காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதுவும், இந்த இரண்டு மனுக்களை
ஒரே வார்த்தையில் “Dismissed” எனக்
கூறி தள்ளுபடி செய்துள்ளதாக
செய்திகள் வருகின்றன.
இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதே இன்றைய முதல்வருக்கு தெரியாது என்பதால், Judgement-ல் இருந்து சில பக்கங்களை இணைத்துள்ளேன்.
இந்த அவமானம் “வெற்றி” மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது?
காவிரி விவகாரம் தொடர்பாக
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள்.
காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேசமாட்டீர்கள்.
சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள்.
தமிழ்நாட்டிற்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்வரை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், டெல்லியில் அவரோடு போட்டோவுக்கு Pose கொடுக்கிறீர்கள்.
ஜூன்-12 அன்று மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது.
தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும்,
நமக்கு உரிமையான நீரைப் பெற வக்கற்ற இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த கையாலாகாத அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது .
டெல்லிக்கு போய் சோனியா காந்தி அவர்களின் குடும்பக் கதையை கேட்டு சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட இல்லையா @actorvijay அவர்களே?
எப்போது பார்த்தாலும் “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே- உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், “உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
@CMOTamilNadu அவர்களே-
தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு,
விவசாய மக்களின் வாழ்க்கையோடு
விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,
மாண்புமிகு அம்மா, நான் என தொடர்ந்து @AIADMKOfficial கடுமையான,
போராட்டங்களுக்கு பிறகு பெற்ற
உரிமை இது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம்.
நீர் இன்றி நெல் இல்லை.
நெல் இன்றி குடி இல்லை.
குடி இல்லையேல் கோன் எதற்கு?
என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்!
#cauveryrights
Edappadi K. Palaniswami
Edappadi Karuppa Palaniswami, popularly known as EPS (born 12 May 1954), is an Indian politician who served as the seventh chief minister of Tamil Nadu from 2017 to 2021. He has been the general secretary of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) since 28 March 2023. Previously, he has served in various leadership roles in the AIADMK since 2016. More on Wikipedia
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#guidancetn நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #guidancetn ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #guidancetn மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #operationmole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!) -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை மாதவரம் பகுதியில் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
இதன் சந்தை மதிப்பு 700 கோடி ரூபாய் வரை இருக்கும் என வருகின்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப்பொருளை ஒழிப்பதில் இன்றைய முதல்வர் தலைமையிலான அரசு தீவிரமாக இருப்பதாக டிஜிபி பிரஸ் மீட் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் இவ்வளவு பெரிய Drug Movement தலைநகரில் நடந்திருக்கிறது என்றால், டிஜிபி விடுத்த எச்சரிக்கைக்கோ, இன்றைய முதல்வரின் அரசின் மீதோ கொஞ்சம் கூட போதை மாபியாவுக்கு பயமே இல்லை என்று தானே இதைப் பார்க்க வேண்டும்?
மாநில அரசின் காவல்துறையோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவோ இதை பறிமுதல் செய்திருந்தால் கூட, “ஆஹா… இந்த அரசு சொன்ன மாதிரியே Action-இல் இறங்கிவிட்டதே” என்று பாராட்டி இருக்கலாம். ஆனால், இந்த போதைப்பொருளைப் பிடித்தது மத்திய அரசின் DRI அமைப்பு!
ஆளுகின்ற மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத லட்சணத்தில் தான் இன்றைய மாநில அரசும், காவல்துறையும், அதற்கு பொறுப்பான முதல்வரும் இருக்கிறார்கள்.
போதைப்பொருள் தடுப்புப் படைக்கென பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ. 264 கோடியை வைத்து என்ன செய்தீர்கள் @CMOTamilNadu?
தமிழ்நாட்டில் 70 கிலோ ஹெராயின் என்பதெல்லாம் இதுவரை நாம் கேள்விப்படாத அளவிலான வெட்கக்கேடான செய்தி.
டி-ஷர்ட் ஒன்றைப் போட்டுக்கொண்டு காமராஜர் சாலையில் நீங்கள் Jogging போனதும் போதைப் பொருள் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிட்டீர்களா?
எல்லாவற்றையும் சினிமா கண்ணோட்டத்தில் பார்த்து,
“Start Camera Action” என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிட்டு, Serious-ஆன இந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக
1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை
என தெரிகிறது .
இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட
Late ஆகும் என்பதாலோ என்னமோ,
Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள்.
திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு,
“இதுல எப்படி அண்ணே எரியும்?”
என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.
இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும்
இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து
மக்களைக் காப்பதா?
கலெக்டரைக் காப்பதா?
அணையைக் காப்பதா?
என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”!
ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்.
சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அஞ்சாது போராடிய வீரத்தமிழர், செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial சார்பிலும், என் சார்பிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, சுதந்திர வேட்கையைத் தமிழர் நெஞ்சங்களில் விதைத்த அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்!
#vochidambarampillai -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Some legends are bigger than the game. #msdhoni is one such legend.
He came to Chennai as a cricketer, but became #tamilnadu’s adopted son, Chennai’s pride and an emotion shared by millions.
From the roar of #chepauk’s #anbuden to the sea of #yellove, he has given this city memories that will last a lifetime.
Ranchi may be where he was born, but #chennai will forever be his home.
You may bid farewell to the #ipl as a player, Mahi, but you will forever remain in the hearts of Tamil Nadu.
Wishing you the very best in your new role as Team Mentor. May you continue to inspire generations and create many more memories with @ChennaiIPL.💛
#msdhoni #chennaisuperkings #whistlepodu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் 'ரீல்ஸ்';
தேர்தல் பிரச்சாரத்தின்போதும் 'ரீல்ஸ்';
ஆட்சிக்கு வந்த பிறகும் 'ரீல்ஸ்'; என்று
தலைவன் எவ்வழியோ,
தொண்டன் அவ்வழி
என்பதுபோல், தவெக தலைவர் திரு. @actorvijay-ன் வழியில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக கூட்டணி அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக காவல்நிலையம் என்பது சட்டத்தை பாதுகாக்குமிடம். அமைச்சர்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வதில்லை. ஆனால் தவெக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் முதலமைச்சர் துறையின்கீழ் வரும் தக்கோலம், அரக்கோணம் காவல் நிலையங்களை நள்ளிரவில் ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து அவர்களது மொபைல் போனையும் ஆய்வு செய்ததாக 'ரீல்ஸ்' எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார்.
தவெக அமைச்சர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்றாரா? அல்லது, யாரேனும் விசாரணை கைதியை சந்திக்கச் சென்றாரா? என்றும், காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களின் கைப்பேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'ரீல்ஸ் மோகத்தில்' அமைச்சர்கள் காவல் நிலையங்களில் ஆய்வு செய்வது தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அதேபோல் நேற்று திருச்செந்தூரில். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் கலந்துகொண்ட முருக பெருமானின் சூர சம்ஹார நிகழ்ச்சியில், முதல்வருக்கு 'அரோகரா', இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு 'அரோகரா' என்று தமிழ் கடவுள் முருகப் பெருமானுடன் முதல்வரையும், அமைச்சரையும், ஒப்பிட்டு பாடிய வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் பக்திமேடையை, அவர்களுக்கு பதவியளித்த கட்சித் தலைவரை துதிபாடும் மேடையாக மாற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகம விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தவெக-வினர் பக்தி மேடைகளை 'ரீல்ஸ்' மோகத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு. @DKShivakumar அவர்கள் 'மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை', - 'அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே ஒரு வேற்றுமையை உண்டாக்கும் விதமாக ஒரு மாநில முதலமைச்சர் இவ்வாறு பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.
• பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது' என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
•உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிடக்கூறும் உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆனால் கர்நாடக முதல்வர் சமீப காலமாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மேகதாதுவில் அணை அவசியம் என்று சட்டத்தை மதிப்பவர் போல் பொது வெளியில் பேசிவருகிறார்.
தற்போது மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பியவுடன் வேறு வழியின்றி வரும் வெள்ள உபரிநீரும், கர்நாடக அணைகளின் எல்லைகளை தாண்டி கர்நாடக-தமிழ்நாடு எல்லைகளில் பெய்யும் மழைநீரும்தான் வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நமக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில்லை. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் மழைநீரையும், வெள்ள உபரிநீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தற்போது பேசி வருகிறார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயப் பணிகளுக்கும், 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்குநீரை வாதாடி பெறாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேககாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதுடன், 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் கேள்விக்குறியதாகிவிடும் நிலை ஏற்படும்.
நாளை டெல்லி செல்லும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் திரு. @actorvijay அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் திருமதி. @SoniaGandhi, திரு. @RahulGandhi மற்றும் திரு. @kharge ஆகியோரிடம் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தமிழகத்திற்கு எதிராக பொது வெளியில் பேசி வருவதை எடுத்துக்கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றும்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வபோது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுகளை நடைமுறைபடுத்த அழுத்தம் தரவேண்டும் என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிர்ச்சி அளிக்கின்ற செய்தி வந்துள்ளது.
சினிமா படங்களுக்கு டாப்-10 வரிசை போடுவது போல, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை போடும் அளவிற்கு நிலைமை சந்தி சிரிக்கிறது.
ஒருபுறம் செஞ்சி சிறுமியை இன்னும் “தாய்மாமா” அரசின் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை;
மறுபுறம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை முதல் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை வரை இன்னும் பல கொள்ளைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தவெக அரசு.
இதே சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு Mass BGM போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமான நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது.
நேற்றைய தினம் இதேபோல் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உள்ளிட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா?
“நீதியும் வரல. சாரியும் வரல.”
Accountability என்றால் என்னவென்றாவது தெரியுமா @CMOTamilNadu அவர்களே?
காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் குற்றச் செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வண்ணக் கனவுகளோடு சிறகடிக்கும் நம் செல்லக் குழந்தைகள், ஒவ்வொரு துறையிலும் புதிய சிகரங்களைத் தொடட்டும்.
அன்பும், நல்ல வழிகாட்டுதலும் கொடுத்து அவர்களின் பாதையை அழகாக்குவோம்.
என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருப்பூர் வீரபாண்டி அருகே
11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில்,
கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.
காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை!
ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா @CMOTamilNadu அவர்களே?
கேக் கொடுக்கும் அட்டையில்
All is Well என்று எழுதி இருக்கிறார்களாம்.
உங்கள் ஆட்சியில்
“Is all Well CM?”
குழந்தைகளுக்கு பள்ளி,
வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா?
உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்!
இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்?
பெண்கள் மீது,
பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.
திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை
மௌனம் கலைக்காதவர்,
தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது
கள்ள மௌனத்தை கலைப்பாரா
ரீல் முதல்வர் @actorVijay?
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
மதுரையில் பிரபல நகைக்கடை தனிஷ்க்-ல் 50 கோடி மதிப்புள்ள நகைகொள்ளை..
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம்
1.5 கோடி கொள்ளை..
நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளையடித்த தவெக நிர்வாகி..
விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை.
திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை..
நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.
இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி,
மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி?
Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே!
இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா?
நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன..
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல்
முதல்வர் அவர்களே!
உங்கள் "Action" எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா?
எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு,
உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே திறந்தவெளியாக விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, இரும்புக்கம்பி தலையில் செருகி 25 வயதே நிரம்பிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எந்தவொரு மழைநீர் வடிகால் அல்லது சாலையோரப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும், அங்கே எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தகுந்த தடுப்புகள் (Barricades) அமைத்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்வது அரசின் முதன்மை கடமையாகும்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் குளறுபடிகளாலும், முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் ,
உள்கட்டமைப்புப் பணிகளாலும்,
எந்த நடைமுறைகளும் இங்கு பின்பற்றாத காரணத்தினாலும் , எதிர்கால கனவுகள் நிரம்பிய ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் இங்கே பறிபோயிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத் துறை முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது என்பது முதலமைச்சர் @actorVijay அவர்களின் நிர்வாகத் திறமையின்மையையும் மெத்தனப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி அரைகுறையாகக் கிடக்கும் அனைத்து வடிகால்
பணிகளையும் உடனடியாக
சீரமைத்து பணிகளை பாதுகாப்பு
தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் பொய்க்கால்குதிரை தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
#aiadmkofficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.
குற்றங்கள் நடக்கும் போதெல்லாம், "உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறோம்", "கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று வெறும் பெயரளவு செய்திகளை மட்டும் ஊடகங்களில் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்?
வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்து விட முடியாது.
காவல்துறையை தன் கையில் வைத்துள்ள பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் @actorvijay நிர்வாகத் திறமையின்றி தூங்கிக் கொண்டிருக்கிறாரா?
எனவே இனிமேலும் விளம்பர பாணியில் வெற்று நாடகங்களை நடத்தாமல், தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கும் சட்டம்-ஒழுங்கை உடனடியாக சரிசெய்யவும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தேவையான தக்க நடவடிக்கைகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர்.
அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம் @CMOTamilNadu !!
ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால் ,
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? @cmotamilnadu
பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?
“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர்,
மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும்
துணை சபாநாயகர்,
எல்லாவற்றிற்கும் மேலாக
“ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்”
அனுப்பிய MLA
என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் கட்சியினர் தவறு செய்தால்
வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு , மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் so called spokespersons எவ்வளவு பேசியிருப்பர்??
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?
வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதலமைச்சர் நாற்காலி தான் திரு. ஜோசப் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?
பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக MLA விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே “Good Conduct Certificate” அளித்து வழக்கை இழுத்து மூடியது அதே Formula-வை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?
ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி MLA-வை கைது செய்ய வேண்டும் நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
செய்வீர்களா @CMOTamilNadu ? -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒரே நாளில் 11 கொலைகள்-
தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.
"ரோட்டில் நின்றால் கொலை... தட்டிக்கேட்டால் படுகொலை!" என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.
இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களையே ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
"காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?"
அஇஅதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல்துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத ஆச்சரியக்குறி தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.
அரசியல் என்பது சினிமா செட் அல்ல; முதலமைச்சர் நாற்காலி என்பது 'பஞ்ச் டயலாக்' பேசுவதற்கான மேடையும் அல்ல என்பதை இந்த 'ரீல்' முதல்வர் @actorVijay அவர்கள் இப்போது புரிந்து கொள்வார்?
படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் நிதி உதவி என்பது போதுமானது அல்ல.
அஇஅதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்த அரசும், கடந்த 14.10.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.
தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.
அந்த வகையில், திரு. செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசைக் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதற வைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர்
திரு. @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், நல்ல உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@NaamTamilarOrg
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தீபத் திருநாளாம் #தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#happydiwali
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்
பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
போலி பிம்பங்களை உருவாக்கி, ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் சமீபத்தில்தான் இந்த பெரியார் அறிவுலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோடு ஷோ நடத்துவதிலும், கேமராக்களுக்கு முன்னால் கையசைத்து ஆக்ஷன் செய்வதிலும் காட்டும் ஆர்வம், சிறிதளவாவது தான் திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்கள் சரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என்பதை ஆராய்வதில் இருந்திருக்க வேண்டாமா?
சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் வெட்டி திறப்புவிழா நிகழ்ச்சியில் நடித்துவிட்டு போய்விட்டால் மட்டும் தன் கடமை முடிந்துவிட்டது என முதல்வர் நினைத்துக் கொண்டாரா என்ன?
சென்ற ஆட்சியின் திட்டம் என்று இப்போது வாய்கிழிய பேசும் இதே ஆட்சியாளர்களின் வாய்கள், திறப்பு விழாவின் போது பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்கிறதா?
இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா?
தங்கள் கொள்கைத் தலைவர் பெயரில் ஒரு நூலகம் , நேரடியாக முதல்வரே திறந்தாலும் கூட , ஒரு குறைந்தபட்ச ஆய்வை கூட
இந்த அரசு செய்யாமல் அக்கறை அற்று இருந்திருப்பதும் தவறு தானே!
அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை திமுகதான் என ஆளுங்கட்சியும்,மறுபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை தவெகதான் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை குழப்பி வருகின்றன.
தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தமிழகத்தை ஒரு தொடர் குழப்பநிலைக்கு இவர்கள் தள்ளிவிட்டனர்.
இந்த குழப்பநிலை ஒன்றும் இந்த குழம்பி போன பொய்க்கால் குதிரை அரசுக்கு புதிதல்ல.
ஒரு யூனிட் மின்சாரம் ₹20-க்கு வாங்குவது ஊழல் என்று அன்று சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதே மின்சாரத் துறை அமைச்சர், இன்று ஒரு யூனிட் மின்சாரத்தை ₹40 வரை கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார்.
இது ஊழல் இல்லையா? மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா?
தார் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகம் என்று காரணம் கூறி, பொதுப்பணித்துறை அமைச்சர் அன்று டெண்டர்களை ரத்து செய்தார்.
ஆனால் அன்று ஒரு டன் ₹48,000-க்கு இருந்த தார் விலை இன்று ₹1,00,000-ஐ தொட்டு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
இன்று வரை புதிய டெண்டர்களும் விடப்படவில்லை, பணிகளும் நடக்கவில்லை. அப்படியென்றால் அன்று டெண்டரை ரத்து செய்ததால் யாருக்கு என்ன லாபம்? இது மக்களைக் குழப்பும் செயலில்லையா?
எனவே பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தவெக அரசாக இருந்தாலும் சரி இல்லை முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு!
எனவே ,பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை @AIADMKOfficial சார்பில் வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்களை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனம்.
குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக.
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, “தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?” என்று மக்களே அருவருக்கும் வகையில், “கீழ்மாடியில் ராஜினாமா; மேல்மாடியில் இணைப்பு விழா” என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேறிய ஒரே கட்சி தவெக தான்.
இந்த உண்மைகள் குறித்தெல்லாம் பேச வக்கில்லாத இந்த அரசு, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, கழக நிர்வாகி திரு. மன்னன் அவர்களை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது.
முதல்வரை அணுக முடியாமல், பல Powercenter-களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு, தவெக ஆட்சி மீது ஆளுங்கட்சி MLA-க்கள் பலரே அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. சொந்த கட்சி MLA-க்களை சமாதானப் படுத்த வழி தெரியாமல், இப்படி ஒரு கதையை இந்த அரசு புனைந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அஇஅதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும்!
உடனடியாக திரு. மன்னன் அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும், இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,
வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு.
இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் அழுகி வீனாகி வருவதாக செய்திகள் தெரிய வருகிறது.
250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த 3 நாட்களாக 10 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி, #nafed மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று #nafed தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை!
குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்த திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான்!
இது என்ன சினிமாவா, Take சரியில்லை என்றால் Cut சொல்லிவிட்டு அடுத்த Take-ல் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி ! மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது!
அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் Seriousness புரியாமல், Lethargic-ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விலைவாசி கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்தின் அக்டோபர் மாத #gst வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.
ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன.
திருமலை படத்தில், @actorvijay “Take Diversion “ என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் “Take Diversion” என்று ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு.
தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் GDP முன்னேறி, Per Capita Income உயர்ந்தால் தானே, GST வருவாய் அதிகரிக்கும்?
தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு “Purchasing Power” இல்லாமல் போனால் எப்படி GST வருவாய் உயரும்?
இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தை சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது.
தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கிய @Guidance_TN அமைப்பை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு. குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல இந்த கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்!
தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன Subject என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று Question Paper-ஐ பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்கு தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!!
அதேபோல், எந்த துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா @CMOTamilNadu அவர்களே?
தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று.
நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த #தமிழ்நாடு_நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
வீரத்திலும், அறிவிலும்,
கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு,
அனைத்துத் துறைகளிலும் மேலும்
பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட,
தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.
“வெற்றி ஆட்சி சாதனை மலரில்”
சட்டம் ஒழுங்கு சீர்கேடு,
போதைப்பொருள் கடத்தல்,
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.
தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம்.
இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என @CMOTamilNadu செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற @actorvijay நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.
அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது?
இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது,
சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி
இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?
அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர்
திரு. ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.
#தேவர்ஜெயந்தி மற்றும் #குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், #பசும்பொன் புண்ணிய மண்ணில் அமைந்துள்ள தெய்வத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு சென்று, @AIADMKOfficial சார்பில்
மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட 13.5 கிலோ தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்ட அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன்.
“மனிதனை உயர்ந்தவர், தாழ்ந்தவர்
என ஒழுக்கத்தின் அடிப்படையில்
மதிக்க வேண்டுமே தவிர,
வேறு எந்த அடிப்படையிலும் அல்ல”
என்ற அவரது உயரிய சிந்தனை என்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும்.
#muthuramalingathevar #thevarjayanthi
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.
மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?
வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.
நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!
“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் @CMOTamilNadu அவர்களே ?
மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,
மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,
தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.
மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!
எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் @CTR_Nirmalkumar-ன் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!
அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே @CMOTamilNadu- நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?
கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
அதிகரிக்கும் கொலைகள்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,
ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம்,
தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள்,
சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்,
இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
காவிரி தொழில்நுட்பக் குழுவின் அருமை தெரியாமல் முடக்கி வைத்திருக்கும் திரு. ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல சமையற் கலைஞர் “பத்மஸ்ரீ”
செப் தாமு (எ) தாமோதரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
செப் தாமு அவர்கள் இந்தியாவின் சிறந்த சமையற்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர். சமையலில் கின்னஸ் சாதனை புரிந்தவர்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீதான பெரும் பற்றால் 2013-ம் ஆண்டில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டவர்.
எப்போதும் இன்முகத்துடன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் தோன்றி மகிழ்வித்த அவரை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
திரு. செப் தாமு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சமையல் துறை மற்றும் சின்னத்திரையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.
•சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும்,
•கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே Lift கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும்,
•கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்
வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், திரு. @actorvijay ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை “#leodas”-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் “சமூகநீதி” என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?
ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து, ஊத்தங்கரை சிறுவனைக் காணவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?
இது ஒரு Pattern-ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா?
சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும்,
மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்னக மண்ணில் விடுதலைச் சுடரை ஏற்றி வைத்து, "ஜம்பூ தீவு பிரகடனம்"
மூலம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்ற மாவீரர்கள்!
வளரி வீச்சால் வெள்ளையர் படையை அலறவைத்து, தங்களின் மதிநுட்பத்தாலும் இணையற்ற நிர்வாகத் திறனாலும் தாயகத்தைக் காத்து நின்ற தீரமிக்க மாமன்னர்கள்!
தமிழர்களின் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாய் விளங்கும் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாளான இன்று, அவர்களின் ஒப்பற்ற வீரத்தையும் உன்னதமான தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு @AIADMKOfficial சார்பிலும், எனது சார்பிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
“பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்” என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ, இப்படி ஆளுங்கட்சி தவெக-வின் காமுக SIR-களால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
ஆட்சி தான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.
இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே “சிங்கப்பெண் அதிரடிப் படை” எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்- உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெக-வினர் என்றால், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.
“நமக்கு நாமே பாதுகாப்பு” என்பதே
இந்த ஆட்சியின் அவல நிலை!
@CMOTamilnadu @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm birthday wishes to Hon’ble Union Home Minister Thiru. @AmitShah Avl.
May you be blessed with good health, happiness, and long life as you continue to serve the nation with dedication.
Wishing you continued strength and success in your endeavours towards the security, unity, and development of our great nation.
@HMOIndia @AmitShahOffice
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
காவலர் வீரவணக்க நாளான இன்று, மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் அமைதிக்காகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.
கடமையே உயிர்மூச்சாகக் கொண்டு, பொதுமக்களின் நலனுக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி பணியாற்றும் காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியது.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்று வரை தமிழக முதல்வர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்?
18.10.2026 அன்று @FinMinIndia வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “one of the biggest narcotics seizures in Tamil Nadu’s coastal region in recent years” என்று கூறியுள்ளது.
இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா @CMOTamilNadu ?
இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் Network-ஆக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதல்வராக, Atleast ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த Walter White Behaviour குறித்து திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டசபையில் எதிர்கட்சி பேசும் பொது எப்படி இருப்பாரோ, அதேபோல் மவுன சாமியாராகவே இருக்கிறார்.
கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான Pseudoephederine என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவெக நிர்வாகி பூபாலன் வழக்கிலோ, Fully processed Meth Crystal-களே, அதுவும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது.
ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய International Drug Mafia நடந்திருக்கும் போது, யாருக்காக Anti Drug Marathon ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர் ?
இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம்.
அப்படியென்றால், இந்த போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்து விடுமா?
@CMOTamilNadu அவர்களே,
For Your Information,
இந்த போதைப்பொருளைக் கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் DRI அமைப்பு தான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இது பற்றி ஒரு விளக்கமாவது வருமா?
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நவராத்திரி எனப்படும்
ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில், மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும்.
'விஜயதசமி திருநாளில் தொடங்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும்' என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.
"செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும்; “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்ற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
#ayudhapuja #vijayadashami2026 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் @AIADMKOfficial கழகத்தின் மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா அவர்கள், நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
“தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
#deva
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55yrsofaiadmk
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் @BJP4TamilNadu மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் தொடர்ந்து தாங்கள் மக்கள் பணியாற்றிட என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த பாஞ்சாலங்குறிச்சியின் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், தாய்த் திருநாடு காக்க மரணக் கயிற்றையே அரவணைத்துக் கொண்ட அவர்தம் தீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள்,
கடந்த 12.10.2026 அன்று மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் சார்பில்,
மூன்று நாட்களுக்கு பிறகே (15.10.2026),
முதல்வர் ஒரு சம்பிரதாயக் கடிதத்தை சாவகாசமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதி இருக்கிறார்.
அந்த ஒரு கடிதத்தை தவிர,
எந்த ஒரு அடிப்படை தகவல் பரிமாற்றமோ, அதற்குரிய துறை வாரியான செயல்பாடுகளையோ மீன்வளத்துறையும், ஆட்சியர் அலுவலகமும் இன்று வரை
எடுக்க வில்லை என செய்திகள் வருகின்றன.
மீனவர்களின் வாக்குகளின் மீது காட்டக்கூடிய முனைப்பை,
அவர்களின் வாழ்வில் காட்டாத அக்கறையற்ற இந்த தவெக அரசுக்கு
எனது கடுமையான கண்டனங்கள்.
அந்த பகுதியைச் சார்ந்த அரசு அலுவர்களோ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரோ நேரில் சென்று மீனவர்களின் உறவினர்களை சந்திக்கவோ, பாதிக்கப்பட்ட மீனவர்கள் எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பரிமாறவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி.
இதுகுறித்து மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் சென்று கேட்டாலும், மாவட்ட மீன்வளத் துறை அலுவலகம் சென்று முறையிட்டாலும் எந்த பதிலையும் அளிக்காமல் அலட்சியப் போக்கில் செயல்படுகிறது இன்றைய தவெக அரசு.
இடைத்தேர்தலில் ஓடி ஓடி வாக்கு கேட்ட, மீன்வளத்துறை அமைச்சர்,
தன் பகுதியைச் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தின் போது காணாமல் போயுள்ளாரே? ஏன்?
அங்கு ஏதும் இடைத்தேர்தல் வரப்போவதில்லை என்பதாலா ?
அல்லது வெத்தலை பாக்கு வைத்து அழைத்தால்தான் வருவாரா?
இந்த அரசிடம் நான் அடிப்படையான கேள்வி ஒன்றைக் கேட்கிறேன்-
தவெக அரசிடம் காணாமல் போன மீனவர்களின் விவரங்கள் முதலில் இருக்கிறதா?
3 விசைப்படகுகளில், அதாவது அமல் சங்கர் படகில் 8 பேர், நிக்சன் படகில் 9 பேர் மற்றும் ஆரோன் படகில் 9 பேர் கடலுக்கு சென்றுள்ளனர் என்ற அடிப்படை விவரமாவது இந்த அரசுக்கு தெரியுமா?
காணாமல் போயுள்ள மீனவர்கள் யாரென்று தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்- என்னிடம் உள்ள விவரங்களை நான் அளிக்கிறேன்.
@AIADMKOfficial ஆட்சி இருந்தபோது மீனவர்களை அரணாகக் காத்து நின்றது அம்மாவின் அரசு. மீனவர்களுக்கு ஒன்றெனில், உடனடியாக களத்தில் நிற்பதை உறுதி செய்தோம். மத்திய அரசுடன் உடனடியாக பேசி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம்.
இது தான் அக்கறை உள்ள அரசின் செயல்பாடு.
சுறா படத்தில் வருவது போல் கடலுக்கு நடுவே நீச்சல் அடித்து உங்களை யாரும் மீனவர்களை காப்பாற்றச் சொல்லவில்லை; குறைந்தபட்சமாக ஒரு அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று தான் அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.
மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், அவர்களின் உறவினர்களை மாநில அரசின் சார்பில் அரசு அலுவலர்களை, சட்டமன்ற உறுப்பினரை, துறை அமைச்சரை குறைந்தபட்ச அக்கறையோடு அனுப்பி வைத்து அவர்களுக்கான உரிய தகவல் பரிமாற்றத்தை அளிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்தியாவின் தென்கோடியில்
எளிய குடும்பத்தில் பிறந்து,
வடகோடியில் தமிழர்களின்
பெருமையை நிலைநாட்டிய
மக்களின் குடியரசுத் தலைவர்!
"சாதிக்க வேண்டும்" என்ற கனவும், "உறுதியாக சாதிப்போம்"
என்ற நம்பிக்கையும்,
அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர்!
"கனவு காணுங்கள்" என்ற உன்னத வரிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் நம்பிக்கையை விதைத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அவர்களின் பிறந்தநாளில்...
அவர் வகுத்துத் தந்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து,
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்தில் எதிர்பாராவிதமாக
5 மாதங்களுக்கு முன் அமைந்த
த.வெ.க. கூட்டணி அரசின் ,
தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத வகையில்
யூனிட் ஒன்றுக்கு சராசரியாக
35 ரூபாய் என்ற மிக, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது!
ஏற்கனவே தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கனவே ரூ.1500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்போது சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தலுக்கு முன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, 'டெண்டர்' என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைத்தட்டலை பெற்று. ஆட்சியைப் அமைத்த திரு. ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் பொடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு 'மின் கொள்முதல் ஒப்பந்தம்' செய்வதில் மிகப் பெரிய 'மெகா ஊழல்' நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 'வெற்றி மெகா வசூல் திட்டத்தை' தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.
ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை புரிந்து, #chennaimetro #phase2 திட்டத்தின் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தை துவக்கி வைத்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்களை
சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்றேன்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை, எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு இருந்த போது, இதற்கான DPR தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதி பெற்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிய அரசு அஇஅதிமுக அரசு.
மேலும், மாண்புமிகு பிரதமர் அவர்களை பலமுறை நான் நேரில் சந்தித்து இதற்கான நிதி குறித்து கோரிய நிலையில், மத்திய அரசும் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரூ.63,246 கோடி ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம், வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. @AIADMKOfficial கழக ஆட்சியில் நாம் விதைத்த விதைகள், தற்போது வரை விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், Tunnel அடியில் Safety Helmet போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை.
“நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த இனிய தருணத்தில், தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மெச்சத்தக்க பங்காற்றிவரும் @cmrlofficial அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மழலையின் புன்னகையில் மகிழ்ச்சியையும், அவர்களின் கனவுகளில் நாளைய உலகின் நம்பிக்கையையும் சுமந்து வரும் தேவதைகள் பெண் குழந்தைகள் அனைவருக்கும் உலக பெண் குழந்தைகள் தினமான இன்று, எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு பெண் குழந்தையும் அச்சமின்றி வாழவும், தடைகளின்றிக் கல்வி கற்கவும், தன்னம்பிக்கையுடன் கனவு காணவும், தனது கனவுகளை நனவாக்கவும் வாய்ப்புகளை உருவாக்கித் தர இந்நாளில் உறுதியேற்போம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உலக அரங்கில் மனித உரிமைகளுக்காகவும்,
நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களுக்கு நோபல் அமைதிப் பரிசு கிடைத்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் வேர்களைக் கொண்ட ஒருவரின் மனிதத்திற்கான பயணத்தில், மனிதநேயத்திற்கும் நீதிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்த உயரிய நோபல் பரிசு வாயிலாக அங்கீகரிக்கப்படுவது பெருமைக்குரியது.
உலகெங்கும் அமைதி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட விழையும் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களின் அரும்பணி தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
#navanethempillay
#navipillay #nobelpeaceprize #nobelprize
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,
முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர்
திரு. அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், தொடர்ந்து மக்கள் தொண்டாற்றிட வாழ்த்துகிறேன்.
@draramadoss
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும்
தன் வாழ்நாளை அர்ப்பணித்த
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில்,
அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றப் பாடுபடும் முதலமைச்சர் திரு. விஜய் தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warmest greetings and heartfelt congratulations to Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl on completing 25 years of continuous service as the head of a government.
From Gujarat to the leadership of the Government of India, this extraordinary journey stands as a significant chapter in India’s contemporary public life.
A quarter century dedicated to public service reflects a long and sustained engagement with the aspirations, challenges and ambitions of the people.
On this historic milestone,
I extend my best wishes to our Hon’ble Prime Minister. May the years ahead bring continued strength and dedication in the service of our nation.
@PMOIndia @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம்.
“பாசிசம், பாயாசம்” என்று Rhyming வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி இந்த Reels முதல்வர் Justify செய்வார்?
ஆட்சிக்கு வருவது முன், இதே செவிலியர்கள் முன் நின்று உங்கள் கட்சி நிர்வாகிகள், இன்றைக்கு அமைச்சராக இருப்பவர்கள் பேசியது எல்லாம் நினைவில் இருக்கிறதா? ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா?
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டினால் கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இருக்கிறார் இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர்.
தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து ஒரு வார்த்தை பேசினாரா? செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது இந்த அமைச்சருக்கு?
போராடும் இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது, பேச்சுவார்தை எனக் கூறி அழைத்து சென்று கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயக ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest congratulations to #teamindia on a magnificent #goldmedal 🥇 victory at the #asiangames2026, defeating Pakistan in a memorable cricket final.
This achievement reflects the finest values of Indian sport- discipline, determination, teamwork and an unwavering commitment to excellence.
May this victory inspire millions of young Indians to dream bigger, work harder and carry our Tricolour with pride.
Congratulations to our Men in Blue.
You have brought great honour to the nation. 🇮🇳🏆
#asiangames #indvspak
@BCCI @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அகிம்சை என்னும் ஒற்றை ஆயுதத்தால் உலக வல்லரசின் பேரரசை அசைத்துப் பார்த்த அறத்தின் திருவுருவம்!
சமத்துவம், எளிமை, சத்தியம் ஆகியவற்றைத் தன் வாழ்நாளெல்லாம் மூச்சாகக் கொண்டு, இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுத்த மாமனிதர்!
உடையைத் துறந்து, எளிய வாழ்வை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், கிராமங்களின் உயிர்ப்பாய், இந்தியாவின் பெயரை உலகரங்கில் உயர்த்திய 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று,
தாய்த்திருநாட்டிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவைகளைப் போற்றி வணங்குவதோடு, மகாத்மா காட்டிய சத்திய பாதையில் வழுவாது நின்று, அறவழியில் என்றென்றும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்னைத் தமிழுக்குத் தன் அழகுமிகு உச்சரிப்பால் புகழ் சேர்த்த கலைத்தாயின் தலைமகன்; உணர்ச்சிமிகு நடிப்பால் தலைமுறைகளைக் கடந்தும் தமிழர்தம் இதயமெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளான இன்று,
நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது எனது தலைமையிலான @AIADMKOfficial
அரசு என்ற பெருமிதத்துடன்,
நடிகர் திலகமென தமிழர்களின் நெஞ்சில் நிழலாடும் மாபெரும் கலைஞனைப் போற்றி வணங்குகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
தமிழ் நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் / வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கான நிலுவை சம்பளத்தை வழங்குவதுடன், அவர்களுடைய பணிப் பாதுகாப்பை உறுதி செய்திட த.வெ.க. அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Salute to Captain #smitmachchhar
for his extraordinary courage, presence of mind and dedication in the face of unimaginable danger. His bravery and commitment to protecting the lives entrusted to him deserve our deepest respect.
Wishing Captain Smit Machchhar a speedy and complete recovery. May he regain his health and strength soon.
@AIADMKOfficial
India in Saudi Arabia
@IndianEmbRiyadh
Our Embassy in Riyadh and Consulate in Jeddah have been following the health condition of Mr Smit Machchhar, the brave Indian pilot of Flydubai flight that was diverted to Tabuk today. He is admitted in a hospital in Tabuk city in northwest Saudi Arabia and receiving necessary medical attention. A full update on his health is awaited but he is reported to be in stable condition. We hope that he recovers from his injuries at the earliest. We are in touch with his family and assure them that we will continue to follow up on his health with Saudi authorities and extend all possible assistance for his wellbeing.
@MEAIndia -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..?
தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்?
மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்த செய்தியும் வரவில்லை.
கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது.
மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் @DKShivakumar, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. @CRPaatil அவர்களை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.
தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா?
தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை.
அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம்.
உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதல்வர் வாய்கிழிய பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாகியிருக்கும் அவலம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்தும் இன்றைய முதல்வர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்?
“அண்ணன், தாய் மாமன்” என்று தனக்கு Branding செய்துகொள்ளும் இந்த நடிப்பு முதல்வர், பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய் மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா?
ஆட்சி என்பது கவர்ச்சியான வார்த்தைகளால் நடத்துவது அல்ல-
ஆட்சி என்பது செயல்!
மதுராந்தகத்தில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் கால் வைக்கப் போகும் முதல்வர், இது போன்ற கொடூர சம்பவங்களுக்கான விளக்கத்தை அளிப்பாரா?
அல்லது, வழக்கம் போல பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் சுழற்றுவது மட்டும் தானா?
Reels Content-காக மட்டுமே ஆட்சியை நடத்தி, Real Action- ல் எதுவும் இல்லாத, தமிழகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் Compromise செய்துள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை “Delete” செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.
@CMOTamilNadu அவர்களே- உங்கள் ஆட்சியில் காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா ?
அரசுப்பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே “False News” என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்.
தமிழ்நாட்டில் திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் காவல்துறையும் ரூட் மாபியா பாணியை கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா?
High Profile Cases என்றால் ஒரு சட்டம்,
சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?
Costly முதலமைச்சர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாக தான்! தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச-பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.
இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும்.
தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.
பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை @AIADMKOfficial தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.
இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
தமிழ் நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்காமல், மக்களின் உயிரோடு விளையாடும் த.வெ.க. அரசுக்கு கடும் கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தீண்டாமை ஒழிப்பு, சாதிப் பாகுபாடு ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், இட ஒதுக்கீடு மற்றும் நில உரிமை எனப் பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை சமரசமின்றி உறுதியுடன் போராடிய
ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில், சாதியற்ற சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பெரும் சேவைகளை நினைவு கூறுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் குடமுழுக்குத் திருநாளில், மதுரையை தன் பேரருளால் ஆளும் அங்கையற்கண்ணியை போற்றி வணங்கி,
அனைத்து பக்தர்களுக்கும்,
மதுரை மண்ணில் இருந்து என்னுடைய வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும், அமைதியும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.
#maduraimeenakshi
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm birthday wishes to our Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl.
Your decisive leadership and unwavering commitment to the nation continue to strengthen India’s progress and prosperity.
Wishing you good health, long life and continued strength in the service of our nation.
@PMOIndia
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும்,
சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, சுயமரியாதை- பகுத்தறிவு- சமத்துவம்- சமூகநீதி எனும் நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரது போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது.
அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல்.
“பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம்.
#periyarforever
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சுதந்திரப் போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து உழைத்த சிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, போற்றுதலுக்குரிய திரு. S.S. ராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-ஆவது பிறந்த நாளான இன்று, அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது மட்டுமின்றி அவரின்
திருஉருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைத்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்பதை பெருமையுடன் இந்நாளில் நினைவுகூர்கிறேன் .
சென்னை, கிண்டி, ஹால்டா அருகில் அமைந்துள்ள திரு. S.S. ராமசாமி படையாட்சியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது அறிவுறுத்தலின் படி, தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும்; சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
அதிகாரத்தை விட கொள்கையையும்,
பதவியை விட மக்களையும்,
தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும்
என்றும் வீற்றிருக்கும்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.
மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் #அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!
வாழ்க அண்ணா நாமம்!
#cnaisourdna
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest congratulations to the Indian Women’s Cricket Team on winning the Asia Cup and bringing immense pride to our nation! 🇮🇳🏆
Your exceptional skill, determination and fighting spirit have once again demonstrated the strength of Indian women on the world stage.
May this glorious victory inspire millions of young girls across the country and pave the way for many more remarkable achievements.
@AIADMKOfficial
@BCCIWomen
#teamindia #womensasiacup #champions -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விநாயகப் பெருமானின் திருவருளால் 'நாடெங்கும் நலமும்; வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து,
வினை தீர்க்கும் தெய்வமாகவும்;
முழுமுதற் கடவுளாகவும் விளங்கும், விநாயகப் பெருமான் அவதரித்த
#விநாயகர்சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
-குறள் 387
The timeless wisdom of Thiruvalluvar once again found its rightful place on the global stage.
By presenting a #russian translation of the #thirukkural to President Vladimir Putin, our Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl has celebrated one of Tamil civilization’s greatest gifts to humanity. A profound gesture that carries the voice of Tamil culture, ethics, and universal values beyond borders.
Tamil is not just an ancient language, it is a living source of wisdom for the world. It is heartening to see the Thirukkural being honoured as a global treasure through India’s cultural diplomacy.
My appreciation to Hon’ble Prime Minister Thiru. Narendra Modi Avl for taking the greatness of Thirukkural and the pride of Tamil heritage to the international community.
#thirukkural #tamil #culturaldiplomacy #india #brics
@PMOIndia @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழின் இனிமையையும்,
பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த
தமிழறிஞர், பேராசிரியர்,
பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.
இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று @AIADMKOfficial கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தனது எழுத்தாலும், சிந்தனையாலும், புரட்சிகரமான கருத்துகளாலும் தமிழ்ச் சமூகத்தில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விடுதலை உணர்வு, அச்சமின்மை, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தமிழ்ப்பற்று ஆகிய விழுமியங்களை விதைத்த முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றிப் வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து, சமூகத்தில் தீண்டாமை நீங்கி சமத்துவம் தழைக்க பாடுபட்டவரும், தனது இளம் வயதிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியவரும், இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் 69-ஆவது நினைவு நாளான இன்று, அவர்தம் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் பேரன்பிற்குரிய
மூத்த அரசியல்வாதியும்,
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளருமான மறைந்த முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளில், அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் கொள்கைகளையும்,
மக்கள் நலச் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் சென்ற திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்தம் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.
அவரது பொதுவாழ்வும், திரைத்துறைக்கான பங்களிப்பும் தமிழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
#rmv100 @AIADMKOfficial
@SathyaJyothi -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகம் திண்டுக்கல், மதுரை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் நடந்த பயங்கர விபத்தில் உயிர் இழந்த சம்பவம் மனவேதனை தருகிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள மாநிலத்தில் உள்ள மாணவர்கள் உடலை பத்திரமாக கொண்டுவர, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிந்து நின்று, சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, தமிழர்களின் தொழில் வலிமையையும் தேசிய உணர்வையும் உலகறியச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர், சுதந்திரத்திற்காகச் சிறை, செக்கிழுத்தல் என கொடுமைகளைத் தாங்கியும், தம் கொள்கையிலிருந்து பின்வாங்காத தியாகச் செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளான இன்று,
அவர்தம் பேரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், வாழ்வின் உயர்ந்த மதிப்புகளையும் ஒருங்கிணைக்கும் கல்வி அறிவைக் கற்றுத் தந்து, ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கான நல்வழி அரசியலை @AIADMKOfficial எனும் பேரியக்கம் வாயிலாக நமக்குக் கற்றுத் தந்த அரசியல் ஆசான்களான நம் இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்.
#teachersday
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய #ஸ்ரீகிருஷ்ண_ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். 'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
#krishnajayanthi #gokulashtami
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm birthday wishes to Hon’ble Deputy Chief Minister of Andhra Pradesh,
Thiru. @PawanKalyan Avl.
May you be blessed with good health, happiness and continued success in your journey of public service.
@JanaSenaParty
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு “வெள்ளையனே வெளியேறு”என வீர முழக்கமிட்டதோடு,
போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தென்காசி மாவட்டம், 'நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, @AIADMKOfficial சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
@AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள
பெருவெள்ளத்தால் சுமார் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும் , முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.
காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளில், அவரது போதனைப்படி
அன்பு பெருகவும், அமைதி தவழவும்,
சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மீலாதுன் நபி' வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial
#miladunnabiصلى -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#onam
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்த் திரைத்துறை ஆளுமையும்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த அன்புச் சகோதரர் “பத்ம பூஷன்” திரு. @iVijayakant அவர்களின் பிறந்தநாளான இன்று,
அவர்தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன்.
மண்ணை விட்டு மறைந்தாலும்,
‘கேப்டன்’ என்ற பெயரும்,
உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்..!!!”
#hbdcaptainvijayakanth
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பழம்பெரும் நடிகை திருமதி. சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரோடு இணைந்து “ஒளி விளக்கு” திரைப்படத்தில் அவர் நடித்தது என்றும் நினைவுகூரத்தக்கது.
பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 400 படங்களில் நடித்து, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அவருடைய மறைவு என்பது திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
#sowcarjanaki -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பல்வேறு வீரர்களின் தீரத்தாலும் தியாகத்தாலும் நமக்கு கிடைத்த
நம் வளமிகு இந்தியத் திருநாட்டை தொடர்ந்து ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் சமூகநீதிப் பாதையில் வலிமையான நாடாகக் கட்டமைத்திட இந்த சுதந்திர நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
#independenceday
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Congratulations to GM @rpraggnachess on a phenomenal triumph at the 2026 Saint Louis Rapid & Blitz Championship!
Winning one of the toughest events on the Grand Chess Tour is a testament to your consistency, composure, and world-class brilliance. Your remarkable achievement continues to inspire millions and makes #india🇮🇳 proud.
Wishing you many more victories on the global stage.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அஞ்சாது, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடிய ஓடாநிலையின் ஒப்பற்ற மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
அதேபோல், ஓடாநிலை மணிமண்டபத்திலும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திலும் @AIADMKOfficial சார்பிலும், எனது சார்பிலும் மூத்த கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் . -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
பாசமிகு மகனை இழந்து வாடும்
திரு. காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த
திரு. கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராகவும், தலைசிறந்த மருத்துவராகவும்,
சமூக சீர்திருத்தவாதியாகவும்,
பெண் கல்வி, பெண்ணுரிமை, குழந்தைகள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் @AIADMKOfficial பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மறைந்த கல்வியாளர் திரு. பொள்ளாச்சி
N மகாலிங்கம் அவர்களின் மகளும்,
திரு. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் மனைவியுமான திருமதி. கருணாம்பாள் வானவராயர் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாடு போற்றும் அறிவும், மக்கள் போற்றும் அன்பும், பதவிகள் வந்த போதெல்லாம் பணிவும் நிறைந்த இந்தியாவின்
மேனாள் குடியரசுத் தலைவர்,
பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழை வணங்குகிறேன்.
“கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்” என்ற
அவரது உயரிய சிந்தனை,
இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
அவரது எளிமை, தேசப்பற்று, அறிவியல் பங்களிப்பு மற்றும் இளைஞர்கள் மீதான நம்பிக்கை என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கார்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அவர்கள் கூறுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானதாகும்.
சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் இன்றுவரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
தற்போது, 'தமிழக முதலமைச்சர்,
காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன்' என்று சொன்ன பிறகு, 'யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை' என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.
ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இன்றைய பொய்க்கால் குதிரை அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
மடப்புரம் அஜித்குமார் மரணத்தின் போது “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று பதாகை பிடித்த இன்றைய முதலமைச்சர், தனது ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில், நீதி வைத்துள்ளார்?
அருணாச்சலம் மரணத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு யார் இழைத்திருந்தாலும், எந்த பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?
இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்னைத் தமிழுக்குத் தன் அழகுமிகுந்த உச்சரிப்பால் புகழ் சேர்த்த கலைத்தாயின் தலைமகன்; வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரங்களை நடிப்பால் கண்முன்னே நிறுத்தியவர்! புரட்சித்தலைவரின் நீண்டகால நண்பர், செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளான இன்று,
நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு என்ற பெருமிதத்துடன்; திரையுலகின் ஈடுஇணையற்ற அந்த மாபெரும் கலைஞன் நிகழ்த்திய காலத்தால் அழியாத சாதனைகளை இந்நாளில் நினைவுகூர்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
72-வது #nationalfilmawards விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @dhanushkraja அவர்கள் இயக்கி நடித்து வெளியான #raayan திரைப்படக் குழுவினருக்கும்,
தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள @SathyaJyothi தயாரிப்பில், திரு. @ArunMatheswaran அவர்கள் இயக்கத்தில், திரு. #தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான #captainmiller படக்குழுவினருக்கும்,
#captainmiller திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. #தனுஷ் அவர்களுக்கும்,
#amaran திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @gvprakash அவர்களுக்கும்,
#amaran திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @Rajkumar_KP அவர்களுக்கும்,
#amaran திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. கலைவாணன் அவர்களுக்கும்,
#maharaja திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்வி. சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,
#maharaja திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. அனல் அரசு அவர்களுக்கும்,
#meiyazhagan திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுரேன் G அவர்களுக்கும்,
Non-Feature Films பிரிவில் #blue படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. TS ஹரிஹரசுதன் அவர்களுக்கும்
விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial
#72ndnationalawards
#tamilcinema -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.
தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!
இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?
இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன @CMOTamilNadu அவர்களே, இந்த ஊழலில் பின்னால் #யார்_அந்த_Powercenter?
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு #யார்_அந்த_Powercenter?
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்,
பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,
என தமிழகத்தின் கல்விக்கண்
திறந்த கர்மவீரர் ..,
நாடு நலம் பெற,
விவசாயம் செழிக்க,
அணைகள் பலதந்த மாமனிதர்..,
தமிழகத்தின்
வளர்ச்சிக்கு வித்திட்ட,
பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கரிசல் மண்ணின் குரலாகவும், தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளராகவும் விளங்கிய சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமது எழுத்தின் வழியாக மண்ணின் மணத்தையும், மக்களின் வாழ்வியலையும் தலைமுறைகளுக்கு பதிவு செய்த அவரது இலக்கியப் பணி என்றென்றும் நிலைத்திருக்கும்.
இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த வேளையில்,
அன்னாரின் புகழுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia @CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம்"
என வீரமுழக்கமிட்டு,
ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளைத்
தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு சேமிப்பு கிடங்கில் போதிய இடம் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாம்பட்டி, ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கருகி வீணாகியதாக செய்திகள் வந்துள்ளன.
திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது புரியவில்லை. மேலும் பல நாட்களாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லை அரிசி மில்களுக்கு அரவைக்கு அனுப்பாமல் அதிகாரிகள் தேக்கி வைத்ததால் அவைகள் பாழ்பட்டு விட்டதாக ஒருசில விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தங்களுடைய தவறுகளை மறைக்க அதிகாரிகளே ஒரு செயற்கையான தீ விபத்தை ஏற்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது போன்ற சூழ்நிலை தமிழகம் முழுவதும் ஏற்படாமல் இருக்க இந்த தீ விபத்து குறித்து முழு விசாரணை ஒன்றை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று த.வெ.க அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய விடுதலை போராட்ட வீரர்,
"கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என்று முழங்கி, சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா @CMOTamilNadu ?
எதற்கு இந்த இரட்டை வேடம்?
மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான். “மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் @AIADMKOfficial-ன் ஒரே பணி!
அது ஒருநாளும் மாறாது!
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
திறந்தவெளி கிடங்குகளில் மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu
@aiadmkofficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
I extend my warm birthday greetings to the Hon’ble President of India,
Tmt. Droupadi Murmu Avl.
I wish her a long life, good health, and continued success in serving the people of our nation.
@rashtrapatibhvn
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்.
எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய உரையில் ஏற்கனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்தார்கள்.
பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும். வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க ?
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சேகர் - புவனேஷ்வரி தம்பதியினரின் 2வது மகள் கோபிகா, நீட் தேர்வு அச்சத்தால் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக வந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மாணவி கோபிகாவை இழந்து வாழும் அவரது பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நீட் தேர்வு எதிர்ப்பு என்ற கொள்கை நிலைப்பாட்டில் அஇஅதிமுக தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. மாணவச் செல்வங்கள் நீட் தேர்வு அச்சத்தால் உயிரை விடத் திணிப்பது தவறு என்று பலமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் சார்பிலும் வலியுறுத்தி வந்துள்ளோம்.
மாணவச் செல்வங்களே- தேர்வு என்பது மட்டுமல்ல, எந்த ஒரு விஷயமும் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியமானது அல்ல. மருத்துவர் படிப்பு மட்டுமல்லாது, மருத்துவத்துறை தொடர்பாக பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் சாதனைகளைப் பார்த்து மகிழ உங்கள் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்லுங்கள்!
இனியும் இதுபோன்ற தவறான வழிக்கு எந்த மாணவ, மாணவியும் செல்லக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல!
அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்?
9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா?
இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?
“அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm birthday greetings to Hon’ble Union Minister for Commerce & Industry of India, Thiru @PiyushGoyal Avl,
Your dedicated efforts towards strengthening India’s economy, promoting industrial growth, and advancing the vision of a self-reliant nation continue to contribute significantly to the country’s progress.
Wishing you good health, happiness, and many more years of successful public service to the nation.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
My heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India,
Thiru. @narendramodi avl, on achieving a historic milestone by serving the nation and contributing to its development for 4,399 days as Prime Minister.
Having earned the overwhelming mandate of the people in three consecutive general elections,
Our Hon’ble Prime Minister has emerged as a globally respected statesman and a leader admired by nations across the world.
I extend my sincere best wishes to him for his continued dedicated service towards the growth, progress, and prosperity of our beloved motherland.
@PMOIndia @AIADMKOfficial
#longestservingelectedpmmodi
இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்று தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாகத் திகழும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia @AIADMKOfficial
#longestservingelectedpmmodi -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர்
முத்து ரமேஷ் நாடார் அவர்களின் தந்தை ஜெ.முத்துலிங்க நாடார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தந்தையாரை இழந்து வாடும்
திரு. முத்து ரமேஷ் நாடார் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த திரு. முத்துலிங்க நாடார் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest congratulations to R. Praggnanandhaa on winning the #norwaychess2026 title and becoming the first Indian ever to achieve this remarkable feat.
Your brilliance, composure, and fighting spirit have once again made India proud on the global stage. Wishing you many more victories and milestones in the years ahead.
@rpraggnachess
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சகோதரர் திரு. அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?
Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு ,
உண்மை வெளிவர வேண்டும்!
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று,
இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற
இதய தெய்வம் அம்மா அவர்களின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம்.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
களப் பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் Harmonium கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் Harmony-ஐ விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
#hbdilaiyaraaja @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?
இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?
இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.
என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே…
தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.
“அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.
அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம்.
நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!
தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial3 media couldn't be displayed. See them on the original post.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#நூற்றாண்டுகனவு_அஇஅதிமுக
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர்
திரு. #ajithkumar அவர்களின்
தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
@SureshChandraa -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள
டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை ,
மிகுந்த அச்சமூட்டுகிறது.
@CMOTamilNadu அவர்களே -
எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் #பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
#eidmübarek
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK IT WING
@AIADMKITWINGOFL
To
@CMOTamilNadu
Pls find the reference image (Official Portrait of Late Honourable Puratchi Thalaivi Amma) to be placed in all Amma Unavagams across Tamil Nadu.
Regards
@AIADMKITWINGOFL
#ammaunavagam
#ammaforever -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.
முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது.
சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.
பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன்,
குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்மொழி காக்க, தமிழ்மண் காக்க, முதுதமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டவர்!
புகழ்மிக்க தமிழ்நிலத்தின் புலவர்களை அரவணைத்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்!
எதிர்கொண்ட அனைத்துப் போர்களிலும் தோல்வியே காணாமல், போர்க்களத்தில் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த தன்னிகரில்லா மாவீரர்!
ஆளுமைக்கும் வீரத்திற்கும் அடையாளமாகத் திகழ்ந்த "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" அவர்களின் 1351-ஆம் ஆண்டு சதய விழா நாளில், அவர்தம் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் @DKShivakumar தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும்,
அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா?
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ?
தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா ? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.
காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது.
கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu
@AIADMKOfficial
#பொய்க்கால்_குதிரை_அரசு -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கப் போகும் முடிவை சரியாக எடுத்து அடுத்தடுத்த நிலைகளிலும் வெற்றிகளைப் பெற்று சாதிக்க வாழ்த்துகிறேன்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். படிப்பு தான் எவராலும் அசைக்க முடியாத உங்களுடைய சொத்து என்பதை உணர்ந்து,
நன்கு படித்து மீண்டும் தேர்ச்சி அடைய
உங்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
முன்னாள் தமிழக முதல்வர்,
எங்கள் இதயதெய்வம் ,
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் துணைவியார் திருமதி. ஜானகி இராமச்சந்திரன் அம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று,
புரட்சித் தலைவரின் தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பைப் போற்றி வணங்குகிறேன்.
திருமதி. ஜானகி அம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2024-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு, அவர்தம் முழுவுருவப் படம் நமது தலைமைக் கழகக் கூட்ட அரங்கில் நிறுவப் பெற்றிருப்பதை இத்தருணத்தில் பெருமையொடு நினைவு கூர்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.
பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது.
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.
கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும்.
அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
I express my heartfelt gratitude to Hon’ble Prime Minister
Thiru. @narendramodi Avl and
the Government of India for successfully bringing back the historic Leiden Copper Plates to our motherland.
These priceless Chola-era inscriptions are a glorious symbol of Tamil civilisation, the administrative excellence of the great Rajaraja Chola and Rajendra Chola, and the maritime pride of Tamil people.
Their return is a moment of immense pride for every Tamil and every Indian.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் சார்பில் இன்று கேரளத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திருமிகு. @vdsatheesan அவர்களுக்கு எனது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு. கே. ராஜன் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழ்த் திரையுலகில் சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் மிக முக்கியக் குரலாக விளங்கியவர் திரு. கே. ராஜன் அவர்கள்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத் துறையைச் சார்த்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#aiadmk_foreverfortn -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#hbdajithkumar
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#mayday
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#tnelections2026 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Honourable Prime Minister Thiru. @narendramodi Avl has always placed India’s sovereignty and national security above all else, and through decisive actions such as #operationsindoor and other bold measures, has ensured the safety and security of our nation.
The remarks made by Congress President Mallikarjun Kharge about the Honourable Prime Minister of India, Thiru. Narendra Modi Avl, are strongly condemnable.
The Honourable Prime Minister stands today as a defining identity of India on the global stage. Using such language against him reflects the mindset of the Congress party.
Does Thiru. @mkstalin agree with the remarks made by his alliance partner,
Mr. Kharge? Do these statements reflect
M. K. Stalin’s own views as well?
As someone who has taken an oath under the Constitution, Thiru. Stalin has a duty to answer these questions before the people of this nation.
@kharge -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#vote4aiadmkThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் 15 வயது சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம்- இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை.
உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும்.
ஆனால் திரு. @mkstalin-ன் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்?
தமிழக மக்களே-
உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான்…
உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா?
ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று
“இரட்டை இலை” 🌱சின்னத்தில்
உங்கள் வாக்கை செலுத்துவது தான்!
உங்கள் வாக்கு தான் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றப் போகும் ஆயுதம்! அதை முறையாகப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரின் சகோதரனாக, என் குடும்பத்தில் ஒரு தந்தையாக, தாத்தாவாக இருக்கும் நான் உங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி!
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்!
ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளைக் காப்பாரோ,
மாண்புமிகு அம்மா அவர்கள் எப்படி தமிழகத்தைக் காத்தார்களோ,
அதேபோல், உங்கள் தமையனாக இருந்து @AIADMKOfficial அரசு உங்களைக் காக்கும்!
இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கும் சத்தியவாக்கு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று, எனது #எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், @AIADMKOfficial வேட்பாளராக களம் காணும் எனக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தொகுதிவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது கூட்டணியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், அன்பிற்கினிய சகோதரர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
பழனிசாமி என்ற எனது பெயர் எனக்கே மறக்கும் அளவிற்கு இந்த சட்டமன்றத் தொகுதியின் பெயரே “எடப்பாடியார்” என்ற எனக்கான அடையாளமாக மாறிவிட்டது.
உங்களோடு இருக்கும் எனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial பொதுச்செயலாளர் என்று உயர்வு வழங்கிய மக்களுக்கு எனது பணிவான நன்றி.
மீண்டும் மனிதப் பிறவி செய்தால், இதே மண்ணில், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறந்திடவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கின்றான்- இடைப்பட்ட காலத்திலேயே அவன் மக்களுக்காக செய்த சேவை தான் நிலைத்து நிற்கும்.
அப்படி தங்கள் மக்கள் நலச் சேவைகளால் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் நம் இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா!
இருபெரும் தலைவர்கள் வழியில் செயல்படும் எனக்கு காலம் அளித்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களுக்காக அயராது உழைப்பேன்! இது சத்தியம்!
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm birthday wishes to the Honourable Chief Minister of #andhrapradesh,
Thiru. @ncbn Avl. I also had the pleasure of conveying my wishes to you over a telephonic conversation.
What makes this day even more special is your selfless commitment- choosing to campaign for our @AIADMKOfficial-led NDA alliance in #tamilnadu even on your birthday. It truly reflects your dedication to the alliance and to public service. This is a gesture that will be remembered with deep respect and gratitude.
Your gracious presence and support have greatly strengthened our shared vision.
Looking forward to working together as State Governments towards mutual prosperity.
Wishing you good health, long life, and many more years of impactful leadership in service of the nation.
@AndhraPradeshCM -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை @mkstalin-ன் திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.
இன்னும் சில நாட்களில் அமையவுள்ள @AIADMKOfficial அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Tamil Nadu has lost the opportunity to increase their political power and its rightful share of 20 more MP seats.
We have not only lost the golden opportunity given by Honourable Prime Minister Thiru. @narendramodi Avl to
get 50% more seats ..,
but @mkstalin being a puppet and not understanding the crux of the opportunity, you blindly opposed it.
If delimitation had been done based on 2011 census, we would have lost 9 MP seats. Because of your mindless opposition to the bill, the delimitation will now be based on 2026 census and we will lose even more MP seats.
Further, in 1998, Hon’ble Puratchi Thalaivi Amma, has brought women’s reservation bill under then PM Vajpayee ji leadership. During that time, your own INDI Alliance partners ensured that the bill did not get passed. This time around, you have killed that very spirit by opposing the bill and have done greatest injustice not only to #tamilnadu but also to the women all across India.
Thiru. @mkstalin Avargale, what exactly are you celebrating? The damage you have done to Tamil Nadu’s future or the greatest opportunity that you ruined for the women empowerment ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற வேன் ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துகொள்வதுடன், மறைந்தோரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
அன்று சின்னமலையைக் காட்டிக் கொடுத்த துரோகியைப் போல, இன்றும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளையும், பாலியல் SIR-களிடம் தமிழகப் பெண்களின் பாதுகாப்பையும், போதை மாபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடகு வைத்துவிட்டது திமுக எனும் தீயசக்திக் கூட்டம்.
ஒவ்வொரு தமிழரின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்றுப் போர்களத்தில், சின்னமலை விதைத்த தீரத்தோடு சமர் செய்து, தீயசக்தி திமுகவை வேரடி மண்ணோடு வீழ்த்திட சூளுரைக்கிறேன்.
#dheeranchinnamalai
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கோவை மற்றும் #திருப்பூர் மாவட்டங்களில், நமது வெற்றியை இன்றே தங்கள் வரவேற்பால் உறுதிசெய்துவிட்ட பொதுமக்களிடம் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
1998-ல் நான் மக்களவை உறுப்பினராக இருந்த நேரத்தில், மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுச் சட்டமான பெண்களுக்கான 33% நாடாளுமன்ற
மற்றும் சட்டமன்ற இடஒதுக்கீடு சட்டத்தை அன்றைய மாண்புமிகு வாஜ்பாய் அவர்களின் மத்திய அரசு சார்பில் அஇஅதிமுக-வைச் சேர்ந்த அன்றைய மத்திய சட்ட அமைச்சர் திரு. தம்பிதுரை அவர்கள் தாக்கல் செய்து படித்துக்கொண்டிருந்த போது,
அந்த சட்ட முன்வடிவை சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. பிடுங்கி கிழித்து எறிந்துவிட்டார்.
தற்போது பாரதப் பிரதமர்
திரு. @narendramodi அவர்கள் “மாண்புமிகு அம்மா”அவர்கள் கொண்டுவந்த கனவுச் சட்டத்தை நிறைவேற்ற உள்ளார்.
தொகுதி வரையறை குறித்து @mkstalin முழுக்க பொய்யான கருத்தை அவதூறு பிரச்சாரமாக மேற்கொண்டார். இன்று வீடெல்லாம் கருப்பு கொடி கட்டச் சொன்னார். நானும் வந்தவழி எல்லாம் பார்த்தேன். எங்குமே ஒரு கருப்பு கொடி கூட இல்லை!
ஸ்டாலின் கூறுவது எல்லாம் பொய் என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டதற்கு இதுவே சாட்சி!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#vote4aiadmk -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் ! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அனைத்து மலையாள சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய விஷு புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் புதிய தொடக்கங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியும் அளிக்க வாழ்த்துகிறேன்.
വിഷു ആശംസകൾ!
#vishu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தேனி மற்றும் #மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் @AIADMKOfficial நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் @ammkofficial பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள்.
மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் திரு. @DrACSOfficial அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், "ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா" என்று சவால் விட்டவர், கடைசியில் "மன்னிச்சுப்பா... ஒன்லி பில்டப் பா" என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா?
பயத்தில் கண்டதை உளறும் @mkstalin அவர்களே...
#அண்ணாதிமுக_WINNING! ✌️
#நல்லாட்சி_COMING! 🌱
#vote4aiadmk
@AIADMKOfficial @TTVDhinakaran -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சமத்துவம், சமூக நீதி, மானுடப் பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய
சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்.
#ambedkarjayanti
#jaibhim
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
#tamilnewyear
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருச்சி மற்றும் #திண்டுக்கல் மாவட்டங்களில் அஇஅதிமுக ஆட்சி அமையப்போகும் வெற்றி அலையாக கூடிநின்ற மக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
“உங்க கனவைச் சொல்லுங்க” என்று அரசின் திட்டமாக மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கியமான தனிநபர் விவரங்களை சேகரித்து, அதை திமுக நடத்தும் PEN என்ற நிறுவனத்திடம் கொடுத்து, அந்த நிறுவனம் மூலம் திமுக ஆதரவு செய்திகளை மக்களுக்கு அனுப்புகிறது திமுக.
அரசை நம்பி மக்கள் கொடுத்த Private Data-வைத் திருடி, அதை சொந்த நிறுவனத்திற்கு அனுப்பியது எவ்வளவு பெரிய மோசடி?
இப்படி மோசடி செய்து மக்களை Brainwash செய்தால், உங்கள் ஆட்சியின் அவலங்களை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்களா என்ன?
திரு. @mkstalin அவர்களே…
நீங்கள் எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் சரி,
#அண்ணாதிமுக_WINNING ! ✌️
#நல்லாட்சி_COMING ! 🌱
#vote4aiadmkThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
யூட்யூபர் திரு. @SavukkuOfficial அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, திருமதி. கமலா அம்மாள் அவர்களை திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார்.
இந்நிலையில், திருமதி. கமலா அம்மாள் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த திருமதி. கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#நாகப்பட்டினம் மற்றும் #மயிலாடுதுறை மாவட்டங்களில் திரளாகக் குழுமி நின்ற பொதுமக்கள் இடையே, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
திரு. @mkstalin மயிலாடுதுறை மாவட்டத்தின் மாப்பிள்ளை என்று சொல்லலாம். ஆனால், இந்த மயிலாடுதுறை மாவட்டத்தையே உருவாக்கியது @AIADMKOfficial அரசு.
டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவித்து, விவசாயம் காத்தது அஇஅதிமுக அரசு.
ஆனால், மேகதாது கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கைகட்டி வேடிக்கை பார்த்து, விவசாயத்திற்கு துரோகம் இழைக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு.
ஏப்ரல் 23 அன்று மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பால் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, விவசாயத்தைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சாய்க் கொண்டு செயல்படும்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
From village streets to city corners, I’ve heard one message loud and clear- Tamil Nadu wants DMK out.
Public anger against misrule, corruption, and broken promises will unseat the DMK.
The people of #tamilnadu are ready to reclaim their future by voting for @AIADMKOfficial.
Read more from my interview with @xpresstn:
Link: www.newindianexpress.com/elections/tamilnadu-elections/20…
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நேற்றைய தினம், #தஞ்சாவூர் மற்றும் #திருவாரூர் மாவட்டங்களில் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தஞ்சாவூர் பிரச்சாரக் கூட்டத்தில் என்னுடன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களும் பங்கேற்றார்கள்.
“நானும் டெல்டாக்காரன்” என்று வசனம் பேசும் @mkstalin, உண்மையில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் தரைபோட்டு நடந்த ஒரு விசித்திர விவசாயி.
அவர் சென்ற கான்கிரீட் தரைக்கு இரு மருங்கிலும் இருந்தது கரும்பா ? நெல்லா? சோளமா? என்று கேட்டால் பதில் தெரியாமல் முழிப்பார். இது தான் அவருக்கு விவசாயம் தெரிந்த லட்சணம்.
நீர் கோர்த்து முளைத்த பயிர்களை தலைமைச் செயலகத்திற்கு அதிகாரிகள் மூலம் எடுத்து வந்து, அதை Tray-யில் வைத்து பார்வையிட்ட ஸ்டாலினுக்கு, விவசாயிகள் கஷ்ட நஷ்டங்கள் பற்றி என்ன தெரியும்?
இவருக்கு பிரச்சாரம் செய்ய வருபவர் யார்? கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @DKShivakumar. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்து விட்டு, இன்னும் மொத்தமாக நம் நீராதார உரிமையை அடகு வைக்கத் துடிக்கும் ஸ்டாலினுக்கு தக்க தண்டனையை விவசாயிகளும், தமிழக மக்களும் அளிக்கப் போகும் தேர்தல் தான் ஏப்ரல் 23 அன்று நடைபெறப் போகிறது.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்றைய தினம், #சேப்பாக்கம்_திருவல்லிக்கேணி, #ஆயிரம்விளக்கு, #இராயபுரம், #துறைமுகம் #திருவிகநகர், #எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரிகள் தான் தீர்மானிக்கின்றனரே தவிர, நானல்ல.
இத்தனை நாள் மக்கள் பிரச்சனைகளை நான் பேசியபோது பதில் சொல்லாமல் இருந்த கருணாநிதி குடும்பம், இவர்கள் கதையைப் பேசியதும் புலம்பித் தள்ளுகிறார்கள்.
கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்ததை நானாக சொல்லவில்லை. கவிஞர் கண்ணதாசன் சொன்னதைத் தான் நான் மேற்கோள் காட்டினேன்.
அதேபோல், நான் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் தான் தானாக வந்து "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்று மாட்டிக்கொள்கிறார்கள்.
தங்களை சொன்னால் வரும் கோபம், ஒரு நாளாவது மக்களுக்காக வந்ததா?
இது ஒன்று போதும், திமுக-விற்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை நிரூபிக்க!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#அண்ணாநகர், #வில்லிவாக்கம், #கொளத்தூர் #பெரம்பூர் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
ஆட்சிக்கு முன் பறந்த கறுப்பு பலூன் எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் குடையாக மாறியது தான் பொம்மை வேந்தரின் மாடல்!
இப்படி மாறி மாறி நாடகமாடுவது ஏன்? இவர்களுக்கு மடியிலே கணம், வழியிலே பயம்!
இவர்களுடைய நாடகத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களும் நம்பவில்லை; தமிழக மக்களும் நம்பவில்லை!
வாக்களிக்கும் மக்களிடம் நாடகம் நடக்காமல், நல்லது மட்டுமே செய்யும் @AIADMKOfficial ஆட்சியை அமைப்பது என்பதே தமிழக மக்கள் எடுத்துவிட்ட திடமான முடிவு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#விருகம்பாக்கம் மற்றும் #தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களின் திரளான வரவேற்பிற்கு இடையே அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆளத் தெரியாத @mkstalin கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத பாடு பட்டுவிட்டனர்.
“போதும் திமுக - போகட்டும் திமுக” என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#vote4aiadmk 🌱
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருநெல்வேலி மாவட்டம்,
ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனைமரத்தில் பதநீர் இறக்கியபோது,
கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 2 துப்பாக்கி குண்டுகள் துளைத்து பனைமரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதுமுள்ள பனைமரம் ஏறும் தொழிலாளர்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்திலும், எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து ஏவல் துறையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
பதநீர் இறக்கிய தொழிலாளி,
கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@tnpoliceoffl
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#வேளச்சேரி, #சைதாப்பேட்டை தொகுதிகளில் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆட்சிக்கு வந்தால் “சென்னையில் என்றும் தண்ணீர் தேங்காது” என்றார்
திரு. @mkstalin.
ஆனால், உண்மை என்ன?
“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு” என்று ஒரு பெண்மணி சொன்னது தான் உண்மை நிலை.
இப்படிப்பட்ட ஆட்சி,
ஊழல் ஆட்சி ,
கமிஷன் ஆட்சி,
தொடர வேண்டுமா ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#vote4aiadmk 🌱
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்களிடமும், சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி மக்களிடமும் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
“ஒவ்வொரு குடும்பத்தின் வளம் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி”
என்ற அடிப்படையில்,
உதவி தொகை ரூ.10000,
மகளிருக்கு மாதம் ரூ.2000,
3விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், விலையில்லா பிரிட்ஜ் என பல மக்கள்
நலத்திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளோம்.
எங்கள் ஆட்சிக்கால சாதனைகளை சொல்லி, எங்கள் வாக்குறுதிகளை சொல்லி மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்கிறோம்.
ஆட்சிக்காலத்தில் மக்களை
வெறும் அவதிக்கு ஆளாக்கிவிட்டு, அண்டப்புளுகுகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு, மக்களை சந்திக்கவே அச்சப்படும் திமுக-வை இனியும் மக்கள் நம்பத் தயாராக இல்லை!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#vote4aiadmk 🌱
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm greetings on the Foundation Day of the Bharatiya Janata Party.
The party’s journey has been shaped by visionary leaders like Bharat Ratna #atalbiharivajpayee, whose statesmanship, inclusive governance, and steadfast commitment to democratic values continue to inspire generations.
Under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl, and the guidance of Hon’ble Home Minister Thiru. @AmitShah Avl, the BJP continues to play a pivotal role in strengthening India’s development, unity, and global standing.
On this special occasion, we extend our best wishes to @BJP4India President Thiru. @NitinNabin Avl, @BJP4TamilNadu State President Thiru. @NainarBJP Avl, and all BJP members and supporters for their continued public service.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்றைய தினம், புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கான நமது கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து முடித்தவுடன்,
தேர்தல் பிரச்சாரக் கூட்டமா? தேர்தல் வெற்றி மாநாடா? என்று வியக்கும் வண்ணம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் திரண்டு நின்ற பொதுமக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
நான் பேசும் பொய்களுக்கு புத்தகம் போடலாம் என்கிறார் ஸ்டாலின்.
அப்படி பார்த்தால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக இவர்கள் கூறிய அத்தனை பொய்களுக்கும் எத்தனைப் புத்தகங்கள் போட வேண்டும்?
5 ஆண்டுகால ஆட்சியில், தினமும் டிப்-டாப்பாக வித விதமான சட்டைகளைப் போட்டுக் கொண்டு, ஊடக பத்திரிகைகளுக்கு வெறும் போட்டோஷூட் Content கொடுத்து வலம் வந்தவர் தானே ஸ்டாலின்?
யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே படிக்கும் ஒரு பொம்மை முதல்வரின் ஆட்சி இனியும் தேவையில்லை என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில், கர்த்தர் அருளிய சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் அமைதி போன்ற உயரிய விழுமியங்கள் தொடர்ந்து தழைத்திட அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் அருளால்,
தமிழகமும் ஒரு வளமான எதிர்காலத்திற்காக விரைவில் உயிர்த்தெழப் போகிறது.
இனிவரும் காலம்,
அனைவருக்கும் வசந்த காலமாக அமையட்டும்!
#happyeaster
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு. @mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின்.
தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை!
திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்?
தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்!
“My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே?
2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே?
இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்டங்களின் மக்களின் பேரெழுச்சிமிக்க வரவேற்பிற்கு இடையே நமது கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
தமிழ்நாட்டை நான்கு அதிகார மையங்கள் ஆள்வதாக நான் தொடர்ந்து கூறி வந்ததை மெய்ப்பிக்கும் வகையில், @mkstalin அவர்களின் மருமகன் தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டார்.
குடும்ப அதிகார மையங்களால் ஆட்டுவிக்கப்பட்டும் ஒரு பொம்மை ஆட்சி தொடர வேண்டாம் என்பதே தமிழக மக்களின் திடமான எண்ணம்.
அதிகார வெறியில் திளைக்கும் திமுக முதல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற முடிவை மக்கள் செய்துவிட்டார்கள்.
ஏப்ரல் 23…
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்கும் இயேசு பிரான், அனைத்து மனிதர்களின் பாவங்களையும்,
துயரங்களையும் தூக்கிச் சுமந்து
சிலுவை மரத்தில் அருள் மலராய் பூத்த,
தியாக திருநாளான #புனிதவெள்ளி தினத்தில் இயேசு பிரானின் தியாகங்களையும், துணிவையும் நினைவு கூர்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தருமபுரி மற்றும் #கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நமது @AIADMKOfficial தலைமையிலான கூட்டணி பெறப்போகும் வெற்றிக்கு அத்தாட்சியாக பெருந்திரளாகக் குழுமி நின்ற மக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், @mkstalin தனது தந்தை கருணாநிதியை கைதி போல் வைத்திருந்தார் என ஆ.ராசா கூறுகிறார்.
தனது தந்தையையே அப்படி வைத்திருந்தவர், மக்களை என்ன பாடு படுத்தினார் என்பதற்கு ஸ்டாலின் நடத்திய
5ஆண்டு காட்டாட்சியே சாட்சி!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#சிவகங்கை, #புதுக்கோட்டை மாவட்டங்கள் @AIADMKOfficial கோட்டையென நிரூபிக்கும் வண்ணம் குழுமி நின்ற மக்களிடம் வாக்கு சேகரித்தேன்.
என் கைகளில் ரத்தக் கறை இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். என் கைகள் சுத்தமாகத் தான் இருக்கின்றன.
ஆனால், @mkstalin கைகளில் தான் அஜித் குமார் மரணம் முதல் தூத்துக்குடி நிர்பயா வரை பல ரத்தக் கறைகள் உள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன இந்த பகுதிகளில் , ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ரூ. 5 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட கழக தேர்தல் வாக்குறுதிகளை நினைவு கூர்ந்து நமது வெற்றி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய மக்களைக் கேட்டுக்கொண்டேன்.
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#விருதுநகர் மற்றும் #இராமநாதபுரம் மாவட்ட மக்கள் சட்டமன்றத் தேர்தலுக்கான தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டதையே #சிவகாசி மற்றும் #பரமக்குடி நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் உணர்த்துகின்றன.
முன்னதாக சிவகாசியில் சில இளம்பெண்கள் என்னை சந்தித்து ஒரு சட்டை ஒன்றை அளித்தனர். அந்த சட்டையில் அவர்கள் எழுதியிருந்த வாசகங்கள், ஐந்தாண்டு திமுக ஆட்சியில் அவர்கள் பட்ட வலிகளை, வேதனைகளை உணர்த்தின.
திரு. @mkstalin அவர்களே- தமிழ்நாட்டை, தமிழகப் பெண்களை எங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் பார்த்தீர்களா?
பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தானே, உரிமைத் தொகை பெற முடியும்?
இதை எப்போதாவது உணர்ந்தீர்களா நீங்கள்?
சிறுமி முதல் மூதாட்டி வரை வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் பிற்போக்கு திமுக ஆட்சி இனியும் வேண்டுமா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்!
எனது சகோதரிகளே- அம்மா அவர்கள் எப்படி தாய் போல உங்கள் பாதுகாப்பை உறுதி செய்தார்களோ, அதேபோல், விரைவில் அமையவுள்ள எனது தலைமையிலான @AIADMKOfficial அரசும் தமையனாக நின்று உங்களைக் காக்கும்! இது உறுதி!
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm greetings to the Jain community on Mahavir Jayanti.
Lord Mahavir’s teachings of non-violence, truth, and discipline continue to guide humanity toward peace and harmony.
On this auspicious day, let us reaffirm our commitment to these timeless values and work together to build a compassionate and united society.
#mahavirjayanti -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்றைய தினம், #கன்னியாகுமரி மற்றும் #திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும்.
அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.
இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது!
தனது ஆட்சிக்காலம் முழுவதும் @AIADMKOfficial திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யை Copy Paste செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.
மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா?
மக்களே, மறந்துவிடாதீர்கள்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#vote4aiadmk
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொகுதி என்ற பெருமைக்குரிய #ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியின் பொதுமக்கள் அளித்த மகத்தான வரவேற்பிற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
திமுக-வின் கூட்டணி வெற்றுக் கூட்டணி; திமுக வேட்பாளர் பட்டியல் வெற்றுப் பட்டியல்; நாளை அவர்கள் சொல்லப்போவது வெற்று வாக்குறுதிகள்!
ஆனால் @AIADMKOfficial கூட்டணி வெற்றிக் கூட்டணி;
நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்கள்;
நமது தேர்தல் அறிக்கை மக்களின் மனங்களில் சென்று வெற்றி அடைந்துவிட்டது.
அஇஅதிமுக பெறப்போகும் வரலாற்று வெற்றியை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் இன்றே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அவர்களோடு இணைந்து நானும் கழகத் துண்டை சுழற்றி, நாளை நமது நல்லாட்சி மலரப் போவதை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டேன்!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#vote4aiadmk 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
நேற்று முன்தினம் நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் திரு. @mkstalin.
ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால்
“எந்தப் பயனும் இல்லை”!
உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி
எறியத் தயாராக உள்ளனர்.
ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி !
#தமிழகம்_வாழவேண்டும் என்றால்,
#திமுக_வீழவேண்டும்!
#vote4aiadmk -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The decision of the Union Government under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl to reduce excise duty on petrol and diesel by ₹10 is a timely and welcome step.
At a time when the ongoing conflict in the Middle East, Iran and Israel has severely disrupted global oil supplies and driven crude prices sharply upward, this move reflects a clear commitment to protect the Indian people from international economic shocks. 
The reduction of excise duty on petrol from ₹13 to ₹3 and the complete removal of duty on diesel demonstrates the Centre’s willingness to absorb financial burden rather than pass it on to citizens. 
@AIADMKOfficial had already urged the Union Government to take proactive measures to safeguard the Indian economy and the common people in light of the escalating geopolitical tensions in the Middle East, and we welcome this responsible action taken by the Government of India in that regard.
This decisive action shows that such concerns have been heard and acted upon in the larger national interest.
I welcome this people-centric decision and appreciate the Union Government for prioritizing economic stability and public welfare during a period of global uncertainty.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹10 அளவுக்கு குறைத்து மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருப்பது காலத்திற்கேற்ற, வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, கச்சா எண்ணெய் விலையை உயர்ந்துள்ள இந்த சூழலில், மத்திய அரசின் இந்த தீர்க்கமான முடிவு இந்திய மக்களை சர்வதேச பொருளாதார சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹13 இலிருந்து ₹3 ஆக குறைத்ததும், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்கியதும், மக்களிடம் சுமையை ஏற்றாமல், அதை தாமே ஏற்கும் மத்திய அரசின் மனப்பாங்கை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றங்களையொட்டி, இந்திய பொருளாதாரத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று @AIADMKOfficial ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில்,
அக்கோரிக்கைக்கு இணங்க, பொருளாதார சமநிலையையும், மக்கள் நலனையும் கருத்திற்கொண்டு மத்திய அரசு எடுத்துள்ள இந்த பொறுப்பான நடவடிக்கையினை அஇஅதிமுக சார்பில் நான் மனதார வரவேற்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக #மயிலாப்பூர் தொகுதியில், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தேர்தல் அறிவிப்பு வந்தது.
கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம்.
தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம்.
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம்.
தமிழக மக்களே- உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நம் கண்முன் தெரிவது
@AIADMKOfficial காலம்!
திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்!
தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்!
தமிழக மக்கள் நிம்மதியாக
வாழப் போகும் காலம்!
மக்கள் நம் பக்கம்!
நாளை நமதே!
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
History will remember the lockdown not just for its challenges, but for how we responded.
In times of crisis, it is experience, calm leadership, and compassion that must guide decisions.
In Tamil Nadu, that response was defined by determination, coordination, and a shared commitment to protect lives — the most important lesson of all.
Read my op-ed in @the_hindu:
🔗 www.thehindu.com/opinion/lead/looking-back-at-the-lockdow…
#covid19 #aiadmk4tn
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் வளர்ச்சி”க்கான செயல்திட்டத்தை #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யாக இன்று வெளியிட்டுள்ளேன்.
aiadmk.com/aiadmk-manifesto-2026/
ஒவ்வொரு வாக்குறுதியும் தீர ஆராய்ந்து, அவற்றிற்க்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்த பிறகே, செயல்படுத்தப்படும் என்ற உறுதியோடு அறிவித்துள்ளோம். நிச்சயமாக அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்!
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
உங்களின் நல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும்
போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்”
என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும்,
@ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும்
இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக மக்களுக்கு வணக்கம்.
கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.
ஆனால், பொம்மை முதல்வராக இருந்த
திரு.@mkstalin , அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான்.
இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது,
குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது,
அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்!
ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது!
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே?
@thirumaofficial
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி!
இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்!
தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது!
நான் கேட்கப்போவது,
உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம்.
இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி.
தமிழகம் வாழ வேண்டும் என்றால்,
திமுக வீழ வேண்டும்!
செய்வீர்களா?
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்த இரவோடு முடிவடையும் இந்நாள் எப்படி மீண்டும் வராதோ, அதேபோல் உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது .
“நீரின்றி அமையாது உலகு” என்ற உலகப் பொதுமறையின் வாக்கின்படி, உலகிற்கே அடிப்படை ஆதாரமாக விலகும் நீரின் முக்கியதுவதைப் போற்றிடும்
“உலக தண்ணீர் நாளான” இன்று,
வானின்று பொழியும் நீரையும் காக்கும் “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்தியதையும், தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காக்க குடிமராமத்து திட்டத்தை எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு செயல்படுத்தியதையும் பெருமையுடன் நினைவுகூர்வதுடன், விரைவில் அமையவுள்ள கழக ஆட்சியானது தமிழகத்தின் நீர்வளத்தைக் காத்திடும் வகையில் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய #ரம்ஜான்திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளைக் கடந்து சகோதர-சகோதரிகளாக, தமிழர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.
யுகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் எனவும்; இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும் எனவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#ugadisubhakankshalu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு கம்மா நாயுடு மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர்,
தெய்வத்திரு. கெங்குசாமி நாயுடு அவர்களின் துணைவியார் திருமதி. ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார்,
அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.
அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை
திரு. ரஜினிகாந்த் அவர்கள்.
புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்.
@AIADMKOfficial @AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2021-ஆம் ஆண்டு, @mkstalin தமிழ் நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திமுக-வினுடைய விடியா ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த விடியா அரசு உருவாக்கி இருக்கிறது. வேதனையோடு சொல்வதென்றால், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும், பள்ளிக்கூட மாணவ மாணவிகள்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகளும், காட்சிகளும் நாட்டின் முக்கிய ஊடகங்களிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.
சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல் துறையை கையில் வைத்திருக்கின்ற தமிழ் நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதித்ததோடு இல்லாமல் விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்திக்கொண்டிருந்தார்.
போதை கும்பல், கூலிப் படைகள் ஏற்படுத்திய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் உச்சமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான, வரலாற்றில் முன் எப்போதும் பார்த்திடாத அளவிற்கு மிகக் கொடூரமான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் லாக்கப்பில் மரணமடைந்துள்ளனர். இதிலிருந்து, விடியா தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எதைநோக்கிச் செல்கிறது என்பதையும்; வேலியே பயிரை மேய்கிறது என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்து மிகுந்த வேதனைப்படுகின்றனர்.
தமிழ் நாட்டு மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். தமிழ் நாடு ரவுடிகளினுடைய புகலிடமாக, கூலிப் படைகளின் ராஜ்ஜியம் நடக்கின்ற இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.
திமுக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஏன்? என்கிற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, போதைப் பொருள் விற்பனையில் திமுக பிரமுகரே கைதாவதும்; கள்ளச் சாராய விற்பனையில் திமுக பிரமுகரே ஈடுபட்டிருப்பதும்; மணல் கொள்ளை, இயற்கைவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினரே ஈடுபட்டிருப்பதும்; ஏழை, எளிய மக்களை ஏமாற்றி கிட்னி திருடிய வழக்கில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனையையே குற்றம் சாட்டப்பட்டிருப்பதும்; பல்வேறு பாலியல் வன்கொடுமைகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களே முதன்மைக் குற்றவாளிகளாக ஈடுபட்டிருப்பதும்; இந்த குற்றங்களுக்கெல்லாம் ஆளுங்கட்சியும், முதலமைச்சரும் அரணாக நின்று பாதுகாப்பு கொடுக்கிறார்களோ என்கிற பெரும் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையற்ற, மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து, தமிழ் நாடு முழுவதும் இன்றைக்கு மக்கள் பெரும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
விடியா திமுக ஆட்சியின் மேற்கண்ட மக்கள் விரோதச் செயல்களின் வெளிப்பாடுதான், ஆளும் கட்சிக்காரர்களை மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியும், வெளியேறச் சொல்லி முழக்கமிட்டும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். எனவே, இந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுடைய முகத்திரைகளை கிழிக்கும் வண்ணமும், தமிழ் நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருந்திரளாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, @AIADMKOfficial நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் அனைத்து மக்களும் அலை அலையாகத் திரண்டு வந்து பேராதரவினைத் தர வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிவதற்கு கழகச் சொந்தங்கள் திரண்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன்!!
#packupstalin
#byebyestalin
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#packupstalin
#byebyestalin
@AIADMKOfficial @AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது @AIADMKOfficial.
களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான @KanimozhiDMK அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்
திரு. @mkstalin அவர்களே?
காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?
இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
@NainarBJP @draramadoss @TTVDhinakaran @GK__Vasan -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு. @rajendraarlekar அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலமைப்பின் அங்கமான இப்பொறுப்பில் தாங்கள் மேற்கொள்ளவுள்ள மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@lokbhavan_tn
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும்,
தமிழகத்தில் தினசெய்தியாகி
விட்ட நிலையில்,
சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
பத்தாம் வகுப்பில் நன்கு படித்து மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் இருந்த பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர். இதற்கு ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?
வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#can_she_liveintn
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் #allthebest ,
தேர்வு என்பது உங்கள் அறிவை-உழைப்பை வெளிக்காட்டும் ஒரு சிறு களம் மட்டுமே. Positive Attitude-உடன் எதிர்கொள்ளுங்கள்.
அனைத்து பாட தேர்வுகளிலும் சிறப்பாக செயல்பட்டு , அனைவரும் #all_pass ஆக, வெற்றி காண வாழ்த்துகிறேன்!
@AIADMKOfficial @AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது.
மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக @mkstalin
அரசு உறுதி செய்திட வேண்டும் .
பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
@AIADMKOfficial
#dmkfailstn -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
On behalf of @AIADMKOfficial,
I wholeheartedly welcome the decision of the Union Cabinet led by Hon’ble Prime Minister of India Thiru. @narendramodi Avl to approve international airport status for Madurai Airport.
Accepting the long-standing demand of the people of Madurai, which serves as the cultural centre of Tamil Nadu and an important link for southern Tamil Nadu, and announcing this historic decision, I express my heartfelt gratitude to Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl, on behalf of the people of Tamil Nadu.
This recognition as an International airport will play a major role in strengthening tourism, trade, and economic growth across southern Tamil Nadu.
மதுரை விமான நிலையத்திற்கு "சர்வதேச விமான நிலையம்" அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ள மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முடிவை @AIADMKOfficial சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டின் கலாச்சார மையமாகவும், தென் தமிழகத்திற்கான முக்கிய இணைப்பாக விளங்கும் மதுரை மண்ணின் மக்கள் விடுத்த நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை கொடுத்துள்ள மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தென் தமிழகத்தின் சுற்றுலா, வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெரும் பங்காற்றும்.
#சர்வதேச_விமானநிலையம்_மதுரை -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து,
தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும்,
ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@PetroleumMin @CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய விளைநிலங்களை அரசு திட்டத்திற்காக கையாகப்படுத்துவதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வர் @mkstalin-ஐ சந்தித்து மனு கொடுக்க வந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாசலிலேயே வைத்து அவர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு முதல்வராக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பார்த்தால், மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா?
கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர், ஆட்சியில் இருக்கும் போது ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது திரு. ஸ்டாலினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் மனுவைப் பெறவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நேற்றைய தினம் #பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.
இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள "கொலை நிலவரத்தை" சுட்டிக்காட்ட விழைகிறேன்.
-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை
-சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை
-தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை
இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.
முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பொம்மை முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா?
தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.
குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி திரு. @mkstalin நியாயப்படுத்த முடியும்?
ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" கொலைகள் நடக்கவில்லை. "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது.
நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்!
மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்தின் விவசாய வரலாற்றில் அழியாத பெயராகத் திகழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் நினைவு நாள் இன்று.
முல்லைப்பெரியாறு அணை மூலம் தென் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு உயிர்நாடியாக அமைந்த அவரது அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், கர்னல் பென்னிகுயிக் அவர்களின் வெண்கலச் சிலையும், மணிமண்டபமும் மாண்புமிகு அம்மா அவர்களின் @AIADMKOfficial அரசு நிறுவியதையும்,
சமீபத்தில் கர்னல் பென்னிகுயிக் அவர்களின் உறவினர்கள் என்னை நேரில் சந்தித்து, இங்கிலாந்து நாட்டில் உள்ள அவர்தம் நினைவிடப் புனரமைப்பு குறித்து கோரிக்கை விடுத்த போது, விரைவில் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்பதை நான் தெரிவித்தமையையும் இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன்.
தன்னலமற்ற சேவையின் சின்னமாக அவரது பெயர் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Congratulations to #teamindia on a majestic victory over New Zealand in the final of the @ICC #t20worldcup, reclaiming the crown and once again standing tall as world champions. 🇮🇳🏆
A triumph built on composure, skill, and collective belief-. #india delivered when it mattered the most on the biggest stage.
Special appreciation to @IamSanjuSamson for a scintillating performance with the bat, a knock marked by authority, timing, and fearless stroke play.
@Jaspritbumrah93 was equally exceptional, producing a breathtaking spell with the ball that shifted momentum decisively and showcased why he remains one of the finest bowlers in world cricket.
A proud moment for Indian cricket and millions of fans across the nation!
@T20WorldCup ,
உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள நமது கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Congrats CHAMPS!
#indvnz @BCCI
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் அன்பான மக்கள் அளித்த சிறப்பான வரவேற்பைப் பெற்று, அவர்களிடையே எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
கடந்த 48 மணி நேரத்தில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நடந்தவை.
- செங்கல்பட்டில் தி.மு.க கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..!
- கோவையில் நகைக்காக மூதாட்டி கை. கால்கள் கட்டப்பட்டு கொலை.
- சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சீருடையில் அத்துமீறிய காவலர்.
- மதுரையில் போதை ஆசாமிகள் கல்லூரி பேருந்தை தாக்கி அட்டூழியம், மாணவிகள் அலறல்.
- கொடுங்கையூர் எழில் நகரில் 3 வீடுகளில் உள்ளே புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மர்மநபர்கள்.
- சென்னை புளியந்தோப்பில் ஆப் மூலம் ஆட்டோ புக் செய்து பயணித்த இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்.
- மானாமதுரையில் ஆகாஷ் எனும் இளைஞர் காவல் மரணம்.
- சென்னையில் சிறுமியை பிறப்புறுப்பில் தாக்கிய திமுக நிர்வாகி.
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை.
- சிவகங்கையில் மொட்டை மாடியில் கழுத்தறுக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.
- திருவள்ளூரில் இலங்கை தமிழர் முகாமின் தலைவர் படுகொலை.
மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த விடியா ஆட்சி இனியும் தொடர வேண்டுமா?
மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். தேர்தல் எப்போது வருமென காத்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களைக் காக்கும் @AIADMKOfficial அரசை நிறுவிடத் தயாராகிவிட்டார்கள்.
#can_she_liveintn
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளதாக ,
#உலகமகளிர்தினம்- ஆன இன்று,
அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.
ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.
இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள் @mkstalin அவர்களே?
ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு,
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா?
குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது
கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ,
அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் ,
ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
#can_she_liveintn
#internationalwomensday2026 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
இது தான் ஸ்டாலின் சொன்ன "நமக்கு நாமே" திட்டமா?
நமக்கு நாமே பாதுகாப்பு!
திமுக-வை நம்புவது மகா தப்பு!
#sayyestowomensafety
#sayyestoaiadmk -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Any disrespect, procedural lapse, or avoidable embarrassment involving the Hon’ble President of India at a public event is deeply regrettable and unacceptable.
It is deeply saddening that our
Hon’ble President had to publicly express anguish over such an incident.
Constitutional offices are not mere ceremonial symbols- they embody the dignity of our Republic.
Those entrusted with governance carry the responsibility of ensuring that administrative conduct always reflects due respect to the nation’s highest office.
@rashtrapatibhvn
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!
ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் , விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.
பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.
மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
உங்கள் கனவுகள் நனவாக,
உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட,
நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன் ,
தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும்,
மீண்டும் என் இனிய #மகளிர்தினம் நல்வாழ்த்துக்கள்
@AIADMKOfficial
#womensday -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எம்மை ஈன்றெடுத்த அன்புத் தாயார் பிறந்த #அந்தியூர் மண்ணின் அன்பிற்கினிய மக்களிடையே எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
கொடுத்தவை பொய் வாக்குறுதிகள்; செய்தவை அரைகுறை திட்டங்கள்; திறந்தவை யாவும் @AIADMKOfficial திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்; ஆனால், விளம்பரம் மட்டும் பிரம்மாண்டம்- இது தான் ஸ்டாலின் மாடல்!
இதுவா ஆட்சிக்கான மாடல்?
இதுவா அரசுக்கு இலக்கணம்?
அரசின் வேலையை மறந்து,
PR MACHINERY-யாக மட்டுமே இயங்கும் திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் மக்களுக்கான செயல்கள் மூலம், திட்டங்கள் மூலம் மக்களை மகிழ்விக்கும் அஇஅதிமுக அரசை தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தலே வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆமாம் திரு. @mkstalin அவர்களே....
உங்கள் ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!
பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது!
சமூகநீதி முடிந்துவிட்டது!
மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!
இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்!
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
அய்யா வைகுண்டர் அவதார நாள்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாழ்த்துச் செய்தி.
திருச்செந்தூர் கடற்கரை, சந்தோசபுரத்திற்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால்' அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது. இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19 இரவு அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி, மாசி 20 அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அய்யா வைகுண்டர் அவதார காட்சியை கண்டு அருள் பெறுவார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார காட்சி கண்டு அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்கள்.
அதன்படி இந்தாண்டு அய்யா வைகுண்டர் 194-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (4.3.2026) நடைபெறவுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளை பெறுவதற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டர் அவர்களது திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சமயத்தில் நான் கடந்த 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நேரில் வந்து, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது
இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.
இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும்.
எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஏற்கெனவே 'அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்' பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றுவரை இயங்கி வருகிறது. இதையொட்டி புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டியிருப்பது, விடியா திமுக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும். திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை புறக்கணிப்பு செய்வது, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் இழைக்கப்படும் அநீதி.
பேரறிஞர் அண்ணாவின் பெயரை மறைப்பதுதான் திராவிட மாடலா..?
தந்தையின் பெயருக்கு விளம்பரம் செய்யவேண்டுமானால், திமுக-வின் அறக்கட்டளையில் இருந்து செய்ய வேண்டுமே தவிர, ஏற்கெனவே பேரறிஞர் அண்ணா பெயரில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதால் அண்ணா பெயருக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், தேவையற்ற சர்ச்சையையும், பிரிவினையையும் உருவாக்கும். எனவே, இந்தப் பெயர் மாற்ற அரசியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
மக்களுக்கு நீண்ட நாள் பயனளிக்க வேண்டிய பேருந்து நிலையத்தில் கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு, கழிவுநீர் வசதிகள், பயணிகள் அமர்வு வசதிகள், போக்குவரத்து வழிகள் போன்றவை இன்னமும் ஆய்வு செய்யப்படவே இல்லை. இவையெல்லாம் முடிவதற்கு குறைந்தது ஒருமாத காலம் தேவைப்படும் நிலையில், தேர்தலை மனதில் நிறுத்தி அவசர, அவசரமாக 4.3.2026 அன்றே திறப்பு விழா நடத்த இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி, மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு,
இப்படி தப்பும் தவறுமாக விளம்பர மோகத்தில்,
பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதையும்; போதிய வசதிகளை ஏற்படுத்தாமல் அவசர கதியில் திறப்பு விழா நடத்துவதையும், மக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதையும் , விடியா திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். @mkstalin @CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்து பெட்ரோல் குண்டு நடத்திய கண்மூடித்தனமானக் கொடூரத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் காட்சிகள் காணவே பதைக்கின்றன.
"சட்டம் ஒழுங்கு" என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த ஐந்தாண்டுகளை Lethargic-ஆக
கடந்துவிட்ட இந்த பொம்மை முதல்வரின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது.
திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல கலர் கலராக ரீல் விளம்பரங்களை மட்டும் செய்கிறது
இந்த @mkstalin அரசு. ஆனால்,
திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது !
இப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் சமூகத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்துள்ளதாக அச்சத்துடன் போராடி வருகின்றனர்.
இந்த அச்சமும், பதற்றமும் தான் திமுக அரசின் சாதனையா? தொடர்ந்து இப்படி பதற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறதா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
சமூக சமநிலையை, பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன்?
சமூக மோதல்களை தடுக்க, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக இந்த கொடிய குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று பொதுத்தேர்வுக் களம் காண உள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு #allthebest.
உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்யவேண்டிய நேரம் இது.
எந்த பதற்றமும் இல்லாமல், தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு, வென்று வாருங்கள்!
Wish you all , nothing but success!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
@PMOIndia @MEAIndia
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில்,
10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் போது, "தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?" என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.
மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை?
"எங்கும் தமிழ்" என்பது வாயளவுக் கொள்கை தானா? "எதற்கு தமிழ்?" என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா?
@mkstalin
#tnpscgroup2, கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில் ஏதேனும் ஒரு குளறுபடி நடக்கிறதே... இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடந்துவிட முடியுமா? அதுவும், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழலுக்கு பிறகு, "வாங்கியதை" எல்லாம் "திருப்பி கொடுக்காமல்" இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழாமல் இல்லை.
"3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்" என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தோடு, கனவுகளோடு விளையாடும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள உங்களின் @AIADMKOfficial அரசு, பல்வேறு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை முறையாக நடத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்களை அரசுப்பணிகளில் அமர்த்தி அழகுபார்க்கும் அரசாகத் திகழும்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மதுரவாயல், #பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே உரையாற்றினேன்.
ஐந்தாண்டுகளாக வாயால் மட்டுமே வடை சுட்ட @mkstalin ஆட்சியால், பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வுகளால் சொல்லொண்ணாப் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளான தமிழக மக்களுக்கு ஊக்கமளித்திடும் வகையில், நான் அறிவித்த ரூ. 10,000/- உதவித்தொகை குறித்து திமுக-வினர் புலம்புவதைப் பார்க்கும் போதே, எனது அறிவிப்பு மக்களிடையே சென்று சேர்ந்து SUPERHIT ஆகியுள்ளது தெரிந்துவிட்டது.
மக்கள் எப்போது தேர்தல் வரும் என காத்திருக்கிறார்கள்; மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, மக்களுக்கான @AIADMKOfficial ஆட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான
திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாய் வீற்றிருக்கும் நம் ஒப்பற்ற தலைவி மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்றைய தினம் எக்ஸ் தளப் பதிவு வாயிலாகவும், #மனதின்_குரல் நிகழ்ச்சி வாயிலாகவும் , மாண்புமிகு அம்மா அவர்கள் குறித்தான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு,
புகழாரம் சூட்டிய மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு @AIADMKOfficial சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் அவர்கள் கூறியதுபோல், சமுதாயத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்கள் ஆற்றிய சேவை மக்கள் நினைவில் என்றும் இருக்கும்.
மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் நெடும் புகழை நினைவுகூர்ந்த மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் (@VPIndia) திரு. @CPR_VP அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்கள், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. @nitin_gadkari அவர்கள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும், ஆந்திர மாநிலத் துணை முதல்வர் (@APDeputyCMO) திரு. @PawanKalyan அவர்களுக்கும், பாஜக மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள், பாமக தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் அவர்கள் (@draramadoss), அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள், தமாகா தலைவர் திரு. @GK__Vasan அவர்கள், தமமுக தலைவர் திரு. @JohnPandianTMMK உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகைத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுக்கும், தமிழகமெங்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழக மக்களுக்கும் @AIADMKOfficial சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், சட்டம் ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தையும் தனது முழுமுதற் கொள்கையாகக் கொண்டு செயலாற்றி, தமிழகத்தை "அமைதி, வளம், வளர்ச்சி" என்ற அம்மா காட்டிய பாதையில் செலுத்திடும் நல்லாட்சியாகத் திகழுமென்ற உறுதியை மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளில் தமிழக மக்களுக்கு அளிக்க விழைகிறேன்.
#என்றென்றும்_அம்மா -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கூட்டுறவுத் துறை சார்பில்,
கடந்த அக்டோபர் மாதம் SRB மற்றும் DRB பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது @mkstalin மாடல் விடியா திமுக அரசு.
பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத விடியா திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள, திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
#tnpscgroup2 தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.
தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில்,
அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,
“அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,
பெண்களின் தைரியம்,
தாய்மையின் உருவம்.
அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;
மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், “Poverty Alleviation” -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
We Take a leaf out of your book in all
of our actions for the people Amma 🙏
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, @AIADMKOfficial என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.
அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,
கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி,
தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.
"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!
வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!
வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
#என்றென்றும்_அம்மா -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1000" என்று வாய்கிழிய 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தது யார்?
அதை இன்று வரை முழுமையாக நிறைவேற்றினீர்களா @mkstalin அவர்களே?
28 மாதங்கள் ரூ.1000 கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டதை @AIADMKOfficial தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகுதானே, அரைகுறையாக திட்டத்தை துவக்கினீர்கள்?
இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு உங்களுக்கு கோபம் வருகிறது பொம்மை முதல்வரே?
"Ongoing Scheme"-களை தேர்தல் ஆணைய நடத்தை விதிகள் கட்டுப்படுத்த முடியாது என்ற அடிப்படை விதிகள் கூட பொம்மை முதல்வருக்கு தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா?
இப்படி உண்மைக்கு கொஞ்சம் கூட நெருக்கமற்ற Conspiracy Theory-களை மட்டுமே வைத்துக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் பூச்சாண்டி அரசியல் செய்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?
"எனது சகோதரிகள் கணக்கில் வரவு வைத்துள்ளேன்" என்று மார்தட்டுகிறீர்களே... அப்படியென்றால், தகுதி இல்லை என்று நீங்கள் நீக்கிய ஏறத்தாழ ஒரு கோடி தமிழ்ப் பெண்கள் உங்களுடைய சகோதரிகள் இல்லையா?
Copy, Paste செய்வது,
ஸ்டிக்கர் ஒட்டுவது,
அஇஅதிமுக திட்டங்கள் மீது, அதன் பலன்கள் மீது சவாரி செய்வது
என இப்படியே ஐந்தாண்டுகளைக் கடத்தியிருப்பது யாரென்று மக்களுக்கு தெரியாதா?
இல்லந்தோறும் உங்கள் மகளிர் ராணுவப் படை செல்லும் போது, "திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி" என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா? சொல்லித்தான் பாருங்களேன்!
திமுக எனும் ஓடாத ஓட்டை எஞ்சினை, மக்கள் விரட்டி அடிக்கப் போவது தான் இந்த சட்டமன்றத் தேர்தலின் ஒரே Narrative!
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று, 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இது தான் சமூகநீதியா @mkstalin அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?
இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?
பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?
தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்?
மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்பிற்கு இடையே, எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று @Udhaystalin சொல்கிறார் என்றால், அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?
தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா?
ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.
இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?
குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்.
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மாதவரம் தொகுதி மக்கள் திரளாகக் குழுமிநின்று அளித்த எழுச்சிமிகு வரவேற்பை மகிழ்வோடு பெற்று, அவர்களிடையே உரையாற்றினேன்.
துரோகத்தைப் பற்றி ஸ்டாலின் பேச என்ன அருகதை இருக்கிறது? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் துரோகி ஸ்டாலின் தான்!
#ஆவடி #அம்பத்தூர் தொகுதிகளில் பேசிய போது, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசினேன். இந்த ஊழல் பற்றி @dir_ed மூன்று முறை கடிதம் எழுதியும் இந்த ஸ்டாலின் அரசு வழக்கு பதியவில்லை. இது குறித்து @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், இந்த ஊழல் குறித்து வழக்கு பதியவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டு பயத்தில் அலறிப் போய் உளறிக் கொண்டிருக்கிறார் திரு. @mkstalin. இந்த ஊழலெல்லாம் மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
இந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, அஇஅதிமுக-வின் எந்தவொரு தொண்டனுக்கும் பயம் என்பதே இல்லை! உழைப்பை நம்பி, சொந்தக் காலில் நிற்கும் எங்களுக்கு என்ன பயம் இருக்கப் போகிறது? வெறும் கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி சவாரி செய்யும் ஸ்டாலின் தான் பயத்தில் இருக்கிறார்.
மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். விளம்பர விடியா திமுக ஆட்சியை #byebyestalin என சொல்லி விரட்டியடித்து, சொன்னதை செய்து மக்களுக்காக உழைக்கும் @AIADMKOfficial ஆட்சியை தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திக்ள் வருகின்றன.
கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.
ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழ்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், "சிலிண்டர் வெடிப்பு" என சமாளிக்கவே முயன்றது இந்த விடியா திமுக அரசு.
தொடர்ந்து தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் NIA போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது?
டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது?
இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நம் உயிருக்கு நேராம்,
சமூகத்தின் விளைவுக்கு நீராம்,
உரிமைச் செம்பயிருக்கு வேராம்,
உயர்வுக்கு வானாம்,
பிறவிக்குத் தாயாம்,
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்...
தமிழுக்கும் தமிழருக்கும் @AIADMKOfficial என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்... -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புனித ரமலான் மாத நோன்பு தொடங்கியுள்ள இந்த புனித நாட்களில் , இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
ஈகையின் வழியில் நம்மை நடத்தும் இவ்வருள்மிகு காலத்தில், நோன்பு நோற்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் பிரார்த்தனைகள் ஏற்கப்பட்டு, உங்கள் இல்லங்களில் அமைதி, நலன் மற்றும் வளம் பெருகட்டும்.
ஈகை, பரிவு, சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த மனிதநேயப் பண்புகள் நம் சமூகத்தில் மேலும் வேரூன்றி வளர இந்த ரமலான் மாதம் வழிவகுக்கட்டும்.
@AIADMKOfficial
#ramadanmubarak #ramadankareem -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு?
ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் @AIADMKOfficial திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே!
இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் திரு. @mkstalin.
ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.
நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய பொம்மை முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது.
விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.
அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.
7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்.... @mkstalin
(ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!) -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உதவித்தொகை உயர்வு கோரி
மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல் , சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள்
சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான @tncpim மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் (@kbcpim) அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று ,
@mkstalin அரசு அனைத்து விதமான
"கோரிக்கைக் குரல்களை" ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய
Fascist mentality-க்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உழைக்கும் மக்களே...
உடன்பிறப்புகளே...
புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...!
நம் உயிர்நிகர் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்து,
சத்யா மூவீஸ் தயாரிப்பில்,
தமிழ்நாட்டின் Industry Hit ஆகி,
இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து, சர்வதேச விருதுகளைப் பெற்ற மாபெரும் வெற்றிப் படமாம் #இதயக்கனி தற்போது Re-Release ஆகி, 225 நாட்கள் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில், இன்று கழக உடன்பிறப்புகளோடு இணைந்து திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கம் சென்று, 1975-ல் இதயக்கனி வெளியான போது, கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, பலமுறை படத்தைப் பார்த்து,
இளைஞனாக ரசித்து மகிழ்ந்த தருணங்களை அசைபோட்டுக்கொண்டே, #mgr எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் காலத்தால் அழியாத திரை ஆளுமைமிக்க நடிப்பை ரசித்தேன்.
தலைவர் அவர்களின் படங்கள்,
எப்போதும் நமக்கொரு நற்பாடத்தைச் சொல்லும். அதேபோல், #இதயக்கனி சொல்லும் சமநீதிச் சமுதாயம் காண, அண்ணா வழி கண்டு நன்மை தேடுவோமாக!
@AIADMKOfficial
#idhayakkani
@sathyamovies @SathyaJyothiThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest congratulations to #teamindia for their emphatic victory over Pakistan in the T20 World Cup 2026 at Colombo! Our proud record against Pakistan continues!
This dominant win secures Super 8 qualification and showcases India’s talent and resolve.
#ishankishan delivered a
match-winning knock,
supported brilliantly by
Captain #sky ,
Our unified bowling attack led by #bumrah & #hardikpandya was simply outstanding!
On behalf of the people of
Tamil Nadu and #aiadmk,
salutations to your Efforts !
@BCCI @surya_14kumar @Jaspritbumrah93 @hardikpandya7
#t20worldcup2026
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி மக்களின் எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
சமீபத்தில் நான் அறிவித்த இரு கட்ட #அஇஅதிமுக_தேர்தல்வாக்குறுதிகள் தான் இன்றைக்கு மக்களிடம் பேசுபொருளாகி உள்ளன.
அவ்வகையில், மற்றுமொரு
முக்கிய வாக்குறுதியாக,
நடைபாதையில் கடை வைத்திருப்போர் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியிருப்பின், அவை @AIADMKOfficial ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை மகிழ்ச்சியோடு மக்களிடையே தெரிவித்தேன்.
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தது போல்,
எந்த மேடையிலும், எந்த கேள்விக்கு
திரு. @mkstalin-க்கு நேருக்கு நேர் பதில் சொல்ல நான் தயார்! ஸ்டாலின் தயாரா?
"இரவினில் ஆட்டம், பகலிலே தூக்கம்" என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக இருப்பவர் தான் இன்றைய துணை முதல்வரான, ஸ்டாலினின் மகன்…!
இப்படிப் பட்டவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?
மக்களை மறந்துவிட்டு, கொள்ளையடித்துக் குவிக்கும் திமுக குடும்பத்தை இன்னும் இரண்டே மாதங்களில் ஜனநாயகப்
பூர்வமாக வீழ்த்தி,
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
@AIADMKOfficial
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,
புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பணியாற்றியவரும் , @AIADMKOfficial மூத்த முன்னோடியாக விளங்கிய, மறைந்த மரியாதைக்குரிய திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மகனும்,
தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றியவரும், சிறப்பான ஆன்மீக சேவை புரிந்தவருமான
திரு. வீ. தமிழ் அழகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sathyamovies @SathyaJyothi -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
C. S. I. ஈரோடு சேலம் திருமண்டலத்தின் பேராயர் அருட்பெருந்திரு.
முனைவர். ஜேக்கப் லிவிங்ஸ்டன் அவர்கள் மரணமுற்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றுண்ணா துயரமும் கொண்டேன்.
மிக சிறந்த ஆன்மிகத் தலைவராகவும், சமூக செயல்பாட்டாளாராகவும், சமூக நல்லிணக்கத்திருக்கு பாடுபட்டவரும், சிறந்த சீர்திருத்த பேச்சாளருமாகிய அவரின் மறைவு கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் ஈரோடு -சேலம் திருமண்டலத்தின் அனைத்து திருச்சபை மக்களுக்கும் குடும்பத்தினர்க்கும் @AIADMKOfficial சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?
28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.
2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா
திரு. @mkstalin அவர்களே?
சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று வீடு வீடாக சென்று @AIADMKOfficial அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த @AIADMKOfficial தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் ,
இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே...
யாரும், எந்தவொரு திட்டத்தையும்
தடுக்காத போதிலும், நீங்களாக வந்து
"ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
"அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை
5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி ,
1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்
#அஞ்சி_ஆயிரம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர்
வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த
5 நாட்களுக்கு முன்பு பொது வெளியில் மது அருந்திக்கொண்டிருந்த நபர்களை,
இங்கு மது அருந்தக்கூடாது என அறிவுறுத்திய @AIADMKOfficial வட்டச் செயலாளர் திரு. சுரேஷ்குமார் அவர்களை, நேற்று முன்தினம் (09.02.2026) இரவு 8.30 மணியளவில், கழக அலுவலகத்தில் கழகப் பணிகளை கவனித்து கொண்டிருந்த போது, 5 நபர்கள் கொண்ட அக்கும்பல் புகுந்து கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இச்சம்பவத்தில் வட்ட கழக செயலாளர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்டப் பாசறை இணைச் செயலாளர் திரு. ஈசா டி.செந்தில் ஆகியோர், மற்றும் தடுக்க வந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து, கழகத்தினரைத் தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் துணிந்திருப்பதற்கு ஒரே காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் சட்டம் ஒழுங்கைக் காக்கத் திராணியற்ற பொம்மை முதல்வரின் கையாலாகாத திமுக அரசு தான்.
குற்றவாளிகளின், போதைப் பேர்வழிகளின் புகலிடமாக, சொர்க்க பூமியாக தமிழகத்தை சீர்குலைத்துள்ள @mkstalin மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கழக உடன்பிறப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மருத்துவ கல்வியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தன்னால்தான் வந்தது என்பதுபோல் புலம்பித் திரியும் பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin -க்கு கண்டனம்!
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கும் பொம்மை முதலமைச்சர், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில்
நடைபெற்ற ஒரு விழாவில்,
7.5 சதவீத உள் -இடஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்க முயற்ச்சிக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.
'சத்துணவு திட்டம் என்றால் புரட்சித் தலைவர்’
'தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித்தலைவி அம்மா'
'7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு'
என்று அனைவரும் அறிந்திருக்கையில்,
"அடுத்தவன் பெற்ற குழந்தையை தன் குழந்தை என்று சொந்தம் கொண்டாடும் புத்தி' கொண்ட ஸ்டாலின்,
இந்தத் திட்டத்தையே தான்தான் புதிதாகக் கொண்டுவந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருவது வெட்கக்கேடானது.
2021 முதல் நான்கரை ஆண்டு காலமாக தூங்கிவிட்டு, 5 லட்சம் கோடி கடன் வாங்கி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக்கிவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கடந்த
3 மாதங்களாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அடிக்கல் நாட்டுவது; ஒப்பந்தம் கோருவது;
மக்களின் வரிப் பணத்தில் விளம்பரம் தேடுவது போன்றவைகளால், தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று திரு. ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
தான் ஒரு முதலமைச்சர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும்
திரு. ஸ்டாலின் அவர்களின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது.
'பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது'
என்பதை திரு. ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம்.
மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ?
சுவர் தன் மீது விழுந்துவிடுமோ?
தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?
போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.
இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி,
ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது…
இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித் துறை இருக்கிறதா?
அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
மாணவர்களின் பாதுகாப்பை Compromise செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா?
இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு,
"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.
பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு,
ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர்,
Group II போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு .
விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
#dmkfailstn -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #tnpsc குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,
இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
#tnpscgroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,
“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் ,
குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு?
அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்
தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.
ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள்,
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும் . -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Champions again! 🏆
Heartiest congratulations to #teamindia on winning the @ICC Under-19 Cricket World Cup.
Special applause to #vaibhavsooryavanshi for a sensational match-winning knock,
Captain #ayushmhatre for calm leadership and a crucial contribution, and the bowling unit for a disciplined, dominant effort.
A proud moment for the nation. The future of Indian cricket looks bright!
#u19worldcup @BCCI
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்து மக்கள் கட்சி தலைவர்
திரு. அர்ஜுன் சம்பத் அவர்கள் ஒரு வழக்கு விசாரணைக்கு திருச்சியிலுள்ள CJM நீதிமன்றத்திற்கு செல்லும்போது மார்க்சிய-லெனினிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலர் அவரை தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
திரு. அர்ஜுன் சம்பத் அவர்கள்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
சமுதாயப் போராளியாக இருக்க கூடிய திரு.அர்ஜுன் சம்பத் அவர்களை தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி
மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திரு. செந்தில் அவர்கள் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்-
இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை.
இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத பொம்மை முதல்வர் @mkstalin-ன் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே ?
தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை? இதற்கு உள்ளபடியே திரு. @mkstalin அவர்கள் தலைகுனிய வேண்டும்.
உயிரிழந்த திரு. செந்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,
திரு.செந்தில் அவர்களைப் படுகொலை செய்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
நான் மீண்டும் சொல்கிறேன்- தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
#dmkfailstn #byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும்; பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மாபெரும் பேரணி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#tasmac #dmkfailstn -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாக்குறுதிகள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு ஆட்சியாளராக பொம்மை முதல்வர் @mkstalin ,Total Failure என்பதற்கு
இந்த செய்தியே சாட்சி!
அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு!
கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.
இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி , வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற
2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த
சாமானிய மனிதன்!
தலைமுறைகள் தாண்டி,
எல்லோரும் விரும்பி விளிக்கும்
"அண்ணா"!
"தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"
என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...
அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் @AIADMKOfficial இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
#அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்!
அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
அண்ணா நாமம் வாழ்க!
#cnaisourdna -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசால் இன்று (1.2.2026 - ஞாயிற்றுக் கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர்
திருமதி. @nsitharaman அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2025-2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் 2026-2027-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.
இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு. மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளதை பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.
சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக. நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ் நாடு இதனால் பயன்பெறும்.
இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், நிதி அமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia @FinMinIndia
#budget2026
@AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
With the Economic Survey for the year 2025–2026 having been released on 29.01.2026, the Union Budget for the year 2026–2027 has been presented in Parliament today (01.02.2026 – Sunday) by the Central Government under the leadership of the Hon’ble Prime Minister of India, Thiru. @narendramodi Avl.
I extend my heartfelt congratulations to the Hon’ble Union Finance Minister, Tmt. @nsitharaman Avl, for creating a new historic record by presenting the Union Budget for the ninth consecutive time.
The Economic Survey for 2025–2026 highlights that despite global uncertainties arising from war-like tensions, India’s economic growth is expected to rise from 6.5% to 7% in 2025–2026, and remain strong at 6.8% to 7.2% in 2026–2027. This clearly reflects the resilience and strength of the Indian economy.
In this context, the Union Budget 2026–2027’s focus on strengthening fiscal management by reducing the fiscal deficit and debt-to-GDP ratio is highly commendable. These efforts will further reinforce long-term economic growth.
I appreciate the proposals aimed at reducing imports and increasing domestic production, along with initiatives to promote research, manufacturing, advanced technology infrastructure, artificial intelligence, electronics manufacturing, pharmaceuticals, textiles, and container production. The establishment of industrial parks, biomedical parks, and manufacturing zones, backed by assured financial support, is a welcome step. In particular, the textile development initiatives will greatly benefit regions such as Tiruppur and Karur.
The development of dedicated freight corridors, high-speed rail networks, and inland waterways will bring a transformational change to the transport sector. The priority accorded to sectors such as Ayurveda and animal husbandry is also appreciable.
Several initiatives have been announced for the growth of Micro, Small, and Medium Enterprises (MSMEs). Notably, the allocation of ₹2,000 crore to ensure access to credit and ₹10,000 crore for MSME development funding will be extremely beneficial. Given the large presence of MSMEs in Tamil Nadu, the state stands to gain significantly from these measures.
This Union Budget not only paves the way for India’s continued growth but also strengthens India’s position as a robust global economic power. I therefore convey my sincere appreciation to the Hon’ble Prime Minister of India and the Hon’ble Union Finance Minister for this forward-looking and growth-oriented Budget.
@PMOIndia @FinMinIndia
#budget2026
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
என திருவருட்பாவாக உரைத்து,
பசி ஒழித்து, கருணையை வாழ்வாக்கி,
ஜாதி–மத வேறுபாடுகளை மறுத்து, மனிதநேயமே இறை வழி என போதித்த "வள்ளலார்" திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளார் இறையுடன் இரண்டறக் கலந்திட்டு, "#அருட்பெருஞ்ஜோதி” என்ற ஒளிவழியாக மாறிய இந்த தைப்பூச நாளில்,
அவரின் உயரிய சன்மார்க்க நெறி நம் மனங்களில் தீபமாக ஒளிர வேண்டுவோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
#வள்ளலார்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள்,
அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால்,
"வேலுண்டு வினையில்லை" என்பதற்கு ஏற்ப
வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் , இந்த தைப்பூசம் திருநாள்.
வேல் ஏந்தி தீமைகளை அகற்றி, அன்பும் கருணையும் அருளும் முருகப் பெருமானின் பூரண அருளால், உலகெங்கும் வாழும்
தமிழர்கள் வாழ்வு மலரட்டும். வெற்றிகள் தொடரட்டும். தீமையின் பிடியில் இருந்து தமிழகம் மீளட்டும். கந்தனின் அருளால், தமிழ்நாடு உயர்ந்து ஒளிரட்டும்.
#தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எனது தலைமையிலான , அம்மாவின் @AIADMKOfficial அரசு அறிவித்தமையை உள்ளார்ந்த பெருமிதத்தோடு நினைவுகூர்கிறேன் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சமீபத்தில் நம் இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை விளக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்களை மத்திய @BJP4India அரசு சார்பிலும், விரைவில் தமிழ்நாட்டில் அமையவுள்ள @AIADMKOfficial அரசு சார்பிலும் அளித்திட தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இத்தருணத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#indiaeutradedeal
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
In the wake of the historic trade agreement signed between India and the European Union, several industry representatives from Erode, Tiruppur, Coimbatore, and surrounding districts personally contacted me to share their enthusiasm and to explain the far-reaching benefits this agreement will bring to their respective sectors.
They expressed firm confidence that the @BJP4India-led Central Government will continue to deliver such growth-oriented reforms, and conveyed their belief that the forthcoming @AIADMKOfficial government in Tamil Nadu will effectively complement these initiatives by creating a robust, trade-friendly ecosystem in the State.
At this historic moment, I extend my heartfelt congratulations and sincere appreciation to the Hon’ble Prime Minister of India, Thiru. @narendramodi Avl, and the Central Government for their decisive leadership in making this landmark trade agreement a reality.
Truly, the “Mother of all deals.”
#indiaeutradedeal -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அகிம்சையும் உண்மையும் தான் உலகத்தை மாற்றும் என்ற நம்பிக்கையோடு ,
நம் இந்திய நாட்டின் கொள்கை வழிகாட்டியாக விளங்கும் தேசத்தந்தை #மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, மனிதநேயத்தின் உயர்ந்த சின்னமாம் அவரின் தியாகப் பெருவாழ்வைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
#mahatmagandhi -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.
தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.
இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான
விசாரணை நடத்த வேண்டும் எனவும்,
பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் .
@AIADMKOfficial
#savetn -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை
இந்த பொம்மை முதல்வர் @mkstalin வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட,
இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில்,
இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் @Subramanian_ma அவர்கள்.
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு
வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே
இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது
2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்,
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் @mkstalin
இந்த கொலைகளுக்கு
என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The passing of Thiru. Ajit Pawar, Deputy Chief Minister of Maharashtra and National President of the Nationalist Congress Party (NCP), following a tragic accident, is a profound loss to Maharashtra’s politics and public life.
Known for his vast administrative experience and decisive leadership, his untimely demise leaves a void that will be difficult to fill.
I extend my deepest condolences to his family, party colleagues, and supporters.
May his soul rest in eternal peace.
@AIADMKOfficial
@AjitPawarSpeaks #ajitpawar -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விடியா திமுக ஆட்சியில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல்,
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு
வரும் 82 மாவட்டக் கழகங்களும்,
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து,
விடியா திமுக ஆட்சிக்கு எதிராக,
“விடியா ஆட்சி உங்கள்
வீட்டு Bill-லே சாட்சி”
என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து,
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம், விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்...
@AIADMKOfficial
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய #குடியரசு_நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு,
இந்திய அரசியலமைப்பு அளித்த
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
#republicday
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2026ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசின் விருதுப்பட்டியலில் *பத்மபூஷன்* விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம். மயிலானந்தன், மற்றும் மருத்துவர் கள்ளிபட்டி ராமசாமி . பழனிச்சாமி அவர்களுக்கும்,
*பத்மஶ்ரீ* விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள
தமிழகத்தை சேர்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக சேவை ஆற்றிய டாக்டர் திரு.H.V. ஹண்டே, கால்நடை ஆராய்ச்சியாளர் டாக்டர் திரு.புண்ணியமூர்த்தி நடேசன்,
வேளாண் விஞ்ஞானி திரு. கே.ராமசாமி,
திரு. வீழிநாதன் காமகோடி -
IIT இயக்குநர் சென்னை,
எழுத்தாளர் திருமதி.சிவசங்கரி, கர்நாடக இசைக் கலைஞர்கள் திருமதி. காயத்திரி பாலசுப்பிரமணியன், திருமதி.ரஞ்சனி பாலசுப்பிரமணியன்,
முன்னாள் இந்திய காவல் பணி உயர் அதிகாரி திரு.விஜயகுமார், ஓதுவார் திரு.திருத்தணி சுவாமிநாதன், திரு.ஆர்.கிருஷ்ணன்,
ராஜஸ்தபதி திரு.கலியப்ப கவுண்டர்,
திரு. திருவாரூர் பக்தவத்சலம் , நடிகர் மாதவன், புதுச்சேரி திரு.கே.பழனிவேல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலருக்கும் இவ்விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு அஇஅதிமுக சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சங்கத்தில் வளர்ந்து,
சரித்திரங்கள் பல படைத்து,
சீரிளமை கொண்டு விளங்கும்,
நம் உயிருக்கு நேராம்,
செந்தமிழர் தாயாம்,
அன்னைத் தமிழை காக்க
தன்னுயிர் நீத்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்!
#வாழ்க_தமிழ்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில்,
ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் @mkstalin அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்றைய தினம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு
இந்திய திருநாட்டின் பிரதமர்
திரு. @narendramodi அவர்களுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி.
@AIADMKOfficial தலைமையிலான நம் வெற்றிக் கூட்டணியின் சார்பில் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று,
இன்றைய நமது கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம், ஆளுங்கட்சி திமுக-வை ஆட்டம் காண வைத்துள்ளதை ஆணித்தரமாக எடுத்துரைத்த @BJP4TamilNadu மாநிலத் தலைவர், சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கும்,
"திமுக ஆட்சி என்றாலே அது ஒரு பூஜ்ஜியம் ஆட்சி" என்ற உண்மையை உரக்கச் சொன்ன பா.ம.க. தலைவர் திரு. @draramadoss அவர்களுக்கும்,
"மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியை அகற்றி, மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சி அமைய அம்மாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து அயராது உழைக்க வேண்டும்" என்று உரைத்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர், அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறப்பித்த @TMC_Moopanar தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், @TMMKofficial தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், @pbkparty தலைவர் திரு. @jaganmoorthy_m, புதிய நீதிகட்சித் தலைவர் திரு. @DrACSOfficial, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR ,
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்பை சார்ந்த தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் திரு. @mkstalin பார்த்து அலறிப் போய் விட்டார் போல.
உடனே எக்ஸ் தளத்தில் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்.
"அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும்" என்பார்கள். ஆனால்,
நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத,
ஒரு "ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி"யை நடத்திவிட்டு, இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, நமது மாநிலத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசிடம் உரிமையோடு கேட்டுப் பெறும். மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.
"மதுரை மெட்ரோ எங்கே?
கோவை மெட்ரோ எங்கே?" என்று வாய்கிழிய கேட்கும் நீங்கள், எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை, அறிக்கைகளை
மத்திய அரசிடம் சமர்பித்தீர்களா?
இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் தான் ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் ஆச்சே... உங்கள் அதிகாரிகளிடம் இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், எதற்காக வெறும் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என எல்லாவற்றையும் கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி நீங்கள் நடத்திய #fraudmodel_திமுகஆட்சி-யைக் கண்ட பிறகு, நீங்கள் எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி #தமிழ்நாடு_ஏமாறாது !
குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம்.
மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே @AIADMKOfficial தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி!
எங்கள் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தைக் கண்டு இப்படி பயந்துவிட்டீர்களே திரு. @mkstalin அவர்களே-
இது தொடக்கம் தான்...
Lot more to come!
மாண்புமிகு அம்மா அவர்கள் கூறுவது போல்,
நமது இலட்சியம் உயர்வானது!
நமது பார்வை தெளிவானது!
நமது வெற்றி உறுதியானது!
நாளை நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தாய் நாட்டின் விடுதலைக்காக
தனி இராணுவத்தை உருவாக்கி, வலிமையான இந்தியாவை கட்டியெழுப்பும் உயர்ந்த இலட்சியத்துடன் மக்களிடையே தன்னம்பிக்கையும் எழுச்சியையும் விதைத்த சுதந்திரப் போராட்ட மாவீரர் #நேதாஜி #சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில், அவரது அளப்பரிய வீரத்தையும் இணையற்ற தியாகத்தையும் மரியாதையுடன் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
#subhaschandrabose -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்திலுள்ள 'கறிக்கோழி பண்ணை விவசாயிகள்' கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். உணவு மற்றும் மூலப்பொருட்கள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தற்போது இந்நிறுவனங்கள் வளர்ப்பு கூலியாக வழங்கும் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசாவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தங்களது போராட்டங்களினால் எந்தவித பயனுமில்லாததால், 1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து விடியா திமுக அரசு 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியது.
இந்நிலையில் விடியா திமுக அரசு இம்மாத ஆரம்பத்தில் 10 நிர்வாகிகளை எந்தவித காரணமுமின்றி கைது செய்தது.
இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கறிக்கோழி பண்ணை நிர்வாகிகளை (விவசாயிகளை) விடியா திமுக அரசின் காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகிறது.
கைதுசெய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களது பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. @TTVDhinakaran அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
In our mission to dismantle the tyrannical governance of the DMK and put an end to dynastic politics, while reviving the glorious governance model of our Honorable Leader Amma in Tamil Nadu,
I wholeheartedly welcome the
General Secretary of the
Amma Makkal Munnetra Kazhagam,
Respected Mr. @TTVDhinakaran on his joining the National Democratic Alliance and convey my sincere greetings.
Let us unite with a shared commitment to public welfare and work together to liberate the people from the dominance of the DMK family regime.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
விடியா திமுக ஆட்சியில்,
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...
தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை...
எங்கே போச்சு!
எங்கே போச்சு!
சட்டம் ஒழுங்கு எங்கே போச்சு!
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு செத்துப் போச்சு!
நான்கரை வருட திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.
கொலை,கொள்ளை,திருட்டு,பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைபொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
இப்படிபட்ட மோசமான ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் @mkstalin ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#tnassembly
#dmkfailstnThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest congratulations to
Thiru. @NitinNabin Avl on assuming charge as the National President of @BJP4India.
I extend my warm wishes for a successful tenure and trust that his leadership will further strengthen the organisation with commitment to national progress.
May his journey ahead be guided by a steadfast vision for the nation.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை வேளச்சேரியில் நேற்று ,
மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி என்பது நெஞ்சை பதைக்க வைக்கிறது.
இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் திரு. @mkstalin அவர்களே?
தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன.
நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர்?
காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார் , மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன்.
மறைந்தவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் அனைவரும் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை வேண்டுகிறேன்.
ஆற்றுத் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணநிதி உடனடியாக வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் படைத் தளபதியாக இருந்தவரும், தனது விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும்,
கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது, 90கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து,
வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்து, சுமார் 800ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை தமிழ்நாட்டில் மேற்கொண்டவருமான காலிங்கராயன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தை 5ஆம் நாளான காலிங்கராயன் தினத்தில், அவர்தம் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவதுடன்...
கடந்த 2018ஆம்ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்...
@AIADMKOfficial எனும் மாபெரும்
மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய
மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.
தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவராம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்கி,
தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.
அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்!
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR
#mgr109This media couldn't be displayed. See it on the original post.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
@AIADMKOfficial
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR
#mgr109 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!"
தமிழ் கூறும் அறத்தை, உலகப் பொதுமறை வாயிலாக எடுத்துரைத்த அய்யன் திருவள்ளுவர் அவர்களை,
#திருவள்ளுவர்_நாள்-ஆன இன்று,
போற்றி வணங்குகிறேன்.
#thiruvalluvarday
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்து, அவர்களை வளமாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்த பண்பாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர்தம் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்,
அந்நிய மண்ணில் பிறந்தாலும்
காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்
முல்லை பெரியாறு தந்து
வறண்டு கிடந்த பூமியை வளம் பெறச் செய்த திரு.பென்னிகுவிக் அவர்களின் வெண்கல திருவுருவச்சிலையையும் மணிமண்டபத்தையும் மாண்புமிகு அம்மா அவர்கள் திறந்து வைத்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில்,
தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். @AIADMKOfficial
#பொங்கல்2026
#happypongal
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி
#பொங்கல்2026
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல்,
கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே... @mkstalin .,
முதல்வர் என்ற உயர்வான பதவிக்கே
இந்த Failure Model முதல்வர் ஒரு இழுக்கு.
உயிரிழந்த திரு.கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நான்கரை ஆண்டுகள் மக்களை வாட்டி வதைத்த தீமைகள் யாவும் அகன்றிட ,
மக்கள் ஏற்றும் போகியின் நெருப்பு அழித்தொழிக்கட்டும்!
நாளை வரும் தை,
தமிழகத்தின் மீட்சிக்கு அடித்தளமிடட்டும் !
அனைவருக்கும் இனிய #போகி பண்டிகை நல்வாழ்த்துகள்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இளைஞர்களின் வழிகாட்டியாக
விளங்கிய சுவாமி விவேகானந்தர்
அவர்களின் பிறந்தநாளான இன்று,
தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது,
இன்று சுவாமி விவேகானந்தரின் அரும்பணிகளை நினைவுகூர்வதுடன்,
அவர் கூறிய "All power is within you;
you can do anything and everything" என்ற பொன்மொழியை இளைஞர்களுக்கு நினைவுபடுத்த விழைகிறேன்.
இளைஞர்களே- எதையும் "முடியாது" என கடந்துவிடாதீர்கள். எதையும் சாதிக்கும் திறம் உங்களுக்கு உண்டு. நீங்கள் நினைத்தால், மாறாது என்று பிறர் சொல்லும் யாதும் மாறும்!
நினைத்ததை முடிக்கும் திறன் படைத்தவராய் நம் இளைஞர்கள் அனைவரும் உருவாக இந்த தேசிய இளைஞர் தினத்தில் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
#nationalyouthday #swamivivekananda
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில்
ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.
பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.
பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.
தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆட்சிக்கு வரும்போது "அண்ணா வழி நடப்போம்" என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான்.
மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு.
ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை!
தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடுர எண்ணமல்லவா ?
இந்த தீயசக்திதனம் தான், இதை எதிர்த்தொழிக்கதான் , அண்ணாவின் பெயர்தாங்கி, கொடியில் அவர் உருவம் தாங்கி, அண்ணாயிசக் கொள்கை ஏந்தி நிற்கும் மக்கள் இயக்கமாம் @AIADMKOfficial தோற்றுவிக்கப்பட்டக் காரணம்.
அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?
"அறிஞர் அண்ணா பூங்கா", தொடர்ந்து அப்பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான திரு. ராபர்ட், தலைவர் திரு. ரெக்ஸ் ஆனந்தகுமார், திரு. கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #housearrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் திரு. @mkstalin ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் இந்த திருவிழாவானது படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமையையும் எடுத்துரைக்கிறது.
"ஹெத்தை' அம்மன் திருவிழாவிற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உள்ளூர் விடுமுறை அளித்திருந்ததை நினைவு கூறும் இந்த வேளையில் ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்...
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய விடுதலை போராட்டத்தில், பாரத அன்னையின் கைகளில் கட்டப்பட்டிருந்த அடிமை சங்கிலியை உடைத்தெறிந்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்தோடு, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்து, தடியடியால் தாக்கப்பட்டு மண்ணில் சரிந்த போதும், தன் கையில் ஏந்தியிருந்த இந்தியத் தாயின் மணிக்கொடியை கீழே வீழாது காத்த "கொடிகாத்த குமரன்" அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தியாகத்தையும் தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன்...!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.
'ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.
பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும். அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இச்செயல் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விடியா திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.
ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!
இந்த திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் 'PEN' நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது.
இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக 'PEN' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்.
மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும்.
அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் விடியா திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது விடியா திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu @arivalayam
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!
அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!
மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் @AIADMKOfficial நல்லாட்சியினை அமைப்போம் !
@draramadoss
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூடிய மக்கள் வெள்ளத்திற்கு இடையே #வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
நான்கரை ஆண்டுகள் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, நேற்றைக்கு தான் ஞானோதயம் வந்ததுபோல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் திரு. @mkstalin-ஐ தமிழக மக்கள் நம்பப் போகிறார்களா என்ன? வாய்ப்பே இல்லை.
இப்போது நீங்கள் போடும் நல்லவர் வேஷம், இத்தனை ஆண்டுகள் நீங்கள் நடத்திய கோர ஆட்சியை இல்லை என்று ஆக்கிவிடுமா? இல்லவே இல்லை.
தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
அதை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் நீங்கள் உணரப் போவது உறுதி!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேய ஆதிக்கத்தின் கொடூர ஆட்சிக்கு எதிராக அடக்குமுறைக்கு அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி போர்க்களம் கண்ட முதல் பேரரசி. அறிவிலும் வீரத்திலும் தலைசிறந்து விளங்கி, சிவகங்கை சீமையில் நல்லாட்சியை நிறுவிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், எதற்கும் அஞ்சாத அவரது துணிவையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். @AIADMKOfficial
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தாய்மண்ணின் விடுதலைக்காக
ஆங்கிலேய அரசுக்கு எதிராக வீரம்
செறிந்த யுத்தத்தை முன்னெடுத்து,
அடிமையாய் வாழ்வதைவிட வீரனாய்
மரணம் எய்துவதே மேல் என்று தூக்குமேடை ஏறிய போதும், அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து
இன்னுயிர் நீத்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும்
போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
A Year of Hope, A Year of Triumph
With the People, For the People
Lets win this year together
#happynewyear2026
#welcome2026 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?
அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
"தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,
எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!!
2026,
விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும்! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கும்மிடிப்பூண்டி தொகுதி குலுங்கும் அளவிற்கு, பேரெழுச்சியாகத் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்த இத்தொகுதி மக்களிடையே உரையாற்றினேன்.
தமிழ்நாட்டிற்கு ஒரு முழுநேர டிஜிபி-யைக் கூட நியமிக்காமல், பொறுப்பு டிஜிபி-க்கே பொறுப்பு டிஜிபி நியமித்த பொறுப்பற்ற முதல்வர் தான் இன்றைய பொம்மை முதல்வர்.
2026-ல் தமிழக மக்கள் துணையோடு அமையவுள்ள @AIADMKOfficial அரசு, சட்டம் ஒழுங்கில் முழு கவனம் செலுத்தி, மீண்டும் தமிழ்நாட்டை "அமைதிப் பூங்கா"வாக மாற்றும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருவள்ளூர் தொகுதி மக்களின் ஆரவாரமிக்க வரவேற்பிற்கு இடையே உரையாற்றினேன்.
எங்கும், எதிலும் ஊழல் மட்டுமே செய்யும் திமுக அரசின் முறைகேடுகளை துறை வாரியாக விவரித்தால், அதற்கே ஐந்தாண்டுகள் வேண்டும். இப்படிப்பட்ட ஊழல் ஆட்சி வேண்டுமா? என்ற கேள்விக்கு, "இல்லை" என்பதே விண்ணைப் பிளக்கும் அளவிற்கு மக்களின் உரத்த பதிலாக உள்ளது.
2026 தேர்தலில், ஊழல் திமுக ஆட்சி ஒழிந்து, உங்களுக்கான @AIADMKOfficial ஆட்சி அமையும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டங்கள் வெற்றி விழாக் கூட்டங்களாக மாறி வருகின்றன. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இன்று #திருத்தணி தொகுதியில் கூடியிருந்த கூட்டம் வெற்றிக் களிப்புக் கூட்டமாகவே நடைபெற்றது.
அஇஅதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வளமாக இருந்தது.ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டும் தான் வளமாக இருக்கிறது.
மன்னர் பரம்பரையாக தங்களை நினைத்துக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் ஆட்சியை ஜனநாயகப் பூர்வாக வேரறுத்து, @AIADMKOfficial-ன் மக்களாட்சியைத் தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு திரு. @mkstalin-ன் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.
அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே?
மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன்
திரு. @mkstalin அவர்களே?
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எதிர்வரும் தேர்தலில் வரப்போவது அமையப்போவது @AIADMKOfficial ஆட்சி தான் என இன்றே வெற்றி முழக்கமிட்டு வரவேற்றனர் #சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள்.
வரலாற்றில் இல்லாத கடனை மட்டும் வாங்கியுள்ள ஸ்டாலின் மாடல் அரசு, மக்களுக்கு செய்த திட்டங்கள் என்ன? எந்தவொரு பெரிய நலத்திட்டமும் செயல்படுத்தாத அரசுக்கு,
எதற்கு இவ்வளவு கடன்?
கமிஷன் மாடல் அரசை வீழ்த்தி, தமிழகத்தின் கனவுப் பாதையை கட்டமைக்கும் அஇஅதிமுக ஆட்சியை 2026-ல் நிறுவுவது என மக்கள் தீர்மானித்து விட்டனர்.
எத்தனை விளம்பரங்கள், பொய்கள், அவதூறுகளை திமுக அள்ளி வீசினாலும் மக்களின் திடமான முடிவை மாற்ற முடியாது!
என்னுடன் இணைந்து எழுச்சிப் பயணத்தில் மேதகு முன்னாள் ஆளுநர், @BJP4TamilNadu மூத்த முன்னோடி சகோதரி @DrTamilisai4BJP அவர்களும் பங்கேற்றதில் மகிழ்ச்சி
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருப்போரூர் தொகுதி திருவிழாக் கோலம் பூண்டு, எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியெங்கும் பொதுமக்கள் சிறப்புற வரவேற்பு அளித்தனர்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களை சந்திக்காத பொம்மை முதல்வர், இப்போது மாவட்டந்தோறும் மேடை போட்டு வெற்றுச் சவால் விடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்ல நான் தயார். என் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி அவருக்கு உள்ளதா?
இன்னும் 3 மாதத்தில் உங்கள் ஆட்சி காணாமல் போகப் போகிறது. அதற்குள் ஏதேனும் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென நினைத்தால், பொங்கலுக்கு ரூ.5000/- கொடுங்கள்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி, மக்கள் மனம் குளிரும் நலத்திட்டங்களை வழங்கும் நல்லாட்சியாக விளங்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"வானத்தைப் போல" மனம் படைத்து, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டோடு வாழ்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், "பத்ம பூஷன்" அன்புச் சகோதரர் கேப்டன் திரு. @iVijayakant அவர்களின் நினைவு நாளான இன்று,
சென்னை, தேமுதிக அலுவலகத்தில் உள்ள "கேப்டன் ஆலயம்" நினைவிடத்தில் நடைபெற்ற 2-ம் ஆண்டு குருபூஜை நிகழ்வில், தேமுதிக பொதுச்செயலாளர்
திருமதி. @PremallathaDmdk அவர்களோடு இணைந்து பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினேன்.
கலைத் துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்.
@dmdkparty2005 @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே...
நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான @AIADMKOfficial ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று!
அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.
திரு. @mkstalin அவர்களே-
நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல்.
இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!)
அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?
அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?
OPEN CHALLENGE IS STILL ON!
(பி.கு. : கேள்வி 1- #நீட்_ரத்து_என்னாச்சு?) -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2004 டிசம்பர் 26…
கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை,
ஒரு நொடியிலே ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை,
புன்னகைகளை, வாழ்க்கைகளை
பறித்துக் கொண்ட
மறக்க முடியாத,
இப்பதிவிடும் இந்த இரவு நேரத்தைப் போன்றதொரு இருளை தமிழகம் உணர்ந்த துயர்மிகு நாள்.
தமிழகத்தின் கரையோர கிராமங்களில்
தாயின் கையை விட்டுப் பிரிந்த குழந்தைகள்,
குழந்தைகளை இழந்த தாய்மார்கள்,
வாழ்வாதாரத்தை இழந்த மீனவர் குடும்பங்கள்-
அந்த வலி இன்றும் கடல் அலைகளின் சத்தத்திலே
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
எவ்விடர் வரினும் எதிர்கொள்ளும் மாண்புமிகு அம்மாவின் அரசு, நிவாரணப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இதையும் எதிர்கொண்டது.
இயற்கையின் கோரத் தாண்டவத்தால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும்
எனது பணிவான அஞ்சலி.
அவர்களின் நினைவுகள்,
எதிர்காலத்தில் நாம் இன்னும் பாதுகாப்பான,
மனிதநேயமிக்க சமூகமாக மாற
நம்மை வழிநடத்தும் விளக்காக இருக்கட்டும்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திமுக அரசின் பொம்மை முதல்வர்
திரு. @mkstalin 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
"சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் திரு. ஸ்டாலின் அவர்களே!
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒப்பற்ற துணிவுடனும்,
நிகரில்லா விவேகத்துடனும்
அந்நிய ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும்படை திரட்டிய முதல் பெண் விடுதலைப் போராளி,
தமிழினப் பெண்களின் வீரத்திற்கு சான்றாக திகழும் நம் பெரும்பாட்டியார், பேரரசி வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளில் அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன்...
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை, #கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை' என்ற இயேசுபிரான் அவர்களுடைய போதனைக்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும்,
அன்பு-அமைதி-சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
#merrychristmas
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு பேருந்து மற்றும் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 7பேர் உயிரிழந்தனர் என்று செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும் பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணமும், உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,
தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,
திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,
மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!
#periyarforever
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக அரசியல் வரலாற்றின்
பொற்கால அத்தியாயம்…
வறியவர்களின் வேதனையைத் தன் வேதனையாகக் கொண்டு,
அன்பையும் , அருளையும் அரசியலாக்கிய
மக்கள் திலகம்,
நம் இயக்கத்தை மட்டுமல்ல,
ஒரு தலைமுறையின் கனவுகளையும்
உருவாக்கிச் சென்ற
நமது வாழ்நாள் வழிகாட்டி,
தமிழ்நாட்டின் சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் என எந்தத் துறையை எடுத்தாலும், அவற்றின் வரலாற்றைச் செதுக்கிய சிற்பியாகத் திகழ்ந்த ஒப்பாரும் மிக்காருமற்ற முதலமைச்சர்,
திராவிட இயக்கத்தின் திரைமுகமாய்,
எளிய மக்களிடம் இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தப் பேராளுமை,
பேரறிஞர் அண்ணாவின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் தன் கொள்ளைக் காடாக மாற்றத் துடித்த போது, @AIADMKOfficial எனும் மக்களாட்சி விழுமியங்களைக் காத்து நிற்கும் அண்ணா வழிப் பேரியக்கத்தைக் கண்ட நம் கழகத்தின் நிறுவனத் தலைவர்,
அன்றும், இன்றும், என்றும்
#எங்கள்_வாத்தியார்_MGR
மாண்புமிகு "பாரத ரத்னா" இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை வணங்குகிறேன்.
புரட்சித்தலைவரின் பெரும் புகழையும், சரித்திர சாதனைகளையும் ஏந்தி நிற்கும்
நம் உயிருக்கு ஒப்பான நம் கழகம்,
புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தைக் கண்டெடுத்த நோக்கத்தை, தலைவர் எப்படி நிறைவேற்றிக் காட்டினாரோ, அதேபோல் மீண்டும் நிறைவேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை இன்றைக்கு நமக்கு இருப்பதை உணர்ந்து,
தீயசக்தி திமுக-வின் மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த திரு. ரீகன் என்பவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள்,
திரு. சிங் அவர்களுக்கு சொந்தமான
1 விசைப்படகு என நான்கு விசைப்படகுகளையும், அதில் உள்ள தமிழக மீனவர்களையும் நேற்று (22.12.2025) இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கச்சத்தீவைத் தாரைவார்த்த தமிழ்நாடு விரோத சுயநல திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வரலாற்றுத் தவறால் இன்று வரை தமிழகத்தின் மீனவர்கள் சொல்லொண்ணாத் துயர்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. திமுக கூட்டணியின் ஒற்றைத் தவறைத் திருத்தவே இன்று வரை @AIADMKOfficial தொடர்ந்து போராடி வருகிறது.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகள் மற்றும் உடைமைகளை உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia @CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும்
விவசாயப் பெருமக்களுக்கு
தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை.
உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பிற்கினிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம்.
தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.
எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது.
அன்பார்ந்த வாக்காளர்களே- வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும்.
இதற்கு உங்களுக்கு நம் @AIADMKOfficial கழகத்தின் BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
பொம்மை முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, @AIADMKOfficial இருக்கும் வரை உருவாகாது.
என் உயிருக்கு உயிரான நம் கழக உடன்பிறப்புகளே- SIR கணக்கீட்டுப் பணிகளில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆனால், இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது.
ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை.
அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களை அறிவுறுத்துகிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு, SIR பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இப்பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம்.
#மக்களைக்_காப்போம்!
#தமிழகத்தை_மீட்போம்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விடியா திமுக @mkstalin அரசு,
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356ஐ நிறைவேற்றக்கோரியும்,
மாண்புமிகு அம்மாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி விடியா திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடியா திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப்
பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடியா திமுக,
Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திமுக-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு.@mkstalin
திமுக ஆட்சிக்கு வந்தவுடன்,
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும்,
மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார் .
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.
அவர் பதிவிட்டு இருந்த நீண்ட
“x” தள பதிவில்
ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை?
இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது ?
@arivalayam
தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்க்கிறேன்.
எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
@MoRD_GoI -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போட்டு, 'நவோதயா பள்ளிகளுக்கு' வழி ஏற்படுத்தியுள்ள விளம்பர மாடல் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. @mkstalin-க்கு கண்டனம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஏழை எளிய மாணவர்களுக்கும் அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம், மாண்புமிகு அம்மா அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டம்.
அரசுப்பள்ளிகள், அரசுக் கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களின் Career Guide-ஆக, Life Shaping Device-ஆக, கல்விக்கான ஆயுதமாக இருந்த மடிக்கணினியை, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து வழங்கி வந்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு.
இந்த மடிக்கணினிகளால் பயனடைந்த இளைஞர்களை இன்றைய தினம் சந்தித்து, #pricelessscheme_ammalaptop தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தினைக் கேட்டு அகமகிழ்ந்தேன்.
அதே சமயம், தற்போதைய அரசுப்பள்ளி மாணவர்களும், இன்றைய விடியா திமுக ஆட்சியில் லேப்டாப் கிடைக்காமல், விஞ்ஞானக் கல்வி கிடைப்பது தடைபட்டு, தாங்கள் வஞ்சிக்கப்படுவதை, தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல், தற்போது தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும், ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகி விட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
அரைகுறை ஆயிரம் ரூபாய் போலவே, இதுவும், சம்மந்தமே இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை?
இன்றைய AI காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
பொம்மை முதல்வரைப் போன்றே பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஸ்டாலின் மாடல் அரசு?
Election Eyewash-க்காக லேப்டாப் கொடுப்பது போல Drama நடத்தும் உங்களுக்கும்,
Education Elevation-க்காக தொடர்ந்து லேப்டாப் கொடுத்த எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது திரு. @mkstalin அவர்களே!
#whereisourlaptop என்று நான் கேட்கவில்லை; உங்களால் நான்கரை ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள்.
உரிய , முறையான பதில் வருமா
திரு. ஸ்டாலின் அவர்களே?This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?
பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு பொம்மை முதல்வர் @mkstalin-ன் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தான் கண்ட போர்களில் எல்லாம்
வெற்றி வாகை சூடிய மாவீரர்,
முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர்
திரு. @CPR_VP அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், @AIADMKOfficial சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
@PMOIndia @VPIndia -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest congratulations to
Thiru. Nitin Nabin Avl on his appointment as the National Working President
of @BJP4India.
Paramount responsibility entrusted to Thiru. @NitinNabin Avl , reflects his organisational strength, leadership capabilities, and unwavering commitment to public service.
I am confident that under his leadership, the organisation will be further energised and strengthened in its mission of nation-building.
Wishing him every success in this important role.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் @mkstalin-ன் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
#hbdsuperstarrajinikanth
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பெண் விடுதலை, சமத்துவம்,
தேசிய உணர்வு, மொழிப்பற்று ஆகிய உயர்ந்த கொள்கைகளை தனது எழுத்துக்களால் மக்கள் மனங்களில் விதைத்து, புதிய சிந்தனைகளுக்கு ஒளியூட்டிய விடுதலைச் சிந்தனையாளர்; தாய்மொழியான தமிழின் மகத்துவத்தை உலகம் அறியச் செய்த முண்டாசுக் கவிஞர், மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளில், தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்த அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ரூ. 1,020,00,00,000 !!!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக @dir_ed தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் @KN_NEHRU, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.
கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு,
20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள @dir_ed, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.
வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.
ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #cashforjobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.
திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,
-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.
-ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.
-பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.
அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.
இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் திரு. @mkstalin?
காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன.
@AIADMKOfficial தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.
உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?
#dmkscamstn -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாடல்
ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன.
●கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட +2 மாணவர் பரிதாபாமாக உயிரிழப்பு,
●மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை,
●தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை,
●சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை தேடும் போலீசார்,
●நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி,
என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்தத் தவறியதற்கு பொம்மை முதல்வரின் அரசு வெட்கப்பட வேண்டும்.
விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் திரு. @mkstalin நடத்தி வருகிறார்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது. சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ?
ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அரை நூற்றாண்டுக்கு மேலாக கோவையில் இருந்து வெளிவரும் "பிற்பகல்" தமிழ் நாளேடு மற்றும் "Afternoon" ஆங்கில நாளேடுகளின் வெளியீட்டாளரும், நிர்வாக ஆசிரியருமான திரு. M.N. சுதன் அப்பாதுரை அவர்கள், வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்பது குறித்து அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் .
மாவட்ட அளவில் செய்தித் தாள்களை சிறந்த முறையில் வெளியிட்டு வந்த அவரது மறைவு, பத்திரிக்கை உலகிற்கு பேரிழப்பாகும்.
திரு. M.N. சுதன் அப்பாதுரை அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும்,
சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் #அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
#babasaheb
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, @AIADMKOfficial தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி!
#என்றென்றும்_அம்மாThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு?
மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.
உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது,
மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த @mkstalin மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
@avmproductions வாயிலாக அவர் தயாரித்த பல்வேறு வெற்றித் திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் வனிகத்தையும் மதிப்பையும் உலகளவில் உயர்த்தியவை என்றால் அது மிகையாகாது. தமிழ்த் திரைத்துறையினரின் பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்கும் உரிய திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு,
உயிருக்கு பயந்து ஓடிய அவரை வீதிகளில் ஓட ஓட விரட்டிச்சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது.
இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?
இந்த சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது.
குற்றசம்பவங்களில் NO.1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது தான் இந்த "ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை".
என விளம்பரப்படுத்த வேண்டியது தானே பொம்மை முதல்வரே?
ரோட்டிலும் கொலை,
கோர்ட்டிலும் கொலை,
பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்,
போலீஸ்காரர்களும் பாதிக்கப்படுகிறார்கள்,
இப்படி தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை,
அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை,
என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் .
இப்படி சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டுவிட்டு,
தங்கள் அன்றாட வாழ்வில், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை
ஏற்படுத்திய பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனங்கள்.
தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து, உடனடியாக
உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial @AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தளராத தன்னம்பிக்கையின் அடையாளமாய், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்ற தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர–சகோதரிகள் அனைவருக்கும்,
உலக மாற்றுத்திறனாளிகள்
தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial @AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள்
முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாகக் கடைபிடிக்கப்படும் இந்நாளில், #hiv தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிவுடன் நடத்தி தமிழ்நாட்டில் எய்ட்ஸ் இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்!
#worldaidsday2025 @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று, கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்திற்கு வந்த கொண்டையமபாளையம் பகுதியைச் சேர்ந்த
திரு. அர்ஜுனன் அவர்கள், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக வரும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
திரு. அர்ஜுனன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் அளிக்கவும், படுகாயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமன்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியே குலுங்கும் அளவிற்கு, எழுச்சிப் பயணக் கூட்டத்திற்கு செல்லும் வழியெங்கும் மக்கள் எழுச்சியுற பெருந்திரளாக வந்து வாஞ்சையோடு வரவேற்றனர்.
இந்த எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட ஒருவன் அல்ல. நான் எப்போதும் 2 கோடி அஇஅதிமுக தொண்டரில் ஒருவனாகவே இருக்கிறேன்.
எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்!
2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial @AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரும், நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியாருமான ,
திருமதி V. N. ஜானகி ராமச்சந்திரன் அம்மையார் அவர்களின் 102வது பிறந்த நாளான இன்று, புரட்சித்தலைவரின் தொண்டர்கள் மீது அவர்தம் வைத்திருந்த அளவற்ற பேரன்பையும், கழகத்தின் ஒற்றுமைக்காக அவர் செய்த பெரும் தியாகத்தையும் நினைவு கூர்ந்து,போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"டிட்வா" புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு @AIADMKOfficial நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவாவில் நடைபெற்ற 56-வது @IFFIGoa சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள
தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
50 ஆண்டுகளாக தனது திரை ஆளுமையால் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, உலகம் முழுக்க மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை என்றும் ஈர்க்கும் வல்லமை கொண்ட திரு. #ரஜினிகாந்த் அவர்களின் எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
@AIADMKOfficial
#iffigoa2025 #superstarrajinikanth -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஈரோட்டில் மேடை ஏறிய பொம்மை முதலமைச்சர், வழக்கம் போல
என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார்.
அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது,
எது நடந்தாலும் "ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்" என்று கூறிக்கொண்டே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல,
"நான் டெல்டாக்காரன்" என்று பச்சைதுண்டு போட்டு டயலாக் பேசிவிட்டு,
மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டக் கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாக தானே,
இப்போது நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்தார் இந்த துரோகி ஸ்டாலின்?
ஆட்சிக்கு வந்து இந்த நான்கரை ஆண்டுகளும், விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டைக் கூட அளிக்காமல்,
முறையாக நீரைத் திறக்காததால், கடைமடை வரை நதிநீர் சென்று சேராததால், டெல்டா பகுதியில் 2 லட்சம் ஏக்கர் வரை தொடர்ந்து பாதித்து, விவசாயிகள் தவித்த போது கூட, விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்?
உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு செய்தன என்னவென்று!
நூறு ஏரிகளுக்கு நீரேற்றும் சரபங்கா திட்டம் முதல், தலைவாசல் கால்நடைப் பூங்கா, அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக நான் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் போது, இதெல்லாம் நான் கொண்டு வந்த திட்டம் என்று தெரியவில்லையா இந்த பொம்மை முதல்வருக்கு?
கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோவும் வர வேண்டும் என இப்போது கூட மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை சந்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன் நான்.
எங்கள் அரசு முன்மொழிந்த மெட்ரோ திட்டத்திற்கான DPR-ஐக் கூட முறையாக சமர்ப்பிக்கத் தெரியாமல், உங்கள் அரசு சமர்ப்பித்த DPR-ல் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் நிவர்த்தி செய்து மறு சமர்ப்பிப்பு செய்வதை விட்டுவிட்டு, இதை வைத்து தனது அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே திரு. @mkstalin வெட்கப்பட வேண்டும்.
"அஇஅதிமுக ஆட்சியில் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வரும்" என்று சொன்னதைக் கேட்டு வயிற்றெரிச்சல்பட்டு, திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று கேட்கிறார். திரு. @mkstalin அவர்களே- நீங்கள் ஒரு கையாலாகாத, நிர்வாகத் திறனற்ற முதல்வர் என்பதைத் தான் நாங்கள் எப்போதும் கூறுகிறோம்.
உங்கள் ஆட்சி இருக்கும் போது தான், சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து நான் வலியுறுத்தினேன். எங்களின் கோரிக்கையினை ஏற்று தான், மத்திய அரசும் ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது.
ஆக, @AIADMKOfficial எப்போதும் மக்களுடன் நின்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. நீங்களோ, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள், யார் துரோகி என்று!
ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையைத் துடைக்க கர்சீப்பைக் கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்தீர்களே- அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா திரு. ஸ்டாலின் அவர்களே?
நான் எப்போதும் என் உயிருக்கு உயிரான தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்! ஆனால், ஒரே ஒரு கேள்வி-
எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால்,
நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க? -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
On this #constitutionday
I offer my humble salutations to the great architects of our Republic, who gifted us a Constitution that remains the guiding soul of our nation. Their visionary ideals continue to inspire our journey as a democracy.
May the principles enshrined in our Constitution always empower every citizen, protect every right, and strengthen our democratic fabric forever. Let us reaffirm our collective duty to uphold justice, liberty, equality, and fraternity — the timeless values that define India’s spirit and our path forward.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened by the passing of veteran actor Thiru. #dharmendra Avl.
A true legend of Indian cinema,
his contributions and charisma will be remembered for generations.
My heartfelt condolences to
Tmt. @dreamgirlhema MP Avl and family, in this moment of grief.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் துரைச்சாமியாபுரம் காமராஜபுரம் பகுதியில், கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை இரு தனியார் பேருந்துகள் நெற்கு நேர் மோதியதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 45 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற வேண்டுவதோடு, அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
"காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?
உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்" தங்கள் வீடெனக் கொண்டு, ஒப்பில்லாக் கடல் அன்னையின் அரவணைப்பில்,
இப்பதிவிடுகின்ற இந்த இரவு நேரங்களில் கூட தங்கள் பயணங்களைத் தொடங்கி, சவால்கள் நிறைந்த வாழ்வும், அவற்றைக் கடந்து செல்லும் ஆழமான மன உறுதியையும் கொண்டுள்ள மீனவர் சகோதரர்கள் அனைவருக்கும் இந்த மீனவர் தினத்தில் எனது மேலான அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartfelt congratulations to Honourable Thiru. @NitishKumar Avl and the #nda alliance on their oath-taking ceremony in Bihar today. This renewed mandate reflects the people’s confidence and their aspiration for continued stability and development.
On behalf of the @AIADMKOfficial,
I extend my warm wishes for a tenure marked by good governance, stability, and development that uplifts every section of society. May the new government continue its dedicated efforts towards public welfare and progress. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?
பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.
திரு. @mkstalin அவர்களே-
"உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?" என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?
ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
#dmkfailstn_womensafety -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை பாரிமுனை பகுதியில்,
கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
செக்கிழுத்த செம்மல்,
தன் வாழ்நாளெல்லாம் நம் மண்ணின் விடுதலைக்காக அயராது பாடுபட்ட தியாகச் சுடர், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திடப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளில் அவர்தம் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, மதீனா நகருக்கு செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பொம்மை முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?
வருவதாக சொன்ன நிறுவனங்களே
Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது.
இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்,
சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு,
படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு,
விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள்,
என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?
பொம்மை முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.
இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில்,
எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?
Tamil Nadu was a land of opportunities for industries. Today, it’s a land of missed chances — the legacy of @mkstalin’s regime.
புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
But the story is not over. Tamil Nadu will rise, rebuild, and reclaim its industrial greatness under forthcoming #aiadmk regime.
இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குகள் போன்றவைகளை சரிபார்த்து உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் @AIADMKOfficial-ன் கோரிக்கை. தற்போது SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
உண்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை வந்தால், தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த திமுக தலைவர் திரு. @mkstalin, நம் மீது அவதூறு பரப்பி வருகிறார்.
கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) முறையாக இந்த பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆளும் திமுக-வுக்கு ஆதரவாக இந்த அலுவலர்கள் செயல்படும் பட்சத்தில் அதை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திமுக-வினர் தேர்தல் நேரத்தில் எப்படி உள்ளடி வேலைகள் செய்வார்களோ, அதுபோல் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சில வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுடன் இணைந்து சில முறைகேடுகளை செய்வதாக செய்திகள் வருகின்றன. இதை விழிப்புடன் செயல்பட்டு முறியடிக்க வேண்டும்.
நமது கழகத்தின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களாக பணியாற்றுபவர்கள் (BLA-2) அனைத்து வீடுகளுக்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) திரும்ப ஒப்படைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உண்மையான வாக்காளர்கள் விடுபடாமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கழக வாக்குச் சாவடி முகவர்கள் இப்பணிகளை முறையாக செய்கிறார்களா? என்பதை நமது மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Bihar Assembly Elections, the people of Bihar have given a fitting response to the Congress-led INDI alliance, rejecting its falsehoods and attempts to undermine the institutions of democracy .
The mandate reaffirms the people’s trust in the alliance’s collective leadership and commitment to stability and development.
On behalf of @AIADMKOfficial,
I extend my heartfelt congratulations to
Hon’ble Prime minister @narendramodi Avl, Hon’ble Home minister @AmitShah Avl, and Hon’ble Chief minister @NitishKumar Avl for their dedicated efforts in securing this victory.
Confident that this strong mandate will further accelerate Bihar’s progress and public welfare. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எனது
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும் , ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; அந்தக் கனவுகளை நிறைவேற்ற
முயற்சி, சக்தி, துணிவு மூன்றும்
துணை நிற்கட்டும்,
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் @mkstalin-க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே @AIADMKOfficial சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன்.
அனைத்தையும் மீறி, உச்சநீதிமன்றத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, விடியா திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த 8.11.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வானகிரி ஊராட்சியைச் சேர்ந்த திரு. ராமையன் என்பவருக்குச் சொந்தமான படகில் 12 மீனவர்கள், தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் கடலூர் மாவட்டம் வசானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என்று மொத்தம் 14 பேர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், படகில் பழுது ஏற்பட்ட காரணத்தினால், காற்று வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றதால் 9.11.2025 அன்று இலங்கை கடற்படை மீனவர்களால் கைது செய்யப்பட்டனர்.
நமது மீனவர்கள் படகில் பழுது ஏற்பட்டுள்ள காரணத்தில் திசை மாறி இங்கே வந்துவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்று கோரியதை இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் ஒதுக்கித்தள்ளி சட்டவிரோதமாக தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கக்கூடிய சூழ்நிலை எப்போது வருமோ ? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் அவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவது இனியும் யாராலும் ஏற்க முடியாததாகும்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia @CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia @CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல கலை இயக்குனர் திரு. தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியே" அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்!
#chevalier -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"கல்வியே ஆகச்சிறந்த ஆயுதம்"!
சுய முன்னேற்றத்திற்கும்,
சமூக முன்னேற்றத்திற்குமான ஆகப்பெரும் கருவியான கல்வியைப் போற்றும்
தேசிய கல்வி நாளான இன்று, கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
#nationaleducationday -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?
பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு.
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக @mkstalin மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened by the tragic loss of lives in the explosion near Delhi’s Red Fort. My heartfelt condolences to the bereaved families, and prayers for the speedy recovery of those injured.
At the same time, I commend the swift and decisive action of our security forces in Faridabad. The recovery of nearly 300 kg of explosives and several AK-47 rifles underscores the grave threats our nation continues to face.
Given the seriousness of the situation,
I urge the Tamil Nadu Government and Police to remain on the highest alert, enhance vigilance, and implement foolproof security measures across the State to ensure the safety and security of the general public.
Special attention and heightened precaution should also be exercised in coastal regions, which require continuous monitoring and strengthened surveillance.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன.
காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய பொம்மை முதல்வர்?
காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லாமல் போனதற்கு காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு. @mkstalin வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மேடைதோறும் என்னைப் பற்றி அவதூறு பேசுவதிலும், இல்லாத விஷயத்தை வைத்து அரசியல் செய்வதிலும் இருக்கும் முனைப்பு, ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் ஒருநாளாவது மக்களைக் காப்பதில், சட்டம் ஒழுங்கை சீர்செய்வதில் இருந்ததுண்டா இந்த பொம்மை முதலமைச்சருக்கு?
காவலர் குடியிருப்பில் புகுந்து கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.
இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது.
திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.
நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது.
பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் "சட்டம்- ஒழுங்கு".
குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.@mkstalin
மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. @Seeman4TN அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுகிறேன். @NaamTamilarOrg -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை எண். 23, 15.9.2025 அன்று வெளியிடப்பட்ட பின்னும், இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?
எனவே, உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி பொம்மை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Is Tamil Nadu Safe For Women?
கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.
திரு. @mkstalin அவர்களே- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#dmkfailstn_womensafety
#can_she_liveintn #saveourdaughters -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் ஆகப்பெரும் பக்தரும், முருகப்பெருமானின் புகழை தனது தீந்தமிழால் உலகெங்கும் பரப்பிய ஆன்மீக சொற்பொழிவாளரும், நம் உயிர்நிகர் புரட்சித்தலைவர் அவர்களுக்கு "பொன்மனச் செம்மல்" என பட்டம் சூட்டியவருமான, 64-வது நாயனார் என போற்றப்படும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் நினைவு நாளான இன்று, அவர்தம் அருட்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் @mkstalin, தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
"காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்?" என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், "மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் " என தனது கருத்தை மாற்றினார்.
அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை?
"இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும்.
நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?
இந்த சூழலில், "ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்" என்று பெருமை பேசுகிறார் பொம்மை முதல்வர்.
திரு. @mkstalin அவர்களே- அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏனென்றால், In case you've forgotten, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்).
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல், நமது அண்டை நாடான இலங்கையில் புதிய ஓர் ஆட்சி அமைந்த பிறகும், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் நேற்று (3.11.2025) இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.
இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த உத்தரவைக் காரணம் காட்டி, @arivalayam சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொம்மை முதல்வர் திரு. @mkstalin தான் பொறுப்பேற்க வேண்டும்.
'குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக' தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன்.
சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுக-விற்கு 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் @AIADMKOfficial வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,
பாதிப்புக்குள்ளான அம்மாணவி,
3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக,
எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.
விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.
விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி,
கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர்
திரு. @mkstalin வலியுறுத்துகிறேன்.
#dmkfailstn_womensafety -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Congratulations, Team India! 🏆
A historic triumph by our Indian Women’s Cricket Team in the World Cup final today!
Your grit, determination, and team spirit have brought immense pride to our nation.
This victory isn’t just a win on the field- it’s an inspiration to millions of young women across the country to dream big and chase their goals with confidence.
Well done, Champions! 👏🇮🇳
@BCCI #cwc25 #indvsa
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சுதந்திர இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு,
நாடே வியக்கும் நம் உயிர்நிகர் #தமிழ்நாடு நமக்கு கிடைத்த பொன்னாளான இந்நாளை, "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு அறிவித்ததை பெருமையுடன் நினைவுகூர்ந்து,
அனைவருக்கும் இனிய #தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடாம் நம் தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப்பிடியில் இருந்து மீட்டு, தமிழக மக்களைக் காத்திட்டு, பல தூய உணர்வாளர்களின் தியாகத்தால் நமக்கு கிடைத்த நம் தமிழ்நாட்டை மீண்டும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய கொள்கைப் பாதையில் வழிநடத்திட இந்நன்நாளில் உறுதியேற்போம்.
#தமிழ்நாடுநாள்_நவ1 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
What a phenomenal victory! 🇮🇳
Our Indian Women’s Cricket Team has once again made the nation proud, storming into the World Cup Final with a stunning win over Australia! 🏏
A special appreciation to #jemimahrodrigues (127)* and #harmanpreetkaur (89) for their extraordinary performances that powered India to glory.
The spirit, grit, and determination of these champions continue to inspire millions across the country.
Let’s bring the World Cup home! 🏆
@BCCI #teamindia #womeninblue #womensworldcup2025 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசியமும் தெய்வீகமும் தனது
இரு கண்களாகப் போற்றி வணங்கி,
தேச விடுதலைக்காக பெரும் படையைத் திரட்டிய தென்னாட்டுச் சிங்கம்,
வீரம், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை,
ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற
தனது வாழ்நாளை அர்ப்பணித்த
“தெய்வத் திருமகனார், ஐயா பசும்பொன்
திரு. உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
#தேவர்ஜெயந்தி மற்றும் #குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு,
#பசும்பொன் புண்ணிய பூமியில் உள்ள தெய்வத் திருமகனார் திருக்கோயிலில், @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்டுள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினேன்.
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராடிய தேவர் திருமகனாருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான #பாரத_ரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் @AIADMKOfficial கோரிக்கை விடுத்துள்ளதை நினைவுகூர்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
“எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” என்று
ஊரை அடித்து, உலையில் போடும் இந்த விடியா திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும்,
இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய சோதனைகளின் விளைவாக இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
'JOB RACKET ' முறையில் நடைபெற்ற இந்த ஊழலில் திமுக அரசின் இந்த துறை அமைச்சர் திரு. @KN_NEHRU மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்ததாகவும், அந்த பணத்தை ஒருசில நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இமாலய ஊழல் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய காலாக்கட்டங்களில் நடைபெற்றதையும், இது தொடர்பாக கிடைத்த பல ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறை டி.ஜி.பி-க்கு அறிக்கையுடன் சமர்ப்பித்து, ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டு, இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தமிழக காவல்துறை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான் தங்களால் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி அவர்கள் இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன்.
பொம்மை முதலமைச்சர் @mkstalin காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி.
அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#asianyouthgames-ல் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள்.
#kabaddi -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கும் கொள்ளை மாடல் விடியா திமுக ஸ்டாலின் குடும்ப அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பார்வதிபுரம் சந்திப்பில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர், கழக நிறுவனர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது திருவுருவச்சிலையின் கை பகுதியினை நேற்று இரவு (25.10.2025) சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர்.
எங்களது இதயதெய்வம், புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையினை சேதப்படுத்தியவர்களுக்கும், பின்னணியில் உள்ள மறைமுக எதிரிகளுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுகுறித்து காவல்துறை விரைந்து விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.
ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் @mkstalin-ன் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.
திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை,
ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,
#ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?
ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது.
தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?
அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?
அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான்.
விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!
#byebyestalin @AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளைஞர் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி வாகை சூடியுள்ள இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் கபடி அணியினருக்கு எனது வாழ்த்துகள்.
குறிப்பாக, தமிழ்நாட்டு வீரர்களான சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ், தங்கள் சிறப்பான ஆட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளது மெச்சத்தக்கது.
சர்வதேச அரங்கில் நம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் உரிய பரிசுத் தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிராக
‘போர் பிரகடனத்தை’ முதன்முதலில் வெளியிட்டு, வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் துச்சமென எண்ணி தன் இன்னுயிர்களை தியாகம் செய்த
வீரத் தமிழர்கள், மாமன்னர் மருது சகோதரர்கள் அவர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்களின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள்
மருது பாண்டியர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருஉருவச் சிலைக்கு, @AIADMKOfficial சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
விவசாயிகள் படும் சிரமங்களை கண்டுகொள்ளாமல் கோமாளித்தனமாக செயல்படும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் @mkstalin அரசுக்கு கண்டனம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
#dmkfailstn
#விவசாயிகளை_வஞ்சிக்கும்_திமுக
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை தமிழ் இலக்கிய மரபிற்கேற்ப சீறாப் புராணம் என்ற உரைநடை காப்பியத்தைப் படைத்து செந்தமிழுக்கு வளம் சேர்த்த "அமுதக் கவியரசர்" உமறுப்புலவர் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குவதோடு, அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு என்பதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தஞ்சையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் தஞ்சை விரைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.
"திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே உள்ள நெல் மூட்டைகளை, குடோனுக்கு எடுத்து செல்லாததால், புதிய கொள்முதல்களை வைக்க இடமில்லை" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை சட்டப்பேரவையில் நான் குறிப்பிட்டால், அதனை மறுத்த திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர், தாங்கள் வேகமாக, துரிதமாக செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுவதாகவும் கூறினார்.
ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்த போது, அங்கு இருக்கும் Loadman, ஒரு நாளுக்கு வெறும் 800-900 மூட்டைகள் தான் எடை போடப்படுவதாக சொல்கிறார்.
திமுக அமைச்சர் தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது விவசாயத்திற்கு விரோதமான செயல்.
அஇஅதிமுக ஆட்சியில், ஒரு நாளுக்கு 1,000 நெல் மூட்டைகள் எடை போடப்பட்டன.
இரவு பகலெனப் பாராமல் 100 நாட்கள் போராடி விளைவித்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும், அதனை நான் கேட்டுப் பெறவேண்டும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொன்னார். ஆனால், கடந்த 18.08.2025 அன்றே மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இது கூடத் தெரியாமல், சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார் திமுக அரசின் அமைச்சர்.
தான் போட்ட நகையை அடமானம் வைத்து விளைவித்த நெற்பயிரை 20 நாட்களாகக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்து, தற்போது மழையில் நனைந்து முளைத்துப் போனதால் என்ன செய்வதென தெரியாமல் கண்ணீருடன் என்னிடம் பெண் விவசாயி ஒருவர் கண்ணீர் விட்டு கதறியது, கலங்கச் செய்தது. இது ஒரு கொடுமையான செயல்.
@AIADMKOfficial ஆட்சியில் 2020-21 காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சியை, 2024-25 காலத்தில் 0.09% ஆக படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை.
விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது.
விவசாயிகளுடன் எப்போதும் துணை நிற்பது போல், இந்த கடினமான நேரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களோடு துணைநிற்கும்.This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm birthday greetings to Hon’ble Union Home Minister Thiru. @AmitShah Avl.
Your steadfast leadership, tireless dedication, and commitment to strengthening national security and unity have been truly commendable.
May you be blessed with good health, happiness, and continued success in your service to our Nation.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில், 8 மாவட்டங்களுக்கு இன்றும், 4 மாவட்டங்களுக்கு நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள @AIADMKOfficial நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்.
#chennairains -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
காவலர் வீரவணக்க நாளான இன்று, மக்கள் உயிர் காக்க தங்கள் இன்னுயிரை நீத்த தீரமிகு காவலர்கள் அனைவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வீரவணக்கம்!
அமைதியான நாட்டை உருவாக்க தாங்கள் செய்த தியாகம், தலைமுறைகள் தாண்டி நினைவுகூரத்தக்கது.
My heartfelt tributes to the brave police personnel who made the ultimate sacrifice in the line of duty.
Their unwavering courage and selfless devotion to uphold peace, law, and justice embody the true spirit of service.
On behalf of @AIADMKOfficial, we extend our salutations and deep respect to their memory and to the families who stand behind their sacrifice.
#policecommemorationday #salutetoheroes -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று சட்டப்பேரவையில் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசினேன்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்குக் காரணம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட #coldrif எனும் இருமல் மருந்து , பல வருடங்களாக தொடர்ந்து product suspension உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளான அம்மருந்தை தயாரித்த நிறுவனத்தின் மீது, 2024, 2025 ஆகிய இரண்டு ஆண்டுகள் எவ்வித சோதனையோ, நடவடிக்கையோ திமுக அரசு எடுக்கவில்லை. ஸ்டாலின் மாடல் அரசின் இந்த அலட்சியப் போக்கே அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்து விட்டது.
கிட்னி திருட்டு வழக்கில் இடைத்தரகரை மட்டும் கைது செய்தது திமுக அரசு. ஆனால், கிட்னி திருட்டில் தொடர்புள்ள மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனக் கேட்டால், மழுப்பல் தான் இன்றைய மருத்துவத்துறை அமைச்சரின் பதிலாக உள்ளது. இவர்கள் மக்கள் நல்வாழ்வை எப்படி உறுதி செய்வர் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு உச்சநீதிமன்றம் நாடியது யாரைக் காப்பாற்ற?
விவசாயிகள் உழைத்து விளைவித்த நெல்மணிகளை இந்த திமுக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை. இதனால், டெல்டா பகுதிகளில் சாலைகளில் 30 லட்சம் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதனை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய இந்த திமுக அரசை வலியுறுத்தினேன். ஆனால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், மத்திய அரசு மீது பழி போட்டு பொறுப்பற்ற முறையில் தட்டிக் கழிக்கிறார் திமுக அரசின் அமைச்சர்.
எனவே, திறந்த வெளிக் கிடங்குகள் அமைத்து நேரடி கொள்முதல் செய்து, அவ்வப்போது குடோன்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்று நான் கூறிய திட்டத்தையும் இந்த விடியா அரசு ஏற்றதாகத் தெரியவில்லை. மேலும், அஇஅதிமுக ஆட்சியில் மத்திய அரசின் அனுமதி பெற்று, 20-22% வரை ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களைக் கொள்முதல் செய்ய வழிவகை செய்தது போல், இன்றைய திமுக அரசு விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்க எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை
மூலதனச் செலவுகளை விட வருவாய்ச் செலவினங்கள் அதிகமாக மேற்கொள்கிறது திமுக அரசு. உண்மை இப்படி இருக்க, எப்படி இந்த கடனை இந்த அரசால் அடைக்க முடியும்?
#foxconn முதலீடு குறித்து திமுக அரசின் அறிவிப்பை அந்நிறுவனம் மறுத்ததும், அதன் துணை நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ளதாக சொல்கிறார் தொழில்துறை அமைச்சர். அப்படியானால், அது என்ன துணை நிறுவனம் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே?
இவர்கள் காட்டிய வெள்ளைத் தாளைப் போன்றே, இவர்களின் ஆட்சியும் வெற்று ஆட்சியாக உள்ளது.
இப்படி உருட்டுகளும், திருட்டுகளுமே உருவான திமுக ஆட்சி, கடந்த 4.5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு
அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக, திமுக மக்களுக்கு கொடுத்தது #திமுக_உருட்டுகடை_அல்வா தான் என்பதை உணர்த்தும் வகையில், அவர்கள் கொடுத்த அல்வாக்களில் சிலவற்றை, சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தேன்.
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மக்களால், மக்களுக்காக இயங்கும் ஒப்பற்ற இயக்கமாம் நம் @AIADMKOfficial-ன் துவக்க விழாவான இன்று, #அண்ணா_வழி_திராவிடம் இணைய இதழின் அச்சுப் பிரதியை வெளியிட்டேன்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய உயரிய விழுமியங்களால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் @AIADMKOfficial.
ஆனால், நாம் உயர்த்திப் பிடித்த நம் உன்னதக் கொள்கையாம் திராவிடத்தை, தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக முதல் குடும்பம்.
தீயசக்தி திமுக-வின் தந்திரங்களை, சூதுகளைத் தோலுரித்து, உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு அஇஅதிமுக தான் என்ற வரலாற்று பறைசாற்றும் வகையில், @AIADMKITWINGOFL தொகுத்துள்ள இந்த மாதம் இருமுறை இணைய இதழை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் தவறாமல் படித்து, தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான @AIADMKOfficial-ன் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
படிக்க: aiadmk.com/anna-vazhi-dravidam-digital-magazine-issue-2/
#என்றென்றும்_அஇஅதிமுக
#aiadmk54 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு; இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள் இன்று காலை (17.10.2025 வெள்ளிக் கிழமை), சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை. தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, கழக நிர்வாகிகளுக்கும். கழக உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கழகத்தின் 54-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNaduஅவர்களை வரவேற்கும் விதமாக, சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள், வரவேற்புப் பதாகைகள் அழகுற அமைக்கப்பட்டு, புலியாட்டம், பொய்க்கால் குதிரை, பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க, கலைக் குழுவினர் கழக கொள்கை விளக்கப் பாடல்களைப் பாடியும், கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளையும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் தொழிற்சங்கக் கொடிகளையும் தங்கள் கைகளில் ஏந்தியும், ஏராளமான மகளிர் திரண்டிருந்தும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
#என்றென்றும்_அஇஅதிமுக
#aiadmk54 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த ராஜேஸ்வரி, சின்னப்பொன்னு, கனிதா, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த ராஜேஸ்வரி, சின்னப்பொன்னு, கனிதா, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
என் உயிருக்கு உயிரான
கழக உடன்பிறப்புகளே,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்கள் இயக்கம் மட்டும் அல்ல- அது ஒரு உணர்வு.
தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு
பிரச்சனை என்றால்,
அதற்கான முதல் குரல் கொடுப்பவன் @AIADMKOfficial தொண்டன் தான்.
நம் தமிழக மக்களுக்கான குரலாக,
நாளை மக்களுக்கான ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்ற பொறுப்போடு,
மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க வேண்டிய பெரும் கடமை நமக்கு இருக்கிறது என்ற அர்ப்பணிப்போடு,
எழுச்சிப்பயணங்களில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் அளித்த உத்வேகத்தோடு,
கழகக் கண்மணிகளே- வாருங்கள்!
மக்களை வதைக்கும் இந்த விடியா அரசை வீழ்த்துவோம்,
தமிழகத்தை மீட்கும் லட்சியதோடு,
மாண்புமிகு அம்மா அவர்கள் கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்!
நாளை நமதே!
#என்றென்றும்_அஇஅதிமுக
#aiadmk54 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசம் முழுவதும் பரவியிருந்த ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை அதிரச் செய்த நம்நாட்டின் வீரமிகு அடையாளம். தாய்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரைத் துச்சமெனத் தியாகம் செய்து தூக்கு கயிற்றை முத்தமிட்ட தருவாயிலும்,
அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை பரவிடச் செய்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் வீரத்தையும் உன்னத தியாகத்தையும் போற்றி வணங்கி,
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று பிறந்தநாள் காணும் @BJP4TamilNadu மாநிலத் தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் @mkstalin, எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார்.
இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். திரு. @mkstalin அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்துகொண்டு, இப்போது உங்களுக்கு இந்த சினிமா வசனம் எல்லாம் தேவையா?
"எத்தனைக் காவலர்கள் கரூர் த.வெ.க. கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்?" என்ற கேள்விக்கு கூட, உங்களின் பதிலுக்கும், உங்கள் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அளித்த பதிலுக்கும் முரண்பாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் கூட தெளிவான பதில் அளிக்க முடியாத நீங்கள், #karurtragedy-யை எந்த லட்சணத்தில் விசாரித்து இருப்பீர்கள் என்பதை தமிழக மக்கள் இன்று உணர்ந்திருப்பர்.
கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் சொல்லொண்ணா வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் கருப்பு பட்டை அணிந்தால், அதையும் கிண்டல் செய்யும் தொனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும், மிகக் கேவலமாகப் பேசினர்.
"ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ?" என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலோ என்னவோ, கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது.
16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட, அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகரோ, கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார்.
இப்போது சொல்கிறேன்- ஆம். ரத்தக் கொதிப்பு தான்.
ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்.
இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறதே... அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம்.
திரு. ஸ்டாலின் அவர்களே- இன்று நீங்கள் ஒரு முதல்வராக பொறுப்போடு பேசுவீர்கள் என்று எண்ணினேன். ஆனால் நீங்களோ, உங்கள் கருர் சட்டமன்ற உறுப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் Version 2.0 போல பேசியுள்ளீர்கள்.
உண்மை சுடும் என்பதை மட்டும் நினைவிற்கொள்க.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசத்தின் கடைக்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, தமிழ் வழிக் கல்வி பயின்று, தனது அசாதாரண திறமையால் தாய்நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சரித்திர நாயகன்.
தன் அக்னிச் சிறகுகள் மூலம் இளைய தலைமுறையின் இதயங்களில் லட்சியக் கனவுகளை விதைத்த அறிவியல் மாமேதை.
இந்தியத் தாய் தவமிருந்து பெற்றெடுத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், அவர் வகுத்துக் கொடுத்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து, வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று,
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் மூன்று ஆண்டுகளில் (2023 வரை) பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 50% அதிகரித்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பெண்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தலையாயக் கடமையை முற்றிலுமாக புறக்கணித்துவிட்ட இந்த அரசை, பாதுகாப்பு இழந்த பெண்கள், பெண் குழந்தைகளின் பெற்றோர் தூக்கி எறியபோவது உறுதி!
அது ஒன்றே, மீண்டும் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி! #sayyestowomensafety #sayyestoaiadmk
2026-ல் அமையவுள்ள மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் அரசு, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், பெண்களை, பெண் குழந்தைகளைப் பாதுகாத்திட்டு, அவர்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கும்! #saveourdaughters
#internationaldayofthegirlchild -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஈரோடு_கிழக்கு தொகுதியே கூடியிருந்த மக்களின் ஆர்ப்பரிப்பில் மிளிர்ந்தது என்றால் மிகையாகாது.
தந்தை, மகன், பேரன் என வாரிசு அரசியலை ஜனநாயகத்துக்குள் புகுத்தும் அபாயகரமான அரசியலை வீட்டுக்கு அனுப்பி, அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் கிட்டும் @AIADMKOfficial வசந்த கால ஆட்சியை 2026-ல் நிறுவுவது என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
இனி எத்தனை நாடகங்களை திமுகவினர் அரங்கேற்றினாலும் மக்கள் மனதில் எழுந்துள்ள எதிர்ப்பு உணர்வை மாற்ற முடியாது.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மொடக்குறிச்சி தொகுதி மக்களின் எழுச்சி,2026 தேர்தலில் @AIADMKOfficial, பெறப்போகும் சரித்திர வெற்றிக்கு சாட்சி!
ஆட்சி நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு திறமையற்ற பொம்மை முதலமைச்சரிடம் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
திமுக-வின் கோரப் பிடியில் சிக்கியுள்ள தமிழக #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பரமத்திவேலூர் தொகுதியின் மக்கள் அளித்த பாசமிகு வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.
தங்கள் நலனுக்காக மட்டுமே இயங்கும் குடும்ப அரசு வேண்டுமா? அல்லது, மக்கள் நலனுக்காக இயங்கும் மக்களுக்கான அரசு வேண்டுமா? என்ற கேள்விக்கான பதிலோடு மக்கள் தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளனர்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, மாண்புமிகு அம்மா அவர்கள் சொன்னது போல் "மக்களால், மக்களுக்கான" அரசாகத் திகழும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#நாமக்கல் தொகுதி மக்களின் ஆரவாரமிக்க வரவேற்புக்கு இடையே உரையாற்றினேன்.
எத்தனையோ சோதனைகளை, திமுக-வின் சூதுகளை வென்று, மக்களின் குரலாக முழங்கி, வெற்றியைக் கண்டவர்கள் நம் @AIADMKOfficial-ன் இருபெரும் தலைவர்கள்.
அவர்கள் வழியில், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை மக்கள் துணையோடு வீழ்த்தி, மக்களாட்சியை மீண்டும் வென்றெடுக்க சூளுரைப்போம்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சமூக ஏற்றத்தாழ்வுகளை, தீண்டாமைகளை ஒழிக்க பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#குமாரபாளையம் தொகுதியில், பல கிலோ மீட்டர்கள் மக்கள் அலைக்கு நடுவே நீந்தி, எழுச்சிப்பயணக் கூட்ட நிகழ்வை வந்தடைந்தேன்.
திமுக கூட்டணி, வெற்றுக் கூட்டணி!
@AIADMKOfficial கூட்டணி, வெல்லும் கூட்டணி!
மக்களை ஏமாற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக ஆட்சியை விரட்டியடிப்பதே, அஇஅதிமுக கூட்டணிக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் அதுவே Single Point Agenda!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருச்செங்கோடு தொகுதி மக்கள் எழுச்சியுற அளித்த வரவேற்பிற்கு இடையே உரையாற்றினேன்.
"செயலாட்சி" என்று சொல்லும் பொம்மை முதல்வரின் செயல்கள் இரண்டே இரண்டு தான்-
ஒன்று, பெயர் வைப்பது.
மற்றொன்று பெயரை மாற்றுவது.
தயவுசெய்து, பெற்றோரை அன்போடு அழைக்கும் "அப்பா- அம்மா" ஆகிய சொற்களை மாற்றிவிட வேண்டாம் என பொம்மை முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
செயலில் ஒன்றுமே இல்லாமல், வெறும் விளம்பர அறிவிப்புகளால் மட்டுமே நிறைந்துள்ள Failure மாடல் ஆட்சியை வீழ்த்தி, தமிழக மக்கள் 2026-ல் @AIADMKOfficial ஆட்சியை மலரச் செய்யப் போவது திண்ணம்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The All India Anna Dravida Munnetra Kazhagam extends its heartfelt congratulations to the Hon’ble Prime Minister Thiru @narendramodi avl on the historic achievement of holding a Constitutional Head position continuously for 25 years.
This unparalleled milestone stands as a testament to your visionary leadership, statesmanship, and unwavering commitment to upholding democratic values and serving the nation with integrity. @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேமுதிக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி. @PremallathaDmdk, பொருளாளர் திரு. L. K. சுதீஷ் ஆகியோரின் தாயாரான திருமதி. அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் .
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திருமதி. @PremallathaDmdk ,
திரு. சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்,
மறைந்த திருமதி. அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The incident of attack on Hon'ble Chief Justice Of India, Justice BR Gavai,
inside the Supreme Court premises has shocked the entire nation. Violence of any kind, especially in such sacred institutions of justice, is unacceptable and must be condemned in the strongest terms.
Justice Gavai’s composed and dignified response amidst the chaos stands as a testament to his integrity, courage, and steadfast belief in the ideals of our Constitution.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
மாறாக, #karurtragedy தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது.
ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?
இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் விடியா திமுக-வின் @mkstalin மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அரசு கேபிள் டிவி-யில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையை தொடர்ந்து வருகிறது விஞ்ஞான தகிடுதத்தங்களுக்கு பெயர் போன விடியா திமுக அரசு.
பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாக கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@PTTVNewsX
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.
புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,
அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.
இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பது போல பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் 'In Karur Where there was no way out' என்ற தலைப்பில் வெளியான செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த செய்தியில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
"Many residents insist that the disaster was neither accidental nor unforeseen and that it was the outcome of poor planning and official neglect"
அதாவது "கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது" என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது.
'இந்த செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால் இந்த துயரச் சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்பது தானே'.
மேலும் இந்தச் செய்தியில் கூறுவது 'கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கே பலர் வந்துவிட்டனர்.
மதியம் 3:00 மணிக்கு யாரும் சாலையில் வாகனங்களில் போக முடியவில்லை. மாலை அப்பகுதியில் திரும்ப கூட இடமில்லை' என அப்பகுதியில் வசிக்கும் திரு. சீதாராம் என்பவர் தெரிவித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயம் தானே.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லில்லி' என்பவர் கூறும் போது, விஜய் பேச ஆரம்பித்தவுடன் மின்தடை ஏற்பட்டதாகவும், மைக் வேலை செய்யவில்லை என்றும், கூட்டம் அமைதியிழந்தது என்றும், அந்த நெரிசலில் இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்து விட்டதாகவும் கூறுகிறார். லில்லி என்பவர் கூறியதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது. அப்பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவர் மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக கூறுகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. ஜெனரேட்டராலோ, மின்துறை மூலமோ, மின்தடை ஏற்பட்டாலும், கூட்டம் பதட்டம் அடையத்தானே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா? இதில் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? இது பற்றி எந்த விபரமும் இல்லை. இது பற்றியெல்லாம் எந்த பாதுகாப்பு திட்டமும் இல்லை என்றால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் கட்சி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழத்தானே செய்யும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதிக்கப்பட்ட இடம் 10,000 பேர் மட்டுமே கூட வசதியுள்ள நிலையில், 25,000 மக்கள் கூடுவதை காவல்துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் அதிக அளவு கூடுவதை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஏன் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. (1)
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்தச் செய்தியில் ஈரோட்டில் இருந்து வந்து உயிர் தப்பிய கார்த்திக் என்பவர் கூறுவது 'ஒரு சில காவலர்களே சாலையோரம் நின்று இருந்தனர். பல காவலர்கள் வெளி வளையத்தில் போக்குவரத்தை சரி செய்தனர். 10 முதல் 15 காவலர்கள் வரை மட்டுமே வாகனத்தை ஒட்டியும், முன்னும் நடந்து வந்தனர். அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருந்தால், இந்த துயர சம்பவம் தவிர்த்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே கள நிலவரப்படி கூட்ட இடத்தில் போதுமான காவலர்களை கொண்டு ஆரம்பம் முதலே கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அரசு தவறிவிட்டது என்பது தான் இதன் பொருள். மேலும் விஜய் வாகனத்தை கூட்ட நெரிசலில் காவலர்கள் உள்ளே கொண்டு வரவும் அதை பாதுகாக்கவும் காட்டிய அக்கறையில் பொதுமக்களை பாதுகாப்பதில் காட்டவில்லை என்பது தானே இதன் மூலம் தெரிகிறது.
ஆனால் கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாக கூறுகிறார். இது ஒரு வேலை norms ஆக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக ஆரம்பத்தில் இவர் கூறினார். அதன் பிறகு எண்ணிக்கையை அவர் குறிப்பிடவேயில்லை. மேலும் உண்மையில் எவ்வளவு காவலர்கள் கூட்ட நிகழ்வுக்கு பணியமர்தப்பட்டனர் என்பதை ஏன் வெளிப்படையாக கூறவில்லை. இந்தச் சம்பவ நிகழ்வின் போட்டோக்களிலும், வீடியோக்களிலும் குறிப்பாக கூட்டம் நடந்த இடத்தில் அதிகமாக காவலர்கள் காணப்படவில்லை என்று தான் மக்கள் பேசுகின்றனர். இது எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களாலும், சம்பவ இடத்தில் இருந்தவர்களாலும் கூறப்படும் உண்மைகள். இவற்றை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்த துயர சம்பவத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறிய மாநில அரசின் தவறுகளை மறைத்து இந்த அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள் இந்த செய்தியை மீண்டும் படித்து உண்மையை உணர்ந்து நடுநிலையோடு பேச வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.(2)
@AIADMKOfficial @the_hindu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேச விடுதலைக்காக ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடி,
உயிர் துறக்கும் அந்தக் கணத்திலும்
நம் மூவர்ணக் கொடியைத் தாழ
விடாமல் உயர்த்தித் தாங்கி,
தாய்நாட்டிற்காக தன்னுயிரையே அர்ப்பணித்த “கொடிகாத்த வீரர்”
தியாகி திருப்பூர் குமரன்” அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பென்னாகரம் தொகுதியின் பாசமிகு மக்களின் வாஞ்சையான வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.
சிறுமி முதல் மூதாட்டி வரை, பெண்கள் நிம்மதியாக இந்த விடியா ஆட்சியில் நடமாட முடியவில்லை. காவலர்களே காமுகர்களாக மாறும் கொடூரமெல்லாம் நடந்த பின்னும், இந்த பொம்மை முதல்வர் எந்தப் பாடமும் கற்றதாகத் தெரியவில்லை.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைத்த இந்த ஆட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டு, மக்கள் ஆசியோடு @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பில் பார்போற்றும் மாநிலம் என்ற பெயரை நிச்சயமாகப் பெறும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பாலக்கோடு தொகுதி என்றென்றும் @AIADMKOfficial-ன் அசைக்கமுடியாத கோட்டை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திரண்டு நின்ற மக்கள் கடல் இடையே உரையாற்றினேன்.
திமுக அரசின் பொம்மை முதல்வர், எப்போது, எந்த தவறான செய்தியை உரைத்தாலும், அதனை உடனடியாக தக்க பதிலடியுடன் அஇஅதிமுக தகர்த்தெறியும்.
முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கும் திமுக கூட்டணி, இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பொம்மை முதல்வர் @mkstalin இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது.
கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்!
#karurtragedy-யின் போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் பொம்மை முதல்வரே...
நான் கேட்கிறேன்- கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?
ஆட்சி நிர்வாகத்தில் Failure,
நிதி நிர்வாகத்தில் Failure,
சட்டம் ஒழுங்கைக் காப்பதில் Failure,
பெண்கள் பாதுகாப்பை உறுதி
செய்வதில் Failure,
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் Failure,
விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் Failure,
என மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் Failure Model திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே ,
எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை!
உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்களின் நலனும், மாணவர்களின் எதிர்காலமும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்பதே எங்கள் கூட்டணிக்கான பொதுக் காரணம்!
இதை விட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படைக் காரணம் தேவையா என்ன?
உங்களைப் போல் அல்லாமல், "கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு" என்று நான் மக்களோடு தான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி.
உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது ?
சரி... பயப்படுறீங்க... இருக்கட்டும்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தர்மபுரி #அரூர் தொகுதியில் கூடியுள்ள கூட்டத்தை திரும்பி பாருங்கள் @mkstalin ,நீங்கள் கண்ட 200 தொகுதிகளில் வெற்றி என்ற கனவை தகர்த்து, அடுத்தாண்டு அஇஅதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்பதற்கான சாட்சி இந்த
மக்கள் கூட்டம்.
2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின். 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 98% நிறைவேற்றியதாக பச்சைப் பொய் சொல்கிறார்கள்,
கேஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யவில்லை. ரேஷனில் சர்க்கரை கூடுதலாக கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை.
ஆனால் இந்த ஆட்சியில் என்ன செய்தார்கள், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று, நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
மீண்டும் @AIADMKOfficial ஆட்சி அமைந்தவுடன் , அஇஅதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கியும் ,திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரூர் குமரன் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும், அரூரில் 93 ஏரிகளுக்கு தெண்பெண்ணையாற்று உபரி நீரை சென்னக்கால் திட்டம் மூலம் பெற்று தருவதற்கான கோரிக்கையும் நிச்சயம் பரிசீலிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பாப்பிரெட்டிபட்டி தொகுதி மக்களின் எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே உரையாற்றினேன்.
பொம்மை முதல்வர் @mkstalin ஒருபுறம், முதலீட்டை ஈர்க்கிறேன் என்ற பெயரில் வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததா? என்றால், இல்லை என்பதே மக்களின் விண்ணைப் பிளக்கும் பதில்.
இவர் இப்படி என்றால், இவரது மகனும், துணை முதல்வருமான @Udhaystalin, #karurtragedy-யின் போது கூட, சம்பிரதாய போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு உல்லாசச் சுற்றுலா சென்றுவிட்டார்.
மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாத இவர்கள் ஆட்சி செய்தால், உருப்படுமா?
இப்படிப்பட்ட மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியாளர்களை விரட்டி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் @AIADMKOfficial தலைமையிலான மக்களாட்சியை நிறுவுவார்கள். இது உறுதி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை மறந்த திமுக ஆட்சி மீது #தருமபுரி தொகுதி மக்கள் , மிகுந்த எதிர்ப்பு உணர்வோடு உள்ளனர்.
#karurtragedy நம் தேசம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அடிப்படை பாதுகாப்பை கூட வழங்கத் தவறிய திமுக அரசுக்கு இது மிகப்பெரிய தலைகுனிவு.
முதலமைச்சர் ஆளே இல்லாத இடத்தில் சென்றால் கூட கொடுக்கும் பாதுகாப்பு, பொதுமக்கள் அதிகம் கூடும் கூட்டங்களுக்கு ஏன் கொடுப்பது இல்லை?
அரசு உயர் அதிகாரிகளை வைத்து
கரூர் துயரம் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். இது ஒரு நபர் ஆணைய விசாரணையை தவறாக வழிநடத்துகின்ற மற்றும் அவமதிக்கும் செயல்.
தங்கள் துறை சார்ந்த பணியை செயல்படுத்த வேண்டிய துறை செயலாளர்கள், இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடும் போது, நீங்கள் அரசியல்வாதிகள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
செய்தியாளர் சந்திப்பு நடத்தும் செந்தில் பாலாஜி முகத்தில், சொல்லில் பயம் தெரிகிறது. ஏன் இந்த பயம்? பதற்றம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?
இவ்வளவு நடந்தும், திரு. @mkstalin திருந்திய பாடில்லை என்பதே அவரது அரசின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
2026-ல் @AIADMKOfficial ஆட்சி அமைந்த பிறகு, தவறிழைத்தோருக்கு உரிய பாடம் புகட்டப்படும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தருமபுரி @AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK IT WING
@AIADMKITWINGOFL
#karurtragedy-யில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று #தருமபுரி தொகுதியில் நடைபெற்ற #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் கூட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்றாட நாட்டு நடப்புகளை,
செய்திகளை சாமானிய மக்களிடம் கொண்டு
செல்லும் நோக்கில், “தினமலர்”-ஐ நிறுவி திறன்மிகு தின நாளிதழாக இயக்கிய
திரு. டி.வி. ராமசுப்பையர் அவர்களின் பிறந்தநாளான இன்று,
இதழியல் துறையில் அவரின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்.
@dinamalarweb
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
www.republicworld.com/india/eps-condemns-tiruvannamalai-s…
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழகத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து ,
இந்திய நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த மாமனிதர்,
எண்ணற்ற திட்டங்கள் மூலம்
ஏழைகளின் வாழ்விற்கு ஏற்றம் தந்து ,
வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற
எளிமையின் அடையாளம்;
தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம்
"பெருந்தலைவர்" காமராஜர்
அவர்களின் நினைவு நாளான இன்று,
இந்திய திருநாட்டிற்கும் , தமிழ்நாட்டிற்கும் கர்மவீரர் அவர்கள் ஆற்றிய பெரும் சேவைகளை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நேர்மை, கண்ணியம், அகிம்சை என்கிற உயர்ந்த நெறிகளை கடைப்பிடித்து,
தன் வாழ்நாள் முழுவதையும் தாய் திருநாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்து, உலகமே வியந்த தலைமைத் திறன் மற்றும் தன்னலமற்ற பண்பின் உருவாக விளங்கிய,
தேசத் தந்தை, மகாத்மா காந்தி, அவர்களின்
பிறந்த நாளில், நாம் அனைவரும் அறவழியில் நடந்து, மனித நேயமும் , அமைதியும் நிறைந்த இந்தியாவின் அடித்தளமாய் நம் அனைவரின் வாழ்வும் அமைய உறுதியேற்போம்.
#mahatmagandhijayanti @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும்,
அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், #ஆயுதபூஜை மற்றும் #விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன?
இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா?
ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்.மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?
இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!
நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...
என்ன அவதூறு பரவியது?
-உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?
-உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?
அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?
சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் @mkstalin அவர்களே?
எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!
இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய,
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திரு. @mkstalin அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!
@AIADMKOfficial
#karurtragedy -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Thrilling finale!
Congratulations to #teamindia on winning the #asiacup 🏆🇮🇳
A remarkable victory against Pakistan that showcased true team spirit.
Special applause to Captain @surya_14kumar, @TilakV9 for his match-winning 69*, @imkuldeep18
for his brilliant 4-wicket haul,
and #abhisheksharma for being the tournament’s top scorer! 🇮🇳👏
#asiacup2025 @BCCI
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
NDTV
@ndtv
Vijay Rally Stampede | "Opposition Rallies Not Provided Enough Security": Leader of Opposition Edappadi K Palaniswami
This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் திரு. @OfficeofminMRV அவர்களை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் @AIADMKOfficial தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும்,
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியில், @AIADMKOfficial ஆட்சியின்போது துவக்கப்பட்டு, 80 சதவீதம் வரை நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, வேண்டும் என்றே மூன்றாண்டுகளுக்குமேல் இழுத்தடித்து, தாங்கள் கொண்டுவந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டி திறந்த மோசடி நாடகம்தான் நடந்ததே தவிர, இந்த அரசு மக்களுக்காக எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்களின் வரிப் பணத்தோடு, இதுவரை 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து, வீண் ஜம்பம் அடிக்கும் வேலையில்தான் ஈடுபட்டுள்ளது.
இது பொம்மை முதலமைச்சர் @mkstalin-ன் 53 மாத கால ஆட்சியில் தமிழ் நாடு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளதோடு, நிதி மேலாண்மையிலும் தனது தோல்வியை பறைசாற்றியுள்ளது.
செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவிற்கும், வரி செலுத்தும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆட்சியாளர்கள் என்பதை நினைவில்கொண்டு உடனடியாக கடன் வாங்குவதை குறைத்து, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களின் நிதி நிலை பற்றியும், வாங்கியுள்ள கடன் தொகை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பது பற்றியும் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தினத்தந்தி நாளிதழை தொடங்கி, தமிழ் அச்சு ஊடகத் துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கிய புரட்சியாளர்.“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”
என முழங்கி, தாய்நாடு மீது அளவற்ற பற்றும், தமிழ் மக்கள் மீது பேரன்பும் கொண்ட பெருந்தமிழர். தமிழுக்கும், தமிழர் முன்னேற்றத்துக்கும் தொண்டாற்றுவதை தன் வாழ்நாள் கடமையாக ஏற்று
வாழ்ந்து மறைந்த “தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனார் அவர்களின்
பிறந்த நாளில், அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
@dinathanthi @ThanthiTV
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலை தெரியவில்லை; மக்கள் தான் தெரிந்தார்கள்.
மக்களுக்கு நன்மை நடக்கும் என்றால் திமுக-விற்கு பொறுக்காது. அதனால் தான் @AIADMKOfficial ஆட்சியின் நலத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் மொத்த உருவான ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
மீண்டும் 2026-ல் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், எளிய மக்கள் ஏற்றம் பெறும் நோக்கிலான அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடரும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களை_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#அரவக்குறிச்சி தொகுதியின் அன்பார்ந்த மக்களின் சிறப்பான வரவேற்பை மகிழ்வோடு பெற்று, அவர்களிடையே உரையாற்றினேன்.
பெரும் மதிப்புக்குரிய நடிகர் திலகம்
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தான் செல்லுகின்ற ஒவ்வொரு கட்சியிலும் வேறு வேறு மாதிரி நடிக்க கூடிய செந்தில் பாலாஜியின் நடிப்பைக் கண்டு வியந்திருப்பார்.
அவர் இன்று சார்ந்திருக்கிற திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவை கருர் மாவட்ட மக்கள் எடுத்து விட்டார்கள்
பதவி வெறியில் மக்களை மறந்த
@mkstalin -ன் திமுகவிற்கு தக்க பதிலை மக்கள் 2026-ல் தருவார்கள்.
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"மழைக்கே அடங்காத மக்கள் கூட்டம், After all ஸ்டாலின் அரசின் பத்து ரூபாய் முன்னாள் அமைச்சர் ஏவும் அடக்குமுறைகளுக்கு அடங்கிவிடுமா?" என்று முழங்கிய #கரூர் தொகுதி மக்கள் வெள்ளம் முன்னே,
எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலினும், அன்றைய செந்தில் பாலாஜியும் உதிர்த்த முத்துகளை திரையிட்டு காட்டினேன்.
வாக்களித்த மக்களையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைக்கும் செந்தில் பாலாஜி போன்றோருக்கு, யார் உண்மையான எஜமானர்கள்? என்று தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் உறுதியாகக் காட்டுவார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#வேடசந்தூர் தொகுதி மக்கள், திமுக அரசின் வெற்று விளம்பரங்களை துளி கூட நம்பவில்லை.
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?" என்பதைப் போல, வெள்ளை அறிக்கை கேட்டால், வெற்றுப் பேப்பரைக் காட்டுகிறது இன்றைய ஸ்டாலின் மாடல் அரசு.
"தாங்கள் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பொம்மை முதல்வரின் அரசை, #byebyestalin சொல்லி மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போவது தான் 2026 சட்டமன்றத் தேர்தல் சொல்லப்போகும் செய்தி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அன்புச் சகோதரர் திரு. @DrACSOfficial அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர்
டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
குடும்ப ஆட்சி செய்வதில், கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன் கொள்ளை அடிப்பதில், அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் "Role Model" அரசாக இன்றைய Failure Model திமுக அரசு இருப்பதை #கூடலூர் தொகுதி மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டி, மீண்டும் @AIADMKOfficial-ன் மக்களுக்கான ஆட்சியை அமைத்திட தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பத்திரிக்கைத் துறையின் மூலம் தமிழின் தனித்துவத்தை உலகம் அறியச் செய்த பன்முகத் திறமையாளர். விளையாட்டு, ஆன்மிகம், கல்வி உள்ளிட்ட துறைகளில் தனி முத்திரை பதித்து,
தனது தன்னலமற்ற சேவையின் மூலம் தமிழக வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்ற "அச்சு ஊடகத்துறையின் முடிசூடா மன்னர்” பத்மஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில்,
அவர்தம் கொடைச் சிறப்பையும் சமூகச் சேவையையும் நினைவுகூர்ந்து,
போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial @dinathanthi @ThanthiTV -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.
அரசு விடுதியில் ஒரு மாணவனை
நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடித்து தாக்கப்படுவதை இந்த பொம்மை முதல்வரால் Justify செய்துவிட முடியுமா?
"சமூகநீதி விடுதிகள்" என்று பெயர் வைப்பதால் வருவது அல்ல. அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி என்பது இருக்க வேண்டும். இதனை பொம்மை முதல்வர், அவர் தலைமையிலான விளம்பர மாடல் அரசும் எப்போது தான் உணரப் போகிறது?
அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே கூட இணக்கமான சூழலை அமைத்திட முடியாத அரசாக இன்றைய விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.
அரசு விடுதிகள் தான் இப்படி என்றால், இந்த ஆட்சியில் அரசுப்பள்ளிகளுமே பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் ஓராண்டுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததாக செய்திகள் வந்தன.
மாணவர்கள் உள்ளே இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி இருக்காதா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த அவலத்திற்கு என்ன பதில் வைத்துள்ளது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? திமுக அரசின் கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன் கொள்ளைக்கு, மாணவர்கள் உயிரை பணயம் வைப்பது கண்டனத்திற்குரியது.
கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். ஒழுக்கம், சமத்துவத்தை நிலைநாட்ட வழிவகுக்கும். இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி, கல்வி மற்றும் அதற்கான கட்டுமான வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களை நெறிப்படுத்த முடியாததால் தான் இத்தகைய பிரச்சனைகள் வருகின்றன.
நடந்து செல்வதை Reels போடுவதில் இருக்கும் முனைப்பை, மாணவர்களுக்கு சுய ஒழுக்கத்தைப் பேணும் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதிலும், அரசுப்பள்ளிகளைத் தரமாகக் கட்டமைப்பதிலும், அரசு மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் மேற்கொண்டு முறையாக நிர்வகிப்பதிலும் காட்ட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.@mkstalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#உதகமண்டலம் தொகுதி மக்களின் உற்சாகமிக்க வரவேற்பை மகிழ்வோடு பெற்றேன்.
உயர்தர மருத்துவ வசதிகள் மலைவாழ் மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை நானே நேரடியாக கண்காணித்து, தனி கவனத்தோடு செயல்பட்டது அஇஅதிமுக அரசு.
2026-ல் @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மானிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை இத்தொகுதி மக்களுக்கு அளித்தேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#குன்னூர் தொகுதியே குலுங்கும் வண்ணம், அன்பிற்கினிய மக்களின் பேரெழுச்சிமிக்க வரவேற்புக்கு இடையே உரையாற்றினேன்.
இ-பாஸ் முறை ரத்து, நிலுவையில் உள்ள கட்டட அனுமதிகளை வழங்குதல் போன்ற முக்கியமான வாக்குறுதிகளை அளித்தேன்.
மலைவாழ் மக்களின் எண்ணங்களை ஈடேற்றும் அரசாக 2026-ல் அமையவுள்ள நமது @AIADMKOfficial அரசு இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் மனைவியும், திருமதி. ராதிகா சரத்குமார் அவர்களின் தாயாருமான திருமதி. கீதா ராதா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன் .
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திருமதி. @realradikaa அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"மக்கள் எழுச்சிக்கு மழை ஆகிவிடுமோ அடைக்குந்தாழ்?" எனக் கேட்கும் அளவிற்கு திரண்டு நின்று வரவேற்ற #சேந்தமங்கலம் தொகுதி மக்கள், தங்களின் பொன்னான வாக்கை சேராத இடத்தில் சேர்த்துவிட்ட வருத்தத்தில் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டை உண்மையிலேயே தலைகுனிய வைத்திருப்பது ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி தான்!
2026 சட்டமன்றத் தேர்தலில் @AIADMKOfficial தனிப்பெரும் வெற்றியைப் பெற்றதும், தமிழ்நாடு தலைநிமிரும்!
இது விளம்பர வாக்கியம் அல்ல.
எனது சத்திய வாக்கு!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எழுச்சி பயணத்தை மாநாடு போல் மாற்றிய #ராசிபுரம் தொகுதியின் மக்கள், வழிநெடுகிலும் இருமருங்கிலும் காத்திருந்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இத்தொகுதியின் நெசவாளர்களின் எண்ணங்களை, தேவைகளை சிறிது கூட புரிந்து கொள்ளாமல் , அத்தொழிலின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டது இன்றைய @mkstalin மாடல் திமுக அரசு.
2026-ல் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, நெசவாளர்களை ஊக்குவித்து, அவர்களை உயர்த்திப் பிடிக்கும் அரசாக விளங்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான திரு. ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் #roboshankar அவர்களின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
#riproboshankar -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும், தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்று போராடிய, சமரசமற்ற சமூகநீதி போராளி;
"கல்வியே ஒடுக்கப்பட்டவரின் பேராயுதம்" என முழங்கிய புரட்சியாளர்,
ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில், அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து,
தேச விடுதலைக்காக பாடுபட்ட
தெய்வத் திருமகனார் பசும்பொன்
ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான #bharatratna வழங்கிட வேண்டும் என @AIADMKOfficial சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்.
#பாரதரத்னா_பசும்பொன்னார்_AIADMK -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warmest birthday greetings to our Hon’ble Prime Minister
Thiru @narendramodi Avl ,
Your visionary leadership,
tireless dedication and Steadfast commitment to the nation
continue to inspire millions.
Wishing you good health, long life,
and continued strength to lead our great nation. @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!
உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!
சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!
யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!
அதனாலே அவர் நம் #பெரியார் என்றானார்!
பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை @AIADMKOfficial தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!
வாழ்க பெரியாரின் புகழ்!
#periyarforever -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் @chessvaishali அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
தங்களின் தொடர் வெற்றிகள் மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் மென்மேலும் பெருமைகளைச் சேர்த்திட வாழ்த்துகிறேன்.
@FIDE_chess -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. @CPR_VP அவர்களை @AIADMKOfficial தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து, எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மரியாதைக்குரிய திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், நாட்டின் உயரிய பொறுப்பு ஒன்றிற்கு உயர்ந்திருப்பது, தமிழ்நாட்டிற்கு பெரும் பெருமை சேர்க்கின்ற ஒன்றாகும்.
குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் அவர்தம் மக்கள் பணி சிறக்க #அஇஅதிமுக சார்பில் வாழ்த்துகிறேன்.
@VPIndia -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தன் ஆள்காட்டி விரல் நீட்டி நமக்கு என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் பேரறிஞர் #அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,
செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருவப் படத்திற்கும்,
அண்ணா சாலையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அளிக்கப்பட்ட #அண்ணா-வின் திருவுருவச் சிலைக்கும் மரியாதை செலுத்தினேன்.
அண்ணா வகுத்த சமநீதிப் பாதையில் என்றும் பயணிப்போம்!
#அண்ணாயிசம் பேணும் @AIADMKOfficial மக்களாட்சியை 2026-ல் நிறுவுவோம்!
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
#cnaisourdna -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!
அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்!
இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி
ஆட்சி அமைக்க முடியுமா?
நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா?
என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில்
தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா!🙏
அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது @AIADMKOfficial !
குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,
குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான #அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை #அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம். 🖤🤍♥️🌱
மக்களை காப்போம் ,தமிழகத்தை மீட்போம்.
அண்ணா நாமம் வாழ்க!
#cnaisourdna -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#அத்திக்கடவு_அவிநாசி கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய பெருமிதத்தோடு #அவிநாசி தொகுதி மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன்.
மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுத்து, அவர்களின் எண்ணங்களை செயல்படுத்திய பெருமையோடு நான் தொகுதிதோறும் மக்களை சந்திக்கிறேன். மக்கள் நாம் நடத்திய நல்லாட்சியைப் பாராட்டுகின்றனர்.
மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்கும், போட்டோஷூட் எடுப்பதற்கும் மட்டும் புதுப்புது மேடைகளை அமைத்துக்கொள்வதை மட்டுமே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், எந்த முகத்தோடு மக்களை சந்திப்பார்?
2026-ல் மீண்டும் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, "மக்கள் தான் ஆட்சியாளர்கள்" என்பதை மெய்ப்பிக்கும் மக்களாட்சியாகத் திகழும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2026-ல் @AIADMKOfficial கூட்டணி 210 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறப் போகிறது என இன்றே சூளுரைக்கும் #சூலூர் தொகுதி மக்கள்,
ஆளத் தெரியாமல் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க காத்திருக்கின்றனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மக்களோடு என்றைக்கும் @AIADMKOfficial இருக்கும் என்பதைப் போல, மக்களும் எப்போதும் அஇஅதிமுக பக்கம் தான் என்பதை மெய்ப்பிக்கும் கூட்டம் தான் #சிங்காநல்லூர் தொகுதியில் திரண்ட மக்கள் கூட்டம்.
"உங்களுடன்" என்று விளம்பரத்திற்காக மட்டும் சொல்பவரின் வெற்று விளம்பர அரசு வேண்டுமா? அல்லது, உள்ளார்ந்த அன்போடு உங்களுடன் எப்போதும் இருக்கும் @AIADMKOfficial அரசு வேண்டுமா? என்ற கேள்விக்கு மக்கள் தெளிவான பதிலோடு உள்ளார்கள்.
2026 தேர்தலில் நாம் பெறவுள்ள வெற்றியின் மூலம் பொம்மை முதல்வருக்கு தக்க பாடத்தைப் புகட்டுவர் தமிழக மக்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பல்லடம் தொகுதியே மக்களின் ஆர்ப்பரிப்பில் பளபளத்தது என்றால் மிகையாகாது.
அவலத்தை மறைக்க பலவேடமிட்டு ஏமாற்றும் போட்டோஷூட் முதல்வரை வீட்டுக்கு அனுப்பி, அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் கிட்டும் @AIADMKOfficial வசந்தகால ஆட்சியை 2026-ல் நிறுவுவது என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
இனி எத்தனை விளம்பரங்கள் வந்தாலும் மக்கள் மனதில் உள்ள உண்மை உணர்வை மாற்ற முடியாது.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருப்பூர்_தெற்கு தொகுதியில் திரும்பிய திசையெல்லாம் தங்களை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றிய விடியா ஸ்டாலின் அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
மக்கள் வெறுக்கும் திமுக ஆட்சியைத் தவிடுபொடியாக்கி, மக்களுக்கான @AIADMKOfficial ஆட்சியை மக்களே நிறுவப் போகும் தேர்தல் தான் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருப்பூர்_வடக்கு தொகுதியே விழாக்கோலம் பூணும் அளவிற்கு மக்கள் திரண்டு அளித்த எழுச்சிமிகு வரவேற்புக்கு இடையே உரையாற்றினேன்.
"மக்கள் எப்படி சென்றால் என்ன? தன் குடும்பத்தினர் செல்வாக்காக வாழ வேண்டும்" என்பதே இந்த பொம்மை முதல்வரின் நோக்கம்.
2026-ல் ஆட்சி அமைக்கப்போகும் @AIADMKOfficial அரசு, எப்போதும் மக்கள் நல்வாழ்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#epsfor2026 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு @CPRGuv அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
இதுவரை ஏற்றப் பொறுப்புகளில் எல்லாம் திறம்பட செயல்பட்டு, அரசியல் மற்றும் சமூக சேவையில் தனித்துவமானப் பங்காற்றிய திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இவ்வுயரிய பொறுப்பேற்பது தமிழகத்திற்கு பெருமை.
குடியரசுத் துணைத் தலைவராக
அவர்தம் மக்கள் பணி சிறக்க மீண்டும்
ஒரு முறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@VPIndia
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#காங்கேயம் தொகுதியில் காணும் திசையெல்லாம் மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது.
தமிழக மக்கள் துணையோடு, காங்கேயம் காளை போல், தேர்தல் ஜல்லிக்கட்டில் @AIADMKOfficial மகத்தான வெற்றி பெறும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல, தினந்தோறும் கொலை நிலவரம் செய்திகளில் வரும் அளவிற்கு தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைத்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் #தாராபுரம் தொகுதி மக்கள்.
2026-ல் @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் என வாக்குறுதி அளித்தேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மடத்துக்குளம் என்றென்றும் நம் @AIADMKOfficial-ன் கோட்டை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் பெருந்திரளாக குழுமி நின்று வரவேற்பளித்தனர்.
30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த இயக்கமான @AIADMKOfficial, தமிழ்நாட்டின் அடிப்படை விழுமியங்களைக் காத்து, "பார்போற்றும் தமிழ்நிலம்" என மெச்சும் நல்லாட்சி தந்தோம்.
2026-ல் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, இன்றைய விடியா திமுக அரசால் ஏற்பட்ட சரிவுகளை சீர்செய்து, அடுத்த தலைமுறைக்கான வளமிக்க தமிழ்நாட்டை கட்டமைக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடி வெள்ளையாற்றில் பெருக்கெடுத்து சென்ற நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறார்களை, மாங்கனி என்ற பெண் துணிச்சலோடுப் போராடி உயிரோடு மீட்டு கரை சேர்த்த செய்தி அறிந்தேன்; அகமகிழ்ந்தேன்!
பிறர்க்கொரு துயரெனில் முன் நின்று காப்பதே தமிழர் இயல்பு; பண்பு. அப்பண்பின் தைரியமிகு இலக்கணமாய்த் திகழும் சகோதரி மாங்கனிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட தியாகச் செம்மல், எண்ணிலடங்கா தன் போராட்டங்களால் சமத்துவ சமுதாயம் அமைய போராடிய சமூக சீர்திருத்தப் போராளி, சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுநாளான இன்று, தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"நிமிர்ந்த நன்னடையோடு நிற்போம்; எவருக்கும் தலைவணங்கோம்" என்று உரக்க முழங்கிய முண்டாசுக் கவிஞர், தமிழின் சுடரொளியை உலகெங்கும் பரப்பிய இலக்கிய மேதை, சுதந்திர தாகத்தை தமிழ் மூலம் நம் அனைவர் மனதிலும் வித்திட்ட புரட்சியாளர் #மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட தியாகச் செம்மல், எண்ணிலடங்கா தன் போராட்டங்களால் சமத்துவ சமுதாயம் அமைய போராடிய சமூக சீர்திருத்தப் போராளி,
சுதந்திரப் போராட்ட வீரர்,
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுநாளில் அவர்தம் தியாகத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உழவர் உழைப்பும், தொழிலாளர்களின் வலிமையும் தாங்கிய #உடுமலைப்பேட்டை தொகுதியில், பெருக்கெடுத்து திரண்ட வெள்ளம் போன்ற மக்களின் வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது!
கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து @AIADMKOfficial -க்கு எதிராக நிற்க கூடிய கட்சியினர் அனைவரும்
பார்த்து விக்கித்து நிற்கின்றனர் !
இன்று திமுக ஆட்சியில்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டதற்கும் , கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கும் உடுமலையில் கூடியிருக்கும் மக்களே சாட்சி !
2026-ல் மக்கள் நலத்தையும், சட்ட ஒழுங்கையும் காப்பாற்றும் அஇஅதிமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம்!
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பொள்ளாச்சி தொகுதிக்கே உரித்தான தித்திக்கும் இளநீர் போன்றே இனிமையான மக்கள், இன்முகத்தோடு வரவேற்றனர்.
சாமானிய மக்களைப் பற்றியே சிந்தித்து, அவர்கள் வாழ்வை வளமாக்கிய இயக்கம் @AIADMKOfficial.
2026-ல் அமையவுள்ள நமது அரசு, எளிய மக்களை ஏற்றம் பெறச் செய்யும் நல்லரசாகத் திகழும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#வால்பாறை தொகுதி மக்கள், ஆனைமலை பகுதியே அதிரும் அளவிற்கு ஆர்ப்பரிப்பான வரவேற்பு அளித்தனர்.
திமுக ஆட்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டரில் இருக்கிறது.
எனவே, அதிகாரத் திமிரில் பேசுவோருக்கு, இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விழைகிறேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
2021 தேர்தலில் வெற்றி மமதையில் கொடி ஏற்றி வைத்த திமுக-வினரின் கொட்டத்தை அடக்கி, @AIADMKOfficial வெற்றிக் கொடியை நாட்டிய #கிணத்துக்கடவு தொகுதி மக்கள், 2026 தேர்தலிலும் இத்தொகுதியில் பறக்கப்போவது அண்ணா முகம் பொறித்த நம் கொடி தான் என்பதை சூளுரைக்கும் வகையில் பேரெழுச்சிமிக்க வரவேற்பளித்தனர்.
ஆட்சி இருக்கும் மமதையில் எள்ளி நகையாடும் விடியா ஆட்சியாளர்களுக்கு, எளியவர்களின் இயக்கமான அஇஅதிமுக, தமிழக மக்களின் துணையோடு 2026 தேர்தலில் தக்க பதிலை உரக்கச் சொல்லும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன்.
"இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @AIADMKOfficial-ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தொண்டாமுத்தூர் தொகுதியின் மக்கள், 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டப் பேரணி போல் ஆரவாரத்தோடு வரவேற்றனர்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மட்டுமே தொண்டாற்றும் சுயநல
திமுக-வினரின் கொட்டத்தை அடக்கி,
மக்களுக்காக தொண்டாற்றும் உண்மையான மக்களாட்சியை @AIADMKOfficial தலைமையில் நிறுவிட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு ஆளுநர் திரு. @CPRGuv அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், @BJP4India தேசியத் தலைவர் திரு. @JPNadda அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் மாண்புமிகு திரு. @CPRGuv அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@VPIndia
@PMOIndia @AIADMKOfficial
My heartfelt congratulations to Hon’ble Governor Thiru. @CPRGuv on his remarkable victory in the election for the Vice President of India.
As a senior leader of the Bharatiya Janata Party, a distinguished Member of Parliament, and a Governor of various states, his dedicated public life and tireless service to the people have earned him this prestigious recognition.
I extend my sincere thanks to Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl, senior leaders of the Bharatiya Janata Party, and the National President of @BJP4India Thiru. @JPNadda Avl, for selecting a distinguished leader from Tamil Nadu as the victorious candidate of the National Democratic Alliance.
I wish Hon’ble Thiru. @CPRGuv great success in his tenure as the Vice President of India.
@VPIndia
@PMOIndia @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர் மறைந்த கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரியான
டாக்டர். D. விஜயலட்சுமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளர், அன்புச் சகோதரி திருமதி. @PremallathaDmdk அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@dmdkparty2005 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று,
எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது?
எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்?
எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன?
எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன?
என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ் நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு
@X வலைதளத்தில் தொழில்துறை மந்திரியும், பொம்மை முதலமைச்சரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.
எனவேதான் திரு. @mkstalin-இடம், உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன்.
இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உடல் நலத்தை பாதுகாத்து சமூக நலனுக்காக அயராது உழைக்கும் பிசியோதெரபிஸ்ட்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த உலக பிசியோதெரபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ப்பணிப்பு, பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவை மூலம் பலரின் ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுத்து சமூக நலனுடன் சேவையாற்றும் பிசியோதெரப்பிஸ்ட் - இயன்முறை மருத்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும்,
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும்,
முன்னாள் அமைச்சருமான
திரு. R.B. உதயகுமார், MLA., அவர்களுடைய தாயாரும்,
அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர்
திரு. உதயகுமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன்,
திருமதி மீனாள் அம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial @rbudhayakumar_ -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியாக, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத் தகர்க்க வந்த வெள்ளையர் படையை வீழ்த்த, வெள்ளையனின் முகாமில் இருந்த வெடி மருந்துக் கிடங்கை, தன் நேசத்திற்குரிய முறைப்பெண் வடிவுடன் இணைந்து, தன் உடம்பில் நெருப்பைப் பற்றிக் கொண்டு அழித்த தீரமிகு மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவு நாளான இன்று,
கவர்ணகிரியில் அவர்தம் மணிமண்டபம் அமைத்திட மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணை பிறப்பித்ததையும், ரூ.72.70 லட்சம் மதிப்பில் அம்மணிமண்டபத்தை சீரமைத்து, நூலகம் அமைத்திட எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு ஆணை பிறப்பித்ததையும் நினைவுகூர்ந்து, அவர்தம் வீரம் செறிந்த தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் படை வீடான #பழனி சட்டமன்றத் தொகுதியில், மக்கள் எழுச்சியுற திரளாக வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்றைய திமுக ஆட்சியில், ஒரு குடும்பம், தங்களை அரசர்களாக நினைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க சுயநல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி என்பது, மக்கள் முடிசூடும் மக்களாட்சியாக, மக்களுக்காக, மக்களே வழிநடத்தும் நல்லாட்சியாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஆத்தூர், #ஓட்டன்சத்திரம் தொகுதிகளில், பார்வை நீளும் தூரம் யாவும் திரண்டு நின்ற அன்பிற்கினிய மக்களிடையே உரையாற்றினேன்.
"காக்க வல்லது அரசு" என்பது வள்ளுவக் கூற்று. ஆனால், இன்றைய திமுக அரசு, மக்களைக் காக்கிறதா? இல்லை.
மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலை மாறி, 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficialதமிழக மக்களைக் கண் இமைபோல் காத்திடும் அரசாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திண்டுக்கல் தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தொகுதி மக்கள் அலைபோல் திரண்டு நின்று அளித்த வரவேற்ப்பு மனதை மகிழ்வித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் இந்த விடியா திமுக அரசுக்கு #byebyestalin சொல்லிவிட்டு, மீண்டும் 2026-ல் @AIADMKOfficial ஆட்சியை நிறுவத் தயாராக உள்ளனர் இத்தொகுதி மக்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விவசாயிகளின் உழைப்பால் வளம் பெருகிய #நத்தம் மண்ணில், அலைமோதிய மக்களின் அன்பும் வரவேற்பும் என்னை ஆழமாக நெகிழச்செய்தது.
கூடியிருந்த ஒவ்வொரு குடிமகனின் முகத்திலும், திமுக அரசின் செயல்திறன் குறைபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, விவசாயிக்கும், வறியோருக்கும், பொதுமக்களுக்கும் நன்மை செய்த @AIADMKOfficial ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற உறுதி தென்பட்டது.
நத்தம் மண்ணின் பசுமை வயல்கள் மீண்டும் பெருமை பெற, 2026-ல் அஇஅதிமுக ஆட்சியை மலரச் செய்வோம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#பெரியகுளம் தொகுதியின் மக்கள்,
#தேனி நகரமே குலுங்கும் அளவிற்கு உற்சாகத்தோடு அளித்த வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.
தங்கள் கூட்டணியைக் கொள்கைக் கூட்டணி என்று சொல்லும் @mkstalin,
ஏன் கேரள கம்யூனிஸ்ட் முதல்வரிடம் பேசி, முல்லைப் பெரியாறில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெறவில்லை?
திமுக-வின் நாடகக் கூட்டணிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்" திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைக் ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச் செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
ஏற்கனவே இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது பல வழக்குகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்திருந்தால் தானே அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, திமுக-வின் கொள்கையான கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷனை முறையாக செயல்படுத்த முடியும்?
இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா? என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் சொல்லும் பதில்- "இல்லை"!
நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான நிரந்தர தீர்வு- #byebyestalin!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி, வாழ்வில் உயர்ந்திட பாடுபட்டவரும் , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட மக்கள் சேவை ஆற்றியவரும், தேவர் தந்த தேவர்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கல்வி தந்தை பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
திரு.மூக்கையா தேவர் அவர்களின் புகழுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக எனது அறிவுறுத்தலின்பேரில் கழக மேனாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆகியோர் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் அன்னாரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#போடிநாயக்கனூர் தொகுதியில்,
"எத்திசை திரும்பினும் மக்கள் வெள்ளம்" என்றுரைக்கும் அளவிற்கு மக்கள் பேரெழுச்சியோடு திரண்டு வரவேற்றனர்.
ஏழை எளிய மக்களை ஏற்றம் பெறச் செய்யும் உன்னத நோக்கத்தோடு ஆட்சிபுரிந்த இயக்கம் @AIADMKOfficial.
2026-ல் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, அனைவருக்கும் அனைத்தும் அளிக்கும் அரசாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஆண்டிப்பட்டி தொகுதி எந்நாளும் @AIADMKOfficial-ன் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் எழுச்சியான வரவேற்ப்பை அளித்தனர் இத்தொகுதி மக்கள்.
கழக இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த இத்தொகுதி மக்கள், 2026-ல் அஇஅதிமுக வாகை சூடும் வாக்குகளை அள்ளி வழங்கப் போவதற்கு நேற்றைய எழுச்சிப்பயணத்தில் கூடிய மக்கள் வெள்ளமே சாட்சி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் உரிமை போர் நடத்தி,சுதேசி கப்பல்களை இயக்கி, தன் சொத்துகள் அனைத்தையும் இழந்தும், தேசத்தின் விடுதலைக்காக சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்த "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154-வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குவதோடு அவரின்
திருவுருவ படத்தை
சட்டப்பேரவையில் நிறுவியதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
இன்று தேனியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவோணத் திருநாளை வசந்த கால விழாவாக உவகையுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'ஓணம்' திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு ஓணம் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ
#onam
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்ற கொன்றை வேந்தன் பாடலில் , உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்று கல்வியின் சிறப்பினை போற்றுகிறார் ஔவையார்.
அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணாக்கர்களுக்கு போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த #ஆசிரியர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த திருநாளாம் "மீலாதுன் நபி", உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நபிகள் நாயகம் அவர்கள் போதித்த சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவைகள். எனவே, அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம். @AIADMKOfficial
#miladunnabi2025 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#உசிலம்பட்டி தொகுதி மக்களின் வாஞ்சைமிகு வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டு அடையாளங்களைக் பேணிக் காக்கும் அரசாக 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு திகழும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#சோழவந்தான் தொகுதி மக்கள்,
2026 சட்டமன்றத் தேர்தல் “வெற்றி விழா” போல எழுச்சியோடு கூடிநின்று வரவேற்றனர்.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் பாரம்பரிய கிராம முறைப்படி நடைபெறவும் , கிராம காளைகளுக்கும் , உள்ளூர் வீரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கவும் , மீண்டும் 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
It gives me immense happiness that the Union Government has permitted Sri Lankan Tamils, who migrated to India before 09.01.2015 and registered as refugees, to legally stay in our country.
Our umbilical-cord relatives — the Sri Lankan Tamils — came to Tamil Nadu bearing the scars of war, economic hardships, and the unforgivable betrayal of the DMK–Congress alliance that led to genocide.
Granting due recognition to them has been a long-standing demand of @AIADMKOfficial. As per my directives, our party members have consistently raised this demand in Parliament.
This announcement marks the first step towards providing legal recognition to Sri Lankan Tamils, and @AIADMKOfficial wholeheartedly welcomes it.
On behalf of AIADMK, the people of Tamil Nadu, and the Sri Lankan Tamils, I extend my heartfelt gratitude to Hon’ble Prime Minister Thiru. @narendramodi avl and Hon’ble Union Home Minister Thiru. @AmitShah avl for making this possible.
@PMOIndia @HMOIndia
Humanity shall flourish! ❤️
#srilankantamils -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
09.01.2015-க்கு முன் இலங்கை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குடியேறி, அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்களை சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள், போர்ச்சூழல், பொருளாதார நெருக்கடிகள், திமுக- காங்கிரஸ் கூட்டணியின் மன்னிக்க முடியாத துரோகத்தால் நடந்த இனப்படுகொலை ஆகியவற்றின் வடுகளைச் சுமந்து, தமிழகத்தை வந்தடைந்தனர்.
அவர்களுக்கான உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பது @AIADMKOfficial-ன் நீண்டகால கோரிக்கை. எனது அறிவுறுத்தலின்படி, இலங்கைத் தமிழர்களுக்கான அங்கீகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் கோரி வந்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தின் முதல் படியாக உள்ள இந்த அறிவிப்பினை @AIADMKOfficial மிகுந்த மனமகிழ்வோடு வரவேற்கிறது.
இதனை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும் அஇஅதிமுக சார்பிலும், தமிழக மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதம் தழைத்தோங்கட்டும்!❤️ -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
On behalf of @AIADMKOfficial, I wholeheartedly welcome the historic decisions of the #gstcouncil.
My appreciation to Hon'ble Prime Minister Thiru. @narendramodi avl for his visionary leadership in steering transformative reforms, and to Hon'ble Finance Minister Tmt. @nsitharaman avl for her dedicated efforts in ensuring a simplified and growth-oriented GST framework.
The shift to two slabs (5% & 18%), relief on essentials, healthcare, agri-inputs & insurance ensures simplicity , fairness and progress
The #nextgengst move will simplify compliance, boost consumer confidence and support economic growth.
@PMOIndia @FinMinIndia @nsitharamanoffc -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மதுரை_தெற்கு தொகுதி மக்கள், விண்ணை முட்டும் அளவிற்கு எழுச்சிமிக்க முழக்கங்களுடன், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மாண்புமிகு அம்மா அவர்கள் முன்னெடுப்பில், @AIADMKOfficial ஆட்சியின் நடவடிக்கைகளால், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாண்புமிகு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2026-ல் அமையவுள்ள அஇஅதிமுக ஆட்சியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
1300 கோடி ரூபாய் செலவில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் வழியாக தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தது @AIADMKOfficial. அதை கிடப்பில் போட்டுள்ளது திமுக.
மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், இதுபோல் நிறுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மதுரை_மத்திய தொகுதியின் மக்களின் எழுச்சிமிக்க சிறப்பான வரவேற்பினை மகிழ்வோடு பெற்றேன்.
மாநில ஆட்சி முதல் உள்ளாட்சி வரை ஊழலாட்சித் தாண்டவமாடும் திமுக அரசை கூண்டோடு வீழ்த்தி, @AIADMKOfficial தலைமையிலான மக்களுக்கான நல்லாட்சி அமைத்திட வேண்டும் என்பதே தமிழக மக்களின் திடமான முடிவு.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மதுரை_மேற்கு தொகுதியில், திரளான மக்கள் கூட்டத்திற்கு இடையே உரையாற்றினேன்.
நான்காண்டு திமுகவின் அவல ஆட்சியைப் பார்த்துவிட்ட பிறகு, நாடு போற்றும் நல்லாட்சியைக் கொடுக்கவல்ல ஒரே இயக்கம் @AIADMKOfficial தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
எனவே, 2026 மக்கள் தீர்ப்பு என்பது @AIADMKOfficial ஆட்சி அமைவதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மதுரை_வடக்கு தொகுதி மக்கள், புதூர் பகுதியே விழாக்கோலம் பூணும் அளவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சிமிக்க தமிழ்நாட்டைக் கட்டமைக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன.
மழைநீர் வடிகால் பணிகள்,
95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று திரு. @mkstalin சொல்வாரா?
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை;
மழைநீரும் வடிந்த பாடில்லை;
அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை;
இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை என்றாலே மல்லி தானே?❤️
#திருப்பரங்குன்றம் #திருமங்கலம் பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயச் சகோதரர்களுடன் கலந்துரையாடினேன்.
மல்லிகை விவசாயம் செய்வதில் அவர்களுக்கு உள்ள கஷ்ட நஷ்டங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தேன்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, மல்லிகைப்பூ சாகுபடிக்கு சாதகமான சூழலை அமைத்துத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மதுரை_கிழக்கு தொகுதி மக்களின் வரவேற்பு சத்தம், யானைமலையைக் கூட அசைத்துப் பார்த்திருக்கும்.
பத்து ரூபாய் அமைச்சர் ஒருவரை போல், இத்தொகுதி சார்ந்த அமைச்சர்
"10 பர்சென்ட் அமைச்சராக" இருக்கிறார்.
திமுக அரசின் கமிஷன் கொள்ளைகளால் வெகுண்டெழுந்துள்ள மக்களின் இந்த பேரெழுச்சி, 2026 ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தப் போவதற்கு மதுரை கிழக்கு மக்களே சாட்சி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மேலூர் தொகுதி மக்களின் மலைக்க வைக்கும் வரவேற்புக்கு இடையே உரையாற்றினேன்.
எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், மக்களுடன் இணைந்து அரிட்டாபட்டியை போராடி காத்த இயக்கம் @AIADMKOfficial.
2026-ல் அமையவுள்ள நமது அஇஅதிமுக அரசு, தமிழ்நாட்டின் வளங்களைப் பேணிக் காக்கும் அரசாக நிச்சயம் இருக்கும்.
நான் சட்டமன்றத்தில் உரைத்தது போன்றே, எங்கள் உயிரைக் கொடுத்தாவது #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திமுக அரசின் தில்லு முல்லுகளை பட்டியலிடும் அளவிற்கு, அத்தனை அவலங்களையும் அறிந்து வைத்துள்ளனர் #திருச்சுழி தொகுதி மக்கள்.
2026-ல், தங்களின் தேவைகளை அறிந்து செயல்படும் @AIADMKOfficial அமைத்திட வேண்டும் என்பதே மக்களின் ஒரே எண்ணம்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருமங்கலம் தொகுதியில் நடந்தது எழுச்சிப் பயணமா? எழுச்சி மாநாடா? எனக் கேட்கும் அளவிற்கு, எழுச்சிமிகு மக்களின் ஆரவாரத்திற்கு இடையே உரையாற்றினேன்.
பொய், புரட்டு, போலிகள் மட்டுமே உருவான திமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் #திருப்பரங்குன்றம் தொகுதியின் மக்கள், மதுரை சித்திரைத் திருவிழாவைப் போன்றதோர் எழுச்சிமிகு வரவேற்பில் திளைக்கச் செய்தனர்.
நான் எப்போதும் சொல்வது போல,
மதுரை மண், ராசியான மண்!
இந்த மதுரை மண்ணில் துவங்கிய நான்காம் கட்ட எழுச்சிப் பயணம், தமிழ்நாட்டின் புதியதோர் விதி செய்யும் வரலாற்றுப் பயணமாக மாறுவதற்கு மக்களும் சாட்சி, மகேசனும் சாட்சி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத் தீப்பொறி பற்றவைத்துத் தமிழரின் வீரக் கொடியை உயர்த்தி வெற்றிச் சரித்திரம் படைத்த முதல் சுதந்திரப் போராட்ட வீரர் #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
To Honourable Prime Minister of India
Thiru. @narendramodi Avl,
Subject: Request for Immediate Relief Measures for Tiruppur Knitted Apparel Export Industry
Dear sir ,
As you are aware, the Tiruppur Knitted Apparel hub is one of the most vital economic lifelines of Tamil Nadu, providing employment to more than nine lakh persons, including not only the people of Tamil Nadu but also a significant workforce from other states such as Bihar, Uttar Pradesh, and Chhattisgarh.
Tiruppur contributes nearly 60% of India’s knitwear exports, thereby generating substantial foreign exchange for the country. However, the industry is currently facing severe challenges due to instability in cotton yarn prices and the high cost of manufacturing. The recent imposition of a 25% tariff by the United States, followed by an increase to 50%, has dealt a severe blow to our exporters and the people of Tamil Nadu. This has worsened the already languishing condition of this industry, which is largely dominated by MSME units.
While I sincerely appreciate the initiatives of the Central Government to diversify export destinations beyond the United States, I must draw your kind attention to the urgent need for immediate relief measures.
In this context, I most earnestly request the Government to consider the following urgent interventions:
1.Compensations and Incentives:
Providing financial relief in the form of compensations or export incentives to counterbalance the sudden loss of competitiveness caused by the steep tariff hike.
2.Reduction in Tax on Cotton Yarn:
Introducing relief on the tax rates of cotton yarn to lower the overall cost of production, thereby enabling Indian knitwear to remain competitive in international markets.
3. Loan Rescheduling & Interest Relief:
Issuing directions to banks to reschedule loan repayments by way of deferment of dues for at least six months, coupled with relief on interest for pending loans, to alleviate the financial distress faced by MSME units.
While thanking you for the steps already taken in this regard, I respectfully urge the Government to intensify the efforts to facilitate the export of textiles to the other potential countries with substantial promotional measures.
@PMOIndia
With Best Regards,
@EPSTamilNadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு திரு. @mkstalin பதிலளிப்பரா???
ஆரம்பம் முதல் திரு.ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை.
நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆனால் திரு. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த 'சின்ன கலைவாணர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. விவேக் அவர்களது நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது.
'இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா?' என்று திரு. விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் 'ஒன்றுமே இல்லை' என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் அதுதான் மக்களுக்கும்' - என்பார்!
அதுபோல் திரு. ஸ்டாலின் அவர்கள் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து.
திரு. ஸ்டாலின், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஒட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள்,
இன்று சிவகங்கை, திருப்புவனம்
வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு ,
எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் @mkstalin என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல,
திருப்புவனம் வைகையாற்றில்
மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது
கடும் கண்டனத்திற்கு உரியது
மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை பிரார்த்தித்து,
அனைவருக்கும் எனது உளமார்ந்த #விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#விநாயகர்சதுர்த்தி
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருச்சி_மேற்கு தொகுதியில் பெருங்கடல் போல் கூடிய மக்கள், திருச்சியில் திமுகவால் உருவாக்கப்பட்டுள்ள ஊழல் சாம்ராஜ்யத்தை சுக்குநூறாக உடைக்க தயாராகிவிட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் மன்னராட்சி முறையை ஒழித்து, மக்களாட்சியின் பொற்காலம் @AIADMKOfficial ஆட்சி மலர்ந்தவுடன், நிலஉரிமையாளர்களை மிரட்டி நிலத்தை அபகரிக்கும் திமுகவை சேர்ந்த சமூக விரோதிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனையை உறுதியாகப் பெற்றுத் தருவோம்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஜல்லிக்கட்டின் வீர மரபுக்கும், தனக்கே உரிய வடிவத்துடன் இருக்கும் முறுக்கிற்கும் பெயர் பெற்ற #மணப்பாறை தொகுதியில் ஆற்றலாய் பெருக்கெடுத்து, அலையென திரண்ட மக்கள் கூட்டம், அளித்த அன்பு வரவேற்பை கண்டு, என் மனம் வியப்பின் உச்சிக்குச் சென்றது.
கூடியிருந்த ஒவ்வொரு மக்களின் எண்ண ஓட்டமும், தமிழ்நாட்டை வாரிசு அரசியலால் சீரழித்த திமுக ஆட்சியை வீழ்த்தி, மக்களின் நலனையும் சமூக நீதியையும் உயர்த்திப் போற்றும் @AIADMKOfficial ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்ற உறுதி வெளிப்பட்டது.
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் தமிழர் பாரம்பரியத்தின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டு வீரர்களின் வீரச் சிறப்பை மதித்து, அவர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மணப்பாறை
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை,
எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்,
தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர்,
மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன்
திரு. @iVijayakant அவர்களின் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன்.
#hbdcaptainvijayakanth
@PremallathaDmdk @dmdkparty2005
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆட்சி, அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் திமுக அரசை தூக்கி எறிந்து, மக்களுக்காகவே உழைக்கும் மக்களாட்சி @AIADMKOfficial தலைமையில் 2026-ல் நிச்சயம் அமைய வேண்டுமென தொகுதி மக்கள் உறுதியுடன் உள்ளனர்.
#மணச்சநல்லூர் #துறையூர் தொகுதிகளில் அலைபோல் திரண்டு இருந்த மக்களின் ஒரே எண்ணம் – மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதே!
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி அமைதி, வளம், வளர்ச்சி நிறைந்த நல்லாட்சியை 2026-ல் @AIADMKOfficial அரசு நிச்சயம் வழங்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மணச்சநல்லூர் செல்லும் வழியில், @AIADMKOfficial ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட "#நடந்தாய்_வாழி_காவிரி" திட்டத்தால் பயன்பெற்ற விவசாய சகோதரர்களை சந்தித்தேன்.
அஇஅதிமுக ஆட்சியின் முத்தான இத்திட்டத்தால் காவிரி வளம் பெற்றதோடு, நீர் ஆதாரமும் பெருகி விவசாயம் செழித்தது.
ஆனால், இன்றைய விடியா ஸ்டாலின் ஆட்சியோ, அஇஅதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட தடுப்பணைத் திட்டங்களைக் கூட தடுத்து நிறுத்திவிட்டது.
அன்பிற்கினிய விவசாயத் தோழர்களுடன் இணைந்து நெல்லும், மலரும் தூவி காவிரியை வணங்கி, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள இடங்களில் ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை அளித்தேன்.
மணச்சநல்லூர் தொகுதி மக்களும் பொங்கும் காவிரி போல் பேரன்புடன் வரவேற்றனர்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial நல்லாட்சியில்,
வரப்புயர நீர் உயரும்!
நீர் உயர நெல் உயரும்!
நெல் உயரக் குடி உயரும்!
காவிரித் தாய் வாழியவே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருச்சி_கிழக்கு தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தொகுதி மக்கள் அலைபோல் திரண்டு நின்று அளித்த வரவேற்பு மனதை மகிழ்வித்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சுமார் ₹1000 கோடி நிதியை வழங்கி,
திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு புதிய திசை காட்டிய @AIADMKOfficial -க்கு,
2026 தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆதரவு திமுக ஆட்சியின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருவெறும்பூர் தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலில் @AIADMKOfficial-வின் இரும்புக்கோட்டையாக திகழப்போவதை, எழுச்சியுடன் கூடிய மக்களின் வரவேற்பே பறைசாற்றியது!
தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சியை முறியடித்து, மக்கள் நலனும் முன்னேற்றமும் மலர்ந்த @AIADMKOfficial நல்லாட்சியை மீண்டும் நிறுவ வேண்டும் என்பதில், தொகுதி மக்கள் அசைக்க முடியாத மனவுறுதியுடன் நிற்கிறார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சொன்ன எதையுமே செய்யாத செயலற்ற ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதை திடமாக தெரிவிக்கின்றனர் #செய்யூர் தொகுதி மக்கள்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் "சொல்பவை யாவையும் செய்யும்; சொல்லாத பல நன்மைகளையும் அளிக்கும்"!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#உத்திரமேரூர் , #ஸ்ரீபெரும்புதூர், தொகுதிகளின் மக்களின் எழுச்சிமிகு வரவேற்பு என்பது, 2026-ல் அமையப்போவது @AIADMKOfficial ஆட்சி தான் என்பதற்கு அத்தாட்சி.
பிறர் உழைப்பை உறிந்து, பீடத்தில் இருப்போர் மட்டுமே அரசியல் பிழைக்கும் உலகில், வியர்வை சிந்தி உழைக்கும் தொண்டர் யாவரையும் உயர்த்தும் ஒரே இயக்கம் @AIADMKOfficial.
"மேகங்கள் வரும், போகும்; வானம் நிரந்தரமானது" என்பதைப் போல், என்றென்றும் நிலைக்கும் தமிழ்நாட்டிற்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக. இதை சொல்லப் போகும் தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்!
2026-ல் அஇஅதிமுக அமைக்கவுள்ள ஆட்சி என்பது, உழைக்கும் மக்களை உயர்த்திப் பிடிக்கும் நல்லாட்சியாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பேரறிஞர் அண்ணா அவர்களை ஈன்றெடுத்த #காஞ்சிபுரம் மண்ணில், மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன்.
"அண்ணா மீது ஆணையிட்டு" ஆட்சியைத் தொடங்கிய திரு. @mkstalin நடத்தும் விடியா ஆட்சி, அண்ணாவின் பெயருக்கும் புகழுக்கும் இழைக்கின்ற பேரிழுக்கு.
அண்ணாவின் பெயரை மட்டுமல்ல, கொள்கையையும் தாங்கி நின்று, தமிழ்நாட்டின் காப்பரணாகத் திகழ்கிறது @AIADMKOfficial.
அண்ணா வழியில் புரட்சித்தலைவர் ஆரம்பித்து, புரட்சித்தலைவி கட்டிக்காத்த இந்த இயக்கம், நூற்றாண்டுக்கும் மக்கள் பணி செய்யும் இயக்கமாக , இன்று தொண்டர்களின் கையில் இருப்பதே நம் முப்பெரும் தலைவர்களுக்கு நாம் சேர்த்த பெருமை.
2026-ல் உண்மையான "அண்ணாவின் ஆட்சி"யை @AIADMKOfficial அமைப்போம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#சோளிங்கர் தொகுதி மக்களின் அன்பும் உற்சாகமும் என் இதயத்தை முழுமையாக நிரப்பியது.மக்களின் நம்பிக்கையும் பாசமும் எனக்கு ஆற்றலூட்டியது.
அடுத்த ஆண்டு நடைபெறுவது
வெறும் தேர்தல் அல்ல,
தமிழகத்தின் புதிய யுகத்தை தொடங்கும் ஒரு புரட்சி! திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் இதுவே கடைசி அத்தியாயம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#இராணிப்பேட்டை தொகுதியின் மக்கள் கொடுத்த வரவேற்பு, இந்த மாவட்டமே அஇஅதிமுக கோட்டை என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது.
இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, இராணிப்பேட்டை மாவட்டம் அமைத்துத் தந்தது @AIADMKOfficial அரசு.
ஆனால், இன்றைய விடியா திமுக அரசால் இராணிப்பேட்டையின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், இராணிப்பேட்டை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாமன்னர் பூலித்தேவனின் ஆற்றல்மிகு தளபதியாக விளங்கி, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும், எதிராக போர்க்கொடி உயர்த்தி. தமிழர்களின் வீரம், விவேகம், போர்க்கலை ஆகியவற்றை எடுத்துக்காட்டிய இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 254 ஆவது வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#வேலூர் எழுச்சிப்பயணக் கூட்டத்திற்கு இடையே, போட்டோகிராபர் தம்பியின் கேமராவில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தேன்.
உலக புகைப்பட தினமான இன்று,
நம் வாழ்க்கையில் ஒன்றிணைந்து,
சுகம், துக்கம், மாநாடு, பொதுக்கூட்டம், அவ்வளவு ஏன், போராட்டங்களைக் கூட அவற்றின் உணர்வுகளோடு காட்சிப்படுத்தும் புகைப்படங்களை, சரியான தருணத்தில் Capture செய்யும் கலையிற் தேர்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#worldphotographyday
@AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#காட்பாடி தொகுதியின் மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு என்பது, 2026-ல் அமையப்போவது @AIADMKOfficial ஆட்சி தான் என்பதற்கான முரசறைந்தது போல் இருந்தது.
2021-ல் நூலிழையில் ஆட்சியைப் பிடித்த திமுக, அதைக் கொஞ்சம் கூட உணராமல், அதிகாரத் திமிரில் மக்கள் விரோத ஆட்சி நடத்திவருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் திமுக-விற்கான நிரந்தர அரசியல் முற்றுப்புள்ளியாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#போளூர் சட்டமன்றத் தொகுதியின் மக்களின் பிரம்மாண்டமான வரவேற்பு,
2026 தேர்தலுக்கான அஇஅதிமுக-வின் மகத்தான வெற்றியை இன்றே உறுதி செய்துவிட்டது.
போலி விளம்பரங்களால் மட்டுமே இந்த திமுக ஆட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
2026-ல் @AIADMKOfficial அமைக்கவுள்ள ஆட்சி என்பது உண்மையான செயலாட்சியாக இருக்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கலசப்பாக்கம் தொகுதி 2026-ல் @AIADMKOfficial கோட்டையாக மாறும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் விமரிசையாக வரவேற்றனர் இத்தொகுதி மக்கள்.
வாக்களித்த மக்களை வருத்தப்பட வைத்ததே ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் ஆகச்சிறந்த சாதனை.
மக்கள் விரோத ஆட்சி வீழும்!
மக்களுக்கான அஇஅதிமுக ஆட்சி அமையும்!
இது நிச்சயம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஆளுநர் @CPRGuv அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான மாண்புமிகு @JPNadda அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருவண்ணாமலை தொகுதி மக்கள், கார்த்திகைத் திருவிழா போல கூடிநின்று அளித்த எழுச்சிமிகு வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி, ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களையும் காத்துநின்று, அவர்கள் வாழ்வை வளமாக்கும் தீப ஒளியாகத் திகழும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கீழ்பென்னாத்தூர் தொகுதியின் மக்களின் பேரன்புமிக்க வரவேற்புக்கு இடையே உரையாற்றினேன்.
அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் நலத் திட்டங்களை வழங்கியது @AIADMKOfficial; அவற்றிற்கு மூடுவிழா நடத்தியது திமுக என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
2026-ல் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமையும்! அம்மா அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் தொடரும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#செங்கம் தொகுதி மக்கள் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்,
அனைத்து தரப்பு மக்களையும் அடிப்படை வசதிகள் , பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பிற்காக தெருவில் இறங்கி போராடவிட்ட திமுக அரசுக்கு மக்கள் புகட்டப் போகும் பாடம் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில்,
மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்' என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்.
#krishnalove @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஆரணி சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பேரணி போல் திரண்டு வந்து எழுச்சியான வரவேற்பினை அளித்தனர்.
நான்கரை ஆண்டு திமுக அவல ஆட்சியை அனுபவித்த பிறகு, அனைவருக்கும் அனைத்தும் அளிக்கக் கூடிய உண்மையான சமத்துவமிக்க ஆட்சியை வழங்கவல்ல ஒரே இயக்கம் @AIADMKOfficial தான் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாகாலாந்து மாநில ஆளுநரும்,
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திருமிகு இல. கணேசன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய திருமிகு இல. கணேசன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; மணிப்பூர் மாநில ஆளுநர், மேற்கு வங்காள ஆளுநர் (கூடுதல்), மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
திருமிகு இல. கணேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று எழுச்சிப்பயணத்தில் திட்டமிடப்பட்ட தொகுதிகளில் இல்லை எனினும், என்னைக் காண பெருந்திரளாகக் கூடிநின்று உரையாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர் #ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மக்கள்.
மக்களின் கோரிக்கையேற்று, 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி அளிக்கப்போகும் நல்லாட்சி குறித்து உரையாற்றினேன்.
மக்களின் இந்த தன்னெழுச்சியே,
நாளைய அஇஅதிமுக-வின் சரித்திர வெற்றிக்கு சாட்சி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட,
இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில்,
நம் தாய்திரு நாடு விடுதலை பெற,
போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன்,
குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு,
நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும்,
மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும்,
இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம்...
வாழிய பாரத மணித்திரு நாடு ! 🙏
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#குடியாத்தம், #கே_வி_குப்பம் தொகுதிகளின் மக்கள் சொல்வது என்ன தெரியுமா @mkstalin அவர்களே?
உழைக்கும் மக்களின் வலிகளைத் தெரிந்து, அவற்றைக் களையச் செய்யும் ஒருவர் தான் முதல்வராக இருக்க முடியும்.
சென்னையில் நமக்காக உழைக்கும் நலிவடைந்த தூய்மைப் பணியாளர்களை நீங்கள் நடத்திய விதத்தைப் பார்த்தால், அந்த பதவிக்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என சொல்கிறார்கள்.
உழைப்போரை உயர்த்திப் பிடிக்கும் அரசாக 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு நிச்சயம் இருக்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அலைகடலென திரண்ட மக்களிடையே உரையாற்றினேன்.
வரி மேல் வரி போட்டு வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
மக்கள் மனங்களை அறிந்து செயல்படக்கூடிய அரசாக 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு நிச்சயமாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே...
ரிப்பன் மாளிகை வாசலில்,
நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில் ,
எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
"நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.
தூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் , இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான். @mkstalin
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் சந்திப்புகள் மூலம் நகரங்களை இணைத்து தொழில் வளர்க்கும் #ஜோலார்பேட்டை தொகுதி, மற்றும் தோல்- காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான Hub-ஆகத் திகழும் #வாணியம்பாடி தொகுதியின் மக்கள் எழுச்சியுற வரவேற்றனர்.
பொய்களால் ஆட்சிக்கு வந்து, பொய்களால் கட்டமைக்கபட்ட திமுக ஆட்சியின் போலி பிம்பங்களை மக்கள் யாரும் நம்பவில்லை.
தரமான கல்வி, சுகாதாரமான குடிநீர், எளிமையாக அணுகவல்ல மருத்துவக் கட்டமைப்பு என தமிழ்நாட்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய ஒரே இயக்கமான @AIADMKOfficial ஆட்சி 2026ல் அமையவேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த விருப்பம்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நேற்று #ஊத்தங்கரை தொகுதியானாலும் சரி, இன்று #திருப்பத்தூர் தொகுதி ஆனாலும் சரி, நாம் சொல்லும் முன்னரே #dmkuruttugalumthiruttugalum பட்டியலிடும் அளவிற்கு அத்தனை அவலங்களையும் மக்கள் அறிந்துள்ளனர்.
#byebyestalin என்ற மக்களின் சத்தம் திரு. ஸ்டாலினை புலம்ப வைத்துவிட்டது. திமுக-விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
மக்களே- இன்னும் உரக்கச் சொல்வோம்-
#மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
2026-ல் @AIADMKOfficial ஆட்சி அமைப்போம்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?
இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். வாரிசு திரு. உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசு, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக் கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, @AIADMKOfficial சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வலியுறுத்துகிறேன்.
@AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் எனவும் செய்திகள் வருகின்றன.
பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்ற புகழோடு அஇஅதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, "ஸ்டாலின் மாடல்" அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இது தான்!
அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல "ஆக.. தனிப்பட்ட காரணம்" Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்துக் கொள்ளட்டும்!
அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில், இப்போதாவது தனது Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா இந்த பொம்மை முதல்வர்?
நான் அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்து வந்து வீர வசனம் பேசும் @mkstalin, மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன்?
படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல!
நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் திமுக ஆட்சியிடம் இருந்து #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும்
தனித்துவமான நடிப்பாலும்,
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
இப்பொன்விழா ஆண்டில் #superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள். @AIADMKOfficial
#50yrsofsuperstarrajinikanth -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தொழில் வளமும், விவசாய வளமும் நிறைந்த #பர்கூர் தொகுதியின் வளர்ச்சியை சாத்தியப்படுத்திய இயக்கம் @AIADMKOfficial.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் இந்த விடியா திமுக அரசுக்கு #byebyestalin சொல்லிவிட்டு, மீண்டும் 2026-ல் @AIADMKOfficial ஆட்சியை நிறுவத் தயாராக உள்ளனர் இத்தொகுதி மக்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கிருஷ்ணகிரி - #ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளின் மக்கள், இன்றைய கிருஷ்ணகிரி- ஓசூர் Industrial Corridor-ன் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட இயக்கம் @AIADMKOfficial தான் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.
சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி, தங்களை ஏமாற்றிய திமுக-விற்கு மீண்டும் வாக்களிக்க இத்தொகுதிகளின் மக்கள் தயாராக இல்லை.
மீண்டும் இப்பகுதிகள் ஏற்றம் பெற,
புதிய உச்சங்களைத் தொட,
2026-ல் அமையவுள்ள அஇஅதிமுக அரசு நிச்சயம் வழிவகை செய்யும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தொழிற்சாலைகளின் விருப்பத்திற்குரிய மாவட்டங்களில் ஒன்றாகவும் , மாம்பழ உற்பத்தியில் முன்னணியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், தொழில் முனைவரோடும், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை விவசாயிகளோடும் கலந்துரையாடினேன்,
விடியா திமுக ஆட்சியில் அவர்கள் படும் இன்னல்களை கேட்டறிந்தது, விரைவில் கழக ஆட்சி அமைந்தவுடன் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி அளித்தேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கீழ்குடி கிராமத்தில் உள்ள புத்தாற்றில் குளிக்க சென்றபோது, இளைஞர்கள் மணிகண்டன், ஜெயகுமார், ஹரிகரன், மணிவேலன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான உரிய உதவிகளை செய்ய முன்வருமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அதே சமயம், ஏரி, ஆறு, அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும்போது மிகவும் பாதுகாப்புடன் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு,
நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?
பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#தளி சட்டமன்றத் தொகுதி மக்களின் தேவை- வளர்ச்சி!
அதை திமுக அரசால் கொடுக்க முடியாது என்பதை கடந்த நான்காண்டு அவல ஆட்சி மூலம் மக்கள் உணர்ந்துவிட்டனர்.
இத்தொகுதியின் பிரச்சனைகளை தீர்த்து, தொழில்கள் வருவதற்கு மூல காரணமாக இருக்க போகின்ற @AIADMKOfficial ஆட்சி வந்தால் தான், வளர்ச்சி சாத்தியம் என்பதில் மக்கள் திடமாக உள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மலர்கள் பூத்துக் குலுங்கும் #வேப்பனஹள்ளி தொகுதியின் மக்கள், 2026-ல் அமையப்போவது @AIADMKOfficial ஆட்சி தான் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.
தனது ஆட்சியின் அவலத்தை மறைக்க திமுக செய்யும் தில்லுமுல்லுகளை எல்லாம் நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் என தென் தமிழக மாவட்டங்களின் மக்கள் அளித்த அன்பு மழையில் நனைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
அதன் முத்தாய்ப்பாக, #சிவகாசி தொகுதியின் பட்டாசான வரவேற்பையும், தமிழ்நாட்டின் மாபெரும் அரசியல் புரட்சியாக @AIADMKOfficial முதல் முறையாக மக்களுக்கான ஆட்சியை அமைத்த போது, நம் புரட்சித் தலைவரை சட்டமன்றத்திற்கு பெருமையோடு அனுப்பி வைத்த #அருப்புக்கோட்டை தொகுதி மக்கள், அதே பெருமையோடும், மாறா அன்போடும், இந்த இயக்கத்தின் மீதான பற்றோடும் எனக்கு அளித்த வரவேற்பையும் மகிழ்வோடு பெற்றேன்.
என்னுடைய இந்த பயணத்தின் கருத்துக்கள் மக்களிடையே சென்றுவிடக் கூடாது என்பதற்காக திமுக பின்னிய பல்வேறு மடைமாற்று சதிவலைகளை வென்று,
#byebyestalin என்ற முழக்கம் விண்ணை எட்டும் அளவிற்கு எழுச்சிப்பயணத்தை வெற்றிப்பயணமாக்கிய தென்னகத்து மக்களை வணங்கி , எழுச்சிப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்து,
இன்று மூன்றாம் கட்ட எழுச்சி பயணத்தை தமிழகத்தின் வட மேற்கு எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து துவங்குகிறேன்.
தமிழக மக்களின் ஆசியோடு, மீண்டும் @AIADMKOfficial ஆட்சி அமையும். செல்லுமிடமெல்லாம் அன்பை வாரி வழங்கிய மக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக, அஇஅதிமுக-வின் நல்லாட்சி இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பெருந்தலைவர் காமராஜரை ஈன்றெடுத்த #விருதுநகர் மண்ணின் அன்பான மக்களிடையே உரையாற்றினேன்.
மக்கள் போற்றும் மாபெரும் தலைவர்களை இழிவுபடுத்தி, வரலாறுகளைத் திரித்து பேசும் பிற்போக்கான திமுக-வின் அற்ப அரசியலை மக்கள் அடியோடு வெறுக்கிறார்கள்.
மக்கள் தலைவர்களைப் போற்றி, அவர்கள் அளித்த நல்வழிகளில் ஆட்சி நடத்தவல்ல ஒரே இயக்கம் @AIADMKOfficial தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#சாத்தூர் தொகுதியின் அன்பார்ந்த மக்களின் சிறப்பான வரவேற்பை மகிழ்வோடு பெற்றேன்.
மக்களின் தேவை தமிழ்நாட்டை சறுக்கல் பாதைக்கு தொடர்ந்து இட்டுச் செல்லும் திமுக அரசா?
அல்லது, சாதனைப் பாதையில் வழிநடத்தும் @AIADMKOfficial அரசா?
2026 தேர்தலில் மக்கள் முன் இருக்கும் இந்த கேள்விக்கு ,
அனைத்து மாவட்டங்களில் அஇஅதிமுகவிற்கு கூடுகின்ற கூட்டங்கள் மூலமாக மக்கள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அரசு முத்திரையில் வீற்றிருக்கும் கோபுரத்தின் உறைவிடமான #ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் பால்கோவா போன்று இனிமையான மக்களின் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டைப் பாழாக்கிய திமுக ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் பார்போற்றும் @AIADMKOfficial நல்லாட்சியை அமைத்திட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர் மக்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தேசிய கைத்தறி நாளான இன்று, அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.
தாலிக்கு தங்கத்துடன் பட்டுப் புடவை, தீபாவளிப் பண்டிகையின் போது அற்புதமான புடவை போன்ற வாக்குறுதிகளை நெசவாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அளித்துள்ளதை இந்நாளில் நினைவுகூர்கிறேன்.
கைத்தறி நெசவுக்கு @AIADMKOfficial என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.
இன்று, ராஜபாளையம் தொகுதியில் உள்ள நூற்பாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களையும் உரிமையாளரையும் சந்தித்தேன்.
வாஞ்சையோடு எனது கரத்தில் நூல் கயிற்றைக் கட்டிவிட்ட சகோதரிகளின் அன்பால் மகிழ்வுற்றேன்! ❤️
இத்தொழிலில் உள்ள மின் கட்டண உயர்வு, பருத்தி விளைச்சல் உள்ளிட்ட குறைகளை என்னிடம் தெரிவித்தனர்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி, தொழில் முனைவோர் அனைவருக்கும் உற்றத் துணையாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ராஜபாளையம் தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மக்கள் அலைபோல் திரண்டு நின்று வரவேற்றனர்.
"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது @AIADMKOfficial; அதை அதளப் பாதாளத்திற்குக் கொண்டு செல்வது திமுக" என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
“விளம்பர @mkstalin ஆட்சியில்
ஒரு Trillion பொய்கள்”
பொருளாதார புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான்.
பொருளாதார வளர்ச்சியோ,
அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
● நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்படாதால், உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்,
●விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லை.
●கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர்.
●நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை.
●எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.
●சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிம்பில் உள்ளனர்.
●தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது.
●சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், திமுக-வின் ரவுடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் விடியா திமுக ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். #byebyestalin @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#வாசுதேவநல்லூர் தொகுதியில் திரும்பிய திசையாவும் மக்கள் வெற்றி முழக்கத்தோடு வரவேற்றனர்.
மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கும் திமுக-வின் நவீன மன்னராட்சியை வீழ்த்தி, மக்களோடு மக்களாக இருந்து மாளிகையைப் பார்க்கும் நமது @AIADMKOfficial ஆட்சி 2026-ல் அமைவது உறுதி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#வாசுதேவநல்லூர் செல்லும் வழியில் புளியங்குடியில் புகழ்பெற்ற எலுமிச்சை சந்தைக்கு சென்று, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்துரையாடினேன்.
எலுமிச்சை விவசாயத் தொழில் சிறக்க என்னிடம் சில கோரிக்கைகளை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கடையநல்லூர் தொகுதியில் கடல் போல் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினேன்.
2026-ல் @AIADMKOfficial பெறப் போகும் மகத்தான வெற்றி மூலம், திமுக ஆட்சிக்கு மட்டுமல்ல, கட்சிக்கும் கடைசி அத்தியாயத்தை முடித்து வைக்க தீர்மானித்துவிட்டனர் மக்கள்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஆலங்குளம் தொகுதி மக்களின் எழுச்சி, 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இன்றே முடிவு செய்துவிட்டது.
குடும்பத் துதிபாடிகளின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்களுக்காக உழைக்கும் @AIADMKOfficial ஆட்சியை மலர வைக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?
திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?
திரு. @mkstalin செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே!
ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே!
மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#அம்பை மக்களின் அன்பான வரவேற்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி.
விளம்பரத்தால், விளம்பரத்திற்காகவே இருக்கும் திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் மக்களால், மக்களுக்கான @AIADMKOfficial அரசை மீண்டும் அமைப்போம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கிராமப்புற திறன் மற்றும் புத்தாக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிற @Zoho -வின் #tenkasi அலுவலகத்தைப் இன்று பார்வையிட்டேன்.
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் பெருநகரங்களைத் தாண்டி செழிக்க முடியும் என்பதை நிரூபித்ததற்காக @svembu மற்றும் அவரது அணியினர்க்கு எனது பாராட்டுகள்.
Visited the @Zoho #tenkasi office today — A shining example of rural innovation and talent empowerment.
My appreciation to @svembu and his team for proving that world-class technology can thrive beyond metros.
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
குற்றால அருவிகளைப் போல் பெருக்கெடுத்து வருகை புரிந்த அன்பிற்கினிய #தென்காசி தொகுதிவாழ் மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன்.
தமிழக மக்களிடையே #dmkuruttugalumthiruttugalum அம்பலப்பட்டு நிற்கின்றன.
எவ்வளவு விளம்பரம் செய்தாலும் இனி திமுக ஆட்சிக்கு வரவே முடியாது. இதுவே மக்கள் முடிவு!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened by the tragic loss of lives due to the flash floods in #uttarkashi.
My heartfelt condolences to the bereaved families. Praying for those missing and wishing strength to the brave rescue teams on the ground.
#uttarakhand #uttarkashidisaster
@ukcmo @pushkardhami -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று #பாளையங்கோட்டை மக்களின் ஆரவாரத்திற்கு இடையே பயணிக்கும் எழுச்சிப்பயணம், 2026-ல் நிச்சயம் புனித ஜார்ஜ் கோட்டை சேரும்!
ஆட்சி, அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் திமுக அரசை தூக்கி எறிந்து, ஆட்சியைக் கொடுக்கும் எஜமானர்களாம் மக்களுக்காகவே உழைக்கும் மக்களாட்சி @AIADMKOfficial தலைமையில் 2026-ல் நிச்சயம் அமையும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin I -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருநெல்வேலி தொகுதி மக்களின் அன்பு மழையில் (Literally) நனைந்தேன்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், @BJP4TamilNadu மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களும் என்னுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொய் வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் மாடல் அரசு, வாக்களித்த மக்களுக்கே அல்வா கொடுத்துவிட்டது.
தங்களை ஏமாற்றிய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டி, மீண்டும் 2026-ல் @AIADMKOfficial ஆட்சி அமைத்திட வேண்டும் என்பதில் மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened by the passing of Thiru @ShibuSorenJMM Avl, the towering leader of Jharkhand and a lifelong crusader for tribal rights and social justice.
His contribution to India's federal polity, especially the creation and development of #jharkhand, will always be remembered with great respect.
On behalf of @AIADMKOfficial, I extend my deepest condolences to Hon’ble Chief Minister of Jharkhand Thiru @HemantSorenJMM Avl, the bereaved family, and the people of Jharkhand.
May his soul attain eternal peace.
@JmmJharkhand -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வெற்று விளம்பரம், நிறுவனமயமான ஊழல், வாரிசு அரசியல் - இவற்றால் மட்டுமே நிரம்பிய விடியா திமுக ஆட்சியை #ராதாபுரம் தொகுதி மக்கள் துளியும் விரும்பவில்லை.
தமிழக மக்கள் விரும்பும் "அமைதி, வளம், வளர்ச்சி" சார்ந்த நல்லாட்சியை 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு நிச்சயம் வழங்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin l -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சங்க காலத் தமிழ் போற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும், கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி நடத்தியவருமான மன்னர் #வல்வில்_ஓரி அவர்களின் வரலாற்றுப் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக பெரும் படையை கட்டமைத்து, நம் தாய் மண்ணின் விடுதலைக்காக சமரசமற்ற போர்களை முன்னெடுத்து, அந்நியப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.@AIADMKOfficial
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களின் எழுச்சிமிகு வரவேற்புக்கு இடையில், @AIADMKOfficial ஆட்சியின் சாதனைகளையும், திமுக ஆட்சியின் அவலங்களையும் எடுத்துரைத்தேன்.
மக்களின் ஒரே தேவை- மீண்டும் அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருச்செந்தூர் தொகுதியில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா? என கேட்கும் அளவிற்கு மக்களின் ஆர்பரிப்பு இருந்தது.
தமிழ்நாடு விரோத திமுக-விற்கு எதிரான மக்களின் #சூரசம்ஹாரம் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பொதுச்செயலாளரும்,
திராவிட இயக்கத்தின் மூத்தத் தூண்களுள் ஒருவருமான மறைந்த
நாவலர்.இரா. நெடுஞ்செழியன் அவர்களின் மகன் திரு. மதிவாணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு சொல்லொண்ணா துயருற்றேன்.
திரு. மதிவாணன் அவர்களின் மறைவு, அவரது குடும்பத்தாருக்கு மட்டுமன்றி, @AIADMKOfficial-க்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்; மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
தமிழ் மொழிப் படங்களில் இருந்து,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் #parking படக்குழுவினருக்கும்,
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் #parking திரைப்பட இயக்குனர் திரு. @ImRamkumar_B அவர்களுக்கும்,
#parking திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறும் அன்புச் சகோதரர் திரு. M. S. பாஸ்கர் அவர்களுக்கும்,
#vaathi திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் திரு. @gvprakash அவர்களுக்கும்,
#littlewings ஆவணப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும்,
மேலும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளைச் சார்ந்த படக்குழுவினருக்கும், திரைக் கலைஞர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் தொடர் கலைப் படைப்புகள் வாயிலாக, மக்களை மென்மேலும் மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் செய்திட வாழ்த்துகிறேன்.
#nationalfilmawards -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர். வசந்திதேவி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கல்வித் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்; மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம், பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்ற கோபத்தீ நன்றாகத் தெரிந்தது.
ஒட்டப்பிடாரம் செல்லும் வழியில்
கே. வேலாயுதபுரம் அருகே பெண்கள் பலர் காலிக் குடங்களுடன் நின்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பேசியபோது, தங்கள் ஊருக்கு குடிநீர் இணைப்பு இல்லாததால், குடங்களைத் தூக்கிக்கொண்டும், தள்ளுவண்டியில் அலைந்தும் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் விவசாயத்தில் நஷ்டம், "100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம்" என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைகளை முறையிட்டனர்.
@AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல, தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தங்கள் ஊருக்கே உரித்தான கடலைமிட்டாய் போன்றே இனிமையான #கோவில்பட்டி தொகுதி மக்கள் பேரன்போடு வரவேற்றனர்.
@BJP4TamilNadu மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுடன் இணைந்து, மக்களின் வரவேற்பை மகிழ்வோடு பெற்றேன்.
மக்களின் எண்ணங்களை ஈடேற்றும் மக்களுக்கான ஆட்சியாக 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி இருக்கும் என்ற வாக்குறுதியை அளித்தேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வெற்றி முழக்கம் எங்கும் முழங்கிட #விளாத்திக்குளம் சென்றேன்.
ஏழை என்ற சொல்லே இல்லாத, "அனைவருக்கும் அனைத்தும்" கிடைக்கும் நல்லாட்சியை @AIADMKOfficial மட்டுமே தர முடியும் என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை!
மக்களின் நம்பிக்கையை நிச்சயம் அஇஅதிமுக நிறைவேற்றும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
முளைப்பாரி ஏந்தி #முதுகுளத்தூர் தொகுதி மக்கள் அளித்த முத்தான வரவேற்பை மகிழ்வோடு பெற்றேன்.
தமிழ்நாடு எனும் பசுமைமிகு வயல்வெளியில் இருந்து திமுக எனும் களையை ஜனநாயக முறைப்படி 2026-ல் அகற்றுவோம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அரசியல், ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் சிறப்புமிக்க #இராமநாதபுரம் தொகுதி மக்களின் பேரன்பில் நனைந்தேன்.
எளிய மக்களை ஏற்றம் பெறச் செய்த @AIADMKOfficial நல்லாட்சி, மீண்டும் 2026-ல் அமைவது திண்ணம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அருட்திரு முனைவர். அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் மதுரை மறைமாவட்டத்தின் 7-வது பேராயராகப் பொறுப்பேற்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்கள் இறைப்பணி சிறந்து, மக்களுக்கு இறையருள் கிடைத்திட வாழ்த்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Welcome back home Champion! 🇮🇳♟️
Heartiest congratulations to #divyadeshmukh on becoming the first Indian woman to win the FIDE Women’s Chess World Cup, held in Batumi, Georgia! 🏆🌍
At just 19, you've made history, brought immense honour to the nation, and returned home to a hero’s welcome — a moment of immense pride for India.
Your courageous victory in the final — defeating veteran Koneru Humpy in rapid tie-breaks — also earned you the Grandmaster title, making you only the fourth Indian woman to achieve this feat.
Wishing you continued success, greatness, and further milestones in the world of chess! 👏
@FIDE_chess -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மிளகாயும், பருத்தியும் விளையும் #பரமக்குடி தொகுதியில், அனைத்து தரப்பு மக்களின் குரலும் ஒன்று தான்-
"மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசு இனி தேவை இல்லை"!
2026-ல் மீண்டும் @AIADMKOfficial நல்லாட்சி அமையும்; மக்கள் மனம் குளிரும் சிறப்பான ஆட்சியாக நமது ஆட்சி இருக்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கைவினைப் பொருட்களின் களஞ்சியமான #மானாமதுரை தொகுதியில், மண் வாசமிக்க மக்களின் அன்பிற்கிடையே உரையாற்றினேன்.
அப்பா, மகன், பேரன் என்ற ஒரே குடும்பத்தின் ஆண் வாரிசுகள் மட்டுமே ஆள வேண்டும் என்ற திமுக-வின் நவீன மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் முடிவு!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அஇஅதிமுக ஆட்சியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு, உலக நாகரிகத்தின் முன்னோடியான தமிழ் நாகரிகமான #கீழடி-க்கு வந்தேன்.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு
ரூ.12.5 கோடி நிதி ஓதுக்கி, நான் அடிக்கல் நாட்டிய கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள தொன்மை நிறைந்த பொருட்களையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பார்வையிட்டேன்.
2018-ல், கீழடி நாகரிகத்தை கி.மு. 6-ஆம் நூற்றாண்டு எனக் கண்டறிந்து, தமிழர் பண்பாட்டை உலகறியச் செய்தது அஇஅதிமுக அரசு என்பதை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.
தமிழர் பெருமையைப் பறைசாற்றும் இயக்கமாக @AIADMKOfficial என்றென்றைக்கும் திகழும்!
#keezhadiThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் மரணமடைந்த திருப்புவனம் அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்று, அவரது தாயார் மற்றும் தம்பிக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
நகை திருட்டுக்கான குற்றச்சாட்டை முறையாக பதிவு செய்து , இந்த திமுக அரசின் காவல்துறை விசாரித்து இருந்தால், அஜித்குமாரின் விலைமதிப்பில்லாத உயிர் போயிருக்காது. எனவே, அஜித்குமாரின் கொலைக்கு முழு பொறுப்பை ஸ்டாலின் மாடல் அரசு ஏற்க வேண்டும்!
அஇஅதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளரே களத்தில் நின்று போராடியும், கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் கழகம் அளித்த தொடர் அழுத்தத்தாலும், நீதிமன்றத்தின் கடுமையான
கண்டிப்புக்கும் இணங்கவே ,
வேண்டா வெறுப்பாக இந்த வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார் பொம்மை முதல்வர் @mkstalin .
அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார்க்கு
தக்க இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் ; அஇஅதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தேன்.
அஜித்குமார் குடும்பத்தாருக்கு @AIADMKOfficial என்றும் துணை நிற்கும்.
#justiceforajithkumarThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தீரமிகு மருது சகோதரர்கள் ஆட்சிபுரிந்த சிவகங்கைச் சீமையின் அன்பிற்கினிய மக்களின் வாஞ்சைமிகு வரவேற்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி.
#சிவகங்கை சட்டமன்றத் தொகுதி, எப்போதும் @AIADMKOfficial-ன் கோட்டை என்பதை 2021 நிரூபித்தது போன்றே, 2026-ம் நிரூபிக்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஸ்டாலின் தலைமையிலான Failure மாடல் ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது , ஜாதி மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கவின் என்ற மென்பொறியாளர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், ஸ்டாலின் மாடல் காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் அறிந்து, Failure Model அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்திடவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடியா @mkstalin Failure மாடல் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன்.
Commission- Collection- Corruption
மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து,
Commitment- Competence- Credibility
உள்ள @AIADMKOfficial-ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#epsfor2026 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கலாச்சாரத்திலும் , வர்த்தகத்திலும் தனக்கென தனி பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்ட,
#காரைக்குடி தொகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம்!
மக்களை வஞ்சிக்கும் திமுக ஆட்சி, 2026 தேர்தலோடு காணாமல் போய்விடும் என்பதே மக்களின் திடமான முழக்கம்!
#byebyestalin
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும்,
சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால் ,
சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு இருந்தாகவும் , அங்கிருந்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அவல நிலைக்கு சென்றுள்ளது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். சிறார்கள் வரை தற்போது போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு,
குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியது.
சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இறைத் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை, "சீறாப்புரணம்" எனும் காலத்தால் மங்காப் புகழுடைய உரைநடைக் காப்பியமாகத் தந்திட்ட அமுதக் கவியரசர் "#உமறுப்புலவர்" அவர்களின் நினைவு நாளான இன்று, அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலகம் போற்றும் மாமனிதராக உயர்ந்து, தன் அக்னிச் சிறகுகளால் பல உயரங்கள் தொட்டு இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் புகழைத் தேடித்தந்த முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
#rememberingkalam -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18 அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜாராமன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜாராமன் அவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை.
ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.
காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து போதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்!
எஸ்.ஐ. ராஜாராமன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஒரு சாதாரண கிளைச் செயலாளராக கழகப் பணியைத் தொடங்கி, உழைப்பால் உயர்ந்த என்னைப் பார்த்து, நான் எப்படி வந்தேன்? என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே,
நேற்று #விராலிமலை தொகுதிவாழ் மக்களின் பேரன்பின் வெள்ளத்திற்கு இடையே மிதந்து வந்தேன்.
நாளைய சரித்திரம் சொல்லப் போகும் @AIADMKOfficial-ன் வெற்றியை நேற்றே சொல்லிவிட்டனர் விராலிமலை மக்கள்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#dmkuruttugalumthiruttugalum
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#திருமயம் தொகுதியில் எங்கு திரும்பினும் மாற்றம் விரும்பும் மக்கள் மயம்!
செல்வாக்கு இழந்த, திவாலான திமுக-வை வீழ்த்தி, மீண்டும் @AIADMKOfficial-ன் மக்களுக்கான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒரே AGENDA!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#புதுக்கோட்டை தொகுதியில் இன்று நடந்தது பிரச்சாரமா? அல்லது, 2026 தேர்தல் வெற்றி விழாக் கூட்டமா? என்று வியக்கும் அளவிற்கு #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் என்ற வெற்றி முழக்கத்தை விண்ணதிர எழுப்பினர் இத்தொகுதி மக்கள்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
🔴LIVE || உருட்டுகளும் திருட்டுகளும் துரோகம் மாடல் உருட்டுகள் | Dravidamodel | MKstalinfails x.com/i/broadcasts/1MnxnwMQgAMKO
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா டாக்டர். ச. இராமதாசு அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மக்களின் ஆரவாரமிக்க வரவேற்புக்கு இடையே #ஆலங்குடி வந்தடைந்தேன்.
தமிழ்நாட்டைக் காக்கும் ஆல விருட்சமாக இருக்கும் இயக்கம் @AIADMKOfficial, தீயசக்தி திமுக-வின் ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் மக்களாட்சியை நிறுவும் என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#கந்தர்வக்கோட்டை, அஇஅதிமுக-வின் எஃகுக்கோட்டை என்பதை பறைசாற்றும் வகையில் எழுச்சியுற வரவேற்றனர் தொகுதி மக்கள்!
ஸ்டாலின் அரசின் பொய்களால் கந்தர்வக்கோட்டை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆடிப்போய் தான் இருக்கிறது.
பொய்களால் ஆட்சிக்கு வந்து,
பொய்களை மட்டுமே வைத்து ஆட்சி நடத்தும் திமுக-விற்கு,
2026 தேர்தலில் உரிய தண்டனையை வழங்க மக்கள் தயாராக உள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin @AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர். நம்பெருமாள் சாமி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.
ஏழை எளிய மக்களுக்கு கண் மருத்துவ சிகிச்சையை சாத்தியப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்த டாக்டர். நம்பெருமாள் சாமி, இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்மஸ்ரீ" உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவருடைய ஒப்பற்ற சேவைக்காக அஇஅதிமுக அரசு, "சிறந்த மருத்துவர்" விருது அளித்தும் நினைவுகூரத்தக்கதாகும்.
அடித்தட்டு மக்களுக்குக் கண் பார்வை அளித்து பெரும் சேவையாற்றிய
டாக்டர். நம்பெருமாள் சாமி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், மருத்துவத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அஇஅதிமுக-வின் 2026 தேர்தல் வெற்றிப் பேரணியை நேற்று நிகழ்த்தி காட்டியது #பேராவூரணி!
குடும்ப ஆட்சியை வீழ்த்தி,
குடியாட்சி மீண்டும் அமைய வேண்டும்
என்பதே மக்களின் ஒருமித்த எண்ணம்!
அதை @AIADMKOfficial நிறைவேற்றும் திண்ணம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#epsfor2026This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திராவிட இயக்கத் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரி, புரட்சித் தலைவரின் பல்வேறு கருத்தாழமிக்க பாடல் வரிகளை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளின் பெருமைகளை ஏந்தி நிற்கும் #பட்டுக்கோட்டை தொகுதியில்,
'திராவிடம் எனும் உயரிய கொள்கைக்கே இழுக்கான இந்த விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' என்ற மக்களின் சத்தம் வானத்து இடியை மிஞ்சுகிறது.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்பதில் #ஒரத்தநாடு தொகுதி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் தான் இருக்கிறது.
அதற்கு நாள்தோறும், நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் மக்கள் வெள்ளமே சாட்சி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
காவிரியும், அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என ஐந்தாறுகளும் பஞ்சரத்தின கீர்த்தனை போலவே பாய்ந்தோடும் #திருவையாறு நேற்று சென்றிருந்தேன்.
காவிரியின் நீர்நிலைகளைத் தூர்வாரி, "நடந்தாய் வாழி காவிரி" எனப் போற்றியது @AIADMKOfficial அரசு என்பதை இத்தொகுதி மக்கள் நினைவிற் கொண்டுள்ளனர்.
வயல்வெளியில் கான்க்ரீட் ரோடு போட்டு போட்டோஷூட் நடத்திய போலி விவசாயி நடத்தும் வேளாண் விரோத ஆட்சிக்கு 2026-ல் முடிவுகட்டுவோம் என மக்கள் உறுதியோடு உள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சோழ நாட்டின் பெருமைகளை ஏந்தி நிற்கும் வளமிகு தஞ்சை மாநகரை வந்தடைந்தேன்.
அஇஅதிமுக கூட்டணி குறித்து திமுக-வும், அதன் கூட்டணி கட்சிகளும் மாறி மாறி விமர்சனங்களை வைக்கின்றன.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? திமுக சொல்வதற்கெல்லாம் "தலையாட்டி பொம்மை"களாக இருப்பது அங்குள்ள கூட்டணி கட்சிகள் தான்.
நெற்களஞ்சியமான #தஞ்சாவூர் திமுக ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டுள்ளது. 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில், மீண்டும் தஞ்சை செழிக்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பாசமிகு #பாபநாசம் தொகுதி மக்கள் பேரெழுச்சியுடன் வரவேற்றனர்.
அஇஅதிமுக-வின் அசைக்கமுடியாத மக்கள் செல்வாக்கு- இதோ உங்களுக்காக!
இது வெறும் ஆரம்பம் தான் @mkstalin அவர்களே ,
2026 சட்டமன்ற தேர்தல் ,திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு எதிராக மக்கள் கொடுக்கின்ற சம்மட்டி அடியாக இருக்கும்!
இந்த தொகுதிக்குதானே வரச்சொன்னீங்க @KN_NEHRU அவர்களே?
வந்தாச்சு,அடுத்து ?
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#tnpscgroup4 மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!
அப்படி நடத்தாமல், இப்போது நடத்தப்பட்ட குளறுபடியான தேர்வையே வைத்துக்கொண்டு தேர்ச்சி அறிவித்தால், @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும் அது ரத்து செய்யப்படும்!
#cancel_tnpscgroup4This media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.
பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி.
பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?
ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#tnpscaspirants குரலாக @AIADMKOfficial என்றும் ஒலிக்கும்!
#cancel_tnpscgroup4 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
“Contradictions in the DMK alliance are becoming more pronounced with each passing day. What we see today is a government more focused on consolidating power than alleviating the pain of the people.
The people of Tamil Nadu clearly see through this — they are experiencing the effects of arrogance, not governance. A Chief Minister must be a symbol of humility, compassion, and action — not one who projects himself as the best without fulfilling the basic promises made to the public.
Under the @AIADMKOfficial , Tamil Nadu was a model of good governance. We delivered on the ground. We understood the struggles of farmers, fishermen, and the poor. We protected Cauvery water rights, rolled out Amma canteens, and prioritised the welfare of every section — from women to students to entrepreneurs.
Let us rise above vendetta politics. Let us return to a politics of service, integrity, and results. Our time will come — not through media management or orchestrated campaigns — but through the will of the people.”
@the_hindu @jaisank70905230
@nambath -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பிற்கினிய #கும்பகோணம்
தொகுதி மக்கள்,
காலை எழுந்ததும் அருந்தும் #filtercoffee தரும் உற்சாகத்தை போன்ற பேரெழுச்சியுடன் இரவு 9:30 மணிக்கும் வரவேற்றனர்
தமிழக மக்களின் இந்த எழுச்சியே,
2026-ல் அஇஅதிமுக ஆட்சி அமையப் போவதற்கான சாட்சி! @AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விவசாயமும், நெசவும் தழைக்கும் திருவிடைமருதூர் வரும் வழியில், பட்டுக்குப் புகழ்பெற்ற திருபுவனத்தில், நெசவுத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து கைத்தறி நெசவாளரிடம் கேட்டறிந்தேன்.
அரசியல் திருப்பம் தர திருவிடைமருதூர் தொகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஸ்டாலினும், அவரின் அமைச்சர்களும் நான்காண்டுகளாக கட்டமைத்த போலி பிம்பங்கள் எதையுமே இந்த மக்கள் நம்பவில்லை.
SIMPLY WASTE-ஆன ஸ்டாலின் மாடல் அரசை தூக்கி எறியத் தயாராகிவிட்டனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened by the demise of veteran Communist leader and
Former Kerala Chief Minister Thiru V. S. #achuthanandan Avl.
His lifelong commitment to public service and people’s welfare earned him immense respect across the political spectrum.
My heartfelt condolences to his family and followers. Prayers to the Almighty for his soul to rest in peace.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வாரிசு அரசியல், மன்னராட்சி ஒழிய வேண்டும் என்பதில் மன்னார்குடி மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
2026 தேர்தலில் ஊழல் திமுக ஆட்சி வீழும்!
உங்கள் @AIADMKOfficial ஆட்சி நிச்சயம் அமையும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நடிப்பின் இலக்கணம், தான் ஏற்றக் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த திரை ஆளுமை, மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்றத் தோழர், செவாலியே நடிகர் திலகம்
திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளான இன்று,
நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்த் திரையுலகில் அவர் நிகழ்த்திய காலத்தால் அழியா சாதனைகளை நினைவுகூர்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நெல்மணிகள் கொஞ்சும் திருத்துறைப்பூண்டி வந்தடைந்தேன்.
நெல்லுக்கு ஆதார விலை சொன்னபடி வழங்காத ஸ்டாலின் அரசு மீது விவசாயிகள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.
உழுதுண்டு வாழ்வோரைத் தொழுதுண்டுக் காக்கும் அரசாக 2026-ல் அமையாவுள்ள @AIADMKOfficial அரசு நிச்சயம் இருக்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வெள்ளையனை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் கண்ட வேதாரண்யத்தில்,
திமுக கொள்ளையர்களை எதிர்த்து தங்கள் "வாக்கு" மூலம் மீண்டும் ஒரு சத்தியாகிரகம் நடத்த தயாராகிவிட்டனர் மக்கள்.
வீழட்டும் திமுக ஊழலாட்சி!
வெல்லட்டும் @AIADMKOfficial மக்களாட்சி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாகப்பட்டினம் தொகுதி மக்கள் திமுக நடத்தும் மன்னராட்சியை அடியோடு வெறுக்கின்றனர்.
மீண்டும் @AIADMKOfficial-ன் மக்களாட்சி அமைய வேண்டும் என்று நாகையில் எழும்பும் அலை, தமிழகம் முழுவதும் வீசுகிறது.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் பொய்களை இனியும் நம்பப் போவது இல்லை என்று திடமாக தெரிவிக்கின்றனர் கீழ்வேளூர் தொகுதி மக்கள்!
தேர்தல் எப்போது வந்தாலும் வெற்றி அஇஅதிமுக-விற்கு தான் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalinThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வணக்கம் @mkstalin அவர்களே, திருவாரூரில் இருந்து!
"நானும் டெல்டாக்காரன் தான்" என பஞ்ச் டயலாக் பேசியதைத் தவிர டெல்டாவுக்கு நீங்கள் செய்தது என்ன? என்று உங்கள் ஊர் மக்கள் கேட்கிறார்கள்.
அவர்களோடு இணைந்து நானும் கேட்கிறேன்- மக்கள் பிரச்சனைகள் குறித்து என்னுடன் நேரடி விவாதம் நடத்த நீங்கள் தயாரா? @AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விவசாயம் தழைக்கும் நன்னிலத்தின் மக்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தந்த @AIADMKOfficial அரசுக்கு இன்றும் நன்றி தெரிவிக்கின்றனர்.
விவசாயத்திற்கு எதிரான அரசு இன்றைய ஸ்டாலின் மாடல் அரசு என்பதை மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் நேச கரம் நீட்டுகின்ற ஒரே ஆட்சி அஇஅதிமுக ஆட்சி மட்டுமே!!
காலம் மாறும். @AIADMKOfficial ஆட்சியில், விவசாயம் போற்றும் பசுமையான தமிழகம் மீண்டும் உருவாகும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்ற பழமொழிக்கு உரித்தான மயிலாடுதுறை வந்தடைந்தேன்.
இந்த மண்ணில் நின்று தான், "எடப்பாடி பழனிசாமி எதுவுமே செய்யவில்லை" என நேற்று சொன்னார் @mkstalin.
மயிலாடுதுறை என்று பெயர் சூட்டிய புரட்சித் தலைவர் வழியில், இம்மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று இந்த மாவட்டத்தையே அளித்தவன் நான் தான்.
ஆனால், "ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை" என்ற மாயவரம் மக்களின் ரௌத்திர முழக்கம் விண்ணைப் பிளந்தது! #byebyestalin
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நீதிக்காக சிலம்பேந்திய கண்ணகியை ஈன்றெடுத்த பூம்புகார் மண்ணில், நான்கு பக்கமும் அலைகடலென திரண்டு இருந்த இத்தொகுதி மக்களுடன் இணைந்து,
திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கான நீதியைக் கேட்டேன்!
மக்கள் விரோத திமுக ஆட்சி மீது பூம்புகாரில் பற்றியிருக்கும் தீ பரவட்டும்! விடியா ஆட்சியை சுட்டெரிக்கட்டும்!
#byebyestalin
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஊடகங்களில் வெளியாகி உள்ள சிறுமி கடத்தப்படும் காட்சி காண்போரை நடுங்கச் செய்கிறது; நெஞ்சைப் பதைக்கிறது.
இந்த கொடூரக் காட்சி @mkstalin மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா?
தன்னுடைய ஆட்சியில், ஒரு பத்து வயது சிறுமியால் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லையே என்ற வேதனையாவது இந்த பொம்மை முதல்வருக்கு இருக்கிறதா?
இதற்கு மேலும், "சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர் வீண் அரசியல் செய்கிறார்" என்று சொல்வார் என்றால், திரு. ஸ்டாலின் வானத்தைப் பார்த்து உமிழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றே பொருள்!
10 வயது சிறுமியால் நடமாட முடியாத ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலின்,
யாருடனும் இருந்து என்ன பயன்?
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைவதை உறுதி செய்யவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
ஆட்சி புரிவதற்கான அருகதை துளியும் இல்லாத ஒரு கட்சியிடம், பொம்மை முதல்வரிடம் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்டெடுப்பதே, தமிழகப் பெண்களைக் காக்க ஒரே வழி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கொள்ளிடம் ஆற்றைக் கடந்து, புத்தூர் வழியாக , சீர்காழி செல்லும் வரை, வழிநெடுக பொன்னி நதிக்கரை மக்களின் வாஞ்சைமிகு அன்பு வெள்ளத்தில் நனைந்தேன்.
வெறும் விளம்பரங்களால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பங்களுக்கு அப்பால் இருக்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் உண்மையான அவல முகத்தை சீர்காழி தொகுதி மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
2026-ல் அவலம் யாவும் நீங்கும்! அஇஅதிமுக ஆட்சி மலரும்!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?
பெருந்தலைவர் காமராஜர் பற்றி
திரு. ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?
அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?
காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?
இவரே வெடிகுண்டு வைப்பாராம்..
இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க @mkstalin அவர்களே!
அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று!
ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது!
வாழ்க கர்மவீரரின் புகழ்!
#காமராஜர் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
காட்டுமன்னார்கோயில் களம் சொல்லும் செய்தி என்ன தெரியுமா?
தமிழ்நாட்டைப் பிடித்த திமுக எனும் இருளாட்சி முடிவுக்கு வரப் போகிறது; @AIADMKOfficial -ன்
ஆட்சி புதுவெளிச்சம் பாய்ச்சப் போகிறது!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பெருந்திரளாக கூடியிருந்த பாசமிகு புவனகிரி மக்களை சந்தித்தேன் ,
இந்த விடியா ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள கடும் கோபத்தையும்,
மீண்டும் @AIADMKOfficial ஆட்சி அமைய வேண்டும் என்ற திடமான முடிவையும் தெளிவாக உணர முடிந்தது.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#byebyestalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ,
திரண்டு நின்ற தில்லை மக்களின் அன்பில் திளைத்தேன்.
சிதம்பர ரகசியமாகவே ஸ்டாலினின் திமுக வைத்திருக்கும் "நீட் தேர்வு ரத்து" ரகசியம் எப்போது தான் வெளிவரும்?
என்பது இன்றும் அனைவரின்
கேள்வியாக இருக்கிறது.
பொய்யிலே பிறந்த ஆட்சிக்கு ,
2026-ல் தமிழக மக்கள் கண்டிப்பாக சொல்வார்கள்…
#byebyestalin
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திரு. ஸ்டாலின் அவர்களே... நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
"உங்களுடன் ஸ்டாலின்" ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் ,
ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன்,
அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?
"சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி @AIADMKOfficial ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே... உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க?
ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்?
இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?
பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?
-2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே?
-அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி.
-2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி.
-புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது திமுக.
-2013ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி.
-2014 நாடாளுமன்றத் தேர்தல். ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் திமுக.
-2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே திமுக வரவில்லை.
-ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி.
-2016 சட்டமன்ற தேர்தல். தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு "எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை" ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல. @AIADMKOfficial ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. நீங்கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்தது தான் மிச்சம்!
-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்ததே... அதில் கூட மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட படுதோல்வி கட்சி தானே உங்கள் திமுக?
இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி @mkstalin பேசலாமா?
இதில் சினிமா வசனம் வேறு... "அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட" என்று கூறுகிறார்...
திரு. ஸ்டாலின் அவர்களே... "நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட" என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க!
இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே... "யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர் ன்னு நம்ப வெச்சுட்டாங்க" என்று....
அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், "இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்" என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல...
Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன்,
"திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!"
அன்பார்ந்த தமிழக மக்களே- நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், திரு. ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் #byebyestalin அவரை கதற விடுகிறது.
இன்னும் கதற விடுவோமா?
234 தொகுதிகளிலும் சொல்வோமா?
BYE BYE STALIN ! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சோழபுரம் கொண்ட
ஜெயங்கொண்டம் வந்தடைந்தேன்.
2026-சட்டமன்ற தேர்தலில் @AIADMKOfficial திமுக விடியா அரசை வீழ்த்தி ஜெயம் கொள்ளும் என்பதை பெருங்கூட்டமாய் கூடி எழுச்சியுடன் தெரிவிக்கின்றனர் இத்தொகுதி பெருமக்கள்!
#byebyestalin
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest Congratulations and a proud welcome to Group Captain Shubhanshu Shukla on his triumphant return to Earth after completing a historic mission aboard the International Space Station.
Your extraordinary journey has not only marked a milestone in Indian space exploration but has also ignited the aspirations of an entire generation. You have etched your name alongside the stars and made our nation beam with pride.
India salutes your courage, discipline, and unwavering commitment to science and service.
Welcome back, Hero!
#shubhanshushukla
@SpaceX @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?❤️
நடந்தபடியே அரியலூர் மக்களின்
அன்பில் நனைந்தேன்.
"ஸ்டாலின் மாடல் திமுகவின் அவல ஆட்சியை அகற்றுவோம்" என்பதில் அரியலூர் தொகுதி மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
#byebyestalin
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
குன்னம் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டம் ஒரே குரலில் சொல்கிறார்கள்,
#byebyestalin
2026-இல் அமையப்போவது ,
மன்னராட்சி அல்ல, மக்களின் ஆட்சி!
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் ஆட்சி ! @AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கல்லாமை எனும் இருள் அகற்றிட
கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர்!!
சத்துணவு தந்து மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர்!!
நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும் , அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
"காலை 11 மணிக்கி ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்" என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர்.இந்த மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால், கொள்ளையர்களின் பதில் மிரட்டல், கொலை!
இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல; அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது .
இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பழம்பெரும் திரைப்பட நடிகை,
"அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திருமதி. சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் திருமதி. சரோஜா தேவி அவர்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் திருமதி. சரோஜா தேவி அவர்கள் இணைந்து நடித்த திரைப் படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி. சரோஜா தேவி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன.
திரு. ஸ்டாலின் அவர்களே- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் உங்கள் அரசால், உங்கள் காவல்துறையால் தனது கனவனை இழந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறார். மீனாவுக்கு உங்களிடம் இருந்து பதில் வருமா பொம்மை முதல்வரே?
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கும் நீங்கள் அவசர கதியில் கொடுத்த வேலை மற்றும் நிலம், தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர்.
லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும் மனமில்லை!
இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?
லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரெயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.
உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை (@GMSRailway) வலியுறுத்துகிறேன்.
இது சாதாரண தீ விபத்து அல்ல;
டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை "திருமலா" பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த Chair-ம் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்?
இந்த வழக்கின் அடிப்படையான கேள்வி- காவல்துறை வழக்கு பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது? அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது.
இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
காவல்துறை விசாரணைகள் சந்தேகத்திற்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார் திரு. @mkstalin?
நிதி மேலாண்மை பற்றி நான் கேட்ட ஒரு கேள்வியை, கண், காது, மூக்கு வைத்து திசைதிருப்பி சித்தரிப்பதில் இருந்த முனைப்பு, ஸ்டாலினுக்கோ, அவரின் திமுக அரசுக்கோ, ஒரு முறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இருந்ததா?
காவல்துறை நிர்வாகம் செய்யத் தெரியாத பொம்மை முதல்வர், தன் தொகுதி உள்ளடக்கிய காவல் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்திற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்?
நவீன் மர்ம மரணம் குறித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குறிப்பாக காவல்துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தாய் மண்ணின் உரிமைக்காக பிரிட்டிஷ் சர்வாதிகாரத்திற்கு எதிராக முதல் குரல் கொடுத்து, வெள்ளையர்களை வீறு கொண்டு எதிர்த்து,தாய்நாட்டின் மானத்திற்காக மரணத்தை முத்தமிடத் தயார் என முழங்கி தாய்மண்ணிற்காக இன்னுயிர் நீத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் #அழகுமுத்துக்கோன் அவர்களின் ஜெயந்தி விழாவில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்தியில் இன்னொரு முக்கியமான விவகாரத்தை சுட்டிக்காட்டி உள்ளது. அதாவது இந்த விபத்து நடந்த இடத்தில் அண்டர் பாஸ் எனப்படும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து அதற்கான முழு நிதியையும் தானே தருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டது.
ஆனால், கடலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஒரு வருடமாக இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர்
எம். செந்தமிழ்செல்வன் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதன்படி பார்த்தால் இந்த கொடூரத்திற்கு முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்றாகிறது.
உங்களுடன் ஸ்டாலின், எங்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இந்த சுரங்கப்பாதைக்கு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளிக்காதது தெரியாதா?
இந்த ஒரு வருடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு எத்தனை முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வந்திருக்கிறார்?
கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
கடலூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்திருந்தால், அந்த இடத்தில் சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்கும்.
பச்சிளம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
மாவட்டம் நிர்வாகத்தை முடுக்கி விட வேண்டிய, இந்த கொடூரம் நடந்த பகுதியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார்?
எல்லா வகையிலும் கடமை தவறி விட்டது இந்த அரசு .
இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை முதலமைச்சர் @mkstalin , மக்களிடம் காரணத்தோடு விளக்க வேண்டும்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், ஸ்டாலின் மாடல் திமுக அரசால் அரஜாகப் போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
2021 தேர்தலின் போது, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள், "ஆட்சி அமைந்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக நிறைவேற்றும்... ஆக" என்று படித்த துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா @mkstalin அவர்களே?
சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் அளவிற்கு பகுதி நேர ஆசிரியர்களை இந்த திமுக அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடானது.
அதே போல, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு அவர்கள் கத்தியால் குத்தப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஸ்டாலின் மாடல் அல்லவா? வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம்.
அரசு மருத்துவமனையில், அதுவும் மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை; இதற்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கத் திராணியற்ற பொம்மை முதல்வரே பொறுப்பு!
வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, அவர்களை தெருவில் போராட நிறுத்தியதோடு அல்லாமல், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் Failure மாடல் சாதனை!
கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் - 3ல் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 11.7.2025 - வெள்ளிக்கிழமை
மாலை 4 மணியளவில்
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் என்ற தீர்க்கமான இலட்சியத்துடன் நான் மேற்கொண்டுள்ள எழுச்சிப்பயணத்தின் முதல் நாளான இன்று, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் பேரன்பில் திளைத்தேன்.
கடல் போல் காட்சியளித்த மக்கள் வெள்ளத்தின் இன்றைய எழுச்சிக்குரல், 2026-ல் @AIADMKOfficial பெறப்போகும் மகத்தான வெற்றிக்கான அடித்தளம்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
#live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu அவர்களின்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
இன்று : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் & கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள்
#roadshow
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் x.com/i/broadcasts/1OwGWXVrzzwJQ -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த சமூகநீதி காவலர்,
கல்வியே ஒடுக்கப்பட்டோரை முன்னேற்ற உதவும் பேராயுதம் என்ற நம்பிக்கையை விதைத்தவர், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்...
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
🇮🇳 What a victory!
Heartiest Congratulations to #teamindia on a historic Test win at Edgbaston, defeating England by a massive 336 runs!
Special applause to Captain @ShubmanGill for leading from the front with twin centuries and to Akash Deep for his sensational 10-wicket haul.
This is not just a win — it’s a statement of India’s dominance, grit, and class in red-ball cricket.
Onward to Lord’s with pride and confidence! @BCCI -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,
ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, நேற்று மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
@mkstalin ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது.
13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய பொம்மை முதல்வருக்கு உறுத்தவில்லையா?
மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே Flawed அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
"இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்?" என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, "இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்?" என்பதில் மாற்ற வேண்டும் என பொம்மை முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (3.7.25) என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் சட்டக் கல்லூரியில் போதிய விடுதி வசதியின்மை, மோசமான கழிவறை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதியின்மை குறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று @mkstalin அரசு உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போரட்டத்தை நிறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக இந்தாண்டு சட்டத்துறை மானிய கோரிக்கையின்போது சுமார் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் பல்கலைக்கழக வளாகத்திலேயே கட்டப்படும் என்று அறிவித்த நிலையில், இதுவரை எந்த முன்னெடுப்பு செய்யப்படவில்லை என்றும் என்னிடம் முறையிட்டனர்.
தற்போது அரசின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் மாணவர்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் தனியார் விடுதிகளில் தங்குவதாகவும், அவர்களால் அதிக வாடகை கொடுத்து தங்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
குறிப்பாக எனது தலைமையிலான அம்மாவின் அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித உள் இட ஒதுக்கீடு வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்த அரசு மற்ற தொழிற்கல்விகளுக்கும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தியது. மாணவர் விடுதியில் இடமிருந்தும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால் மிகுந்த சிரமத்தத்துடன், அதிக கட்டணம் கொடுத்து தனியார் விடுதிகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் பல அறைகள் காலியாக இருந்தும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கிடப்பதால் மாணவர்கள் அங்கு முழுமையாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த அரசு சட்டப்பேரவையில் அறிவித்தவாறு புதிய விடுதியை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தை சீரமைத்து அங்கு அனைத்து மாணவர்கள் இலவசமாக தங்கவும், அவர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்தித்தரவும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய @AIADMKITWINGOFL செயலாளர், அன்புச் சகோதரர்
திரு. M. செல்வானந்தம் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழகத்தினருக்கும் @aiadmkofficial சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
பணம் கொடுக்கல் வாங்கலில் மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் , மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர், தாராபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட விடியா திமுக-வினர் கொடுத்த சித்திரவதை தான் சகோதரர் செல்வானந்தம் தன் உயிரை மாய்த்துக்கொள்ள காரணம் என தகவல்கள் வருகின்றன.
ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என எண்ணும் திமுக-வினருக்கு கடும் கண்டனம்.@arivalayam
செல்வானந்தம் மரணத்திற்கு காரணமான திமுக-வினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் Failure மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?
பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் @mkstalin அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதை செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர்,
மண் திருடர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
"காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார். 11:05 க்கு மணலை அள்ளுங்கள்" என்று ஒரு தியாகி 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தார் அல்லவா? திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்!
இந்த அவலத்தை செய்தி சேகரிக்க சென்றவரை அடிக்கும் தைரியம் மண் திருடர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதை, விடியா திமுக ஆட்சியாளர்கள் கொடுத்த தைரியம் என்று தானே சொல்ல வேண்டும்?
தன் பணியை செய்த செய்தியாளரை தாக்கிய மண் கொள்ளையர்களுக்கும், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், செய்தியாளரைத் தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
2026-ல் தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டும் திமுக-விடம் இருந்து #தமிழகத்தை_மீட்போம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மனித மிருகங்களால் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமாரின் தாயாரிடமும், தம்பியிடமும் தொலைபேசி வாயிலாகப் பேசினேன்; என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர நிச்சயம் @AIADMKOfficial துணை நிற்கும்!
#justiceforajithkumarThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பரமக்குடி–இராமநாதபுரம் இடையிலான #nh87 நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
₹1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@PMOIndia
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Devastated to hear about the horrific blast at Sigachi Industries in Hyderabad yesterday, claiming over 42 precious lives and leaving many injured.
My deepest condolences to the families of the deceased. May their souls rest in peace. My prayers for the swift recovery of the injured.
@TelanganaCMO @revanth_anumula -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
முதல்வர் @mkstalin-ன் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்!
கொலை செய்தது உங்கள் அரசு.
"SORRY" என்பது தான் உங்கள் பதிலா?
அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது.
அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?
முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?
"என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?
வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?
அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.
உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?
"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!
இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!
#justiceforajithkumar
#nationwithajith
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எத்தனை விபத்துகள்?
எத்தனை உயிர்கள்?
இன்னும் எத்தனை முறை தான் நான் சுட்டிக்காட்ட வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?
பளபளக்கும் போட்டோஷூட் வீட்டுக்கு சென்றவர், ஒருமுறை உண்மையான பட்டாசு ஆலைக்கு சென்று ஆய்வு செய்திருந்து பாதுகாப்பு குறித்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தால், இவ்விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?
பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளை கண்டுகொள்ளாத ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சின்னக்காமன்பாட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மனிதநேயத்தின் முகமாக சுகாதாரச் சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்!
கொரோனா பெருந்தோற்றுக் காலத்தில், இரவு பகலென தெரியாமல், பணி வீரர்களாக மக்கள் நலனுக்காக உழைத்த உங்களின் சேவை என்றும் மறக்கமுடியாதது.
மருத்துவர்களின் அரும்பணி என்றும் தொடர வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial
#doctorsday2025 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!
ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (@India_NHRC) முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.
"Deja Vu" எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது @mkstalin எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.
நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #justiceforajithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.
நாடு முழுக்க #justiceforajithkumar #nationwithajith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் @mkstalin எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?
"ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!
பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.
போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.
இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்!
வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Industrial development is not a vanity project. It is an unending commitment to economic equity youth employment, and regional prosperity.
Read my article in #timesofindia: timesofindia.indiatimes.com/city/chennai/govts-failure-to…
The DMK govt's failure to move beyond MoUs has left our Industrial engine sputtering. Our entrepreneurs wait. Our youth migrate. Our Investors look elsewhere.
The AIADMK is committed to changing this. We believe Tamil Nadu can- and must- lead India's next phase of industrial growth. It is time to move from paper corridors to real factories, from rhetoric to results.
@TOIChennai -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? @mkstalin
விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.
தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
I extend my heartfelt congratulations to Shri Subhanshu Shukla, the first Indian to travel to the International Space Station aboard the Dragon spacecraft.
His remarkable achievement marks a proud milestone for our nation and stands as a testament to India’s growing presence in the field of space exploration.
On behalf of the All India Anna Dravida Munnetra Kazhagam,I commend Shri Subhanshu Shukla for his courageous mission and his contribution to bringing global recognition to our country.
@AIADMKOfficial @isro @Axiom_Space -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார்,
அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், "அண்ணா பெயரை @AIADMKOfficial அடமானம் வைத்துவிட்டது" என்கிறார்.
அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?
"அண்ணா- இதய மன்னா" என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் @AIADMKOfficial.
ஒருநாள், ஒரு நொடி கூட,
எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் @mkstalin எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!
இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா?
யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?
கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்!
தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!
திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்!
இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் @AIADMKOfficial நிர்வாகி
திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன.
இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@mkstalin @CMOTamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும், ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு திரு. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் பொம்மை முதலமைச்சரே...
கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில் ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?
உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?
தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது 'சாத்தான் வேதம் ஒதுவது போல்' உள்ளது. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த விடியா திமுக @mkstalin மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை (Multi Speciality Hospital) என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை (25.6.2025) பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திறக்கப்பட உள்ள வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதர துறைகள் திறக்கப்படுமா என்பது வேலூர் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 பேர் மட்டுமே பணியாற்றும் நிலையில், இவர்கள் எப்படி இரண்டு இடங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்பது தெரியவில்லை.
'யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை' என்ற ஒரே குறிக்கோளோடு இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதால்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழக மருத்துவத் துறை இன்றைக்கு பின்தங்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் திரு. சுப்பிரமணியன், வாய்ப் பந்தல் போட்டு இந்த உண்மையை மறைத்துவிடலாம் என்று கருதுவது வேடிக்கையாக உள்ளது.
இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது. புரட்சித் தலைவரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
'மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்' 'ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு,
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு!'
2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin.
கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண். 389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் திமுக-விற்கு கை வந்த கலை.
இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, "மா" விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரியது @AIADMKOfficial.
ஆனால், வழக்கம் போல இங்குள்ள ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? இல்லை. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு? இவர்களிடம் விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?
இந்நிலையில், கர்நாடக மாநில மா விவசாயிகளுக்கு PDPS திட்டத்தின்படி இழப்பீட்டினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் நலன் காக்கும் நோக்கில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்பதுடன், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் "மா" பயிர்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.
அஇஅதிமுக என்றும் விவசாயப் பெருங்குடி மக்களுடன் துணை நிற்கும்; அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும்!
@AIADMKOfficial @AIADMKITWINGOFL
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
In the wake of a dramatic price crash—from around ₹20/kg last year to as little as ₹4/kg—Tamil Nadu’s mango farmers are in dire financial distress. Regions like Krishnagiri, Dindigul, Madurai, Salem, Dharmapuri, Theni, and Vellore have seen orchard after orchard left to rot, with pulp mills unable to absorb the surplus and citing low-quality fruit and declining demand.
@AIADMKOfficial has taken up this cause, staging hunger strike in Krishnagiri and protest in Dindigul on 20.06.2025, demanding immediate relief: a procurement price of at least ₹13/kg, ₹30K per acre in compensation, reduction of GST for mango pulp from 12% to 5%.
Yet, the DMK-led state government has remained inactive, with Agriculture Minister M.R.K. Panneerselvam reportedly on a foreign vacation and no substantial steps taken to shield mango growers.
Despite having 39 MPs as part of the alliance at the Centre, did the DMK ever raise its voice for the farmers? No. Isn’t this the same government that imposed the Goondas Act on farmers? How can we expect this government to care about the welfare of farmers?
Meanwhile, the Centre has extended support to Karnataka’s mango farmers under the Price Deficiency Payment Scheme (PDPS), agreeing to compensate them for up to 2.5 lakh tonnes of Totapuri mangoes—to offset massive losses.
I welcome the central government’s decision in Karnataka and urge the Hon’ble Prime Minister, Thiru. @narendramodi Avl, to extend similar relief to Tamil Nadu’s mango growers.
Monetary compensation under the PDPS scheme would be highly beneficial to the mango farmers of Tamil Nadu, as they have suffered significant losses, and mango is a seasonal crop cultivated only once a year.
AIADMK stands firmly with our farmers and pledges to continue advocating for their welfare, no matter the odds. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
ramaswamy mohan
@ramaswamy_mohan
Criticism worth considering as Chennai needs far better connectivity!
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்;
ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்; விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.
ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?
விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர் @mkstalin -in சாதனை.
இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.
இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர்
இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர்
திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Warm birthday wishes to the Honourable President of India, Thirumathi Droupadi Murmu Avl.
You are a shining symbol of women empowerment in our nation.
Wishing you continued good health and strength as you lead the country with grace, dignity, and unwavering dedication.
@rashtrapatibhvn
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர!
மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சர் @mkstalin இருக்கிறார்.
முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா?
ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்.
ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என்று அடுத்த வேலைக்கு, கமிஷன் கொள்ளையையும் விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர்.
ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஓடிச் சென்ற ஸ்டாலின், 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?
கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த #கள்ளச்சாராய_திமுகமாடல் அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! @arivalayam
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக உள்துறை, பொதுப்பணித்துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றி ஏழை எளியோரின் துயர் துடைக்க அரும்பாடுபட்ட மாமனிதர்; மாசற்ற பொதுவாழ்வுக்கு முன்னோடியாக திகழ்ந்த "தியாகசீலர்" கக்கன் அவர்களின் பிறந்தநாளில் வரலாற்றில் நிலைத்திருக்கும் அவர்தம் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில்,
80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் @mkstalin, இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உச்சநீதிமன்ற நீதியரசர்
திரு. M.M. சுந்தரேஸ் அவர்களின் தந்தையாரும், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான, திரு. V. K. முத்துசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் நீதியரசர் திரு. M. M. சுந்தரேஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும், நீதித்துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த மூத்த வழக்கறிஞர்
திரு. V.K. முத்துசாமி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள்
திரு. ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.
"அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு.
அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா திரு. @mkstalin அவர்களே?
ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!
தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே- இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே?
மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப் படுத்தவில்லை!
நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர்!
"நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்" என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை!
நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்?
எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.
உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா?
ஆக, "ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்" என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார்
திரு. @mkstalin ! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் '#ஜம்பு_தீவு_பிரகடனம்' அறிவித்து, அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து,
ஆங்கிலேயருக்கு எதிரான முதல் ஒருங்கிணைந்த போரை முன்னெடுத்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,
அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அஇஅதிமுக ஆட்சியில்
அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை,
பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள
திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.
ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!
ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை!
பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்;
கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்;
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், KV குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. @jaganmoorthy_m அவர்களை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம்.
அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை.
ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட Battalion-ஐ ஏன் அனுப்ப வேண்டும் ?
பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் திரு. ஜெகன்மூர்த்தி அவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் @AIADMKOfficial கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.
இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அஇஅதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுக-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!
ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை திரு. @mkstalin உணரவேண்டும்.
இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!
காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்?
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.
ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!
நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் @mkstalin !
உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே?
காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.
V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல.
பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி எனபதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதலமைச்சர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் திரு. @mkstalin மட்டுமே.
'நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு இல்லை.
தமிழக மக்கள் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அம்மாவின் அரசை மனதில் நிறுத்தியும், இன்று சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் இந்தியாவிலேயே அதிக அளவு கடன் வாங்கி முதலிடத்தைப் பெற்றிருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களையும், தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply shocked to hear the news that an Air India flight from Ahmedabad, Gujarat, bound for London with 242 passengers and crew members, crashed and broke apart near a residential area close to the airport at around 1:17 PM due to a technical malfunction.
I pray to the Almighty for the swift and complete recovery of all those who have been injured in the accident.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுடன் லண்டனுக்கு செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மதியம் 1:17 மணியளவில் இயந்திரக் கோளாறு காரணமாக, விமான நிலையம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக வரும் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKITWINGOFL -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தியிருப்பது. உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.
மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே இராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பாகனேரி மண்ணின் தலைவர், தன்வீரத்தாலும் சாதுர்யத்தாலும் ஆங்கிலேயே படைகளை திக்குமுக்காடச் செய்த மாவீரர், அந்நியர் ஆட்சி ஒழிய சிவகங்கைச் சீமை தந்த வீரத்திலகம், சுதந்திர போராட்ட மாவீரர் "வாளுக்குவேலி அம்பலத்தின்" பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும் தேசப்பற்றையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்...
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartiest congratulations to @msdhoni on being inducted into the #icchalloffame
A true legend of the game, #dhoni redefined leadership, composure, and finishing brilliance. From lifting the T20 World Cup in 2007 to sealing the 2011 World Cup with a six, his legacy is etched in the hearts of cricket fans forever.
This honour is a fitting tribute to a man who led with calm, inspired millions, and gave Indian cricket a golden era.
@ICC
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.
பொம்மை முதல்வர் @mkstalin இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது.
இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்?
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும்,
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு @AIADMKOfficial சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் @AIADMKITWINGOFL சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த @mkstalin மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை!
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.@mkstalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு,
கிளாம்பாக்கமே சாட்சி!
கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு.
சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!
இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.
பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?
சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் , தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளில், எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்;
அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதார வாழ்த்தி,
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The puppet CM speaks of “Fair delimitation” while presiding over the most unfair, corrupt, and dynastic regime Tamil Nadu has ever seen.
First, Delimit the TASMAC loot. Delimit the drug mafia. Delimit illicit liquor. Delimit rowdyism. Delimit the corruption of your ministers. And most importantly, delimit your family's arrogance and stranglehold over Tamil Nadu.
The AIADMK stands firm on the immortal principles of Perarignar Anna, Puratchi Thalaivar MGR, and Puratchi Thalaivi Amma — towering leaders who fearlessly fought for Tamil Nadu’s dignity, Cauvery rights, and caste-based reservation.
I vow before every Tamilian: We will never allow our representation to be reduced or our voice to be silenced.
In 2027, or whenever delimitation may come, #aiadmk — back in power — will fiercely defend Tamil Nadu’s rightful voice and future.
And to the puppet CM, a humble message: Stop using this distraction to cover up your failures and scams. The people of Tamil Nadu are tired of your drama and crocodile tears.
"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது @mkstalin-ன் இந்த ட்வீட்.
தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போதே தெரிவித்தது நான்.
என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்!
கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை!
இன்னும் வராத ஒன்றை
"புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான
Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் #delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்!
திரு. ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல் , களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்! @CMOTamilnadu
@AIADMKOfficial
M.K.Stalin
@mkstalin
The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making their plan clear to reduce Tamil Nadu’s Parliamentary representation.
I had warned about this. It is now unfolding. By siding with the BJP, Palaniswami is not just silent but complicit in this betrayal. It's now clear that he has surrendered to Delhi’s domination.
The people of Tamil Nadu are united as one in their demand for a Fair Delimitation. We need clear answers from the Union Government.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
#oraniyiltamilnadu #fairdelimitation #justicefortamilnadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி,
12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், #jee தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, @iitmadras-ல் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.
மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.
கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய ஸ்டாலின் மாடல் திமுக அரசைக் கண்டித்து, எனது அறிவுறுத்தலின்படி,
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட @AIADMKOfficial சார்பில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை தலைமையேற்ற கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரி திருமதி. பா. வளர்மதி அவர்கள், முன்னிலை வகித்த மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. வேளச்சேரி M K அசோக் உள்ளிட்ட கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கைது செய்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
காவல்துறையிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகு, மேடை அமைத்த பிற்பாடு இடத்தை காவல்துறை மாற்றச் சொல்ல, அதற்கும் ஒப்புக்கொண்டு இடத்தை மாற்றி அஇஅதிமுக நடத்திய மக்களுக்கான ஒரு போராட்டத்தை அராஜகப் போக்குடன் எதற்கு ஒடுக்க வேண்டும்?
எதிர்க்கட்சிகளோ, மக்கள் அமைப்புகளோ போராடவே கூடாது என முழுவதுமாக ஒடுக்கக் கூடிய ஒரு அரசை பாசிச மாடல் அரசு என்று சொல்லாமல், வேறென்ன சொல்வது?
வெற்று விளம்பரங்களாலும், எதிர்க்குரல்களை ஒடுக்குவதாலும் தங்கள் ஆட்சி மீதான மாய பிம்பத்தை தக்க வைக்க திமுக நினைத்தால், அந்த எண்ணம் கானல் நீராய்ப் போவதை 2026 தேர்தல் காட்டும்!
மக்கள் எண்ணமே எதிர்க்கட்சியின் குரல்! அதை ஒடுக்கும் ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள். இது உறுதி! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய யூனியன் முஸ்லிம்
லீக்கின் தலைவராகவும்,
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும்
பணியாற்றிய பெருமைக்குரியவரும்,
தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழையும், தமிழ்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி
தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஜெயராமன் எனும் விவசாயி தீக்குளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
மக்களின் எந்த புகாருக்கும் அரசு
செவி சாய்ப்பதில்லை.
It's in complete #mutemode !
பச்சைத் துண்டுடுத்தும் விவசாயியை,
தன் உயிரை விடத் துணிய வைத்த
ஸ்டாலின் அரசு, தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.
மேலும், ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞன் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ததாக செய்திகள் வருகின்றன.
80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் திரு. ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?
குற்றவாளிகளுக்கு பயமில்லை; அரசு இயந்திரத்தின் மீது கடிவாளம் இல்லை- மொத்தத்தில் இந்த ஸ்டாலின் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தது தவறு தான் என்று தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் வருத்தமே படுகிறார்கள்!
விவசாயி ஜெயராமன் உயிரைக் காக்க வேண்டும்; அவருக்கு நிவாரணம் வழங்கி, அவரின் குறையைத் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், ராணிப்பேட்டை மூதாட்டியை பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். @drcksaraswathi அவர்களின் பாசமிகு மகளும், கழக புரட்சித்தலைவிப் பேரவைத் துணைச் செயலாளர்
திரு. @AatralAshoKumar அவர்களின் அன்புத் துணைவியாருமான,
திருமதி. கருணாம்பிகா அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் டாக்டர். சரஸ்வதி அவர்களுக்கும், அன்புச் சகோதரர்
திரு. ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த திருமதி. கருணாம்பிகா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Heartfelt congratulations to @RCBTweets on their remarkable maiden IPL victory & a well-deserved triumph after 18 years of perseverance.
Special appreciation to @imVkohli — this victory is a tribute to your unwavering loyalty and consistent performance for #rcb.
This victory will be remembered as a testament to resilience and dedication.
#ipl2025
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
துணை வேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன. தேவையற்ற வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் சென்று இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் இந்த விளம்பர மாடல் அரசு, தமிழக இளைஞர்களின், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வித் துறையின் வழக்குகளை ஏன் முடிக்க முயலவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
நிதிப் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்சினைகளால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம்/ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள் மற்றும் ஊதியப் பிரச்சினைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மகளிர் ஆய்வு மையம் உள்ளிட்ட பல இடங்களில் 6 மாதங்களுக்குமேல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று போராடி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை'
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, நம் மாணவச் செல்வங்களுக்கு அழியாத கல்விச் செல்வத்தை கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் எனும் ஆசான்கள். அந்த தெய்வங்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் இந்த விளம்பர மாடல் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளது மன்னிக்க முடியாத கொடுஞ் செயல். தன்னலமில்லாமல் அறிவை அள்ளி வழங்கும் ஆசிரியப் பெருமக்களின் எரியும் வயிறு, இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்காமல் விடாது என்று எச்சரிக்கிறேன். @mkstalin @arivalayam
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை, அவ்வழியே சென்ற பீட்டர் என்பவர் தன் உயிரை துச்சமென எண்ணி, மாணவர்களைக் காப்பாற்றி, தன் இன்னுயிரை நீத்துள்ளார்.
தத்தளிக்கும் மாணவர்களை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காத்திட்ட பீட்டர் அவர்கள், தமிழக மக்களின் உயரிய மானுடவிய விழுமியத்தின் உதாரணம்.
இறந்தாலும் அனைத்தையும்
கொடுக்கும் வாழை போல்,
தன் உயிரைத் தியாகம் செய்திடினும்,
அவர் காத்திட்ட இரு மாணவர்களின் வழியே பீட்டர் அவர்கள் நிச்சயம் வாழ்வார்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
What a phenomenal performance by Gukesh! Defeating Carlsen yesterday was no small feat — truly a champion in the making. The future of Indian chess is in brilliant hands. 🇮🇳♟️
@DGukesh @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.
இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது @AIADMKOfficial.
பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.
அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.
FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?
#sirஐ_காப்பாற்றியது_யார் ?
இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,
அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ் இசை ரசிகர்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட இசையின் உச்சமான இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
"அன்னக்கிளி உன்னை தேடுது" என்று ஆரம்பித்து, "தினம் தினமும் உன் நினைப்பு" வரை தொடரும் உங்கள் இசை மெட்டுகள், மென்மேலும் தமிழ் மக்களின் உள்ளங்களை வென்றிட வாழ்த்துகிறேன்.
#hbdilaiyaraaja
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The Department of Financial Services (@DFS_India), functioning under the leadership of Hon'ble Union Finance Minister Smt. @nsitharaman, has commendably made recommendations urging the Reserve Bank of India (@RBI) to regulate the draft guidelines it released concerning gold loans.
@DFS_India proposes to exempt small loan borrowers seeking gold loans below ₹2 lakh.
However, I strongly urge that all gold loans be exempted from the new regulations, as they serve as a vital means for farmers, small traders, and economically weaker sections to meet urgent needs such as medical and educational expenses.
Gold loans are a trusted financial tool for poor and middle-class families, and therefore, I urge @RBI, on behalf of @AIADMKOfficial, to consider the crucial recommendations made by the Department of Financial Services and to continue with the existing procedures for gold loans.
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை (@DFS_India), தங்கக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து @RBI வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ₹2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு @RBI பரிசீலிப்பதுடன், தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென @AIADMKOfficial சார்பில் வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#aiadmk's foresight on #castecensus laid the groundwork for today's #socialjustice initiatives. Our 2021 demand wasn't mere politics—it was a commitment to equality.
History should remember that.
Read my article in ThePrint:
🔗 theprint.in/opinion/aiadmk-led-the-way-on-caste-census-hi…
@ThePrintIndia @RamaNewDelhi
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் திரு. @mkstalin.
உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது?
அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?
உங்கள் காவல்துறை நீதியைப்
பெற்றுத் தந்ததா?
அப்படியென்றால், உங்களுக்கோ,
உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?
குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?
இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன் @mkstalin அவர்களே!
"SIR"-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும் - பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி!
இந்த ஆட்சி வீழும்!
மக்களுக்கான @AIADMKOfficial ஆட்சி அமையும்!
அந்த "SIR"-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!
#யார்_அந்த_SIR
#sirஐ_காப்பாற்றியது_யார்
M.K.Stalin
@mkstalin
சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!
காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்.
சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் @AIADMKOfficial தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
-இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?
-ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?
-SIT-ல் பணியாற்றிய DSP ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?
இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான #யார்_அந்த_SIR ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது!
வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?
யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?
பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!
காலம் மாறும் ! காட்சிகள் மாறும் !
விரைவில் @AIADMKOfficial ஆட்சி அமையும்.
அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்!
SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி ,அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.
#யார்_அந்த_SIR
#sirஐ_காப்பாற்றியது_யார் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
‘Unemployment among youth,
TN’s silent emergency.’
Our state’s youth face a crisis that demands urgent action, not silence.
As I wrote: ‘We are witnessing a dangerous gap between aspiration and accountability. The tragedy isn't just the unemployment rate- It is the collapse of public faith in government schemes as reliable engines of opportunity. Our youth are leaving not out of ambition, but out of desperation.'
Read my article in The New Indian Express: www.newindianexpress.com/states/tamil-nadu/2025/May/27/ta…
@xpresstn @AntoJoseph @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அலங்கோல ஆட்சிக்கு
அரக்கோணமே சாட்சி!
அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான்- இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது- திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது-
திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது!
போதை இளைஞரிடம் கத்தி- பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது .
இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு திரு. @mkstalin-க்கு கோபம் வருகிறது?
இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா @mkstalin ?
ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், #யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது!
திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் @mkstalin? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை.
நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்- குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
“நானும் டெல்லிக்கு போனேன்...
நானும் தலைவர் தான்" என்று
இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள் @mkstalin. போதும்ம்ம்ம்ம்!
"மூன்று ஆண்டுகள் #nitiaayog கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்?
தமிழ்நாட்டுக்கான நிதி”க்காகவா இல்லை
உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி”-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்…?
அதற்க்காண உண்மை பதில் என்ன?
ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே?
உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள "நிதி"களையும், அவர்களுக்கு துணையான "தம்பி"களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே?
நான் தான் சொன்னேனே... மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல- உங்கள் ஆட்சியின் ஊழலுக்காண தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று!
பின்னால் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் "#missionsuccess" என்ற உங்கள் கூவலுக்கு பின்னால்,
உங்கள் #missionfailure ஆன கண்ணீர்
நன்றாகப் புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். (முன்னாலும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்திருந்தால் Nostalgia-வாக இருந்திருக்கும்.)
அப்புறம், எதிர்க்கட்சித் தலைவராகிய
நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை,
தங்கள் அவல ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். ஏதேனும் பயன் இருந்திருக்கும்.
எப்போது பார்த்தாலும் "ரெய்டுகளுக்கு பயந்து" என்று சொல்கிறீர்களே? உள்ளபடியே கேட்கிறேன்-
எந்த ரெய்டைப் பார்த்து எனக்கு பயம்?
இந்த ரெய்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ,
நீங்கள் குறிப்பிடும் உறவினர்கள் எனக்கு உறவினர் ஆகும் முன்னரே பல தொழில்களை செய்து வந்தவர்கள்- இரு முறை வருமான வரி சோதனைகளைக் சந்தித்தவர்கள். Discrepancies இருப்பின், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறார்கள்.
இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது ஊரறிந்த உண்மை.அரசியல் ரீதீயாக என்னை எதிர் கொள்ள முடியாமல் இது போன்ற போலி குற்றச்சாட்டுகளை அள்ளி தெளிப்பது வெட்கக்கேடானது.
மாறாக, உங்கள் வீட்டுத் "தம்பி" ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது? என்ன தொழில் செய்தார்? எவ்வளவு லாபம் பார்த்தார்? இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன? எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர்? இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் தயாரா @mkstalin? #யார்_அந்த_தம்பி ?
இத்தனை நாட்கள் உங்கள் அமைச்சர்கள் கதறியது போதாதென்று, இப்போது நீங்களே களத்தில் இறங்கிக் கதறுவதை நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
@AIADMKOfficial
M.K.Stalin
@mkstalin
டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்!
ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை!
டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது!
#nitiaayog #lettertobrethren (1/2) -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும்,
தமிழ் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகள் செய்த பேரறிஞருமான,
உயர்திரு. சலாஹுத்தீன் அயூப் அவர்கள் மறைவுற்றார்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தலைமை காஜி உயர்திரு.சலாஹுத்தீன் அயூப் அவர்களின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற இவ்வேளையில்,
அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். மேலும் அன்னாரது குடும்பத்திற்கும், இஸ்லாமிய சகோதரர் , சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அலங்கோல ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கண்டனம் !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!
என்று முழக்கமிட்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய தமிழர் தந்தை;
எளிய பத்திரிகை பதிப்பின் மூலம் அரசியலை பாமர மக்களின் மனதில் பதியவைத்த இதழியல் புரட்சியாளர்;
சபாநாயகராக பணியாற்றும்போது ஆங்கிலத்தில் இருந்த சட்டப்பேரவை விதிகளை தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரிய சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குவதோடு, தமிழுக்கு அவர் ஆற்றிய சேவைகளை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய தலைசிறந்த மன்னர்களில் முதன்மையானவராக, முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தராக, போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழாவில் அவர்தம் பெரும் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
முந்தைய மூன்று ஆண்டுகள்
#nitiaayog கூட்டங்களை
"தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என
வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை.
உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?
திரு. @mkstalin அவர்களே-
அது கண்ணாடி! …
உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு
வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,
உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை
தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன்
காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக
வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எது ஸ்டாலினின் கை?
அண்ணா பல்கலை. வழக்கில்
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.
ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!
ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.
தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!
7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!
அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!
இதற்கெல்லாம் பின்னர் வருவோம்...
நான் கேட்ட கேள்வி என்ன?
#யார்_அந்த_தம்பி ?
உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?
உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும்
ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?
டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.
உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!
உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!
ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி?
@arivalayam
M.K.Stalin
@mkstalin
தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #nitiaayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் @mkstalin, தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று
2G-க்காக அப்பா டெல்லி சென்றார்...
இன்று...
டாஸ்மாக்... தியாகி... தம்பி...
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?
படுத்தே விட்டாரய்யா...
எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!
#யார்_அந்த_தம்பி -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!
ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது திரு. @mkstalin உணர்வாரா?
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே-
திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்!
ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து "தம்பி"யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (#யார்_அந்த_தம்பி?)
இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!
ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.
இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.
NEVER EVER GIVE UP!
தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்!
@arivalayam
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது.
மேலும், தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
"பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய திரு. @mkstalin அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே?
பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!
பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக "உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை" அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் @Anbil_Mahesh-ன் PA உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.
தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த "டம்மி அப்பா" அரசு நடவடிக்கை எடுக்குமா?
எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் @AIADMKOfficial மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!
#யார்_அந்த_தம்பி -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மனைவியாருமான திருமதி.
V.N. ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளான இன்று, புரட்சித்தலைவரின் தொண்டர்கள் மீதான அவர்தம் அளவற்ற அன்பையும் , அளப்பரிய தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED
ரெய்டுகள் திரு. ஸ்டாலின்-க்கு
பயத்தை உருவாக்கியிருக்கிறது ,
பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.
டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து
திரு. @mkstalin, மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?
பின்னப்பட்ட புனைகதைகளால்,
போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் @AIADMKOfficial இயக்கத்தை
அசைத்து கூட பார்க்க முடியாது.
இவை அனைத்தையும் நிச்சயம்
சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
வெல்வோம் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கல்வி உரிமைச் சட்டத்தின்படி (Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ் நாடு அரசே செலுத்தும். அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் திரு. @mkstalin-ன் மகனான, விளையாட்டு அமைச்சர் திரு. @Udhaystalin-ம், அவரின் ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. @Anbil_Mahesh-ம் சுய புராணங்களைப் பாடுவதில் தீவிரமாக உள்ளனர்.
இதில், "என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்” என்று திரு. ஸ்டாலின் மார்தட்டல் வேறு. 24 மணி நேரமும் முழு கவனமும் Reels-க்கு போஸ் கொடுப்பது உள்ளிட்ட விளம்பர வேலைகளில் மட்டுமே இருக்கும் இவர்கள், செயலில் என்னவாக இருக்கின்றார்கள்?
பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பத் தவறியதற்கு காரணமாக இருந்தவர்கள் தானே இவர்கள் ? நல் அமைச்சர்கள்! இந்த லட்சணத்தில், @AIADMKOfficial ஆட்சியின்போது விளையாட்டுத் துறை அமைச்சரை மக்களுக்குத் தெரியாது என்கிறார்.
SDAT உருவாக்கி, விளையாட்டுக்கான CM Trophy தொடங்கி, அதற்கான பயிற்சித் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கி, வெற்றிபெறும் ஒவ்வொரு வீரருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கி, Sports Hostel உருவாக்கி, அதற்கான ஊக்கப் படியை 75 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தியது அஇஅதிமுக அரசு.
மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையிலும்; ஆசிய போட்டிகளில் வெல்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும்; தெற்காசிய மற்றும் தேசிய போட்டிகளில் வெல்வோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், பரிசு அறிவித்து வழங்கியது கழக அரசு.
அனைத்திலும் முத்தாய்ப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான கழக ஆட்சியில்!
அமைச்சர் பெயர் முக்கியமல்ல திரு. ஸ்டாலின் அவர்களே, செயல் தான் முக்கியம்! அந்த செயல்வீரர்கள் தான் @AIADMKOfficial அமைச்சர்கள். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும்!
தமழ் நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடு செல்ல வைத்தது அஇஅதிமுக அரசு. பாஸ்போர்ட்டே இல்லாமல், “நாச்சியப்பன் பாத்திரக் கடை" கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட் எடுத்தவர்கள் தானே நீங்களும், உங்கள் விளையாட்டு அமைச்சரும்?
மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கி, தெண்ட செலவு செய்து கார் ரேஸ் நடத்தியது தான் உங்கள் ஆட்சியின் சாதனை!
முதலீடு வாங்க வருகிறேன் என்ற உல்லாச பயணத்தில், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்து "ஆகா! ஆகாயத்தில் அதிசயம்" என்று ட்வீட் போட்டதையெல்லாம் சாதனை லிஸ்டில் சேர்ப்பீர்கள் என்றால், மக்கள் சிரிப்பார்கள்!
விளையாட்டுத் துறை, விளையாட்டு வீரர்களை Promote செய்ய வேண்டும். அமைச்சரை அல்ல.
மாணவர்களின் கல்வித் தொகையை செலுத்த வக்கில்லாத இந்த @arivalayam அரசு இருந்து என்ன பயன்?
மத்திய அரசின் "புதிய கல்விக் கொள்கை”யை ஏற்க மறுத்ததால், நிதி இல்லை என்று திமுக அரசு சால்ஜாப்பு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்?
இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.
"மாணவர்களை Apply பண்ண விட்டா தானே Fees கொடுக்கணும்?" என்று யாராச்சும் உங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்களா ஸ்டாலின் அவர்களே ?
உடனடியாக, கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,
தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடருங்கள்.
தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே. உங்களின் முயற்சிகளை மறுபரீசலனை செய்து வெற்றிக்கான வழிகளைத் தேடி முன்னேறுங்கள்.
கற்றலின் மீதான உங்கள் ஆர்வமும்,
கடின உழைப்பும் உங்கள்
வெற்றியை உறுதியாக்கும்.
உங்களுக்கு என் வாழ்த்துகள்.
All the best!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று முதலமைச்சர் @mkstalin,
தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் @mkstalin?
இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி!
கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு!
கொடும் குற்றம் புரிந்தகேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?
தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.
அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து,
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.
திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் @AIADMKOfficial.
நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு.
மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்!
இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
இது தானே OG பித்தலாட்டம்?
மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!
@arivalayam
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin!
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று,
மூத்த வக்கீல்களை நியமிக்க ,
மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!
@arivalayam
M.K.Stalin
@mkstalin
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மேனாள் ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
திரு. K அண்ணாமலை அவர்களுக்கும், தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் திரு. ஜி.கே. மணி அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு. பூவை ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் திரு. ஏ. சி. சண்முகம் அவர்களுக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. N. R. தனபாலன் அவர்களுக்கும், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் திரு. செ.கு. தமிழரசன் அவர்களுக்கும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. P. V. கதிரவன் அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. ஜான் பாண்டியன் அவர்களுக்கும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் திரு. பாரிவேந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
மேலும் தொலைபேசி வாயிலாகவும், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும், ஊடக நிறுவனர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், பல்வேறு சமூக அமைப்புகளைச் சார்ந்தோருக்கும் எனது நன்றி.
எனது வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடெங்கும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் போன்ற எளியோருக்கு உதவிடும் சமூக சேவைகள் செய்து, இராணுவ வீரர்களுக்காக கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் செய்திட்ட என் உயிருக்கு உயிரான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கு எனது இதயமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!
மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், உங்களால், உங்களுக்காக என்றென்றும் உழைப்பேன்!
@AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
@DrTamilisai4BJP @annamalai_k @PremallathaDmdk @GK__Vasan @PmkGkm @jaganmoorthy_m @DrACSofficial @NRDHANAPALAN @PVKofficial @JohnPandianTMMK @PaarivendharTR
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைதளப் பதிவு வாயிலாகவும் மாண்புமிகு அம்மா அரசின் மக்கள் நலத்திட்டங்களை நினைவுகூர்ந்தும் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!
@Seeman4TN
@AIADMKOfficial
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
@EPSTamilNadu @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தொலைபேசி வாயிலாக எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழ்த் திரையுலகின் மரியாதைக்குரிய சூப்பர்ஸ்டார், சகோதரர்
திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி!
@rajinikanth
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
@NainarBJP
@AIADMKOfficial
Nainar Nagenthran
@NainarBJP
தமிழக முன்னாள் முதல்வரும், @AIADMKOfficial பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. @EPSTamilNadu அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் முழு ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல். முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!
@Murugan_MoS
@AIADMKOfficial
Dr.L.Murugan
@DrLMurugan
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், மற்றும் @AIADMKOfficial பொதுச் செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள், நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்று, தமிழக மக்களுக்கு தொடர்ந்து சமூகப் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
@EPSTamilNadu -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Thank you, Hon'ble Deputy
Chief Minister of Andhra Pradesh
Thiru. @PawanKalyan Garu, for your kind wishes.
@APDeputyCMO
@AIADMKOfficial
Pawan Kalyan
@PawanKalyan
Heartfelt birthday wishes to @AIADMKOfficial General Secretary and Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly, Thiru @EPSTamilNadu Avl.
May Lord Murugan bless you with good health, strength, and continued spirit to serve the people. I wish that under your leadership, the NDA will grow stronger in Tamil Nadu. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர்
திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
எனது பிறந்தநாளையொட்டி தமிழில் கையெழுத்திட்ட கடிதம் வாயிலாக வாழ்த்து தெரிவித்த மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N. ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!
@rajbhavan_tn @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Thank you, Hon'ble Chief Minister of Andhra Pradesh Thiru. @ncbn Garu for your warm birthday wishes and kind prayers.@AIADMKOfficial
N Chandrababu Naidu
@ncbn
Birthday greetings to the AIADMK General Secretary and former Chief Minister of Tamil Nadu, Thiru Edappadi K. Palaniswami. I pray for his good health and long life. @EPSTamilNadu
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி,
தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி,
ஆண் - பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர்
சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,
செவிலியர் தின நல்வாழ்த்துகள். @AIADMKOfficial
#nursesday -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை
அழகாய்; அர்த்தமாய்
மாற்றிடும் உயிரும் மெய்யுமான
ஒப்பற்ற அன்னையின்
மகத்துவத்தை போற்றுவதோடு
உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த உன்னத அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா #operationsindoor நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.
இச்சூழலில், எதிர் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன்.
நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்ச்சி பெறத் தவறியவர்கள்
துவண்டுவிட வேண்டாம்.
You haven't failed;
Your success is just
postponed for a while,
மீண்டும் நன்றாகப் புரிந்து படித்து,
துணைத் தேர்வை அணுகுங்கள்;
நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள்!
நீங்கள் ஒவ்வொருவரும்
வெற்றியாளர்கள் தான்!
உங்களுக்கும் எனது Advance வாழ்த்துகள்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் என்பது, நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகக் கொடுமையான, மனிதத்திற்கே எதிரான போர்.
பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை #operationsindoor திடமாக நிரூபித்துள்ளது.
"நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்" என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து, "ஆபரேஷன் சிந்தூரை" வெற்றிகரமாக முடித்த நம் இந்திய இராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது.
இத்தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு @AIADMKOfficial சார்பில் வாழ்த்துகள்.
வாழ்க, வெல்க தாய்த் திருநாடு! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
திரு. சத்தியநாராயண பிரசாத் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நீதித்துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
I commend the Indian Armed Forces
for their precise execution of #operationsindoor, targeting terror camps in Pakistan and PoJK in response to the Pahalgam attack.
Under the vigilant leadership of Hon'ble Prime Minister Thiru. @narendramodi Avl, justice has been delivered.
This decisive action underscores our nation's unwavering commitment to eradicating terrorism and safeguarding our citizens.
@SpokespersonMOD @adgpi
@AmitShah
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்!
நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி!
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்:
-தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை
-திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு.
-வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை
-கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை.
-புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு.
நாளையோடு திரு. @mkstalin தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி.
ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம்.
ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு திரு. ஸ்டாலின் வருவார் பாருங்களேன்...!
"The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!
"எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை" என்று சட்டப்பேரவையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது.
"ஆக, குற்றவாளிகள் கைது" என்று சொல்வீர்களே- அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் .
எனதருமை தமிழ்நாட்டு மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.
2026-ல் #byebyestalin என்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் @AIADMKOfficial ஆட்சி அமையும்! தமிழ்நாடு உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டின் வர்த்தக வளத்தை தங்கள் கடின உழைப்பாலும், நேர்மைமிகு வியாபாரத்தாலும் உயர்த்திப் பிடிக்கும் அன்பிற்கினிய வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது
"வணிகர் தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வணிகம் பெருகட்டும்!
தமிழகம் வளம் பெறட்டும்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சு. இரவி,
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன்,
கழக அமைப்புச் செயலாளரும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு. கோ. அரி
உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக @mkstalin மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் .@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் @arivalayam பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
"ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?
உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள்
திரு. @mkstalin அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?
"நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!
#நீட்ரத்து_திமுக_சதுரங்கவேட்டை -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய @mkstalin அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:
1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.
9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.
29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.
14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.
இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்" திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
#hbdajithkumar
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி"
உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்!
அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!
#mayday
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
On behalf of @AIADMKOfficial,
I convey my appreciation to the Hon'ble Home Minister of India,
Thiru. @AmitShah Avl, for his steadfast efforts, along with the Union Cabinet, in announcing the conduct of Caste Census — fulfilling one of the long-standing demands of the people of Tamil Nadu.
@HMOIndia -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The people of Tamil Nadu have been demanding for many years that the Central Government conduct a caste census.
During Hon'ble Amma’s regime, all necessary steps were taken to conduct a caste census in Tamil Nadu. However, after the change in regime, the DMK government abandoned that initiative.
Now, I wholeheartedly welcome the Central Government’s announcement that a caste census will be conducted along with the upcoming population census.
I sincerely welcome the Central Government’s decision to conduct a caste census after nearly 93 years.
On behalf of @AIADMKOfficial, I extend my congratulations and best wishes to the Hon’ble Prime Minister of India, Shri @narendramodi, for announcing the conduct of the caste census.
@PMOIndia @AmitShah -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.
தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்களுக்கு @AIADMKOfficial சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia @AmitShah -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கொல்கத்தாவில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன் .
படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளான
#பத்மபூஷன் விருது பெற்றுள்ள
தொழிலதிபர் திரு. நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுக்கும், திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டியக் கலைஞர் செல்வி. ஷோபனா சந்திரகுமார் அவர்களுக்கும்,
#பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள
மிருதங்கக் கலைஞர் திரு. குருவாயூர் துரை அவர்களுக்கும், சமையற் கலைஞர் திரு. செஃப் தாமு (எ) தாமோதரன் அவர்களுக்கும், பேராசிரியர் திரு. M D ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும், தெருக்கூத்துக் கலைஞர் திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தம் அவர்களுக்கும், தொழிலதிபர் திரு. R G சந்திரமோகன் அவர்களுக்கும், ஸ்தபதி திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி அவர்களுக்கும், எழுத்தாளர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களுக்கும், பறை இசைக் கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#padmabhushan #padmashri -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தினமலர் நாளிதழின் பதிப்பாளர்
திரு. லட்சுமிபதி ராமசுப்பையர் அவர்கள், இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான #பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#padmashri #dinamalar
@dinamalarweb -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கள்ளச்சாராய ஆட்சிக்கு!
கள்ளக்குறிச்சியே சாட்சி!
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
பெண்கள் பாதுகாப்பின்மைக்கு
அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!
போதைப் பொருள் கடத்தலுக்கு
திமுக அயலக அணியே சாட்சி!
போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!
ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!
Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure.
இதில் இன்று Version 2.0 Loading ஆம்!
@AIADMKOfficial ஆட்சியில்
தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!
2026-ல் ஒரே version தான் -
அது #tn_aiadmk version தான்!
மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற
பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #byebyestalin…
என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. @mkstalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
“எங்கள் வாழ்வும் ,எங்கள் வளமும் ,
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்று தமிழ் மொழியின் பெருமைகளை முழங்கி, மொழிப்பற்று, இனப்பற்று,
சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்து,
தன் வாழ்நாள் முழுவதும் தமிழை உயிருக்கு நிகராக கருதி தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் #பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென தனி முத்திரை பதித்த அன்புச் சகோதரர்
திரு. @ashwinravi99 அவர்கள், இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான #பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
@AIADMKOfficial
#padmashri #ashwin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான #பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
#padmabhushan #ajithkumar -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் ,
கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது .
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் @mkstalin மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான #tnpscgroup4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு.
இந்த தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இது!
ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் இளைஞர்கள் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிக்கையில் சொன்னது நினைவிருக்கிறதா திரு. @mkstalin ?
#vao உள்ளிட்ட அரசுப்பணிகளில் சேர வேண்டும் என்பது பல ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களின் கனவு. பணியிடங்கள் இருந்தும் அதனை நிரப்பாமல் வஞ்சிப்பது, இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல்!
கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், "அரசு" என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக #group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். கஸ்தூரிரங்கன் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.
இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
I am deeply shocked and saddened by the cowardly terrorist attack on innocent tourists in Pahalgam, Jammu and Kashmir. Terrorism has no place in our Nation & Such despicable acts against civilians are utterly condemnable.,
My heartfelt condolences to the families of the victims, and
I pray for the swift recovery of the injured. 
#pahalgamattack #condemnterrorism #solidarity -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆடிட்டர் திரு.பாலசந்தர் - கிருஷ்ணவேணி அவர்களின் புதல்வர், தமிழகத்தைச் சேர்ந்த திரு. சிவச்சந்திரன் அவர்கள்,
இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
திரு.சிவச்சந்திரன் அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், தனது தனிப்பட்ட கடின உழைப்பின் காரணமாக இந்த சாதனையை புரிந்துள்ள திரு.சிவச்சந்திரன் அவர்கள்
இனிவரும் காலங்களிலும் அவர்தம் துறைகளில் வெகு சிறப்பாக செயலாற்றி சாதனைகள் பல புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
On this #civilservicesday,
I extend my heartfelt wishes to all the dedicated civil servants whose unwavering commitment and integrity continue to shape a stronger India. Your service inspires excellence and accountability.
Warm wishes also to all Civil Service aspirants- may your hard work, perseverance, and passion guide you towards a future of meaningful impact and national service.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened to hear about the passing of His Holiness Pope Francis. His life was a beacon of compassion, humility, and unwavering faith. The world has lost a spiritual leader who inspired millions with his message of peace, love, and unity. My heartfelt condolences to all his followers across the globe.
May his soul rest in eternal peace.
@Pontifex @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Wishing Thiru. @ncbn Avl, the Hon’ble Chief Minister of Andhra Pradesh and President of @JaiTDP, a very happy birthday!
May you be blessed with good health, happiness, and continued strength to serve the people.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த #ஈஸ்டர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எத்தனை தடைகள் வரினும், இறுதியில் உண்மை வழியும், அன்பின் நெறியுமே வெல்லும் என்பதே இத்திருநாள் நமக்கு உணர்த்தும் மகத்தான செய்தி.
அன்பின் திருவுருவான இயேசுபிரான் நமக்கு போதித்த உயரிய விழுமியங்களைப் பின்பற்றி நாம் அனைவரும் வாழ்ந்திடவும், உலகெங்கும் சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் தழைத்தோங்கிடவும் வாழ்த்துகிறேன்.
#easter2025
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?
இந்த பொம்மை முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன்- அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா?
ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை!
இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது!
மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு!
உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@mkstalin
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பையும், இரக்க குணத்தையும் போதித்த இயேசுகிறிஸ்து,உலகின் பாவத்தை போக்க சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த புனித வெள்ளி நாளான இன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் பேரன்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன்.
@AIADMKOfficial
#goodfriday2025 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
வீரம் விளைந்த தமிழ் மண்ணில் ஓங்கு புகழ்கொண்ட வீரராகப் பிறந்து, இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இலட்சியமிக்க இளைஞர் படையை கட்டமைத்து,ஆங்கிலேயரை விரட்டியடித்த ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கீழப்புலியூர் பகுதியில் ரேஷன் கடை அருகே குத்தாலிங்கம் என்பவர் தன் மனைவியின் கண்முன்னே மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதே போல், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பொது இடங்கள் எல்லாவற்றிலும் "இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல!" என்று பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற அளவில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது.
தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை இருப்பதற்கு ஒரு முதல்வராக திரு. @mkstalin வெட்கப்பட வேண்டும்! ஆனால் அவர்?
"தனிப்பட்ட பிரச்சனை" "குற்றவாளிகள் கைது" என்ற உங்கள் Template பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா?
"சட்டம்- ஒழுங்கு" என்பது கைது செய்வது மட்டுமல்ல; குற்றங்களைத் தடுக்க, குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும்.
இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும். ஆனால், இங்குள்ள பொம்மை முதலமைச்சருக்கு நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே?
"குற்றவாளிகளின் கூடாரம்" என்ற நிலையில் இருந்து மாறி மீண்டும் "அமைதிப் பூங்கா" என்ற நிலைக்கு தமிழ்நாடு மாற, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி வீழ்ந்து, #தமிழ்நாடு_மாடல் @AIADMKOfficial ஆட்சி அமைவது ஒன்றே வழி!
மேற்கூறிய குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதல் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தி,தாய் நாட்டைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்து, வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவரும், வீரபாண்டிய கட்டப்பொம்மனின் படைத்தளபதியாகத் திறம்படப் பணியாற்றி தென்னகத்தின் வீரமிகு அடையாளமாய் விளங்கும் #வீரர்_சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தீண்டாமையை வேரறுத்து சமநிலையை பரவச் செய்த சமத்துவ போராளி,
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குவதோடு அவர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம்,சமநீதி கொண்ட சமூகத்தை அமைத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்.
#ambedkarjayanti @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில், அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். தமிழ் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
'புதிய சாதனைகளைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
பா.ஜ.க. பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த திரு. ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும் ?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்றுள்ள புதிய பொறுப்பில் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான திரு. @mkstalin, தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார்.
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது.
இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்!
பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது @X பதிவு வாயிலாக தெரிவித்தேன்.
தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களும் அறிவித்திருந்தார்.
"என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த திரு. ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
"NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!
திரு. @mkstalin அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!
@AIADMKOfficial ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்!
காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!
தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு @AIADMKOfficial தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!
(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!)
#aiadmk4tnrights -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
I extend my gratitude to the Hon’ble Prime Minister Shri Narendra Modi ji for his unwavering support to @AIADMKOfficial .
We are honoured to be welcomed into a partnership with NDA . An alliance founded on a shared vision for Tamil Nadu’s progress and prosperity.
At this pivotal moment, with visionary guidance of Honourable Prime Minister @narendramodi ji , AIADMK will work closely with NDA allies to realise the aspirations of the people and contribute to his transformative vision.
Together, we are committed to building a greater Tamil Nadu—one free from dynastic politics, corruption, and misgovernance. The people of Tamil Nadu deserve a transparent, development-focused government—and we are determined to deliver it in the upcoming Assembly elections.
#maketnprosperousagain -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
The Honourable Union Home Minister Thiru. @AmitShah Avl and I had the honour of making a momentous announcement today — that the AIADMK and BJP will be joining hands for the 2026 Tamil Nadu Assembly Elections.
This alliance stands united in its unwavering commitment to liberate Tamil Nadu from the regressive evil governance of the DMK, rectify the historic missteps that have hindered the state’s progress, and lay the foundation for a new era of inclusive growth, development, and opportunity.
I am deeply grateful to the Hon’ble Union Home Minister Thiru. @AmitShah Avl for honouring the dinner hosted at my residence with his presence. Together, we move forward with a shared vision and steadfast resolve to build a brighter, stronger, and more dynamic #tamilnadu.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
"பாரதிய பாஷா" இலக்கிய விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ் எழுத்தாளர்
திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
ஆழமிகு சிந்தனைகளோடு வாழ்வியலைப் பிரதிபலிக்கும் நற்றமிழ்ப் படைப்புகளால் தமிழ் இலக்கிய உலகின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழும் "எஸ்.ரா" அவர்களின் மணிமகுடத்தில் மற்றுமொரு நன்முத்தாக இவ்விருது திகழட்டும்!
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது.
இதனை திரு. ஸ்டாலினும் நன்கு உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இவைகளை திசைதிருப்ப வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.
கவுண்டமணி ஒரு நகைச்சுவையில் இலையில் செங்கலை வைத்துவிட்டு "சோத்துல கல்லு இருக்கு" என்பார். அதுபோலத் தான் இருக்கின்றன திரு. @mkstalin கொண்டுவரும் தீர்மானங்கள்!
இந்த திரு. கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா? வாய்ப்பே இல்லை!
இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?
எஜமான விசுவாசம் தடுக்கிறதா திரு. @mkstalin அவர்களே?
கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருடன் பல கூட்டங்களில் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது காவிரி குறித்து பேசியதுண்டா?
"மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை தரும்" என்று தமிழ்நாட்டிலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?
கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள்,
ஒரு முறையாவது முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் மாநில உரிமை குறித்து , ஒரு கோரிக்கையாவது வைத்தது உண்டா?
2009-14 UPA கூட்டணி ஆட்சியில், முதுகைக் காட்டினால் கூட கையெழுத்து போடும் அளவிற்கு காங்கிரசுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்த எஜமான விசுவாசிகள் நீங்கள் தானே?
இலங்கை இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, காங்கிரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு, எத்தனை மந்திரி என விவாதித்துக் கொண்டிருந்த சுயநலவாதிகள் தானே நீங்கள்?
2ஜி இமாலய ஊழல் வழக்கில் திகார் சிறையின் கதவுகள் அழைத்த போதும், அறிவாலய மேல் மாடியில் ரெய்டு நடந்த போதும், அன்றைக்கு உங்களை மிரட்டிய உங்கள் எஜமானரான காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கட்சியையே அடகு வைத்தவர்கள் தானே நீங்கள்?
அறிவாலயக் கதவுகளை மூடிக்கொண்டாலும் உங்களின் கெஞ்சல், கதறல் சத்தம் அன்றைக்கு தமிழ்நாடு முழுக்க தான் நன்றாக கேட்டதே!
இவ்வளவு ஏன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே?
இப்படிப்பட்ட வரலாறு கொண்ட உங்களுக்கு, அஇஅதிமுக பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரங்களில் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காமல் செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தும் அரசினர் தனித் தீர்மானத்தை முடிந்தால் சட்டப்பேரவையில் கொண்டுவாருங்கள் பார்ப்போம்!
(பி.கு. : அமைச்சர் நேருவுக்காக "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதா? எப்போது ரிலீஸ்? சீரியஸ் அரசியலுக்கு நடுவில் மக்களுக்கு அந்த வீடியோ நல்ல நகைச்சுவையாக இருக்கும் என்பதால், அதனை தவறாமல் வெளியிட வேண்டுமென திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.)
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் ஆவார்கள். இவர்களை நம்பி மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
இது தொடர்பாக, கழகத்தின் சார்பில் சூலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பி. கந்தசாமி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப் பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இந்தக் கூலி உயர்வு பிரச்சனையால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், அதன் சார்பு தொழில்களை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடியா திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்புத் தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக-வின் @mkstalin மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த
திரு. குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் நீட் தொடர்பான தமிழ் நாட்டின் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும்; நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், சட்டமன்றத்தில் பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இதில் என்ன முடிவு எடுக்க முடியும்?
பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் 6.4.2025 அன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, நீட் குறித்த தனது பொய் முகமூடி தமிழக மக்களிடம் வெளிவந்துவிட்டதை மறைக்கும் விதமாக, நீட் நுழைவுத் தேர்வு விலக்கை வழங்கினால்தான் அஇஅதிமுக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்போம் என்று 'கண்டிஷன்' விதிக்கச் சொல்கிறார். நான் கேட்கிறேன், திரு. ஸ்டாலின் 2019, 2021, 2024 தேர்தல்களில் காவிரியில் கர்நாடக உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்கு ஒத்துக்கொண்டால்தான் தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்று 'கண்டிஷன்' போட்டாரா ? உச்சநீதிமன்ற ஆணைப்படி முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்திய பிறகு, 142 அடியிலிருந்து 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க சம்மதித்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்று 'கண்டிஷன்' போட்டாரா? நீட் விஷயத்தில் தாம் முழுமையாக தோற்றுவிட்டோம், இனி தமிழக மக்களிடம் தனது பொய் நாடகம் எடுபடாது என்பதை உணர்ந்த பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அரசு விழாவில் எதை பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றியுள்ளார்.
2026-ல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக 9.4.2025 அன்று சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, @AIADMKOfficial, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காது.
நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், அவரது மகன் திரு. உதயநிதி ஸ்டாலினும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK IT WING
@AIADMKITWINGOFL
இன்னும் ஆட்சி முடிய 9 மாத காலம் தான்.
திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#tnassemblyThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK IT WING
@AIADMKITWINGOFL
முதலமைச்சர் @mkstalin சட்டப்பேரவையில் கோழைத்தனமாக செயல்படுகிறார்.
சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிபரப்ப தில்லு,தெம்பு,திராணி இருக்கிறதா முதல்வர் அவர்களே!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK IT WING
@AIADMKITWINGOFL
திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளபடி, டீசல் விலையை ஏன் இதுவரை குறைக்கவில்லை?
மேலும் கேஸ் மானியம் மாதம் 100 ரூபாய் கொடுப்பதாக சொன்ன வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை.
தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தலுக்குப் பின் ஒரு பேச்சு என திமுக இரட்டை வேடம் போடுகிறது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்கள் -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened to hear about the unfortunate fire accident involving
Mark Shankar Pawanovich, son of Andhra Pradesh Deputy Chief Minister
Thiru. @PawanKalyan Avl, in Singapore.
My thoughts and prayers are with him for a swift and full recovery. May the family find strength during this difficult time.
@APDeputyCMO @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#யார்_அந்த_தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத திரு. @mkstalin, சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார்.
சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா. கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாக கூற முடியும்.
உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்து கொல்லப்பட்டு , தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?
இவ்வளவு ஏன், கனவிலும் திமுகவில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது என தெரிந்தும் ,
நீண்ட நாட்களாக தாங்கள் சுரண்டபடுகிறோம் - கொத்தடிமைகளாக நடத்த படுகிறோம் என அறிந்தும் , திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் !
ஆனால், நாங்கள் கேட்ட கேள்வி அதுவல்ல.
டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக @dir_ed சொல்லியிருக்கிறதே- அந்த ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார் என்று தான் கேட்கிறோம்.
அவருக்கு தியாகி பட்டம் கொடுத்த நீங்கள் தான் அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் @mkstalin அவர்களே!
#யார்_அந்த_தியாகி ?
உங்கள் பதிலுக்கு மக்களுடன் இணைந்து காத்திருக்கிறோம்! @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலட்சிய எண்ணத்தை,
11 மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அதற்கு 447.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்வடிவம் கொடுத்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு.
ஆனால், அஇஅதிமுக ஆட்சியின் திட்டம் என்பதாலேயே, ஏறத்தாழ 4 ஆண்டுகள் வேண்டுமென்றே ஆமை வேகத்தில் செயல்பட்டு, இன்று ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் திரு. @mkstalin.
அஇஅதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே; இருப்பினும், திமுக-வின் அரசியலுக்காக நீலகிரி மக்களை இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்திருக்க வேண்டாம்.
நாம் நடத்திய "தமிழ்நாடு மாடல்" ஆட்சியின் பெருமைமிகு சின்னங்களாக 11 மருத்துவக் கல்லூரிகளும் காலங்கள் கடந்து திகழட்டும்! நம்மைப் போன்றே அயராது மக்கள் சேவை ஆற்றட்டும்! -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
"திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்காது" என்று சினிமா வசனம் பேசிய உதயநிதி, இத்தனை மரணங்களுக்கும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
"வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும்" என்று சொன்னீர்களே- அவை கொஞ்சமாவது உங்களுக்கு இருந்தால் தொடரும் நீட் மரணங்களுக்கு பொறுப்பேற்று, உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களிடம் மன்னிப்பு கோருங்கள் @mkstalin @Udhaystalin !
தொடரும் நீட் மரணங்களைத் தமிழ்நாடு தாங்காது! நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியாவது இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இனியேனும் மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைச் சட்டமான குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக, தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூட்டில் ஆங்கிலேயர்களின் தோட்டாக்களுக்கு இரையாகி தங்கள்
இன்னுயிரை துச்சமென எண்ணி வீரமரணம் அடைந்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவு நாள் இன்று.
அதிகாரத்துவத்திற்கும் , அடிமைத்தனத்திற்கும் எதிராய் கொடுங்கோன்மைச் சட்டத்தை எதிர்த்து போராடி, இனம் காத்த தியாகிகளின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.
ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு,
ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.
போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது திரு. @mkstalin அவர்களே! போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும்.
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.
இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
From the heart of #tamilnadu to the world of #studioghibli —
blending some of my most memorable moments with timeless art.
#ghiblitrend @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், இஸ்லாமியப் பெருமக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக @AIADMKOfficial என்றென்றும் இருக்கும் என்பதை இந்த இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#ramadan
#eidmubarak -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
'யுகாதி' என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள்,
தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
#ఉగాది_స్పెషల్2025
#ಯುಗಾದಿ
#ugadi2025 @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
அக் 2021- அனு, கீர்த்திவாசன்
நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்
ஜூன் 2022- தனுஷ்
ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ
செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
மார்ச் 2023- சந்துரு
ஏப்ரல் 2023- நிஷா
ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்
டிசம்பர் 2023- ஆகாஷ்
அக்டோபர் 2024- புனிதா
மார்ச் 2025-இந்து, தர்ஷினி
இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் திரு. @mkstalin சொல்லப்போகும் பதில் என்ன? @Udhaystalin-ன் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?
தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் திரு. @mkstalin!
மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!
#நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதலே தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது.
இந்த தகவலை காவல்துறையினருக்கு தெரிவிப்பவர்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் துணிந்துவிட்டனர் என்பதையே உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரின் கொலை உணர்த்துகிறது.
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த திமுக அரசு எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவலர் முத்துக்குமாரின் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் திரு. @mkstalin ?
காவல்துறை இனியாவது, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்!
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இன்று முதல் , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு #allthebest !
Positive Attitude உடன் தேர்வை எதிர்கொண்டு, உங்கள் முயற்சி சிறக்க நல்ல மதிப்பெண்களுடன் அனைத்து மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெற்று சிறக்க வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லாத மாடல் தான் ஸ்டாலின் மாடல்.
மக்களுக்கும், மக்களைக் காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி என்பது செயலற்ற வெறும் பொம்மை ஆட்சியே!
தங்கள் பணிகளை செய்யும் காவல்துறையினரின் பாதுகாப்பு பறிபோவதற்கு காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சினிமா வசனம் மற்றும் வெட்டி பேச்சு பேசும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரும் முழு பொறுப்பேற்க வேண்டும்!
திரு. @mkstalin அவர்களே- இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள்!
காவலர் முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் , அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் , உரிய நிதி உதவியும் வழங்கிட ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உருப்பினரும், கழகத்தின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவரும்,
அனைவராலும் 'கானா' என்று பாசத்தோடு அழைப்பவருமான
திரு. V. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களோடு மிகவும் நெருங்கிப் பழகியவரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவருமான அன்பு அண்ணன் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்கள், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர், கழக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர். 1998-ல் திருநெல்வேலியில் கழக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு, இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.
அன்பு அண்ணன் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்து வாடும், அவரது மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான
திரு. V.K.P. சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் . அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் திரு.பாரதிராஜா அவர்கள் இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
ஊடகவியலாளர் திரு. @SavukkuOfficial வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் @mkstalin மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.
இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், @AIADMKOfficial பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தமிழ்நாட்டில் தினந்தோறும் தொடரும் கொலை சம்பவங்கள் !
தடுக்கத்தவறிய ஸ்டாலின் மாடல் அரசு !
அச்சத்தில் தமிழக மக்கள் !
-------------------------------
நேற்றைய தினம் (19.03.2025)
ஒரே நாளில் …
●மதுரை பெருங்குடி அருகே சிவகங்கையைச் சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
●கோவை மதுக்கரையில் ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
●ஈரோடு நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த தம்பதியினர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழப்பு; மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
●சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக்கொலை.
அதுபோக, கடந்த 24 மணி நேரத்தில் 11 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
"சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று முதலமைச்சர் திரு. @mkstalin நேற்று சட்டப்பேரவையில் சொல்லிக்கொண்டு இருந்தபோது வந்த செய்திகள் இவை.
Daily Status Report கொடுப்பது போல, Daily Murder Report,
Daily POCSO Report எல்லாம் கொடுக்க வைத்துள்ளது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஆகப்பெரும் சாதனை.
இதை விட கொடுமையாக சட்டம் ஒழுங்கின் நிலை தமிழ்நாட்டில் முன் எப்போதும் இருந்ததில்லை.
சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை இருக்கிறதோ என்று எண்ணதோன்றுகிறது.
"குற்றம் நடந்தால் கைது செய்கிறோம்" என்றெல்லாம் சொல்லி பொறுப்பை தட்டிக்கழிப்பது அதிகார மமதையின் உச்சம் என்றே எண்ணவும் தோன்றுகிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை என ஒன்று இருப்பதாகவோ, அத்துறையின் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகள் அச்சப்படுவதாகவோ தெரியவில்லை; அதற்கு நாள்தோறும் பட்டப்பகலில் நடக்கும் கொலை சம்பவங்களே சாட்சி!
மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வீட்டிற்கு வந்தால் தான் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் தான் @mkstalin மாடல் திமுக ஆட்சியிம் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.
@AIADMKOfficialThis media couldn't be displayed. See it on the original post. -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக திரு. ஜாஹீர் உசேன் கூறியும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
-நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி திரு. ஜாஹீர் உசேன் கொலை வழக்கு குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#tnassembly -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
🚀 Saluting the resilience of #sunitawillams & #butchwilmore
For Surviving unplanned 9 long months in space, facing uncertainty & challenges,
Especially @Astro_Suni ! ✨,
She stood strong—an epitome of courage & determination. Her journey is not just about space exploration but about women’s strength & empowerment. As an Indian-origin astronaut, her exemplary journey is a testament to perseverance.
Welcome home Crew9 -Team of four🌍, Your story will continue to inspire generations.
@NASA @SpaceX #dragon
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதே போல், நேற்று கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை; ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.
ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் உங்கள் தந்தையின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார்.
இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள் திரு. @mkstalin அவர்களே? வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, "அது தனிப்பட்ட பிரச்சனை" என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே?
இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?
உங்கள் வழிக்கே வருகிறேன்- தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?
"கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது? ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், "தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
திரு. ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Deeply saddened by the passing of
Dr. Debendra Pradhan, former Minister in the Honourable Vajpayee Cabinet and father of Hon’ble Union Education Minister Shri Dharmendra Pradhan.
On behalf of the AIADMK,
I extend my heartfelt condolences to
Shri @dpradhanbjp and his family.
May his soul rest in eternal peace under the grace of the Almighty.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும் ,
நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@PremallathaDmdk
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK reposted
AIADMK
@AIADMKOfficial
சட்டப்பேரவையில் முதல்வர்,அமைச்சர்கள் பேசும் போதும் மட்டும் நேரலை செய்கிறார்கள்.
பேரவையில் எதிர்கட்சியினர் பேசுவது முழுவதுமாக நேரலை செய்யப்படுவதில்லை.
அதிமுகவினர் பேசுவதை நேரலை செய்ய வலியுறுத்தி பலமுறை வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
சபாநாயகராக @AppavuSpeaker சரியாக செயல்படவில்லை,
ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
நடுநிலையோடு பேரவையை நடத்தக் கூடியவர் தேவை.
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க,
ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார்,
"FAILURE மாடல்அரசின் விளம்பர மாடல்”
திரு. @mkstalin.
உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.
தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?
உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே ,
மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தான்!
தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல்,
"ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்!
பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால்,
திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்!
72 ஆண்டுகால தமிழ்நாட்டு
ஆட்சிகளின் மொத்த கடனையும்
4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் திரு. @mkstalin தான்!
இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் "தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்" என்பது மக்களின் கருத்து .
இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE..!
#stalinbudget_simplywaste
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத் துறை அமைச்சர் @PKSekarBabu சென்றிருந்த போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்ட போது, "திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்" என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப் படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு!
திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
@RailMinIndia @GMSRailway
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
நேற்றைய தினம், ஒரு செய்தி பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் வந்துள்ளன, அமலாக்கத்துறை ஒரு செய்தியை வெளியிட்டது, அதில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முழுமையாக முடிவடைகின்ற பொழுது,
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது.
இந்த அரசு அதைப்பற்றி எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியிடவில்லை. அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி , அந்த ரெய்டு மூலமாக 1000கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டும், இந்த அரசு எந்த செய்தியும் வெளியிடப்படாத காரணத்தினால், அதை நாங்கள் சட்டமன்றத்திலே குறிப்பிட்டு இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி வெளிநடப்பு செய்திருக்கிறோம். @mkstalin
#stalinஊழல்அரசே_ராஜினாமாசெய்
#tasmacscam_resignstalin -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
#aiadmk extends its heartfelt wishes to everyone celebrating Holi!
May this festival of colors bring joy, prosperity, and unity among all.
Let us strengthen the bonds of brotherhood and work towards a brighter, harmonious future.
Wishing you and your family a happy and colorful Holi! #happyholi
#festivalofcolors @AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?
திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில்,
அன்றே இந்த விடியா திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா?
அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்..
"வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க, என தெரியாமல் , யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும்
திரு. @mkstalin அவர்களே-
வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது ,
சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது ,
இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது ,
விடியா ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது , மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் திரு. @mkstalin ?
கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.
கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு
கைகோர்த்தது முதல் ,
இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் @arivalayam -திற்கு , @AIADMKOfficial பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?
மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்?
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியே சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் ?
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?
3வது மாடியில் CBI ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?
ஆனால் , பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அஇஅதிமுக.
மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் @AIADMKOfficial நடத்திய மக்களுக்கான ஆட்சி; உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் "தமிழ்நாடு மாடல்" ஆட்சி!
ஆனால்,
ஒன்றிற்கும் உதவாத,
உருப்படாத ஒரு வெற்று மாடல்
அரசை நடத்தி கொண்டு,
தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு,
பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள்,
மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான் !
அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் @mkstalin வீரவசனம் பேசுகிறீர்கள்?
எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்-
உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா?
அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா?
எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்!
பாத்துக்கலாம் !
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
-
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
Thanks to Deputy Chief Minister
of Andhra Pradesh
Thiru. @PawanKalyan Avl,
on wishing for 53rd Foundation Day of Our party @AIADMKOfficial ,
Under my leadership , that strives to uphold the values of Equity, Social Justice and Secularism, and envisioned on a governance model of "Everything for Everyone" in the way of our leaders Puratchi Thalaivar MGR and Puratchi Thalaivi Amma.
சமத்துவம்-சமூகநீதி தழைக்க, ஜாதி-மதசார்பற்று அனைவரும் அனைத்தும் பெற, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம் @AIADMKOfficial-ன் 53வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர்
திரு. @PawanKalyan அவர்களுக்கு நன்றி!
#aiadmk53 -
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
@EPSTamilNadu
அரசின் மக்கள் நலத்திட்டங்களால் தாய்த்தமிழ் உறவுகள் சிறப்புற பயனடைந்து, அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் வளமும் ஆற்றலும் மிக்க தமிழகத்தை மென்மேலும் வெற்றிநடைபோடும் தமிழகமாக தொடர்வோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். #newyear2021





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































