒரு புதிய தேசிய சாதனையை படைத்திருந்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள், தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றிப் பயணம் எந்நாளும் தொடரட்டும் என்றும், அவர் மேலும் பல உயரங்களைத் தொட்டு சாதனைகள் படைக்கட்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 6 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 10-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் நமது இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று, இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்திட வேண்டும் என நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை நீரு தண்டா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் பெண்களுக்கான தனிநபர் டிராப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளதுடன், புதிய ஆசிய சாதனையையும் படைத்துள்ள நீரு தண்டா அவர்கள், மென்மேலும் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்க மனதார வாழ்த்துகிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 5 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 11-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதற்கு காரணமாக விளங்கும் நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எஞ்சியுள்ள போட்டிகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி, மேலும் பல பதக்கங்களையும், அரிய சாதனைகளையும் நாட்டிற்கு பெற்றுத் தர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் இந்தியாவின் ஜாம்பவான் பி.டி. உஷா அவர்களின் 42 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்து ஒரு புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ள நம் மண்ணின் மகள் வித்யா ராம்ராஜ் அவர்கள் தமிழகத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார். அவர் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து, நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்களது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்து வரும் நமது வீரர், வீராங்கனைகள் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்திய ஆடவர் கபடி அணியின் அனைத்து வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 10-வது இடத்திற்கு இந்தியா முன்னேறுவதற்கு காரணமாக விளங்கிய நமது இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவிற்கு மேலும் பல பதக்கங்களையும், பெருமைகளையும் பெற்றுத் தருவதோடு, பல்வேறு அரிய சாதனைகளைப் படைக்க வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வேலவன் செந்தில்குமார் மற்றும் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவரும் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து, நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்களது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்து வரும் நமது வீரர், வீராங்கனைகள் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து நான்காவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 12-வது இடத்திற்கு இந்தியா முன்னேறுவதற்கு காரணமாக விளங்கிய நமது இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவிற்கு மேலும் பல பதக்கங்களையும், பெருமைகளையும் பெற்றுத் தருவதோடு, பல்வேறு அரிய சாதனைகளைப் படைக்க வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான கம்பு ஊன்றி தாண்டுதல் (Pole Vault) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வரலாற்றிலேயே முதன் முதலாக கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றதன் மூலம் பரணிகா இளங்கோவன் தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்துவிட்டார். தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் மென்மேலும் பல சாதனைகளை படைத்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஒன்பது வெள்ளிப் பதக்கங்களையும், பன்னிரெண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில்
இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இதற்கு காரணமாக விளங்கிய இந்திய அணியை சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், குறிப்பாக தமிழ் மண்ணைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் தடகள வீரர் விஷால் தென்னரசு ஆகியோருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இரண்டு தங்கப்பதக்கங்களையும், எட்டு வெள்ளிப் பதக்கங்களையும், ஒன்பது வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மகனும், தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 91வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிகை உலகில் முத்திரை பதித்தவர். மேலும், விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனைகள் படைத்தவர். விளையாட்டுத் துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய பணிகளையும், சேவைகளையும் போற்றிடுவோம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியதையும் இந்நாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளையும், சமூக சேவைகளையும் அவர்தம் நினைவில் போற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு காரணமாக விளங்கிய இந்திய ஆடவர் அணியை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும், குறிப்பாக இவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனின் வெற்றிப்பயணம் எந்நாளும் தொடர்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை ஒரு தங்கப்பதக்கத்தையும், ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும், ஆறு வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் நடந்து முடிந்த மகளிர் கிரிக்கெட் டி 20 போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு காரணமாக விளங்கிய இந்திய மகளிர் அணியை சேர்ந்த அனைத்து கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், குறிப்பாக தமிழ் மண்ணைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் வெற்றிப்பயணம் எந்நாளும் தொடர்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோன்று பளு தூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை ஒரு தங்கப்பதக்கத்தையும், ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும், ஐந்து வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டப்பகுதிகளில் இருதினங்களுக்கு முன்பாக இடியுடன்கூடிய கனமழை பெய்தபோது வீசியபலத்தகாற்றால் உளுந்தூர்பேட்டை அருகேஉள்ள பெருங்குறிக்கை,அத்திப்பாக்கம்,நரிப்பாளையம், எறையூர், காட்டியடையார் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பப்பாளிமரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்தநிலையில் அனைத்தும் முறிந்து சேதமடைந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இது விவசாயிகளுக்கு பெரும்இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருஏக்கருக்கு சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை செலவுசெய்து பப்பாளி பயிரிட்டதாகவும், அறுவடை நேரத்தில் பலத்தகாற்றுடன் கனமழை பெய்து தங்கள் வாழ்வாதாரத்தையே நாசமாக்கிவிட்டதாக விவசாயிகள் கண்ணீர்வடிக்கின்றனர்.தமிழகஅரசு இந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும். மேலும், முறிந்த பப்பாளிமரங்களை மீண்டும் காப்பாற்றிட ஒரு சிலவழிமுறைகள் இருக்கின்றன. எனவே,வேளாண்துறை அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை பகுதியில் முறிந்த பப்பாளிமரங்களை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், டெல்டாமாவட்டங்களில் பலஇடங்களில் கனமழை பெய்து வரும்நிலையில் நெல்சாகுபடி பெருமளவிற்கு பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மு.அகரம்,முகாசபரூர்,பட்டி,கோனான்குப்பம், எடச்சித்தூர், கர்நத்தம்,மங்கலம்பேட்டை,பூவனூர் உள்ளிட்ட கிராமங்களில் குறுவைசாகுபடி முடிந்தநிலையில் நெல்மூட்டைகளை அரசுகொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அதேபோன்று, புவனகிரி அருகே கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் 1லட்சத்துக்கும் அதிகமான நெல்மூட்டைகள் தேக்கமடைந்து இருப்பதாக செய்திகள்வருகின்றன. அரசுகொள்முதல் நிலையங்கள் முழுமையாக செயல்படாமல் இருப்பதாகவும், நெல்மூட்டைகளைப் பாதுகாப்பான சேமிப்புக்கிடங்குகளுக்கு எடுத்துச்செல்லாமல் கொள்முதல் நிலையங்களில் வெளியில் இருப்பதாகவும், அரசுஅதிகாரிகளின் அலட்சியத்தால் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாக விவசாயிகள் வேதனைதெரிவிக்கின்றனர். நாளொன்றுக்கு 1,000மூட்டைகள்வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்,தற்போது 200 முதல் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல்செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு கொள்முதல்நிலையங்களிலும் 50க்கு மேற்பட்டவர்கள் எப்பொழுதும் காத்துகிடக்க வேண்டிய அவலநிலை இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக“எல் நினோ”போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே பல்வேறு விளைவுகளை நாம் சந்தித்து வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட அதிகம்வாய்ப்பு இருப்பதாக செய்திகள்தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் நம்மிடம் உள்ள நெல்மூட்டைகளை பத்திரமாக பாதுகாக்கவேண்டிய கடமையும்,பொறுப்பும் தமிழகஅரசுக்கு உள்ளது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், திருநெல்வேலிமாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் காரிப்பருவ நெல்சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.பல்வேறு பகுதிகளில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கனமழைபெய்து பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன.அதேபோன்று, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இருநாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 500ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன.மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ள இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு தமிழகஅரசு உரியநிவாரணம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு சட்டம்ஒழுங்கை பராமரிப்பதில் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டும்.தமிழகத்தில் பலஇடங்களில் கொலை,கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் தூத்துக்குடியில் உள்ள தனியார் நகைக்கடை நிறுவனத்தினர் அளித்த புகாரின்பேரில் பசும்பொன் மக்கள்தேசம் கட்சியின் தலைவர், அன்புசகோதரர் இசக்கிராஜா அவர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. இவர் மீது தவறுதலாக வழக்கு புணையப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழககாவல்துறை இந்தவழக்கு சம்பந்தமாக வெளிப்படையான, ஒரு விரிவான விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள்மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன். தமிழககாவல்துறை யாருடைய அழுத்தங்களுக்கும் செவிசாய்க்காமல் நேர்மையாக செயல்படும்போதுதான் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் நீதியை நிலைநாட்டமுடியும் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, பசும்பொன் மக்கள்தேசம் கட்சியின் தலைவர்,அன்புசகோதரர் இசக்கிராஜா அவர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையை உடனே கைவிட்டு,அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகஅரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்திய மண்ணிற்காக களமிறங்கிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டு போட்டியில் முன்னதாக நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் பதக்கத்தை வென்று இந்தியா பதக்க பட்டியலில் தனது எண்ணிக்கையை தொடங்கியுள்ளது. இந்த வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் அணியை சேர்ந்த வீராங்கனைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெற்று வருகின்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் குழுப்பிரிவு ஆகியவற்றுக்கு தனித்தனியே இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களைக் குவித்து நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை செய்து தனது வாழ்வில் உச்சநிலையை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ் திரையுலகின் மணிமகுடமாக விளங்கிய, மறைந்த நடிகர் திலகம் செவாலியர் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகள் திருமதி.சாந்தி நாராயணசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரி திருமதி. சாந்தி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடிய தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்று பெண்ணுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
ஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் அமைந்திட தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
சுயமரியாதையும், தன்மானமும் உயிருக்குச் சமம் என்று கருதிய தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர்த்து மற்ற அனைத்து அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எங்களது தலைவர்களான பேரறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களது அதே வழியில் நாமும் தொடர்ந்து பின்பற்றிட இந்நாளில் உறுதி ஏற்போம்! -
V K Sasikala
@AmmavinVazhi
வினை தீர்க்கும் ஆனைமுகன், ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளினை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று அனைவராலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, அரளி மலர் மாலைகள் அணிவித்து கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து பக்தியோடு வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை வணங்கி, புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி திருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தடைகளைத் தகர்த்து, கேட்கும் வரத்தைக் கொடுக்கும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும், சகோதரத்துவம், மனிதநேயம் தழைக்கட்டும். துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும், வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும், உலகமெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஈரோடு கிழக்கு மாவட்ட கழக நிர்வாகி திரு.G.பாபு அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.G.பாபு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான திரு.சாலமன் பாப்பையா அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ் பேராசிரியர், எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள். அனைவருக்கும் புரிந்திடும் வகையில், ஜனரஞ்சக முறையில், நகைச்சுவை உணர்வோடு ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, தனது தனித்துவமான முத்திரைகளை பதித்தவர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள். திருக்குறளுக்கு எளிய நடையில் விளக்க உரை எழுதிய பெருமைக்குரியவர். பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான திரு. சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் கலை உலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
தமிழறிஞர் திரு. சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ் இலக்கிய கலை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருச்சி மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு.செந்தில் அவர்களின் தந்தை திரு.வைரவேல் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.செந்தில் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஆசிரியராகத் தனது எளிய வாழ்க்கையைத் தொடங்கி, இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த, மாமேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள் கல்வியை கற்பிப்பதோடு மட்டுமில்லாமல், நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனைகளையும் மாணவ சமுதாயத்திற்கு கற்பிக்கிறார்கள். தன்னை உருக்கி உலகிற்கே ஒளியேற்றும் தீபச்சுடர்களாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகிறார்கள். ஆசிரியர் பணியினை ஊதியம் பெறும் வேலையாக மட்டும் கருதாமல் சேவையாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும் நாம் அனைவரும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம்.
ஆசிரியர்கள் தாயாக, தந்தையாக மட்டுமின்றி உற்ற நண்பர்களாக இருந்து மாணவச் செல்வங்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்ற உன்னதப் பணியை சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து செய்து வருகிறார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தங்களிடம் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்விக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறார்கள்.
ஆசிரிய பெருமக்கள் தங்களது தன்னலமற்ற சேவையாலும். அர்பணிப்பு உணர்வோடு கடமையாற்றுவதாலும், நம் மாணவச் செல்வங்கள் எத்தனையோ துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நமது மாணவச் செல்வங்களின் திறமை மிகவும் போற்றப்படுகிறது. இந்த பெருமைகளுக்கெல்லாம் உண்மையான சொந்தக்காரர்கள், ஆசிரியர்கள் தான் என்பதைத் தெரிவித்து கொள்வதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ சமுதாயத்தினை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் உன்னத பணியினை ஆசிரியர்கள் ஆற்றிவருகின்றனர். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" எனும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையைச் சேர்ந்த கழக மூத்த நிர்வாகியும், மன்னார்குடியில் உள்ள அருள்மிகு இராஜகோபாலசாமி திருக்கோயில் முன்னாள் அறங்காவல் குழுத்தலைவருமான திரு.பிச்சைக்கண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கழக நிர்வாகி பிச்சைக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்றுரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி' என்றும் 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து உயிர்களையும் காக்கும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த இத்திருநாளில், குழந்தைகளைக் கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து, வீட்டின் தலைவாசலில் இருந்து பூஜை மண்டபம் வரை ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து பதிய வைத்து, கிருஷ்ணருக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்து கொடுத்து, நல்லோரை காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிலை நிறுத்தி, ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதார வேண்டுகிறேன்.
“குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்வுடன் வாழ்ந்திடலாம்”என்ற ஸ்ரீ கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை “ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311-வது பிறந்தநாளினை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுபவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள், 1751ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர். இன்றைக்கு நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு முதன் முதலில் விதை போட்டவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நெற்கட்டும் செவலை பூர்விகமாக கொண்ட பாளையக்காரரான மாமன்னர் பூலித்தேவன் அவர்கள், இளம் வயதிலேயே வீர உணர்ச்சியையும், கடவுள் பக்தியையும் கொண்டவராக விளங்கினார். தனது நிர்வாக திறமையால் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள். அனைத்து குறுநில மன்னர்களும், ஆங்கிலேயர்களுக்கு பயந்து வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், அசாத்திய துணிச்சலுடன் ஆங்கிலேயர்களுக்கு வரி, கப்பம் கொடுக்க மறுத்த வீரத்தமிழர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள்.
பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சாதி பேதங்களை கடந்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர். ஒண்டிவீரன் பகடை மற்றும் வெண்ணிக்காலாடி ஆகியோரை தனது தளபதிகளாக தனக்கு வலப்புறமும், இடதுபுறமும் வைத்து அழகுபார்த்தவர்.
மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் காட்டிய அதே வழியில், ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்துடனும் செயலாற்றினால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதை மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வருகிறது. இது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை சரிந்ததால் இந்த திடீர் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைலாய யாத்திரைக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கும்பகோணத்தில் உள்ள தனியார் யாத்திரை ஏஜென்சி மூலம் 57 பயணிகள் நேபாளுக்கு சென்றுள்ள நிலையில், இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 நபர்களின் நிலைமை என்னெவென்று தெரியவில்லை. நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
நேபாளத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் விரைவில் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு இருந்தால் தான் அனைவருக்கும் உதவ முடியும் என்பதனை போதித்ததோடு மட்டுமில்லாமல் அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
"பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள், சகோதரர்களாக வாழுங்கள், மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள், எந்த ஒரு செயலிலும் உணர்ச்சி வசப்படாத சகிப்புத்தன்மையும், நிதானமும் வேண்டும், சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள், இறைவனின் உதவி ஒன்று சேர்ந்த மக்களின் மீது இருக்கும்” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு அருளிய போதனைகளை அனைவரும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
மனித குலத்திற்கான அற்புதமான வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டிய இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடிடும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய மீலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஆண்டுதோறும் பாரம்பரியமிக்க திருவோணப் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபலி மன்னனின் அகந்தையை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களை காண வரம் கொடுத்தார். அதன்படி, மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நாளில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி, மோகினி ஆட்டம், கோலாட்டம், ஓணக் களி போன்ற உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும், கயிறு இழுத்தல், களரி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
சாதி மத பேதமின்றி போட்டி, பொறாமை, ஆணவம் அகற்றி, இத்திருவோண நன்னாளில் அனைத்துத் தரப்பு மக்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி, இவ்வுலகில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தவர் அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள். அவர் ஆற்றிய அரும்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்.
@PremallathaDmdk -
V K Sasikala
@AmmavinVazhi
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்💐
புதிய தலைமுறை தொலைக்காட்சி 16-ஆம்ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு எனதுஇதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன்.
பாரபட்சமின்றி நடுநிலையான செய்திகள், விறுவிறுப்பான விவாதங்கள் என அனைத்து விதமான மக்கள் பிரச்னைகளையும் துணிச்சலாக வெளிக்கொணர்ந்து, சிறப்புடன் பணியாற்றி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, வரும்காலங்களிலும் தனித்தன்மையுடன் தொடர்ந்து ஊடகத்துறையில் தனது பங்களிப்பினை சிறப்புடன் ஆற்றிட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஊடகத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மென்மேலும் வளர்ச்சி கண்டு, உச்ச நிலையை அடைய வேண்டுமென தங்கள் நிறுவனத்தினருக்கும், பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன்.
@PttvNewsX -
V K Sasikala
@AmmavinVazhi
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திருமதி. சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரைத்துறையில் யாராலும் ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகவும்.
சௌகார் ஜானகி அவர்கள் தனது 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணத்தில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 300க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்திய நடிகைகளில் சௌகார் ஜானகிக்கு தனி இடம் உண்டு. பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பெருமைக்குரியவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். சௌகார் ஜானகி அவர்கள் பணம் படைத்தவன், பெற்றால்தான் பிள்ளையா, தாய்க்கு தலைமகன், ஒளி விளக்கு உள்ளிட்ட படங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருடன் இணைந்து நடித்த காலத்தால் அழியாத காவியங்களை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரி, திருமதி.சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர்களின் மக்கள் பணி, சமூகப் பயணம் தமிழ் மண்ணில் தொடர்ந்து ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@thirumaofficial -
V K Sasikala
@AmmavinVazhi
“இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்”
ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்திய திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும் வாழ, ஆங்கிலேயர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, சிறையில் அடைபட்டு, இன்னல்களையும் இன்முகத்துடன் ஏற்று, தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நாட்டுப் பற்றையும், தியாக உணர்வையும் போற்றி நினைவுகூரும் நன்னாள் இந்த சுதந்திரத் திருநாளாகும்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி மறைந்த பல தியாக வீரர்களைக் கொண்ட வீரமிக்க மாநிலம் நம் தமிழகம் ஆகும். சுதந்திரப் போராட்ட களத்தில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற மாமன்னர் பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட எத்தனையோ தியாகிகளை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று, தன்னலம் பாராமல், ஆண்களுக்கு இணையாக பெண்களும் குறிப்பாக வீரமங்கை வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பங்கு மகத்தானது என்பதையும் நாம் நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம். அத்தகைய தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்துவதுடன், அவர்தம் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம் தியாக சுடர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பியதையும், தியாகிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படிகளை உயர்த்தி வழங்குதல் போன்ற எண்ணற்ற பணிகளைச் செய்ததையும் இந்நேரத்தில் எண்ணிப் பெருமையடைகிறேன்.
நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதே ஒவ்வொரு இந்திய குடிமகளின், இந்திய குடிமகனின் கடமையாகும். பிராந்திய, கலாச்சாரம் மற்றும் மத எல்லைகளை கடந்து, இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்ட அடையாளத்தின் பன்முகத்தன்மையை பாதுகாத்திடுவோம்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என பேரறிஞர் அண்ணா அவர்களின் வாக்கிற்கிணங்க, "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று புரட்சித்தலைவர் அவர்கள் பாடிய வைர வரிகளைப் பின்பற்றி, "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தாரக மந்திரத்தை, ஒவ்வொருவரும் கடைபிடித்து, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுட்டிக் காட்டிய வெற்றி இலக்கை, எட்டிப்பிடிப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.
நாம் ஒவ்வொருவரும் மதத்தால் வேறுபட்டு இருக்கலாம், நிறத்தால் வேறுபட்டு இருக்கலாம், மொழியால் வேறுபட்டு இருக்கலாம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், வளமிக்க முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி, தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகி திரு.M.ஆண்டிச்சாமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.M.ஆண்டிச்சாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்தியாவின் முன்னணி சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் – செயின்ட் லூயிஸ் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஜூன் மாதம் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 4 கிளாசிக்கல் வெற்றிகளுடன் நார்வே செஸ் பட்டத்தைக் கைப்பற்றிய நம் மண்ணின் மைந்தன் பிரக்ஞானந்தா அவர்கள், தற்போது தனது முதல் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் தொடர் சாம்பியன் பட்டத்தை வென்று, மீண்டும் ஒரு சர்வதேச மகுடத்தை தன்வசப்படுத்தியிருப்பதன் மூலம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
தமிழகத்தில் சதுரங்க விளையாட்டில் பங்குபெறுகின்ற இளம் வயதினர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கும் பிரக்ஞானந்தா அவர்கள் தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் மென்மேலும் பல அறிய சாதனைகளை நிகழ்த்தி காட்டிட எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்புரிய வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@rpraggnachess -
V K Sasikala
@AmmavinVazhi
தவெக தலைமையிலான அரசின் 2026-2027ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையானது, தமிழக விவசாய பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்திடாத ஒரு சம்பிரதாய அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.
கடந்த ஆட்சியில் ஆண்டுதோறும் வேளாண்துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தபிறகு 2026-2027ஆம் ஆண்டுக்கான திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதிலும் விவசாயிகளுக்கு பயனளிக்கின்ற வகையில் குறிப்பிடத்தக்க எந்த பெரிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள திட்டங்கள்தான் அதிகம் இடம்பெற்று உள்ளது. தவெக கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளான நெல்லுக்கான ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.3500மற்றும் கரும்புக்கான ஆதார விலை ஒரு டன்னுக்கு ரூ.4500 போன்ற அறிவிப்புகள், தமிழக விவசாயிகளால் பெரிதும் எதிர்பாத்து காத்திருந்த நிலையில் இது போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை. அதேபோன்று கூட்டுறவு கடன் பெற்ற சிறுகுறு விவசாயிகளுக்கு 100சதவிகிதம் தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையில் இது போன்ற அறிவிப்புகள் இடம்பெறாமல் போனது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த ஆட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் சரிவர செயல்படவில்லை. மேலும், போதுமான நெல் சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும், திமுக ஆட்சியில் பணம் செலுத்தி பதிவுசெய்து காத்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவே இல்லை. எனவே, இன்றைய ஆட்சியாளர்கள் இதுபோன்ற தவறுகளை சரிசெய்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான பாசன வசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும். கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் கிடைப்பது மிகவும் இன்றியமையாதது. எனவே, காவிரி நீரை பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த திமுக தலைமையிலான ஆட்சியில் செய்த தவறுகளை சரி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு உள்ளது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியாத ஒரு சம்பிரதாய அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.
தமிழக அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை கொண்ட நிதி நிலை அறிக்கையானது சாமானிய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தவெகவினர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உரிமை தொகை, விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, மகளிருக்கு அனைத்து இடங்களுக்கும் சென்று வர இலவச பேருந்து பயணம், வேலையில்லா பட்டாதாரிகளுக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் இடம்பெறாமல் போனது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்கனவே கொண்டுவந்த தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி திட்டம், அம்மா பசுமை இல்லம் திட்டம், பள்ளி மாணாக்கர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மாணவர் தங்கும் விடுதி, ஏழைப்பெண்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நடைமுறையில் இருந்த பல திட்டங்கள் இன்றைக்கு புதிய பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகள் விடுபட்டுள்ளது.
தவெக அரசு மாவட்டம்தோறும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவை உருவாக்கியபோதும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் இன்னும் குறையாமல் இருப்பது வேதனையளிக்கிறது. வீடுகளுக்கு 200யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்தபோதிலும், 3 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகளில் அதிகம் மின் கட்டணம் வசூல் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பல இன்னல்களுக்கு நாள்தோறும் ஆளாகி வருவதை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு டெண்டர் நடைமுறைகளில் ஒரு சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தது, 717டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை மூடி இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் இந்த ஆட்சி பொறுப்பேற்றுள்ள மூன்று மாதங்களில் ரூ.22,000 கோடி கடன் பெற்றுள்ளதும், நடப்பு நிதியாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடன் சுமை 10,98,768 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பல்வேறு சவால்கள், நெருக்கடிகள் இருந்தபோதும் நிதி மேலாண்மையை திறம்பட செய்ததோடு, தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றியதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களை கடந்துவிட்ட தவெக அரசு வரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் செயல்பட்டால்தான் மாநிலத்தின் வருவாயை அதிகரித்து, நிதி நிலையை சரி செய்யமுடியும். அதேசமயம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தவறாமல் நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திருமதி.ஜமுனா ராணி அவர்களின் மறைவு திரையுலகிற்கும், இசை ரசிகர்களுக்கும் ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
இசையுலகை தனது தேன் சிந்தும் குரலால் வசீகரித்து, தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருந்த ஜமுனா ராணி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் எனப் பல மொழிகளில் 6,000-க்கும்மேற்பட்ட பாடல்களைப் பாடி, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர்.
அன்பு சகோதரி, திருமதி.ஜமுனா ராணி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை உலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள நிலையில் இதுவரை 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு அவர்கள், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் என இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்கள் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஒட்டுமொத்த எடையில் புதிய வரலாற்றுச் சாதனையை செய்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. இதன் மூலம், நடப்பு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்துள்ள மீராபாய் சானு அவர்கள் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ள நம் மண்ணின் மைந்தர் ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தூத்துக்குடியிலிருந்து சென்று இந்தியாவிற்காக காமன்வெல்த் போட்டிகளில் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் தான் பிறந்த மண்ணுக்கே பெருமை தேடித்தந்துள்ளார். அன்பு தம்பி ராஜா முத்துபாண்டி அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அதேபோன்று, ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சனம்பம் ரிஷிகாந்த சிங் அவர்கள், 'ஸ்னாட்ச்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நீட் தேர்வு தொடர்பாக இளம் சமுதாயத்தினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து செய்து வந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மாணவர்களின் போராட்டத்திற்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மேலும், மாணவர்கள் வைத்த இதர கோரிக்கைகளான நீட் தேர்வு தொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறுவது போன்றவற்றையும் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகுவதால் மட்டும் நீட் தேர்வு தொடர்பான பிரச்சனைகள் முடிந்து விட்டதாக கருத முடியாது. அதாவது, தமிழக மாணவர்களின் நெடுங்கால எதிர்பார்ப்பு என்னவென்றால், அது நீட் விலக்கு ஒன்று மட்டும் தான். இதுவே மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வாக நாம் பார்க்க முடியும். எனவே, மத்திய-மாநில அரசுகள், நாட்டில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நீட் என்ற அரக்கனை ஒழித்துக்கட்ட இளம்சமுதாயத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டின் தலைநகரமான டெல்லியில் மாணவர்களின் போராட்டம் மிகப்பெரியஅளவில் நடைப்பெற்று வருகின்றன. அவ்வாறு போராடும் மாணவர்களை அடக்கி ஒடுக்குவதும், கைதுசெய்வதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலும் பலஇடங்களில் மாணவர்கள் நீட்தேர்வுக்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு மதிப்பளித்து, மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு நீட்தேர்வை ரத்து செய்வதே இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீட்தேர்வு வந்தபிறகு மருத்துவக்கல்வி பெறுகின்ற வாய்ப்பு தமிழகமாணவர்களுக்கு பெருமளவில் குறைந்துவிட்டது.இதேநிலை தொடர்ந்தால் பிற மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.அவர்களும்,படிப்பு முடிந்தவுடன் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிடுவார்கள். இதனால் தமிழகஅரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களே இல்லாத நிலைஏற்படும். இந்தநிலைமை தமிழகம் மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படும் அபாயம்உள்ளது.
மருத்துவத்துறை என்பது நோயாளிகளின் உயிர் சம்பந்தப்பட்டது.ஒருநோயாளி தனக்குள்ள பிரச்னைகளை என்ன சொல்லவருகிறார் என்பதை மருத்துவகல்வி பயிலும் மாணவர்கள் படிக்கும்போதே அதனை நன்றாக புரிந்துகொண்டால்தான் அவருக்கு சரியானமருத்துவத்தை அளிக்கமுடியும்.இதன்மூலம் மாணவர்கள் தங்களது மருத்துவகல்வியை முழுமையாக பெறமுடியும்.அந்தந்த மாநிலமொழி தெரிந்த மருத்துவர்களால்தான் அவர்கள் மாநிலத்தில் தங்களிடம் வரும்நோயாளிகளின் பிரச்னையை நன்றாக புரிந்துகொண்டு அவர்களுக்கு சரியான மருத்துவத்தை அளிக்கமுடியும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவப்படிப்பை முடித்து அரசுப்பணிகளை ஏற்பவர்கள் இரண்டு வருடகாலம் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்களில் பணியாற்றிடவேண்டும் என்றநடைமுறை புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் ஆட்சிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கிராமப்புறங்களில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தமிழ்மொழி தெரிந்தவர்களாக இருந்தால்தான்,படிப்பறிவு பெற இயலாத கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகளின் பிரச்னைகளை சரியாக புரிந்துக்கொண்டு மருத்துவம் அளித்து அவர்களின் உயிரை காப்பாற்றமுடியும்.அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கேற்ப மாநிலமொழி பேசும் மருத்துவர்கள் இருந்தால்தான் மக்கள்சுகாதாரத்தோடு வாழுகின்ற நிலையை அடையமுடியும்.மேலும், நீட்தேர்வு வந்தபிறகு மருத்துவகல்வி சேர்க்கையும் காலதாமதம் ஆவதால் குறிப்பிட்டகாலத்திற்குள் மருத்துவகல்வியை முடிக்க இயலாமல் தள்ளிபோவதாக மாணவர்கள் சொல்லி வேதனப்படுகின்றனர்.
தேசியதேர்வு முகமையால் மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வு எனப்படும் நீட்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு அதனடிப்படையில் மருத்துவகல்வி சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில், நீட்தேர்வு நடத்துவதில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு குளறுபடி நடந்தவண்ணம் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இது மருத்துவ கல்வியை படிக்கவிரும்பும் மாணவச்செல்வங்களின் வாழ்நாள் கனவை முற்றிலும்தகர்த்துவிட்டது. ஒரு வெளிப்படைத்தன்மையில்லாமல் நடைபெறும் இதுபோன்ற போட்டிதேர்வுகளால் இளம்சமுதாயத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதனைக்கருத்தில் கொண்டுதான் தமிழகத்திற்கு நீட்தேர்வு வேண்டாம் எனதொடர்ந்து கோரிக்கைவைக்கிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தனதுஉயிர்மூச்சு உள்ளவரை தமிழகத்தில் நீட்தேர்வை அனுமதிக்கவில்லை. எனவே, நம் இளம்சமுதாயத்தினரின் நலனைக்கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீட்தேர்வை ரத்துசெய்ய தேவையான சட்டவழிமுறைகளை விரைந்து ஏற்படுத்திடவேண்டும் என மத்திய,மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்தவரை தமிழகத்தில் நீட்தேர்வு நுழைந்துவிடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். அம்மாஅவர்கள் இன்று நம்மோடு இருந்திருந்தால் நீட்தேர்வு தமிழகத்தில் நுழைந்து இருக்காது. ஆட்சிக்குவந்தவுடன் நீட்தேர்வை ரத்துசெய்யும் யுக்தி தங்களிடம் உள்ளதாக திமுகவினர் தேர்தல்நேரத்தில் பொய்யைசொல்லி,அப்பாவி மாணவர்களையும் அவர்களின்குடும்பங்களையும் நம்பவைத்து ஏமாற்றியதன் விளைவாக,இன்றைக்கு ஆட்சியை இழந்து நிற்கிறார்கள்.தமிழ்நாட்டிற்கு நீட்விலக்கு பெறுவது என்பதை வெறும்அரசியலாகத்தான் பார்க்கின்றனர்.இப்போது, தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய ஆட்சியாவது நீட்தேர்வை ரத்து செய்ய தேவையான சட்டவழிமுறைகளை மத்திய அரசோடு இணைந்து,ஆராய்ந்து ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
மத்திய-மாநில அரசுகள், நாட்டில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக்கருத்தில் கொண்டு நீட்விலக்கு பெறுவதற்கு தேவையான சட்டநடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
புதிய தலைமுறை நெறியாளரும், மிகச்சிறந்த ஊடகவியலாளருமான திரு.விஜயன் அவர்களிடம் தமிழக காவல்துறை விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழிப்பதும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் கண்டனத்திற்குரியது.
நாட்டில் நடைபெறுகின்ற சமூக விரோத செயல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் மறைக்கப்படுகின்ற உண்மைகளை கண்டறிவதில், இன்றைக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையானது காவல்துறைக்கு உதவுகின்ற வகையில் பல்வேறு புலனாய்வுகளை மேற்கொண்டு பல நேரங்களில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் முதன்மையாக விளங்குகின்றன. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றுகின்றவர்கள் பல்வேறு சவால்களையும் கடந்துதான் தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் தான் எந்த ஒரு அரசும் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே, பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக காவல்துறை கைவிட்டு விட்டு, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறை என்றைக்கும் சுதந்திரமாக செயல்படுவதை ஆளும் தவெக அரசு உறுதிசெய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் -
V K Sasikala
@AmmavinVazhi
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞான பீட விருதை, கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள் பெற்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி மற்றும் கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றுள்ள திரு.வைரமுத்து அவர்கள், தமிழ் இலக்கியத் துறையில் எழுத்தாளர் அகிலன் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இருவரையும் தொடர்ந்து தமிழ் மண்ணிலிருந்து மூன்றாவது கவிஞராக ஞான பீட விருதினை பெற்றிருப்பதன் மூலம் தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.
தனது பிறந்தநாளான இன்று ஞான பீட விருது பெற்றுள்ள திரு.வைரமுத்து அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும், அவர்களது வாழ்வில் இன்னும் பல உச்சங்களை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.@Vairamuthu -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல முன்னணி பாடகியும் "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற திருமதி.S.ஜானகி அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திருமதி.ஜானகி அவர்களின் மறைவு இசைத்துறையில் யாராலும் ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
திருமதி.ஜானகி அவர்கள் தனது 60 ஆண்டு கால இசைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், சிங்களம், துளு, கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களுக்கும் அதிகமாக பாடி எண்ணற்ற பல விருதுகளை வென்ற பெருமைக்குரியவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக “என் அண்ணன், நீரும் நெருப்பும், அன்னமிட்டகை” உள்ளிட்ட பல படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரி, திருமதி.S. ஜானகி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை உலகினருக்கும், கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
#sjanaki #legendforever #indianmusic -
V K Sasikala
@AmmavinVazhi
வியட்நாம் நாட்டின் பூ குவாக் தீவு அருகே இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தை சேர்ந்த 10 நபர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 15 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
சிறந்த வணிக செயல்பாட்டிற்காக தனியார் நிறுவனம் சார்பில், வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் படகில் பயணித்தபோது, படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படகில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிகள் 32 நபர்களில் 15 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இதில் 10 நபர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை, அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை மற்றும் மகனை பட்டப்பகலில் கொன்று அவரது தலையை சாலையில் வீசிச்சென்ற கொடூரம் அரங்கேறியிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
திருநெல்வேலி அடுத்த கல்லிடைக்குறிச்சியில் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த திரு.காளிமுத்து அவர்கள் தனது இரு மகன்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் தாக்கப்பட்டு, காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜையும் வெட்டி கொன்றதோடு, காளிமுத்துவின் தலையை நடு ரோட்டில் வீசி சென்றுள்ளதாகவும், மர்ம கும்பலின் தாக்குதலுக்கு ஆளான மூத்த மகன் சின்ராஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது போன்ற சட்ட விரோத செயல்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இன்னும் சரிசெய்யப்படாமல் இருப்பதைத்தான் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு, தொடர்ந்து நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க தவறினால், மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாவதுடன், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது முற்றிலும் கடினமாகிவிடும். எனவே, தமிழ்நாட்டில் சட்ட விரோத செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடினமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
கல்லிடைக்குறிச்சி அருகே நடைபெற்ற இந்த கொடூர கொலையில் உயிர் நீத்த காளிமுத்து மற்றும் அவரது மகனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான திரு.கே.வெங்கட நாராயணா அவர்களை தமிழக அரசு நியமித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றிடவும், தமிழக மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படவேண்டிய முக்கிய பொறுப்பு கொண்ட பதவிக்கு, கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள நபரை நியமிப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது ஆகாது. அதிலும்,குறிப்பாக கர்நாடக மாநில அரசு காவிரியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முயற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திரு.கே.வெங்கட நாராயணா அவர்களின் நியமனத்தை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக உறுதியோடு போராடக்கூடிய வகையில், தகுதி வாய்ந்த, நல்ல அனுபவம் கொண்ட, தமிழ் மண்ணை சேர்ந்த ஒருவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்திட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான அன்பு சகோதரர் திரு.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
பல்துறை வித்தகரான திரு.பாக்யராஜ் அவர்கள் அரை நூற்றாண்டாக தமிழ் சினிமா உலகில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர். வாழ்நாள் சாதனையாளர் விருது, பிலிம்பேர் விருதுகளை பெற்று இருக்கிறார். திரைப்படத்துறையில் பன்முகத்தன்மை கொண்ட திரு.பாக்யராஜ் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்தவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். திரு.பாக்யராஜ் அவர்கள் அரசியலில் எங்களோடு பயணித்த நாட்களை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரர் திரு. பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக சட்டமன்றம் இந்திய ஜனநாயக வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமும், சமூக மாற்றத்திற்கான பல முன்னோடி சட்டங்களை இயற்றிய பெருமையும் கொண்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் முதலே, தனித்து நின்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம். அரசியல் சலசலப்புகள், ஆட்சிக் கலைப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களைக் கடந்து, தமிழக சட்டமன்றம் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானதாக இருப்பினும், பல அறிய வியத்தகு சிறப்புகளை உள்ளடக்கியது.
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக நம் இளைய சமுதாயத்தினர் பார்த்து கொண்டிருக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். தற்போது சட்டமன்றத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்பொழுது நம் இளம் சமுதாயத்தினர், நாமும் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என தவறுதலாக கருதிவிடக்கூடாது. தமிழக முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குறைசொல்லிக்கொண்டு இருப்பதால் தமிழக மக்களுக்கு எந்தவிதத்திலும் அது பயனளிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் இன்றைக்கு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் வைத்து இருக்கிறார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீது வெறுமனே குற்றம் சாற்றுவதோடு இருந்துவிடாமல் அவர்கள் மீது உள்ள குற்றத்தை நிரூபித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து செயலில் காட்டுவதுதான் சிறந்ததாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுளேன்.
தமிழக சட்டமன்றத்தில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி, திரு.ஓ.பி.ராமசாமி ரெட்டியார், கர்மவீரர் திரு.காமராஜர், திரு.C.N.அண்ணாதுரை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் முதல்வர்களாக பணியாற்றி இருக்கின்றனர். தமிழக மக்களுக்கு தேவையான வாழ்வாதார திட்டங்கள் பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியும், மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தற்போது சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் மக்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற அத்தியாவசிய தேவைகளையும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் விவாதிக்க வேண்டிய நேரத்தை, தனி மனித தாக்குதல்களுக்கும், ஒருவரை ஒருவர் குறை சொல்வதற்கும் அந்நேரத்தை செலவிடுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காது. தமிழக மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், தமிழக சட்டமன்றத்தில் நாம் தொன்றுதொட்டு கட்டிக்காத்த மரபுகளை, கடைபிடித்து வந்த விதிகளை, பாரம்பரியமிக்க மாண்பை காப்பாற்றும் விதமாக தங்களது செயல்பாடும் அமையவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் தவெகவினர் சென்று மாணாக்கர்களின் கல்வி பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏற்புடையதாகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பள்ளி வகுப்பறையில் தவெகவினர் நுழைந்து தமிழக முதல்வரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மாணாக்கர்களிடம் பாடம் எடுத்த வீடியோக்கள், செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இது யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. இதன்மூலம் மாணவ-மாணவியர்களின் கல்வி பாதிக்கக்கூடும்.
அதேபோன்று, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தமிழக அமைச்சர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் மேடையிலேயே குத்தாட்டம் போடுகிறார். இது மாணவர்களுக்கு எந்தவித பயனையும் அளிக்காது. இது போன்ற செயல்களை அனுமதித்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு பட்டம் வழங்கியபோது, தவெகவினர் அவர்களது கட்சியின் பிரச்சார பாடலை ஒலிபரப்புகின்றனர். இது போன்ற செயல்களை தவெக அரசு கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கல்லூரி வாகனத்தில், திமுகவினர் அவர்களின் கட்சி கூட்டங்களுக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். அதனை அப்போதே தவறு என சுட்டிக்காட்டி இருக்கிறேன். இதற்குத்தான் மக்கள் அவர்களுக்கு கடந்த தேர்தலில் உரிய பாடத்தையும் கற்பித்துள்ளனர். ஆனால், இன்றைக்கு புதிதாக ஒரு ஆட்சி அமைந்த பிறகும் காட்சிகள் மாறாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் பெரும்பாலான பள்ளிக்கட்டடங்கள் பராமரிப்பின்றி இடிந்துவிழும் நிலையில் உள்ளன. எனவே, தமிழகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பள்ளிக்கட்டடங்களில் தேவையான கட்டிடப்பணிகளை மேற்கொண்டு மாணவ-மாணவியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சுதேசமித்திரன், மணிச்சுடர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள மூத்த பத்திரிகையாளர் திரு. பெரியசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு. பெரியசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பங்காற்றுகின்ற சமூக பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள அன்பு சகோதரர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தனது 52-வது பிறந்தநாளை இனிதே கொண்டாடும் இவ்வேளையில், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@CMOTamilnadu
@TVKVijayHQ -
V K Sasikala
@AmmavinVazhi
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகாபுத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு இதுவரை 7 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக இருப்பதாக வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது.
தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த வாயு கசிவால் அங்கு பணியில் இருந்த 70-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்ததுடன், பலர் மயக்கம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதில் பாதிப்படைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
இந்த விபத்து நடந்த தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவுக்கு என்ன காரணம்? எதனால் ஏற்பட்டது?பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளவேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரி துவாரகன் என்னும் 13 வயது மாணவர், நாசாவின் தேசிய விண்வெளி சங்கம் நடத்தும் மாநாட்டிற்கு தேர்வாகி, தற்போது அதில் பங்கு பெற்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நாசா NSS மாநாட்டில் பங்கெடுத்து விண்வெளி குடியேற்றம் தொடர்பான தனது புதுமையான Astro Zenth Era என்ற திட்டத்தை உலக அரங்கில் அறிமுகப்படுத்தி வரலாற்று சாதனை படைத்ததன் மூலம் சர்வதேச மேடையில் தமிழ் மண்ணிற்கும், நம் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தனது சிறுவயதிலேயே விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் மாணவன் ஹரி துவாரகன் அவர்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டும். வரும் காலங்களில் எண்ணற்ற பல சாதனைகளை புரிந்து வாழ்க்கையில் உச்ச நிலையை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனித்தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்கிறோம். தமிழக விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமாக செயல்படுகின்ற காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இது இரு மாநிலத்தில் உள்ள மக்களின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம்கேள்விக்குறியாகிவிடும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
பூகோள ரீதியாக தமிழகம் வடிகால் மாநிலமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடகா, கேரளா போன்ற மேல் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்கள் புதிய அணைகளைக் கட்டுவதன் மூலம், தமிழகத்தில் வடிகின்ற நீரை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் வடிகின்ற நீரை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. இது போன்ற நடவடிக்கைகள் இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது. வடிகால் மாநிலங்களுக்கு உரிய சட்டப்பாதுகாப்பு உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, வடிகால் மாநிலமாக அமைந்துள்ள தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணையைக் கட்ட முடியாது. எனவே சட்டப்போராட்டங்களின் வழியாக தமிழகத்திற்கு கிடைத்த பாதுகாப்பை காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே, கர்நாடக அரசு தனது இஷ்டத்திற்கு செயல்படமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்திற்கு தேவையான சட்டப்பாதுகாப்பை பெற்றுத்தந்ததோடு தமிழக விவசாயத்தையும் அழிந்திடாமல் காப்பாற்றியது புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் என்பதை இந்நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொடர் முயற்சியால், தமிழகத்துக்கு ஆண்டுக்கு, 205 டி.எம்.சி நீரைக் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கு நீரை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டார்கள். மேலும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் ஒன்பதாவது அட்டவணையில் வெளியிட செய்தார். அதன்பிறகும், தமிழகத்திற்கு காவிரி நீரை விடுவிக்காத கர்நாடக அரசைக் கண்டித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீரை பெறுவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும் என தனது இறுதிமூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடினார். கடந்த 2016-ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கூட, தமிழக அரசு அதிகாரிகளை மருத்துவமனைக்கே நேரில் வரவழைத்து காவிரி நதி நீரை பெறுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட நீண்ட கால சட்டப் போராட்டத்தின் பயனாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இத்தகைய சூழலில் கர்நாடக அரசு எந்தவித கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசு தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கவேண்டிய நீர் மேட்டூர் அணையிலிருந்து இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சூழ்நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு காவிரி நீரை நம்பித்தான் கடைமடை பகுதி விவசாயிகள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். எனவே, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நீரின் அளவை முழுமையாக பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு புதியதாக அமைந்துள்ள தவெக அரசு, கர்நாடகா காங்கிரஸ் அரசின் எந்தவித சமரசத்திற்கும் உடன்படாமல், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட துடிக்கும் கர்நாடக அரசின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து முட்புதரில் வீசியிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு அதன் பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாயிலிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று காஞ்சிபுரத்திலும் 7 வயது மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த சம்பவத்திலும் வட மாநிலத்தவர் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சிங்கப்பெண் போன்ற சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்திய நிலையிலும்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து ஏற்படுவது துரதிருஷ்டவசமானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதே காவல்துறையை வைத்துக்கொண்டுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் காவல்துறையினரின் எண்ணிக்கையும் அதிகம், பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் பாலியல் குற்றங்களும், கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் கட்டுப்படுத்த முடியாத வகையில் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை? எனவே, இதற்கான நிரந்தர தீர்வை கண்டறியவேண்டும். தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்காமல், ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை பகுதியில் உள்ள நிலப்பரப்பில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் கடலுக்குள் 18 கிமீ தொலைவில் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்கு முறை ஆணையத் தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம் கடல் வளம் மற்றும் மீனவர்களின் நலன் கேள்விக்குறியாகிவிடும்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள என்.எல்.சி நிறுவனம் மற்றும் சிப்காட் தொழிற்சாலை போன்றவைகளால் இங்குள்ள சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் கடலில் அமைக்கப்பட்டால் இது மேலும் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளை இப்பகுதியில் ஏற்படுத்தக்கூடும்.
தற்போது உலகளவில் அச்சுறுத்தலாக இருக்கும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய காரணிகளால் கடலோர சூழல், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும், எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காகக் கடலின் அடிப்பகுதியை தோண்டும் போது, அங்குள்ள கடல் புற்கள் மற்றும் பவளப் பாறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் இது போன்ற எந்தவித திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக சட்டமன்ற சபாநாயகர், புதியதாக அமைந்த அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதால் எந்தவித பயனும் இல்லை. இது தமிழக சட்டமன்ற மாண்புகளை காப்பாற்றிட எவ்வாறு உறுதுணையாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக சட்டமன்றம் இந்திய ஜனநாயக வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமும், சமூக மாற்றத்திற்கான பல முன்னோடிச் சட்டங்களை இயற்றிய பெருமையும் கொண்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் முதலே தனித்து நின்று, முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம். அரசியல் சலசலப்புகள், ஆட்சிக் கலைப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களைக் கடந்து, தமிழக சட்டமன்றம் கடந்துவந்த பாதைகள் கரடு முரடானதாக இருப்பினும், பல அரிய வியத்தகு சிறப்புகளை உள்ளடக்கியது.
கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பல சிறப்பு வாய்ந்த சபாநாயகர்களை தமிழக சட்டமன்றம் கண்டு இருக்கிறது. அதாவது, திரு.ஜெ.சிவசண்முகம் பிள்ளை முதல் பல திறமைவாய்ந்த சபாநாயகர்கள் அலங்கரித்த இருக்கைதான், தமிழக சட்டமன்ற சபாநாயகரின் இருக்கை. ஒரு சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும். இந்த பதவி மிகவும் மதிப்புமிக்க பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற சபாநாயகர் அவர்கள் தமிழக சட்டமன்ற பேரவையின் மாண்பை, அதன் மதிப்புமிக்க சிறப்பை தொடர்ந்து காப்பாற்றிடவேண்டும். புதிதாக அமைந்த அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆதரவு அளித்த அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதை உடனடியாக சபாநாயகர் அவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அந்த தொகுதிகளை காலியானதாக அன்றே அறிவிப்பும் செய்துவிட்ட நிலையில், இன்றைக்கு சம்பந்தப்பட்ட 4சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறைக்கு உகந்ததாக தெரியவில்லை. இது எத்தகைய பலனை அளிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதுபோன்ற விசயங்களை தகுந்த சட்ட வழிகாட்டுதலுடன் அணுகுவதுதான் சரியான நடவடிக்கையாக அமையும். இது போன்ற நடவடிக்கைகள் தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைத்துவிடக்கூடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இயக்குநர் இமயம் அன்பு சகோதரர் திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அரை நூற்றாண்டாக தமிழ் சினிமா உலகில் தனித்துவத்தோடு பணியாற்றியவர். பத்மஶ்ரீ விருது, கலைமாமணி விருது, மூன்று முறை தமிழ் மாநில விருது மற்றும் ஆறு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் திரு.பாரதிராஜா அவர்கள். எனது நலனுக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரர், நம் பாசத்துக்குரிய திரு. பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகபட்டி அருகே உள்ள சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளாளகுளம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் ஆறு நபர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
அதேபோன்று, கடந்த மாதம் சென்னை கோயம்பேட்டில் உள்ள மதுபான பாரில் சிகெரெட் பிடித்தவர்களை வெளியே சென்று பிடிக்குமாறு கூறியதால் ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியயையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த சம்பவம் ஏற்பட்ட சில நாட்களுக்கு பிறகு, இதே மதுபான பாரில் ஏற்பட்ட மற்றொரு பிரச்னையில் இரண்டு பெண்கள் மீது வாகனத்தை ஏற்றி கொலையும் செய்யப்பட்டனர். தமிழக காவல்துறை மதுபான பாரில் ஏற்கனவே நடைபெற்ற ஆட்டோ ஓட்டுனர் தாக்குதலில் முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இரண்டு பெண் பிள்ளைகளின் உயிர்கள் பறிபோயிருக்காது என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாநகராட்சி கட்டிடத்திற்கு வெளியில் மதுபோதையில் காவலரையே மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இதுபோன்ற காட்சிகளை கடந்த திமுக ஆட்சியில் அதிகம் பார்த்து வந்த தமிழக மக்களுக்கு இன்றைக்கு ஆட்சி மாறியும் காட்சிகள் மாறாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு, தொடர்ந்து நடைபெறுகின்ற சமூக விரோத செயல்களை தடுக்க தவறினால், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது முற்றிலும் கடினமாகிவிடும். எனவே, தமிழ்நாட்டில் சட்ட விரோத செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடினமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நார்வேயில் நடைபெற்ற செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா அவர்கள் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனைப்படைத்திருப்பது நம் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. இதன் மூலம் நம் தமிழ்நாட்டிற்கும், இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ள இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக வரலாற்றில் இளம் வயதில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சேர்த்துள்ளதை எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
தமிழகத்தில் செஸ் விளையாட்டில் பங்குபெறுகின்ற இளம் வயதினர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கும் பிரக்ஞானந்தா அவர்கள் தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் மென்மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி காட்டிட எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர். மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் அவர்களின் நினைவாக, கடந்த 1983ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் அவர்கள், காயிதே மில்லத்தின் வாழ்க்கை குறிப்புகளை 5ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற செய்தார்.
அதே போன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத் அவர்களின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார். மேலும், கடந்த 2003ம் ஆண்டு அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் தமிழக அரசு சார்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில், காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது என்பதையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளதை அனைவரும் மனதில் வைத்து, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போன்று மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் வாழ்ந்திடவும், அனைவரிடமும் அன்பும், சமாதானமும் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும்அனைவரும் உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதற்காக 23 வயது இளைஞர் விஷ்ணு, கஞ்சா கும்பலால் அம்மிக்கல், சுத்தியல், பாட்டில்களை கொண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்காதவரை இது போன்ற அப்பாவி உயிர்கள் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது.
அதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் அடுத்த சின்னப்பம்பாளையம் நகர் பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் மீது குமாரபாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் குமாரபாளையம்-சேலம் பிரதான சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு இன்றளவும் பாதுகாக்கப்படாமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தவறு செய்யவே அஞ்சி நடுங்கினர். அத்தகைய நிலையை தமிழகத்தில் கொண்டு வந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்கக்கூடாது. அதேபோன்று துணிச்சலோடு நியாயத்தை தட்டிக்கேட்ட இளைஞர் விஷ்ணுவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்த அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு.மகேந்திரன் அவர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டும், அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது என வீடியோவில் பதிவு செய்து வைத்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஒரு எளிய தொண்டனுக்கு இருக்கின்ற கட்சிப்பற்று, தங்களை தலைவர்களாக எண்ணிக் கொண்டுள்ளவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது என்று தெரியவில்லை. அனைவரும் ஒன்றிணைந்தால்தான் கட்சிக்கு எதிர்காலம் என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு உண்மை. ஆனால் இதனை ஏற்க ஏனோ மறுக்கிறார்கள். கட்சியின் நலனையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு எப்பொழுது ஒரு இயக்கம் செயல்படுகிறதோ அப்போதுதான் அந்த இயக்கம் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறியதாக பார்க்கமுடியும். கட்சியின் விருப்பத்திற்கு மாறாக, மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு செயல்படுகின்ற யாரும் அரசியலில் வென்றதாக சரித்திரம் இல்லை. நம் இருபெரும் தலைவர்களாக விளங்கும் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிக்கின்ற கழகத்தொண்டர்கள் யாரும் இதுபோன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுக்கக்கூடாது என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
கட்சியின் நலனுக்காக தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட மகேந்திரனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை, 10 பேருடன் வந்த கஞ்சா, மது போதை கும்பல் கட்டை மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்குள்ள ஊழியர்களை தாக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. மக்களை அச்சுறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
பெட்ரோல் பங்க் அருகே சிறுநீர் கழித்தவர்களை தட்டிக்கேட்டதற்காக இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும்வரை சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது. எனவே, தமிழக மக்களின் பாதுகாப்பையும், இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சட்டவிரோத செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை அச்சுறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் திரு.மணிகண்டன் என்பவரை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டி அவரை தாக்கியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூட உரிமையாளர் செல்வகணேசன் அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் அங்கு சென்று, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த நபரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளதாகவும், மேலும், அந்த வழியில் சாலையோரமாக நடந்து சென்றவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே கும்பல் நேற்றைய தினமும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நெட்டூரில் 6நபர்களை தாக்கி காயம் ஏற்படுத்தி சென்றுள்ளதாகவும், பின்னர், அங்கிருந்து தப்பி செல்லும் போது மானூர் அடுத்த தெற்குப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் இருந்த முபாரக் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரையும் தாக்கி விட்டு சென்றுள்ளதாகவும்செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், தென் மாவட்டங்களில் இது போன்ற சட்டவிரோத செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் செயல்கள் இனி எங்குமே நடைபெறாதவாறு தமிழக காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டம் ஒழுங்கு சரியாக பேணி பாதுகாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் போன்று தற்போது எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராகும், மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பிரபல கார் பந்தய வீரருமான அன்பு சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த கடினமான நேரத்தில் திரு.அஜித்குமார் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், மனதைரியத்தையும் ஆண்டவன் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.அஜித்குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@SureshChandraa
#ajithkumar -
V K Sasikala
@AmmavinVazhi
விவசாயத்திற்கு தேவைப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. விவசாய பெருங்குடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரம் விலையை உடனே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களான பாக்டம்பாஸ் 20:20:0 ஒரு மூட்டை 1,750 ரூபாயில் இருந்து ரூ.400 உயர்ந்து, தற்போது 2,150 ரூபாய்க்கும், பொட்டாஷ் ஒரு மூட்டை 1,975 ரூபாயில் இருந்து, ரூ.275உயர்ந்து, 2,250 ரூபாய்க்கும், காம்ப்ளக்ஸ் 10:26:26 ஒரு மூட்டை 2,200 ரூபாயிலிருந்து 250உயர்ந்து, 2,450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், காம்ப்ளக்ஸ் 17:17:17ஒரு மூட்டை 1,900 ரூபாயிலிருந்து ரூ.300உயர்ந்து, 2,200 ரூபாய்க்கும், அமோனியா சல்பேட் 1,200 ரூபாயிலிருந்து ரூ 200 உயர்ந்து, 1,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை தற்போதுஆரம்பித்துள்ளனர். மேலும், நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட சாகுபடிக்கு தயாராக கோடை உழவு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில் உரத்தின் விலைகள் கடுமையாக உயர்ந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
உரங்கள் விலை உயர்வால் சாகுபடி செலவு அதிகரிக்கும் தற்போது ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ரூபாய் 30 ஆயிரம் தேவைப்படுகிறது. உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை உயர்வால் ஏக்கருக்கு 5,000 ரூபாய் வரை சாகுபடி செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நெல் உள்ளிட்ட தானியங்களின் சாகுபடியும் கடுமையாக பாதிக்கக்கூடும்.
தமிழக விவசாயிகள் ஏற்கனவே புயல், மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரம் விலையை உடனே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாய சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. கடந்த மாதம் சுமார் 3 மாதமான ஒரு குட்டி யானை தனியாகப் பிரிந்துள்ள நிலையில், தனது தாயையும், கூட்டத்தையும் தேடி அந்தக் குட்டி யானை பரிதவிப்புடன் சாலையோரங்களில் சுற்றி திரிந்துள்ள தகவல் அறிந்து வனத்துறையினர், அந்தக் குட்டி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக செய்திகள் வருகின்றன.
இவ்வாறு தாயை விட்டு பிரிந்த குட்டி யானையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் இது போன்று தாயை பிரிந்து வந்த குட்டி யானையை சென்னையிலுள்ள வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வந்து அங்கு தனியாக பராமரிக்கப்பட்டது. இதற்காக ஆவின் நிறுவனத்திலிருந்து பால் பவுடர் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது. மேலும், அதற்கு தேவையான உணவு, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகளை அளித்து சிறிது காலம் வளர்க்கப்பட்டு, அதன் பின்னர் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் கொண்டு சேர்த்து, அங்கும் குறிப்பிட்ட காலம் தனியாக வைத்து பராமரித்து அதன் பின்னர் மற்ற யானைகளோடு சேர்க்கப்பட்டது. எனவே, தற்போது அமைந்துள்ள புதிய அரசும் இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடித்து, சிறுமுகை வனப்பகுதியில் தாயை விட்டு பிரிந்த குட்டி யானையை காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் சோழம்பேடு சாலையில் உள்ள அம்மா உணவகத்தின் முகப்பில் அம்மா உணவகம் என்ற பெயரின் அருகே இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகைப்படம் நீக்கப்பட்டு இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
“அம்மா உணவகம்" என்பது ஏழை, எளிய சாமானிய மக்களின் பசியை போக்கிய ஒரு உன்னதமான மக்கள் நலத்திட்டம் ஆகும். இந்தியாவிலேயே முதல் முறையாக மலிவு விலையில் உணவு வழங்கும் “அம்மா உணவகம்”திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.
இதை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பார்வையிட்டு வியந்து பாராட்டியுள்ளன. அவர்களது மாநிலங்களிலும் செயல்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு அமைச்சர்களும் வந்து பார்வையிட்டுள்ளனர்.
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், கொரோனா போன்ற ஊரடங்கு நேரங்களிலும் தவறாமல் உணவளித்த ஓர் மகத்தான திட்டம்தான் அம்மா உணவகம்.
இத்தகைய சிறப்புமிக்க திட்டத்தை வகுத்து கொடுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகைப்படத்தை அம்மா உணவகங்களிலிருந்து அகற்றுவது வருத்தமளிக்கிறது.
அம்மா உணவகங்களை கடந்த திமுக தலைமையிலான அரசு மூடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்த முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே சமயம், மக்களுக்காக வாழ்ந்து, மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகைப்படத்தை மீண்டும் அம்மா உணவகங்களில் இடம்பெற செய்வது தான் ஏற்புடையதாக இருக்கும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளை சிறப்புடன் கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு துரோகங்கள் அழியட்டும், சகோதரத்துவமும், ஈகை குணமும் தழைத்தோங்கட்டும், தியாகசிந்தனைகள் மேலோங்கட்டும், மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்நாளில் உறுதியேற்போம்.
இறைவனே எல்லாம், அவருக்கு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கொண்டு, இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களது புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.
இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், இஸ்லாமியர்கள் பயன் பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அளித்து அவர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பதை இந்நாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த புனித நாளில் இறைவனின் அருளைப் பெற சிறப்பு தொழுகை செய்து, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, உற்றார் உறவினர்களுடன் ஒன்று கூடி உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள சூலப்புரம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ராமுத்தாய், தனிக்கொடி மற்றும் கணபதி ஆகிய மூன்று பெண்கள் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தபோது, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அருகில் இருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் திருமதி.வாசியம்மாள் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
இதில் உயிரிழந்த மூன்று பெண்களது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளிப்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு காணாமல் போன நிலையில் தற்போது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சிறுமியின் உடல் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான திரு.கே.ராஜன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்த திரு.கே ராஜன் அவர்கள், தமிழ் திரையுலகின் முன்னேற்றத்திற்காகவும், சிறிய தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும் பல்வேறு கருத்துகளை மிகவும் துணிச்சலாக வெளிப்படுத்தியவர்.
திரு.கே ராஜன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளில், இலங்கைத் தமிழர் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத்தமிழர்களுக்கும், கொடூரமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்த எம் உறவுகளின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான குரலாகவும், தமிழர் இனத்தின் உரிமை மற்றும் மரியாதைக்கான உறுதியான நினைவாகவும் இன்று நாம் தலைவணங்குகிறோம்.
இலங்கைத்தமிழர்களின் நலனுக்காக புரட்சித்தலைவர் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை உறுதுணையாக நின்று இருக்கிறார். அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து இருக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம்.
மேலும், மே 18 தினத்தினை நாம் தமிழ்குடிகளின் எழுச்சி நாளாக கருதவேண்டும். அதனை கருத்தில் கொண்டு பல்வேறுசாதியாகவும், குடிகளாகவும் பிரிந்து கிடக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
தமிழினப் படுகொலை நாளாக ஒவ்வொரு ஆண்டும் நினைவில் கொள்கின்ற வகையில் தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அமைந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து, அங்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே நாளில், இலங்கை போரில் உயிர் தியாகம் செய்த நம் உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வீர வணக்கம் செலுத்தி மலரஞ்சலி செய்ததை என்றென்றும் என் நினைவில் கொள்வேன் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஒவ்வொரு தமிழரின் தியாகமும் என்றும் வரலாற்றில் அழியாததாகும். அவர்களின் வேதனை, துயரம், போராட்டம் அனைத்தும் தமிழர் இனத்தின் மனசாட்சியாக என்றும் நிலைத்து நிற்கும். இந்த நினைவு நாளில் உயிரிழந்த அனைத்து தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிரடியாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.ஈரான் போர்ச்சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததோடு, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் ஏழை, எளிய,சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை உடனே திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத நிலையில், தற்போது அறிவித்துள்ள இந்த விலை உயர்வால், சென்னையில் 100 ரூபாய் 84காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 3 ரூபாய் 14 காசுகள் உயர்ந்து, 103 ரூபாய் 98 காசுகளுக்கும், 92 ரூபாய் 36 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 11காசுகள் உயர்ந்து, 95 ரூபாய் 47 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏழை, எளிய, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அதிகம் பாதிக்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சிஎன்ஜி எரிவாயு விலையும் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் ஆட்டோ மற்றும் வாடகை கார் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது இதனால் சாமானியர்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிப்புக்குள்ளாவார்கள்.
எனவே, ஏழை, எளிய, சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை உயர்வினை உடனே திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நாடு முழுவதும் மே 3–ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதியன்று நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், மறுதேர்வுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள நிலையில், ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்துப் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ரத்து அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் என்பதால், நீட் தேர்வு விலக்கு அவசியம் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் முதன் முதலில் வலியுறுத்தியிருந்தார். தமிழக கிராமப்புற ஏழை மாணவர்கள் எப்படியாவது மருத்துவராகும் கனவை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிதும் பின்வாங்காமல் நீட் தேர்வில் எப்படி வெற்றிபெறுவது என்பதை தாங்களாகவே முயற்சித்து, வேறு வழியின்றி தங்களை அதற்கு தயார்படுத்தி கொண்டு நீட் தேர்வை எதிர்கொண்டு வரும் வேளையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வு நடைமுறையில் ஏதாவது ஒரு குளறுபடி தொடர்ந்து ஏற்படுவது, மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு முறையில் ஒரு சிலர் குறுக்கு வழிகளில் மருத்துவ இடம் பெற்று விடுகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இது போன்று நீட் தேர்வு நடைமுறை பற்றி நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதால் தமிழக கிராம்ப்புற ஏழை மாணவர்கள், நீட் தேர்வால் பாதிப்படைவதாக கருதி, அதை ஏற்று கொள்வதில் விருப்பம் இல்லாத காரணத்தால், நீட் தேர்வை நீக்கிடவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டும் இருந்திருந்தால், நீட் தேர்வே தமிழகத்தில் நுழைய விடாமல் செய்திருப்பார்கள். இதன் காரணமாக, ஒவ்வொரு கிராமப்புற ஏழை மாணவர்களும், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்று நம்மோடு இல்லையே என்று ஏங்குகிறார்கள்.
எனவே, நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் மறுதேர்வை எவ்வித குளறுபடியும் இன்றி நடத்த வேண்டும் என மாணவ- மாணவியர்களின் சார்பாக மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், கிராமப்புற ஏழை மாணவச்செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மட்டுமாவது நீட் தேர்வை நீக்கிடும் சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து, விரைந்து செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டு கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நிலையில் இன்றைக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு முற்றிலும் தோல்வியடைந்து இருப்பதற்கு யார் காரணம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ கழகத்தொண்டர்கள், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் இன்றைக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர். இயக்கத்தின் நிர்வாகிகள் தனிமனித விருப்பு வெறுப்புகளை மறந்து தொண்டர்களின் நிலைமையை உணர வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று, இயக்கம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யார் காதிலும் விழவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டியதாயிற்று. இந்த முடிவு கூட தமிழக மக்களின் நலன் கருதிதான் எடுக்கப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என்று தான் தனியாக களம் காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைக்கு என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புதான் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவினை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லியும் வந்தேன். இதில் மறைந்துள்ள உண்மை என்னவென்றால், இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பெற்று இருக்க முடியும். அதற்கான சூழ்நிலை இருந்த நிலையில் தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் இன்றைக்கு புரட்சித்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்த துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தனக்கு தானே தலைவராக அறிவித்துக்கொண்டவர்கள், திமுகவினரோடு இந்த தேர்தலில் கைகோர்த்து நின்றதால்தான் இன்றைக்கு இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். இதனை இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது வெளிப்படுத்தியிருப்பது கழகத்தொண்டர்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையளிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணர்ந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இயக்கத்திற்கும்,கழகத்தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும்.“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை இனியாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.
“ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!” -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற பேரவைப் பொதுத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பு தம்பி திரு.C.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரைப் போன்று தமிழக மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்பான மக்களாட்சியை அமைத்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
#tvkfortn -
V K Sasikala
@AmmavinVazhi
அன்னையர் தின வாழ்த்துச்செய்தி
உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை. தேடித்தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை. அன்னையர்களின் நிபந்தனையற்ற அன்பு, ஆதரவு மற்றும் தியாகங்களால் தான்ஒவ்வொருவரும் நல்ல மனிதராகிறோம். தாய்மை உள்ளம் படைத்த அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா தான் நமது உயிர். நம்மை படைத்தவன் கடவுள் என்றால், நம்மை பெற்றெடுத்த தாய் நம் முதல் கடவுள். இறைவன் அனைத்து உயிர்களோடும் உடனிருந்து காப்பாற்றிட வேண்டி, தனது பிரதிநிதியாக தாயைப் படைத்துள்ளார். அனைத்து உயிர்களுக்கும் அன்னையே கண்கண்ட தெய்வம். எனவே நாம் உயிராக நேசிக்கும் நம் நாட்டை தாய் நாடு என அன்போடு அழைக்கின்றோம்.
களங்கமில்லாத ஆதரவும், கலப்படமில்லாத பாசமும் அளிக்கின்ற ஒரே ஜீவன் நம் தாய் மட்டுமே. தமிழக மக்கள், தங்களை பெற்ற தாயைப் போன்று, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் உண்மையான தாயின் பாசத்தையும், அன்பையும் உணர்ந்தார்கள்.
“அம்மா என்றால் அன்பு” என்ற பாடலுக்கு ஏற்ப தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். ஏழை எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அறிவை வளர்க்க விலையில்லா மடிக்கணினி, தடையின்றி கல்வி கற்க விலையில்லா மிதிவண்டி என பள்ளி குழந்தைகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள், அனைவரும் பசியாற அம்மா உணவகம், தாகத்திற்கு தண்ணீர் என ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை, ஒரு தாயின் இடத்தில் இருந்து தமிழக மக்களுக்கு வாரி வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்காக ஆற்றிய அரும்பணிகளை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
“தாய் இல்லாமல் நான் இல்லை, தானே எவரும் பிறந்ததில்லை” என்றபுரட்சித்தலைவரின் பாடல் வரிகளை மனதில் வைத்து, ஒவ்வொருவரும் அன்னையரை மதித்து போற்றுவோம். அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் கொண்டு, வாழும் கடவுளாக திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பேரவைப் பொதுத் தேர்தலில் மக்கள் தீர்ப்பும் அளித்துவிட்டனர். இதில் தமிழக வெற்றிக் கழகம் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தபோதும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்து இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த சூழ்நிலையில் “அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்” என்கிற பழமொழிக்கேற்ப அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இருவரும் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது. இது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? உங்களை போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கா வாக்களித்தனர். இல்லையே? பின்னர் எவ்வாறு மக்களின் தீர்ப்பை மாற்ற நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்களெல்லாம் திராவிட கட்சிகள் என்று சொல்லி ஏன் திராவிடத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள். மக்களின் உணர்வுகளுக்கு தயவு செய்து மதிப்பளியுங்கள்.
புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தீயசக்தி திமுக, புரட்சித்தலைவரையே தூக்கி எறிந்த கட்சி. புரட்சித்தலைவி அம்மா அவர்களை சட்டமன்றத்திலேயே அவமானப்படுத்திய ஒரு கட்சி. புரட்சித்தலைவி அம்மா மீதும், என் மீதும் தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு, எங்களை சிறையில் அடைத்த கட்சி, கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை கசக்கி பிழிந்த ஒரு மக்கள் விரோத கட்சி. இப்படிப்பட்ட ஒரு கட்சியோடு கூட்டு சேர உங்களுக்கெல்லாம் எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை. நீங்களெல்லாம் அதிமுகவினர் என்று சொல்லிக்கொள்ள என்ன உரிமை இருக்கிறது. அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சூழ்நிலையில்,கழகத்தொண்டர்கள் ஏற்கனவே சொல்லொணா துயரத்தில் வயிறெரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை மேலும் இழிவுப் படுத்தும் செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. கழக தொண்டர்களின் நலனைப் புறம்தள்ளிவிட்டு, தன்னலத்தை மட்டும் பெரிதாக நினைக்கும் சுயநலவாதிகள் எப்படி ஒரு தலைவராக தன்னை சொல்லிக்கொள்ள முடியும். இது போன்ற சுயநலப்பேர்வழிகளிடமிருந்து கழகத்தை காப்பாற்றத்தான் நான் தொடர்ந்து போராடி கொண்டு இருக்கிறேன்.
அதிமுக இன்றைக்கு சுயநலவாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது. தீயசக்தி திமுகவினரோடு கைகோர்த்து கொண்டு செயல்பட்ட காரணத்தினால்தான் மக்கள் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். இது இன்றைக்கு உண்மையாகிவிட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளினை விடுக்கிறேன். திமுக தயவில் ஆட்சி அமைகின்ற ஒரு வரலாற்று பிழையினை செய்து விடாதீர்கள். இப்படிப்பட்ட ஒரு பாவத்தை செய்தீர்கள் என்றால், உங்களை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். மேலும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மாக்களை கண்ணீர் சிந்த வைத்துவிடாதீர்கள். மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்ளுங்கள். என்ன தவறு செய்தோம், ஏன் மக்கள் புறக்கணித்தார்கள் என்று ஆராய்ந்து அதனை சரிசெய்து மீண்டும் தேர்தல் களத்தில் வெற்றி பெற முயற்சி செய்வதுதான் ஒரு நேர்மையான அரசியலுக்கு வழிவகுக்கும் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று தமிழக ஆளுநர் அவர்களும் தேர்தலில் அதிக எண்ணிக்கையை பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பு வழங்குவது தான் இயற்கை விதிகளுக்கு உட்பட்டதாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவா அவர்களின் தந்தையுமான திரு.ஆர்.பி.சௌத்ரி அவர்கள் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.ஜீவா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரை உலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு முதலில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் எனது பிரதான கோரிக்கையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், எதிரிகளும், துரோகிகளும் வீழ்த்தப்பட்டுள்ளார்கள். திமுக மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வரலாற்றில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் எனது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். எனது எஞ்சியிருக்கும் காலம் முழுவதும் தமிழக மக்களுக்காகவே உழைப்பேன் என்றும், தமிழக மக்களுக்கு என்றென்றும் துணை நிற்பேன் என்றும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
செட்டிநாடு கல்வி அறக்கட்டளையின் தலைவரும், புகழ்பெற்ற கல்வியாளருமான திருமதி.குமாரராணி மீனா முத்தையா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அம்மையார் திருமதி.குமாரராணி மீனா முத்தையா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், செட்டிநாடு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கும், அங்கு பயிலும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணையில் ஏற்பட்ட படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 நபர்கள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திருச்சியிலிருந்து மத்தியபிரதேசத்திற்கு சுற்றலா பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் அங்கு உள்ள பார்கி அணையில் படகில் சவாரி செய்த போது திடீரென்று படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பயணம் செய்த 41 நபர்களில் இதுவரை 28 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ளவர்களையும் மீட்க தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய பிரதேச மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய பிரதேச மாநில படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையையும், உறுதியையும் பறைசாற்றும் நாளாக கொண்டாடப்படுகின்ற இந்த ‘மே தின’ நன்னாளில் உலகெங்கிலும் வாழும் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது. மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதனை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே, ‘தொழிலாளர் தினமாக’ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
புரட்சித்தலைவர் அவர்கள் "உழைப்பவரே உயர்ந்தவர்” என்றுதான் எழுதி கையெழுத்து போடுவார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் உழைப்பின் வலிமையை அறிந்தவர். திரைப்படத்துறையில் நடித்த போதே உழைக்கும் வர்க்கத்தின் பெருமைகளை எடுத்து சொல்லும் விதமாக புரட்சித்தலைவர் அவர்கள் தான் நடித்த படங்களில் உள்ள பாடல்கள், கதாபாத்திரங்கள் மூலம் உழைப்பவர்களின் பெருமைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.
அதேபோன்று, உழைப்பாளர்களின் வலிகளையும், வேதனைகளையும் விளக்கும் வகையில் ‘தொழிலாளி’ என்ற திரைப்படத்தில்.
“ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி” என்ற பாடலில் ஒரு தொழிலாளியாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.
புரட்சித்தலைவர் அவர்கள் திரைப்படங்களில் பாடியதோடு இருந்துவிடாமல் முதல்வர் பதவியில் அமர்ந்ததும், உழைப்பாளர்கள் மேன்மை அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றினார்.
அதிலும் குறிப்பாக, 1984ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களது வாரிசுகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஈரோட்டில் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி புரட்சித்தலைவர் அவர்களால் நிறுவப்பட்டதையும், அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 1992-ஆம் ஆண்டு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டதையும் இந்நன்னாளில் பெருமிதத்துடன் எண்ணிப்பார்க்கிறேன்.
மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதையும், உழைக்கும் வர்க்கத்தினர் என்றென்றும் நினைவில் கொண்டுள்ளனர்.
உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த "மே தின"நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நேற்று இரவு முதல் இயக்கப்படாததால், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசு பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து உள்ளனர். பயணிகள் குடிதண்ணீர் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனர். அதேபோன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வாக்களிக்கச் செல்ல பேருந்துகள் இல்லாமல் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேருந்து வசதி இல்லாமல் இதே அவல நிலைதான் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நடைபெறும் நாளில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூர் செல்வது தடுக்கப்படுகிறதா? என்று எண்ணத்தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனும் வாக்களிப்பது அவர்களது ஜனநாயக உரிமை. அதை தடுக்கும் விதத்தில் செயல்படுகின்ற திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவினர் தமிழகத்தில் வாக்குப்பதிவு அதிகரிப்பதை தடுப்பதற்கு ஏதாவது தில்லுமுல்லுகளை அரங்கேற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழக வாக்காளர்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் அருகே கட்டனார்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 22 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த தனியார் நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் விதிகளுக்கு புறம்பாக தொழிலாளர்களை பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை விரைந்து மீட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல், விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் சுமார் 80க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், 170-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், இதில் சுமார் 220க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. தனியார் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக தெரிகிறது.
இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து போராடி, அவர்களை இம்மண்ணை விட்டு விரட்டியடித்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 270ஆம் ஆண்டு பிறந்தநாளை அனைவரும் கொண்டாடும் இந்நாளில் அவர்தம் நினைவை போற்றிடுவோம்.
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றிடும் வகையிலும், அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலையும், மணி மண்டபமும் அமைத்து கொடுத்ததையும், தீரன்சின்னமலை அவர்களின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததையும் இந்நாளில் மகிழ்ச்சியோடு எண்ணிப்பார்க்கிறேன்.
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நன்னாளில் போற்றி வணங்கிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 136வது பிறந்த நாளில், அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூர்ந்து, அவர்தம் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகச் சீர்திருத்தத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டவர்.
நாட்டில் கல்வி, சுதந்திரம், பெண்களுக்கான உரிமைகள் எல்லாவற்றையும் நம் சமூகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்று மிக சிறந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். தீண்டாமை இழிவுகளை ஒழிக்கவும், சாதி ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்து சமத்துவத்தை நிலைபெறச் செய்யவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து போராடியவர். மேலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்ததில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தவர். அதேபோன்று தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள் பலவற்றை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
சமூக நீதி போராளியாக திகழ்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை எந்நாளும் தொடர்ந்து பின்பற்றிட அனைவரும் உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
"புத்தாண்டு திருநாளாம் "விஷு" திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த விஷூ திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழுகின்ற இடங்களில் எல்லாம் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் விடாது பேணிப் பராமரிக்கும் மலையாள மக்கள், விஷு பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து விஷூக்கனி கண்டு புத்தாண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டி இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடுவார்கள்.
இந்நன்னாளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அன்போடு உபசரித்து அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து மகிழ்வதை மலையாள மக்கள் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
இந்தப் புத்தாண்டு மலையாள மக்களின் வாழ்வில், அமைதியையும், சந்தோஷத்தையும் வழங்கிடும் ஆண்டாக அமைந்திட வேண்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை விஷூ திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப்புத்தாண்டில், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
காலங்கள் பல மாறினாலும், கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய தொன்மையான மொழியாக விளங்கும் தமிழ் மொழியை பேசுகின்ற தமிழ் மக்கள், பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியினையும், வான் சாஸ்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து, அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதைச் சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் நிலைநாட்டியதை இத்தருணத்தில் எண்ணி மகிழ்கிறேன்.
'பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம் பேதைமை யற்றிடும் காணீர்!’ - என்ற பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு 'அம்மா இலக்கிய விருது' என்ற சிறப்புமிக்க விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், தகுதியுரையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்க செய்ததை பெருமிதத்துடன் எண்ணிப்பார்க்கிறேன்.
இந்த சிறப்புமிக்க நன்னாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று, வேற்றுமைகள் அகன்று, அன்பால் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியான வாழ்வு பெற, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களுக்கு, மீண்டும் ஒருமுறை என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக கேட்டறிந்தேன். அய்யா அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து, புதிய உத்வேகத்துடன் ஆண்டவனின் துணையுடன் மீண்டும் தமிழக மக்களை சந்திக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள் ஆண்டவனின் அருளால் பூரணமாக குணமடைந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களது நல்வாழ்விற்காகவும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல திரைப்பட பின்னணி பாடகி திருமதி.ஆஷா போஸ்லே அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரைப்படத்துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் மற்றும் கிராமி விருதுகள் பெற்று சாதனை படைத்து, இசை உலகில் தன்னிகரற்ற ராணியாக விளங்கிய திருமதி.ஆஷா போஸ்லே அவர்கள் தனது 80 ஆண்டுகால இசைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
இசை உலகில் மிக அதிக பாடல்களை பதிவு செய்து கின்னஸ் சாதனையை படைத்துள்ள திருமதி.ஆஷா போஸ்லே அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் -
V K Sasikala
@AmmavinVazhi
சத்தியம் தொலைக்காட்சிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்
சத்தியம் தொலைக்காட்சி 17ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளை துணிச்சலாக வெளிக்கொணர்ந்து, பாரபட்சமின்றி நடுநிலையான செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது மற்றும் விறுவிறுப்பான விவாதங்கள் என அனைத்து விதத்திலும் சிறப்புடன் பணியாற்றி வரும் சத்தியம் தொலைக்காட்சி, வரும்காலங்களிலும் தனித்தன்மையுடன் தொடர்ந்து ஊடகத்துறையில் தனது பங்களிப்பினை சிறப்புடன் ஆற்றிட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழகத்தில் ஊடகத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் சத்தியம் தொலைக்காட்சி மென்மேலும் வளர்ச்சி கண்டு, உச்ச நிலையை அடைய வேண்டுமென தங்கள் நிறுவனத்தினருக்கும், பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சிவகங்கை மாவட்டம் பனங்குடியை சேர்ந்த கழக நிர்வாகி திரு.V. பிரபு அவர்களின் தந்தை திரு.K வைரமணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.V. பிரபு அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி
பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன நிறைவோடு கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் மகாவீரர், சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் ஆவார். அதேபோன்று, கடைசி தீர்த்தங்கரராகவும் பகவான் மகாவீரரே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகவான் மகாவீரர் அவர்கள் இளமையிலேயே தனது சுக வாழ்க்கையைத் துறந்து, இயற்கைச் சக்திகளோடு தனது வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்து, அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்று அற்ற நிலையைக் கடைபிடித்து வாழ்ந்தவர். இந்த உயரிய கோட்பாடுகளை இவ்வுலகிற்கும் போதித்துள்ளார்.
அறநெறியினையும், ஆன்மீகநெறியினையும் தவறாமல் கடைபிடித்து வந்த மகாவீரரின் போதனைகளான, உண்மையையே பேசுதல், வன்முறையைத் தவிர்த்தல், எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், பற்றற்றிருத்தல் ஆகியவற்றை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைபிடித்து உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்து வந்தாலே நம் அனைவருடைய வாழ்விலும் நிச்சயம் வெற்றியடையமுடியும்.
பகவான் மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழுகின்ற அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ராமநாதபுரம் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் திரு.ஏ.எஸ்.முருகன் அவர்களின் தாயார் அம்மையார் திருமதி.செ.ராஜலட்சுமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.ஏ.எஸ்.முருகன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் -
V K Sasikala
@AmmavinVazhi
வெற்றி நிச்சயம்! நாளை நமதே! @drramadoss @aiptmmkofficial
-
V K Sasikala
@AmmavinVazhi
யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தி
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தையும்,மகிழ்ச்சியையும் கொண்டுவரும் ஆண்டாக இப்புத்தாண்டு விளங்க, அனைவருக்கும் எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பல்லாண்டு காலமாக வாழுகின்ற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு இத்தமிழ் மண்ணில், தங்கள் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மங்காது பேணிக்காத்து வருகின்றனர். அதே சமயம் அந்தந்த பகுதிகளில் வாழும் தமிழக மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிணைந்து அவர்தம் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, மொழி வேற்றுமை பாராமல் சகோதர, சகோதரிகளாய் அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தொழில், வணிகம், கல்வி, கலை போன்ற பல்வேறு துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்குப் மேலும் பெருமையை சேர்க்கிறது. இந்த ஒற்றுமையும், நட்புணர்வும் மேலும் வலுப்பெறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி, புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக இப்புத்தாண்டு விளங்க வேண்டும். மேலும், வளத்தையும், நலத்தையும், வெற்றியையும் தரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும் ஆண்டவனை வேண்டுகிறேன். இந்நன்னாளில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய யுகாதி திருநாள் நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மத்திய கிழக்கில் போர் தொடர்ந்துவரும் நிலையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் செய்திகள் வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறன்.
தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை என தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெரும்பாலான உணவகங்களில் இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே எரிவாயு சிலிண்டர் கையிருப்பு உள்ளதாகவும், விநியோகம் உடனடியாகச் சீராகவில்லை எனில், உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோன்று வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் சிரமப்படுவதாக பல இடங்களில் செய்திகள் வருகின்றன.
மேலும், ஆட்டோ கேஸ், சிஎன்ஜி போன்ற இயற்கை எரிவாயு பொருட்களும் கிடைக்காமல், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இயற்கை எரிவாயு பொருட்களின் விநியோகத்தையும் உடனே சீராக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினை உடனே சரி செய்ய வேண்டும். மேலும், இந்த நெருக்கடியான சூழலில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்குபவர்களையும், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்களையும் உடனே கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், தமிழகத்தில் தங்கு தடையின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனே மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனையாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதன் மூலம் நம் இந்திய தேசமே பெருமையடைகிறது. அதிலும் குறிப்பாக நம் சொந்த மண்ணிலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பல புதிய சாதனைகளை இந்திய அணி தற்போது படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் கோப்பையை வென்றுள்ள ஒரே அணி என்ற சிறப்பை இந்திய கிரிக்கெட் அணி பெற்றுறிப்பது அனைவருக்கும் பெருமையளிக்கிறது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் கோடிக்கணக்கான இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது.
தங்களது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஒற்றுமையோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பைங்காநாட்டை சேர்ந்த கழக உறுப்பினர் திரு.P.பிரபாகரன் அவர்களின் தந்தை திரு.V.T.பன்னீர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.பிரபாகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
“நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
அமிழ்ந்து பேரிருள் அறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ”
என்கிறார் மகாகவிபாரதியார். அதாவது சமுதாயத்தில் ஒருபெண் நல்லமுறையில் வாழவேண்டும் எனில் எதிர்த்துநிற்கும் துணிவு, தன்னம்பிக்கை, முயற்சி, ஊக்கம், வைராக்கியம் போன்ற உயர்ந்த இலட்சியங்களைக்கொண்டவர்களாக இருக்கவேண்டும். தவறினைச்சுட்டிக்காட்டி எடுத்துரைக்கும் மனோதிடம் உள்ள பெண்களினால் கவலையின்றி வாழமுடியும், அவளே மிகச்சிறந்த பெண் என்றும் கூறுகிறார். ஆணுக்குநிகராக பெண் என்றைக்கும் சளைத்தவர்இல்லை என்ற உண்மையை ஒவ்வொருநாளும் நிரூபிக்கும் பெண்ணினத்தின் அன்பு, தியாகம்,கடினஉழைப்பு,பெருமைகளை உலகிற்கு எடுத்துகாட்டும் விதமாக,ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் நாள் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைத்துமகளிருக்கும் எனது இதயம்கனிந்த மகளிர்தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒருகுடும்பத்தில் ஒருபெண் படித்தால்போதும், அந்த குடும்பமே மேன்மை பெறும். பெற்றோர்கள் தங்கள் பெண்குழந்தைகளை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டும். இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறை, ராணுவம், விமானிகள், கப்பல்மாலுமிகள், ரயில்வே, தொழில்துறை, அரசியல் என எல்லா துறைகளிலும் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு பெண்ணும் இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு வரம். பாலின சமத்துவம், பாலினநீதிக்காக வாதிட்ட பெண் தலைவர்கள் மற்றும் பெண்உரிமை ஆர்வலர்களை நினைவுகூரும் நாளாக சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், "பெண்கள் எளிதில் வெளிக்கொண்டு வரமுடியாத அரிய திறன்மிக்க களஞ்சியங்கள்" என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹிலாரிகிளின்டன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதையும் இந்நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.
ஒரு நூற்றாண்டு காலப்பெண்களுடைய போராட்டங்களின் வலிநிறைந்த வாழ்க்கையை இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் நினைத்துப்பார்க்க வேண்டும். மேலும், இந்தியசுதந்திர வரலாற்றிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் தமிழக பெண்களின் பங்கு மகத்தானது. தெற்கே வீரமங்கை வேலுநாச்சியார், வடக்கே ஜான்சிராணி போன்றவர்களின் வீரம் போற்றப்படுகிறது.
பெண்களுக்காக, அம்மா ஆட்சிக்காலத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டுவந்தோம். பெண்சிசுக்கொலையைத் தடுத்திட தொட்டில்குழந்தை திட்டம்; தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை இனிஷியலாகப் போடும் அரசாணை, "குடிமகள்" என்ற சொல்லை பயன்படுத்துதல், இந்தியாவிலேயே முதல்முறையாக அனைத்துமகளிர் காவல்நிலையங்கள், மகளிர்சிறப்பு அதிரடிப்படை, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்குதங்கம்; மகப்பேறு நிதியுதவி, குழந்தை நலப்பரிசுபெட்டகம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறுவிடுப்பு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர்சுயஉதவிக் குழுக்கள், வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரிநாப்கின், பேருந்துநிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டதனிஅறைகள், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% பதவிகளை ஒதுக்கீடுசெய்யும் சட்டம் போன்ற உன்னததிட்டங்களை அளித்துள்ளோம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரியமுயற்சியால்,தமிழகத்தில் பெண்கல்வி சதவிகிதமும், பெண்குழந்தை பாலின விகிதமும் உயர்ந்தது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்ததற்கு,அம்மா அவர்கள்தான் மிகமுக்கிய காரணமாக விளங்குகிறார். அன்றைக்கு நாங்கள் விதைத்த விதையைத்தான்,இன்றைய ஆட்சியாளர்கள் அறுவடைசெய்கிறார்கள்.
அம்மாஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்ததமிழ்நாடு இன்றைக்கு முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொருநாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாதநாளே இல்லை என்ற அளவுக்கு பெண்களின் நிலைமிகவும் மோசமாகிவிட்டது. பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராகவும்,பெண்குழந்தைகளுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் நடக்கிறது.வெறும்சலுகைகள் தருவதால் பெண்களின் தேவைகள் பூர்த்தியாகிவிடாது. பெண்களின் சுதந்திரமும்,பாதுகாப்பும் ஒவ்வொருநாளும் உறுதிசெய்திடவேண்டும்.
எத்தகையசோதனைகள் எதிர்நின்றாலும் அவற்றையெல்லாம் முறியடித்து, துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும், அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையைபதித்து, புதியசரித்திரம் படைக்கவேண்டும் எனவாழ்த்தி, பெண்கள் அனைவருக்கும் மீண்டும் எனதுநெஞ்சார்ந்த மகளிர்தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாங்கள் எடுத்து வந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் திடீரென தாக்குதல் நடத்தியதில் 2 நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. மேலும், இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் 9 நபர்கள் வரை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து இருப்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. இதுதான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திமுக என்றைக்கு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதோ அன்று முதல் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டது. மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள டீக்கடைக்கு கூட செல்ல முடியாத வகையில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து உள்ளது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் இல்லாத ஒரு அவல நிலை உள்ளது. இந்த அளவிற்கு தமிழகத்தை ரவுடிகளின் ராஜ்ஜியமாக, போதை கூடாரமாக மாற்றிய பெருமை திமுகவையே சேரும். இந்த மக்கள் விரோத ஆட்சி என்றைக்கு தமிழகத்தில் இருந்து அகற்றப்படுகிறதோ அன்றுதான் மக்களால் சுதந்திரமாக வாழமுடியும். தமிழக மக்களுக்கு தங்களது உயிர் வேண்டுமா அல்லது திமுகவினர் தேர்தலுக்கு முன்பாக தரும் 5,000 ரூபாய் போதுமா என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது. எனவே தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் பொதுத் தேர்வினை எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”.
அதாவது, “ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, மாணவச்செல்வங்கள் கல்வி செல்வத்தை பெறுவதன் மூலம் அவர்களது வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை காண முடியும் என்பதை கருத்தில் கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்.
பொதுத் தேர்வை எண்ணி எந்தவித பயமும் இல்லாமல், தைரியமாக எழுதுங்கள். எந்த ஒரு செயலையும் தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் செய்யும்போது அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். அன்புக்குரிய மாணவச்செல்வங்களே தேர்வு காலங்களில் எந்தவித கவனச்சிதறல்களும் ஏற்படாதவண்ணம் விழிப்புடன் செயலாற்றுங்கள். செல்போன் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். உங்களுடைய முழு நேரத்தையும் படிப்பதற்காக செலவிடுங்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள்.
அதேபோன்று, மாணவச்செல்வங்கள் நல்ல ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் நன்றாக உறங்குங்கள். உங்கள் உடல்நிலையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோன்று பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். அவர்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவர்கள் படிப்பதற்கு எந்தவித இடையூறும் இல்லாத சூழ்நிலைகளை அமைத்துக் கொடுங்கள்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியை பொறுத்து தான் அமைகிறது. நம் வருங்காலம், இளம் சமுதாயத்தினரின் கையில்தான் உள்ளது. நம் மண்ணில் பிறந்த மாணவச்செல்வங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து, நம் தேசத்திற்கே பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். மாணவச்செல்வங்களே உங்களில் பலர், எத்தனையோ உயிர்களை காக்கும் மருத்துவர்களாக வரலாம், நாட்டை காக்கும் ராணுவ அதிகாரிகளாக வரலாம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக வரலாம், விஞ்ஞான உலகில் வியத்தகுசாதனைகளை படைக்கும் பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களாக வரலாம், உயர்ந்து ஓங்கி நிற்கும் கட்டடங்களை கட்டும் பொறியாளர்களாக வரலாம், உலகமே வியந்துப் பார்த்த விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் போன்று வரலாம். இதுபோன்று எண்ணற்ற துறைகளில் வல்லுனர்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது ஆசை.
எனவே, நம் மாணவச்செல்வங்கள் நல்ல உயர்கல்வி பெற்று, தங்களுடைய வாழ்க்கையில் உன்னத நிலைகளை அடைய, இப்பள்ளிப் பருவ பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகவும் அத்தியாவசியமானது. எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் நம் மாணவச்செல்வங்கள் அனைவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி, அதில் வெற்றியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி.
நாளை நமதே!
வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி,
வணக்கம். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பைங்காநாட்டை சேர்ந்த கழக உறுப்பினர் திரு.A.விக்னேஷ் அவர்களின் தந்தை திரு.R.V.அசோகன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.விக்னேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான அய்யா திரு.R.நல்லகண்ணு அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறேன்.
அய்யா அவர்கள் இன்று நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவரது பெயரும், புகழும் இவ்வுலகில் என்றென்றும் நிலைத்திருக்கும். தமிழகத்தில் உள்ள அனைவருடைய உள்ளங்களிலும் அய்யா அவர்கள் நிறைந்து இருக்கிறார்கள். சுதந்திர போராட்ட வீரரான அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக உழைத்தவர்.
நேர்மைக்கு இலக்கணமான அய்யா அவர்கள் தன்னலமற்ற ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டு அய்யா அவர்களின் பிறந்தநாளில் அவரோடு தொலைபேசியில் பேசியபோது, அய்யா அவர்கள் என்னை மனதார வாழ்த்தியது, இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
அய்யா நல்லகண்ணு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான அய்யா திரு.R நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
சுதந்திர போராட்ட வீரரான அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக உழைத்தவர். அய்யா நல்லகண்ணு அவர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு, தன்னலமின்றி,அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர். சுமார் 80ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டிருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ எந்த பதவியிலும் இருந்தது கிடையாது. ஆனால் மக்கள் மன்றத்தில், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும் அயராமல் தொண்டாற்றியவர்.
எளிமையின் சிகரமாக, நேர்மையின் இலக்கணமாக விளங்கிய அய்யா திரு.நல்லகண்ணு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய அய்யா திரு. நல்லகண்ணு அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
எளிமையின் சிகரமானஅய்யா திரு. நல்லகண்ணு அவர்கள் ஆண்டவன் அருளால் முழுமையாக உடல்நலம் பெற வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நாளை நமதே! வெற்றி நிச்சயம்!
2 media couldn't be displayed. See them on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கழக நிர்வாகி திரு.K.R.S.மயில்சாமி அவர்களின் தந்தையாரும், எடப்பாடி ஸ்ரீ பருவதராஜகுல முன்னாள் காரியக்காரருமான திரு.ராஜு என்கிற சுப்ரமணியம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.மயில்சாமி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தெற்கு ஒன்றியம், நெய்வேலி ஊராட்சியை சேர்ந்த கழக ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் திரு.R.செல்லத்துரை மற்றும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.R.அண்ணாதுரை ஆகியோரின் தாயார் திருமதி.R.முத்துலெட்சுமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தங்களது தாயாரை இழந்து வாடும் திரு.R .செல்லத்துரை மற்றும் திரு.R.அண்ணாதுரை ஆகியோருக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகஅரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத சம்பிரதாய விளம்பர அறிக்கை.
திமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தனர். திமுகஅரசு 5 வருடங்களை கழித்த நிலையில் 10% வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் சொன்ன திட்டங்கள் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படாமல் வெற்று அறிவிப்புகளாகவே காகிதத்தில் மட்டும் இருக்கிறது.
இதுவரை 41 புதிய அரசுதொழிற்பயிற்சி நிலையங்கள் அமைத்திட ரூ298 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தெந்த இடங்களில் தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டது என்ற எந்த விபரமும் இல்லை. தமிழக மக்கள்தான் இதை கண்டுபிடித்து கொடுக்கவேண்டும்.
ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாக பலவித கம்பிகட்டும் கதைகளை அவிழ்த்துவிட்ட திமுகஅரசு ஆட்சியே முடிந்த நிலையில் போகிற போக்கில் புதிதாக கப்பல் கட்டும் கதையையும் சொல்லியிருக்கிறது.
ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டம் என்று பக்கம் பக்கமாக அறிவித்து என்ன பயன்?டெல்டா மாவட்டங்களில் வடிநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாராமல் இருப்பதால் இரண்டு நாட்கள் மழை பெய்தாலே பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடும் நஷ்டம் அடைகின்றனர். மழைநீரை சேகரிப்பது, தடுப்பணைகள் கட்டுவது போன்ற நீர்மேலாண்மை திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ6,121 கோடி மதிப்பீட்டில் 12,087 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கியதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன? எங்கு நிறுத்தி வைத்துள்ளீர்கள்? தமிழக சாலைகளில் பராமரிப்பு இல்லாத பழைய பேருந்துகளும், படிக்கட்டுகள் உடைந்த, இருக்கைகள் கழண்டு கீழே விழும் பேருந்துகளும்தான் பயன்பாட்டில் உள்ளன. நீங்கள் அறிவித்துள்ள 12,087புதிய பேருந்துகள் எங்கே இருக்கிறது என்று மக்களும் காண ஆவலோடு இருக்கிறார்கள்.
திமுகஆட்சி வந்தது முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை போட்டு எந்த பயனும் இல்லை. டெல்டா மாவட்டங்களில் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் முறையாக இயங்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கபோதுமான கிடங்குகள் இல்லை. நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது. ரத்தத்தை வியர்வையாக சிந்தி கடுமையாக உழைத்த விவசாயிகள் திமுக ஆட்சி எப்போது முடியும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமக்கள் பயனடையும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டு, மக்களை ஏமாற்றியது தான் திமுகஅரசின் 5 ஆண்டு சாதனை. 2026-27ஆம் ஆண்டில் திமுகஅரசு ரூ1.78 லட்சம் கோடி அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. திமுக பொறுப்பேற்றபோது தமிழக அரசின் கடன் ரூ4.56 லட்சம் கோடியாக இருந்தது, இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையாக 5 ஆண்டுகளில் ரூ6.15 லட்சம் கோடி கடன் பெற்று, இன்றைக்கு தமிழகத்தின் மொத்த கடன்சுமை ரூ10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்சுமை 2லட்சம் கோடியையும் சேர்த்தால் சுமார் 13 லட்சம் கோடிக்கு மேல் மொத்த கடன்சுமையை தமிழகத்தின் தலையில் வைத்துவிட்டு, திமுக வீட்டுக்கு செல்ல இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் தலையிலும் 1.26 லட்சத்திற்கு மேல் கடன் சுமையை வைத்ததுதான் திராவிட மாடல் திமுகஅரசின் வரலாற்று சாதனை! நாட்டிலேயே அதிக கடன்சுமை கொண்ட முதல் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையாகவும் விளங்குகிறது.
அம்மா ஆட்சியில்2016-17 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு திமுகஆட்சியில் 2026-27ஆம் நிதியாண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.48 ஆயிரம் கோடியாக உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் ஒன்றுவிடாமல் செயல்படுத்திக்கொண்டு, தனது நிர்வாகதிறமையால் வருவாய் பற்றாக்குறையையும் அதிகரித்துவிடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய திமுகஅரசு மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தாமல், வருவாய் பற்றாக்குறையை மூன்று மடங்காக அதிகரித்து வைத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது.
எனவே, இந்த திமுக விளம்பர ஆட்சி என்றைக்கு வீட்டுக்கு அனுப்பப்படுகிறதோ அன்றுதான் தமிழகம் வளர்ச்சியடையும். இதனை நிறைவேற்ற தமிழகமக்களும் தயாராக இருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்த மன்னராட்சிக்கு தக்க பாடம் புகட்ட மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு மகளிருக்கு ரூ.5000 வழங்கியிருப்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு மாய்மாலவித்தை தானேதவிர வேறொன்றும்இல்லை. தமிழகத்தில் திமுக பொறுப்பேற்றது முதல்தமிழக மக்களை கசக்கி பிழிந்து பல்வேறுஇன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டு தற்போது தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என இதுபோன்றநடவடிக்கைகளில் திமுகவினர் இறங்கியுள்ளனர். தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள்,இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள். மக்களை குறைத்து எடைபோட்டால் கடைசியில்ஏமாறப்போவது திமுகவினர்தான் என்பதைஇந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஒருதிட்டத்தை யாரோ முடக்கப்பார்க்கிறார்கள் என்று ஒரு கற்பனைகதையினை கட்டிவிட்டு மூன்று மாதத்திற்கான உதவித்தொகையை வழங்குவதாக சொல்வது மிகவும் வேடிக்கையாகஇருக்கிறது. மேலும், கோடைக்காலத்திற்கு உதவித்தொகை என்ற பெயரில் ரூ2000 கொடுத்த்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில்கோடைக்காலமே வரவில்லையா? ஏதோஇந்தவருடம் மட்டும்தான் கோடைகாலம் வருவதுபோன்று ஒரு வேஷத்தை போட்டு மக்களைஏமாற்ற திமுக நினைக்கிறது. மேலும், திமுகமீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம்ரூ2000 தரப்போவதாக சொல்வதும் தேர்தலை மனதில்வைத்துதானே தவிர வேறொன்றும் இல்லை.
திமுகவினர் கடந்த தேர்தலில்505 வாக்குறுதிகளைகொடுத்து, அதில் 10 சதவீதம்கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது மீண்டும்வாக்குறுதிகளை அளித்தால்மக்கள் அதனை படித்துக்கூட பார்க்கமாட்டார்கள் என்ற உண்மையைஅறிந்தவுடன் பணத்தைகொடுத்தால் மக்கள்எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்றுதிமுகவினர் தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் ஏமாறப்போவது மக்கள்இல்லை திமுகவினர்தான் என்பதைதெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவினர் கடந்த தேர்தலின் போதுஅனைத்துமகளிருக்கும் ரூ1000 தருவதாகதேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, ஆட்சிக்குவந்து 28 மாதங்கள் கழித்து 1 கோடிபெண்களுக்குமட்டும் கொடுத்து,மற்றவர்களுக்கு தகுதியில்லை என்று நிராகரித்தனர். மேலும் கோடைகாலநிதி என்று அறிவித்து இருக்கிறார்கள். மழை வெள்ளத்தால் தமிழகமக்கள் தங்கள்வீடு, உடைமைகளை இழந்து, வயிற்றுக்கு சோறுகிடைக்காமல், குடிதண்ணீர் கூடகிடைக்காமல் தவித்து நின்றநேரத்தில் கண்டும்காணாமல் இருந்த திமுகஅரசு, விவசாயபெருங்குடி மக்கள் மழை வெள்ளத்தின்போதுகடுமையாக பாதிப்படைந்து நிவாரணஉதவி கிடைக்காமல் பரிதவித்து நின்றபோதுஏறெடுத்தும் பார்க்காத திமுக அரசு தற்போது கோடைகால நிதிஎன்ற பெயரில் மக்களை ஏமாற்ற நினைப்பதுவன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுகவினர் செய்தது என்ன? அம்மாஆட்சியில் கொண்டு வந்த அனைத்து மக்கள்நலத்திட்டங்களையும் நிறுத்தியதுதான் மிச்சம். தமிழகத்தில் இன்றைக்கு பாதுகாப்பு என்பதுயாருக்கும் இல்லை. குறிப்பாக பெண்கள் யாருமேவெளியில் நடமாடக்கூட முடியவில்லை. தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை கொண்டுவந்து அதில் தெரியாமல் மாட்டிக்கொண்டஎண்ணற்ற நம் பிள்ளைகளின் வாழ்வைசீரழித்ததுதான் திமுகவினர் செய்த சாதனை. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டின்பொருளாதாரம் இன்றைக்கு படுபாதாளத்தில்கிடக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபோது 5.18 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன்சுமையை இன்றைக்கு இரு மடங்காக 10 லட்சம் கோடிக்கு கொண்டு வந்து சேர்த்தபெருமை திமுகவை சேரும். மேலும் அனைத்துபொதுத்துறை நிறுவனங்களின் கடன்தொகை5.50 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம்தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும்ரூ1.95 லட்சம் கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் உள்ளமுதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியதுதான் திமுக தலைமையிலான திராவிட மாடல்அரசின் ஒரே சாதனை. தமிழகத்தில் உள்ள நிதிநிலைமையைப் பற்றி நன்றாக அறிந்தபோதும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்றுதிமுகவினர் நினைக்கிறார்கள்.
ஆவின் பால்பொருட்களின்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்துவரிஉயர்வு என பல்வேறு வழிகளில் வரிகளாகவும், அபராதமாகவும் தமிழக மக்களிடமிருந்து திமுகவினர் லட்சக்கணக்கான ரூபாய்களை கொள்ளைஅடித்துவிட்டு தற்போது ரூ5000மட்டும்கொடுத்து ஏமாற்றப்பார்க்கிறார்கள். இது ஏழைஎளியசாமானிய மக்களிடமிருந்துபெற்ற பணம் தானே தவிர, திமுகவினரின் கட்சிநிதியிலிருந்து ஒன்றும் கொடுக்கப்படவில்லை. தமிழக மக்களாகியஉங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்தஉங்களுடைய பணத்திலிருந்து ஒருசதவிகிதத்தை மட்டும் தற்போது திமுகவினர் கொடுத்துஉங்களை ஏமாற்றத் துடிக்கிறார்கள். ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள் என்பதற்கேற்ப, திமுகபோன்ற ஏமாற்று பேர்வழிகளை வீட்டுக்கு அனுப்பமக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர். எனவே, வரும் சட்டமன்றதேர்தலில் மக்கள்பணத்தைகொள்ளையடிக்கும் திமுகதலைமையிலானகொடுங்கோல் ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில்தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஊரை சேர்ந்த மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர சங்கத் தலைவரும், பரதவர் மீனவர் சமுதாய தலைவருமான முனைவர் திரு.எஸ்.ஜே.கயாஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.எஸ்.ஜே.கயாஸ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.சே.பசும்பொன் பாண்டியன் அவர்களின் தாயார் திருமதி.சே.முத்துச்சரம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.சே.பசும்பொன் பாண்டியன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான விருது பெற உள்ளவர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற இரைப்பை குடலியல் நிபுணரான மருத்துவர் திரு.கள்ளிப்பட்டி இராமசாமி பழனிசாமி அவர்களுக்கும், சமூக சேவைக்காக ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள டென்னிஸ் ஜாம்பவான் திரு.விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கும், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான திரு.மம்மூட்டி அவர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு.கே.விஜயகுமார் அவர்களுக்கும், இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் மிகச் சிறந்த எழுத்தாளராக விளங்கும் அன்பு சகோதரி திருமதி.சிவசங்கரி அவர்களுக்கும், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சிறந்து விளங்கும் திரு.கே.ராமசாமி அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் திரு.எச்.வி.ஹண்டே அவர்ளுக்கும், கலைத்துறையில் சாதித்த கர்நாடக இசை பாடகிகள் காயத்ரி பாலசுப்ரமணியம் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், கலைப்பிரிவில் ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் அவர்களுக்கும், மருத்துவத்துறை பிரிவில் கால்நடை மருத்துவர் திரு.புண்ணியமூர்த்தி நடேசன் அவர்களுக்கும், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஐம்பொன் சிலை சிற்ப கலைஞரான ராஜாஸ்தபதி திரு.காளியப்ப கவுண்டர் அவர்களுக்கும், புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் திரு.பக்தவத்சலம் அவர்களுக்கும், சென்னை ஐஐடி இயக்குநர் திரு.வீ.காமகோடி அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோத்தகிரி ஆலு குறும்பர் பழங்குடியினத்தை சேர்ந்த ஓவியர் மறைந்த திரு.கிருஷ்ணன் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் திரு.கே.பழனிவேல் அவர்களுக்கும், கடந்த 2024ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை மற்றும் 2025ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய இரு ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு.ரோகித் சர்மா அவர்களுக்கும், கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மகளிர் உலக கோப்பை ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவர்களுக்கும், நடிகர் திரு.மாதவன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த 14 நபர்களுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலம், பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள 19பெண்களை உள்ளடக்கிய 131 நபர்களுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்
நமது தாய் மொழியாம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை நீத்த, மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினத்தில் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்திடுவோம்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் திணிக்கப்பட்ட இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். "இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று வீர முழக்கமிட்டு, விஷம் அருந்தியும், தூக்கிட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியும் உயிர் நீத்த மாணவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தி தியாகிகளின் பெருமைகளையும், நம் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
அறிஞர் அண்ணாவின் வழியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தஞ்சையில் 1995-ஆம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடத்தி நம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்ததையும் இந்நாளில் நினைவுகூற விரும்புகிறேன்.
அன்னைத் தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றிடும் வகையில், நம் கழகத் தொண்டர்கள், குறிப்பாக மாணவச் செல்வங்கள் அனைவரும், தியாக செம்மல்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, தமிழ் மொழியின் சிறப்புகளை மென்மேலும் உயர்த்திட உறுதியேற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவைஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். ஆனால், இன்றைக்குதங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்துஇருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும்.
அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது.
இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும்தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்கள் திமுக ஒரு தீயசக்தி என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம்,
வரலாறு படைப்போம்.
நாளை நமதே!
வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி,
வணக்கம். -
V K Sasikala
@AmmavinVazhi
செங்கல்பட்டு மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே நெம்மேலியில் புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்காக திமுக தலைமையிலான அரசு திட்டமிட்டு இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனைபல்வேறு கடல்வாழ் உயிரினங்களை அழிக்கக்கூடிய வகையில் முற்றிலும் இயற்கைக்கு மாறான செயலாகத்தான் பார்க்கமுடியும். திமுக தலைமையிலான அரசு வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வெற்று விளம்பரத்திற்காக அவசரக்கோலத்தில் அறிவித்துள்ள இத்திட்டத்தால் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த புதிய நீர்த்தேக்க திட்டத்தினை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புதிய நீர்த்தேக்க திட்டத்தை நெம்மேலியில் முட்டுக்காடு முகத்துவாரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடி மதிப்பீட்டில்அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிதான் சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியுள்ள ஒரே உவர்நீர் ஈரநிலமாக இருந்து வரும் நிலையில் ஏராளமான உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாததாக விளங்குகிறது. பழைய மாமல்லபுரம் சாலையின்மேற்கு பகுதியில் 500 கிராமங்களில் உள்ள பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் கடலில் கலக்கிறது. இதன் காரணமாக இங்கு மீன், இறால், நண்டு, கிளிஞ்சல்கள் இயற்கையாகவே வளர்கின்றன. எனவே, இது இயற்கையாக அமைந்துள்ள தனித்த சூழல் தன்மைகளைக் கொண்ட ஒரு உப்பங்கழி, கழுவேலி நீர்நிலையாக அமைந்துவிட்டது. இதனை அழித்து புதிதாக நீர்த்தேக்கம் உருவாக்குவது என்பது ஒரு அறிவியல்பூர்வமான நடவடிக்கையாகாது.
மேலும், இதுபோன்ற உப்புநீர் சூழ்ந்த பகுதிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை மாற்றி அமைப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
மாமல்லபுரம் முதல் கானத்தூர், ரெட்டிக்குப்பம் பகுதி வரை 18 மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மீனவர்கள் மழை, புயல், வெள்ளம் காலங்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத போது, இந்த உபவடி நிலப்பரப்பில் தான் இறால், நண்டு மற்றும் மீன் ஆகியவற்றை பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகின்றனர்.
எனவே, இப்பகுதியை சேர்ந்த மீனவர் அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர்களது நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இன்றைக்கு தமிழக முதல்வர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
நடைமுறைக்கு ஒத்துவராத இந்த திட்டத்திற்கு 15 நாட்களில் அரசு அவசர அவசரமாக அனுமதி வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எல்லாவற்றிற்கு மேலாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியஇந்த திட்டத்தை திமுக தலைமையிலான அரசு உடனே கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அன்புக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கலாச்சார சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் நமது பழமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்திடும் வகையில்,தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறு பழமை மாறாமல் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்துவந்த மரபுகளை அழித்திடும் வகையில் தற்போது திமுக தலைமையிலான அரசு மதுரையில் நடந்து வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் விளம்பர பதாகைகளை வைத்து மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் கலாச்சாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டை வெறும் ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கமுடியாது. ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றைக்கும் தமிழர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. இது தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாக விளங்கக்கூடியது. ஜல்லிக்கட்டு காளைகளை தங்களுடைய பிள்ளைகளாக வளர்த்து பாதுகாப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வியல் முறையாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள், காளைகளை தங்கள் பிள்ளைகளைப்போன்று அன்புடன் நேசித்து, பராமரித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து, மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் வீரமாக நின்று விளையாடும் அழகை யாராலும் மறக்க முடியாது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம் மரக்கம்புகளை கொண்டு வாடிவாசல் அமைப்பதும், மைதானத்தை சுற்றி மரக்கம்புகளால் ஆன வேலிகளை அமைப்பதையும் பார்த்து இருக்கிறோம்.
ஆனால், தற்போது மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வாடி வாசல் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளகம்பி வேலிகளின் மீது திமுக அரசு அதிகமான விளம்பர பதாகைகளை வைத்துள்ளதால் மாடுபிடி வீரர்களுக்கு பெரிய அளவில் இடையூறும், பாதுகாப்பு இல்லாத ஒரு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில முரட்டு காளைகள் சீறி வரும்போது மாடுபிடி வீரர்கள் அங்குள்ள கம்பி வேலிகளை பிடித்துதான் மேலே ஏறி தங்களை பாதுகாத்து கொள்வார்கள். ஆனால் கம்பிவேலி முழுவதும் அரசின் விளம்பர பதாகைகள் ஆக்கிரமித்து இருப்பதால் தற்போது கம்பிகளை பிடிக்க வழியில்லாமல் மாடுபிடி வீரர்கள் தவிப்பதை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது. இளைஞர்களின் உயிரை விட இந்த அரசுக்கு விளம்பரம்தான் முக்கியமாக உள்ளதா? இவற்றையெல்லாம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், திமுகவைச் சேர்ந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அங்கேயே உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே மாடுபிடி வீரர்கள் அணிகின்ற டி-ஷர்ட் முழுவதும் உங்கள் விளம்பரம்தான் உள்ளது. தற்போது அது போதாது என்று விளம்பர பதாகைகளையும் வைத்து அவர்களை ஏன் இவ்வாறு துன்பப்படுத்துகிறீர்கள். மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டால் திமுக தலைமையிலான அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். நம் இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு அரசே இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கண்டனத்திற்குரியது.
எனவே, இளைஞர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் வகையில் வாடிவாசல் அருகில் உள்ள அனைத்து விளம்பர பதாகைகளையும் உடனே அகற்றவேண்டும். அதேபோன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அனைத்து இடங்களிலும் மாடுபிடி வீரர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்றவேண்டும். வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இளைஞர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் 163ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைவருக்கும் “தேசிய இளைஞர் தின” நல்வாழ்த்துகளை தெரிவிப்பதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறு வயதிலிருந்தே எல்லாவற்றையும்ஆராயும் குணம் கொண்ட, "நரேந்திரநாத் தத்தா" என்ற இயற்பெயர் கொண்ட சுவாமிவிவேகானந்தர் அவர்கள், பின்னாளில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார். மற்ற சீடர்களிடமிருந்து வேறுபட்டுவிவேகமிக்கவராக திகழ்ந்ததால், நரேந்திரருக்கு, "விவேகானந்தர்" என்ற பெயரை ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சர் சூட்டினார்.
தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்கதேவர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவிசுப்பிரமணிய பாரதியார், கர்மவீரர் காமராஜர், நம்நாட்டின் முதல் பெண் மருத்துவரானமுத்துலட்சுமி ரெட்டி, விடுதலைப் போராட்ட வீரர்அவிநாசிலிங்கம் செட்டியார், பேரறிஞர்அண்ணா, பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர்எம்.ஜி.ஆர் போன்ற எண்ணற்ற நம் தலைவர்கள், சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப்பின்பற்றியவர்கள் என்பது சிறப்புக்குரியதாகும். அதே போன்று, நம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களும், சுவாமி விவேகானந்தரின்போதனைகளாலும், கருத்துக்களாலும்ஈர்க்கப்பட்டு, 1982ல் முதன் முதலில் அரசியலில்நுழைந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும், கடந்த2014 ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லத்தில்புதிதாக கட்டியிருந்த விவேகானந்தரின்கலாச்சார மையத்தையும் திறந்து வைத்துள்ளார்என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன்நினைவுகூற விரும்புகிறேன்.
இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், “100 இளைஞர்களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர். அவருடைய எண்ணங்கள் ஈடேறும் வகையில், நம் சமூகம் முன்னேறுவதற்கும், நம் தேசம் வலிமை பெறுவதற்கும் ஒவ்வொரு இளம் வயதினரும் அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப்படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்” என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை மனதில் வைத்து பெண்ணினத்தை காத்திடுவோம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.அதேபோன்று “பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்” என்ற சுவாமி விவேகானந்தரின் போதனையை கடைபிடித்தால் பகைமையை வென்று எதிலும் வெற்றி காணமுடியும் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு மாநிலம் முழுவதும் பேராபத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் போதை என்ற அரக்கனின் பிடியில் அகப்பட்டு விடாமல், சுவாமி விவேகானந்தர் அவர்களைப் பின்பற்றி தங்களது பொன்னான வாழ்கையைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என நம் வருங்கால சந்ததியர்களான இளைஞர்கள் அனைவரையும் இந்நாளில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எண்ணற்ற தேச பக்தர்கள் உள்ளங்களில் சுதந்திரம் பெறவேண்டும் என்ற எழுச்சி தோன்றும் வகையில் நம் தேசத்தின் பெருமைகளை உரக்க முழங்கிய விவேகானந்தர் அவர்களின் வழியில், துரோக சிந்தனைகள் ஏதும் இல்லாமல், சுயநலமின்றி, பொதுநலத்தோடு வாழும் பண்பையும், உயர்ந்த எண்ணங்களையும், தூய்மையான சுற்றுப்புற சூழலையும், நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே, நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாக எண்ணி, சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறியதிமுக புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த திமுக தலைமையிலான அரசு தற்போது புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருப்பது தமிழக மக்களை வழக்கமாக ஏமாற்றுகின்ற மற்றொரு நாடகமாகத்தான் பார்க்கமுடிகிறது. திமுகவினர் கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 309ல் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 56 மாதங்களை முடித்துவிட்ட நிலையில், ஆட்சியை விட்டு இறங்க இன்னும் 4 மாதங்களே உள்ள சூழலில், அரசு ஊழியர்களை ஏமாற்றும் விதமாக ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருப்பது வருகின்ற தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களை மீண்டும் ஏமாற்றும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை.
திமுக தற்போது அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை எப்பொழுது செயல்படுத்த போகிறது என்ற எந்த விவரமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக திமுக இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் இதிலும் அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பங்களிப்புகொண்ட ஓய்வூதிய திட்டத்தில் (CPS) மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்து, அரசும் 10% செலுத்தி இதற்கான வட்டி 8% எல்லாம் சேர்த்து மொத்த தொகையையும் ஊழியர்கள் திரும்ப பெற முடியும். தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த CPS என்ற ஓய்வூதிய திட்டத்தில் ஒரு ஊழியர் பணி ஓய்வு பெறும் போது கிடைக்கப்பெறும் தொகையை விட குறைவான பலனைத்தான் தற்போது கொண்டு வந்துள்ள இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பெற முடியும் என்ற நிலைக்கு அரசு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களுக்கு திமுக தற்போது அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டமானது ஒரு ஏமாற்று திட்டம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.
திமுக தலைமையிலான அரசின் பித்தலாட்டத்தை அரசு ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்த பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் எந்த பிடித்தமும் செய்வதில்லை. ஆனால் இன்றைக்கு திமுக அறிவித்துள்ள இந்த புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் 10% பிடித்தம் செய்யப்படுவதோடு அதை திருப்பி ஊழியர்களுக்கு தரப்படுவதில்லை. மொத்தத்தில் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து அதைத்தான் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களின் சட்டை பையிலிருந்து அவர்களின் பணத்தை எடுத்து, அவர்களுக்கே ஓய்வூதியமாக திருப்பி வழங்கும் திட்டம் தான் தற்போது திமுக கொண்டுவந்துள்ள இந்த புதிய ஓய்வூதிய திட்டம். இதைத்தான் திமுகவினர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
மேலும், திமுக தலைமையிலான அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதால் முதலாம் ஆண்டு ரூபாய் 13 ஆயிரம் கோடி என்றும், வருடாவருடம் ரூபாய் 11 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு செலவு ஏற்படுவதாக அறிவித்து இருப்பதன் மூலம் ஒரு பச்சைப்பொய்யை சொல்லியிருக்கிறது. உண்மையில் கணக்கு பார்த்தால் ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு ஏற்படாது என்றே தெரியவருகிறது. எனவே, இவ்வாறு அறிவித்து இருப்பதால் இதன் உள்நோக்கம் என்னவென்று திமுகவினருக்கே வெளிச்சம்.
எனவே, திமுகவினர், அரசு ஊழியர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு அவர்களுக்கு உண்மையாக இருங்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய திட்டங்களை கொண்டு வாருங்கள். அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கக்கூடிய ஆட்சி என்றால் அது புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியாகத்தான் இருக்கமுடியும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசு ஊழியர்கள் திமுகவினரின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாமல் விழிப்புடன் இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டின் அரசியலில் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தியாகியுமான திரு.எல்.கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.எல்.கணேசன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்துபொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையும், படத்தையும் நீக்கியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக தலைமையிலான அரசின் ஆணவப்போக்கிற்கும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழுக்கென்று தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கரந்தையில் உள்ள தமிழ் சங்கத்தால் கடந்த 1918-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தை திறப்பதாக அறிவித்து,பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி 1981-ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சையில் நிறுவப்பட்டது.
அதேபோன்று, 1977 - 1988 காலக்கட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையிலான அரசு அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மகளிருக்கென்று தனியாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற உயர்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கியதையும் யாராலும் மறைத்துவிட முடியாது. இந்த பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவந்த எத்தனையோ அறிஞர்கள், சாதனையாளரகள் இன்றைக்கும் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக விளங்கிய புரட்சித்தலைவர் அவர்களின் பெயரையும், படத்தையும் திமுகவினர் நீக்கிவிட்டால் மக்களிடம் இருந்து புரட்சித்தலைவரை பிரித்துவிடலாம் என்று கனவு காண்கின்றனர். ஆனால், திமுகவினரின் கனவு என்றைக்கும் பலிக்காது. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் நிறைந்து இருக்கிறார். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கள்ளமில்லா முகம் அனைவரது நினைவிலும் நீங்காமல் இருக்கும். திமுகவினர் என்னதான் தில்லுமுல்லுகளை அரங்கேற்றினாலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து இப்பூவுலகில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மொழிக்கு தாங்கள் ஒருவர் மட்டும்தான் பாதுகாவலர் என்று நாள்தோறும் தம்பட்டம் அடிக்கும் திமுகவினர் தமிழ் மொழிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் இதுவரை எதையும் செய்ததில்லை. மேலும், தாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்று பெருமை பேசுகின்ற திமுகவினருக்கு, தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தை உருவாக்கியதே புரட்சித்தலைவர்தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், பொறாமையாலும், காழ்ப்புணர்ச்சியினாலும் புரட்சித்தலைவரின் பெயரையும், படத்தையும் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து நீக்கியிருப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான செயல் ஆகும்.
எனவே, தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து திமுக தலைமையிலான விளம்பர அரசால் நீக்கப்பட்ட புரட்சித்தலைவரின் பெயரையும், படத்தையும் மீண்டும் அதில் இடம்பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் துணிவுடன் எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம்.
தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி எனும் ஒரு சிறிய பாளையத்தை ஆண்ட பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து துணிச்சலுடன் அவர்களை எதிர்த்து நின்று போராடிய மாவீரர்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில், அவர்களது நினைவை போற்றும் விதமாக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்துள்ளதையும் இந்நாளில் நினைவுகூற விரும்புகிறேன் .
தென்னிந்தியாவின் தலைசிறந்த விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வரலாற்றை நம் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் அவர்தம் பிறந்தநாளைப் போற்றி நினைவில் கொள்வோம். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆண்களுக்கு இணையாக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு, வெற்றி கண்ட, இந்திய திருநாட்டின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையாக விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம்.
பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக, பெண்ணினத்தின் பெருமையாக விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள் ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைவரையும் சமமாக மதித்து, அரவணைத்து, தன் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு தனது இறுதி மூச்சுவரை போராடிய பெண் சிங்கம் ஆவார்.
அதே சமயம் கொல்லங்குடியை சேர்ந்த தமிழ் பெண் வெட்டுடையாளின் தியாகத்தையும், பாசாங்கரையைச் சேர்ந்த மற்றொரு தமிழச்சியான குயிலியின் தியாகத்தையும், மருது சகோதரர்களின் வீரத்தையும், வீரமங்கை வேலு நாச்சியாரின் சரித்திரத்தில் இருந்து யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை சீமையின் ராணியாக, தன்னலம் பாராமல், நாட்டு மக்களை காப்பாற்றிய வீரமங்கை வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை இன்றைய இளம் வயதினர்களும் அறிந்துகொள்ளும் வகையில் அவர்தம் பிறந்த நாளைப் போற்றி நினைவில் கொள்வோம். -
V K Sasikala
@AmmavinVazhi
நாகப்பட்டினம் மாவட்டம், கழக முன்னாள் நகரச் செயலாளர் மறைந்த இரா.சந்திரமோகன் அவர்களின் மனைவியும், முன்னாள் நகர மன்றத் தலைவருமான திருமதி.மஞ்சுளா சந்திரமோகன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரி மஞ்சுளா சந்திரமோகன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மதிப்பிற்குரிய அய்யா திரு.R.நல்லகண்ணு அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற எந்த பதவிகளையும் வகிக்காமல் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக அர்பணித்து, அயராமல் தொண்டாற்றி வருவதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
எளிமையின் சிகரமான அய்யா திரு.நல்லகண்ணு அவர்களின் 101வது பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் என்ற இடத்தில் அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிர்புறம் வந்த 2 கார்கள் மீது மோதியதில் இதுவரை 9 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவதும் அதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பதும் தொடர்ந்து நடைபெறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க திமுக தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் தமிழகத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விளம்பர ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்து இருப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திரு.R.தாண்டவன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
பேராசிரியர் தாண்டவன் அவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அதேபோன்று புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவர்.
பேராசிரியர் தாண்டவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய ஆசிரியபெருமக்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
பண்பின் இலக்கணமாக, எளிமையின் சிகரமாக தமிழக மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று நம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார்கள். வாழ்க்கையில் எத்தகைய உச்சநிலையினை அடைந்தாலும் அவர்களது எளிமையான அணுகுமுறையினையும், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் உயர்ந்த பண்பினையும் எண்ணி மிகவும் பெருமையடைகிறேன். தங்களுடைய அன்பும், நட்பும், சகோதரபாசமும் என்றென்றும் நிலைத்திருக்க ஆண்டவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும்.
அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@rajinikanth -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல கவிஞரும், கழக முன்னாள் அவைத்தலைவருமான மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களின் மனைவி திருமதி தமிழரசி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அம்மையார் தமிழரசி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை மாவட்டம் உலகனேரியை சேர்ந்த கழக உறுப்பினர் திரு. A.முருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.முருகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளரும், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவருமான திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான, ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் தமிழ் திரைவானில் மதிப்பு மிக்க ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அதேபோன்று புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரும் திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்களிடம் மிகுந்த நட்பு பாராட்டினார்கள். திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் உள்ளிட்ட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று திருட்டு விசிடியை ஒழிக்க புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடனே நடவடிக்கை மேற்கொண்டதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
பணிவின் சிகரமான திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@avmproductions -
V K Sasikala
@AmmavinVazhi
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இதுவரை 9 பெண்கள் உள்பட 11 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
கடந்த வாரம்தான் தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி 8 நபர்கள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் தற்போது திருப்பத்தூரில் அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 11 நபர்களின் உயிர்கள் பறிபோயிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க திமுக தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. தமிழகத்தில் பேருந்து ஓட்டுனர்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்டறிய திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டது. மேலும், தமிழகத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விளம்பர ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்து இருப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் 102-வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றி, அதனைக் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 1937 ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ஜானகி அம்மையார் அவர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக புரட்சித்தலைவரோடு ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது, ஜானகி அம்மையார் அவர்கள் தனது வருமானத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் வாங்கிய வீட்டை, புரட்சித்தலைவருக்கு கொடுத்ததையும், இந்த இடத்தில்தான், தற்போது கட்சியின் தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதையும், இந்நேரத்தில் பெருமையுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்கள் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானகி அம்மையார் அவர்கள், அதன்பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கரங்களை வலுப்படுத்த கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர்.
கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டும், திமுக போன்ற எதிர்க்கட்சியினருக்கு தமிழகத்தில் இடம் கொடுத்துவிட்டால், அது தமிழக மக்களை பெரிதும் பாதித்துவிடும் என்ற எண்ணத்திலும் புரட்சித்தலைவர் அவர்கள் மறைவிற்கு பிறகு பல அணிகளாக பிரிந்து இருந்த கட்சியினரை ஒன்றிணைத்து, வலிமையான ஒரு பேரியக்கமாக கொண்டு வந்ததையும், அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளையும் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறேன். இந்த காலகட்டங்களில், ஜானகி அம்மையார் அவர்களோடு பழகிய அந்த இனிமையான நாட்களை நினைத்து மிகவும் பெருமையடைகிறேன்.
புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், புரட்சித்தலைவியின் வழிவந்த அன்புத் தொண்டர்கள் சார்பாகவும், அம்மையார் வி.என். ஜானகி அவர்களின் 102-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில், அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டுமென, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவாவில் நடைபெற்ற 56ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்து வரும் அன்பு சகோதரர், சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்துள்ள அன்பு சகோதரர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளை அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@rajinikanth -
V K Sasikala
@AmmavinVazhi
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 8 மாணவ, மாணவிகளும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்காசியில் அம்மா வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட போது குத்துக்கல்வலசை பகுதியில் சிலம்பம் சுற்றி சிறப்பான வரவேற்பு அளித்த சிறுவன் பவின் குமார் இன்றைக்கு ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அளவில் தங்கப்பதக்கமும், உலக அளவில் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அன்று அச்சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து கூறி ஆசிர்வதித்ததை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
உலகளவில் பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் தொடர்ந்து மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று நம் பிறந்த மண்ணிற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தென்காசி மாவட்டம், இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இதுவரை 5 பெண்கள் உள்பட 8 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய மக்கள்தான் பேருந்துகளில் அதிகம் பயணிக்கின்றனர். பேருந்துகளில் பயணிக்கின்ற பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. 8 உயிர்களை பறித்துள்ள இரு தனியார் பேருந்துகளையும் அதிவேகமாக இயக்கியதால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, தனியார் பேருந்து நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடனும், கவனமுடனும் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுனர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பைங்காநாட்டை சேர்ந்த கழக உறுப்பினர் திரு.A.விக்னேஷ் அவர்களின் தாயார் திருமதி.A.மாலதி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயாரை இழந்து வாடும் திரு.விக்னேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஹைதராபாத்தில் நடைபெற்ற 25வது நேஷனல் பாரா ஒலிம்பிக் போட்டியில் சப் ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மூன்று வெவ்வேறு பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்ததன் மூலம் தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ள திருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் ஆர்.சபரி ஆனந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் இந்த இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ள மாணவன் சபரி ஆனந்த் அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தந்தி தொலைக்காட்சி 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுநிலையான செய்திகள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சிறப்புடன் பணியாற்றி, ஊடகத்துறையில் தனது முத்திரையை பதித்து வரும் தந்தி தொலைக்காட்சி தொடர்ந்து சிறப்புடன் செயலாற்றிட எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
தந்தி தொலைக்காட்சி மென்மேலும் வளர்ச்சியடையவும், உயரிய நிலையை அடையவும் தங்கள் நிறுவனத்தினருக்கும், பணியாளர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
#thanthitv -
V K Sasikala
@AmmavinVazhi
டெல்லியில் செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 8 நபர்கள் உயிரிழந்திருப்பதும், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதும் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
இந்த துயர சம்பவம் நிகழ்ந்த இடத்தில் முறையாக ஆய்வுகளை மேற்கொண்டு, அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணை செய்ய வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
டெல்லியில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் மாவட்டம், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், அம்மாபேட்டை தெற்கு ஒன்றியக் கழக செயலாளருமான திரு.A.V.சூரியநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.சூரியநாராயணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது என்பது இது போன்ற சம்பவங்கள் மூலம் நாள்தோறும் நிரூபணம் ஆகின்றது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக தலைமையிலான அரசே முழு பொறுப்பேற்கவேண்டும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் சமூக விரோத செயல்களும், கொலை, கொள்ளை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போதை பொருட்கள் நடமாட்டமும் நாளுக்கு நாள் பெருகி சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது. இதைத்தடுக்க வேண்டிய தமிழக காவல்துறையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளும், குற்றவாளிகளும் துணிச்சலோடு உலா வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறுகின்ற அனைத்துவிதமான குற்றச்செயல்களிலும் திமுகவினர்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் தமிழக காவல்துறை ஆளும்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமலும், குற்றச்செயல்களை தடுக்க முடியாமலும் ஒதுங்கிவிட்டனர். தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று மேடைக்கு மேடை வீரவசனம் பேசி வருகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை? கோவையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?. திமுக தலைமையிலான ஆட்சியில் கோலோச்சிக்கொண்டிருக்கும் போதை கலாச்சாரத்தை ஒழிக்கும்வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம் அறவே இருக்காது, எல்லோரும் வேறு மாநிலங்களுக்கு ஓடி விடுவர். தமிழக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்கினார்கள். ஆனால் தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகின்றதோ அப்போதெல்லாம் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிடும். இன்றைக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் நிரந்தர தீர்வாக அமையும்.
கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமான அரக்கர்களை உடனேகண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு தேவையான பாதுகாப்பும், மன நல ஆலோசனையும் வழங்க வேண்டும். மேலும், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து, இதில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 52 வருட உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இறுதி போட்டி வரை சென்றுள்ள நிலையில் தற்போது முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது நம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் கோடிக்கணக்கான இளம் வீராங்கனைகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது.
தங்களது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஒற்றுமையோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் அவர்களை கழகத்திலிருந்து நீக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்கமுடியாத செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது. அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் போன்றோர் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து தொடர்ந்து இந்த கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள் “நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது” போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கே கேடாக அமைந்து விடும். இது போன்ற மனப்பாங்கினை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கழகத்தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பேரியக்கம். கழகத்தொண்டர்கள் பலபேர் இரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து காப்பாற்றிய இந்த இயக்கத்தை, இன்றைக்கும் கோடானு கோடி கழகத் தொண்டர்கள்தான் தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து, கழகத்தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு இதுதான் தமிழ் மண்ணிற்கும், தமிழக மக்களுக்கும் நாம் செய்கின்ற பேருதவியாக அமையும்.
கழகம் ஒன்றிணையவேண்டும், மீண்டும் கழக ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அடிமட்ட தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. தமிழக மக்களின் விருப்பமும் இதுதான். நானும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், கழகம் ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் திமுக என்ற தீயசக்திக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகத்தான் கருதமுடியும். எனவே, திமுகவின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக அனைவரும் ஓரணியில் திரள்வோம். திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
வெற்றி நிச்சயம்
நாளை நமதே
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க -
V K Sasikala
@AmmavinVazhi
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் 2025 தொடரின் கபடி போட்டியில் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் இந்திய அணிகள் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய இளையோர் போட்டிக்கான இந்திய பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக இடம் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவிற்கும், இந்திய ஆடவர் கபடி அணியில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மன்னார்குடியை அடுத்த வடுவூர் கிராமத்தை சேர்ந்த இளம் வீரர் அபினேஷ் மோகன்தாஸுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த வீரர் அபினேஷ் மோகன்தாஸும், வீராங்கனை கார்த்திகாவும் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஈரோடு மாநகர் மாவட்டக் கழக நிர்வாகி திரு.செளகத் அலி அவர்களின் தாயார் திருமதி. ஆசியா பானு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.செளகத் அலி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பெரம்பலூர் மாவட்டக் கழக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளரும், முன்னாள் வேப்பந்தட்டை ஒன்றிய கழக செயலாளரும், ஜெயா தொலைக்காட்சியின் திருச்சி மாவட்ட நிருபர் திரு.இளவரசன் அவர்களின் தந்தையுமான பிரம்மதேசம் திரு. ஆர். பூவராகசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.இளவரசன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவும், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்க முடிகிறது. மேலும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்படுகிற குழுவும் கண்காணிக்க இருப்பதன் மூலம் கரூர் துயர சம்பவத்தின் உண்மை பின்னணியும் விரைவில் வெளிவரக்கூடும் என்பதை அனைவராலும் அறிந்து கொள்ளமுடிகிறது.
கரூர் துயர சம்பவத்தில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திமுக தலைமையிலான அரசுக்கு கிடைத்த மாபெரும் சம்மட்டி அடியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. மேலும், கரூர் துயர சம்பவத்தில் விரைவில் உண்மைகள் வெளிவரவும், உயிர் நீத்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தீபாவளி பண்டிகையை தங்களது உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்ற தமிழக மக்களுக்கு தாங்கமுடியாத கூடுதல் சுமையை அளிக்கின்ற வகையில், ஆம்னி பேருந்துகள் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழக மக்கள் படும் துன்பங்களை கண்டும் காணாமல் இருக்கும் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தனியார் பேருந்து நிறுவனங்கள் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணங்களை சுமார் 4 மடங்குக்கு உயர்த்தி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்வதற்கு 1,200 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 4,399 ரூபாய் எனவும், சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்வதற்கு 1,100 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 3,999 ரூபாய் எனவும், சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்கு 700 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 3,899 ரூபாய் எனவும், சென்னையிலிருந்து கோவை செல்வதற்கு 1,500 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 4,420 ரூபாய் எனவும் ஆம்னி பேருந்து கட்டணங்களை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுகவை சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அதாவது, நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம், நீங்கள் அழுவதுபோல் அழுவுங்கள் என்று திமுக தலைமையிலான அரசும், ஆம்னி பேருந்து நிறுவனங்களும் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவது பொதுமக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது. ஒரு நல்ல அரசாக இருந்தால், மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட அரசாக இருந்தால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஏழை, எளிய சாமானிய மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர போதுமான அளவிற்கு அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்திடவேண்டும். ஆனால், திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு மக்கள் நலன் சார்ந்த எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்ததில்லை.
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுவரும் நிலையில் அதற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என கடந்த மாதம் 19ஆம் தேதி எனது அறிக்கையின் வாயிலாக திமுக தலைமையிலான அரசுக்கு தெரிவித்து இருந்தேன். மேலும், ஆம்னி பேருந்து உள்ளிட்ட தனியார் பேருந்துகளின் பயண கட்டணங்களை முன்கூட்டியே நிர்ணயம் செய்து, அதனை மக்களுக்கும் வெளிப்படையாக அறிவித்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை சரியாக கடைபிடிக்கின்றனரா? என்பதனை தொடர்ந்து ஆய்வு செய்திடவேண்டும் என்றும், மத்திய அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கும் நிலையில், திமுக தலைமையிலான அரசு வீண் பேச்சுக்களை குறைத்துக்கொண்டு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனே மத்திய அரசிடம் அனுப்பி, பண்டிகை காலங்களில் தமிழகத்திற்கு கூடுதலாக தேவைப்படும் ரயில் போக்குவரத்து சேவையை பெற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் எனது அறிக்கையின் வாயிலாக எப்பொழுதும் தூக்கத்தில் இருக்கும் திமுக அரசுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறையில்லாத திமுக தலைமையிலான அரசு ஆம்னி பேருந்து கட்டண உயர்வை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறது. இதற்காகவா தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்?. இது வாக்களித்த மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். இந்த கொடுமைகளுக்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் அரசு பேருந்துகளை இயக்கிடவும், தனியார் ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணத்தை நிர்ணயித்திடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாமானிய மக்களிடமிருந்து ஆம்னி பேருந்துகள் அடிக்கும் கட்டண கொள்ளையை உடனே தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மா என்ற தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைஉட்கொண்டதில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் மேலும் 5குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையாலும், அலட்சிய போக்கினாலும் இத்தனை குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிர்களை பறிகொடுத்து இருக்கிறோம். இதற்கெல்லாம் திமுக தலைமையிலான அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தியாகும் கலப்பட மருந்தை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனையில்,சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு குழந்தைகள்இறந்துள்ளதாக தெரியவருகிறது. அதாவது 'பெயின்ட், மை' போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலப்படம் செய்யப்பட்ட “கோல்ட்ரிப்” என்ற இருமல் மருந்தை பயன்படுத்தியதன் விளைவாகத்தான் குழந்தைகளின் மரணம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் மத்தியபிரதேசத்தில் 9 குழந்தைகளும், ராஜஸ்தானில் 2 குழந்தைகளும் முதன் முதலில் இறந்தபிறகுதான் சம்பந்தப்பட்ட இருமல் மருந்தை தடை செய்துள்ளதாக துறை அமைச்சர் தற்போது தெரிவிக்கிறார். மேலும், மருந்து ஆய்வாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மருந்தின் தரத்தை ஆய்வு செய்யவில்லை என்ற உண்மையையும் துறை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். எனவே, திமுக தலைமையிலான இந்த மக்கள் விரோத ஆட்சியே முடிவுக்கு வருகின்ற நிலையில், தமிழ்நாட்டில் எந்த ஒரு வேலையும் தொடர்ந்து உருப்படியாக நடைபெறவில்லை என்பதும், தமிழக மக்களுக்கும் திமுக தலைமையிலான அரசால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதும் நிரூபணம் ஆகிவிட்டது. தமிழகம், புதுச்சேரி, ஒடிஷா உள்ளிட்ட பல மாநிலங்களில் இதே இருமல் மருந்தை தான் குழந்தைகளுக்கு பயன்படுத்தி இருப்பதாக தெரிய வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்படைந்துள்ளது என்பதை விரைந்து கண்டறியவேண்டும். மேலும், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கலப்பட இருமல் மருந்து பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. குழந்தைகளின் உயிரை பறிக்கும் இந்த கலப்பட மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றையெல்லாம் முற்றிலும் பறிமுதல் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைதான் தமிழகத்தில் செயல்படும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி வசதிகளை ஆய்வுக்குட்படுத்தி, அவை தர நிர்ணயங்களுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும். மேலும், போலியான மருந்துகள், கலப்பட மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகள் தயாரிப்பதைத் தடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் உள்ளது. ஆனால், ஸ்ரீசன் பார்மா போன்ற தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் கலப்பட மருந்துகளை திமுக தலைமையிலான அரசு ஏன் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தவில்லை? அல்லது தனியார் நிறுவனத்தின் தவறுகள் தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்களிடம் எழுகின்றன.
எனவே, திமுக தலைமையிலான அரசு, கள்ளம் கபடமற்ற 22 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிற ஸ்ரீசன் பார்மா என்ற தனியார் நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை உடனே நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். மேலும், அந்நிறுவனத்தை உடனே மூடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிலும் முறையான ஆய்வுகளை தொடர்ந்து செய்து கண்காணிக்க வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமையிலான அரசு தயங்கக்கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், திமுக தலைமையிலான ஆட்சி இருக்கும்வரை மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவரும் நிலையில், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சணல் மற்றும் சாக்கு தட்டுப்பாடு காரணங்களாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தொடர்ந்து தேக்கமடைந்து வருவதினாலும்,கடந்த பத்து நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் இலட்சக்கணக்கில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி இருப்பது மிகவும் வேதனைஅளிக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், “தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன்” என நாள்தோறும் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.96 லட்சம் ஏக்கர், திருவாரூரில் 1.91 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறையில் 98 ஆயிரம்ஏக்கர், நாகையில் 89 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 5.75 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 90 சதவீத அறுவடை பணிகளும் நிறைவுபெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதில் எஞ்சிய அறுவடை பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை சாலையில் காயவைத்து அதன் பின்னர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். ஆனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கடந்த 15நாட்களுக்கு முன்பாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளே இன்னும் தேங்கி கிடக்கின்றன. அதாவது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது சணல் மற்றும் சாக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக தெரியவருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும், மீனம்பநல்லூர், உதயமார்த்தாண்டபுரம், தில்லைவிளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஒரத்தநாடு, தென்னமநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் போதிய சணல் மற்றும் சாக்குகள் இல்லாத காரணத்தினால் நெல் கொள்முதல் செய்ய முடியாமல் சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வாயில்களில் தலா 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சிப்பங்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 10ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் அறுவடை செய்த நெல்மூட்டைகள் கிராமங்கள் தோறும் சாலை ஓரங்களிலேயே கொட்டி வைத்து தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சாலையில் வாகன போக்குவரத்திற்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வாகன விபத்துகளும் தொடர்ந்து ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று, மன்னார்குடி அருகே தேவங்குடியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் 10நாட்களை கடந்தும் இன்னும் திறக்கப்படாமலே இருப்பதாக விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். மேலும், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஒப்பந்த லாரிகள் சரிவர இயக்கப்படாமல் காலம் தாழ்த்துவதினாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் 5000 முதல் 10,000 வரை நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக விவசாயிகளும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு பண்டிகையை கொண்டாடிடும் வகையில் நெல்கொள்முதலை காலதாமதமின்றி விரைந்து மேற்கொள்ளவேண்டும். திமுக தலைமையிலான அரசு லாரி ஒப்பந்தத்தை ஒருவருக்கு மட்டுமே வழங்குவதை விட்டுவிட்டு, தகுதியான பலருக்கு கொடுத்து நெல்மூட்டைகளை விரைந்து சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதேபோன்று, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள சணல் மற்றும் சாக்கு பற்றாக்குறையை உடனே சரி செய்யவேண்டும். டெல்டா மாவட்டங்களில்கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்டு மழை நீரில் நனைந்துள்ள நெல்மூட்டைகளை 22சதவீத ஈரப்பதம் வரை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்தான் நெல்சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், திமுக தலைமையிலான அரசு ஆண்டுதோறும் காவிரியில் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டு, அதை விளம்பரம் செய்தால் மட்டும் போதாது, விவசாயிகள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்து, அறுவடை செய்த நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களின் மாமியாரும், தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயாருமான திருமதி.அம்சவேணி அவர்கள் வயது மூப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தங்களது தாயாரை இழந்து வாடும் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திரு.எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@PremallathaDmdk -
V K Sasikala
@AmmavinVazhi
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அய்யா ராமதாஸ் அவர்கள் ஆண்டவனின் அருளால் பூரணமாக குணமடைந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களது நல்வாழ்விற்காகவும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்பு சகோதரர் திரு. வைகோ அவர்கள் ஆண்டவன் அருளால் முழுமையாக உடல்நலம் பெற்று தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது நல்வாழ்விற்காகவும் தொடர்ந்து அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்ற வாடிவாசல் அருகே அமைந்துள்ள பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலை சேதமடைந்து கீழே விழுந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. மறைந்த கலைவாணர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் மன்றத்தினரால் கடந்த 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு நாள்தோறும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்த நிலையில் தற்போது இந்த சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த இழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பகைவருக்கு கூட பாசத்தை காட்டும் எங்கள் புரட்சித்தலைவரின் திருவுருவ சிலையை சேதப்படுத்த எப்படி மனம் வந்தது? என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் தமிழகமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, தமிழக மக்களை தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து மறைந்த நம் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவலநிலை மிகவும் வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்று செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக காவல்துறை மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறை எவ்வாறு சுதந்திரமாக தங்கள் கடமையை ஆற்றியதோ, அதே போன்று தற்பொழுதும் செயல்பட்டு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இன்றைக்கும் தெய்வங்களாக நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு அளிக்கின்ற நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும். மேலும், இது போன்று நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகளை அவமதிப்பவர்கள், சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த புரட்சித்தலைவரின் திருவுருவ சிலையை சரிசெய்து மீண்டும் அதே இடத்தில் வைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சேலம் புறநகர் மாவட்டக் கழக மீனவர் அணி செயலாளர் எடப்பாடி திரு.ஏ.எல்.சுரேஷ் அவர்களின் மாமியார் திருமதி.கலைச்செல்வி ராஜேந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது மாமியாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் எடப்பாடி திரு.ஏ.எல்.சுரேஷ் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர் அனல் மின் திட்டத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சாரம் சரிந்து விழுந்ததில் வட மாநிலத்தை சேர்ந்த 9 நபர்கள் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது.
கட்டுமானப்பணியில் உயிரிழந்துள்ள வட மாநில தொழிலாளர்கள் 9 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சக தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் டி.ஜி.பி.யாக இருந்த திரு.சங்கர் ஜிவால் அவர்கள் கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையின் நிர்வாக டி.ஜி.பி.யாக இருக்கும் திரு.வெங்கடராமன் அவர்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கபடுகிறார். எனவே,பொறுப்பு டி.ஜி.பியின் தலைமையில்தான் ஒரு மாத காலமாக தமிழக காவல்துறை இருந்து வருகிறது.
பொதுவாக ஒரு டி.ஜி.பி. ஓய்வு பெறுவது மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரியும். அதற்கு முன்பாகவே டி.ஜி.பி பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் பதவியை ஏற்றுக்கொள்வதுதான் இதுநாள் வரை நடைமுறையாக இருந்துள்ளது. ஆனால், திமுக தலைமையிலான அரசோ இந்த நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை.
அதாவது திரு.சங்கர் ஜிவால் அவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில் மே 31ஆம் தேதிக்கு முன்பாக தமிழக காவல்துறையின் பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து அதனை UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்து,அதன் பரிந்துரைப்படி ஒருவர் டி.ஜி.பியாக செப்டம்பர் 1ஆம் தேதியன்று பதவி ஏற்று இருக்கவேண்டும். ஆனால், தமிழக காவல்துறையின் பணி மூப்பு பட்டியலில் 8ஆவது நபராக இருக்கும் திரு.வெங்கடராமன் அவர்கள்தான் இன்று வரை தமிழக காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக செயல்பட்டு வருகிறார்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி பணிமூப்பு அடிப்படையில் UPSC-க்கு பட்டியல் அனுப்பப்படவேண்டும். அப்பட்டியலில் இருந்து மூன்று நபர்கள் கொண்ட தேர்வு பட்டியல் மாநில அரசுக்கு UPSCஆல் அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் பட்டியலில் இருந்து ஒருவர் டி.ஜி.பி-ஆக நியமிக்கப்படுவர். ஆனால் திமுக தலைமையிலான அரசு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களையும் புறம்தள்ளிவிட்டு பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்து ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.
உச்சநீதிமன்ற உத்தரவினை திமுக தலைமையிலான அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி, சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகுதான், இந்த அரசு டி.ஜி.பி தேர்வுக்கான பட்டியலை தயார் செய்து UPSCக்கு அனுப்பியுள்ளது. எனவே, இனி UPSCயில் இருந்து தேர்வு பட்டியல் வந்தவுடன்தான் டி.ஜி.பி நியமனம் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. இவற்றையெல்லாம் திமுக தலைமையிலான அரசு கடந்த மே மாதத்திலேயே செய்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கரூர் அசம்பாவிதம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு இதுவும் மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. தமிழக காவல்துறை கட்சி பேதமின்றி யாருக்கும் சார்பில்லாமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தன்னிச்சையான முடிவுகளை எடுத்தால் தான் மக்களை பாதுகாக்க முடியும். தமிழக காவல்துறை கரூர் சம்பவத்தில் சரியாக செயல்பட்டு இருந்தால் 41 அப்பாவி உயிர்கள் பறிபோயிருக்காது.
தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளில் ஒரு பொறுப்பு டி.ஜி.பியாக இருப்பவர் எவ்வாறு உறுதியான முடிவுகளை எடுக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வரோ இது போன்ற அத்தியாவசியமான விசயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு கட்சியை பலப்படுத்துவதிலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், தமிழக மக்கள் வரிப்பணத்தை செலவழித்து தனது சொந்த கட்சியினர் பெயரில் பாலம் திறப்பதிலும் முழு நேரத்தையும் செலவிட்டு கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் காவல்துறை மிகவும் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட்டது. தனது சொந்த கட்சியினர் உள்பட யாராக இருந்தாலும் காவல் நிலையத்திற்குள் சென்று காவலர்களை கட்டுப்படுத்த முடியாது. அதேபோன்று அரசு அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆனால், இன்றோ எல்லாம் தலைகீழாக உள்ளது. தமிழக காவல்துறை தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது 33 அமைச்சர்கள் உட்பட திமுகவினரின் முழுகட்டுப்பாட்டில் இருக்கிறதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெறும் பல விதமான சட்டமீறல்களும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலநிலையும் இதற்கு சாட்சியாக விளங்குகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து இன்றைக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகி, இளம் வயதினரை மிக மோசமாக சீரழித்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே ஒரே தீர்வு என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 36 நபர்களுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதே கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் கட்சியினர் யாராக இருந்தாலும் மக்களை ஒருங்கிணைக்கும்போது சரியான திட்டமிடல் செய்வது மிகவும் அவசியமானது. அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும். மேலும், இதுபோன்று மக்கள் கூடுகின்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே சரியாக கணித்து, அதற்குண்டான நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுத்து இருக்கவேண்டும். மேலும், திமுக தலைமையிலான அரசு போதுமான அளவுக்கு காவலர்களை நியமித்து, மக்களுக்கு முறையான பாதுகாப்பு அளித்திருக்கவேண்டும். தமிழகத்தில் எத்தனையோ அரசியல் பொதுக்கூட்டங்கள், கோவில் திருவிழாக்கள் பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், கரூரில் மட்டும் ஏன் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது என்பது யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அரசு இதில் உடனே தலையிட்டு இந்த அசாம்பாவிதத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். மேலும், இந்த துயர சம்பவம் குறித்து மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து முறையாக விசாரணை செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரை கொச்சைப்படுத்தி பேசியிருக்கும் சீமான் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன். இது யாராலும் மன்னிக்கமுடியாதது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ள தலைவர்களை பற்றியும், அதிலும் குறிப்பாக மறைந்த தலைவர்களைப்பற்றியும் கண்ணியக்குறைவாக யார் பேசினாலும் அது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளை பின்பற்றி அவர்களது உருவம் தாங்கிய கொடியினை தங்களது கையில் ஏந்தி, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து பயணிக்கின்ற கோடான கோடி கழகத்தொண்டர்களின் மனதில் தாங்கிக்கொள்ளவே முடியாத வலியை ஏற்படுத்துகின்ற வகையில் சீமானின் இந்த பேச்சு அமைந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய மாபெரும் தலைவர்கள் ஆவார்கள். "வாழந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் இந்த மண்ணை விட்டு மறைந்திருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிக்காட்டிய எங்கள் தலைவர்கள் எட்டிய உயரத்தை சீமான் போன்றோர் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அடையமுடியாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழில் நாளிதழுக்குரிய மொழிநடையை எளிய முறையில் வடிவமைத்து, பாமரர்களும் நாட்டு நடப்புகளை எளிதாக அறிந்திடும் வகையில், உண்மை செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை திரு.சி.பா ஆதித்தனார் அவர்களின் 121வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம்.
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் எந்நாளும் போற்றிடுவோம் -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மகனும், தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிகை உலகில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர். தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர். மேலும், கல்வி, விளையாட்டு, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனைகள் படைத்தவர். விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியதையும் இந்நாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளையும், சமூக சேவைகளையும் அவர்தம் நினைவில் போற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது இதனை 4 அடுக்கிலிருந்து 2அடுக்குகளாக அதாவது 5% மற்றும் 18% என திருத்தம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களின் மீதுள்ள சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள், விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் வரை பல பொருட்களின் விலையானது குறைந்துள்ளது. குறிப்பாக, நெய், பனீர், வெண்ணெய், பிரெட் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையும், டிவி, ஏசி, வாஷிங் மெஷின்கள் போன்ற பல வீட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று தினசரி பயன்பாட்டுப் பொருட்களான ஹேர் ஆயில், டாய்லெட் சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்றவற்றின் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துவிட்டன.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை குறைக்காமல் விற்பனை செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக மத்திய அரசு செய்துள்ள வரி சீர்திருத்தத்தால் விலை குறைந்துள்ள ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை ஏதோ திமுக அரசு விலையை குறைத்தது போன்று தள்ளுபடி விலையில் ஆவின் பால் பொருட்களின் விற்பனை என அறிவித்து இருப்பது தமிழக மக்களை முற்றிலும் ஏமாற்றுகின்ற செயல். அதிலும் குறிப்பாக வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை குறைக்காமல் நெய்,பனீர் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை சலுகை விலையில் வழங்குவது போன்று திமுக அரசு அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். உண்மையில் திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை தள்ளுபடி செய்வதாக இருந்தால் முதலில் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கேற்ப விற்பனை விலையை குறைத்துவிட்டு அதன் பிறகு திமுக அரசு தள்ளுபடி விலையை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பை திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை தள்ளுபடி செய்தது போன்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என்ற கூற்று மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது.
மேலும், மத்திய அரசு செய்துள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் விவசாயத்திற்கு தேவையான உரப்பொருட்களுக்கு 5% அளவுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரப்பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முற்றிலுமாக வரிவிலக்கு செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, ஜிஎஸ்டி வரிக்குறைப்பிற்கேற்ப அனைத்து ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையினை உடனே குறைத்திடவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்யாமல் காலதாமதம் செய்யும் பட்சத்தில் ஆவின் நிர்வாகத்தின் மீது மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை பொதுமக்கள் முழுமையாக அடையும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப விற்பனையாளர்கள் விற்பனை விலையில் மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணித்திடதேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் நெறியாளர் திரு.S.A.சுபியான் அவர்களின் தந்தை திரு.சா.சாகுல் ஹமீது அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.சுபியான் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மறைந்த நடிகர் திரு.எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், திரைப்பட நடிகை திருமதி.ராதிகா சரத்குமார் மற்றும் திருமதி.நிரோஷா ஆகியோரின் தாயாருமான திருமதி.கீதா ராதா அவர்கள் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தங்களது தாயாரை இழந்து வாடும் திருமதி.ராதிகா சரத்குமார் மற்றும் திருமதி.நிரோஷா ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனி முத்திரை பதித்த திரு.ரோபோ சங்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது சிறப்பான நடிப்பாற்றலால் அனைவரையும் மகிழ்வித்த திரு.ரோபோ சங்கர் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடைபெற்ற FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் 2025தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம், கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், உலக செஸ் சாம்பியனை எதிர்த்து விளையாடப்போகும் வீரரைத் தீர்மானிக்கும் 'கேண்டிடேட்ஸ்' போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ள வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் தமிழ் மண்ணிற்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.
இதில் மற்றுமொரு சிறப்பும் தமிழகத்திற்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமிதம் அளிக்கிறது. அதாவது, ஏற்கனவே வைஷாலியின் சகோதரர் ஆர். பிரக்ஞானந்தா அவர்கள் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்று கிராண்ட்மாஸ்டராக உள்ள நிலையில் தற்போது வைஷாலியும் அதே சாதனையை நிகழ்த்தியதன் மூலம், உலக செஸ் வரலாற்றிலேயே 'கேண்டிடேட்ஸ்' போட்டிக்கு தகுதி பெற்ற மற்றும் 'கிராண்ட்மாஸ்டர்' பட்டம் வென்ற முதல் சகோதர, சகோதரி என்ற பெருமையும் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி மற்றும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் தங்களது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் உலக செஸ் அரங்கில் மிகப்பெரிய உச்சத்தை அடையவேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதையும், தன்மானமும் உயிருக்கு சமம் என்றார். ஆணும் பெண்ணும் சமம் என்று பெண்ணுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
ஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் அமைந்திட தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர்த்து மற்ற அனைத்து அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எங்களது தலைவர்களான பேரறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களது அதே வழியில் நாமும் தொடர்ந்து பின்பற்றிட இந்நாளில் உறுதி ஏற்போம்! -
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களின் சகோதரி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திருமதி. விஜயலட்சுமி அவர்களை இழந்து வாடும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@PremallathaDmdk -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய அரசியலமைப்பில் 2-வது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவராக தேர்வாகி உள்ள மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மண்ணை சேர்ந்த, நம்மில் ஒருவரான திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த உயர்ந்த பதவியை அலங்கரிப்பதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
தமிழ்நாட்டை சேர்ந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களைத் தொடர்ந்து தற்போது திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்று இருப்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாற்று சிறப்பை தேடித்தந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தமிழ் மண்ணை சேர்ந்த நாம் ஒவ்வொருவரும் பெருமையடைகிறோம்.
அன்பு சகோதரர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய தேசத்தின் மாபெரும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களது தன்னலமற்ற சேவையினை ஆற்றிடவும், தங்களுடைய உன்னதமான பணிகள் மென்மேலும் சிறந்து விளங்கிடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.@CPRGuv
My Heartfelt congratulations to Hon’ble Shri C. P. Radhakrishnan on being elected India’s 15th Vice President, the nation’s second-highest constitutional office. As a proud son of Tamil Nadu, his elevation brings historic honor to our state, following the illustrious legacy of Shri R. Venkataraman. Like many Tamilians, I too look forward to witnessing his continued and positive contribution to the Nation and to the people of Tamil Nadu. May the Almighty continue to bless him with the strength in his selfless journey towards our nation’s progress. -
V K Sasikala
@AmmavinVazhi
ஒன்றுபடுவோம்!
வென்று காட்டுவோம்! -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதிப்பிற்குரிய அய்யா R .நல்லகண்ணு அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
எளிமையின் சிகரமான அய்யா நல்லகண்ணு அவர்கள் ஆண்டவன் அருளால் முழுமையாக உடல்நலம் பெற்று தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது நல்வாழ்விற்காகவும் அய்யா அவர்களின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
#நல்லக்கண்ணு -
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 73வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து, அவர் ஆற்றிய அரும்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்.
@PremallathaDmdk -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் இன்று அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த, தூய்மை பணியாளர் வரலட்சுமி அவர்கள் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. தூய்மை பணியாளர்களை துச்சமென மதிக்கும் திமுக தலைமையிலான விளம்பர அரசுதான் இந்த உயிரிழப்புக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும், அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் திமுக தலைமையிலான அரசு இப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அலட்சியப்போக்கோடு இருந்ததால் தான் இன்றைக்கு இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
கண்ணகி நகர் போன்று எழில் நகர், பெரும்பாக்கம் என சென்னையில் இன்னும் எண்ணற்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக உள்ளது. இவற்றினை சரி செய்வதற்கு திமுக தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழக மக்களின் பாதுகாப்பினை நாள்தோறும் கேள்விக்குறியாக்குகின்ற திமுக தலைமையிலான விளம்பர ஆட்சி முடிவதற்குள் இது போன்று இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க நேரிடும் என தெரியவில்லை.
நாள் தவறாமல் மழையிலும் வெயிலிலும் அன்றாடம் பணியாற்றுகின்ற தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம், பூட்ஸ் காலணி போன்ற பாதுகாப்பு உபகரணங்களைமாநகராட்சி ஒப்பந்த நிறுவனங்கள் வழங்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தூய்மை பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் அவர்களை நடு இரவில் கைது செய்ய தெரிந்த திமுக அரசுக்கு, தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது.
தூய்மை பணியாளர் வரலட்சுமியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உயிரிழப்புக்கு காரணமான திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைமையிலான அரசு இருக்கும் வரை தமிழக மக்கள் யாருக்கும் எந்தவித பாதுகாப்பும் கிடைக்கப்போவது இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே எல்லாவித மக்கள் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும் என தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திரு.தொல் திருமாவளவன் அவர்கள் தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர். சாதியின் பெயரால் நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகின்ற அன்பு சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் தனது 63-வது பிறந்தநாளை இனிதே கொண்டாடும் இவ்வேளையில், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@thirumaofficial -
V K Sasikala
@AmmavinVazhi
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான திரு. இல.கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கண்ணியமான பேச்சுக்கும், கணீர் தமிழுக்கும் சொந்தக்காரரான திரு.இல.கணேசன் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு நல்ல நட்புறவுடன் இருந்தவர். பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றிய திரு. இல.கணேசன் அவர்கள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர்.
மூத்த தலைவர் திரு.இல.கணேசன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தூய்மை பணியாளர்களை இரக்கமற்ற முறையில் நள்ளிரவில் கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய,சாமானியர்களான தூய்மை பணியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் அடக்குமுறையை கட்டவிழ்த்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் திமுக தலைமையிலான விளம்பர அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என தீர்ப்பு அளித்தது. இதனை செயல்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன. தூய்மை பணியாளர்களை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து அவற்றை நிறைவேற்றிட தேவையான வழிவகைகளை ஆராய்ந்து இருக்க வேண்டும். ஆனால், திமுக தலைமையிலான அரசு பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரையும் நள்ளிரவில் கைது செய்து ஆடு, மாடுகளை போன்று அடைத்து வைத்து இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் திமுகவினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பல வாக்குறுதிகளை அளித்து அவர்களை நம்ப வைத்து, இப்பொழுது அவர்களின் கழுத்தை அறுப்பது போன்று ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு திமுகவினர் அளித்த பல பொய் வாக்குறுதிகளை நம்பி தமிழக மக்கள் அனைவரும் ஏமாந்து நிற்கிறார்கள். இதன்மூலம் திமுகவினர் தேர்தல் அறிக்கை அளிக்கும் தகுதியையே இழந்து விட்டீர்கள். இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளின் ஆட்சிக்காலம் விரைவில் முடியப்போகிறது.
ஏழை, எளிய, சாமானிய தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எனது முழு ஆதரவினை அளிக்கிறேன். திமுக தலைமையிலான அரசு தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவினை உடனே கைவிட வேண்டும். மேலும், சமூகவிரோதிகளைப் போன்று நள்ளிரவில் கைது செய்துள்ள தூய்மை பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திரையுலகில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து சாதனைப்படைத்துள்ள எனது அன்பு சகோதரர் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும், கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்ச நிலையினை அடைந்தபோதும், எளிமையான அணுகுமுறையினால், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் திரு.ரஜினிகாந்த் அவர்களது உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.
எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தனது அசாத்திய திறமையாலும், நடிப்பாலும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொண்டு, தமிழக மக்களின் உள்ளங்களை எந்நாளும் மகிழ்விக்க வேண்டும் எனவும், அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் எனவும் எல்லாம் வல்ல ஆண்டவனை மனதார வேண்டுகிறேன்.
@rajinikanth -
V K Sasikala
@AmmavinVazhi
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 91-வது பிறந்தநாளான இன்று அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் தமிழகத்தின் நலனிற்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளையும், ஈடு இணையற்ற பங்களிப்பையும் இந்நாளில் நினைவு கூறுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
கும்பகோணம் அருகே உத்தமதானி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாமல் கிட்டத்தட்ட 20,000 நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதால், தரையில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த அவல நிலைக்கு காரணமான திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோடை குறுவை நெல் சாகுபடி செய்து, அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் விவசாயிகள், அங்கு போதிய இடவசதி இல்லாமல் தரையிலேயே கொட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ள நிலையில் அவை அனைத்தும் மழையில் நனைந்து முளைக்க தொடங்கிவிட்டன. தமிழக விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை கடந்து, தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளை, இந்த கையாலாகாத திமுக தலைமையிலான அரசால் முற்றிலும் இழந்து, செய்வதறியாது இன்றைக்கு பரிதவித்து நிற்கின்றனர்.
தமிழக மக்களோ பல்வேறு இன்னல்களுக்கு நாள்தோறும் ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால், மக்கள் காலி குடங்களுடன் வீதியில் நின்று போராடுகின்றனர். சென்னை மாநகரமோ குப்பைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டதால் அனைத்து தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமாகிவிட்டது என்று அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, குறிப்பாக பெண் குழந்தைகள் இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாத ஒரு அவல நிலை தான் உள்ளது. தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் காவல்துறை அதிகாரியையே சர்வசாதாரணமாக படுகொலை செய்வதும்அரங்கேறி வருகிறது. தமிழக மக்களை காக்கவேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு மோசமான நிலை மிகவும் வெட்கக்கேடானது.
ஆனால், திமுகவினருக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையில்லை. அவர்களுக்கு எப்படியாவது தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டனர். திமுகவினர் ஒவ்வொரு நாளும் கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து தங்களை பற்றி தவறாக பேசிவிடாதீர்கள் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் திமுகவினர் தமிழக மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழக மக்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழிநடத்திய அதே பொற்கால ஆட்சி தான் அடுத்து அமையவிருக்கிறது. அதன்பிறகுதான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். எனவே திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்டமன்ற தேர்தல் நாளினை எதிர்நோக்கி அமைதியாக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் . -
V K Sasikala
@AmmavinVazhi
கழக மூத்த முன்னோடி மறைந்த இரா.நெடுஞ்செழியன் மற்றும் கழக முன்னாள் அமைப்பு செயலாளரும், முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான மறைந்த விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோரின் மகனான மதிவாணன் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பைப் பெற்ற நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோரின் கழக குடும்பத்தில் இருந்து ஒருவரை இழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
திரு. மதிவாணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த கழக வழக்கறிஞர் திரு. இளந்தமிழ் ஆர்வலன் அவர்களின் தந்தையும், கழக முன்னாள் நகர்மன்ற தலைவருமான திரு.இரா.பாலசுப்ரமணியன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.இளந்தமிழ் ஆர்வலன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள திவ்யா தேஷ்முக் அவர்கள், இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக ஃபிடே மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திரச் சாதனையைப் படைத்து இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
உலக செஸ் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதியான இருவருமே இந்திய வீராங்கனைகள் என்பது நாட்டில் உள்ள நம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அவர்களின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சோழ பேரரசின் புகழ்பெற்ற மன்னரும், தஞ்சை பெரிய கோயிலை கட்டியவருமான மாமன்னன் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திரசோழன் அவர்களின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை நாளினை கொண்டாடுவதில் பெருமிதம் அடைவோம். படைத்திறனில் மாபெரும் முன்னோடியாக, வீரத்தில் அரிமாவாக, கட்டடக்கலையில் வியத்தகு கலைஞனாக, சமூக சமத்துவத்தில் புரட்சியாளனாக விளங்கிய மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமைகளையும், அவர் செய்த சாதனைகளையும் உலகிற்கு பறைசாற்றும் நாளாக ஆடித்திருவாதிரை நாளினை கொண்டாடி மகிழ்கிறோம்.
தமிழ் மக்களை ஒரே கொடியின் கீழ் ஆண்ட மாமன்னன் ராஜேந்திரசோழன், கப்பல் தயாரித்து பன்னாட்டு வாணிபத்துக்கு வழிவகுத்த பெருமைக்குரியவர். நீர் மேலாண்மையில் பெரும் கவனம் செலுத்தியதோடு மக்களை சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழவைத்தவர். மாமன்னன் ராஜேந்திரசோழன் காலத்தில் வணிக வளர்ச்சி சிறப்புடன் இருந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் பெண்கள் அதிகாரிகளாக இருந்தார்கள். மேலும், பெண்களுக்கு நிலவுடமை இருந்ததையும் எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
தஞ்சையில் மிகப்பெரிய ராணுவத்தை தன்னகத்தே கொண்டிருந்த ராஜேந்திரசோழன் விவசாய பூமியாக இருந்த தஞ்சையில் விவசாயத்திற்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில், கொள்ளிடகரையாக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தை தேர்ந்தெடுத்து அங்கு புதிய தலைநகரை உருவாக்கி, அதன் மையத்தில் தஞ்சை பெரிய கோயிலை போன்றே அதே சிறப்பு வாய்ந்த பெருவுடையார் கோயிலையும் கட்டினார். ராஜேந்திரசோழன் தனது படைகளை கங்கைவரை அனுப்பி, அங்கிருந்த மன்னர்களை வென்று, அப்பகுதியிலிருந்து கங்கை நீரை எடுத்து வந்து கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்து கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினார். இது ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், வரலாற்று பொக்கிஷமாக, கட்டடக்கலைக்கு சான்றாக, யுனெஸ்கோவின் புராதன சின்னமாக இப்போதும் விளங்கிவருகிறது.
மேலும், உலகிலேயே மிகச்சிறந்த கடற்படையை முதன்முதலில் உருவாக்கிய மாமன்னன் ராஜேந்திரசோழன் வடதிசையில் கங்கைப்பகுதியையும், தென்திசையில் இலங்கையையும், மேற்குதிசையில் கேரளாவையும், கிழக்குதிசையில் கடாரத்தையும் தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்து,இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பேரரசராக விளங்கினார். சிறந்த நிர்வாகம், திட்டமிடல், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை நாளில் அவர்தம் வரலாற்றை நினைவில்கொள்வோம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் ராஜேந்திரசோழனின் பிறந்த மாதம் ஆடித்திருவாதிரை என்பது உறுதியானதை இந்நாளில் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன். அதாவது ராஜேந்திரசோழனின் பிறந்த நட்சத்திரம் 2014க்கு முன்புவரை தவறுதலாக `மார்கழித் திருவாதிரை’ என்றே கொண்டாடப்பட்டு வந்தது. இதனை அறிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு, குடவாயில் திரு. பாலசுப்ரமணியம், முனைவர் இல.தியாகராஜன் மற்றும் பொறியாளர் கோமுகன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அதன்பிறகு மேல்பாடி சோழேந்திர சிங்க ஈஸ்வரமுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டு மற்றும் திருவாரூர் கல்வெட்டு ஆகியவற்றில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தது ஆடிமாத திருவாதிரைதான் என உறுதியான வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு முதல் மாமன்னன் ராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடித்திருவாதிரையாக, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்குப் பிறகு 2016ம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்துக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றதையும் இந்நாளில் எண்ணிப்பெருமிதம் அடைகிறேன்.
மேலும், தூத்துக்குடிக்கு நேரில் வந்து 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, ருபாய் 4,900 கோடி மதிப்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த நமது இந்திய பிரதமர் அவர்கள், அதனைத்தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறுகின்ற நம் பெருமைமிகு மாமன்னன் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை விழாவில் நேரில் வந்து கலந்துகொண்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் மாமன்னன் ராஜேந்திரசோழனின் வரலாற்று சிறப்புகள் நாட்டில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதை எண்ணிப்பெருமிதம் அடைகிறேன்.
தமிழனின் வீரத்தைக் கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, ஜாவா வரை நிலைநாட்டிய தமிழ்ப்பெருவேந்தன் ராஜேந்திரசோழனின் வரலாற்று சான்றுகளை போற்றி பாதுகாத்திடுவோம். தெற்காசியாவை கட்டியாண்ட தமிழர்களின் வரலாற்றை அனைவருக்கும் கொண்டு சேர்த்திடுவோம் என இந்நாளில் உறுதியேற்று, மாமன்னன் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான 'ஆடிமாத திருவாதிரை’ நாளினை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான திரு.வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
மூத்த தலைவர் திரு.அச்சுதானந்தன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 18நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய, இந்திய விண்வெளி நாயகன் திரு.சுபான்ஷு சுக்லா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கிய திரு.சுபான்ஷு சுக்லா, இன்று விண்வெளி வீரராக இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொண்ட முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதன் மூலம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
சரித்திர நாயகன் திரு.சுபான்ஷு சுக்லா அவர்கள் இந்த விண்வெளி பயணத்தின் மூலம் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை செய்துள்ளார். அதிலும் குறிப்பாக வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்க செய்யும் பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். வரலாற்று நாயகன் திரு.சுபான்ஷு சுக்லா அவர்கள் மேற்கொண்ட இந்த விண்வெளி பயணம், நமது ககன்யான் திட்டத்திற்கு உதவக்கூடிய வகையில் ஒரு வெற்றிப்பயணமாக அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள இந்த மகத்தான சாதனை, திரு.சுபான்ஷு சுக்லா அவர்களின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அவர் மென்மேலும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பழம்பெரும் திரைப்பட நடிகை திருமதி.சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரி சரோஜா தேவி அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது.
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அனைவராலும் போற்றப்பட்ட சரோஜா தேவி அவர்கள் கொஞ்சும் தமிழ் மொழியில் பேசி ஒவ்வொருவரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டவர். கடந்த 1955ஆம் ஆண்டு தனது 17வது வயதில் கன்னட திரைப்படத்தில் கால் பதித்த சரோஜா தேவி அவர்கள் தனது தனித்திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ் திரைப்பட வரலாற்றில் புரட்சித்தலைவர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களோடு சேர்ந்து நடித்த பெருமைக்குரியவர். அதிலும் குறிப்பாக புரட்சித்தலைவர் அவர்களோடு சேர்ந்து நடித்த நாடோடி மன்னன், அன்பே வா, படகோட்டிஉள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப்படங்கள் இன்றைக்கும் அழியா காவியங்களாக உள்ளன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்ததோடு, நல்ல நட்புறவுடன் இருந்தவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் சரோஜா தேவி அவர்கள் மீது மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார். அதேபோன்று, சரோஜா தேவி அவர்கள் நடித்த திரைப்படங்களில் உள்ள பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போதும் அம்மா அவர்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்.
இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் மற்றும் பல மாநில விருதுகளும் பெற்றுள்ள அன்பு சகோதரி திருமதி சரோஜா தேவி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் பள்ளி வேன் மீது மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில்மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவி சாருமதி, மாணவர் செழியன் ஆகிய இருவர் மற்றும் மாணவர் நிவாஸ் உள்ளிட்ட மூன்று மாணாக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள மாணவர் விஸ்வேஷ் மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோரும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் எலெக்ட்ரிசியன் திரு. அண்ணாதுரை அவர்களும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பரின் அஜாக்கிரதையால் இந்த கோர விபத்து ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரும், வேன் ஓட்டுநரும் தெரிவிக்கின்றனர். அதாவது பள்ளி வேன் சென்ற போது ரயில்வே கேட் திறந்தே இருந்ததாக தெரிவிக்கும் நிலையில், இந்த அசம்பாவிதம் ஏற்பட யார் காரணம் என்பதை மத்திய அரசு முறையாக விசாரித்து, தவறு இழைத்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட் பகுதிகளில்,மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றது. அதிலும் குறிப்பாக மாணவச்செல்வங்கள் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குபவர்கள். மண்ணை விட்டு போன உயிர்களை யாராலும் மீண்டும் கொண்டு வர முடியாது. எனவே, ஓட்டுநர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் ஏற்கனவே தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், திமுக தலைமையிலான அரசு இது சம்பந்தமாக ஏன் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை? எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும், மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான திரு.A.T.மாதவன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.மாதவன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நான்கு அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில் 8 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில்ஏற்படும் வெடி விபத்துகளால் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல், விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் சுமார் 75க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், 140-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. தனியார் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக செய்திகள் தெரிவிக்கின்றன. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு முறையான ஆய்வுகள் எதையும் செய்வதில்லை என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர், சென்னை மற்றும் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ஆம் ஆண்டு பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டாசு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். ஆனால் திமுக தலைமையிலான ஆட்சியில் அதற்கு போதிய அலுவலர்கள் நியமிக்கப்படாததால் தற்போது இந்த பயிற்சி மையம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து நடைபெறாத நாட்களே இல்லை என்றளவுக்கு தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் ஏதும் அறியாத அப்பாவி தொழிலாளர்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு மக்கள் படும் துன்பங்களை வேடிக்கை பார்ப்பதைத்தவிர அவர்களுக்கு தேவையான எந்தவித பாதுகாப்பையும், எந்நாளும் அளிக்க போவது இல்லை. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலைய மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்,தற்போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த கொடுமைக்கெல்லாம் திமுக தலைமையிலான கையாலாகாத அரசுதான் காரணம். திமுக தலைமையிலான அரசு ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக, அவர்களை கொன்று குவிக்கும் அரசாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும்.
திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால்தான் உயி ரிழந் துள்ளார் என்பது தற்போதுவெட்டவெளிச்சமாகிவிட்டது. உயிரிழந்த அஜித்குமார் காவலர்களால் தாக்கப்படவில்லை என்றும், அவர் கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதால்தான் இறந்தார் என்றும் முதல் தகவல் அறிக்கையில் இருந்ததாக செய்தி வெளியானது. திமுக தலைமையிலான அரசு இந்த வழக்கை மூடி மறைக்கப்பார்த்த நிலையில், தற்போது காவலாளி அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி, இந்த விளம்பர அரசு மக்களை ஏமாற்றிவந்த நாடகம் அம்பலமாகிவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், திமுக தலைமையிலான அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். மக்களைக் காக்கவே காவல்துறை. அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கமே இல்லாது போய்விடும் என்று கருத்து தெரிவித்ததோடு, ஏன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள், ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை? இந்த வழக்கை மாநில அரசு நீர்த்துப் போகும் வகையில் செயல்பட்டால் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும். ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? அரசு தரப்பின் நடவடிக்கையும்போதுமானதாக தெரியவில்லை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்பது அதுவும் மாநில காவல்துறை தானே என்ற அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 31 லாக்கப் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களை பாதுகாக்கவேண்டிய அரசே அவர்களை கொன்று குவிக்கும் வகையில் செயல்படுவது மனிதாபிமானமற்றது. திமுக தலைமையிலான அரசு மக்களை காக்கவேண்டிய காவல்துறையை, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மாற்றியதுதான் அவர்களது ஆட்சியின் ஒரே சாதனை. திமுகவினர் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு மக்களை ஏமாற்ற ஓரணியில் தமிழ்நாடு என்று மார்தட்டி கொள்கின்றனர். ஆனால் திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் ஓரணியாக திரண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, மக்களை ஏமாற்றும் காலம் இனிமேல் இல்லை என்பதை திமுகவினர் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.
திமுக அரசிடமிருந்து, திருப்புவனம் காவல்நிலைய மரண வழக்கில் ஒரு வெளிப்படையான, நியாயமான விசாரணையை கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து, விரைந்து விசாரித்து, அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தனி உதவியாளராக பணியாற்றிய திரு K. மகாலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் மகாலிங்கம் அவர்கள் 1972ஆம் ஆண்டு முதல் புரட்சித்தலைவர் அவர்களுடன் தொடர்ந்து பயணித்து, அவரது இறுதி மூச்சுவரை உடனிருந்து நேர்மையுடன் பணியாற்றியவர். புரட்சித்தலைவர் அவர்களும் திரு.மகாலிங்கம் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையையும், அன்பையும் வைத்திருந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்
அன்பு சகோதரர் மகாலிங்கம் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி, கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.அமுல் கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.அமுல் கந்தசாமி அவர்கள் தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். கழகம் ஒன்றிணையவேண்டும், தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் அமையவேண்டும் என மிகவும் பிரயாசைப்பட்டவர். அவரது நல்ல எண்ணம் கண்டிப்பாக ஈடேறும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திரு.அமுல் கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட போயிங் ரக ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் உள்ள மெகானி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவ மாணவர் விடுதியில் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 179 நபர்கள் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கழக முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு.க.ர.பழனிசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.பழனிசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருப்பூர் தெற்கு தொகுதி, கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சு.குணசேகரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.குணசேகரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை வரவேற்று கர்நாடக மாநிலம் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 1 சிறுமி மற்றும் 4 பெண்கள் உட்பட 11 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கர்நாடக மாநில அரசு இது போன்று மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சியை முன்கூட்டியே கணித்து அதற்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க தவறிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. கர்நாடக அரசு இதனை சரியாக திட்டமிட்டு இருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகாமல் தடுத்து இருக்கலாம்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நார்வேயில் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்றுவரும் கிளாசிக்கல் சர்வதேச செஸ் ஓபன் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான குகேஷ் அவர்கள், 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் முதல் நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றதன் மூலம் குகேஷ் அவர்கள் தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார். இது குகேஷ் அவர்களின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மக்கள் குரல் நாளிதழின் மூத்த செய்தியாளர் திரு.ஏ.பி.மோகன் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.ஏ.பி.மோகன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சக பணியாளர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் சகோதரி சரோஜா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது சகோதரியை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.வைகோ அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் திரு.ராஜேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 45 ஆண்டுகளாக திரைத்துறையில் சிறப்புடன் பணியாற்றிய நிலையில் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் சாதித்துள்ள இவர் இதுவரை ஒன்பது புத்தகங்களை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அன்பு சகோதரர் ராஜேஷ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்னாரது பரந்த அறிவு, நிபுணத்துவம் மற்றும் சமூக சேவை மீதான அவரது ஆர்வம் ஈடு இணையில்லாதது.
தமிழ்நாட்டு மக்களின் மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ள தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதால் அவருடைய குடும்பத்தினருக்கும், இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கழக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்களின் பேத்தி மருத்துவர் திவ்யபிரியா அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது பேத்தியை இழந்து வாடும் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கடந்த 2019-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 நபர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த உரிய நீதியாகும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது. இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு சரியான பாடத்தை கற்பித்துள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையக்கூடும். இதேபோன்று, திமுக ஆட்சியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் அனைத்து குற்றங்களுக்கும், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கும் வரும் காலங்களில் உரிய தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் நம் இந்திய மண்ணின் பாதுகாப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய துணிச்சலான நடவடிக்கையின் மூலம் இந்திய மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்துள்ள மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்திய ராணுவத்திற்கும் நம் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் வீர வணக்கம் செலுத்தி வாழ்த்துகிறோம்.
மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாட்டு மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் எதிரிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கிட மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் கரங்களை வலுப்படுத்திட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு துணை நிற்போம் என இந்நேரத்தில் உறுதி அளிப்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில் 3 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்துகளால் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் 4 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. கோயில் திருவிழாக்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை அளிக்க திமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் தவறாமல் கண்காணித்திட வேண்டும். எனவே திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு பயனற்ற விசயங்களுக்கு முன்னுரிமை அளித்து, நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்ய இந்த விளம்பர அரசு முன் வர வேண்டும்.
திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 நபர்கள் உயிரிழந்தனர். அடுத்த மாதமே ஆனையூர் என்ற இடத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவரும், தருமபுரி,கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பெண்களும் உயிரிழந்தனர். அதன்பிறகு விருதுநகர், சின்னவாடி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல், விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் சுமார் 70க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், 130-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. தனியார் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக செய்திகள் தெரிவிக்கின்றன. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு முறையான ஆய்வுகள் எதையும் செய்வதில்லை என்பது தொடர்ந்து நிரூபணமாகிவருகிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ஆம் ஆண்டு பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டாசு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். ஆனால் திமுக தலைமையிலான ஆட்சியில் அதற்கு போதிய அலுவலர்கள் நியமிக்கப்படாததால் தற்போது இந்த பயிற்சி மையம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள்.
இந்த இரு வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள்விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து நடைபெறாத நாட்களே இல்லை என்றளவுக்கு தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு,அதில் ஏதும் அறியாத அப்பாவி தொழிலாளர்கள்விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு மக்கள் படும் துன்பங்களை வேடிக்கை பார்பதைத்தவிர அவர்களுக்கு தேவையான எந்தவித பாதுகாப்பையும், எந்நாளும் அளிக்க போவது இல்லை. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கழக முன்னாள் அமைச்சர் திருமதி.S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் சந்திரசேகர் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது கணவரை இழந்து வாடும் திருமதி.கோகுல இந்திரா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முன்னாள் சிறப்பு பாதுகாவலர் திரு.வெ.ராஜேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் ராஜேந்திரன் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் , மரியாதையும் கொண்டவர். அம்மா அவர்களுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் பாதுகாப்பு அரணாக இருந்து சிறப்பான வகையில் தனது பணியினை மேற்கொண்டார்.
சகோதரர் ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மேலும், தமிழகத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உள்பட 17 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒவ்வொருநாளும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவதுவாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு வடிகட்டிய பொய்யை பேசியிருக்கிறார். அதாவது, அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மாறான கருத்துக்களை, வாய்க்கு வந்தபடி பேசி,மக்களை ஏமாற்ற நினைப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றேமுக்கால் கோடி பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் நிலையில், மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 20,900 தான் உள்ளது. இது எந்தவிதத்தில் போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் மக்களை சந்தித்தபோது, திமுக தலைமையிலான அரசு, புதிய பேருந்துகளை இதுவரை ஏன் வாங்கவில்லை? என்று கேள்வி எழுப்பினேன். அதன்பிறகுதான் சுமார் 100 முதல் 150 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டன. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றப்பிறகு 2022-2023ஆம் நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள், 2023-2024ஆம் நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள், 2024-2025ஆம் நிதியாண்டில் 3000 பேருந்துகள், ஜெர்மன் வளா்ச்சி வங்கி உதவியுடன் 2,666 புதிய பேருந்துகள் என மொத்தம் 7,682 புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறை அமைச்சர் வாய் கிழிய பேசினார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பேருந்துகள் வாங்கி இருந்தால் கூட, நான்கு ஆண்டுகளில் இந்நேரம் 4000 பேருந்துகளாவது கொள்முதல் செய்திருக்க முடியும். ஆனால், உண்மை என்னவென்றால் தற்போதுவரை கிட்டத்தட்ட 1783 புதிய பேருந்துகள் தான் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதுமுதல் 10 வருடங்களில் கிட்டத்தட்ட 15,445 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் திமுக அமைச்சரோ இவற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு உண்மைக்கு மாறான தகவல்களை பேசி மக்களை ஏமாற்ற பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
திமுக தலைமையிலான அரசு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காகவே, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் நடைமுறையில் இருந்துவந்த, வயது முதிர்ந்த பேருந்துகளை கழிவு செய்தல்கொள்கையினை, 08-07-2021ஆம் தேதியன்று திமுக அரசு திருத்தியது. அதாவது விரைவு பேருந்துகளுக்கு 3 வருடம் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் என்று இருந்த கழிவு செய்தல்கொள்கையினை, 9 வருடம் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் என்று திருத்தியது. அதேபோன்று மாவட்ட பேருந்துகளுக்கு 6 வருடம் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் என்று இருந்த கழிவு செய்தல் கொள்கையினை, 9 வருடம் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் என்று திமுக அரசு திருத்தியது. இதனடிப்படையில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யாமல், பழைய பேருந்துகளை கொண்டே இயக்கப்பட்டன. மேலும், இதில் கொடுமை என்னவென்றால்,பழைய பேருந்துகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. அவை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. இன்றைக்கு 50 சதவிகித பேருந்துகள் பராமரிக்க முடியாத வகையில், அதன் ஆயுட்காலமே முடிந்து காலாவதியாகியிருப்பதுதான் உண்மை. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் அரசு பேருந்துகள் சாலையின் நடுவிலேயே பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகரிலேயே பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு பயணி சாலையில் விழுந்து காயமடைந்தது, அரசு பேருந்தின் மேற்கூரை தனியாக கழன்று காற்றில் பறந்தது, திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டது, பல இடங்களில் பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, நகர பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நிற்பது போன்ற அவலநிலை தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அரங்கேறிவருகின்றன. தமிழக மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
மேலும், கிராமப்புறங்களில் பல ஊர்களுக்கு முறையாக அரசு பேருந்துகள் இயங்குவதில்லை. இதன் காரணமாக பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகள் முதல் வேலைக்கு செல்லும் சாமானிய மக்கள் வரை பேருந்து வசதி இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்கள் வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? மகளிருக்கு இலவச பேருந்து என்று அறிவித்துவிட்டு, குறிப்பிட்ட இலவச பிங்க் நிற பேருந்துகள் ஓடுவதே இல்லை. இலவச பேருந்துகளுக்காக மகளிர் காத்திருந்து ஏமாற்றம் அடைவதுதான் மிச்சம். அப்படியே வந்தாலும் அதில் பயணம் செய்யும் மகளிரை மிகவும் மோசமாக இழிவுபடுத்துகிறீர்கள்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
மேலும், தமிழகத்தில் சாலைகள் மிகவும் மோசமடைந்துவிட்டன. கிராமப்புறங்களில் இன்னும் தார் சாலைகள் முழுமையாக போடப்படவில்லை. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஒரு ஐந்து வருடத்திற்கு, ஒருமுறையாவது சாலைகள் போடப்படவேண்டும். கிராமப்புறங்களில் சாலை போடுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ரூபாய் 1000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு மட்டும் வருகிறது. திமுக தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு இதுவரை எத்தனை கிலோமீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன? என்று எந்த புள்ளிவிபரமும் இல்லை. இன்றைக்கும் கிராமப்புற பகுதிகளில் பல இடங்களில் பிரதான சாலைகளே குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக தலைமையிலான அரசின் ஆயுட்காலம் ஒவ்வொரு நாளும் எண்ணப்பட்டுவருகின்றன. திமுகவினரின் பகல்வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டது. தமிழக மக்கள், வரும் சட்டமன்ற தேர்தலில்,திமுக தலைமையிலான இந்த விளம்பர அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.(2/2) -
V K Sasikala
@AmmavinVazhi
Remembering Pope Francis, a champion of the marginalized, poor & vulnerable. His tireless advocacy for social justice, environmental stewardship & interfaith dialogue inspired countless individuals worldwide.
Pope Francis embodied humility, simplicity & kindness. His visits to prisons, hospitals & refugee camps exemplified his compassion & empathy. "Laudato Si'" sparked a global conversation on environmental sustainability.
Rest in peace, Your Holiness. May your legacy of love, service & compassion continue to guide & inspire us to build a more just & compassionate world. #popefrancis #legacyoflove -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த புதூர் கிளைக்கழக செயலாளர் P.T.ராஜேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கழக நிர்வாகி திரு. மேகநாதன் பாபு அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.மேகநாதன் பாபு அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து போராடி, அவர்களை இம்மண்ணை விட்டு விரட்டியடித்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 269ஆம் ஆண்டு பிறந்தநாளை அனைவரும் கொண்டாடும் இந்நாளில் அவர்தம் நினைவை போற்றிடுவோம்.
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றிடும் வகையிலும், அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலையும், மணி மண்டபமும் அமைத்து கொடுத்ததையும், தீரன்சின்னமலை அவர்களின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததையும் இந்நாளில் மகிழ்ச்சியோடு எண்ணிப்பார்க்கிறேன்.
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நன்னாளில் போற்றி வணங்கிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 15 மாதங்களாக பல்வேறு வகையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும், கடந்த 28 நாட்களாக உற்பத்தி நிறுத்த போராட்டமும் செய்து வந்த நிலையில், தற்போது 5 நாட்களாக குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூலிக்கு நெசவு தொழில் செய்யும் ஏழை, எளிய, சாமானிய விசைத்தறி உரிமையாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஜவுளி உற்பத்தியாளர்கள் நிறைவேற்றிடவேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மூலதனமாக விளங்குகின்ற வகையில் விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இன்றைக்கு பல்வேறு காரணங்களால் நெசவு தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இதற்கு திமுக தலைமையிலான அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தியதன் விளைவாக, ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்து பரிதவிக்கின்றனர். இதன் விளைவாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்த பல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இன்றைக்கு சீரழிந்துவிட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை சுமார் ரூ.800 கோடிக்கு மேல் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், லட்சக்கணக்கான காடாக்கள் தேக்கமடைந்து இருப்பதாகவும் விசைத்தறி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் சார்பிலும் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. அதாவது கழிவு பஞ்சுகளின் விலையை கட்டுப்படுத்த கோரியும், தொழில் நிறுவனங்களை அழித்திடும் வகையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வருடம் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் வகையில் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட OE மில்கள், சலவை மற்றும் சிபி மில்கள் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கரடிவாவி, காரணம்பேட்டை, சாமலாபுரம் உள்ளிட்ட பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் OE மில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இன்று நடைபெறுகின்ற இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால். நாள் ஒன்றுக்கு சுமார் 32 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனவும், மில்லில் பணிபுரியும் சுமார் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வேலை இழந்துள்ளதாகவும் மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிகாலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் உயர்த்தப்பட்டதையும் இந்நேரத்தில் திமுக ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.
எனவே, திமுக தலைமையிலான அரசு இனியும் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களிடமும், விசைத்தறி தொழிலாளர்களிடமும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வினை ஏற்படுத்த வேண்டும். ஆனால் திமுக தலைமையிலான அரசு இதுபோன்று விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்திவருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இதற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக அமைச்சர் பொன்முடியின் பேச்சு அநாகரீகத்தின் உச்சம். ஒரு பொதுமேடையில் இந்த அளவுக்கு பெண்களைப் பற்றி கொச்சையாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் அமர்ந்துகொண்டு பெண்களை மிகவும் மோசமாக, இழிவு படுத்தி பேச எப்படி முடிகிறது என்று தெரியவில்லை. கடந்த 6ஆம் தேதி பொதுமேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதை, இன்றுவரை எந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் வெளிவராமல் திமுக தலைமையிலான அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பார்த்துக்கொண்டது இன்றைக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேசியபின், 5 நாட்கள் கழித்து இன்றைக்கு கட்சி பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது திமுகவினரின் கண் துடைப்பு நாடகமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும், கட்சியில் ஒரு உறுப்பினராக இருக்கக்கூட தகுதியில்லாத இவர், இன்னும் அமைச்சர் பதவியில் நீடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழக அமைச்சராக நீடிக்க இவருக்கு எந்தவித அருகதையும் இல்லை. பொன்முடி அவர்களை உடனே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவரே நாட்டின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுபோல் பேசியிருப்பதால் இவர் அமைச்சராக பதவி ஏற்கும்போது தான் ஏற்றுக்கொண்ட ரகசியகாப்பு பிரமானத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். இவர் மீது மாண்புமிகு உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களது அமைச்சரவையில் யாராவது இது போன்று நடந்து கொண்டார்களா? அவ்வாறு ஒருவர் பேசி இருந்தால் அவர் மேடையிலிருந்து கீழே இறங்குவதற்குள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமல்ல, அவரை கட்சியிலிருந்தே வெளியேற்றி இருப்பார்கள். புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில்தான் பெண்கள் கண்ணியமாக வாழ முடிந்தது. ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஒவ்வொரு மணித்துளியிலும் பெண்கள் வஞ்சிக்கப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை சிறப்புடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அறத்தையும், அகிம்சையையும் வலியுறுத்தும் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர் “கொல்லாமையும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமையுமே அறம்” என்பதை உலகிற்கு விளக்கி, அகிம்சை நெறியை தனது வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி, அதன் மாண்பை உலகிற்குப் பறைசாற்றியவர்.
உண்மையையே பேசுதல், வன்முறையைத் தவிர்த்தல், எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், பற்றற்றிருத்தல் போன்ற பகவான் மகாவீரர் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைபிடித்து உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட வேண்டும்.
பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில்,மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினருமான, இலக்கியச்செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ் பற்றாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளருமான குமரி அனந்தன் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். தமிழக சட்டமன்ற வரலாற்றில் கருப்பு தினமான 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி புரட்சித்தலைவி அம்மா அவர்களை சட்டமன்றத்தில் திமுகவினர் தாக்கிய அன்று, மாற்றுக் கட்சியை சேர்ந்த உறுப்பினராக இருந்தபோதும் அம்மா அவர்களுக்கு, திரு.குமரி அனந்தன் அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.
இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் அவர்களை இழந்து வாடும் அவருடைய மகளும், முன்னாள் ஆளுநருமான சகோதரி தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையினை ரூ.50 உயர்த்தியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்த போதும், இது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும், இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கக்கூடும்.
அதேபோன்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியபோதும், பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் உயர்வு இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
ஏழை, எளிய, சாமானிய மக்கள் குறிப்பாக பெண்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற மிகவும் இன்றியமையாத தேவையாக இன்றைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மாறியிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு இன்றைக்கு நாம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளோம். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு,சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய வகையில் இருப்பதினால் மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியை,இப்பொழுதாவது நிறைவேற்றி சாமானிய மக்களின் சுமையை குறைக்க முன் வரவேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ் திரையுலக லட்சிய நடிகரும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான மறைந்த திரு.S.S.ராஜேந்திரன் அவர்களின் மனைவி S.S.R.தாமரைச்செல்வி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அம்மையார் தாமரைச்செல்வி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்புச்செயலாளருமான கருப்பசாமி பாண்டியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கழக மூத்த நிர்வாகி கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல திரைப்பட இயக்குநர் திரு.பாரதிராஜா அவர்களின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையை சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக தலைமையிலான இந்த விளம்பர அரசின் நிர்வாக திறமையின்மையாலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் இந்த அரசு தோற்றுப் போனதாலும் இன்றைக்கு தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது. அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்கவேண்டும். இந்த வன்செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, சென்னையில் இன்று ஒரே நாளில் எட்டு இடங்களில் பட்டப்பகலிலேயே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே பகல் நேரங்களில் கூட யாராலும் வெளியில் நடமாட முடியவில்லை. வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதன் மூலம் திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில்பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
தாம்பரத்தில் பொங்கல் பண்டிகையின் போது 10 இடங்களில் இதே போன்று செயின் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. அதற்கு இந்த அரசு உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து இருந்தால், தொடர்ந்து இதே குற்றம் மீண்டும் நடைபெற்றிருக்காது. ஆனால், இந்த ஆட்சியாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. திமுக தலைமையிலான அரசு சம்பிரதாய நிகழ்ச்சிகள் போல சட்டமன்றத்தை பெயரளவிற்கு நடத்திக்கொண்டு இருக்கின்றது. தமிழக சட்டமன்றத்தில் பொதுமக்களின் பிரச்சனைகளை பேசுவதை விட அரசியல் பேசுவதுதான் பிராதனமாக இருக்கிறது. அதேபோன்று இந்த விளம்பர அரசு மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியமான விசயங்களில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு, மொழிப்பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு, தங்களோடு கூட்டணியில் உள்ள அண்டை மாநிலங்களையும் கூட்டு சேர்ந்து கொண்டு வெறும் நாடகங்களை அரகேற்றுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை.
திமுக தலைமையிலான அரசால் யாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இந்த அரசு நீடிக்கின்ற வரை இன்னும் எத்தனை நபர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாக போகிறார்களோ தெரியவில்லை. இந்த மக்கள் விரோத ஆட்சியின் இறுதிக்காலத்தில் தமிழகம் இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிக்க போகிறதோ தெரியவில்லை. இதற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டிய விண்வெளி தேவதை சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் விண்வெளியில் பல முக்கிய ஆராய்ச்சிகளை செய்ததோடு, விண்வெளியில் அதிக நாட்கள் பயணித்த முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். மேலும், விண்வெளியிலேயே மாரத்தானில் ஈடுபட்ட முதல் நபர் என்ற சாதனையையும், அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு, வரலாற்று சாதனை படைத்துள்ளதன் மூலம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகவும். அவர் மென்மேலும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து பெண்ணினத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@Astro_Suni @NASA @SpaceX -
V K Sasikala
@AmmavinVazhi
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளதோடு, சாம்பியன்ஸ் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றிய முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையையும் படைத்து இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணி வீரர்கள் மென்மேலும் பல்வேறு வியத்தகு சாதனைகளை நிகழ்த்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் வருகின்ற 8ஆம் தேதி லண்டன் நகரில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பது நமது தாய் மண்ணிற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. வேலியன்ட் எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சிம்பொனியை நேரடியாக அரங்கேற்றவுள்ள இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தும், ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் படைத்துள்ளதன் மூலம் இசை சாம்ராஜ்யத்தின் தன்னிகரற்ற ஜாம்பவானாக விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழர்களின் திறமையை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்வது மிகவும் பெருமையளிக்கிறது. உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா அவர்களது பயணம் இறைவனின் அருளால் வெற்றி பயணமாக சிறப்புடன் அமையட்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் பொதுத் தேர்வினை எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
அதாவது, "ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, மாணவச்செல்வங்கள் கல்வியறிவை பெறுவதன் மூலம் எந்த காலத்திலும் வாழ்வில் வெற்றி காண முடியும் என்பதை கருத்தில் கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்.
பொதுத் தேர்வை எண்ணி எந்தவித பயமும் இல்லாமல், தைரியமாக எழுதுங்கள். எந்த ஒரு செயலையும் தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் செய்யும்போது அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். அன்புக்குரிய மாணவச்செல்வங்களே தேர்வு காலங்களில் எந்தவித கவனச்சிதறல்களும் ஏற்படாதவண்ணம் விழிப்புடன் செயலாற்றுங்கள். செல்போன் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். உங்களுடைய முழு நேரத்தையும் படிப்பதற்காக செலவிடுங்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள்.
அதேபோன்று, மாணவச்செல்வங்கள் நல்ல ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் நன்றாக உறங்குங்கள். உங்கள் உடல்நிலையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோன்று பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். அவர்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவர்கள் படிப்பதற்கு எந்தவித இடையூறும் இல்லாத சூழ்நிலைகளை அமைத்துக் கொடுங்கள்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியை பொறுத்து தான் அமைகிறது. நம் வருங்காலம், இளம் சமுதாயத்தினரின் கையில்தான் உள்ளது. நம் மண்ணில் பிறந்த மாணவச்செல்வங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து, நம் தேசத்திற்கே பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். மாணவச்செல்வங்களே உங்களில் பலர், எத்தனையோ உயிர்களை காக்கும் மருத்துவர்களாக வரலாம், நாட்டை காக்கும் ராணுவ அதிகாரிகளாக வரலாம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக வரலாம், விஞ்ஞான உலகில் வியத்தகு சாதனைகளை படைக்கும் பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களாக வரலாம், உயர்ந்து ஓங்கி நிற்கும் கட்டடங்களை கட்டும் பொறியாளர்களாக வரலாம், உலகமே வியந்துப் பார்த்த விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் போன்று வரலாம். இதுபோன்று எண்ணற்ற துறைகளில் வல்லுனர்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது ஆசை.
எனவே, நம் மாணவச்செல்வங்கள் நல்ல உயர்கல்வி பெற்று, தங்களுடைய வாழ்க்கையில் உன்னத நிலைகளை அடைய, இப்பள்ளிப் பருவ பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகவும் அத்தியாவசியமானது. எனவே, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் நம் மாணவச்செல்வங்கள் அனைவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி, அதில் வெற்றியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கன்னியாகுமரி மாவட்டம் இணையம் புத்தன் துறையில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் விஜயன், மனோ, ஜெஸ்டஸ், சோபன் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.
இதில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை 63வது வார்டு மாமன்ற முன்னாள் உறுப்பினரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி கழக முன்னாள் செயலாளருமான A M அலிகான் பஷீர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் அலிகான் பஷீர் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுகவை சேர்ந்த தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியிருப்பதாக ஆடியோ ஒன்றுவெளியாகியிருக்கிறது. அதில்"கலெக்டர், எஸ்.பி, யாராக இருந்தாலும் எனது பேச்சைத்தான் கேட்கவேண்டும், இல்லையென்றால் கதையை முடித்துவிடுவேன்" என ஆணவத்துடன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்று ஆளும்கட்சியினரின் ஆணவப்பேச்சின் மூலம், அரசு அதிகாரிகளை பரிதாப நிலைக்கு தள்ளியிருப்பதுமிகவும் வெட்கக்கேடானது. தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. இதுபோன்ற திமுகவினரின் அராஜக போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியுள்ள திமுக பொறுப்பாளர் மீது அக்கட்சி தலைமை உடனே உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், "ரோம் நகரமே பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல்" திமுகவினர் கட்சிக்கூட்டம் நடத்திக்கொண்டும், விழா எடுத்துக்கொண்டும் இருப்பது வெட்கக்கேடானது. தமிழகத்தில் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது திமுக என்ற தீயசக்தி என்பதை எனது பேட்டிகள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். தமிழக மக்களும் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தமிழக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த திமுகவினர், இன்றைக்கு ஆட்சியை நடத்ததெரியாமல், தங்கள் கட்சியை மட்டும் வளர்த்து கொண்டிருக்கின்றனர். திமுகவினர் தங்கள் கட்சியினர் செய்யும் அராஜக செயல்கள், அத்துமீறல்கள் என எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமலும், அதனை கட்டுப்படுத்தவும் முடியாமல், ஆட்சியில் இருந்துகொண்டு, தமிழக மக்களை நாள்தோறும் கசக்கி பிழிந்து கொண்டு இருக்கிறார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் கௌரவமாக இருந்தார்கள், சுதந்திரமாக செயல்பட்டனர். அரசியல்வாதிகளின் தலையீடு எந்த அரசு அதிகாரிகளுக்கும் இருந்தது கிடையாது. இதுபோன்ற நல்ல விசயங்களை திமுகவினர் என்றைக்கும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழகத்தில் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அவலநிலை நிலவி வருகிறது. ஆனால் திமுக தலைமையிலான அரசோ இவர்களின் தோல்விகள், மக்கள் விரோத செயல்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக நாள்தோறும் மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத விசயங்களை பூதாகரமாக்கி, அது தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தி மக்களை ஏமாற்ற பார்க்கிறது. ஆனால் தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். திமுகவினர் போடும் பகல் வேஷங்களை இனிமேலும் மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழக மக்கள் திமுகவினருக்கு தக்க பாடம் கற்பிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு அதிகாரிகளை மிரட்டியுள்ள திமுக கட்சியை சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை, தமிழகமுதலமைச்சர் உடனே எடுக்க வேண்டும். -
V K Sasikala
@AmmavinVazhi
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிகாலங்களில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. இதை இன்றைக்கும் அனைவரும் உறுதியுடன் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். திமுக தலைமையிலான அரசு இந்த விஷயத்தில் வீண் அரசியல் செய்துகொண்டு மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக்கொள்வதை விட்டுவிட்டு, தமிழகத்திற்கான நிதியை பெற தேவையான வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்.
திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மொழிப் பிரச்னைகளையும், சாதிய பிரச்னைகளையும் தூக்கி பிடித்துக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் எங்குபார்த்தாலும் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இதைப்பற்றியெல்லாம் எந்தவித கவலையும் படாமல் திமுக தலைமையிலான அரசு அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களிலும் திமுக ஆட்சியின் அவலங்கள் வெளியில் வராமல் பார்த்துக்கொள்ள வசதியாக தமிழகத்தில் நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்னையை சாதி ரீதியிலோ, மொழி சம்பந்தமாகவோ மைய்யப்படுத்தி அது தொடர்பான செய்திகள் மட்டும் முதன்மையாக இருப்பது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்குவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள். ஆனால் இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவது இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தங்கள் வசம் கொண்டுள்ள திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர், அரசியல் செய்வதை விட்டுவிட்டு, பாராளுமன்றத்தில் நமது மாநிலத்தின் தேவைகளை எடுத்து கூறி மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியினை பெற்றுத்தர வேண்டும்.
தமிழக மாணவச்செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு தேவையான கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக அரசின் முன்னாள் வக்ஃப் வாரிய தலைவரும், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. ஹைதர் அலி அவர்களின் தாயார் ஹபிபத்துல் அலிமா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.ஹைதர் அலி அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அடுத்த முட்டம் பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்துவந்தவர்களை, தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்களை வெட்டி படுகொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த அராஜக செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். இதை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மயிலாடுதுறையில் சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஒரு சில தினங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தவுடன் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை, தட்டி கேட்ட இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற படுபாதக செயலில் ஈடுபட எங்கிருந்து துணிச்சல் வருகிறது. திமுக தலைமையிலான அரசு இந்த சாராய விற்பனையை முன்கூட்டியே தடுத்து இருந்தால் இன்றைக்கு இந்த இளைஞர்களின் உயிர் பறிபோயிருக்காது. இது இந்த விளம்பர அரசின் அஜாக்கிரதையால், தவறு இழைப்பவர்களை கண்டும் காணாமல் விட்டதால் தான் இந்த உயிரிழப்பு இப்போது நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இளைஞர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என நாள்தோறும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் இந்த கையாளாகாத அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விளம்பர திமுக ஆட்சியின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை விடுவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விழுப்புரம் மாவட்டம், முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளரும், 22ஆவது வார்டு கிளைக்கழக செயலாளருமான
வி. சேட்டு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் சேட்டு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, மழவராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கழகத்தொண்டர் திரு.S.S.வணதங்கராஜா அவர்களின் தந்தை S.சங்கரபாண்டி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் சங்கரபாண்டி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கழக மூத்த முன்னோடி மறைந்த திரு. செல்வராஜ் அவர்களின் பேரனும், விழுப்புரம் நகர கழக துணைச் செயலாளர் திரு. பிபிஎஸ். ராஜேந்திரன் அவர்களின் மகனுமான
பாலாஜி என்கிற ஆர். வைத்தீஸ்வரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு. ராஜேந்திரன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்களின் வளர்ச்சிக்கான அம்சங்கள் இருந்தபோதும், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் அதிகம் இடம் பெறாமல் போனது மிகவும் துரதிருஷ்டவசமானது.
நிதிநிலை அறிக்கையில் தனிநபருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக அதிகரித்து இருப்பது, மாத ஊதியம் பெறுபவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சிறுகுறு நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி அளவுக்கு கடன் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. அதேபோன்று புத்தாக்க தொழில்களுக்காக ரூ.10 கோடி வரை கடன் தருவதாக அறிவித்து இருப்பதும் மிகவும் பயனளிக்கக்கூடியது. அதேசமயத்தில் சிறுகுறு நிறுவனங்கள் செலுத்தவேண்டிய வட்டியில் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றம் அளிப்பதாக கருதுகின்றனர். அதேபோன்று மூலப்பொருள்களுக்கான வங்கி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாததும் ஏமாற்றம் அளிப்பதாக கருதுகின்றனர்.
மீன்வளத்துறை மேம்பாட்டிற்க்காக கடல் சார்ந்த பொருட்களின் இறக்குமதி வரி குறைப்பு, செல்போன், மின் வாகனங்களுக்கு பயன்படும் லித்தியம் பாட்டரிகளுக்கான வரி விலக்கு ஆகியன வரவேற்கத்தக்க அம்சங்களாகும். மேலும், ஆண்டிற்கு 12.7 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருப்பது விவசாயிகள் நலன் சார்ந்து உள்ளது. அதேசமயம் விவசாய கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது.
மருத்துவ படிப்பில் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கும் திட்டம், கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மையம் அமைத்தல் போன்றவை நாட்டிற்கு நன்மை பயப்பதாக இருக்கும். அதேசமயம் நீட் தேர்வு முறையை திரும்பப் பெறுதல் போன்ற அறிவிப்புகள் இடம்பெறாதது தமிழக மாணவ செல்வங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
அதேபோன்று, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தனி கிரெடிட் கார்ட் வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து வழங்கும் திட்டம், பட்டியலின, பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களில் முதன்முறை தொழில் முனைவோர் 5 லட்சம் நபர்களுக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி, 2028-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் போன்றவை மக்கள் நலன் சார்ந்த திட்டங்களாகவே உள்ளன. இருப்பினும் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரியை குறைக்க எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் கிடப்பில் இருப்பதையும் மத்திய அரசு வரும் காலங்களிலாவது பரிசீலிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவர்களின் சில இன்றியமையாத தேவைகள் இன்னமும் பூர்த்தியடையாமல் இருப்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள் விடாமல் துரத்தி வந்து சாலையின் நடுவே குறுக்கே நின்று வழியை மறித்து காரில் இருந்த பெண்களை கொடூரமாக அச்சுறுத்தும் வீடியோ வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது போன்று பெண்களுக்கு பாதுகாப்பற்ற, வாழ தகுதியற்ற ஒரு மாநிலமாக தமிழ்நாடு மாறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இது போன்ற அவலங்கள் தான் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 10ஆம் தேதி தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான இரண்டு சட்டத்திருத்த முன்வடிவுகளை அறிமுகம் செய்துவைத்து,“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருவதாக” தமிழக முதல்வர் உரை நிகழ்த்தினார். பெண்களை பின் தொடர்ந்தால் ஏற்கனவே 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை என்று இருந்த சட்டத்தை 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் சிறை என்று திருத்தப்பட்டது. இந்த சட்ட திருத்தம் கடந்த 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அரசும் அறிவித்தது. ஆனால் என்ன ப்ரயோஜனம்? அன்றைக்கு இரவே திமுகவினர் பெண்களை துரத்தி துன்புறுத்தும் வேலையில் இறங்கிவிட்டார்கள். திமுகவில் தலைவர் போடும் சட்ட திட்டங்களை அவரதுதொண்டர்களே முதலில் மதிப்பதில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. கடந்த காலங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை வைத்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டம் ஒழுங்கை நன்றாக காப்பாற்றினார்கள். பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், இன்றோ யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத அவல நிலைதான் இந்த திமுக விளம்பர ஆட்சியில் உள்ளது.
எனவே, திமுக தலைமையிலான அரசு தங்களது சொந்த கட்சியினரை கட்டுப்படுத்தினாலே போதும் நாட்டில் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளமுடியும். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவினரால் அச்சுறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சேலம் புறநகர் மாவட்ட மீனவரணிச் செயலாளர் எடப்பாடி திரு.ஏ.எல் சுரேஷ் அவர்களின் மகன் S.பிரசன்னா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு. ஏ.எல். சுரேஷ் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உலக புகழ்பெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரான திரு. கே.எம்.செரியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவு யாராலும் ஈடு செய்யமுடியாதது. மருத்துவத்துறைக்கே ஒரு பேரிழப்பாகும்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவர். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல் முறையாக கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய சாதனையாளர், நாட்டில் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்,அறுவை சிகிச்சையின்றி இதய ஓட்டையை அடைத்து சிகிச்சையளிப்பதில் கைதேர்ந்தவர், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராக விளங்கியவர் திரு.கே.எம்.செரியன் அவர்கள்.மருத்துவத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளார். அன்னாரது தன்னலமற்ற சேவையை பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மருத்துவர் செரியன் அவர்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM) மருத்துவமனை தொடங்க புரட்சித்தலைவர் அவர்கள் 1986ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவர் கே.எம்.செரியன் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM) மருத்துவமனை பூமி பூஜையில் கலந்து கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது சொந்த பணத்தில் 5லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதேபோன்று மருத்துவர் கே.எம்.செரியன் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2004ஆம் ஆண்டு ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்ததையும் நினைத்துப்பார்க்கிறேன். மேலும்,புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விருப்பத்திற்கிணங்க மருத்துவர் கே.எம்.செரியன் அவர்கள், கருணையின் மறு உருவமாக விளங்கிய அன்னை தெரசா அவர்கள் தமிழகம் வந்தபோது அவர்களை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்ததையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கே.எம்.செரியன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மருத்துவ துறையை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது பெற உள்ளவர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், கலை, ட்ரோன் வடிவமைப்பு, கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள திரு.அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திரு.அஜித்குமார் அவர்கள் தனது வாழ்வில் மென்மேலும் பல உச்சங்களை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள ஜவுளி வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ள திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்களுக்கும், பரத நாட்டியக் கலைஞர் செல்வி.ஷோபனா சந்திரகுமார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரும் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தவருமான திரு. ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கும், மிருதங்க கலைஞர் திரு. குருவாயூர் துரை அவர்களுக்கும், சமையல் கலைஞர் திரு. தாமோதரன் அவர்களுக்கும், பத்திரிக்கை துறையை சேர்ந்த திரு. லக்ஷ்மிபதி ராமசுப்பையர் அவர்களுக்கும், பேராசிரியர் திரு. எம்.டி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும், தெருக்கூத்து கலைஞர் திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கும், தொழிலதிபர் திரு. ஆர்.ஜி. சந்திரமோகன் அவர்களுக்கும், ஸ்தபதி திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி அவர்களுக்கும், எழுத்தாளர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களுக்கும் மற்றும் பறை இசை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலம், பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள 23 பெண்களை உள்ளடக்கிய 139நபர்களுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அரியலூர் மாவட்டம், தோல் கிடங்கு தெருவை சேர்ந்த கழக முன்னோடி, நகர கழக பொருளாளர் M.ரஹீம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் ரஹீம் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்
நமது தாய் மொழியாம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை நீத்த, மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினத்தில் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்திடுவோம்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். "இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று வீர முழக்கமிட்டு, விஷம் அருந்தியும், தூக்கிட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியும் உயிர் நீத்த மாணவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தி தியாகிகளின் பெருமைகளையும், நம் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன். அறிஞர் அண்ணாவின் வழியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தஞ்சையில் 1995-ஆம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடத்தி நம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்ததையும் இந்நாளில் நினைவுகூற விரும்புகிறேன்.
அன்னைத் தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றிடும் வகையில், நம் கழகத் தொண்டர்கள், குறிப்பாக மாணவச் செல்வங்கள் அனைவரும், தியாக செம்மல்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, தமிழ் மொழியின் சிறப்புகளை மென்மேலும் உயர்த்திட உறுதியேற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த கபடி வீராங்கனைகள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக அணியின் பயிற்சியாளரை பஞ்சாப் மாநில அரசு கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மிகவும் வேதனையளிக்கிறது.
பஞ்சாப்பில் இன்று நடைபெற்ற கபடி போட்டியின் போது போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு இருந்த பஞ்சாப் கபடி வீராங்கனைகள், போட்டியின் நடுவர் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோர் தமிழக வீராங்கனைகளை கொடூரமாக தாக்கியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பஞ்சாப் மாநில அரசு தமிழக வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது. இந்த அநாகரீகமான செயலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு ஆளான தமிழக கபடி வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த, கழக மாவட்ட மகளிரணிச் செயலாளர் திருமதி.சண்முகப்ரியா அவர்களின் கணவர் G.ராஜேஷ் கண்ணா அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது கணவரை இழந்து வாடும் அன்பு சகோதரி திருமதி. சண்முகப்ரியா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🙏
-
V K Sasikala
@AmmavinVazhi
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் “பொங்கலோ பொங்கல்” என மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் இத்தைத்திருநாளில், எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🌾🌾
-
V K Sasikala
@AmmavinVazhi
சுவாமி விவேகானந்தர் அவர்களின் 162ஆம் ஆண்டுபிறந்தநாள் செய்தி
இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் 162ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைவருக்கும் “தேசிய இளைஞர் தின” நல்வாழ்த்துகளை தெரிவிப்பதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தர் அவர்களின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது. அதாவது, "உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும்"என்றார் சுவாமி விவேகானந்தர். பலத்தைக் கொண்டு, “பலவீனத்தை போக்க வேண்டும். வந்தோம் இருந்தோம் என்று போவது வாழ்க்கை அல்ல” என்பதைப் புரியவைத்தவர் சுவாமி விவேகானந்தர்.
இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், “100 இளைஞர் களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர். அவருடைய எண்ணங்கள் ஈடேறும் வகையில், நம் சமூகம் முன்னேறுவதற்கும், நம் தேசம் வலிமை பெறுவதற்கும் ஒவ்வொரு இளம் வயதினரும் அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்” என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை மனதில் வைத்து பெண்ணினத்தை காத்திடுவோம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
எண்ணற்ற தேச பக்தர்கள் உள்ளங்களில் சுதந்திரம் பெறவேண்டும் என்ற எழுச்சி தோன்றும் வகையில் நம் தேசத்தின் பெருமைகளை உரக்க முழங்கிய விவேகானந்தர் அவர்களின் வழியில், துரோக சிந்தனைகள் ஏதும் இல்லாமல், சுயநலமின்றி, பொதுநலத்தோடு வாழும் பண்பையும், உயர்ந்த எண்ணங்களையும், தூய்மையான சுற்றுப்புற சூழலையும், நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே, நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாக எண்ணி, சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட ஆறு பக்தர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
மேலும், இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் 21 நபர்களும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஒன்றியக் கழக முன்னாள் கவுன்சிலரும், பரங்கிமலை ஒன்றியக் கழக முன்னாள் அவைத்தலைவருமான திரு.M. G. சோமசுந்தரம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு. சோமசுந்தரம் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இரண்டு அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால், தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள் பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் செயல்படுகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வயிற்றுப்பிழைப்புக்காக வேலைக்கு செல்லும் ஏழை,எளிய,சாமானிய தொழிலாளர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் இன்றைக்கு கேட்பாரற்று கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது. மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோவதுபற்றி திமுக அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை. மாறாக,உயிரிழப்பு ஏற்பட்டவுடன் அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் மட்டும் போதும் என்று நினைப்பது கடும்கண்டனத்திற்குரியது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 65க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. இந்த தனியார் பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழகஅரசு முறையான ஆய்வுகள் எதையும் செய்வதில்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அதேபோன்று தற்போது வெடிவிபத்து நிகழ்ந்த தனியார் பட்டாசு ஆலையை, இருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக செய்திகள் வருகின்றன. இவ்வாறு பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு எடுத்து நடத்துவது என்பது சட்டவிரோதமானது. இதை திமுக அரசு கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் இதுபோன்று வேறு ஏதாவது பட்டாசு ஆலைகள் குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுகிறதா? என்பதை உடனே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை. பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளாத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இதுபோன்று தொடர்ந்து அப்பாவி உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டாசு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். ஆனால் திமுக தலைமையிலான ஆட்சியில் அதற்கு போதிய அலுவலர்கள் நியமிக்கப்படாததால் தற்போது இந்த பயிற்சி மையம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் காலத்திலாவது, தமிழகமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரும் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், பட்டாசு தொழிலில் ஈடுபட்டுவரும் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் ஒரு நிரந்தர தீர்வினை காண வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திண்டிவனம், கிடங்கல் பகுதியை சேர்ந்த கழக முன்னோடி, நகர கழக எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் S.ஜெயராமன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் ஜெயராமன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து துணிவுடன் எதிர்த்து நின்றவர். வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை தூக்கிலிடப்பட்ட கயத்தாறில், அவர்களின் நினைவை போற்றும் விதமாக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்துள்ளதையும் இந்நாளில் நினைவுகூற விரும்புகிறேன் .
தென்னிந்தியாவின் விடுதலை போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வரலாற்றை நம் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் அவர்தம் பிறந்தநாளைப் போற்றி நினைவில் கொள்வோம். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆண்களுக்கு இணையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, வெற்றி கண்ட, வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம்.
பெண்ணினத்தின் பெருமையாக விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக மதித்து, அரவணைத்து, தன் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு போராடிய பெண் சிங்கமாக வாழ்ந்தவர்.
கொல்லங்குடியை சேர்ந்த தமிழ் பெண் வெட்டுடையாளின் தியாகத்தையும், பாசாங்கரையைச் சேர்ந்த மற்றொரு தமிழச்சியான குயிலியின் தியாகத்தையும், மருது சகோதரர்களின் வீரத்தையும், வீரமங்கை வேலு நாச்சியாரின் சரித்திரத்தில் இருந்து யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை சீமையின் ராணியாக, தன்னலம் பாராமல், நாட்டு மக்களை காப்பாற்றிய வீரமங்கை வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை இன்றைய இளம் வயதினர்களும் அறிந்துகொள்ளும் வகையில் அவர்தம் பிறந்த நாளைப் போற்றி நினைவில் கொள்வோம். -
V K Sasikala
@AmmavinVazhi
உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான ஏழு சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்துள்ள மும்பையை சேர்ந்த இளம்பெண் காம்யா கார்த்திகேயன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது இளம் வயதில் உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்கள் பட்டியலில் இந்தியளவில் முதல் இடத்தையும், உலகளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள காம்யா கார்த்திகேயன் அவர்கள் இன்னும் பல அரிய சாதனைகளை செய்து வெற்றிபெற எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், முன்னாள் பிரதமருமான திரு.மன்மோகன் சிங் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய திரு.மன்மோகன் சிங் அவர்களது மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது.
இந்தியா கடுமையான நெருக்கடியை சந்தித்த போது, இந்திய பொருளாதாரத்தை தூக்கி பிடித்தவர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் என்ற நிதர்சனத்தை யாராலும் மறுக்க முடியாது. திரு.மன்மோகன் சிங் அவர்கள் பல்வேறு முக்கிய பதவிகளில் வகித்தபோதும் மிகுந்த அமைதியையும், எளிமையையும் கடைப்பிடித்தவர், கட்சி பேதமின்றி அனைவரையும் சமமாக மதிக்கக்கூடியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களும், திரு.மன்மோகன் சிங் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனரான திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
It is with profound sorrow that we mark the passing of Dr. Manmohan Singh, former Prime Minister of India and a luminary in the realm of economic reform. His departure leaves an indelible void in the pantheon of India's most distinguished statesmen.
Dr. Singh's legacy is inextricably linked to India's economic renaissance. In the face of unprecedented fiscal challenges, it was his astute leadership and economic acumen that steered the nation towards a path of robust growth and development. His pivotal role in liberalizing the Indian economy in 1991 stands as a testament to his visionary approach and unwavering commitment to national progress.
Throughout his illustrious career, spanning various positions of great import, Dr. Singh exemplified the virtues of equanimity, humility, and egalitarianism. His demeanor, characterized by a serene disposition and unpretentious lifestyle, set a new paradigm for political conduct. Dr. Singh's ability to transcend partisan lines and accord equal respect to all, irrespective of political affiliations, was a hallmark of his leadership style.
It is noteworthy to recall the profound esteem in which Dr. Singh was held by luminaries across the political spectrum.
Puratchi thalaivi Amma, held in her heart, a special respect for his intellect and humility, which underscores the universal respect that Dr. Singh commanded.
As we bid farewell Dr. Manmohan Singh , our hearts extend in solidarity to his bereaved family, friends, and political associates. The loss of Dr. Singh, widely acknowledged as one of the world's preeminent economists, is felt not just by his immediate circle, but by the nation and the global community at large.
In this moment of national mourning, we offer our most heartfelt condolences and supplicate for divine grace. May the soul of Dr. Manmohan Singh find eternal peace in the celestial realm, and may his legacy continue to illuminate the path of progress for generations to come. -
V K Sasikala
@AmmavinVazhi
மதிப்பிற்குரிய அய்யா நல்லகண்ணு அவர்களது நூற்றாண்டு பிறந்த தினத்தில் அவர்களோடு தொலைபேசியில் உரையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
நன்றி வணக்கம் 🙏 -
V K Sasikala
@AmmavinVazhi
மதிப்பிற்குரிய அய்யா திரு.R.நல்லகண்ணு அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அய்யா நல்லகண்ணு அவர்கள் எளிமையான வாழக்கையை மேற்கொண்டு, தன்னலமின்றி,அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர். சுமார் 80ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலில் ஈடுபட்டு வரும் அய்யா நல்லகண்ணு அவர்கள், இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்தது கிடையாது. ஆனால் மக்கள் மன்றத்தில், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டும், சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டும் அயராமல் தொண்டாற்றி வருவதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
அய்யா நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மிகவும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. தமிழகத்தில் இன்றைக்கு பெண்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகியிருப்பது ஒவ்வொரு நாளும் வெட்டவெளிச்சமாகி வருகிறது. தமிழக மக்களை, குறிப்பாக பெண்ணினத்தை பாதுகாக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பு நிறைந்த ஒரு வளாகமாக கருதப்படுகிறது. மேலும், இந்த வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், சோதனை சாவடிகள் மற்றும் எண்ணற்ற காவலர்கள் மூலம் மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு இடத்திலேயே கல்வி பயிலும் மாணவிக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு திமுக தலைமையிலான அரசுதான் முழு பொறுப்பேற்கவேண்டும். தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது நிரூபணம் ஆகிறது. திமுக ஆட்சி இருந்தாலே சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை, இன்றைக்கு கொலைக்களமாக, போதை கூடாரமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு, வாழ தகுதியற்ற ஒரு மாநிலமாக மாற்றிய பெருமை, திமுக தலைமையிலான விளம்பர அரசையே சேரும். தமிழகத்தில் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதை என்றைக்கு இந்த அரசு தடை செய்கிறதோ, அன்று தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு என்பது கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழக மக்களுக்கு பாதுகாப்பு என்பது கண்டிப்பாக கிடைக்காது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மாநிலத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுவிடும். இதற்கெல்லாம், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள், திமுகவினருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்,அவருக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக காவல்துறை ஆளும்வர்க்கத்தினரின் எந்தவித புறஅழுத்தங்களுக்கும் ஆளாகிவிடாமல், இதை உடனே தீர விசாரித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் இந்த அவல நிலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து, இதை முறையாக விசாரித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு விரைவில் நியாயம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருநெல்வேலி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற நபர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பதை, இது போன்று ஒவ்வொரு நாளும் நடைபெறும் கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. திமுக தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்று நான்காவது ஆண்டையும் கடக்கும் நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் அதில் தோல்வியடைந்துவிட்டது.
இன்றைக்கு ஒரு நிர்வாக திறமையற்ற, தகுதியற்ற ஆட்சி நடப்பதன் மூலம் தமிழக மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் தமிழகம் இன்றைக்கு போதை பொருள் விற்பனை கூடாரமாக மாறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக காவல்துறை பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே பட்டப்பகலில் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் துணிச்சலோடு செயலாற்றிய, ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்றைக்கு செயல்பட இயலாத வகையில் முடங்கி போய் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான சட்ட விரோத செயல்களில் திமுகவை சேர்ந்தவர்களே ஈடுபடுவதால் அவர்கள்மீது எந்தவித சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், தமிழக காவல்துறை திணறி வருகிறது. தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரோ இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை, வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்ற சிந்தனையில்தான் ஈரோட்டிற்கு பறந்து சென்று மக்களை சந்திக்கிறார். அதேசமயம் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருவாரூர், நாகை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்திக்க முடியவில்லை, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை கொடுக்க முடியவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்று வாக்களித்த மக்களை நாள்தோறும் தவிக்க விட்டு, அவர்களை காப்பாற்ற தவறிய இவர்கள்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று இறுமாப்போடு பேசி வருகின்றனர். ஆனால் தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். எனவே, திமுகவினரின் பகல் கனவு கண்டிப்பாக பலிக்காது என்பதை இந்நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதை தடுக்க முடியாமல் வெறும் வேடிக்கை பார்த்து வருவதை விட்டுவிட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் எடுக்கப்பட்டது போன்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
புரட்சித்தலைவர் காலத்திலிருந்து தனது இறுதி மூச்சுவரை தொடர்ந்து இயக்கத்தில் பயணித்த, மறைந்த கழக முன்னோடி ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் அவர்களின் மகனும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள் 🪔
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னையை சேர்ந்த மருத்துவர் திரு.T.அருண்குமார் அவர்களின் தாயார் T.லலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் மருத்துவர் திரு.அருண்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 6 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் மிகவும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் 32 நபர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
இந்த விபத்து நிகழ்ந்த மருத்துவமனையில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்துள்ளார்களா? என்பதை கண்டறிய வேண்டும். இந்த விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு முறைகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை உடனே ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷ் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் இரண்டாவது இந்தியர் என்ற இமாலய சாதனையை படைத்திருப்பதன் மூலம் இளம் வீரர் குகேஷ் அவர்கள் தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது குகேஷ் அவர்களின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று, வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள், அவருடைய அன்பினாலும், பாசத்தினாலும் தமிழக மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளார்கள். ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும், கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்ச நிலையினை அடைந்தபோதும், எளிமையான அணுகுமுறையினால், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் அவருடைய உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன். அவர்களது அன்பும், நட்பும், சகோதரபாசமும் என்றென்றும் நிலைத்திருக்க ஆண்டவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும்.
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள், நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஈரோடு மாவட்டம், பெருந்துறை காடபாளையத்தை சேர்ந்த திரு.K.ஜெகதீஷ் அவர்களின் தந்தையும், கழக மாவட்ட மாணவரணி பொருளாளர் திரு. சி.பாலகிருஷ்ணன் அவர்களின் தாத்தாவுமான R. கிருஷ்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாத்தாவை இழந்து வாடும் திரு.சி.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துகாடு கிராமத்தைச்
சேர்ந்தவரும், அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான Dr.இராஜன் நடராஜன் அவர்களின் தாயார் இரா.நல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அம்மையார் நல்லம்மாள் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் நேற்றைய தினம் திருவண்ணாமலையின் தீபமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் உள்பட மொத்தம் 7 நபர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது 7 நபர்களும் உயிரற்ற சடலமாக மீட்கப்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த மருத்துவர் S.சங்கரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் மருத்துவர் சங்கரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி அவர்களை பள்ளியிலேயே கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாததால், யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்ற அவல நிலை இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இவ்வாறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாநிலத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழகத்தில் உள்ள இளம் வயதினர் தவறான பாதைகளுக்கு சென்று விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். எனவே, திமுக தலைமையிலான அரசு கொஞ்சமாவது தமிழக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை தமிழ்நாட்டிற்கு குறைத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு வரிப்பகிர்வு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் நிதியானது, மத்திய அரசிடம் சென்ற பிறகு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலங்களின் பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, நிதி கமிஷன் நிதிப் பகிர்வைச் செய்கிறது. இந்த நிதிப் பகிர்வை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிதி ஆணையங்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசும் மாநில அரசுகளும் நிதியைப் பகிர்ந்துகொள்கின்றன.
1971க்கு பிறகு மக்கள்தொகையை முறையாக கட்டுப்படுத்திய மாநிலங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடும், வரிப்பகிர்வுகளும் செய்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தினார்கள். இதன் அடிப்படையில் தான் நடைமுறையில் உள்ள 15வது நிதி ஆணையத்தில் தமிழகத்திற்கு இந்த அளவிலாவது வரிப்பகிர்வு கணக்கிடப்படுவதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று தமிழகம் சிறப்பாக செயல்பட்டபோதும் மாநிலத்திற்கான வரிப்பகிர்வை குறைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.
எனவே, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகித அளவிற்காவது உயர்த்தி அளிக்கவேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் 15வது நிதிக் குழு முதன்முறையாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை மட்டும் எடுத்துக்கொண்டு பரிந்துரைக்கப்பட்டது. எனவே, 15வது நிதி ஆணையத்தால் கைவிடப்பட்ட 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையையும் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்றும், மக்கள்தொகை காரணிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இந்த 16வது நிதி ஆணையத்தில் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.பி.குளம் கண்மாயை ஒட்டிய முல்லைநகர் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், திடீரென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, தமிழக நீர்வளத்துறை சார்பில் இங்குள்ள வீடுகளில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடியிருப்புகளை அகற்றவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரியும், தேர்தல் நேரத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிப்படி தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி, முல்லை நகர் பகுதி மக்கள் கடந்த ஐந்து நாட்களாக தெருக்களில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை பி.பி.குளம் கண்மாயில் அதிக அளவிற்கு ஆக்கிரமிப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, முல்லை நகர் பகுதியில் 60ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்த திமுக அரசு துடிக்கிறது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் , வீட்டு வரி , பாதாள சாக்கடை வரி என அனைத்து விதமான வரிகளும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்கிரமிப்பு எனக் கூறி இங்குள்ள வீடுகளை அகற்றுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
திமுக தலைமையிலான அரசு இந்த வழக்கில் சரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைத்து இருக்கலாமே? நீதியரசர்களுக்கு இப்பகுதி மக்களின் நிலையினை சரியாக எடுத்து சொல்லியிருக்கவேண்டும். அவ்வாறு வாதங்களை எடுத்து வைத்து இருந்தால் இப்பகுதி மக்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு உத்தரவினை பெற்று இருக்க முடியும். அதை செய்ய தவறிவிட்டு இப்பொழுது நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி சாமானிய மக்களின் வாழ்வை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஏற்கனவே, இது தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் இங்கு குடியிருப்பவர்களை மறு குடி அமர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும், மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் அடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், இந்த பகுதி மக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமலும்,வீடுகளை காலி செய்ய வேண்டும் என திமுக தலைமையிலான அரசு மக்களை விரட்டுவது எந்த விதத்தில் நியாயம்?
இப்பகுதி மக்கள், தங்களுக்கு வகை மாற்றம் செய்து முல்லை நகர் பகுதியில் பட்டா வழங்க வேண்டும் எனவும், மாற்று ஏற்பாடாக முல்லை நகரின் அருகே இருக்கக்கூடிய 5 கிலோமீட்டர் தூரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, திமுக தலைமையிலான அரசு மதுரை முல்லை நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மேலும், தேர்தல் நேரத்தில் திமுகவினர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர் திரு.பாலாஜி அவர்களை நோயாளி ஒருவரின் மகன் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்திற்கு திமுக தலைமையிலான அரசே முழு பொறுப்பேற்கவேண்டும். இது போன்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறிய திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடியப் போகிறது. ஆனால் இன்று வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவியர்கள், பெண்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு அவலநிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இன்று காலையில் கூட மதுரையில் சாலையிலேயே துண்டிக்கப்பட்ட மனிதரின் தலை கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை என நாள்தோறும் சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசோ எதைப்பற்றியும் கண்டுகொள்வது இல்லை. ஆனால் திமுகவினர் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டதாக சொல்லிக்கொள்கின்றனர். தமிழக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று திமுகவினர் காணும் பகல்கனவு கண்டிப்பாக பலிக்காது என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை, எளிய,சாமானிய மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், இன்றைக்கு அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் நிலையில், பிரசவத்திற்காக வரும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களின் நலனையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக மிகுந்த பணிசுமைக்கு நடுவே அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் திமுக தலைமையிலான அரசு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் போதிய பாதுகாப்பினை வழங்க தேவையான நடவடிக்கைளை திமுக தலைமையிலான அரசு உடனே எடுக்க வேண்டும்.
மருத்துவத்துறை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மருத்துவர்களை தங்கள் உயிரை காக்கும் கடவுளாக கருதுகின்றனர். எனவே, மருத்துவர்கள் பொதுமக்கள் யாரும் பாதிக்காதவகையில் தங்களது கோரிக்கைகளை, எதிர்ப்புகளை ஆளும் ஆட்சியாளர்களுக்கு ஜனநாயக முறையில் தெரிவிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய திமுக தலைமையிலான அரசை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அப்புறப்படுத்துவதுதான் இதற்கு நிரந்தர தீர்வாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு. டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக முன்னாள் அமைச்சரும், கழக மூத்த நிர்வாகியுமான பண்ருட்டி திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் 88-வது பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். அன்பு சகோதரர் பண்ருட்டி திரு.எஸ். ராமசந்திரன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு மாநில முன்னாள் தேர்தல் ஆணையரும், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர்.கே.மலைச்சாமி (Retd. IAS) அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.மலைச்சாமி அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். திரு.மலைச்சாமி அவர்கள் நேர்மையாகவும், மிகுந்த ஈடுபாட்டுடனும் பணியாற்றியதை கண்ட அம்மா அவர்கள், அவரை பல்வேறு பொறுப்புகளில் அமரவைத்து அழகு பார்த்தார். அதேபோன்று திரு.மலைச்சாமி அவர்கள் கழக பணிகளையும் திறம்பட ஆற்றினார்.
அன்பு சகோதரர் திரு.மலைச்சாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜெயா செய்திகள் தொலைக்காட்சியில் PCR பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த திரு. புவனேஸ்வர் அவர்கள் பணிக்கு வரும் போது வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு. புவனேஸ்வர் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பாப்பாஞ்சாவடியை சேர்ந்த கழக மகளிர் அணி கிளை செயலாளர் மல்லிகா அவர்கள் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரி மல்லிகா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் கணினி பிரிவில் பணியாற்றி வந்த சிவ.ஜெய்சங்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
சிவ.ஜெய்சங்கர் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றுகின்ற சகதொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் பேருந்துகளை அரசு ஒப்பந்த பேருந்துகள் என ஸ்டிக்கர் ஒட்டி இயக்க திமுக தலைமையிலான அரசு முடிவெடுத்திருப்பதுமிகவும் கண்டனத்திற்குரியது. இது இந்த ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் தார்மீக உரிமையை தட்டிப் பறித்திருப்பது யாராலும் மன்னிக்கமுடியாதது.
திமுக தலைமையிலான அரசு நான்காம் ஆண்டில் பயணித்து வரும் நிலையில்,தமிழகத்திற்கு போதுமான எண்ணிக்கையில் பேருந்து வசதிகளை ஏற்படுத்திட தேவையான எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், இது போன்ற கண்துடைப்பு வேலைகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவதற்காக ஒரு கிலோ மீட்டருக்கு 51 ரூபாய் என அரசு பணத்தை செலவழித்து, ஒப்பந்த பேருந்து என ஸ்டிக்கர் ஒட்டி தீபாவளி பண்டிகைக்கு இயக்க திட்டமிடுகிறது. திமுகவினர் எந்த திட்டம் வகுத்தாலும் அதில் ஏதாவது வருமானத்தை எதிர்பார்த்து திட்டமிட்டே செய்வதாகத்தான் மக்கள் கருதுகின்றனர்.
திமுக தலைமையிலான ஆட்சி நான்காம்ஆண்டு முடியும் நிலையில் கூட புதிய பேருந்துகள் வாங்க தேவையான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் தென்காசியில் நான் மக்கள் பயணம் மேற்கொண்டபோது, இந்த அரசு புதிய பேருந்துகள் ஏன் வாங்கவில்லை? என்று தமிழக மக்களின் சார்பாக திமுக அரசுக்கு கேள்வி எழுப்பினேன். அதன்பிறகு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட திமுக அரசு புதுக்கோட்டை, திருநெல்வேலி,கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளுக்கு 10 முதல் 20 பேருந்து என்ற சொற்ப எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 அறிவிப்புகளை வெளியிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 8,182 புதிய பேருந்துகள் வாங்கப்போவதாக ஆணை பிறப்பித்ததோடு சரி. அதனை செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் வருடத்திற்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய பேருந்துகள் வாங்க வேண்டிய நிலையில், நான்கு வருடம் முடியும் நிலையில், மொத்தமாக வெறும் 1,000 பேருந்துகள் வாங்கினால், அது எப்படி மக்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடியே 70லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். மேலும், பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து மட்டும் சுமார் 5 முதல் 6 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 20,940 பேருந்துகள் எந்தவிதத்தில் போதுமானதாக இருக்கும் என்பதை திமுக அரசு கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும். அதிலும் தற்போது இயக்கத்தில் இருக்கும் பேருந்துகளில் சுமார் 60சதவிகிதத்திற்கும் மேல் சரிவர பராமரிப்பு இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் பழைய பேருந்துகள் தான். அதுவும் ஏதோ தெய்வ அருளால் ஓடிக்கொண்டு இருக்கிறது. சென்னைக்கு 6,000முதல் 7,000 பேருந்துகள் தேவைப்படும் நிலையில்,இன்றைக்கு வெறும் 4,000 பேருந்துகள்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் ஏன் வாங்கமுடியவில்லை? அதற்கான எந்த செயல் திட்டத்தையும் இந்த ஆட்சியாளர்களால் ஏன் வகுக்கமுடியவில்லை? போக்குவரத்து துறை அமைச்சரோ சட்டசபையில் அறிவிப்பு கொடுப்பதோடு சரி, எதுவும் செய்வதில்லை. அரசு பேருந்துக்களில் விளம்பரத்தின் மூலமும் வருவாய் வரும் நிலையில், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதற்கு மேல் இந்த விளம்பர அரசு மகளிருக்கு இலவசம் என அறிவித்தார்கள். அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் போதுமா? பேருந்துகள் எங்கே?
திமுக தலைமையிலான அரசு,பொறுப்பேற்றவுடன் அரசு பேருந்துகளுக்கான விதிமுறைகளில், 3 வருடம் வரை பயன்படுத்தலாம் என்ற வரையறையை மாற்றி 9 வருடம் என்று திருத்தியது. இதன்மூலம் திமுக அரசு புதிய பேருந்துகள் வாங்காமல், பழைய பேருந்துகளை வைத்தே ஆட்சியை முடித்துவிடலாம் என்ற அவர்களின் மக்கள் விரோத எண்ணம் அன்றைக்கே வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இது வாக்களித்த மக்களுக்கு திமுகவினர் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
தனியார் பேருந்துகள் ஏற்கனவே விடுமுறை காலங்களில் சாமானிய மக்களிடம் அடிக்கும் கட்டண கொள்ளையை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக தலைமையிலான அரசு தற்போது தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதிப்பது தனியார்மயத்தை ஊக்குவிக்கின்ற செயலாகும். இது போன்ற மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது தமிழக ஆளுநர் முன்னிலையில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அச்சமயம் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது போன்ற செயல்களால் தமிழக மக்களின் மனது மிகவும் புண்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு, வருங்காலங்களில் பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்து, இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பாக இதில் ஆளுநருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தூர்தர்ஷன் நிர்வாகமும் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறது. எனவே இதற்கு மேல் இதில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆளும் கட்சியினர் தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தினபூமி நாளிதழின் நிறுவனர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதே விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் திரு.மணிமாறன் அவர்களின் மகன் திரு.ரமேஷ் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
திரு.மணிமாறன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது அலுவலக பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த திரு.P.K.மூக்கையா தேவர் அவர்களின் மூத்த மகன் திரு. P.K.M. சுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
திரு. P.K.M. சுப்பிரமணியன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்🙏
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
உலக புகழ்பெற்ற டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான வணிக அதிபர்களில் ஒருவரான திரு.ரத்தன் டாடா அவர்கள் தனது தொலைநோக்கு பார்வையால், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர். சிறந்த நற்பண்புகளாலும், சேவை மனப்பான்மையினாலும் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.
பத்மவிபூஷண், பத்மபூஷண் ஆகிய இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ள திரு.ரத்தன் டாடா அவர்கள், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்று இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்.
இந்திய தொழில்துறையின் சிகரத்தை தொட்ட திரு.ரத்தன் டாடா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் அங்கத்தினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறுவன தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களில் இதுவரை 5 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. சுமார் 200 நபர்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு திமுக தலைமையிலான அரசு தான் முழு பொறுப்பேற்கவேண்டும். இது திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
மக்கள் அதிக அளவில் கூடுகின்ற வான் சாகசம் போன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிய திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், மருத்துவ வசதி, உரிய போக்குவரத்து வசதி போன்ற எதையும் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் எங்கு பார்த்தாலும் திமுகவினரின் போஸ்டர்கள் தான் ஒட்டப்பட்டு இருந்தது. திமுகவினர் இந்த போஸ்டருக்கு செய்த செலவுக்கு பதில், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்து இருந்தால் கூட மக்கள் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். மேலும், திமுக தலைமையிலான அரசின் மெத்தனப்போக்கால் மெரினாவில் இன்னும் முடிவு பெறாமல் நடைபெற்று கொண்டிருக்கும் மெட்ரோ பணிகளுக்காக வழிகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததால், மக்கள் கடற்கரையிலிருந்து வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இவ்வளவு மக்கள் கூடுகின்ற இடத்தில் மக்கள் வெளியேற அதிக வழிகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மேலும், மெரினா கடற்கரையிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவ குழுக்கள் அடங்கிய ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகளை உடனே செய்திருக்கவேண்டும். ஆனால் திமுக தலைமையிலான அரசு இதுபோன்ற அடிப்படை தேவைகளைக்கூட செய்யாமல் போனதால், மயக்கமடைந்தவர்களை கடற்கரையிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கே காலதாமதம் ஏற்பட்டு இதன் காரணமாக உயிரிழப்பும் ஏற்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். அதேபோன்று மெட்ரோ நிர்வாகத்திடம் முன் கூட்டியே பேசி அதிக முறைகள் மெட்ரோ ரயில்களை இயக்க ஏற்பாடு செய்து இருக்கவேண்டும். ஆனால் இதற்காக எந்தவித ஏற்பாடுகளும் செய்யாததால் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் தான் நேற்றைக்கும் இயக்கப்பட்டன.இதைப்பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்காத திமுக தலைமையிலான அரசால் மக்கள் ரயில் நிலையங்களில் நாள் முழுவதும் காத்து கிடக்கும்அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்திய விமான படையினர் எத்தனையோ மாநிலங்களில் இது போன்று வான் சாகச நிகழ்ச்சிகளை மக்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் நடத்தி வந்துள்ளனர். ஆனால் திமுகஅரசை நம்பி சென்னையில் ஏற்பாடு செய்ததால், இன்றைக்கு இந்த துயர நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசோ தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்தான் கவனமாக இருந்ததே தவிர மக்களை காப்பாற்ற மறந்துவிட்டது. திமுக தலைமையிலான அரசு இது போன்று மக்களின் உயிரோடு விளையாடுவது எந்தவிதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.
மாற்று கட்சியினர் ஒரு கூட்டம் நடத்துவதாக இருந்தால், எத்தனை பேர் கூடுவார்கள்?, ஆண்கள் எத்தனை பேர்?, பெண்கள் எத்தனை பேர்?, குழந்தைகள் எத்தனை பேர்?, அவர்களுக்கு கழிப்பட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை திமுக தலைமையிலான அரசு கேட்கிறது. ஆனால் இத்தனை லட்சம் மக்கள் கூடுகின்ற ஒரு அரசு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும்செய்யாமல் வேடிக்கை பார்த்தது எந்தவிதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.
மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு இதே மெரினாவில் லட்சக்கணக்கான இளம்வயதினர் ஜல்லிக்கட்டுக்காக ஏழு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போதுகூட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் இன்றைக்கு இந்த கையாளாகாத அரசை நம்பி மக்கள் வான் சாகச நிகழ்ச்சியை காண மெரினாவிற்கு வந்து தங்கள் இன்னுயிரை இழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.O.R.ராமச்சந்திரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.O.R.ராமச்சந்திரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அனைவரையும் சமமாக மதித்து, எல்லோரையும் நேசிக்கும் பண்பு கொண்ட, அன்பு சகோதரர் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@rajinikanth -
V K Sasikala
@AmmavinVazhi
பாமரர்களும் நாட்டு நடப்புகளை எளிதாக அறிந்திடும் வகையில், தமிழில் நாளிதழுக்குரிய மொழிநடையை எளிய முறையில் வடிவமைத்து, உண்மை செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை திரு.சி.பா ஆதித்தனார் அவர்களின் 120வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம்.
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் எந்நாளும் போற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மகனும், தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிக்கை உலகில் பெரிய திருப்பத்தை உருவாக்கியவர். தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர். மேலும், கல்வி, விளையாட்டு, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனைகள் படைத்தவர். விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியதையும் இந்நாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளையும், சமூக சேவைகளையும் அவர்தம் நினைவில் போற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்திருப்பது நம் அனைவருக்கும் மிகவும் பெருமையளிக்கிறது. இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ள இந்திய சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச சதுரங்க விளையாட்டில் முதல் முறையாக இந்தியா தங்கப்பதக்கம் வென்று இருப்பதும், அதிலும் வரலாற்று சாதனையாக இரண்டு தங்கப்பதக்கங்களை ஒரே நேரத்தில் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட இந்திய அணியை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள் மென்மேலும் பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போழுது அவர் உயிரிழந்து இருக்கிறார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் திரு.வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு. வெள்ளையன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த இந்த திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும் என ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்🙏
#விநாயகர்_சதுர்த்திThis media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
பாரிஸில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே 3 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ள நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள், மேலும் 6 பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
ஆடவருக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் அவர்கள், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஹர்விந்தர் சிங் அவர்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது மிகவும் பெருமையளிக்கிறது. ஆடவருக்கான கிளப் த்ரோ F 51 போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் அவர்கள் 34.92மீ தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T64 போட்டியில் இந்திய தடகள வீரரான பிரவீன் குமார் அவர்கள் 2.08 மீ உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர்கள் ஹர்விந்தர் சிங், தரம்பிர் மற்றும் பிரவீன் குமார் ஆகியோருக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஆடவருக்கான குண்டு எறிதல் F46 போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி மற்றும் கிளப் எறிதல் F 51 போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான ஜூடோ 60 கிலோ J 1 போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மர் அவர்கள் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 26 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 14வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இல்லாத வகையில் அதிக பதக்கங்களைஇந்தியாவிற்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.சண்முகையா பாண்டியன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு. எஸ்.சண்முகையா பாண்டியன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள் தாயாக, தந்தையாக மட்டுமின்றி உற்ற நண்பர்களாக இருந்து மாணவச் செல்வங்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்ற உன்னதப் பணியை சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து செய்து வருகிறார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தங்களிடம் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்விக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியர் பணியினை ஊதியம் பெறும் வேலையாக மட்டும் கருதாமல் சேவையாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும் நாம் அனைவரும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம்.
ஆசிரியர்கள் கல்வியை கற்பிப்பதோடு மட்டுமில்லாமல், நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனைகளையும் மாணவ சமுதாயத்திற்கு கற்பிக்கிறார்கள். இதன் பயனாக நம் மாணவச் செல்வங்கள் எத்தனையோ துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நமது மாணவச் செல்வங்களின் திறமை மிகவும் போற்றப்படுகிறது. இந்த பெருமைகளுக்கெல்லாம் உண்மையான சொந்தக்காரர்கள், ஆசிரியர்கள் தான் என்பதைத் தெரிவித்து கொள்வதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ சமுதாயத்தினை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் உன்னத பணியினை ஆசிரியர்கள் ஆற்றிவருகின்றனர். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" எனும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரின் நியாயமான கோரிக்கைக்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகாவில் தொடங்கும் காவிரி ஆறு தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. காவிரி நீரை பெரிதும் நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு எப்போது காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடும் என எதிர்பார்த்து காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தமிழக டெல்டா விவசாயிகளின் பாசன நீர் தேவையை கருத்தில் கொண்டு, மழைக்காலங்களில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், ராசிமணல் அணை திட்டம் தற்போது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது.
தமிழக எல்லையான ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்டினால் குறைந்த செலவில் 50 முதல் 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். குறிப்பாக மேகதாதுவிலிருந்து ராசிமணல் வரை உள்ள 60கிலோ மீட்டர் பகுதியில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதினால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. மேட்டூர் அணையில் நீர் குறையும் போது ராசிமணலில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உரிய நேரத்தில் குருவை, சம்பா சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், ராசிமணல் அணையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தமிழகத்தின் மின்சார தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, திமுக தலைமையிலான அரசு, தமிழக விவசாயிகளைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், ராசிமணலில் அணை கட்டுவதற்கு தமிழக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக 1961 ஆம் ஆண்டு ராசிமணல் அணை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அப்போதைய மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தமிழகத்திற்கு காவிரி நீருக்கான உரிமையை பெற்றுத்தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், ராசி மணல் திட்டம் உட்பட 4புனல் மின் திட்டங்களை கொண்டுவருவதற்கான உரிய வழிமுறைகளை விளக்கமாக எடுத்து கூறினார். அதாவது தேசிய நீர்மின் கழகமோ அல்லது மத்திய அரசின் மற்ற தகுந்த மின் உற்பத்தி நிறுவனமோ இந்த புனல் மின் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் கோரிக்கையாகவும் இருந்தது. திமுக தலைமையிலான அரசு தங்களது கூட்டணி கட்சியின் தலைமையிலான கர்நாடக அரசிடம் காவிரி நீரை கேட்டுப்பெற முடியாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நிலையில், ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர முன்வரவேண்டும்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழகத்திற்கான மின் தேவையை பூர்த்தி செய்திடும் வகையிலும், ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பாரிஸில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிஏற்கனவே 3 தங்கம் உள்பட 15பதக்கங்களை வென்றுள்ள நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள், நேற்று நடைபெற்ற போட்டிகளில் மேலும் 5பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் (T63) போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் தொடர்ந்து 3 பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளது மிகவும் பெருமையளிக்கிறது. இதே போட்டியில் இந்திய வீரர் சரத்குமார் அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F46) போட்டியில் இந்திய வீரர்கள் அஜித் சிங் வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று பெண்களுக்கான 400 மீட்டர் (T20) ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி அவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று பதக்கப்ட்டியலில் இந்தியா 19வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாக 20 பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பாரிஸில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிஏற்கனவே 2 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள், தற்போது மேலும் 4 பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் F64போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் அவர்கள் தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய வீரர் சுமித் அன்டில் அவர்கள் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாத வகையில் 70.59 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, புதிய பாராலிம்பிக்ஸ் சாதனையைபடைத்திருப்பது இந்திய மண்ணிற்கே பெருமையளிக்கிறது.
மேலும், ஆடவருக்கான பேட்மிண்டன் SL4 போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேட்மிண்டன் SH6 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை நித்ய ஸ்ரீ சுமதி சிவன் அவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்து தமிழ் மண்ணிற்க்கே பெருமை சேர்த்துள்ள நித்ய ஸ்ரீ சுமதி சிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், கலப்பு இரட்டையர் காம்பவுன்ட் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் மற்றும் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் உட்பட 15பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் இந்தியா 15வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பாரிஸில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணி தற்போது வரை 2 தங்கம் உட்பட11 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முன்னேறி வருவது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா அவர்களுக்கும், ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் நிதிஷ் குமார் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் SU5 பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை துளசிமதி முருகேசன், ஆடவருக்கான உயரம் தாண்டுதல் (T 47) போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார், வட்டு எறிதல் (F 56) போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா மற்றும் 10மீ ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மகளிருக்கான ஒற்றையர் SU5 பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மனிஷா ராமதாஸ், 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால், 10மீ ஏர் பிஸ்டல் SH1 துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ், 200 மீ T 35 ஓட்டப்பந்தயம் மற்றும் 100 மீ T 35 ஓட்டப்பந்தயத்திலும் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள ப்ரீத்தி பால் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 11 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
‘சமக்ரா சிக்ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ ) என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய முதல் தவணைக்கான தொகை ரூ.573 கோடியை மத்திய அரசு இன்னும் விடுவிக்காமல் காலம் தாழ்த்துவது துரதிருஷ்டவசமானது.
அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பதையும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 'சமக்ரா சிக்ஷா அபியான்' என்ற திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கான நிதியானது மத்திய அரசும், மாநில அரசும் 60 : 40என்ற விகிதாசார அடிப்படையில் தங்களது பங்களிப்பினை செய்து வருகின்றன. இந்நிலையில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.2,152 கோடி (60%) நான்கு தவணைகளில் விடுவிக்கப்படும், அதே நேரத்தில் மாநில அரசின் பங்கு ரூ.1,434 கோடி (40%) ஆக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் பங்களிப்பிலிருந்து முதல் தவணையாக ரூ.573 கோடியை ஜூன் மாதத்தில் விடுவிக்கப்படாமல் தாமதம் ஏற்படுவது,தமிழ்நாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடும். அதேபோன்று, கடந்த ஆண்டின் கடைசி தவணையான ரூ.249 கோடியையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மத்திய அரசு இத்திட்டத்திற்கான நிதியை இன்னும் வழங்காததால், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, ஆசிரியர் பயிற்சி மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், திமுக தலைமையிலான அரசுக்கு எந்தவித கவலையும் ஏற்படப்போவதில்லை. மத்திய அரசை குறை கூறிவிட்டு வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யமாட்டார்கள். இதைப்பற்றி அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தில் கூட திமுக உறுப்பினர்கள் யாருமே வாய்திறக்கவில்லை. திமுகவினர் மக்களிடம் ஏதாவது பொய் வாக்குறுதிகளை கொடுத்து அவர்களை ஏமாற்றி வெற்றி பெறுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், மத்திய அரசு இந்த நிதியினை விடுவிக்காமல் காலதாமதம் செய்வதாக தமிழக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். தேசிய கல்வி கொள்கையில் சில சாதகங்கள் இருந்தாலும், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிகாலங்களில் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. இந்த கொள்கையை இன்றைக்கும் அனைவரும் உறுதியுடன் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். திமுக தலைமையிலான அரசு மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக்கொள்வதை விட்டுவிட்டு, தமிழகத்திற்கான நிதியை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளவேண்டும்.
எனவே, தமிழகத்தில் உள்ள மாணவச்செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சிந்தித்து பார்த்தும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான நிதியை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
காக்கும் கடவுளாம் கண்ணபிரான் அவதரித்த இத்திருநாளில் அனைவருக்கும் ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்🙏
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து, அவர் ஆற்றிய அரும்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்.
@PremallathaDmdk -
V K Sasikala
@AmmavinVazhi
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், இதில் மேலும் 13மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வரோ பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக மேடையில் பேசுகிறார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களின் நிலையோ பாதுகாப்பின்றி மிகவும் அபாயகரமான சூழலில் வாழ்கின்ற நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது.
அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலியாக ஒரு முகாம் நடைபெற்றுள்ளதாகவும், இதற்காக 24மாணவர்களும், 17 மாணவிகளும் பள்ளி வளாகத்திலேயே தங்க வைத்து, பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதில் கலந்துகொண்ட 13 வயதான 8ஆம் வகுப்பு மாணவி கடந்த 9-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலிபயிற்சியாளரான சிவராமன் என்பவர் மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பள்ளியின் முதல்வரிடம் மாணவி முறையிட்ட நிலையில், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அவர் கூறியுள்ளதாக தெரியவருகிறது. அதன்பிறகு கடந்த 16ஆம் தேதி மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டபோதுதான் மாணவியின் பெற்றோருக்கு தனது மகளுக்கு நடந்த கொடுமை தெரியவந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட சிவராமன் ஏற்கனவே பல பள்ளிகளில் போலி முகாம் நடத்தி மேலும், 13மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போலி பயிற்சியாளர் சிவராமன் உள்ளிட்ட 11நபர்களை தமிழக காவல்துறை கைது செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் இது போன்று பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட என்ன காரணம்? திமுக தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. இவர்களது ஆட்சியின் லட்சணத்தை நன்கு அறிந்ததால்தான் சிவராமன் போன்ற நபர்கள் எந்தவித அச்சமுமின்றி தவறு செய்கின்றனர். திமுக ஆட்சியில் எப்படியும் தப்பித்துக்கொள்ளலாம் என்ற முழுநம்பிக்கையோடுதான் சிவராமன் போன்றவர்கள் முறைகேடுகளையும் அரங்கேற்றுகின்றனர். தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமீறல்கள், கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது கஞ்சா, போதைப்பொருட்கள் தான். தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா, போதை பொருட்களின் பயன்பாடு அளவுக்கு அதிகமாகி வருகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்தவேண்டிய திமுக தலைமையிலான அரசோ கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மிகவும் கேள்விக்குறியாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதுபோல் மேற்கு வங்க மாநில தலைநகரில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி,கொலை செய்யப்பட்டு இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது. மருத்துவப்பணி என்பது இறைப்பணிக்கு இணையானது. மானிட உயிர்களை காப்பற்றும் மனித தெய்வங்களாக விளங்கும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது. பெண்பயிற்சி மருத்துவர் உயிரிழந்ததற்கு காரணமான உண்மைகுற்றவாளிகளுக்கு கடுமையான தணடனையை மேற்கு வங்க அரசு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்கத்தில் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ள பெண் பயிற்சி மருத்துவரின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு பர்கூர் தனியார் பள்ளியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் விசயத்தில், வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு, மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் வாக்களித்த மக்களை மனதில் வைத்து, இனியாவது சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
மறைந்த சோ ராமசாமி அவர்களும் அவரது மனைவி சௌந்தரா ராமசாமி அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டிருந்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது மறைந்த சோ ராமசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களிடம் ஆசிபெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அம்மையார் சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என்இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்தொடர்ந்து போராடி வரும் அன்பு சகோதரர்
திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் தனது 62-வது பிறந்தநாளை இனிதே கொண்டாடும் இவ்வேளையில், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என எல்லாம் வல்லஆண்டவனை வேண்டுகிறேன்.@thirumaofficial -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் பூமியை ஆய்வு செய்வதற்காக இ.ஓ.எஸ் - 8 மற்றும் எஸ்.ஆர்.O- டெமொசாட் செயற்கை கோள்களை, எஸ்எஸ்எல்வி D-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி இன்றைக்கு விண்ணில் செலுத்தப்பட்டு, புவி தாழ்வட்ட சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ள இ.ஓ.எஸ் -8 செயற்கைக்கோளானது இயற்கை பேரிடர் மற்றும் காலநிலை கண்காணிப்பு, மலைப்பகுதிகளில் மழையளவு, கடலில் உள்ள காற்றின் வேகம், காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு போன்றவற்றை ஆய்வு செய்ய இருப்பது நம் மண்ணிற்கு மிகுந்த பயனையும், பாதுகாப்பையும் அளிக்கும் என்பது மிகவும் பெருமையளிக்கிறது.
பூமியை 24 மணிநேரமும் கண்காணிக்க கூடிய அதி நவீன இ.ஓ.எஸ் - 8 செயற்கைகோளினை, எஸ்எஸ்எல்வி D-3 ராக்கெட் மூலம்வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான தமிழக அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலையை ரூ.30 முதல் ரூ.90 வரை என 40% அளவுக்கு உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. “ஆட்டை கடித்து,மாட்டை கடித்து, கடைசியில் மனிதனை கடித்த கதையாக” இருக்கிறது திமுக தலைமையிலான அரசின் செயல்பாடுகள். ஏற்கனவே சொத்து வரி உயர்வு, ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என பல்வேறு வழிகளில் மக்களிடமிருந்து எப்படியெல்லாம் வசூலிக்கமுடியும் என்று திட்டம் போட்டு செயல்படும் திமுக தலைமையிலான அரசு, தற்போது பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி மாணவர்களின் தலையில் கை வைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
அதாவது, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 - ரூ.40 வரையிலும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 - ரூ.50 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40 - ரூ.70 வரையிலும், 9 முதல் 12-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.50 - ரூ.80 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. ஒருசில புத்தகங்கள் ரூ.90வரை உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் ஒன்றாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வாங்க, இதுவரை ரூ.390 செலவான நிலையில்,தற்போது உயத்தப்பட்ட புதிய விலையின்படி 160ரூபாய் கூடுதலாக கொடுத்து, ரூ.550க்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோன்று, நான்காம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வாங்க, இதுவரை ரூ.470 செலவான நிலையில்,தற்போது உயத்தப்பட்ட புதிய விலையின்படி 180ரூபாய் கூடுதலாக கொடுத்து, ரூ.650க்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோன்று, ஏழாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வாங்க, இதுவரை ரூ.860 செலவான நிலையில்,தற்போது உயர்த்தப்பட்ட புதிய விலையின்படி 340 ரூபாய் கூடுதலாக கொடுத்து, ரூ.1,200க்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது. இதன்மூலம், திமுக தலைமையிலான அரசு, மாணவ மாணவியருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தாங்கமுடியாத சுமையை ஏற்றி இருக்கிறது.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என்ற திருவள்ளுவரின் கூற்று இந்த விளம்பர திமுக அரசுக்கு தெரியாமல் போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் “எங்கும் வசூல், எதிலும் வசூல்”என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து செயல்படும் திமுகவினருக்கு மாணவர்களைப்பற்றியோ, அவர்களின் பெற்றோர்களை பற்றியோ சிறிதும் கவலை இல்லை. மேலும், திமுக தலைமையிலான அரசு தமிழ்ப்புதல்வன் என்று ஆசைகாட்டுவது ஏன்? என இப்போது அனைவருக்கும் தெளிவாக புரிகிறது. திமுகவினரின் இதுபோன்ற செயல்களால்தான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என அனைவராலும் அறியப்படுகின்றனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் தாங்கமுடியாத அளவுக்கு பள்ளிக்கட்டண செலவு, சீருடைகள், போக்குவரத்திற்கு ஆகும் செலவை சமாளிப்பது, நீட் தேர்வை எதிர்கொள்வது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்வி பயின்று வரும் நிலையில் தற்போது திமுக தலைமையிலான அரசு பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தியிருப்பது சாமானிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய மனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தீமை செய்யாமல் இருப்பது நல்லது என கேட்டுக்கொள்கிறேன். எனவே நம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பாடப்புத்தகங்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 90-வது பிறந்தநாளான இன்று அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் தமிழகத்தின் நலனிற்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளையும், ஈடு இணையற்ற பங்களிப்பையும் இந்நாளில் நினைவு கூறுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ள இந்திய ஆடவர் ஹாக்கி வீரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மேலும், ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ள இந்திய வீரர் அமன் ஷெராவத் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், ஐந்து வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இன்னும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தனது விடாமுயற்சியால் இறுதிசுற்றில் நுழைந்த முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனைப் படைத்த நிலையில், உறுதியாக தங்கப்பதக்கம் பெறப்போவதை நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் 100 கிராம் எடை கூடுதலாக உள்ளார் என கூறி திடீரென்று தகுதி நீக்கம் செய்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
மல்யுத்த போட்டியில் ஜாம்பவானாக விளங்கிய ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி இந்திய மக்கள் மட்டுமின்றி,உலகத்தையே உற்று நோக்க வைத்த வீரமங்கை வினேஷ் போகத் அவர்கள் தனது கடின உழைப்பால் இறுதிப்போட்டி வரை சென்று இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது, இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அறிய மத்திய அரசு தகுந்த விசாரணை மேற்கொள்வது,நமது நாட்டின் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் அனைவருக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்.
தங்கப்பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டிருந்தாலும், உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்கள் மேலும் பல சாதனைகளை படைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தை எவ்வித அறிவிப்பும் இன்றி, திடீரென்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டுவதும், புதிய வீடு வாங்குகின்ற கனவும் கேள்விக்குறியாகியிருப்பது திமுக தலைமையிலான அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் சொத்துவரி உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, நிலங்களின் வழிகாட்டு மதிப்பு உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு வழிகளில் மனசாட்சியின்றி மக்களிடமிருந்தே வசூலித்து அவர்களை நாள்தோறும் கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கான வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் 112% அளவுக்கு இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து இருப்பதால் புதிய வீடுகளின் விலை தாறுமாறாக அதிகரிக்கும், சொந்தமாக வீடு கட்டுவதற்கும் இயலாத நிலை ஏற்படும் என சாமானிய, நடுத்தர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சாமானியர்கள் புதிய வீடு ஒன்றை கட்டவேண்டுமென்றால் ஏற்கனவே பல்வேறு வகையில் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக கட்டடத்திற்கான அனுமதி பெறுவதே பெரும் சவாலாக அமைந்துள்ளது. திமுக கட்சியினரின் ஆசிர்வாதம் இல்லையென்றால் உள்ளாட்சிகளிலும் பிற துறைகளிலும் வீட்டிற்கான அனுமதி பெறுவதில் இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கும் சூழல் உருவாகிவிட்டது. எப்படியாவது அனுமதி பெற்று வீடு கட்ட ஆரம்பித்தால், உடனே திமுகவை சேர்ந்த கவுன்சிலர்களும், அவரது ஆதரவாளர்களும் வந்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இவற்றையெல்லாம் சமாளித்து ஒருவர் தமிழகத்தில் சொந்த வீடு கட்டுவது என்பது தெய்வச்செயலால் மட்டுமே நடக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100% வரை உயர்த்தபட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.
அதாவது, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு 100 ரூபாய் எனவும் பிற மாநகராட்சிகளில் சதுர அடிக்கு 74 முதல் 88 ரூபாய் எனவும், நகராட்சிகளில் சதுர அடிக்கு 70 முதல் 74 ரூபாய் என்ற அளவிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், பேரூராட்சிகளில் சதுர அடிக்கு 45 முதல் 70 ரூபாய் எனவும்,ஊராட்சிகளில் சதுர அடிக்கு 15 முதல் 27 ரூபாய் வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கு இதுவரை ஒரு சதுர அடிக்கு 46 ரூபாயாக இருந்ததை தற்போது 100 ரூபாயாக 112% அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. இதன்படி சென்னை மாநகராட்சியில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10சதவிகிதம் ஆகிறது. இதன் மூலம் ஏழை எளிய சாமானிய, நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே போய்விடும்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதைவிட குறைவான மாநில வருவாயை வைத்துக்கொண்டுதான் அனைத்தையும் சமாளித்ததோடு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் கொடுத்தார்கள். ஆனால் திமுக தலைமையிலான அரசோ, தனது நிர்வாகத்திறமையின்மையால் இவ்வாறு தமிழக மக்களின் தலையில் தொடர்ந்து சுமையை ஏற்றுவது எந்தவிதத்தில் நியாயம்? இதனை திராவிட மாடல் அரசு என்று சொல்லிக்கொண்டு திராவிடத்தையும், நம் திராவிட தலைவர்களையும் இழிவுபடுத்துவது மிகவும் வேதனையளிக்கிறது.
எனவே, திமுக தலைமையிலான அரசு தனது மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்களை வதைத்தது போதும், இனி எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தமிழக மக்களை வஞ்சிக்காமல் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். மேலும், தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட, வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கிய மனு பாக்கர் அவர்கள், அடுத்து நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும், இந்திய வீரர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை மற்றும் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள மனு பாக்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று சாதனை படைத்ததற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இன்னும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதில், மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும், இந்த படகில் சென்ற 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் கடலில் மூழ்கி விட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்த மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில், இந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், இலங்கை கடற்படையினரால் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களின் 14 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வருகின்றன.இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது,நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில், தமிழக மீனவர்களின் படகு மூழ்கியதாக செய்திகள் வருகின்றன. இந்த படகில் சென்ற மலைச்சாமி அவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மற்றொருவர் கடலில் மூழ்கி இதுவரை கிடைக்கவில்லை என்று செய்திகள் வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இலங்கை கடற்படையினர் வேண்டுமென்றே இதனை செய்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 620க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதாவது, கடந்த 2022-ம் ஆண்டில் 36 தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 264 மீனவர்களை கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று 2023-ம் ஆண்டில் 35 மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்ததோடு, 240 மீனவர்களை கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டும் சுமார் 120க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இன்னலுக்கு ஆளாகி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்கள் மத்திய அரசின் உதவியோடு விரைந்து விடுவிக்கப்பட்டனர். எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமியின் உடலை உடனே தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காணாமல் போன மீனவரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை மாநகரில் அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமானம் ஈட்டுபவர்களிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியினை, தற்போது 60 ஆயிரம் ரூபாய்க்கும்குறைவாக வருமானம் ஈட்டுபவர்களிடம் 35சதவிகிதத்திற்கு தொழில் வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதேபோன்று தொழில் உரிம கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல். இத்தகைய மக்கள் விரோத செயலுக்கு துணை நிற்கின்ற திமுகவின் ஊதுகுழலாக விளங்கும் சென்னை மாநகராட்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில் வரிச் சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய அரசின் ஊழியர்கள், மாநில அரசின் ஊழியர்கள் என வருமானம் ஈட்டுவோரிடம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அதனை தற்பொழுது ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், 30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 430ரூபாயாகவும், 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நபர்களுக்கு 690 ரூபாயாக இருந்த வரி 930 ரூபாயாக உயர்த்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்ய அரசுக்கு முன்மொழிவினை அனுப்பவும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஆறுமாத வருமானம் 60,000 க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தொழில் வரியை உயர்த்தியிருப்பதன் மூலம் திமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி ஏழை எளிய சாமானிய மக்களை மட்டும் குறிவைத்து அவர்களை அழிக்கும் செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. இது போன்ற சாமானிய மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற செயலை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்யவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான மைனாரிட்டி ஆட்சியில் தொழில்வரி உயர்த்தப்பட்டதை போன்று தற்போது மீண்டும் உயர்த்த நினைப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்.
அதேபோன்று, தொழில் உரிம கட்டணமாக இதுவரை 500 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்திய தொழில்களுக்கு தற்போது 3,500 முதல் 50,000ரூபாயாக உயர்த்துவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. இதன்படி, குறு தொழில்களுக்கு 3,500 ரூபாய் முதல் 7,000ரூபாய், சிறு தொழில்களுக்கு 7,000 முதல் 10,000ரூபாய், நடுத்தர தொழில்களுக்கு 10,000 முதல் 20,000 ரூபாய், பெரிய வணிகங்களுக்கு 15,000ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உரிம கட்டணத்தை உயர்த்தியிருப்பது, ஏழை, எளிய, சாமானிய தொழில் செய்பவர்களை நசுக்கும் செயல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியில் ஏற்கனவே சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு, பத்திர பதிவுக்கட்டண உயர்வு போன்ற காரணங்களால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும்,தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டது. அவ்வாறு தாறுமாறாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வினை தாங்கமுடியாமல் தவிக்கின்ற ஏழை எளிய சாமானிய மக்களின் மீது மென்மேலும் ஒவ்வொரு நாளும் பாரத்தை ஏற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையால் மக்களை தொடர்ந்து கசக்கி பிழிவது எந்த விதத்தில் நியாயம்?
எனவே, திமுகவின் மக்கள் விரோத செயலுக்கு துணை நிற்கும் சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ள, தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணம் உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை, ஏழை எளிய சாமானிய நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை மேப்பாடி, சூரல்மலா, முண்டகையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 37 நபர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், இதில் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிர்ச்சித்தகவல்கள் வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை விரைந்து மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
வயநாடு அடுத்த சூரல்மலா பகுதியில் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமே அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏராளமான வீடுகள், கடைகள், பள்ளிக்கூடம் போன்றவைகளும் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகவும் வரும் தகல்வல்கள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான ஆட்சியில் ஒரே நாளில் மூன்று அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை எனது பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக இந்த விளம்பர அரசுக்கு தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில், அதனை மெய்பிக்கும் வகையில் தற்போது அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்படுவது நாள்தோறும் அரங்கேறுகிறது. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு, நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலூர் நவநீதம் நகரை சேர்ந்த 25வது வார்டு கழக அவைத்தலைவரான பத்மநாபன் அவர்கள் நேற்றைய தினம் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, சிவகங்கை மாவட்டம் வேலாங்குளத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி செல்வகுமார் அவர்கள் சிவகங்கை -இளையான்குடி சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்துள்ளனர். மேலும், இதே நாளில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜாக்சன் அவர்கள் ஆறு நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்டுஉயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.போதை பொருள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு, எங்கு பார்த்தாலும் போதையில் தள்ளாடும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களை காணமுடிகிறது. தமிழகத்தில் இன்றைக்கு கஞ்சா மற்றும் வினோதமான புதுவடிவில் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது.போதை பொருள் விற்பனை கூடாரமாக தமிழகம் மாறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி, இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது.
தமிழகத்தில் போதை மற்றும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், மதுரையில் நாம் தமிழர் கட்சியின் வடக்குத் தொகுதி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கொலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே நாளில் மூன்று அரசியல் கொலைகள் தற்போது அரங்கேறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதுபோன்ற தொடர் படுகொலைகளால் தமிழக மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில்,திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதை தடுக்க முடியாமல் வெறும் வேடிக்கை பார்த்து வருவதை விட்டுவிட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் எடுக்கப்பட்டது போன்று கடுமையானநடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும்வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை மக்களுக்கு இடையூறு இல்லாமல் மின் விநியோகம் வழங்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். திமுக தலைமையிலான அரசு தனது நிர்வாக திறமையின்மையால் மின் வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரிகட்டுவதற்கு, ஏழை, எளிய, சாமானிய மக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற அன்றைய மைனாரிட்டி திமுக ஆட்சிக்காலத்தில், இதேபோன்று மின் வாரியத்தை சீரழித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக அன்றைய திமுக ஆட்சியில் இருந்த துறை அமைச்சரே, "மின் வெட்டு துறை அமைச்சர்" என்று பெயரெடுத்ததையும் யாராலும் மறந்துவிட முடியாது. ஆனால் அதே சமயம் அடுத்து ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது நிர்வாக திறமையால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 2022 ஆம் ஆண்டு 25சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதம் வரை மின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான தமிழக மக்கள் அதிலிருந்து மீளமுடியாமல் போராடி வரும் நிலையில், தற்போது திமுக தலைமையிலான அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? இதன் காரணமாக ஏழை எளிய சாமானிய மக்கள், சிறு,குறு தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் இன்னலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு என திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு திமுக தலைமையிலான அரசு அதனை ஏன் இன்னும் செய்யவில்லை?
திமுக தலைமையிலான அரசால் எந்தவித மின் உற்பத்தி திட்டங்களையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட உடன்குடி, எர்ணாவூர் அனல்மின் நிலைய திட்டங்களை இந்த ஆட்சியாளர்களால் விரைவில் பூர்த்திசெய்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முடியவில்லை. திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையால் தற்போது மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வெளியிலிருந்து வாங்குவதால் மின் வாரியத்திற்கு மேலும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக மின் வாரியத்திற்கு தற்போது ரூபாய்.1,60,000 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி முடியும்வரை மின் வாரியம் அதன் சரிவிலிருந்து மீளவே முடியாது என்பது தெளிவாக புரிகிறது.
திமுக தலைமையிலான அரசால் மின் தடங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் போன்றவை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், இன்றைக்கு பெரிய அளவிற்கு மின் இழப்பு ஏற்படுகிறது. எனவே, திமுகவினருக்கு மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லை. தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை 2026ல் எப்படி தமிழக மக்களை ஏமாற்றி,வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை கொண்டு வருவது என்ற சிந்தனையில்தான் திமுகவினர்இருக்கின்றனர். எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை தடையின்றி வழங்கவேண்டும் என்றும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், கோவில்வெண்ணியை அடுத்த மணலூரை சேர்ந்த, மணலூர் கிளைக் கழக செயலாளர் M.பழனிவேல் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கழக நிர்வாகி பழனிவேல் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், சாமானிய மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சில அம்சங்கள் இடம்பெறாமல் போனதும் துரதிருஷ்டவசமானது.
மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறிகளின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், தனி நபர் வருமான வரி விதிப்பில் சலுகைகள், விவசாயத் தொழிலை மேம்படுத்துதல், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், கிராமப்புற பொருளாதார மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கையில் இடம் பெறுமா? என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறாததால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது சாத்தியப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மாணவர்களுக்கு உயர்கல்வி கடனுக்கான உச்சவரம்பு 10 லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. வேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்கான சில திட்டங்கள் இடம்பெற்று இருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று, பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெற ரூபாய்.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், நாடுமுழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படும் என்ற அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
வேளாண்துறைக்கு ரூபாய் 1 லட்சத்து 52ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும், இன்னும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் விவசாய பெருங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கும் என்பது விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.
சாலையோர வியாபாரிகளுக்கான முத்ரா திட்டத்தின் கடன் உச்சவரம்பு 20 லட்சமாக உயர்த்தியிருப்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருப்பினும், இத்திட்டம் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் அனைவரையும் சென்றடைய கூடிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பழைய வருமான வரிமுறையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரிமுறையில் மட்டும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் எந்தவிதமான மாற்றங்களும் கொண்டுவரப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறாததும் வருத்தமளிக்கிறது. மேலும், தமிழகத்திற்கு தனிப்பட்டமுறையில் எந்தவித புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாததும் துரதிருஷ்டவசமானது. தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைத்துள்ளதால், தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் வரை குறைந்துள்ளது. அவ்வாறு தங்கத்தின் விலை என்னதான் குறைந்தாலும், அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலும் கூட தொடரப்போவதில்லை. அதனை திமுகவினரிடம் எதிர்பார்ப்பதும், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற செயல் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, மொத்தத்தில் மத்திய அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருந்தாலும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடாத ஒரு நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது. -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டுகோள்.
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு செய்கின்ற மிகப்பெரிய அநீதி. இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டு முப்பத்தெட்டு மாதங்கள் ஆகிவிட்டது. தமிழக மக்களுக்கு திமுக அரசால் எந்தவித பயனும் இதுவரை ஏற்படவில்லை. நாள்தோறும் மேடைகளில் வசனம் எழுதி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழக மக்கள் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் சூழலில் தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் கட்டுக்கடங்காமல் போய்விடும். ஏழை எளிய சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் இதனை சமாளிக்க முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகப்போகின்றனர். திமுகவினர் வாக்களித்த மக்களை மேலும், மேலும் கசக்கி பிழிவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதை இந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உங்கள் வீடுகளில் 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் செலுத்திவந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 225 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அது இன்றைக்கு மீண்டும் 480ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோன்று 500 யூனிட் வரை பயன்படுத்துகிறவர்கள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1130 ரூபாயாக மின்கட்டணம் செலுத்திவந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 1725 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அது இன்றைக்கு 2085ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையாக 63.35 சதவிகித மக்கள் 200யூனிட்டுகள் வரை பயன்படுத்துகின்ற ஏழை எளிய சாதாரண மக்களுக்கு அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகப்போகிறது.
வீடுகளுக்கே இந்த நிலைமை என்றால் வர்த்தக பயன்பாட்டினர், சிறு,குறு தொழில் நிறுவனத்தினரின் நிலைமை இன்னும் மோசமாக பாதித்துவிடும். ஏற்கனவே 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தங்கள் தொழிலை விட்டுவிட்டு இன்றைக்கு வீதியில் நின்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் அனைவருமே தங்கள் தொழிலை செய்ய முடியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. அதே போன்று இதர தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கும் அதிக அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் பயன்படுத்துகிற உயர் மின்னழுத்த பயனாளிகளுக்கோ மின் கட்டணத்தோடு, நிலைக் கட்டணத்தையும் அதிகளவுக்கு உயர்த்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மின் தடங்கள், மின் மாற்றிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் மின் இழப்பு அதிகமாகிறது. இவற்றையெல்லாம் சரி செய்தாலே எவ்வளவோ மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும். ஆனால், திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளால், திறமையின்மையால் இன்றைக்கு தமிழக மக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
எனவே, தற்போது அமல்படுத்தியுள்ள மின்கட்டண உயர்வை திமுக தலைமையிலான அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த ஆட்சியாளர்கள் இதுபோன்ற மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்க எதாவது ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்களின் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்தநாளில், அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூர்ந்து, அவர்தம் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எளிய தொண்டராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார். தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்திலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமையை தேடித் தந்தவர் என்பதை இந்நாளில் எண்ணிப்பார்த்து பெருமிதம் அடைகிறேன்.
தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை எந்நாளும் தொடர்ந்து பின்பற்றிட அனைவரும் உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிதம்பராபுரத்தை சேர்ந்த மாரியப்பன், முத்து முருகன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் செயல்படுகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படுவதும் அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகியிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது. மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோவதுபற்றி எந்த கவலையும் படுவதில்லை. மாறாக, உயிரிழப்பு ஏற்பட்டவுடன் அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் மட்டும் போதும் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 39க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 112க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் முறையாக ஆய்வுகளை மேற்கொள்ளாத அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இதுபோன்று தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் காலத்திலாவது, தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் காலங்களிலாவது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் தடுத்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜெயா தொலைக்காட்சியில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் செய்தியாளராக தொடர்ந்து பணியாற்றி வந்த வி.வி.இளங்கோவன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவர் இளங்கோவன் அவர்கள்.திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான செய்திகளை துணிச்சலோடு சேகரித்தவர். ஆளும்வர்க்கத்தினரின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் நேர்மையாக பணியாற்றியவர்.
இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சகபணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆறு நபர்கள் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட கொலையாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதைத்தான் காட்டுகிறது.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கப்போகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை, இன்றைக்கு கொலை களமாக மாற்றியதுதான் திமுக தலைமையிலான அரசின் சாதனையா? தமிழக முதல்வரின் சட்டமன்ற தொகுதியாக விளங்கும் கொளத்தூரில், செம்பியம் காவல் நிலையம் அருகிலேயே இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த படுகொலை நடந்த இடத்தில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் சட்ட விரோத செயல்களை, போதை பொருள் கலாச்சாரத்தை, கள்ளச்சாராய விற்பனைகளை கண்டும் காணாமல் அலட்சியப்போக்குடன் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனே கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பேரையூரை சேர்ந்த, தமிழ்நாடு கள்ளர் மகா சங்க தலைவர் திரு.பாண்டியன் அவர்களின் தாயார் S.வைரத்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.பாண்டியன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கழக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், குன்னூர் நகர மன்ற முன்னாள் தலைவருமான Dr.C.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கழக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் -
V K Sasikala
@AmmavinVazhi
சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்தவரும், கொண்டலாம்பட்டி மண்டலக் குழு முன்னாள் தலைவரும், கொண்டலாம்பட்டி பகுதிக் கழக செயலாளருமான சண்முகம் அவர்களை, நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சண்முகம் அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதியினர் சந்தேகிக்கின்றனர்.
திமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகம் முழுவதும் கொலை கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தவேண்டிய காவல்துறையோ, சுதந்திரமாக எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகின்ற போதை பொருட்கள் நடமாட்டத்தையும், கள்ளச்சாராய விற்பனைகளையும் திமுக தலைமையிலான அரசு கட்டுப்படுத்த தவறினால், அதன்பிறகு தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற முடியாத வகையில் பேரபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே டி.குமாரமங்கலம் கிராமத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து உடல்நிலை பாதிப்படைந்து ஜெயராமன், முருகன், சிவச்சந்திரன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இதுவரை 65 உயிர்களை இழந்த பின்பும் கூட திமுக தலைமையிலான அரசால் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. திமுக தலைமையிலான அரசு கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக எத்தனை ஆய்வு கூட்டங்களை நடத்தினாலும், எத்தனை சட்டங்களை திருத்தினாலும் எந்த பயனும் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. தமிழகத்தில் இன்றைக்கும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக்கொண்டு இருப்பதை தான் விழுப்புரத்தில் தற்போது உயிரிழந்துள்ள ஜெயராமனின் மரணம் உணர்த்துகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ள கழக நிர்வாகி சண்முகத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். கழக நிர்வாகி சண்முகத்தின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதை தடுக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில், சிக்கந்தரா நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இதில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்ற துயர செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 150க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில், அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
இந்த கோர சம்பவத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றிட மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என உத்திரபிரதேச அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஜெயா தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் அமல்ராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அமல்ராஜ் அவர்கள் ஜெயா தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை, 25ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக, மிகுந்த விசுவாசத்தோடு பணியாற்றியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீதும், கழகத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
அமல்ராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சகபணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான திரு. இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில், இலங்கை அரசின் அரசியல் சாசனத்தில் மேற்கொண்ட 13வது சட்டதிருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அன்னாரது எண்ணத்தை ஈடேற்றிட இத்தருணத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இலங்கை தமிழர்களுக்காக இலங்கை தீவில் ஓங்கி ஒலித்த தமிழ் குரலுக்கு சொந்தக்காரரான பெரியவர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவு இலங்கை தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கும் ஒரு பெரும் இழப்பாகும். இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இறுதிவரை ஒரே கொள்கையில் உறுதியாக நின்று போராடியவர் பெரியவர் சம்பந்தன் அவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமைகளுக்காக தனது இறுதி மூச்சு வரை போராடிய தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை வாழ் தமிழ் சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்துள்ள மதுவிலக்கு சட்டத்தை திருத்தி தாக்கல் செய்திருப்பது பயனற்ற ஒன்று. இது ஏதோ பழைய பாத்திரத்திற்கு புதியதாக முலாம் பூசியிருப்பது போல் தோன்றுகிறது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் தற்போது வரை 65 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பழியை தவிர்ப்பதற்காக திமுகவினர் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நாடகம் ஆடுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
அதாவது, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி சட்டத் திருத்தத்தை அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்றைக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937ல், மதுவகை அல்லது மதி மயக்கும் மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்ல, வைத்திருக்க மற்றும் நுகர்வுக்கு தடை என்ற பிரிவு 4ல், அதனை அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை மற்றும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கு குறையாத தண்டனைத்தொகை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்ற ஷரத்துகள் ஏற்கனவே மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதே ஆயுள்தண்டனையைத்தான் தற்போது மீண்டும் சொல்லி சட்ட திருத்தம் செய்துள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மைநிலை இவ்வாறு இருக்க ஏதோ தாங்கள் கடினமான நடவடிக்கை எடுத்துள்ளது போன்று ஒரு மாய பிம்பத்தை கட்டமைக்க திமுகவினர் முயற்சி செய்கிறார்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்கும் வரை நடக்கவே நடக்காது என்பதுதான் நாடறிந்த உண்மை.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் என்ற பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாமல் ஊருக்கு வெளியில் இருக்கும் இடமோ அல்ல. இந்த இடம் ஊருக்கு நடுவில் தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் காவல் நிலையத்திற்கு அருகிலேயே இருக்கின்ற ஒரு பகுதி. ஏழை,எளிய சாமானிய மக்கள் வாழ்கின்ற பகுதி. இந்த இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது குறித்து இங்குள்ள மக்கள் பலமுறை காவல்நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்துள்ளதாக என்னிடமே நேரில் கூறினார்கள். இந்த ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் இதை உடனே தடுத்து இருக்க முடியும். ஆனால் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடப்பது நன்றாக தெரிந்திருந்தும்,வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். இத்தனை உயிர்களை பறிகொடுத்த பின்பு அதனை மறைப்பதற்காக இப்போது நாடகம் ஆடுவது ஏன்? சட்டம் ஒழுங்கை சரியாக பராமரித்து இருந்தால் இன்றைக்கு இத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது. இது தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுகிறது. குறிப்பாக காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரின் இயலாமையை காட்டுகிறது.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுக தலைமையிலான அரசு எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொண்டது, அங்கு பாதிக்கப்பட்டவர்களை எவ்வளவு அலட்சியமாக கையாண்டது என்பதை நானே நேரில் கண்டு அதிர்ந்துபோனேன். அதாவது கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் மரணங்கள் ஏற்பட்டது அறிந்தவுடன் அந்த பகுதிக்கு நேரில் சென்றேன். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் பார்ப்பதற்காக சென்றபோது மருத்துவமனை அருகில், போகிற வழியிலேயே ஒருவர் கேட்பாரற்று கிடந்தார். அருகில் இரண்டு காவல்துறையினர் நின்று கொண்டு இருந்தனர். இதை அவ்வழியாக சென்ற போதே பார்க்கமுடிந்தது. நானும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பார்கள் என்று நினைத்துக்கொண்டுதான் போகிறேன். எனக்கு முன்பாகத்தான் தமிழக அமைச்சரும், முடிசூடா மன்னனுமான திருவாளர். உதயநிதி அவர்களும் சென்று கொண்டிருந்தார். நாங்கள் அமைச்சர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை காத்திருந்து அதன் பின்னர்தான் மருத்துவமனைக்குள் செல்கிறோம். அங்கு சிகிச்சையில் இருந்தவர்களை பார்த்துவிட்டு திரும்புகிறோம். இதற்கே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மீண்டும் திரும்பி வரும்போது அந்த கேட்பாரற்று கிடந்த மனிதர் அதே இடத்தில் இருந்ததை பார்த்து பதறிப்போனேன். முதலுதவி செய்யவேண்டிய காவல்துறையை சேர்ந்தவர்களோ, சேற்றில் கிடந்த அந்த மனிதரை யாரும் பார்த்துவிடாதபடி மறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர். இதனை கண்ட நான் உடனே வண்டியிலிருந்து இறங்கி சென்று அந்த நபரை எங்கள் கட்சியினரின் உதவியோடு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் உடனே சேர்க்க செய்தேன். கடவுளின் அருளால் அந்த உயிரும் இன்று பிழைத்துவிட்டது. இந்த லட்சணத்தில் தான் திமுக தலைமையிலான அரசு கள்ளக்குறிச்சியில் செயல்பட்டது.
தமிழகத்தில் இன்றைக்கு போதை பொருள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு, எங்கு பார்த்தாலும் போதையில் தள்ளாடும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களை காணமுடிகிறது. தமிழகத்தில் இன்றைக்கு கஞ்சா மற்றும் வினோதமான புதுவடிவில் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இதன் காரணமாக எங்குபார்த்தாலும் வன்முறைகளும் சட்டமீறல்களும் தலைவிரித்து ஆடுகிறது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் இன்றைக்கு தமிழகத்தில் பாதுகாப்பற்ற ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட நம்மிடம் இருக்கின்ற சட்டதிட்டங்களை சரியாக பயன்படுத்தினாலே எந்தவித தவறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். ஆனால் திமுகவினரால் அதை எந்த காலத்திலும் செய்ய முடியாது. காவல்துறை சரியாக செயல்படவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக ஆட்சியாளர்கள் காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும்கட்சியினரே இன்றைக்கு அனைத்து வித சட்டமீறல்களையும், அராஜகங்களையும் அரங்கேற்றும்போது, காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட ஆட்சியாளர்கள் திறமையாக இருக்க வேண்டும். இதே சட்டதிட்டங்களை பயன்படுத்திதானே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்கள். அம்மா அவர்கள் ஆட்சிகாலங்களில் கள்ளச்சாரயத்தால் ஒரு உயிர் கூட பலியானது இல்லையே. எனவே, திமுகவினர் தமிழக மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு அவர்களின் நலனுக்காக பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.(2/2) -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிமருந்து கலவையின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3அறைகள் இடிந்து தரைமட்டமாகியதில் பணியிலிருந்த 4 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 38க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 110க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இதுபோன்று தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் காலத்திலாவது, தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து ஏற்பட்ட இடத்தில் கட்டிட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களையும் விரைந்து மீட்க வேண்டும். திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் காலங்களிலாவது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் தடுத்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்த முன்னாள் மாவட்டக் கழக செயலாளரும், கழக முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், குடவாசல் வர்த்தக சங்க தலைவருமான M.ராஜேந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் S.M.பாக்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திரு.S.M.பாக்கர் அவர்களின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
இஸ்லாமிய பெருங்குடி மக்களின் பாதுகாவலராக விளங்கிய S.M.பாக்கர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அம்மா அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.
அன்பு சகோதரர் S.M.பாக்கர் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முன்னாள் சேர்மனும், கழக எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளருமான காசித்துரைப்பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு. காசித்துரைப்பாண்டியன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ம.சுரேஷ், பிரவீன், த.சுரேஷ், சேகர், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, மணி, வடிவு ஆகிய 9 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. இதுவரை 65க்கு மேற்பட்டவர்கள் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரியவருகிறது. சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
இதேபோன்று கடந்த ஆண்டு மே மாதம் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து இரண்டு நாட்களிலேயே 21 நபர்கள் பலியாகினர். திமுக தலைமையிலான அரசு இதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் இத்தகைய மரணங்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. தடுத்து நிறுத்தவேண்டிய திமுக தலைமையிலான அரசோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் அலட்சியப்போக்காலும், மக்களை பாதுகாக்கக்கூடிய எந்தவித நடவடிக்கைகளை எடுக்காததினாலும் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம் என்று வேதனையாக இருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தேவையான நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 8-நபர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருவது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மேற்கு வங்க மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இது போன்ற விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை உரிய விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 25க்கும் மேற்பட்டோர் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்று மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.🙏
@Seeman4TN -
V K Sasikala
@AmmavinVazhi
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதோடு, மாநில கட்சியாக அங்கீகாரம் அடைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.🙏
@thirumaofficial -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
குவைத்தில் மங்காஃப் பகுதியில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வர தேவையான அனைத்து ஏற்பாடுகளை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லுார், மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மற்றும் ஜார்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய், 'H5N1' பரவி வருவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட, 4 மாநிலங்களில் கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மேலும், மேற்கு வங்காளத்தில் 4 வயது குழந்தை புதிய வகை H9N2பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருவது மிகவும் கவலையளிக்கின்றது. இந்த வைரஸ் அதிக வீரியமில்லாததாக அறியப்பட்டாலும், வைரஸ்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுசீரமைக்கும் திறன் கொண்டவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது மனிதர்களையும் தாக்கும் நிலையில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த தேவையான அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ளவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் இது போன்ற சுகாதார நடவடிக்கைகள் சிறப்பான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சல் நோய் கோழிகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. கோழிப்பண்ணைகளுக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளித்த பின்னரே, பண்ணைக்குள் அனுமதிக்கப்பட்டன. மாநிலத்தின் எல்லைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. நம் மாநிலத்திற்கு உள்ளே வந்து கோழிகள் ஏற்றி செல்லக்கூடிய வாகனங்கள் முறையாக சோதனையிடப்பட்டன. வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கப்பட்டன. இதுபோன்று இன்னும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொற்று ஏற்படுவதற்கு முன்கூட்டியே எடுக்கப்பட்டன. திமுக தலைமையிலான அரசு இதுபோன்று எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
திமுகவினர் மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், தங்கள் கட்சியை எப்படி வளர்ப்பது, அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று வெறும் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படவேண்டும். தமிழகத்தில் சுகாதார சீர்கேடுகள் ஆகாமல் தடுத்திட, புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் போன்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய பிரதமராக, மூன்றாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாகவும், எனது சார்பிலும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும், இந்திய தேசம் வல்லரசு ஆவதற்கும் தங்கள் பயணத்தை இனிதே தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
On behalf of the people of Tamilnadu, I extend my heartiest congratulations to Prime Minister Shri. Narendra Modi on securing an historic third term to lead India.
I seek the blessing of the almighty for Shri @narendramodi, on his life long mission to transform India into a prosperous nation and restore its rightful place in the emerging multipolar world. -
V K Sasikala
@AmmavinVazhi
திருச்சி புறநகர் மாவட்டம், சிவிலிப்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகி
திரு.P.A. தனபால் அவர்களின் தந்தை P. பூசாரி அயித்தான் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.P.A. தனபால் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க உறுப்பினருமான திரு.ஏ.எஸ்.முருகன் அவர்களின் தந்தை செல்வம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு. ஏ.எஸ்.முருகன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர், எங்களுடன் எப்போதும் நல்ல நட்பு பாராட்டி வருபவர். வலிகள் நிறைந்த பல போராட்டங்களை கடந்து, மக்களின் மனங்களை வென்றுள்ள திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் தலைமையில் ஆந்திராவில் அடுத்த ஆட்சி அமைய இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு மேம்பட வாய்ப்பு உள்ளது.
அன்பு சகோதரர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்களுக்கு பல்லாண்டு காலம் சேவையாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம் பாணாதுறையை சேர்ந்த திரு.மனோகரன் அவர்களின் இளைய மகளும், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டத்தலைவர் திரு.மனோ.கார்த்திகேஸ்வரன் அவர்களின் சகோதரியுமான அபிராமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது சகோதரியை இழந்து வாடும் திரு.மனோ.கார்த்திகேஸ்வரன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் கால் இடறி கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தற்போது திரு.வைகோ அவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் மண்ணின் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவராக விளங்கும் திரு. வைகோ அவர்கள் தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து போராடி வருபவர். திராவிட சித்தாந்தங்களை இம்மியளவும் விட்டு விலகிடாமல் வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எங்களுடன் திரு.வைகோ அவர்கள் மேற்கொண்ட அரசியல் பயணம் மிகவும் புனிதமானது. அதனை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
அன்புச்சகோதரர் திரு.வைகோ அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும், அதே உத்வேகத்துடன் மீண்டும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஈரோடு மாவட்டம், பெருந்துறை காடபாளையத்தை சேர்ந்த திரு.K.ஜெகதீஷ் அவர்களின் தாயாரும், கழக மாவட்ட மாணவரணி பொருளாளருமான திரு. சி.பாலகிருஷ்ணன் அவர்களின் பாட்டியுமான K .சுப்பாயம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது பாட்டியை இழந்து வாடும் திரு.சி.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வரும் 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து நம் தேசத்திற்கே பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் தொடர்ந்து மென்மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை முன்னாள் மேயரும், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான தா.மலரவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.மலரவன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
திரு.செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தென்சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளரான திரு. K.குணசேகரன் அவர்களின் மாமியார் லெட்சுமி அம்மையார் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அம்மையார் லெட்சுமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில், தேர்ச்சி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
12-ஆம் வகுப்பு பொதுதேர்வில் திருப்பூர் மாவட்டம் சேடப்பாளையத்தை சேர்ந்த மாணவி மஹாலக்ஷ்மி 600க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தன்யஸ்ரீ 600க்கு 594 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதேபோன்று, பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாணவி அப்சரா 600க்கு 592 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கோகிலா என்ற மாணவி, விபத்தில் சுயநினைவை இழந்த தனது தாயை பராமரித்துக் கொண்டே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி 600க்கு 573 மதிப்பெண்கள் எடுத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. சென்னையை சேர்ந்த திருநங்கை மாணவி நிவேதா பல தடைகளை தகர்த்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது அறிந்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். அதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
அதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவச்செல்வங்கள் சிறப்பான சாதனைகளை படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மாணவி காவிய ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.
அதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியை சேர்ந்த மாணவி காவிய ஸ்ரீயா, கிருஷ்ணகிரி மாவட்டம் அரூரை சேர்ந்த சந்தியா, திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த சஞ்சனா அனுஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த மாணவி தேவதர்ஷினி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பல தடைகளை கடந்து, விடாமுயற்சியுடன் நன்றாக படித்து 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்று, சாதனை படைத்துள்ள மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இத்தேர்வுகளில் தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அதைப்பற்றி கவலைப்படாமல், எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் இருந்து மீண்டும் முயற்சித்து தேர்ச்சி பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மாணவச்செல்வங்கள் தங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்ற நண்பர்களோடு அமர்ந்து பேசுங்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று பொறுமையோடு ஆராய்ந்து, விரும்பிய மேற்படிப்புகளை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றி பெற்று, உங்கள் எண்ணம்போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 அறைகள் இடிந்து தரைமட்டமாகியதில் 6 பெண்கள் உட்பட 9நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கு மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வருவது கூடுதல் கவலையை அளிக்கிறது.
அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மற்றொரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த 3 நபர்கள் புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் இந்த கோடைகாலத்தில் மஞ்சள் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட் என எச்சரிக்கை செய்யும் திமுக தலைமையிலான அரசு, இவ்வாறான வெப்ப அலை வீசும் காலங்களில், பட்டாசு ஆலைகளில் எந்தவிதமான பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா? தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இன்றைக்கு இந்த விபத்து ஏற்பட்டு இத்தனை உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, எஞ்சியிருக்கும் காலத்திலாவது,தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து ஏற்பட்ட இடத்தில் கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களையும் விரைந்து மீட்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, தமிழக காவல்துறை நேற்று கைது செய்து போலீஸ் வேன் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் வந்த வேன் மீது கார் ஒன்று மோதியதில் சவுக்கு சங்கர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் பத்திரிக்கை தொழிலில் உள்ளவர்கள், சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்கள் திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளையும், பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல்களையும், இந்த அரசாங்கத்தின் தவறுகளையும், அஞ்சாமல் தைரியத்துடனும், துணிச்சலாகவும் தனது கருத்துகளை பேட்டிகள் மூலம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் திமுக தலைமையிலான அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை கைது செய்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறது. திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தங்கள் தவறுகளை மறைக்க பார்க்கிறது.
பத்திரிகையாளர்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும் என்ற கருத்தை, சமீபத்தில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், தெரிவித்து இருப்பதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அடியோடு நசுக்கிவிடலாம் என்று தப்பு கணக்கு போடுவதை விட்டுவிட்டு, தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்தால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, தொடர் மின்தடை போன்றவற்றை சரிசெய்ய தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் செயல்படுகின்ற தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உலகமே தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இந்நாளில், உழைப்பையே தனது உயிர் மூச்சாக கருதி உழைத்துக்கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் லாரியிலிருந்து குடோனுக்கு வெடிபொருள்கள் மாற்றிக் கொண்டிருந்த போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அச்சமயம் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த வெடி விபத்தில் மேலும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை திமுக தலைமையிலான அரசு விரைந்து கண்டறிய வேண்டும்.
தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கல் குவாரிகளிலும் வெடி மருந்து பொருட்கள் இருப்பு வைக்க தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றனவா? வெடி மருந்து பொருட்களை பயன்படுத்த உரிமம் பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவில் இருப்பு வைத்துள்ளார்களா? அல்லது கூடுதலாக வெடிமருந்து ஏதேனும் வைத்துள்ளனரா? என்பதையெல்லாம் திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து முறையான ஆய்வுகள் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், வெடிமருந்து குடோன்கள் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெடி விபத்துகள் ஏற்படுவதும், அதில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதும் தொடர்கதையாகிவிட்டன. இதுபோன்று வெடி விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வெடிபொருட்களை பயன்படுத்துபவர்கள் கடைப்பிடிக்கின்றனரா? என்பதை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 11 வது கொண்டை ஊசி வளைவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 6 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றனவா? பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா? பயணிகள் அளவுக்கு அதிகமாக பேருந்துகளில் ஏற்றப்படுகிறார்களா? என்பதையெல்லாம் திமுக தலைமையிலான அரசு முறையாக ஆய்வு செய்திட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற மனித உயிரிழப்புகளை கண்டிப்பாக தடுக்க முடியும். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது. போன உயிர்களை யாராலும் மீண்டும் கொண்டு வர முடியாது. எனவே, ஓட்டுனர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அவர்கள் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளதோடு, இந்த இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.
தமிழக வீரர் குகேஷ் அவர்கள் தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிய வேண்டும் என்றும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்க்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி
பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன நிறைவோடு கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் மகாவீரர் அவர்கள் இளமையிலேயே தனது சுக வாழ்க்கையைத் துறந்து, இயற்கைச் சக்திகளோடு தனது வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்து, அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்று அற்ற நிலையைக் கடைபிடித்து வாழ்ந்தவர்.
அவரது வாழ்க்கையே அவரது போதனைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு அறநெறியினையும் ஆன்மிக நெறியினையும் தவறாது பின்பற்றியவர். மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல், அமைதியான வாழ்வினை வாழ்ந்து வந்தாலே நம் அனைவருடைய வாழ்விலும் நிச்சயம் வெற்றியடையமுடியும்.
பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் செய்தி
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளில், அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூர்ந்து, அவர்தம் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகச் சீர்திருத்தத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டவர்.
நாட்டில் கல்வி, சுதந்திரம், பெண்களுக்கான உரிமைகள் எல்லாவற்றையும் நம் சமூகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்று மிக சிறந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். தீண்டாமை இழிவுகளை ஒழிக்கவும், சாதி ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்து சமத்துவத்தை நிலைபெறச் செய்யவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து போராடியவர். மேலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்ததில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தவர். அதேபோன்று தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள் பலவற்றை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
சமூக நீதி போராளியாக திகழ்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை எந்நாளும் தொடர்ந்து பின்பற்றிட அனைவரும் உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திராவிட இயக்க வரலாற்றில் முதுபெரும் தலைவராக விளங்கியவரும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருடன் இணைந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியவருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருடன் அரசியலில் இணைந்து பயணித்த பெருமைக்குரியவர். புரட்சித்தலைவர் அவர்கள் மறைவிற்கு பிறகு இயக்கத்திலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாக, 1991ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு இணைந்த அந்த தருணத்தை இந்நேரத்தில் பெருமிதத்துடன் எண்ணிப் பார்க்கிறேன்.
முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திராவிட இயக்க பற்றாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
வடசென்னை, துறைமுகம் பகுதியைச் சேர்ந்த திரு.மின்னல் ரவி அவர்களின் தாயார் அஞ்சலை அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு. மின்னல் ரவி அவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எங்கள் இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபடுகின்ற ஒரு சிறந்த செயல்வீரர். தனது தாயை இழந்த இந்த கடினமான நேரத்தில் திரு.மின்னல் ரவி அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியையும், மன வலிமையையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
தனது தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.மின்னல் ரவி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திமுகவினர் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றிடாத நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுகவினர் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்பு கணக்கு போடுகின்றனர். அவர்களின் பகல்வேஷம் இனியும் தமிழக மக்களிடம் எடுபடாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைவது உறுதி.
திமுகவினர் ஒரே பொய்யை எத்தனை முறை சொல்வது என்ற கணக்கு கூட தெரியாமல், நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என்று மீண்டும் அறிவித்திருப்பதன் மூலம் திமுகவினரின் பகல் வேஷம் கலைந்துவிட்டது
மேலும், நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளும் மூடப்படும் என்று நடைமுறையில் சாத்தியப்படாததையெல்லாம் சொல்லியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சுங்க சாவடிகளை மூடிவிட்டால் தேசிய நெடுஞ்சாலைகளை யார் பராமரிப்பது?
விவசாயிகளின் நலன் மற்றும் மக்களின் நலன் என்று திட்டங்களை பட்டியலிடும் திமுகவினர் அவர்களுக்கு எதையும் செய்வதில்லை. திமுகவினரின் இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் தமிழக மக்களை கசக்கி பிழிந்ததுதான் மிச்சம்.
மேலும், சேது சமுத்திர திட்டம் என்ற ஒரு திட்டத்தை தூக்கி பிடித்து அதற்கு 2,427 கோடி ரூபாய் ஒதுக்கியும் அந்த திட்டம் கடலில் கரைந்த பெருங்காயம் போல ஆனது. இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் இது செயல்முறை படுத்தப்பட்டு, மக்களின் பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டது. அதன்பிறகு கைவிடப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்போவதாக திமுகவினர் தற்போது தங்களது தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
எனவே, திமுகவினரும் அவர்களது கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும், மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள், இனி அவர்களிடம் உங்களின் போலியான பேச்சுக்கள் எடுபடாது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். மேலும் திமுகவினர் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இதுவரை பிரதமர் வேட்பாளரே யார் என்று தெரியாதபோது, தேர்தல் அறிக்கையில் ஏராளமான திட்டங்களை செயல் படுத்தப்போவதாக கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. திமுகவினரின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை எல்லாம் அடுத்து வரப்போகும் இந்திய பிரதமர் நிறைவேற்றுவாரா என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இந்த கூத்துக்களை எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்ற 38 நாடாளுமன்ற உறுப்பினர்களால், தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். திமுகவினர் ஒவ்வொரு நாளும் மத்திய அரசோடு சண்டையிட்டு கொண்டு, தமிழக மக்களை வஞ்சித்ததுதான் மிச்சம்.
தற்போது நடப்பதையொல்லாம் பார்க்கும்போது *“இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”* என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் சிவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
காளையார் கோவில் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் என ஆண்டுதோறும் குரு பூஜைகளை முன்னின்று செய்தவர்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த நிகழ்வின் போது முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் அவர்களை இழந்துவாடும் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பது ஒரு மனிதாபிமானமற்ற செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மன்னிக்கமுடியாத தவறை இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர, புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் கடந்த 2-ஆம் தேதியன்று வீட்டருகில் விளையாடி கொண்டிருந்த நிலையில் காணாமல் போன 9 வயது சிறுமி, நான்கு நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்து கொல்லப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், இறந்து போன சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். சிறுமியை சிதைத்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், புதுச்சேரியில் போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம். இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைத்தது.
நாட்டின் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும். பெண்களை இழிவுப்படுத்துபவர்களை, துன்புறுத்துபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களை உடனே கண்டறிய வேண்டும். இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சியில் போதை பொருள் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. திமுகவை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நிரூபணமாகிவிட்டது. நம் இனத்தையே அழிக்கக்கூடிய வகையில் இளம் சமுதாயத்தினரை குறிவைத்து நடக்கின்ற போதை பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வாரம் தெற்கு டெல்லியில் 2 போதை பொருள் குடோனில் சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.2000 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு கடந்த 3 ஆண்டுகளாக மூளையாக செயல்பட்டது திமுகவை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆளும் கட்சியினரின் பரிபூரண ஆசிர்வாதத்தோடு ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மேலும் இதில் கிடைக்கும் பணத்தை வைத்து திரை துறையில் முதலீடு செய்து வந்துள்ளார்களா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.
போதை பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரித்து, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன. குஜராத்தில் கப்பல் வழியாக கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடல் வழியாக போதை பொருள்களை எளிதில் கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டு தமிழகத்தில் சர்வதேச போதைப்பொருள் கும்பல் போதைப்பொருள்களை பதுக்கிவருகிறதா ? என்ற அடிப்படையிலும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மேலும், இன்றைக்கு மதுரை ரயில் நிலையத்தில் பிரகாஷ் என்பவரிடம் 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து போதை பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கு போதை பொருட்களை கொண்டு செல்லக்கூடிய வகையில் போதை பொருள் கடத்தல் மையமாக தமிழகம் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்று வரும் தகவல்களை பார்க்கும்போது, தமிழகம் தற்பொழுது மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக தெரியவருகிறது. தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு கண்காணிக்கிறதா? இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா? இவற்றையெல்லாம் திமுக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை? என்றும் தெரியவில்லை.
தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வதாக திமுக தலைமையிலான அரசு கூறிக்கொண்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் போதை பொருள் புழக்கத்தில் முன்னேற்றம் கண்டு, இன்றைக்கு தமிழகம் போதை பொருள் விற்பனை கூடாரமாக மாறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
மேலும், திமுகவை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணைத் தலைவருமான ஆராமுதன் என்பவரை மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்திருப்பது, இப்பகுதி மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, திமுக தலைமையிலான அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றமுடியவில்லை, மனிதநேயத்தை அழித்து மிருகத்தன்மையை உருவாக்கிடும் போதை பொருள் கடத்தலையும் தடுக்கமுடியவில்லை என்பது தற்போது நிரூபணம் ஆகிவிட்டது. இதன்மூலம் தமிழக மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே, போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு வருவதால், தமிழகத்தின் பாதுகாப்பிற்கே பெறும் அச்சுறுத்தலாகி வருகிறது. இது நாட்டின் இறையாண்மைக்கும் கேடு விளைவிப்பதாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
தமிழக காவல்துறையினர் யாருடைய புற அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையாக செயலாற்றி, இது போன்ற சட்டவிரோத செயல்களில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் நிலவும் போதை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதை பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும். இது வருங்கால நம் சந்ததியினருக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக மக்கள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நடத்த போராடி வரும் வேளையில், போதை பொருட்களின் ஆதிக்கத்தால் மிகவும் கலக்கமடைந்து இருக்கிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு, நம் இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருட்களின் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த கடுமையான நடவடிக்கைகளைப் போன்று இந்த ஆட்சியாளர்கள் கடைபிடித்தால்தான் அது தமிழக மக்களுக்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது. எனவே, தமிழகம் போதை பொருட்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவச்செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை".
அதாவது, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றவை எதுவும் அத்தகைய சிறப்புடையது இல்லை என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, மாணவச்செல்வங்கள் கல்வியறிவை பெறுவதன் மூலம் அனைத்தையும் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொதுத் தேர்வை எண்ணி எந்தவித பயமும் இல்லாமல், தைரியமாக எழுதுங்கள். எந்த ஒரு செயலையும் தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் செய்யும்போது அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள்.
அன்புக்குரிய மாணவச்செல்வங்களே தேர்வு காலங்களில் எந்தவித கவனச்சிதறல்களும் ஏற்படாதவண்ணம் விழிப்புடன் செயலாற்றுங்கள். செல்போன் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். உங்களுடைய முழு நேரத்தையும் படிப்பதற்காக செலவிடுங்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள்.
அதேபோன்று, மாணவச்செல்வங்கள் சாப்பிடாமல் இருக்காதீர்கள். நல்ல ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் நன்றாக உறங்குங்கள். உங்கள் உடல்நிலையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். ஏனென்றால், அவர்களைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு சிறந்த தீர்வை சொல்லமுடியாது. எனவே, உங்களை பெற்றவர்களுக்கு மதிப்பளித்து அவர்களுடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள். மாணவச்செல்வங்கள் இவற்றை கடைபிடித்தாலே போதும், கண்டிப்பாக சிறந்த முறையில் தேர்வை எழுதி அதில் வெற்றியும் காண முடியும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று, பெற்றோர்களும், உங்களின் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். அவர்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவர்கள் படிப்பதற்கு எந்தவித இடையூறும் இல்லாத சூழ்நிலைகளை அமைத்துக் கொடுங்கள்.
மாணவச்செல்வங்கள் தான் நாட்டின் எதிர்கால தூண்கள். ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியை பொறுத்து தான் அமைகிறது. நம் வருங்காலம், இளம் சமுதாயத்தினரின் கையில்தான் உள்ளது. நம் மண்ணில் பிறந்த மாணவச்செல்வங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து, நம் தேசத்திற்கே பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். மாணவச்செல்வங்களே உங்களில் பலர், எத்தனையோ உயிர்களை காக்கும் மருத்துவர்களாக வரலாம், நாட்டை காக்கும் ராணுவ அதிகாரிகளாக வரலாம், உயர்ந்து ஓங்கி நிற்கும் கட்டடங்களை கட்டும் பொறியாளர்களாக வரலாம், உலகமே வியந்துப் பார்த்த விஞ்ஞானி அப்துல் கலாம் அய்யா போன்று வரலாம். இதுபோன்று எண்ணற்ற துறைகளில் வல்லுனர்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது ஆசை. எனவே, நம் மாணவச்செல்வங்கள் நல்ல உயர்கல்வி பெற்று, தங்களுடைய வாழ்க்கையில் உன்னத நிலைகளை அடைய, இப்பள்ளிப் பருவ பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகவும் அத்தியாவசியமானது. எனவே, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் நம் மாணவச்செல்வங்கள் அனைவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி, அதில் வெற்றியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயம் அழித்து மக்களை குடிக்க நீர் இன்றி செத்து மடியும் நிலைக்கு தள்ளியதைதான் திமுக தலைமையிலான அரசின் ஒப்பற்ற சாதனையாக இன்றைக்கு பார்க்க முடிகிறது.
நமது நாட்டை சுற்றி சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை ஆட்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டிலேயே தண்ணீர் தர மறுத்து நமது மாநிலத்தை அழிக்க நமது அண்டை மாநிலத்தவர்கள் முயல்வது பெரும் வேதனையாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தை மட்டும் மனதில் இறுக பிடித்துக்கொண்டுள்ள இந்த விளம்பர திமுக அரசு விவசாயிகளைப் பற்றியோ, மக்களின் குடிநீர் ஆதாரத்தைப் பற்றியோ எந்தவித கவலையும் இல்லாமல் சுயநலப்போக்கோடு செயல்பட்டு வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசின் ஆட்சிக்காலம் முடிவதற்குள் கர்நாடகா அரசு எப்படியாவது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டி விடலாம் என கடுமையாக முயன்று வருகிறது. ஆனால் அவர்களின் எண்ணம் என்றைக்கும் ஈடேறாது. ஏற்கனவே , கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை உரிய காலத்தில் தர மறுக்கிறது. இதில், கர்நாடகா அரசின் நீர்வள துறை அமைச்சர் சிவகுமார் அவர்கள் மத்திய நீர்வள துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக தொடர்ந்து பேசி வருகிறார். இது 1892-ஆம் ஆண்டு மைசூர் மற்றும் மெட்ராஸ் அரசுகள் போட்ட ஒப்பந்தத்திற்கு முற்றிலும் எதிரானது. இதனை எல்லாம் உணராத திமுக தலைமையிலான அரசு விழாக்கள் எடுப்பதிலும், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதாக கூறிக்கொண்டு இன்ப சுற்றுலா மேற்கொண்டு வருகிறது.
மேலும், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு முல்லை பெரியாறு குறுக்கே புதிதாக இடுக்கி அருகே மற்றொரு அணை கட்டப்போவதாக மிரட்டி வருகிறது. நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப்போராட்டத்தின் விளைவாகத் தான் இன்றைக்கு முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. இதனை திமுக தலைமையிலான விளம்பர அரசு மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. புதிய அணை முல்லை பெரியாரின் குறுக்கே கட்டப்பட்டால் மதுரை திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்கள் வறண்ட பாலைவனமாக மாறிவிடும்.
இந்நிலையில், நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசு தன் பங்கிற்கு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.215 கோடி ஒதுக்கி உள்ளது. ஏற்கனவே, பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு தடுப்பணையை குப்பம் என்ற பகுதியில் கட்ட ஆந்திர அரசு முயற்சிப்பது பெரும் வேதனை அளிக்கிறது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக மக்களின் உரிமைகள் பறிபோவதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், நாடாளுமன்ற தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்படும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கும் அண்டை மாநில ஆளும் கட்சியினர் திமுகவினரின் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் தான். இருப்பினும், தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. தமிழக மக்களையும், விவசாய பெருங்குடி மக்களையும் காப்பாற்றுவதற்கு, திமுக தலைமையிலான அரசு எந்தவித முயற்சியும் எடுக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்திற்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழகத்தின் சிறப்புக்கள் வரலாற்று பக்கங்களில் காணாமல் போய்விடும். எனவே தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான பாலி நரிமன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக திகழ்ந்த பாலி நரிமன் அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது.
பாலி நரிமன் அவர்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் பணியில் திறம்பட செயலாற்றியவர். பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் சிறப்புடன் பணிகளை ஆற்றியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களை தனது மகளாக கருதி மிகவும் பாசத்தோடு பழகியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் பாலி நரிமன் அவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்து இருந்தார். பாலி நரிமன் அவர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.
மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பயணித்த நீதித் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 10 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
தங்களது உயிரையே பணயம் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில்களில் ஈடுபடும் ஏழை எளிய சாமானிய மக்கள் இதுபோன்ற விபத்துக்களில் தங்கள் இன்னுயிரை இழப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு பெறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் பாட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், குடோன்களிலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டு ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக நடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் பட்டாசு ஆலைகளில் சுமார் 35க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 100க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது.
பட்டாசு தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், குடோன்கள் மற்றும் பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் எல்லாம் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து, தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் வரும் காலங்களில் ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசை கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திருமதி.ஸ்ரீபதி அவர்கள் தனது 23 வயதிலேயே பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ள ஸ்ரீபதி அவர்கள், பல சவால்களை எதிர்கொண்டு, தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இத்தகைய ஒரு சாதனையை படைத்துள்ளதை எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன். நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஸ்ரீபதி அவர்கள் அவரது வாழ்வில் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று, அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு.சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சட்லஜ் நதியில் விழுந்து காணாமல் போய் 8 நாட்களாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டார் என்றும், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
அன்பு சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எங்கள் இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபட்டவர். தனது மகனை இழந்த இந்த கடினமான நேரத்தில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியையும், மன வலிமையையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக சட்டமன்றத்தில், திமுக தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்ட ஆளுநர் உரையை, தமிழக ஆளுநர் வாசிக்காமல் புறக்கணிப்பதும், ஆளுநரை வைத்துக்கொண்டே அவருக்கு பதிலாக சபாநாயகர் ஆளுநர் உரையை நிறைவேற்றுவதும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் ஏற்படாமல் தவிர்க்கவேண்டும். குறிப்பாக திமுகவினர் தமிழக சட்டமன்றத்தை அனைவருக்கும் பொதுவானதாக கருதவில்லை. ஏதோ மயிலை மாங்கொல்லையில் திமுகவினர் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது போன்று தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை மாற்ற நினைப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக ஆளுநருக்கும், திமுக தலைமையிலான அரசுக்கும் நாளுக்கு நாள் விரோத மனப்பான்மை அதிகரித்துக்கொண்டே செல்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
தமிழக ஆளுநர் உரையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்படுகிறது என்றும், வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டது உள்ளிட்ட உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாலும், திமுகவினரால் உருவாக்கப்படும் ஆளுநர் உரை, தமிழக மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. திமுக தலைமையிலான அரசும், தமிழக ஆளுநரும் தங்களது விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிப்பதை கைவிடுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
திமுகவினர் வாக்களித்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிடும் வகையில் மக்கள் நலத்திட்டங்களை அளித்திட வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தின் மாண்பினையும், மரபுகளையும், விதிகளையும் காப்பாற்றிடும் வகையில் செயலாற்றுவது அனைவரது கடமையாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசால் திரு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அவசர கதியில் வீண் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் துன்பப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நேற்று நள்ளிரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். மக்கள் படும் துன்பங்களைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் சுயநலப்போக்கோடு செயல்படும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னைக்கு வெளியே அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்த போதும் போதிய பேருந்துகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேருந்துகள் இல்லாமல் நேற்று இரவு பல மணிநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதாவது, வருகின்ற பேருந்துகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் என்று கூறியதால், அதில் ஏற முடியாமல் சாதாரண பேருந்துகளை எதிர்பார்த்து பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு விடுமுறை காலங்களில் கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்புகளை மட்டுமே கொடுக்கிறது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால் போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் பேருந்து நிலையத்திலேயே விடிய விடிய காத்திருக்க வேண்டிய கொடுமைக்கு ஆளாகவேண்டியுள்ளது. அதாவது, பல மணி நேரமாக பேருந்துகள் கிடைக்காமல் காத்திருந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பயணிகள் நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,பயணிகள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் வேதனை அளிக்கிறது.
மேலும், திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளால், அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதால், தமிழக மக்களின் பாதுகாப்பே இன்றைக்கு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திகில் பயணம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக,சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தபோது, திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து அதன் வழியே கீழே விழுந்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் உயிர் பிழைத்து இருக்கிறார். திமுக தலைமையிலான ஆட்சியில் அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வரே திமுக நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது வன்மையாக கண்டிக்கதக்கது. அதிலும், மாணவ, மாணவியர்களை அழைத்து செல்வதற்காக, மாநகர போக்குவரத்துக் கழக அரசு பேருந்துகளையே பயன்படுத்துவது திமுகவினரின் அராஜகத்தை காட்டுகிறது. இதுபோன்று, அரசு பேருந்துகளை இன்றைக்கு திமுகவினர் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி விடுவதால்தான் பொதுமக்கள் போதிய பேருந்துகள் இன்றி சாலையில் அமர்ந்து போராடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் தமிழக மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, திமுகவினர் திராவிட மாடல் என்று சொல்லி திராவிடத்தை இழிவு படுத்துவதை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு அனைத்து நாட்களிலும் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும், நமது நாட்டின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோருக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவர். வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்ததோடு உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பாதுகாத்த திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்க இருப்பது தமிழ் மண்ணிற்கு பெருமை அளிக்கிறது.
அதேபோன்று நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோரின் தன்னலமற்ற சேவைகளுக்காகவும் , நம் நாட்டு மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சிறந்த மக்கள் நலப்பணிகளை போற்றிடும் வகையிலும் திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்க இருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மற்றும் நமது நாட்டின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங், திரு.நரசிம்மராவ் ஆகியோர்களது நினைவை எந்நாளும் போற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 6 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் தடுப்பு சுவர் கட்டும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்ததாகவும், இதில், சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இதில் ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொழிலாளர்கள் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
உதகையில் விபத்து நிகழ்ந்த இந்த பகுதி ஏற்கனவே மண் சரிவு ஏற்படக் கூடிய பகுதியாக இருப்பதாகவும், இந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எவ்வாறு திமுக தலைமையிலான அரசு அனுமதியளித்தது? என்று இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இந்த கட்டிடம் கட்ட முறைகேடாக அனுமதியளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதகை போன்ற மலை பிரதேசங்களில் கட்டிட பணிகளை முறையாக அனுமதி பெற்று செய்கின்றனரா? கட்டுமான பணியின் போது தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதை திமுக தலைமையிலான அரசு எந்த விதத்தில் கண்காணித்து வருகிறது? என்று தெரியவில்லை. அதேபோன்று, இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் எத்தனை தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்? என்ற விபரமும் இதுவரை சரியாக தெரிவிக்கவில்லை. மேலும், இதில் வேறு யாரேனும் சிக்கி இருக்கின்றனரா? என்பதை உடனே கண்டறிந்து, மீட்பு பணிகளை விரைந்து செய்திட தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
உதகையில் கட்டிட பனியின் போது உயிரிழந்த 6 பெண்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சக தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு.எல்.கே.அத்வானி அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.எல்.கே.அத்வானி அவர்கள் துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். பா.ஜ.கவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார். திரு.எல்.கே.அத்வானி அவர்கள் தனது 14வது வயதிலேயே பொது சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இந்திய ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவர். மேலும், இந்திய தேசத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு திரு.எல்.கே. அத்வானி அவர்களுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது திரு.எல்.கே.அத்வானி அவர்கள் மிகுந்த அன்பையும், மாறாப்பற்றினையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் மீது அளவு கடந்த நட்பினை கொண்டிருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 'துக்ளக்' தமிழ் வார இதழின் 42-வது ஆண்டு விழாவில்" திரு.எல்.கே.அத்வானி அவர்கள் “புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒரு இயற்கையான கூட்டாளியை நாங்கள் காண்கிறோம்," என்று பேசியதை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். மேலும், மதுரை திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியில் திரு.எல்.கே.அத்வானி அவர்களின் ரத யாத்திரை சென்ற பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அன்றைய தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வெடிகுண்டை உடனடியாக அகற்றி, பெரும் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது. இதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நன்றி தெரிவித்ததையும் எண்ணிப்பார்க்கிறேன். அதேபோன்று, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றி பெற்றதற்காக, திரு.எல்.கே.அத்வானி அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததையும் இந்நேரத்தில் மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறேன்.
மேலும், திரு.எல்.கே.அத்வானி அவர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நேரில் சந்தித்ததையும், அவர்களுக்கு விருந்து அளித்து உபசரித்ததையும் இந்நேரத்தில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், மகிழ்ச்சியோடும், நூறாண்டுகளை கடந்தும், பெருவாழ்வு வாழ வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
It is with great pleasure that I extend my heartfelt congratulations to Shri. LK Advani, on the announcement of India's highest award, the Bharat Ratna.
I am happy to share that Mr. Advani and Puratchithalaivi Amma shared a deep mutual admiration for each other, that transcended party lines.
I fondly recall an incident in 2012, at the 42nd Anniversary for Tughlak Magazine, wherein he stated that even though there were many differences between us, he & Amma shared a common spirit of nationalism which made them "natural allies".
He was also quick to express his sincere gratitude towards Amma, when our government prevented the pipe bomb attack against him in Alampatti near Thirumangalam as well as congratulate us whenever we had electoral victories.
I also fondly recall the times when we hosted Shri. Advani at Puraitchithalaivi Amma's house and the many conversations that we were fortunate to have with him.
I wish him a very long and healthy life ahead.(2/2) -
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், வீராக்கண் ஊராட்சி கூத்தனூரை சேர்ந்த கழக தகவல் தொழிநுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் திரு.C.R.D.வீராக்குமார் அவர்களின் தாயார் D.ரவேந்திரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.C.R.D.வீராக்குமார் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை பார்க்கும் போது ஒரு வழக்கமான அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது. அதே சமயத்தில் மக்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த, ஒரு சில அறிவிப்புகள் இடம்பெறாமல் போனதும் துரதிருஷ்டவசமானது.
அதாவது, விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவர்களின் சில இன்றியமையாத தேவைகள் இன்னமும் பூர்த்தியடையாமல் இருப்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியை அளித்தாலும் விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த நதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்துவது சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் இந்த இடைக்கால அறிக்கையில் இடம்பெறாமல் போய்விட்டது.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 3ல் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதையும், பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளதையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும், 9 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவது குறித்தும், பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாமல் போய்விட்டது.
சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும்,மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தற்போது வரை சுமார் 3 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும்,தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ₹1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படுவது, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடும்.
வருமான வரி விதிப்பில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நடைமுறை தொடரும் என்று அறிவித்ததன் மூலம், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தகூடும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, மொத்தத்தில் மத்திய அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஒரு வழக்கமான நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.🙏 -
V K Sasikala
@AmmavinVazhi
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள் தான் திமுகவினர். அதிலும், குறிப்பாக ஆ.ராசா போன்றவர் புரட்சித்தலைவரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. திமுகவை சேர்ந்த ஆ.ராசாவுக்கு 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் என்னசெய்வதென்று தெரியாமல் "பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற மனநிலையில் கண்டதையும் பேசி வருகிறார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக புரட்சித்தலைவரை இகழ்ந்து ஆ.ராசா பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது. புரட்சித்தலைவரை பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அது தமிழக மக்களுக்கே நன்றாக தெரியும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் யார்? என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் நன்றாக புரிந்து வைத்து இருந்தார். அதனால் தான் எனது தம்பியாம் இதயக்கனி என்று புரட்சித்தலைவரைப் பார்த்து பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்போடு கூப்பிட்டார். வேறு யாரையும் இது போன்று அழைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், திமுகவினரை 13 ஆண்டுகாலம் எதிர்கட்சியாகவே அமரவைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படிப்பட்டவர் எனபது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்களை காட்டிலும் தமிழத்தில் பட்டி தொட்டியில் உள்ள அனைவருக்கும் புரட்சித்தலைவரின் அருமை பெருமைகள் பற்றி நன்றாகவே தெரியும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினாலும், தமிழக மக்களின் மீது கொண்ட அளவுகடந்த அன்பினாலும் எண்ணற்ற நலத்திட்டங்களை வகுத்து கொடுத்த மாமனிதர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தந்தை பெரியாரின் நூற்றாண்டைத் தமிழகம் எங்கும் கொண்டாடினார். அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தித் தமிழ்மொழியை நவீனப்படுத்திய நாடோடி மன்னன் என்பதை இந்த நாடே அறியும்.
தமிழுக்கென்று தஞ்சையில் பல்கலைக்கழகம் அமைத்து கொடுத்த அன்புத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்புடன் நடத்தி உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
தமிழ்நாட்டில் அரசாணைகளைத் தமிழில் வெளியிடவும், தமிழில் கையெழுத்திடவும் வைத்த செயல்வீரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
”தமிழ்ப்பண்புக்கு நான் அடிமை” என்று உணர்த்துவதற்காக பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடிய தமிழகத்தின் தவப்புதல்வன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திறந்து வைத்தார்.
மதுரை பல்கலைக்கழகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்தான்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவராக இருக்கிறார். அப்படிப்பட்ட மறைந்த தலைவரை பற்றி இழிவாக பேசுவதை வேடிக்கை பார்க்கும் திமுக தலைமைக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா? என்ற பழமொழிக்கேற்ப ஆ.ராசா போன்ற வாய்ச்சவடால் வீரர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், முன்னாள் ஒன்றியக் கழக செயலாளரும், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளருமான டாக்டர் ரூபம் கே.வேலவன் அவர்களின் தாயார் கே.பிச்சம்மாள் நாச்சியார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் ரூபம் கே.வேலவன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் சரிவர திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழக விவசாயப்பெருங்குடி மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாக, விவசாயிகள் சொல்லி வேதனைப்படுகின்றனர். இவ்வாண்டு பருவமழை சரிவர பெய்யாததாலும், திமுக தலைமையிலான அரசு கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தேவையான உரிய காவிரி நீரை பெற்று தராததாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தாலும் நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். அதாவது கடந்த ஆண்டு 2022-23 பருவத்தில் சம்பா சாகுபடி 1 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்யப்பட்டு, 5 லட்சத்து 19 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 2023-24 ல் 1 லட்சத்து 35 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்து, ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நடவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தற்போது வரை 370 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டு, இதுவரை 19,222 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. திமுகவினரின் நிர்வாக சீர்கேடுகளால் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், நடப்பு பருவத்தில் இதுவரை 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சொல்லி வேதனைப்படுகிறார்கள். இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் சரிவர திறக்கப்படாததால் தனியார் நெல் வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்க வேண்டியுள்ளது என்றும், இதன் காரணமாக கடுமையாக நஷ்டம் அடைவதாக சொல்லி மிகவும் வேதனைப் படுகின்றனர். அதாவது அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன நெல் 40 கிலோ மூட்டை கொண்ட சிப்பம், ஊக்கத் தொகையுடன், ஒரு கிலோ 23 ரூபாய் பத்து காசு என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டியதை, தனியார் நெல் வியாபாரிகளிடம் ஒரு கிலோ 20 ரூபாய் என்று குறைவான கொள்முதல் விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும், இதனால் மிகவும் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். அதிலும் தனியார் நெல் வியாபாரிகள் நெல்லுக்கான பணத்தை சுமார் ஒரு மாதம் கழித்து தவணை முறையில் தருவதால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்படுகிறார்கள். இதுபோன்று, திமுகவினரின் செயல்பாடுகளை உன்னிப்பாக பார்த்தால், எல்லாவற்றிலும் தனியார் வியாபாரிகளை, தனியார் நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிப்பதாகத்தான் தெரிகிறது. இது வாக்களித்து மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
அதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்பொழுது சம்பா 80 ஆயிரம் ஏக்கரிலும் தாளடி 40 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி நடைப்பெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 176 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கும் நிலையில், 47 இடங்களில் மட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. இந்த ஆண்டு ஏற்கனவே பருவம் தப்பிய மழையினால் மூன்று முறை நெல் சாகுபடி செய்து அழிந்த நிலையில், தற்பொழுது நான்காவது முறையாக சாகுபடி செய்து அறுவடை பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைமையிலான அரசு தங்கள் பங்குக்கு நெல் கொள்முதலை இன்னும் ஆரம்பிக்காமல் காலதாமதம் செய்வது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் தமிழக அரசிடம் போதுமான எண்ணிக்கையில் அறுவடை இயந்திரம் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தனியாரிடம் உள்ள அறுவடை இயந்திரங்களை சுமார் ரூ.2,600 முதல் ரூ.3,000 வரை கூடுதல் கட்டணம் கொடுத்து அறுவடை செய்யும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பருவத்திற்காக ஜனவரி முதல் வாரம் மற்றும் ஜனவரி 15 தேதிக்கு பிறகு என இரண்டு பிரிவுகளாக மொத்தம் 525 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், தற்போது இம்மாவட்டத்தில் இதுவரை 375 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 பருவ சாகுபடிகளில் இம்மாவட்டத்தில் மொத்தமாக 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். அதில் சம்பா, தாளடி பருவத்தில் மட்டும் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நெல் உற்பத்தி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாகவும் சொல்லி விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.
விவசாயிகள் ஏற்கனவே தொடர் மழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி 40% மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இடுபொருட்கள் விலை உயர்வு, உரவிலை உயர்வு, விவசாய தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அறுவடை இயந்திரத்தின் வாடகை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் நெல்லுக்கான உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்து இருக்கும் நிலையில், ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று’ திமுக தலைமையிலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.
மேலும், சிறு விவசாயிகளிடம் போதிய அளவு தார்பாய்,சாக்குபைகள்,படுதா இல்லாத காரணத்தால் அறுவடை செய்யும் பணியையும் ஆரம்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை, திமுக தலைமையிலான அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் சரிவர திறக்கப்படாமல் இருப்பதால், ஒரு சில விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்காக, தனியார் நெல் வியாபாரிகளிடம் நெல்லை கடனுக்கு விற்கவேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழக டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சூழலில், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அடுக்கிவைத்து கொண்டு நெல்மூட்டைகளை இரவு,பகலாக பாதுகாத்து வருகின்றனர். அதேபோன்று, ஒரு சில சிறு விவசாயிகள் வேறு வழியின்றி அறுவடை செய்த நெல்லை தங்கள் வீடுகளிலேயே கொட்டிவைத்து கொண்டு திமுக தலைமையிலான அரசு எப்பொழுது கொள்முதல் நிலையங்களை திறந்து தங்கள் நெல்லை எடுப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கின்றனர்.
மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை, 22 சதவீதம் அளவுக்கு உயர்த்தி தர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையினை திமுக தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்று தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையில் நெல் ஒரு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் ஆதாரவிலை வழங்கப்படும் என மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதை இன்றுவரை நிறைவேற்ற வில்லை.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிவுறும் நிலையில், கடந்த ஆண்டுகளில் அரசு கொள்முதல் நிலையங்களிலேயே ஒரு மூட்டைக்கு 40 முதல் 50 ரூபாய் வரை லஞ்சமாக தரவேண்டி இருந்ததாகவும், இது போன்ற தவறுகள் இந்த ஆண்டும் நடைபெறாமல் தடுக்க திமுக தலைமையிலான அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். விவசாயிகள் இது போன்று அநியாயமாக வஞ்சிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதை விட்டுவிட்டு திமுக தலைமையிலான அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். அதாவது, திமுக தலைமையிலான அரசு விவசாயத்திற்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கை அளித்தும், தமிழக விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் விவசாயத்தை அழிக்கின்ற வகையில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் விவசாயத்தை காத்திடவும், விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை காலதாமதமின்றி செய்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.(2/2) -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான விருது பெற உள்ளவர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்திய குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்களுக்கும், திரைப்பட நடிகர் திரு.சிரஞ்சீவி அவர்களுக்கும், பழம்பெரும் நடிகையும், நடனக்கலைஞருமான வைஜயந்திமாலா பாலி அவர்களுக்கும் மற்றும் பிரபல நாட்டியக்கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, பத்ம பூஷன் விருதினை, தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் மறைந்த பாத்திமா பீவி அவர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் அவர்களுக்கும், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கும், எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களுக்கும், மருத்துவத்துறையில் நாச்சியார் அவர்களுக்கும் மற்றும் நாதஸ்வர கலைஞரான சேஷம்பட்டி சிவலிங்கம் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலம், பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள 30 பெண்களை உள்ளடக்கிய 132 நபர்களுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இசைஞானி இளையராஜா அவர்களின் மகள் பவதாரிணி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இசை உலகில் பவதாரிணி அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
தனது தந்தையை போன்று இசைஞானம் கொண்ட பவதாரிணி அவர்கள் தமிழ் திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களை பாடியிருக்கிறார். அதேபோன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில், திரைப்படங்களுக்கு இசையமைத்தும், தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 'பாரதி' படத்தில் அவர் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்கு, தேசிய விருது பெற்று, அவரது தந்தைக்கும் பெருமை சேர்த்தவர்.
பவதாரிணி அவர்களை இழந்து வாடும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் இசையுலக ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்
நம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை நீத்த, மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினத்தில் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்திடுவோம்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாணவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தி தியாகிகளின் பெருமைகளையும், நம் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
நம் தமிழ் மொழிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றிடும் வகையில், நம் கழகத் தொண்டர்கள், குறிப்பாக மாணவச் செல்வங்கள் அனைவரும், தியாக செம்மல்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, தமிழ் மொழியின் சிறப்புகளை மென்மேலும் உயர்த்திட உறுதியேற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமியை மனிதாபிமானமற்ற வகையில் அரக்கத்தனமாக அடித்து கடும் சித்ரவதை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. திமுகவினர் ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் மமதையில் இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவி 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ கல்வி பயில வேண்டும் என முடிவு செய்து உயர் படிப்பிற்கு ஆகும் செலவை சமாளிப்பதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதாவது சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு மாணவி வேலைக்கு சென்றதாக தெரிய வருகிறது. குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்ற அந்த சிறுமியை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவர் மனைவி மார்லீனோ ஆன் ஆகியோர் அடித்து துன்புறுத்தியிருப்பது மன்னிக்கமுடியாதது. இது தொடர்பாக மாணவி தமிழக காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை தவறு இழைத்தவர்களை கைது செய்யாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தவறு இழைத்தவர்கள் திமுக கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தயக்கம் காட்டுகிறதா? என்று தெரியவில்லை.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இதுபோன்று தங்கள் சொந்த கட்சியினர் யாரேனும் தவறு இழைத்து இருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார். ஆனால் இன்றோ தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு தங்கள் கட்சியினர் செய்யும் அராஜக செயல்களை ஏன் தடுக்க முடியவில்லை? ஆளும்கட்சியினரே இவ்வாறு அராஜகத்திலும், அத்துமீறலிலும் ஈடுபட்டால் தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எங்கே இருக்கும்?
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் தமிழக மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்தனர். பெண்களுக்கும் ஒரு மரியாதை இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள், அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழக மக்களை பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு வகையில் தமிழக மக்களை துன்புறுத்தி கொண்டிருக்கும் திமுகவினருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் திமுகவினர் செய்யும் அராஜக செயல்களை கண்டும் காணாமல் இருப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திமுக சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். சிறுமிக்கு அநீதி இழைத்த திமுகவினர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🌾
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🌾
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான் சந்த் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இன்று டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியும், தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனையுமான வைஷாலிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தார். அர்ஜூனா விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள வைஷாலிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று உலகளவில் சாதிக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதை பெற்ற தமிழக செஸ் பயிற்சியாளர் திரு. ஆர்.பி. ரமேஷ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது பெற்ற தமிழகத்தின் முதல் கபடி வீராங்கனையான கவிதா செல்வராஜ் அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘அர்ஜூனா விருது’ பெற்ற வைஷாலி, வாழ்நாள் சாதனையாளருக்கான 'தயான்சந்த் விருது’ பெற்ற கவிதா செல்வராஜ் மற்றும் துரோணாச்சாரியார் விருது பெற்ற ஆர்.பி. ரமேஷ் ஆகியோர் மென்மேலும் பல சாதனைகளை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்றைக்கு சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக நம் இந்திய தேசம் அனுப்பிய முதல் விண்கலம் என்ற பெருமையை ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, 126 நாட்கள் பயணித்து, 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவை கடந்து இன்றைக்கு சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு இமாலய வெற்றியை நம் தேசம் அடைந்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. சூரியனை ஆய்வு செய்த அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் இன்றைக்கு நம் இந்திய தேசமும் இடம்பெற்று இருப்பது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள ஆதித்யா எல்-1 திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியும், ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குனருமான தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த திருமதி. நிகர் சாஜி அவர்களுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேட்டி, சேலை மற்றும் ரொக்கத்தொகை குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாமல் இருப்பது தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, காலதாமதமின்றி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதலை ஆரம்பிக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்த்து கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக நம் கரும்பு விவசாயிகள் பெரும் அளவில் பயனடைந்தனர். ஆனால், திமுக தலைமையிலான அரசு போக்குவரத்து செலவினம் மற்றும் வெட்டுக்கூலி உட்பட ஒரு கரும்புக்கு 33 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்படும் என தற்போது அறிவித்து இருப்பது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
திமுக தலைமையிலான அரசு கரும்பு கொள்முதலை இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் மூலம் செய்யாமல், விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எந்தவித குளறுபடிகளும் செய்யாத வகையில் நேரடியாகக் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஒரு கரும்புக்கு 40 ரூபாய் கொள்முதல் விலை கிடைத்தால்தான் எங்களால் சமாளிக்கமுடியும் என தமிழக கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகளே, அரசு அறிவித்த விலையான 33 ரூபாயை தராமல், ஒரு கரும்புக்கு 15 ரூபாய் முதல் 17 ரூபாய் தான் கொடுத்ததாகவும், அதிலும் வெட்டுக்கூலி, ஏத்துக்கூலி போக வெறும் 10 ரூபாய்தான் தங்கள் கைக்கு கிடைத்ததாகவும் விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்பட்டனர். எனவே, இது போன்ற தில்லுமுல்லுகளுக்கு இடமளித்திடாமல், திமுக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு சேரவேண்டிய கரும்புக்கான கொள்முதல் விலை முழுவதுமாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகள் இடுபொருள் விலை உயர்வு, விவசாய கூலி உயர்வு , காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் டீசல் இன்ஜின்களை கொண்டு 10 மாதங்கள் சாகுபடி செய்தது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் செங்கரும்பை விளைவித்து இருக்கின்றனர். எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புக்கு 40 ரூபாயாவது கிடைத்தால்தான் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதை திமுக தலைமையிலான அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிகாலங்களில் பொங்கல் பண்டிகையின்போது தவறாமல் வழங்கிக்கொண்டிருந்த விலையில்லா வேட்டி, சேலையை இந்த ஆண்டு திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு தருவார்களா? எனபதே கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த ஆண்டும் பொங்கல் பரிசுதொகுப்போடு வேட்டி, சேலை சேர்த்து வழங்கபடவில்லை. தமிழக நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொங்கல் தொகுப்போடு வேட்டி, சேலையும் சேர்த்து கொடுத்தால்தான் தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் பண்டிகையாக அமையும் என்பதை திமுக தலைமையிலான அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் ஏற்கனவே புயல், மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்போடு 1,000 ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, கரும்பு விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 40 ரூபாய் கொள்முதல் விலை கிடைத்திடும் வகையில், காலதாமதமின்றி, எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் கரும்பு கொள்முதலை உடனே தொடங்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரம், சர்ச் அக்ரஹாரத்தை சேர்ந்த கழக நிர்வாகி திரு.S .சிவராஜ் அவர்களின் சகோதரரும், தமிழக காவல்துறை உதவி ஆய்வாளருமான S.ராகவன் அவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சரவணன், ராஜேஷ் ஆகிய மூவரும் சாலை விபத்தில் அகால மரணமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகவன் அவர்களின் மனைவியும், மகளும் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
சாலை விபத்தில் உயிரிழந்த ராகவன் உள்ளிட்ட மூவரின் குடும்பத்தினர்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சகோதரர் விஜயகாந்த் அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய இயலாதது.
அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் தனது கடின உழைப்பால், ஒரு நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியின் தலைவராக பொறுப்பேற்று, அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், சமூகப் பணிகளையும் தமிழக மக்கள் என்றென்றும் நினைவில் கொள்வார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது அளவற்ற அன்பினையும், மிகுந்த மரியாதையையும் கொண்டு இருந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். தமிழக தேர்தல் காலங்களில் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் எங்களோடு பயணித்த அந்த பசுமையான நாட்களையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவரது மகன்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிசாலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
சென்னை எண்ணூரில் ஏற்கனவே கச்சா எண்ணெய் கடல்நீரில் கலந்ததால் இப்பகுதியில் உள்ள மீனவ சமுதாய மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதே பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தலைவலி, மயக்கம் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது.
தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக விசாரணை செய்யவேண்டும். இந்த விபத்து ஏற்பட காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவ உதவிகளை உடனே வழங்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோன்று தண்டையார்பேட்டையில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து பெருமாள் என்பவர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் 4 நபர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த தீ விபத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகைகளை உடனே எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக செய்யப்படுகின்றனவா? என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகள் செய்கின்றனரா? என்பது தற்போது கேள்விக்குறியாகவிட்டது. திமுக ஆட்சி வந்துவிட்டாலே அனைத்து அரசு துறைகளும் செயலிழந்து போய்விடுகின்றன. இது தமிழகத்திற்கு வாய்த்த சாபக்கேடு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
இந்த விளம்பர ஆட்சியில் சென்னை எண்ணூர் பகுதி என்பது மக்கள் வாழ்வதற்கே தகுதியற்று போய்விட்டதோ? என்று எண்ணத்தோன்றுகிறது. திமுக தலைமையிலான அரசின் நிர்வாகத்திறமையின்மையாலும், மக்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமலும் ஒரு விளம்பர நோக்கத்தோடு செயல்படுவதாலும் இன்றைக்கு தமிழக மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.
எனவே, திமுக தலைமையிலான அரசு வாக்களித்த மக்களுக்கு கொஞ்சமாவது அக்கறையோடு செயல்பட்டு, ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கின்றனரா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து தமிழகத்தில் வருங்காலங்களிலாவது இதுபோன்று விபத்துகள் எந்த பகுதியிலும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மதிப்பிற்குரிய ஐயா R. நல்லகண்ணு அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐயா நல்லகண்ணு அவர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு தன்னலமின்றி அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர். தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டும், சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டும் அயராமல் தொண்டாற்றி வருவதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
பெரியவர் . R. நல்லகண்ணு அவர்கள், நூறாண்டுகளை கடந்தும் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுபிரான் அவர்களின் போதனைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஏழை எளிய கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்பதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
"நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்" என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும். இந்த சிறப்பான நன்னாளில் உலகம் முழுவதும் சகோதரத்துவம் பரவட்டும் எனக் கூறி கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி அவர்கள் திடீரென்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்புசகோதரர் போண்டா மணி அவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். இயக்கத்தின் வெற்றிக்காக மேடை பிரச்சாரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் செய்தும் அம்மா அவர்களின் ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் பணிகளையும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.
சகோதரர் போண்டா மணி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருச்சி புறநகர் மாவட்டம் முசிறி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் பிரின்ஸ் தங்கவேல் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கும், கோவிலில் பணியாற்றுகின்ற தற்காலிக காவல் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக தாக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிற ஒரு சிறப்பு வாய்ந்த தலமாகவும் இது விளங்குகிறது.
மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியன்று 'வைகுண்ட ஏகாதசி' விழாவாக 21 நாட்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வர தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் கோவில் மூலஸ்தானம் அருகே உள்ள காயத்திரி மண்டபத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த போது, கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டதாகவும், அச்சமயம் அவர்களை வெகுநேரம் காக்க வைத்து முக்கியஸ்தர்களை மட்டும் அனுமதித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை கண்ட ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் அங்கு இருந்த கோவில் தற்காலிக பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமயத்தில் கைகலப்பு ஏற்பட்டு கோவில் தற்காலிக காவல் பணியாளர்கள், ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களை கடுமையாக தாக்கியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக கோவில் மூலஸ்தானத்திற்குள்ளேயே இது போன்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எங்கு பார்த்தாலும் வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. தற்போது இந்து சமய அறநிலையைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோவில் மூலஸ்தானத்திலேயே வன்முறையை அறங்கேற்றியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐயப்ப பக்தர்களை கண்மூடித்தனமாக தாக்கியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் மழை நின்று ஒரு வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்கள் இன்னமும் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் இருக்கிறது. முறையான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் எங்கு பார்த்தாலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழை பாதித்த ஒரு சில இடங்களில் தூய்மை பணி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டு இந்த ஆட்சியாளர்கள் மைதா மாவை தூவி வைப்பது மிகவும் கொடுமையாக இருக்கிறது. பேரிடர் காலங்களில் மக்களை காக்க வேண்டிய வருவாய் துறை, மின்சார துறை, சுகாதாரத்துறை போன்ற அரசுத்துறைகளோ இன்றைக்கு வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு தங்களது நிர்வாக திறமையின்மையால் தமிழக மக்களுக்கு பயனளிக்கின்ற வகையில் எதையும் செயல்படுத்த தெரியாமல் அனைத்து அரசு துறைகளும் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு இந்து சமய அறநிலையைத்துறையும் விதிவிலக்கல்ல. இவர்களும் தங்கள் பங்குக்கு கடவுளே கதியென்று வரும் பக்தர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள். எனவே, ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களை தாக்கிய தற்காலிக பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக கோவில்களுக்கு பக்தியோடு வருபவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமளிக்காமல் அனைவரையும் சமமாக மதித்து நடக்கவேண்டும். திமுக தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையைத்துறையினர், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இதனை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே கந்தசஷ்டி விழாவின் போது திருச்செந்தூர் ஆலயத்தில் பக்தர்களை வெகுநேரம் காக்க வைத்து வசதி படைத்தவர்களை மட்டும் முன்னுரிமை அளித்து கடவுளை தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டது. அதுவும் ஒரு நபருக்கு 1000 ரூபாய் என்று முறைகேடாக வசூலித்து மஞ்சப்பையில் போட்டு கொண்டதையும் இந்த நாடே பார்த்தது. தற்போது ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலமாக இருப்பதால் திமுகவினர் தங்களது வழக்கமான பாணியில் மஞ்சப்பை வசூலில் இறங்கிவிடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நாடாளுமன்ற மக்களவைக்குள் 2 நபர்கள் திடீரென்று நுழைந்து வண்ண புகை குண்டுகளை வீசியிருக்கும் செயல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது போன்ற செயல்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இதே நாளில் இன்றைக்கு புதிய நாடாளுமன்றத்தில் இது போன்ற ஒரு சதி செயல் அரங்கேறியிருப்பது திட்டமிட்ட ஒன்றாகத்தான் கருதமுடிகிறது. இந்த செயல் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் இது கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலை செயல்படுத்த மேலும் 2 நபர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது போன்ற தேச விரோத செயலுக்கு காரணமானவர்கள் மீதும், இச்செயலினை பின்னால் இருந்து யாராவது செயல்படுத்தி இருந்தாலும் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, வரும்காலங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் இதுபோன்ற எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படாதவகையில் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரையும் சமமாக மதித்து, எல்லோரையும் நேசிக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களின் ஈடு இணையில்லா பண்பிற்கும், விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்ச நிலையினை அடைந்திருந்தாலும், எளிமையான அணுகுமுறையினால், அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் அவரது உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மிகவும் துன்பப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான அரசு எந்தவித நிவாரண பணிகளையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக அடிப்படை தேவையான குடி தண்ணீர், உணவு, ஆவின் பால் கூட கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். சென்னையில் உள்ள மக்கள் புயல் மழையால் ஏற்கனவே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருளான பால் கிடைக்காமல் ஒரு லிட்டர் ஆவின் பால் 150 ரூபாய்க்கு வாங்குகிற அவல நிலை நிலவுகிறது. இத்தகைய பகல் கொள்ளை நடப்பதை திமுக தலைமையிலான அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. திமுகவினருக்கு இதில் மிகப்பெரிய பங்கு இருப்பதாகத்தான் பொதுமக்கள் கருதுகின்றனர். இதுபோன்று தமிழக மக்களின் அவல நிலையை பயன்படுத்தி திமுகவினர் ஆதாயம் தேடுவது மிகவும் கொடுமையானது. புயல் மழையால் மக்களை காப்பாற்றவேண்டிய நேரத்தில் அவர்களிடமிருந்தே பகல் கொள்ளை நடப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு புயல் மழை எச்சரிக்கை வந்தவுடன் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் உள்ள பால் குளிரூட்டும் மையங்களில் தமிழகத்திற்கு தேவையான அளவுக்கு ஆவின் பால் இருப்பு வைத்து அதனை தற்போது மக்களுக்கு தட்டுபாடில்லாமல் கிடைக்க வழிவகை செய்திருக்கலாம். இதனை செய்யாமல் தற்போது இருமடங்கு விலையில் ஆவின் பால் விற்பனை நடப்பதை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் அகற்றப்படாமல், மின்சாரம் கொடுக்காமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். வயது முதிர்ந்தவர்கள், சிறியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசு செயல்படுகிறதா? என்பதே தற்போது சந்தேகமாக இருக்கிறது. மேலும், சில இடங்களில் மக்களை கூப்பிட்டு வந்து ஒரு பள்ளியில் தங்கவைத்து விட்டு உணவு கூட அளிக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்றும், தங்கள் வீடுகளில் உள்ள மழை நீரை இதுவரை அகற்றவில்லை என்ற விரக்தியால் பல்வேறு இடங்களில் மக்கள் சாலையில் அமர்ந்து போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுகின்ற அப்பாவி மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்காமல் அவர்களை காவல்துறையினரை வைத்து விரட்டி அடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் அளிக்கப்பட்டன. குடிநீர் தேவைப்படும் பகுதிகளில் லாரிகளில் குடிநீர் எடுத்து சென்று விநியோகம் செய்யப்பட்டது. உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளில் இருந்து வெளியே வர இயலாத பெண்களுக்கு நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.
எனவே, திமுக தலைமையிலான அரசு இனிமேலாவது தங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வெள்ள நீரை ராட்சத மின் மோட்டார்களை வைத்து போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற வேண்டும். பிரசவத்திற்காக மருத்துவ உதவி தேவைப்படும் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனே வழங்கிடவேண்டும்.மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர் உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறி நாளை முற்பகலில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் சென்னை முழுவதும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய்விட்டது.
இந்நிலையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நாளை 05-12-2023 அன்று மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இயலாத சூழ்நிலை இருப்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில், கழக தொண்டர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, யாரும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாளைய தினம் கழகத்தொண்டர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்ட அனைவரும் அவரவர் இருக்கும் இடங்களிலேயே அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த கழக செயல் வீரர் T.M.A.முஜிபுதீன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் T.M.A.முஜிபுதீன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் 100-வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றி, அதனைக் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைத்துறையில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜானகி அம்மையார் அவர்கள் புரட்சித்தலைவரோடும் ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியபோது, ஜானகி அம்மையார் அவர்கள் தனது வருமானத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் வாங்கிய வீட்டை, புரட்சித்தலைவருக்கு கொடுத்ததையும், இந்த இடத்தில்தான், தற்போது, நம் கட்சியின் தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதையும், இந்நேரத்தில் பெருமையுடன் நினைத்து பார்க்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்கள் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானகி அம்மையார் அவர்கள், அதன்பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும் கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர். கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டும், எதிர்க்கட்சியினருக்கு தமிழகத்தில் இடம் கொடுத்துவிட்டால், அது தமிழக மக்களை பெரிதும் பாதித்துவிடும் என்ற எண்ணத்திலும் புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு பல அணிகளாக பிரிந்து இருந்த நம் கட்சியினரை ஒன்றிணைத்து வலிமையான ஒரு பேரியக்கமாக கொண்டு வந்ததையும், அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளையும் இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறேன். இந்த காலகட்டங்களில், ஜானகி அம்மையார் அவர்களோடு பழகிய அந்த இனிமையான நாட்களை நினைத்து பெருமையடைகிறேன்.
புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், புரட்சித்தலைவியின் வழிவந்த அன்புத் தொண்டர்கள் சார்பாகவும், அம்மையார் வி.என். ஜானகி அவர்களின் 100-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில், அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டுமென, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உத்திரகண்ட் மாநில சுரங்க பாதையில் கடந்த 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களை மீட்டெடுக்க அயராது, கடினமாக உழைத்த மீட்புக்குழுவினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசத்தில் உள்ள ஒவ்வொருவரின் பிரார்த்தனையின் விளைவாக இத்தகைய சரித்தர சாதனை நிறைவேறியதை எண்ணி நாம் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறோம். இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டிய கடவுளுக்கு நன்றி.
தன்னம்பிக்கையுடனும், மிகுந்த மனஉறுதியுடனும் இருந்து, கடந்த 17 நாட்களாக சந்தித்து வந்த மரணப் போராட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தினர்களோடு சந்தோஷமாகவும், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை அமைச்சரும், கழக முன்னாள் மாநில விவசாயப்பிரிவு செயலாளருமான வடிவேல் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் வடிவேல் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
விழுப்புரம் மாவட்டம் முன்னாள் நகர கழக செயலாளர் திரு. நூர் முகமது அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.நூர் முகமது அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்🪔
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அம்மையார் பாத்திமா பீவி அவர்கள் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகவும், தமிழகத்தின் முதல் பெண் ஆளுநராகவும் தன்னலமற்று சேவையாற்றியது பெண் சமுதாயத்திற்கே மிகவும் பெருமை சேர்த்தது.
அம்மையார் பாத்திமா பீவி அவர்கள் கேரளாவில் 1950-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கி, நீதித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மேலும், 1989-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் தனது பணிகளை சிறப்புடன் ஆற்றியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோதும், அம்மா அவர்களுடன் நல்ல நட்புடன் இருந்தவர். அம்மா அவர்களும் அம்மையார் பாத்திமா பீவி மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டு இருந்தார்கள். தமிழகத்திற்கு அம்மா அவர்கள் கொண்டு வந்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு அம்மையார் பாத்திமா பீவி அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.
அம்மையார் பாத்திமா பீவி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மேல ஜைன தெருவை சேர்ந்த கழக தொண்டர் திரு. ஜி.ஜி.ரகு என்கிற கருணாகரன் அவர்களின் தந்தை ஜி.கோவிந்தராஜ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.ஜி.ஜி.ரகு அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. ஸ்ரீ முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்த திருத்தலம். இங்கு ஒவ்வொரு நாளும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், தற்போது கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்றைக்கு நடப்பதையெல்லாம் பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது.
அதாவது திருச்செந்தூரில் கடவுளை தரிசிக்க ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும், திருச்செந்தூர் கோயிலில் அதிகாலையில் மேற்கொள்ளப்படும் விஸ்வரூப தரிசன கட்டணம் இது நாள் வரை 100 ரூபாயாக ஆக இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சுவாமி அபிஷேக தரிசனத்திற்கு முந்தைய கட்டணம் 500 ரூபாயாக இருந்தது. அதனை தற்போது 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமையிலான அரசு அறிவித்துள்ளதால், சாமானியர்கள் கடவுளை தரிசனம் செய்ய வழியின்றி மிகவும் வேதனையில் இருக்கின்றனர். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் வாக்களித்த மக்களிடமிருந்தே பல்வேறு வழிகளில் பணத்தை வசூலிப்பதை ஒவ்வொருநாளும் கண்கூடாக பார்க்கமுடிகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவதாக சொல்லி மக்களிடம் வழிப்பறி செய்வது, அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 5 ரூபாய், 10 ரூபாய் என வசூலிப்பது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை அடிப்பது, ஏழை, எளியவர்கள் தங்கள் வயிற்று பிழைப்புக்காக சாலை ஓரத்தில் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்பவர்களிடம் மாமூல் வசூலிப்பது என்று பல்வேறு வழிகளில் மக்களிடமிருந்து சுரண்டபடுவதை ஒவ்வொருநாளும் பத்திரிகை மூலமாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அதாவது ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு கடைசியில மனுசன கடிச்ச கதையாக இன்றைக்கு திருச்செந்தூர் போன்ற பிரசித்தி பெற்ற கோயிலிலேயே மக்களிடமிருந்து அநியாயமாக வசூல் வேட்டை நடத்துவது வேதனையின் உச்சமாக இருக்கிறது. பொதுவாக கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு 10, 20, 50 ரூபாய் என அதற்குரிய கட்டண ரசீதை பெற்று மக்கள் தரிசனம் செய்வதை பார்த்து இருக்கிறோம். அவ்வாறு செலுத்தப்படும் கட்டணம் அந்தந்த கோவில் பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இன்றோ ஒவ்வொருவரிடமும் 1,000 ரூபாய் வசூலித்து அதனை ஒருவர் மஞ்சப்பையில் போட்டுக்கொள்கிறார். இந்த மஞ்சப்பை யாரிடம் போய் சேரும் என்று தெரியவில்லை. இவ்வாறு மக்களிடமிருந்து யார் வசூலிக்க சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் அரசின் கவனத்திற்கு செல்கிறதா? இதை கட்டுப்படுத்த ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது என்பது புரியவில்லை? இன்றைய திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும் என்ற அவல நிலை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது தான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம். திமுக தலைமையிலான அரசின் மீதமிருக்கும் ஆட்சிக் காலத்தில் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் அனுபவிக்க போகிறார்களோ? என்று தெரியவில்லை. எல்லாம் அந்த மஞ்சப்பைக்கே வெளிச்சம்! -
V K Sasikala
@AmmavinVazhi
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை திமுக தலைமையிலான அரசு கைது செய்வதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதும் ஒரு மனிதாபிமானமற்ற செயல். விவசாய பெருங்குடி மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக தலைமையிலான விளம்பர அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரிவாக்கத்திற்காக மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக தலைமையிலான அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதை கண்டித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த 126 நாட்களாக அறவழியிலும், ஜனநாயக முறையிலும் போராடி வந்த விவசாயிகளில் 20 நபர்களை கைது செய்திருப்பது அநியாயமான செயல். அதிலும் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் கொடுமையானது. மேலும் அப்பகுதியில் வீடு, வீடாக சென்று போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினர் தேடி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் இன்றைக்கு கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள், போதை பொருட்கள் கடத்துபவர்கள், சாமானிய மக்களிடமிருந்து நிலத்தை அபகரிப்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற அனைத்து விதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுபவர்களை கண்டுகொள்வதில்லை. மேலும், குற்றச்செயல்களை தடுக்கநினைக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத ஒரு அவல நிலை இருக்கிறது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க முடியாமலும், அதில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க துணிவில்லாமலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத திமுக தலைமையிலான அரசு, தங்களது விளை நிலங்கள் பறிபோவதை தடுப்பதற்காக, ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி விவசாயிகள் மீது மனசாட்சியற்ற வகையில், தவறான நடவடிக்கைகளை எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? இதற்காகவா தமிழக மக்கள் வாக்களித்தனர்.
திமுக தலைமையிலான அரசிடமிருந்து தங்களது விளைநிலங்களை பாதுகாக்க போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மேலும், கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழகத்தில் தலைசிறந்த அரசியல் தலைவராகவும், தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவருமான பெரியவர் சங்கரய்யா அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது.
புரட்சித்தலைவர் அவர்கள் தனது இயக்கத்தை தோற்றுவித்த பின்னர், 1973ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சங்கரய்யா அவர்கள் போட்டியிட இருந்த நிலையில், புரட்சித்தலைவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று, அன்றைக்கு தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற முதல் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் பெரியவர் சங்கரய்யா அவர்கள் என்பதை இந்நேரத்தில் எண்ணிப்பார்த்து மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
அதனைத்தொடர்ந்து, புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்திலும் நல்ல நட்பு பாராட்டியதோடு, இயக்கத்தின் வெற்றிக்காக, பல நேரங்களில் தோழமை உணர்வுடன் ஆதரவு அளித்ததையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்த்து பெருமையடைகிறேன்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான தோழர் சங்கரய்யா அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பசும்பொன் திருமகனார் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் மைத்துனர் மறைந்த மு.தங்கவேல் தேவர் அவர்களின் மகனும், பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவாலய அறங்காவலர் திருமதி.காந்திமீனாள் அவர்களின் சகோதரருமான த. சத்தியமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் சத்தியமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரிக்கு டெண்டர் விண்ணப்பிக்க வந்தவர்களை, திமுகவினர் தாக்கியதோடு, அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தாக்கியும், அரசு அலுவலகத்தை அடித்து நொறுக்கியும், அராஜகத்தில் ஈடுபட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை திமுகவினர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை செய்து நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளுபடி செய்துவிடுகிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் அமைதி என்பதே இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம், கல்பாடி வடக்கு, எளம்பலூர், செங்குணம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம் மற்றும் பாடாலூர் கிழக்கு ஆகிய கிராமங்கள் உட்பட 31 இடங்களில் உள்ள குவாரிகளில் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் இதில் கலந்துகொள்ள விரும்பியவர்கள் விண்ணப்பத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மூடி முத்திரையிட்டு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டு வந்துள்ளனர்.
இதனை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சரின் உதவியாளரும் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற திமுக உறுப்பினரின் உதவியாளரும் 500க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வந்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரிக்கு டெண்டர் விண்ணப்பிக்க வந்தவர்களை வழிமறித்து, தடுத்து நிறுத்தி, அவர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும், அரசு அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்தவர்கள் என அனைவரையும் தாக்கியதோடு, அலுவலகத்தை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்திருப்பது, தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
மேலும், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட டிஎஸ்பி., திரு.பழனிச்சாமி, ஆய்வாளர்கள் திரு.சுப்பையன், திருமதி.கலா, உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் காவலர் திருமதி. லட்சுமி, கனிம வளத்துறை உதவி புவியியலாளர் திரு.இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் திரு.குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதன்பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது.
மேலும், திமுகவினரின் இந்த அராஜக செயல்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பத்திரிக்கை செய்தியாளர்கள் மற்றும் காவல்துறையினரையும் தாக்கி அவர்களிடமிருந்து செல்போன்களையும் பறித்து, அதனை கீழே தூக்கி வீசி உடைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் கல் குவாரிக்கு அனுமதி கேட்டு தகுதியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாம். அனைவருக்கும் உரிமை உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகள் ஒன்றும் திமுகவினருக்கு சொந்தமானது இல்லையே? தமிழகத்தில் இன்றைக்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் போன்ற மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை மீறினால், மற்றவர்களும் இவர்களை பார்த்து கெட்டு போகிறார்கள். அதன்பிறகு சட்டம் ஒழுங்கை எவ்வாறு காப்பாற்ற முடியும் ? இதனிடையே இன்று நடைபெற இருந்த 31 கல்குவாரிகளுக்கான ஏலத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ரத்து செய்திருப்பதாக தெரியவருகிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் திமுகவினர் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், இன்னும் சிறிது நாட்களில் இதே இடங்களில் கல் குவாரிக்கான ஏலத்தினை மீண்டும் திமுகவினரே எடுப்பார்கள். இதனை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.
இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரையில் மூன்று கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவ முகாம் நடத்தாத மருத்துவர்களையும், மருத்துவ ஆவணங்களில் திருத்தம் செய்த சுகாதார அலுவலரையும் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தும், இதில் நடவடிக்கை எடுக்காத டீன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருந்தார். திமுக தலைமையிலான அரசோ தனது வழக்கமான பாணியில் ஒரு குழுவை நியமித்து கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு யாருமே காரணம் இல்லை என்று முடித்துவிட்டது.
திமுக தலைமையிலான இந்த 30 மாத கால ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆட்சியர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை யாராலும், தவறு இழைப்பவர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கமுடியாத ஒரு அவல நிலை தான் இன்றைக்கு இருக்கிறது. மேலும், திமுக தலைமையிலான அரசு இதுபோன்று கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதன் மூலம் யாரை காப்பாற்ற நினைக்கிறது என்பது தமிழக மக்களுக்கே நன்கு விளங்கும்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
எனவே, திமுக தலைமையிலான அரசு பெரம்பலூர் கல் குவாரி வழக்கிலும் ஏதாவது ஒரு குழுவை நியமித்து திமுகவினரை காப்பாற்றலாம் என்று எண்ணாமல், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அராஜக செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று முடிந்த மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி 29 தங்கம் உட்பட 111 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை தக்க வைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
நடைபெற்ற 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி இதுவரை இல்லாத வகையில் வரலாற்று சாதனையாக 100 பதக்கங்களையும் கடந்து தற்போது 111 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ள நம் இந்திய வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் அனைவரும் தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், கடினமான உழைப்பாலும், பல்வேறு அரிய சாதனைகளை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் மென்மேலும் பல சாதனைகளை புரிந்து உயர்ந்த நிலையை அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று முடிந்த 4வது ஆசிய விளையாட்டு போட்டியில் 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் உட்பட 111 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழக ஆளுநரை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இந்திய ஜனாதிபதி அவர்களும் நாளை இங்கு வர உள்ள நிலையில் ஏன் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்படாமல் இருக்கிறது என்பது மிகவும் விந்தையாக இருக்கிறது. இதன் மூலம் தமிழக உளவுத்துறையும் முற்றிலும் தோல்வியடைந்து இருப்பதாகதான் தெரியவருகிறது. இது காவல்துறையை கையில் வைத்து இருக்கும் தமிழக முதல்வருக்கே வெளிச்சம். இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆளுநருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இது போன்ற சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுவத்துவதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொருநாளும் சட்டம் ஒழுங்கு காற்றில் பறப்பதை தமிழக மக்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி வினோத் கடந்த ஆண்டு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டவர் என தெரியவருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாகத்தான் ஜாமினில் வெளியே வந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ரவுடி, நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு ரவுடிக்கும், நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று புரியவில்லை. இந்த ரவுடியை பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா? என்ற கேள்வியும் தற்போது அனைவருக்கும் எழுகிறது. நீட் தேர்வு ஏன் ரத்து செய்யப்படவில்லை? என்று நியாயமாக கேள்வி கேட்கப்படவேண்டியவர்கள் திமுகவினர்தான். திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் துரோகத்தை இழைத்து விட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் அனைவருமே வன்மத்தை வளர்க்கும் விதமாக பொது வெளிகளில் பேசி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல்பாடுகளே சட்டம் ஒழுங்கு சீர்குலைய முக்கிய காரணமாக அமைந்துவிடுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் இது போன்று ஏதாவது நடந்ததுண்டா? அம்மா அவர்கள் தலைமையிலான ஆட்சிக்கும், திமுக தலைமையிலான ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன ? என்பதை தமிழக மக்கள் இன்றைக்கு நன்கு புரிந்து கொண்டுவிட்டனர். மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர் யார்? தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்திருந்தவர் யார்? என்பது தமிழகத்தில் கடைக்கோடியில் இருப்பவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இன்றைக்கு திமுக தலைமையிலான அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் அமைந்துவிட்டது. திமுகவினர் போட்ட வேஷம் நாளுக்கு நாள் கலைந்து கொண்டே வருவதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனவே, திமுக தலைமையிலான அரசு வாக்களித்த மக்கள் தமிழகத்தில் நிம்மதியாக வாழ்ந்திடும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்டும் காணாமல் இருப்பதை விட்டுவிட்டு, அவற்றை இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து, சட்டம் ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி தற்போது வரை 6 தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
ஆடவருக்கான கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா, உயரம் தாண்டுதல் (T 63) பிரிவில் இந்திய வீரர் சைலேஷ் குமார், உயரம் தாண்டுதலில் (T 47) பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார், மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெக்கார, 5000 மீ தடகளப் போட்டியில் இந்திய வீரர் அன்குர் தர்மா, உயரம் தாண்டுதலில் (T 64) பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் முதன் முதலில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்ததற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கி அவரை ஊக்கப்படுத்தியதை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.
சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 17 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் நான்காவது இடத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகம் மூலம் உலகம் முழுக்க புகைப்படக்கலைஞர்கள் எடுத்த சிறந்த வனஉயிர் புகைப்படங்களை தேர்வு செய்வதற்கான போட்டியில் பங்குபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் திரு.ஸ்ரீராம் முரளி அவர்களுக்கு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் காடுகளில் எடுக்கப்பட்ட மின்மினி பூச்சிகளின் புகைப்படத்திற்கு "முதுகெலும்பற்ற உயிரினங்கள்" பிரிவில் விருது வழங்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் இருக்கும் மனம்பள்ளி காட்டில் மின்மினி பூச்சிகள் ஒருசேர ஒன்றாக ஒளி எழுப்பும் சுவாரசிய சம்பவத்தை படம் பிடித்து விருது பெற்ற புகைப்பட கலைஞர் திரு.ஸ்ரீராம் முரளி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த வனஉயிர் புகைப்படங்களுக்கான போட்டியில் உலகம் முழுவதும் 95 நாடுகளில் இருந்து வந்த 49,957 போட்டியாளர்களில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட தமிழக புகைப்படக்கலைஞர் திரு.ஸ்ரீராம் முரளி அவர்கள் விருதினை பெற்று நம் மண்ணின் பெருமையை உலக நாடுகள் அறிந்திட செய்தது நம் அனைவருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது. மேலும், மின்மினி பூச்சிகள் குறித்து தொடர் ஆய்வுகளை செய்து வருகின்ற வைட் என்ற தன்னார்வு அமைப்பிற்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்🙏
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பங்காரு அடிகளாரின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத வகையில் ஆன்மீக உலகிற்கே ஒரு பேரிழப்பாகும்.
ஆன்மீக குருவாக திகழ்ந்த பங்காரு அடிகளார் அவர்களின் தன்னலமற்ற ஆன்மீக சேவைகளை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்களும் கருவறைக்குள் சென்று பூஜை செய்திடும் வகையில் சிறந்த ஆன்மீக சீர்திருத்தங்களை கொண்டு வந்த பெருமைக்குரியவர்.
ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வியை அளித்த, தங்களை நாடி வந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் எண்ணற்ற உதவிகளை வழங்கிய பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவருடைய உறவினர்களுக்கும், அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு.ராஜேந்திரனின் மகள் நித்யா ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்னணு இயந்திரவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று, தற்போது தேசிய அளவிலான ஆன்லைன் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தற்போது தனியார் நிறுவனத்தில் பணிக்கான ஆணையை பெற்றுள்ள மாணவி நித்யா தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து சீரோடும்,சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கபாளையம் ஊராட்சியில் தனியார் பட்டாசு ஆலையில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உள்ளிட்ட 13 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதேபோன்று சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த மற்றொரு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் மூலப்பொருள் கலக்கும் அறையில் வெடிவிபத்து ஏற்பட்டு வேம்பு என்ற தொழிலாளியும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த இருவேறு வெடி விபத்துகளிலும் உயிரிழந்த மகாதேவி, பஞ்சவர்ணம், தமிழ்செல்வி, முத்துலட்சுமி, முனீசுவரி, தங்கமலை, அனிதா, பாக்கியலட்சுமி, குருவம்மாள், லட்சுமி, இந்திரா, செல்லம்மாள், பாலமுருகன் மற்றும் வேம்பு ஆகிய 14 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்துகளில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
திமுக தலைமையிலான அரசு பெறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் பாட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், குடோன்களிலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டு ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்ச்சியாக நடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை இந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 100க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்களின் மீது எந்த அளவுக்கு இந்த ஆட்சியாளர்கள் அக்கறையோடு இருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும்.
பட்டாசு தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், குடோன்கள் மற்றும் பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் எல்லாம் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து, தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் வரும் காலங்களில் ஏற்படுவதை தடுக்க தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசை கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரத்தின் கழிவுநீரானது அருகில் இருக்கும் வைரிவயல் கிராமத்தில் உள்ள வைரி கண்மாயில் கலப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
கழிவுநீர் கலப்பதால் வைரிவயல் கிராமத்தில் உள்ள குளம் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதால் அந்த நீரை எதற்குமே பயன்படுத்தமுடியாத அவல நிலை நிலவுகிறது. இங்குள்ள கால்நடைகள் இந்த தண்ணீரை பருகினால் இறந்து விடுவதாக சொல்லப்படுகிறது. விவசாயம் செய்வதற்கும் இந்த குளத்தின் நீரை பயன்படுத்த முடியவில்லை என்றும், அவ்வாறு பயன்படுத்தினால் விவசாய நிலங்கள் வீணாகி விடுவதாக இப்பகுதி விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப் படுகின்றனர். மேலும் இந்த குளத்தில் இருக்கும் மாசடைந்த நீரால் அருகில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீரும் தற்போது முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளதாகவும், இதன் காரணமாக நிலத்தடி குழாய் மூலம் எடுக்கப்படும் தண்ணீரும் எதற்குமே பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக சொல்லி இங்குள்ள மக்கள் மிகவும் வேதனைப் படுகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், அரசு அதிகாரிகள் விவசாயத்தை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க சொன்னதன் அடிப்படையில் இப்பகுதி விவசாயிகள் விவசாயமும் செய்ய முடியாமல், தற்போது அன்றாடம் சாப்பாட்டிற்கு ரேஷன் அரிசியை மட்டும் நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொண்டு வருவதாக சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்படுவதை விட்டுவிட்டு கொஞ்சமாவது மனசாட்சியோடு, வாக்களித்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள். வைரிவயல் கிராம மக்களின் நியாயமான கோரிக்கையான அறந்தாங்கி நகரத்தில் இருந்து வரும் கழிவு நீர் வைரி கண்மாயில் கலக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். மேலும், வைரி கண்மாயை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன் -
V K Sasikala
@AmmavinVazhi
ராஜ் தொலைக்காட்சி குழுமம் முப்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அறிவு சார்ந்த பட்டிமன்றங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நடுநிலையான செய்திகள், முத்தான திரைப்படங்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சிறப்புடன் பணியாற்றி, ஊடகத்துறையில் தனது முத்திரையை பதித்து வரும் ராஜ் தொலைக்காட்சி குழுமம் தொடர்ந்து சிறப்புடன் செயலாற்றிட எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
ராஜ் தொலைக்காட்சி குழுமம், இனி வரும் காலங்களில் மென்மேலும் வளர்ச்சியடையவும், உயரிய நிலையை அடையவும் தங்கள் நிறுவனத்தினர்களுக்கும், பணியாளர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கிருஷ்ணகிரி மாவட்டம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் K.மாதேவா அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கழக நிர்வாகி K.மாதேவா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் திரு.மு.குணசேகரன் அவர்களின் தந்தை முனியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.மு.குணசேகரன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் உள்ள நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 நபர்கள் உயிரிழந்து இருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
திமுக தலைமையிலான அரசு பெறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் பாட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், குடோன்களிலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டு ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ச்சியாக நடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க ஏன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கிறது என்பது தெரியவில்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக தலைமையிலான அரசு இந்த பாட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் போவதுபற்றி எந்த கவலையும் படுவதில்லை. மாறாக, உயிரிழப்பு ஏற்பட்டவுடன் நிவாரணம் அறிவித்து விட்டால் மட்டும் போதும் என்று திமுக தலைமையிலான அரசு நினைக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை இந்த 28 மாத ஆட்சிக்காலத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 26 வெடி விபத்துக்களுக்கு மேல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 87 நபர்களுக்கு மேல் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்களின் மீது எந்த அளவுக்கு இந்த ஆட்சியாளர்கள் அக்கறையோடு இருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும்.
பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்தினர் தங்களை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்வதையும், அவர்களின் உயிர் முக்கியம் என்று நினைத்து ஒவ்வொரு ஆலை அதிபர்களும் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறாமல் இருப்பதும் ஆலை அதிபர்களின் கையில் தான் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக தலைமையிலான அரசுக்கு உள்ளது. ஆனால் திமுக தலைமையிலான அரசுக்கு மக்களை எப்படி ஏமாற்றுவது, தேர்தலில் வாக்குகளை எப்படி பெறுவது என்பது மட்டும்தான் ஒரே பிரதான குறிக்கோளாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், குடோன்கள் மற்றும் பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் எல்லாம் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து, தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசை கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 14 நபர்கள் உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அனைவரும் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
பட்டாசு தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களும் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மேலும், தங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், குடோன்கள் மற்றும் பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் எல்லாம் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து, தகுந்த விழிப்புணர்வை மேற்கொண்டு, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 20 தங்கம் உட்பட 83 பதக்கங்களை வென்று இருந்த நிலையில் தற்போது 25 தங்கப்பதக்கங்கள் உட்பட 100 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி இதுவரை அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்று இருந்த நிலையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ள நம் இந்திய வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே 20 தங்கப்பதக்கங்கள் வென்ற நிலையில், அதனைத்தொடர்ந்து ஆடவர் அணிக்கான வில்வித்தை காம்பௌண்ட் பிரிவு, ஆடவர் அணிக்கான ஆக்கி போட்டி, மகளிருக்கான தனிநபர் வில்வித்தை காம்பௌண்ட் பிரிவில் ஜோதி சுரேகா அவர்களும், ஆடவருக்கான தனிநபர் வில்வித்தை காம்பௌண்ட் பிரிவில் ஓஜாஸ் பிரவீன் அவர்களும், மகளிருக்கான கபடி போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் உட்பட 100 பதக்கங்களை வென்று உலக அரங்கில் புதிய வரலாற்று சாதனையை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த சென்னிமலை ஒன்றியம், சிறுக்களஞ்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மாவட்ட கழக நெசவாளர் அணித்தலைவருமான திரு.C.மோகனசுந்தரம் அவர்களின் தந்தை K.சென்னிமலை கவுண்டர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.C.மோகனசுந்தரம் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சென்னையில் டிபிஐ வளாகத்தில், கடந்த சில நாட்களாக ஜனநாயக முறையில், அறவழியை கடைபிடித்து மிகவும் அமைதியாக போராடிக்கொண்டிருந்த ஆசிரிய பெருமக்களை திமுக தலைமையிலான அரசு திடீரென்று மனிதாபிமானமற்ற வகையில் அனைவரையும் அராஜகமாக கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
பணி நியமனம் மற்றும் மறுநியமன தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென இடைநிலை ஆசிரியர்களும் கடந்த 9 நாட்களாக அமைதியான முறையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். அதேபோன்று, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் 11 நாட்களாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுகவினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றுவதாக கொடுத்த வாக்குறுதிகள்தான். ஆனால், இன்றைக்கு திமுக தலைமையிலான அரசு ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கிறது. மாறாக, தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராடிய ஆசிரிய பெருமக்களை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு வலுக்கட்டாயமாக கைது செய்து இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஆசிரியர் பணி அறப்பணி என்று ஆசிரியர் பணியினை ஊதியம் பெறும் வேலையாக மட்டும் கருதாமல் சேவையாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் கல்வியை கற்பிப்பதோடு மட்டுமில்லாமல், நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனைகளையும் மாணவ சமுதாயத்திற்கு கற்பிக்கிறார்கள். நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ சமுதாயத்தினை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆசிரியர்கள் ஆற்றிவருகின்றனர். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சேவை ஆற்றுபவர்கள் ஆசிரிய பெருமக்கள்தான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். இத்தகைய சிறப்புக்குரிய ஆசிரியபெருமக்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே, கைது செய்யப்பட்ட ஆசிரிய பெருமக்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும். ஆசிரியர்களை திமுகவினர் இனியும் ஏமாற்றாமல் அவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையில் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உடனே நிறைவேற்றித்தர வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 13 தங்கம் உள்பட 56 பதக்கங்களை வென்று இருந்த நிலையில் தற்போது 20 தங்கப்பதக்கங்கள் உட்பட 83 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்ட்டாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 70 பதக்கங்களை வென்று இருந்த நிலையில், தற்போது 83 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. மேலும், தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலேயே இந்திய அணி 100 பதக்கங்களுக்கு மேல் வென்று உலக அரங்கில் நம் இந்திய வீராங்கனைகளும், வீரர்களும் சாதனை படைக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே 13 தங்கப்பதக்கங்கள் வென்ற நிலையில், அதனைத்தொடர்ந்து மகளிருக்கான 5000மீ ஓட்டப்பந்தயத்தில் பருல் சௌத்ரிஅவர்களுக்கும், மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி அவர்களுக்கும், வில் வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா மற்றும் ஓஜாஸ் பிரவீன் ஆகியோருக்கும், ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அவர்களும், ஆடவர் 4x400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் அடங்கிய இந்திய அணியும், மகளிர் வில் வித்தையில் ஜோதி சுரேகா, அதிதி மற்றும் பர்னீத் கவுர் அடங்கிய இந்திய அணியும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா பள்ளிகல் மற்றும் ஹரிந்தர்பால் சிங் ஆகிய இருவரும் அடங்கிய இந்திய அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று மகளிர் 4x400 மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதற்கும், கலப்பு 4x400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் மற்றும் ராஜேஷ் ரமேஷ் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதற்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மகளிர் 400 மீ தடை தாண்டுதல் ஓட்டப்பந்தய தனிநபர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதற்கும், ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் அவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் உள்ளிட்ட 83 பதக்கங்களை வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் வாண வெடி தயாரிக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 நபர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் கவலையை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதனை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர மேற்கொண்டு இருந்தால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு இத்தனை உயிரிழப்புகள் இன்றைக்கு ஏற்படாமல் தடுத்து இருக்க முடியும். மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் செயல்படும் அனைத்து பாட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணிக்கம், மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகியோரின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கன்னியாகுமரி மாவட்டம் தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி உட்பட மூன்று நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
உயிர் நீத்த சித்ரா, ஆதிரா மற்றும் அஸ்வின் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழக்குடியில் உள்ள மீனமங்கலம் பகுதியில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து வேலப்பன் என்ற முதியவர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த முதியவர் வேலப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் குருந்தன் கோடு பகுதியில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் தாழக்குடியில் உள்ள மீனமங்கலம் பகுதியில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து வேலப்பன் என்ற முதியவர் உயிரிழந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும், மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது. எனவே, உயிரிழந்த வேலப்பன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும், மழையினால் முறிந்து விழுந்துள்ள மரங்களை உடனே அப்புறப் படுத்திடவேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, தொடர் மழை காரணமாக தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிப்படைந்துள்ள மீனவ குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து செய்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கடந்த ஐந்து நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில், தொடர் கன மழை பெய்துவரும் நிலையில் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விடியவிடிய கனமழை பெய்துள்ள நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அபாய அளவை எட்டிவிட்டதாக தெரியவருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களையும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களின் அடிப்படை தேவையான குடிநீர், உணவு தங்குமிடம் போன்றவற்றை உடனே ஏற்பாடு செய்து தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு தாழ்வான பகுதியில் இருப்பவர்களையும், மழையால் பாதிப்புக்குள்ளானவர்களையும் உடனே பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிப்படைந்துள்ள மீனவ சமுதாயத்தினருக்கும் தேவையான நிவாரண உதவிகளை உடனே வழங்கிட வேண்டும். மேலும், அனுபவம் நிறைந்த அரசு அதிகாரி தலைமையில் ஒரு குழுவை நியமித்து அவர்களை உடனே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரில் அனுப்பி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து, மழையால் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மக்களை காப்பாற்றிட வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 8 தங்கம் உள்பட 32 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி இருந்த நிலையில் தற்போது 13 தங்கப்பதக்கங்கள் உட்பட 56 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய போட்டிகளில் ஏற்கனவே 8 தங்கப்பதக்கங்கள் வென்ற நிலையில், அதனைத்தொடர்ந்து டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு, ஆடவர் ஸ்குவாஷ் போட்டி, ஆடவர் துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவு, ஆடவருக்கான 3,000 மீ ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயப் போட்டி, ஆடவர் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இதில் 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபல் அவர்கள் பந்தய தூரத்தை 8:19.53 நிமிடங்களில் ஓடி ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் திருச்சி முன்னாள் மேயர் திருமதி.சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள் அடங்கிய இந்திய அணி துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், ஏற்கனவே 12 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள நிலையில் அதனைத்தொடர்ந்து,
10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் கலப்பு பிரிவு, ஆடவர் 10,000 மீ ஓட்டப்பந்தயம், மகளிர் கோல்ப், மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவு, மகளிருக்கான 1,500 மீ ஓட்டப்பந்தயம், ஆடவருக்கான 1,500 மீ ஓட்டப்பந்தயம், ஆடவர் நீளம் தாண்டுதல், மகளிருக்கான 100 மீ தடை தாண்டும் ஓட்டப்பந்தயம் மற்றும் ஆடவர் பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில், மகளிருக்கான தனிநபர் கோல்ப் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், ஆசிய போட்டிகளில் கோல்ப் விளையாட்டில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. மேலும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய தடகள வீரர் ஸ்ரீ சங்கர் முரளிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, ஏற்கனவே 12 வெண்கலப்பதக்கம் வென்றுள்ள நிலையில் அதனைத்தொடர்ந்து, மகளிர் குண்டு எறிதல், ஆடவர் 10,000 மீ ஓட்டப்பந்தயம், ஆடவர் துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவு, மகளிர் 50 கிலோ எடை பிரிவுக்கான குத்து சண்டை போட்டி, ஆடவர் 1,500 மீ ஓட்டப்பந்தயம், மகளிர் ஹெப்தாத்லான் போட்டி, மகளிருக்கான வட்டு எறிதல், மகளிருக்கான 3,000 மீ தொடர் ஸ்கேட்டிங், ஆடவருக்கான 3,000 மீ தொடர் ஸ்கேட்டிங் மற்றும் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆகிய போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கிரண் பலியான் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் 72 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் என்ற சாதனையை படைத்துள்ள கிரண் பலியானுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நம் வீராங்கனைகளும், வீரர்களும் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது வரை 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என இதுவரை மொத்தம் 56 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4வது இடத்தை தக்க வைத்து கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நமது தேசத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கடின உழைப்பாலும், தங்கள் திறமைகளாலும் சாதனை படைத்து கொண்டிருக்கும் நம் வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நீலகிரி மாவட்டம் மரப்பாலம் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு ஒரு குழந்தை உட்பட 8 நபர்கள் பலியாகி இருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
தென்காசி மாவட்டம், கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 55 நபர்களுடன் உதகைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்து, குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் குறுகிய வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். இந்த விபத்தில் சிக்கியுள்ள அனைவரையும் விரைவில் மீட்டு எடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த தேவிகலா, நிதின் கண்ணா, முருகேசன், முப்பிடாதி, கவுசல்யா, இளங்கோ, ஜெயா மற்றும் தங்கம் ஆகிய எட்டு நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 5 தங்கம் உள்பட 22 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை பெற்று இருந்த நிலையில் தற்போது 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே 5 தங்கப்பதக்கங்கள் வென்ற நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் குழுப் பிரிவில் தங்கமும், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் பாலக் குலியா அவர்கள் தங்கமும், ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழுப் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும், ஏற்கனவே 7 வெள்ளிப்பதக்கமும், 10 வெண்கலப்பதக்கமும் வென்றுள்ள நிலையில் தற்போது வூசூ போட்டியில் 1 வெள்ளியும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 வெள்ளியும், டென்னிஸ் போட்டியில் 1 வெள்ளியும், குதிரையேற்றத்தில் தனிநபர் பிரிவில் 1 வெண்கலமும், ஸ்குவாஷ் போட்டியில் 1 வெண்கலமும் வென்று சாதனைப் படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அதிலும் குறிப்பாக வூசூ விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மணிப்பூரை சேர்ந்த இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான சூழ்நிலையிலும் மணிப்பூரின் நம்பிக்கை தேவதையாக ஆசிய போட்டியில் பங்கேற்று நூலிழையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.
மேலும், குதிரையேற்ற பந்தயத்தின் டிரஸ்ஏஜ் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் முதல் தனிநபர் பதக்கத்தை வென்ற பெருமையை இந்திய வீராங்கனை அனுஷ் அகர்வாலா பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நம் வீராங்கனைகளும், வீரர்களும் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது வரை 8 தங்கம் உள்பட 32 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பெற்று இந்தியா முன்னேறிக்கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நமது தேசத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கடின உழைப்பாலும், தங்கள் திறமைகளாலும் சாதனை படைத்து கொண்டிருக்கும் நம் வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்தியாவின் வேளாண் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது.
வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவர். அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு பங்களித்தவர். அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியவர்.
உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பாதுகாத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் முதல் உலக உணவு பரிசைப் பெற்ற பெருமைக்குரியவர். மேலும், வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ஆசியாவின் நோபல் விருதான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களில் ஏராளமான கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்று தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத் துறைக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். தனது சமூக நல நடவடிக்கைகளின் மூலம், தமிழக மக்களின் தேவையை பூஜ்ஜிய விலையில் பூர்த்தி செய்துள்ளார் என்று நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழாரம் சூட்டியதையும் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன் .
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது விஞ்ஞான ஆராய்ச்சிகளால் பயனடைந்த எண்ணற்ற விவசாய பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றம், மகளிர் 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல், மகளிர் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சாதனைப்படைத்துள்ள இந்திய வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சிப்த் சம்ரா கவுர் அவர்கள் 469.6 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனைப் படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. அதேபோன்று, குதிரையேற்ற பந்தயத்தின் டிரஸ்ஏஜ் பிரிவில் இந்திய அணி 41 வருடங்களுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், துடுப்பு படகு போட்டியில் 2 வெள்ளி, 3 வெண்கலமும், பாய்மரப்படகு போட்டியில் 1 வெள்ளி, 2 வெண்கலமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 12 பதக்கங்களை வென்றிருப்பது பெருமையளிக்கிறது.
அதேபோன்று, பாய்மர படகுப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலம் வென்று அசத்தியிருப்பது நம் அனைவருக்கும் பெருமையளிக்கிறது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நம் வீரர்களும் வீராங்கனைகளும் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது வரை 5 தங்கம் உள்பட 22 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை பெற்று இந்தியா முன்னேறிக்கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நமது தேசத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கடின உழைப்பாலும், தங்கள் திறமைகளாலும் சாதனை படைத்து கொண்டிருக்கும் நம் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழில் எளிய நடையில் நாளிதழுக்குரிய மொழிநடையை வடிவமைத்து, வரையறை செய்து, பாமரர்களும் நாட்டு நடப்புகளை எளிதாக அறிந்திடும் வகையில், உண்மை செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை திரு.சி.பா ஆதித்தனார் அவர்களின் 119வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம்.
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் எந்நாளும் போற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் ருத்ரான்க்ஷ் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் அடங்கிய குழு தங்கம் வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதில் முந்தைய உலக சாதனையை முறியடித்து, தற்போது 1893.7 புள்ளிகள் பெற்று இந்திய வீரர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளது மிகவும் பெருமையளிக்கிறது.
மேலும், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கிவைத்த நமது வீராங்கனைகள் ரமிதா ஜிண்டால், மெகுலி கோஷ், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய அணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அதேபோன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிப்பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெண்கலம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமருக்கு வெண்கலப் பதக்கமும், 25 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் அணிக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி வெள்ளிப் பதக்கமும், 8 பேர் கொண்ட இந்திய அணி மற்றொரு துடுப்புப் படகுப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், அதேபோன்று, 4 பேர் கொண்ட துடுப்புப் படகுப் போட்டியில் கலந்துகொண்ட இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கமும், மற்றொரு துடுப்புப் படகுப் போட்டி இரட்டையர் பிரிவில் பாபு லால் யாதவ் மற்றும் லேக் ராம் ஆகியோருக்கு வெண்கலப் பதக்கமும், துடுப்பு படகு போட்டி ஆடவர் நாற்கர ஸ்கல்ஸ் பிரிவில் மேலும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது வரை ஒரு தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பெற்று இந்தியா முன்னேறிக்கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், நடைபெறவுள்ள இதர போட்டிகளிலும் நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
வில்லிவாக்கம் தொகுதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக மூத்த நிர்வாகியுமான
திரு.ஜே சி டி பிரபாகரன் அவர்களின் மனைவி கிரேஸ் ஜெயந்தி ராணி அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார்
என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது மனைவியை இழந்து வாடும் திரு.ஜே சி டி பிரபாகரன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மகனும், தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 88வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிக்கை உலகில் முத்திரைப் பதித்தவர். மேலும், விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனைகள் படைத்தவர். விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய பணிகளையும், சேவைகளையும் போற்றிடுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
திருநெல்வேலியிலிருந்து மதுரை, திருச்சி வழியாக சென்னை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் புதிதாக இயக்கப்பட இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் இந்த ரயில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும் நின்று செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல் அருகாமை நகரங்களான சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட புகழ்பெற்ற நகரங்களுக்கும் போக்குவரத்து மைய புள்ளியாக கோவில்பட்டி உள்ளது.மேலும், தெற்கு ரயில்வேயில் மதுரை ரயில்வே கோட்டத்தில் மூன்றாவது இடத்தில் அதிகப்படியான வருவாயை ஈட்டி தரக்கூடிய ரயில் நிலையமாகவும் கோவில்பட்டி ரயில் நிலையம் விளங்குகிறது.
எனவே, இப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் ஒருமித்த வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திடும் வகையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்று வர உள்ள வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்திடுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி பதக்கப் பட்டியலில் இடம்பெற்று தனது கணக்கை துவங்கியிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் இளவேனில் வாலறிவன் மென்மேலும் பல்வேறு வெற்றிகளை பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அதேபோன்று, இங்கு நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவில் இந்திய அணி சார்பில் நிஸ்செல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தனது முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்றுள்ள நிஸ்செல் அவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளை பெறுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரும், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான திரு.A.Ve.முகமது ஷெரிப் அவர்களின் தாயார் கமருநிஷா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.A.Ve.முகமது ஷெரிப் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றும் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்🙏
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
சகோதரர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சிறப்பான அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னலமற்று சேவையாற்றுகின்ற பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் அளிக்கும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்படும் இந்நன்னாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க உதவும் வகையிலும், நாள்பட்ட வலி நிவாரணிகளை வழங்குவதிலும் பிசியோதெரபிஸ்டுகள் ஆற்றுகின்ற முக்கிய பங்கீனை அங்கீகரிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினம் அனுசரிக்கப்படுவதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கும் இயன்முறை மருத்துவத்தின் மூலம் பல்வேறு உடல் உபாதைகளால் தங்கள் வாழ்வையே தொலைத்து விட்ட நபர்களுக்கு அதனை மீட்டு கொடுக்கும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த உலக பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நீலகிரி மாவட்டத்தில், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை திறக்காமல் பூட்டி வைத்து இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த ரேஷன் கடைகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்படாமல் பூட்டி வைத்துள்ளதாக தெரியவருகிறது. ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசி, பருப்பு சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை நம்பி தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கும் பெரும்பாலான பழங்குடியின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இன்றைக்கு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பசியோடும், பட்டினியோடும் தவிப்பதாக சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு இன்றைய திமுக தலைமையிலான அரசே காரணம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சிரமமின்றி கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் திமுக தலைமையிலான அரசு இவ்வாறு உறக்கத்திலேயே இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிலும், நீலகிரி போன்ற மலைப்பிரதேசப் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை நினைத்தபோதெல்லாம் சென்று வாங்கிவிடமுடியாத சூழலில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இதுபோன்ற இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்னுரிமை அளித்து அங்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்து மக்களுக்கு சிரமமின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். ஆனால் திமுகவினர் மக்களுக்கு எதை செய்யவேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு தேவையற்ற மதபிரச்னைகளை உண்டுபண்ணுவது ஏன்? என்று புரியவில்லை. ஒருவேளை இதுபோன்று தமிழகத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகளை மூடி மறைப்பதற்காக திமுகவினர் திட்டமிட்டு வேண்டுமென்றே மதபிரச்னைகளை தூண்டுகிறார்களோ என்ற எண்ணம் அனைவருக்கும் எழுகிறது.
எனவே, வாக்களித்த மக்களுக்காக திமுகவினர் கொஞ்சமாவது நன்றியுணர்வோடு செயலாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நீலகிரி மாவட்டத்தில் பூட்டி கிடக்கும் ரேஷன் கடைகளை உடனே திறக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மலைப்பிரதேசப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அனைவருக்கும் எனது இனிய ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்🙏
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
ஆசிரியர் பணி அறப்பணி என்று தனது எளிய வாழ்க்கையை ஆரம்பித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் பணியினை ஊதியம் பெரும் வேலையாக மட்டும் கருதாமல் சேவையாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும் நாம் அனைவரும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம்.
ஆசிரியர்கள் கல்வியை கற்பிப்பதோடு மட்டுமில்லாமல், நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனைகளையும் மாணவ சமுதாயத்திற்கு கற்பிக்கிறார்கள். இதன் பயனாக நம் மாணவச் செல்வங்கள் எத்தனையோ துறைகளில் இன்றைக்கும் சிறந்து விளங்குகிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நமது மாணவச் செல்வங்களின் திறமை மிகவும் போற்றப்படுகிறது. இந்த பெருமைகளுக்கெல்லாம் உண்மையான சொந்தக்காரர்கள், எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சேவை ஆற்றிக்கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் தான் என்பதைத் தெரிவித்து கொள்வதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
ஆசிரியர்கள் தாயாக, தந்தையாக மட்டுமின்றி உற்ற நண்பர்களாக இருந்து மாணவச் செல்வங்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்ற உன்னதப் பணியை சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து செய்து வருகிறார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தங்களிடம் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்விக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறார்கள்.
நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ சமுதாயத்தினை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆசிரியர்கள் ஆற்றிவருகின்றனர். ஆகையால், அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்கள் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்கப்பூரில் உள்ள அரசியல்முறைகள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால் சிங்கப்பூர் உலகில் ஒரு செல்வாக்கு உள்ள நாடாகவும், சிறந்த தொழில் மற்றும் திறமையாளர்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்த சிறப்புக்குரிய சிங்கப்பூர் நாட்டை ஆளும் பொறுப்பை தமிழரான திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்கள் ஏற்கப்போவது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
சிங்கப்பூரின் நிதியமைச்சர், கல்வி அமைச்சர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் துணை பிரதமர் போன்ற பல்வேறு முக்கிய பதவிகளில் திறம்பட பணியாற்றி, தனது தனித்திறமையை நிரூபித்துள்ள திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்கள் தற்போது சிங்கப்பூரின் அதிபராக தேர்வாகியிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலவை ஆய்வு செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட சந்திரயான்- 3 திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்த சாதனையாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்றைக்கு விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக நம் இந்திய நாடு அனுப்பும் முதல் விண்கலம் என்ற பெருமையை ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது. இதன் மூலம் சூரியனைக் கண்காணிக்கும் முதல் இந்திய விண்வெளிப் பயணம் என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. மேலும், சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே விண்கலங்களை அனுப்பியிருந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் நம் இந்திய தேசமும் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள ஆதித்யா எல்-1 திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியும், ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குனருமான தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த திருமதி. நிகர் சாஜி அவர்களுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கோவை மாவட்டம், கொளக்குடி பகுதியை சேர்ந்த கழக நிர்வாகி திரு.M. சசிகுமார் அவர்களின் தந்தை முருகேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.M.சசிகுமார் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அவர்கள் தங்கம் வென்று அசத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், உலகச் சாம்பியன்ஷிப் தடகள வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி நம் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ள தடகள வீரர் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அவர்கள் தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் மென்மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி காட்டிட எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள், தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், தங்களின் ஈடு இணையற்ற பங்களிப்பால், இத்தமிழ் சமூகத்திற்கு தாங்கள் ஆற்றுகின்ற மக்கள் நலப் பணிகள், எந்நாளும் தொடர்ந்திடவும், தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று முடிந்த 10-வது உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா உலகின் முன்னணி வீரர்களிடம் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை தக்க வைத்து இருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் கேண்டிடேட் செஸ் தொடருக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளதோடு, 18 வயதில் செஸ் உலகக் கோப்பை போட்டியில் இறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தனது 5 வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்ற பிரக்ஞானந்தா, தனது 7ஆவது வயதிலேயே உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். மேலும், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தனது முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்தார். அதேபோன்று, பிரக்ஞானந்தா தனது 16ஆவது வயதில் செஸ் விளையாட்டில் 2ஆவது இளைய கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு, உலக வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்ததையும் இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
தமிழகத்தில் செஸ் விளையாட்டில் பங்குபெறுகின்ற இளம் வயதினர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கும் பிரக்ஞானந்தா தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் மென்மேலும் பல அறிய சாதனைகளை நிகழ்த்தி காட்டிட எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டுகோள்.
திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளான குடிநீர், உணவு, இருப்பிடம் போன்ற வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை விட்டுவிட்டு எதையும் கண்டும் காணாமல் மெத்தனப்போக்கோடு செயல்பட்டு கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் குடிநீருக்காக வேறு வழியின்றி காலி குடங்களுடன் சாலையில் நின்று போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதனை நிரூபிக்கின்ற வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தற்போது கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பணவடலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், இவர்களுடைய குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த ஒரு மாத காலமாக வழங்கப்படவில்லை என சொல்லி வேதனைப்படுகின்றனர். இதனை வலியுறுத்தி தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வைத்த போதும், திமுக தலைமையிலான அரசு இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டும் காணாமல் இருந்து வந்ததால் வேறுவழியின்றி அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் கோவிலில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் கோடைகாலம் வரும் முன்னேரே அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களோடு கலந்து ஆலோசித்து அதற்கான முன்னேற்பாடுகளை ஆராய்ந்து அரசு அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை முன்கூட்டியே கொடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியானது. குறிப்பாக குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை முறையாக பராமரித்து தேவையான அளவுக்கு நீர் சேமிப்பு செய்து பராமரிக்கப்பட்டது. மேலும். ஒரு சில பகுதிகளில் மக்களுக்கு தேவையான குடிநீர் லாரிகள் மூலமாக எடுத்து சென்று மக்கள் வசிக்கும் இடங்களிலேயே வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய ஆட்சியில் அது போன்று எந்த செயலும் நடப்பதாக தெரியவில்லை. மேலும் திமுகவினரின் நிர்வாக திறமையின்மையால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாத ஒரு பொழுதுபோக்கு அரசாகத்தான் இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. இதற்காகவா தமிழக மக்கள் வாக்களித்தனர்? வாக்களித்த மக்களுக்கு திமுகவினர் செய்யும் நன்றி கடன் இதுதானா? என்பதை எண்ணிப்பார்க்கையில் மிகவும் வேதனை அளிக்கிறது.
எனவே, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட தேவையான உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நிலவில் கால் பதித்த சந்திராயன் 3 தொடர்பான செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் துன்பத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் உடன் பயணித்த செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர்கள் நாராயண மூர்த்தி, வள்ளிநாயகம் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
நாள்தோறும் ஓய்வின்றி அயராது உழைக்கின்ற ஊடக துறையை சேர்ந்தவர்கள், பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளும்போது மிகுந்த பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த சங்கர் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய ஊடக துறையை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, இன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஒரு வரலாற்று சாதனையை படைத்திருப்பது, நம் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
நிலவின் தென் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரை இறக்கிய நாடு என்ற சிறப்பையும், பெருமையையும் நம் இந்திய திருநாடு இன்று பெற்றிருப்பது, இந்தியர்களாகிய நம் அனைவரையும் தலை நிமிர செய்துள்ளது. நிலவின் தென் பகுதியில்தான் அதிகளவு கனிம வளங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு விக்ரம் லேண்டர் துணையுடன் 14 நாட்கள் நடத்தப்படப் போகும் ஆய்வுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நம் இந்திய தேசத்தை, வல்லரசு நாடுகளுக்கு இணையாக உலக அரங்கில் வெற்றிநடை போட வைத்துள்ள சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய தமிழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் தனது 61-வது பிறந்தநாளை இனிதே கொண்டாடும் இவ்வேளையில், நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கால்வாய் உடைந்து விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விவசாயிகள் செய்வதறியாது நிற்கதியாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, கொலவாய் கிராமத்தில் ஏரிக்கு செல்ல வேண்டிய மழைநீர், கால்வாய் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கரை உடைந்து காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் முழுவதும் அருகே இருந்த விளைநிலங்களில் புகுந்துள்ளதாகவும், இதனால் சுமார் 100 ஏக்கர் அளவில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நீரில் மூழ்கியும் முற்றிலும் வீணாகிவிட்டதாக இங்குள்ள விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகிறார்கள்.
திமுக தலைமையிலான அரசு இங்குள்ள கால்வாய்களை முறையாக தூர்வாரி இருந்தால், இன்றைக்கு நெற்பயிர்களை வீணாகாமல் காப்பாற்றி இருக்கலாம். வேளாண் துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர், இப்பகுதியை சேர்ந்தவராக இருந்தும், இங்குள்ள கால்வாய் தூர் வாரும் பணிகளை முறையாக முடித்துள்ளார்களா? என்பதை கூட ஆய்வு செய்யாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. தனது சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்திசெய்ய முடியாத அமைச்சர், அயல்நாடுகளில் உள்ள விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதாக சொல்லிக்கொண்டு மக்களின் வரிப்பணத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவதால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. இது விவசாயப்பெருங்குடி மக்களுக்கு திமுகவினர் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.
விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 50,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். எனவே, விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் பெரிதும் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு உரிய நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வேறுபாடுகளால் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, அதில் சின்னத்துரை என்ற மாணவனையும், அவரது சகோதரி மாணவி சந்திரா செல்வியையும் சக மாணவர்களே அரிவாளால் கொடூரமாக தாக்கியிருப்பது மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதியார் பாடலை இளம் வயது முதல் கற்றுக்கொடுத்து வந்தபோதிலும் மாணவர்களின் மனதில் சாதி நஞ்சை விதைப்பவர்கள் இருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும், சமீபத்தில் வெளிவந்த ஒரு சில தமிழ் திரைப்படங்களும் இது போன்ற வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிட்டதோ என்ற ஐயமும் எழுகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ செல்வங்கள் மத்தியில் எந்தவித ஏற்ற தாழ்வுகள், சாதிய பிரிவினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. அதை உறுதி செய்கின்ற பணியினை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது போன்ற சாதிய மோதல்களை ஒடுக்க வேண்டிய நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும். நாங்குநேரியில் நடைபெற்ற இந்த விரும்ப தகாத சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 89-வது பிறந்தநாளான இன்று அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
தமிழகத்தின் நலனிற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பும், அவர்கள் ஆற்றிய பணிகளையும் இந்நாளில் நினைவு கூறுவோம். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதாகவும், 10க்கு மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வருவது கூடுதல் கவலையை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கணடனத்திற்குரியது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இன்றைக்கு இந்த விபத்து ஏற்பட்டு இத்தனை உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கினால், மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தூக்கத்தில் இருப்பதா லும்தான் எந்த பணிகளையும் சரியாக செய்ய முடியாமல் தமிழக மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே திமுக அரசு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களையும் விரைந்து மீட்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை கோச்சடை பகுதியில் பழுதடைந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்த போது திடீரென கிரேனில் இருந்து கீழே கழன்று விழுந்த மின்கம்பம், அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் இடது காலில் விழுந்து கணுக்கால் முறிந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த வீரரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருக்கும் தமிழக மின்வாரிய துறையினரின் அலட்சியப்போக்கிற்கு கடும் கண்டனம்.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தீர்த்தம் என்பவரின் மகனான ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரன் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். ஜூடோ விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள பரிதி விக்னேஸ்வரன் அடுத்த மாதம் தேசிய அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் தமிழக மின் வாரியத்தின் அலட்சியத்தால் இன்றைக்கு அவருடைய கணுக்காலை இழந்து அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.
திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கால் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்க பணியின் போது சக்திவேல் என்ற தொழிலாளி 16 அடி ஆழத்தில் உள்ள குழிக்குள் இறங்கி வேலை பார்த்தபோது திடீரென மண் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோன்று சென்னையிலும் ஜாபர்கான்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து இளம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். திமுக தலைமையிலான அரசு எந்த பணிகளையும் சரிவர செய்வதில்லை என்பதை நாள்தோறும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. மதுரை மாநகராட்சியும் தனது பொறுப்பை தட்டிக்கழித்து, மக்களின் பாதுகாப்பில் எந்தவித அக்கறையும் காட்டாமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது என்பது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மின்கம்பம் பொருத்தும் பணியின் பொழுது எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்பு இன்றி அலட்சியமாக பணிகளை மேற்கொண்டதால், இன்றைக்கு ஒரு வீரரின் இலட்சியமும், தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்கிற கனவும் நிர்மூலமாகி விட்டது. மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத திமுக தலைமையிலான இந்த விளம்பர ஆட்சியில், இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழந்து தவிக்க போகிறோம் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரிதி விக்னேஸ்வரன் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். தமிழகத்தின் இளம் ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கும் திமுக தலைமையிலான அரசு, அவருக்கு உரிய இழப்பீடு வழங்கியும், அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியும் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அரணாக துணை நிற்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களான சேத்தியாதோப்பு, வளையமாதேவி சுற்று வட்டார பகுதிகளில், இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் இன்று அதிகாலையிலேயே 35 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வரும் சூழலில், அவர்களின் கருத்துக்களை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாத வகையில் என்.எல்.சி நிர்வாகம் செயல்படவேண்டும். திமுக அரசும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் என்.எல்.சி நிர்வாகத்திடம் கலந்து பேசி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, தமிழக அரசே விவசாயிகளுக்கு எதிராக நடப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை. இதற்காகவா மக்கள் வாக்களித்தனர். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி நிர்வாகத்தின் அத்துமீறல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
நிலவை ஆய்வு செய்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:35 மணக்கு எல்.வி.எம்-3 ராக்கெட்டுடன், சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு திட்டமிட்டபடி வெற்றிகரமாக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய தமிழக விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனருமான விழுப்புரத்தை சேர்ந்த திரு.வீர முத்துவேல் அவர்களுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சாதனையை படைத்து நம் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்க்க இருக்கும் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலப்பரப்பில் இறங்கும் அந்நன்னாளை எதிர் நோக்கி நம் அனைவரும் காத்திருப்போம். வல்லரசு நாடுகளுக்கு இணையாக, நிலவை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில், நம் இந்திய தேசமும் தொடர்ந்து சாதனை படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்து கொண்டதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்களின் மறைவு தமிழக காவல்துறைக்கு பேரிழப்பாகும்.
கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற டிஐஜி விஜயகுமார் அவர்கள், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்த நிலையில், இன்று காலையில் நடைபயிற்சியை முடித்துவிட்டு தனது முகாம் அலுவலகத்திற்கு திரும்பிய நிலையில் திடீரென்று துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது போன்று உயர் பதவியில் இருக்கின்ற ஒரு காவல் அதிகாரி தனது இயல்பான பணிகளை செய்து வந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக சொல்லப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அனைவரும் கருதுகின்றனர். எனவே, தமிழக அரசு இந்த மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு உரிய விசாரணையை மேற்கொண்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் அவர்கள் உயிரிழந்ததற்கான உண்மையான காரணத்தை விரைந்து கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
டி.ஐ.ஜி.விஜயகுமார் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய காவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழக மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, மென்மேலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
முன்னாள் டிஜிபி திரு.விஜயகுமார் IPS அவர்களின் தாயார் கௌசல்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஒரு நேர்மையான அதிகாரியை நாட்டுக்காக அர்ப்பணித்த இந்த ஒப்பற்ற அம்மையாரின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
திரு.விஜயகுமார் அவர்கள் மிகவும் நேர்மையானவர், பணிகளை நேர்த்தியாக செய்யக்கூடியவர் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிகொண்டே இருப்பார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகளில் ஒருவராக விளங்கியவர் திரு.விஜயகுமார் அவர்கள்.
தனது தாயை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் திரு.விஜயகுமார் அவர்களுக்கு மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும். திரு.விஜயகுமார் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூட முன் வராத திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் மிகவும் சிரமப்படுவது வேதனை அளிக்கிறது. மேலும், தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம் என அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கேட்கும்போது அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்றும், மிகவும் மெத்தனப்போக்கில் இருப்பதாகவும் சொல்லி மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.
திமுக தலைமையிலான அரசு மக்களை மறந்து, மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாமல் அடுத்து வரும் தேர்தலை மட்டும் குறி வைத்து செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவினர் தேர்தல் முன் ஏற்பாடாக அவர்களின் கட்சிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும், அடுத்து ஆட்சியை எப்படி பிடிப்பது என்ற ஒரே சிந்தனையில் மட்டும் செயல்பட்டு கொண்டிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். மக்களை கவனிக்காத, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத எந்த அரசாக இருந்தாலும், அவர்கள் எத்தனை பேருடன் கூட்டணி அமைத்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. எனவே, திமுகவையும் அதன் தோழமை கட்சியினரையும் தமிழக மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பது உறுதி, மேலும் திமுகவினரை தமிழக மக்கள் உங்கள் வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர், உணவு, மருத்துவம், வசிப்பிடம் போன்ற அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நிரந்தர தீர்வினை எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கீழடி அகழாய்வை பின்னணியாக கொண்டு உருவான 'ஆதனின் பொம்மை' என்ற நாவலை எழுதிய தமிழக எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்களுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருதான சாகித்ய பால புரஸ்கார் விருதும், 'திருக்கர்த்தியல்' என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய திரு.ராம் தங்கம் அவர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
விருதுகளைப் பெற்ற தமிழக படைப்பாளிகள் திரு.உதயசங்கர் அவர்களும், திரு.ராம் தங்கம் அவர்களும் மென்மேலும் சிறந்த சாதனைகளை படைத்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வரும் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் மகளிருக்கான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை நம் தமிழகத்திற்கு பெற்று தந்த பவானி தேவி அவர்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனே முன் வரவேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி, பனப்பாக்கம், திமிரி, அம்மூர், சோளிங்கர், அரக்கோணம், காவேரிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70,000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தினால், விவசாயிகள் மிகவும் பாதிப்படையக்கூடும்.
விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு நெல்லை பயிரிட்டுள்ளனர். தற்போது நெல்லை அறுவடை செய்தவுடன் கொள்முதல் நிலையங்களில் உடனே போடமுடியவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடையக்கூடும் என்று விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.
மேலும், இந்த பகுதிகளில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ள நிலையில், விளைவித்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதற்குள், நெல்லை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, மம்சாபுரம் பேரூராட்சியை சேர்ந்த கழகத் தொண்டர் க. முத்துராஜ் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் முத்துராஜ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் தேசிய அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இத்தேர்வில் தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர் பிரபஞ்சனின் சாதனை ஈடு இணையில்லாதது. ஆனால், அதேசமயம் சி.பி.எஸ்.இ-யின் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்து, நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர் பிரபஞ்சனுக்கு கிடைத்த கல்வி, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதில்லை. தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவச்செல்வங்களால், நீட் தேர்வை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களால், நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள வசதியின்றி, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவ கல்வி என்ற கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு என்ற கோரிக்கை எழுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டுகோள்
திமுக தலைமையிலான அரசு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயரும் என அறிவித்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இது தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப் பெரிய துரோகமாகும். அதிலும் குறிப்பாக பத்து மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதற்குள் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டு மக்கள், இன்றைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளாலும், நிர்வாக சீர்கேடுகளாலும் ஏற்கனவே சிக்கித் தவித்து வரும் வேளையில், அவர்கள் தலையில் மென்மேலும் சுமையை ஏற்றுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பது தெரியவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் திமுக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், எத்தனையோ சிறு குறு வணிக நிறுவனங்கள் சமாளிக்க முடியாமல் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்துவதால் தமிழகத்தில் தொழில் துறை முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும். மேலும், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் பொதுமக்களின் மீது மறைமுகமாக சுமையை இறக்கி அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
இன்றைக்கு தமிழ்நாட்டின் நிலைமை இவ்வாறு இருக்க, உள்நாட்டு வணிக நிறுவனங்களே தங்கள் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் தவிக்கும் சூழலில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை கொண்டு வருவதாக திமுக ஆட்சியாளர்கள் சொல்வது நகைப்புக்குரிய செயலாகத்தான் பார்க்கமுடிகிறது.
எனவே, திமுகவினர் தமிழக மக்களின் நலனையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 128-ஆவது பிறந்த நாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் அவர்களின் நினைவாக, கடந்த 1983ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் அவர்கள், காயிதே மில்லத்தின் வாழ்க்கை குறிப்புகளை 5ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற செய்தார்.
அதே போன்று, கடந்த 2003ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் தான் தமிழக அரசு சார்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில், காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது என்பதையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
தன்னலமற்ற, தூய்மையான அரசியலை முன்னெடுத்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போன்று மக்களுக்காகவும், நாட்டுக்காக வாழவும், அனைவரிடமும் அன்பும், சமாதானமும் கொண்டு ஒற்றுமையுடன் வாழ உறுதி ஏற்போம். -
V K Sasikala
@AmmavinVazhi
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை-கோரமண்டல் விரைவு ரயில்விபத்துக்குள்ளானதில் இதுவரை 238 நபர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருவது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இதில் 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருவது மேலும் அதிர்ச்சியளிக்கின்றன.
இது போன்ற ஒரு பேரழிவை யாராலும் தாங்கிக்கொள்ளமுடியாது. இந்த கோர விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை உடனே மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை உரிய விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு, தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுத்திட விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்.
சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியை அடுத்த செங்கனூர் என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் ஆறு நபர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு அதில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பட்டாசு ஆலைகளில் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனரா? என்பது தெரியவில்லை. பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து செயல்படக்கூடிய வகையில் தமிழக அரசே பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து அங்கு பட்டாசு ஆலைகளை நிறுவ செய்வதன் மூலம் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இயலும். திமுக தலைமையிலான அரசோ பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுப்பதற்கு வேண்டிய எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
திமுக தலைமையிலான அரசு இனி வரும்காலங்களில் தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்தே ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற வெடி விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில், தேவையான நிரந்தர தீர்வை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
உலகத் தமிழர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் 80வது பிறந்தநாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம்,கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து இமாலய சாதனை படைத்த இசைஞானி இளையராஜா அவர்கள், மேல் தட்டு மக்கள் மட்டுமே ரசித்து வந்த கர்நாடக இசையை பாமரர்களுக்கும் எளிமையாக கொண்டு சேர்த்ததை எண்ணிப் பெருமிதம் அடைகிறோம்.
அன்பு சகோதரர் இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழவும், நூற்றாண்டுகளை கடந்தும் ஈடில்லா இசைப் பயணத்தையும், ஆன்மீகப் பயணத்தையும் தொடர்ந்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். -
V K Sasikala
@AmmavinVazhi
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் துணை முதல்வர் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழக விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமானது.(1/5)
Post not available here, view on X
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு அனைத்திலும் தூங்குவது போல் இவ்விசயத்திலும் தூங்கிவிடாமல் விழிப்புடன் செயல்பட்டு தமிழக விவசாயிகளுக்கு பாதகத்தை விளைவிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு மேற்கொள்ளும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.(4/5)
V K Sasikala
@AmmavinVazhi
மத்திய அரசும் கர்நாடக காங்கிரஸ் அரசின் சுயநலப்போக்கிற்கு இடம் அளித்திடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட எந்தவித அனுமதியையும் வழங்கிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.(5/5)
-
V K Sasikala
@AmmavinVazhi
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ஹரி நாராயண் அவர்கள் எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்க்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (1/3)
V K Sasikala
@AmmavinVazhi
மருத்துவர் ஹரி நாராயண் அவர்கள் மூன்றாண்டு படிப்பு முடித்த பின் மீண்டும் மதுரை வந்து தென்மாவட்ட மக்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவையை தொடர விரும்புவதாக தெரிவித்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
மருத்துவர் ஹரி நாராயண் அவர்களின் நல்லெண்ணம் ஈடேறவும், மருத்துவ உலகில் மென்மேலும் பல்வேறு சாதனைகளை படைத்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
கருமுத்து கண்ணன் அவர்கள் அனைவருக்கும் உதவும் உள்ளம் படைத்தவர். தொழில்துறை, கல்வித்துறை, ஆன்மிகப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிறந்து விளங்கியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர். அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவர்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுதேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (1/3)
V K Sasikala
@AmmavinVazhi
மேலும், இத்தேர்வில் தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அதைப்பற்றி கவலை படாமல், எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் இருந்து மீண்டும் முயற்சித்து தேர்ச்சி பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்ற நண்பர்களோடு கலந்து ஆலோசித்து, விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து மேல்நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற்று, உங்கள் எண்ணம்போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. தாய்மையே நம்மை மனிதராக்குகிறது, மனிதத்தை விதைக்கிறது. தாய்மை உள்ளம் படைத்த அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, மக்களுக்காக ஆற்றிய அரும்பணிகளையும் இந்நன்னாளில் எண்ணிப்பார்த்து பெருமிதம் அடைகிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் கொண்டு, வாழும் கடவுளாக திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
12-ஆம் வகுப்பு பொதுதேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்,தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் நந்தினி மற்றும் லக்ஷ்ய ஸ்ரீ ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
மேலும், இத்தேர்வில் தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அதைப்பற்றி கவலை படாமல், எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் இருந்து மீண்டும் முயற்சித்து வெற்றி பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
உங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்ற நண்பர்களோடு அமர்ந்து பேசுங்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று பொறுமையோடு ஆராய்ந்து, விரும்பிய மேற்படிப்புகளை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றி பெற்று, உங்கள் எண்ணம்போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் பயணம் செய்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஆறு நபர்களும் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
மனித உயிர்கள் விலைமதிப்பற்றது. போன உயிர்களை யாராலும் மீண்டும் கொண்டு வரமுடியாது. எனவே, ஓட்டுனர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மனோபாலா அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்புசகோதரர் மனோபாலா அவர்கள் புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவிஅம்மா ஆகியோர் மீதும்,நம் இயக்கத்தின் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவர்.இயக்கத்தின் வெற்றிக்காக மேடைதோறும் பிரச்சாரங்கள் செய்து கழகஆட்சியின் சாதனைகளையும்,அம்மா அவர்களின் மக்கள்பணிகளையும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
சகோதரர் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த திரு.R. தேவாதி ராஜ தீக்ஷிதர் அவர்களின் தாயார் R. விஜயத்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தாயை இழந்து வாடும் திரு.R. தேவாதி ராஜ தீக்ஷிதர் அவர்களுக்கும், அவருடைய சகோதரர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மன்னார்குடியை சேர்ந்த கழகத் தொண்டர் திரு.M.C.பஞ்சாபிகேஷன் அவர்களின் தாயார் C.காமாட்சி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தாயை இழந்து வாடும் திரு.M.C.பஞ்சாபிகேஷன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தேசிய அளவில் "சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்" என்ற தலைப்பில் பதிமூன்று மொழிகளில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில், தமிழில் கட்டுரை எழுதி இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த நெல்லை கல்லூரி மாணவி ஹிஸானாவுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
டாடா குழுமம் நடத்திய இந்த கட்டுரை போட்டியில், லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் தமிழில் கட்டுரை எழுதிய நெல்லை மாணவி ஹிஸான வெற்றி பெற்று மாண்புமிகு குடியரசு தலைவரிடமிருந்து விருதை பெற்றிருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளது. (2/3)
V K Sasikala
@AmmavinVazhi
சாதனை படைத்த மாணவி ஹிஸான மென்மேலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்து நம் தமிழ் மண்ணிற்கும் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளருமான திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் தந்தை தவசிலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும் , இந்த இழப்பை தாங்கி கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,கழகத்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF - Central Armed Police Force ) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தற்போது தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுத மத்திய அரசு முடிவெடுத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
அதேபோன்று, மத்திய அரசால் நடத்தப்படுகின்ற அனைத்து விதமான தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட இதர பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக மக்களின் சார்பாக மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி ஒன்றிய மாணவரணி செயலாளர் திரு.N.செண்பகராமன் அவர்களின் தகப்பனார் M.நாராயண ஐயர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தந்தையை இழந்து வாடும் திரு.N.செண்பகராமன் அவர்களுக்கும்,அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், பாண்டியராஜன், முத்துசாமி ஆகிய நான்கு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
மாணவச்செல்வங்கள் இதுபோன்று பாதுகாப்பற்ற செயல்களில்ஈடுபட்டு தங்களுடையவிலைமதிப்பற்ற உயிரையிழப்பது மிகவும் வேதனைஅளிக்கிறது.மாணவச்செல்வங்கள் தங்களுடைய பெற்றோரையும்,வருங்காலத்தையும் மனதில்வைத்து எல்லாவற்றிலும் கவனமுடனும்,பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் எனஅன்போடு கேட்டுக்கொள்கிறேன்(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுமான நரேஷ் குப்தா அவர்கள் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
நரேஷ் குப்தா அவர்கள் மிகவும் நேர்மையானவர், பணிகளை நேர்த்தியாக செய்யக்கூடியவர் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிகொண்டே இருப்பார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகளில் ஒருவராக விளங்கியவர் நரேஷ் குப்தா அவர்கள்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
நரேஷ் குப்தா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு அனுமதி வழங்கிய தமிழக ஆளுநர் அவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரது சார்பாகவும், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதித்து எத்தனையோ ஏழை குடும்பங்கள் காப்பாற்றப்பட்டது. அதேபோன்று இன்றைக்கு தமிழகஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதன் மூலம் எண்ணற்ற சாமானிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் சமுதாயத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு இன்றைக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம்ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்தியஅரசு டெண்டர் கோர இருப்பதாக செய்திகள் வந்தவுடனே,இத்திட்டத்தை கைவிடவேண்டி கடந்த 04-04-2023 அன்று எனது அறிக்கையின்வாயிலாக மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
எங்களது கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டில் இத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு தமிழக விவசாயிகளின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் மகிழச்சியை அளிக்கின்ற செய்தியாகும்(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், மரத்துறை ஊராட்சி, திரு. R. விஜயராமன் அவர்களின் தகப்பனாரும், கிளைக் கழக ஒன்றிய பிரதிநிதியுமான K. ராமலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தந்தையை இழந்துவாடும் திரு.R.விஜயராமன் அவர்களுக்கும்,அவருடைய குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,உடன் பணியாற்றிய கழகத்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அன்னாரது ஆன்மா இறைவன் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை நங்கநல்லூர் MMDA காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
இது போன்று உயிரிழப்புகள் இனிமேலும் ஏற்படாமலிருக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் உள்ள குளங்கள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என்பதனை இந்த ஆட்சியாளர்கள் உடனே ஆய்வு செய்து தேவையான இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
இதில் உயிரிழந்த5 அர்ச்சகர்களின் குடும்பத்தினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,இறைவனுக்கு தொண்டாற்றுகின்ற அனைத்து அர்ச்சகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தந்தையின் மறைவு அஜித் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தந்தையை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 நபர்கள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. இதில் பலத்த காயமடைந்த ஏழு பெண்கள் உள்பட16 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.(1/4)
Post not available here, view on X
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் இதுபோன்ற விபத்துகள் இனி எங்கும ஏற்படாத வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.(3/4)
V K Sasikala
@AmmavinVazhi
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(4/4)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
அருணாச்சலப் பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த மேஜர் ஜெயந்த் உள்பட இரண்டு விமானிகள் பலியாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. (1/2)
V K Sasikala
@AmmavinVazhi
பலியான விமானிகளின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உடன் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
தாயை பிரிந்து தவித்த இரண்டு குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் விருது வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்தை உருவாக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
அதேபோன்று “நாட்டு நாட்டு" பாடலின் மூலம் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்று நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவினருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.சீனிவாசன் அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கு.சீனிவாசன் அவர்கள் நம் இருபெரும் தலைவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் கு.சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், குறிச்சி ஊராட்சி கழகச் செயலாளர் தியாகராஜன் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிப்பற்றது. எனவே கழகத் தொண்டர்கள் வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது மிகுந்த கவனமாகவும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் தியாகராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
சென்னை பெரும்பாக்கத்தில் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் அவ்வழியே வாகனத்தில் சென்ற இஸ்மாயில் என்பவர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.(1/4)
V K Sasikala
@AmmavinVazhi
இப்பகுதியில் ஏற்கனவே மின்கம்பி அறுந்துவிழுந்து கால்நடைகள் உயிரிழந்தபோதே, மின்கம்பங்களை பராமரிக்க வேண்டும்என இப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தும்,எந்த நடவடிக்கையையும் எடுக்காத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கால் இன்றைக்கு இந்த உயிரை பலி கொடுத்து இருக்கிறோம்.(2/4)
V K Sasikala
@AmmavinVazhi
இந்த உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று பராமரிப்பு இல்லாத மின்கம்பங்களை உடனே சரிசெய்திட வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.(3/4)
V K Sasikala
@AmmavinVazhi
இந்த ஆட்சியாளர்களின் கவனக் குறைவால் உயிரிழந்த இஸ்மாயில் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(4/4)
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல நகைசுவை நடிகர் மயில்சாமி அவர்கள் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மயில்சாமி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் மயில்சாமி அவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும், நம் இயக்கத்தின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். சிறந்த சமூக சிந்தனைகளை கொண்டவர். அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் நல்ல குணம் கொண்டவர். (2/3)
V K Sasikala
@AmmavinVazhi
சகோதரர் மயில்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில், பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் ராஜா உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. (1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கை கடைபிடிக்காமல் உடனே உரிய விசாரணை மேற்கொண்டு மீனவர் ராஜாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
கர்நாடக மாநிலம், புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் M.வெங்கடேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் வெங்கடேஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி, பொத்தேரியில் உள்ள கழகத் தொண்டர் பழனி அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
கழகத் தொண்டர் பழனி அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி குப்பம்மாளுக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான 10 – வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்கள் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற ஜெஸ்வின் ஆல்ட்ரின், மகளிர் போல் வால்ட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பவித்ரா, வெண்கல பதக்கம் வென்ற ரோசி மீனா பால்ராஜ், மும்முறை தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
இதில் கலந்து கொண்டுள்ள தமிழக வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் மென்மேலும் பல சாதனைகளை புரிந்து பல்வேறு வெற்றிகளை அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களாகிய நம் அனைவருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் மிகவும் எளிமையானவர், அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களது மக்கள் பணி எந்நாளும் சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
மயிலாடுதுறையில் உள்ள அறிவகம் காப்பகத்தை சிறப்புடன் செயல்படுத்தி வரும் பெரியவர் திரு.M.ஞானசம்பந்தம் அவர்களின் மனைவி அம்மையார் கலாவதி அவர்கள் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். (1/4)
Post not available here, view on X
V K Sasikala
@AmmavinVazhi
இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமியையும், மற்ற ஆதரவற்ற குழந்தைகளையும் நேரில் காண காப்பகத்திற்கு நான் சென்ற போது அம்மையார் கலாவதி அவர்களையும், அவர்களுடைய தன்னலமற்ற சேவைகளையும் நேரில் கண்டு வியப்படைந்தேன்.(3/4)
V K Sasikala
@AmmavinVazhi
அம்மையார் கலாவதிஅவர்களை இழந்துவாடும் அவரது கணவர்திரு.M.ஞானசம்பந்தம் அவர்களுக்கும் காப்பகத்தில்உள்ள ஆதரவற்ற குழந்தைகள்,பணியாளர்களுக்கும் எனதுஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன்திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனைவேண்டுகிறேன்.(4/4)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் திடீரென்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவர்களின் மறைவு யாராலும் ஈடுசெய்ய முடியாதது.(1/4)
Post not available here, view on X
V K Sasikala
@AmmavinVazhi
பாடகி வாணி ஜெயராம் அவர்கள் தனது காந்த குரலால் அனைவரையும் கட்டிப்போட்டவர். அவர்கள் பாடிய பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாதது. பத்ம பூஷண் விருதினையும், மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.(3/4)
V K Sasikala
@AmmavinVazhi
பாடகி வாணி ஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(4/4)
-
V K Sasikala
@AmmavinVazhi
மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவன் R.சாமுவேல், சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
நாடோடி சமுதாயத்தை சேர்ந்த மாணவன் சாமுவேல் தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு மென்மேலும் பல வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர மாணவரணி செயலாளர் L S பாபு என்கிற பாலகிருஷ்ணன் அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
கழகத் தொண்டர் பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் கடைவீதி கிளைக் கழக செயலாளர் பாபு என்கிற கலியமூர்த்தி அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
கழகத் தொண்டர் பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நாளில் இந்திய தேசத்தில் உள்ள அனைவருக்கும் எனது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4)
V K Sasikala
@AmmavinVazhi
இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே , மக்களால், மக்களுக்காகவே எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் இயற்றி, அந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் ஜனவரி 26ஆம் நாள் 1950ஆம் வருடம் . (2/4)
V K Sasikala
@AmmavinVazhi
1947-ம் ஆண்டு சுதந்திரம் வாங்கினாலும் தனி உரிமைகள் , கடமைகள் அனைத்தையும் உருவாக்கி இனி நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று அறிவித்த நாளை, நம் குடியரசு தின விழாவாக கொண்டாடுகின்றோம்.(3/4)
V K Sasikala
@AmmavinVazhi
நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும், அன்பும் அமைதியும் நிறைந்து வழியட்டும் என வாழ்த்தி, வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக பாதுகாப்பதே நமது நோக்கம் என்று இந்த குடியரசு தின நாளில் உறுதி ஏற்போம்.(4/4)
-
V K Sasikala
@AmmavinVazhi
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன் பிரதீப், வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழக அரசு, வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்திட வேண்டும்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
தனது மகனை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காணவந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற 15 வயது சிறுவனை எதிர்பாராதவிதமாக காளை முட்டியதில், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
சிறுவன் கோகுலை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல நகைச்சுவை நடிகர் 'வைகைப்புயல்' திரு.வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தாயாரை இழந்து வாடும் திரு.வடிவேலு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் ஒன்பது காளைகளை அடக்கி சாதனை புரிந்த நிலையில், அதன் பின்னர் காளையை அடக்கியபோது படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை காணவந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் எதிர்பாராதவிதமாக மாடு முட்டி, படுகாயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்தும் மிகவும் வருத்தமுற்றேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
உயிரிழந்த அரவிந்தராஜ் மற்றும் அரவிந்த் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்🙏
-
V K Sasikala
@AmmavinVazhi
தைத்திருநாளில் விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🌾
This media couldn't be displayed. See it on the original post. -
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள நாகராஜன், ராமலட்சுமி தம்பதியரின் குழந்தைகள் முருகேஸ்வரி,புனிஷா, லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சிலம்ப கலையில் தேர்ச்சிபெற்று பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
சிலம்ப கலையோடு சண்டை பயிற்சி, சுருள்வாள், அடிமுறை போன்ற பல்வேறு கலைகளை பயின்று தேர்ச்சி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த குழந்தைகள் மென்மேலும் பல வெற்றிகளை பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
புரட்சித்தலைவர் காலம்முதல் தனது இறுதிமூச்சுவரைதொடர்ந்து இயக்கத்தில் பயணித்த,மறைந்த கழகமுன்னோடி ஈ.வெ.கி.சுலோச்சனாசம்பத் அவர்களின்பேரனும்,திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மகனும்,ஈரோடுகிழக்குசட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெராஅவர்கள் திடீரென்று உயிரிழந்தது வருத்தமளிக்கிறது.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது மகனை இழந்து வாடும் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
பிரபல பத்திரிகையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் தகப்பனார் ஸ்ரீ ஸ்ரீ உவே ரகுநாதாசார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது தந்தையை இழந்து வாடும் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
சேலம் மாவட்டக் கழகத்தை சேர்ந்த திரு.முருகேசன் அவர்களின் அன்பு மகன் கோகுல் ஆனந்த் அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது மகனை இழந்து வாடும் திரு.முருகேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
கஜகஸ்தானில் அண்மையில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பெண்கள் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு அம்பி வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைப் படைத்த கொனேரு அம்பியைக் கண்டு நான் மிகவும் பெருமையடைகிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய வீராங்கனை கொனேரு அம்பி தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய பிரதமர் அவர்களின் தாயார் அம்மையார் ஹீராபென் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தன் தாயாரை இழந்த இந்த கடினமான நேரத்தில் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
தேசநலனுக்காக தன் மகனை நாட்டிற்கு அர்பணித்த மகத்தான தாயின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி, கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.K.கதிர்காமு அவர்களின் மூத்த மகன் டாக்டர் K.அருண்குமார் அவர்கள் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது அன்பு மகனை இழந்து வாடும் டாக்டர் கதிர்காமு மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மதிப்பிற்குரிய ஐயா R. நல்லகண்ணு அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
ஐயா நல்லகண்ணு அவர்கள் தமிழக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டு அயராமல் தொண்டாற்றி வருவதை இந்நன்னாளில் எண்ணி உள்ளம் மகிழ்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
பெரியவர் நல்லகண்ணு அவர்கள், நூறாண்டுகளை கடந்தும் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட காலா பாணி நாவலை எழுதிய எழுத்தாளர் திரு.மு.ராஜேந்திரன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை முறையையும், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகளையும், 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரைப் பற்றியும் இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிந்திடும் வகையில் காலா பாணி நாவல் அமைந்திருப்பது மிகவும் பெருமைக்குரியது.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் எழுத்தாளருமான திரு.ராஜேந்திரன் அவர்கள் காலா பாணி நாவலை போன்று தமிழர்களின் பண்டைய வரலாற்று சிறப்புகளை அனைவரும் அறிந்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை அளித்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மக்களவை முன்னாள் உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளருமான T.ராதாகிருஷ்ணன் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் T.ராதாகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்🪔
-
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்த சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாளில் அவர்தம் நினைவுகளைப் போற்றுவோம்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக குரல் கொடுத்த அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை நினைவுகூர்ந்து, அவற்றை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். (2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் திரு.T.H. உமாபதி அவர்களின் சகோதரரும், ஒன்றிய முன்னாள் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளருமான T.H.ராஜகிரி அவர்கள் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் ராஜகிரி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவரான திரு.வேங்கை கணேசன் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
நம் கட்சியின் சோதனையான காலகட்டங்களில் எல்லாம் நம்மோடு உடனிருந்தவர். கட்சிப் பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்று திறம்பட செயலாற்றியவர். நம் இருபெரும் தலைவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் வேங்கை கணேசன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
டெல்லியில் நடைப்பெற்ற அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில் முதலிடம் பிடித்த தஞ்சையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் அமலா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
காவல் உதவி ஆய்வாளர் அமலா அவர்கள் தனது பணிகளில் மென்மேலும் சிறந்து விளங்கவும், இந்த துறையில் பணியாற்ற விரும்புகின்ற இளம் பெண்களுக்கு முன் மாதிரியாக விளங்கவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள அரசு பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் நரேஷ் என்ற மாணவன் கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக வரும் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. மாணவன் நரேஷ் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அதேபோன்று சென்னை திருவல்லிக்கேணி இருசப்ப கிராம தெருவில் என்.கே.டி.அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும், அருகில் இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் கவலையளிக்கிறது.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பராமரிக்க வேண்டிய கட்டிடங்களை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
அரியலூர் மாவட்டம், 8வது வார்டு நகரமன்ற உறுப்பினரும், மாவட்டக்கழக பிரதிநிதியுமான A.K.ராஜேந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். புரட்சித்தலைவர் காலத்திலிருந்தே கட்சிக்காக மிகவும் பாடுபட்டவர்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்ட நகர கழகச் செயலாளர், நகர கழகப் பொருளாளர் போன்ற பொறுப்புகளில் ராஜேந்திரன் அவர்கள் திறம்பட செயலாற்றியவர். நம் இருபெரும் தலைவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் A.K.ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
மூத்த தமிழறிஞர், பத்மஸ்ரீ, பேராசிரியர், முனைவர் ஒளவை நடராஜன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். புரட்சித்தலைவர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக செயலாற்றிய பெருமைக்குரியவர்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர். தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழக வீராங்கனை வர்ஷினி டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருப்பதற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
மாணவி வர்ஷினி தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
புதுக்கோட்டை நகரக் கழக இணைச் செயலாளர் திருமதி. பூரணம் ஆறுமுகம் அவர்களின் கணவரான ஆறுமுகம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். கழக மூத்த முன்னோடியான ஆறுமுகம் அவர்களின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்பு சகோதரர் ஆறுமுகம் அவர்கள் தலைவர் காலத்தில் இருந்து தொடர்ந்து நம் கட்சிக்காக அரும்பாடுபட்டவர். கழகத்தின் நலனுக்காக எத்தனையோ முறை சிறை சென்றவர். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும், என் மீதும் அளவுகடந்த பாசம் கொண்டவர்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
ஆறுமுகம் அவர்களை இழந்துவாடும் அவருடைய மனைவி திருமதி.பூரணம் ஆறுமுகம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
சென்னையைச் சேர்ந்த கால்பந்துவீராங்கனை பிரியா கொளத்தூர் அரசுமருத்துவமனையில் செய்த தவறானசிகிச்சையால் உயிரிழந்துள்ளதாக வரும்செய்தி மிகவும் அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. அரசுமருத்துவமனையின் கவனக்குறைவால் தங்களது மகளைஇழந்துள்ளதாக பெண்ணின்பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
இளம் வீராங்கனை பிரியாவின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது. பிரியாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், இந்த உயிரிழப்புக்கான காரணத்தை உடனே கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
கால்பந்து விளையாட்டில் ஜொலிக்க காத்திருந்த பிரியாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரியாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
டெல்லியில் அமைந்துள்ள கழக அலுவலகத்தின் பொறுப்பாளராக பணியாற்றிய சந்திரசேகர் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த நம் உறுப்பினர்களின் கழகப் பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
சந்திரசேகரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை திருமங்கலம்அருகே அழகுசிறை என்றஇடத்தில் பாட்டாசுஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.இந்த பாட்டாசுஆலையில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் உள்ளதா?விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப் படுகிறதா? என்பதை தமிழக அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்று அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு ஒவ்வொரு நாளும் இவ்வாறு உயிர்களை பலிகொடுத்து வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த ஆட்சியாளர்கள் தங்களது அலட்சியப் போக்கை உடனே கைவிட்டு, அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவதை தடுத்து நிறுத்திட வேண்டும். (2/3)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் நடைபெறும் பகுதிகளில் எல்லாம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் என்ற இடத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக தோண்டியிருந்த பள்ளத்தில், தேங்கியிருந்த மழை நீரில் விழுந்து, வினோத் என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.(1/4)
Post not available here, view on X
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் எங்கெல்லாம் இன்னும் நிறைவடையாமல் பணிகள் நடைபெறுகிறது எனபதை கண்டறிந்து, அங்கு உடனடியாக பாதுகாப்பு அளித்து, பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.(3/4)
V K Sasikala
@AmmavinVazhi
எனவே, திமுக தலைமையிலான அரசு, அசாம்பாவிதம் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று உயிரிழப்புகள் ஏற்படும் வரை காத்திருக்காமல், முன் கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தால் எத்தனையோ அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுகோள்.(4/4)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. துரை கோவிந்தராஜன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
அன்புசகோதரர் திரு.துரை கோவிந்தராஜன் அவர்கள் கழகத்தின் மீதும்,நம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும்,என் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர். கழக தொண்டர்களை அன்போடு அரவணைத்து செல்லக்கூடியவர். கழகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை யாராலும் ஈடு செய்ய முடியாதது.(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
திரு. துரை கோவிந்தராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மயிலாடுதுறை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் திரு. என் ஜி கே சுரேஷ் அவர்களின் தந்தையுமான, செம்பனார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளர் திரு. என் ஜி கலியபெருமாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
திரு. என் ஜி கலியபெருமாள் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு ஆவினில் விற்பனை செய்யப்படும் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. (1/5)
Post not available here, view on X
V K Sasikala
@AmmavinVazhi
திமுக தலைமையிலான அரசு ஏற்கனவே ஆவின் பால் பொருட்களின் விலையை அதிகளவில் உயர்த்திய நிலையில், தற்போது ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருப்பதால் தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.(4/5)
V K Sasikala
@AmmavinVazhi
எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக விளங்கக்கூடிய ஆவின் பாலின் விலையை திமுக தலைமையிலான அரசு உயர்த்தியிருப்பதை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.(5/5)
-
V K Sasikala
@AmmavinVazhi
டெல்லியில் நடைப்பெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கும், தமிழக வீராங்கனை நந்திதாவிற்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
உலககோப்பை செஸ் போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா மற்றும் நந்திதா ஆகியோர் தகுதி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பிரக்ஞானந்தா மற்றும் நந்திதா ஆகியோர் உலக கோப்பை செஸ் போட்டியிலும் சாதனைகளைப்புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும்,150க்கு மேற்பட்டவர்கள் இன்னும் மீட்கப்படவேண்டியிருப்பதாகவும் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
இந்த விபத்தின் போது 500க்கும் அதிகமான நபர்கள் ஆற்றில் விழுந்ததாக வரும் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களுடைய நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.(2/2)
V K Sasikala
@AmmavinVazhi
மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைந்திடவும், ஆற்றிலிருந்து மீட்கப்பட வேண்டிய எஞ்சியுள்ள அனைவரும் விரைவில் உயிருடன் காப்பற்றப்படவேண்டும் என்றும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு ஆகியிருக்கும் மதுரை மண்ணின் மைந்தன் 'சச்சின் சிவா' என்று அனைவராலும் அழைக்கப்படும் திரு.சிவக்குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும்,பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் சச்சின் சிவா இந்த உயர்ந்த பொறுப்பை அடைந்திருப்பது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. சச்சின் சிவா அவர்கள் மென்மேலும் எண்ணற்ற சாதனைகளை புரிந்து வெற்றி மேல் வெற்றி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
I congratulate Mr. Rishi Sunak on his elevation to lead The United Kingdom in such an unpredictable and challenging time.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
I also congratulate the people of The United Kingdom,who have elevated themselves before the eyes of the world and demonstrated that quintessential human biases such skincolor,race,creed or religion should never be a scale with which we should judge an individual's potential(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
Congratulations United Kingdom, for taking a big step towards unshackling from your colonial past.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கந்தாடு கிளைக் கழக செயலாளரும், கந்தாடு கூட்டுறவு சங்க இயக்குனருமான திரு. T.கிருஷ்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
V K Sasikala
@AmmavinVazhi
திரு. T. கிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.(2/2)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்🙏
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல், இது மிகவும் கண்டனத்திற்குரியது. (1/3)
V K Sasikala
@AmmavinVazhi
தமிழகத்தில் சமீப காலமாக, தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. பொது அமைதியை சீரழிக்கும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். (2/3)
V K Sasikala
@AmmavinVazhi
இந்த இழி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
-
V K Sasikala
@AmmavinVazhi
மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் திருவுருவ சிலையை பல ஆண்டுகளாக சுத்தம் செய்து, விளக்கேற்றி, பூஜை செய்து வந்த பெருமாயி அம்மாள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
V K Sasikala
@AmmavinVazhi
ஒவ்வொரு தேவர்ஜெயந்தியின் போதும்,கோரிப்பாளையம் வைகை வடகரையில், நெற்றி நிறைய திருநீரோடு நின்றுகொண்டு தேவர் திருமகனாரை தரிசிக்க வரும்அனைவருக்கும், திலகமிடும் பெருமாயி அம்மாளை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்(2/3)
V K Sasikala
@AmmavinVazhi
பூசாரி பெருமாயி அம்மாளின் ஆன்மா தேவர் திருமகனாரின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
-
V K Sasikala
@AmmavinVazhi
மக்களால் நான், மக்களுக்காகவே நான்… என்றும் அம்மாவின் வழியில்



















































































































































































































































































































































































