கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக வெளியான செய்திகள் நம்பிக்கையை அளித்தன. இந்நிலையில், அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#vsbabu #rip
B. John Pandian
B. John Pandian is an advocate, social worker and an Indian politician from Tamilnadu. He founded the Tamizhaga Makkal Munnetra Kazhagam party in 2000. More on Wikipedia
-
John Pandian
@JohnPandianTMMK
-
John Pandian
@JohnPandianTMMK
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகப் பொறுப்பாளர் திரு.பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது.
அன்னாரது மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@thirumaofficial -
John Pandian
@JohnPandianTMMK
வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்!
----------------------------------------
சுதேசி இயக்கத்தை தொடங்கி, நாட்டின் விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறையையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு செக்கிழுத்த தியாகச் செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔
தீமைகள் நீங்கி, நன்மைகள் பெருகி, இருள் விலகி ஒளி பிறக்கட்டும்!
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செல்வம் நிறைந்து, வெற்றிகள் தொடரட்டும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🎇
#happydiwali -
John Pandian
@JohnPandianTMMK
உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் நமது தமிழ்நாடு மாநிலமாக உருவெடுத்த இந்நாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, வேளாண்மை, தொழில்துறை, அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழட்டும்!
தமிழ்மொழியின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் சிறப்பையும், நமது வரலாற்றுப் பெருமைகளையும் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ப்போம். ஒற்றுமையுடனும், சமத்துவத்துடனும், சமூக நீதியுடனும் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்! -
John Pandian
@JohnPandianTMMK
ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணமா? – சுற்றுச்சூழல் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்! - தலைவர் திரு.பெ.ஜான்பாண்டியன் அவர்கள்.
திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் மருத்துவர் திரு.வி.கே. இராஜீவ் அவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆறுகள் மாசடைவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சரிடமிருந்து இத்தகைய கருத்து வெளிப்பட்டிருப்பது வருத்தமும் கவலையும் அளிக்கிறது.
நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்கு, சாயப்பட்டறைக் கழிவுகள் மற்றும் பிற தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுவது முக்கியக் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்க உரிய கண்காணிப்பும் கடுமையான நடவடிக்கைகளும் அவசியம். நொய்யல் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரத்துப்பாளையம் அணையில் கழிவுநீர் மாசுபாடு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்டுவரும் பாதிப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல், தென்பெண்ணை ஆற்றின் கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் நுரை உருவாகும் பிரச்சினைக்கும் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட மாசுபாட்டுக் காரணங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆறுகளில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும், மாசுபாட்டின் மூலத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும்.
தமிழகத்தின் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் தொழிற்சாலைக் கழிவுகள், நகர்ப்புறக் கழிவுநீர், திடக்கழிவுகள் உள்ளிட்டவற்றால் மாசடைவதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கழிவுநீர் வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கண்காணித்து, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆறுகளின் நீர்த் தரத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கான காரணங்களை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிந்து தீர்வு காண்பதே சுற்றுச்சூழல் துறையின் முதன்மையான கடமையாகும். எனவே, சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாட்டை மட்டும் காரணமாகக் கூறுவதற்குப் பதிலாக, தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து மாசுபாட்டுக் காரணங்களையும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து, தமிழகத்தின் ஆறுகளையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க அமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலை உயர்வு – ஏழை, எளிய மக்களின் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் தவெக அரசுக்குக் கடும் கண்டனம்!
ஆவின் நிர்வாகத்தின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் தயிர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் ரூ.80 வரை உயர்த்தப்பட உள்ளதாகவும், இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே மின்கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரச் சுமைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் பொருட்களின் விலையையும் உயர்த்துவது அவர்களின் குடும்பச் செலவுகளை மேலும் அதிகரித்து, வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும்.
குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் குடும்பங்களின் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டங்களுக்கும் முக்கியப் பங்கு வகிக்கும் இனிப்பு வகைகள் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்துவது பொதுமக்களின் மகிழ்ச்சியைக் குலைப்பதோடு, சாதாரண குடும்பங்களின் பொருளாதார நிலையையும் பாதிக்கும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய ஆவின் நிர்வாகம், இத்தகைய விலை உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும், மின்வாரியம், சிறைச்சாலை மற்றும் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அந்த ஆய்வுகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்துள்ள பயன்கள் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆய்வுகள் நடத்தப்படுவது வெறும் விளம்பரத்திற்காக அல்ல; நிர்வாகக் குறைபாடுகளைக் கண்டறிந்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சரின் ஆய்வுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து பிரச்சினைகள் எழுவதாகப் பொதுமக்கள் கருதும் நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.
மக்களின் அன்றாடத் தேவைகளையும் பொருளாதாரச் சூழலையும் கருத்தில் கொள்ளாமல், பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்துவது மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். விலைவாசி உயர்வால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதே அரசின் கடமையாகும். எனவே, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விலையிலேயே அவற்றை விற்பனை செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஆவின் நிர்வாகத்தையும் தவெக அரசையும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பிரபல சமையல் கலைஞரும், தனது தனித்துவமான சமையல் திறமையால் மக்களின் மனதில் இடம்பிடித்தவருமான செஃப் தாமு அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது சமையல் கலைத்திறன், எளிமையான அணுகுமுறை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகப் பலருக்கும் சமையல் கலையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திய அவரது மறைவு, சமையல் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#chefdamu -
John Pandian
@JohnPandianTMMK
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-ஆம் ஆண்டு சதய விழா!
தமிழர்களின் வீரத்தையும், பெருமையையும், கலை மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பையும் உலகிற்கு எடுத்துரைத்து, தமிழர் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். அவர் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில், தமிழர்களின் கட்டிடக்கலைத் திறமைக்கும், பண்பாட்டுப் பெருமைக்கும் உலகளாவிய சான்றாகத் திகழ்கிறது.
மாபெரும் கடற்படையையும் வலிமையான படைத்துறையையும் உருவாக்கி, கடல் கடந்த படையெடுப்புகள் மூலம் சோழப் பேரரசின் செல்வாக்கை விரிவுபடுத்திய மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்றுச் சிறப்புகளைப் போற்றுவோம்!
சதய விழா நன்னாளில், தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த மாமன்னர் ராஜராஜ சோழனுக்குப் புகழ் வணக்கம் செலுத்துவோம்!
#rajarajachozhan -
John Pandian
@JohnPandianTMMK
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! 🌺🙏
உழைப்பும், கல்வியும், அறிவும் நம் வாழ்வில் உயர்வைத் தரட்டும்! தொழில் வளம் பெருகி, இல்லங்களில் மகிழ்ச்சி மலர்ந்து, அனைவரின் வாழ்விலும் வெற்றியும், செல்வமும், நிம்மதியும் நிறைந்திடட்டும்!
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
#ayuthapoojai #saraswathipoojai -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் திரையிசையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, கிராமிய இசையையும் மக்களின் வாழ்வியலோடு இணைத்து, தனது இனிய இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது இசைப் பயணத்தின் மூலம் எண்ணற்ற வெற்றிப் பாடல்களை வழங்கி, தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் தேவா அவர்கள். அவரது இசையும், துள்ளலான தாளங்களும், மண்ணின் மணம் மாறாத பாடல்களும் என்றும் தமிழ் மக்களின் நினைவுகளில் வாழும். அவரது மறைவு தமிழ் இசையுலகிற்கும், திரையுலகிற்கும், தமிழக மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் - வழக்கறிஞர்,முனைவர் . திருமதி ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தங்களின் தலைமைப் பண்பு, அறிவாற்றல், விடாமுயற்சி மற்றும் சமூகநீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்ற அவர், சட்டத்துறையில் நீதியை நிலைநாட்டும் பணியிலும், மக்கள் நலனுக்கான செயல்பாடுகளிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியிலும் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தங்களின் பணி என்றும் பாராட்டுக்குரியது.
பொதுச் செயலாளர் அவர்கள் உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து, சமூகநீதி மற்றும் சமத்துவம் நிலைபெறத் தங்களின் சேவை மேலும் சிறப்புடன் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐
@priscillaTMMK -
John Pandian
@JohnPandianTMMK
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள்!
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் முன்னேற்றத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்.
எளிமை, நேர்மை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர். கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள் என்று இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டியவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவரது பிறந்தநாளில், அவரது அறிவியல் சிந்தனைகளையும், உயர்ந்த இலட்சியங்களையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம்!
#drabjabdulkalam -
John Pandian
@JohnPandianTMMK
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் மருத்துவர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும், மனநிறைவுடனும் வாழ்ந்து, தொடர்ந்து மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அவரது பொதுவாழ்வுப் பயணம் மேலும் சிறக்கவும், மக்கள் நலனுக்கான அவரது பணிகள் தொடர்ந்து வெற்றிபெறவும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@draramadoss -
John Pandian
@JohnPandianTMMK
சுதந்திர போராட்ட வீரர், சமூகநீதி போராளி, தியாகி வே. இமானுவேல்சேகரன் அவர்களின் 102-ஆவது ஆண்டு பிறந்த நாள் மற்றும் அரசு விழாவை முன்னிட்டு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் - தென்தலைமை அலுவலகத்தில் வைத்து அலங்கரித்து வைக்கப்படுள்ள தியாகியாரின் திருவுருவப்படத்திற்கு 09.10.2026 இன்று கழக நிர்வாகிகளுடன் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினோம்.
இந்நிகழ்வில், தலைமை நிலையச் செயலாளர் திரு.சேகர் அவர்கள், மாவட்டச் செயலாளர் திரு.தோழர் கண்மணிமாவீரன் அவர்கள், புறநகர் மாவட்டச் செயலாளர் திரு.மகேஷ் அவர்கள், மாவட்ட தலைவர் திரு.மோகன் அவர்கள், மாநகர் பொருளாளர் திரு.முருகன் அவர்கள், மகளிரணி நிர்வாகிகள்: திருமதி.வசந்தி அவர்கள், திருமதி.புவனேஸ்வரி அவர்கள், மாவட்ட நிர்வாகிகள்: திரு.மணிமாறன் அவர்கள், திரு.முத்துப்பாண்டி அவர்கள், திரு.தங்கராஜ் பாண்டியன் அவர்கள், இராஜை திரு.பரமசிவ பாண்டியன் அவர்கள், திரு.டிக் முத்து அவர்கள், திரு.முரசு பாண்டியன் அவர்கள், திரு.தேவேந்திர சுதாகர் அவர்கள், நெல்லை திரு.மணிகண்டன் அவர்கள், திரு.சுரேஷ் பாண்டியன் அவர்கள், திரு.துரைப்பாண்டி அவர்கள், திரு.பா.பரமசிவ பாண்டியன் அவர்கள், திரு.சிவக்குமார் அவர்கள், திரு.தர்மராஜ் அவர்கள், திரு.மு.பரமசிவ பாண்டியன் அவர்கள், திரு.மகாராஜன் அவர்கள், திரு.ராம்குமார் அவர்கள், திரு.சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். -
John Pandian
@JohnPandianTMMK
தாய்நாட்டின் மீதும், தாய்மண்ணின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரன் அவர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றவர்.
அடக்குமுறைக்கு உள்ளான பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த வீரத் தியாகி வே.இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் சமூகநீதிக்கான அர்ப்பணிப்பையும் போற்றிப் பெருமையுடன் நினைவு கூர்வோம்.
#immanuvelsekaranar #thiyagiimmanuvelsekaran #102birthday -
John Pandian
@JohnPandianTMMK
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்!
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் மகத்தான பங்களிப்பை வழங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்
நினைவு நாள் இன்று.
எளிமை, நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றைத் தனது வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக
அயராது உழைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுகளையும், மக்கள் பணியையும் போற்றி வணங்குவோம்.
#kamarajar #memorialday -
John Pandian
@JohnPandianTMMK
மகாத்மா காந்தி ஜெயந்தி!
“அஹிம்சையே உயர்ந்த ஆயுதம்” என்ற கொள்கையை உலகிற்கு எடுத்துக்காட்டி, உண்மை மற்றும் அகிம்சை வழியில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமையேற்ற மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை இன்று போற்றுகிறோம்.
சத்தியம், அகிம்சை, எளிமை, சகோதரத்துவம், தூய்மை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய காந்தியடிகளின் உயரிய கொள்கைகளை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.
அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி
நல்வாழ்த்துக்கள்...
#gandhijeyandhi -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றச்சாட்டு அறிக்கை ரத்து – தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!
நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் (A1) பெற்றோர்களான சரவணன் (A2), கிருஷ்ணகுமாரி (A3) ஆகியோர் மீதான குற்றச்சாட்டு அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு குற்றவழக்கில் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று, இருதரப்பினரின் வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த பின்னரே குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும். ஆனால், விசாரணை முழுமையாக நடைபெறுவதற்கு முன்பே குற்றச்சாட்டு அறிக்கை ரத்து செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு சட்டரீதியான கேள்விகள் எழுகின்றன.
குறிப்பாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணி மற்றும் வழக்கின் முழுமையான சூழ்நிலைகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். சரவணன் கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், மற்றொரு கொலை வழக்கில் கூலிப்படையினருடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், கவின்கொலை வழக்கில் சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு.
எனவே, இந்த விவகாரத்தில் சட்டரீதியான அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உரிய மேல்முறையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
@CMOTamilnadu #kavinissue -
John Pandian
@JohnPandianTMMK
கல்வி, சமூக நலன் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர். தமிழ் மொழியின் மீதும், தமிழர் நலன் மற்றும் தாய்நாட்டின் மீதும் ஆழ்ந்த பற்றும் அக்கறையும் கொண்டிருந்தவர். தமிழ் ஊடகத் துறையில் அவர் ஏற்படுத்திய முன்னோடியான மாற்றங்களும், சமூக முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளும் என்றும் நினைவுகூரத்தக்கவை.
சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரது புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்த அமைச்சர் வன்னியரசுவின் விளக்கம் – தனிப்பட்ட விருப்பத்தை அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது!
சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து “பரிசீலிப்போம்” என்றுதான் அமைச்சர் வன்னியரசு கூறியதாகவும், தனது தனிப்பட்ட விருப்பம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நான் அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, “என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை நான் எங்கும் கூறவில்லை. விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றுதான் கூறினேன். இறுதி முடிவை அரசு தான் எடுக்கும்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரின் விளக்கத்தைப் பெறுவதற்கு முன்பு, அவரது கருத்து குறித்து நானும் கண்டனத்தை பதிவு செய்திருந்தேன். ஆனால் அவரிடம் நேரடியாகப் பேசியபோது, அவர் கூறிய கருத்தின் பின்னணி வேறுபட்டது என்பது தெளிவாகியது.
ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதை சில அரசியல் தரப்பினர் விரும்பவில்லை என்ற அடிப்படையில் அவரது ஒவ்வொரு கருத்தையும் அரசியல் சர்ச்சையாக மாற்றுவது ஜனநாயக அரசியலுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல.
மாட்டிறைச்சி விவகாரத்தில் அமைச்சர் கூறியதாக வெளியான கருத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதும், சில அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை அறிவிப்பதும், உண்மையான விளக்கத்தைப் பெறாமல் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் ஒரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பத்தை அவருடைய கருத்தாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது.
#vanniarasu -
John Pandian
@JohnPandianTMMK
"ஜெம் வீரமணிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; பணம் பறிக்க நினைத்தவர்கள் ரஞ்சன் குமாரும், சாந்தியுமே"
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பு
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதைப் போல, மாட்டிறைச்சியும் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்திருப்பது சர்ச்சை ஏற்படுத்தும் கருத்து தெரிவித்துள்ளார். மிக எச்சரிக்கையோடு முடிவெடுக்கவேண்டும்!
சமூக நீதி விடுதிகள் என்பது அரசின் நலத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் விடுதிகளாகும். அங்கு வழங்கப்படும் உணவு தொடர்பான எந்த முடிவும் மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, உணவு விருப்பம் மற்றும் அவர்களின் குடும்ப, பண்பாட்டு உணர்வுகளை கருத்தில் கொண்டே எடுக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட உணவை வழங்குவது குறித்து அரசு பரிசீலிப்பதற்கு முன்பாக, அந்த விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கருத்து என்ன? அவர்களின் உணவு விருப்பம் என்ன? பெற்றோரின் கருத்து என்ன? என்பதைக் கண்டறிவதே முதன்மையானதாக இருக்க வேண்டும்.
மாட்டிறைச்சி உண்பது என்பது சில தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் உணவுப் பழக்கமாக இருக்கலாம். அவரவர் உணவு விருப்பத்தை மதிப்பது அவசியம். அதேவேளையில், பல்வேறு சமூகங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயிலும் சமூகநீதி விடுதிகளில் உணவு வழங்குவது தொடர்பாக எந்தவொரு முடிவும் அவசரமாகவோ, ஒருதலைப்பட்சமாகவோ எடுக்கப்படக் கூடாது. அரசு விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் அளவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், மாணவர்களின் உணவு தொடர்பான விஷயத்தை தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மேலும், மாணவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அல்லது உணர்வுப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில், அனைத்து தரப்பு மாணவர்களின் உணர்வுகளையும் மதித்து, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் பொறுப்புடன் அரசு செயல்பட வேண்டும். மாணவர் விடுதிகளில் ‘மாட்டிறைச்சி’ வழங்குவது குறித்து வன்னியரசு தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் விடுதிகளில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய முடிவுகளை அரசு பரிசீலிக்கக் கூடாது. எனவே, வன்னியரசு தனது ‘மாட்டிறைச்சி’ குறித்த கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @VanniArasu_VCK #ministervanniarasu #vanniarasu #socialjusticeminister
- தமிழினவேந்தர்,
பெ.ஜான்பாண்டியன் MA.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
22.09.2026 -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி உப்பளங்களை தமிழக அரசு கையகப்படுத்தும் முயற்சிக்கு கடும் கண்டனம்! உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக உப்பளத் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் சிறு உப்பள உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், உப்பளங்களை அழித்து சிப்காட் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது; உப்பளங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தொழிற்சாலையை வரவிட மாட்டோம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். தவெக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு; தூத்துக்குடி - உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன்; உப்பளத்தை அழிக்க விடமாட்டேன் என்றும் கூறி இப்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?
தூத்துக்குடியின் பொருளாதாரத்திலும், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திலும் உப்பளத் தொழில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கடும் வெயில், கடினமான பணிச்சூழல் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உழைத்து வரும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது. உப்பளங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையின் பின்னணி, அதன் சட்டப்பூர்வ தன்மை, நில உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு முழுமையான வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்படும் மக்களிடம் உரிய கருத்துக்கேட்பு நடத்தாமல் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.
மேலும், உப்பளங்களை அழித்து சிப்காட் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தால் 100-க்கு மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்களும், 20-ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்களும், மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள்; உப்பளத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், சிறு உப்பள உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் அரசு உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தையும், பாரம்பரிய தொழிலையும் பாதுகாப்பது அரசின் முக்கியப் பொறுப்பாகும். எனவே, தூத்துக்குடி உப்பளங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் இருந்தால் அவற்றை உடனடியாக நிறுத்தி, உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
- தமிழினவேந்தர்,
பெ.ஜான்பாண்டியன் MA.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
22.09.2026 -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறு நிறுவனத்திடமோ அல்லது தனியார் நிறுவனத்திடமோ ஒப்படைக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசே முன்வந்து சென்னை விமான நிலையத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரியிருப்பதாக வெளியாகும் தகவல் கவலைக்குரியதாகும்.
சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு, நிர்வாகம், பயணிகள் வசதிகள் அல்லது செயல்பாடுகளில் குறைபாடுகள் இருப்பின், அவற்றை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேவையான நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுத்துறை கட்டுப்பாட்டிலேயே விமான நிலையத்தை மேம்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் போது, சேவை நோக்கத்தை விட வர்த்தக மற்றும் லாப நோக்கங்கள் முன்னிலைப்படலாம் என்ற கவலைகள் எழுகின்றன. மேலும், விமான நிலையக் கட்டணங்கள், பயணிகள் சேவைகள், ஊழியர்களின் பணிநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அதன் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.
சென்னை விமான நிலையம் தமிழகத்தின் முக்கியமான விமானப் போக்குவரத்து மையமாக மட்டுமல்லாமல், மாநிலத்தின் பொருளாதாரம், தொழில், சுற்றுலா மற்றும் பொதுமக்களின் அன்றாடப் பயணத்துடன் தொடர்புடைய முக்கிய பொதுச் சொத்தாகவும் உள்ளது. எனவே, அதன் எதிர்கால நிர்வாகம் தொடர்பான எந்தவொரு முடிவும் வெளிப்படைத்தன்மையுடனும், பொதுநலனை முதன்மைப்படுத்தியும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தும் எடுக்கப்பட வேண்டும்.
எனவே, சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்து, சென்னை விமான நிலையத்தை பொதுத்துறை கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
John Pandian
@JohnPandianTMMK
சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து, பட்டியல் சமூக மக்களின் உரிமை, முன்னேற்றம் மற்றும் சமூக சமத்துவத்திற்காக அயராது பாடுபட்ட அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.
சமத்துவம், சமூக நீதி, மனித உரிமை ஆகிய உயரிய கொள்கைகளுக்காக அவர் முன்னெடுத்த போராட்டங்களும், தொலைநோக்குச் சிந்தனைகளும் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டுகின்றன.
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றி, அவர் வலியுறுத்திய சமூகநீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை நிலைநாட்டிட இந்நாளில் உறுதியேற்போம். -
John Pandian
@JohnPandianTMMK
Happy Birthday, Modi Ji!
Warm birthday wishes to Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji. May you be blessed with good health, happiness, and continued strength to serve the nation.
May your vision, dedication, and leadership continue to inspire millions and contribute to the progress and development of our great nation.
Wishing you a very Happy Birthday, Modi Ji!
@narendramodi #happybdaypmmodi -
John Pandian
@JohnPandianTMMK
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானின் அருளால், தடைகள் அனைத்தும் நீங்கி,
வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறட்டும்! அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
#ganeshchaturthi -
John Pandian
@JohnPandianTMMK
"பட்டியல் வெளியேற்றம்" என்பது ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால வேண்டுகோள்!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் மணிமண்டபம்; கல்யாண மண்டபம் போன்று உள்ளது; அதனை தவெக அரசு மறுசீரமைப்பு செய்து தரவேண்டும்!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
"பட்டியல் வெளியேற்றம்" என்பது ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால வேண்டுகோள்! "தேவேந்திரகுல வேளாளர்களின்" நியாயமான வேண்டுகோளை ஏற்று, பட்டியலிலிருந்து வெளியேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மத்திய அரசிடம் ஆளும் தவெக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகநீதிப் போராளியுமான, தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.
சமூக அநீதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுத்து, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது தியாகத்தையும்,சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் போற்றுவோம்.!
#immanuelsekaran #immanuelsekaranmemorial -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் மொழியின் இனிமையையும், நகைச்சுவையுடன் கூடிய சிந்தனைகளையும் பட்டிமன்றங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்த சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திரு. சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், எளிமையான அணுகுமுறையாலும் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து “அனைவரும் தமிழர்” என்ற ஒற்றுமை உணர்வை வலியுறுத்தியதுடன், தமிழ் மொழியின் பெருமை, பண்பாடு மற்றும் தமிழர் வாழ்வியல் சிந்தனைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் அளப்பரிய பங்காற்றியவர்.
அவரது நகைச்சுவை கலந்த அறிவார்ந்த பேச்சுகளும், சமூக சிந்தனைகளும், தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகளும் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாள்!
“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!”
பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், கல்வி மற்றும் விடுதலை உணர்வு ஆகிய உயர்ந்த சிந்தனைகளைத் தனது புரட்சிகரமான எழுத்தாலும், கவிதைகளாலும் மக்களிடம் விதைத்த முண்டாசுக் கவிஞர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு நாளில், அவரது முற்போக்குச் சிந்தனைகளையும் புரட்சிகரக் கருத்துகளையும் நெஞ்சில் ஏந்தி, அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்குவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
செப் - 11
தேசப்பற்றுடன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பிரிட்டிஷ் இராணுவத்திலும் சுதந்திர இந்திய இராணுவத்திலும் பணியாற்றிய வீரத் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள், தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய சமூகப் போராளி. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த அவரது தியாகமும் போராட்டமும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
சமூக நீதியும், சமத்துவமும் நிலைபெற அவர் ஆற்றிய பணிகளை நெஞ்சில் நிறுத்தி, அவரது தியாகத்தையும் வீரத்தையும் தலைவணங்கி நினைவுகூர்வோம்.
தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 69-வது நினைவு நாளில், அவர் கண்ட சமூக நீதியின் கனவை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம். -
John Pandian
@JohnPandianTMMK
செப் - 08
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் மாவீரர் சுந்தரலிங்கம் அவர்கள்.
பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் படைத் தளபதியாக இருந்து, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கட்டும். மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
FQL நிறுவன பணமோசடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும்!
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் FQL நிறுவனம் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் பணமோசடியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
மக்கள் சில நேரங்களில் தவறான வழிகாட்டுதலால் ஏமாற்றப்படலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை காப்பதும், அவர்களின் இழப்புகளுக்கு தீர்வு காண்பதும், மோசடிகளைத் தடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமை. எனவே, FQL பணமோசடியில் பாதிக்கப்பட்ட மக்களின் புகார்களை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு கிடைக்க தவெக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKPartyHQ -
John Pandian
@JohnPandianTMMK
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் அறிவொளி ஏற்றி, அவர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது.
“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்ற சொல்லுக்கேற்ப, அறிவையும் நல்வழியையும் வழங்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கு என்றும் நன்றியும் மரியாதையும் உரித்தாகுக!
#teachersday -
John Pandian
@JohnPandianTMMK
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்
ஆங்கிலேயர்களை எதிர்த்து, தன்னம்பிக்கையுடன் கப்பல் ஓட்டி நம் தேசத்தின் தன்மானத்தை காத்த கப்பலோட்டிய தமிழன் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவரது பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
#வஉசி #வஉசிதம்பரனார் -
John Pandian
@JohnPandianTMMK
சுயமரியாதை, சமூக சமத்துவம், சமூக உரிமை மீட்பு ஆகியவற்றிற்காக அர்ப்பணிப்புடன் போராடிய சமூகநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 69-வது நினைவேந்தல் நிகழ்வு செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறுகிறது.
இந்நிகழ்விற்கு அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் இந்நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் வரக்கூடாது எனக் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.
நினைவேந்தல் நிகழ்வு அனைவருக்குமானது. ஒற்றுமையும் சகோதரத்துவமும் காக்கப்பட வேண்டும்!
“தேவேந்திர குல வேளாளர்” மக்களின் உணர்வுகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் சில தலைவர்களின் பின்னால் செல்வதை தவிர்த்து, சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும்.
File Image -
John Pandian
@JohnPandianTMMK
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு வரவேற்கத்தக்கது; கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்!
============================
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 01.09.2026 இன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். கடந்த ஜூன் 12ஆம் தேதி போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு ஏதுவாக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் கடந்து கடைமடை வரை முழுமையாக சென்றடைவதை "தமிழக அரசு" உறுதி செய்ய வேண்டும்.
மேட்டூர் அணையின் நீர் காவிரி டெல்டா விவசாயத்திற்கும், பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பெரும் ஆதாரமாக விளங்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
குறிப்பாக, திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரி பாசனப் பகுதிகள் முழுவதும் தடையின்றி சென்றடைந்து, சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறுவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் அதிகளவில் நெல் உற்பத்தி செய்து, நல்ல மகசூல் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும். மேலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான தரமான விதைகள், போதிய அளவிலான உரங்கள் மற்றும் பயிர்க்கடன் வசதிகள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதோடு, இடுபொருள் உதவித்தொகை, இயந்திர நடவு ஊக்கத்தொகை, உர மானியம் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்குவதுடன், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிறப்பு சம்பா சாகுபடி தொகுப்பு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, காவிரி பாசனப் பகுதிகளிலும் டெல்டா மாவட்டங்களிலும் விவசாயம் செழித்து நடைபெற வேண்டும். விவசாய உற்பத்தி பெருகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு, தமிழகத்தின் வேளாண் வளர்ச்சி புதிய உயரத்தை எட்ட வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
John Pandian
@JohnPandianTMMK
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் இந்தியர்கள், தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருவது மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாளத்தில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கியிருந்த தமிழர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தது ஆறுதலளிக்கிறது. அவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் திரும்பச் செய்த மீட்புப் பணியினருக்கும், இதற்காக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளையில், நேபாளத்தில் இன்னும் சிக்கித் தவித்து வரும் தமிழர்கள் மற்றும் பிற இந்தியர்களை விரைந்து கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு, குறிப்பாக வெளியுறவுத் துறையின் மூலம் தீவிரப்படுத்த வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து, அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ள ஒவ்வொரு தமிழரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் விரைவில் சேரும் வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
ஆகாஷ் உயிரிழப்பு விவகாரம்: 6 போலீசார் மீது வழக்குப்பதிவு – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்பு!
------------------------------------------------
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் அவர்கள், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆகாஷ் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவரது மரணம் தொடர்பான விவரங்களையும் நேரில் கேட்டறிந்தேன். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அன்றைய ஆளும் அரசுக்கு கடும் கண்டனத்தையும், வலியுறுத்தி தொடர்ந்து பதிவு செய்தோம்.
இந்நிலையில், ஆகாஷின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் எனக் கூறப்படும் காவல் ஆய்வாளர் திலீப், சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் 4 காவலர்கள் என மொத்தம் 6 பேர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் எனது சார்பிலும் வரவேற்கின்றேன்.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பொதுமக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் காவல்துறை முழுமையான பொறுப்புடன் செயல்பட வேண்டும். விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமான தாக்குதல்கள், அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெறாத வகையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆகாஷ் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நேர்மையான, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பினோம்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, எங்களது கோரிக்கையை ஏற்று 6 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கிறோம். மக்களின் நம்பிக்கையான தீர்ப்பை மதித்து, நீதியின் பக்கம் நின்று நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில், வழக்குப்பதிவு செய்வதோடு நடவடிக்கை நின்றுவிடாமல், ஆகாஷின் உயிரிழப்பிற்கான முழுமையான உண்மை வெளிக்கொணரப்பட்டு, சட்டப்படி உரிய நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் காவல்துறையில் உரிய கண்காணிப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நன்னாளான புனித மிலாடி நபி தினத்தில், அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் உலகெங்கும் நிலைத்திடட்டும்.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய மிலாது நபி நல்வாழ்த்துக்கள்! 🌙✨ -
John Pandian
@JohnPandianTMMK
கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் உயிரைப் பறிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவர்கள் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளைத் தேடிச் சென்றதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கும் நிலையில், அவர்கள் வேட்டையாடச் சென்றதாக கர்நாடக வனத்துறை கூறுகிறது. இரு தரப்பினரின் மாறுபட்ட தகவல்களுக்கு மத்தியில், உண்மை என்ன என்பதை வெளிக்கொணர வேண்டியது கர்நாடக அரசின் பொறுப்பாகும்.
எனவே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து எந்தவித பாரபட்சமுமின்றி, வெளிப்படையான முறையில் முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை உடனடியாக வெளிக்கொணர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் உரிய மற்றும் போதுமான நிவாரணத் தொகையை வழங்குவதுடன், காயமடைந்தவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர், அருமைத் தம்பி திரு. நடேஷ் அரவிந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இப்பிறந்தநாளில் தங்களின் வாழ்வில் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் வெற்றிகள் அனைத்தும் நிறைந்து, தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியிலும் சிறப்பும், உயர்வும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திசையன்விளை பேரூராட்சியின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் தங்களின் பங்களிப்பு தொடர்ந்து சிறக்கவும், மக்கள் பணி மேலும் சிறப்புடன் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
சுதந்திர தின வாழ்த்துகள்!
நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும், உடைமைகளையும் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை இந்நன்னாளில் நன்றியுடன் நினைவு கூர்வோம். அவர்களின் தியாகமும், வீரமும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தான் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைசிறந்த மேதைகளின் தொலைநோக்குப் பார்வையையும் இந்நாளில் போற்றுவோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடையாளத்தை காத்து, அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சமூகநீதி, வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் கிடைக்கும் வலிமையான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ஜெய் ஹிந்த்! -
John Pandian
@JohnPandianTMMK
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் திரு.அமுதன், சக மாணவர்களுடன் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், கல்லூரியில் நடைபெறும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து மாணவர் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருப்பது கவலையளிக்கிறது.
கல்லூரி வளாகங்களிலும் இளைஞர்கள் மத்தியிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பது எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. போதைப்பொருள் பழக்கம் மாணவர்களின் கல்வி, வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை சீரழிப்பதுடன், அவர்களை குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைக்கும் தள்ளக்கூடும்.
‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை வெறும் அறிவிப்புகளாலும் உறுதிமொழிகளாலும் மட்டும் அடைய முடியாது. கல்வி நிறுவனங்களைச் சுற்றி போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
மேலும், போதைப்பொருள் பயன்பாடு அல்லது விற்பனை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியம். தகவல் அளித்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முழுமையாக வெற்றி பெறச் செய்ய முடியாது.
மாணவர் அமுதனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற, விரைவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், கல்வி நிறுவனங்களை போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சூழலாக மாற்றவும் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்த்தாய் வாழ்த்து — தமிழக அரசின் தனித் தீர்மானத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்பு!
தமிழகத்தின் மொழி, பண்பாடு மற்றும் தமிழர் அடையாளத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது அமைப்புகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் தனித் தீர்மானத்தை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனதார வரவேற்கிறோம்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! l உதயநிதியை கைது செய்தது தேவையற்றது...
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
2026–27 வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் புறக்கணிப்பு வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம்!
===============================
தமிழக அரசின் 2026–27 வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்புகளையும் அடிப்படைத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளது என்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
இயற்கை வேளாண்மையின் முன்னோடியான நம்மாழ்வார் அவர்களின் பெயரில் வேளாண் கல்வி நிறுவனங்கள் அமைத்தல் வரவேற்கத்தக்கது. ஆனால் வேளாண் துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் முயற்சியில் தவெக அரசு செயல்பட வேண்டும், விவசாயிகளின் முழு கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை, இலவச மின்சாரம் வழங்குவது குறித்து அறிவிப்புகள் ஏதும் இல்லை ; 2 லட்சம் விவசாயிகள் இதற்காக பதிவு செய்துள்ளனர் உள்ளிட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் பெறவில்லை என்பது விவசாயிகளின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது தவெக அரசு.
விவசாயம் என்பது வெறும் அறிவிப்புகளால் வளரக்கூடிய துறை அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உறுதியான திட்டங்கள், போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் காலதாமதமின்றி செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளே உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதாகும்.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும்; விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற வேண்டுமெனில், அறிவிப்புகளைத் தாண்டி செயல்பாடுகளே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறோம்.
@CMOTamilnadu #tnbudget #agribudget2026 -
John Pandian
@JohnPandianTMMK
தஞ்சையில் காவிரி உரிமைப் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது.
அதேநேரத்தில், அந்தப் பேச்சின் அடிப்படையில் அவசரமாக கைது செய்திருப்பதும் ஜனநாயக நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. அரசியல் மோதல்களில் நேரத்தை செலவிடாமல், மேகதாது, காவிரி, விவசாயிகள், மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சட்டநடைமுறைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் பின்பற்றப்பட்டு, தமிழகத்தில் அமைதியான அரசியல் சூழல் நிலவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu @Udhaystalin -
John Pandian
@JohnPandianTMMK
மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு.ராஜ்பூஷண் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதில், தமிழக மக்களுக்கும் குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் அவசியம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்திருப்பது, மேகதாது அணை விவகாரத்தில் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலான நீர் பகிர்வு நடைமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றாமல், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்குவதில் கர்நாடக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இந்நிலையில், மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுவது காவிரி டெல்டா விவசாயத்திற்கும், தமிழ்நாட்டின் குடிநீர் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். தமிழகத்தின் சுமார் 25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்கும், சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் நீர்வரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் மத்திய அரசு துணைபோகக் கூடாது.
எனவே, தமிழ்நாட்டின் நீருரிமையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu #cauvery #mekedatu #tamilnadu #savecauvery #deltafarmers #waterrights -
John Pandian
@JohnPandianTMMK
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகத்துறையினரை, தவெக எம்.எல்.ஏ. திரு. கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதுடன், அவர்களது செல்போன்களில் பதிவாகியிருந்த வீடியோ ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையினர், மக்களின் நலன் கருதி உண்மைகளை வெளிக்கொணரும் முக்கியப் பொறுப்பை வகித்து வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதும், தாக்குவதும், செய்தி ஆதாரங்களை அழிக்க முயல்வதும் ஊடகச் சுதந்திரத்தின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும்.
அதிகாரத்தின் பலத்தை பயன்படுத்தி உண்மைகளை மறைக்க முயல்வது எந்த ஜனநாயக ஆட்சிக்கும் அழகல்ல. ஊடகவியலாளர்கள் தங்கள் பணியை சுதந்திரமாகவும், அச்சமின்றியும் மேற்கொள்ள வேண்டிய சூழலை உறுதி செய்வது அரசின் அடிப்படைப் பொறுப்பாகும்.
எனவே, இந்தச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் ஊடகத்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்து, ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினர் அணிஸ் என்பவர் பெண் வழக்கறிஞரிடம் ஒருவரிடம் ₹15 லட்சம் வழங்கினால் பத்து நாட்களுக்குள் பணிநியமன ஆணை பெற்றுத் தரப்படும் எனக் கூறப்படுவதாக வெளியாகியுள்ள தொலைப்பேசி உரையாடல், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அரசு வழக்கறிஞர் நியமனங்களைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் புகார்களும் எழுந்துள்ளன. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் கேட்கப்படுவதாக மூத்த அமைச்சர் மீது புகார் அளித்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல சம்பவங்கள் பொதுமக்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளியான இந்த புதிய புகாரும் அந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
"யாராவது லஞ்சம் கேட்டால், இது விஜய் ஆட்சி; லஞ்சம் கொடுக்க முடியாது என்று துணிச்சலாக சொல்லுங்கள்" என்று பொதுமக்களிடம் வலியுறுத்திய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தங்களது கட்சி நிர்வாகி மீது எழுந்துள்ள இந்த லஞ்சப் புகாருக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? கட்சி நிர்வாகிகளுக்கும் அது பொருந்தாதா?
அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது தகுதி, திறமை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற வேண்டிய மிக முக்கியமான நடைமுறையாகும். ஆனால், இத்தகைய புகார்கள் தொடர்ந்து வெளியாகும் சூழல், சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக வெளியாகியுள்ள லஞ்சப் புகார் குறித்து உரிய மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தி, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி சிறப்பான சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது. இத்தகைய சாதனைகள் இளம் தலைமுறையினருக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றன. எதிர்காலத்திலும் மேலும் பல சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இந்தியாவின் ஏவுகணை நாயகனும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தில், "கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுத்துங்கள்" என்ற அவரது தாரக மந்திரத்தை மாணவர்களின் மனங்களில் விதைத்து, நாட்டிற்காக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்து பெருமிதம் கொள்கிறேன்!
#drapjkalam #apjabdulkalam -
John Pandian
@JohnPandianTMMK
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நிகழும் விபத்துகள் மிகுந்த கவலையளிக்கின்றன. இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக, காலமுறைப்படி பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதும் இருப்பதாக கடுமையான கேள்விகள் எழுகின்றன.
எனவே, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் உடனடியாக விரிவான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாத வகையில் நிரந்தர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திமுக - அதிமுக கூட்டணி அமைத்தால் அதில் தவறில்லை! | மக்களுக்கு நன்மை தரும் ஆட்சி வேண்டும்; சுயநல ஆட்சி வேண்டாம்! | அண்ணாமலை புதிய கட்சி
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மனதாரத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.
@drramadoss -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறி அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு, புழல் சிறை கைதி உயிரிழப்பு, தற்போது தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் என அடுத்தடுத்து வெளியாகும் காவல் காவலில் நிகழும் உயிரிழப்புகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்த நபர் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலம் தொடர்பான வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தின் உண்மை தன்மையை முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க வேண்டும்.
எனவே, தூத்துக்குடி காவல் மரண வழக்கில் உண்மை நிலையை வெளிக்கொணரும் வகையில் விரிவான விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அண்மைக்காலமாக தமிழகத்தில் நிகழ்ந்துள்ள காவல்நிலைய உயிரிழப்புகள் தொடர்பாக காரணங்களை ஆராய தனி விசாரணை ஆணையம் அமைத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை தவெக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலிறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்; தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
மக்கள் நலன் காக்கும் முக்கியத் திட்டத்திற்கு மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டியுள்ள தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பெருந்தலைவர் காமராஜர், கல்வி என்பது ஏழை மற்றும் எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து, கிராமம் தோறும் பள்ளிகளைத் திறந்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகுத்தார். மேலும், பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், மதிய உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, கல்வித் துறையில் ஒரு புதிய வரலாற்றைப் படைத்தார்.
அவரது தொலைநோக்கு சிந்தனையின் பயனாக, ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்று முன்னேறினர். அதனால், கல்வி வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" எனப் பெயரிடப்பட்டிருப்பது, அவருக்கு செலுத்தப்படும் பொருத்தமான மரியாதையாகும். மேலும், இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் தற்போது 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இந்த விரிவாக்கம், மாணவர்களின் ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.
பெருந்தலைவர் காமராஜரின் கல்வி மற்றும் சமூகநலக் கொள்கைகளைப் போற்றும் வகையில், காலை உணவுத் திட்டத்திற்கு அவரது பெயரைச் சூட்டிய, தமிழக அரசுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu #breakfastscheme #namechanged #tngovt #cmjosephvijay #tvkvijay -
John Pandian
@JohnPandianTMMK
ஜூலை 23
ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி, தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17 மாஞ்சோலை தியாகிகளுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரவணக்கம்!
அவர்களின் தியாகம் தொழிலாளர் உரிமைப் போராட்ட வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெறும். அவர்களின் நினைவு என்றென்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.
வீர வணக்கம்! -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களை ஒட்டிய பகுதியில், கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், காலாவதியான மருந்துப் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.
ஜம்பு நதிப் படுகையை ஒட்டிய பகுதியில் கொட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கழிவுகள், விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், சுற்றுச்சூழல் சீர்கேடையும், பொதுமக்களின் உடல்நலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக்கூடியவை.
அண்டை மாநிலங்களிலிருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கத் தவறியுள்ள தமிழக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இவ்வளவு பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்து கொட்டப்பட்டது எப்படி என்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டியவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு முறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
John Pandian
@JohnPandianTMMK
தென்மாவட்டங்களில் தொடரும் கொலைகள்! | ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் அவசியம்! | இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் மக்கள் சேவையை சாதியக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், மக்கள் நலப் பணியாக பார்க்க வேண்டும்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
Party Fund - ஐ ஒழிக்கமுடியாது l 6-மாதம் கழித்து தவெக நிலைமையை கூறமுடியும் நானும் காத்திருக்கிறேன் Wait and See l ஊழல் வாங்கி பழகியவர்கள் மாறமாட்டார்கள்!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தாலிக்குத் தங்கம் திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திய திட்டம் – புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா l தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பயனற்றது l பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும், அது விஷம்தான்...
#tvk #tvkvijay #thaaimaman #aiadmk #jayalalithaa #politicaldrama #karurissue #govtjobsThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
"டாஸ்மாக்" கடைகளை மூடுவதாகக் கூறி, "பார்"களை அதிகளவில் திறப்பு! தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி! த.வெ.க. அரசு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுமா?
#tasmac #tasmacbar #electrical #ebbill #tvk #tvkvijayThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
காமராசர் ஆட்சி ஃபார்முலாவை பின்பற்றும் விஜய்! | திமுக, அதிமுகவுக்கு கூட்டணி மட்டும்; ஆட்சியில் பங்கு இல்லை!
#dmkvsadmk #kalaingarkarunathi #kamarajar #tngovt #tvk #tvkvijayThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையாக, விக்ரம்–1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ள வேண்டிய மகத்தான நிகழ்வாகும். இந்த மாபெரும் சாதனையை சாத்தியமாக்கிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இந்தத் திட்டத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி, இந்தியாவின் அறிவியல் திறன், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் விண்வெளித் துறையில் நாட்டின் தன்னம்பிக்கையை உலக அரங்கில் மேலும் உயர்த்தியுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற அறிவியல் சாதனைகள் தொடர்ந்து உருவாகி, இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத் துறைகளில் உலகின் முன்னணி நாடாக திகழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் கொண்டாடுவோம்.
@SkyrootA -
John Pandian
@JohnPandianTMMK
த.வெ.க. அரசால் ஊழல் குறைந்திருப்பது வரவேற்கத்தக்கது l சினிமா "டயலாக்" மற்றும் "கை செய்கை" தோரணைகள் ஆட்சியில் பலன் அளிக்காது l த.வெ.க. அரசு கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#tvk #vijay #dmk #aiadmk #cinema #dialogue #tvkvijay #cmotamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திராவிடக் கட்சிகளை மக்கள் ஏற்கவில்லை! l மாற்றத்தை மக்கள் விரும்பினர்! l
த.வெ.க. அரசுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும்!
#dmk #aiadmk #tvk #tmmk #tvkvijay #johnpandianThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை l அஇஅதிமுக தலைமை முடிவு சரியில்லை...
#johnpandian l #nda l #bjp l #tmmk l #aiadmkThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பத்திரிகையாளர் விஜயன் மீதான காவல்துறையின் நடவடிக்கை – பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது!
புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து, அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. கருத்துச் சுதந்திரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானதாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆதரவாக வாக்களிக்கும்படி பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளரும் பத்திரிகையாளருமான திரு.விஜயன் அவர்களுக்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்காக ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேரில் சம்மன் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் காவல்நிலையத்திற்கு வருமாறு வலியுறுத்தப்பட்ட நிலையில், அவர் காவல்துறையின் அழைப்பை மதித்து ஆஜராகி பல மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார்.விசாரணை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பின்னரும், மீண்டும் காவல்நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்ட அவர், நள்ளிரவு நேரத்தில் மீண்டும் ஆஜராகியபோது, உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மறுநாளும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அவர் நீண்ட நேரம் காவல்நிலையத்தில் வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காக சம்பந்தப்பட்டவர்களை அழைக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. ஆனால், அந்த அதிகாரம் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, விசாரணைக்கு ஒத்துழைக்கும் பத்திரிகையாளரின் தகவல் தொடர்பு சாதனங்களை உரிய நடைமுறைகள் இன்றி பறிமுதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பத்திரிகையாளர்களின் பணிச் சுதந்திரம், செய்தி சேகரிக்கும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவை ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாகும். அவற்றை அச்சுறுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே, பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும், காவல்துறையினருக்கு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும், கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @PttvNewsX -
John Pandian
@JohnPandianTMMK
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐🎉
என் செல்ல மகள், மருத்துவர் திருமதி. ஜா. வினோலின் நிவேதா அவர்களுக்கு,
இன்று உன் பிறந்தநாளான இந்த இனிய நாளில், ஒரு தந்தையாக என் இதயம் நிறைந்த அன்புடனும், அளவற்ற மகிழ்ச்சியுடனும், என் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்லாண்டுகள் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், இறையருளுடனும் வாழ்ந்து, மக்கள் சேவையில் தொடர்ந்து சிறந்து விளங்கி, வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@vinolinnivetha -
John Pandian
@JohnPandianTMMK
பழனி கோயில் விடுதிக் கட்டண உயர்வு: பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!
-------------------------------------xxxxxxxx---------------------
தமிழகத்தின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் பழனி அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் ரூ.600 முதல் ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பக்தர்கள் குறைந்த செலவில் பாதுகாப்பாக தங்கும் வசதியை வழங்கும் நோக்கில்தான் கோயில் விடுதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், தனியார் விடுதிகளுக்கு இணையாக கட்டணங்களை திடீரென அதிகரிப்பது, கோயில் விடுதிகளின் சமூகப் பொறுப்பையும் அடிப்படை நோக்கத்தையும் பாதிக்கும் செயலாகும்.
எனவே, பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விடுதிக் கட்டண உயர்வை தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். மேலும், எதிர்காலத்தில் பக்தர்களுக்கு கூடுதல் சுமையையும் சிரமத்தையும் ஏற்படுத்தும் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளையும், பக்தர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @tnhrcedept @RameshOffcl -
John Pandian
@JohnPandianTMMK
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், குட்கா விற்பனை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை தரப்பில் மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், நீதிபதியின் முன்னிலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முரண்பட்ட தகவல்கள் சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. எனவே, உண்மை நிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வருவது அவசியமாகியுள்ளது.
காவல் நிலையங்களும், சிறைகளும் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களை நன்னெறிப்படுத்துவதற்குமான இடங்களே தவிர, மனித உரிமை மீறல்கள் நடைபெறும் இடங்களாக ஒருபோதும் மாறக்கூடாது. ஏற்கனவே சாத்தான்குளம், திருப்புவனம் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது நாகர்கோவிலிலும் காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இந்த உயிரிழப்பு தொடர்பாக நீதித்துறை மேற்பார்வையில் வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தி, உண்மை நிலையை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். விசாரணையில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு அரசின் சார்பில் உரிய இழப்பீடும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
"கல்விக் கண் திறந்த கர்மவீரர்", "பெருந்தலைவர் " என்று மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், எனது புகழ் வணக்கம்!
அவரது எளிமை, நேர்மை, மக்கள் நலச் சிந்தனை மற்றும் தன்னலமற்ற சேவை மனப்பான்மை இன்றைய தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாக விளங்கட்டும். ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவர் மேற்கொண்ட கல்வி விரிவாக்கப் பணிகள், பள்ளிகள் அமைத்தல் மற்றும் மாணவர் நலத் திட்டங்கள் ஆகியவை தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் வரலாற்றுச் சாதனைகளாகத் திகழ்கின்றன.
"மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற உயரிய கொள்கையை தனது வாழ்வின் வழிகாட்டும் நெறியாகக் கொண்டு, மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வதே உண்மையான தலைமை என்பதை தனது வாழ்க்கை மூலம் உலகிற்கு உணர்த்திய மகத்தான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
🙏 புகழ் வணக்கம்! -
John Pandian
@JohnPandianTMMK
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்களுடன் இணைந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் வன்முறையாக நடந்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதோடு, மக்களின் உயிர், உடமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர், சமூக நலனுக்காக குரல் எழுப்பிய பள்ளி மாணவிகள் மீது வலுக்கட்டாயமாக நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவிகளை குற்றவாளிகளைப் போல நடத்துவதும், அவர்களின் ஜனநாயக உரிமையை ஒடுக்க முயல்வதும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான செயலாகும்.
அதேபோல், ஈரோடு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை கையாள்வது அரசின் முரண்பாடான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
எனவே, போராட்டத்தின் போது காயமடைந்த மாணவிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மேலும், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கோடாலி பகுதியில் மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
"அஞ்ஞாடி" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் இலக்கியத்தின் பேராசான், எழுத்தாளர் திரு. பூமணி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.
கோவில்பட்டி அருகிலுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர், நீண்டகாலமாக கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் வசித்து வந்தார். கரிசல் மண்ணில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, உணர்வுகள், போராட்டங்கள் ஆகியவற்றை தனது படைப்புகளில் உயிரோட்டத்துடன் பதிவு செய்த சிறந்த படைப்பாளி. அவர் இயக்கிய "கருவேலம் பூக்கள்" திரைப்படம் பெரும் கவனம் பெற்றது. மேலும், அவரது "அஞ்ஞாடி" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். அவரது "வெக்கை" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான "அசுரன்" திரைப்படம், அவரது எழுத்தின் ஆழத்தையும் வீச்சையும் உலகறியச் செய்தது.
எழுத்தாளர் திரு.பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தென்னிந்திய திரையிசையின் இணையற்ற குரலாக விளங்கிய, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை தனது இனிய குரலால் கவர்ந்த பிரபல பாடகி திருமதி.எஸ். ஜானகி அம்மையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தத்தையும் அளிக்கிறது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இந்திய இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். அவரது குரல் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை உலகினருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
வியட்நாம் நாட்டின் பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் வியட்நாம் சுற்றுலா சென்றிருந்த இந்தியர்கள் பயணித்த படகு எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு மிகவும் துயரமானது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@PMOIndia @cmota -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசு – கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்கியிருப்பதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது!
--------------------xxxx-------------
கரூர் மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற த.வெ.க. தலைவர் திரு. விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கியிருப்பதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கின்றோம்.
ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த ஒருவரை இழப்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அந்த இழப்பை எந்த நிவாரணமும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசுப்பணி வழங்கியிருப்பது மனிதநேய அடிப்படையிலான நடவடிக்கையாகும். இந்த முடிவு, துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு ஓரளவு நம்பிக்கையையும், பொருளாதார பாதுகாப்பையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு புலனாய்வுக் குழுவிடமும், சி.பி.ஐ. விசாரணையிலும் தங்களது வாக்குமூலங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த அரசுப்பணி வழங்கும் நடவடிக்கையால் விசாரணையின் போக்கிலோ, பாதிக்கப்பட்ட மக்களின் நிலைப்பாட்டிலோ எந்தவித மாற்றமும் ஏற்படாது. நீதிக்கான விசாரணை முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், சட்டப்படி முறையாகவும் நடைபெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேவேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான அரசின் ஆதரவும் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த மனிதநேய நடவடிக்கையை அரசியல் கண்ணோட்டத்துடனோ அல்லது கடுமையான விமர்சனப் பார்வையுடனோ அணுகாமல், கருணையுடனும் மனிதநேய உணர்வுடனும் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அனைவரும் இந்த பேரிழப்பிலிருந்து மன உறுதியுடன் மீண்டு, புதிய நம்பிக்கையுடன் தங்களது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து – முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
--------------------------------xxxxxxx------------------
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
விவசாயிகள் கடின உழைப்பின் மூலம் விளைவித்த நெல்லை அரசு பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டிய பொறுப்பு உடையது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிடங்கிலேயே இவ்வளவு பெரிய அளவில் நெல் மூட்டைகள் தீயில் கருகியிருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தையும், பாதுகாப்பு நடைமுறைகளில் நிலவும் குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும், சமீபத்தில் தஞ்சாவூரில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில், அங்கு பணியாற்றி வந்த பெண் தொழிலாளி சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அருகில் பணியில் இருந்த சகுந்தலா என்பவர் பலத்த காயமடைந்தார். இதனை போல் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பிற அரசு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நெல் சேமிப்புக் கிடங்குகளிலும் பாதுகாப்பு ஆய்வை அவசரமாக மேற்கொண்டு, தீ விபத்துகளைத் தடுக்கும் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதோடு, விவசாயிகளின் உழைப்பின் பயனான நெல் மூட்டைகள் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
கர்நாடக அரசின் காவிரி நீர் மறுப்பு – தமிழக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது!
விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
--------------------------xxx----------------------------
கர்நாடக மாநில நீர்ப்பாசன அமைச்சர் திரு. ராமலிங்க ரெட்டி, "கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது" என்றும், "தமிழக அரசு தரப்பில் யாரும் தண்ணீர் கேட்கவில்லை" என்றும் தெரிவித்திருப்பது, தமிழக விவசாயிகளின் நலனையும், காவிரி நீர் உரிமையையும் அவமதிக்கும் வகையிலான செயல் கடும் கண்டனத்திற்குரியது.
இந்தப் பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் உரிமை என்பது யாரிடமும் கையேந்திப் பெற வேண்டியதில்லை; மாறாக அது சட்டப்பூர்வமாகவும், நீதிமன்ற உத்தரவுகளாலும் உறுதி செய்யப்பட்ட உரிமையாகும். அந்த உரிமையை மறுக்கும் வகையில் கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரான செயல்.
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் முழுமையான தள்ளுபடியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றிய "தவெக அரசு", தற்போது கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? தமிழக முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறார்? தமிழக அரசின் மௌனம், விவசாயிகளின் உரிமையை விட்டுக்கொடுக்கும் நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது பல ஆண்டுகளாக நிலவி வரும் நடைமுறையாகும். ஆனால் இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் பெரும் கவலையில் உள்ளனர். ஒருபுறம் காவிரி நீரைத் திறக்க மறுப்பதாக "கர்நாடக அரசு" அறிவிக்கிறது; மறுபுறம் "மேகதாது அணை" கட்டும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதனைத் தொடர்ந்து மத்திய அரசிடமும், சம்பந்தப்பட்ட சட்ட அமைப்புகளிடமும் "தமிழக அரசு" போதிய அழுத்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
எனவே, தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல், "காவிரி நீர் மேலாண்மை" ஆணையத்தையும், மத்திய அரசையும் உடனடியாக அணுகி, தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தர அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், காவிரி நீர் உரிமையையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சப் புகார் – உண்மையை வெளிக்கொண்டு வந்து, த.வெ.க. பொறுப்பாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் பணியிட நியமனங்களுக்கு த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக வெளியாகி வரும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது. இந்த குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
அரசு வழக்கறிஞர் என்பது ஒரு சாதாரண நிர்வாகப் பதவி அல்ல. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் உரிய நீதியைப் பெற்றுத் தரும் மிக உயரிய பொறுப்பாகும். அத்தகைய பதவிக்கான நியமனமே பணப் பரிவர்த்தனை மற்றும் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது நீதித்துறையின் மாண்பையும், சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
திறமை, அனுபவம் மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனங்கள், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன என்ற தோற்றத்தை உருவாக்குவது ஜனநாயக ஆட்சிக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு வெறும் மௌனம் காக்காமல், உயர்மட்ட மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், இதில் தொடர்புடைய அரசியல் நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், அரசு வழக்கறிஞர் நியமன நடைமுறையை முழுமையாக வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான மற்றும் அரசியல் தலையீடு இல்லாத முறையாக மாற்றுவதற்கான நிரந்தர சீர்திருத்த நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீதி விற்கப்படும் பொருளல்ல; அது மக்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பாதுகாப்பது அரசின் முதன்மை கடமையாகும் என்பதை த.வெ.க. அரசு உணர்ந்து, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்து மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டத்தின் முன் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்து, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களை இனியும் காலதாமதம் செய்யாமல், தகுதி மற்றும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களைக் கொண்டு உடனடியாக நிரப்பி, நீதிமன்றப் பணிகள் தாமதமின்றி நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
'ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை' என்ற பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றி அறிவித்துள்ள தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த பாராட்டுகளுடனும் வாழ்த்துகளுடனும் வரவேற்கிறேன்.
இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல; சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம் மற்றும் சுயமரியாதையை உயர்த்திப் பேசும் சிந்தனையின் வெளிப்பாடாகும். சமூகத்தில் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், முன்னேற்றம் மற்றும் மரியாதையை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டிய அரசின் உறுதிப்பாட்டை இந்தப் பெயர் மாற்றம் பிரதிபலிக்கிறது.
'சமூக நீதித்துறை' என்ற பெயர், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவச் சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தையும், சாதி வேறுபாடுகளைக் கடந்து மனித மரியாதையை நிலைநிறுத்தும் உயரிய இலட்சியத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு மீண்டும் ஒருமுறை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @Vannikural_ -
John Pandian
@JohnPandianTMMK
"தவெக அரசு" தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யுங்கள்!
தேர்தலின் போது, "5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என்று உறுதியளித்துத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு, இன்று அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கி, வெறும் ரூ.75,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பது விவசாயிகளின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட வெளிப்படையான துரோகமாகும். மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசுக்கு, டெல்டா பகுதி விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏன் இத்தனை காலம் அவகாசம் தேவைப்படுகிறது? உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் இன்று தேர்தல் வாக்குறுதியை நம்பி தெருக்களில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டிய அரசு, அதற்கு பதிலாக காவல்துறையை முன்வைத்து கைது நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறைகளில் ஈடுபடுவது ஜனநாயக ஆட்சிக்கு ஏற்ற செயலல்ல. தங்கள் உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை குற்றவாளிகளைப் போல நடத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற "பயிர்க்கடன் தள்ளுபடி" போராட்டத்தில் கலந்து கொண்டு, வீடு திரும்பிய நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முதிய விவசாயி திரு.சோமசுந்தரம் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த செய்தி ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அவருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனியும் எந்த விவசாயியும் தன் உரிமைக்காகப் போராடி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
நாட்கணக்காக வாழ்வாதாரத்தை இழந்து, டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். எனவே, தேர்தலில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். போராடும் விவசாயிகளை எதிரிகளாகவோ, தீவிரவாதிகளைப் போலவோ அணுகுவதை நிறுத்தி, அவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இனியும் ஒரு விவசாயியின் உயிர் பலியாகும் முன், "தவெக அரசு" தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே, இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஆகியோர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதோடு, காளிமுத்துவின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. மனிதநேயத்தை உலுக்கும் இந்த இரட்டைக் கொலைச் சம்பவம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் இப்படிப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியிருப்பது, குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது எந்தவித அச்சமும் இல்லை என்பதையே உணர்த்துகிறது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு, சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்துவதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. ஆட்சி மாறினாலும், சட்டம்-ஒழுங்கு நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. முந்தைய ஆட்சியில் குற்றவாளிகள் எவ்வாறு துணிச்சலுடன் செயல்பட்டார்களோ, அதே நிலை தற்போதும் தொடர்வது மிகவும் வேதனையளிக்கிறது. இது தமிழகத்தின் பாதுகாப்பு சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தி, இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகளை "தமிழக அரசு" மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். உயிரிழந்த காளிமுத்து மற்றும் அவரது மகனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
🩺 தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்!
உயிர்களை காக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டு, மக்களின் நம்பிக்கையாக விளங்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் மனிதநேய சேவை என்றும் போற்றத்தக்கது. மருத்துவ சேவையின் மூலம் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி மக்களின் ஆரோக்கியத்திற்காக உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்! 🙏
#doctorsday -
John Pandian
@JohnPandianTMMK
ஜூலை 01 -ல் பிறந்த நாள் காணும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணித் தலைவர், மருத்துவர் திரு. ஜா. வியங்கோ பாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைத்து வரும் தங்களின் சேவைப் பயணம் மேலும் சிறக்கட்டும். நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், மன நிறைவு மற்றும் அனைத்து வெற்றிகளும் பெற்று மக்கள் பணியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 🎉
@Viyangotmmk -
John Pandian
@JohnPandianTMMK
ஆவின் பால் கொள்முதல் சரிவை தடுத்து, பால் வினியோகத்தை சீரமைக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்! தமிழக அரசுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்!
------------------------
தமிழ்நாட்டில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான "ஆவின் பால்" வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கவலை அளிக்கிறது. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருவதால், சந்தையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஆவின் பால் வினியோகம் குறைந்துள்ள நிலையில், சென்னையிலும் கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் தினசரி விற்பனை செய்யப்பட்டு வந்த "ஆவின் பால்" அளவு தற்போது குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் வீழ்ச்சியே ஆகும். கடந்த சில ஆண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. கோடைக்காலம் காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளது என ஆவின் நிறுவனம் கூறினாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கொள்முதல் குறைந்து வருவது நிர்வாக ரீதியான சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை போதுமானதாக இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை வழங்கி பால் கொள்முதல் செய்து வரும் நிலையில், ஆவின் நிறுவனம் அதற்கு இணையான விலையை வழங்காததால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களை நாடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது. "ஆவின் பால்" என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பாலை வழங்கும் அரசின் முக்கியமான சேவையாகும். ஆவின் பால் வினியோகம் குறைவதால், அதிக விலை கொடுத்து தனியார் நிறுவன பாலை வாங்க வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்படும். எனவே, இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் விலையை உயர்த்தி, அதிக அளவில் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45 மற்றும் எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.54 என கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க "தமிழக அரசு" நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் அத்தியாவசிய தேவையான பால் வினியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வில் எழுந்துள்ள முறைகேடு குறித்த புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்!
தமிழக அரசுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வேண்டுகோள்!
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2025 டிசம்பர் 27-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
வெளியான தேர்வு முடிவுகளில் காணப்படும் பல்வேறு முரண்பாடுகள் காரணமாக, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் குளறுபடிகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தேர்வு முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, வெளிப்படையான முறையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இந்தத் தேர்வு முடிவுகளில் வெளியான மதிப்பெண் விவரங்களே பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணமாக, தமிழ் பாடத்திற்கான முதல் தாளில் 150-க்கு 111 மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 50-க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்ற மற்றொருவருக்கு, இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
விருப்பப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒருவர் கட்டுரைத் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெறுவதும், குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவர் அதிக மதிப்பெண் பெறுவதும் இயல்பானதாக தெரியவில்லை. குறிப்பாக, உயர்கல்வித் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு கூட இதுபோன்ற மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
இத்தகைய முரண்பாடுகள் வெறும் மதிப்பீட்டு குளறுபடிகளா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டவையா என்பதை கண்டறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களின் எதிர்கால நம்பிக்கையுடன் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். அவர்களின் உழைப்பும், நம்பிக்கையும் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணி நியமன நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டையா? – மாணவர்களிடையே சாதிய வேறுபாட்டை விதைக்கும் தவெக அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி விவரங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடங்கள் என்பது சாதி, மதம் உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மாணவர்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் இடங்களாக இருக்க வேண்டும். ஆனால், மாணவர்களின் அடையாள அட்டையிலேயே சாதி சார்ந்த விவரங்களை முன்னிலைப்படுத்துவது, இளம் மனங்களில் சாதிய அடையாளங்களை ஆழமாக பதியச் செய்யும் ஆபத்தான முயற்சியாக அமையும்.
தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் நிலவும் சாதிய பாகுபாடுகளை முற்றிலும் அகற்ற வேண்டிய அரசு, அதற்கு மாறாக சாதிய அடையாளங்களை அதிகாரப்பூர்வமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது சமூக நீதியின் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியலமைப்பின் சமத்துவக் கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும்.
மாணவர்களை ஒன்றிணைத்து சமத்துவ உணர்வை வளர்க்க வேண்டிய அரசுப் பள்ளிகள், சாதியின் அடிப்படையில் மாணவர்களை பிரிக்கும் சூழலுக்கு ஒருபோதும் வழிவகுக்கக் கூடாது.
எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாணவர்களின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநர், நடிகர் மற்றும் இந்திய அளவில் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான திரு.K.பாக்கியராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தனது தனித்துவமான கதை சொல்லும் திறன், எளிமையான அணுகுமுறை மற்றும் சிறந்த படைப்புகள் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் திரு.K.பாக்கியராஜ் அவர்கள். அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் திரு. வெங்கட் கே. நாராயணா அவர்களை நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தனிப்பட்ட நெருக்கத்தின் அடிப்படையில் தமிழக அமைச்சருக்கு இணையான முக்கியப் பதவியை வழங்கியிருப்பதாக மக்கள் மத்தியில் எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துச் செல்லும் முக்கியப் பொறுப்பான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியதன் காரணத்தை தெரிவிக்க வேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்களுக்கான ஆட்சியை வழங்க வேண்டும்; நெருக்கமானவர்களுக்கு பதவி வழங்குவதற்காக அல்ல. எனவே, திரு.வெங்கட் கே. நாராயணா நியமன உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
John Pandian
@JohnPandianTMMK
தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை "தவெக அரசு" கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் வகையில், தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டபோது, தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணி பாதுகாப்பு, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், தேர்தலுக்கு முன்பு தொழிலாளர்களின் நலன் குறித்து பேசிய தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போது ஆட்சியில் அமர்ந்த பிறகு தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார்மய நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
இந்த நடவடிக்கை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
தியாகத்தையும், பொறுமையையும், நீதியையும் போதிக்கும் இந்த மொஹரம் பண்டிகையில், உலகில் அமைதியும் - சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும். இஸ்லாமிய சொந்தங்களுக்கு #மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்.
#muharram #moharam #muharrammubarak -
John Pandian
@JohnPandianTMMK
தியாகத்தையும், பொறுமையையும், நீதியையும் போதிக்கும் இந்த மொஹரம் பண்டிகையில், உலகில் அமைதியும் - சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும். இஸ்லாமிய சொந்தங்களுக்கு #மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்.
#muharram #moharam #muharrammubarak -
John Pandian
@JohnPandianTMMK
கத்தார் நாட்டின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 21.06.2026 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த திரு. பபித் (வயது 26), பணகுடி பகுதி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த திரு. சஜித்குமார் (வயது 25) மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த திரு. சுவின் (வயது 24) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 22.06.2026 திங்கள்கிழமை எனது தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர்.திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் முன்னிலையிலும், திருநெல்வேலி - தென்தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள்; வழக்கறிஞர் திரு. சண்முக சுதாகர் அவர்கள், திருமதி. நளினி சாந்தகுமாரி அவர்கள், திரு.அருண் பிரின்ஸ் அவர்கள், மாநில விவசாய அணி செயலாளர் திரு.S.M. சேகர் அவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும், இக்கூட்டத்தின் தீர்மானங்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியேறுகிறது!!
கட்சியை உள்ளாட்சி தேர்தலுக்காக வலுப்படுத்தவேண்டும்!! அதற்கு கட்சியின் தனித்துவ செயல்பாடுகள் தேவைப்படுகிறது!!
எனவே இந்த முடிவை எடுக்கிறோம்!! இதுவரை ஒத்துழைப்பு தந்து உறுதுணையாக இருந்த NDA தலைவர்கள் அனைவருக்கும் நன்றி!!
நட்பு என்றும் தொடரும் என்பதை இச்செயற்குழு தீர்மானிக்கிறது!! -
John Pandian
@JohnPandianTMMK
"அமோனியா வாயு" கசிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்
-------------------------------------
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7-பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
இந்த கோர விபத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது, தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்புகிறது.
தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததன் காரணமாக தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல. அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும், இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு, தொழிலாளர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக தங்களது பணிகள் தொடர்ந்து சிறப்பாக அமையவும், நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையில் தொடர்ந்து பயணிக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
தங்களது தலைமையில் தமிழகம் மேலும் வளர்ச்சி பாதையில் முன்னேறவும், அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
காவிரி ஆற்றின் குறுக்கே "மேகதாது அணை" கட்டுவதற்காக "கர்நாடக அரசு" தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், காவிரி நீர் உரிமையையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும்.
தமிழகத்தின் நலனையும், விவசாயிகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையில், "மேகதாது அணை" கட்டும் முயற்சிக்கு எதிராக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு "தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின்" சார்பில் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், எந்தவிதமான ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்பதிலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. தமிழக விவசாயிகளின் நலன், மாநிலத்தின் நீர்வள பாதுகாப்பு கருத்தில் கொண்டு, "மேகதாது அணை" கட்டும் முயற்சியை மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களால் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில், “லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு, கனிம வளக் கொள்ளைகளைத் தடுப்பது, சமூக நீதி குறித்த கணக்கெடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது” உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்புகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரவேற்கிறோம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரையின் மூலம் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
@CMOTamilnadu @lokbhavan_tn -
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல்நிலைய காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட "ஆகாஷ் டெலிசன்" அவர்கள், காவல் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆகாஷ் டெலிசன் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது மரணம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தேன். அப்போது இச்சம்பவத்தை கண்டித்து அன்றைய ஆட்சியாளருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்தோம்.
மேலும், ஆகாஷ் டெலிசன் அவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், தற்போது காவல்துறையினரால் உயிரிழந்த "ஆகாஷ் டெலிசன்" அவர்களின் உடலை, அவரது குடும்பத்தினரின் சம்மதமின்றி காவல்துறையினரே அடக்கம் செய்ய முயற்சிப்பது அதிகார அத்துமீறலின் உச்சமாகும். நீதி கேட்டு போராடும் குடும்பத்தின் குரலை ஒடுக்க முயற்சிக்கும் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஆகாஷ் டெலிசன் அவர்களின் உறவினர்கள் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நியாயம் வழங்காமல், காலதாமதத்தை காரணம் காட்டி உடலை அடக்கம் செய்ய முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தொடர்பாக அரசும், காவல்துறையும் வெளிப்படையான முறையில் செயல்பட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மேலும், ஆகாஷ் டெலிசன் அவர்களின் உறவினர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தாக்கி கைது செய்திருப்பதாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். நீதி கேட்டு போராடும் ஒரு குடும்பத்தின் மீது எந்தவிதமான அடக்குமுறையும் இருக்கக் கூடாது. தற்போதைய அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையை மறைக்கவோ, குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தவோ எந்த முயற்சியும் நடைபெறக்கூடாது.
கைது செய்யப்பட்டுள்ள "ஆகாஷ் டெலிசன்" அவர்களின் உறவினர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான அடக்குமுறைகளை காவல்துறை கைவிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட ஆகாஷ் டெலிசன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என "தவெக அரசை" தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் கூடாது – முழுமையான தள்ளுபடியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!
---------------------------
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75,000 வரை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது.
"தவெக அரசு" ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சிக்கு வந்த பிறகு நிலையான முடிவுகளை எடுக்காமல், சூழ்நிலைக்கேற்ப மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்பும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் நினைவில் இல்லையா? தேர்தலுக்கு முன்பு கூறிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றாமல், ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்குப் பிறகு முடிவுகளை மாற்றுவது, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, தமிழக அரசு நிலையான முடிவை எடுத்து விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும்.
பயிர்க்கடன் தள்ளுபடியில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்குப் பிறகே ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இது விவசாயிகளின் உண்மையான பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது. தற்போதைய அறிவிப்பின்படி 6.22 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே முழு பயிர்க்கடன் தள்ளுபடியும், 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடியும் வழங்கப்படுவது நியாயமானதல்ல.
எனவே, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முழுமையான முடிவை எடுத்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பிஞ்சு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சமும், கவலையும் எழுந்துள்ளது. மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை இன்னும் எத்தனை நாட்கள் தான் மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும்?
இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு போராடியவர்களை தமிழகக் காவல்துறை கைது செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி மற்றும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படுவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். இல்லையெனில், குற்றவாளிகளுக்கு அச்சம் இல்லாத சூழல் உருவாகி, இதுபோன்ற கொடுஞ்செயல்கள் தொடரும் அபாயம் உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவான நீதி கிடைக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 4,399 நாட்கள் பணியாற்றி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று, நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவரின் தலைமையால் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
மேலும், மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்கள் பல சாதனைகள் படைத்து, இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் அவரது பணிகள் வெற்றியடைய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Narendra Modi -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், கிராமிய மணம் கமழும் படைப்புகளின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவருமான இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி திரையுலகையும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றித் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அழியாத முத்திரையைப் பதித்தவர். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய அவர், தமிழ் திரையுலகின் ஒரு சகாப்தமாக விளங்கினார்.
இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியது..
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தையும், செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் உரிமையையும் கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அல்லது மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான செயலாகும்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24 மற்றும் தமிழ் ஜனம் உள்ளிட்ட சேனல்களை மீண்டும் அரசு கேபிள் ஒளிபரப்பில் இணைக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@polimernews @NewsTamilTV24x7 @TamilJanamNews -
John Pandian
@JohnPandianTMMK
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, மகேந்திரன் என்பவரது வக்கிர ஆசைக்கு இணங்க மறுத்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் விருப்பத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத இத்தகைய காமவெறி மற்றும் வன்முறை மனப்பான்மை கொண்ட குற்றவாளிகள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். ஒரு பெண் தனது சுயமரியாதையையும் பாதுகாப்பையும் காக்க மறுத்ததற்காக உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரமாக நடந்துகொள்வது மனிதநேயத்திற்கே எதிரான அராஜகச் செயலாகும்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சட்டத்தின் மீதான அச்சமின்மையும், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாத சூழலும் இத்தகைய கொடூர சம்பவங்களுக்கு வழிவகுத்து வருகின்றன.
இந்த படுகொலையில் தொடர்புடைய மகேந்திரன் என்பவர் மீது காவல்துறை விரைவாகவும் பாரபட்சமின்றியும் கடுமையான நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும்,
இளம்பெண்ணின் உயிரைப் பறித்த இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கேங்மேன் பணியிடங்களுக்கு தேர்வானவர்களை உடனடியாக பணி அமர்த்த வேண்டும்!
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, உடற்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் முறையாக நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் சுமார் 15,000 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களில் 9,564 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5,436 பேர் இதுவரை பணியில் அமர்த்தப்படாமல் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.
அரசு நிர்ணயித்த அனைத்து தேர்வு நடைமுறைகளையும் வெற்றிகரமாக கடந்து வந்த இந்த இளைஞர்கள், பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனால் அவர்களும், அவர்களது குடும்பங்களும் கடும் பொருளாதார நெருக்கடியையும் மனஉளைச்சலையும் சந்தித்து வருகின்றனர். தகுதி பெற்று தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தேர்வில் வெற்றி பெற்று இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 5,436 கேங்மேன் பணியிட விண்ணப்பதாரர்களையும் விரைவாக பணி அமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பணிநிலையை ஆய்வு செய்து, அவர்களை நிரந்தரப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கையும் பாதுகாக்கப்படும். சமூக நீதி மற்றும் சமவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @CTR_Nirmalkumar -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஆகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தின் அமைதிக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு சாதாரண தகராறு கொலையில் முடிவடைந்திருப்பது சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், டாஸ்மாக் பார்கள் மற்றும் மதுபானக் கடைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் கண்காணிப்பை பலப்படுத்தி, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மைக் கடமையாகும். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
JK Nursery Garden நிறுவனத்தின் உரிமையாளரும், அன்புச் சகோதரருமான திரு.ஜின்னா கென்னடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த இனிய நாளில், எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், மனமகிழ்ச்சியையும், குடும்ப நலனையும் அருளிட பிரார்த்திக்கிறேன்.
தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், தொழிலிலும் வாழ்க்கையிலும் மேலும் பல உயரங்களை அடையவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்ட தலைசிறந்த அரசியல் தலைவருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் சேவையையும் தியாகத்தையும் நாம் என்றும் நினைவுகூர்வோம்.
நேர்மை, எளிமை, மனிதநேயம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்த காயிதே மில்லத் அவர்கள், கல்வி, சமத்துவம் மற்றும் ஜனநாயக மதிப்புகளை நிலைநாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளில் அவரின் நினைவை போற்றுவோம். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாழ்வில் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அண்ணாமலை அவர்கள், தனது அரசியல் பயணத்தில் மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற வாழ்த்துகிறேன்.
இந்த இனிய நாளில், அவர் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், மனநிறைவு மற்றும் அனைத்து வளங்களையும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@annamalai_k -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, நெட்டூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூர ஆயுதங்களால் தாக்கியிருப்பது கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும்.
இந்த தாக்குதலில் காயமடைந்த நபரின் உறவினர்களையும், அப்பகுதி பொதுமக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தேன்.
மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டிய குடியிருப்பு பகுதிக்குள் இவ்வாறு மர்ம நபர்கள் புகுந்து வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெட்டூர் கிராம மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் துணை நிற்கும் என கூறினேன். -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கோரி, அன்றைய திமுக ஆட்சியை எதிர்த்து "தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்" சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள், அந்த தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த முதல் முக்கிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.
மென்பொருள் பொறியாளர் கவின் படுகொலை வழக்கில், 10 மாதங்களுக்குப் பிறகு புதிய திருப்பமாக, முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தாயாரும், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவருமான திருமதி கிருஷ்ணகுமாரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கை, வழக்கின் உண்மையான பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே குற்றச் செயல்களுக்கு துணைபோயிருந்தால், அது சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கடுமையாக பாதிக்கும். எனவே, இவ்வழக்கின் விசாரணை எவ்வித பாரபட்சமும் இன்றி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு, இதில் தொடர்புடைய அனைவரின் பங்கும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி வழங்கப்பட வேண்டும்.
மேலும், சமூகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பின் அடிப்படையில் தமிழக அரசு தனித்துவமான "ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை" உடனடியாக இயற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஆணவக் கொலை என்பது தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும். எனவே, இதுபோன்ற குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் தமிழக அரசு உறுதியான மற்றும் நீடித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, நெட்டூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூர ஆயுதங்களால் தாக்கியிருப்பது கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைவெறி தாக்குதலில் ஒரு இளைஞருக்கு கையில் பலத்த வெட்டு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
மேலும், சில இளைஞர்கள் சாதிவெறியுடன் அப்பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல்கள் வெளியாகுவது மிகவும் கவலைக்கிடமானது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு மற்றும் காவல்துறை உடனடியாக தலையிட்டு, இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அப்பகுதியில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்து, பட்டியல் சமூக மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!
தியாகம், மனிதநேயம், சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த பண்புகளை எடுத்துரைக்கும் புனித பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!
இந்த புனித நாளில் அன்பும், அமைதியும், ஒற்றுமையும் உலகெங்கும் நிலைத்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#bakrid -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை மூடுவதற்கு அமைச்சர் பிரபு @drtkprabhu_TVK அவர்கள் உத்தரவிட்டிருப்பதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மனமார வரவேற்கிறேன். பொதுமக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் சமநிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல கல்குவாரிகளில், கடந்த திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சட்டவிரோதமாக கனிமவளங்கள் வெட்டெடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துள்ளது. மலைகள் அழிக்கப்படுவது, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது, விவசாய நிலங்கள் சேதமடைவது, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு தீவிர விளைவுகளை இந்த கனிமவள கொள்ளை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, தற்போது தமிழக அரசு மாவட்ட வாரியாக விரிவான ஆய்வுகளை உடனடியாக மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி செயல்படும் அனைத்து கல்குவாரிகளையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அனுமதிக்கப்பட்ட எல்லையை மீறி கற்கள் மற்றும் கனிமவளங்களை அகழ்வு செய்யும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மேலும், தமிழகத்தின் கனிமவளங்களை சட்டவிரோதமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லும் செயல்கள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, கனிமவள கடத்தலில் ஈடுபடும் நபர்கள், கும்பல்கள் மற்றும் அவர்களுக்கு துணைபுரியும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என "தமிழக அரசை " தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @drtkprabhu_TVK
தமிழினவேந்தர்,
— பெ. ஜான்பாண்டியன், M.A.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாணவிக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கதும், நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதுமானதாகும்.
குற்றம் நடைபெற்ற வெறும் 76 நாட்களிலேயே விசாரணையை விரைவாக முடித்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இந்த தீர்ப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது குற்றச் செயல்களில் ஈடுபட நினைப்போருக்கு கடும் எச்சரிக்கையாக அமைய வேண்டும்.
உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைத்திருப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கும் இந்த தீர்ப்பு ஒரு ஆறுதலாக இருக்கும். இவ்வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினருக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதியிலேயே இத்தகைய கொடூரச் சம்பவம் நடைபெறுவது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக அரசும் காவல்துறையும் இத்தகைய சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், குற்றச்செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் உரிய நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவதும் அரசின் முதன்மை பொறுப்பாகும் என்பதை ஆட்சி நிர்வாகம் உணர்ந்து செயல்பட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @tnpoliceofflThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழர் மொழி, இன உரிமை, சமூக முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று.
“தினத்தந்தி” மூலம் தமிழ் பத்திரிகைத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி, பொதுமக்களின் குரலாக விளங்கிய அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிந்தனைகளும், தமிழர் முன்னேற்றத்திற்கான பணிகளும் என்றும் நிலைத்திருக்கட்டும். -
John Pandian
@JohnPandianTMMK
கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல் மக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி காணாமல் போன உடனேயே புகார் அளிக்கப்பட்டிருந்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படாதது அரசின் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது. தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு அப்பாவி சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாதது வேதனைக்குரியது.
இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெறும் விளம்பர அரசாக அல்லாமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல்பாட்டு அரசாக செயல்பட வேண்டும்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை "தமிழக அரசு" உறுதியாக எதிர்த்து, தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும். கூட்டணி அரசியல் காரணமாக கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழக அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கக்கூடாது.
----------------------------------------------------------------
கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தமிழக மக்களிடையே பெரும் கவலையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு – காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை வேடிக்கைப் பார்க்கக்கூடாது.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்ற காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், அதை மதிக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. இந்த நடவடிக்கை தமிழ்நாடு – கர்நாடக நல்லுறவை பாதிக்கும். கடந்த காலத்தைப் போல தற்போதைய த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி அரசும் மௌனம் காக்காமல், தமிழகத்தின் உரிமையை உறுதியாக பாதுகாக்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால், கர்நாடக அரசின் இந்த முயற்சியை அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலைப்பாடு எடுக்கக் கூடாது. மாநில உரிமை மற்றும் மக்களின் நலன் என்பதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது.மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்பதை தமிழக அரசு உடனடியாகவும் உறுதியுடனும் தெரிவிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
Heartiest birthday wishes to BJP National President Thiru. Nitin Nabin.
May the Almighty bless you with good health, happiness, a long life, and continued strength to serve the nation with dedication and commitment.
@NitinNabin @BJP4India @BJP4Delhi @BJP4TamilNadu -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசியல் வரலாற்றில் "கூட்டணி ஆட்சி" அமைத்து, கூட்டணி கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ள தவெக தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம் முதல் முறையாக 23 பேர் தமிழ்நாடு அமைச்சர்களாக புதிதாக பதவியேற்றுக் கொண்டிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இது ஜனநாயகத்தின் பல்வகை பிரதிநிதித்துவத்தையும், கூட்டணி அரசியலின் புதிய பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது.
புதிய பொறுப்பை ஏற்றுள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் நலன், சமூக நீதி, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு புதிய சாதனைகள் படைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசுத் திட்டங்கள் அடித்தட்டு மக்களையும் சென்றடையும் வகையில் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு, மக்களின் நம்பிக்கையை காக்கும் நல்லாட்சியை வழங்க அனைவரும் உறுதுணையாக இருப்பீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் இந்த அமைச்சரவை மக்கள் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை வழங்கி, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழினவேந்தர்,
— பெ. ஜான்பாண்டியன், M.A.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். -
John Pandian
@JohnPandianTMMK
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம், அரசு துறைகளின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. மருத்துவர் அல்லாத ஒருவர் மருத்துவர் உடையை அணிந்து கொண்டு மருத்துவமனை நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிப்பதும், அதிகாரிகள் முன்னிலையில் செயல்படுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவமனைகள் என்பது அரசியல் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இடமல்ல; மக்களின் உயிரைக் காக்கும் முக்கியமான பொதுச் சேவை மையமாகும். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டிய சூழலில், தவெக கட்சி நிர்வாகிகள் நேரடியாக தலையிட ஆரம்பித்தால் அதன் பாதிப்பு நேரடியாக பொதுமக்கள் மீதே விழும்.
நிர்வாக அதிகாரம் பெற்றவர்கள் அல்லாதவர்கள் மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை நடைமுறைகள், அதிகாரிகளின் பணிச்சூழல் போன்றவற்றில் தலையிடுவது, நிர்வாக ஒழுங்கையும் சட்ட நடைமுறைகளையும் பாதிக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக மாறக்கூடும்.
மக்கள் சேவைக்காக இயங்க வேண்டிய அரசு அமைப்புகள், அரசியல் விளம்பர மேடைகளாக மாறக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறினால், எதிர்காலத்தில் நிர்வாக குழப்பங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்த விவகாரத்தில் முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உடனடி மற்றும் உரிய நடவடிக்கை எடுத்து, அரசு மருத்துவமனைகளின் நிர்வாக சுதந்திரத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkgThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நேரத்தில், தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இந்த வெற்றியின் காரணமாகும். இந்த சாதனை, உங்கள் எதிர்கால வெற்றிப் பயணத்தின் முதல் படியாக அமையட்டும்.
அதேபோல், எதிர்பார்த்த முடிவை பெற முடியாமல் மனவேதனையில் இருக்கும் மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். ஒரு தேர்வின் முடிவு உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது. பல சாதனையாளர்களின் வெற்றிப் பயணம் தோல்வியிலிருந்தே தொடங்கியுள்ளது. இன்று தோல்வியாக தோன்றுவது, நாளை மிகப்பெரிய வெற்றிக்கான அனுபவமாக மாறலாம்.
“தோல்வி என்பது முடிவு அல்ல… இன்னும் சிறப்பாக தொடங்குவதற்கான ஒரு புதிய வாய்ப்பு.”
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்காலம் மேலும் பிரகாசமாக அமைய என் நல்வாழ்த்துகள். -
John Pandian
@JohnPandianTMMK
திருப்பூரில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மீண்டும் மனு அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
அவர் கூறியதுபோல், பள்ளி மாணவரின் புத்தகப்பையில் கஞ்சா மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையை சுட்டிக்காட்டி மீண்டும் மீண்டும் புகார் அளித்தும் ஆறு மாதங்களாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அரசு இயந்திரமும் காவல்துறையும் எவ்வளவு அலட்சியமாக செயல்படுகின்றன என்பதற்கு இதுவே நேரடி சாட்சியாகும்.
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் கும்பல்களின் இலக்காக மாறிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். கல்வி கற்க வேண்டிய மாணவர்கள் போதையின் பாதையில் தள்ளப்படுவது சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு “கஞ்சா மாநிலம்” என்ற அவப்பெயரை பெற்றிருந்ததை மக்கள் மறந்துவிடவில்லை. இந்நிலையில், புதிதாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக “ஆபரேஷன் கஞ்சா வேட்டை” நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுற்றுவட்டாரங்களில் போதைப்பொருள் விற்பனையை முழுமையாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை காப்பது அரசின் முதன்மை பொறுப்பாகும். தமிழ்நாட்டின் இளைஞர்களை போதையின் பிடியிலிருந்து மீட்டு, பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்க அரசு உடனடி மற்றும் உறுதியான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
@CMOTamilnadu
தமிழினவேந்தர்,
— பெ. ஜான்பாண்டியன், M.A.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசு – கோடைக்காலத்தில் திடீரென பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் முழு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்கூட்டியே வடிகால் வசதிகளை சீரமைத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின்கம்பங்கள், மரங்கள் சரிவு, சாலை சேதம் போன்ற அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பாதுகாப்பாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையால் சேதமடையாமல் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய தார்பாய், கிடங்கு மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாதால் விவசாயிகளின் பல மாத உழைப்பு வீணாகும் அபாயம் உள்ளது.
விவசாயிகளின் நலனையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு துரிதமான மற்றும் நிரந்தரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @actorvijay
தமிழினவேந்தர்,
— பெ. ஜான்பாண்டியன், M.A.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். -
John Pandian
@JohnPandianTMMK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கனிவான கவனத்திற்கு!
---------------------------------
சென்னை தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை தலைமையகத்தில் டிஐஜியாக பணியாற்றி வரும் திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 25 ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு, ரயில்வே, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி, தனது நேர்மை மற்றும் திறமையின் மூலம் காவல்துறையில் தனித்த முத்திரை பதித்துள்ளார்.
தாம் பணியாற்றிய அனைத்து இடங்களிலும், உடன் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அலுவலர்களை மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் அணுகுபவர் என்ற நல்ல பெயரை பெற்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சிறப்பான சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால், அவருடன் பணியாற்றி வரும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு பெண் உயர் அதிகாரியின் மரியாதையையும் கண்ணியத்தையும் பொருட்படுத்தாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, டிஐஜி திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்களை குறித்து அவதூறு பரப்பி வரும் அலுவலர்கள் மீது உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், காவல்துறை உயரதிகாரிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான மற்றும் திறமையான உயர் அதிகாரிகள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் பணியாற்றும் சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய கடமையாகும். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆயுதப்படையில் உயர்பதவியில் சிறப்பாக பணியாற்றி வரும் இந்த பெண் அதிகாரியின் நற்பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில், தமிழக அரசு உடனடி மற்றும் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @tnpoliceoffl
— பெ. ஜான்பாண்டியன், M.A.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனநாயகத்தின் உயரிய மரபுகளையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் பாதுகாத்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் சம உரிமையுடன் செயல்படும் சிறந்த நிர்வாகத்தை தங்களது தலைமையில் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
தமிழக மக்களின் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பையும் உயர்த்திட தங்களது பணிக்காலம் சிறப்புடனும், சாதனைகளுடனும் அமைய மனமார்ந்த நல்வாழ்த்துகள். 💐
@JCDPrabhakar -
John Pandian
@JohnPandianTMMK
வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபானக் கடைகளை இரு வாரங்களுக்குள் மூடிட மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் @CMOTamilnadu அவர்கள் வழங்கியுள்ள உத்தரவு மிகுந்த வரவேற்புக்குரியதும், சமூக நலனை முன்னிறுத்திய முக்கியமான நடவடிக்கையுமாகும்.
கல்வி பயிலும் மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகில் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகள் பல்வேறு சமூக பாதிப்புகளுக்கும், சட்ட ஒழுங்கு சிக்கல்களுக்கும் காரணமாக இருந்து வந்தன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தையும், குடும்பங்களின் அமைதியையும் பாதிக்கும் சூழல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில், மக்கள் நலனை முதன்மைப்படுத்தி இத்தகைய கடைகளை அகற்றும் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. இது பெண்களின் பாதுகாப்பு, மாணவர்களின் நலன், பொது அமைதி மற்றும் ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்த இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வருவது மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், கள்ளச்சாராயம் புழக்கத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி முழுமையாக தடுத்திட வேண்டும். அதற்கு மாற்றாக “கள்” கடைகளை சட்டப்பூர்வமாக திறக்க நடவடிக்கை எடுத்தால், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, பாரம்பரிய தொழில்களும் பாதுகாக்கப்படும்.
சமூக நலன், மக்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான தமிழகம் உருவாக இதுபோன்ற மக்கள் மையமான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். 🙏
@CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ -
John Pandian
@JohnPandianTMMK
முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எளிமை, அமைதி, நிர்வாகத் திறன் மற்றும் கட்சித் தொண்டர்களின் மீது கொண்ட அக்கறை ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் தனித்துவமான மரியாதையை பெற்றுள்ள தங்களின் அரசியல் பயணம் தொடர்ந்து வெற்றியுடன் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனுக்காக தாங்கள் மேற்கொள்ளும் பொதுப்பணிகள் மேலும் பல சாதனைகளை எட்டிட, நல்லாரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! 🎉
@EPSTamilNadu @AIADMKOfficial
(File Photo) -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் பேராதரவுடன் தொடங்கியுள்ள உங்கள் இந்த புதிய அரசியல் பயணம், தமிழகத்தின் வளர்ச்சி, இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான புதிய அத்தியாயமாக அமையட்டும். மக்களின் நம்பிக்கைக்கு உரிய மாற்றத்தையும், நல்லாட்சியையும் வழங்கிட உங்கள் பயணம் வெற்றி பெற என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
@TVKPartyHQ -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்களின் விருப்பம் தெளிவாக வெளிப்பட்டுள்ள இந்த சூழலில், காலதாமதமின்றி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.
மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பை மதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும் செயல்படுவதும் ஆளுநரின் அடிப்படை பொறுப்பாகும். அந்த அடிப்படையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் இயக்கத்திற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரின் ஒருமித்த குரலாகும்.
@TVKVijayHQThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.வின் தலைவர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மக்கள் நம்பிக்கையின் பிரதிநிதியாக தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, மாற்றத்திற்கான மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
மக்கள் நலனை முன்னிறுத்தி, இளைஞர்களின் கனவுகளையும், சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளையும் முன்னெடுத்து செயல்பட வேண்டிய பொறுப்பு இந்நேரத்தில் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நல்லாட்சியை வழங்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றப் பாதையில் உறுதியான மாற்றங்களை கொண்டு வருவார் என நம்புகிறேன்.
இந்நவீன அரசியல் பயணத்தில் தொடர்ந்து வெற்றிகள் கிட்டி, மக்கள் சேவையில் உயர்ந்த சாதனைகள் புரிய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@TVKVijayHQ -
John Pandian
@JohnPandianTMMK
உழைப்பால் உயர்வோம் என்ற உறுதியுடன், சுய பொருளாதர முன்னேற்றத்திற்கும், நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் ஈடு இணையற்ற பங்களிப்பு செய்து வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துகள்!
#laboursday #mayday #உழைப்பாளர்_தினம் -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்காசி மாவட்டம் ஆற்றல்மிகு விவசாய அணி செயலாளர் திரு. பைரவமூர்த்தி பாண்டியன் அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற துயர செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது இல்லத்திற்குச் சென்று, குடும்பத்தினரையும் உறவினர்களையும் நேரில் சந்தித்து என் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்தேன். -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள மருதம்பத்தூர் பகுதியில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது நடைபெற்ற துயரமான சம்பவம் மிகுந்த கவலைக்குரியது.
"கள்" இறக்கியதாக கூறி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மணிகண்டன் அவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. பனைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையாகும். -
John Pandian
@JohnPandianTMMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ,திரு.கடம்பூர் C ராஜு அவர்களை ஆதரித்து, தெற்கு திட்டங்குளம், கூசாலிபட்டி,மேலபாண்டவர்மங்கலம் பகுதியில்"இரட்டை இலை" சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#tnelections2026 #nda #epsfor2026 #vote4aiadmk #kadamburraju #kovilpattiadmk #election2026 #aiadmk -
John Pandian
@JohnPandianTMMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மலேசியா S.பாண்டியன் அவர்களை ஆதரித்து 20.04.2026 அன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு "இரட்டை இலை" சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#tnelections2026 #nda #epsfor2026 #vote4aiadmk #malaysia_s_pandian #election2026 #aiadmk4tn -
John Pandian
@JohnPandianTMMK
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 22-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக, காலமுறைப்படி பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளாததும், தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததும் குறித்து கடுமையான கேள்விகள் எழுகின்றன.
உடனடியாக அனைத்து பட்டாசு ஆலைகளையும் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#viruthunagarblast #viruthunagarcrackerfactory #factoryexplosionThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வீரமரணம் வரை போராடிய அவரது தைரியம், இன்றும் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது.
மாவீரன் தீரன் சின்னமலை அவரது பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்வோம்!
#dheeranchinnamalai -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஈடுபட்டதுடன், தமிழர் உரிமைகள், மொழி, மற்றும் சமூக நீதிக்காகவும் போராடிய மாவீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளில் அவரது வீரத்தையும், தியாகங்களை நினைவுகூர்வோம்!
#veeransundaralingam -
John Pandian
@JohnPandianTMMK
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுகவினர் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் போது, திமுகவைச் சேர்ந்த சிலரின் ஆபாசமான மற்றும் அவமதிப்பான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தேர்தல் நேரத்தில் திமுகவினர் இது போன்ற செயல்களில் விதிமுறைகளை மீறி ஈடுபட்டது மிகவும் தவறான செயலாகும். ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் மனநிலையையும் சீர்குலைக்கும் வகையில் ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு ஈடுபட்டுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
தேசிய ஜனநாயகக் கூட்டணி "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்" சார்பில் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திரு.வேலு. கார்த்திக்கேயன் அவர்களை ஆதரித்து 13.04.2026 அன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு "குக்கர்" சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#tnelections2026 #nda #ammk -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அரசியலமைப்பு சட்டத்தை வகுத்த சட்டமேதை Dr. பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறோம் சமத்துவம் தழைத்தோங்கட்டும்!
#ambedkar -
John Pandian
@JohnPandianTMMK
நலம், வளம், மகிழ்ச்சி நிறைந்த
புதிய தொடக்கத்தை வழங்கும் இந்த சித்திரைத் திருநாளில்,
அனைவரின் இல்லங்களிலும் ஒற்றுமையும் முன்னேற்றமும் நிலைக்கட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
#தமிழ்புத்தாண்டு #சித்திரைதிருநாள் #tamilnewyear -
John Pandian
@JohnPandianTMMK
பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தேன்.
சகோதரி திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற்று, தனது தேர்தல் பணியை இன்னும் அதிக உற்சாகத்துடன் மீண்டும் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@VanathiBJP -
John Pandian
@JohnPandianTMMK
பிரபல யூடியூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி.கமலா அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தாயாரை இழந்துவாடும் திரு.சவுக்கு சங்கர் அவர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@SavukkuOfficial -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்காசி மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளராக திறன்பட செயலாற்றி வந்தவர் சகோதரர் திரு.S.வைரமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி சொல்லொணா துயரத்தைத் தருகிறது.
கட்சியின் கூட்டம் என்றாலும், மாநாடு என்றாலும் அதைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமை கொண்டவர்; அவருடைய மறைவு என்பது ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், அவரது குழந்தைகளுக்கும், கிராமத்தினருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian reposted
Dr. Vinolin Nivetha
@vinolinnivetha
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின்,தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்களை, ஆதரித்து மக்களிடம் ஆதரவை நாடும் பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. அண்ணாமலை அவர்கள் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#priscillapandian #bjp #nda #rajapalayam #tnelections2026 #voteforlotus #electioncampaign -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் தமிழ்நாட்டின் புதிய மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்ட மாண்புமிகு திரு.மு. தம்பிதுரை அவர்களுக்கும், பாமக சார்பில் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
மக்கள் நலன், சமூக நீதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்களின் சேவை சிறக்கட்டும். புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தி பல சாதனைகள் புரிய இறைவன் அருள் புரிவதாக வாழ்த்துகிறோம்.
வாழ்த்துகள்! வெற்றிப் பயணம் தொடரட்டும்!
@draramadoss @drmthambidurai -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் #இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளரும், கழகத்தின் பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் முனைவர் திருமதி ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் நலன், நீதிநிலை மற்றும் முன்னேற்றத்தை முன்னிறுத்தி பணியாற்றுவோம் என்ற உறுதியையும் அவர் தெரிவித்தார்.
#election2026 #votepriscillapandian #tnelections2026 #bjp #campaign #rajapalayam #priscillapandian #makkalaatchi #makkalinkural #vetripayanam #ராஜபாளையம் #பிரிசில்லா_பாண்டியன் #மக்களின்_குரல் #தேர்தல்2026 #வெற்றிநடை -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் @NainarBJP அவர்களை, நெல்லையில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்.
இந்நிகழ்வின் போது, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், கழகத்தின் பொதுச் செயலாளருமான வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் @priscillaTMMK அவர்கள் மற்றும் மாநில இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் உடனிருந்தனர்.
#nainarnagendran #bjp -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
கொத்தங்குளம் மக்களை சந்தித்து, அவர்களின் அன்பும் ஆதரவும் பெற்று வாக்கு சேகரித்த தருணம் ✨
ராஜபாளையம் தொகுதி வெற்றி வேட்பாளர்
டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள்
மக்களுடன் நேருக்கு நேர் உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, வளர்ச்சிக்கான உறுதிமொழி அளித்தார் 🤝
#rajapalayam #priscillapandiyan #voteforchange #peoplesupport #electioncampaign -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
வன்னியம்பட்டி உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம் 🙏
மக்கள் சேவையே அரசியலின் அடிப்படை என்பதை வாழ்வில் காட்டிய தலைவரை நினைவுகூர்ந்து, அவரின் எளிமை, நேர்மை, தியாகப் பாதையை முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுத்தோம்.
#perunthalaivarkamarajar #vanniyampatti #politicalreel #tamilnadu #leadership #inspiration #prisicillapandiyan #bjp #voteforbjpThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
விஷ்ணு நகர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு
ராஜபாளையம் வெற்றி வேட்பாளர் திருமதி ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெருமைமிகு தருணம் 🙏
தேசப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தியாகமும் தைரியமும்
என்றும் நம் வழிகாட்டி!
அவரது பாதையை முன்னிட்டு மக்கள் சேவையில் உறுதியாக நிற்கும்
நம் வெற்றி வேட்பாளர்! ✨
#rajapalayam #priscillapandiyan #veerapandiyakattabomman #electioncampaign #tamilnadupoliticsThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
துரைச்சாமிபுரம் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கவனமாக கேட்டு, வாக்குகளை சேகரித்தார் ராஜபாளையம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள்.
#votepriscillapandian #election2026 #campaign #bjp #admk -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
மக்களைத் தேடி, தெரு தெருவாக சென்று நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்
ராஜபாளையம் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் 🙏
ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிச் சென்று,
மக்களின் பிரச்சினைகளை கேட்டு,
மாற்றத்திற்கான உறுதியை அளித்தார் 💪
“மக்களின் குரலே என் குரல்” என்ற நம்பிக்கையுடன்,
நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட பயணம் தொடர்கிறது ✨
#rajapalayam #priscillapandiyan #makkalinkural #electioncampaign #vetrivaetpalar -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
சிறுவர்களுடன் இணைந்து சிரித்தும் விளையாடியும்,
அன்போடு மக்களிடம் வாக்கு சேகரித்தார்
ராஜபாளையம் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் ❤️
குழந்தைகளின் மகிழ்ச்சியிலும்,
மக்களின் நம்பிக்கையிலும் கலந்து,
எளிமையாக அனைவரையும் அணுகிய தருணம் ✨
“அன்பும் அணுகுமுறையும் தான் என் பலம்” என்ற நம்பிக்கையுடன்,
மக்களுடன் நெருக்கமாக தொடரும் பயணம் 🤝
#rajapalayam #priscillapandiyan #makkaludan #electioncampaign #vetrivaetpalar -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
கைத்தறி நெசவாளர்களுடன் நேரில் சந்தித்து,
அவர்களின் வாழ்வாதார சிக்கல்களை கேட்டறிந்து,
வாக்கு சேகரித்தார் ராஜபாளையம் வெற்றி வேட்பாளர்
டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் 🙏
உழைப்பின் மதிப்பை உணர்ந்து,
நெசவாளர்களின் நலனுக்காக உறுதியுடன் குரல் கொடுக்கத் தயாராகியுள்ளார் 💪
“உழைக்கும் கைகள் வளம் பெற வேண்டும்” என்ற நோக்கில்,
மக்களுடன் இணைந்து பயணிக்கும் தருணம் ✨
#rajapalayam #priscillapandiyan #kaithari #nesavalar #makkalinkural #electioncampaign -
John Pandian
@JohnPandianTMMK
அஇஅதிமுக சார்பில் தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் போட்டியிடும் திரு.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மருத்துவர திரு.திலீபன் அவர்கள் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் இன்று 31.03.2026 மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தனர். வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
#admk #eps #tenkasi #election2026 #ndaalliance -
John Pandian
@JohnPandianTMMK
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக வெற்றிக் கூட்டணியின் சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக #இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர், முனைவர். திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் M.A.,B.Ed.,M.L.,Ph.D., அவர்கள் #தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துகொண்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
உடன் மாநில நிர்வாகிகள்.
#தாமரை_மலரட்டும்
#இராஜபாளையம்_செழிக்கட்டும் -
John Pandian
@JohnPandianTMMK
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக வெற்றிக் கூட்டணியின், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக #இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர், முனைவர். திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் M.A.,B.Ed.,M.L.,Ph.D., அவர்கள் #தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#தாமரை_மலரட்டும்
#இராஜபாளையம்_செழிக்கட்டும்
#rajapalayam #priscillapandian #nda #admk #bjp #voteforbjp #voteforpriscillapandian -
John Pandian
@JohnPandianTMMK
#இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர், முனைவர். திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் #தாமரை சின்னத்தில் போட்டி.
@priscillaTMMK #rajapalayam #priscillapandian #voteforbjpThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில , மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 28.03.2026 இன்று எனது தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர்.திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் முன்னிலையிலும், திருநெல்வேலி - தென்தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா அவர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
#election2026 #rajapalayam -
John Pandian
@JohnPandianTMMK
"இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி நானே தேர்வு செய்த தொகுதி'' l #இராஜபாளையம் தொகுதி மக்களின் குரலாக நன்மைகள் செய்திட காத்திருக்கிறேன்.
#rajapalayam #election2026This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஈகை பெருநாளில் அனைவருக்கும் அமைதி, வளம், ஆரோக்கியம் கிடைத்திடவும், சகோதரத்துவத்துவம் தழைத்தோங்கவும் இந்நன்னாளை கொண்டாடி மகிழ்வோம்.
அனைவருக்கும் இனிய #ரமலான் தின நல்வாழ்த்துக்கள்!
#eidmubarak -
John Pandian
@JohnPandianTMMK
உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது #யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்!
#ugadi #ugadi2026 -
John Pandian
@JohnPandianTMMK
My Heartiest congratulations to BJP's honorable national president Shri. @NitinNabin ji on being elected as member of Rajya Sabha from Bihar.
-
John Pandian reposted
-
John Pandian
@JohnPandianTMMK
எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். ஆனால் திமுகவின் மிரட்டல்களால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” என தவெகவைச் சேர்ந்த நிர்வாகி திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் பொதுவெளியில் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ் சினிமாவில் 50-ஆண்டுகாலமாக முத்திரை பதித்து பல்வேறு விருதுகளைப் பெற்று, இமயம் தொட்டவர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள், பொதுவெளியில் பேசி மக்கள் மனதில் பிரபலமாக்கலாம் என்ற எண்ணத்திலும், இது போன்று பேசி பத்திரிக்கையின் கவனத்தை பெறலாம் என்ற நோக்கதோடு செயல்படும் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற தவெக தலைமை அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி காந்த் அவர்களிடமும், அவரது ரசிகர்களிடம் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@rajinikanth @AadhavArjunaThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணத்தை தொடங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், சகோதரர் திரு.TTV தினகரன் அவர்களுக்கும், அதன் தொண்டர்களுக்கும், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சி தலைவி அம்மையார் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் கொள்கை கோட்பாட்டை முன்வைத்து உருவாக்கிய இந்த இயக்கம் தொடர்ந்து மக்கள் நலனில் சிறந்த விளங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மென்மேலும் வளர்ச்சி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TTVDhinakaran @AMMKoffice -
John Pandian
@JohnPandianTMMK
தினத்தந்தி குழுமத்தின் முன்னாள் தலைவர், பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் துணைவியார், திருமதி.மாலதி ஆதித்தன் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
திருமதி.மாலதி ஆதித்தன் அவர்கள் மறைவு தினத்தந்தி குடும்பத்தினருக்கும், பத்திரிகைத் துறையினருக்கும் பெரிய இழப்பாகும். திருமதி.மாலதி ஆதித்தன் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் அமையும்! "தேசிய ஜனநாயகக் கூட்டணி" வெற்றி பெறுவது உறுதி!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் 12.03.2026 "தேவேந்திரகுல வேளாளர்" சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் முதல் மரியாதை , பரிவட்டம் மற்றும் "புஷ்ப பல்லக்கு விழா" மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் தேவேந்திரகுல வேளாளர்களின் சார்பாக காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு பூக்களையும் கொடுத்து வழிபாடு செய்தோம். -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு பயிலும் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17- வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிக கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் தினந்தோறும் கொலைக்களமாக மாறும் தமிழகம் இரு தினங்களுக்கு முன்பு 14-வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அடங்குவதற்கு முன், தற்போது விளாத்திகுளம் மாணவி சம்பவம். இவ்வாறாக தொடர்ச்சியாக தமிழகத்தில் பெண்களுக்கெதிரான பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது.
இச்சம்பவச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu #thoothukudi #protest #studentmurdercase #justiceforstudents -
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஆகாஷ்- யின் மரணம் குறித்து கேட்டறிந்தேன்.
உயிரிழந்த ஆகாஷ் அவர்களின் படுகொலைக்கு காரணமானவர்களின் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். உடனடியாக கைது செய்திட வேண்டும், இல்லையென்றால் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் போராட்டமாக வெடிக்கும் என்று அரசுக்கு எச்சரிக்கை செய்தேன்.
ஆகாஷ் படுகொலைக்கு நீதி வேண்டி மானாமதுரையில் நடந்து வரும் தொடர் முழக்க கண்டன போராட்டத்தில் இன்றைய தினம் நானும் கலந்து கொண்டு எனது கண்டன உரையாற்றி; இப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் துணை நிற்கும் என கூறினேன்.
@CMOTamilnadu #justiceforakash #manamadurai #lockupdeath -
John Pandian
@JohnPandianTMMK
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த முக்கியமான தேர்வில் எந்தவித பயமும், பதட்டமுமின்றி நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
#publicexam -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
இந்த சந்திப்பின் போது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் உடனிருந்தார்.
@arjunrammeghwal @BJP4India @narendramodi @BJP4Delhi @BJP4TamilNadu @NainarBJP @priscillaTMMK -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு.நிதின் நபின் @NitinNabin அவர்களை புதுதில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
இச்சந்திப்பின் போது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் உடனிருந்தார்.
@BJP4India @BJP4Delhi @narendramodi @NitinNabin @BJP4TamilNadu @NainarBJP @priscillaTMMK -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பலகோடி ரூபாய் ஊழல்; திமுக - விற்கு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் சம்பட்டி அடி கொடுப்பார்கள்!
==================================
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வணிகர்களிடம் இருந்து சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடக்கி வைக்க கிடங்கு இல்லாமல் உழைக்கும் வேளாண்குடி உழவர்கள் அவதிப்படும் நிலையில் அவர்களின் பணத்தை திமுகவின் ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசின் வேளாண்துறை என்பது; உழைக்கும் மக்களான விவசாயிகளின் ஓர் துரையின் அங்கம் ஆகும்; அதில் 27 மாவட்டத்தில் விற்பனைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. உழைக்கும் வேளாண்குடி மக்களின் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து, அதன் மூலம் உழவர்களுக்கு அதிக விலை பெற்றுத் தருவது தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பணியாகும்.
வணிகர்களுடன் ஊழல் கூட்டணி அமைத்துக் கொண்டு உழவர்களுக்கு குறைவான கொள்முதல் விலையைத் தான் பெற்றுத் தருகின்றனர். இது உணவு படைக்கும் கடவுள்களான உழைக்கும் உழவர்களுக்கு இழைக்கப்படும் முதல் துரோகமாகும். பல்வேறு மாவட்டங்களில் உழவர் சந்தை கடைகளில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. அதற்கு மூலகாரணம் யார் என்றால் "வேளாண்துறை அமைச்சர்" தான் என்று உழவர் சந்தை உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவரான ஊழல் செய்யப்படும் தொகையில் 50% அமைச்சருக்கு வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
வேளாண்குடி மக்களின் வியர்வை சிந்தி விளைவித்த பொருள்களை வாங்கி விற்பதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியைத் தான் வணிகர்கள் சந்தைக் கட்டணமாக செலுத்துகின்றனர். விற்பனைக் கூடங்களில் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை. அதனை ஆட்சியர்கள் சுரண்டுவது எவ்விதத்தில் நியாயம்; இதனை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள். ஊழல் நிறைந்த ஆட்சியாகத்தான் திமுக உள்ளது; கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கொடுமைகளை சந்தித்து வந்த நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் அனைவரும் சம்பட்டி அடி கொடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி #ஆகாஷ் மரணம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிவகங்கை மாவட்டம், #மானாமதுரை காவல்நிலைய காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் காவல் விசாரணை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டிருப்பது மன வேதனை அளிக்கிறது. இந்த கொடுமையான செயலை செய்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மடப்புரம் காவலாளி அஜித்குமாரை அடித்து கொலை செய்தது போன்று கடும் சித்ரவதை செய்து அடித்தே கொலை செய்துள்ளனர்.
காவல் துறை என்பது மக்களை காப்பாற்ற இருப்பவர்களா? இல்லை மக்களை கொன்று குவிக்கும் அரக்கர்களாக என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்வழக்கை விரைவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
The Tamilaga Makkal Munnetra Kazhagam strongly condemns the disgraceful conduct of the West Bengal Government in mishandling the Santal cultural event attended by the Hon’ble President of India, Smt. Droupadi Murmu.
Denying an appropriate venue and failing to ensure dignified arrangements for a programme celebrating the culture of the Santal tribal community is not merely administrative negligence; it reflects a disturbing disregard for India’s tribal heritage and for the dignity of the highest constitutional office of the nation.
Such irresponsible behaviour by the West Bengal Government has deeply hurt the sentiments of tribal communities across the country. Respect for the President of India must rise above partisan politics and narrow state-level rivalries.
The West Bengal Government must be held accountable for this unacceptable insult to the Hon’ble President and to the proud heritage of the Santal community. TMMK unequivocally condemns this shameful act and demands an immediate and unconditional apology from the state government.
— B. John Pandian
Founder president ,
Tamilaga Makkal Munnetra Kazhagam
@rashtrapatibhvnThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
-
John Pandian
@JohnPandianTMMK
#நாங்குநேரி நம் கண்ணை விட்டு அகலாத நிலையில் தற்போது #சிவகங்கை மாவட்டம், #மானாமதுரையை அடுத்த #இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் கொண்ட ஒரு கும்பல், அங்குள்ள மக்கள் மீது மிருகத்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்!! இச்சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
சமூக ஊடகங்களில் அந்த காணொளியை காணும் நெஞ்சம் பதறுகிறது.
அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ஊருக்குள் தெருவில் ஓடி வந்து கொலைவெறித் தாக்குதல் செய்கிறார்கள். அவர்களுக்கு எந்த அச்சமும் இருப்பதாக தெரியவில்லை. சமூக விரோதிகளின் இந்த கொடூர தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பைக் கூட உறுதி செய்வதற்கு துப்பற்ற நிலையில் "திமுக அரசும்- காவல்துறையும்" உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி துயர சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
எனவே, மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைத்திருக்கும் சூழலுக்கு காரணமான கையாலாகத திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.
@CMOTamilnadu @tnpoliceofflThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டு வீசி நடந்த கொலைவெறித் தாக்குதல் 9 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவருகின்றன; இச்சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
நாங்குநேரி பகுதியில் இச்சம்பவம் சாதாரண மக்கள் மீது இத்தகைய மிருகத்தனமான கொலைவெறித் தாக்குதல் நடந்த உண்மை காரணம் என்ன? இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது; தமிழக காவல்துறை இச்சம்பவம் குறித்து மிக கவனத்தோடு விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாலையோரத்தில் சம்பந்தம் இல்லாமல் வருவோர் போவோர் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடந்துள்ளது. காவல்துறை இச்சம்பவத்தின் பின்புலத்தில் யார் யார் தொடர்புள்ளார்களோ அவர்களை உடனடியாக கைது செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ - மாணவியர்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள்!
இன்று முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ - மாணவியர்கள் அனைவரும் துணிவுடனும், உற்சாகத்துடனும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும் எதற்காகவும் அச்சமடையாமல், முழு நம்பிக்கையுடன் தேர்வெழுதி; தாங்கள் விரும்பும் உயர்கல்வியில் சேர வாய்ப்பு கிடைத்திட வேண்டும். அந்த வகையில் எண்ணற்ற சாதனைகள் படைக்கும் வேண்டும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளரும் - தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியின் தலைவர்களுடன் நானும் கலந்துக்கொண்டு உரையாற்றியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
@narendramodi @BJP4TamilNadu @NainarBJP @annamalai_k @EPSTamilNadu #madurai #pmmodiji #narendramodi #ndalliance #tmmk -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - #திருச்சி மாவட்டம் சார்பில் 28.02.2026 அன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் #திருவெறும்பூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
-
John Pandian
@JohnPandianTMMK
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
''அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க - ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வாழ இதயபூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
@mkstalin -
John Pandian
@JohnPandianTMMK
விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைத் தூணாக நின்றவரும், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பெருந்தமிழர் திரு.நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழகத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.
John Pandian
@JohnPandianTMMK
எளிய மக்களின் உரிமைகளுக்காக சமரசமில்லாமல் என்றும் குரலெழுப்பும் மாமனிதர், நேர்மையின் அடையாளமாக திகழ்ந்தவர், பல அடக்கு முறைகளை கண்டு பயம் கொள்ளாமல் களத்தில் உறுதியோடு நின்று முழக்கமிட்டவர்.
John Pandian
@JohnPandianTMMK
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் திரு.ஏ.சி.பாவரசு அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
இவரது மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களுக்கு பேரிழப்பாகும்.
John Pandian
@JohnPandianTMMK
மேலும் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@thirumaofficial -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசியல் வரலாற்றின் புகழ்மிக்க, துணிச்சல்மிகு பெண் ஆளுமை, முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் பெருமைகளை நினைவுகூறுவோம்.
#jayalalitha -
John Pandian
@JohnPandianTMMK
அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தை கண்டுகொள்ளாத திமுக அரசு! #dmk
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - சிவகங்கை தெற்கு மாவட்டம் சார்பில் 22.02.2026 அன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் மானாமதுரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
-
John Pandian
@JohnPandianTMMK
@TMMKofficial ( TMMK) strongly condemns the irresponsible and unjust protest staged by the Youth Congress during the AI summit on the US trade agreement.
Turning platforms meant for national development dialogue into political theatrics goes against democratic values.
John Pandian
@JohnPandianTMMK
The dignity of public forums must be upheld.
People are closely watching Such uncivil actions of the Congress is to be condemned .
Let us stand united with the Hon’ble Prime Minister of India for the nation’s progress. -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடிய போது.
@BJP4TamilNadu @NainarBJP #ndaalliance #election2026 -
John Pandian
@JohnPandianTMMK
#தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட #ஊத்துமலை மற்றும் #தட்டப்பாறை கிராமத்தில் 18.02.2026 அன்று மக்களைச் சந்தித்தேன். அவர்களுடன் உரையாடி, அவர்களின் அன்றாட வாழ்க்கை, பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.
#ndaalliance -
John Pandian
@JohnPandianTMMK
#தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட #மாவிலியூத்து கிராமத்தில் 18.02.2026 அன்று மக்களை நேரில் சந்தித்தது மனதிற்கு அளவிலா மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.
#tenkasi -
John Pandian
@JohnPandianTMMK
#தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட #கீழக்கலங்கல் பகுதி மக்களை19.02.2026 அன்று நேரில் சந்தித்துஉரையாடினேன். அவர்களின் அன்பான வரவேற்பும், மனம் திறந்த கருத்துகளும் மிகவும் உற்சாகமளித்தன.
#tenkasidistrict -
John Pandian
@JohnPandianTMMK
#தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பினான்குளம் பகுதி மக்களை 18.02.2026 அன்று நேரில் சந்தித்து, கழக கொடியேற்றிய போது.
பின்னர், அப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தேன். இந்நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#tenkasi -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் #தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணாடிகுளம் பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கொடுமைகளை சந்தித்து வந்த நிலையில், (1/2)
John Pandian
@JohnPandianTMMK
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவிற்கு முடிவுரை எழுதி, அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை வெற்றி பெறவைக்கும் முடிவில் உறுதியாக உள்ளனர். இந்நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். (2/2)
#tenkasidistrict -
John Pandian
@JohnPandianTMMK
2026 - 2027 ஆம் ஆண்டுக்கான "இடைக்கால நிதிநிலை அறிக்கை" என்ற பெயரில் மீண்டும் மக்களை வஞ்சித்தியிருக்கும் திமுக அரசு.
www.facebook.com/share/p/1DhXcMTRZz/ -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் 13.02.2026 அன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் உடுமலை பேட்டையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வினை மாவட்டச் செயலாளர் திரு.KB.சபரீஸ்வரன் அவர்கள், மாவட்டத் தலைவர் திரு.K.ராமசாமி அவர்கள், ஏற்பாட்டில் உடுமலை பேட்டை கிராம மக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம் குறித்தும் மக்களிடம் எழுச்சி உரையாற்றினேன். உடுமலை பேட்டை உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சண்முக சுதாகர் அவர்கள், மாநில விவசாய அணி செயலாளர் திரு.S.M.சேகர் அவர்கள், திருப்பூர் மாவட்ட முன்னாள் & இன்னாள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
#வெல்லட்டும்_பட்டியல்_வெளியேற்றம் #உருவாகட்டும்_சமத்துவம் #tiruppurdistrict #udumalaipettai #tmmk -
John Pandian
@JohnPandianTMMK
மகளிருக்கு ரூபாய் 5,000 என தற்போதைய ஆளும் திமுக அரசு அறிவிப்பாணை அறிவித்துள்ளது. அவர்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 5,000 ரூபாய் மட்டுமில்லை, 50,000 ரூபாய் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – எனவே இது திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. திமுக அரசு எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் இனி ஒருபோதும் எடுபடாது.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது அவசரக்கதியில் "கோடைக்கால சிறப்புத் தொகை" என வெளியீட்டு இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம் என்று தான் கூற முடியும் தவிர, வேறொன்றும் கூற முடியாது. இது மகளிரின் மீதான அக்கறை தன்மை என்று திமுக அரசு நினைத்து கொள்கிறது.
"சமூக நீதி" "சமூக நீதி" என்று கூச்சலிடும் திமுக அரசு. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதரர்களுக்கும் மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்து பின்பு பல்வேறு கட்டுப்பாட்டில் விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்குகிறது. இதுதான் திமுகவின் சமூக நீதியா?
ஆனால், தற்போதைய திமுக அரசு இதுவரை இல்லாத "கோடைகால சிறப்பு தொகை" பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு ரூபாய் 5,000 வழங்கியிருப்பது. எதன் அடிப்படையில், இந்த ஆண்டு மட்டும் தான் கோடை காலம் வருகிறதா? வழக்கமாக 15-ஆம் தேதி வரவு வைக்கப்படும் உரிமைத்தொகை தற்போது 13-ஆம் தேதி வைக்கப்பட்டு இருப்பதின் காரணம் என்ன?
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட கட்டணம் வரி மூலம் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் ரூபாய் 25,000 கூடுதலாக பறிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் சுமார் ரூபாய் 1.25 லட்சம் பறிமுதல் பறித்துக் கொண்டு ஒரு முறை ரூபாய் 5,000 வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசு – அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான சூழலுக்கு தொடர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்று தான் கூறமுடியும்.
நாமக்கல் மாவட்டம் ,திருச்செங்கோடு அருகே உள்ள கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், கலை நிகழ்ச்சி ஒத்திகையின் போது விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த ஒத்திகையின் போது நெற்றியில் விஷப்பூச்சி கடித்ததில் மயக்கமடைந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக அரசு - அரசுப் பள்ளி வளாகப் பாதுகாப்பில் அலட்சியத்துடன் இருந்ததே இத்துயர சம்பவத்திற்கு காரணம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு உயிரிழந்த மாணவியின் இழப்புக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இதனைப்போன்று இரண்டு நாட்களுக்கு முன் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - கேத்தனூர் பகுதியில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , மீண்டுமொரு துயரச் சம்பவம் மற்றொரு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதுதமிழக அரசின் கீழ் பள்ளிக் கல்வித்துறையின் செயலற்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது.
அதனை போல் திருவாரூர் மாவட்டம், பவித்ரமங்கலம் பகுதியில் புத்தக திருவிழாவிற்கு அரசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் திரும்பி வரும் பொழுது பழுதாகி அதை சக மாணவர்கள் தள்ளிச் சென்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது. புத்தகப் பைகளை சுமக்க வேண்டிய மாணவர்களை பேருந்தை தள்ள வைத்திருப்பது அவல திமுக ஆட்சியில் போக்குவரத்துறை எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் பிப்ரவரி 8-ம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு பணிக்கான தேர்வுக்கு தேதியை அறிவித்த பிறகு அதற்கு உண்டான பணிகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். பல கனவுகளோடு தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து தங்களின் லட்சிய கனவுகளை இந்த தேர்வின் மூலம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கனவில் வந்திருப்பவர்களுக்கு தேர்வுகள் ரத்து என்ற செய்தி அறிவிப்பானது தேர்வாளர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில பகுதிகளில் தேர்வாளர்கள் தேர்வு மையங்களில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது இந்த அறிவிப்பு வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக ஆட்சியின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.மேலும் சில தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் தேர்வாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்வு ஒத்திவைத்து தற்போது தமிழக அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று எதிர்பாராத முறையில் வெளியானது. இதனால் தேர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வானது ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவது மார்ச் 15 -ம் தேதி அன்று நடைபெறும் தேர்வுகளை முறையாக அதற்கு உண்டான ஆயத்த பணிகளை ஏற்பட்டுநிலையில் வைத்திருக்க வேண்டும். மறு தேர்வானது மீண்டும் இதுபோன்ற குளறுபடி ஏற்படாமல் இருப்பதற்கு. முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
#tnpscgroup2 #tnpsc #tnpscexamThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் 08.02.2026 அன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வினை இராமநாதபுரம்மாவட்டச் செயலாளர்கள்: திரு.RV.ராஜபாண்டியன் அவர்கள், திரு.R.சுரேஷ் பாண்டியன் அவர்கள், மாவட்டத் தலைவர்கள் : திரு.M.காளிதாஸ் பாண்டியன் அவர்கள், திரு.R.இராஜசேகர் அவர்கள் ஏற்பாட்டில் பரமக்குடியில் கிராம மக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம் குறித்தும் மக்களிடம் எழுச்சி உரையாற்றினேன். இராமநாதபுரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள், மாநில நிர்வாகிகள் : மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சண்முக சுதாகர் அவர்கள், திருமதி.நளினி சாந்தகுமாரி அவர்கள், மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் திரு.அ.சி.கோபால கிருஷ்ணன் அவர்கள், மாநில விவசாய அணி செயலாளர் திரு S.M.சேகர் அவர்கள், மண்டலச் செயலாளர் திரு.திரவியம் அவர்கள் மற்றும் முன்னாள் & இன்னாள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
#வெல்லட்டும்_பட்டியல்_வெளியேற்றம் #உருவாகட்டும்_சமத்துவம் #ramanathapuram #paramakudi #tmmk -
John Pandian
@JohnPandianTMMK
ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவரும், தீண்டாமை ஒழிப்புக்காக முனைப்போடு பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சமூகநீதி போராளி, தியாகி.வே.இமானுவேல் சேகரனார் அவர்களின் மணிமண்டபத்தில் இன்றைய தினத்தில், பரமக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்த போது.
#immanuvelsekaranar #paramakudi #tamilagamakkalmunnetrakazhagamThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய ஜனநாயகக் கட்சியின் (IJK) 4-வது மாநில மாநாடு வெற்றி பெற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்...
#ijk #drpaarivendhar #drravipachamuthu #tmmk -
John Pandian reposted
V News27
@vnews27
ஐஜேகே மாநில மாநாடு - தமமுக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து | @JohnPandianTMMK | VNews27
#johnpandian | #tmmk | #ijk | #drpaarivendhar | #drravipachamuthu | #vnews27 -
John Pandian reposted
V News27
@vnews27
ஐஜேகே மாநில மாநாடு - தமமுக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து
#johnpandian | #tmmk | #ijk | #drpaarivendhar | #drravipachamuthu | #vnews27 | @PaarivendharTR |@JohnPandianTMMK -
John Pandian reposted
KC THIRUMARAN JI
@kcthirumaran
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பாசமிகு அண்ணன்
திரு .ஜான் பாண்டியன் அவர்களும் ,மற்றும் டாக்டர் வியங்கோ பாண்டியன் இளைஞரணி தலைவர் அவர்களும், எனது அண்ணன் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், இன்று எனது இல்லத்தில் அண்ணன் அவர்கள் மணமக்களை நேரில் சந்தித்து ஆசி வழங்கினார் உடன் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் உடன் இருந்தன . -
John Pandian
@JohnPandianTMMK
3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கை கோட்பாட்டை முன்வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு .விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@actorvijay @TVKVijayHQ -
John Pandian
@JohnPandianTMMK
பத்திரிக்கை செய்திகள் :
-
John Pandian
@JohnPandianTMMK
வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு..
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - வேலூர் மாவட்டம் சார்பில் 31.01.2026 அன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பின்னர் வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம் குறித்தும் மக்களிடம் எழுச்சி உரையாற்றினேன். வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர், திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் - மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சண்முக சுதாகர் அவர்கள், திரு.ச.தமிழரசன் அவர்கள், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திரு.ராஜேந்திரன் அவர்கள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
#வெல்லட்டும்_பட்டியல்_வெளியேற்றம் #உருவாகட்டும்_சமத்துவம் #vellore #tmmk -
John Pandian
@JohnPandianTMMK
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சிவாயம் என்கிற பகுதியில் சட்ட விரோதமாக கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிமவள கொள்ளையடிக்கப்படுகிறது. என்ற செய்தி அறிந்து செய்தியை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 ( நியூஸ் தமிழ் 24x7 ) செய்தியாளர் நிருபர் திரு.கதிரவன் மற்றும் ஒலிப்பதிவாளர் திரு.செபாஸ்டின் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்,கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது.
சட்டவிரோத கனிமவள கொள்ளையை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். செய்தி சேகரிக்க சென்ற ஊடக நண்பர்களை தாக்கியது தான் கருத்துச் சுதந்திரமா? ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் ஊடகத்துறை மற்றும் அதன் சார்ந்த சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் ஜனநாயக நாட்டின் சுதந்திரமா? இவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு உள்ளன அனைவரையும் உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கைது செய்தால் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாய் இருக்கும் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்படும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @arivalayam @NewsTamilTV24x7 #karur #tamilnews24x7 #reporterattack #mediaattack #journalistsafety #pressfreedom #mafiaattackThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நிகழ்கால தரவான வரலாற்று சிறப்புமிக்க கி.பி 1528 பழனி செப்புபட்டயத்தின்படி அருள்மிகு பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் "தேவேந்திரகுல வேளாளர்" சமூகத்திற்கு பாத்தியப்பட்ட 29 - ஆம் ஆண்டு தைப்பூசம் முதல் மரியாதை & மண்டகப்படி திருவிழா 27.01.2026 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
#29_ம்_ஆண்டு #வெள்ளி_விழா #பழனி #பரிவட்ட_முதல்_மரியாதை #johnpandian #viyangopandian #தேவேந்திரகுல_வேளாளர் #tmmkparty #palanimurugantemple #palani #palanimurugantemple #palaniparivattam #tmmkitwing #tamilagamakkalmunnetrakazhagam -
John Pandian
@JohnPandianTMMK
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) கட்சி தலைவர் திரு.அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சொல்லொணாத் துயரமும் அடைந்தேன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்தவர், தேசிய வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் ஒரு சிறந்த தலைவரை நாம் இழந்துள்ளோம். இது அந்த மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், மகாராஷ்டிர மாநில மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ajitpawar -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - தென்காசி மாவட்டம் சார்பில் 25.01.2026 அன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம், புளியங்குடியில் - (தெற்கு) மாவட்ட கழக செயலாளர் திரு.SKP.கணேஷ்பாண்டியன் அவர்கள், (வடக்கு) மாவட்ட கழக செயலாளர் திரு.கனி பாண்டியன் அவர்கள் ஏற்பாட்டில் புளியங்குடி மக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம் குறித்தும் மக்களிடம் எழுச்சி உரையாற்றினேன். மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அணை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும். எலுமிச்சை விவசாயிகளுக்காக குளிர்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும். இயற்கை வளங்களை அளித்து கனிம வளங்கள் சட்டத்திற்கு புறம்பாக பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அப்பகுதியில் உள்ள பல்வேறு மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர், திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் - மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சண்முக சுதாகர் அவர்கள், வழக்கறிஞர் திரு.அருண் பிரின்ஸ் அவர்கள், திருமதி.நளினி சாந்தகுமாரி அவர்கள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
#வெல்லட்டும்_பட்டியல்_வெளியேற்றம் #உருவாகட்டும்_சமத்துவம் #tenkasi #tmmk -
John Pandian
@JohnPandianTMMK
ஜனவரி 26: குடியரசு தினம் (Republic Day)
இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டு, மக்களாட்சி மலர்ந்த குடியரசு தினத்தில் அன்று, தேச மக்கள் அனைவரும் நாட்டுக்கான தங்கள் கடமையை செவ்வனே செய்திட உறுதியேற்போம்.
அனைவருக்கும் இனிய #குடியரசு_தின நல்வாழ்த்துகள்
#republicday #republicday2026 -
John Pandian
@JohnPandianTMMK
2026-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் மருத்துவர் திரு.கே.ஆர் பழனிசாமி, தொழிலதிபரும் சமூக சேவகருமான திரு. எஸ்.கே.எம்.மயிலானந்தம் அவர்கள், விளையாட்டு வீரர் திரு. விஜய் அமிர்த ராஜ் உள்ளிட்ட ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதனைபோல், பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மருத்துவருமான டாக்டர்.ஹெச்.வி.ஹண்டே அவர்கள், கால்நடை ஆராய்ச்சியாளர் திரு.ந.புண்ணியமூர்த்தி அவர்கள், சென்னை IIT இயக்குநர் திரு.காமகோடி அவர்கள், முன்னாள் இந்திய காவல் பணி உயர் அதிகாரி திரு. விஜயகுமார் அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி திரு.கே.ராமசாமி அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் திரு.R.கிருஷ்ணன் அவர்கள், பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திரு.மாதவன் ரங்கநாதன் அவர்கள், எழுத்தாளர் திருமதி.சிவசங்கரி, தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை கலைஞர்கள் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன் & திருமதி. ரஞ்சனி பாலசுப்பிரமணியன் அவர்கள்,
ஓதுவார் திரு.திருத்தணி சுவாமிநாதன், திரு.ஆர்.கிருஷ்ணன்,
ராஜஸ்தபதி திரு.கலியப்ப கவுண்டர்,
திருவாரூர் திரு.பக்தவத்சலம் , புதுச்சேரி திரு.கே.பழனிவேல், தொழிலதிபர் திரு.டி.டி.ஜெகநாதன் அவர்கள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும், அவரவர் துறைகளில் மேன்மேலும் சிறந்து விளங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். மேலும், இவ்விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு "தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்" சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#padmabhushan #padmashri -
John Pandian
@JohnPandianTMMK
இன்று செங்கல்பட்டு மாவட்டம் - மதுராந்தகத்தில் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான, திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பங்கேற்ற, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியின் தலைவர்களுடன் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நானும் கலந்துக்கொண்டு உரையாற்றியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
#nda #admk #bjp #tmmk #election2026 -
John Pandian
@JohnPandianTMMK
மதுராந்தகத்தில் நடைபெறும் (ஜனவரி 23) இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு, இன்னும் சற்று நேரத்தில் வருகை தரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி @narendramodi அவர்களை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருக! வருக!! என மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
@BJP4India @BJP4TamilNadu #tn_welcome_modi
#nda4tn -
John Pandian
@JohnPandianTMMK
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான, திரு. எடப்பாடி கே. பழனிசாமி @EPSTamilNadu அவர்களை 22.01.2026 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
இச்சந்திப்பின் போது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர், திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் @priscillaTMMK அவர்கள் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@AIADMKOfficial @TMMKofficial -
John Pandian
@JohnPandianTMMK
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது.!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு பியூஷ் கோயல் @PiyushGoyal அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
இந்நிகழ்வில் போது, தமிழக பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP அவர்கள், @TMMKofficial - தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர், திருமதி. @priscillaTMMK அவர்கள் உடனிருந்தனர்.
@BJP4India @BJP4TamilNadu #election2026 -
John Pandian
@JohnPandianTMMK
மக்கள் திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.
#mgr #makkalthilagam #puratchithalaivarmgr -
John Pandian
@JohnPandianTMMK
உழவர் திருநாள்!
உலகின் இயக்கத்தில் அச்சானியாக செயற்பட்டு, தமிழரின் பாரம்பரியமாம் நன்றி தெரிவிக்கும் உணர்வால்,உழவில் ஈடுபடும் அனைத்து உயிர்களுக்கும் மரியாதை செலுத்தி இயற்கையோடு இணைந்து விழா கொண்டாடும் வேளாண்குடி உழவர்களுக்கு உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... -
John Pandian
@JohnPandianTMMK
வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம்; உருவாகட்டும் சமத்துவம் என்ற முழகத்துடன் இன்று தை திருநாளான பொங்கல் திருநாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தோம்.
#happypongal2026 #pongal2026 -
John Pandian
@JohnPandianTMMK
அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...
அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வேண்டும். அவர்களின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களும் - வளங்களும் பெற தைத்திருநாள் வகை செய்யட்டும்; தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதனை போல் நமது வாழ்விலும் புதிய வழிகள் பிறக்கட்டும்; அவை நிலைக்கட்டும் எனக்கூறி பொங்கல் திருநாளை மகிழ்ந்து கொண்டாடுகிற உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#pongal2026 #பொங்கல்திருநாள் -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் 11.01.2026 இன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் எனது ( தலைவர் தமிழினவேந்தர் அவர்களின் ) பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திரிசூலம் - ஈஸ்வரன் கோவில் பகுதியில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஜெகன் பாண்டியன் அவர்கள், புறநகர் மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் அவர்கள் ஏற்பாட்டில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம் குறித்தும் மக்களிடம் எழுச்சி உரையாற்றினேன். பின்னர் சுதந்திர போராட்ட வீரர், சமூகநீதி போராளி தியாகி வே.இம்மானுவேல் சேகரன், இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை வீரர் – மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு திருஉருவச்சிலைகளை
திரிசூலம் பகுதியில் அமைக்கவேண்டும், திரிசூலம் பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மண்டபம் அமைக்கவேண்டும் என அப்பகுதியில் உள்ள பல்வேறு மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர், திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சண்முக சுதாகர் அவர்கள், சென்னை மண்டலச் செயலாளர் திரு.ராஜேந்திர பிரசாந்த் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
#வெல்லட்டும்_பட்டியல்_வெளியேற்றம் #உருவாகட்டும்_சமத்துவம்
John Pandian
@JohnPandianTMMK
-
John Pandian
@JohnPandianTMMK
JP கல்விக் குழுமம் சார்பில் தேவேந்திரா கல்வி தொண்டு அறக்கட்டளை கீழ் இயங்கும், தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ஆல்மைட்டி செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் இன்று 09.01.2026 கலந்துகொண்டு சிறப்பித்தேன்.
இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினேன். பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கினேன். மேலும், நமது கலாச்சாரத்தை உணர்த்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என கல்லூரி ஆசிரியர்களுடனும், மாணவர்களுடன் ஒற்றுமையாக பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தேன்.
#pongal #pongal2026 #pongalcelebration #tirunelveli #devendraphysiotherapycollege #ariyakulam -
John Pandian
@JohnPandianTMMK
பொங்கல் கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்!
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளனர்.
இந்தநிலையில் டெல்டா மாவட்டம் மற்றும் தேனி மாவட்டம் - பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு முழு கரும்பு 38 ரூபாய்-க்கு வாங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இது போதுமானதானது அல்ல எனவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புக்கான கரும்பை இடைத்தரகர்கள் இன்றி தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அறுவடை கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு யார் அங்கீகாரம் தருகிறார்களோ! அவர்களுடன் கூட்டணி!
-
John Pandian
@JohnPandianTMMK
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் பெண்ணியத்தின் வலிமையை வணங்குகிறேன்.
#velunachiyar -
John Pandian
@JohnPandianTMMK
ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு மிகவும் மன வருத்தப்பட்டேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
"வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம்! உருவாகட்டும் சமத்துவம்" மாவட்டம் தோறும் பொதுக்கூட்டம்!
-
John Pandian
@JohnPandianTMMK
அம்பாசமுத்திரம் - காக்காநல்லூர் பகுதியில் அரசு அதிகாரிகள் தலையிட்டு பொதுப்பாதை அமைத்திட வேண்டும்!
-
John Pandian
@JohnPandianTMMK
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026!
இந்த புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் வெற்றி, வளம், ஆரோக்கியம் மற்றும் அமைதி நிறைந்து விளங்கட்டும். புதிய கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறி, அனைத்து இலக்குகளையும் அடைவோம்.
மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும்! -
John Pandian
@JohnPandianTMMK
2026 - ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி!
#happynewyear2026 -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி - நெல்லை பகுதிகளில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 31.12.2025 புதன்கிழமை எனது தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர்.திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் முன்னிலையிலும், திருநெல்வேலி - தென்தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா அவர்கள், மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.
@TMMKofficial @priscillaTMMK @Viyangotmmk @vinolinnivetha #tnelection2026 #tmmk -
John Pandian
@JohnPandianTMMK
மதுவினால் - மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திருத்தணியில் நடந்த சம்பவம் கஞ்சா போதையே!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் 27.12.2025 அன்று இளைஞர்கள் சிலர், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் பெரும் அச்சத்தையும், அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இளைஞர்களின் நிலை இப்போது கஞ்சா போதையில் தான் உள்ளது. கல்விச்சாலையில் அறிவை தீட்டவேண்டிய வயதில், அரிவாள் போன்ற ஆயுதங்களால்
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை காணமுடிகிறது.
கஞ்சா போதையில் “ரீல்ஸ்” மோகத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. உலகில் தொலைத்தொடர்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை பயனுள்ளதாக இருக்கவேண்டும் தவிர இதுபோன்ற தவறான செயல்களால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நம் அடுத்த தலைமுறையினரை புத்தகங்களை வாசிக்க நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இந்த அளவிற்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேடு,போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே,இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை "தமிழக அரசு" சார்பில் உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என கூறினாலும் அதனை விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
2026-ல் சட்டப்பேரவை தேர்தல் திமுக, அதிமுக-வுக்கு தான் போட்டியே!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நவம்பர் 30 - அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் தலைமை அலுவலகத்தில் 30.12.2025 இன்று ஏழை - எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், விவசாயத்திற்கு பயன்படும் மருந்தடிக்கும் இயந்திரம், வேட்டி, சேலைகள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
அங்கீகாரம் இல்லனா கூட்டணி மாறுவோம்!
-
John Pandian
@JohnPandianTMMK
மீடியா Hype வேலைக்காவாது! #tnmedia
-
John Pandian
@JohnPandianTMMK
திமுக அதிமுகவுக்கு தான் போட்டியே!
-
John Pandian
@JohnPandianTMMK
அப்போ மாரி செல்வராஜ் பிறக்கவே இல்ல...
#mariselvarajThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திமுகவுடன் இணையுமா தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்?
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
அரசியல் கட்சிகள் என்னை நசுக்க பாத்தாங்க!
-
John Pandian
@JohnPandianTMMK
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது நினைவு தினம். தமிழக அரசியல், திரை உலகில் தனது தனித்துவமான பங்களிப்பால் என்றென்றும் வாழும் மாமனிதர். அவரது இழப்பு தீராத வெற்றிடம். இதயபூர்வமான அஞ்சலி!
-
John Pandian
@JohnPandianTMMK
மிரட்டக்கூடிய சூழ்நிலை வந்தால்? அது ரகசியம் சொல்லமுடியாது!
#2026election -
John Pandian
@JohnPandianTMMK
மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த நேர்காணல்
வீடியோ லிங்க்: youtu.be/8MFZFXfNHp0 -
John Pandian
@JohnPandianTMMK
TVK உடன் கூட்டணியா ? #tnelection
-
John Pandian
@JohnPandianTMMK
கடந்த தேர்தலில் 311-வது வாக்குறுதியாக 'சம வேலைக்குச் சம ஊதியம்' என்ற உறுதிமொழியை அளித்துவிட்டு, இன்று இடைநிலை ஆசிரியர்களைப் போராட விட்டு அவர்களைக் கைது செய்வது திமுக ஆட்சியாளர்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.
தங்கள் நியாயமான உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடும் கல்விப் பணியாளர்களை மதிப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கைது செய்து ஒடுக்கும் அரசின் செயல் சகித்துக்கொள்ள முடியாத அராஜகப் போக்காகும். திமுக தனது ஆட்சிக் காலம் முடியவுள்ள இந்தச் சூழலிலாவது, ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசாணையாக வெளியிட வேண்டும் எனத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
விஜய் முதலில் தேர்தலில் போட்டியிடட்டும் பிறகு கூட்டணி குறித்து பேசலாம்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
விஜயை பார்த்து எனக்கு எதற்கு பயம் ?
#tnpolitics -
John Pandian
@JohnPandianTMMK
கூட்டணி தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும்.
#election2026 -
John Pandian
@JohnPandianTMMK
IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த நேர்காணல்
வீடியோ லிங்க்: www.youtube.com/watch?v=XgL30OovSx0 -
John Pandian
@JohnPandianTMMK
கீழ்வெண்மணி தியாகிகளுக்கு இதயம் நெக்குறுகும் வீரவணக்கம்!
1968 டிசம்பர் 25... கூலி உயர்வுக்காக குரல் கொடுத்த 44 அப்பாவி விவசாயத் தொழிலாளர்கள் – அம்மாக்கள், குழந்தைகள் உட்பட – கொடூர நிலக்கிழார்களால் உயிரோடு தீயில் இட்டு எரிக்கப்பட்டனர். அவர்களின் கதறல் இன்றும் எதிரொலிக்குது! அந்த தியாகம் என்றும் அழியாது, உழைப்போரின் உரிமைக்கு எரியும் விளக்காக எரியட்டும்!
#kilvenmanimassacre -
John Pandian
@JohnPandianTMMK
வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினம் இன்று!
ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியாவில் முதலாவதாக போர் தொடுத்த வீராங்கனை. சிவகங்கை ராணி, கணவர் கொலைக்கு பழிதீர்த்து நாடு மீட்டவர். உடையாள் படை அமைத்து பெண்களை வீரராக்கியவர். குயிலியின் தியாகம், மருது சகோதரர்களின் உதவியுடன் வெற்றி பெற்றவர். அவரது வீரம் என்றும் தமிழர்களுக்கு உத்வேகம். அவரை போற்றி வணங்குவோம்!
#வேலுநாச்சியார் -
John Pandian
@JohnPandianTMMK
அன்பு விதைத்த இயேசு பிரானின் பிறப்பை கொண்டாடும் இந்நாளில், உங்கள் வாழ்க்கை இன்பங்களால் நிரம்பட்டும். சமாதானமும் சகோதரத்துவமும் பெருகட்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் ..!
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்பும் அமைதியும் தவழும் இந்த கிறிஸ்துமஸ் திருநாளும், புதிய இலக்குகளுடன் பிறக்கும் இந்தப் புத்தாண்டும், உங்கள் வாழ்வில் மட்டற்ற மகிழ்ச்சியையும், வளத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும். ஒற்றுமையுடன் இணைந்து தமிழகத்தை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்வோம்.
#merrychristmas -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த ஆண்டு பெய்த நல்ல மழையினால் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 100 முதல் 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வளவு சிறப்பான விளைச்சல் இருந்தபோதிலும், பனைத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்த அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, பனைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்க அரசு முன்வராததால், இத்தொழிலைக் கைவிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பனைத் தொழிலின் எதிர்காலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எனவே, பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருப்பட்டி, பனங்கற்கண்டு மற்றும் பனங்கிழங்கு ஆகியவற்றை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஒரு கட்டு பனங்கிழங்கையும் சேர்த்து வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் திலகமுமான புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38ஆம் நினைவு நாளில் ஆழ்ந்த அஞ்சலி. ஏழைகளுக்காக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி, கல்வி, உணவு, சுகாதாரத்தில் புரட்சி செய்த மாமனிதர். அவரது சேவை மனப்பான்மையும் மக்கள் நலக் கொள்கைகளும் உத்வேகம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவரது பாதையைப் பின்பற்றி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். மலரஞ்சலி!
-
John Pandian
@JohnPandianTMMK
தியாகி பி. கக்கன் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவு நாளில் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்!
விடுதலைப் போராட்ட வீரராகவும், காந்தியடிகளின் உற்ற தோழராகவும், மதுரை மீனாட்சி கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கான நுழைவுரிமைப் போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவராகவும் திகழ்ந்த மாமனிதர் கக்கன். பொதுப்பணித் துறை அமைச்சராக மேட்டூர், வைகை அணைகளை வலுப்படுத்தியதோடு, மணிமுத்தாறு, அமராவதி அணைகளைக் கட்டி நீர்ப்பாசன வசதியை பெருக்கினார். விவசாயத்துறை அமைச்சராக இரு வேளாண்மைக் கல்லூரிகளை நிறுவி, விவசாயிகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார்.
எளிமை, நேர்மை, தியாகம் ஆகியவற்றின் சின்னமாக வாழ்ந்த கக்கன் அவர்களின் சேவையும் சாதனைகளும் என்றும் நமக்கு வழிகாட்டும். -
John Pandian
@JohnPandianTMMK
உலகுக்குப் பசி போக்க, உழைக்கிறான் தினமும், உழவின்றி உலகில்லை, உணவின்றி உயிர் இல்லை, மண்ணை நம்பி வாழ்ந்து, மழைக்கு நன்றி சொல்லி, மனிதகுலத்தின் அச்சாணி, நம் நாட்டின் விவசாயி.
தேசிய விவசாயிகள் தின வாழ்த்துக்கள்!
#nationalfarmersday -
John Pandian
@JohnPandianTMMK
வீரத்தளபதி வெண்ணிக்காலாடியார் அவர்களின் நினைவு தினத்தில், அவரது அளப்பரிய தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன். 18ஆம் நூற்றாண்டில், நெல்லை மாவட்டத்தை ஆண்ட பூலித்தேவர் அவர்களின் படையில் முக்கிய தளபதியாக விளங்கியவர் வெண்ணிக்காலாடியார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் படையெடுப்புக்கு எதிராக தீரமிக்க போரிட்டார். வெண்ணி போரில் ஏராளமான வெள்ளையர் தலைகளை வெட்டி குவித்து, எதிரிகளை அச்சுறுத்திய வீரச்செயல் அவரது புகழை என்றும் உயர்த்தியது. பலத்த காயமுற்ற நிலையிலும், பூலித்தேவரிடம் வெற்றி செய்தியைத் தெரிவித்துவிட்டு உயிர் நீத்த அவரது விசுவாசமும் தியாகமும் தமிழர் வரலாற்றில் தனித்துவம் பெற்றது.
இன்று, வெண்ணிக்காலாடியார் போன்ற வீரர்களின் தியாகங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக நின்று போராடிய அவரது உறுதியும், சமூக அடையாளத்தைப் பேணிய போராட்டமும் இளைய தலைமுறையினருக்கு பாடமாக விளங்குகிறது. இத்தியாகியை நினைவுகூர்வோம். வரலாற்றை மீட்டெடுத்து, அடையாளப் போராட்டத்தைத் தொடர்வோம்!
#வெண்ணிக்காலாடியார்_நினைவுதினம் -
John Pandian reposted
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
@TMMKofficial
தலைவர் @JohnPandianTMMK ஒரு சிங்கம் மாரி!
அனைவருக்காகவும் குரல் கொடுத்தவர்...
#tamizhagamakkalmunnetrakazhagam #johnpandianThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சென்னை சிவானந்தம் சாலையில் பணி நிரந்தரம் கேட்டு நியாயமாகக் குரல் கொடுத்த 1,500-க்கும் மேற்பட்ட செவிலியர்களை மாலையில் கைது செய்து, கொடூரமான முறையில் நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறது இந்த திமுக அரசு.அதிகாலை நான்கு மணி வரை அவர்கள் அங்கேயே தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தது, இந்த அரசின் அராஜகத்தின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக, திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356-ல் "தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்!" என்று ஆசை வார்த்தை காட்டியது! ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் இந்த நேரத்திலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இந்த அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் செவிலியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் நீண்டகால கோரிக்கைக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம், செவிலியர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் இந்த அடக்குமுறையை இந்த அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திமுக அரசு அலட்சியம் : ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகள் தொடர்ந்து மூடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சமூக நீதியின் அடையாளமாக விளங்கும் இந்த விடுதிகள், அரசின் அலட்சியத்தால் சீரழிந்து வருகின்றன.
1,331 விடுதிகளில் தங்கியிருக்க வேண்டிய 98,000 மாணவர்களுக்குப் பதிலாக, தற்போது வெறும் 65,000 பேர் மட்டுமே உள்ளனர். முந்தைய ஆட்சியில் 80,000 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, இந்தத் தி.மு.க. ஆட்சியில் படுமோசமாகக் குறைந்து 65,000 ஆகச் சரிந்துள்ளது. உணவு சரியில்லை, அடிப்படை வசதிகள் இல்லை என மாணவர்கள் விலகிச் செல்லும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அதிகாரிகள் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விடுதிகளை மூடிவிட்டனர்.
ஆகஸ்ட் வரை 51 ஆக இருந்தது, இப்போது இரட்டிப்பாகிவிட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை, மேலும், 1,200 விடுதிகள் மட்டுமே செயல்படுவதாக வளர்ச்சித் துறை ஆணையரகத்திற்குத் தெரிவித்திருப்பது, அரசின் பொறுப்பற்ற போக்கைக் காட்டுகிறது. அரசின் அலட்சியம் தொடர்ந்தால், இந்த விடுதிகள் மொத்தமாக மூடப்பட்டு, ஏழை மாணவர்களின் கல்வி எதிர்காலம் நாசமாகிவிடும்.
தி.மு.க. அரசு உடனடியாக மூடிய விடுதிகளைத் திறந்து, தரமான வசதிகளைச் செய்து, மாணவர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
திரைத்துறையில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் உச்ச நட்சத்திரம் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து திரைத்துறையில் மக்களை மகிழ்விக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
2018 முதல் 2025 வரை நியமிக்கப்பட்ட 841 நீதிபதிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 3.8% பேர் மட்டுமே என்ற தகவல் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது.
நீதி வழங்க வேண்டிய உயரிய நீதிமன்றங்களுக்கே சமூகநீதி சென்றடையாத நிலை, நம் சமூகத்தின் முன்னேற்றப் பயணத்தில் எவ்வளவு தூரம் சென்று சேர வேண்டியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் நியமனம் செய்யப்பட்டவர்களில்:
• பட்டியல் இனத்தவர் (SC): 3.8% — 32 பேர்
• பட்டியல் பழங்குடியினர் (ST): 2.0% — 17 பேர்
• ஓபிசி: 12.2% — 103 பேர்
• சிறுபான்மையினர்கள்: 5.5%
• பொதுப் பிரிவு: 76.45%
நீதிபதிகள் நியமனத்தில் எந்த விதமான இடஒதுக்கீட்டு நடைமுறையும் பின்பற்றப்படாதது, இந்த சமநிலையின்மைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.
ஒரு ஜனநாயக நாடாக நம்மால் நீதித்துறையில் பிரதிநிதித்துவ சமநிலையை உறுதி செய்ய வேண்டியது மிக அவசியமான தருணம் இது. பட்டியலின மக்கள் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவினர்களுக்கு நீதிமன்ற நியமனங்களில் தகுந்த மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழும் மகாகவி பாரதியின் படைப்புகள், மொழியின் அழகையும் ஆழத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தின.
மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழை வணங்குவோம்!
#mahakavibharathiyar -
John Pandian
@JohnPandianTMMK
மனித உரிமைகள் தினத்தில், ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பது நமது முக்கிய பொறுப்பு என்பதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறோம். பிறப்பு, சமூக நிலை, மதம், பாலினம் என எதையும் பொருட்படுத்தாமல் அனைவரும் மரியாதையுடன் வாழ வேண்டியது அடிப்படை உரிமை. நியாயம் எல்லோருக்கும் சென்றடையும் ஒரு சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
#humanrightsday -
John Pandian
@JohnPandianTMMK
விசைத்தறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அவலம்:
மக்கள் நலனைப் புறக்கணிக்கும் எந்த அரசாங்கமும் மக்களின் ஆட்சியில் இருப்பதற்குத் துளியும் அருகதை இல்லை. விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த திமுக அரசு, இப்போது மக்கள் கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து, அவர்களை ஏமாற்றி வருவது அப்பட்டமான மக்கள் துரோகம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், டி.என். புதுக்குடி, புளியங்குடி, சிந்தாமணி பகுதிகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அவலம் அரங்கேறுகிறது. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 16% கூலி உயர்வில், வெறும் 10% மட்டும் வழங்கி, மீதமுள்ள 6% கூலியை அநியாயமாக அபகரிக்கப் பார்க்கிறது இந்த மக்கள் விரோத அரசு.
உடனடியாக, எந்தவித ஒளிவுமறைவுக்கும் இடமளிக்காமல், காலம் தாழ்த்தாமல், உழைக்கும் தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்த விடுபட்ட 6% கூலியை உடனடியாக உயர்த்தி, மொத்தமுள்ள 16% கூலி உயர்வையும் உடனடியாகவும் முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, அறிவாற்றலின் கலங்கரை விளக்கமான டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறோம்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம், நாம் அனைவரும் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
#ambedkardeathanniversary -
John Pandian
@JohnPandianTMMK
முன்னாள் முதல்வர், செல்வி. ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று.
அரசியலில் இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்து, மக்கள் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தவர். ஏழை எளியவர் நலன், பெண்கள் மேம்பாடு, இளைஞர்களின் எதிர்காலம் எனப் பல துறைகளில் அவர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களான அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன.
அவரது துணிச்சலான தலைமைத்துவத்தையும், மக்கள் சேவைப் பணிகளையும் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூறுவோம். -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை — சட்டத்தின் மீதான கொடூரத் தாக்குதல்.
தென்காசி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கடமையை நிறைவேற்றும் நிலையில் இருக்கும் அரசு வழக்கறிஞருக்கே பாதுகாப்பில்லையென்றால், சாதாரண மக்கள் எந்த நிலையில் இருப்பார்கள்?
இது சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்ட சவால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகமாகியுள்ளது என்பதற்கு இந்த சம்பவமே நேரடி சாட்சி. மத்திய அரசும், தமிழக அரசும் இனியும் தாமதிக்காமல் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இந்தக் கொடூரக் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து, தமிழகத் தொழிலாளர்களின் நலனுக்காகத் தலைமைச் சங்கமாகச் செயல்படக்கூடிய 'தமிழக மக்கள் தொழிலாளர் பேரவை' எனது பிறந்தநாளான நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று பிறந்தநாள் காணும், மத்திய சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவருமான மாண்புமிகு @JPNadda ஜி அவர்களுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உங்களுக்கு நலனும் நீண்ட ஆயுளும் அருளப்பெற இறைவனை வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
வங்கக் கடலில் ஏற்பட்ட 'திட்வா' புயலால் டெல்டா மாவட்டங்கள் அடைந்த துயரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியது வேறு யாருமில்லை, ஆளும் திமுக அரசு மட்டுமே.
இந்த கொடூரமான கனமழை ஏற்படுத்திய அழிவுக்கு, ஆட்சியாளர்களின் முற்றிலும் செயலற்ற தன்மையும், அடிப்படைத் திட்டமிடல் தோல்வியுமே முக்கியக் காரணம். வடிகால்வாய்களைத் தூர்வாராமல் விட்ட அலட்சியத்தின் விளைவாகவே 2.05 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன.
பேரிடர் காலங்களில் உரிய முன்தயாரிப்பை எடுக்கத் தவறிய இந்த ஆட்சி, விவசாயிகளின் முதுகில் குத்தியுள்ளது. இனியும் ஒரு நொடி தாமதிக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாகவும், முழுமையாகவும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், இந்தச் சீரழிவுக்குக் காரணமான வடிகால் அமைப்புகளைச் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பது அரசின் கடமை.
#ditwah -
John Pandian
@JohnPandianTMMK
எனது பிறந்தநாளை முன்னிட்டு என்னைப் பற்றிய AV ஒன்றை உருவாக்கிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக ஐ.டி. பிரிவினருக்கு என் இதயபூர்வமான நன்றி. @TMMKofficial
உங்கள் அன்பும் ஆதரவான முயற்சியும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. உண்மையாகவே blessed feel!This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாட்டின் சிவகங்கையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும், விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. ஆனால், இந்த பிரச்சினைகளுக்கு மாநில அரசு எந்தவித தீர்வும் காணாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது கண்டிக்கத்தக்கது. மாநில அரசு, சென்னை உட்பட அனைத்து மாவட்டப் பேருந்துகளின் நிலையையும் உடனடியாகக் கண்காணித்து, பழுதடைந்து செயல்படும் பேருந்துகளைச் சரிசெய்யத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
#sivagangaibusaccident -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் திரு. @annamalai_k அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. @Seeman4TN அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran, பாஜக மாநில இளைஞரணி தலைவர் திரு.@SuryahSG அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கும் மற்றும் என்மீது அன்புகொண்ட நண்பர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் பட்டியல் சமூக மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் தொடர்ந்து மறுக்கப்படுவது, சமூகநீதியின் அடிப்படைகளைச் சிதைக்கும் செயலாகும்.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஏழு பேர் வழக்கறிஞர் பட்டியலில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கிறது. இது நீதித்துறையில் நீண்டகாலமாக நிலவும் வெளிப்படையான பாரபட்சத்தையும், குறிப்பிட்ட சமூகத்தினரையே முன்னிறுத்தும் ஒருதலைப்பட்ச நியமன முறையையும் உறுதிப்படுத்துகிறது. மத்திய அரசுக்கு நெருக்கமானவர்களை மட்டும் தேர்வு செய்து, விளிம்பு நிலை மக்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் தெளிவான சான்று.
பட்டியல் சமூகம் (SC), பழங்குடியினர் (ST), சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் பங்களிப்பு மறுக்கப்படுவது சமூகநீதிக்குச் செய்யப்படும் அவமதிப்பு. எனவே, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில் கொலீஜியம் உடனடியாகத் தலையிட்டு, சமூகநீதியைக் காக்கும் வகையில் SC/ST உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக துணை முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணித் தலைவருமான மாண்புமிகு திரு. @Udhaystalin அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் நீண்ட ஆயுளோடும், நிறைந்த உடல்நலத்தோடும் மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து ஆற்றி, மக்களின் அன்பைப் பெற வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவில் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக நாசமடைந்துள்ளன. குறிப்பாக, கோட்டூர் ஒன்றியம் முழுவதும், திருக்களார், அக்கரைக்கோட்டகம், புழுதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி, விவசாயிகள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மழை நீடிக்கும் பட்சத்தில், இந்தப் பாதிப்புப் பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், @arivalayam அரசு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை உடனடியாக அனுப்பிப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடத் தயங்குவது ஏன்? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசின் இந்தச் சற்றும் பொறுப்பற்ற அலட்சியப் போக்கைத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கருக்கு ₹35,000/- இழப்பீட்டைத் தாமதமின்றி வழங்க உறுதி செய்ய வேண்டும். மேலும், வடிகால்களில் நிரம்பி வழியும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றுவதில் உள்ள மெத்தனப் போக்கைத் தவிர்த்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நீரை உடனடியாக வடித்து, விவசாய நிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், விவசாயிகளின் துயரத்தில் தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
@mkstalin @CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
இன்று இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் பதிந்த ஒரு முக்கியத்துவமான நாள்.
"அரசியலமைப்பு நமக்கு வழங்கும் உரிமைகள், பொறுப்புகள், மரியாதை ஆகியவற்றை பின்பற்றி நம் சமூகத்தை சமத்துவத்தின் மூலம் நிலைநாட்டுவோம்" என உறுதிமொழி ஏற்போம். அனைவருக்கும் அரசியலமைப்பு தின நல்வாழ்த்துக்கள்!
#constitutionday -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய மகளிர் கபடி அணிக்கு 2025 கபடி உலகக் கோப்பையை வென்றமைக்காக என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சவாலான நேரங்களில் அவர்கள் வெளிப்படுத்திய உறுதியான மனோபலம், அபாரமான திறமை, மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.
இந்த அற்புதமான வெற்றி, இளைய சமுதாயம் கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பெரிய இலக்குகளைத் துணிச்சலுடன் நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கு ஒரு மிகப் பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
#kabaddiworldcup2025 -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே நிகழ்ந்த அந்த கோரமான பேருந்து விபத்து குறித்த செய்தி என் நெஞ்சை உலுக்கிவிட்டது. அன்றாடப் பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கிய அப்பாவி மக்கள் ஆறு பேர் பலியானது மிகுந்த துயரத்தைத் தருகிறது. மேலும், சிறுவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோர் தங்கள் உடலெங்கும் காயங்களுடன் மருத்துவமனையில் படும் வேதனையைக் கேட்கும்போது இதயம் கனக்கிறது.
இப்பயங்கர விபத்தில் உயிரிழந்த அந்த ஆறு ஆத்மாக்களும் நித்திய சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொரு சகோதர/சகோதரிக்கும், விரைவில் பூரண குணம் கிடைத்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நலமுடன் திரும்ப வேண்டும் என வேண்டுகிறேன்.
இப்பேரழிவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, குடும்பத்தின் தூண்களை இழந்து தவிக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், உரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொரு பயணிக்கும், அற்பமான கட்டணங்கள் மற்றும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொள்ளாமல், உயர்தரமான, இலவச மருத்துவ சிகிச்சையை அரசு முழுமையாக உறுதி செய்ய வேண்டும். -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் மற்றும் மேலச்செவல் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக சுமார் 1.50 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ள செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இச்சம்பவம் அப்பகுதி வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக இந்தப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குரிய வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி, சேதங்களின் அளவை துல்லியமாகப் பார்வையிட்டு மதிப்பிட வேண்டும். சேதத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு அவர்களின் இழப்பை ஈடுகட்டக்கூடிய உரிய மற்றும் போதுமான நஷ்ட ஈட்டை உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, துரித நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து உதவ வேண்டும்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகள் விசைத்தறித் தொழிலின் அச்சாணி! இங்கு இயங்கிவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும், அதில் இரத்தம் சிந்தி உழைக்கும் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தயாரிக்கும் தினசரி 50 லட்சம் மதிப்புள்ள கைலி, கைக்குட்டை, துண்டு, சேலைகள் மூலம் அரசுக்கு வரும் வருவாய்க்கு நீங்கள் போடும் விலை இதுதானா?
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இன்னும் நடைமுறைப்படுத்தாத முதலாளிகளின் அராஜகத்திற்கு அரசு துணை போவது ஏன்? தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் இந்தச் சுரண்டலை அரசு வேடிக்கை பார்க்கிறதா? கடந்த நான்கு நாட்களாகத் தொழிலாளர்கள் குடும்பம் நடத்த வழியின்றி, பசியோடு வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மெத்தனத்தால், விசைத்தறித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாபெரும் பொருளாதாரச் சேதத்திற்குப் பொறுப்பு ஏற்கப்போவது யார்? கூலி உயர்வு இல்லாமல், குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் தொழிலாளர்களின் துயரம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
உடனடியாக இந்தப் பிரச்சினையை வெறும் 'பரிசீலனை' என்ற பெயரில் இழுத்தடிக்காமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள், முதலாளிகளுக்குச் சலுகை காட்டுவதை நிறுத்திவிட்டு, தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நியாயமான, நிரந்தரமான தீர்வு வழங்கப்படும்வரை, நாங்கள் ஓய மாட்டோம், உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்தச் செயலைத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. -
John Pandian
@JohnPandianTMMK
கோவை வால்பாறை அரசுப் பள்ளியில், ஆசிரியர்களின் வார்த்தைத் தாக்குதலால் மனமுடைந்து ஒரு பிஞ்சு குழந்தை தன்னை மாய்த்துக்கொண்டது தமிழகத்திற்கே பெரும் அவமானம்.
மாணவர்களை அரவணைக்க வேண்டிய கல்விச் சூழல், இன்று அவர்களின் உயிரைப் பறிக்கும் நஞ்சாக மாறி நிற்கிறது. இது வெறும் தனிப்பட்ட சம்பவம் அல்ல, மாணவர்களின் மனநலனில் அக்கறை செலுத்தத் தவறிய திமுக அரசின் நிர்வாகத் தோல்வியின் கோர முகம்!
சமூக நீதியையும், மாணவர் நலனையும் பேசுவதாகச் சொல்லும் இந்த ஆட்சி, உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும். இனியும் இதுபோல் எந்த ஓர் இளம் உயிரும், மன அழுத்தத்தால் பலியாகக் கூடாது! -
John Pandian
@JohnPandianTMMK
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு ? முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கள்ள மௌனம் ஏன்?
இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த ஒரே காரணத்துக்காக, 12-ஆம் வகுப்பு மாணவியைப் பள்ளி செல்லும் வழியில் மறித்து, ஒரு கொடூரன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது! கொலையான மாணவியின் குடும்பத்தார் அடைந்துள்ள மீளாத் துயருக்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தினந்தோறும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட இன்று அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அராஜகம் பெருகிவிட்டது! கஞ்சா போதையில் வாலிபர்கள் வெறியாட்டம் போடுகிறார்கள்! பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலை.
இந்தக் கொடூரமான சூழலில், முதல்வர் திரு. @mkstalin அவர்கள் எந்த ஒரு உறுதியான பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை! பெண்கள் வாக்கு அவருக்குத் தேவையில்லையா? வெறும் ₹1000 ரூபாய் கொடுப்பதன் மூலம் பெண்களின் வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்று அற்பமாக எண்ணுகிறாரா முதல்வர்? இது பெண்களின் உயிரோடு விளையாடும் மடைமாற்று அரசியல்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே! உங்கள் மடைமாற்று அரசியலைக் கைகழுவிவிட்டு, உடனடியாக சட்டம்-ஒழுங்கைப் பற்றி சிந்தியுங்கள்! தமிழகப் பெண்களுக்கு உடனடியாக உறுதியான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்! இந்தப் படுகொலையைச் செய்த குற்றவாளிக்கு தாமதமின்றி, சட்டத்தின் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த அராஜக ஆட்சியின் கீழ் ஒரு பெண் கூட இனி பலியாகக் கூடாது!
@mkstalin @CMOTamilnadu @arivalayam -
John Pandian
@JohnPandianTMMK
தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், விவசாயிகளுக்கான PM கிஷான் நிதியின் 21-வது தவணை வெளியிடுவதற்காகவும், இன்று தமிழகத்தின் கோவை மாநகருக்கு வருகை புரிந்துள்ள, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களை, கோவை விமான நிலையத்தில் வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
@PMOIndia #coimbatore -
John Pandian
@JohnPandianTMMK
சுதந்திரப் போராட்ட வீரர், சிறந்த வழக்கறிஞர், மற்றும் சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை நிறுவிய மாபெரும் தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினம் இன்று!
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பல் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய அவரது பங்களிப்பைப் போற்றுவோம். இந்த தேசத்திற்காக அவர் செய்த தியாகங்களையும், அசைக்க முடியாத தேசபக்தியையும் நினைவுகூரும் வகையில், இந்நாளை 'தியாகத் திருநாளாக' நாம் கடைப்பிடிக்கிறோம்.
அவரது வீரம் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்! -
John Pandian
@JohnPandianTMMK
மதீனாவில் இந்திய யாத்ரீகர்கள் பயணித்த 42 இந்தியர்கள் உள்ளிட்ட பலர் பேருந்து விபத்துக்குள்ளான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைந்து குணமடையப் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நின்று களப்பணியாற்றும் பத்திரிகைத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள்!
சமூகத்தில் அனுதினமும் நடக்கும் சமூக நீதி அவலங்கள், அக்கிரமங்கள், கொலை, கொள்ளை போன்ற தீய நிகழ்வுகளுக்கு எதிராக, உங்கள் கூர்மையான பேனா என்றும் தயக்கமின்றி ஒலித்திட வேண்டும்.
#nationalpressday #nov16 -
John Pandian
@JohnPandianTMMK
பொய் பிரச்சாரங்களை உடைத்து, வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளனர் பீகார் மக்கள்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை பீகார் மாநில மக்கள் உறுதியுடன் நிராகரித்து, அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட பிரதமர் திரு. @narendramodi அவர்கள் மற்றும் பீகார் முதல்வர் திரு.@NitishKumar அவர்கள் தலைமையிலான ஆட்சிக்கு மீண்டும் அமோக வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த மாபெரும் வெற்றிக்கு பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், முதல்வர் வேட்பாளர் திரு. @NitishKumar அவர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#biharelection2025 -
John Pandian
@JohnPandianTMMK
உலகத்தை மாற்றும் சக்தி குழந்தைகளின் கனவுகளில் உள்ளது. அவர்களின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் அனைத்தும் நம் சமூகத்தின் பொறுப்பு. ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வளர வேண்டும். இன்று அவர்கள் சிரிப்பை பாதுகாக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாளைய நல்ல நாட்டை உருவாக்கும்.
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!
#happychildrensday -
John Pandian
@JohnPandianTMMK
திருச்சி பீமநகர் காவலர் குடியிருப்புக்குள் பட்டப்பகலில் தாமரைச்செல்வன் எனும் இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சட்டவிரோதச் செயல், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை முற்றிலும் சீர்குலைந்துவிட்டதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக்கொலைகள் மற்றும் தொடரும் சமூக அநீதிகளின் வரிசையில் இன்று மேலும் ஒரு கோரமான சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
காவல்துறையினரின் சொந்த வசிப்பிடத்திலேயே இத்தகைய கொடூரம் நடந்திருந்தால், சாதாரணப் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் ? இந்த மோசமான நிலைக்கு தி.மு.க. அரசே முழுப் பொறுப்பு. முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், உடனடியாக மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பலப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயங்களுக்கான நகர்வுகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
டெல்லி செங்கோட்டையில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் செய்தி கேட்டு நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த பதினைந்து தினங்களாக காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு நடத்திய சோதனையில் நேற்றைய தினம் 2900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் மூன்று மருத்துவர்கள் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், நேற்று மாலை 6 மணி அளவில் டெல்லி செங்கோட்டை அருகே உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில் அருகே நடந்த வெடிவிபத்தில் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வெடி விபத்துக்குள்ளான கார் உரிமையாளர் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவன் என்றும், அவனுக்கு பல தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆகவே இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை தேவைப்படுகிறது.
இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்தவர்கள் எவராக இருப்பினும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
#delhiblast #redfort -
John Pandian
@JohnPandianTMMK
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற திரு. லால் கிருஷ்ண அத்வானி அவர்களுக்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுவாழ்வில் அவர் கடைப்பிடித்த நேர்மை, அரசியல் நாகரீகம், மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அவரது மகத்தான பங்களிப்புகளை என்றும் போற்றுவோம்.
மாண்புமிகு திரு. அத்வானி அவர்கள் நீண்ட ஆயுளோடும், நிறைந்த ஆரோக்கியத்தோடும் வாழ்ந்து, நம் தேசத்தின் எதிர்காலப் பயணத்துக்கு மேலும் பல தசாப்தங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மதிப்புக்குரிய திரு. @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் தனது அரசியல் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெறவும், சிறந்த உடல் ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் மக்கள் பணியில் நீடித்துச் சேவையாற்றவும் எல்லாம் வல்ல இறைவனை நான் மனதார வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம் ஏற்படுத்திய ரணமே ஆறவில்லை; மூன்றே நாட்களில், அதே கோவையின் இருகூரில் ஒரு பெண் பகிரங்கமாக கடத்தப்பட்டிருப்பது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு தூரம் சீர்குலைந்துவிட்டது என்பதன் உச்சகட்ட சாட்சியம்!
புள்ளிவிபரங்களே திமுக அரசின் முகத்திரையைக் கிழிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விண்ணை முட்டும் வேகத்தில் அதிகரிக்கின்றன!
பாலியல் பலாத்கார வழக்குகள்: 2022-ல் 442, 2024-ல் 471 ஆக உயர்ந்துள்ளது.
பாலியல் தொந்தரவு வழக்குகள்: 2022-ல் 58, 2024-ல் 96 என இரட்டிப்புக்கு மேல் அதிகரிப்பு!
பெண்கள் மீதான தாக்குதல் (Molestation): 2022-ல் 1,414, 2024-ல் 1,885 ஆக ஏற்றம்!
POCSO வழக்குகள்: 2022-ல் 4,968-ல் இருந்து 2024-ல் 6,969 ஆக எகிறிவிட்டது!
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் இந்த ஆட்சியில்தான் காட்டுத்தீயாய் பரவி, குற்றங்களுக்கு உரம் போடுகிறது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத் திராணியற்ற முதல்வர், போதை மாஃபியாவை வளரவிட்டிருப்பது ஏன்?
ஒவ்வொரு குற்ற நிகழ்வுக்கும் பிறகும், "நடவடிக்கை எடுப்போம்" என்று வழக்கமான வசனத்தைப் பேசிவிட்டு, அடுத்த குற்றத்திற்குக் காத்திருப்பதுதான் இந்த அரசின் பாணி! தமிழகப் பெண்கள் கண்ணில் படும் வரை, இந்த அரசுக்கு விழிப்பு வராதா?
புள்ளிவிவரங்களைப் பூசி மெழுகி, குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு, குற்றங்களைக் குறைப்பதில் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை!
திமுக அரசே, இனியும் மௌனம் சாதிக்காதே! உங்களின் கோழைத்தனமான நிர்வாகத்தால், தமிழகத்தின் எதிர்காலமே இருளில் மூழ்கி வருகிறது. பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிசெய்! இல்லையேல், பெண்களின் கோபக் கனல் உங்கள் ஆட்சியின் சிம்மாசனத்தையே சுட்டெரிக்கும் என்பதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவித்த்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி இளமனூர் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! நீதிமன்ற உத்தரவை மீறிப் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த சாதிப் பலகைதான் இந்தப் பிரச்சினைக்கு ஆரம்பம். இது குறித்துப் புகார் அளித்தும், காவல்துறையின் மெத்தனமே இந்த மோதல் தீவிரமடையக் காரணம்.
இளமனூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் (திமுக பிரமுகர்) சத்தியேந்திரன் தலைமையிலான சாதி வெறியர்கள், காவலர் முன்னிலையிலேயே, தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் வீடுகளைச் சூறையாடி, பெண்கள் உட்படப் பலரைக் கொடூரமாகத் தாக்கி, இரண்டு காவலர்களையும் காயப்படுத்தியுள்ளனர். மாற்று சமூகங்களை அடக்க நினைக்கும் இந்தச் சாதி வெறியர்கள் மீது அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்ட சத்தியேந்திரன் உள்ளிட்ட சாதி வெறியர்கள் அனைவரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் (SC/ST Act) உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். கடமையில் தவறிய, ஒரு சமூகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட இளையான்குடி காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறும் அனைத்துச் சாதிப் பலகைகளையும் பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுடன் இணைந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ)@isro , மிக அதிக எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளான #cms03-ஐ (4400 கிலோ), #lvm3m5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இந்தச் சாதனைக்காக, இஸ்ரோவில் உள்ள ஒவ்வொரு விஞ்ஞானிக்கும், தொழில்நுட்பக் கலைஞருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்ரோவின் இந்த அசுர வளர்ச்சி, இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்து, தேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமையை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று! ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று, நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தாய்த்திருநாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது!
#teamindia-வின் வீரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். உங்கள் திறன், அசாத்தியமான மன உறுதி மற்றும் சிறப்பான குழுப் பங்களிப்பு ஆகியவை உலக அரங்கில் ஒரு சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளன.
இந்த வெற்றி, நாளைய தலைமுறையினர் விளையாட்டுத் துறையில் உயரமான லட்சியங்களை அடையத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த உத்வேகத்தின் தொடக்கம்!
#iccwomensworldcup2025 #cwc2025 #indwvssaw #cwc25 -
John Pandian
@JohnPandianTMMK
கலை, வீரம், நிர்வாகம், ஆன்மீகம் என அனைத்திலும் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து, பல்லாயிராண்டுகள் கடந்தும் உலகை வியக்க வைத்த தமிழரின் கட்டிடக்கலைக்குப் பெருமை சேர்த்த மாமன்னர் இராசராச சோழனின் 1040- வது சதய விழாவில் தஞ்சையில் இன்று கழக நிர்வாகிகளுடன் இராசராச சோழனின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
மாமன்னர் இராஜராஜ சோழனின் 1040வது சதய விழா வாழ்த்துகள்!
மாமன்னர் இராஜராஜ சோழன் நிறுவிய தஞ்சைப் பெரிய கோயில், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், உலகை வியக்க வைக்கும் தமிழரின் கட்டிடக்கலைப் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ்கிறது. நிர்வாகத்தில், நிலங்களை அளந்து, நியாயமான வரி விதிப்பை உறுதி செய்ய 'உலகளந்தான் கோல்' முறையை அறிமுகப்படுத்தினார். மேலும், கிராம நிர்வாக அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்து, நிர்வாகப் பரவலாக்கத்தை நிகழ்த்தினார்.
கலை, வீரம், நிர்வாகம், ஆன்மீகம் என அனைத்திலும் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மாமன்னர் இராஜராஜ சோழன் வழியில், நாமும் நேர்மை மற்றும் விவேகத்தை பின்பற்றுவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள்!
எண்ணற்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வை, வீரம் செறிந்த போராட்டங்கள், சாதாரண மக்களின் அயராத உழைப்பு - இவை அனைத்தின் விளைவாகவே, இன்று நாம் தமிழ்நாடு என்ற தனித்துவமான மாநிலத்தைப் பெற்றிருக்கிறோம்.
இந்நாளில், நம் தாய்மொழி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்வோம். தமிழின் தொன்மையையும், செழுமையையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வோம். மேலும், மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தி, சமூகத்தில் எஞ்சியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்குவதற்கு நாம் அனைவரும் ஒருமித்துச் செயல்பட உறுதியேற்போம்.
வரலாறு நமக்களித்த இந்த மாபெரும் பொறுப்பைத் தாங்கி, தமிழ்நாட்டின் புகழை இன்னும் உயர்த்துவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி நாரணமாள்புரம் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை செல்வி. எட்வினா ஜெய்சன் அவர்களின் மகத்தான சாதனைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பஹ்ரைனில் நடைபெற்ற 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் அவர் பெரும் பெருமை சேர்த்துள்ளார். அவரது அசாத்தியமான திறமைக்கும், அர்ப்பணிப்புக்கும் இந்த வெற்றி ஒரு சிறந்த சான்றாகும்.
செல்வி. எட்வினா ஜெய்சன் அவர்கள் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவும், வெற்றிகள் பல குவித்து, இந்தியத் திருநாட்டின் புகழை உலகறியச் செய்யவும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
அன்புச் சகோதரர் திரு.மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கி உள்ள பைசன் (காளமாடன்) திரைப்படத்தை பார்த்தேன். தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை திரையில் தத்துரூபமாக தந்திருக்கிறார். படக் குழுவினருக்கும்,சகோதரர் திரு.மாரி செல்வராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றைய காலக்கட்டத்தில் எதிர்க்கொண்ட சவால்களையும், மக்களின் தேடல்களையும், போராட்டத்தையும், தியாகத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் திரு.மாரி செல்வராஜ் அவர்கள், இதுபோன்று இன்னும் திரைத்துறையில் பற்பல சாதனைகள் படைத்திட எனது மனமார்ந்த பாராட்டுக்களும் - வாழ்த்துக்களும்.
@mari_selvaraj #bisonkaalamaadan #bisonmovie -
John Pandian
@JohnPandianTMMK
பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் (Asian Youth Games 2025) கபடிப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இரட்டைத் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இச்சாதனையில் பங்களித்த அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் அர்ப்பணிப்பும், சிறப்பான செயல்பாடும் மிகவும் பாராட்டுக்குரியது.
குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் திறமைகளான திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் (ஆடவர் அணி) மற்றும் சென்னையை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா (மகளிர் அணி) ஆகியோரின் பங்களிப்பு, மாநிலத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இவர்களின் வெற்றி, வருங்கால இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய கபடி அணிகளின் இந்த வெற்றியானது, வருங்காலத்தில் உலகளாவிய அரங்குகளில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்ட அடித்தளமாக அமையட்டும். இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மேலும் பல உலகப் புகழ்களை ஈட்டிட இந்திய கபடி அணிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
#asianyouthgames2025 -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போருக்கு வித்திட்ட மருது பாண்டியர்களின் நினைவு தினத்தைப் போற்றுவோம்!
வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதிகளாகவும், நிர்வாகிகளாகவும் சிவகங்கையை மீட்டவர்கள், 1801 திருச்சிப் பிரகடனம் மூலம் மக்களை ஒன்றிணைத்து விடுதலை வேட்கையைத் தூண்டினர். 1801 அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் அடைந்த அவர்களின் தியாகம் என்றென்றும் நிலைத்திருக்கும். -
John Pandian
@JohnPandianTMMK
காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், விவசாயிகளின் குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 8,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. மேலும், 1,00,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
விவசாயிகளின் உழைப்பைப் புறக்கணித்து, நெல் கொள்முதலை தாமதப்படுத்திய தி.மு.க. அரசின் அலட்சியமும், பொறுப்பற்ற தன்மையும் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, தி.மு.க. அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்:
- மழையால் பாதிக்கப்பட்ட 8,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் மற்றும் வெள்ளத்தில் சேதமடைந்த 1,00,000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
- மீதமுள்ள நெல் மூட்டைகளை எவ்வித தாமதமுமின்றி, நிபந்தனைகள் இன்றி உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு நீதி வழங்கப்படும் வரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
@mkstalin @CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா @AmitShah அவர்களின் பிறந்தநாளில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
தேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மக்கள் சேவைப் பணிகளில் நீங்கள் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு காலம் சிறப்பான சேவை ஆற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
@AmitShahOffice -
John Pandian
@JohnPandianTMMK
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இந்த ஒளித்திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். பட்டாசுகளின் ஒலியும், தீபங்களின் ஒளியும் உங்கள் இல்லத்தில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பரப்பட்டும்.
இனிப்புகளைப் பகிர்ந்து, உறவுகளைப் பலப்படுத்தி, இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!
#happydiwali2025 -
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு உயர் நீதித்துறையில் பிரதிநிதித்துவம் – சமத்துவத்தின் குரலை உயர்த்துவோம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது சரத்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை உறுதிப்படுத்துகிறது, மேலும் சரத்து 335, பட்டியல் சாதியினருக்கு அரசுப் பணிகளில் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துகிறது. எனினும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவது இந்தக் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்கிறது.
2004-ல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்டபோது, எங்கள் சமூகத்திற்கு நீதித்துறையில் உரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால், 2025 வரை எங்கள் சமூகத்திலிருந்து ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மேலும், நீதிபதி நியமனங்களில் எங்கள் பெயர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது சாதி அடிப்படையிலான பாகுபாடு இருக்கலாம் என்ற நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது.
2021-ல் தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், உயர் பதவிகளில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமையும், குறிப்பிட்ட சமூகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தோன்றுவதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை வளர்க்கிறது. நீதித்துறையில் சமூகப் பன்முகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் தகுதியான வழக்கறிஞர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதன் மூலம் மட்டுமே அரசியல் சாசனத்தின் சமத்துவக் கொள்கைகள் நிறைவேறும். இதன் மூலம், நீதியின் பீடத்தில் எங்கள் சமூகத்தின் குரல் உரிய மரியாதையுடன் ஒலிக்க வேண்டும். எனவே, சமூகநீதி என்ற உயரிய கொள்கையை நிலைநிறுத்த, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உள்ள தேவேந்திர குல வேளாளர் வழக்கறிஞர்களின் நியாமான கோரிக்கைக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் துணை நிற்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்...
தமிழினவேந்தர்,
டாக்டர் பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று பிறந்தநாள் காணும் வழக்கறிஞர் முனைவர் திருமதி ஜா. பிரிசில்லா பாண்டியன் @priscillaTMMK அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிக்கான உழைப்பும், மக்களுக்கான அர்ப்பணிப்பும், அமைப்பின் வளர்ச்சிக்கான உங்களின் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு ஊக்கஒளியாக திகழ்கிறது. உங்கள் தலைமை, திறமை மற்றும் தன்னிலைமை — தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அடையாளமாக விளங்குகின்றன.
இந்த சிறப்பான நாளில், நலனும் நற்பேறும் நிறைந்த நீண்ட ஆயுளுடன் சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் பாதையில் இன்னும் உயர்ந்திட இறைவன் அருள்புரியட்டும். -
John Pandian
@JohnPandianTMMK
ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிராக தைரியமாகக் குரல் எழுப்பி, தன் உயிரையே தாய்நாட்டுக்காக அர்ப்பணித்த தமிழ் மண்ணின் வீரசிங்கம் — வீரபாண்டிய கட்டபொம்மன்.
சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை உலகுக்கு காட்டியவர். அடிமைத்தனத்தை ஏற்க மறுத்த அவர், நாட்டின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்தார். இன்று அவரது நினைவு நாளில், அவரது தியாகத்தையும் வீரத்தையும் நெஞ்சில் நிறுத்தி வணங்குகிறோம். அவர் விதைத்த சுதந்திர விதைகள் இன்றும் நம் மனங்களில் தேசப்பற்று மலராக மலர்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எமது மனமார்ந்த அஞ்சலி. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக பாஜகவின் சட்டமன்ற குழு தலைவரும்,
@BJP4TamilNadu மாநிலத்
தலைவருமான திரு @NainarBJP
அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளும் பெற்று மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
VIJAY-யின் குழப்பத்திற்கு ஆதவ், புஸ்ஸி ஆனந்த் காரணம்.. | IBC Tamil சேனலில் நான் அளித்த முழு நேர்காணலை காண :
www.youtube.com/watch?v=fbd5yXB0poMThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் — இந்தியாவின் ஏவுகணை நாயகனாகவும், முன்னாள் குடியரசுத் தலைவராகவும் உலகம் போற்றும் மகான் அவரே.
எளிய குடும்பத்தில் பிறந்த அவர், தன்னம்பிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் உச்சத்தைத் தொட்டார். நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பிரித்வி மற்றும் அக்னி போன்ற ஏவுகணை திட்டங்களின் வடிவமைப்பில் மறக்க முடியாத பங்களிப்பை செய்தார்.
“கனவு காணுங்கள், கனவுகள் சிந்தனையாகும்; சிந்தனைகள் செயலாகும்” என இளைஞர்களுக்கு ஊக்கமளித்த தலைவராக அவர் என்றும் நம் இதயங்களில் நிலைத்திருப்பார்.
இந்தியாவின் ஒளிவிளக்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
#drapjabdulkalam -
John Pandian
@JohnPandianTMMK
எத்தன பேர அடிப்பீங்க திருமா? உயிர் போனால் என்ன ஆகும்? | இளைய பாரதம் சேனலில் நான் அளித்த முழு நேர்காணலை காண :
www.youtube.com/watch?v=oCg_Ipouq2gThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஓடி ஒளிஞ்சிட்டு CM ஆகணுமா! தலைவனுக்கு தகுதி தெரியுமா விஜய்! The Debate சேனலில் நான் அளித்த முழு நேர்காணலை காண :
www.youtube.com/watch?v=8G6Tem_HVRY
@thedebatetamilThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராக, தாராள மனத்துடன், கட்சிக்கும் சமூகத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த அன்பு சகோதரர், வழக்கறிஞர் திரு. R. அமுதமுரளி M.A., B.L., அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
நேற்று அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, இந்த அரிய மனிதருக்கு என் மனமார்ந்த இறுதி மரியாதையை செலுத்தினேன். அவர் கட்சிக்கும், மக்களுக்கும் காட்டிய உழைப்பும் உறுதிப்பாட்டும் என்றும் நினைவில் நிலைக்கும்.
அவரின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருமை சகோதரர், வழக்கறிஞர் திரு.R.அமுதமுரளி M.A B.L.,
அவர்கள் நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் காலமானார். என்ற இறப்பு செய்தி அறிந்து இன்றைய தினம் இராமநாதபுரம் - ஆர்.எஸ்.மங்களத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராக திறன்பட செயலாற்றி வந்தவர் அன்பு சகோதரர் வழக்கறிஞர் திரு.R.அமுதமுரளி M.A B.L., அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி சொல்லொணா துயரத்தைத் தருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் ஆரம்பக் காலகட்டத்தில் இருந்து என்னுடன் பயணித்தவர். கட்சியின் கூட்டம் என்றாலும், மாநாடு என்றாலும் அதைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமை கொண்டவர்; கட்சியின் அப்பழுக்கற்ற விசுவாசி; இராமநாதபுரம் மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அரசியல் ரீதியாக இளைமைகாலம் முதல் என்னோடு பயணித்து சமூக பணியாற்றியவர். அவருடைய மறைவு என்பது ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், அவரது குழந்தைகளுக்கும், கிராமத்தினருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
மதுரை மாவட்ட மாநகரில், அண்ணாநகர் காவல்நிலைய தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வண்டியூர் பகுதியைச் சேர்ந்த "தேவேந்திர குல வேளாளர்" சமுதாய இளைஞன் திரு.தினேஷ் குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
எனவே, தொடரும் காவல்நிலைய மரணங்கள்,
தினேஷ்குமாரின் மரணத்தையும் கண்டித்து இன்று அண்ணாநகர் காவல் நிலையம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் தினேஷ்குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டி சாலை மறியல் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மட்டும் 24 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்றால் மக்களை சீர்திருத்தி மனநிலையை கட்டுப்படுத்தி அவர்களை திரும்பி அனுப்பி வைக்க வேண்டும் அதற்காக காவல் நிலையங்களை உள்ளது தவிர,
அதை சிலரின் வன்முறை செயல்களால் ஈடுபட இல்லை. இதுவரையும் காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றது. விசாரணை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் படுகொலைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்..!
தினேஷ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் @CMOTamilnadu வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
கூட்டணியை வைத்து தான் ஆட்சி நாங்கள் இணையும் கூட்டணிக்கே வெற்றி
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கொடியை வச்சு கூட்டணி இல்லை தலைவர்கள் பேசுவது தான் கூட்டணி
#tamilagamakkalmunnetrakazhagamThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சுதந்திர போராட்ட வீரர், தியாகி.இமானுவேல் சேகரன் அவர்களின் 101 - வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் - செம்பட்டியில் மாவட்ட செயலாளர் திரு.அ. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மாவட்ட தலைவர் திரு.S .முருகவேல்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகி.இமானுவேல் சேகரன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினோம்.
உடன், மேற்கு மாவட்ட செயலாளர் திரு.S முத்துரத்துனவேல்
மாவட்ட தலைவர் மேற்கு திரு.முனிச்செல்வம்
தேனி மாவட்ட செயலாளர் திரு.மள்ளர் பாலா
மாவட்ட பொருளாளர் திரு.R. சரவணன்
ஆத்தூர் ஒன்றிய செயலாளர் திரு.ராஜா
மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு.செண்பகபாண்டியன்
நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் திரு.நிலவை தேவா
மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.சத்திய ஜோதி என பலர் கலந்து கொண்டனர். -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய செய்தியாளர் சந்திப்பு!!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, சமூக நீதிக்காக அவர் ஆற்றிய புரட்சிகர பங்களிப்பை நினைவு கூர்கிறோம்.
1924-இல் ராமநாதபுரம் மாவட்டம், செல்லூரில் பிறந்த இவர், சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களமாடியவர். பட்டியலின மக்களின் உரிமைகளை வலியுறுத்தி, கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் அவர்களை மேம்படுத்தினார். முதுகுளத்தூர் பகுதியில் அவர் தொடங்கிய சமூக நீதி இயக்கங்கள், பாகுபாடுகளை எதிர்த்து நின்றன.
இவரது பிறந்தநாளில், சமூக நீதிக்கான அவரது சிந்தனைகளைப் போற்றி, அவரது பாதையில் பயணிப்போம்! -
John Pandian
@JohnPandianTMMK
2026 தேர்தல் பொறுத்தவரை கூட்டணியில் தான் போட்டி
#tamilagamakkalmunnetrakazhagamThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, உச்ச நீதிமன்றத்தில் நடந்த கொடூரமான சம்பவம், இந்தியாவின் ஜனநாயக அடித்தளமான நீதித்துறையின் உயரிய மரியாதையை இழிவுபடுத்தியுள்ளது. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவரது முதுநிலை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் அவர்களின் மீது காலணி எறிய முயன்ற செயல், வெறும் தனிப்பட்ட அநாகரிகமாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல், சமூக மற்றும் சட்ட அமைப்புகளுக்கு எதிரான கொடிய தாக்குதலாகும்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயக மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசியல் அமைப்பாக, இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து, அதன் பின்னணியில் உள்ள ஆழமான சமூக-அரசியல் சீரழிவுகளை வெளிப்படுத்தி, கடுமையான தக்க நடவடிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
இந்தச் சம்பவம், நீதிமன்றம் போன்ற புனித இடத்தை இழிவுபடுத்துவதோடு, இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் தூணான நீதித்துறையின் சுதந்திரத்தையும், அதன் நடுநிலையையும் சீர்குலைக்கும் ஆபத்தான முயற்சியாகும். வழக்கறிஞர்கள், சமூகத்தின் சட்டரீதியான பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு சட்ட ரீதியான வழிகளான முற்போக்கு மனுக்கள், வாதங்கள் அல்லது அரசியல் மன்றங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய வன்முறைச் சார்ந்த செயல்கள், சமூகத்தில் வெறுப்பு, பிளவு மற்றும் அமைப்புக்கு எதிரான அச்சத்தைத் தூண்டி, ஜனநாயக மதிப்புகளை சீரழிக்கும்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கங்களின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இத்தகைய செயல்களை எந்தவித சமரசமின்றி எதிர்க்கிறது. மேலும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஆதரிக்கிறோம்.
இத்தகைய தாக்குதல்கள், வெறும் தனிப்பட்ட சம்பவங்களாக மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழிக்கும் திட்டமிட்ட முயற்சிகளின் பகுதியாக இருக்கலாம் என்பதை நாங்கள் எச்சரிக்கையுடன் கருதுகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் மற்றும் சட்ட அமைப்புகளையும், இத்தகைய செயல்களைச் செய்த சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக தண்டித்து, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
@PMOIndia @JusticeBRGavai
#cjigavai -
John Pandian
@JohnPandianTMMK
கரூர் சம்பவம் துரதஷ்டவசமானது ஆனால் விஜய் மக்களை சந்தித்திருக்க வேண்டும்
#tvkkarurstampede #tamilagamakkalmunnetrakazhagam -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பு!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 04.10.2025 சனிக்கிழமை எனது தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர்.திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் @priscillaTMMK அவர்கள் முன்னிலையிலும், திருநெல்வேலி - தென்தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் @ViyangoOfficial அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா @vinolinnivetha , மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. -
John Pandian
@JohnPandianTMMK
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்கள் கல்வி, தொழில், நீர்ப்பாசனம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்த பெரும் தலைவர்.
அரசியலை மக்கள் சேவைக்கான கருவியாகக் கொண்டு எளிமை, நேர்மை, தியாகம் ஆகியவற்றின் மூலம் "மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்". தமிழக அரசியல் சின்னமாக அவர் திகழ்ந்தார். இன்றும் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டியாக உள்ளன. இன்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகங்களை போற்றி வணங்குகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்
சத்யம், அஹிம்சை, எளிமை ஆகிய கோட்பாடுகளால் உலகுக்கே கற்றுக் கொடுத்த மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியாவின் ஆன்மாவாக இருந்தார். உண்மை வழியில் நடந்தால் மட்டுமே நிலையான வெற்றியை அடையலாம் என்பதை, வன்முறை இல்லாத போராட்டத்தின் மூலம் நிரூபித்தார். மக்களின் சக்தியே மிகப்பெரிய சக்தி என்பதை அவர் வாழ்நாள் முழுவதும் உணர்த்தினார்.
எளிமையும் சுயநிறைவும் காந்திஜியின் வாழ்வின் அடித்தளமாக இருந்தது. சுதேசி, சுயதொழில், கிராம முன்னேற்றம் ஆகிய சிந்தனைகள் இன்று கூட நம் சமூகத்திற்கும் அரசியலுக்கும் வழிகாட்டுகின்றன. இந்த காந்தி ஜெயந்தியில், அவரது கோட்பாடுகளை பின்பற்றி, உண்மை மற்றும் அஹிம்சை நிறைந்த நீதிச் சமூகத்தை உருவாக்குவோம்.
#gandhijayanti2025 -
John Pandian
@JohnPandianTMMK
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்த துயரமான விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைத்து தொழிலாளர்களின் ஆன்மா அமைதி அடையவும், அவர்களின் குடும்பங்கள் இந்தப் பேரிழப்பிலிருந்து மீண்டு வரவும் இறைவனை வேண்டுகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் அனைவரும் விரைவாக முழுமையான உடல்நலம் பெறவும் இறைவனை வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
உழைப்பையும், உழைக்கும் கருவிகளையும் வணங்கும் இந்நாளில், ஒவ்வொரு குடும்பமும் செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி நிறைந்த வாழ்க்கையை வாழ்க.
தொழிலில் முன்னேற்றமும் சமூகத்தில் நல்லிணக்கமும் நிலைத்து, உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையட்டும். ஆயுத பூஜை நாளில் புதிய நம்பிக்கையும் ஒளியும் பரவட்டும்.
#ayudhapooja -
John Pandian
@JohnPandianTMMK
திருவண்ணாமலை, ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை, கிழக்கு காவல்நிலைய காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. பெண்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே குற்றவாளிகளாக மாறுவது, @arivalayam தலைமையிலான திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியை வெளிப்படுத்துகிறது.
முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையில் இத்தகைய ஒழுங்கீனங்கள் நடைபெறுவது, அவரது ஆளுமையின் மீதான கேள்விக்குறியாகும். மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நீதியும் வழங்கப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய, தனி காவல் பிரிவு, விரைவு நீதிமன்றங்கள், காவலர் பயிற்சி ஆகியவற்றை உடனியாக செயல்படுத்த
வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. மக்களின் நிலைமைகள் தொடர்பாக ஊடக நண்பர்களிடம் கருத்துகளை பகிர்ந்துகொண்டேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
#tvkkarurstampedeThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை இன்று மருத்துவமனையில் சென்று சந்தித்து, அவர்களின் உடல்நிலையை அறிந்தேன்.
பத்திரிகையாளர்களுடன் சந்திப்பின் போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். காயமடைந்தவர்களுக்கு உடனடி மற்றும் முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தினேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கரூரில் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி, உடல்நலக்குறைவால் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுடன், நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினேன்.
கரூர் தவெக பரப்புரையில் சிறுகுழந்தைகள்,பெண்கள், ஆண்கள் உட்பட 40 - பேர் உயிரிழந்திருப்பது, அவர்களின் குடும்பத்தினருக்கு மனதில் ஆறாத வலி.குடும்பத்தில் ஒருவரை இழந்து நிற்கும் அவர்களுக்கு எவ்வித ஆறுதல் கூறினாலும் போதாது.
கரூரில் இத்தனை நெரிசல் குறித்து தமிழக அரசு "ஒரு நபர் விசாரணை குழு" அமைத்துள்ளது. எனவே அதில் உண்மை என்னவென்று மக்கள் மத்தியில் கூறவேண்டும்.மேலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துவதே ஆகச் சிறந்த அறமாகும். இழந்தவர்களை எண்ணி தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதலாக அமையும் என்று நான் நம்புகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலி! விஜய் மக்களை பார்க்காமல் சென்னைக்கு வருவது துரோகம்!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கரூரில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
“தமிழின் பத்திரிகைத் தந்தை” எனப் போற்றப்படும் தினத்தந்தி நிறுவனர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121-வது பிறந்த நாளில் அவர் காட்டிய பத்திரிகைச் சேவை, சமூக நீதி, கல்வி மற்றும் அரசியல் விழிப்புணர்வு பணியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறோம்.
சுதந்திரப் போராட்டம், தமிழின் உரிமைகள், தொழிலாளர் நலன், கல்வி விரிவு போன்ற பல துறைகளில் அவர் பேசிய குரல் இன்று கூட நம் பாதையை வெளிச்சமிடுகிறது. ஊடகத்தையும் அரசியலையும் மக்கள் நலத்திற்காக இணைத்தவர்; ஊழல் எதிர்ப்பு, ஜனநாயக வலிமை, சமூக சமத்துவம் ஆகியவற்றுக்கு வழிகாட்டியவர்.
நம் காலத்தில் அரசியல் தலைவர்களும் ஊடகமும் அவர் காட்டிய நேர்மையும் துணிச்சலும் பின்பற்ற வேண்டும் என்பது காலத்தின் தேவை.
#cpadithanar -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மதுரை செக்கானூரணி அரசு ஐ.டி.ஐ. விடுதியில் மாணவர் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ராகிங் சம்பவமும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்-ஏர்வாடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் இருக்கை தகராறைத் தொடர்ந்து அரிவாளால் அருகில் இருந்த சக மாணவர்களைத் தாக்கிய வன்முறையும், அரசின் அலட்சியப் போக்கையும், நிர்வாக சீர்கேட்டையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
இவை மாநிலத்தில் ராகிங், வன்முறை, மற்றும் குற்றங்கள் பெருகுவதற்கு ஊழல், அரசியல் தலையீடு, மற்றும் பலவீனமான சட்ட அமலாக்கமே காரணம் என்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசு உடனடியாக ராகிங் தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் CCTV, 24/7 கண்காணிப்பு, உளவியல் ஆலோசனை மையங்கள் அமைத்து, மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கட்டாயமாக்கி, காவல் துறையை வலுப்படுத்தி குற்றங்களை உடனடியாகத் தடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பாதுகாப்பான மாநிலமாக மாற்ற, திமுக அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறோம்! -
John Pandian
@JohnPandianTMMK
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனரும், டாக்டர் எம்ஜிஆர் கல்வி நிறுவனங்களின் வேந்தருமான டாக்டர் திரு. ஏ. சி. சண்முகம் அவர்களுக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய பணிகள், பல தலைமுறைகளுக்கு உத்வேகமாக அமைந்துள்ளன.
திரு. ஏ. சி. சண்முகம் அவர்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுட்காலத்துடனும் தனது உன்னதப் பணிகளைத் தொடர வாழ்த்தி, இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@DrACSofficial -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் அவர்கள் காலமான செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய அவரது அர்ப்பணிப்பும், சேவையும் என்றும் நினைவில் நிலைக்கும். நிர்வாகத் திறன், பணிவு, நேர்மை ஆகியவற்றால் அவர் பொதுமக்களிடம் நம்பிக்கை பெற்றார். தமிழகத்திற்கு ஏற்பட்ட இந்த இழப்பு மிகப் பெரியது.
மறைந்த அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு என் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அவரின் ஆன்மாவை சாந்தியடையச் செய்யட்டும். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, தமிழகத்தின் பன்முக ஆளுமையான அமரர் பத்மஸ்ரீ திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூர்கிறோம்.
தினத்தந்தி நாளிதழின் முன்னாள் ஆசிரியராக, தமிழ் பத்திரிகைத் துறையில் மக்களின் குரலாக விளங்கியவர். இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, விளையாட்டுத் துறையை உயர்த்தியவர்.
இளைஞர் மேம்பாட்டிற்காகவும், சமூக நலனுக்காகவும் அயராது பணியாற்றிய இந்த மாமனிதருக்கு இன்று நாம் புகழ் வணக்கம் செலுத்துவோம். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமான திரு. ரோபோ சங்கர் அவர்களின் எதிர்பாராத மறைவு திரையுலகையும், அவரது ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான நடிப்பால் மக்களின் இதயங்களைக் கவர்ந்த அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்வுகள் மற்றும் திரைப்படங்களில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, எண்ணற்ற மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தவர்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ரோபோ சங்கர் அவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. ரியாஸ் மாலிக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும், கவலையும் தருகிறது.
கழகத்தின் எல்லா நிகழ்வுகளிலும் தன்னை பங்கேற்று, என் மீது அளவற்ற பற்று கொண்டவர், எல்லோரிடமும் அன்பாகவும், சகோதரத்துடனும் பழகக்கூடியவர் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் திரு. ரியாஸ் மாலிக் அவர்கள் அவரது மறைவு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பாகும்.
அவரது ஆன்மா இறைவனடி சேர இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் சமூக நீதியின் அடித்தளத்தை அமைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் போராடிய மாமனிதர் ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
தீண்டாமை, ஜாதிப் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்து, சமூக நல்லிணக்கத்திற்காகவும், பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.
ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தொலைநோக்கு சிந்தனைகளும், சமூக நீதிக்கான அவரது அயராத பணிகளும் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளன. அவரது புகழைப் போற்றி, அவரது கனவுகளை நனவாக்குவதற்கு இந்நாளில் நாம் மீண்டும் உறுதியேற்போம். -
John Pandian
@JohnPandianTMMK
நரேந்திரா - தேவேந்திரா என கூறி, எங்கள் உள்ளத்தில் உறவாக, பாரதத்தின் வீரமும் விவேகமும் கூடிய மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு, இந்தப் பிறந்தநாளில் எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதத்தைச் சிறப்பான முறையில் வழிநடத்துவதோடு, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் பெருமையையும், வரலாற்று மாண்பையும் உயர்த்தி, எங்கள் அடையாளத்தை உலகறியச் செய்த உங்கள் அர்ப்பணிப்புக்கு உள்ளம் நெகிழ்ந்து நன்றி கூறுகிறோம்! இந்த முயற்சி, எங்கள் பாரம்பரியத்தைப் போற்றி, சமூக நீதியில் உங்கள் அர்ப்பணிப்பை எடுத்துரைக்கிறது. சமுதாயங்களை ஒருங்கிணைத்து, பாரதத்தின் பன்முகப் பெருமையை மேலும் செழிக்கச் செய்கிறது!
உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் பாரதத்தை உலகின் முன்னணி நாடாக வழிநடத்தும் வலிமையும் ஞானமும் கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறோம்.
#narendramodi | #happybdaypmmodi -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தைச் சேர்ந்த திரு. ஆனந்த் குமார் வேல்குமார், சீனாவில் நடைபெற்ற வேகப் பனிச்சறுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் 1:24.924 என்ற நேரத்தில் தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு முதல் உலக சாம்பியன்ஷிப் தங்கத்தைப் பெற்றுத் தந்து வரலாறு படைத்துள்ளார்.
அயராத உழைப்பு, அசைக்க முடியாத உறுதி மற்றும் தனித்துவமான திறமையால் இந்த உயரத்தை எட்டிய திரு. ஆனந்த் குமார் வேல்குமார், இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய உந்துதலாகத் திகழ்கிறார்.
உலக மேடையில் இந்தியாவின் புகழைப் பறைசாற்றிய இவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் வெற்றிக் கனவு மேலும் புதிய உச்சங்களைத் தொடட்டும்!This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில், தமிழகத்தின் பெருமைமிகு செஸ் வீராங்கனை செல்வி வைஷாலி ரமேஷ்பாபு தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மாபெரும் வெற்றி, அவரது அசாத்திய திறமை, அர்ப்பணிப்பு மற்றும் செஸ் விளையாட்டின் மீதான அவரது அளவற்ற ஆர்வத்தை உலக அரங்கில் பறைசாற்றியுள்ளது. இந்த சாதனைக்காக செல்வி வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வி வைஷாலி மேலும் பல பட்டங்களை வென்று, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்துவார் என நம்புகிறேன். அவரது எதிர்காலப் பயணத்தில் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று.
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற அவரது மந்திர வார்த்தைகளை மனதில் ஏந்தி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட மாமனிதரின் நினைவை போற்றுவோம்!
அண்ணாவின் "அறிவு ஒளி பரவட்டும்" என்ற உன்னத எண்ணத்துடன், அவரது சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளைப் பின்பற்றி, ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டமைப்போம்! -
John Pandian reposted
Dr Priscilla Pandian
@priscillaTMMK
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள், தமிழ்நாட்டின் சமூகநீதி இயக்கங்களின் முக்கியத் தூணாகத் திகழ்ந்தவர். அவரது வாழ்நாள் முழுவதும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அயராது பணியாற்றியவர்.
குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய தொண்டுகள் இன்றும் மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன.
அவரது பெயரில் மதுரை சர்வதேச விமான நிலையத்தை அழைப்பது, அவரது சாதனைகளை தேசிய அளவில் பெருமைப்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் மாபெரும் அங்கீகாரமாக அமையும்.
எனவே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, மதுரை சர்வதேச விமான நிலையத்தை “தியாகி இமானுவேல் சேகரனார் சர்வதேச விமான நிலையம்” எனப் பெயரிடுமாறு தமிழக அரசை பணிவுடன் வேண்டுகிறோம்.
@JohnPandianTMMKThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி பிரிசில்லா பாண்டியன் @priscillaTMMK தலைமையில், கழக இளைஞரணி தலைவர் டாக்டர் வியங்கோ பாண்டியன் @ViyangoOfficial கழக நிர்வாகிகள் இணைந்து சென்று வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம், சமூக நீதி காக்கத் தனது உயிரை அர்ப்பணித்த தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களை நினைவு கூர்கிறோம். சாதி அநீதிக்கு எதிராக எழுந்து நின்ற அவர், சமத்துவத்தின் தீபம் ஏற்றி பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கினார்.
அவரது தியாகம் நம்மை ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்குமான போராட்டத்திற்கும் உற்சாகப்படுத்துகிறது. இன்று நாம், அவரது இலட்சியங்களைப் பின்பற்றி சமூக நீதியின் பாதையில் செல்வதை உறுதி செய்கிறோம்.
#தியாகிஇமானுவேல்சேகரனார்This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் கவிஞரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீப்பொறியுமான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் இன்று.
தனது 11ஆம் வயதில் “பாரதி” எனும் பட்டத்தைப் பெற்று, தமிழ் கவிதை உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாமல், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்த அவர், தனது எழுத்துக்களால் தேசபக்தி, சமூக சமத்துவம், பெண் விடுதலை, மத ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இன்று, பாரதியாரின் நினைவு தினத்தில், அவரது கவிதைகளையும், கொள்கைகளையும் மீண்டும் படித்து, அவர் கண்ட சுதந்திர, சமத்துவ, அறிவு நிறைந்த இந்தியாவை நோக்கி நாம் பயணிக்க உறுதி ஏற்போம்.
#மகாகவி_பாரதியார் -
John Pandian
@JohnPandianTMMK
இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் அநீதியான ஆட்சிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய இமானுவேல் சேகரனார், சுதந்திர இந்தியாவில் தனது ராணுவப் பதவியைத் துறந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
தியாகி இமானுவேல் சேகரனார், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டார். அவரது தியாகமும், சமூக நீதிக்கான அவரது அசைக்க முடியாத பற்றும், இன்றும் நமக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
இன்றைய தினத்தில், தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது சமூக நீதிக்கான பயணத்தைத் தொடர உறுதியேற்போம்.
#தியாகிஇமானுவேல்சேகரனார் -
John Pandian
@JohnPandianTMMK
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட மாண்புமிகு திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் @CPRGuv இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்த திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், நீண்டகால அரசியல் மற்றும் பொது சேவை அனுபவம் கொண்டவர். துணை குடியரசுத் தலைவராகவும், ராஜ்யசபையின் தலைவராகவும் பொறுப்பேற்கும் இவர், இந்திய அரசியலமைப்பின் காவலராகப் பணியாற்ற உள்ளார்.
அவரது தலைமையில், சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மேலும் வலுவடையும் என உறுதியாக நம்புகிறோம். அவரது அனுபவம், மக்கள் நலனில் அக்கறை மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்கும் அணுகுமுறை ஆகியவை ராஜ்யசபையின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும்.
திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், ராஜ்யசபை புதிய உயரங்களை எட்டி, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வலு சேர்க்கும் என முழுமையாக நம்புகிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விடுதலைப் போரில் உலகின் முதல் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தி, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை அழித்து வீரமரணம் அடைந்த மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
தன்னுயிரை தீயில் இறையாக்கி, விடுதலைப் போரில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார், இவரது இணையற்ற வீரமும், ஈடில்லா தியாகமும், தமிழ்நாட்டின் விடுதலை வேட்கையை உலகறியச் செய்தது.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கண்ணின் இமையென பாதுகாத்த இந்த மாவீரனின் நினைவைப் போற்றி, தாய்நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது அவர் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்து பேசியது அவசியமற்றது.!
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற விஷயத்தை பேச வேண்டியதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினால் ஆரோக்கியமாக இருக்கும். மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி பேசினால் இரு சமூகத்தில் உள்ள நல்ல உறவுகளை முறியடிக்கும் நோக்கத்தோடு பேசுவது ஆரோக்கியமற்றது. எனவே, மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த "சின்ன உடைப்பு கிராம மக்கள்" இம்மண்ணின் பூர்வக்குடி மக்களான "தேவேந்திர குல வேளாளர்" மக்கள் அப்பகுதியில் வாழுகின்ற அவர்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையும் மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார்’ அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்பது தான்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 2018 ஜனவரி 23, அன்று மதுரை அவனியாபுரம் பேருந்துநிலையம், மந்தை திடலில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம நடத்தியுள்ளோம்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் மக்கள் இன்று வரையிலும் போராடி வருகின்றனர். எனவே,தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இதுபோன்ற பிரச்சாரங்களை மேற்கொள்வது தங்களின் அரசியல் பயணத்திற்கு ஆபத்தானது. கடந்த காலங்களில் அம்மையார் இருக்கும் போது மதுரை விமான நிலையம் பற்றி எங்கோ இதுவரை பேசியது உண்டா? எனவே, தங்களின் அரசியல் பயணத்தில் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டுமே தவிர, குறுகிய எண்ணத்தில் இருப்பது ஆபத்தானது.
எடப்பாடி பழனிசாமி அவர்களே, ஒருவரின் சொந்த நிலத்தை அரசின் பயன்பாட்டிற்கு வழங்குபோது, அவரின் விருப்படி பெயர் வைக்கலாம், ஆனால் ஒரு கிராமம் & ஒரே சமூகமாக இருந்தால் அந்த சமூக மக்கள் விரும்பும் பெயர்கள் சுட்டுவது தான் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவரும், தீண்டாமை ஒழிப்புக்காக முனைப்போடு பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி.வே.இமானுவேல் சேகரன் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதே பொருத்தமானது.
என்றும் மக்கள் பணியில்...
தமிழினவேந்தர்,
பெ.ஜான்பாண்டியன் MA,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் -
John Pandian
@JohnPandianTMMK
எனக்கு பாஜக மீது அதிருப்தி உள்ளதா?
விகடன் டிஜிட்டலுக்கு நான் அளித்த முழு நேர்காணலை காண : youtu.be/T196WprOrmoThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
அன்னை தெரசாவின் நினைவு தினமான இன்று, உலகெங்கிலும் அன்பு, கருணை மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக அனுசரிக்கப்படுகிறது.
ஏழைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் நோயாளிகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இவரது நினைவு தினம், 2012 முதல் ஐக்கிய நாடுகள் சபையால் “பன்னாட்டு தொண்டு நாளாக” கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், அன்னை தெரசாவின் கருணை மற்றும் சேவையை நினைவுகூர்ந்து, சமூக சேவையில் ஈடுபடுவோம். -
John Pandian
@JohnPandianTMMK
'கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, தன் செல்வத்தை தியாகம் செய்து, தமிழ் மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய வீரர். இந்திய மக்களின் உள்ளங்களில் சுதந்திர உணர்வை ஊட்டி, அதை செயல்படுத்திய மாமனிதர்.
இவரது தேசபக்தியையும், தியாக உள்ளத்தையும் இந்த நன்னாளில் போற்றி நினைவு கூர்வோம்!
#vocchidambarampillai -
John Pandian
@JohnPandianTMMK
ஒணம் திருநாள் வாழ்த்துக்கள்
புதிய அறுவடை மகிழ்ச்சியை குறிக்கும் ஒணம், கேரளாவின் வளமான பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழகாக வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான திருநாள் ஆகும்.
எனது மலையாள சகோதரர், சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஒணம் நல்வாழ்த்துகள்! இந்த பண்டிகை உங்களின் வாழ்வில் மகிழ்ச்சி, ஒன்றிணைவு, செழிப்பு நிறைந்து பொங்கட்டும்.
ஒற்றுமையுடனும் பாரம்பரியத்தின் அழகோடும் நாம் அனைவரும் இந்நாளை கொண்டாடுவோம்.
#happyonam -
John Pandian
@JohnPandianTMMK
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் புனித பிறந்தநாள் திருநாளான மிலாதுன் நபியை, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடும் இந்த புனிதமான தருணத்தில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மிலாதுன் நபி திருநாளில், அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் வாழவும், உலகெங்கும் சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் அமைதி பெருகவும், இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்! -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலத் தூண்கள் என்பது போல, நாட்டின் வருங்காலத் தூண்களாக உருவாக்கும் பணியில் அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பேராசிரியருமான அமரர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான இந்நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது. கல்வித் துறையிலும், நாட்டின் வளர்ச்சியிலும் அவர் ஆற்றிய உன்னத பணிகளை இந்நன்னாளில் போற்றி, அவரது பாதையில் நாமும் பயணிப்போம்.
#drsarvepalliradhakrishnan #happyteachersday -
John Pandian
@JohnPandianTMMK
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில், GST கவுன்சிலின் மூலம் முக்கியமான முடிவுகளை அறிவித்துள்ளது, இவற்றில் 12% மற்றும் 28% GST வரி வரம்புகள் நீக்கப்பட்டு, நடுத்தர வர்க்கம், பெண்கள், சிறு வணிகர்கள் மற்றும் MSME-களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது.
மேலும், 33 உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி GST வரி விதிக்கப்படாது எனவும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு GST வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது எனவும், மருத்துவ உபகரணங்களுக்கு இதுவரை 12% விதிக்கப்பட்ட GST வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது போன்ற மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.
ஏழை மற்றும் நடுத்தர மக்களை மையப்படுத்தி GST சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசுக்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@narendramodi @BJP4TamilNadu -
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டுக் கழகம் சார்பாக சமூக உரிமைப் போராளி தியாகி இமானுவேல் சேகரனின் 68வது வீரவணக்க நாள் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி 2025 பரமக்குடியில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இன்று வழங்கப்பட்டது.
-
John Pandian
@JohnPandianTMMK
பாமகவில் எனது பயணமும் எனது சவாலும்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
மக்களுக்கு செய்த துரோகம் தான் இன்றைய பாமகவின் நிலைக்கு காரணம்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சமத்துவம் பேச தொகுதிவாரியாக சென்றேன், இதுவே எனது ஆரம்பகட்ட புரட்சி என சொல்லலாம்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசியலின் மாமேதை திரு. ஜி.கே. மூப்பனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
1931-ல் தஞ்சாவூரில் பிறந்த மூப்பனார் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனராகவும் மக்கள் பணியாற்றினார்.
அவரது எளிமையான வாழ்க்கை, மக்கள் நலப் பணிகள், மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதவை. கல்வி, விவசாயம், மற்றும் சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. இந்நாளில், அவரது உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றி, சமூக நலன் காக்க உறுதியேற்போம்.
@GK__Vasan -
John Pandian
@JohnPandianTMMK
தினம் ஒரு VIP | Personal to Politics
Full Video - www.youtube.com/live/pZNKIFY7SUk -
John Pandian
@JohnPandianTMMK
சிவப்பு பச்சை கொடியை தமிழகம் முழுக்க தெருத்தெருவாக எடுத்துச் சென்றேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சட்டமன்றத்தில் நமக்காக வாதிட்டவர்கள் NDA கூட்டணி தலைவர்கள்.
-
John Pandian
@JohnPandianTMMK
அனைவரும் கொண்டாட வேண்டிய தலைவர் அம்பேத்கர் அவர்கள்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நாட்டுக்கே சாப்பாடு போடும் எங்கள் விவசாய குடியை அடிமையாக நடத்துவது எந்த விதத்தில் நியாயம் ?
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இனியும் நம்மை யாராலும் பிரித்தாள முடியாது, சாதியத்தை விட சமத்துவமே முக்கியம், ஒற்றுமையுடன் பயணிப்போம்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
விநாயகர் சதுர்த்தியின் இந்த புனித நாளில், கணபதியின் திருவருளால் உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சியும் வளமும் பெருக வாழ்த்துகிறேன்.
உங்கள் இல்லத்தில் அமைதியும் செல்வமும் நிலவ, குடும்பத்துடன் இனிய பண்டிகை கொண்டாட வாழ்த்துகிறேன்!
#ganeshchaturthi2025 -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் தகுந்த சட்ட தரவுகளுடனும் தமிழக தேர்தல் ஆணையத்தால் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அனுப்பிய விளக்க உரை கடிதத்திற்கு 25 - ஆண்டுகள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் அரசியலில் ஜனநாயக கடமையாற்றிய நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சி, ஊரக மாநகராட்சி, ஊரக நகராட்சி, ஊரக பேரூராட்சிகளில் பங்குபெற்று அதன் முடிவுகளில் தரவுகளையும் கழக பொதுச் செயலாளர் அவர்கள் தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கும், இந்திய ஆணையத்திற்கும் விளக்கம் அளித்துள்ளார்.
@TMMKofficial @priscillaTMMKThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25 - ஆம் ஆண்டு வெள்ளி விழா, தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையையும் மையப்படுத்தி திண்டுக்கல்லில் 24.08.2025 அன்று நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சமூக சமத்துவ மாநில மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்!
- வழக்கறிஞர், திருமதி. @priscillaTMMK
கழக பொதுச் செயலாளர். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழாவையும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் முக்கிய கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத்தையும் முன்னிறுத்தி, திண்டுக்கல்லில் நேற்று (24 ஆகஸ்ட் 2025) நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சமூக சமத்துவ மாநில மாநாடு பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு உறுதியான ஆதரவு தெரிவித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அதிமுக பொருளாளர், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் அவர்கள், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்கள், புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் திரு. ரூபேந்திர குமார் அவர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் அவர்கள், கழக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு. வியங்கோ பாண்டியன் அவர்கள், கழக மகளிரணி தலைவி மருத்துவர் திருமதி. வினோலின் நிவேதா அவர்கள், மாநாட்டில் பங்கேற்ற அனைத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் எனது அன்பு தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களின் ஒத்துழைப்பு இந்த மாநாட்டை மேலும் மிளிரச் செய்தது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நியாயமான பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை, அனைவரின் ஒருமித்த முயற்சியால் விரைந்து நிறைவேறும் என்பது உறுதி. ஒருமைப்பாட்டுடன் இணைந்து பயணித்து, வெற்றியை வென்றெடுப்போம்!
John Pandian
@JohnPandianTMMK
-
John Pandian
@JohnPandianTMMK
எனது 50 ஆண்டு கால மக்கள் சேவை மற்றும் 25 ஆண்டு கால அரசியல் பயணத்தின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டங்களைப் பதிவு செய்யும் இந்த ஆவணப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தேமுதிக நிறுவனர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
திரையுலகில் 'புரட்சி நாயகனாகவும்', நடிகர் சங்கத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கேப்டனின் எளிமையும், உறுதியும், மக்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையும் என்றும் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. அவரது பிறந்தநாளில், அவரது புகழைப் போற்றுவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவரும், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. பாரிவேந்தர் அவர்களுக்கு, எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கல்வி வளர்ச்சிக்கும், சமூக உயர்வுக்கும் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கி வரும் திரு. பாரிவேந்தர் அவர்கள், உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தனது உன்னத பணிகளைத் தொடர்ந்து செய்ய, இறைவனிடம் வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
அன்புடையீர் வணக்கம்!!
ஆயிரம் ஆண்டுக்கால சாதிய கட்டமைப்புகளைக் கட்டுடைத்து, சமூக சமத்துவம் உருவாக்கும் நோக்கில் கடந்த அக்டோபர் 2000-ல் உதயமானது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்!!
2000 முதல் 2025 ஆண்டுவரை கால் நூற்றாண்டு காலம் சமூக சமத்துவத்திற்கான பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து அதில் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியடைந்துள்ளது. தாழ்ந்து கிடக்கிறோம் என்ற உளவியலில் இருந்த மக்களை நோக்கி நீ! தாழ்ந்தவன் அல்ல உழைப்பவன் நீயே உயர்ந்தவன்! என்று ஒரு குரல் உயர்த்தியது !! தலை நிமிரச் செய்தது அந்த குரல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குரல்!! முள்ளை முள்ளால் எடு!! சாதியை சாதியால் வெல்லு!! என்றது ஒரு குரல் அது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குரல்!! ஏய் என்று இழிவாக அழைக்கப்பட்ட மக்களை ஏற்றம் பெற செய்தது ஒரு குரல்!! அது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குரல்!! அந்தக் குரல் ஓரளவு சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தியது.
ஆதிக்கவாதிகளுக்கு அது அபாய குரலாக தெரிந்தது!! அடிமைப்படுத்தப் பட்ட மக்களுக்கு அது ஆதரவு குரலாக நின்றது!! அதோடு நிற்கவில்லை அந்த குரல்!! அனைத்து நிலையிலும் சமத்துவம் வேண்டும் என்றது!!
ஆண் - பெண் சமத்துவம் பேசியது!! பொருளாதார சமத்துவம் நிலவக்கூடிய நவீன கால நாகரிகச் சமத்துவச் சமூகத்தை உருவாக்கும் லட்சிய குரல் எழுப்பியது!! சமரசமில்லா இலட்சியத்துடன், கடந்த 2000ஆம் ஆண்டு, அக்டோபர் 9ஆம் தேதி ஒரு மக்கள் அரசியல் இயக்கமாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அமைப்பாக தோன்றியது!!
அந்த அரசியல் இயக்கத்தினை ஆரம்பத்தில் இருந்து இன்று வரை செவ்வனே வழி நடத்தி வரும் தலைவர் திரு. பெ. ஜான் பாண்டியன் அவர்கள், சமூகத்தில் நிலவும் அனைத்து விதமான ஆதிக்கத்திற்கும் சாதி, இனம், பொருளாதாரம், பாலினம் - உள்ளிட்ட அனைத்து பாகுபாடுகளுக்கும் ஒரே தீர்வு 'சமத்துவம்' என்ற இலட்சிய கொள்கையில் உறுதியுடன் செயல்படுத்தி வருகிறார்.
அந்த இயக்கம் கடந்த கால் நூற்றாண்டாக, மக்களிடம் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
ஆண்-பெண் பாகுபாடின்றி சம வாய்ப்பு வழங்கும் பாலின சமத்துவம்.
ஏழை-பணக்காரன் என்ற வர்க்க பேதம் நிலவும் சமூகத்தில், கல்வி, வேலை, தொழில், சொத்துரிமை ஆகியவற்றில் சம உரிமை.
மக்களுக்கான முழுமையான விடுதலை அரசியல் மாற்றத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை வலியுறுத்தி அரசியல் விடுதலை = சமூக விடுதலை என்ற கொள்கையுடன் கால் நூற்றாண்டாக களமாடி வருகிறது.
இந்நிலையில், கழகத்தின் களப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக சமத்துவம் உருவாக்கும் உறுதியோடு புதிய யுத்திகளோடு புதிய திசைமாற்றத்தின் தொடக்கமாக வெள்ளிவிழா ஆண்டு சமூக சமத்துவ மாநாடு ஆகஸ்ட் 24-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.
மக்களுக்கான முழுமையான விடுதலை அரசியல் மாற்றத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை வலியுறுத்தி அரசியல் விடுதலை = சமூக விடுதலை என்ற கொள்கையுடன் கால் நூற்றாண்டாக களமாடி வருகிறது.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்:
1. சமத்துவ அரசியல் விசயங்களை மக்களிடம் தெளிவாக எடுத்துச் செல்லுதல்.
2. கழகத்தின் கால் நூற்றாண்டு களப் பணியையும், எதிர்கால நோக்கையும் எடுத்துரைத்தல்.
3. சமத்துவம் தேடுகின்ற அனைத்து சமூகத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுத் தளத்தை உருவாக்குதல்.
4. சமத்துவ அரசியலின் பாதையை நோக்கி இளம் தலைமுறையினரைத் திசைப்படுத்துதல்.
5. மக்களிடையே புதிய சமூக ஒழுங்கை ஏற்படுத்துதல்!! இந்த நோக்கத்தை முன்னிறுத்தியேமாற்றத்திற்கான ஒரு அரசியல் விழா நடத்த இருக்கிறது.
இந்த மாநாடு வெறுமனே ஒரு விழா அல்ல! புதிய சமத்துவத் தமிழ் நாட்டை உருவாக்கும் அறைகூவல்!இந்த மாநாடு கடந்த காலத்தின் வரலாறு! எதிர்காலத்தின் திசைகாட்டி!
எனவே, சமூக சமத்துவத்தை உணர்ந்து செயல்பட விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, புதிய அரசியல் மாற்றத்தின் சக்தியாக ஒன்றிணைய வேண்டும் என்று அழைக்கின்றோம்!!
சமத்துவ அரசியல் தான், சமூக விடுதலையின் பாதை இந்தக் கோட்பாட்டை மக்கள் முன் வைக்கிறது இந்த வெள்ளிவிழா சமூக சமத்துவ மாநாடு!
அனைவரும் வாரீர்!! -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மாலை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில், தமிழக பாஜக சார்பாக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மறைந்த பாஜக மூத்த தலைவரும், ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகரும், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநருமாக இருந்த ஐயா திரு. இல. கணேசன் அவர்களின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவருக்கு எனது புகழஞ்சலியைச் செலுத்தினேன்.
ஐயா திரு. இல. கணேசன் அவர்களின் தேசப்பற்று, அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகள் எப்போதும் வழிகாட்டியாக இருக்கும். அவரது மறைவு தமிழகத்திற்கும், பாஜகவிற்கும் பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டி பிரார்த்திக்கிறேன்.
@BJP4TamilNaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பட்டியல் வெளியேற்றமே மாநாட்டின் முக்கிய நோக்கம்.
எனது முழு நேர்காணலை காண : youtu.be/eFdtKZRylMsThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திர குல வேளாளர்களுக்கு சாதிவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.
எனது முழு நேர்காணலை காண : youtu.be/eFdtKZRylMsThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 254-வது நினைவு தினம் இன்று!
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன், 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போர்களில் தனது ஒரு கையை இழந்தபோதும், தென்மலைப் போரில் காயமடைந்தபோதும், தனது படையை வெற்றியை நோக்கி வழிநடத்திய மாவீரராக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அவரது 254வது நினைவு தினத்தில், அவரது தியாகமும் வீரமும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்துவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
ஆணவக்கொலை கூடாது என முதன் முதலாக பேசியவன் நான்.
எனது முழு நேர்காணலை காண : youtu.be/eFdtKZRylMsThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
அரசியலில் யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது.
எனது முழு நேர்காணலை காண : youtu.be/eFdtKZRylMs -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian reposted
Polimer News
@polimernews
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓ.பி.எஸ். இணைவாரா?.. - த.ம.மு.க. தலைவர் ஜான் பாண்டியன் கொடுத்த ரியாக்சன்..
#ndaalliance | #ops | #johnpandian | #election2026This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தேனி மேற்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கம், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பட்டியல் நீக்கக் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவது.
அத்துடன், கழகத்தின் "25-ஆம் ஆண்டு வெள்ளி விழா" கொண்டாட்டங்கள் மற்றும் வரவிருக்கும் ஆகஸ்ட் 24, 2025 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" குறித்து மக்களுக்கு விளக்கமளித்தேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இந்தியாவின் அடுத்த துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநில ஆளுநர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. CP ராதாகிருஷ்ணன் அவர்கள், துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டை வழிநடத்தும் பணியில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவரது தலைமையின் கீழ், இந்தியா மேலும் வலிமை பெற்று, ஜனநாயகத்தின் உயரிய இலக்குகளை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து மக்கள் சேவையில் சிறப்பாகப் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று தேனி கிழக்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் நடைபெற்றது. இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கம், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பட்டியல் நீக்கக் கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவைப் பெறுவது.
மேலும், கழகத்தின் "25-ஆம் ஆண்டு வெள்ளி விழா" கொண்டாட்டங்கள் மற்றும் வரவிருக்கும் ஆகஸ்ட் 24, 2025 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்துரைத்தேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பட்டியல் வெளியேற்றம் தான் ஒரே தீர்வு | அடித்தே கொலை செய்யும் காவல்துறை | ஸ்டாலின் ஆட்சி இல்லை, இது போலீஸ் ஆட்சி.
எனது முழு நேர்காணலை காண : youtu.be/eFdtKZRylMsThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25 - ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சமூக - சமத்துவ மாநில மாநாடு!
நாள் : ஆகஸ்ட் - 24, 2025 ஞாயிற்று கிழமை.
நேரம் : மாலை 4 - மணி முதல்.
இடம் : திண்டுக்கல்.
தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களே, அலைகடலென திரண்டு வாரீர். திண்டுக்கல்லில் ஒன்று திரள்வோம்.! -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் நடைபெற்றது.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பட்டியல் நீக்கக் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவதாகும். அத்துடன், கழகத்தின் "25-ஆம் ஆண்டு வெள்ளி விழா" கொண்டாட்டங்கள் மற்றும் வரவிருக்கும் ஆகஸ்ட் 24, 2025 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" குறித்த விவரங்களை மக்களுக்கு விளக்கினேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான திரு. இல. கணேசன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும், ஆழ்ந்த இரங்கலையும் தருகிறது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்தவர், தமிழ் கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டவர், தேசியவாதத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் திரு. இல. கணேசன் அவர்கள்.
அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டி, அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஈடுபட்டு வந்த போது, 15.08.2025 இன்று புதிய தமிழகம் கட்சியின் மாநில தொண்டர் அணி செயலாளர் திரு.R. நாகமணி அவர்கள், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் திரு. S.விக்னேஷ் அவர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நேரில் சந்தித்து இணைந்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று, அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, 15 ஆகஸ்ட் 2025 அன்று, திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் நடைபெற்றது.
இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கம், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான பட்டியல் நீக்கக் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதாகும். மேலும், கழகத்தின் "25-ஆம் ஆண்டு வெள்ளி விழா" கொண்டாட்டங்கள் மற்றும் எதிர்வரும் ஆகஸ்ட் 24, 2025 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவிருக்கும் "சமூக - சமத்துவ மாநாடு" பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும் இந்தச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
இந்தச் சுற்றுப்பயணம், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கும், கழகத்தின் "25-ஆம் ஆண்டு வெள்ளி விழா" மற்றும் வரவிருக்கும் ஆகஸ்ட் 24, 2025 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" குறித்து மக்களிடையே எடுத்துச்சென்றேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மிகுந்த பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும், திண்டுக்கல் மாநாட்டு திடலில் மூவர்ணக் கொடியேற்றி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினேன்.
இந்த சுதந்திர தினம், நமது நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் அமைதியை மேலும் வலுப்படுத்த உறுதியேற்போம்!
ஜெய் ஹிந்த்!This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
அனைவருக்கும் 79வது சுதந்திர தின வாழ்த்துக்கள்!
இந்த நாளில், நமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் உடலையும் அர்ப்பணித்த வீரர்களின் தியாகத்தையும், நமது அரசியலமைப்பை செதுக்கிய மேதைகளின் உன்னத தொலைநோக்கையும் நெஞ்சம் நெகிழ்ந்து நினைவு கூர்வோம்.
அவர்களின் வீரமும், அர்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும் நமது இந்திய தேசத்தின் அடித்தளத்தை வலுவாக்கி, ஒளிமயமான எதிர்காலத்தை விதைத்தது. இந்நாள், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை முழுமையாக நனவாக்க புதிய உற்சாகத்துடன் உழைக்கவும், நமது நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து, ஒற்றுமையை வளர்த்து, வலிமைமிக்க, பெருமைமிகு இந்தியாவை உருவாக்கவும் நம்மை உந்தட்டும்.
ஜெய் ஹிந்த்!
#independenceday2025 #jaihind -
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்டு-15 அன்று பிறந்தநாள் காணும் அருமை சகோதரர் திரு.நடேஷ் அரவிந்த் (திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்) அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், அவர் நீண்ட ஆயுளுடன், உடல் ஆரோக்கியத்துடனும்,நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
சென்னை ரிப்பன் மாளிகையில் 13 நாட்களாக அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையைப் பயன்படுத்தி அராஜகமாகக் கைது செய்து, பெண்கள் உட்பட அவர்களை இழுத்துச் சென்று தாக்கிய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைக்கின்றனர். 2021 திமுக தேர்தல் அறிக்கையில், தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது ஏன்? தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, பின்னர் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது ஏற்கத்தக்கதல்ல.
பல ஆண்டுகளாக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய இவர்கள், வெளிமாநில தனியார் நிறுவனங்களிடம் அடிமைகளாக வேலை செய்ய மறுப்பதும், அரசு பணியாளர்களாக நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையிலும், தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பட்டியல் நீக்கக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும், 2025 ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" தொடர்பாகவும், திருச்சி வடக்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்தேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் ஏழை மக்களின் உயிர்களைப் பணமாக்கும் கொடூரமான சட்டவிரோத கிட்னி திருட்டு வியாபாரம் திமுக ஆட்சியில் வெளிப்படையாக நடைபெறுவது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திருச்சி மருத்துவமனையில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி அறுவை சிகிச்சைகளின் லாபத்தை, ₹14.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்-ராய்ஸ் காருடன் ஒப்பிட்டு, திருப்பத்தூர் மக்களின் அனைத்து கிட்னிகளையும் அகற்ற வேண்டும் என அலட்சியமாகப் பேசிய வீடியோ, மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ திரு. கதிரவனின் மக்கள் விரோத மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, தொடர்பில்லாத நபர்களிடமிருந்து கிட்னிகளை பணத்திற்கு வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏழைத் தொழிலாளர்கள் ₹5-10 லட்சம் வாக்குறுதியுடன் ஏமாற்றப்பட்டு, குறைவான தொகைக்கு தங்கள் உறுப்புகளை இழந்துள்ளனர்.
இந்த ஊழலை மறைக்க, திமுக எம்எல்ஏ "சேவையாக செய்தோம்" எனப் பொய் கூறுவது, தமிழக மக்களின் உயிர்கள் இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை வெளிப்படுத்துகிறது. திமுக அரசு இந்த மாபெரும் குற்றத்தை உடனடியாக விசாரணை செய்து, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், இல்லையெனில், மக்கள் இந்த அநீதிக்கு தகுந்த பதிலளிப்பார்கள். -
John Pandian
@JohnPandianTMMK
சாதி ஆணவக் கொலைகளை வன்மையாகக் கண்டித்து, இத்தகைய கொடூரங்களைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மதுரை கலெக்டர் அலுவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், நீதி கோரியும் நமது குரலை ஒருமித்து உயர்த்துவோம். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடப்பட இருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை கூறும் காரணம், "குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது" என்றாலும், இது அரசு பள்ளிகளின் தரமின்மை மற்றும் தமிழக அரசின் கல்வி கொள்கைகளின் தோல்வியை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 58,924 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு பள்ளிகள் 37,595, அரசு உதவி பெறும் பள்ளிகள் 7,289, தனியார் பள்ளிகள் 12,929 என உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அரசு பள்ளிகளில் 61,49,337 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 59,73,678 மாணவர்களும் பயில்கின்றனர். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி மாணவர்கள் தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பது, அரசு பள்ளிகளின் தரம் குறித்து பெற்றோர்களுக்கு உள்ள நம்பிக்கையின்மையை தெளிவாகக் காட்டுகிறது.
தரமற்ற சமச்சீர் கல்வி முறையாலும், தேசிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்க மறுத்து, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாமல் இருப்பது, பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி தள்ளுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், தனியார் சுயநிதி பள்ளிகள் செழித்து வளர, அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு இது லாபகரமாக அமைவதாகவும், இதற்காகவே தமிழக அரசு இத்தகைய முடிவுகளை எடுக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
தமிழக அரசு உடனடியாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு அரசு பள்ளிகளை மேம்படுத்துவது அவசியம். திமுகவின் அரசியல் நலன்களுக்காக தமிழக மாணவர்களின் எதிர்காலம் பறிக்கப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த மூடல் முடிவை வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த முடிவை மறு ஆலோசனை செய்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையிலும், தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும், 2025 ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" தொடர்பாகவும், திருச்சி வடக்கு மாவட்டம், துறையூர், விநாயகர் தெருவில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு சந்தித்தேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு ஆதரவு ஈட்டுவதற்காகவும், 2025 ஆகஸ்ட் 24-ல் திண்டுக்கல்லில் நடைபெறவிருக்கும் "சமூக - சமத்துவ மாநாடு" குறித்தும், திருச்சி வடக்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நமது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டும், தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும், வரவிருக்கும் ஆகஸ்ட் 24, 2025 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" தொடர்பாகவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன்.
வரவிருக்கும் சமூக - சமத்துவ மாநாட்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேவேந்திரகுல வேளாளர் மக்களின் அடையாள மீட்பு மற்றும் சமூக நீதிக்கான குரலை மேலும் வலுப்படுத்துவோம்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
"தேவேந்திரகுல வேளாளர்" சமூகத்தின் பட்டியல் நீக்கக் கோரிக்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கும், வரும் ஆகஸ்ட் 24, 2025 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள "சமூக - சமத்துவ மாநாடு" குறித்து விழிப்புணர்வு பரப்புவதற்கும், நமது கழகத்தின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை 20 பேர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியும் சோகமும் ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
சமீபத்தில், டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினையைத் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து தெரு நாய்களையும் தெருக்களிலிருந்து அகற்றி, தங்குமிடங்களில் வைக்க வேண்டும், அவற்றை மீண்டும் தெருக்களிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ விடக்கூடாது, மேலும் இந்தப் பணியைத் தடுப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும்.
திமுக அரசு தமிழகத்தில் இதேபோன்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தெரு நாய்களை அகற்றி, அவற்றை தங்குமிடங்களில் வைத்து பராமரித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், நாய்க்கடி தடுப்பு மருந்துகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் விரிவுபடுத்த வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தேன்.
கோயிலின் நிசப்தமான சூழ்நிலையிலும் ஆன்மிகப் புனிதத்திலும் மாரியம்மனை வணங்கி, மனத் திருப்தியுடன் திரும்பினேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கொலை நகரமாகும் நெல்லை. Encounter செய்ய அதிகாரம் குடுத்தது யார் ?
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவிடத்திற்குச் சென்று, இன்று 09.08.2025 அவரது தியாகத்தையும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். இந்த நிகழ்வு, அவரது நினைவைப் பெருமையுடன் நினைவுகூரும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்வை தொடர்ந்து, எனது திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன். -
John Pandian
@JohnPandianTMMK
திமுக அரசு இன்று அறிவித்துள்ள மாநில கல்விக் கொள்கை, வெறும் விளம்பர நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவை தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. சமச்சீர் கல்வி முறையால் தமிழகத்தில் கல்வித் தரம் ஏற்கனவே பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மாணவர்கள் அடிப்படைக் கல்வியில் சிறப்பாக இருந்தாலும், திறன் (skill) பற்றாக்குறையுடன் வெளிவருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு விளம்பர நோக்கில் மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கல்வித் தரத்தை மேலும் சீர்குலைக்க முயல்கிறது.
கல்வித் தரம் குறைவதால், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முதலமைச்சர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தால், விளம்பரக் கொள்கைகளை விடுத்து, கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
நீட் தேர்வு அறிமுகமான பிறகு, பல ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்வி பயின்று வருவது உண்மையாகும். இது முதலமைச்சருக்கு தெரியாதது வியப்பளிக்கிறது.
மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரும் திமுக, தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நிலைப்பாட்டைக் கேட்கத் தயாரா? கல்வி பொதுப் பட்டியலுக்கு மாறியது காங்கிரஸ் ஆட்சியில்தான் என்பது முதலமைச்சருக்கு தெரியுமா?
திமுக அரசு விளம்பரங்களில் நேரத்தை வீணடிக்காமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
@mkstalin @CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விவகாரத்தில் FIR பதிவு செய்து, தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழக்கிடுமாறும். இவ்வழக்கு விசாரணையில் எவ்வித பராட்சமும் இல்லாமல் நிலையாக நீதி கிடைக்கும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நம்புகிறோம்.
மேலும், சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்ற அடிப்படையில் "ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை" தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஏழு நாட்களாக அமைதியாகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளாமல், அவர்களை கைது செய்யும் மிரட்டல் விடுப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தூய்மைப் பணியாளர்கள், தங்களது உரிமைகளுக்காகவும், நியாயமான பணி நிலைமைகளுக்காகவும் ஜனநாயக வழியில் அமைதியாகப் போராடி வருகின்றனர். ஆனால், இந்த அறவழிப் போராட்டத்தை "பொது அமைதிக்கு இடையூறு" என்று கூறி, காவல்துறை மூலம் அச்சுறுத்துவது திமுக அரசின் அதிகார ஆணவத்தையும், மக்கள் விரோதப் போக்கையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் குரலை ஒடுக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். இத்தகைய மிரட்டல் உத்திகளை உடனடியாகக் கைவிட்டு, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களுக்கு நீதி வழங்க வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில், காமராஜ புரம் பகுதியைச் சேர்ந்த பறையர் சமூகத்தைச் சார்ந்த கண்ணன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கடந்த 24.07.2025 அன்று அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இந்த கொடூரச் செயலுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இல்லத்திற்குச் சென்று, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆறுதலை நேரில் தெரிவித்தேன். இந்த இழப்பால் துயருறும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, இத்தகைய கொடுமைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இராமநாதபுரம் மாவட்டத்தில், முதுகுளத்தூர் வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா எனது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கட்டிடம் நம் சமூகத்தின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் ஒரு மைல்கல்லாக விளங்கும். நம் சமூகத்தின் உயர்விற்காக உழைத்து, இத்தகைய முக்கிய தருணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. -
John Pandian
@JohnPandianTMMK
கொலைக்கு கொலை தீர்வு என்றால், சட்டம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு? வழக்கறிஞர்கள் எதற்கு? குற்றவாளி யாராக இருந்தாலும், நீதிமன்றத்தின் வாயிலாக தண்டனை பெறப்பட வேண்டும்.
-
John Pandian
@JohnPandianTMMK
கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் 2025 ஆகஸ்ட் 5 இரவு புகார் அளிக்க வந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காவல் நிலையங்களின் நம்பகத்தன்மை குறித்து பெரும் கேள்விகளை எழுப்புகின்றன.
காவல் ஆணையர் சரவண சுந்தர் அவர்கள், இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்திருப்பது காவல் துறையின் அலட்சியப் போக்கின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஆணையர் கூற முயல்கிறாரா? காவல் நிலையத்தில் ஒருவரை பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள கூட தகுந்த காவலர்கள் இல்லையா? போன்ற கேள்விகள் எழுகிறது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பான வாழ்வு முறைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும். திமுக அரசு இது போன்ற துயர சம்பவங்களுக்கு முழு பொறுப்பேற்று, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உரிய விசாரணை மற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திருப்பூர் உடுமலைபேட்டையில் குடிமங்கலம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் (SI) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உருவாகியுள்ளது.
காவலரைத் தாக்கியவர்கள் மதுபோதையில் இருந்ததாக வரும் தகவல்கள், தமிழகத்தில் அதிகரித்து வரும் டாஸ்மாக் மது விற்பனையும், போதைப் பொருள் புழக்கமும் இத்தகைய கொடூரக் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
திமுக அரசு, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் முற்றிலும் தோல்வியடைந்து, மக்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் இழந்து நிற்கிறது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, முதலமைச்சர் இனியாவது இந்த அலட்சியப் போக்கைக் கைவிட்டு, சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும், போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைவது குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள்.
-
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலியில், மரியாதை நிமித்தமாக மாண்புமிகு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தேன்.
இச்சந்திப்பின்போது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இளைஞரணி தலைவர் திரு. வியங்கோ பாண்டியன் அவர்களும் உடனிருந்தார்.
@EPSTamilNadu @ViyangoOfficial -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலியில் புதியதாக தொடங்கப்பட்ட விவின் ஸ்கேன் சென்டரின் திறப்பு விழா இனிதே நடைபெற்றது. இந்நிறுவனத்தை தொடங்கிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மகளிரணி தலைவி திருமதி. வினோலின் நிவேதா அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இளைஞரணி தலைவர் திரு. வியங்கோ பாண்டியன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய தமிழக பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் வகாப் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவின் ஸ்கேன் சென்டரின் இந்த புதிய முயற்சி, திருநெல்வேலி மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகின்றேன்.
@NainarBJP @vinolinnivetha @ViyangoOfficial -
John Pandian
@JohnPandianTMMK
'ஜவான்’ படத்தில் தனது அற்புத நடிப்பிற்காக சிறந்த நடிகர் விருது பகிர்ந்து கொண்ட திரு. ஷாருக்கான், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது பெற்ற திரு. சுதிப்தோ சென், சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘12th Fail’ படக் குழு, மலையாளத்தில் ‘Ullazhukku’ மற்றும் தெலுங்கில் ‘Bhagavanth Kesari’ ஆகிய சிறந்த படங்களின் குழுவினருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த அங்கீகாரம் உங்கள் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையட்டும், மேலும் பல மறக்க முடியாத, உணர்வுபூர்வமான, சமூகத்திற்கு மதிப்பு சேர்க்கும் படைப்புகளை உலகிற்கு வழங்க வேண்டுமென ஆழ்மனதுடன் வாழ்த்துகிறோம்! -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்த் திரையுலகின் மாபெரும் கலைஞர்களான இசையமைப்பாளர் திரு. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் குணச்சித்திர நடிகர் திரு. எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் “வாத்தி” மற்றும் “பார்க்கிங்” திரைப்படங்களில் தங்களது இசை மற்றும் நடிப்புத் திறமையால் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த துணை நடிகர் பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தியுள்ளனர்.
இவர்களின் இந்த அற்புதமான சாதனைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, மேலும் பல உயரிய கலைப் பயணங்களையும், விருதுகளையும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
முதுகுளத்தூர் வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் சார்பில் கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 7, 2025 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை நான் பெற்றுக்கொண்டேன்.
இக்கட்டிடம் சங்கத்தின் முன்னேற்றத்திற்கும் சமுதாய ஒற்றுமைக்கும் முக்கிய பங்காற்றும் என உறுதியாக நம்புகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலியில் ஆணவப் படுகொலைக்கு உயிரிழந்த கவினின் உடலைப் பெற்றுக்கொள்ள, அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுடன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு ஆதரவாக எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
#justiceforkavin -
John Pandian
@JohnPandianTMMK
கவின் கொலை என்பது திட்டமிட்ட நடந்த ஆணவப் படுகொலை என்பதே என் கருத்து.
#justiceforkavinThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக கலாட்டா சேனலுக்கு நான் அளித்த பேட்டி.
Full Video Link - youtu.be/-IzYNBZoqbU
#justiceforkavinThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாநகர காவல்துறையினர், கவின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணனை கைது செய்தனர்.
#justiceforkavin -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திரு. KN நேரு அவர்கள் வாக்குறுதி அளித்தார்.
#justiceforkavinThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லையில் கவினுக்கு நடந்த ஆணவப் படுகொலையில் நமக்கு நியாயம், நீதி கிடைக்க வேண்டும். நல்லது நடக்கும். நல்லதே நினைப்போம்.
#justiceforkavinThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியில் ஆணவக் கொலைக்கு பாதிக்கப்பட்ட கவின் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக, இந்தக் கொலையில் தொடர்புடைய பெண்ணின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையும் கைது செய்து உரிய முறையில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோருகிறோம்.
கவின் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என்பதை இதன் மூலம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#justiceforkavin -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லையில் கவினுக்கு நடந்த ஆணவப் படுகொலை சம்மந்தமாக இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு.
#justiceforkavinThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியில் ஆணவக் கொலைக்கு பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இச்சந்திப்பின்போது, கவின் குடும்பத்தின் சார்பாக எழுப்பப்பட்ட நியாயமான கோரிக்கைகளை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் முன்பு வைத்தோம்.
இந்நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர்கள் திரு. K.N. நேரு அவர்களும், திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் உடன் இருந்தனர். கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
#justiceforkavinThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, கவின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தேன்.
இவ்வழக்கில் A1 மற்றும் A2 ஆக குறிப்பிடப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் தாய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவையும், உறுதுணையையும் வழங்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
#justiceforkavin -
John Pandian
@JohnPandianTMMK
ஆணவ படுகொலை என்ன நியாயம் ? கைது எப்போது ? காதலித்தது கவினின் குற்றமா ?
Full video - youtu.be/SamN7JiwyqwThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian reposted
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
@TMMKofficial
கவின் குடும்பத்தினரிடம் சாட்சியை கேட்கும் காவல்துறை!குற்றவாளிகளை சிறையில் அடைக்க தயங்கும் அரசு! களத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
"ஆப்ரேஷன் மகாதேவ்" மூலம், பஹல்காமில் மதத்தின் மறைவில் அப்பாவி இந்தியர்களை கொடூரமாகப் படுகொலை செய்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான சுலைமான், அப்கான், மற்றும் ஜிப்ரான் ஆகியோரை இந்தியப் பாதுகாப்புப் படைகள் துணிச்சலுடன் அழித்தது, நாட்டின் காயமடைந்த மனங்களுக்கு ஆறுதலையும், இந்தியாவின் வீரத்தை உலக அரங்கில் நிலைநாட்டிய பெருமையையும் அளித்துள்ளது.
இந்திய இராணுவம், உளவுத்துறை, மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஒருங்கிணைந்த மற்றும் திறமையான முயற்சிகள், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியை பாராளுமன்றத்தில் பகிர்ந்த மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கும், இந்தியப் படைகளின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிரவாதத்துக்கு எதிராக "பூஜ்ய சகிப்புத்தன்மை" கொள்கையை முன்னெடுத்து, தேசத்தின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் மேலும் வலுப்படுத்தும் இந்த சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
#operationmahadev -
John Pandian
@JohnPandianTMMK
இந்தியாவின் இளம் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கிற்கு, 2025ஆம் ஆண்டு FIDE மகளிர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
19 வயதிலேயே இந்த மாபெரும் சாதனையைப் புரிந்து, கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அலங்கரித்திருப்பது இந்தியாவிற்கும், உலக செஸ் அரங்கிற்கும் பெருமை சேர்க்கும் தருணம்.
திவ்யாவின் இந்த மாபெரும் வெற்றியைப் போற்றி, அவரது எதிர்காலப் பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்!This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் நீக்கக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டவும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து விவாதிக்கவும், கோவை மத்திய மாவட்ட மக்களைச் சந்தித்தேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
ஜூலை 20-ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்து, ஶ்ரீ ஆண்டாள் மற்றும் ஶ்ரீ ரெங்கமன்னாரை தரிசித்தனர். தேர் ரத வீதிகளில் பவனியாகச் சென்றது.
உள்ளூர் விடுமுறையால் மக்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். இவ்விழா, ஶ்ரீவில்லிபுத்தூரின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர் கவின் என்பவரை பட்டப்பகலில், நெல்லை KTC நகரில் ஆணவ படுகொலை செய்த சம்பவத்தை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்திறேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை - KTC நகர் பகுதியில், அஷ்ட லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் கவின் என்ற இளைஞரை மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர் கவின் தூத்துக்குடி - ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் என்றும் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் ஆணவ கொலை என்று சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் சாதிய ஆணவ படுகொலைகள் அதுவும் பட்டப்பகலில் அரங்கேறுகிறது என்ற அச்சம் பொதுமக்களிடம் தோன்றுகிறது.
கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கவின் என்ற இளைஞரை பட்டப்பகலில் மர்ம கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் யார்,யார் பின்னணியில் இருக்கிறார்கள். யாரின் தூண்டுதலில் பெயரில் நடந்திருக்கிறது என்பதனை காவல்துறை உரிய விசாரணை செய்து, குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன் -
John Pandian
@JohnPandianTMMK
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், "மிசைல் மேன்" என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை நாம் பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.
DRDO மற்றும் ISROவில் அவரது பணிகள் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாகவும், விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாகவும் உயர்த்தின. அக்னி, பிரித்வி ஏவுகணைகளின் வளர்ச்சியிலும், SLV-III திட்டத்தின் மூலம் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதிலும் அவரது பங்கு மறக்க முடியாதவை.
2002-2007 வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த அவர், "மக்களின் குடியரசுத் தலைவர்" என்று அழைக்கப்பட்டார். அவரது புத்தகங்களான Wings of Fire, Ignited Minds மற்றும் India 2020 இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
2015 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று, ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் மறைந்தாலும், கலாம் அவர்களின் எண்ணங்களும் உத்வேகமும் இன்றும் நம்மை வழிநடத்துகின்றன!!
#apjabdulkalam -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றில் பொற்காலப் பக்கங்களைப் புரட்டி, கடல் கடந்து தமிழரின் புகழை உலகெங்கும் நிலைநாட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழாவை கொண்டாடுவதற்காகவும், தூத்துக்குடியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காகவும் இன்று நமது தமிழக மண்ணில் எழுந்தருளும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மனதாரவும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.
அவரது வருகை தமிழகத்தின் மேம்பாட்டுக்கும், பண்பாட்டு பெருமைக்கும் மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறேன்.
#tnwelcomesmodi -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, கார்கில் விஜய் திவாஸ், நம் தேசத்தின் வீரமும், தியாகமும், தேசப்பற்றும் உச்சத்தில் ஒளிர்ந்த ஒரு புனித நாள்.
கார்கில் மலைப்பாறைகளில், பனி மூடிய உச்சிகளில், நமது வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, நமது தேசத்தின் எல்லைகளைப் பாதுகாத்தனர். இந்த கார்கில் தினத்தில், நாம் அந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்.
இந்த நாளில், நமது தேசத்திற்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவோம். "ஜெய் ஹிந்த்!" என்ற முழக்கத்துடன், நம் எல்லைகளைக் காக்கும் வீரர்களுக்கு நன்றியும், வீரவணக்கமும் செலுத்துவோம்! -
John Pandian
@JohnPandianTMMK
மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை மனு தாக்கல் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அறுவை சிகிச்சை முடிந்து உடல்நலக் குறைவுடன் ஓய்வில் இருக்கும் ஒருவரை, விசாரணை மற்றும் மனு தாக்கல் போன்ற செயல்களால் தொடர்ந்து துன்புறுத்துவது எந்த வகையில் நியாயமாகும்?
ஆளும் அரசு பழிவாங்கும் போக்கைக் கைவிட்டு, மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவை காவல்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, தற்போதைய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக உரையாடினோம்.
சந்திப்பின் போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் உடனிருந்தார்.
@JPNadda @BJP4TamilNadu -
John Pandian
@JohnPandianTMMK
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மனதாரத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு. ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
நாமக்கல் மாவட்டத்தில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் கிட்னி திருட்டு சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனையில் சிறுநீரகங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
உடல் உறுப்பு திருட்டு உலக அளவில் கடுமையான குற்றமாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இதில் அடிபடுவது கவலை அளிக்கிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, நடுநிலையான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மக்களின் உயிரையும் நலனையும் காக்க, இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
கடந்த நான்கு ஆண்டுகளாக அலங்காநல்லூர் அரசு சர்க்கரை ஆலை மூடப்பட்டிருப்பது கரும்பு விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை தனியார் ஆலைக்கு கரும்பு விற்க முயலும் விவசாயிகளை அதிகாரிகள் தடுத்து, தஞ்சாவூர் அரசு ஆலைக்கு செல்ல வற்புறுத்துவது கூடுதல் செலவை உருவாக்குகிறது. மானியம் தேவையில்லை எனக் கூறி தனியார் ஆலைகளுக்கு விற்க முயல்வோரும் தொந்தரவு செய்யப்படுகின்றனர்.
இதனால், விவசாயிகள் கரும்பு விவசாயத்தை கைவிடவும், மாற்று பயிர்களுக்கு மாறவும் யோசிக்கின்றனர். எனவே, அலங்காநல்லூர் ஆலையை உடனடியாக திறந்து, விவசாயிகள் தனியார் ஆலைகளுக்கு விருப்பப்படி கரும்பு விற்க அனுமதிக்க வேண்டும். அதிகாரிகளின் தொந்தரவை நிறுத்தி, மானியங்கள் மற்றும் நியாயமான விலை உறுதி மூலம் கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
மாஞ்சோலை தியாகிகளுக்கு வீர வணக்கம்!
கூலி உயர்வு கேட்டு, நீதி வேண்டி, உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களின் உயிரைப் பறித்த திமுக அரசின் பயங்கரவாதம் மறக்க முடியாத கொடுமை!
இன்று, அவர்களின் நினைவு தினத்தில், அவர்களின் துணிவையும், உறுதியையும், நீதிக்காக எழுந்த அவர்களின் அசைக்க முடியாத பிடியையும் வணங்குகிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, திருவாரூர் தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
முதல்வர் அவர்கள், தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தி, மீண்டும் புத்துணர்ச்சியுடன் மக்கள் பணியைத் தொடர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் கிராம சுற்று பயணத்தின் போது திருத்துறைப்பூண்டி நகரத்தில் உள்ள "தியாகி இம்மானுவேல் சேகரனார்" சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது..
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இம்முறை தென்மாவட்டத்தில் தான் போட்டியிடுவேன்..
Full Video - youtu.be/jEEKYp9-ILU -
John Pandian
@JohnPandianTMMK
கோவில் வருமானத்தில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை
Full Video - youtu.be/jEEKYp9-ILU -
John Pandian
@JohnPandianTMMK
RSS மிகவும் ஒழுக்கமான ஒரு இயக்கம்.
Full Video - youtu.be/jEEKYp9-ILUThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
எங்களை மதிப்பவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம்.
Full video - youtu.be/jEEKYp9-ILUThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
முன்னாள் முதல்வர் மாண்புமிகு திரு. கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் மூத்த சகோதரருமான திரு. மு.க. முத்து அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு. மு.க. முத்து அவர்களின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி! -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியர் ஒருவர் மாணவரின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரச் சொன்னதால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என்பது தமிழக கல்வி முறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் தீவிர அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் மாணவரின் பெற்றோரும், உறவினர்களும் நியாயம் கேட்டு நடத்திய போராட்டம், திமுக அரசின் கல்விக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, மாணவர்களின் மனநலத்தை புறக்கணித்து, கல்வி முறையில் மாற்றங்களை மேற்கொள்ளத் தவறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, மாணவர்களுக்கு மனநல ஆலோசனைக் குழுக்கள் அமைப்பது, ஆசிரியர்களுக்கு மனநல விழிப்புணர்வு பயிற்சி வழங்குவது, மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவு அளிக்கும் முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மேலும், இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், நீதியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் திரு. திருச்சி சிவா அவர்களின், மாண்புமிகு கர்மவீரர் காமராஜர் அவர்களைப் பற்றிய அண்மைய கருத்துகள் கடும் கண்டனத்திற்குரியவை.
பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டின் கல்வி, வளர்ச்சி, சமூக நீதியின் முன்னோடி. அவரது தொலைநோக்கு மற்றும் மக்கள் பணி, மாநிலத்தின் அடித்தளமாக விளங்குகிறது. அவரை இழிவுபடுத்துவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்கு சமம்.
திமுக, காமராஜரை இழிவுபடுத்துவதை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது, அவர்களின் குறுகிய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய செயல்கள், தமிழ்நாட்டின் வரலாற்றைத் திரிப்பதாகும். மக்கள், காமராஜரின் புகழையும் பங்களிப்புகளையும் மறக்க மாட்டார்கள். திமுகவின் இப்பேச்சுகள் மக்களின் எதிர்ப்பை மட்டுமே தூண்டும்.
இனி, இத்தகைய இழிவுபேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காக உயர்ந்த கொள்கைகளுடன் பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து, காமராஜரின் மாண்பைப் பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும். இதுவே, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும். -
John Pandian
@JohnPandianTMMK
சிவகாசி மாவட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் மீதான மாணவர்களின் தாக்குதல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மது போதையில் ஆசிரியர் சண்முகசுந்தரத்தை மாணவர்கள் பாட்டிலால் தாக்கிய இந்த வன்முறை, மாணவர்களிடையே வளர்ந்து வரும் தவறான போக்குகளையும், கல்வி நிறுவனங்களில் ஒழுக்கமின்மையையும் வெளிப்படுத்துகிறது. இதற்கு முன் இதே பள்ளியில் ஆசிரியர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.
திமுக அரசு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடியாக தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கம், பொறுப்புணர்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்பு, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் நடவடிக்கைகள், மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து மாணவர்களின் நடத்தையை மேம்படுத்தும் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பான, ஒழுக்கமான சூழலாக மாற, அரசு உறுதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்க தமிழக அரசு இப்போது நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும். -
John Pandian
@JohnPandianTMMK
எனது அன்பு மகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில மகளிரணி தலைவியுமான திருமதி. வினோலின் நிவேதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை மனமார தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைப்போல என்றென்றும் மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், தமிழகத்தை கல்வி, விவசாயம், தொழில்மயமாக்கல், சமூகநீதி என பல துறைகளில் உயர்த்திய அவரது தொலைநோக்கு பார்வையை போற்றுவோம்!
சுதந்திரப் போராட்டத்தில் ஒன்பது ஆண்டுகள் தியாகம் செய்த தேசியவாதியாக, 12,000 பள்ளிகளைத் திறந்து மதிய உணவுத் திட்டத்துடன் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட படிக்காத மேதையாக, அணைகள் கட்டி விவசாயத்திற்கு உயிர்நாடியாக, நெய்வேலி, திருச்சி பெல், மணலி ஆலைகள் என வேலைவாய்ப்பைப் பெருக்கிய ஏழைப் பங்காளராக, அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
#kamarajarbirthday #hbdkamarajar #kamarajar -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் திரு. முருகன் (வயது 36) அவர்கள், கடந்த 08.03.2024 அன்று காவல்துறையினரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூரச் சம்பவத்தின் போது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நேரில் சென்று குரல் கொடுத்து, முருகனின் படுகொலைக்கு நீதி கோரியது. ஆனால், இன்று வரை இந்த அநீதியைச் சரிசெய்ய எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
திரு. முருகனின் மனைவி திருமதி மீனா (வயது 33), குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்த கணவரை இழந்து, மூன்று குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக தினசரி 300 ரூபாய் கூலி வேலை செய்து வருகிறார். 2024 மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு மீனாவுக்கு மாதம் 12,000 ரூபாய் சம்பளத்துடன் அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
இருப்பினும், இதுவரை மீனாவுக்கு அரசு வேலை, இழப்பீடு அல்லது எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, திமுக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, திருமதி மீனாவுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட அரசு வேலை மற்றும் இழப்பீட்டை உடனே வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள அம்மாப்பாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள ராமசாமிபுரம் பகுதியின் கூமாபட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான மதிப்பிற்குரிய சகோதரர் திரு.சரத்குமார் @realsarathkumar என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருமை சகோதரர் திரு.சரத்குமார் அவர்கள் நீண்ட ஆயுளும், முழு ஆரோக்கியமும் பெற்று, தனது கலை மற்றும் பொதுச் சேவையை மேலும் சிறப்பாக தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று விருதுநகர் செய்தியாளர் சந்திப்பு
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய உச்ச நீதிமன்றம் முதன்முறையாக பதிவாளர்கள், தனி செயலாளர்கள், இளநிலை உதவியாளர்கள் போன்ற பதவிகளில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்.டி) சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 ஜூன் 23 முதல், எஸ்.சி-க்கு 15% மற்றும் எஸ்.டி-க்கு 7.5% இடஒதுக்கீடு, தரவு அடிப்படையிலான பட்டியல் முறையைப் பயன்படுத்தி, பதவி உயர்வுகளிலும் அமலாகிறது.
இந்த வரலாற்று சமூக நீதி சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக விளங்கிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், 2025 மே 14 அன்று இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று, பட்டியிலின சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதிகளில் ஒருவராக வரலாறு படைத்தார்.
இதுமட்டுமின்றி, பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன, இது பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இந்த மாபெரும் சீர்திருத்தங்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்! -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் CMS அரசு உதவிபெறும் மாணவர் விடுதியில், பணியாளர் பற்றாக்குறையால் மாணவர்களை கிணறு சுத்தம் செய்ய ஈடுபடுத்தியதில், மாணவன் சேர்மதுரை (வயது 13) தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
இது தொடர்பாக, விடுதி நிர்வாகத்தின் அலட்சியமும், திமுக அரசின் கல்வி நிறுவனங்களில் நிலவும் குறைகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தரமற்ற உணவு, பராமரிப்பின்மை, ஆசிரியர் மற்றும் பணியாளர் பற்றாக்குறை போன்றவை அரசுப் பள்ளிகளையும் விடுதிகளையும் பாதித்துள்ளன. இதற்கு மேலாக, சம்பவ இடத்தை ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மேலிட உத்தரவு காரணமெனவும் கூறப்படுகிறது, இது மேலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
இத்தகைய நிர்வாகக் குளறுபடிகளால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ₹15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின அவர்களை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய விசாரணையும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள M. கரிசல் குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள M. கரிசல் குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள பொன்னியெந்தல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தின் காரை குளம் கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள சா குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள வண்ணார வயல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
அங்கு, 1980களில் என்னுடன் சமூகப் பணியில் ஈடுபட்ட காந்தி மற்றும் கார்த்தி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினேன். -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள நீறந்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள பாப்பா மடை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து சென்னையில் நடந்த போராட்டத்தில், திருவண்ணாமலை தென்னம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. ஓவியர் பார்த்தசாரதி விபத்தில் உயிரிழந்தார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கோரிக்கைகள்:
1. அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்.
2. அவரது மனைவிக்கு அரசு வேலை.
3. பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்.
இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் -
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தின் நானா மடை கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவிருக்கும் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள சூராணம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று, ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தின் வடக்கு சாலை கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம், ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள உருவாருட்டி பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெற உள்ள 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தின் சாலை கிராமம் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் உள்ள மங்களம் பகுதியில், இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெறவிருக்கும் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் காட்டானுர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெறவிருக்கும் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் காட்டானுர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம், ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை மாவட்டத்தில் 1980களில் என்னுடன் பயணித்த ஆற்றல்மிக்க செயல் வீரர், அருமை சகோதரர் திரு. ராக்கமுத்து அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மேலும், அவரது மனைவியிடம் ஆறுதல் கூறினேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெறவுள்ள 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் முருக்கப்பட்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம், ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள எஸ். புதூர் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள எஸ். புதூர் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
ஜூலை 11, 2025, சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில் பகுதியில் வைக்க பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினேன்....
#maveeranalagumuthukone -
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடக்கவிருக்கும் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் சிறுமருதூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம், வரும் ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாட்டின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் காலாடி பச்சேரி பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்ட் 24 - ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ம் ஆண்டு வெள்ளி விழா, சமூக- சமத்துவ மாநாடு குறித்து; மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ம் ஆண்டு வெள்ளி விழா, சமூக- சமத்துவ மாநாடு குறித்து; மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம், காளாப்பூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை - சிங்கம்புணரி
ஜெஸ் ரீல் என்ற தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் அஸ்வந்த் அவர்களின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். சிறுவனின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு துணை நிற்பேன் என்று உறுதியளித்தேன். -
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி கணக்குகள் மாறுமா?
தமிழ் தடம் சேனலில் நான் அளித்த பேட்டியின் முழு காணொளி - youtu.be/KG6xS7obgCE
@tamilthadam2022This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், பனை குளத்தில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்பான வரவேற்பும், மனம் திறந்த கருத்துகளும் மிகவும் உற்சாகமளித்தன.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், கடச்சனேந்தலில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். மக்களின் அன்பான வரவேற்பும், அவர்களின் குறைகளைப் பகிர்ந்த விதமும் மனதை நெகிழச் செய்தது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், ஒத்தக்கடையில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்பான வரவேற்பும், மனம் திறந்த கருத்துகளும் மிகவும் உற்சாகமளித்தன.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், புது தாமரை பட்டியில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். மக்களின் அன்பான வரவேற்பும், அவர்களின் குறைகளைப் பகிர்ந்த விதமும் மனதைத் தொட்டது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், மீனாட்சி புரத்தில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்பான வரவேற்பும், மனம் திறந்த கருத்துகளும் மிகவும் உற்சாகமளித்தன.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், பெருமாள் பட்டியில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்பான வரவேற்பும், மனம் திறந்த கருத்துகளும் மிகவும் உற்சாகமளித்தன.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், தேர் குன்றம் பட்டியில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்பும், உற்சாகமான வரவேற்பும் மனதை நெகிழச் செய்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், கொண்ட முத்தூர் பட்டியில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். மக்களின் உற்சாகமான வரவேற்பும், அவர்களின் கோரிக்கைகளும் மனதை நெகிழ வைத்தன.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், பஞ்சந்த் தாங்கிப்பட்டியில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். மக்களின் அன்பான வரவேற்பும், அவர்களின் குறைகளைப் பகிர்ந்த விதமும் மனதைத் தொட்டது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், கடச்சனேந்தல் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்பான வரவேற்பும், மனம் திறந்த பேச்சும் மகிழ்ச்சியளித்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், மாயாண்டி பட்டியில் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்பும், உற்சாகமான வரவேற்பும் மனதை நெகிழச் செய்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை கிழக்கு மாவட்டம், அம்மாப்பட்டியில் மக்களைச் சந்தித்தேன். அவர்களின் குறைகளைக் கேட்டு, குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு பிரச்சினைகளை விவாதித்தோம்.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று, மதுரை மத்திய மற்றும் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கே. புதூர் பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று, மதுரை மத்திய மற்றும் கிழக்கு மாவட்டத்தில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மனதுக்கு மகிழ்ச்சி தந்தது. அவர்களின் அன்பான உரையாடலும், புன்னகையும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் பெண்களுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை சமீபத்திய கொடூர சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, 17 வயது சிறுமி மது போதையில் இருந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.
அதேபோல், வள்ளியூர் அருகே 71 வயது மூதாட்டி நகைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, ஆனால் குற்றவாளிகள் தண்டனையின்றி சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர். போதைப்பொருட்கள் எங்கும் எளிதாகக் கிடைப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை மேலும் தீவிரமாக்குகிறது.
காவல்துறையோ ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், மக்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்ய வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
எனவே, தமிழகத்தில் பெண்களுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு, சட்டம் ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
அடிச்சே கொல்ற அளவுக்கு என்ன தப்பு செய்தான் அஜித்? | John Pandiyan Exclusive | Ajith Lock up Death
பேசு தமிழா பேசு சேனலில் வெளியான எனது முழு காணொளி - youtu.be/x173NOhe0iM
@pesutamizhapesuThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
அஜித்குமாரை அடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
#justiceforajithkumar -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, மதுரை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அணக்கரை பட்டி பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று மதுரை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழுமலை பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்தது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, மதுரை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தும்ப நாயக்கன் பட்டி பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று, 08.07.2025, செவ்வாய்க்கிழமை அன்று மதுரை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடகரை பட்டியான் பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்தது
-
John Pandian
@JohnPandianTMMK
08.07.2025, செவ்வாய்க்கிழமை அன்று மதுரை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டாரி பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று மதுரை புறநகர் மாவட்டத்திலுள்ள கீழ்ப்பாட்டி பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மனதிற்கு பெரும் மகிழ்ச்சி.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் மதுரை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கே.புதுப்பட்டி பகுதியில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்றைய தினம் மதுரை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சின்ன லொட்டு பட்டி கிராமத்தில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நிகிதாவின் Background என்ன என்பதை விசாரிக்க வேண்டும்.
#justiceforajithkumarThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நிகிதாவை ஏன் கைது பண்ணல?
#justiceforajithkumar -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தென்காசி தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மனதிற்கு அளவிலா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தென்காசி தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்தது.
அங்குள்ள மக்களுடன் நிகழ்ந்த இதயப்பூர்வமான உரையாடல்களும், அவர்களின் அன்பான வரவேற்பும், உள்ளார்ந்த விருந்தோம்பலும் மனதை நெகிழச் செய்தன. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தென்காசி தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மனதிற்கு அளவிலா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தென்காசி தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கடையநல்லூர் கிராமத்தில் மக்களைச் சந்தித்த சுற்றுப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தென்காசி தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளியம்மாள் புரம் கிராமத்தில் மக்களைச் சந்தித்தது மனதிற்கு அளவிலா மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்று தென்காசி தெற்கு மாவட்டத்திலுள்ள கீழ இலஞ்சி கிராம மக்களைச் சந்தித்தது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தென்காசி தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள இலஞ்சி கிராமத்தில் வசிக்கும் மக்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது. அவர்களுடனான உரையாடலும், அன்பான வரவேற்பும் மனதை நெகிழ வைத்தன.
-
John Pandian
@JohnPandianTMMK
கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் பிறருக்கு உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, தென்காசி மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம் பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடிய தருணங்கள், மனதில் நெகிழவை ஏற்படுத்தியது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று, தென்காசி தெற்கு மாவட்டத்தின் கடப்போகத்தி கிராமத்தில் மக்களுடன் நேருக்கு நேர் உரையாடிய தருணம், இதயம் நிறைந்த மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தந்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று, தென்காசி தெற்கு மாவட்டத்தின் மேலபாவூர் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று, தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று தென்காசி மாவட்டம் கீழச்சரண்டை பகுதி பொது மக்களை சந்தித்து உரையாடிய போது..
தென்காசி பகுதி மக்களை நேரடியாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நாய் மாதிரி குதறி வச்சுருக்கீங்க! நிகிதாவ கைது பண்ணனும்.. | இளைய பாரதம் சேனலில் எனது நேர்காணல்.
Full Video Link 🔗youtu.be/UfmF4ZG6AF0This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நாளிதழல் இன்று!
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும். -
John Pandian
@JohnPandianTMMK
திருவாரூர் தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்ததாகவும், ஆடுகள் மற்றும் கோழிகள் உயிரிழந்ததாகவும் அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
#tiruvarurfireaccidentThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் (06.07.2025) அன்று எனது தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் முன்னிலையிலும் திருநெல்வேலி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். -
John Pandian
@JohnPandianTMMK
MS தோனிக்கு 44வது பிறந்தநாள் வாழ்த்துகள்! 🏏
கிரிக்கெட்டின் உலகின் ஜாம்பவான், அவரது அமைதியான தலைமையும், ஒப்பற்ற "Finishing"ம் இந்திய கிரிக்கெட்டை புரட்சிகரமாக மாற்றியுள்ளன. ‘Captain Cool’ என்ற அவரது புகழ் உலகளவில் பல தலைமுறைகளை கடந்து நிற்கும்.
#happybirthdaymsdhoni -
John Pandian
@JohnPandianTMMK
திண்டுக்கலில், ஆகஸ்ட் 24 -ம் தேதி அன்று நடைபெறும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் "சமூக சமத்துவ மாநில மாநாடு" குறித்து திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பு!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
புனித முஹரம் மாதத்தில், இஸ்லாமிய நண்பர்களுக்கு மன அமைதி, குடும்ப ஒற்றுமை மற்றும் இறையருள் நிறைந்த வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! இந்த மாதம் உங்கள் இதயங்களில் அன்பையும், சமூகத்தில் சகோதரத்துவத்தையும் வளர்க்கட்டும்.
முஹரம் வாழ்த்துக்கள்!
#muharram #muharram2025 -
John Pandian
@JohnPandianTMMK
அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது. அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிதில் பெருமை கொள்கிறேன்.
#armstrongmemorialdayThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று சென்னை பெத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்றேன்.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாபெரும் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங். அவரது மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு.
அவரது மரணத்திற்கு இன்னும் நீதி கிடைக்காதது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்கும். அவரது மறைவுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதே உண்மையான அஞ்சலியாகும். -
John Pandian
@JohnPandianTMMK
சென்னை - பெத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்று, செய்தியாளர்களை சந்தித்தபோது.
#armstrong #armstrongmemorialday #pressmeet -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், சமூக நீதிக்காக அயராது பாடுபட்டவருமான அமரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நாம் நினைவுகூர்கிறோம்.
அவரது அம்பேத்கரிய பார்வையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க பணிகளும் என்றென்றும் நம் நினைவில் இருக்கும். -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று வாசுதேவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட புளியங்குடி, வாசுதேவநல்லூர், அருளாச்சி, வேலாயுதபுரம், தளவாய்புரம், இராயகிரி, மேல கரிசல் குளம், துரைச்சாமி ஆகிய கிராமங்களின் மக்களைச் சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்று வாசுதேவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட புளியங்குடி, வாசுதேவநல்லூர், அருளாச்சி, வேலாயுதபுரம், தளவாய்புரம், இராயகிரி, மேல கரிசல் குளம், துரைச்சாமி ஆகிய கிராமங்களின் மக்களைச் சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர்களின் அன்பு, விருந்தோம்பல் மற்றும் உற்சாகமான பங்களிப்பு இந்த சந்திப்பை மறக்க முடியாத நினைவாக்கியது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று, சங்கரன்கோவிலில் உள்ள பாம்ப கோவில் சந்தையில் உள்ளூர் மக்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்களின் அன்றாட வாழ்க்கை, பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைத் தெரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமைந்தது.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று சங்கரன்கோவிலில் உள்ள வடநத்தம் பட்டியில் உள்ளூர் மக்களைச் சந்தித்தேன். அவர்களுடன் உரையாடி, அவர்களின் அன்றாட வாழ்க்கை, பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று சங்கரன்கோவில், நாலுவசன் கோட்டை பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தேன். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடனிருந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு கட்சியின் வளர்ச்சியிலும், மக்கள் நலப்பணிகளை மேலும் தீவிரப்படுத்துவதிலும் முக்கியமான மைல்கல்லாக அமையும். -
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை திருப்புவனம் வழக்கில் பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்தாரை இன்று நேரில் சந்தித்து, எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்தேன். இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய நிகிதா இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை? இவரை இயக்கியவர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும். திமுக அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. இனி இது போன்ற அநீதிகள் தமிழகத்தில் நடக்கவே கூடாது.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! மக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்.
#justiceforajithkumar #nationwithajithThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ராமநாதபுரம், சித்திரங்குடியில் மாற்றுத்திறனாளியான தங்கவேலின் கையை காவலர் லிங்கசாமி உடைத்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கால் இழந்தவரைப் போதையில் தாக்கிய இந்த அராஜகம், திமுக அரசின் காவல் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துகிறது.
சம்பந்தப்பட்ட காவலர் மீது உடனடி நடவடிக்கையும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடும், மருத்துவ உதவியும் வழங்க வேண்டுமெனவும், காவல்துறையில் தொடர்ந்து நடைபெறும் அதிகார அத்துமீறல்களைத் தடுக்கும் வகையில் சீர்திருத்தங்கள் அவசியமெனவும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதாக இல்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நிகழும் விபத்துகளைத் தடுக்க, பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தென்தமிழகத்தின் முக்கியப் பகுதிகளான பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 87-ல், சுமார் 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக ₹1,853 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் திட்டம், தென்தமிழக மக்களின் பயண வசதியை மேம்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் பெரிதும் உதவும். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, இத்தகைய மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவளித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசுக்கு எங்களது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இளைஞரணி தலைவர் மற்றும் அன்பு மகன் திரு. வியங்கோ பாண்டியன் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையில் நீடித்த ஆரோக்கியம், அபரிமிதமான செல்வம் மற்றும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
மனித உயிர்களைக் காப்பாற்றும் உயர்ந்த பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, இரவு பகல் பாராமல் அயராது உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்!
தங்கள் அறிவு, திறமை, பொறுமை மற்றும் மனிதநேயத்தால் நோயாளிகளுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் விளங்கி, சமுதாயத்திற்கு புது வாழ்வு அளிக்கும் உங்கள் தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவு கூரப்படும்.
உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றியுடன், உங்கள் பணி மேலும் சிறந்து, சமுதாயத்திற்கு ஒளியேற்றி, பெருமையுடன் தொடர வாழ்த்துக்கள்! -
John Pandian
@JohnPandianTMMK
விசாரணை என்ற பெயரில் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் காவல் மரணங்களை வன்மையாக கண்டிப்பதோடு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் உண்மையான இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#justiceforajithkumar | #nationwithajithThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியரான திரு. அஜித்குமார், காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, ஏழு காவலர்களால் இரண்டு நாட்களாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை எழுப்புவதோடு, திமுக ஆட்சியில் காவல்நிலையங்களின் பாதுகாப்பற்ற நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
திமுக ஆட்சியில், காவல் நிலையங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடமாக இல்லாமல், அச்சத்தையும் அநீதியையும் விளைவிக்கும் இடமாக மாறியுள்ளது. மேலும், லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இவை தமிழக மக்களின் மனதில் காவல்துறையின் மீதான நம்பிக்கையை முற்றிலும் தகர்க்கின்றன.
மக்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய காவல்துறை, மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம். -
John Pandian reposted
Dr. Vinolin Nivetha
@vinolinnivetha
அமர் சேவா சங்கத்தின் ஊழியர்களுக்கான ஆண்டு விழா 2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு ஊழியர்களின் ஒன்றுகூடலுக்கும், அவர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். முக்கிய விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நிகழ்வின் தருணங்கள் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில், ஊழியர்கள் புத்துணர்ச்சியுடன் பங்கேற்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி, மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவியது. அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது. ஊழியர்கள் அனைவரும் நிகழ்வையும், அங்கு நிலவிய சூழலையும் வெகுவாக ரசித்தனர். இது அவர்களிடையே ஒருவித சகோதரத்துவத்தையும், கூட்டு உணர்வையும் வளர்த்தது.
அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் தலைவர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், ஊக்குவிப்பாளர் இணைத் தலைவர் செயலாளர் திரு. எஸ். சங்கரராமன், திருமதி லோகேஸ்வரி சந்திரசேஷன் சியான் மீடியா சென்னை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு குழந்தைகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், நடன நிகழ்ச்சிகளையும் நடத்தினர். பெற்றோர்கள், சிறப்பு கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அமர் சேவா சங்கம், மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனம் என்பதை இந்த நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை பறைசாற்றின. மேலும் தடம் பவுண்டேஷன் தொடர்ந்து அவர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@amarseva @JohnPandianTMMK -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி அரசு மாதிரிப்பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் மற்றும் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக எழுந்த புகார் மிகுந்த அதிர்ச்சியும் கண்டனத்திற்கும் உரியது. பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உள்ளது. மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, இதுபோன்ற அலட்சியப் போக்கை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது கவலையளிக்கிறது.
திமுக அரசு வெறும் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், பள்ளிகளில் உணவு தரத்தை உறுதி செய்யவும், புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது போன்ற அவலங்களைத் தடுக்க, பொறுப்பான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களின் உடல்நலத்துடன் விளையாடும் இத்தகைய அலட்சியப் போக்கிற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துகிறோம் -
John Pandian
@JohnPandianTMMK
வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் திரு. ராஜ கண்ணப்பன் அவர்களின் "மனிதர்களை மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்" என்ற அலட்சியப் பேச்சு, ஆளும் அரசின் மக்கள் நலனில் உள்ள அக்கறையின்மையை அம்பலப்படுத்துகிறது.
வனவிலங்கு தாக்குதல்களால் மக்கள் உயிரிழப்பதை இயல்பாகக் கருதும் இவரது பொறுப்பற்ற தன்மை, அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த அரசு, இப்போது மக்களின் உயிருக்கு மதிப்பில்லாமல் பேசுகிறது.
இந்த அலட்சியம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது! அரசு உடனடியாக வனவிலங்கு தாக்குதல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறும் இந்த அரசுக்கு எதிராக மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை திமுகவினர் மறந்து விட வேண்டாம். -
John Pandian
@JohnPandianTMMK
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மறைந்த திரு.கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் எதிர்வரும் 05-07-2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான அழைப்பிதழை திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வழங்கினார்.
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் பரிதாப நிலைக்கு திமுக அரசின் அலட்சியமும், மெத்தனமும் முழு காரணம்! கடந்த நான்கு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 20% சரிந்து, 2021-22ல் 95,013 ஆக இருந்து 2024-25ல் 76,300 ஆகக் குறைந்துள்ளது.
உள்கட்டமைப்பு பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவை ஆதிதிராவிட மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கின்றன. 33 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லை, 1177 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஆதிதிராவிட சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது.
ஆதிதிராவிட சமுதாயத்தின் கல்வி உரிமையைப் பறிக்கும் இந்த திமுக ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்! மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்க, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய மண்ணின் மைந்தன் கேப்டன் சுபான்ஷு சுக்லா, SpaceX டிராகன் விண்கலத்தில் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் நான்காவது பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளுக்கு வானில் புதிய பறவையாக உயர்ந்திருக்கிறார்.
கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் இந்த விண்ணைத் தொடும் பயணம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் பெருமிதத்தை நிறைக்கிறது. இந்தியாவின் வலிமையையும், விடாமுயற்சியையும் உலகறியச் செய்யும் இந்த வரலாற்று தருணத்தில், நாம் அனைவரும் தலைநிமிர்ந்து, "ஜெய் ஹிந்த்!" என்று முழங்குவோம்.
வாழ்த்துகள், கேப்டன்! -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி, கங்கைகொண்டான் அருகே துறையூரில் சிப்காட் தொழிற்சாலைகளால் நீர், காற்று, ஒலி மாசு ஏற்பட்டு 500 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கங்கைகொண்டான் குளத்தில் கலப்பதால் மீன்கள் அழிந்து, விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பறிக்கிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் இப்பிரச்சனையை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், பணிகள் முடிவடையாத ஒரு தொழிற்சாலைக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் மற்றும் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளை கண்காணிக்காமல், முறைகேடுகளை தடுக்காமல், மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது ஏற்க முடியாது. உடனடியாக முறைகேடாக வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்து, பொறுப்பான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சீரமைத்து, மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரை உலகின் பிரபல நடிகருமான அன்பு சகோதரர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவர் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
அஇஅதிமுகவைச் சேர்ந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. T.K. அமுல் கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.
2021-ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வால்பாறை தொகுதி மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக உறுதியாக குரல் கொடுத்தார். ஆழியாறு அணை, குரங்கு அருவி, டாப்ஸ்லிப் போன்ற சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி, தொகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உழைத்தார்.
மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி. -
John Pandian
@JohnPandianTMMK
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய யோகா தின வாழ்த்துக்கள்!
யோகா பயிற்சியின் ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு ஆசனமும் நம்மை இயற்கையோடு இணைக்கிறது, நம்மை நாமே மீண்டும் கண்டறிய உதவுகிறது. இந்த யோகா தினத்தில், நம் உடல் மன ஆன்மாவை புதுப்பிக்கும் இந்தப் பயணத்தில் இணைவோம்.
யோகாவை நம் வாழ்க்கையின் அங்கமாக்கி, மன அழுத்தத்தை விடுவித்து, உள்ளத்தில் தெளிவையும் உடலில் பலத்தையும் பெறுவோம்.
#internationalyogaday2025 -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய குடியரசுத் தலைவர் மாண்புமிகு திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருமதி திரௌபதி முர்மு அவர்கள், இந்தியாவின் முதல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவராக வரலாறு படைத்தவர். வறுமையான பின்னணியில் இருந்து உயர்ந்து, தனது கடின உழைப்பு, அசைக்க முடியாத உறுதி மற்றும் மக்களுக்காகப் பணியாற்றும் அர்ப்பணிப்பால் இந்த உயரிய பதவியை அடைந்தவர். அவரது வாழ்க்கைப் பயணம், எளிய தொடக்கத்தில் இருந்து உச்சத்தை அடைய முடியும் என்பதற்கு உத்வேகமளிக்கும் உதாரணமாக விளங்குகிறது.
இந்த சிறப்பான பிறந்தநாளில், அவரது ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் நாட்டிற்கு தொடர்ந்து வழிகாட்டும் பணியில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
#draupadimurmu -
John Pandian
@JohnPandianTMMK
திமுக ஆட்சியால் அதிகரித்த ரவுடிசம்!
ஊழல் இல்லாத ஒரே பிரதமர் மோடி..
Full video Link 🔗 youtu.be/aKaIlW2rykwThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஆகஸ்ட் 15, 2025 முதல், மத்திய அரசு, ₹3,000 மதிப்பிலான ஆண்டு டோல் பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. FASTag மூலம் இயங்கும் இந்தத் திட்டம், கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்கள் ஆண்டுக்கு 200 பயணங்கள் அல்லது ஒரு வருடம் வரை டோல் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும். இது பயணச் செலவையும், டோல் கேட்களில் காத்திருக்கும் நேரத்தையும் குறைத்து, வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி அளிக்கும்.
இந்த மகிழ்ச்சியளிக்கும் முடிவிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#fastagrules -
John Pandian
@JohnPandianTMMK
ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளில், அவரது எளிமையான வாழ்க்கை முறையையும், சமூக நீதிக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளையும், அவரது தியாக உணர்வையும் நெஞ்சில் நினைவு கூர்கிறோம்.
அரசியலை மக்களுக்குச் சேவை செய்யும் புனிதப் பணியாகக் கருதி, நேர்மையின் அடையாளமாக விளங்கிய அவரது வாழ்க்கை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாகத் திகழ்கிறது. ஆலய நுழைவுப் போராட்டத்தில் முன்னோடியாக இருந்து, சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றி, மக்களின் நலனுக்காக அயராது உழைத்தவர். ஐயா கக்கனின் தன்னலமற்ற சேவையும், சமத்துவத்திற்காக அவர் முன்னெடுத்த போராட்டங்களும் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அவரது புகழ் என்றென்றும் நிலைத்து, நமது இதயங்களில் ஒளி வீசும்! -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக விவசாயிகளுக்கு எதிரான திமுக அரசின் அநீதிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய திமுக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களுக்கு எதிராக அநீதி, அடக்குமுறை, மற்றும் வாக்குறுதி மீறல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. விவசாயிகளின் உரிமைகளையும் உழைப்பையும் மதிக்காமல், அவர்களை ஏமாற்றி, அடக்கி, புறக்கணிக்கும் இந்த அரசின் செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை! இத்தகைய கொடுமைகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது!
பொய்யான தேர்தல் வாக்குறுதிகள்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது, நெல் மற்றும் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவோம் என்று உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது விவசாயிகளின் நம்பிக்கையை மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரத்தையே கேலிக்கூத்தாக்கிய துரோகச் செயல்! மேலும், வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு + 50% ஆதரவு விலை வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம்.
தங்கள் விளைநிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை விவசாயிகள் மீது திமுக அரசு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தது. இது விவசாயிகளுக்கு எதிரான வன்முறையான அடக்குமுறையாகும். இத்தகைய கொடுமைகள், விவசாயிகளை குற்றவாளிகளாக மாற்றி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்கும் இந்த அரசின் ஆணவத்தை வெளிப்படுத்துகின்றன.
தஞ்சாவூர் விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறை.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு திமுக அரசு செவிசாய்க்கவில்லை. மாறாக, முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த முயன்ற விவசாயிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து, ஜனநாயக உரிமைகளை மீறியுள்ளது. இது விவசாயிகளின் நியாயமான போராட்டங்களை அடக்குவதற்கு இந்த அரசு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதை காட்டுகிறது.
பனங்குடி விவசாயிகளின் நிலங்களைப் பறித்தல்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) திட்டத்திற்காக பனங்குடி விவசாயிகளின் விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து, உரிய இழப்பீடு வழங்காமல் அவர்களை வஞ்சித்துள்ளது திமுக அரசு.
இதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளை கைது செய்து, அவர்களின் உரிமைகளை மறுத்து, இந்த அரசு கொடுங்கோன்மையில் ஈடுபட்டுள்ளது.
பெருமாநல்லூர் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு.
தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பெருமாநல்லூர் விவசாயிகள் மீது திமுக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது, விவசாயிகளுக்கு எதிரான இந்த அரசின் மிக மோசமான அடக்குமுறையாக பதிவாகியுள்ளது. இது விவசாயிகளின் உயிருக்கே உலை வைக்கும் கொடூரச் செயலாகும்.
நெல் கொள்முதல் மையங்களில் அலட்சியம்.
அறுவடை செய்யப்பட்ட நெல், கொள்முதல் நிலையங்களில் மழைநீரில் வீணாக்கப்பட்டு, விவசாயிகளின் உழைப்பை திமுக அரசு புறக்கணித்துள்ளது. இது விவசாயிகளின் உற்பத்தியை மதிக்காத அரசின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துகிறது.
கடன் விதிமுறைகளால் விவசாயிகளுக்கு தடை.
வேளாண்மைக்கு கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, விவசாயிகளை கடனில்லாமல் தவிக்க வைத்துள்ளது திமுக அரசு. இதனால், பல விவசாயிகள் வேளாண்மையை கைவிடும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயத்தை அழிக்கும் திமுகவின் மறைமுகத் திட்டமாகவே தெரிகிறது.
விவசாயிகளின் உழைப்பையும் உரிமைகளையும் மதிக்காமல், அவர்களை அடக்கி, ஏமாற்றி, அநீதி இழைக்கும் திமுக அரசின் இந்த செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை.
இந்த அரசு உடனடியாக பின்வருவனவற்றை செய்ய வேண்டும்,
விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை நிறைவேற்ற வேண்டும்.
நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிரான குண்டர் சட்டம், கைது உள்ளிட்ட அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்.
விளைநிலங்களை வலுக்கட்டாயமாக பறிப்பதை நிறுத்தி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
நெல் கொள்முதல் மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
விவசாயிகளின் குரலை ஒடுக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திமுக அரசின் இந்த அநீதிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தமிழக விவசாயிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழகம் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்! -
John Pandian
@JohnPandianTMMK
2025 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET) தேர்வில் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 27ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் சூரிய நாராயணன் அவர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! இவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான திறமையின் மூலம் பெற்ற இந்த அபார வெற்றி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு மாபெரும் சாதனையாகும்.
சூரிய நாராயணனின் இந்த சிறப்புமிக்க மைல்கல், கல்வியில் உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்று கனவு காணும் இளம் மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும். இவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், மருத்துவத் துறையில் சேவையாற்ற வேண்டும் என்ற உயரிய குறிக்கோளும், அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
என்றும் உயர்ந்து ஜொலிக்க வாழ்த்துகிறேன்.
#neet #nellaistudent -
John Pandian
@JohnPandianTMMK
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தின் ஆறு மாணவச் செல்வங்கள் முதல் 100 இடங்களுக்குள் புகழ்பெற்று, நம் மண்ணின் கல்வி வலிமையை உலகறியச் செய்திருக்கின்றனர். இது தமிழகத்தின் பெருமைக்குரிய தருணம்!
வெற்றி பெற்ற அனைத்து மாணவப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, அவர்களது பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். தமிழகத்தின் எதிர்காலம் இவர்களின் கைகளில் பிரகாசமாக ஒளிரட்டும்!
#neet -
John Pandian
@JohnPandianTMMK
கொல்லங்குடி கருப்பாயி அம்மா, நாட்டுப்புற பாடல்களின் முன்னோடியும், தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத கலைஞருமானவர், வயது மூப்பால் காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களைப் பாடி, தமிழ்க் கலாசாரத்தை வளப்படுத்தியவர், கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர்.
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா அமைதி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி! -
John Pandian
@JohnPandianTMMK
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் சுமார் 825 அடி உயரத்தை எட்டியதும் கீழே விழுந்து விபத்துக்குள்ளான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம் அடைந்துள்ள நிலையில், விடுதி அறையில் உள்ள பல மருத்துவ மாணவர்கள் காயமடைந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, காயமடைந்தவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என நம்புகிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையில் இருப்பவர்கள் விரைந்து நலம் பெற விரும்புகிறேன்.
#gujarat #airindia #boeing737 #ahemadabadflightcrash #maydayThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, மட்டுமல்லாமல் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்துசமய அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும், திருக்கோவிலில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே இராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு இரும்பு கம்பி வேலிகள் அமைத்து அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தரிசனம் செய்ய வருபவர்கள் மனதில் முழு மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும்.இது போன்ற விரோத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறான செயல்கள் நீடிக்காதவாறு இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @PKSekarbabu -
John Pandian
@JohnPandianTMMK
இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரித்து மகிழ்ச்சியாக வாழ, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
#eidmubarak #eidaladha #bakrid2025 #bakridmubarak -
John Pandian
@JohnPandianTMMK
ஐபிஎல் 2025 IPL - Indian Premier League வெற்றிக்குப் பிறகு பெங்களூரில் 04.06.2025 அன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிறுமி உட்பட 13பேர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இதேபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாத வகையில், மக்களின் பாதுகாப்பே முதன்மை என்பதை கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில அரசு கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
@CMofKarnataka @siddaramaiah #ipl2025 #royalchallengersbangalore -
John Pandian
@JohnPandianTMMK
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்வில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், என்றைக்கும் நலமுடன் வாழவும், தொடர்ந்து மக்கள் பணியாற்ற என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@annamalai_k @BJP4India @BJP4TamilNadu -
John Pandian
@JohnPandianTMMK
திருப்பூர் தெற்கு மாவட்டம், தாராபுரம் - பூளவாடி, வல்லகுண்டாபுரம் பகுதியில் 02.06.2025 இன்று கிராம மக்களை நேரில் சந்தித்தேன். பின்னர், கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிறகு, ஆகஸ்ட் 24 -ம் தேதி அன்று திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள "சமூக சமத்துவ மாநாடு" குறித்து எடுத்துரைத்து மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
உடன்,மாவட்ட, ஒன்றிய,நகர,கிளை கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
#சமூகசமத்துவமாநாடு -
John Pandian
@JohnPandianTMMK
திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலைப்பேட்டை - கள்ளப்புரம் ஊராட்சி, மயிலாடும்பாறை பகுதியில் 01.06.2025 அன்று கிராம மக்களை நேரில் சந்தித்தேன். பின்னர், கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிறகு, ஆகஸ்ட் 24 -ம் தேதி அன்று திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள "சமூக சமத்துவ மாநாடு" குறித்து எடுத்துரைத்து மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
உடன்,மாவட்ட, ஒன்றிய,நகர,கிளை கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
#சமூகசமத்துவமாநாடு -
John Pandian
@JohnPandianTMMK
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு 30-ஆண்டுகள் சிறை தண்டனை – சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!
-----------------------------------------------------
தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது, இது மிகுந்த வரவேற்புக்குரியது. மேலும், தலைவர்களின் பிறந்த நாள்கள் உள்ளிட்ட தருணங்களை பயன்படுத்தி அவர்களின் தண்டனைக் காலத்தைக் குறைக்கக் கூடாது என்றும் நீதிபதி அவர்கள் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
பெண்களின் உரிமைக்கும் - சுதந்திரத்திற்கும் உரிய மதிப்பளிக்காமல் அவர்களை போதைப் பொருட்களாக மட்டுமே பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைவில் தண்டனை நிச்சயம். மேலும் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கியதை நன்றி கூறி வரவேற்கிறேன்.
குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை, தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், தமிழகத்தில் தினந்தோறும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கான இழப்பீடாக குற்றவாளி செலுத்தும் ரூ.90 ஆயிரம் அபராதத்தை வழங்கும்படி நீதிமன்றம் கூறியுள்ளது. இது போதுமானது அல்ல.பாதிக்கப்பட்ட மாணவிக்கு குறைந்தது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @tnpoliceoffl -
John Pandian
@JohnPandianTMMK
தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான மருத்துவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகிறேன்.
@DrTamilisai4BJP @BJP4TamilNadu -
John Pandian
@JohnPandianTMMK
இன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநர் திரு.CP.ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.
@CPRGuv @NainarBJP @BJP4TamilNadu @annamalai_k @Murugan_MoS -
John Pandian
@JohnPandianTMMK
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த துயரமான சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரே குற்றவாளி என அறிவித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் மிகக் கடுமையாக கொடுக்கப்பட வேண்டும். -
John Pandian
@JohnPandianTMMK
1200 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்தின் வரலாற்றில், சென்னையைச் சேர்ந்த முதல் தமிழர் பெண்மணியாக, துணை மேயராக மீண்டும் பதவியேற்கும் அரிய பெருமையைப் பெற்றிருக்கும் மாண்புமிகு டாக்டர் திருமதி. மோனிகா தேவேந்திரன் அவர்களுக்கு, என் உள்ளம் கனிந்த, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
தங்களின் தூய சேவையும், உறுதியான தலைமையும் இங்கிலாந்து மக்களின் வாழ்வில் புதிய புரட்சியை உருவாக்குவதோடு, உலகத் தமிழ்ச் சமூகத்திற்கு மாண்பு சேர்க்கிறது. இந்த உயரிய பதவியில், தங்களின் ஞானமும், திறனும், அர்ப்பணிப்பும் மேலும் பல உன்னத புரட்சிகளைப் படைக்கும் என உறுதியாக நம்புகிறேன்!
தமிழர் பெருமையை உலகறியச் செய்யும் தங்களின் பயணம் என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன்!
#drmonicadevendran -
John Pandian
@JohnPandianTMMK
கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதியின் உறுதியை நிலைநாட்டியுள்ளது.
2019-ல் தமிழகத்தை அதிரவைத்த இந்த வழக்கில், ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் தைரியமான சாட்சியங்கள் மற்றும் சிபிஐயின் வலுவான ஆதாரங்கள் இந்த தீர்ப்பை சாத்தியமாக்கியுள்ளன.
நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ₹85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியதோடு, சமூகத்தில் இத்தகைய கொடிய குற்றங்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. நமது நீதித்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையை மனதார பாராட்டுவோம்.
நீதி வென்றது!
#pollachicase -
John Pandian
@JohnPandianTMMK
மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் தெய்வீக வைபவம், இன்று பக்தர்களின் அளப்பரிய ஆரவாரத்துடன், பச்சைப் பட்டணிந்து, அழகர் பெருமான் வைகையில் இறங்கிய காட்சி, கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. இந்தப் புனித நிகழ்வு, தமிழகத்தின் கலாச்சார பெருமையை உலகறியச் செய்திருக்கிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும், அழகர் பெருமானின் அருளாசிகள் கிடைக்கட்டும். நமது மாநிலம் செழிப்புடனும், சமாதானத்துடனும், வளமுடனும் திகழ, அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம். இத்திருவிழா, நமது பண்பாட்டு ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்!
#chithiraithiruvizha2025 | #kallazhagar | #alagarkovil -
John Pandian
@JohnPandianTMMK
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான திரு. எடப்பாடி பழனிசாமி @EPSTamilNadu இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் அர்ப்பணிப்பு மிக்க மக்கள் பணிகள் தொடரவும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வெற்றி மற்றும் மகிழ்ச்சி வாழ்க்கையில் நிறையட்டும் என்று வேண்டுகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
இந்த புனிதமான அன்னையர் தினத்தில், நம் அனைவரின் வாழ்வையும் ஒளிரச் செய்யும் அன்னை தெய்வங்களுக்கு என் உளமார்ந்த நன்றி வணக்கங்கள்!
இந்த அன்னையர் தினத்தில், ஒவ்வொரு அன்னையையும் கௌரவித்து, அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அன்னையர் தின வாழ்த்துக்கள்!
#happymothersday2025 -
John Pandian
@JohnPandianTMMK
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நன்னாளில், வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப் பயணத்தில் பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் உங்களின் கனவுகளை நனவாக்கி, நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
தோல்வியை சந்தித்த மாணவர்களுக்கு, இது முடிவல்ல; ஒரு புதிய தொடக்கம்! உங்கள் திறமையும் முயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தைரியத்துடன் முன்னேறுங்கள்; எங்களின் ஆதரவும் அறுதலும் எப்போதும் உங்களுடன் உள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
#tnstudents #examresults2025 -
John Pandian
@JohnPandianTMMK
"Operation Sindoor" மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியை வெளிப்படுத்தியுள்ளது நமது இந்திய அரசு மற்றும் ராணுவம்.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக அழித்து, தேசத்தின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்தியுள்ளன. மக்களின் நம்பிக்கையை பலப்படுத்திய இந்த வெற்றிக்கு, இந்திய ராணுவத்திற்கும், மாண்புமிகு பிரதமர் திரு. மோடி @narendramodi அவர்கள் அரசின் தொலைநோக்கு தலைமைக்கும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@PMOIndia @AmitShah
#operationsindoor | #pahalgamterroristattack -
John Pandian
@JohnPandianTMMK
சுரண்டை நகராட்சித் தலைவரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
பட்டியல் சாதியைச் சேர்ந்த முத்துசெல்வி என்ற தொழிலாளிப் பெண்ணின் மாட்டு இறைச்சிக் கடையை, எந்தவொரு நியாயமும் இன்றி குறி வைத்து அகற்றியது, மனிதாபிமானமற்ற, அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்!
அவரது தள்ளுவண்டிகளையும், சமையல் பொருட்களையும் பறிமுதல் செய்து, ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வாதாரத்தைப் பறித்தது, சமூகநீதிக்கு எதிரான கடுமையான செயல்! நகராட்சித் தலைவர் வள்ளி முருகன், குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், கடைக்கு அனுமதி அளித்ததாகக் கூறி தப்பிக்க முயல்வது ஏற்புடையதல்ல! உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, முத்துசெல்விக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்!This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு, குறிப்பாக தமிழகத்தின் 1.5 லட்சம் மாணவர்களுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இந்தத் தேர்வு உங்கள் எதிர்கால மருத்துவக் கனவுகளை நனவாக்குவதற்கு ஒரு முக்கியமான படிக்கல். உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் தன்னம்பிக்கையுடன் இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் காத்திருக்கிறது. பயம் மற்றும் பதற்றத்தைத் தவிர்த்து, தெளிவான மனதுடனும், தைரியத்துடனும் தேர்வை எழுதுங்கள் உங்கள் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் வெற்றியைத் தேடித் தரும்.
உங்கள் மருத்துவக் கனவுகள் நனவாக வாழ்த்துகிறேன்!
#neet -
John Pandian
@JohnPandianTMMK
உலக பத்திரிகை சுதந்திர தின வாழ்த்துக்கள்!
துணிச்சலான பத்திரிகையாளர்களே, உண்மையை உயர்த்திப் பிடிக்கும் உங்கள் அசாதாரண தைரியமும், அர்ப்பணிப்பும் நாட்டின் நடக்கும் பலவற்றை சரி செய்ய உதவுகிறது. பல எதிர்ப்புகளை மீறி, உங்கள் பேனா என்றும் உண்மைக்காக எழுதட்டும்.
தொடர்ந்து பயணியுங்கள்!
#worldpressfreedomday -
John Pandian
@JohnPandianTMMK
நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
இந்த உலக தொழிலாளர்கள் தினத்தில், உங்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றுகிறோம். உங்களின் கடின உழைப்புக்கு நியாயமான பலன்களும், கண்ணியமான வாழ்வும் கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
#labourday2025 -
John Pandian
@JohnPandianTMMK
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாகும். பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, சமூகநீதியை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும்.
சுதந்திரத்திற்குப் பின் பல அரசுகள் இத்தகைய முயற்சியை முழுமையாக முன்னெடுக்கவில்லை என்றாலும், தற்போது மோடி அரசு இந்தப் பொறுப்பை ஏற்று, சமூகநீதிக்கு உறுதியான அடித்தளம் அமைக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த முயற்சிக்காக மத்திய அரசுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யவும் வழிவகுக்கும் என நம்புகிறோம்.
#castecensus -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆறு நாட்களில் நிகழ்ந்த ஆறு கொலைச் சம்பவங்களில் ஐந்து கொலைகளுக்கு டாஸ்மாக் மதுபானமே முக்கிய காரணமாக உள்ளது. மது தொடர்பான மோதல்களால் குழந்தைகள் உட்பட அப்பாவி உயிர்கள் பறிக்கப்படும் கொடூரங்கள், திமுக அரசின் மதுக் கொள்கையின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன.
இச்சம்பவங்களில் ஒன்றில், இரண்டு வயது குழந்தைக்கு மது கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடுமையும் அரங்கேறியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மது விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மதுவின் தாக்கத்தால் குற்றச் சம்பவங்கள் பெருகுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு உடனடியாக மது விற்பனையைக் கட்டுப்படுத்தி, மக்களின் உயிர்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய கொடிய சம்பவங்களுக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்து, அரசு பொறுப்புணர்ந்து செயல்பட வலியுறுத்துகிறோம். -
John Pandian
@JohnPandianTMMK
தமிழின் தனிப்பெரும் கவிஞரான பாவேந்தர் பாரதிதாசன், தனது எழுத்தால் புரட்சியின் தீப்பொறியையும், கவிதைகளால் இனிமையின் தேன்மழையையும் பொழிந்தவர்.
தமிழ்மொழியின் செழுமையையும் ஆழமையும் உலக அரங்கில் பறைசாற்றிய இவர், கவிதைகள் மூலம் தமிழர்களின் பண்பாட்டு வேர்களை வலுப்படுத்தினார்.
அவரது பிறந்த நன்னாளில், அவரது இலக்கியப் பங்களிப்பையும், தமிழுக்குச் செய்த அளப்பரிய பணிகளையும் நினைவுகூர்ந்து, அவரது புகழை மனமாறப் போற்றுவோம்!
#bharathidasanbirthanniversary -
John Pandian
@JohnPandianTMMK
புறக்கணிக்கப்படும் தேவேந்திர குல வேளாளர்கள்
Full Video Link : youtu.be/4xv51HjyE3A -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்டம், எருக்கன்துறை கிராமத்தில் புதிய தனியார் கல் குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்க முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இப்பகுதியில் ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட குவாரிகளால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைவு, விவசாய நிலங்கள் அழிப்பு, மாசுபாடு மற்றும் மக்களின் ஆரோக்கிய பாதிப்பு ஆகியவை இங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பறித்து வருகின்றன.
மக்களின் கடும் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் அழிவையும் கண்டுகொள்ளாமல், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக இந்த முடிவை எடுக்கும் திமுக அரசு, மக்களுக்கு எதிராக செயல்படுவதை வெளிப்படையாகக் காட்டுகிறது. இது மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.
எனவே, புதிய குவாரி அமைப்பதற்கான திட்டத்தை உடனே கைவிடுமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
கட்டுமானப்பொருட்களின் விலையேற்றத்தை அரசு திரும்பப்பெற வேண்டும்.
கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருட்களான ஜல்லி, M சாண்ட் மற்றும் B சாண்ட் ஆகியவற்றின் விலைகள் திடீரென உயர்ந்து, பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலைச் சார்ந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு யூனிட் ஜல்லியின் விலை ₹4,000-லிருந்து ₹5,000 ஆகவும், M சாண்ட் ₹5,000-லிருந்து ₹6,000 ஆகவும், B சாண்ட் ₹6,000-லிருந்து ₹7,000 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் சிறு மற்றும் நடுத்தர கட்டுமான நிறுவனங்களை கடுமையாக பாதிக்கிறது மட்டுமல்லாமல், சொந்தமாக வீடு கட்டும் சாமானிய மக்களின் கனவையும் சிதைத்து வருகிறது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை மற்றும் பிற செலவுகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். இது ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், முறையற்ற விலை கட்டுப்பாடு மற்றும் சட்டவிரோத மணல் அள்ளல் போன்ற பிரச்சினைகளை அரசு திறம்பட கையாளாதது தான் என பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்டுமானப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்! -
John Pandian
@JohnPandianTMMK
காஷ்மீர் பகல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் மனிதாபிமானமற்ற, கோழைத்தனமான கொடூரச் செயல்!
இத்தகைய மிருகத்தனமான செயலைச் செய்த கயவர்கள் தண்டிக்கப்படாமல் தப்ப முடியாது. இத்தகைய பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அழித்து, நீதியை நிலைநாட்ட வேண்டும்.
உயிரிழந்த 28 அப்பாவி இந்தியர்கள் அனைவரது குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றாகப் போராடுவோம்!
#pahalgamterrorattack -
John Pandian
@JohnPandianTMMK
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், அன்பு, அமைதி மற்றும் மனிதநேயத்தின் உன்னத அடையாளமுமான போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போப் பிரான்சிஸ் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவருளில் நித்திய அமைதி பெறவும், அவரது நினைவைப் போற்றி உலக அமைதிக்காக இணைந்து பிரார்த்தனை செய்யவும் நாம் ஒன்று கூடுவோம்.
அவரது ஆன்மா இறையருளில் இளைப்பாறட்டும்!
#popefrancisdeath -
John Pandian
@JohnPandianTMMK
அடக்குமுறைக்கு எதிராக கவிதையால் கர்ஜித்த பாரதிதாசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழ் மண்ணின் மைந்தனாக, கவிதையால் புரட்சி விதைத்தவர் பாரதிதாசன் அவர்கள், மனித நேயத்தின் குரலாக ஒலித்த பாரதிதாசனின் நினைவு தினத்தில், அவரது இலக்கியப் பயணத்தை நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்துவோம்.
#bharathidasan -
John Pandian
@JohnPandianTMMK
ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள்!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் புனிதமான இந்த நாளில், உங்கள் இதயமும் இல்லமும் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் அமைதியால் நிரம்பி வழியட்டும். இந்த ஈஸ்டர் உங்களுக்கு புதிய நம்பிக்கையையும், வாழ்வில் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும்!
#easter2025 -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, தமிழ் ஊடக உலகின் பிதாமகர், ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள்.
தினத்தந்தி நாளிதழை மக்களின் இதயத்தில் இடம்பெறச் செய்தவர், ஒரு செய்தித்தாளை வெறும் காகிதமாக அல்ல, மக்களின் உணர்வுகளின் குரலாக மாற்றியவர். அவரது நினைவை நெஞ்சில் சுமந்து, அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்கு உறுதி ஏற்போம்.
#sivanthiadithanar -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை மீது நடந்த தாக்குதல் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவின் சமூகநீதி மற்றும் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது போலும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை மீது சக மாணவர்கள் சாதிய ரீதியாகத் தாக்குதல் நடத்திய பின்னர், 11 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மாணவனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியும், தற்போது மாணவனை சமூக வலைதள செயலி மூலம் தொடர்பு கொண்டு ஐந்து மர்ம நபர்களால் நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதி வரவழைத்துத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய மாணவர் சின்னத்துரை விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும், திமுக அரசு தனது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் தோல்வியை ஒப்புக்கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
#nanguneriThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினம் இன்று.
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக (1962-1967) பதவி வகித்த இவர், தனது அறிவு, தாழ்மை, மற்றும் மக்கள் மீதான அன்பால் உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்தினார், ஆசிரியர் தினம் அவரது பிறந்தநாளில் (செப்டம்பர் 5) கொண்டாடப்படுவது, அவரது கல்விப் பணிக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.
அவரது உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றி, சமூகத்திற்கு நாமும் பங்களிப்போம்.
#drsarvepalliradhakrishnan -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரமும், தியாகமும், மக்கள் மீதான அளவற்ற பற்றும் கொண்ட மாமனிதராக விளங்கிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களை நினைவுகூர்ந்து, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
#dheeranchinnamalai #தீரன்சின்னமலை -
John Pandian
@JohnPandianTMMK
மாவீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதல் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தி, வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற மாவீரர். உங்கள் தியாகமும், இந்திய சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்களிப்பும் என்றும் வரலாற்றில் ஒலிக்கும்.
என்றும் வாழ்க உங்கள் வீர புகழ்!
#maveeransundarlingam #sundarlinganarbirthanniversary -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், சக மாணவனை அரிவாளால் வெட்டிய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இரு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலைத் தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்த தகவல், நமது மாநிலம் எவ்வழியில் செல்கிறது என்று எண்ணும்போது மனவேதனையளிக்கிறது.
இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழக அரசு மாணவர்கள் மத்தியில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin @CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் @NainarBJP அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்த முக்கியமான தருணத்தில், அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று, இந்தப் புதிய பயணத்திற்கு என் முழு ஆதரவையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் இந்த நேரத்தில், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் தலைமையில், பாஜகவும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. -
John Pandian
@JohnPandianTMMK
இன்று, சமூக நீதியின் மாமேதை, இந்திய அரசியலமைப்பின் சிற்பி, பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் கொண்டாடுகிறோம். அவரது ஜெயந்தி நாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
இந்த ஜெயந்தி உங்களுக்கு வெறும் வாழ்த்து மட்டுமல்ல, ஒரு அறைகூவல்! எழுங்கள், ஒளிருங்கள், உங்கள் உரிமைகளைப் பெறுங்கள்! கல்வியால் உயருங்கள், ஒற்றுமையால் வலிமை பெறுங்கள், அன்பால் உலகை வெல்லுங்கள்!
ஜெய் பீம்!
#ambedkarjayanti2025 -
John Pandian
@JohnPandianTMMK
உலகெங்கும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
எல்லாம் வல்ல இறைவன் அருளால், இந்தப் புதுவருடம் உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை அள்ளித்தரட்டும்.
#happytamilnewyear2025 -
John Pandian
@JohnPandianTMMK
மதுரை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைவருக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
-
John Pandian
@JohnPandianTMMK
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக அரசிற்கு வேண்டுகோள்
தமிழகத்தின் கல்வித்துறையானது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பால் செழித்து வளர்ந்து வருகிறது. அவர்களில், பகுதி நேர ஆசிரியர்கள், குறைந்த ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பின்மை போன்ற சவால்களுக்கு மத்தியிலும், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாக அவர்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற பணி நிலை, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவை, அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், பணி நிரந்தரமின்மையால், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, சமூகப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, பலர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் நிலையற்ற பணி நிலை, மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, கற்பிக்கும் திறனையும் பாதிக்கிறது. இதன் விளைவாக, கல்வித்துறையின் ஒட்டுமொத்த தரமும் பாதிக்கப்படுகிறது. இந்த அவல நிலையை மாற்றுவதற்கு திமுக அரசு எவ்வித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் உழைப்பை அங்கீகரித்து, அவர்களின் பணியை நிரந்தரமாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
திமுக அரசின் வாக்குறுதி மீறல்:
2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக கட்சி, கல்வித்துறையில் சீர்திருத்தங்கள், ஆசிரியர்களின் நலனை மேம்படுத்துதல் மற்றும் பணி பாதுகாப்பு உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்திருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரமாக்கல் குறித்து எந்தவொரு தெளிவான அறிவிப்பும், செயல் திட்டமும் முன்வைக்கப்படவில்லை.
ஆசிரியர்களின் தொடர் போராட்டங்கள், மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு வந்த போதிலும், அவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
விளைவுகள்:
பணி நிரந்தரமின்மையால், திறமையான ஆசிரியர்கள் கல்வித்துறையை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது, இது ஆசிரியர் பற்றாக்குறையை மேலும் தீவிரமாக்கும்.
திமுக அரசின் இந்த அணுகுமுறை, ஆசிரியர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அரசு மீதான நம்பிக்கையை சிதைத்து, அரசியல் ரீதியாகவும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கை:
ஆசிரியர்களின் உரிமைகளை மறுப்பது, தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையின் உரிமைகளை மறுப்பதற்கு ஒப்பாகும். இதை உணர்ந்து, திமுக அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பதை நிறுத்தி, அவர்களின் பணியை உடனடியாக நிரந்தரமாக்கி, உரிய ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும். இது, கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், திமுக அரசின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவும்.
@CMOTamilnadu @Anbil_Mahesh @Senthil112017 -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராகத் தேர்வாகியுள்ள சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் @NainarBJP எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற முழு வீச்சுடன் செயல்பட மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாசமான பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்புமிக்க அமைச்சராக, சமூகத்தில் பெண்களுக்கு மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியவர், இத்தகைய அநாகரிகமான பேச்சால் சமூக மதிப்புகளை சீர்குலைக்கிறார்.
இது பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, பொதுவெளியில் ஆரோக்கியமான உரையாடலுக்கு எதிரான செயலுமாகும். இவ்வாறான பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
@CMOTamilnadu @mkstalin -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்ட அரசியலில் முக்கிய தலைவராகத் திகழ்ந்த முன்னாள் MLA திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் மறைந்ததையடுத்து அவரின் இல்லம் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினோம்.
திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்களின் உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரின் புகழ் காலத்தால் அழியாமல் என்றும் நிலைத்திருக்கும். -
John Pandian
@JohnPandianTMMK
தஞ்சாவூர் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு கீர்த்திகா என்ற இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அண்ணனை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றதைக் கண்டித்து, காவல்நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரி உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டியலின மக்களுக்கு எதிரான திமுக அரசின் இந்த சர்வாதிகார போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, மேலும் இது போன்ற ஒடுக்குமுறைகளை காவல்துறை கைவிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களின் நிகழ்ச்சிக்காக மருத்துவர்களிடம் கட்டாய வசூல் செய்து வருவதாகவும் ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கும் தலா ₹10,000 நிர்ணயம் செய்து வசூல் செய்வதாகவும், அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி அன்று விடுமுறை அளிக்காமல் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகப் பேசியுள்ள மருத்துவர் ஒருவரின் ஆடியோ பதிவு அதிர்ச்சி அளிக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சரின் கீழ் இயங்கும் துறையில் இது போல வசூல் செய்து அரசு நிகழ்ச்சிகளைக் கட்சி நிகழ்ச்சிகள் போல நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்டவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்களின் மீது இது போன்ற வசூல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin @Subramanian_maThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சேகல் ஊராட்சி தீவாம்பாள் பட்டினம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் 4 மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழகம், திராவிட மாடல் இருமொழி கல்வி மாடல் தான் சிறந்த மாடல் எனப் போலி விளம்பரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எப்போது உண்மையை அறிந்து செயல்படப் போகிறார் ?
காயமடைந்த மாணவர்களுக்கு அரசு சார்பாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தின் மூத்த தலைவர் மற்றும் அரசியல்வாதியான திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
முன்னாள் ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் @DrTamilisai4BJP தந்தையான திரு. குமரி ஆனந்தன் அவர்கள் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றிய தலைவர்.
தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கிய ஐயா அவர்களின் மறைவு தமிழக அரசியல் மற்றும் இலக்கியத்துறைக்குப் பேரிழப்பு. ஐயா அவர்களை இழந்து வாடும் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி! -
John Pandian
@JohnPandianTMMK
இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்…
கடந்த ஆண்டு இதே தேதியில் தொடங்கப்பட்டு தேசிய சிந்தனையோடும் மிகுந்த நடுநிலையோடும் செய்திகளை ஒளிபரப்புச் செய்து, நீதியின் நியாயத்தின் பக்கம் நின்று
குறுகிய காலத்தில் மக்கள் மனதில் ஆழமாக இடம்பெடுத்துள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
@TamilJanamNews -
John Pandian
@JohnPandianTMMK
ராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் திறந்து வைக்க வரும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
@PMOIndia @narendramodi @AmitShah @JPNadda @BJP4India @BJP4TamilNadu @annamalai_k @NainarBJP -
John Pandian
@JohnPandianTMMK
இன்று பிறந்தநாள் காணும் மேதகு தமிழக ஆளுநர் திரு.RN ரவி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த தேசப்பற்று கொண்டவர் மற்றும் தமிழ் மொழி மீது அன்பு கொண்ட ஆளுநர் அவர்கள் ஆரோக்கியமான உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை வேண்டுகிறேன்.
@rajbhavan_tn -
John Pandian reposted
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
@TMMKofficial
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் தேனாம்பேட்டை - காமராஜர் அரங்கத்தில் நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. (1/2)
-
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை..
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம், மூனைஞ்சிபட்டி அருகே, கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகளில் ஆசிட் கலந்த பேட்டரி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூடுதலாக, குப்பை கொட்டும் இடம் நீர் வழித்தடங்களுக்கு அருகில் இருப்பதால், மழைநீர் பேட்டரி கழிவுகளை எடுத்துச் சென்று, நீர் விநியோகத்தை மாசுபடுத்துகிறது. இதனால், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மாசுபட்ட தண்ணீரை உட்கொள்வதால், நோய் பரவி, அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த ரசாயனம் கலந்த பேட்டரி கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் தேனாம்பேட்டை - காமராஜர் அரங்கத்தில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், மண்டலச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் & மாவட்ட செயலாளர்கள் உரையாற்றி 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"தேவேந்திர குல வேளாளர்" மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு, சாதிவாரி கணக்கெடுப்பு, மீனவர்கள் பாதுகாப்பு, நியாயமான மக்களவை தொகுதி மறுசீரமைப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்பது உறுதி, வெற்றிப்பாதையில் அயராது உழைப்போம் என உறுதியேற்போம். -
John Pandian
@JohnPandianTMMK
உலகெங்கும் வாழும் எனது அருமை இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் ஈகை திருநாளாம் ரமலான் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதநல்லிணக்கமும், சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும் மலரட்டும்.
#ramzan2025 #eidmubarak2025 -
John Pandian
@JohnPandianTMMK
தெலுங்கு மற்றும் கன்னட மொழி மக்களால் இன்று மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் தெலுங்கு வருட புத்தாண்டு நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டில் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரம் இருந்தாலும் அனைவரும் இந்தியர்களாக ஒன்றுமையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அனைத்து விதத்திலும் நல்ல ஆரோக்கியம், நலன்கள் மற்றும் வளங்களைப் பெற்று வாழ எனது யுகாதி தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
#happyugadi2025 -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தும் தொடர்ந்து மத்திய அரசு மீது ஏதேனும் ஒரு பொய் சொல்லி தங்கள் ஆட்சியில் நடக்கும் அவலங்களை மறைப்பதே முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
உத்திர பிரதேச மாநிலத்தை விடத் தமிழகத்திற்கு அதிக நிதி வந்துள்ளது என மத்திய என மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார் அவற்றில் ₹7,300 கோடி விடுவித்ததாக அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி 100 நாள் வேலைத்திட்ட ஊதியத்தை உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. ஆனால் இங்கு திமுக அரசு தனது அரசு கஜானா திவால் அனாதை மறைக்கத் திசை திருப்பும் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
M.K.Stalin
@mkstalin
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #upa அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #mgnrega மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #sadistbjp அரசின் மனம் இரங்கட்டும்! -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்திற்கு புதிய இரயில் சேவைக்கு ஒப்புதல் அளித்த பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி @narendramodi இரயில்வேத்துறை அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்னவுக்கும் @AshwiniVaishnaw நன்றி.
தாம்பரம் - இராமேஸ்வரம் இடையே சிதம்பரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக புதிய ரயில் சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஏப்ரல் 6-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் இரயில் பாலத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்த பிறகு அன்றிலிருந்து இந்த இரயில் இயங்கும்.
Ashwini Vaishnaw
@AshwiniVaishnaw
Joined VC meeting with the Zonal Heads and District Presidents of @BJP4TamilNadu in the presence of Union Minister Thiru @Murugan_MoS and State President Thiru @annamalai_k.
Fulfilling people’s demand, a new train service from Tambaram to Mandapam via Tiruvarur & Thiruthuraipoondi will be sanctioned soon.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த முக்கியமான தேர்வில் நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
#publicexam -
John Pandian
@JohnPandianTMMK
அமமுக பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன் அவர்களின் சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி.
இந்த விழாவில் முன்னாள் முதல்வர் திரு. O பன்னீர் செல்வம் அவர்கள், பாஜகவின் திரு. கரு. நாகராஜன் அவர்கள் மற்றும் திரு. வேலூர் இப்ராஹிம் அவர்கள், பாமகவின் திரு. பாலு அவர்கள், புதிய நீதிக் கட்சியின் திரு. AC சண்முகம் அவர்கள், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்கள், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்கள் கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்கத்திற்கு என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியுடன் செயல்படும் என உறுதியளித்து ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.
@TTVDhinakaran @OfficeOfOPS @KaruNagarajan @ACSHANMUGAM1 @DrRavipachamuthu @kcthirumaran @PMKAdvocateBalu -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்று இதுவரை எந்த வித நன்மையும் செய்யாமல் மக்களை பிரித்து ஆட்சியில் உள்ள திமுகவை இனியும் நம்ப போகிறீர்களா என்ற எனது கேள்வியை முன்வைத்தேன்.This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
நேற்றைய தினம் பாஜக சிறுபான்மை அணியினர் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், முன்னாள் முதல்வர் திரு. O பன்னீர் செல்வம் அவர்கள், அமமுக பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன் அவர்கள், பாமகவின் திரு. பாலு அவர்கள், தமாகவின் முனைவர் திரு. பாஷா மற்றும் திரு. விடியல் சேகர் அவர்கள், புதிய நீதிக் கட்சியின் திரு. AC சண்முகம் அவர்கள், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்கள், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்கள் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் பங்கேற்று இந்துக்கள் - இஸ்லாமியர்களின் ஒற்றுமை இன்று போல் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்
@annamalai_k @OfficeOfOPS @TTVDhinakaran @PMKAdvocateBalu @RaviPachamuthu @DrACSofficial @kcthirumaran @BJP4TamilNadu -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை மாவட்ட அரசியல் அடையாளமாகத் திகழ்ந்த முன்னாள் MLA திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்களின் மறைவு சமூகத்திற்குப் பேரிழப்பு.
புரட்சித் தலைவர் MGR காலத்திலிருந்து தொடர்ந்து மக்கள் சேவை செய்து வந்த திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் கட்சி பாகுபாடின்றி மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தலைவர்.
இவரது மறைவு சமூகத்திற்கும் அவரது தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மேலும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி -
John Pandian
@JohnPandianTMMK
ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தமிழ் திரையுலகில் தாஜ்மகால் படத்தில் அறிமுகமான திரு. மனோஜ் குமார் அவர்கள் உடல் நலக்குறைவால் இளம் வயதிலேயே மறைந்தது அதிர்ச்சியளிக்கிறது.
மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. மனோஜ் பாரதி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். -
John Pandian reposted
TMMK IT WING
@TMMKITWING
அரசியலில் எதிரிகளை விட நண்பர்கள் தான் எனக்கு அதிகம்.. - தலைவர் ஜான் பாண்டியன்
@TMMKofficial
#johnpandian #tamilagamakkalmunnetrakazhagam -
John Pandian reposted
TMMK IT WING
@TMMKITWING
1986இல் எம்ஜிஆர் வந்து என்னை சந்தித்தார்...
@TMMKofficial @JohnPandianTMMK @vinolinnivethaThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian reposted
TMMK IT WING
@TMMKITWING
இந்தி திணிப்பு என விஷம பிரச்சாரம்
#nationaleducationpolicy
#johnpandian
@JohnPandianTMMK @vinolinnivetha @TMMKofficial @ViyangoOfficial @priscillaTMMK -
John Pandian
@JohnPandianTMMK
தென் மாவட்டங்களின் குறிப்பாக நெல்லையில் சாதிய பிரச்சினைகளே இல்லை என்று கூறியுள்ளார் சபா நாயகர் அப்பாவு அவர்கள்.
ஆனால் RTI தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் திருநெல்வேலி மாநகரப் பகுதிகள், பெருமாள்புரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், பேட்டை ஆகிய பகுதிகளில் சாதிய ரீதியான கொலைகள் பதிவாகியுள்ளது அம்பலமாகியுள்ளது.
யாரை ஏமாற்ற இது போன்ற பொய்களை பரப்பி வருகிறார் சபாநாயகர் அப்பாவு அவர்கள் ? தனது கடமையை உணர்ந்து மக்களை திசை திருப்பாமல் சாதிய பிரச்னைகளை களைய வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin @AppavuSpeaker -
John Pandian
@JohnPandianTMMK
திமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் @SavukkuOfficial வீட்டின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக அரசுக்கு எதிராகப் பேசினாலே கைது நடவடிக்கைகள் மற்றும் இது போன்ற வீட்டைச் சூறையாடும் நடவடிக்கைகள் என்பது கோழைத்தனமான செயலாகும். திமுகவின் இது போன்ற மக்கள் விரோத பாசிச போக்கை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனிமேலும் இது நிகழ்வுகள் நடக்காதவாறு அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin @CMOTamilnadu
Savukku Shankar
@SavukkuOfficial
தாக்குதல் நடத்தியவர்கள் என் தாயாரின் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்தது.
இப்போது மணி 11.43. இந்தத் தருணம் வரை தாக்குதல் நடத்த வந்தவர்கள் அதே இடத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.
@CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சக்தி பீடங்களில் ஒன்றான அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. அதே தினத்தன்று விடையாற்றி உற்சவம் தொடங்கியது. இதன் நிறைவு நாளையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மகிழம்பூ போன்ற பல்வேறு மலர் மாலைகள் அணிந்து பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நிகழ்வில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
-
John Pandian reposted
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
@TMMKofficial
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் & தலைவர் தமிழினவேந்தர் டாக்டர் திரு.பெ.ஜான்பாண்டியன் அவர்களை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் 25.03.2025 செவ்வாய் கிழமை அன்று நடைபெறும் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்விற்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.
@annamalai_k -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1951ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 148 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை என்பது குறைவாக இருக்கின்ற நிலையில் இப்பள்ளியில் 148 மாணவர், மாணவிகள் பயின்று வருவது வரவேற்கத்தக்கது.
ஆனால் இங்கு பயிலும் மாணவர், மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் தினமும் பள்ளிக்குச் சென்று திரும்புவது உயிரைப் பனையம் செய்து சென்று வருவது போல் உள்ளது.
இப்பள்ளியின் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் இக்கட்டிடத்தின் ஒருபகுதி நேற்று முன் தினம் இரவு செங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் நேற்று இடிந்து விழுந்துள்ளது.
இந்த மேற்கூரை மழையால் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இக்கட்டிடம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர், மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
எனவே இந்த பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டி கொடுக்க வேண்டுமென தமிழக அரசையும், பள்ளி கல்வித்துறை யையும் வலியுறுத்துகிறேன்.
@mkstalin @Anbil_Mahesh @tnschoolsedu @CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
சமீபத்தில் நடந்த நெல்லை கொலையை அடுத்து வெளிவந்த RTI தகவல் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கும் விதமாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 285 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. குற்றச்சம்பவங்களில் 60 இளம் சிறார்கள் இருப்பது மாநிலத்திற்கே தலைகுனிவு. தொடர்ந்து கொலை சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் கொலை நகரமாக மாறி வருகிறதா நெல்லை எனச் சந்தேகம் எழுகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் முற்றிலும் தவறிவிட்டார், இனிமேலும் அலட்சியமாக செயல்படாமல் தூங்கிக் கொண்டு இருக்கும் காவல்துறையை தட்டி எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
நெல்லை டவுன் பகுதியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாஹீர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார், "நான் கொலை செய்யப்படலாம்" அதற்கு காவல்துறையே காரணம் என அவர் பேசிய காணொளியும் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் வெளியான RTI தகவல்களின் அடிப்படையில் நெல்லை கொலை நகரமாக மாறி வருகிறது எனத் தெரிவிக்கிறது. குறிப்பாகக் கடந்த 5 ஆண்டுகளில் 285 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறி வரும் ஸ்டாலின் உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும் எனவும் ஜாஹீர் உசேன் கொலை சம்பவம் தொடர்பாக எனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
சுமார் 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி நீண்ட காலம் விண்வெளியில் தங்கிய முதல் பெண் என்ற சாதனை படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்.
தனது நீண்ட கால பயணத்தை முடித்து விட்டு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதை உலகமே கொண்டாடும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் மன உறுதி, தியாகம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த பயணம் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். @NASA @Astro_Suni -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பு!
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஐரோப்பா கண்டத்தில் சுமார் 5,595 அடி மிக உயரமான மலையின் மீது ஏறிய முதல் தமிழக வீரர் என்ற சாதனை படைத்த கழுகுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு.நல்லசாமி அவர்களின் மகன் திரு.வெங்கடேச சுப்பிரமணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு,
தன் உயிரை துச்சமாக மதித்து சாதனை படைத்த திரு.வெங்கடேச சுப்பிரமணியன் என்ற வீரருக்கு "தமிழக அரசு" ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சாதனை தமிழனுக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினேன்.
மேலும்,நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்த திரு.வெங்கடேச சுப்பிரமணியன் அவர்களின் எதிர்கால பயணங்களும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். -
John Pandian
@JohnPandianTMMK
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி. பிரேமலதா அவர்கள் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@PremallathaDmdk -
John Pandian
@JohnPandianTMMK
சட்டப்பேரவையில் நடுநிலை வகிப்பது தான் சபாநாயகருக்கு அழகு. அப்படி இருக்கையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படுவது எந்த விதத்தில் சரியாகும் ?
சபாநாயகர் அப்பாவு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கனிவானவர், ஆசிரியர் என்றெல்லாம் புகழ்ந்து பேசியுள்ளார்.
இதே அப்பாவு 1996-ல் "கலைஞர் ஒழிக" என்று சொன்னதெல்லாம் முதல்வர் மறந்து விட்டார் போலும். எதிர்க் கட்சித் தலைவர் சொன்னது போல எதிர்க் கட்சிகளின் கேள்விக்குச் சபாநாயகரே திமுக அமைச்சர்களுக்கு முன் பதில் சொல்கிறார்.
சட்டப் பேரவையில் இது போல் சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழியில் தள்ளுவது போல அமைகிறது. ஆகவே சபாநாயகர் இனியாவது நடுநிலை வகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin @CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
திமுக அரசு டாஸ்மாக்கில் ₹40,000 கோடி ஊழல் செய்துள்ளதாகக் கூறி அறவழியில் போராட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் திரு. @annamalai_k உட்பட பல பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகளை திமுக அரசு கைது செய்துள்ளது.
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து போராட வேண்டியது அனைவரின் உரிமை அதற்கு குரல் குடுப்பது அனைவரின் கடமை இப்படி இருக்கையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து அறவழியில் போராட்டம் செய்தாலே கைது மற்றும் வீட்டுக்காவல் போன்ற அடக்கு முறை நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் ஒரு போதும் வெல்லாது.
பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன், திமுகவின் இந்த அராஜக போக்கிற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். -
John Pandian
@JohnPandianTMMK
நமது அண்டை மாநிலம் ஆந்திரா. சமீபத்தில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள 2 லட்சம் இளைஞர்களை Microsoft நிறுவனம் பயிற்சி அளிக்கும் என ஒப்பந்தம் செய்துள்ளது ஆந்திரா அரசு.
இந்த பயிற்சி உலகம் முழுக்க சென்று இளைஞர்கள் வேலை பார்க்கவும் நமது நாட்டிலேயே தொழில்கள் செய்யவும் பெரிதும் உதவும். மறுபுறம் தமிழக அரசு இது போன்ற "₹" குறியீட்டை மாற்றி மொழி உணர்வை தூண்டி அரசியல் செய்து வருகிறது.
மொழி பிரச்சனை குறித்து தற்பொழுது மாநிலத்தின் முதல்வரே ஷூட்டிங் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார் என்றால் இந்த அரசுக்கு எதில் முக்கியத்துவம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. எது மக்களுக்கான அரசியல் என மக்களே தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.
#tnbudget2025
M.K.Stalin
@mkstalin
‘ரூ’ என்பது பெரிதானது ஏன்?
#tnbudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்!
#ungaliloruvananswersThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை முடிவில் டாஸ்மாக் நிறுவனம் ₹1000 கோடி ஊழல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மதுவிலக்குத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் மீது ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் அவரது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்து 4 நாட்களில் மீண்டும் அமைச்சராக பதவயேற்றதை அடுத்து உச்சநீதி மன்றமே அதை கண்டித்தது நாம் அனைவரும் பார்த்தோம், இவ்வாறு செந்தில் பாலாஜி அவர்களை மக்கள் பதவி விலக கோரி வரும் நிலையில் முதல்வர் இவ்வாறு முக்கிய பொறுப்புகளை கொடுப்பதும் தியாகி என்ற பட்டத்தை கொடுப்பதும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
2G ஊழல் போல மீண்டும் ஒரு ஊழல்களை பார்க்க நாடு தாங்காது,
உச்சநீதி மன்றம் கேட்டுக் கொண்டது போல முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin @V_Senthilbalaji #dmkliquorscam #stalingovt1000crscam -
John Pandian reposted
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
@TMMKofficial
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 14.03.2025 அன்று சென்னை - தலைமை அலுவலகத்தில், கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழக அரசின் இன்றைய பட்ஜெட் என்பது தீபாவளி புஸ்வானமாக முடிந்தது.!
பட்ஜெட் அறிவிக்கும் முன்பு பல இடங்களில் LED திரை வைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என ஏற்பாடுகள் செய்து இறுதியில் பட்ஜெட் அறிக்கையில் மக்களுக்கு தேவையான விஷயங்கள் ஒன்றும் இடம் பெறாத காரணத்தால் திரையிட்ட இடங்கள் யாவும் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக "திமுக" தனது தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த "விவசாய கடன் தள்ளுபடி", "கல்விக் கடன் தள்ளுபடி" போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
திராவிட மாடல் என்று விளம்பரப்படுத்தி வரும் திமுக அரசு தனது ஆட்சி காலத்தில் தற்போதைய கடன் தொகை ₹9,29,959 கோடியாக உள்ளது. கடன் வாங்கியும் மக்கள் நலத்திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம் மட்டுமே, சிலிண்டர் விலை மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என எதைப்பற்றியும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
2- லட்சம் வேலை வாய்ப்புகள், பகுதி நேரம் ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதிய திட்டம், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் போன்ற வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகளும் இல்லாமல் மக்களை ஏமாற்றத்தில் விட்டுள்ளது திமுக அரசு. அடையாறு ஆறு சீரமைப்பு என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நான்கு வருடமும் ₹1,500 கோடியை ஒதுக்குவதன் நோக்கம் என்ன.?
மின்சார கட்டணம் இரண்டு மாதம் என்று இல்லாமல் மாதம் ஒரு முறை கணக்கு எடுக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது.? இதுமட்டுமின்றி மாநிலத்தின் உட்கட்டமைப்பு என்பது வளர்ச்சி பாதையில் செல்ல முக்கிய காரணியாகும் ஆனால் தமிழக அரசு ₹57,231 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இவை மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவாகும்.
பல கோடி ரூபாய்களை கடனாக பெற்றும் கூட மாநிலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லாமல் பணம் எங்கே செல்கிறது என திமுக அரசிற்கு தான் வெளிச்சம். பணத்தின் குறியீட்டை ₹-ல் இருந்து "ரூ" என்று மாற்றினால் மாநிலத்தின் கடன் குறையவோ அல்லது மக்கள் செழிப்பாக இருக்கவோ உதவாது என்பதை முதல்வர் ஸ்டாலின் எப்போது உணர்ந்து கொள்வார்.?
இதற்கு எல்லாம் மேல் டாஸ்மாக் வருமானம் மற்றும் சமீபத்தில் அமலாக்கத்துறை சொன்ன முறைகேடுகள் அரசின் மீது மேலும் அவநம்பிக்கையை உருவாக்குகிறது.
இனியாவது திமுக அரசுக்கு மீதம் இருக்கும் 1 வருடத்தில் தமிழக பொருளாதரத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
#budget2025 -
John Pandian
@JohnPandianTMMK
விண்வெளியில் செயற்கைக் கோள்களை பிரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளது. இதற்காக இஸ்ரோவின் Spadex திட்டத்தில் அடுத்த வெற்றியாக 2-செயற்கைக்கோள்களும் (SDX-1 & SDX-2) வெற்றிகரமாக பிரிந்து இணைக்கப்பட்ட செயற்கைக்கோள்களை, மீண்டும் பிரித்து அடுத்த மைல்கல் வெற்றியை எட்டியது இஸ்ரோ.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். @isro
#spadex #isro -
John Pandian
@JohnPandianTMMK
நாளிதழில் இன்று!
ஸ்ரீவைகுண்டம் மாணவன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 -வகுப்பு மாணவன் தேவேந்திர ராஜா-வை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் இருந்து இறக்கி சமூகவிரோதிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11-ம் வகுப்பு மாணவன் தேவேந்திர ராஜா-வை 12-03-2025 இன்று நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
பின்னர் மாணவனின் தந்தைக்கு ஆறுதல் கூறியதோடு திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை சந்தித்து மாணவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விசாரித்ததுடன் தொடர்ந்து மாணவனுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினேன். -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் மர்ம நபர்களால் ஓடும் பேருந்து வெட்டப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது தென் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
விரைவில் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.
மருத்துவமனையில் வெட்டுகாயங்களுடன் இருக்கும் மாணவனுக்கு உரிய தீவிர சிகிச்சை மற்றும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். -
John Pandian
@JohnPandianTMMK
உலக மகளிர் தின வாழ்த்துகள்!
தமிழகத்தில் பல்வேறு கசப்பான சம்பவங்கள் அரங்கேறிருந்தாலும் ; பெண்கள் வாழ்க்கையில் விடா முயற்ச்சியுடன் வீறு நடைபோட்டு எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ உலக மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
#womenday2025 -
John Pandian
@JohnPandianTMMK
பாஜக - அதிமுக இணைந்தால் நிச்சயம் நல்லது தான்.
Full Video Link :
youtu.be/WEdeDFV7J94 -
John Pandian
@JohnPandianTMMK
பிரதமர் மோடி மிகவும் நல்லவர் ஊழல் செய்யாதவர்.
This media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
மோடி மாதிரி ஒரு பிரதமரை சரித்திரத்தில் நான் பார்க்கல l தமிழகத்தில் பாஜக - வை வளர்த்தது அண்ணாமலை l நிகழ்கால அரசியலில் ஆக சிறந்தவர் பாரத பிரதமர் மோடி ஜி.!
#narendramodi #annamalai #bjp4ind #tmmkThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட போது!
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுத் தேர்வினை மாணவ, மாணவிகள் துணிவுடன் எதிர்கொண்டு அதிக மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
#plustwostudents #publicexams #tamilnadu #pondicherry #studentsuccess -
John Pandian
@JohnPandianTMMK
மார்ச் 1, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. @mkstalin அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..
நீங்கள் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..
@CMOTamilnadu @mkstalin #mkstalin #mkstalincm #hbdmkstalin #hbdmkstalin72 -
John Pandian
@JohnPandianTMMK
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு, செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளில் அவரது புகழை போற்றி வணங்குவோம்.!
#admk #jayalalitha #tmmk #johnpandian #அம்மா_சொல்அல்ல_செயல் #edappadipalanisamy #அம்மா77 #amma77 #அதிமுக #hbd_amma #tamilagamakkalmunnetrakazhagam #tmmkitwing -
John Pandian
@JohnPandianTMMK
இருமொழி! VS மும்மொழி!
இந்தி திணிப்பு வைத்து அரசியல் ஆக்குவது திமுக தான்!
#mummozhikolkai #tamilnadueducationboard #tamilisaisoundararajan #tamilisailatestinterview #tamilisaisoundararajanexcusive #ssascheme #hindiimposition #hindivstamil #bjpdharmendrapradhan #dharmendrapradhan #thalapathyvijay #tvk #vijay #bussyanand #parthipan #suvenkatesan #dmk #mkstalin #udhayanidhistalin #mummozhikolkai #galattavoice #viral #unitedwestand #engvsaus #indvspak #getoutstalin_2026 #getoutstailn #annamalai #johnpandian #tmmkitwingThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
டெல்லியில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி.ரேகா குப்தா அவர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எனது வாழ்த்துகள்.
மேலும், டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவார் என்றும், அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் பாரத பிரதமரின் வழிகாட்டுதலின் கீழும், அவரது முயற்சிகளாலும், டெல்லி வளர்ந்த இந்தியாவின் வளர்ந்த தலைநகராக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
@PMOIndia @narendramodi @AmitShah @JPNadda @BJP4India @BJP4TamilNadu @annamalai_k @RekhaGuptaDelhi #rekhagupta #delhicm #tmmk #johnpandian #nda #bjp4ind #getoutstalin #getoutstalin_2026 -
John Pandian
@JohnPandianTMMK
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - பசு வந்தனை சாலையில் தனியார் மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கான கல்வி நிறுவனம் உள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, நயினாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி மாலா வினோதினி உள்பட பல மாணவிகள் இந்நிறுவனத்தில் மருத்துவ சான்றிதழ் படிப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜன- 31ம் தேதி மாலா வினோதினிக்கும், சக மாணவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மாலா வினோதினி அந்த மாணவியை தாக்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வி நிலைய கண்காணிப்பாளர் மருத்துவர் கிருஷ்ண பிரியா, மாணவி கண்டித்து தாக்கியதாகவும், சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது மட்டுமின்றி, சமுதாய ரீதியாக அவதூறாக பேசியதாக மாணவி கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கல்வி நிலைய கண்காணிப்பாளர் மாணவியை தாக்கிய தோடு, மட்டுமல்லாமல் சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் தனது சான்றிதழ்களை தருவதாகவும். அந்த மாணவி வேறு வழியின்றி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அதன் பிறகும் ஒரு லட்சம் ரூபாய் தந்தால் தான் சான்றிதழ்களை தருவதாகவும் கல்வி நிலைய கண்காணிப்பாளர் மிரட்டியுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கல்வி நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ண பிரியா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 -பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். கல்வி நிலையங்களில் சாதி ரீதியாக சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறுகின்றது. மேலும், இதில் தமிழக அரசு முறையாக காலஆய்வு செய்து இளம் தலைமுறையின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் கல்வி
கூடங்களில் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Subramanian_ma #cmotamilnadu #mkstalin #kovilpatti #dhyanhealtheducation #tenksi #tmmk #johnpandian #tenkasidistrict #thiruvengatam -
John Pandian
@JohnPandianTMMK
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியின் விடுதியில் கடந்த 13.02.2025 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்த திருநெல்வேலி மாவட்டம், பர்கிட் மாநகரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவனின் இறப்பு பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் அளிக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் விடுதிக் கழிவறையில் விக்னேஷ் என்ற மாணவன் இறந்து கிடந்ததாகக் கூறுகிறார்கள். கழிவறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மாணவனுக்கு அதில் அதிக அளவு இரத்தம் கொட்டிக் கிடப்பதைக் காண முடிகிறது. இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
கல்லூரி மாணவன் விக்னேஷ் உடலை தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேனி மேற்கு மாவட்டம் சார்பில் நீதி வேண்டி சட்ட போராட்டம் நடத்தினார்கள். மேலும், காவல்துறை இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, சிபிசிஐடி - யிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டுமாய் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அரசுக் கல்லூரி விடுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆனால், காவல் துறை மாணவன் வலிப்பு அல்லது எறும்பு கடித்து இறந்ததாக கூறுகின்றனர். வழக்கமாக மாணவர் படுகொலையில் கொலையாளிகளை பாதுகாக்க காவல் துறை சார்பில் தொடர் கட்டுக்கதைகள் இனி மக்கள் நம்பமாட்டார்கள். மாணவன் விக்னேஷ் இறப்பு படுகொலை என்றும் தெரிந்தும் காவல் துறை இதனை மூடி மறைக்க நினைக்கிறது.
மாணவன் விக்னேஷ் இறப்பில் தடங்கள்- தடயங்கள் பார்த்தால் தெரியும் இது அப்பட்டமான படுகொலையே! இந்த படுகொலையில் காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்று மாணவனின் தரப்பில் கூறுகின்றனர். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு இயங்கங்கள் இணைந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன் முற்றுக்கை போராட்டம் நடத்தினார்கள்.
இந்த படுகொலையில் உண்மை தன்மை என்ன என்பதனை விசாரித்து வெள்ளையறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாணவன் விக்னேஷ் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே இனிமேலும் இதுபோன்ற மாணவர் படுகொலை சம்பவங்கள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Anbil_Mahesh @tnpoliceoffl #thenicollege #studentdeath #tirunelveli #johnpandian #tmmk #cbcid #tngovt #murdercase #cmotamilnadu #mkstalingovernment -
John Pandian
@JohnPandianTMMK
குடியாத்தம் நகராட்சி கங்காதர சுவாமி மடாலய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்திட வேண்டும்.!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியான பிச்சனூர்பேட்டை பகுதியில் உள்ள கங்காதரசுவாமி மடாலய நடுநிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஆனால், அதற்கான இடவசதி பற்றாக்குறையாக இருப்பதாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு சற்றுதொலைவில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது ., இந்த இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டி பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பள்ளி தரம் உயர்த்த அந்த இடம் போதுமானது.
மாணவர்களின் வாழ்வை தரம் உயர்த்தும் கல்வியை கருத்தில் கொண்டு, குடியாத்தம் - கங்காதரசுவாமி மடாலய நடுநிலைப் பள்ளியை, தரம் உயர்த்துமாறு மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன். அல்லது இந்து சமய அறநிலைத்துறையே பள்ளியை துவங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Anbil_Mahesh @Udhaystalin @PKSekarbabu @annamalai_k -
John Pandian
@JohnPandianTMMK
டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருமையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள மாண்புமிகு, பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான டெல்லி பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@narendramodi @AmitShah @JPNadda @nsitharaman @ReddySudhakar21 @blsanthosh @DrTamilisai4BJP @Murugan_MoS @MenonArvindBJP @BJP4India @BJP4TamilNadu @annamalai_k @tamizhnews24 @ThamaraiTVTamil @NewsTamilTV24x7 @polimernews @PTTVOnlineNews @ThanthiTV @Oreynaadu_TN @ibctamilmedia @dinamalarweb @News18TamilNadu #narendramodi #delhielectionresults #aapdelhi #arvindkejriwal #pmmodi #bjp #delhielectionresults #delhielections2025 -
John Pandian
@JohnPandianTMMK
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், திமுக மதகலவரத்தை தூண்டுகிறது?
#johnpandian #annaamalai #johnpandian #annaamalai #thiruparankundram #latestnews #tamilnews #rangarajpandey #rangarajpandeylatest #latestupdate #johnpandianpressmeet #tmmk #dmk #thiruparankundram #thiruparankundramtemple #bjp #thiruparankundrammuruganThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நிகழ்கால தரவான வரலாற்று சிறப்புமிக்க கி.பி 1528 பழனி செப்புபட்டயத்தின்படி அருள்மிகு பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் "தேவேந்திரகுல வேளாளர்" சமூகத்திற்கு பாத்தியப்பட்ட 28 - ஆம் ஆண்டு தைப்பூசம் முதல் மரியாதை & மண்டகப்படி திருவிழா 06.02.2025 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
#28_ம்_ஆண்டு #வெள்ளி_விழா #பழனி #பரிவட்ட_முதல்_மரியாதை #johnpandian #viyangopandian #தேவேந்திரகுல_வேளாளர் #tmmkparty #palanimurugantemple #palani #palanimurugan #palaniparivattam #tmmkitwing #tamilagamakkalmunnetrakazhagam
John Pandian
@JohnPandianTMMK
John Pandian
@JohnPandianTMMK
John Pandian
@JohnPandianTMMK
-
John Pandian
@JohnPandianTMMK
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை, மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் என தொடர்ந்து தற்போது பெட்ரோல் குண்டு கலாச்சாரமும் தலை தூக்கி உள்ளது. கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே மீனாட்சிபட்டியில் தியாகி இமானுவேல் சேகரன், மாவீரன் சுந்தரலிங்கனார் ஆகியோரின் திருவுருவ படங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், அதனைபோல் கோவை - காந்திபுரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருநெல்வேலி - நாங்குநேரியில் விவசாயின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு! போன்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு தலைவிரித்தாடியது போல் தற்போதும் பெட்ரோல் குண்டு கலாச்சாரமும் தலைதூக்குகிறது. இது கடும் கண்டனத்துக்குரியத்து.
எனவே,ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசியவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும், காவல்நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @tnpoliceoffl @Udhaystalin #cmotamilnadu #mkstalingovernment #ranipet #petrolpump #ranipet #policestation #petrolbomp -
John Pandian
@JohnPandianTMMK
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. உதவி கேட்டுச் சென்ற 13 - வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது காவலர்!
காக்க வேண்டிய அந்த காவலரே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியை தரக்கூடிய ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி மேலும் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் சட்டங்கள் கடமையாக்கப்பட வேண்டும்.! அவை மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @arivalayam #sexualharassment #mylapore #policemanarrested #pocsocase #pocsoact #pocso #policebooth #13yearoldgirl #pattinapakkam #tnpolice #sexualabusecomplaint #crimeagainstwoman #crimeagainstchild #crimeagainstgirlThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு வேறருத்த சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று.
அவர்களின் நினைவு தினத்தில் அவர்களின் தியாகத்தை போற்றுவோம்.
#mahatmagandhi #rememberinggandhi #mahatmagandhiji -
John Pandian
@JohnPandianTMMK
பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார், ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தினமலர் திரு.லட்சுமிபதி ராமசுப்பையர், திரு.குருவாயூர் துரை, திரு.தாமோதரன்,பறை இசை கலைஞர் திரு. வேலு ஆசான் திரு. M D ஸ்ரீனிவாஸ், திரு.புரசை கண்ணப்ப சம்பந்தன், திரு. அஸ்வின் ரவிச்சந்திரன், திரு.சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.
#awards2025 -
John Pandian
@JohnPandianTMMK
எத்தனை மதம்
எத்தனை மொழி
இருந்தாலும் நாம்
அனைவரும் பாரதத்
தாயின் பிள்ளைகள் தான்
#குடியரசு_தின நல்வாழ்த்துக்கள்...
#republicday2025 #jaihind -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 65 வயது மூதாட்டி இறக்கும் தருவாயில் வெளியே அனுப்பப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...
இறந்த தாயின் உடலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது .
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இதுபோன்ற மனித தன்மையற்ற செயல்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் .
@CMOTamilnadu @mkstalin @Subramanian_ma #cmotamilnadu #mkstalingovernment #healthministry #tirunelvelidistrict #governmenthospital #oldlady #doctor #death #tirunelvelimedicalcollege #tmmk #tmmkitwing #johnpandian -
John Pandian
@JohnPandianTMMK
மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினம்
இந்தியாவில் குறிப்பிட்ட மொழிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு எதிராக இறுதிவரை போராடி ”தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தோடு உயிர்நீத்த நூற்றுக்கணக்கான தியாகிகளின் தியாக உணர்வை போற்றுவோம்.
#mozhiporthiyagigal #natarajasana #thalamuthu #tmmk #tmmkitwing #johnpandian -
John Pandian
@JohnPandianTMMK
மதுரை அரிட்டாப்பட்டியில் "டங்ஸ்டன் சுரங்க திட்டம்" ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. கனிம வளத்தை விட மக்களின் நலனே முக்கியம் எனக்கருதி "மத்திய அரசின்" முடிவு வரவேற்கத்தக்கது.
மதுரை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலூர் தொகுதிக்கு உட்பட்ட நாயக்கர்பட்டியில் "டங்ஸ்டன் சுரங்கம்" அமைக்கும் முடிவை ரத்து செய்து மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
வரலாற்று சிறப்புமிக்க தளமான மதுரை மாவட்டத்தின் பல்வேறு வரலாற்று சின்னங்கள், இயற்கை வளங்கள், தமிழர்களின் தொன்மையான கல்வெட்டுகளும் கொண்ட தளத்தை பாதுகாக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்டு முடிவெடுத்திருக்கும் "மத்திய அரசுக்கு" எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@narendramodi @PMOIndia @CMOTamilnadu @AmitShah @annamalai_k @Murugan_MoS @BJP4India @BJP4TamilNadu #narendramodi #pmoindia #annamalai #tungsten #madurai #canceled -
John Pandian
@JohnPandianTMMK
தமிழ்நாட்டின்அன்னை தெரசா பல்கலை கழக வீராங்கனைகளுக்கும், பஞ்சாப் மாநிலம் தர்பெங்கா பல்கலைகழக வீராங்கனைகளுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது ...
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபாடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அன்னை தெரசா பல்கலை., பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பவுல் பிளே தொடர்பாக பீகார் வீராங்கனைகள் குறித்து தமிழக வீராங்கனைகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பீகார் வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார் ..
ஆகவே தமிழக கபடி வீராங்கனைகள் மற்றும் நடுவர்களை பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வரவும் மற்றும் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய பஞ்சாப் மாநில கபடி பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Udhaystalin #sport #kabaddiplayer #universitystudent -
John Pandian
@JohnPandianTMMK
இரங்கல் செய்தி
====================
தூத்துக்குடி மாவட்டம், அலங்காரத்தட்டு கிராமத்தில் சமூகத்திற்காக போராடிய காலம் சென்ற திரு. தங்கவேல் அவர்களின் குடும்பத்தை சார்ந்த சமூக வழக்கறிஞர் என் அன்பு தம்பி திரு.சந்திரகாந்தன் அவர்கள், திடீர் மாரடைப்பால் மரணம் எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மரணச் செய்தி மீளாத துயரம் அளிக்கிறது.
தமிழகம் முழுவதும் அநீதிக்கு எதிராகவும், அடக்கு முறைக்கு எதிராகவும் நான் பயணம் தொடங்கிய காலம் மிகவும் ஆபத்து நிறைந்த சூழல் இருந்தது. அவ்வேளையில் எனக்கு மிக நெருக்கமாக துணை நின்ற குடும்பத்தில் இந்த பேரிழப்பு என் நெஞ்சத்தில் ரனமாக வலியைத் தருகிறது. இந்த எதிர்பாராத பெரும் துயரத்திற்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தை இல்லை. அன்பு தம்பியின் ஆன்மா
இறைவனின் நிழலில் இழைப்பற்றட்டும்.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும், தம்பியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#rip #chandrakanta #advocate #tuticorin -
John Pandian
@JohnPandianTMMK
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம்!
இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் ..
அவர்களின் நினைவையும் , தியாகத்தையும் போற்றுவோம்...
#nethajisubashchandrabose #nethaji #tmmk #tmmkparty #tmmkitwing #tamilagamakkalmunnetrakazhagam #johnpandian #நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் -
John Pandian reposted
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
போற்றுதற்கும், வணக்கத்திற்குரிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அண்ணன் ஜான்பாண்டியன் அவர்கள் பெரியார் குறித்து இன்று கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன்.
சரியான நேரத்தில் சரியான கருத்துகளைப் பதிவுசெய்த அன்பிற்கினிய அண்ணன் அவர்களுக்கு என்னுடைய அன்பும், நன்றியும்!
@JohnPandianTMMK -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருநெல்வேலி தலைமை அலுவலகத்தில் (20.01.2025) அன்று எனது தலைமையில் நடைபெற்றது.
இதில், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் மற்றும் மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா அவர்களும் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
#johnpandian #viyangopandian #vinolinnivetha #tmmk #tmmkparty #tamilagamakkalmunnetrakazhagam #executivecommitteemeeting #tirunelveli #johnpandian -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பு!
#johnpandian #tmmk #tmmkitwing #pressmeet #news18tamilnadu #tirunelveli #admk #dmk #mkstalin #tvkvijay #tvk #parandur #erodebyelection #bjp #tmmkmediaThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தலைமை இல்லாத மக்களின் தவிர்ப்பை சிறையில் உணர்ந்தேன் l திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகமாக அரசு உறவாகினால் இளைஞர்களின் எதிர்காலம் மாறும்!
#johnpandian #galatta #dkv #tirunelveli #factory #youngest #johnpandiyan #dmk #cmstalin
#johnpandiyan #johnpandian #john #pandian #caravantour #caravan #caravancamping #caravancampaign #tmmkitwing #tmmkmedia #tmmk #dmk #admk #tvk #bjp #bharatiyajanataparty #narendramodi #modi #mgr #mgramachandran #sasikala #jayalalitha #cmstalin #stalin #southThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சமூகத்தில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் மக்களின் பெரும் ஆதரவோடு இன்று தேவேந்திரகுல வேளாளர்களின் மாபெரும் தலைவர் என்று மக்கள் கூறும் போது மட்டற்ற மகிழ்ச்சி!
@galattadotcom #pongal2025 #galatta #pongal #pongalcelebration #galattainterview #familyinterview #galattavoiceinterview #johnpandian #dkv #jpcollegeThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
ஜனவரி - 17,
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 108-வது பிறந்த நாளில் அவரை புகழை போற்றி வணங்குகிறேன்.
என் மீது அதிக அன்பு கொண்டவரும், தான் கொண்டு வந்த "சத்துணவுத் திட்டம்" மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியவர்.
இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய "புரட்சி தலைவர்" - "பொன்மன செம்மல்" எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாளில் அவரது புகழை போற்றுவோம்.
#mgr #birthanniversary #mgr_108 #mgrbirthday #politicalleader #tmmk #johnpandian #admk
File Photo -
John Pandian
@JohnPandianTMMK
இனிய #பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
----------------------------------
"தை" பிறந்தால் வழி பிறக்கும்
நம்பிக்கையின் விடியலாக
இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க,
உள்ளந்தோறும் சமத்துவ எண்ணங்கள் பெருக,
உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கு
#தமிழர்_திருநாளாம் ....
#தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
#pongal2025 #bhogi #pongalcelebration #pongalfestival #bhogi2025 #jallikattu #pongal #jallikattu2025 #avaniyapuramjallikattu #tmmk #johnpandian #pongalwishes -
John Pandian
@JohnPandianTMMK
தீயவைகள் அகலவும், நன்மைகள் பெருகிடவும் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையன்று இதுவரை நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நன்மையாக அமையட்டும்.!
அனைவருக்கும் #போகி_பண்டிகை மற்றும் #பொங்கல்_திருநாள் நல்வாழ்த்துகள்.!
#pongal2025 #bhogi #pongalcelebration #pongalfestival #bhogi2025 #jallikattu #pongal #festival -
John Pandian
@JohnPandianTMMK
தமிழர் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் விழா இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் விழாவானது "தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி' & "ஆல்மைட்டி செவிலியர் கல்லூரி" மற்றும் "தேவேந்திரா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை" - JP கல்விக் குழுமம் சார்பில் #பசுமை_பொங்கல்_விழா மிகச் சிறப்பாக நடைபெற்று.
#pasumaipongal #pongal #celebration #tirunelveli #jpcollege #pongal2025 #pongalcelebration #pongalfestivalThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள புலிக்குத்தி சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு b.sc., Agri படித்துவந்த திருநெல்வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மாணவி பிரித்திதேவி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மறைந்த மாணவி பிரித்திதேவி- க்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறும் நிலையில் அதன் உண்மை தன்மையை விளக்க வேண்டுமென தமிழக காவல் துறை மற்றும் தமிழக முதல்வர் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
அக்கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோரிடம் முறையான பதில் அளிக்காமல் தங்கள் பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை பயன்படுத்தி காவல் துறையினரின் உதவியுடன் இந்த மரணத்தை விபத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என தகவல்கள் வருகின்றன..
எனவே மாணவியின் உடலை தகுந்த மருத்துவப் பரிசோதணைக்கு உட்படுத்துவதுடன் தகுந்த விசாரனை மேற்கொண்டு காவல் துறையினர் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். இல்லையெனில் மாணவியின் மர்மமான சாவுக்கு நீதிகேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தும் சூழல் வரும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும். நீதி கிடைக்கும் வரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் துணை நிற்கும்; மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Anbil_Mahesh @tnpoliceoffl #cmotamilnadu #mkstalin #anbilmaheshpoyyamozhi #tamilnadupolice #sivagangaidistrict #students #death #issues -
John Pandian
@JohnPandianTMMK
மேதகு தமிழக ஆளுநர் திரு.R.N ரவி அவர்களை, ஆளுநர் மாளிகையில் இன்று (10.01.2025) நேரில் சந்தித்து அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு l 2 - ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத "வேங்கை வயல்" சம்பவம் குறித்தும் l தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் தென்தமிழக படுகொலைகள் குறித்தும் l தேவேந்திரகுல வேளாளர்களின் - பட்டியல் வெளியேற்றம் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுவை அளித்தேன்.
தேவேந்திரகுல வேளாளர்களின் - பட்டியல் வெளியேற்றம் கோரிக்கை குறித்து மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்; நானும் இந்த கோரிக்கையை முழுமையாக அறிவேன் என்று, மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் கூறிய பதில் "பட்டியல் வெளியேற்ற" கோரிக்கை நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியது.
இச்சந்திப்பின் போது, மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சண்முக சுதாகர், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.ச.தமிழரசன் அவர்கள், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு.அ.சி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் உடனிருந்தனர்.
#rajbhavan #tmmk #johnpandian #rnravi #tnassembly #protest #legislativeassembly #tngovernor #governorrnravi #dkv #vengaivayal #issues
John Pandian
@JohnPandianTMMK
-
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை l அண்ணா பல்கலை கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை பிரச்சனை l தென் மாவட்ட படுகொலை மற்றும் "தேவேந்திரகுல வேளாளர்" - பட்டியல் வெளியேற்றம் கோரிக்கை குறித்து மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு R.N ரவி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன்.
#rajbhavan #tmmk #johnpandian #rnravi #tnassembly #protest #legislativeassembly #tngovernor #governorrnravi #dkv -
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி | ஆல்மைட்டி செவிலியர் கல்லூரி | தேவேந்திரா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை JP கல்விக் குழுமம் சார்பில் இன்று (08 .01 .2025 ) நடைபெற்ற பசுமை பொங்கல் விழா!
#devendrarcollegeofphysiotherapy #pasumaipongal #pongal #celebration #tirunelveli #jpcollegeThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி போராடுபவர்கள் மீது கைது! சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.! கஞ்சா - மது போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.!
#janamtamil #cmotamilnadu #mkstalingovt #johnpandian #interviewThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
"தேவேந்திர குல வேளாளர்" அரசை போராடி வெற்றி பெற்றோம் l "பட்டியல் வெளியேற்றத்திற்கு" போராடுவோம்! வெற்றி பெறுவோம்.!!
#johnpandian #pressmeet #dkvThis media couldn't be displayed. See it on the original post. -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானி திரு.நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
விண்வெளி ஆராய்ச்சியில் அவர் மென்மேலும் பல சாதனைகள் பெற வேண்டுமென எல்லா வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...
@isro #isro -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானி திரு.நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
விண்வெளி ஆராய்ச்சியில் அவர் மென்மேலும் பல சாதனைகள் பெற வேண்டுமென எல்லா வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...
@isro #isro -
John Pandian
@JohnPandianTMMK
ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மின்சாரம் தாக்கிய சம்பவத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாதது தான் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படும் நிலையை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொதுமக்களின் உயிர்கள் மீது சுகாதாரத்துறையையும், தமிழக அரசும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக, இதற்கு கூடுதல் கவனம் செலுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருப்பதை சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
@mkstalin @CMOTamilnadu @Subramanian_ma #mkstalingovt #ramanathapuramdistrict #govthospital #doctor #death -
John Pandian
@JohnPandianTMMK
அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து; எதிர்க்கட்சிகள் பல்வேறு தரப்பில் ஜனநாயக முறைப்படி அதற்க்கு நீதி வேண்டி போராடுபவர்களை கைது செய்த அரசு, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எந்த விதத்தில் நியாயம்.!
ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த நிலையில் அதற்க்கு அனுமதி மறுத்த அரசு, ஆனால் இன்று மாண்புமிகு ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடி அனைத்து மாவட்டங்களிலும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி. இது தான் திமுக அரசின் சமூக நீதியா?
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை "இரும்பு கரம்" கொண்டு தடுக்க வேண்டிய தமிழக அரசே! சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என நிலவி வரும் சூழலில் உள்ளது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேட நிலைப்பாட்டை மக்கள் உன்னிப்பாக கவனித்து விட்டார்கள். எனவே, இனியும் திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்ற முடியாது! அதற்கான விளைவை வரும் தேர்தலில் அதற்கான எதிர்வினை ஏற்றுவார்கள்.!
@CMOTamilnadu @mkstalin @rajbhavan_tn #mkstalingovt #kanimozhi #dmk #governorrnravi #protest -
John Pandian
@JohnPandianTMMK
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மன வேதனை அடைந்தேன் ..
விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண உடல் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென இறைவனை பிராத்திக்கிறேன் . உயிரிழந்தவர்களின் குடுபத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் (செப்.28 , 2024 ) விபத்து ஏற்பட்டது . இதுபோன்று 2024 - ம் வருடத்தில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் 17 விபத்துகள் ஏற்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு வெடி விபத்து என்பது தொடர் கதையாகி வரும் நிலையில் . தமிழக அரசு இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை . தமிழக முதல்வர் பட்டாசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற விபத்துக்களை தடுக்க தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்...
#virudhunagar #firecracker #explosion #arrested -
John Pandian
@JohnPandianTMMK
சட்ட விரோத மதுக்கடைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் :-
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சட்டவிரோதமாக தனியார் மதுக்கடை ஒன்றில் காலையில் இருந்தே மது விற்பனை நடைபெறுவதை ஊடக நண்பர்கள் வெட்ட வெளிச்சமாக காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது ...
தமிழகத்தில் அன்றாடம் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் இதுபோன்று சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை ஆளும் திமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது .
தமிழக முதல்வர் அவர்கள் விளம்பரங்களில் மட்டும் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கூறி கொண்டிருக்கிறார் . இது போன்று விற்பனை நடைபெற்றால் எப்போது மது இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும் .
இது போன்று பல்வேறு மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது . இதனை காவல் துறை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது . இதனால் இளைஞர்கள் , பல்வேறு குடும்பங்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது ..
இதனை தமிழக முதல்வர் அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
#dindukal #palani @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji @CMOTamilnadu @IPeriyasamymla
#udhayanidhistalin #tnnews #dindugal #palani #tasmac -
John Pandian
@JohnPandianTMMK
அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து இன்று ( வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ( பாட்டாளி மக்கள் கட்சி) பசுமை தாயகத்தின் தலைவர் திருமதி.சௌமியா அன்புமணி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பெண்களுக்கு எதிராக குற்றம் செய்யும் குற்றவாளிகளை கைது செய்யாமல்; அதற்க்கு நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்.!
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை "இரும்பு கரம்" கொண்டு "தமிழக அரசு" தடுத்திடவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
#annauniversityissue #aminext #students #sexualharassment #sexualassault #harassment #annauniversity #pmk #tnpolice #sowmiyaanbumani -
John Pandian
@JohnPandianTMMK
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2025
#happynewyear2025
புத்தாண்டில் புதுமைகள் தொடர,
மாற்றங்கள் மலர,
மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் நிலைக்கட்டும்.
அனைவருக்கும்
இனிய #புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
#happynewyear2025 #happynewyear2025wishes #புத்தாண்டு #happynewyear #happy2025 #welcome2025 #goodbye2024 #happynewyearinadvance -
John Pandian
@JohnPandianTMMK
2024 நவம்பர் 30 அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று 31.12.2024 திருநெல்வேலி மாவட்டம் - தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தென் தலைமை அலுவலகத்தில், திருநெல்வேலி மண்டலத் தலைவர் திரு.கண்மணி மாவீரன் அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நிர்வாகக்குழு தலைவர்வழக்கறிஞர்,திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்களும், மயோபதி காப்பகத்தின் நிறுவனர் மருத்துவர், திரு.ஜெ.ராமசாமி அவர்களும் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்கள்.
#tmmk #johnpandian #hbd #welfare #priscillapandian #ramasamy #kanmanimaveeran #nellai -
John Pandian
@JohnPandianTMMK
இனிய #புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
வரும் 2025 -ம் ஆண்டு நம் அனைவருக்கும் புதிய ஆண்டாக அமைந்திட, அனைத்து மக்களின் எண்ணங்களும், ஏக்கங்களும், இன்பமும் - மகிழ்ச்சியும் இந்த புதிய ஆண்டில் நிரந்தரமாக நிலைத்திட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது #புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#happynewyear2025 #happynewyear2025wishes #புத்தாண்டு #happynewyear #happy2025 #tmmk #wishes #johnpandian -
John Pandian
@JohnPandianTMMK
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன், கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்.
#vijayakanth #captainvijayakanth #vijayakanthgurupoojai #captaingurupoojai #vijayakanthmemorialday #dmdk #கேப்டன் #விஜயகாந்த் #கேப்டன்விஜயகாந்த் #vijayakanthanniversary #premalathavijayakanth #johnpandian -
John Pandian
@JohnPandianTMMK
டிசம்பர் - 28, 2024 தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன், கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரை வணங்குகிறேன்.
தன்னலம் கருதாமல் பலருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டு தமிழக மக்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவை போற்றுவோம்.
#thedayofpurestsoul
#புண்ணிய_ஆத்மாவின்_தினம் -
John Pandian
@JohnPandianTMMK
முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கட்சி நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#manmohansingh #omshanti #restinpeace #rip -
John Pandian
@JohnPandianTMMK
வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் ...
டிசம்பர் - 25 கூலி உயர்வு கேட்டு போராடிய உழைக்கும் எனது தொப்புள்கொடி உறவுகள் 44 பேர் உயிர் தியாகம் செய்த கருப்பு தினம் இன்று.
ஆதிக்க வெறியர்களால் தீக்கரையாக்கப்பட்ட எம் இன கீழ்வெண்மணி தியாகிகளுக்கு எனது செம்மாந்த வீர வணக்கம் ...
வணக்கத்துடன் ...
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#keelvenmani -
John Pandian
@JohnPandianTMMK
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்ட ஒழுங்கு பிரச்னை என்பது தற்போதய ஆட்சியில் நிலவுகிறது.
பெண்கள் கல்லூரிகள் , பள்ளிகள் , அலுவலகங்கள் என பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் , குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#annauniversity -
John Pandian
@JohnPandianTMMK
இன்று 25.12.2024 டெல்லியில் இந்திய நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதையை செலுத்தினேன் .
#vajpayee @BJP4TamilNadu @BJP4India -
John Pandian
@JohnPandianTMMK
அன்பு என்னும் விதையை விதைத்திட அடிமை என்னும் சிறையினை உடைத்திட மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினமான இன்று அனைவருக்கும் இனிய #கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ...
#cristmas #merrychristmas #merrychristmas2024 #merryxmas -
John Pandian
@JohnPandianTMMK
டிசம்பர் -24 அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.
தமிழகத்தில் 3 -முறை முதலமைச்சராக இருந்தவர் . என் மீது அதிக அன்பு கொண்டவர். தான் கொண்டு வந்த "சத்துணவுத் திட்டம்" மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியவர்.
இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய "புரட்சி தலைவர்" - "பொன்மன செம்மல்" எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் நினைவை போற்றுவோம்.
வணக்கத்துடன்...
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#mgramachandran #mgr -
John Pandian
@JohnPandianTMMK
விவசாயிகள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். விவசாயிகளை வாழும் கடவுளாக நான் பார்க்கிறேன். நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது வரை விவசாயம் செய்வதில் பெருமை கொள்கிறேன் ...
“தேசிய விவசாயிகள் தின”த்தில் விவசாயம் வளர்ந்திடவும், விவசாயிகள் வாழ்வு செழித்திடவும் வேளாண் குடி மக்கள் அனைவர்க்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்...
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#formersday -
John Pandian
@JohnPandianTMMK
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கொல்லைமேடு துருவம் பகுதியில் அஞ்சலி என்ற பெண்ணை சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து மன வேதனை அடைந்தேன் ..
உயிரிழந்த சகோதரி அஞ்சலி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இனியும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#vellore -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம் - நெற்கட்டான் செவல் பச்சேரி
சுதந்திர போராட்ட மாவீரர் வெண்ணிக்காலாடியருக்கு வீர வணக்கம் ..
தம் இந்திய திருநாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டதோடு மட்டுமின்றி , தம் குடல் சரிந்த வேலையிலும் போரிட்ட எம் மாவீரரின் நினைவை போற்றுவோம் ..
#vennikaladi -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகத்தை குப்பை கிடங்காக மாற்ற துடிக்கும் கேரளா அரசை வன்மையாக கண்டிக்கிறேன் ...
கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டிய தென்காசி , திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
கேரளாவில் இருந்து தென்காசி பகுதிகளில் இறைச்சி கழிவுகளும் அவ்வப்போது நீர்நிலைகளுக்கு அருகாமையில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தீவிரமாக கண்காணித்து அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை கேட்டு கொள்கிறேன் ..
#kerala #tnnews #tenkasidistrict #tirunelvelidistrict -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படும் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களை; மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அமித்ஷா அவர்களின் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தவறுதலாக சித்தரித்து வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அனைவருக்குமான தலைவர், அவர் ஒன்றும் சாதி தலைவர் அல்ல; எனவே புரட்சியாளரை வைத்து கொண்டு சிலர் அரசியல் லாபம் தேடுகிறார்கள்.
#congressinsultsambedkar #amitshah #ambedkar #amitshah #amitshahonambedkar #amitshahspeech -
John Pandian
@JohnPandianTMMK
சென்னையில் பத்திரிக்கையாளர் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...
பத்திரிக்கையாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரும் ஜனநாயக முறையில் செயல் பட வேண்டுமென கேட்டு கொள்கிறேன்...
@chennaipressclu #chennaipressclub #seniorjournalists #election2024 -
John Pandian
@JohnPandianTMMK
தென் மாவட்டங்களில் மழை அடிப்படை வசதிகள் மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ..
தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.இதேபோல் நெல்லையிலும் பரவலாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மாஞ்சோலை எஸ்டேட் ஊத்துமலையில் 500 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் சூழ்ந்துள்ளது.
இதனால், தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டுமென கேட்டு கொள்கிறேன் .
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#chennairainsupdate #tenkasirains #nellairains #tuticorin -
John Pandian
@JohnPandianTMMK
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு . ஈ. வி . கே . எஸ் . இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் , கட்சி நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#evkselangovan -
John Pandian
@JohnPandianTMMK
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், திரு . குகேஷ் அவர்கள் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . வெற்றி பெற்ற வீரருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இது தமிழ்நாட்டை மற்றுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை. இது போன்று தொடர்ந்து பல சாதனைகளை பெற வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன் ,
தமிழினவேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#gukesh #chess #chesschampionship
John Pandian
@JohnPandianTMMK
@DGukesh congratulation..
-
John Pandian
@JohnPandianTMMK
நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும் . அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி .
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்
வாழ்த்துக்களுடன் ...
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#bharathiar -
John Pandian
@JohnPandianTMMK
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே நிகழ்கிறது.
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ள செய்தி மன வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நிலை எப்போது ஏற்படுகிறதோ அப்போது குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும் .
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே சரி இல்லாமல் போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கும் நிலையில் குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்த காவல் துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் அவர்கள் இது போன்ற குற்ற சம்பவங்களில் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் .
#ayanavaram #chennai @mkstalin @CMOTamilnadu @tnpoliceoffl -
John Pandian
@JohnPandianTMMK
சென்னை தாம்பரம் 13-வது வார்டு பல்லாவரம் பகுதியில் வசிக்கும் மக்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி நேற்று திடீரென வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டதை அறிந்து வேதனை அடைந்தேன் .
இவர்கள் அனைவரும் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இன்றும் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மொத்தமாக 30 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இதில் 2 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த உயிரிழப்பிற்கு காரணம் அரசின் அலட்சிய போக்கு தான்.
மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டு கொள்கிறேன் . மனிதன் அத்தியாவசியத்தில் குடிநீரும் ஒன்று என்பதை கருத்தில் கொண்டு அதனை முறையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென தமிழக அரசை கேட்டு கொள்கிறேன் .
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#thambaram @mkstalin @CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
இன்று ( 05.12.2024 ) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக R . S . மங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தேன் . இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
#ramanathapuram -
John Pandian
@JohnPandianTMMK
புரட்சி தலைவி அம்மா அவர்களின் நினைவை போற்றுவோம் ...
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வார்த்தைக்கேற்ப மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த இரும்பு மங்கை புரட்சி தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவை போற்றுவோம் ...
தமிழின வேந்தர்
பெ,ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@AIADMKOfficial @AIADMKITWINGOFL #jeyalalitha @NewsJTamil @NewsTamilTV24x7 @polimernews -
John Pandian
@JohnPandianTMMK
வங்கதேசத்தில் அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது தொடர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மீளா துயரத்தில் உள்ளனர். வன்முறை நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வங்கதேச அரசை கண்டித்து இன்று சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக-வினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை கைது செய்யும் திமுக அரசின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
வங்க தேசத்தில் இந்து மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற கவலை கூட இல்லை . ஆனால் அதே இந்து மக்கள் தான் இங்கு வாக்களிக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
மேலும், இந்துக்களுக்காக போராடும் அனைத்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#alleyesonindianmuslims @mkstalin @CMOTamilnadu @NewsTamilTV24x7 @BJP4TamilNadu @BJP4India @annamalai_k @HRajaBJP @DrTamilisai4BJP -
John Pandian
@JohnPandianTMMK
தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பே கோபுரம் தெரு, சின்னக்கடை தெரு, போளூர் சாலை, வேலூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.
இத்தகைய சூழலில் தான் திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் பகுதியில் நேற்று (01.12.2024) இரவு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தமிழக அரசு மீட்பு பணிகளை துரித படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன் ..
என்றும் மக்கள் பணியில்,
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் -தலைவர்
தமிழக மக்கள் முனேற்றக் கழகம் .
#chennairains #chennairainsupdate #thiruvannamalai -
John Pandian
@JohnPandianTMMK
இன்று (02.12.2024) பிறந்தநாள் காணும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மாண்புமிகு ஜே .பி . நட்டா ஜி அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ,உடல் நலத்துடனும் வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன் ...
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் -தலைவர்
தமிழக மக்கள் முனேற்றக் கழகம் .
@JPNadda @BJP4India @BJP4TamilNadu @OfficeofJPNadda -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம் - கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர் திருமண மண்டபத்தை திறந்து வைத்தேன். இந்த மண்டபத்தின் கட்டிடத்தின் என்னுடைய பங்களிப்பும் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அங்குள்ள ஊர் நாட்டாண்மை மற்றும் ஊர் பொதுமக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் . அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .
அனைத்து மக்களும் சேர்ந்து கேக் வெட்டி எனது பிறந்த நாளை முதல் நிகழ்ச்சியாக அந்த மண்டபத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர் .
#kadayanallur -
John Pandian
@JohnPandianTMMK
தென்காசி மாவட்டம் - கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர் திருமண மண்டபத்தை திறந்து வைத்தேன். இந்த மண்டபத்தின் கட்டிடத்தின் என்னுடைய பங்களிப்பும் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அங்குள்ள ஊர் நாட்டாண்மை மற்றும் ஊர் பொதுமக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் . அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .
அனைத்து மக்களும் சேர்ந்து கேக் வெட்டி எனது பிறந்த நாளை முதல் நிகழ்ச்சியாக அந்த மண்டபத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர் .
#kadayanallur -
John Pandian
@JohnPandianTMMK
பருவமழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது .அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, தலையாமங்கலம், நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட பல பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 1000 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலைப் பயிரான வெற்றிலை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட வெற்றிலைகள் மழை நீரில் சேதமடைந்துள்ளன .
அரசு பாதிப்படைந்த மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@mkstalin @CMOTamilnadu -
John Pandian
@JohnPandianTMMK
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய எனது குடும்பத்தினருக்கும் , சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , அரசியல் கட்சியினர் மற்றும் தொழிலதிபர்கள் , தமிழக மக்கள் முன்னேறக் கழகத்தின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடிதம் மற்றும் அலைபேசியின் வாயிலாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..
-
John Pandian
@JohnPandianTMMK
இன்று 30.11.2024 திருநெல்வேலி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து எனது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதில் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அனைத்து நிலை நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு தலை கவசம் வழங்கினேன் .
@TmmkMediaOff @TMMKofficial -
John Pandian reposted
Dr.L.Murugan
@DrLMurugan
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், சகோதரர் திரு.@JohnPandianTMMK அவர்களுக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் அவர்கள், ஆரோக்கியமான உடல் நலமும் மகிழ்வும் பெற்று, சமூகப் பணிகளில் தொடர்ந்து செயல்பட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
-
John Pandian reposted
APR
@APR_Offl
Heartfelt birthday wishes to the founder of the Tamil Makkal Munnetra Kazhagam, Thiru. @JohnPandianTMMK avl!
May the Almighty bless him with good health, happiness, and a long life to continue his service to society. -
John Pandian
@JohnPandianTMMK
திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான திரு .உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் பூரண உடல்நலத்தோடு வாழ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன் ...
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#udhaynidhistalin #hbddycmudhay -
John Pandian
@JohnPandianTMMK
பா.ம.க. நிறுவனர் டாக்டர். திரு . ராமதாஸ் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது கண்டனத்திற்குரியது .
"ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது மூத்த அரசியல்வாதியான திரு .ராமதாஸ் அவர்களை சிறுமை படுத்தும் விதமாக கருதுகிறேன் .இதற்காக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதித்து அவர்கள் கூறிய கருத்துக்கு தகுந்த தீர்வு காண வேண்டும் என்பதே ஜனநாயகம் ..
என்றும் மக்கள் பணியில்
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@mkstalin @drramadoss @draramadoss -
John Pandian
@JohnPandianTMMK
இந்திய அரசியலமைப்பு தினத்தை நமது அரசியலமைப்பில் பெருமை கொள்வதன் மூலமும், அதைக் கடைப்பிடிப்பதன் மூலமும் கொண்டாடுவோம். உங்களுக்கு இந்திய அரசியலமைப்பு தின வாழ்த்துகள்.
என்றும் மக்கள் பணியில்
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#indianconstitutionday -
John Pandian
@JohnPandianTMMK
தேவேந்திர குல வேளாளர் மக்களை பொது மேடையில் இழிவாக பேசிய தோழர் . ஓவியா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்
உலகில் நெல் நாகரிகத்தை கற்று கொடுத்த வரலாற்று பெரும்பான்மை சமூகமான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை இழிவான வார்த்தைகளால் பேசிய திருமதி . ஓவியா வள்ளிநாயகம் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் மிக பெரும்பான்மையான சமூகம் தேவேந்திர குல வேளாளர் சமூகம் . நெல் நாகரீகத்தை கண்டறிந்து மானுடம் உயிர் வாழ வேளாண்மை செய்யும் தேவேந்திர குல வேளாளர்களை கேவலமான வார்த்தைகளால் பேசிய தோழர் . ஓவியா அவர்களை கைது செய்ய வேண்டுமென தமிழக காவல் துறையை கேட்டு கொள்கிறேன்.
வன்முறையை தூண்டும் வகையில் தேவேந்திர குல வேளாளர்களை அவர் பேசியுள்ளார். தேவேந்திர குல வேளாளர்களுக்கு தோழர் . ஓவியா அவர்கள் வரலாற்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை .
தேவேந்திர குல வேளாளர்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு ஓராண்டு கடந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சட்டை தொடர் போராட்டத்தின் விளைவாக தேவேந்திர குல வேளாளர் என்று தலை நிமிர்ந்துள்ள நிலையில் திட்டமிட்டு அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தோழர் ஓவியா அவர்கள் இந்த கருத்தை பொது மேடையில் பதிவு செய்திருப்பாதக நான் கருதுகிறேன் . அவரை மீண்டும் வன்மையாக கண்டிக்கிறேன் ..
இது போன்ற பேச்சுக்களை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் . பெரும்பான்மையான மக்களின் தேவை என்ன கோரிக்கை என்ன என்று உணர முடியாதவர்கள் அற்ப அடையாள அரசியலுக்காக பேசுவது சமூகத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது. எனவே அவரை தமிழக காவல் துறை கைது செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்,
தமிழின வேந்தர்,
பெ. ஜான் பாண்டியன் எம். ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@mkstalin @tnpoliceoffl -
John Pandian
@JohnPandianTMMK
கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன்.
வழக்கறிஞர் கொடூர தாக்குதலை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது .
இந்த சம்பவம் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள், காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில், மக்கள் அதிகம் நடமாடும் நடைபெற்றிருக்கிறது . தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாத அரசாக திகழ்கிறது.
வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு தமிழக அரசு வழங்க வேண்டுமென தமிழக முதலவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
என்றும் மக்கள் பணியில்,
தமிழின வேந்தர்,
பெ. ஜான் பாண்டியன் எம். ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@mkstalin @Udhaystalin #krishnagiri -
John Pandian
@JohnPandianTMMK
தஞ்சாவூர் - மல்லிபட்டினம் ஆசிரியை ரமணி அவர்கள் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மறைந்த ஆசிரியை ரமணி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து இருப்பதை பல்வேறு சம்பவங்களை நினைவில் கூறலாம்.
கிண்டி அரசு மருத்துவ மனையில் மருத்துவர் பாலாஜி என அரசு வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்பது வேரோடு சாய்ந்து விட்டது. இந்த அரசு சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டுமென வலியுறுத்திகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Anbil_Mahesh @Udhaystalin #teacher #murder #tangore -
John Pandian
@JohnPandianTMMK
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய மதுரை - சின்ன உடைப்பு கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.!
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், அப்பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வசித்துவரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.
அறவழியில் குழந்தைகளுடன் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராடி வருகின்றனர். இதனை ஆயிரக்கணக்கான காவலர்களை கொண்டு அடக்க நினைப்பது பெங்குற்றமாக கருதுகிறேன்.
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin @tnpoliceoffl @aaimduairport #cmotamilnadu #mkstalingovt #tnpolice #maduraiairport #agriculture #land #chinaudaippu #tmmk #johnpandian -
John Pandian
@JohnPandianTMMK
"நம் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதோடு மட்டுமின்றி,இரட்டை ஆயுள் தண்டனையையும் அனுபவித்து, சிறையிலே செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவை போற்றுவோம்..
வீர வணக்கத்துடன் ...
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#vocpillai #tuticorin -
John Pandian
@JohnPandianTMMK
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் உறவினர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் ..
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் துணை நிற்கும் .
அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் திரு .பாலாஜி அவர்கள் பூரண உடல்நலத்தோடு வீடு திரும்ப வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் .
@mkstalin @CMOTamilnadu @Udhaystalin @Subramanian_ma -
John Pandian
@JohnPandianTMMK
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது : வன்மையாகக் கண்டிக்கிறேன்
தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (நவ.12) நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் படகுடன் சேர்த்து சிறைபிடித்துச் சென்றதை வன்மையாக கண்டிக்கிறேன் ..
தொடர்ந்து இலங்கை கடற்படை தனது அராஜகத்தை நடத்துகிறது .. இதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்...
என்றும் மக்கள் பணியில்
தமிழின வேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
@ARROffice @mkstalin @Udhaystalin @BJP4India -
John Pandian
@JohnPandianTMMK
தமிழனின் வீரத்தையும் , பெருமையையும் உலகிற்கு பறைசாற்றிய தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 சதய விழா சிறப்பாக நடை பெற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் புகழை போற்றி அன்னாரின் ஆட்சி முறையை பின்பற்ற பாடுபடுவோம் ..
வாழ்த்துக்களுடன் ...
தமிழினவேந்தர்
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#rajarajachozhan #thanjavur -
John Pandian
@JohnPandianTMMK
இன்று (08.11.2024 ) பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திரு. @Seeman4TN அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..
அவர் நீண்ட ஆயுளுடனும் உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகிறேன்.
@NaamTamilarOrg @Seeman4TN #hbdseeman -
John Pandian
@JohnPandianTMMK
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் மீது காரில் வந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அறிந்து மன வேதனை அடைந்தேன்.
சிறுவனின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் சிறுவன் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி அறிந்தேன். அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்..
தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டுமெனவும்,
இதுபோன்று சம்பவங்கள் நிகழ்ந்தால் சாதி ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே
சிறுவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் கேட்டு கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin @tnpoliceoffl -
John Pandian
@JohnPandianTMMK
"தமிழ்நாடு" தினம் இன்று!
நவம்பர்-01 தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதே அன்றைய மெட்ராஸ் (சென்னை ராஜதானி), இந்தப் பகுதிகளே மொழிவாரி மாநிலங்களாக 1956 நவம்பர் 1 அன்று தனித்தனியே பிரிக்கப்பட்டன. இவ்வாறு நவம்பர் 1 அன்று 'மெட்ராஸ் ஸ்டேட்' என்கிற தனிமாநிலம் உருவானதை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 1 தமிழ்நாடு உருவான நாளை கொண்டாடுவதில் தமிழராகிய நாம் பெருமிதம் கொள்வோம்.
#தமிழ்நாடு #tamilnadu #tamilnaduday -
John Pandian
@JohnPandianTMMK
இனிப்பைப் போல தங்கள் வாழ்வும் இனிப்பாய் அமைந்திட அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
#deepavali2024 #deepavali #diwali #diwalicelebration -
John Pandian
@JohnPandianTMMK
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கை கோட்பாட்டை முன்வைத்து மாநாடு நடத்திய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தம்பி திரு .விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்திவரும்இடஒதுக்கீடு பற்றிப் பேசிய அவர், ‘விகிதாச்சார இடப்பங்கீடு’ தான் உண்மையான சமூகநீதி என மாநாட்டில் குரல் எழுப்பிதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் ..
தற்போது மாநாட்டில் தனது கொள்கைகள் மற்றும் கூட்டணி ஆட்சி வரவேண்டுமென அறிவித்த தம்பி திரு . விஜய் அவர்கள் அதனை முறையாக செயல்படுத்தவேண்டுமெனவும் அவரது அரசியல் பணி சிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..
என்றும் மக்கள் பணியில்,
தமிழினவேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@actorvijay @tvkvijayhq @TVKVijayTrends @newstamil @news7tamil @News18TamilNadu #தமிழகவெற்றிக்கழகம் #tvkvijaymaanadu #thalapathyvijay #tvkmaanadu -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக மீனவர்கள் கைது செய்த 12 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவர்கள் பல படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் மீனவ சகோதரர்களுக்கு குரல் கொடுத்து வரும் நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் .
என்றும் மக்கள் பணியில்,
தமிழினவேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@mkstalin @Udhaystalin -
John Pandian
@JohnPandianTMMK
இன்று (25 .10 .2024) சென்னை மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் சூளைமேடு பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது .
விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினேன். இவ்விழாவில் கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் ஜா.வியங்கோபாண்டியன் அவர்களும் உடன் இருந்தார் .
பின்பு கழக ஆட்டோ ஓட்டுநர் சகோதரர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கினேன் .. இதில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
என்றும் மக்கள் பணியில்,
தமிழின வேந்தர்,
பெ. ஜான்பாண்டியன் எம் எ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#chennai #choolaimedu #nungambakkam -
John Pandian
@JohnPandianTMMK
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்டு மீண்டும் இரண்டாவது முறையாக பாடிய போதும் தவறாகவே பாடப்பட்ட செய்தி வேதனையளிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் திரு.ஆர் .என் ரவி அவர்கள் பங்கேற்று சென்னைத் தொலைக்காட்சி நடத்திய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதை ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்தனர் . தற்போது துணைமுதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக தமிழ்தாய் வாழ்த்து படித்ததற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ..
சென்னைத் தொலைக்காட்சி நடத்திய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடியதர்க்கு அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டதைப் போன்று, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த துறை மன்னிப்பு கேட்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையாக பயிற்சி பெற்றவர்களை பாட வைக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன் ..
என்றும் மக்கள் பணியில்,
தமிழின வேந்தர்,
பெ. ஜான்பாண்டியன் எம் எ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@Udhaystalin @mkstalin @CMOTamilnadu @tnnewsupdates -
John Pandian
@JohnPandianTMMK
தமிழக பாஜக துணைத் தலைவர் திரு. நாராயணன் திருப்பதி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன்...
தமிழின வேந்தர்
பெ. ஜான்பாண்டியன் எம். ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@BJP4India @BJP4TamilNadu @narayanantbjp -
John Pandian
@JohnPandianTMMK
அரசு பேருந்துகள் இருக்கும் பொழுது தனியார் பேருந்துகளை இயக்க நினைக்கும் போக்குவரத்து துறை தனது திட்டத்தை கைவிட வேண்டும்.
அரசிடம் கூடுதல் பேருந்துகள் இருக்கும் போது தனியார் பேருந்துகள் எதற்கு என தொமுச தவிர மற்ற தொழிற்சங்க அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை செய்தி தாள்கள் மூலம் தெரிந்து கொண்டேன்...
அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளுக்கு கூடுதல் தொகை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
எனவே தமிழக அரசு தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் போக்கை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழக அரசையும் மற்றும் போக்குவரத்து துறையையும் கேட்டு கொள்கிறேன்...
என்றும் மக்கள் பணியில்,
தமிழின வேந்தர்,
பெ. ஜான்பாண்டியன் எம் எ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@sivasankar1ss @mkstalin @tnstc_setc -
John Pandian
@JohnPandianTMMK
வளமான, பாரதத்தை உருவாக்க மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரம் கோர்த்து இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் மரியாதைக்குரிய திரு .அமித்ஷா ஜி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..
அவர் நீண்ட ஆயுளுடனும் பூரண உடல் நலத்துடனும் இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன்...
தமிழினவேந்தர்
பெ. ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@BJP4India @BJP4TamilNadu @AmitShah -
John Pandian
@JohnPandianTMMK
இன்று (அக்டோபர் - 17) பிறந்தநாள் காணும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்க்கவுன்சில் நிர்வாக குழு தலைவரும் , எனது துணைவியருமான -வழக்கறிஞர்
திருமதி .ஜா.பிரிசில்லா பாண்டியன் எம்.ஏ.,பி.எட்.,எம்.எல்., அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னோடு துணைநின்ற எனது துணைவியார் நீண்ட ஆயுளுடனும் வழக்கறிஞர் துறையில் இன்னும் பல வெற்றிகளை அடைய வேண்டுமென இந்த பொன்னாளில் வாழ்த்துகிறேன்...
வாழ்த்துக்களுடன் ...
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@priscillaTMMK -
John Pandian
@JohnPandianTMMK
இன்று பிறந்த நாள் காணும் பாஜக சட்டமன்றக் குழு தலைவரும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான அன்பு சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் பூரண உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
@NainarBJP @BJP4TamilNadu #nainarnagendran #bjp #hbd






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































