என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன்
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை,
மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள்
கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள்
என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்ஷரா ஹாசன்,
எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள்,
உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன்.
என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக!
- உங்கள் நான்,
- கமல் ஹாசன்.
Kamal Haasan
Kamal Haasan (born 7 November 1954) is an Indian actor, filmmaker and politician, currently serving as a Member of Parliament, Rajya Sabha for Tamil Nadu. He is an actor, director, producer, screenwriter, playback singer and lyricist who works primarily in Tamil cinema. He has also worked as an assistant director, choreographer, editor, make-up artist, narrator, television host, and a distributor of films. He founded a magazine, Maiam (lit. Center), which he edited, and has written over 100 poems and some books. He has made over 230 films in Tamil, Telugu, Malayalam, Hindi, Kannada and Bengali. He was conferred the Kalaimamani in 1978, the Padma Shri in 1990, the Padma Bhushan in 2014, and the Order of Arts and Letters (Chevalier) by the Government of France in 2016. He was invited by the Academy of Motion Picture Arts and Sciences in 2025 to become a member of its actors' branch. More on Wikipedia
-
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும்
என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு
இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
www.sindhai.com/essays/perumal-murugan-on-the-corruption-… -
Kamal Haasan
@ikamalhaasan
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.
அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.
அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.
‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.
நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்”
சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.
சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.
அன்புடன்,
முருகனின் நண்பன், தமிழின் காதலன்
கமல்ஹாசன். -
Kamal Haasan
@ikamalhaasan
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.
அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும். -
Kamal Haasan
@ikamalhaasan
எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்கும் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆளுநர் பதவி ஆழமான அரசியலமைப்புப் பொறுப்பைச் சுமக்கிறது. அரசியலமைப்பைக் காப்பது, மக்கள் தந்த தீர்ப்பை மதிப்பது, ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்கும் இடையே ஆக்கபூர்வமான இணைப்பாகத் திகழ்வது ஆகியவை ஆளுநரின் அடிப்படைக் கடமைகள்.
திரு. அர்லேகர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறுதியான பாலமாக விளங்குவார் என நம்புகிறேன். அந்தப் பாலத்தின் வழியே தமிழ்நாட்டின் குரல் ஒலிக்க வேண்டும்; தமிழ் மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தி, அமைப்புகளுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் பதவிக்காலமாக இது அமைய வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்நோக்குகிறது.
‘வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்’ - என்கிறார் வள்ளுவர்.
வெற்றி தருவது அதிகாரம் அல்ல; நடுவுநிலைமை தவறாத நேர்மையே. அந்த நேர்மையோடு ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறேன்.
புதிய அத்தியாயம் தொடங்கட்டும்.
@rajendraarlekar @lokbhavan_tn -
Kamal Haasan
@ikamalhaasan
He made the baritone iconic, the pause dramatic, and the raised eyebrow a plot twist. Amit Ji can make even a simple “Deviyon aur Sajjano” sound like a blockbuster opening. The man has always been in a league of his own.
Happy Birthday, Angry Young Man! @SrBachchan -
Kamal Haasan
@ikamalhaasan
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் இரண்டு சிறுத்தைகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
தங்கம், வெள்ளி, வெண்கலம் என வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார். பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததும், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்ற அந்தக் கடைசி சுற்றும் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ராஜேஷ் ரமேஷ், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார்.
உங்கள் பதக்கங்கள், புழுதி படிந்த மைதானங்களில் கனவு காணும் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்குமானவை. வாழ்த்துகள். சரித்திரம் தொடரட்டும்! -
Kamal Haasan
@ikamalhaasan
Some lives leave you deeply moved. Navi Pillay’s is one such life.
From a family whose roots in South Africa began with her grandparents’ indentured labour, she rose to become a pioneering jurist who stood against apartheid and helped establish rape and systemic sexual violence as acts of genocide under international law.
What an extraordinary journey. The Nobel Peace Prize recognises the remarkable contribution of this South African jurist of Tamil origin to human rights and justice. A moment of immense pride for Tamils everywhere.
சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார்.
என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்! -
Kamal Haasan
@ikamalhaasan
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
Elon Musk
@elonmusk
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license?
Is Ambani the real boss of India?
Dr Aniruddha Malpani, MD
@malpani
The government is more interested in protecting the interests of crony capitalists than of citizens
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து களமாடிவரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் என் அன்புக்குரிய நண்பருமான @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணியவை ஈடேறட்டும், மக்கள் பணி சிறக்கட்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
என் பிரியத்துக்குரிய பெரியவர் திருமிகு. பராசரன் அவர்கட்கு இன்று 100-ஆவது பிறந்தநாள். இந்தியா கண்ட மிகச் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவர். இந்தத் தேசத்தின் உயரிய நீதிமன்றத்தின் முன் நின்று அதன் சட்டவியலை வடித்த மேனாள் அட்டர்னி ஜெனரல்.
எனக்கு நீங்கள் உறவுக்காரர் என்பதையும் விஞ்சும் உங்கள் வாழ்நாள் சாதனைகள்.
மாபெரும் அறிவைச் சுமந்தாலும், அதன் கனத்தால் சளைத்துப்போகாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு பாடம். மாபெரும் புகழ்பெற்ற வழக்கறிஞருக்குப் பின்னால் இருக்கும் அந்தச் சிறந்த மனிதரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன்.
100-ஆவது பிறந்தநாளுக்கு அன்பான நல்வாழ்த்துகள்.
அற்புதமான குடும்பம் வீடெல்லாம் நிரம்பி நிற்கும் அன்பு. இனியேதும் வரம் கேட்கத் தேவையில்லை. இதுபோதும் வேறெங்கும் சொர்க்கம் இல்லை. இருந்து எங்களை வாழ்த்துங்கள்.
உங்கள்
அன்பு
கமல் -
Kamal Haasan
@ikamalhaasan
The patronising tone of this article by @TheEconomist is striking, and its colonial lens is hard to ignore. It is deeply offensive that a British publication should lecture India on conservation when British colonial rule saw our lions and tigers hunted to the brink of extinction. Today, India is bringing them back.
Since ancient times Indians have understood that humans and animals can share a landscape. Tamil Nadu’s Jallikattu is one living expression of that ancient harmony. These achievements deserve to be celebrated and championed, not viewed through a patronising colonial lens.
India’s Project Cheetah has gone from an audacious idea to 60 cheetahs, 41 born in India. There were initial setbacks, including adult deaths and cub mortality, but the Indian Government persevered, learnt and adapted. It is an extraordinary moment of genuine national pride: India has achieved the world’s first intercontinental translocation of a large carnivore. India has also created the International Big Cat Alliance to take this conservation experience to the world.
Across India, tigers and Asiatic lions are recovering; the Great Indian Bustard in Rajasthan is being returned to the wild; snow leopards in Himachal Pradesh, Nilgiri Tahr and dugongs in Tamil Nadu, and rhinos and red pandas in the North east are being protected and their populations restored. India’s conservation story deserves to be celebrated, studied and taught around the world, not viewed through a colonial hangover that smacks of racism.
The Economist
@TheEconomist
It is extraordinary that India, still a relatively poor country, can achieve something as selfless as protecting other creatures. We explain how it became remarkably good at animal conservation www.economist.com/asia/2026/10/04/how-india-saved-its-tig…
-
Kamal Haasan
@ikamalhaasan
Heartbreaking news of Nana Patekar Ji’s passing. An extraordinary artist and an even greater human being. The man was a force of nature, and he uplifted the lives of those around him.
Beyond the screen, his work helping farmers in Maharashtra and his volunteer service during the Kargil War spoke volumes about his deep sense of duty. My deepest condolences to his family and his legions of fans. -
Kamal Haasan
@ikamalhaasan
I have written to the Chief Election Commissioner urging him to meet Opposition MPs at Samvidhan Bhavan in Parliament. @ECISVEEP
The Election Commission is the guardian of every Indian’s right to vote. When that trust is under strain, the CEC must meet elected representatives, address their concerns and reaffirm the Commission’s independence and impartiality.
The time for dialogue and corrective action is now. -
Kamal Haasan
@ikamalhaasan
My warm wishes to Hon. Prime Minister Shri Narendra Modi ji on completing 25 years in public office. 25 years in public office is, above all, a testament to the trust and love of the people. My own journey of 70 years in public life has been sustained by the trust and love of the people.
Last year, when I met him after taking my oath as an MP, he was gracious enough to give time to a first-time MP. Irrespective of our political affiliations, we spoke of our hopes and dreams for India, and of our shared duty to build a stronger nation and a better future for generations to come.
@narendramodi @PMOIndia -
Kamal Haasan
@ikamalhaasan
The secret of getting ahead is getting started - Mark Twain
My congratulations to the entire Indian contingent on a magnificent Asian Games campaign. Now, the next journey begins. 🇮🇳 -
Kamal Haasan
@ikamalhaasan
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில்,
இளமையுடன் உயிர் நீத்தார்.
அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள்
நானும் உளேன்.
- கமல் ஹாசன்
Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did.
- Kamal Haasan -
Kamal Haasan
@ikamalhaasan
Gandhi’s great challenge to independent India was never “follow me.” It was: think for yourself.
In today's modern age of political polarisation, instant opinions and viral outrage, what does Gandhi mean to India? Perhaps, more than ever, it means this: never surrender your political conscience to any party, ideology, crowd, influencer or algorithm.
Happy Gandhi Jayanti! -
Kamal Haasan
@ikamalhaasan
Happy & Proud of @Rajkumar_KP. Excellent work and a well-earned National Honour.
@RKFI @turmericmediaTM -
Kamal Haasan
@ikamalhaasan
பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல் எதுவரைக்கும் செல்லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்டியிருக்கிறது. பண பலத்துக்கு அஞ்சாமல் இதை வெளிக்கொண்டுவந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீளவேண்டும்.
இனியொரு சம்பவம் இதுபோல் நடக்கலாகாது. -
Kamal Haasan
@ikamalhaasan
இன்று தமிழ்நாடு உடலுறுப்பு தான நாள்.
நானும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் முழு உடல் தானம் செய்வதை ஒரு தொண்டாகவே செய்துவருகிறோம். இயன்றோர் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்பதை ஒரு பிரச்சாரமாகவும் முன்னெடுத்துவருகிறோம்.
ஒருவர் செய்யும் உடலுறுப்பு தானம், பலருக்கு உயிரும் வாழ்வும் ஆகும்.
‘அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ என்கிற வள்ளுவ ஆசானின் வாக்குக்கு ஏற்ப, நாம் செய்த பணிகள் நமது தடங்களாக இந்த உலகில் இருக்கும் என்பது உண்மைதான். அதே போல் நம் உறுப்புகளை தானம் செய்வதும் அதற்கு இணையான மகத்தான, பயனுள்ள காரியம்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
To that young mind hiding inside a healthy 95 year old body. I take this opportunity to rejoice this young mind’s journey. Live on Singeetham gaaru.
Looking forward to a healthy 100
Yours
Kamal Haasan -
Kamal Haasan
@ikamalhaasan
My warmest wishes to Hon’ble Prime Minister Thiru @narendramodi ji on his birthday.
May the year ahead bring you good health, strength and continued opportunities to serve our great nation.
@PMOindia -
Kamal Haasan
@ikamalhaasan
இன்றைய தினத்தை, ‘சமூகநீதி நாள்’ எனக் கொண்டாடுகிறோம். அதன் காரணகர்த்தராக விளங்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று.
எந்நாளும் மறக்கவொண்ணாச் சிந்தனைகளை சமூக நீதிக்காகப் பரப்பிவந்த புரட்சியாளரை நன்றியோடு கொண்டாடுவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
தன் வாழ்நாள் முழுக்க தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே சிந்தித்திருந்த பெருமனிதர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவரை நினைவுகொள்ளும் என் வாழ்த்துகள் சேர்க.
-
Kamal Haasan
@ikamalhaasan
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.
நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும்.
அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு, புரட்சி போன்ற சொற்களை, சொற்களாக அல்லாமல் கருத்துருவாக்கங்களாகத் தமிழருக்கு அறிமுகம் செய்த என் பிரியமாகவிஞன் பாரதிக்கு என் வணக்கங்கள். அவர்தம் நினைவு நாளில், காலத்தால் சோபையிழந்து போய்விடாத அவரது கவிதைகளை மனங்கொள்வோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
I have written to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, with the following recommendations to strengthen the upcoming Gram Sabha meetings on 2 October as more meaningful institutions of grassroots democracy:
• Enhance the honorarium of Village Panchayat representatives.
• Give Gram Sabhas a decisive voice on local TASMAC outlets.
• Increase awareness and public participation.
• Ensure time-bound action on Gram Sabha resolutions.
• Give citizens a greater say in the Gram Sabha agenda.
• Strengthen research and capacity-building in local governance.
• Make village development planning genuinely participatory.
• Build a stronger culture of grassroots accountability.
Gandhiji’s vision of Gram Swaraj was rooted in empowered villages and participatory democracy. The best way to honour his legacy would be for Tamil Nadu to become India’s model State for village governance.
@TVKVijayHQ @CMOTamilnadu
#gramsabha -
Kamal Haasan
@ikamalhaasan
தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த சுதந்திர முழக்கத்துக்குச் சொந்தக்காரர், ஆங்கிலப் பேராதிபத்தியத்துக்கு எதிராக மேலைக்கடலில் கப்பல் விட்டு விடுதலை வேட்கை என்னும் நெருப்பைப் பரவச் செய்த மாவீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் இன்று. நமக்கெல்லாம் உத்வேகம் தரும் அவரைப் போற்றுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
‘தான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்’ என வாழும் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்துகிறேன். கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் ஒருபோதும் தயங்காதிருப்போம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Heartiest birthday wishes to Shri @PawanKalyan Garu, Deputy Chief Minister of Andhra Pradesh.
Wishing you good health, strength and a long, fulfilling journey of meaningful public service. -
Kamal Haasan
@ikamalhaasan
Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி @Sowmiyanbumani அவர்களைப் பாராட்டுகிறேன்.
Sowmiya Anbumani
@Sowmiyanbumani
மகளிர், மதுவிலக்கு, மாற்றுத்திறனாளி மற்றும் வேளாண்மை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியபோது.!
#pmk #tnassemblyThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
We teach our kids one thing in school. We test them on another for college admissions!
Government’s Vineet Joshi Committee has admitted this mismatch between school education and college entrance exams.
For NEET, the first step must be abolition. Clear Tamil Nadu’s NEET Exemption Bill, still awaiting Presidential assent. Don’t reform an unfair system. End it.
For other entrance exams, the Committee has made sensible suggestions: give Class 12 marks greater weightage, offer multiple attempts through the year, and cap coaching at 2–3 hours a day. -
Kamal Haasan
@ikamalhaasan
கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்டன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு.
-
Kamal Haasan
@ikamalhaasan
மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.
-
Kamal Haasan
@ikamalhaasan
‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.
அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின் வழியாக வளர்ந்தது சினிமா. அதன் அத்தனை மாற்றங்களிலும் பெரும்பங்களிப்பாற்றிய ஆளுமை, பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைந்து விட்டார்.
பிராசஸிங் மற்றும் கலர் கரெக்ஷன், ஒலித் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர். சினிமா சார்ந்த பல தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர காரணமானவர்.
ஃபிலிம் சுருளில் இருந்து திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாறியபோது சக கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார். பல முன்னணி ஒளிப்பதிவாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தொழில்நுட்ப வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அந்த வகையில் தன் வாழ்நாளில் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 500 படங்களையேனும் ஒலியே இல்லாமல் பார்த்திருப்பார். அது அத்தனை சுலபமான வேலை அல்ல.
தென்னிந்திய சினிமா தனது தூண்களுள் ஒன்றை இழந்திருக்கிறது. சாதாரணத் தூண் அல்ல. கல் தூண். மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் உணர்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல எனும் மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
@thirumaofficial -
Kamal Haasan
@ikamalhaasan
‘கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்கிற பாரதி வரிகள் என்றும் சாஸ்வதம். சக இந்தியர்க்கு சுதந்திர தின வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Thanks to all who wished me well on my 67 years of cinema.
Out of those 67, I think I can only salvage about 20 years as my actual learning. The rest was going with the flow of the wastewater.
The uplifting hope is, however dark the waterway turns out to be, the wait for a confluence with the largest singular form called the collective cinema, an unchannelled sea. We are all flowing towards it - artists, audience, and all.
So I guess what I have salvaged as experience can be improved upon before people stop counting my years in this field and start looking for better numbers elsewhere.
Since the Lumière brothers’ first public film screening in December 1895, the film industry has been around for approximately 130 years and 8 months. My team reminded me that I have been around for 67 of those years, more than half of the entire history of the film industry! That is a rather extraordinary thought to take in. Yet, in my own account, I can claim only about 20 years as actual learning.
I am probably the oldest of the Gen Z in cinema. 😊🙏 -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை மகிழ்வளிக்கிறது.
நீட் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதும், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுமே அத்தீர்மானங்கள்.
பா.ஜ.க. நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடும் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் நலனுக்கான இந்த ஒற்றுமைப் போக்கு தொடரவேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
My unstarred question in Parliament to the Ministry of Planning sought to understand what happens to the ideas created in Atal Tinkering Labs.
Tamil Nadu has 975 operational ATLs, with 9.19 lakh students engaged and 36,509 prototypes developed.
The next step must be to take the best of these ideas beyond the lab: provide patent support, connect promising projects to Atal Incubation Centres, offer milestone-based seed funding, and help them find industry partners and real-world pilot opportunities.
We must measure the journey from prototype to patent, incubation, capital, pilot deployment and venture creation.
The objective should be to ensure that a promising idea does not end with a school project and a prototype, but gets the institutional support to become a viable venture. -
Kamal Haasan
@ikamalhaasan
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
My unstarred question in Parliament to the Ministry of Corporate Affairs sought to understand how the PM Internship Scheme is performing in Tamil Nadu. The Government's reply shows that the scheme has evolved, but participation and completion must improve.
The PM Internship Scheme is a commendable initiative with the potential to become a meaningful bridge between education and employment. The next phase should focus on outcomes: introduce a mobility and residential stipend for interns placed outside their home district; integrate PMIS with State Skill Missions, universities, ITIs and employment exchanges; incentivise companies based on internship completion and subsequent employment outcomes rather than vacancies posted; and deploy AI-based candidate matching that aligns internships with a young person's qualifications, skills, preferred location and career aspirations.
The measure of success should not be the number of internship offers announced, but the number of young Indians who complete them and confidently transition into long-term employment.
(1/5)
Kamal Haasan
@ikamalhaasan
(2/5)
Kamal Haasan
@ikamalhaasan
(3/5)
Kamal Haasan
@ikamalhaasan
(4/5)
Kamal Haasan
@ikamalhaasan
(5/5)
-
Kamal Haasan
@ikamalhaasan
Team India finishes 4th among 74 nations at the Glasgow 2026 Commonwealth Games, with 39 medals: 13 Gold, 17 Silver and 9 Bronze. My heartfelt congratulations to the entire contingent.
Before the applause comes the silence of empty stadiums, pre-dawn training, disciplined diets, and relentless repetition. Our athletes deserve not just our admiration in victory, but our encouragement throughout the journey. They are role models for the nation.
#cwg2026 🇮🇳 -
Kamal Haasan
@ikamalhaasan
My unstarred Question in Parliament to the Ministry of Power sought to determine whether Tamil Nadu is receiving adequate electricity to meet its growing demand.
Power is more than megawatts on a spreadsheet. It is the electricity that keeps a factory running through the night, powers a student's study lamp and sustains a farmer's livelihood.
The data placed before Parliament shows that Tamil Nadu's peak electricity demand has grown significantly over the last five years, while its allocation from Central Generating Stations has not kept pace.
Across Tamil Nadu, citizens have struggled with power cuts and outages even as the official narrative suggests everything is well. Tamil Nadu powers India's growth, it deserves transparent planning, timely investments and a fair share of the nation's power infrastructure.
#energyjustice #poweringtamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
My unstarred Question in Parliament to the Ministry of Jal Shakti sought clarity on the status of the Mekedatu project and the safeguards protecting Tamil Nadu's water rights.
Cauvery is shared by States and governed by law. Respecting both is essential to a lasting solution.
I welcome the Union Government's confirmation that any future appraisal of the Mekedatu DPR will be undertaken only in accordance with the Cauvery Water Disputes Tribunal Award and the Hon'ble Supreme Court's judgment. Those legal safeguards must remain the foundation of every decision affecting the Cauvery basin.
#mekedatudam -
Kamal Haasan
@ikamalhaasan
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்துகிறேன். சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Vox Populi 🇮🇳
-
Kamal Haasan
@ikamalhaasan
Glad to see dialogue replacing confrontation. Dissent deserves dialogue. This is democracy in action.
Pellet guns, electric shock batons and nail-studded lathis have no place in the land of Bapu.
Equally, attacks on security personnel and public property must be examined fairly. Accountability cannot be selective.
This moment and oppurtunity is bigger than paper leaks. I urge a National Commission on Education and Examination Reform, with a three-month roadmap to restore trust in examinations, reduce academic stress and modernise education, one that also hears Tamil Nadu's voice, where young Anitha's death first showed the human cost of a single high-stakes test.
The Government's willingness to engage is welcome. Now let us ensure that dialogue leads to lasting reform. The road ahead is long, but Indians must walk it together.
#dobetterindia #togetherforchange -
Kamal Haasan
@ikamalhaasan
We should have listened when one child cried.
Instead, we waited until far too many of our children died.
A system where coaching replaces learning, anxiety replaces curiosity, and criminality replaces merit is rotten.
A nation has failed when its children are met with barricades and batons instead of answers.
@Wangchuk66, the nation will need your conscience for the journey ahead. Please end your fast.
To the children of India: You are the best of us. You have done your duty. It is now time for the country to do its duty by you. May your dreams forever be bigger than our failures.
@cockroachisback #cjpprotest -
Kamal Haasan
@ikamalhaasan
மறந்தாலன்றோ நினைப்பதற்கு என்ற கருத்து இருப்பினும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகள் கூடுதலாகத்தான் மனதில் வரும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
My dear @mammukka,
Congratulations on your fourth National Award. You once promised me you would overtake me in the number of National Awards. As always, you are a man of your word! Here's to many more accolades, my friend.
Congratulations as well to all the winners of the 72nd National Film Awards. Special congratulations to @Nagashwin7 @vyjayanthifilms and entire #kalki2898ad family. Indian cinema is richer because of your excellence. -
Kamal Haasan
@ikamalhaasan
Heartfelt congratulations to @Rajkumar_KP on winning the National Award for Best Director, a deeply deserved honour for your clarity of directorial vision and storytelling. Kudos to @gvprakash for Best Background Music and @kalaivananoffl for Best Editing. Your work elevated Amaran at every step.
To @Siva_Kartikeyan and @Sai_Pallavi92, some performances transcend awards. Thank you for bringing such truth, grace and conviction to Amaran. Your portrayal of Major Mukund Varadarajan and Indhu will endure forever in Indian cinema history. Every accolade Amaran receives further immortalises the courage and sacrifice of Major Mukund Varadarajan.
For 46 years, @RKFI has championed cinema that entertains, enlightens and endures. These national honours reaffirm our commitment to authentic Indian storytelling that spreads joy and instils pride.
@turmericmediaTM
#amaran #nationalfilmawardsThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
Glad Simulacra has found a home on Waves OTT. There can be no greater satisfaction than seeing a work earn its place on the strength of its conviction.
It makes me especially happy to see Akshara as part of this endeavour. There is a quiet joy in watching a sincere film find its audience, one step at a time.
RKFI has always believed that independent cinema deserves encouragement, irrespective of where it comes from or who makes it. Supporting independent voices has been one of our enduring privileges.
The rest belongs to the discerning audiences. May they discover Simulacra with the generosity and curiosity with which it was made.
www.wavespb.com/media/Simulacra/39527602
#aksharahaasan #simulacra -
Kamal Haasan
@ikamalhaasan
இன்று நம் பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்க அன்பு நண்பர் பாரதிராஜா நம்மிடையே இல்லையெனினும் அவர் படைப்புகள் இருக்கின்றன. அவர் பாராட்டிய நட்பை என் நெஞ்சம் நெகிழ்ந்து நினைவுகூர்கிறது.
-
Kamal Haasan
@ikamalhaasan
இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.
-
Kamal Haasan
@ikamalhaasan
கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பூமணியின் மறைவு வருந்தற்குரியது. ‘கருவேலம்பூக்கள்’ படத்தின் வழியாக திரைக்கும் பங்களித்த மூத்தவரை இழந்து வருந்தும் குடும்பத்தாருக்கும், தீவிர தமிழிலக்கிய வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பாட்டுக்குள் கவித்துவத்தைப் பொதிந்துவைத்த கவிதைத் தோழர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழிய நீடு. @Vairamuthu
-
Kamal Haasan
@ikamalhaasan
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, என் ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு.
-
Kamal Haasan
@ikamalhaasan
செவிக்கினிய கர்நாடக இசையை என் வாய்க்கும் எட்டவைத்த ஆசான் பாலமுரளிகிருஷ்ணா, இசைக்காகப் பிறந்த நாள் இன்று.
வணங்குகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Precious minerals are not more precious than human lives or our environment. The extraction of any mineral, however valuable, must rest on two non-negotiables: informed consent of local communities and rigorous scientific assessment of its environmental and public health impacts. Without these, development loses its legitimacy.
I stand with the people of Kanyakumari in seeking a re-examination of the IREL project and the Government Order extending its land allocation. A one-year extension on paper can leave generations with irreversible health consequences. Tamil Nadu's coasts are living ecosystems, not just mineral deposits. Listen to the people. Protect our shores.
சுற்றுச்சூழலைவிட, மனித உயிர்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட்டு, பெறப்படும் முழுமையான சம்மதம். மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூர்வமான துல்லியமான ஆய்வு. இவை இரண்டும் இல்லையென்றால் அந்தத் திட்டம் தனது தார்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆர்.இ.எல் (IREL) திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
காகிதத்தில் கொடுக்கப்படும் ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாட்டின் கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள்.
மக்களின் குரலுக்குச் செவி கொடுங்கள். நம் கடற்கரைகளைப் பாதுகாத்திடுங்கள்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
-
Kamal Haasan
@ikamalhaasan
தர்மமே வெல்லும்!
#dharman
#thalaivar173
#superstarrajinikanth
@rajinikanth #mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @RKFI @turmericmediaTM @magizhmandram -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
Happy Birthday, Rahul ji.
You’ve walked the length of India, carrying a message of love, secularism, and progress, reminding us that politics must connect, not divide.
Keep walking, keep listening.
@rahulgandhi -
Kamal Haasan
@ikamalhaasan
Totally agree with our very own @satyanadella. If AI LLM’s are the fuel of this century, human wisdom will be its engine. Must read.
-
Kamal Haasan
@ikamalhaasan
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.
-
Kamal Haasan
@ikamalhaasan
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் வாழ்க, குரலாக.
-
Kamal Haasan
@ikamalhaasan
என்றும் உள்ளவர் - கருத்தாக, கலையாக, கருணையாக. கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் அவரையும் அவர் புகழையும் வாழ்த்துவது என் பெருமை.
-
Kamal Haasan
@ikamalhaasan
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja
#hbdilaiyaraaja -
Kamal Haasan
@ikamalhaasan
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
This media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
-
Kamal Haasan
@ikamalhaasan
My two requests:
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
My appeal to our Industry.
@ficci_india @producers_guild @tfpcin @TFPCOffl @kfpaofficial @TFCCofficial @imppa_official @federation_film @fwicemum @aifecsocial @aicwaofficial @tfapatn #southindianfilmchamberofcommerce #northernindiamotionpicturesassociation #indianfilmtelevisionproducerscouncil #fefsi #southindianartistesassociation -
Kamal Haasan
@ikamalhaasan
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்.
#puducherry #nrangaswamy -
Kamal Haasan
@ikamalhaasan
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#karuppu -
Kamal Haasan
@ikamalhaasan
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன். -
Kamal Haasan
@ikamalhaasan
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது.
சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர்.
அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
-
Kamal Haasan
@ikamalhaasan
காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு
உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு
உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு
உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை
உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்கு என் வணக்கம். -
Kamal Haasan
@ikamalhaasan
Deeply saddened by the passing of Leena Jaisani, Deputy Secretary General and Head of Media & Entertainment at FICCI.
My dear friend Leena Ji, we worked together, though you gave far more than you ever claimed. FICCI, born of the visionary ideals of M. K. Gandhi, found in you a true torchbearer, carrying that legacy with clarity and purpose. My heartfelt condolences to her family and friends.
@ficci_india -
Kamal Haasan
@ikamalhaasan
வாக்களிப்பது கடமை, உரிமை, பெருமை. தமிழே எழுவாய். தமிழே வெல்வாய்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழே எழுவாய்!
தமிழே வெல்வாய்!
#onemoretimeThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
திருச்சி மண்டலத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. @KN_NEHRU அவர்கள்,
திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்கள்,
திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர், முனைவர் @InigoIrudayaraj அவர்கள்,
ஶ்ரீரங்கம் தொகுதியின் வேட்பாளர் திரு. எஸ். துரைராஜ் அவர்கள்
லால்குடி தொகுதியின் வேட்பாளர் திரு. @Parivallal1975 அவர்கள்
ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டை மீண்டும் ஆள்வதற்கான பொறுப்பை திரு. @mkstalin அவர்களிடம் ஒப்படைக்க திருச்சி மண்டலம் தயாராகிவிட்டதன் எழுச்சியை காண முடிந்தது.
தமிழே எழுவாய்
தமிழே வெல்வாய்
#தலைவன்இருக்கின்றான்
@Udhaystalin @maiamofficial @MaiamOfficialIT
@arivalayam @DMKITwing
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
“வெல்லும் படை இது
விலகிடு விலகிடு”
தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் #தலைவன்இருக்கின்றான் இனி உங்கள் வசம். நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள்.
உங்கள்,
கஹா.
youtu.be/L3LYzZHYmKo
@mkstalin @Udhaystalin @maiamofficial @MaiamOfficialIT
@arivalayam @DMKITwingThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளர் திரு. @V_Senthilbalaji அவர்களுக்கும், அவிநாசி தொகுதியின் வேட்பாளர் மருத்துவர் @Kokilamani_Dmk அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
என்றும் தமிழகம் வென்றிட வேர்விட விதையாய் செடியாய் மரமாய் காடாய் நாங்களும் நின்றிடுவோம், ஆம் நாங்களும் நின்றிடுவோமென கொங்கு மக்கள் ஆர்ப்பரித்து வாழ்த்தினார்கள்.
#தலைவன்இருக்கின்றான்
@maiamofficial @arivalayam @DMKITwing -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழே எழுவாய்
தமிழே வெல்வாய்
விரைவில்.
#தலைவன்இருக்கின்றான்
@mkstalin @Udhaystalin @maiamofficial @arivalayam @DMKITwing -
Kamal Haasan
@ikamalhaasan
After the historic fall of delimitation-linked 131st Constitutional Amendment Bill, my colleague @PWilsonDMK has introduced a Private Member’s Bill to implement 33% reservation for women in the Lok Sabha and State Assemblies, without linking it to delimitation.
The Bill also proposes extending the freeze on delimitation till 2051, giving states time to achieve population stabilisation which can be achieved by our North Indian states through genuine women empowerment i.e. providing access to quality education, quality healthcare, and equal employment opportunities for women.
If we are serious about women’s empowerment, 33% reservation must be implemented immediately within the current strength of Parliament.
Any attempt to bring in delimitation through the back door risks undermining India’s federal balance amid existing regional population disparities between the North Indian states and rest of India.
States like Tamil Nadu and other South Indian states, which prioritised women-centric development and population stabilisation, should be seen as models, not penalised with reduced political representation.
I urge the Union Government to convene another special session of the Parliament after the Assembly elections and pass this Bill, or introduce an equivalent government legislation without delay.
@KirenRijiju
#nationsavedfromdivision
#fairdelimitation
P. Wilson
@PWilsonDMK
Today I introduced a private Member's Bill that would have delinked implementation of Women's Reservation in Lok Sabha & Assemblies from census and delimitation & brought into force immediately.
I had given a notice under Rule 267 requesting the Hon. Chairman, RS to permit motion of the Bill. However he refused permission.
My Bill also extended the freeze on delimitation till 2051 and required ratification of 2/3rd majority of States to reallocate Lok Sabha seats.
The Government did not support this Bill. What could have been done so simply was turned into a complicated affair because the BJP has no intention of implementing Women's Reservation. This proves beyond doubt that the BJP led NDA only wants to play politics in the name of #narishakti and sneak in #delimitation.
Instead of shouting from the rooptops, I challenge the BJP to adopt my PMB or bring a Bill similar to mine to implement Women's Reservation without 'ifs and buts' and linkage to delimitation or census.
If they can't, it's further proof that BJP is Bharatiya Jumla Party. -
Kamal Haasan
@ikamalhaasan
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் மகளிர் பேரணி நேற்று சேலம் மாநகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் என் அன்புக்குரிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி.@PremallathaDmdk மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு கலந்து கொண்டேன்.
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் மகளிர் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அந்தச் சாதனைகளைப் பாராட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரணியில் நானும் அவர்களோடு சேர்ந்து நடைபோட்டது உணர்ச்சி மிக்க தருணம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அடையவிருக்கும் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறும் இப்பெருநிகழ்வில் நான் உருவாக்கிய ‘தலைவன் இருக்கின்றான்’ பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி. எழுச்சி மிக்க இந்தப் பாடல் விரைவில் உங்களது செவிகளையும் எட்டும்.
@maiamofficial @arivalayam @DMKITwing @dmdkparty2005 -
Kamal Haasan
@ikamalhaasan
ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்கான செயல்திட்டத்தை, ‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ எனும் தத்துவ முழக்கமாக்கி நமக்களித்த பெருமகனார் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று.
‘சாதியே என் எதிரி’ என நான் தேர்ந்துகொண்ட பயணத்துக்கு விதை போட்டவர் பெரியார் எனில் ஒளி தந்தவர் அம்பேத்கர். அவர் இயற்றித்தந்த அரசியலமைப்புதான் நாம் நிகழ்த்தி வரும் ஜனநாயகப் போரின் மாபெரும் ஆயுதம்.
சாதியை அழித்தொழித்தல், புத்தரும் அவரது தம்மமும், சூத்திரர்கள் யார்?, இந்தியாவில் சாதிகள், விசாவுக்காகக் காத்திருத்தல் ஆகிய அம்பேத்கரின் புத்தகங்கள் இன்றைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டியவை. நமது வாழ்வுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியவை. -
Kamal Haasan
@ikamalhaasan
இயற்கையோடு இயைந்து வாழும் தமிழருக்கு இளவேனில் தொடங்குகிறது. உலகத் தமிழர்களின் வாழ்வு உவந்து செழிக்கட்டும், தமிழினத்தின் பெருமையை உலகறியட்டும், தமிழ்ப் புத்தாண்டு நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
स्थायी गायिका सखी जागो #ashabhosle
-
Kamal Haasan
@ikamalhaasan
The leak of #jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love.
Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns.
I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past. -
Kamal Haasan
@ikamalhaasan
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது.
நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?
போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
வெல்வோம் ஒன்றாக.
Thol. Thirumavalavan
@thirumaofficial
... " நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ...
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் @ikamalhaasan அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.
நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.
அரசியல் ஆதாயத்திற்காகவோ
தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள்
போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும்.
அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்!
மாண்புநிறை அண்ணனுக்கு
மனம்நிறைந்த பாராட்டுகள்!
#மநீம #mnm -
Kamal Haasan
@ikamalhaasan
இது தியாகம் அல்ல; கடமை.
சுய நலம் அல்ல; பொறுமை.
@mkstalin @Udhaystalin @maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
நீர் இன்றி நானில்லை நாமுமில்லை.
நாளையை நமதாக்க நீர் அவசியம் உணர்வீர்!
#worldwaterday -
Kamal Haasan
@ikamalhaasan
செம்மஞ்சள் பிழம்பு
எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார்.
இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார்.
முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது.
நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள்.
நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள்.
பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது.
ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு.
அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது.
கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும்.
அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது.
அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான்.
ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது.
'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்.
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.'
(விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்)
அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது..
நான் ஆசியாவின் பக்கம்.
வாழ்க இந்தியா.
TIMES NOW
@TimesNow
BREAKING || Reports: Iran Targets US-UK Base in Indian Ocean
Iran fires missiles towards Diego Garcia: Reports
No impact on Diego Garcia after strike: Reports
- Ballistic missiles fire at the US-UK base
@srinjoyc1 & @aakaaanksha with more details.This media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification.
சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்.
கமல் ஹாசன். -
Kamal Haasan
@ikamalhaasan
பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்பதை உணர்த்தும் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
I thank Hon’ble Chief Minister Revanth Reddy garu @revanth_anumula and Hon’ble Deputy Chief Minister Mallu Bhatti Vikramarka garu @Bhatti_Mallu, for resurrecting the Telangana Gaddar Film Awards and humbly accept the prestigious Paidi Jairaj Film Award.
In reviving this institution, you have restored more than an honour, you have reaffirmed the vital role such platforms play in recognising artistic courage, cultural memory, and the people’s voice in cinema.
My congratulations to all fellow awardees, and to the entire team for an excellently organised event.
Long live cinema!
#gaddarfilmawards -
Kamal Haasan
@ikamalhaasan
Wishing Comrade Pinarayi Vijayan, Vijayam.
I wish the Chief Minister of Kerala, Shri Pinarayi Vijayan, all the very best for the upcoming election. Above all, I feel that the state, Keralam, is also ende Keralam. Even if some, in their exclusive mindset, attribute an outsider status to me, I remain emotionally attached to Keralam.
Hence, I would urge the beneficiaries of that state (which includes me) to reflect on the past decade and wish him well. Let us make the right decision.
Comrade Vijayan vijayikkatte. Keralamum Vijayikkum.
Ithu ende Abhipraayam.
-Kamal Haasan -
Kamal Haasan
@ikamalhaasan
'வெயிலோடு போய்' சிறுகதை தொகுப்பின் மூலம் என் வாசிப்புக்கு அறிமுகமான பெயர் ச. தமிழ்ச்செல்வன். தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் தன் பங்களிப்புகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சிறுகதைகளின் பங்கு எந்த விதத்தில் இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலான 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்னும் நூலுக்கு அவர் சாகித்திய அகாடமி விருது வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தமிழ்ச்செல்வன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். தொடர்ந்து இயங்குக.
-
Kamal Haasan
@ikamalhaasan
நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது.
ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு @Vairamuthu
‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை. -
Kamal Haasan
@ikamalhaasan
96 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மிகச்சிறிய குழு ஒன்று கடலை நோக்கிய நடைபயணத்தைத் துவங்கினார்கள். அந்தப் பயணம் நிறைவடையும்போது ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது.
சில நேரங்களில் மகத்தான புரட்சிகள், மக்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணைந்து நடப்பதிலிருந்தே தொடங்குகின்றன என்பதுதான் தண்டி யாத்திரை நமக்கு உணர்த்தும் செய்தி.
மறவோம்; இணைவோம்; வெல்வோம்.
#dandimarch -
Kamal Haasan
@ikamalhaasan
On this day in 1930, a group of pedestrians set out for the sea.
By the time they finished, an empire had begun to crumble.
The Dandi March reminds us: sometimes the most powerful revolutions begin simply with people walking together in common cause.
#dandimarch -
Kamal Haasan
@ikamalhaasan
Deeply saddened by the passing of Prof. K. N. Panikkar, one of India’s most respected historians and public intellectuals. A distinguished scholar of modern Indian history, he combined rigorous academic work with a lifelong commitment to secularism and the defence of historical truth.
Prof. Panikkar’s scholarship and moral clarity enriched public discourse and left an enduring mark on Indian historiography.
His passing marks the end of an era. Heartfelt condolences to his family, students, and admirers. -
Kamal Haasan
@ikamalhaasan
Our Men in Blue, back-to-back ICC Men’s T20 World Cup champions! Men’s ICC Cricket World Cup runners-up. Women’s ICC Women’s Cricket World Cup champions.
A testament to India’s deep domestic ecosystem, from the Ranji Trophy to the IPL. @BCCI
Imagine what India could achieve if every sport had such domestic ecosystem. The potential of India’s youth is limitless.
From gullies to grand stadiums, from childhood dreams to world champions - India rises. 🇮🇳
#teamindia #t20worldcup #t20worldchampions -
Kamal Haasan
@ikamalhaasan
பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது. மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை உருவாக்குவோம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்.
பகிர்வோம், உயர்வோம்.
#givetogain #iwd2026 #womensday2026 -
Kamal Haasan
@ikamalhaasan
To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam -
Kamal Haasan
@ikamalhaasan
ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!
புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை
விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை
மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு
இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள்.
இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. @mkstalin அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
A Special reunion with my friend @Rajinikanth.
Every great journey deserves another chapter!
My best to @NelsonDilpkumar and @AnirudhOfficial - and to @RedGiantMovies for powering this collaboration.
#khxrk
#redgiant17This media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
From etched Tamil-Brahmi letters resting in the sands of distant Egypt to the brick-lined streets of Keezhadi whispering through antiquity;
Our ancestors did not merely live; they inscribed, they imagined, they sailed, they built.
Across oceans and millennia, one voice endures.
Tamil - not just ancient, but eternal. Now let us talk to the rest of this world in their language
#tamil #keezhadi -
Kamal Haasan
@ikamalhaasan
மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.
அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.
மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.
தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
என் அன்புத் தம்பி @Siva_Kartikeyan அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
#seyon - The Celebration
➡️ youtu.be/6aYL1T4J9es
#seyonoct2026
#சேயோன்
@Siva_Kartikeyan #mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @RKFI @turmericmediaTM @magizhmandram -
Kamal Haasan
@ikamalhaasan
என்றும் அன்புடன்
#சேயோன்
#seyon
@ikamalhaasan @Siva_Kartikeyan #mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @RKFI @turmericmediaTM @magizhmandram -
Kamal Haasan
@ikamalhaasan
Salute you, Arun Abraham and Sherin Ann John.
Our baby, Alin Sherin Abraham, lived for months within her mother, and ten months embraced by her parents’ boundless love. Now, she will help five other babies live better lives.
By mindset and by heart, you are - and will always remain - loving parents. Please retrieve your happiness through life. You both truly deserve it.
Dear Sherin and Arun,
Yours,
Kamal Haasan -
Kamal Haasan
@ikamalhaasan
ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?
அன்புடை நெஞ்சன்,
கமல் ஹாசன். -
Kamal Haasan
@ikamalhaasan
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார்.
‘மாநிலக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்’ என்று சொல்லி அதை நடத்திக் காட்டினார்.
‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தால் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தினார்.
இப்பெரும் செயல்களைச் சாதித்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று.
அவரைப் போற்றுவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
Proud to see one of the world’s thought leaders, Joining the venerable league of Artistes. Yes. Words can add more meaning to music of this world. Congrats Grammy. Congrats Amjad Ali Khan sahab.
அவருக்குப் பாராட்டு தேவை இல்லை. மகிழ்வோம். வாய்மை வெல்ல வாழ்த்துவோம். சகோதரர்
தலாய் அய்யனுடன் மகிழ்வைப் பகிர்வோம். நீட்டலும் வேண்டோம். மழித்தலும் வேண்டோம். -
Kamal Haasan
@ikamalhaasan
எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அன்றே பாடிவைத்தார்.
'பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்.
பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி…
பாரதத்தின் பெருமை தன்னைப் பாடு, பாடு சோறு எதுக்கு தம்பி!'
நான் ஆசிரியர்களிடமிருந்து ஊக்கம் பெறுகிறவன். பல மாமாங்கங்களுக்கு முன்பு ஒரு பட்ஜெட்டைக் கண்டு நானும் தமிழில் கவிதை புலம்பியது இத்தருணத்தில் நினைவிலாடுகிறது.
'கள்ளிச் செடி பசுவாகிப்
பால் சுரக்கும்
வேப்பம்பூத் தேனெடுக்கும்
பண வண்டு
வறுமைக் கதிர் அறுக்கக்
கானல் நீர் வாய்க்கால்கள்
கற்பனை அறுவடையில்
கனவு நெல் மணிகள்
தெருவோர ஜமீன்தார்கள்
வரி செலுத்த
பஞ்ச ராஜ்ஜியப் பரிபாலனம்
எங்கும் ஓங்கும்'
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட் என்றில்லை; எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது. -
Kamal Haasan
@ikamalhaasan
Lead on Gandhi - A message from Gopalkrishna Gandhi and me.
#leadongandhiThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
“There is no road towards peace. Peace is the road.” - Mohandas Karamchand Gandhi
Today, let’s remember - Bullets can end a life, not an idea. -
Kamal Haasan
@ikamalhaasan
Linkin park!
Linking khadi TO the western world
Thank you
KHHK -
Kamal Haasan
@ikamalhaasan
Deeply saddened by the tragic air crash in Baramati that claimed the life of Shri Ajit Pawar Ji, Hon’ble Deputy Chief Minister of Maharashtra, and others. My condolences to my colleague Smt. @SunetraA_Pawar and to the families of all those who lost their lives. The nation mourns.
-
Kamal Haasan
@ikamalhaasan
The Indian Republic was born when our forefathers chose to throw off the imperial yoke and govern themselves through the Constitution.
Its strength lies in respecting diversity, federalism, and the democratic spirit. As long as the Constitution lives in our conduct, the Republic remains strong.
Happy #republicday to all my fellow Indians 🇮🇳 -
Kamal Haasan
@ikamalhaasan
என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் @mammukka அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு.
நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து.
#mammootty -
Kamal Haasan
@ikamalhaasan
Democracy breathes through the citizen. An informed voter and an engaged citizen are the foundations of a strong nation. On #nationalvotersday, let us renew our faith in the ballot as the most powerful instrument of the people. Jai Hind.
-
Kamal Haasan
@ikamalhaasan
இனத்தையே அழிக்க வருவதன் அடையாளமாக மொழியை அழிக்க வருபவர்களின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கி உயிரையும் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு என் வணக்கங்கள். அவர்கள் நெஞ்சில் ஏந்திய உணர்வை நாமும் ஏந்துவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
புகழ்மிக்க பாடகியும், என் பிரியத்துக்குரிய சகோதரியுமான ஜானகி அவர்களின் புதல்வர் முரளி ஶ்ரீ கிருஷ்ணா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
மகனை இழந்து வாடும் ஜானகியம்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
பெயர் சொன்னாலே நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அவர் மடியில் நானமர்ந்த நினைவுகள் பூ மலர்த்தும். கலையில், அரசியலில், நிர்வாகத்தில் அவர் ஈட்டிய அபிமான உள்ளங்கள் இன்றைக்கும் தொடர்ந்திருக்கும். பொன்மனச் செம்மல் எனக் கொண்டாடும் குரலிருக்கும். எம்ஜிஆர். இன்று பிறந்த நாள். அவர் நாமம் வாழ்க.
-
Kamal Haasan
@ikamalhaasan
‘ஏர்பரந்த வயல்; நீர்பரந்த செறு; நெல்மலிந்த மனை; பொன்மலிந்த மறுகு ’ என நாட்டை தானியப்பொன்னால் தயை செய்து காக்கும் உழவர் நாளில் அவர்தமை வாழ்த்தி மரியாதை செய்வோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழர் பண்பாட்டின் சிகரமெனக் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல். இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி பாராட்டும் இந்நன்னாளில் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்; இதயங்கள் இனிமையால் நிறையட்டும். தமிழ் மண்ணின் செழுமையும், தமிழரின் பெருமையும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.
தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்த் தீ பரவட்டும்
-
Kamal Haasan
@ikamalhaasan
For Art, For Artists, For the Constitution
-
Kamal Haasan
@ikamalhaasan
I was deeply saddened to hear of the passing of Mr. S. Chandran, the son of Mr. Merryland Subramaniam. He was a film producer and the proprietor of the renowned Sri Padmanabha Theatre in Thiruvananthapuram.
More than our professional association and more than the fact that many of my films ran for long periods in his theatres, what truly connected us was our shared love for the arts. He was an ardent admirer of art, with a special interest in photography.
My deepest condolences to the family and friends of Mr. Chandran. -
Kamal Haasan
@ikamalhaasan
2 புன்னகை மன்னர்கள் + மன்னி
-
Kamal Haasan
@ikamalhaasan
On her birthday, I wish Mamata Banerjee Ji, good health and strength. Forged by decades of public service and fourteen years at the helm of West Bengal, she has stood as a steadfast defender of the Constitution and the plural idea of India.
-
Kamal Haasan
@ikamalhaasan
இந்திய அரசியலின் தெளிவான, துணிவான குரல்களுள் ஒன்றாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான அன்புச் சகோதரி @KanimozhiDMK அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து. ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி மற்றும் தமிழ் அடையாளம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Another year ahead . Another chance to become better kinder and wiser than the year before . Excellence is a work in progress. Have an excellent new year . Every tomorrow is a day to be seized . Let all your pursuits make you happy .
-
Kamal Haasan
@ikamalhaasan
Brother @MohanLal only you can console your self . Friends will stand by you as always . No amount of comforting can compensate a loss like this . Take care we all love you.
Kamal Haasan -
Kamal Haasan
@ikamalhaasan
ஈகை எனும் அருங்குணத்தால் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் அன்பிற்கினிய நண்பர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று. அவருடனான நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றன.
-
Kamal Haasan
@ikamalhaasan
அன்பே பிரதானம் என்னும் அருமையை வலியுறுத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
#christmas2025 -
Kamal Haasan
@ikamalhaasan
என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் இன்று.
பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு ஆகிறது. அவர் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு சமூகத்தீமைகளைச் சுட்டெரித்துக்கொண்டே இருக்கிறது. தந்தை பெரியார் காட்டிய வழியில் ஒளியில் தமிழ்ச்சமூகம் எந்த ஒடுக்குமுறைக்கும் அஞ்சாமல் வாழ்வாங்கு வாழும்.
இரண்டாமவர் என்றென்றும் என் இதயத்தில் வீற்றிருக்கும் எம்ஜிஆர். கலைவாழ்விலும் பொதுவாழ்விலும் எனக்கு உத்வேகம் கொடுத்தவர். தனது ஈகையினால் லட்சோப லட்சம் இதயங்களில் இன்னும் தொடர்பவர்.
மற்றொருவர் தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பக்கங்களில் ஒளிபாய்ச்சிய ஆய்வாளர் தொ. பரமசிவன். கடந்த காலத்தைக் கதையாகப் படித்தால் போதாது. அவற்றின் மெய்யான காரண காரியங்களை அறிவதே அறிவுடைமை எனக் கற்பித்த ஆசான்.
மூன்று ஆசிரியர்களையும் மனம் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
“உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல.
“இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்.
- கமல்ஹாசன் -
Kamal Haasan
@ikamalhaasan
Some artists entertain, some enlighten, some provoke. #sreenivasan did it all, with a smile that carried truth and a laugh that carried responsibility. My respects to a remarkable mind. Deepest condolences to his family and admirers.
-
Kamal Haasan
@ikamalhaasan
So nice of you, Anupam ji, to reflect our meeting with such warmth. Your work reflects a lifelong commitment to world cinema and fearless exploration. A conversation I will also cherish.
Anupam Kher
@AnupamPKher
Was delighted to meet one of the FINEST actors of Indian Cinema #kamalhassan ji at the Delhi Airport! Have been an admirer of his craft and varied performances for years. Have learnt so much from him as an actor. His list of great performances is countless! We sat in the airport lounge for almost an hour. In that one hour it seemed we spoke about a lifetime! So many topics- world cinema, #kbalachander sir, life lessons, favourite books and of course the great #rajnikanth sir! It was a RICH conversation! Thank you sir for your wisdom, warmth and appreciation! Love, respect and prayers always! 🙏❤️ @ikamalhaasan #actors #airport
-
Kamal Haasan
@ikamalhaasan
For India, long-term energy security is a strategic national priority.
In my Unstarred Question in the Rajya Sabha, I sought clarity on the roadmap to scale nuclear capacity to 100 GW by 2047, timelines for thorium-based reactors, and community engagement around projects like Kalpakkam.
These issues were addressed by the Hon. Minister of State in the Prime Minister’s Office @DrJitendraSingh. Advancing thorium-based nuclear energy is vital for India’s energy independence, reducing crude oil imports, and securing a cleaner path to our nation’s development. -
Kamal Haasan
@ikamalhaasan
For many Indians, personal transport reflects aspiration and everyday progress.
In my first Unstarred Question in the Rajya Sabha, I sought clarity on ethanol-blended fuels, its impact on vehicles, the withdrawal of E10 petrol, and consumer safeguards.
These issues were addressed by the Hon. Minister of Road Transport & Highways @nitin_gadkari. The transition must remain informed, fair, and consumer-conscious. -
Kamal Haasan
@ikamalhaasan
75 years of a remarkable life.
50 years of legendary cinema.
Happy birthday, my friend @rajinikanth. -
Kamal Haasan
@ikamalhaasan
“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்” - என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.
டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
சராசரிக் குடிமக்களுக்கு முதலும் இறுதியுமான நீதிப் புகலிடமாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மேதை பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று, நாம் ஒவ்வொருவரும் நமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வோம் என்னும் உறுதியை ஏற்க வேண்டும். இந்தியக் குடிமக்கள் தங்கள் அதிகாரத்தை முற்றிலும் உணரும் வண்ணம், அரசுகள் அம்பேத்கர் அவர்களின் சொற்களை அடித்தட்டு வரை கொண்டுபோய்ச் சேர்க்க முன்வர வேண்டும். வாழ்க அம்பேத்கர் புகழ்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி :
This media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
முன்னெப்போதையும்விட, தந்தை பெரியாரின் தேவை மிகுந்திருக்கும் சமூகச் சூழல் இன்று நிலவுகிறது. பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் ஆசிரியர் மானமிகு @AsiriyarKV அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவதோடு, அவர்தம் வாழ்நாள் பணியில் கரம்கோப்பதும்கூட நம் அனைவரின் கடமை. என்னாலானதை நான் செய்யக் காத்திருக்கிறேன். நம்மாலானதை நாம் செய்வோம். ஆசிரியர் அவர்கள் வாழிய நீடு, செயலூக்கத்தோடு.
-
Kamal Haasan
@ikamalhaasan
சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான நண்பர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஓர் எளிய பின்னணியில் பிறந்து தமிழ்வழியில் ஐஏஎஸ் தேர்வெழுதி வென்று காட்டியவர். தான் வகித்த பதவிகளில் எல்லாம் சிறந்து துலங்கி தமிழ் முத்திரையை ஆழப் பதித்தவர். ஆய்வுப் பணிகள், பதிப்புப் பணிகள், தமிழ் வளர்ச்சிப் பணிகள் என ஓயாது உழைக்கும் இவர் ‘ஓய்வென்பது ஓய்ந்திருப்பதல்ல’ என்னும் சொற்றொடரின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இன்றைய இளையோர் இவரெழுதிய நூல்களை வாசிப்பதும், இவரது வாழ்விலிருந்து உத்வேகம் பெற்றுக்கொள்வதும் அவசியம் எனக் கருதுகிறேன்.
தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பகுதிகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் பெரும்பணியில் ஆழ்ந்திருக்கும் அன்பிற்கினிய நண்பரின் பிறந்தநாளில் அவருக்கென் வாழ்த்து. -
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் @Udhaystalin அவர்கள் நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.
-
Kamal Haasan
@ikamalhaasan
We, the People, are both the custodians and the beneficiaries of our Constitution. It grants us rights that empower and duties that ennoble, and its spirit endures only when we uphold it with vigilance and virtue.
On this Constitution Day, we honour the farsighted architects of our Republic and renew our pledge to safeguard the values they entrusted to us - justice, liberty, equality and fraternity. Jai Hind! -
Kamal Haasan
@ikamalhaasan
Deeply saddened by the passing of my dear friend and legendary actor Dharmendra ji. Dharam Ji’s charm, humility and strength of spirit were as real off-screen as on it. Indian cinema has lost one of its kindest icons. My heartfelt condolences to his family and admirers.
-
Kamal Haasan
@ikamalhaasan
பாவேந்தரின் பரம்பரையாய் மரபுக்கவிதை செய்வதில் தொடங்கி, வானம்பாடி இயக்கத்தோடு நவகவிதையில் இயங்கி, அதன் பிறகும் தன் ஓயாத் தேடலால் ஹைக்கூ, சென்ரியூ, லிமெரிக்கூ என விதவிதமான கவிதை வடிவங்களில் தொடர்ந்து படைப்புகளை எழுதிவந்தவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
நிறைவாழ்வு வாழ்ந்து அவ்வாழ்வு முழுதும் நிறைவான ஏராளம் தமிழ் நூல்கள் தந்து மொழிக்குப் பெரும் பங்காற்றிய பெருமகனார் இன்று நிறைவெய்தியிருக்கிறார்.
என் இதயமார்ந்த இரங்கல்கள். -
Kamal Haasan
@ikamalhaasan
Deeply saddened by the tragic loss of Wing Commander Namansh Syal, who gave his life while showcasing the pride of our Indian Air Force, the Tejas. A brave son of India taken far too soon. My heartfelt condolences to his family and loved ones. India stands with you in this moment of immeasurable grief.
-
Kamal Haasan
@ikamalhaasan
Today, during my visit to Goa for the IFFI Festival where Amaran was featured, I had the pleasure of calling on the Hon’ble Chief Minister of Goa, Shri @DrPramodPSawant, at his residence. I thanked him for his gracious hospitality and we had an engaging conversation on Goa’s development, particularly its dynamic progress in the pharmaceutical sector.
-
Kamal Haasan
@ikamalhaasan
Warm birthday wishes to the Hon. Union Minister of Parliamentary Affairs and Minister of Minority Affairs, Thiru @KirenRijiju. Your dedicated efforts toward India’s development are truly valued. I look forward to working with you in Parliament in the service of our motherland.
-
Kamal Haasan
@ikamalhaasan
இன்று குழந்தைகள் தினமாம் . 😄
உங்கள் உடல் எடையை வைத்து உங்களைக் குழந்தைகள் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நீங்கள் நாளையின் மூதறிஞர்கள் . இன்றைய மூத்தோர் வெகு விரைவில் உங்களைப்போல் குழந்தைகளாகி விடுவார்கள் . அதுவரை அவர்கள் பாதுகாப்பில் உங்கள் குழந்தைப் பருவத்தை முழுவதுமாக அனுபவியுங்கள்… நல்ல வழிகாட்டுதலுடன் .
நாளை உமதும்தான். -
Kamal Haasan
@ikamalhaasan
“மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா” என பாடிய கவிஞரே… உமது அன்பான வாழ்த்துகள் கண்டேன். மகிழ்ந்தேன்.
வைரமுத்து
@Vairamuthu
இந்தியக்
கலைஅடையாளங்களுள் ஒருவர்
கலைஞானி கமல்ஹாசன்
கலையே வாழ்வாய்
வாழ்வே கலையாய்
மாறிப்போன மனிதர்
வாழ்வியல் புயல்களையும்
விமர்சனச்
சூறாவளிகளையும் தாண்டி
அவர் என்ன காரணங்களுக்காகக்
கொண்டாடப்படுகிறாரோ
அந்தக் காரணங்கள்
வாழ்வெல்லாம் நிலைத்திருக்க
வாழ்த்துகிறேன்
@ikamalhaasan | #kamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி @karunaasethu அவர்களே
Karunaas
@karunaasethu
கலைத்தாயின் உயர்ந்த மகன் கலைஞானி
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
உங்கள் கனிவான வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே @annamalai_k
K.Annamalai
@annamalai_k
இன்றைய தினம், பிறந்த நாள் காணும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது கலைத்திறனாலும், கடின உழைப்பாலும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரையை உருவாக்கி “உலக நாயகனாக” உயர்ந்தவர். கலைச்சேவையுடன், அரசியல் களத்திலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் திரு.கமல்ஹாசன் அவர்களின் கலைப்பயணமும், மக்கள் சேவையும் இன்னும் பல ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
இனிய நண்பர் @draramadoss அவர்களின் கனிவான வாழ்த்துகளுக்கு நன்றி.
Dr ANBUMANI RAMADOSS
@draramadoss
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், எனது நண்பருமான உலக நாயகன் @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழவும், சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், மதிப்புக்குரிய நண்பர் @SPK_TNCC அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி.
Selvaperunthagai K
@SPK_TNCC
தமிழர் சிந்தனைக்கு புதிய பரிமாணம் கொடுத்த கலைப்பேராளியான நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அரசியல் துறையிலும், கலைத்துறையிலும், , ஒவ்வொரு தலைமுறைக்கும் திசை காட்டும் உங்கள் பயணம் தொடர்ந்து மேலும் உயரங்களை எட்டட்டும்!
தமிழ் மண் உங்கள் கனவுகளை வெற்றி செய்யட்டும்!
@maiamofficial
#kamalhassan #birthdaywishes -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you, Thambi @TRBRajaa . Your words, warmth and wit always make me smile.
Dr. T R B Rajaa
@TRBRajaa
A truly multifaceted legend who transcends generations ♥️
Wishing the phenom my beloved Annan @ikamalhaasan avargal a very Happy Birthday ! 🎭
May your artistry, intellect and most importantly your fearless voice for rationalism, progress and the Tamil spirit, continue to inspire millions 🙏🏾
May your journey ahead be filled with good health, more of that incomparable creative brilliance, plenty of that boundless energy that you ooze with your presence and loads of happiness✨
May you continue to redefine cinema and society🌟
Ps: Annen Awaiting your inputs on "#periyartwisted" : ) -
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்களின் அன்பான வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றி.
Dr. Anbil Mahesh
@Anbil_Mahesh
உலகம் கொண்டாடும் நமது கலைஞானி பாராளுமன்ற உறுப்பினர் @maiamofficial -இன் தலைவர் மதிப்பிற்குரிய @ikamalhaasan சார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.
கல்வி உரிமைக்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் கலைஞானி அவர்களை கொண்டாடுவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you Supriya ji for the warm wishes. @supriya_sule
Supriya Sule
@supriya_sule
Wishing Member of Parliament Shri Kamal Haasann(@ikamalhaasan) ji, Happy Birthday. Have a Healthy Year Ahead!
-
Kamal Haasan
@ikamalhaasan
நாடாளுமன்ற உறுப்பினரும், இனிய நண்பருமான @Dayanidhi_Maran அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி
Dayanidhi Maran தயாநிதி மாறன்
@Dayanidhi_Maran
இன்று பிறந்தநாள் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு@ikamalhaasan அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
-
Kamal Haasan
@ikamalhaasan
நேரில் வந்தும் நெஞ்சாரத் தழுவியும் அன்பைத் தந்துவிட்டுச் சென்றார் என் உளம்கவர் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் @thirumaofficial . அவருக்கு என் நன்றி.
Thol. Thirumavalavan
@thirumaofficial
மக்கள் நீதி மையத்தின் நிறுவனரும் தலைவருமான உலகநாயகன் அண்ணன் @ikamalhaasan அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
" ஏற்கனவே நாம் பேசிக்கொண்டபடி, ஆடை போர்த்தும் வழக்கமான நடைமுறை நமக்குள் வேண்டாமே; ஆரத்தழுவி அங்கத்தைப் போர்த்திக் கொள்வோமே" என்று கூறியவாறு இன்றும் என்னை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்த சந்திப்பு. அவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
அண்ணன் கமல்ஹாசன் நீடூழி வாழ்க!
#hbd_kamalhaasan #mnm -
Kamal Haasan
@ikamalhaasan
நாடாளுமன்ற உறுப்பினர், அன்புச் சகோதரி @KanimozhiDMK அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்த் திரைத்துறையின் பெருமைமிக்க அடையாளமாக இருப்பவரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான திரு. @ikamalhaasan அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் @Seeman4TN . பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.
பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.
தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.
நீடு வாழ்க இளவல். -
Kamal Haasan
@ikamalhaasan
என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. @mkstalin மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin மற்றும் திருமதி. @astrokiru தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் திரு. சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.
நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம். -
Kamal Haasan
@ikamalhaasan
Proud to share the immortal Major Mukund Varadarajan’s story that stirred India’s soul will now echo across the world.
Extremely delighted to share that #amaran has been nominated for the Golden Peacock Award under the International Competition and will be the opening feature film in the Indian Panorama section at the 56th International Film Festival of India, Goa . Grateful to the jury and congratulations to all fellow nominees.
@IFFIGoa @nfdcindia @MIB_India
A Film By @Rajkumar_KP
Kudos Team - @Siva_Kartikeyan, @Sai_Pallavi92, @gvprakash, #mahendran, and the entire teams at @RKFI and @turmericmediaTM.
#majormukundvaradarajan
#amaranmajorsuccess
#kamalhaasan #sivakarthikeyan #saipallavi #rajkumarperiasamy
@anbariv @Dop_Sai @rajeevan69 #stefanrichter @kalaivananoffl @amritharam2 @magizhmandram -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you, my dear friend Lalletan. Your gracious wishes truly mean a lot.
Mohanlal
@Mohanlal
Happy Birthday, dear Kamal sir. Wishing you a year filled with boundless creativity, good health, and new milestones. May your journey ahead be as extraordinary as your legacy.
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you, Hon. Minister @ChouhanShivraj Ji, for your warm wishes. I deeply appreciate your kind words.
Shivraj Singh Chouhan
@ChouhanShivraj
Warm birthday greetings to Rajya Sabha MP from Tamil Nadu Shri @ikamalhaasan.
May God bless you with good health and long life. -
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், அன்புக்குரிய தம்பி @Udhaystalin அவர்களின் கனிவான வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.
Udhay
@Udhaystalin
இந்திய கலையுலகின் தன்னிகரற்ற ஆளுமை கலைஞானி - மாநிலங்களவை உறுப்பினரும் - @maiamofficial -ன் தலைவருமான @ikamalhaasan சாருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல்
பாசிசத்துக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் குரல் வெல்லட்டும். அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
அன்பும் வாழ்த்தும்! -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you, Hon. Chief Minister of Kerala @pinarayivijayan, for your warm wishes. Your steadfast commitment to social justice and shared belief in art and democracy as instruments of progress continue to inspire all.
Pinarayi Vijayan
@pinarayivijayan
Warm birthday wishes to my dear brother and one of Indian cinema’s greatest artists, Shri. @ikamalhaasan. A true creative genius and a steadfast voice for secular and democratic values, he continues to inspire us all. Wishing him more strength and brilliance in his artistic journey.
-
Kamal Haasan
@ikamalhaasan
நல்லாட்சியின் அடையாளமாய், நட்பின் இலக்கணமாய்த் திகழும் அன்புக்குரிய நண்பரே, மாண்புமிகு முதல்வரே @CMOTamilnadu உங்கள் வாழ்த்துடன் என் பிறந்தநாள் தொடங்குகிறது. அள்ளக்குறையாத அன்புக்கு நன்றி.
@mkstalin
M.K.Stalin
@mkstalin
பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் @maiamofficial-இன் தலைவர் - கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!
நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்!
#hbdkamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
The 1983 moment of Indian Women’s Cricket has arrived!
Your names will live in folklore.
Their legacy will ignite a million dreams.
Congratulations, Team India! 🇮🇳🏆
#cwc2025 @BCCIWomen -
Kamal Haasan
@ikamalhaasan
To the #king who never needed a crown - only a camera, charm, and that disarming wit. Wishing my friend @iamsrk a birthday as grand as his heart.
-
Kamal Haasan
@ikamalhaasan
சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது… நூறுதான் நல்ல மார்க்!
-
Kamal Haasan
@ikamalhaasan
என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் திரு. சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Happy birthday @Rajkumar_KP .
-
Kamal Haasan
@ikamalhaasan
Happy birthday Dear Joju.
@C_I_N_E_M_A_A -
Kamal Haasan
@ikamalhaasan
ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்;
வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்;
தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக
தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக. -
Kamal Haasan
@ikamalhaasan
அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும் .
எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.
என்றென்றும்
உங்கள் நான். -
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
pa.ranjith
@beemji
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று
காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் @thirumaofficial அவர்கள் தெரிவித்துள்ளார்,
இதை கவனத்தில் கொண்டு
தமிழக அரசு @CMOTamilnadu
உடனடியாக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!! @Neelam_Culture
@mkstalin @tnpoliceoffl -
Kamal Haasan
@ikamalhaasan
தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் திரு. எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான திருமதி. அம்சவேணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@PremallathaDmdk @lksudhish -
Kamal Haasan
@ikamalhaasan
Jane Goodall reminded us of a fundamental truth: humans are not masters, but co-tenants of this planet. She made us look into the eyes of chimpanzees and see family, not subjects. In her passing, one hard question lingers - will we finally learn to live on earth as one species among many?
-
Kamal Haasan
@ikamalhaasan
On Gandhi Jayanti, we remember a man whose truth and non-violence inspired the world and gave rise to an India rooted in justice, dignity, and democratic resolve.
That India is our greatest inheritance and our unfinished task - a task that inspired my ode to Bapu, ‘Hey Ram’, celebrating the extraordinary legacy he left behind:
www.youtube.com/watch?v=R9YJOuQ6SX8 -
Kamal Haasan
@ikamalhaasan
Happy to share the Title Teaser of #patriot
Watch : youtu.be/D3Se71O96i0
@mammukka @Mohanlal #fahadhfaasil #kunchackoboban #maheshnarayanan -
Kamal Haasan
@ikamalhaasan
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Dear Ms. Treesha Thoshar, my loudest applause goes to you. You’ve beaten my record, as I was already six when I got my first award! Way to go madam. Keep working on your incredible talent. My appreciation to your elders in the house.
-
Kamal Haasan
@ikamalhaasan
We celebrated our modern-day storytelling godfather Shri S.L Bhyrappa ji while he walked among us, and he witnessed that celebration as he lived. My deepest condolences to his family and his legions of admirers. Kannadigas have given us one of the greatest literary voices of our times, and now his immortal work belongs to the world of great storytellers. Future generations will learn longevity from his words. His legacy will transcend Parvas. Thank you, sir, for teaching us how to read mythology and the histories embedded within its folds.
A fan,
Kamal Haasan -
Kamal Haasan
@ikamalhaasan
Delighted to see my dear friend Lalettan @Mohanlal honoured with the Dadasaheb Phalke Award. A true artist whose craft has touched millions and will continue to inspire generations. A richly deserved recognition.
-
Kamal Haasan
@ikamalhaasan
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே. -
Kamal Haasan
@ikamalhaasan
Warmest birthday wishes to the Hon’ble Prime Minister, Thiru Narendra Modi avargal. Wishing him good health and strength in service of the people of India.
@narendramodi -
Kamal Haasan
@ikamalhaasan
சிந்தனையும் செயலும் சமூக நீதிக்காகவே என்று வாழ்ந்த தந்தை பெரியார் பிறந்த நாள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தரப்பினரை வல்லினச் சொற்களால் வாழவைக்க வந்தவர். மூடத்தனத்தின் பாலும், பழைய அடிமைத் தனங்களை நோக்கியும் நாடே நகரத் தொடங்கிவிடுமோ என்னும் அச்சம் நிலவும் இந்நாளில் நமது பற்றுக்கோடு தந்தை பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக.
-
Kamal Haasan
@ikamalhaasan
நாடகக் கலையில் தொடங்கி திரைக் கலையில் திகழ்ந்து அரசியலில் ஒளிர்ந்த விதத்தில் எனக்கு எந்நாளும் கிரியாஊக்கியாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று.
கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி மாநிலங்களின் உரிமைகளுக்காக அவர் தந்து சென்ற அரசியல் தத்துவங்கள் நம்மைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றன.
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்பது அலங்காரச் சொற்களல்ல. நிறைவான வாழ்க்கைக்கு வழிசொல்லும் தத்துவம்.
அவரை வாழ்த்துவது என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வதற்கு இணை. வணங்கி வாழ்த்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வாகி இருக்கும் தோழர் திரு. மு. வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள். மக்கள் பணி சிறக்கட்டும்.
கடந்த பத்தாண்டுகளாக இந்தப் பொறுப்பை திறம்படச் செய்த தோழர். இரா. முத்தரசன் அவர்களுக்கு என் பாராட்டுகள். -
Kamal Haasan
@ikamalhaasan
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான நமது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
@CPRGuv -
Kamal Haasan
@ikamalhaasan
நாளை நமதே!
-
Kamal Haasan
@ikamalhaasan
Warm birthday wishes to Shri @PawanKalyan , Hon’ble Dy. Chief Minister of Andhra Pradesh and President of Jana Sena Party. Wishing you good health and continued strength in your unwavering service to the people.
-
Kamal Haasan
@ikamalhaasan
Trumpets, tariffs, empires - all loud, all temporary. India bows to none.
Poster: “One Day They’ll Wake Up” - Circa 1925.
#tariffwars #tariffsonindia -
Kamal Haasan
@ikamalhaasan
A Centrist’s Clarion Call.
My article in @timesofindia on why the Republic’s strength, balance, and future rest at the centre.
#makkalneedhimaiam
#centrism -
Kamal Haasan
@ikamalhaasan
அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவர் இன்றும் நினைவுகளின் வழியே நம்மோடு இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக.
#vijayakanth -
Kamal Haasan
@ikamalhaasan
கல்வியால் தான் ஈட்டிய ஞானத்தை எளியோருக்காகவே பயன்படுத்த வேண்டும் என்கிற மனிதநேயச் செயல்பாட்டைக் கடைசிவரை தொடர்ந்தவர் மருத்துவர் வேணி.
‘அஞ்சு ரூவா டாக்டர்’ என்று வெகுமக்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவியான மருத்துவர் வேணி, தானும் தன் கணவரின் பாதையிலேயே பயணம் செய்து அவர் போலவே ஐந்து ரூபாய் கட்டணம் பெற்று ஏழை எளிய மக்களுக்குத் தன் சேவையைத் தொடர்ந்தவர். இன்று அவர்தம் வாழ்வு நிறைவை எய்தியிருக்கிறது.
தொடர் முயற்சிகளே மனித குலத்தின் ஏற்றம்.
வேணி அம்மா, உங்களால் வாழ்வு பெற்ற - உங்களுக்குப் பிறக்காத - உங்கள் குழந்தைகள் உங்கள் பணியைத் தொடர்வார்கள். -
Kamal Haasan
@ikamalhaasan
திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நண்பர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமதி. ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது.
திரு. பாலு அவர்களுக்கும், அவர்தம் மைந்தர், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், தம்பி திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@TRBRajaa -
Kamal Haasan
@ikamalhaasan
ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், என் உடன் பிறவாச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன்.
@thirumaofficial -
Kamal Haasan
@ikamalhaasan
தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர், நாகாலாந்து ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.
அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Independence to dream, to innovate, to uplift
From plough to particle, from the salt march to the space age,
May we keep widening the freedoms that make India stronger,
Let the courage that won us freedom now win us progress, in every village, every city, every mind.
Happy Independence Day. Jai Hind. 🇮🇳 -
Kamal Haasan
@ikamalhaasan
Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #coolie resounding global success befitting this golden jubilee.
Helmed by the powerhouse @Dir_Lokesh, backed by the pillar of our industry Kalanithi Maran @sunpictures, enriched by the ever-inventive @anirudhofficial, and brought to life by my long-time friends #sathyaraj, @iamnagarjuna , #aamirkhan, @nimmaupendra, and #soubinshahir. A special cheer to my darling daughter @shrutihaasan, keep shining bright. -
Kamal Haasan
@ikamalhaasan
நீதிக் கதவுகள்
திறமின் திறமின்
இந்திய நாடே
எழுமின் எழுமின்!
Rise up India!
@Rahulgandhi #votechori -
Kamal Haasan
@ikamalhaasan
வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை.
‘அனைவருக்கும் தரமான கல்வி’ எனும் இலக்கோடு செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன்.
@mkstalin @CMOTamilnadu @Anbil_Mahesh @tnschoolsedu -
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
Today, I had the honour of meeting the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi ji. As a representative of the people of Tamil Nadu and as an artist, I placed before him a few requests, foremost among them was the call to expedite the recognition of Keeladi’s antiquity.
I urged the Prime Minister to extend his support to the Tamil people in showcasing to the world the grandeur of Tamil civilisation and the timeless glory of the Tamil language.
@narendramodi @PMOIndia
#makkalneedhimaiam #keeladi -
Kamal Haasan
@ikamalhaasan
தன் வாழ்நாள் முழுக்க தமிழையும், தமிழர் நலனையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முத்தமிழறிஞர், நவீனத் தமிழகத்தின் சிற்பி, கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
சமத்துவத்தின், சமூகநீதியின் அடையாளமாகவும், அரசியல் மாண்பிற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆசானின் நினைவுகளைப் போற்றுகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
The light you lit. @Suriya_offl
#agaram -
Kamal Haasan
@ikamalhaasan
இன்றைய தினம் தேசிய உறுப்புகள் தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம் வாழ்வு முடிந்த பிறகும் நாம் பிறருக்குப் பயன் தருபவராக இருக்க முடியும். நம் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் எட்டுப் பேருக்கு வாழ்வு அளித்தவர்களாகிறோம்.
உடல் உறுப்பு தானத்தின் சிறப்பைக் குறித்து நம்மால் இயன்ற அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்போம்.
#nationalorgandonationday -
Kamal Haasan
@ikamalhaasan
மக்களின் முதலமைச்சர், அன்பு நண்பர் @mkstalin அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி. ஆனந்தமான இந்த உரையாடலின் போது துணை முதல்வர், தம்பி @Udhaystalin உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி.
-
Kamal Haasan
@ikamalhaasan
Congratulations to @iamsrk on your National Award for Jawan, a recognition long overdue for your stellar impact on world cinema.
12th Fail was a masterpiece that moved me deeply. It dignified struggle and inspired millions. Congratulations Vidhu Vinod Chopra and @VikrantMassey on this well deserved honour.
Applauding Rani Mukherjee for a portrayal that was both fierce and fragile, richly deserving of this national recognition.
#nationalfilmawards -
Kamal Haasan
@ikamalhaasan
2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது.
‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.
வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக.
@ImRamkumar_B @sinish_s @Sudhans2017 @gvprakash
#nationalfilmawards -
Kamal Haasan
@ikamalhaasan
பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இந்திய மக்களின் மனங்களில் கொந்தளித்துக்கொண்டிருந்த கேள்விகளை ஆற்றலுடன் வெளிப்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் @SuVe4Madurai மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கருத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளின் ஆயுதம் வன்முறை. மக்கள் பிரதிநிதியை அவரது கடமையைச் செய்ய விடாமல் அச்சுறுத்தும் இத்தகைய கோழைகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். நண்பர் சு.வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
அறிவியலும் கலைமனமும் கலந்து நிறைந்தவர்; மாணவர் மனங்களில் இனித்து நிலைத்தவர் ஐயா அப்துல் கலாம். அவரின் நினைவு நாள் இன்று.
அந்தப் பெருந்தகையின் நினைவிடத்திலிருந்துதான் எனது அரசியல் பயணம் தொடங்கியது என்பதை நினைவுகூர்கிறேன்.
உயரங்களிலும் தாழ்வுகளிலும் எனக்குத் துணை நிற்பவை அவர்தம் சிந்தையும் சொற்களும். அவருடைய எண்ணங்களை ஈடேற்றும் வல்லமை நமக்கு வசப்படட்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களின் வாழ்த்தின்படி அரசியல் துறையிலும் என் ஆற்றல் பயன்படும் என்று நன்றியோடு உறுதியளிக்கிறேன்.
Asiriyar K.Veeramani
@AsiriyarKV
🔺 மாநிலங்களவையில் சமூகநீதிக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
🔺 பொறுப்பு முடித்திருப்போருக்கும்,
ஏற்றிருப்போருக்கும் நமது வாழ்த்துகள்!
மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய மூத்த திராவிட இயக்கத் தோழரும், தொ.மு.ச. பொதுச் செயலாளருமான தோழர் சண்முகம் @shanmugammp1940 அவர்களும், துடிப்புமிக்க இளந்தலைமுறையின் அடையாளமாக இருக்கும் பெரியாரிஸ்ட் புதுகை எம்.எம்.அப்துல்லா @mmabdulla அவர்களும் தங்களின் மாநிலங்களவைப் பொறுப்பைத் திறம்பட முடித்திருக்கிறார்கள்.
குறைந்த காலமே வாய்ப்பு கிடைத்தாலும், அதில் திராவிட இயக்க உணர்வுடன் நாடாளுமன்றத் தில் முழங்கியவர், ஊக்கத்துடன் செயலாற்றியவர் புதுகை எம்.எம்.அப்துல்லா ஆவார்கள். தந்தை பெரியார் குறித்து உரையாற்றி, அனைவரின் கவனத்தையும், பா.ஜ.க.வினரின் எதிர்ப்பையும் மகிழ்வுடன் ஏற்றவர் ஆவார். அவரே சொல்லியிருப்பதைப் போல, நாடாளுமன்றப் பணி முடிந்தாலும், சமூகநீதிக்கான பணியில் தொடர்ந்து ஈடுபடக் கூடியவர். இன்னும் ஏராளமாகப் பணியாற்ற வேண்டியவர்.
அருமைத் தோழர், தொ.மு.ச. பொதுச் செயலாளர் சாக்கோட்டை சுயமரியாதை வீரர் சண்முகம் அவர்கள் தொழிலாளர்களின் உரிமைக்காக முழங்கும் திராவிட இயக்கத்தின் குரலை நாடாளுமன்றத் தில் பதிவு செய்து தன் கடமையை ஆற்றியிருக்கிறார். தொழிலாளர் வர்க்கத்தின் மேன்மைக்காக அவருடைய பணி என்றும் தொடரும்.
இரண்டாம் முறையாக நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் @PWilsonDMK அவர்கள், சமூகநீதியை நிலை நாட்ட நீதிமன்றத்தில் வாதாடுபவர். நாடாளுமன்றத்தில் பேராடுபவர். மிகச் சிறப்பாக வகையில் பயன்படுத்தி வருபவர். அவர் பணி தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெறப் போராடுவார் என்பது அய்யத்திற்கிடமில்லாததாகும்.
அரிதினும் அரிதாகவே, இஸ்லாமிய மகளிர் நாடாளுமன்றத் திற்குச் செல்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. திராவிட இயக்கம் எல்லா வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில், சிந்தனையிலும் திராவிட இயக்க உணர்விலும் உறுதியானவரான கவிஞர் சல்மா (ராஜாத்தி) அவர்கள் மாநிலங்களவைக்கு செல்லவிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகக் களப் பணியாளரான சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தோழர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்கள் ஆழ்ந்த கொள்கை உணர் வாளர். இவர்கள் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பதிவு செய்து, ‘உறவுக்குக் கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற தி.மு.க.வின் உறுதியுடன் திறம்பட செயலாற்றுவார்கள் என்பதில் நமக்கு முழு நம்பிக்கை உண்டு.
மக்கள் நீதி மய்யத்தின் தலை வரும், சீரிய பகுத்தறிவாளருமான கலைஞானி கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் தனித்த சிந்தனையாளர். கலைத்துறையில் அவருடைய ஆற்றலும், சிந்தனையும் பயன்பட்டது போல், நாட்டுக்கும் அரசியல் துறையில் பயன்படும் ஓர் அரிய வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேராதரவு காரணமாகக் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்திலும் அவர் சிறப்புடன் முத்திரையால் பதிய வைப்பார்.
அனைவரின் பொதுத் தொண்டு சிறக்க, சமூகநீதிக்கும், ஜனநாயகத்திற்கும், மதச்சார் பின்மைக்கும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமாய் வாழ்த்துகிறோம். வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
25.7.2025 -
Kamal Haasan
@ikamalhaasan
நாட்டுக்கு நன்மை எழுத வாழ்த்திய நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நன்றி நவில்கிறேன்.
வைரமுத்து
@Vairamuthu
நாடாளுமன்றம் சார்ந்து
புதிதாகப்
பொறுப்பேற்றுக்கொண்ட
நண்பர்களையும்
குறிப்பாக இருவரையும்
பாராட்டுகிறேன்
ஒருவர்
நாடாளுமன்றத்தை
நிறைவுசெய்கிறவர்;
இன்னொருவர்
நாடாளுமன்றத்தில்
நுழைவு செய்கிறவர்
மனித உரிமைகளுக்கும்
தமிழ் தமிழர்
தமிழ்நாட்டு உரிமைகளுக்கும்
சங்கு முழங்கிய
கலிங்கப்பட்டிச் சிங்கம்
வைகோ நிறைவுபெறுகிறார்
அவருக்கு
நாடே ஊராக இருந்தது;
நாடாளுமன்றமே
வீடாக இருந்தது
அவர் நெகிழ்ச்சியோடு
விடைபெறுவதில்
நெஞ்சு குழைந்தது;
வாழ்த்துகிறேன்
நுழைவு செய்கிறவர்
நண்பர்
கலைஞானி கமல்ஹாசன்
“நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயைச் சுட்டு விட்டவன்”
40 ஆண்டுகளுக்கு முன்னால்
நான் எழுதிய வரிகளுக்கு
இன்று நியாயம் செய்திருக்கிறார்
அவரும்
அனைத்து உறுப்பினர்களும்
தமிழில் உறுதிமொழி பூண்டது
எங்கள் புத்துணர்ச்சிக்குப்
புதுரத்தம் பாய்ச்சியது
வாழ்க!
உங்கள்
நாடாளுமன்ற நாட்கள்
நாட்டுக்கு நன்மை எழுதட்டும்
@ikamalhaasan | #வைகோ -
Kamal Haasan
@ikamalhaasan
மக்களவை உறுப்பினர், அன்புத் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Su Venkatesan MP
@SuVe4Madurai
இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு
எனது வாழ்த்துகளை தெரிவித்தேன் 💐.
உடன் மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம், பொருளாளர் திரு. சந்திரசேகர்.
#kamalhaasan_mp
@ikamalhaasan
@maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
மக்களவை உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் அவர்களின் வாழ்த்து. மிக்க நன்றி சகோதரரே.
Dr D.Ravikumar MP
@WriterRavikumar
திரு @ikamalhaasan எம்.பி அவர்களுக்கு வாழ்த்து
இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களும் நானும் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் நாராயண் சிங் அவர்களும் திருச்சி சிவா எம்.பி அவர்களும் உடனிருந்து வாழ்த்தினர். -
Kamal Haasan
@ikamalhaasan
நான் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் அன்புச் சகோதரருமான @thirumaofficial அவர்களின் வாழ்த்து. அவருக்கென் மனமார்ந்த நன்றி.
Thol. Thirumavalavan
@thirumaofficial
இன்று மாநிலங்களவைக்கு முதல் முறையாகச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.
தோழர் ரவிகுமார், திரு. அப்துல்லா ஆகியோருடன் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கலைநாயகன் @ikamalhaasan அவர்களும், திமுக உறுப்பினர்கள்
திரு. #வில்சன், திரு. #சிவலிங்கம்,
#கவிஞர்_சல்மா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைக் கண்டு பேருவகையுற்றேன்.
திரு. கமல் அவர்களின் அன்பு மகள் ஸ்ருதிஹாசன், திரு. அருணாசலம்,
திரு. மௌரியா உள்ளிட்ட மக்கள் நீதி மையத்தின் முன்னணி தலைவர்கள் பலரும் அடுத்த மாடத்தில் அமர்ந்திருந்தனர்.
பிற மூன்று உறுப்பினர்களின் குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர்.
அவையில் திரு. மல்லிகார்ஜூன்கார்கே, சரத்பவார், திருச்சி சிவா, ஜெயராம்ரமேஷ், அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
பதவியேற்புக்குப் பின்னர் சில நிமிடங்கள் அவை நடவடிக்கைகள் அமைதியாக நடந்தேறின. பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விருட்டென எழுந்து
'பீகாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் மோசடிகள்' குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி குரலெழுப்பினர்.
மக்களவையிலும் இதேகோரிக்கையை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்ப அந்த அவை ஒத்தி வைக்கப்பட்டிருத்தது.
மாநிலங்களவையும் உடனே ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் மாநிலங்களவை துணை தலைவரின் அறையில் திரு.கமல் அவர்களைச் சந்தித்து அவருக்கு ஆடைபோர்த்தி விசிக சார்பில் மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@PWilsonDMK @tiruchisiva @kharge -
Kamal Haasan
@ikamalhaasan
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர், அன்புச் சகோதரர் விஜய்வசந்த் அவர்களின் வாழ்த்துக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
Vijay Vasanth
@iamvijayvasanth
மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்ற திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். சமுதாயம் மற்றும் மக்களுக்கான அவர் குரல் இனி பாராளுமன்றத்திலும் ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள். @ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
சகோதரி, டாக்டர்.கனிமொழி என்விஎன் சோமுவின் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.
Dr Kanimozhi NVN Somu
@DrKanimozhiSomu
இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது…
@maiamofficial @ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you, Shri Naveen Patnaik ji, for your warm wishes. Your statesmanship has long been an inspiration. I deeply value your words and will strive to serve with the same sense of duty and grace.
Naveen Patnaik
@Naveen_Odisha
Congratulate cinema icon Shri @ikamalhaasan on being sworn in as a member of Rajya Sabha. He can contribute immensely in the field of cinema, art and culture. Wish him a successful and fruitful tenure ahead in the upper house of Parliament.
-
Kamal Haasan
@ikamalhaasan
‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.
இந்தத் தருணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பிரியத்துக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் ஆருயிர் நண்பர் திரு. ஸ்டாலின் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவிருக்கிறார் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன்.
@maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your kind wishes Shri Chandrababu Naidu garu. I accept this responsibility with humility and a steadfast commitment to serve the people.
N Chandrababu Naidu
@ncbn
Congratulations to Shri Kamal Haasan on taking oath as a Member of the Rajya Sabha today. I wish him a successful tenure.
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
A new Chapter unfolds.
-
Kamal Haasan
@ikamalhaasan
Watched Maareesan - a film that dances effortlessly between wit and depth, leaving me laughing, thinking, and admiring its craft. Had a wonderful conversation with the team to congratulate them on this delightful creation.
Beneath its humour lies a socially conscious lens on human emotion and a keen gaze at the darker shadows of our society.
The kind of inventive, spirited cinema I naturally gravitate towards - both as viewer and creator.
#maareesan -
Kamal Haasan
@ikamalhaasan
V. S. Achuthanandan - a torchbearer for the neglected - now rests.
Former Chief Minister of Kerala, a freedom fighter, and a Communist icon, he never stopped fighting for the forgotten.
Kerala, and India, has lost a true people's champion.
Farewell, Comrade. -
Kamal Haasan
@ikamalhaasan
Warmest birthday greetings to Shri Mallikarjun Kharge, @INCIndia President and Leader of the Opposition in Rajya Sabha.
Your lifelong public service continue to inspire the nation. You’ve been the foremost champion of democracy, constitutional values, and social justice. I wish you many more years of happiness and impactful leadership.
@kharge -
Kamal Haasan
@ikamalhaasan
கலைஞரின் புதல்வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரைத் தருகிறது. அவருக்கு என் இரங்கல்கள். அவர்தம் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் @thirumaofficial காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன்.
Thol. Thirumavalavan
@thirumaofficial
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் @ikamalhaasan அவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்! -
Kamal Haasan
@ikamalhaasan
புதிய பயணத்தை நண்பர் @rajinikanth உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
காந்தி, நேரு என்கிற பேராளுமைகளோடு இணைந்து இந்த நாட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர். நாட்டை ஆளும் வாய்ப்பே வந்தபோதும், தன்னைப் பின் நிறுத்திக்கொண்டு தலைவர்களை உருவாக்கியவர். லட்சியவாத அரசியலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
அரசியல் மாண்புக்கும் நிர்வாக ஆளுமைக்கும் இக்காலத்திலும் சான்றாக நிற்கும் பெருந்தலைவரின் பெயரை வாழ்த்தி நிற்போம். அவர்தம் கொள்கைகளை நினைவில் ஏந்துவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
நம் தமிழைச் செழுமைப்படுத்தியதற்காக என் நண்பர் வைரமுத்துவை தமிழ் தன் ஆபரணமாக இனி அணியும். இந்த நூற்றாண்டில் வாழும் நல்ல தமிழர்கள் என்போலவே பெருமை கொள்ள வைக்கிறார் என் சமகாலச் சகஜீவி. அறிவை வணங்குபவன் நானும்தான்.
-
Kamal Haasan
@ikamalhaasan
என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
கல்லூரிக் காலத்தில் நாடகங்களில் நடிப்பதில் தொடங்கியவர் கோட்டா சீனிவாச ராவ். அந்த ஆர்வத்தை மங்கவிடாமல் காத்து, திரையில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் மின்னிய நட்சத்திரமாக உயர்ந்தார். கலை உலகில் இடைவிடாமலும் நிறைவாகவும் பணிபுரிந்தவர் நிறைவடைந்திருக்கிறார். மூத்த திரைக் கலைஞருக்கு என் இரங்கல்கள், அவர்தம் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
நம் பெருமைக்குரிய செஞ்சிக் கோட்டை 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு இப்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வு தரும் செய்தி. இந்தியாவின் பிற பகுதியினரும் வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இதயத்தைப் பதைக்க வைக்கும் செய்தி. கடலூர் செம்மங்குப்பம் ரயில் பாதையில் பள்ளிக்குச் சென்ற ஒன்றுமறியா இளங்குருத்துகள் ரயில் மோதி இறந்ததை ஒப்பவே மனம் மறுக்கிறது. எவரின் அலட்சியமாக இருந்தாலும் இது மன்னிக்கத் தகுந்ததே அல்ல.
ஏற்றுக்கொள்ளவே முடியாத துக்கம் நிகழ்ந்திருக்கிறது. இனியும் இதுபோன்ற அலட்சிய விபத்துகள் நிகழாமல் தவிர்த்திட அரசும், ரயில்வே துறையும், உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
உயிருக்கு உயிரான பிள்ளைகளைப் பறிகொடுத்து கலங்கி நிற்கும் பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you brother, for your kind words and warm wishes. Honoured to serve and represent Indian cinema on the global stage.
Pawan Kalyan
@PawanKalyan
It is a moment of immense pride to Indian film industry that Padma Bhushan Thiru @ikamalhaasan Avl has been selected as a member of the prestigious @TheAcademy Awards 2025 committee.
With a phenomenal acting career spanning six decades, Kamal Haasan garu is more than an actor. His cinematic brilliance as an actor, storyteller, and director, along with his versatile talent and decades of experience, have made a lasting impact on Indian and global cinema.
His exceptional command over every aspect of filmmaking as a writer, singer, director, producer, and actor is truly inspiring. He is a true master of the craft.
I extend heartfelt congratulations and wish him many more years of impactful service to world cinema. -
Kamal Haasan
@ikamalhaasan
I am honoured to join the Academy of Motion Picture Arts and Sciences.
This recognition is not mine alone, it belongs to the Indian film community and the countless storytellers who shaped me. Indian cinema has so much to offer the world, and I look forward to deepening our engagement with the global film fraternity.
My congratulations to my fellow artists & technicians who have joined the Academy.
The Academy
@TheAcademy
We’re proud to announce our newly invited members to the Academy!
Meet the Class of 2025: press.oscars.org/news/academy-invites-534-membership -
Kamal Haasan
@ikamalhaasan
ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி.
M.K.Stalin
@mkstalin
உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! -
Kamal Haasan
@ikamalhaasan
So proud today, as Group Captain Shubhanshu Shukla journeys to the International Space Station, joining the immortal Rakesh Sharma in the stars.
I look forward to the day our tricolour rises to the skies on an Indian rocket, from Indian soil, carrying an Indian astronaut to an Indian space station.
Jai Hind 🇮🇳 -
Kamal Haasan
@ikamalhaasan
Wishing my friend @RahulGandhi a very happy birthday. May you continue on the path of unity, compassion, and courage - with the same quiet resolve and steel that have defined you.
-
Kamal Haasan
@ikamalhaasan
காந்தியம் என்னும் கருத்தாக்கத்துக்கு உருவமாய் இன்று நம் கண்முன் நிற்கும் பெருந்தகையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.
சட்டரீதியான போராட்டங்களால், செயல்பாடுகளால் லட்சக்கணக்கான எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பெற்றுத் தந்த காந்தியர்.
வாழ்வு, சேவை என்பவை இரு வேறு விஷயங்கள் என்றில்லாமல், வாழ்வே சேவை என்று வாழும் அம்மையார் கிருஷ்ணம்மாள் அவர்களின் வயதில் இன்று நூறாவது ஆண்டு தொடங்குகிறது. அவரை வணங்கி வாழ்த்துவது என் கடமை. ‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ என்னும் சம்பிரதாய வாழ்த்துச் சொல் இவருக்கே பொருந்தும். வாழ்க பல்லாண்டு. -
Kamal Haasan
@ikamalhaasan
The crash in Ahmedabad has left the nation stunned in sorrow. In this tragic hour, my heart reaches out to the victims and their grieving families.
-
Kamal Haasan
@ikamalhaasan
தியாகத்தைப் போற்றும் பெருநாளான பக்ரீத் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவுவதாக!
#eidmubarak -
Kamal Haasan
@ikamalhaasan
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான எனது வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், அன்பு இளவல் திரு. @Udhaystalin அவர்களே.
Udhay
@Udhaystalin
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் @maiamofficial தலைவர் கலைஞானி @ikamalhaasan சார், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான @PWilsonDMK சார், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் @SalemSivalingam, தலைமைக் கழகச் செய்தித் தொடர்புக்குழு இணைச் செயலாளர் அக்கா @salma_poet ஆகியோர், இன்று தலைமைச் செயலகத்தில் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில், வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வில் பங்கேற்றோம்.
மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்க என் அன்பும் வாழ்த்தும்! -
Kamal Haasan
@ikamalhaasan
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான எனது வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களின் அன்பிற்கு நன்றி.
-
Kamal Haasan
@ikamalhaasan
Heart wrenching tragedy in Bangalore. Deeply distressed and my heart reaches out to the families of the victims in this moment of grief. May the injured recover soon.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞரை அவர்தம் பிறந்த நாளில் போற்றுவதில் மகிழ்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு, தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மனமுவந்து வரவேற்கிறேன்.
பெண்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளவோ சமரசம் செய்துகொள்ளவோ முடியாது. அத்தகைய குற்றங்களுக்கு அஞ்சும் வகையிலான தண்டனை தரப்படும் என்னும் நம்பிக்கையை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. -
Kamal Haasan
@ikamalhaasan
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல… @ilaiyaraaja
அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
Happy Birthday, Mani Ratnam.
From Nayakan to Thug Life, we’ve journeyed through time together — as colleagues, family, co-dreamers, and above all, as lifelong students of cinema. Through every chapter, your presence has been a source of strength — a mind I turn to in moments of doubt, and a soul deeply attuned to the language of film like few others.
May your stories keep unfolding, for with every frame, your vision brings depth, beauty, and meaning to cinema.
Forever your friend,
Kamal Haasan -
Kamal Haasan
@ikamalhaasan
தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அன்புத் தம்பி @Udhaystalin , உங்களது உளப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி.
Udhay
@Udhaystalin
கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள @maiamofficial தலைவர் கலைஞானி @ikamalhaasan சாருக்கு என் அன்பு வாழ்த்துகள்.
இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை - பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம். -
Kamal Haasan
@ikamalhaasan
On the occasion of his 80th birthday, my heartfelt greetings to Hon. Chief Minister of Kerala, @pinarayivijayan. A resolute leader whose enduring commitment to public service has played a pivotal role in shaping Kerala’s progress. Wishing him continued strength and good health in the years ahead.
-
Kamal Haasan
@ikamalhaasan
#thuglifetrailer Out Now
WATCH NOW - www.youtube.com/playlist?list=PLviYSX9LX22bFDltNiH8G-lXNN…
#thugfluencers
#thuglifeaudiolaunch from May 24
#thuglife
#thuglifefromjune5 #kamalhaasan #silambarasantr #imax
A #maniratnam Film
An @arrahman Musical
@ikamalhaasan @SilambarasanTR_ #mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #nasser @manjrekarmahesh @TanikellaBharni #vadivukkarasi #chinnijayanth #vaiyapuri #bagavathiperumal #baburaj @alifazal9 @rohitssaraf @arjunchdmbrm #chetan @rajshriartist #srikanthmenon #nithyashri @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM @APIfilms @homescreenent @actor_nithiin @SreshthMovies @PenMovies @GokulamMovies @5starsenthilk @dop007 @sreekar_prasad @anbariv @krutimahesh #sharmishtaroy @amritharam2 @ekalakhani @AmbadyRanjith @AkihitoSculpt @Monesh_H @gopiprasannaa @magizhmandram @saregamasouth @saregamaglobal @NetflixIndia @Netflix_INSouth @idiamondbabu @prosathish @S2MediaOffl @UrsVamsiShekar @propratheesh -
Kamal Haasan
@ikamalhaasan
In Honour of Peace, In Memory of Courage
#operationsindoor -
Kamal Haasan
@ikamalhaasan
A proud India stands united with its armed forces.
This is the resolute response of a strong nation that will not be divided by cowardly acts of terror. I applaud the decisive and strategic military action taken by Government of India.
Jai Hind.
#operationsindoor -
Kamal Haasan
@ikamalhaasan
Warmest 80th birthday wishes to my dear friend @nramind
N.Ram is a stalwart of Indian journalism, he's stood firm for truth, fairness, and the freedom to question. Grateful for his clarity, courage and companionship over the years. -
Kamal Haasan
@ikamalhaasan
When you count a people, you begin to truly see them.
The caste census shall be a historic stride — but only if anchored in a genuine commitment to equality, honouring generations who fought to be acknowledged, not overlooked.
Makkal Needhi Maiam has long championed the fight against caste injustice through data-driven policy and a commitment to equal dignity, and it welcomes the Union Government’s announcement yesterday.
But we must not repeat 2011, when data was gathered but never released. Truth must see daylight — not languish in sealed files, hidden from the public it was meant to serve.
#castecensus -
Kamal Haasan
@ikamalhaasan
வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது சொல் அல்ல செயல் என்பதை உணர்ந்து, உழைத்து உயர்வதில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த மே தின வாழ்த்துகள்.
#mayday -
Kamal Haasan
@ikamalhaasan
Presenting the Trailer of #eleven
Best wishes to the Team
#eleventrailer
Tamil ▶️ youtu.be/uUeV7yVC3fQ
Telugu ▶️ youtu.be/m-9Rj_NIztc
#elevenfrommay16
@Naveenc212 @ARentertainoffl @SushmaCineArts #gnalagarsamy @lokeshajls @immancomposer @actressReyaa @abhiramiact @Riythvika @ActorDileepan @actorshashank @tweetravivarma @kirrD @karthikisc @srikanth_nb @ezhilfernandas @saregamasouth @onlynikil -
Kamal Haasan
@ikamalhaasan
நாமாக வாழ்வது ஒரு வாழ்க்கை. ஒரு நூலைப் படித்தால் நாம் பெறுவது பல பேரின் வாழ்வனுபவம். ஓர் எழுத்தாளரின் பல்லாண்டு அனுபவம், அவர் சிந்தனையாக ஒரு புத்தகத்தின் மூலம் நமக்குள் பாய்கிறது. சிறகுகள் இல்லாமல் பிறந்துவிட்ட நமக்குப் பரந்த வானத்தைக் காட்டுவது புத்தகமே. சர்வதேச புத்தக தினமான இன்று நல்ல புத்தகங்களைக் கண்டடைவதற்கான நம் முயற்சியைத் திட்டமிடுவோம்.
#worldbookday -
Kamal Haasan
@ikamalhaasan
I strongly condemn the heinous terror attack in Pahalgam. My thoughts are with the families who have lost their loved ones, and I wish strength and recovery to the injured.
India stands united — in grief, in resolve, and in our commitment to uphold law, order, and national security. -
Kamal Haasan
@ikamalhaasan
I offer my deepest condolences to the Catholic community around the world on the passing of Pope Francis. A champion of peace, a humble reformer, a voice for the poor, and a bridge between faiths — he was a moral compass in a fractured world. The world mourns a spiritual leader who placed humanity above all.
-
Kamal Haasan
@ikamalhaasan
#jinguchaa Out Now
youtu.be/o9mivPpQlSA
#thuglife
#thugsweddinganthem
#thuglifefromjune5 #kamalhaasan #silambarasantr
A #maniratnam Film
An @arrahman Musical
A @ikamalhaasan Lyrical
@SilambarasanTR_ #mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #nasser @manjrekarmahesh @TanikellaBharni #vadivukkarasi #chinnijayanth #vaiyapuri #bagavathiperumal #baburaj @alifazal9 @rohitssaraf @arjunchdmbrm #chetan @rajshriartist #srikanthmenon #nithyashri @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM @APIfilms @homescreenent @dop007 @sreekar_prasad @anbariv @krutimahesh #sharmishtaroy @amritharam2 @ekalakhani @AmbadyRanjith @AkihitoSculpt @Monesh_H @gopiprasannaa @magizhmandram @saregamasouth @saregamaglobal @ShakthisreeG @vaishaliisamant @AdithyarkM @NetflixIndia @Netflix_INSouth @idiamondbabu @prosathish @S2MediaOffl @vamsikaka @propratheesh @vaisakh_c_ @PROHarisarasu -
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி திரு. @Udhaystalin அவர்களையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன்.
உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் திரு. மு.க. ஸ்டாலின்.
அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை.
@CMOTamilnadu @Office_of_Udhay @maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
மானுட சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதைச் சிந்தனை விதையாய்த் தூவியவர்; அத்துடன் நின்றுவிடாமல், அந்த சமநிலையின்மையைச் சந்தித்து எதிர்கொள்ளும் வழிவகைகளையும் சொன்னவர்; சொன்னவற்றைச் சட்டப்பூர்வமாக ஆக்கியும் தந்த பெருமகன் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர். அவரது பிறந்த நாள் இன்று.
சமநீதிக்குச் சவால் விடும் கூட்டம் முன்னெப்போதையும்விட வலுவடைந்து வருகிறது. வெறுப்புக்கும், பாகுபாட்டுக்கும் எதிராக நாம் எழ வேண்டிய காலமாக இது உள்ளது. இத்தருணத்தில் நமக்கான ஆயுதங்களையும் கேடயங்களையும் ஆக்கித்தந்த அண்ணலின் சொற்களை நெஞ்சில் ஏந்திக்கொள்ள சூளுரை எடுக்க வேண்டிய நாள் இது.
#ambedkarjayanthi -
Kamal Haasan
@ikamalhaasan
உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு.
உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
மகிழ்ச்சி நிறையட்டும்.
#tamilnewyear -
Kamal Haasan
@ikamalhaasan
From cinema to Silicon, the tools evolve—but our thirst for what’s next remains. Inspired by my visit to Perplexity HQ in San Francisco, where Indian ingenuity shines through @AravSrinivas and his brilliant team building the future—one question at a time.
Curiosity didn’t kill the cat — it created @AravSrinivas and @perplexity_ai ! -
Kamal Haasan
@ikamalhaasan
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தி தேசிய நீரோட்டத்தில் பயணம் செய்பவர்களுக்கு மாத்திரமல்லாமல் தமிழ்ப் பற்றுள்ளவர்களுக்கும் பெரும் வேதனையை தரக்கூடிய ஒன்று.
தேசியத்துக்கும் தாய் மொழி தமிழுக்கும் இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
நிறைவாழ்வு வாழ்ந்த அவரது மறைவால் மனம் குன்றியிருக்கும் அவரது மகளும் தமிழக பாஜகவின் மூத்த தலைவரான சகோதரி தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் அபிமானிகளுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
The Hon’ble Supreme Court’s landmark verdict today restores meaning to democracy by ending the paralysis of elected governments. By mandating timelines for Governors, the Court of the people has safeguarded democratic will and state rights.
I hope this marks the end of unelected gatekeepers turning constitutional posts into political outposts.
I commend Hon’ble CM @mkstalin and the Tamil Nadu government for pursuing this cause in the footsteps of Kalaignar — a lifelong champion of federalism and state rights. -
Kamal Haasan
@ikamalhaasan
My warmest wishes to Comrade MA Baby on being elected as the new General Secretary of the CPI(M). May his leadership be marked by wisdom and resolve, as he continues to uphold and spread the party’s unwavering ideals of egalitarianism and justice.
Onward in struggle and solidarity,
Comrade.
@cpimspeak #mababy -
Kamal Haasan
@ikamalhaasan
உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலனுக்கும் ஈகைச் சிந்தைக்கும் எளியோரை அரவணைக்கும் தன்மைக்கும் குறியீடாக விளங்கும் நன்னாள்; சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.
#ramadan -
Kamal Haasan
@ikamalhaasan
நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
நான் நடையிடுகையில் பற்றிக்கொண்ட விரல்; என்னை வழிநடத்த வார்த்தை சொன்ன குரல்; என் சிறிய அண்ணன் சந்திரஹாசனுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகமாதலால், தந்தை என்ற உணர்வையே தோற்றுவித்திருந்தார். அவரது நினைவு நாள் இன்று. பழகியவையும் பயின்றவையும் நினைவில் இருக்கும் என்றென்றும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Hail to the Champions!
Team India has filled over a billion Indian hearts with joy and pride. A stunning display of skill and sporting excellence. 🇮🇳
#championstrophy2025 -
Kamal Haasan
@ikamalhaasan
On this International Women’s Day, we must reaffirm that true nation-building cannot happen without empowering women. Their leadership, strength, and vision are integral to progress. We must unlock the potential of half our population, ensuring their equitable role in governance.
In the spirit of this day and on behalf of the daughters of India, I once again urge the government to implement women's reservation without linking it to the delimitation exercise — an action that risks undermining our federal unity and calls for a longer national conversation.
As I have since its introduction, I continue to urge the Union Government to amend the Constitution (One Hundred and Sixth Amendment) Act.
Empower women, empower the nation.
#womensday -
Kamal Haasan
@ikamalhaasan
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே, எவ்வித அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை இந்திய மாநிலங்களிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்தப் பெருமையை உயர வைப்பதில் உங்கள் பங்கும் உள்ளது.
அருமையாகத் தயாராகியிருப்பீர்கள். உங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இது. தேர்வை சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் முழுக் கவனமும் இருக்கட்டும். முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
நாளை பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.
தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் திரு. ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!
@mkstalin -
Kamal Haasan
@ikamalhaasan
Maestro @ilaiyaraaja , you continue to inspire. Your Symphony No. 1 – 'Valiant' debut in London is set to blaze a trail across genres. The world eagerly awaits the symphonic brilliance you are about to create!
-
Kamal Haasan
@ikamalhaasan
தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
@Siva_Kartikeyan -
Kamal Haasan
@ikamalhaasan
ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. @vikatan தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை.
கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விசுவாசிகளே நினைத்துப் பார்க்காத விஸ்வரூபம்.
மக்கள் நீதி மய்யம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு.
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய இந்திய மணித்திருநாடு! -
Kamal Haasan
@ikamalhaasan
நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது. அன்புத் தம்பியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான @Udhaystalin அவர்களின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி.
Udhay
@Udhaystalin
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.
@maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
Happy Birthday my dear #thug @SilambarasanTR_
#thuglifefromjune5 -
Kamal Haasan
@ikamalhaasan
எத்தனை இடையூறு வந்தாலும் பகுத்தறிவுப் பாதையே நம்மைச் சிறந்த இலக்குக்கு அழைத்துச் செல்லும் என்று பேசி, அதைக் கடைப்பிடித்தும் நமக்கெல்லாம் வழிகாட்டி, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவே மாறி நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று.
அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
It's disappointing that the Union Government has once again ignored Tamil Nadu's critical development needs. States that perform well economically deserve consistent support in the Union Budget, not just pre-election rewards. Fortunately, Tamil Nadu's turn will come in 2026?
Lip service to India's farmers continues, with no legal guarantee for MSP. Our farmers, the backbone of the nation, deserve more than empty promises.
However, I appreciate the progressive income tax reforms that empower taxpayers, the true drivers of our economy. Makkal Needhi Maiam will continue to champion any policy that bolsters development through domestic demand and empowers the Indian common man. -
Kamal Haasan
@ikamalhaasan
India was built on a dream, where peace was the answer, not violence;
India was built on a dream, where faith could be practiced without fear;
India was built on a dream, where voices could speak freely, and every idea had its place;
India was built on a dream, where sovereignty belonged to the people, not the powerful;
India was built on a dream, where unity was woven from the threads of diversity;
India was built on a dream, where the Constitution wasn’t just a document, but the conscience of the nation.
In our collective hands rests the destiny of a nation that shines brighter with each passing day. Happy Republic Day to you all. -
Kamal Haasan
@ikamalhaasan
ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. ‘பஞ்சப் பராரிகளின் நாடு’ என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.
‘நாட்டுப்புறத்தான்’ தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.
உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்; வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர்; யாப்பின் அருங்கல மாலுமியானவர்; மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம்.
பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்.
#pongal2025 -
Kamal Haasan
@ikamalhaasan
Extraordinary achievement by Team #ajithkumarracing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports.
-
Kamal Haasan
@ikamalhaasan
மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது.
பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார்.
அவருக்கு என் அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்து. அரசியல் பணிகளுக்காகப் பாராட்டுகளும், சமூகப் பணிகளுக்காக விருதுகளும் பெற்றிருக்கும் தோழரைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் என் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இசையால் உலகைத் தன் வசப்படுத்திய அன்புச் சகோதரர், இசைப் புயல் @arrahman அவர்களை பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். நலமே சூழ்க!
-
Kamal Haasan
@ikamalhaasan
அண்ணன்கள் வயது வித்தியாசத்தால் அப்பாக்களாக ஆவதுண்டு. அப்படி மாத்திரமல்லாமல், வாத்சல்யத்தாலும் கற்பித்தலாலும் பண்புகளில் முன்னுதாரணமாகத் திகழ்வதாலும் தந்தையாகவே என்னை உணரவைக்கும் மூத்த சகோதரர் சாருஹாசனின் பிறந்த நாள் இன்று.
இத்தனைக் காலத்தில் எத்தனையோ பிறந்த நாள்கள் கடந்திருக்கும். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணனின் பிறந்த நாளில் குதூகலம் கொள்கிறது மனது. அவர் வாழ்க நீடூழி. மனதிருக்கிறது வாழ்த்த; வயதிருக்கிறது அவர் கை பற்றி அருகில் நிற்க. -
Kamal Haasan
@ikamalhaasan
As we step into 2025, here's to owning our path and writing a better story. The new year isn’t just about time moving forward—it's about us moving forward, wiser, stronger, and ready to shape our own destinies. Let’s make it the year we turn our best dreams into reality. Happy New Year to you all!
2025ல் நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக்கொண்டு ஒரு சிறந்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம்.
புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது.
நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! -
Kamal Haasan
@ikamalhaasan
என்னாலே இயலுமெனக் கணித்தது - செந்தமிழ்ப் பாட்டனைப் பாட்டாக்கப் பணித்தது முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அன்பு.
என் சொல்லெனும் மலருக்கு இசையெனும் மணம் சேர்த்த இசைப்புயல் @arrahman அவர்களுக்கும், பாவெழுதிய என்னையும் வாழ்த்தி எழுதிய முதலமைச்சருக்கும், இந்தத் தமிழ்ப் பணியை முன்னெடுத்த துணை முதல்வர் @Udhaystalin அவர்களுக்கும் நன்றி.
“ஆயிரமாயிரம் ஆண்டு கடப்பினும் ஆர்ப்பரித்தோதிடும் திராவிட வேதம், எங்கள் திராவிட வேதம் திருக்குறள் வாழிய வாழியவே”
#thiruvalluvar #statueofwisdom
#எங்கள்திராவிடவேதம்
M.K.Stalin
@mkstalin
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழாவில் ‘வள்ளுவமாலை’ படைத்திட்ட கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கும் இசைப்புயல் @arrahman அவர்களுக்கும் நன்றியும்; வாழ்த்துகளும்!
#பேரறிவுச்சிலை #statueofwisdomThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்.
வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்.
#vijayakanth -
Kamal Haasan
@ikamalhaasan
India has lost one of its most eminent statesmen and scholars. The passing of Dr. Manmohan Singh marks the end of an era in Indian polity. A man of quiet dignity, he reshaped the nation through his visionary economic and social policies.
Few have influenced the nation's trajectory with such far-reaching impact. His policies, both as Finance Minister and Prime Minister, empowered millions, strengthening the fabric of Indian democracy and uplifting the most vulnerable. His governance was marked by a deep commitment to inclusivity and social justice, ensuring that India's progress reached every corner of society.
His legacy will endure in the annals of Indian history, forever remembered as a leader who quietly but profoundly changed the course of the nation. My sincerest condolences to his family and to the nation on the loss of one of its finest sons. -
Kamal Haasan
@ikamalhaasan
நூறாண்டு காணும் தொண்டு.
எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.
சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார்.
அவருக்கு என் வாழ்த்து. -
Kamal Haasan
@ikamalhaasan
ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.
மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.
மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது.
மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.
மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
வருட இறுதியில் பனிக்குளிர் மாதத்தில் கொண்டாட்ட மனநிலையைக் கொண்டுவரும் கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடுகிற சகோதர சகோதரிகளுக்கு என் மகிழ்ச்சியான வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தான் சார்ந்த சமூகத்துக்கு அறிவுத் தெளிவு ஏற்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள் முழுமையையும் செலவிட்ட பெருமகன் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்.
அவருடைய உரையாடல்களில் மார்க்ஸியமும் பெரியாரியமும் தெறிப்புகளை ஏற்படுத்தும். தமிழர் பண்பாடு குறித்தும் சமயங்கள் குறித்தும் ஏராளமான விஷயங்களை எனக்குத் துலக்கிக் காட்டிய அறிஞர் பரமசிவன் அவர்களின் நினைவுநாள் இன்று.
குழப்பங்களைத் தொலைவில் வைத்து தெளிவை நெருங்க அவர்தம் நட்பு எனக்கு உதவிற்று. அவரது நினைவுகளைப் போற்றுகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சமநிலை மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர். தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர்.
கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம். -
Kamal Haasan
@ikamalhaasan
நான் குழந்தையாகத் தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர்; நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர்; மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியர் ஆனவர்... அன்புக்கும் மரியாதைக்குமுரிய உறவாக நிலைத்துவிட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் இன்று. எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
India has lost the most humane storyteller of our time, and I’ve lost a guru. Through his lens, Shyam Benegal brought real India to the screen, making us love the ordinary while tackling profound social subjects. My heartfelt condolences to his family, friends, and all who cherished his art.
-
Kamal Haasan
@ikamalhaasan
எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
You leave behind a legacy as one of the finest spinners the world has ever seen and Tamil Nadu’s greatest ever cricketer, @ashwinravi99 . Your fierce competitive spirit and pure cricketing intelligence, unmatched in the modern game, are etched forever in the hearts of cricket lovers. Well done and best wishes for your next chapter.
-
Kamal Haasan
@ikamalhaasan
Ambedkar’s ideas are the building block on which modern India is built. While Gandhiji freed India from foreign oppression, Dr. Ambedkar liberated India from its own ancient shackles of social injustice.
Every Indian who proudly believes and fights for Babasaheb's vision of free and just India, where all are born equal, will never tolerate the great man’s legacy to be tarnished.
As a modern and moral global power, we should commemorate 75 years of the adoption of our Constitution with a meaningful discussion, debate, and dissection of Ambedkar's ideas in the esteemed halls of Parliament. These ideas should inspire progress rather than be misused to offend the sentiments of his followers, among whom I am proud to count myself.
நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார்.
அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.
நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.
#ambedkar -
Kamal Haasan
@ikamalhaasan
பெருமைக்குரிய சாகித்ய அகாடமி விருதை, தனது அல்புனைவு எழுத்துக்களுக்காக வென்றிருக்கிறார் மொழி - பண்பாட்டு ஆய்வாளர் திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி.
கடும் உழைப்பைக் கோரும், விரிவும் ஆழமும் கொண்ட ஆய்வெழுத்துப் பணியில் அவரது இடையறாத பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் இதைக் கொண்டாடலாம்.
ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு என் மனமார்ந்த வாழ்த்து. -
Kamal Haasan
@ikamalhaasan
Zakir Bhai ! He left too soon. Yet we are grateful for the times he gave us and what he left behind in the form of his art.
Goodbye and Thank you.
#zakirhussain -
Kamal Haasan
@ikamalhaasan
என் அருமை நண்பர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மனதைத் தாக்குகிறது. பெரும் பாரம்பரியமுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தூணாக இருந்தவர் சாய்ந்துவிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், என்பவை இருக்க, அவர் பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது.
வயதைப் பொருட்படுத்தாமல் தான் ஈடுபட்ட பணிகளில் அயராது செயல்பட்டவர் அன்பு நண்பர் இளங்கோவன் அவர்கள். சட்டமன்ற விவாதங்கள் ஆனாலும் சரி, கட்சி அரசியல் கூட்டங்களானாலும் சரி, களைப்பும் தளர்ச்சியும் இல்லாமல் முழு மூச்சோடு செயல்பட்டவர்.
தகைமையுடைய தலைவரை இழந்து அதிர்ந்து நின்றிருக்கும் காங்கிரஸ் அன்பர்களுக்கும், ஆலமரமாகத் தங்களைக் காத்துவந்த மூத்தவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல்களை உளப்பூர்வமாகத் தெரிவிக்க விழைகிறேன்.
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்ற வள்ளுவ வாசகமே நெஞ்சில் மோதுகிறது. -
Kamal Haasan
@ikamalhaasan
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 6 வயதுக் குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
மருத்துவமனைகளில் இனியும் இதுபோன்ற விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் அவசியம். -
Kamal Haasan
@ikamalhaasan
History checkmated! Kudos to @DGukesh for becoming the youngest World Champion in chess history. India beams with pride!
Overcoming the opponent’s advantageous white pieces in the final game, speaks volumes of our champions composure and fortitude. -
Kamal Haasan
@ikamalhaasan
அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க! -
Kamal Haasan
@ikamalhaasan
முன்னைப் பழைமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதி.
என்றைக்குமான சிந்தனைகளை நமக்குத் தந்துவிட்டுப் போன பெருங்கவிஞரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களைச் சிந்தித்து வாழ்த்துவோம்.
ஓய்தல் ஒழி
குன்றென நிமிர்ந்து நில்
சிதையா நெஞ்சு கொள்
தீயோர்க்கு அஞ்சேல்
புதியன விரும்பு
#bharathiyar -
Kamal Haasan
@ikamalhaasan
மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
‘நான் முதலமைச்சராக இருக்கும்வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது.
மக்கள் பிரச்னையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் அவர்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
கற்றதைப் பகிர்கிறேன்
சிங்கீதம் சொல்லும் சினிமாக் கலை
'அபூர்வ சிங்கீதம்' தொடரின் முன்னோட்டம்
#apoorvasingeetham From Tomorrow at 6 PM streaming exclusively on
➡️ youtube.com/@rkfi
➡️ facebook.com/RKFIoffl
@RKFI @turmericmediaTM @magizhmandramThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.
ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம். -
Kamal Haasan
@ikamalhaasan
பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி @Udhaystalin அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Our Nation, Our People, Our Constitution.
Constitution of India (English) -
cdnbbsr.s3waas.gov.in/s380537a945c7aaa788ccfcdf1b99b5d8f/…
Constitution of India (Tamil) -
lddashboard.legislative.gov.in/sites/default/files/Tamil …
#constitutionday -
Kamal Haasan
@ikamalhaasan
பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை; தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.
தியாகத்தின் உச்சமாகத் திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம். -
Kamal Haasan
@ikamalhaasan
புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்; காந்தியாரின் பேரன்பிற்குப் பாத்திரமானவர்; அறிவியல் சிந்தனையின் முன்னோடி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் வணக்கம் செலுத்துகிறேன்.
தொழில் மயமாக்கல், விவசாய உற்பத்தி பெருக்கம், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், அணிசேராக் கொள்கை உள்ளிட்ட அவரது தொலைநோக்குப் பார்வைதான் நவ இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.
ஆசியாவின் விடியலுக்கு விதையிட்ட பெருமகனாரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்ப் பேராசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கிய பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவர்கள் இன்று மறைந்துவிட்டார்.
இந்தியாவில் தலித் சிந்தனைப் போக்கு எழுச்சி கொள்ளத் தொடங்கிய காலக்கட்டத்திலேயே தமிழகத்தில் அந்தக் கருத்தியலைப் பிரபலமாக்கிய முன்னோடியாகத் திகழ்ந்தார். தொடர்ந்து பண்பாட்டு ஆய்வில் தன் செயல்பாடுகளை முன்வைத்த அவரது, ‘தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு’, ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் வாசகப் பரப்பில் பரவலான கவனத்தைப் பெற்றன.
புனைவெழுத்திலும் தவிர்க்க முடியாத எழுத்தாளராகத் திகழ்ந்த ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச் சுமை போன்ற நாவல்கள் இலக்கிய வாசகர்களால் கொண்டாடப்பட்டன.
மொழியிலும் சமூக ஆய்விலும் இடையறாது இயங்கிவந்த அவரது இழப்பால் மனம் குன்றியிருக்கும் குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து மனங்கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
உங்கள் நான்,
கமல் ஹாசன். -
Kamal Haasan
@ikamalhaasan
பத்திரிகை வாசகர்கள், தொலைக்காட்சி ரசிகர்கள் எனப் பல தரப்பினரையும் தன் எழுத்துகளால் வசீகரித்த எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜனின் திடீர் மறைவு வருந்தத்தக்கது.
தன் இறுதி நாள் வரை எழுத்துத் துறையில் இடையறாமல் இயங்கி வந்த அவர் இன்று இறுதி ஓய்வு அடைந்திருக்கிறார்.
அவரது குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை.
அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி பாராட்டுகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
I received your warm birthday greetings today, Hon. Chief Minister of West Bengal @MamataOfficial . Your kindness and touching gesture is deeply appreciated.
-
Kamal Haasan
@ikamalhaasan
என் பிறந்த நாளுக்கு, தன் உள்ளத்தைத் திறந்துவைத்து வாழ்த்தியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமான். விரிவான அந்த வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன். தொட்டடுத்த நாளான இன்றே தன் பிறந்த நாள் காணும் அவரை மனதார வாழ்த்துகிறேன்.
எடுத்த காரியம் எதுவாயினும் இடைநிறுத்திவிடாத உறுதி, தான் கொண்ட கருத்துகளைச் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து பரப்பும் தெளிவு என செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரரை வாழ்த்துவதில் ஒரு மூத்தவனாக மனமிக மகிழ்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
சென்னை மத்தியத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், அன்புச் சகோதரர் திரு. தயாநிதி மாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Dayanidhi Maran தயாநிதி மாறன்
@Dayanidhi_Maran
இன்று பிறந்தநாள் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.@ikamalhaasan அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
@maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திருமதி.வானதி சீனிவாசன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
Vanathi Srinivasan
@VanathiBJP
சிறந்த நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும் என் அன்புத் தம்பியுமான திரு. விஜய் வசந்த் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
Vijay Vasanth
@iamvijayvasanth
சினிமா துறையின் நம்மவர், மக்கள் நீதி மய்யம் தலைவர், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
@ikamalhaasan
#kamalhaasan70 -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the warm birthday greetings. Your words inspire me to continue working for the progress of our people.
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
@manickamtagore
Warm birthday wishes to Thiru @ikamalhaasan a strong voice against hate and a visionary leader of MNM.
May you continue to inspire with your dedication to unity, progress,& justice. Wishing you good health,happiness, and success in all your endeavors. #hbdkamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், எழுத்தாளரும், சமூகத்துக்காகச் சிந்திப்பதில் ஓய்வு தேடாத மனத்தினருமான ரவிக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Dr D.Ravikumar MP
@WriterRavikumar
நம்மவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
இன்று பிறந்த நாள் காணும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு @ikamalhaasan அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
திரைப்படங்களை அரசியல்படுத்துபவர், அரசியல் தளத்தில் நடிக்காதவர். இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் நம்மவர். சார்புணர்ந்து ஒழுகும் சான்றாண்மை கொண்டவர். வாழ்க நீடு! -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு தொழில்துறை, வணிகத்துறை அமைச்சரும் என் பிரியத்துக்குரிய இளவலுமான திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றிகள்.
Dr. T R B Rajaa
@TRBRajaa
மக்கள் நீதி மய்யம் தலைவர் #உலகநாயகன் அருமை அண்ணன் @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🏾
திராவிடத்திற்குத் துணை நின்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது மக்கள் பணி என்றும் தொடரட்டும் ! திரைத்துறையில் தங்களது சாதனைகளும் தனித்துவம் மிக்க முயற்சிகளும் புதிய உச்சங்களை தொடட்டும்🙏🏾
#hbdkamal70 #kamal70 #hbdkamalhaasan #ulaganayagan -
Kamal Haasan
@ikamalhaasan
பிறந்த நாளுக்கு வாழ்த்திய, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் அன்புக்கு என் பதில் நன்றிகள்.
Dr ANBUMANI RAMADOSS
@draramadoss
மக்கள் நீதிமையம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அரசியலிலும், திரைத்துறையிலும் சாதிக்க எனது வாழ்த்துகள்!
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு பாஜக-வின் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
K.Annamalai
@annamalai_k
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவரும், இந்தியத் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவருமான, திரு @ikamalhassan அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு @ikamalhassan அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது கலைப் பணி மற்றும் சமூகப் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களின் வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றி.
Selvaperunthagai K
@SPK_TNCC
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், உலகநாயகன் திரு @ikamalhaasan அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதிக்கும் உலகநாயகன் அவர்கள் இன்றும் என்றும் வெற்றிகளை குவிக்க இந்நன்னாளில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@maiamofficial @KHOurPride -
Kamal Haasan
@ikamalhaasan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் என் பேரன்புக்குரிய சகோதரருமான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் இனிய வாழ்த்துக்கு நன்றி. தொலைபேசி வழியாகவும் வாழ்த்திய உங்களது அன்பில் அகம் மகிழ்கிறேன்.
Thol. Thirumavalavan
@thirumaofficial
இன்று பிறந்தநாள் காணும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் #உலகநாயகன் @ikamalhaasan அவர்களுக்கு #விசிக சார்பில் எமது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பிறந்த நாள் வாழ்த்தளித்த தமிழ்நாடு துணை முதல்வர், என் இனிய இளவல் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியிலும் அழைத்து வாழ்த்தினார். அவரது அன்பிற்கு என் நன்றி.
Udhay
@Udhaystalin
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் @ikamalhaasan சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!
#hbdkamalsir @maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the warm wishes, my dear friend, Hon. CM of Kerala Shri Pinarayi Vijayan. Kerala and its people have always held a special place in my heart.
Pinarayi Vijayan
@pinarayivijayan
Happy birthday to my dear friend @ikamalhaasan. A true icon of cinema and a passionate advocate for secular and democratic values, Kamal has carved a unique space in our hearts through his art and public interventions. His admiration for Kerala and Keralites inspiring. Wishing him joy for the life ahead.
-
Kamal Haasan
@ikamalhaasan
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் செய்தி அளித்ததோடு, தொலைபேசியிலும் வாழ்த்திய தமிழ்நாடு முதல் அமைச்சர், இனிய நண்பர், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்நாளின் இனிப்பு இது.
M.K.Stalin
@mkstalin
பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - @maiamofficial-இன் தலைவர் @ikamalhaasan அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்! -
Kamal Haasan
@ikamalhaasan
Every role is an evolution, every film a journey. #thuglife
Tamil - youtu.be/ZS2Y25OOCok
#thuglifefromjune5th
A #maniratnam Film
English - youtu.be/AfgX6nYbJU4
Telugu - youtu.be/mouLxgYxowQ
Kannada - youtu.be/r98V3RwB944
Malayalam - youtu.be/uGL1cOlGzBE
@RKFI @MadrasTalkies_ @turmericmediaTM @RedGiantMovies_
@SilambarasanTR_ @arrahman #mahendran @bagapath @trishtrashers @AshokSelvan @AishuL_ @C_I_N_E_M_A_ @abhiramiact #nasser @manjrekarmahesh @TanikellaBharni #vadivukkarasi #chinnijayanth #vaiyapuri #bagavathiperumal #baburaj @alifazal9 @rohitssaraf @Arjunchdmbrm #chetan @rajshriartist #srikanthmenon #nithyashri @MShenbagamoort3 @APIfilms @homescreenent @dop007 @sreekar_prasad @anbariv @krutimahesh #sharmishtaroy @amritharam2 @ekalakhani @AmbadyRanjith @AkihitoSculpt @Monesh_H @gopiprasannaa @idiamondbabu @prosathish @S2MediaOffl @magizhmandram @UrsVamsiShekar @vaisakh_c_ @PROHarisarasu -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழக பாஜக தலைவர், தம்பி @annamalai_k அவர்கள் அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.
K.Annamalai
@annamalai_k
Happened to watch the movie ‘Amaran’. This is a very important one in many aspects
The bravery, courage and the integrity that our men in uniform display.
The vivid portrayal of the cost a family pays when our nation’s best sacrifices themselves to protect the rest of us.
Why some will always be very special than the rest of us - because they wear their uniform with pride and willingly go into harm’s way
The emotional toil and pain - the family of an army man will carry but with pride.
Major. Mukund Varadharajan’s life is an inspiring story for the ages. His ultimate sacrifice for our nation in 2014 made all of us to feel that we had lost something within us, as I distinctly remember those emotional moments as I was in my Khaki then.
Fabulous directing by @Rajkumar_KP, extraordinary portrayal by @Siva_Kartikeyan, who has turned a huge page in his acting career, a character unlike any by @Sai_Pallavi92, gripping music, a camera that was both sensitive and gritty. Special thanks to @ikamalhaasan avl for producing this movie.
I feel this is a tribute to all men in Uniform - serving and the ones we had lost.
Long live our Indian Armed Forces, and we say it with pride—you are THE BEST.
Thank you, team Amaran, for this extraordinary movie. -
Kamal Haasan
@ikamalhaasan
அன்பும், வாழ்த்தும் அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி இனிய நண்பரே @rajinikanth .
#amaran
Raaj Kamal Films International
@RKFI
The Voice of Honor 🔥
#superstar @rajinikanth Sir praised Team #amaran
#amarandiwali #majormukundvaradarajan
#kamalhaasan #rajinikanth #sivakarthikeyan #saipallavi #rajkumarperiasamy
A Film By @Rajkumar_KP
@ikamalhaasan @Siva_Kartikeyan #mahendran @Rajkumar_KP @Sai_Pallavi92 @gvprakash @anbariv @RKFI @Dop_Sai @rajeevan69 #stefanrichter @kalaivananoffl @amritharam2 @gopiprasannaa @turmericmediaTM @magizhmandram @saregamasouth @saregamaglobal @SonyPicsIndia @sonypicsfilmsin @MShenbagamoort3 @RedGiantMovies_ @APIfilms @homescreenent @actor_nithiin @SreshthMovies @GokulamMovies @GokulamGopalan @DreamBig_film_s @srkrishnamoorty @jsujithnair @PenMovies @5starsenthilk @RahulBose1 @khanwacky @ShivAroor @RahulSinghx @Netflix_INSouth @NetflixIndia @vijaytelevision @rohmanshawl04 @sherif_choreo @kailasam_geetha @idiamondbabu @prosathish @treeshulmedia @S2MediaOffl @UrsVamsiShekar @vaisakh_c_ @PROHarisarasuThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
Happy Birthday my friend @iamsrk . You've lived with dignity and charm, always wearing a smile that could still a nation. May you continue to light up screens and hearts alike!
-
Kamal Haasan
@ikamalhaasan
திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது. ரசிகர்களுக்கு என் நன்றி.
#amaran #majormukundvaradarajan
@RKFI @turmericmediaTM -
Kamal Haasan
@ikamalhaasan
எங்களது அழைப்பை ஏற்று #amaran திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களுக்கும், தமிழ்நாட்டின் துணை முதல்வர், என் அன்பு இளவல் திரு. @Udhaystalin அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி.
@CMOTamilnadu @RKFI @turmericmediaTM
M.K.Stalin
@mkstalin
நண்பர் கலைஞானி @ikamalhaasan அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று #அமரன் திரைப்படம் பார்த்தேன்.
புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் @Rajkumar_KP, மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி @Siva_Kartikeyan, @Sai_Pallavi92 மற்றும் #amaran படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute!
@RKFI @gvprakash -
Kamal Haasan
@ikamalhaasan
இந்தியா முழுமையும் மகிழ்ந்து
கொண்டாடும் ஒருநாள் தீபாவளி.
இல்லமெங்கும் மகிழ்ச்சி
உள்ளமெங்கும் மலர்ச்சி என
இந்த ஒளிநாளில் அனைவர் மனதிலும்
உற்சாகம் நிறைய வாழ்த்துகிறேன்.
#happydiwali -
Kamal Haasan
@ikamalhaasan
Leaders seldom choose a trodden path. They create one where there is none and blaze a new trail. #majormukundvaradarajan of TamilNadu is one such leader. We take pride in regaling his story
#amarantrailer Out Now
Tamil: youtu.be/hylIXfZeB4c
Hindi: youtu.be/molA7xjD_nQ
Telugu: youtu.be/U3aPapvUihg
Malayalam: youtu.be/oHNbwifsASg
Kannada: youtu.be/Hch6y0mL1fE
#amarandiwali #amaranoctober31
@Siva_Kartikeyan #mahendran @Rajkumar_KP @Sai_Pallavi92 @gvprakash @anbariv @RKFI @turmericmediaTM @Dop_Sai @rajeevan69 #stefanrichter @kalaivananoffl @amritharam2 @gopiprasannaa @magizhmandram @saregamasouth @saregamaglobal @SonyPicsIndia @sonypicsfilmsin @MShenbagamoort3 @RedGiantMovies_ (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
@APIfilms @homescreenent @actor_nithiin @SreshthMovies @GokulamMovies @GokulamGopalan @DreamBig_film_s @srkrishnamoorty @jsujithnair @PenMovies @5starsenthilk @khanwacky @yorkcinemas @cinema_boleyn @PrimeMediaUS @dmycreationoffl @FilmsForum @ShivAroor @RahulSinghx @Netflix_INSouth @NetflixIndia @vijaytelevision @spectre_post @rohmanshawl04 @kailasam_geetha @idiamondbabu @prosathish @treeshulmedia @S2MediaOffl @UrsVamsiShekar @vaisakh_c_ @PROHarisarasu (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
திராவிடம் நாடு தழுவியது.
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.
அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!
எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
வேடிக்கையான வசனங்களாலும், நகைச்சுவை ததும்பும் கதைசொல்லல் முறையாலும், மறக்கவியலாப் பாத்திரப் படைப்புகளாலும் தமிழ்த் திரையில் தன் தடங்களை விட்டுச் சென்றிருக்கும் அன்பு நண்பர் கிரேசி மோகனின் பிறந்தநாளில் அவரோடு பணியாற்றிய காலங்கள் என்னுள் இனிய நினைவுகளை உசுப்பிப் பார்க்கின்றன.
-
Kamal Haasan
@ikamalhaasan
My best wishes to Thiru Naveen Patnaik Ji on his birthday. You have dedicated your life for the people of Odisha and have transformed the state. I wish you continued good health and may you continue to serve with your distinctive leadership and integrity.
@Naveen_Odisha -
Kamal Haasan
@ikamalhaasan
கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
இந்த விஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர்.
அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது. -
Kamal Haasan
@ikamalhaasan
Happy to unveil the Lyric Video #thedeviliswaiting from #eleven sung by @shrutihaasan . Best wishes to the whole Team.
TAMIL youtu.be/DNFmYhAraic
TELUGU youtu.be/9MnH16tPpBI
An @immancomposer Musical
@ARentertainoffl @Naveenc212 @lokeshajls @actressReyaa @abhiramiact @Riythvika @ActorDileepan @actorshashank @tweetravivarma @kirrD @karthikisc @srikanth_nb @ezhilfernandas @saregamasouth @five_senthil @UrsVamsiShekar @onlynikil -
Kamal Haasan
@ikamalhaasan
என்னுடைய இனிய நண்பர் திரு. முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர்.
திரு. முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Ratan Tata Ji was a personal hero of mine, someone I’ve tried to emulate throughout my life. A national treasure whose contributions in nation-building shall forever be etched in the story of modern India.
His true richness lay not in material wealth but in his ethics, integrity, humility and patriotism. In the immediate aftermath of the 2008 Mumbai attacks, I met him while staying at the iconic Taj Hotel. In that moment of national crisis, the titan stood tall and became the embodiment of the Indian spirit, to rebuild and emerge stronger as a nation.
My profound condolences to his family, friends, Tata Group and my fellow Indians -
Kamal Haasan
@ikamalhaasan
Gandhiji’s life lived in the service of his fellow man, shall withstand the test of time, as the seminal moment in human history, when one simple man altered the course of ideological evolution of human civilisation.
As for me, I have taken my own journey both with the man and the idea. He shall always remain my conscience, my Bapu who like my father, taught me that honesty and love for all shall conquer all.
#gandhijayanti -
Kamal Haasan
@ikamalhaasan
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்கள் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Congratulations @Udhaystalin on your elevation as Dy. Chief Minister of Tamil Nadu. Today, you undertake a solemn oath both to the Constitution of India and the people of Tamil Nadu. I’m confident you will faithfully serve them both.
-
Kamal Haasan
@ikamalhaasan
இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன.
அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான #spbalasubrahmanyam அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது.
பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும்.
@CMOTamilnadu -
Kamal Haasan
@ikamalhaasan
'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.
'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
I’m touched by your warm and kind words @S_Thondaman
Senthil Thondaman
@S_Thondaman
My best wishes to dear friend Shri.Kamal Hasan @ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
அன்பிற்கினிய நண்பர், சிறந்த சிந்தனையாளர், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. @WriterRavikumar அவர்களது இனிய வாழ்த்து உற்சாகமளிக்கிறது. அவரது அன்பிற்கு என் நன்றி.
Dr D.Ravikumar MP
@WriterRavikumar
வாழ்த்துகிறேன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ‘நம்மவர்’ திரு @ikamalhaasan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
தனது நலனைவிட, கட்சியின் நலனைவிட நாட்டின் நலனே பெரிது என அவர் எடுத்த முடிவு தாராள சிந்தையின் வெளிப்பாடல்ல, தடுமாற்றமில்லாக் கொள்கைத் தெளிவு, தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு!
காந்தியடிகளின் மதச்சார்பின்மையையும், அண்ணல் அம்பேத்கரின் சமத்துவத்தையும் கைத்துணையாகக் கொண்ட அவரது பயணம் வெல்லட்டும்!
- ரவிக்குமார் எம்.பி -
Kamal Haasan
@ikamalhaasan
அன்புத் தம்பியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. @Udhaystalin அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
Udhay
@Udhaystalin
பாசிச எதிர்ப்பிலும் - முற்போக்கு அரசியலிலும் என்றும் உறுதியுடன் பயணிக்கும் ‘உலக நாயகன்’ @ikamalhaasan சார், @maiamofficial-ன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது அறிந்து மகிழ்ந்தேன். அவருடைய பணிகள் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @SPK_TNCC அவர்களின் கனிவான வாழ்த்துக்களுக்கு நன்றி.
Selvaperunthagai K
@SPK_TNCC
மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு @ikamalhaasan அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பாசிச சக்திகளுக்கு எதிரான களத்தில் நாம் ஒன்றிணைந்து போராடுவோம்.
@maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
நாம் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும், கடைப்பிடிக்கும் ஒழுங்கையும் உளமாற பாராட்டினீர்கள். உங்களது பாராட்டுகளை இன்று நடந்த பொதுக்குழுவில் எங்கள் தொண்டர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன்.
மக்கள் நலன்களுக்கான நமது நட்புப் பயணம் தொடரட்டும்.
M.K.Stalin
@mkstalin
பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் @ikamalhaasan அவர்கள் மீண்டும் @maiamofficial கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!
-
Kamal Haasan
@ikamalhaasan
என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும்.
ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்.
இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! -
Kamal Haasan
@ikamalhaasan
My best wishes to our Honorable Prime Minister @narendramodi ji on his birthday. May you have a long and healthy life.
-
Kamal Haasan
@ikamalhaasan
சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார்.
முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.
இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.
அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.This media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
ഈ വർഷത്തെ ഓണത്തിന്റെ സ്നേഹം പകരുന്ന ഊർജവും ജീവൻ തുടിക്കുന്ന വർണ്ണങ്ങളും നിങ്ങൾക്കെല്ലാവർക്കും ഒരിക്കലും നിലയ്ക്കാത്ത സന്തോഷം നൽകട്ടെ !
എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശാംശകൾ
#onam -
Kamal Haasan
@ikamalhaasan
Deeply saddened to hear Comrade Sitaram Yechury Ji, a giant of Indian politics, has passed away.
Along his journey from student activist to Statesmen, he left his indelible mark on our national discourse and politics. My condolence to his family and well wishers.
Farewell Comrade . -
Kamal Haasan
@ikamalhaasan
பல்வேறு வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து `தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக இருந்த திரு. த.வெள்ளையன் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.
தமிழ்நாட்டு வணிகர்களைப் பாதுகாப்பதும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதுமே தனது வாழ்நாள் பணி என்று வாழ்ந்தவர் திரு. த. வெள்ளையன். அவரது மறைவு வணிகர்களுக்குப் பேரிழப்பு.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், வணிகப் பெருமக்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழில் பேச்சாற்றல், ஆங்கிலத்தில் பெரும்புலமை, சட்டம் உரைக்கும் கல்வி, தொழிற்சங்கப் போர்ஞானம் எனப் பல்வேறு திறன்கள் கொண்டவர் தலைவர் வ.உ.சி.
தன் அத்தனை ஆளுமையையும் சுதந்திரப்போராட்டத்திற்கு அர்ப்பணித்தவர். ‘இடர்ப்படினும் சுதந்திரம் பெறாது ஒடுங்கேன்’ என்று சூளுரைத்து, சமூகத்துக்காகவே வாழ்ந்து காட்டிய அப்பெருமகனாரின் பிறந்த நாளில் அன்னாரை வணங்கி வாழ்த்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Teaching is the greatest act of patriotism a citizen can do for their nation. My sincerest gratitude to all the educators - you are the architects of our future.
#teachersday -
Kamal Haasan
@ikamalhaasan
Excited for Chennai to host the #formula4 Race! Thrilled to see our spirit, hospitality, and sporting excellence on display. Congratulations to @mkstalin & @Udhaystalin for transforming Tamil Nadu into the Sports Capital of India and the Detroit of the East.
-
Kamal Haasan
@ikamalhaasan
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்.
@mkstalin -
Kamal Haasan
@ikamalhaasan
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த்.
ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்.
#captainvijayakanth @PremallathaDmdk @dmdkparty2005 -
Kamal Haasan
@ikamalhaasan
இன்று பிறந்த நாள் காணும் என் அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் @thirumaofficial ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்திய ஜனநாயகவாதி. சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர். சமூகநீதிக் கோட்பாட்டை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும்படி விளக்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர்.
இந்த இனிய நாளில், தம்பி திருமாவளவன் கையில் எடுத்திருக்கும் பெரும்பணிகள் வெல்க என வாழ்த்தி மகிழ்கிறேன். ஜெய் பீம்! -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது.
ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார்.
இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.
@kamalpanpattu -
Kamal Haasan
@ikamalhaasan
My editorial in today’s @thehindu on Independent India’s journey and its true bravehearts.
#independeceday2024 -
Kamal Haasan
@ikamalhaasan
Today, as proud sons and daughters of our motherland, let us vow to dream bigger, work harder and achieve the destiny of this great nation.
Happy Independence day to all my fellow countrymen!
#independenceday2024 -
Kamal Haasan
@ikamalhaasan
A star is born! Congratulations Aman Sehrawat on winning the Olympic bronze. Our Wrestlers continue to bring glory to the nation and make us proud.
#indiaatolympics #olympics -
Kamal Haasan
@ikamalhaasan
"We shall either free India or die in the attempt; we shall not live to see the perpetuation of our slavery.”
- Mohandas Karamchand Gandhi
Never forget the sacrifices of those who came before us to give us the freedoms we enjoy today.
#quitindiamovement -
Kamal Haasan
@ikamalhaasan
Your Javelin gave flight to a billion dreams!
India is proud and privileged to have an Olympic Champion with your skill and gravitas. Congrats on the Silver Medal and long may you continue to inspire us all @Neeraj_chopra1
#indiaatolympics #olympics -
Kamal Haasan
@ikamalhaasan
From the first whistle to the final hooter - our hockey players displayed attacking artistry and dogged defensive skills of Champions. The camaraderie among these playres took them to the podium and made India beam with pride!
@16sreejesh Take a bow - a fitting end to a remarkable career. A shield between the goal posts, titan and a true ambassador of the game.
#olympics #teamindia #hockey -
Kamal Haasan
@ikamalhaasan
Saddened by the passing of veteran leader and ex-CM of West Bengal, Comrade Buddhadeb Bhattacharjee. His simplicity and integrity in public life are an inspiration to us all. My condolences to his bereaved family and loved ones.
-
Kamal Haasan
@ikamalhaasan
என்றும் உங்கள் நான்.
@vijaytelevision -
Kamal Haasan
@ikamalhaasan
A comeback for the ages - Swapnil Kusale your name is etched in the annals of Indian Sports! Congratulations, you’ve made all of India proud.
#indiaatolympics #paris2024 -
Kamal Haasan
@ikamalhaasan
Two in a row!
@realmanubhaker and @Sarabjotsingh30, your performance is par excellence and makes all Indians proud.
@realmanubhaker, you join the league of legends such as PT Usha, Karnam Malleswari, and Mary Kom. This feat will inspire the next generation of kids to follow in your footsteps!
#indiaatparis2024 -
Kamal Haasan
@ikamalhaasan
கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம்.
ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
#wayanad -
Kamal Haasan
@ikamalhaasan
Bulls eye at #parisolympics2024! @realmanubhaker You’ve shot your way to immortality and a place of pride in every Indian’s heart. First of many more over the next fortnight!
-
Kamal Haasan
@ikamalhaasan
A child who studied under street ligths, left his indelible mark across the skies. The journey of Dr. APJ Abdul Kalam is the journey of independent India - overcoming all odds to achieve greatness.
India lives on the hope that she will produce more children like him.
#apjabdulkalam -
Kamal Haasan
@ikamalhaasan
To All Our Brave Hearts
#kargilvijaydiwas #indianarmy #amaranThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
Congratulations on a NDA budget, hope to have a INDIA Budget soon.
#budget2024 -
Kamal Haasan
@ikamalhaasan
கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து.
@offBharathiraja -
Kamal Haasan
@ikamalhaasan
சமாதானத்தைச் சிந்தையிலேந்தி மொகரம் கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்யும் திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கும், தம்பி திரு. @Udhaystalin அவர்களுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
@Vairamuthu -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you #kbsir. இன்று அவரது பிறந்த நாள். அவர் புகழ் ஓங்குக!
This media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
A bittersweet moment for all Indian Cricket fans, as two modern legends of the game retire from International T20 Cricket.
@ImRo45 you were part of the immortal team that brought home the first T20 World Cup in 2007. Your exceptional career has come a full circle as you bid adieu to International T20 cricket as a World Champion.
@imVkohli Cometh the hour, Cometh the King!
As long as you were on the field, hope was never lost! Who can forget the innings against Australia at Mohali or the sixes against Haris Rauf!
Take a bow champs! Only you both could have scripted this fairytale ending.
- A Grateful Indian
#rohitsharma #viratkohli #champions -
Kamal Haasan
@ikamalhaasan
The wait is over! A victory for the ages! When the going got tough, the Men in Blue showed what they are made of!
King Kohli’s anchoring innings, every ball delivered from the magical hands of Jasprit Bumrah, Surya Kumar’s catch that will go down as cricketing legend! and Hitman Rohit Sharma’s Captaincy!
Last but not least, spare a thought for the silent force who guided us to this historic victory. The one and only - the Wall - our coach par excellence - Rahul Dravid.
Who are we - Champions!
Who are we - Undefeated!
Who are we - India!
- A Proud Indian
@imVkohli @Jaspritbumrah93 @surya_14kumar @ImRo45 #rahuldravid @BCCI
#champions #teamindia #t20worldcup #whoarewe -
Kamal Haasan
@ikamalhaasan
Honoured to meet with you, Dato' Seri @anwaribrahim, and have an enlightening discussion on a wide range of issues.
I was delighted to hear your views on the bilateral relations between our countries and concur with you on the important role of cinema and the strict no-tolerance approach towards corruption in society.
Anwar Ibrahim
@anwaribrahim
Dalam sela-sela tugasan rasmi, saya sempat meluangkan masa bersama seniman dan ‘superstar’ tersohor India, Kamal Haasan.
Kesempatan yang ada kira-kira 30 minit itu digunakan untuk berbicara dan bertukar pandangan terkait industri perfileman termasuk ketegasan terhadap rasuah.
#malaysiamadani -
Kamal Haasan
@ikamalhaasan
In our vibrant parliamentary democracy, the Speaker of the House ensures fair debates while maintaining rules and decorum. The Leader of the Opposition serves as a critical voice of scrutiny and accountability, ensuring checks and balances in democracy and bringing alternative perspectives and ideologies into parliamentary discourse.
I congratulate Shri @ombirlakota and Shri @RahulGandhi on undertaking these crucial roles in the 18th Lok Sabha and look forward to productive and passionate parliamentary debates for the betterment of 140 crore Indians.
Jai Hind -
Kamal Haasan
@ikamalhaasan
𝐒𝐔𝐏𝐑𝐄𝐌𝐄 𝐘𝐀𝐒𝐊𝐈𝐍...
1 day to go for #kalki2898ad.
@SrBachchan #prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @amritharam2 @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth #kalki2898adonjune27 -
Kamal Haasan
@ikamalhaasan
#indian2 Trailer
▶️ youtu.be/3bvBUT5pQYY
#bharateeyudu2 ▶️ youtu.be/H1GFcXaNXHU
#hindustani2 ▶️ youtu.be/-yBOZzNSpIM
@IndianTheMovie @shankarshanmugh @anirudhofficial @LycaProductions #subaskaran @RedGiantMovies_
#indian2on12thjuly
Kamal Haasan
@ikamalhaasan
@PenMovies #penmarudhar @asiansureshent @SriLakshmiMovie @GokulamMovies #romeopictures @fdn_movies @MsKajalAggarwal #siddharth @Rakulpreet @priya_Bshankar @iam_SJSuryah @thondankani @Actor_Vivek @actorsimha #nedumudivenu #brahmanandam #manobala @GulshanGroverGG @itspiyushmishra @zakirhussain9 @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @anbariv #ramazanbulut @ActionAnlarasu @PeterHeinOffl #stuntsilva #boscocaesar #bababaskar @gkmtamilkumaran @MShenbagamoort3 @kabilanchelliah @amritharam2 @kunal_rajan @kabilanvai @SonyMusicSouth @sonymusicindia @kalaignartv_off @Netflix_INSouth @RednoolOfficial @teamaimpr @beyondmediapres @Universal_PR @pro_Sabari @PROHarisarasu
#zerotolerance #indian2on12thjuly -
Kamal Haasan
@ikamalhaasan
Presenting #kalkireleasetrailer to you all!
- youtu.be/ilY1xnyOOUE
#kalki2898ad in cinemas worldwide from June 27th.
@SrBachchan #prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @amritharam2 @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth #kalki2898adonjune27 -
Kamal Haasan
@ikamalhaasan
அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
நமது @maiamofficial கட்சியின் பொதுச் செயலாளரும், எனது நண்பருமான @Arunachalam_Adv அவர்களின் தாயார் திருமதி A. சுப்புலெட்சுமி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.
தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது. -
Kamal Haasan
@ikamalhaasan
Wishing Hon. President of India, Smt. Droupadi Murmu, a very happy birthday. You are the embodiment of wisdom, grace and intellect. Your leadership has furthered the nation’s progress and I wish you continued good health and a long life.
@rashtrapatibhvn -
Kamal Haasan
@ikamalhaasan
Heartiest Birthday Greetings to my friend Shri @RahulGandhi. May you continue to lead with compassion and magnanimity and spread your hopeful message of love and harmony.
-
Kamal Haasan
@ikamalhaasan
பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக; உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக; உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக. தியாகத் திருநாள் சிறக்கட்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
நீண்ட காலமாகத் தமிழ் நவீன இலக்கியத்தில் இயங்கிவருபவர் யூமா வாசுகி. அடிப்படையில் ஓவியராக இருந்து இவர் இயற்றிய கவிதைகளும், எழுதிய நாவல்களும் தமிழ்ப் பரப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றவை. மலையாளத்திலிருந்து சிறார் கதைகளை மொழிபெயர்த்துவந்த இவர், தனது நேரடி சிறுவர் கதைக்கொத்தான ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்கு, சாகித்ய அகாடெமியின் பால புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.
இவருக்கும், ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கும் இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்து.
#sahityaakademi #balsahityapuraskar #yuvapuraskar -
Kamal Haasan
@ikamalhaasan
குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
𝐓𝐇𝐄 𝐁𝐀𝐓𝐓𝐋𝐄 𝐁𝐄𝐆𝐈𝐍𝐒 𝐍𝐎𝐖
Presenting #kalki2898adtrailer to you all!
▶️ youtu.be/-boPEbe6iaI
#kalki2898ad @SrBachchan #prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh
@amritharam2
@VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth #kalki2898adonjune27 -
Kamal Haasan
@ikamalhaasan
எடுத்த வேலையை தனித்த தன்மையோடு வெற்றிகரமாக முடிப்பதே தன் திறனெனக் காட்டி வாழ்ந்த நண்பர் கிரேசி மோகனின் நினைவு நாள் இன்று. எத்தனையோ வேலைகளை இணைந்து செய்திருக்கிறோம். இடைவேளை விட்டது போல் எங்கேயோ போய்விட்டார். அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன.
-
Kamal Haasan
@ikamalhaasan
Nations that harness their greatest strength – their people – shall accomplish the greatest glories. Congratulations to the Hon. Prime Minister of India, Shri @narendramodi ji, on your third term. In the spirit of national interest, unity, and patriotic duty, let the elected representatives of the 18th Lok Sabha, work together to fulfil the dream of a stronger, brighter, and more inclusive India. Jai Hind!
-
Kamal Haasan
@ikamalhaasan
தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை.
புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.
அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும்.
மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
@thirumaofficial @VCKofficial_ @Seeman4TN @NaamTamilarOrg -
Kamal Haasan
@ikamalhaasan
Deeply saddened to learn of the demise of a doyen of Indian media and Cinema industry, Chairman of Enadu Group, Ramoji Rao Garu.
Ramoji Rao Film City dedicated in honour of his craft is not only a shooting location but also a popular tourist destination.
The passing away of this visionary and innovative thinker, is a tremendous loss for Indian cinema.
My condolences to his family and loved ones.
#ramojirao -
Kamal Haasan
@ikamalhaasan
Had an emotional conversation and conveyed my heartfelt congratulations to Shri @PawanKalyan on his electoral triumph! I wished him the best as he embarks on this journey of serving the hopes and aspirations of the people of Andhra Pradesh.
Proud of you brother!
#andhraelections #victory #leadership #pawankalyan -
Kamal Haasan
@ikamalhaasan
Had a great conversation with Shri @yadavakhilesh ji and congratulated him on the phenomenal victory in Uttar Pradesh. Well-deserved success!
#uttarpradesh
#victory #leadership #akhileshyadav -
Kamal Haasan
@ikamalhaasan
அன்னய்யா எஸ்பிபிகாரு இருந்திருந்தால் இன்று எழுபத்தெட்டாம் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருப்போம். இப்படிச் சொல்வதால் அவர் இன்று இல்லை எனலாகாது.
நாதசரீரா என்னும் சொல்லுக்கு இணங்க பாடலே வாழ்வாகப் பாடிப்பறந்த என் அருமை அண்ணனின் பிறந்த நாளில் அவரது நினைவுகளைப் போற்றுகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Congratulations to @ncbn Chandrababu Naidu Garu, on the historic mandate given by the voters of Andhra Pradesh!
Your visionary leadership and vision have long been an inspiration to the rest of the country. Here's to a brighter future for a renewed and stronger India!
#andhraelections #victory #leadership #chandrababunaidu -
Kamal Haasan
@ikamalhaasan
இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!
@mkstalin @CMOTamilnadu @Udhaystalin
#electionsresults #india #tamilnadu #victory -
Kamal Haasan
@ikamalhaasan
ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் எடுத்த காரியம் முடிக்காது விடாத நேர்மறைப் பிடிவாதமும் படைத்த மாபெரும் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் இன்று.
அவரது நூற்றாண்டு விழா நிறைவுபட நிறைந்திருக்கும் தருணம். இந்நாளில், கலைத்துறை, இலக்கியம், அரசியல், சமூகநீதி என சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றிய கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன்.
#kalaingar100 -
Kamal Haasan
@ikamalhaasan
இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு.
மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது.
இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்... பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்.
எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க.
#happybirthdayilaiyaraaja
#happybirthdaymaniratnam -
Kamal Haasan
@ikamalhaasan
As an Indian and a devoted champion of the independent film circuit, I’m delighted by the victory of @PayalKapadia86 and Anasuya Sengupta at Cannes Film Festival, 2024.
Your achievements resonate deeply within the corridors of Indian cinema, where the independent film industry has long been a beacon of creativity, innovation, and authenticity.
Let us as a country and an industry rally behind the spirit of independent cinema and champion stories that are bold, authentic, and thought-provoking.
Kudos and Congratulations! -
Kamal Haasan
@ikamalhaasan
Warmest birthday wishes to Kerala's steadfast leader, @pinarayivijayan . Your commitment to the people of Kerala and visionary leadership continue to elevate the state. May your journey ahead be filled with success and prosperity.
-
Kamal Haasan
@ikamalhaasan
#paaraa from INDIAN-2 is OUT NOW!
▶️ www.youtube.com/playlist?list=PL_DaWb6RFQc0gitLJU-6_Wj-es…
#indian2 🇮🇳@shankarshanmugh @anirudhofficial @LycaProductions #subaskaran @RedGiantMovies_ @GokulamMovies @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl #siddharth @poetpaavijay #shruthikasamudhrala @MsKajalAggarwal @Rakulpreet @iam_SJSuryah @Actor_Vivek @actorsimha #nedumudivenu @thondankani @priya_Bshankar @manobalam @GulshanGroverGG @itspiyushmishra #brahmanandam @gkmtamilkumaran @MShenbagamoort3 @kabilanchelliah @SonyMusicSouth @kalaignartv_off @Netflix_INSouth @teamaimpr @pro_Sabari @PROHarisarasu
#zerotolerance #1stsinglefromindian2 #indian2on12thjuly -
Kamal Haasan
@ikamalhaasan
Lead man for forty years among a very critical and discerning audience. 400 films? Some might exclaim in disbelief. I, on the contrary, am looking forward to him beat Mr. Prem Nazir’s record of 500 films. On his birthday, that is my best wish to him. The best of health to you, Mr. @Mohanlal, to break many more records.
-
Kamal Haasan
@ikamalhaasan
Ek HINDUSTANI
Ek VOTE
Ek AAWAAZ
Become the change you want! VOTE RESPONSIBLY!
#hindustani2
#indian2 #bharateeyudu2 #zerotolerance #indian2on12thjuly #loksabhaelections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
#indian2 Releasing worldwide in cinemas 12th July 2024!
#1stsinglefromindian2
@shankarshanmugh @anirudhofficial @LycaProductions #subaskaran @RedGiantMovies_ @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl #siddharth @MsKajalAggarwal @Rakulpreet @iam_SJSuryah @Actor_Vivek @actorsimha #nedumudivenu @thondankani @priya_Bshankar @manobalam @GulshanGroverGG @itspiyushmishra #brahmanandam @gkmtamilkumaran @MShenbagamoort3 @kabilanchelliah @SonyMusicSouth @kalaignartv_off @Netflix_INSouth @teamaimpr @beyondmediapres @Universal_PR @pro_Sabari @PROHarisarasu -
Kamal Haasan
@ikamalhaasan
திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர்.
D.இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது குடும்பத்துடனான எனது உறவையும் குறிப்பிட்டுப் பேசினேன். -
Kamal Haasan
@ikamalhaasan
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உங்களையும் என்னையும் கவர்ந்த அன்புத் தம்பிகளுக்கு @anbariv மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத் தேவையில்லை. உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துகள்.
#plus2examresult
#plus2result -
Kamal Haasan
@ikamalhaasan
சமத்துவத்தைச் சீர்குலைக்கும் சாதி என்னும் அநாகரிகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களின் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நாள் இன்று. பிற்காலத்திய திராவிடச் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமாக விளங்கிய அவர்தம் சொற்களை நினைவுகொள்வோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஏழு தசாப்தங்களாக பத்திரிகையாளராகப் பணிபுரிந்து, வரலாற்றுச் சுவடுகள் உள்ளிட்ட மிக முக்கியமான நூல்களை எழுதி தமிழின் அறிவுத் துறைக்குப் பங்காற்றிய பெருமகனார் சண்முகநாதன் மறைந்த செய்தியை அறிந்து துயருறுகிறேன். தினத்தந்தி நாளிதழின் தொடக்க காலம் தொட்டு இதழியல் சேவை புரிந்த அவர் பால் பற்றுக் கொண்ட வாசகப் பெரும் பரப்புக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.
உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.
#mayday -
Kamal Haasan
@ikamalhaasan
எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.
இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
வாக்களிப்போம். தேசம் காப்போம்.
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன்.
ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்த, தேர்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றுங்களென தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
“இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க”
#makkalneedhimaiam
#elections2024
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. கே. ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்தேன்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. @r_sakkarapani அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.
#makkalneedhimaiam
#elections2024
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பல்லடத்தில் பிரச்சாரம் செய்தேன்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.@mp_saminathan அவர்களும், தமிழக தொழில் துறை அமைச்சர் திரு. @TRBRajaa அவர்களும் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தனர்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர் கே. சுப்பராயன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. @mp_saminathan அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர்.
மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது.
அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம். அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்.
#ambedkar -
Kamal Haasan
@ikamalhaasan
தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும் தமிழ். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் @SuVe4Madurai அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், திரு. @pmoorthy21 அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
#makkalneedhimaiam
#elections2024
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் @DrKalanidhiV அவர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. @PKSekarbabu அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டேன். ஊரக தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு. @thamoanbarasan அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. @Dayanidhi_Maran அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. @PKSekarbabu அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர், முனைவர். @ThamizhachiTh அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு @Subramanian_ma அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥
#indian2 🇮🇳
🎬 @shankarshanmugh
🎶 @anirudhofficial
📽️ @dop_ravivarman
✂️🎞️ @sreekar_prasad
🛠️ @muthurajthangvl
🌟 #siddharth @MsKajalAggarwal @Rakulpreet @iam_SJSuryah @Actor_Vivek @actorsimha #nedumudivenu @thondankani @priya_Bshankar @manobalam @GulshanGroverGG @itspiyushmishra #brahmanandam
🪙 @LycaProductions #subaskaran @RedGiantMovies_
🤝 @gkmtamilkumaran @MShenbagamoort3
🦾 @anbariv @bulletaction #anlarasu @PeterHeinOffl #granthulley
✍🏻 @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 | #hanumaanchoudary |
👾 @srinivas_mohan
🕺🏻💃🏻 @BoscoMartis @premrakchoreo
🎶📝 @pavijaypoet @Kavithamarai @KabilanVai #therukuralarivu
🔊 @kunal_rajan
🪞 @LegacyEffects #vancehartwell #pattanamrasheed
👕👗 @RockyStarWorld #gavinmiguel @amritharam2 #sbsatheesan @Pallavi_off
🎨 @color_rcvfx
🖼️ @kabilanchelliah
🧾 #sundarraj
📢 @teamaimpr | @beyondmediapres | @Universal_PR | @pro_Sabari | @PROHarisarasu
#hindustani2 #bharateeyudu2 #zerotolerance -
Kamal Haasan
@ikamalhaasan
கோட்டக்குப்பம் மைதானத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் இடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளர், அன்புச் சகோதரர் @WriterRavikumar அவர்களுக்குப் பெருவெற்றி அளிக்கக்கோரி பரப்புரை செய்தேன். எங்களோடு உயர்கல்வித் துறை அமைச்சர், மாண்புமிகு @KPonmudiMLA அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
வாக்காளப் பெருமக்களின் பலத்த வரவேற்போடு சிதம்பரம் தொகுதி தேர்தல் பரப்புரை நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்தி, சகலருக்குமான தலைவராக உயர்ந்திருக்கும் என் தம்பி @thirumaofficial அவர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்துப் பேசினேன். வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், மாண்புமிகு @MRKPanneer உடன் இருந்தார்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் @ArunNehru_DMK அவர்களுக்காக பரப்புரை மேற்கொண்டேன். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு @KN_NEHRU அவர்களும் என்னோடு வந்திருந்தார்.
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளையும் மீறி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதை விலாவாரியாக விளக்கிச் சொன்னேன். ஆமோதித்து அசைந்தன ஜனங்களின் கரங்கள்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
திமுக தலைமையிலான கூட்டணியின் திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் @duraivaikooffl அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்குக் கேட்டு ஶ்ரீரங்கத்தில் பரப்புரை மேற்கொண்டேன். மரியாதைக்குரிய நண்பர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு @KN_NEHRU உடன் இருந்தார்.
டெல்லி செங்கோட்டையின் அதிகாரத்துக்கு திருச்சி மலைக்கோட்டை ஒருபோதும் மண்டியிடாது என்பதன் சாட்சியமாக இருந்தது வாக்காளர்களின் ஆரவாரம்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
சொந்த மண்ணிலேயே சில தெருக்களில் நடக்கக்கூடாது என்று கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படும் நம் சகோதரர்களுக்கு ஓர் அநாகரிகத் தடை இருந்தது.
அதை எதிர்த்து 1924ஆம் ஆண்டில் போராட்டம் வெடித்தது. நம் தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக அப்போரில் கலந்துகொண்டார். சிறை சென்றார். தடை தகர்ந்தது. மண்ணில் மனிதர் சமமென நடைமுறை வந்தது.
அவ்வெற்றிப் போரான வைக்கம் போரின் நூற்றாண்டு நாள் இன்று. சமத்துவம் விரும்புவோர் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுவோம். பிறரும் சமத்துவம் விரும்பத் தொடங்கும் வரை போராடுவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மாண்புமிகு திரு. @mkstalin அவர்களோடு உரையாடினேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம்.
ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.
இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுகவின் வெற்றி வேட்பாளர் திரு. @keprakashdmk அவர்களுக்கு ஆதரவாக குமாரபாளையம் தொகுதி, வெப்படை பகுதியில் பிரச்சாரம் செய்தேன்.
ஒவ்வொரு மாதம் சிலிண்டருக்குப் பணம் கொடுக்கும்போதும் மக்களின் வயிறு எரிகிறது, டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீப் புகை குண்டுகளை வீசும்போது நமது கண்கள் எரிகின்றன, குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்து, கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவால் நம் இதயம் எரிகிறது. இந்தக் காயங்களுக்கெல்லாம் மருந்திடும் நாள் ஏப்ரல் 19.
பெரியார் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், டெல்லிக்கு என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பாரோ அந்தச் செய்தியை வீரம் மிக்க ஈரோட்டு மக்கள் தேர்தல் நாளில் சொல்வார்கள்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
நாம் வரியாகச் செலுத்தும் 1 ரூபாயில் வெறும் 29 பைசாவை மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தருகிறது மத்திய அரசு. பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்தப் பணத்தைக் கொண்டு வட மாநிலங்களை முன்னேற்றி இருந்தால் கூட, ‘சரி நம் இந்தியச் சகோதரர்களுக்குத்தானே நமது பணம் போய்ச் சேருகிறது’ என சமாதானப் பட்டுக்கொள்ளலாம். அதைச் செய்யும் திறமையும் இல்லை.
ஒவ்வொரு நாளும் வாழ்வாதாரம் தேடி ஆயிரக்கணக்கான வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபடியே இருக்கிறார்கள். எங்கள் வரிப்பணம் எங்கேதான் போகிறது எனும் கேள்வியை ஈரோடு கருங்கல்பாளையத்தில் திமுக வேட்பாளர் திரு. @keprakashdmk அவர்களுக்கு வாக்குச் சேகரிக்கையில் கேட்டேன்.
ஏப்ரல் 19 - தேர்தல் நாளன்று உதயசூரியன் சின்னத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து ஈரோட்டு மக்களும் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. @keprakashdmk அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் செய்தேன். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செய்து வரும் ஓரவஞ்சனைகளைப் பட்டியலிட்டேன்.
பெருவெள்ளமாய்த் திரண்டிருந்த மக்களின் கண்களில் ஆட்சி மாற்றத்திற்கான வேட்கையை கண்டேன்.
#makkalneedhimaiam
#elections2024 -
Kamal Haasan
@ikamalhaasan
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!
#makkalneedhimaiam
#elections2024
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
@maiamofficial
திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் திரு. @keprakashdmk அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. @ikamalhaasan ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார்.
#kamalhaasan
#makkalneedhimaiam
#dmk -
Kamal Haasan
@ikamalhaasan
இன்றும் பொலிவு குன்றாமல் இருக்கும் மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ்.
அவரைக் கொண்டாடவும், கடந்த காலத்தின் இனிய தருணங்களை நினைவுகளில் மீட்டெடுக்கவும் ‘அபூர்வ சிங்கீதம்’ திரைப்பட விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
எங்களது @RKFI நிறுவனத்திற்காக சிங்கீதம் சார் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ராஜ பார்வை, புஷ்பக் (பேசும் படம்), அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய 4 படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிட்டோம்.
திரையிடலுக்குப் பின் இயக்குனருடன் நானும், படத்தில் பங்காற்றிய கலைஞர்களும் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இன்றைய தலைமுறை இயக்குனர்களும், கலைஞர்களும் உரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொண்டனர்.
இளமை மாறாத உற்சாகத்துடன் திகழ்ந்த சிங்கீதம் சார் தனது நெடிய திரைப்பட அனுபவங்களையும், தரமான சினிமாக்கள் மீதான தனது பார்வையையும் அள்ளக்குறையாத அனுபவச்செறிவுடன் அளித்தார்.
அபூர்வ சிங்கீதம் ஓர் இனிய தொடக்கம். நன்மை மலரட்டும்.
#apoorvasingeetham -
Kamal Haasan
@ikamalhaasan
இன, மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் @SuVe4Madurai ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
youtu.be/sihgOoPVmbk -
Kamal Haasan
@ikamalhaasan
I strongly urge @ECISVEEP to take cognisance of this gross and condemnable speech by Union Minister @ShobhaBJP, which violates the Model Code of Conduct.
I hope that @BJP4TamilNadu leadership, as proud sons of the soil, will join me in condemning this hate speech against our people.
People of Tamil Nadu will give a befitting response to these deplorable remarks in the upcoming elections on April 19th. -
Kamal Haasan
@ikamalhaasan
நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம் ஆலோசிக்க தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர், அன்பு இளவல் @TRBRajaa அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. நிறைவான உரையாடல்.
Dr. T R B Rajaa
@TRBRajaa
முத்தமிழறிஞர் #கலைஞர் அவர்களின் தமிழை நேசித்து அவரிடமே #கலைஞானி என்று பட்டம் பெற்றவர், சமத்துவமும் பகுத்தறிவும் அரசியல் பார்வையாகக் கொண்டிருப்பவர், மதவெறி-மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களுடன் இணைந்து களமாடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும்-தளத்திலுமான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசித்தோம். மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம் 🙏🏾
@DMKITwing @maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
Before we try to attempt "One Nation, One Election” can we at least try "One Election - One Phase"?
#democracymatters
#loksabhaelection2024 #onenationoneelection -
Kamal Haasan
@ikamalhaasan
Dark day for India.
A religion-based citizenship test is antithetical to the secular constitutional foundations of the republic, and I will fight against this legally and politically with all my might.
#caa #mnmagainstcaa #caanotification
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
@maiamofficial
தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி இறையாண்மையைச் சிதைக்கத் துடிக்கும் மத்திய அரசு! @ikamalhaasan
#kamalhaasan
#makkalneedhimaiam
#mnmagainstcaa -
Kamal Haasan
@ikamalhaasan
வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி.
1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் பயிற்றுவிக்கப்பட்ட 79 போராட்ட வீரர்களுடன் காந்தியார் தொடங்கிய யாத்திரை இந்திய விடுதலை வரலாற்றின் மாபெரும் திருப்புமுனைகளுள் ஒன்றாக அமைந்தது.
பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து புண்ணான கால்களுடன் 61 வயது முதியவர் தண்டி கடற்கரையில் குனிந்து ஒரு பிடி உப்பை அள்ளி தன் கரங்களை வான் நோக்கி உயர்த்திச் சொன்னார் ‘நம் கையில் இருப்பது வெறும் உப்பு அல்ல. இது இந்தியாவின் கெளரவம். நமது கரங்கள் தாளாதிருக்கட்டும்’
ஆம் பெரியவரே… நீங்கள் தந்து சென்றிருக்கும் அஹிம்சை எனும் ஆக சக்தி வாய்ந்த ஆயுதத்தால் தேசத்தின் மானம் காப்போம் நாங்கள்.
#dandimarch #saltsatyagraha -
Kamal Haasan
@ikamalhaasan
நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.
எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம்.
சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
#internationalwomensday -
Kamal Haasan
@ikamalhaasan
“The day the power of love overrules the love of power, the world will know peace”
– Mahatma Gandhi -
Kamal Haasan
@ikamalhaasan
எங்கே போகிறோம்?
புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா?
குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.
போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.
#saynotodrugs -
Kamal Haasan
@ikamalhaasan
எண்பதாம் அகவையைத் தொடும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அஸ்வகோஷ் என்கிற புனைபெயரிலும் அவர் எழுதினார்.
சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த இராசேந்திர சோழன், டில்லி தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, நாடகப் பிரதிகளை உருவாக்கியவர்.
பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர். தீவிரமான மொழிப்பற்றாளரான இராசேந்திர சோழன், தெனாலி ராமன், மரியாதை ராமன் வரிசைக் கதைகளில் கூட, தன் பிரத்யேகப் பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர். அவருக்கு என் அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @CMOTamilnadu
-
Kamal Haasan
@ikamalhaasan
இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ‘பொதுத்தேர்வு’ எனும் அனுபவத்தை எதிர்கொள்ளுங்கள். இத்தனை நாள் கற்றுக்கொண்டதை அச்சமின்றி எழுதுங்கள்.
வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது என்பதை மறவாதிருங்கள். வெற்றி நிச்சயம் உங்களைத் தழுவிக்கொள்ளும். -
Kamal Haasan
@ikamalhaasan
எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
#inganaanthaankingu
#gnanbuchezhian
@Sushmitaanbu
@gopuramfilms @Gopuram_Cinemas
@iamsanthanam @Priyalaya_ubd @dirnanand @immancomposer -
Kamal Haasan
@ikamalhaasan
மின்சார நடை; மெர்க்குரித் தெளிவு; நவீன விருப்பம்; பின் நவீன வேகம்; கருத்தில் புதுமை; காலத்தால் பாய்ச்சல்… எழுத்தாளர் சுஜாதா புதினத்தைப் புதுப்பித்தவர். அவர்தம் நினைவு நாள் இன்று. அவரை வாசிப்போம். மொழிப் புதுமை கற்போம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.
மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.
மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது.
@maiamofficial
#makkalneedhimaiam
#ஏழாம்ஆண்டில்_மய்யம் -
Kamal Haasan
@ikamalhaasan
மண்ணில் நீரில் நெருப்பில் அழிந்தவை எத்தனையோ… எஞ்சிய இலக்கியப் பனுவல்களை ஓலைச் சுவடியில் இருந்து கால மாற்றத்துக்கு ஏற்ப அச்சுப் பிரதிகளாக்கி அசாத்திய காரியம் செய்த தமிழ் முன்னோடி உவேசா அவர்களுக்கு எந்த விதத்தில் நன்றி சொன்னாலும் போதாது என்றே தோன்றும். பழந்தமிழை, காலத்தையும் கடந்த புதுத் தமிழாய்ப் பிறப்பித்த தமிழறிஞரின் பிறந்த நாளில் நன்றி எண்ணுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பிறந்தநாள் காணும் அன்புத் தம்பி @Siva_Kartikeyan நீடூழி வாழ வாழ்த்துகிறேன். #amaran திரைப்படத்தின் டைட்டில் டீஸரை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
▶️ youtu.be/A76db9lX2fE
#mahendran @Rajkumar_KP
@gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky @Dop_Sai @rajeevan69 @ShivAroor @RahulSinghx #stefanrichter @kalaivananoffl @amritharam2 @magizhmandram @idiamondbabu @prosathish @UrsVamsiShekar -
Kamal Haasan
@ikamalhaasan
The Hon'ble Supreme Court has made a historic decision which corrects a grave error in our election finance laws. By striking down electoral bonds as unconstitutional, the SC has shed light on the dark halls of backroom politics and finance.
This judgment prevents the concentration of power in the hands of a privileged few. Transparency is the bedrock on which democracy thrives. People have a right to know how the political leaders and parties they support are financed.
#electoralbonds -
Kamal Haasan
@ikamalhaasan
அவ்வை சண்முகம் என் ஆசான். ஆறு வயதில் சங்கரதாஸ் சுவாமிகளிடம் தன்னை நாடகத்துக்காகவே ஒப்படைத்த பெருமகன். ஆணாகவும் பெண்ணாகவும் வேடம் கட்டி அத்தனை ரசிகர்களின் உள்ளங்களிலும் இடம் பிடித்தவர்.
திரைக்கலையின் முன்னோடியான நாடகக் கலையின் தந்தையாக அளப்பரிய பங்களிப்பைச் செய்த டி.கே.சண்முகம் அண்ணாச்சி அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.
வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.
மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு. அரசியல், இலக்கியம், சினிமா என, தான் தொட்ட அனைத்திலும் சிகரம் தொட்ட வல்லாளர். கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் மாண்பிற்கும் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்தவர்.
பேரறிஞரின் நினைவுநாளில், தமிழ்ச் சமூகத்துக்கான அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
#str48 #bloodandbattle
@desingh_dp #mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram -
Kamal Haasan
@ikamalhaasan
நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை.
கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர்.
காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக.
-
Kamal Haasan
@ikamalhaasan
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது.
இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
#republicday2024 -
Kamal Haasan
@ikamalhaasan
மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இன்று தேசிய வாக்காளர் தினம்.
உங்கள் அரசை யார் நிர்வகிக்கவேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
முடிவெடுக்கும் தேர்தல் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்.
#myfirstvotefordemocracy #nationalvotersdayThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
Our vote is an expression of commitment to each other and the nation. Decisions are taken by those who show up. Today, on the occasion of National Voter’s Day, let us pledge to vote this year and be the spark that ignites a new revolution and a new India.
#myfirstvotefordemocracy #nationalvotersdayThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
I heard about your accident today Mamata Ji. Wish you a speedy recovery. The country needs every champion of democracy to fight for the people of this great land.
@MamataOfficial -
Kamal Haasan
@ikamalhaasan
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனித்துத் துலங்கிய தீரமிகு போராட்டத் தளகர்த்தரும், பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் சொற்களுக்கு வடிவமாக வாழ்ந்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றி மகிழ்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஈடு இணையற்ற கதைகளால் இதயங்களைத் தொட்ட எழுத்துக்கலைஞன், மலையாள இலக்கியப் பிதாமகர், ‘சுல்தான்’வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
நானொரு பஷீரிஸ்ட் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் எனக்கு உண்டு. பஷீரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது கதைகளை வாசிப்பது உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் ஆகச்சிறந்த பரிசு. -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்த் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாகத் திகழ்ந்த பேராளர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஈரடியால் உலகளந்த ஈடற்ற படைப்பு; ஈராயிரம் ஆண்டுகள் தாண்டியும் தேவை குறையாத கருத்தோடு நிலைத்து மானுட குலத்துக்கு மக்கட்பண்பூட்டும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சொற்களை மனதில் நிறுத்துவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
போர் தொடுக்க அல்ல, போர் தடுக்க என்கிற உயர்ந்த தத்துவத்தோடு சக இந்தியர்களுக்காக சதா உழைத்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ தினத்தில் மனம் கொள்வோம். அவர்தம் தியாகத்தைப் போற்றுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள்,
விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Proud to add two proven talents in their new avatar as directors for #kh237. Slay it, Masters Anbariv. Welcome to Raaj Kamal Films International again.
#actioninaction
@RKFI #mahendran @anbariv @turmericmediaTM @magizhmandram -
Kamal Haasan
@ikamalhaasan
The story that ended 6000 years ago.
𝐁𝐞𝐠𝐢𝐧𝐬 𝐌𝐚𝐲 𝟗𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟒.
The future unfolds. #kalki2898ad
@SrBachchan
#prabhas
@deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD #kalki2898adonmay9 -
Kamal Haasan
@ikamalhaasan
எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Happy birthday @arrahman ji. Looking forward to working with you again and to more great music for all from you.
-
Kamal Haasan
@ikamalhaasan
கமல் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் ‘மய்யம்-தேர்ந்தெடுத்த படைப்புகள்’ புத்தகம் வெளியாகியுள்ளது. அப்போதிருந்த வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் இப்போதைய மலரும் நினைவுகள். புது வாசகர்களுக்கு ஒரு காலத்தின் பிரதிபலிப்பைப் பதிவு செய்து காட்டும் ஆதாரம். அனைவருக்குமான வாசிப்பின் கச்சாப்பொருளாக இந்தப் புத்தகம் இருப்பதை நீங்களும் வாசிக்கும்போது உணர்வீர்கள். இதை ஒரு சிறிய காலப் பயணம் என்றே சொல்வீர்கள்.
கமல் பண்பாட்டு மையத்திற்கு என் வாழ்த்துகள்.
@kamalpanpattu
கமல் பண்பாட்டு மையம்
@kamalpanpattu
உலக நாயகன் கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக மய்யம் எனும் பத்திரிகையை 1987-ல் தொடங்கினார். திரைப்பட ரசிகர்களின் ரசனையும், அறிவுத் தேடலும் மேம்பட வேண்டும்; சமுதாய முன்னேற்றத்திலும் நற்பணிகளிலும் தன்னுடைய ரசிகர்கள் தீவிரத்துடன் ஈடுபட வேண்டும் என்பன இதழின் ஆதார நோக்கமாக இருந்தன.
-
Kamal Haasan
@ikamalhaasan
பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம்.
புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து. -
Kamal Haasan
@ikamalhaasan
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவே கால் நூற்றாண்டுக் காலம் செயல்பட்ட எளிமையின் எடுத்துக்காட்டான தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாள் இன்று. 18ஆம் வயதில் தொடங்கிய சிவந்த அரசியல் வாழ்க்கையை இந்த 98ஆம் வயதிலும் தொடரும் பேராளர் ஐயா நல்லகண்ணு அவர்கள். தனக்கென்று ஒரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ளாதவர்; தனக்கென்று ஒரு நிதியையும் எடுத்துக்கொள்ளாதவர்; அனைத்துமே தான் கொண்ட கொள்கைக்காகவும் தன் கட்சிக்காகவும் என்றே பெருந்தியாக வாழ்வு வாழும் தலைவர் அவர்களுக்கு என் பெருமதிப்போடு கூடிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். அன்பும் மகிழ்ச்சியும் பரவட்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மரணத்தால் வெல்ல முடியாத மகத்தான மனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அனைவரது நினைவுகளிலும் இன்றும் வாழும் பெருந்தகையாளரான அவரது நினைவு நாளில் கலைத்துறையிலும் அரசியலிலும் அவர் செய்த சாதனைகளை நினைவு கூர்வோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பேதம் பார்ப்போருக்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிழைப்போர்க்கும், ஆணெனப் பெண்ணென ஆதிக்கம் செலுத்துவோருக்கும் இன்றைக்கும் சிங்கக் கனவாக இருக்கும் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவர்தம் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம். அவரது வீச்சு குறையாமல் இருக்க நம்மாலான பங்கை நல்குவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன. -
Kamal Haasan
@ikamalhaasan
And it is called #dacoit!
www.youtube.com/playlist?list=PLVnCEiQqNkQooMRjs9-kYy5u8b…
Wishing the team all the best! #seshexshruti
@AdiviSesh @shrutihaasan @Deonidas #supriyayarlagadda @AsianSuniel @AnnapurnaStdios -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன்.
நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது.
தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் தேவிபாரதி.
சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.
நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் போன்ற நாவல்களில் தன் மக்களின் எழுத்துச் சித்திரத்தை சுவாரசியம் குன்றாமல் வரைந்தார்.
சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர் எழுதியிருக்கும் புதினமான நீர்வழிப்படூஉம் என்னும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது வாழ்த்துக்குரியது. -
Kamal Haasan
@ikamalhaasan
அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தேசியப் பேரியக்கமான காங்கிரஸின் தொடக்ககாலத் தலைவராகத் தொடங்கி மாகாண முதல்வராகத் தொடர்ந்து, எழுத்தாளராகவும் திகழ்ந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளான இன்று அவரது தேசப் பற்றைப் பற்றிக்கொள்வோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பதைப் பொறுத்துக்கொள்ளாத புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று.
பொருளாதார மேதை, சட்ட வல்லுநர், சமூகவியல் அறிஞர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட அம்பேத்கர், ‘கல்வியே விடுதலை’ என்பதைக் காட்டித் தந்தவர். கடினமான சூழல்களிலிருந்து மேலெழுந்து சாதிக்க முடியுமென்பதன் அடையாளமாக தேசமெங்கும் சிலைகள் வடிவிலும், நம் மனங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
சமத்துவப் பாதையில் பயணிப்பவர்களின் கைவிளக்காக ஒளிரும் பெருந்தகையாளரை மனதில் இருத்துவோம். -
Kamal Haasan
@ikamalhaasan
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.
#cyclonemichuang புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி @maiamofficial உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#chennairains -
Kamal Haasan
@ikamalhaasan
தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டுவருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் @AsiriyarKV அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.
கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத் தக்கது.
17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.
#uttarakhandtunnelrescueoperation -
Kamal Haasan
@ikamalhaasan
தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி @Udhaystalin
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான மரியாதைக்குரிய பாத்திமா பீவி அவர்கள் மறைந்த செய்தி துயர் அளிக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியென்பது சாமான்யமான சாதனை அல்ல. அத்துடன், கேரள மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் என அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவு கூறத்தக்கது.
அவரது பிரிவால் வருந்தும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
புகழ்பெற்ற கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
பல நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களிடையேயும் தன் திறத்தால் மரியாதையை ஈட்டியவர். லட்சக்கணக்கானவர்களுக்கு பார்வைச் செல்வத்தை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து பணியாற்றி வந்தவர்.
மருத்துவர் பத்ரிநாத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் நம்மோடு இல்லையென்றாலும், ஏராளமானவர்களின் கண்களிலும், அவர்தம் குடும்பத்தாரின் இதயங்களிலும் என்றும் இருப்பார். -
Kamal Haasan
@ikamalhaasan
இலக்கியம் என்பது எல்லோருக்கும் புரியாது என்கிற எண்ணமே எழாமல் எளிமையின் எல்லைக்கே சென்று எழுதியவர் தி.ஜானகிராமன். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள், உயிர்த்தேன் என நாவல்களாகட்டும், மனதின் அடியாழத்தில் பதிந்துவிடும் நடையழகோடு கூடிய சிறுகதைகளாகட்டும் தனது என்கிற முத்திரையைத் தவறாமல் பதித்த மூத்த தலைமுறை எழுத்தாளரான தி.ஜானகிராமனின் நினைவுநாள் இன்று. இந்த நிமிடமும் கால மாற்றத்தால் மதிப்பு மாறிவிடாத அவரது உலகளாவிய படைப்புகளை வாசிப்பதே நாம் அவரை நினைவுகூரும் நல்ல வழி.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஆங்கில அதிகாரத்தை எதிர்த்துக் கொள்கை வீரத்தையும் செயல் தீரத்தையும் காட்டிய அதிதீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது வைராக்கியத்தைக் கைக்கொள்ள உறுதியேற்போம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மாபெரும் தோழர் மறைந்தார்.
நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார்.
சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான்.
பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின் நிலையை உள்ளும் புறமும் தெளிவுற அறிந்து அவர்களை உயர்த்த, தன் ஆற்றலைப் பயன்படுத்திய பெருந்தகை நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய மூத்த நடிகரும், எனது ஆத்ம நண்பருமான சந்திரமோகன் விடைபெற்றுக்கொண்டார்.
அவருக்கும் எனக்குமான பந்தம் தொடங்கியது என் 16வது வயதில். சந்திரமோகனுக்கு நடனம் பயிற்றுவிக்கும்படி தங்கப்பன் மாஸ்டர் என்னைப் பணித்தார். சந்திரமோகனின் தமிழில் தெலுங்கு வாடை சற்று தூக்கலாக இருக்குமென்பதால் அவர் கதாநாயகனாக நடித்த படத்திற்கு என்னையே தமிழில் டப்பிங் பேசும்படி பணித்தது ஏவிஎம் நிறுவனம். அதுவரை டான்ஸ் அஸிஸ்டெண்டாக இருந்த எனக்கு அது ஒரு புதிய வாய்ப்பாக அமைந்தது.
இப்படித் தொடங்கிய எங்கள் பயணத்தில், தமிழில் பெருவெற்றி பெற்ற 16 வயதினிலே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் என் கதாபாத்திரத்தை சந்திரமோகன் ஏற்றார்.
எங்கள் இருவருக்குமான பொதுவான ஆர்வங்களில் முதன்மையானது சாப்பாடு. தேடித்தேடி ரசித்து ரசித்து உண்பதில் மகா சமர்த்தர். அதை விட வாழும் கலை அறிந்த நிபுணர். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சூத்திரம் அவருக்குத் தெரியும்.
அபாரமான நடிகர், எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்த மாணவர், என் இனிய நண்பர் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். இத்தருணத்தில் அவரது நினைவுகள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. சென்று வாருங்கள் என் ஆப்தரே! -
Kamal Haasan
@ikamalhaasan
விடிவானில் ஒளிர்மீன்கள்
விண்ணெல்லாம் ஒளிரட்டும்
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your warm birthday wishes @TRBRajaa. Keep working hard for our homeland, so Tamil Nadu will take its rightful place as India's leading state with economic might and as a cultural powerhouse.
Dr. T R B Rajaa
@TRBRajaa
Wishing the phenom Thiru. @ikamalhaasan a very happy birthday 🙏🏾
It would've been easy to say never before has there been an actor of such calibre, if not for legends like Sivaji & Nagesh... but surely no one person has had such concentration of varied cinematic talents as is evident in this astounding person.
#hbdkamalhaasan 🙏🏾
Pic: socialnews.xyz -
Kamal Haasan
@ikamalhaasan
அருமைச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் @thirumaofficial அவர்களின் அன்பு தோய்ந்த வாழ்த்துகள் அகம் குளிரச் செய்கின்றன.
Thol. Thirumavalavan
@thirumaofficial
நவ-07 : இன்று பிறந்தநாள் காணும் கலைநாயகன் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் 'நலமொடு நீடு வாழ்க' என நெஞ்சார வாழ்த்துகிறேன்.
தொலை பேசியில் தொடர்பு கொண்டு விசிக சார்பில் அவரை மனமார வாழ்த்தினேன்.
கலை உலகில் சாதித்ததைப் போல் அரசியல் களத்திலும் அவர் சாதனைகள் படைத்திட உளமார வாழ்த்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர், @NaamTamilarOrg கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
எத்தனையெத்தனை இதயங்கள்... அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the wishes thambi @thisisysr
Raja yuvan
@thisisysr
Happy birthday @ikamalhaasan sir 🤗 Wishing you the best of everything!
-
Kamal Haasan
@ikamalhaasan
அன்றாடம் எம்செவியில்
பாவளர்க்கும் பாவலரே,
நீர்தொடுத்த சொல்மாலை
நிலைத்திருக்கும் என்நெஞ்சில் @Vairamuthu
வைரமுத்து
@Vairamuthu
நாம் வாழும் காலத்தின்
கர்வ காரணங்களுள் ஒன்று
கலைஞானி கமல்ஹாசன்
இத்துணை நீண்ட திரைவாழ்வு
அத்துணை பேர்க்கும் வாய்க்காது
வாழ்வு கலை இரண்டிலும்
பழையன கழித்துப்
புதியன புகுத்தும்
அந்தண மறவரவர்
எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு
இனி என்ன வேண்டும்?
உடையாத உடல் வேண்டும்;
சரியாத மனம் வேண்டும்
வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்
@ikamalhaasan | #hbdkamal -
Kamal Haasan
@ikamalhaasan
நேசம் மிக்க நண்பர், இயக்குனர் இமயம் @offBharathiraja அவர்களே, வாழ்த்தியமைக்கு நன்றி.
Bharathiraja
@offBharathiraja
பாசத்துக்குரிய..
திரு.கமலுக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
அன்பு மிக்க இளவல், இயக்குனர் @VigneshShivN உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது.
-
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your warm wishes @khushsundar
KhushbuSundar
@khushsundar
Happy happy happyyyyyyyy Happpppppppppyyyyyy happpppiest birthday to you @ikamalhaasan Sir. Words fail to express how much you are loved and admired. 🤗🤗🤗❤️❤️❤️❤️
#hbdkamalsir
#hbdkamalhaasan
#hbdulaganayagan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your wishes thambi @gvprakash
G.V.Prakash Kumar
@gvprakash
Happy bday @ikamalhaasan sir . Have a healthy blessed year ahead
-
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your warm wishes and our journey together @Dir_Lokesh
Lokesh Kanagaraj
@Dir_Lokesh
Happy Birthday #ulaganayagan @ikamalhaasan sir🙏🏻 ❤️❤️❤️
Keep inspiring us forever 🤗❤️🙏🏻 -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the birthday wishes thambigal @anbariv
AnbAriv
@anbariv
Happy birthday to the cinema legend! @ikamalhaasan
#ulaganayagan #kamalhaasan #hbdkamalsir #hbdulaganayagan -
Kamal Haasan
@ikamalhaasan
அருமை நண்பரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான
@draramadoss அவர்கள் காட்டும் அன்பில் மகிழ்கிறேன்.
Dr ANBUMANI RAMADOSS
@draramadoss
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துகள்!
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the wishes thambi @Atlee_dir
atlee
@Atlee_dir
Happy birthday @ikamalhaasan sir
Love you sir ❤️❤️❤️❤️ -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your kind wishes @dulQuer, excited to explore this journey with you.
Dulquer Salmaan
@dulQuer
@ikamalhaasan wishing Kamal sir the happiest birthday !! #hbdkamalsir #thuglife
-
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the warm wishes @actor_jayamravi. Proud to see your journey and excited about collaborating on our next project.
Ravi Mohan
@iam_RaviMohan
Wishing the iconic & unparalleled legend of Indian Cinema, #ulaganayagan @ikamalhaasan sir a #thuglife birthday! It's a privilege to collaborate with you on this prestigious project.
Unveiling a special surprise, for your special day! #thuglifesecondlook
#thuglife #ulaganayagan #kamalhaasan
#celebrationbeginsnov7 #hbdulaganayagan #hbdkamalsir
#maniratnam @arrahman @trishtrashers @dulQuer @abhiramiact #nasser @nasser_kameela #mahendran @bagapath @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM @dop007 @sreekar_prasad @anbariv #sharmishtaroy @amritharam2 @ekalakhani @AmbadyRanjith @sst_casting @gopiprasannaa @idiamondbabu @prosathish @magizhmandram @UrsVamsiShekar @propratheesh @proharisarasu @gobeatroute -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the birthday wishes @VenkyMama
Venkatesh Daggubati
@VenkyMama
Happy birthday to the incredible @ikamalhaasan Sir! Wishing you a day filled with love and laughter.
-
Kamal Haasan
@ikamalhaasan
கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர், தம்பி @iamvijayvasanth அன்பிற்கு நன்றி.
Vijay Vasanth
@iamvijayvasanth
உலக நாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy Birthday Ulaga Nayakan Thiru. @ikamalhaasan
#kamalhassan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your love @IshariKGanesh
Dr Ishari K Ganesh
@IshariKGanesh
Here is wishing the legendary Padmabhushan Thiru Kamal Haasan a very happy birthday! From his mesmerizing performances to his fearless approach to filmmaking, Kamal Haasan has left an indelible mark on Indian cinema. Let's celebrate this iconic actor, director, producer, much more and most importantly a great human being who has entertained and inspired audiences for decades.
Happy Birthday, Thiru. Kamal Haasan!
@ikamalhaasan
#drisharikganesh #kamalhaasan #ulaganayagan #birthdaywishes -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the kind words my friend @Mohanlal
Mohanlal
@Mohanlal
Wishing you another year of beautiful art, unanimous success and pure happiness! Happy Birthday, my dear Kamal Haasan sir!
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the wishes @riyasdyfi
PA Mohamed Riyas
@riyasdyfi
Birthday Wishes dear Kamal Haasan @ikamalhaasan
#ulaganayagan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you @realradikaa for the wishes.
Radikaa Sarathkumar
@realradikaa
Wishing one of the greatest actors a #happybirthday @ikamalhaasan .
Two icons #manirathnam and #ulaganayagan coming together is a fab birthday treat❤️❤️👍👍 -
Kamal Haasan
@ikamalhaasan
மக்களவை உறுப்பினரும், நண்பருமான @manickamtagore அவர்களே, உங்கள் வாழ்த்து இன்றைய நாளுக்கு இனிமை கூட்டுகிறது. நன்றி.
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
@manickamtagore
Happy 69th birthday to the legendary @ikamalhaasan , President of @maiamofficial ! 🎉🎂 Your contributions to Indian cinema are unparalleled, and your dedication to public service through @maiamofficial inspires many.May you continue to lead with integrity and inspire positive1/2
-
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the warm words @tarak9999. Love your work.
Jr NTR
@tarak9999
Wishing the Universal Star @ikamalhaasan sir a very happy birthday. May you continue to teach us for many more years.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், எனது நண்பர் @KS_Alagiri அவர்களின் அன்பான சொற்களுக்கு நன்றி.
K.S.ALAGIRI
@KS_Alagiri
இந்தியாவின் தலைசிறந்த நடிகரும், @maiamofficial கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் பத்மஸ்ரீ திரு @ikamalhaasan அவர்களுக்கு என் சார்பிலும் @INCTamilNadu சார்பிலும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் நீடுழி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்!!
#kamalhaasan #hbdkamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the kind wishes my friend @mammukka . Loved your surprise video call and happy to be working with your son @dulQuer
Mammootty
@mammukka
Happy Birthday Kamal Sir
-
Kamal Haasan
@ikamalhaasan
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் @annamalai_k அவர்களே, வாழ்த்தியமைக்கு நன்றி.
K.Annamalai
@annamalai_k
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு @ikamalhaasan அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு @ikamalhaasan அவர்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன், தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you @shankarshanmugh for the wishes and happy to continue our journey together.
Shankar Shanmugham
@shankarshanmugh
Wishing our Ulaganayagan @ikamalhaasan sir a very happy birthday! It is wonderful to have had the chance to work with you again to bring Senapathy back! Hope you keep entertaining us and continue to inspire millions more! #indian2
-
Kamal Haasan
@ikamalhaasan
முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான @OfficeOfOPS அவர்களே, உங்கள் வாழ்த்திற்கு என் நன்றி.
O Panneerselvam
@OfficeOfOPS
“களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,
பல்வேறு விருதுகளைப் பெற்று, திரைத் துறையில் அளப்பரிய சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்ற “உலக நாயகன்” @ikamalhaasan அவர்கள் தனது 70-வது அகவையில் அடியெடுத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, நாட்டுக்கு சேவை புரிய எனது வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
மாறாத நேசம் கொண்ட அன்புச் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN அவர்களே, உங்கள் அன்பிற்கு நன்றி.
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்!
எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்!
திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
@maiamofficial @ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your kind words Hon. CM of Kerala @pinarayivijayan . May you continue to take Kerala on the path forward.
Pinarayi Vijayan
@pinarayivijayan
Happy birthday dear @ikamalhaasan. As an accomplished artist par excellence and as an astute social and political activist, you have carved out a significant space in the hearts of the people. Wish you many more happy and healthy years ahead in all spheres of your endeavour.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நாளும் புதுச்சாதனைகள் படைப்பவருமான அன்புத் தம்பி @Udhaystalin அவர்களே, என் மீது இடையறாது நீங்கள் பொழியும் அன்பில் ஆனந்தமடைகிறேன்.
Udhay
@Udhaystalin
திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை.
@maiamofficial -
Kamal Haasan
@ikamalhaasan
இனிய நண்பரும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வருமான @mkstalin அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன் @CMOTamilnadu
M.K.Stalin
@mkstalin
கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி - @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
நலம் சூழ வாழிய பல்லாண்டு! -
Kamal Haasan
@ikamalhaasan
#thuglife
youtu.be/VChwoluq5-s
#maniratnam @arrahman #mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM @dop007 @sreekar_prasad @anbariv #sharmishtaroy @amritharam2 @ekalakhani @AmbadyRanjith @gopiprasannaa @idiamondbabu @prosathish @magizhmandram @UrsVamsiShekar @propratheesh @PROHarisarasu -
Kamal Haasan
@ikamalhaasan
Grateful for your encouragement @KicchaSudeep .
Namaskara India. INDIAN IS BACK! #indian2
Kichcha Sudeepa
@KicchaSudeep
Namaskara India 🙏🏻 INDIAN IS BACK🫡
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 youtu.be/PpfQQx-ouWI
#indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @LycaProductions #subaskaran @RedGiantMovies @gkmtamilkumaran @MShenbagamoort3 @SonyMusicSouth @PROHarisarasu
#comebackindian #indian2anintro #hbdulaganayagan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your unwavering support @ssrajamouli . Your encouragement means the world to me!
Namaste India. BHARATEEYUDU IS BACK! #indian2
rajamouli ss
@ssrajamouli
Namaste India 🇮🇳
BHARATEEYUDU IS BACK…
Presenting BHARATEEYUDU-2 AN INTRO… youtu.be/-qWzWZ18jG4
#bharateeyudu2 @ikamalhaasan @shankarshanmugh
@LycaProductions #indian2 -
Kamal Haasan
@ikamalhaasan
Appreciate your kind words Aamir Ji. Your work has always been inspirational!
Namaste India. HINDUSTANI IS BACK! #indian2
Aamir Khan Productions
@AKPPL_Official
HINDUSTANI-2 AN INTRO
youtu.be/cXjKUsf5Fbg
Wishing Kamal Sir, Mr. Shankar Shanmugam, Mr. Subhaskaran and the entire team of Hindustani 2, all the very best for their film.
May Hindustani 2 win the hearts of, not just every Indian, but of every
World-Citizen “too”!!!
Love
a -
Kamal Haasan
@ikamalhaasan
Will cherish your support always. Thanks. @Mohanlal
Namaskaram India. INDIAN IS BACK! #indian2
Mohanlal
@Mohanlal
Namaskaram India 🙏🏻 INDIAN IS BACK 🫡
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 youtu.be/kWGkVpxq6dc
#indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @LycaProductions #subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 @SonyMusicSouth @pro_Sabari
#comebackindian #indian2anintro #hbdulaganayagan -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for your love my friend, superstar @rajinikanth!
Vanakkam India. INDIAN IS BACK! #indian2
Rajinikanth
@rajinikanth
Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 youtu.be/kqGj31bQQQ0
#indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions #subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 @SonyMusicSouth @teamaimpr
#comebackindian #indian2anintro #hbdulaganayagan -
Kamal Haasan
@ikamalhaasan
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Wishing the Badshah of Bollywood and my friend @iamsrk , a very happy birthday!
Your Charisma, talent and charm continue to cheer your fans around the world just like your blockbuster movies. May you have a great day filled with love and laughter. -
Kamal Haasan
@ikamalhaasan
Yesterday, on the occasion of the state of Kerala’s 67th anniversary, I had the honor of attending Keraleeyam2023 in the presence of Hon. CM Thiru Pinarayi Vijayan. I spoke on the achievements of Kerala in universal healthcare, education and devolution of powers to local body institutions. Also had the pleasure of meeting my friends Thiru Mohanlal and Thiru Mammootty.
@PinarayiVijayan @Mohanlal @mammukka
Pinarayi Vijayan
@pinarayivijayan
Inaugurated the week-long festival, #keraleeyam, at Thiruvananthapuram. Prominent personalities like Yusuff Ali, Ravi Pillai, Kamal Haasan, Mohanlal, Mammootty, Shobhana, and many more graced the event. This festival celebrates the spirit of Kerala, featuring numerous events showcasing our achievements, progress, and rich cultural heritage to the world.
-
Kamal Haasan
@ikamalhaasan
Thiru V.K. Pandian, as an IAS officer, your honest and diligent administration epitomised the motto of your service - “Excellence in Action”. Under the capable leadership of Hon. CM Thiru Naveen Patnaik Ji, Odisha will further thrive and prosper, with such a formidable team at the helm of state affairs. I wish you the best as Chairman of 5T Initiative and Nabin Odisha.
-
Kamal Haasan
@ikamalhaasan
அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!
-
Kamal Haasan
@ikamalhaasan
Wishing @shrutihaasan and the entire team of #monstermachine a success.
youtu.be/AEqQbv1fzf0
@suprsanta @bhuvangowda84 @mycelium_deus -
Kamal Haasan
@ikamalhaasan
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கம், வெள்ளி ஆகிய பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற சைலேஷ் குமார், வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி மாரியப்பன் தங்கவேலு @189thangavelu ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
#asianparagames2022 -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @KS_Alagiri அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @INCTamilNadu
-
Kamal Haasan
@ikamalhaasan
சோழவந்தானின் சொல்லேருழவர், சொற்கள் தெரியவைக்கும் ஆசிரியர், சொல்கிற விதத்தில் கேட்போரின் பற்கள் தெரியவைக்கும் நகைச்சுவையாளர், இனிய நண்பர் கு. ஞானசம்பந்தன் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் மணம் பரப்பட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்து அன்பரே!
-
Kamal Haasan
@ikamalhaasan
சிவகாசி கிச்சநாயக்கன்பட்டியிலும் மங்களம் கிராமத்திலும் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான வரன்முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்னும் ஆய்வில், தொடர்புடைய அதிகாரிகள் கடுமை கூட்ட வேண்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Heartiest Birthday Greetings to Hon’ble Chief Minister of Odisha, Thiru Naveen Patnaik Ji. Your life has been one of selfless public service dedicated to the people of Odisha and your governance has uplifted the lives of millions in Odisha. @Naveen_Odisha, may you have continued good health and happiness.
-
Kamal Haasan
@ikamalhaasan
என் அன்புக்குரிய நண்பர் கிரேசி மோகனின் பிறந்த நாள் இன்று. நகைச்சுவை உணர்வைத் தோலாகத் தகவமைத்துக் கொண்டிருந்த மனிதர். அந்தத் தோலுக்குள்ளே, ஆழ்ந்த மரபிலக்கியப் பயிற்சி, தொன்மம் தொடர்பான அகன்ற வாசிப்பு, தீவிர உணர்வுகளின் கனம் உணரும் திறன் அத்தனையும் கொண்டிருந்தவர். அதனாலேயே எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணனாக இருந்தவர்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்பதை உறுதியாக நம்பியவர். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிற வள்ளுவ வாக்கை, 'கனவு காணுங்கள்' என்கிற சொற்களால் பிரபலப்படுத்தியவர். ஒரு பொன்னுலகைச் சிந்தித்த அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளில் அவரது கனவு நனவு ஆவதற்கு உழைப்போம் என்ற உறுதி ஏற்போம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
I wish to celebrate the extraordinary life of a gentleman with a genteel heart, Shri Keshava Parasaran, my athimbare, who has donned many hats in his illustrious life. Legal savant, Member of Parliament, religious scholar, sports and arts aficionado and above all a devoted husband and father.
A firm believer who stood up for our culture and constitution, he has taught us to stand by our conviction and laugh out our differences. An honest man who did not hesitate to defy the powerful governments he represented, his righteousness earned him the title “Pitamaha of Indian Bar Association”.
But to me you shall always be my affectionate athimbare, whose presence in my life I have always treasured. Parasaran athimbare, you are an epitome of love, affection, knowledge and simplicity. The entire country is indebted to your extraordinary career in public service and wishes you birthday greetings on your 97th Birthday. -
Kamal Haasan
@ikamalhaasan
கவிஞர், பாடலாசிரியர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், நாவலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மலையாளக் கலைஞன் என் பிரியத்திற்குரிய ஶ்ரீகுமாரன் தம்பி.
இவர் இயக்கிய ‘திருவோணம்’ எனும் திரைப்படத்தில் பிரேம் நசீர், சாரதா ஆகியோருடன் நானும் பிரேம்குமார் எனும் பாத்திரமேற்று நடித்திருக்கிறேன்.
‘ஜீவிதம் ஒரு பெண்டுலம்’ எனும் சுயசரிதை நூலுக்காக ஶ்ரீகுமாரன் தம்பி அவர்களுக்கு கேரளத்தின் உயரிய விருதான ‘வயலார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீகுமாரன் தம்பி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
இந்தியாவில் சில காலம் வாழ்ந்த அமெரிக்கர் மாண்டி ஹாரீஸ். மய்யவாதம் எனும் எங்களது அரசியல் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்ய நண்பர்கள் அமைப்புடன் இணைந்து பல்வேறு நற்பணிகளில் தீவிரப் பங்களிப்பாற்றியவர். தனது 83வது வயதில் இன்று இயற்கை எய்தி விட்டார்.
MNM நண்பர்கள் அமைப்பு தமிழ்நாட்டில் சில அரசுப்பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறைகள் அமைப்பதற்கு பொருளியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ஆதரவளித்து வந்தவர் மாண்டி ஹாரீஸ்.
பொருளாதாரத்தில் ஆழங்கால்பட்ட அறிஞர் அவர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்கிற கருத்துருவாக்கத்தில் எனக்கு அறிவுப்பங்களிப்பாற்றியவர்.
மாண்டி ஹாரீஸை இழந்து வாடும் அவரது மனைவி சுகன்யா ஹாரீஸூக்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
A sensational effort by Indian athletes at the recently concluded Asian Games has led to our nation's largest ever haul of 107 medals!
Sports have the power to uplift, inspire, and unite a nation. I join the rest of our citizenry in saluting our athletes who have given their blood, sweat, and tears to make our nation proud.
Bring on Paris 2024!
#asiangames -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழக கர்நாடக எல்லை அருகே அத்திப்பள்ளி எனும் பகுதியில் இயங்கி வந்த பட்டாசுக்கடை வெடி விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடைய விழைகிறேன்.
பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதே இக்கொடூர விபத்து உணர்த்தும் பாடம். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். -
Kamal Haasan
@ikamalhaasan
தனது ஆய்வுகளின் மூலம் பண்டைத் தமிழர்களின் கடல்சார் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றிய ஆய்வாளர் ஒரிசா பாலு இயற்கை எய்தினார்.
கடற்கரைகளைத் தேடி ஆமைகள் வரும் கடல் நீரோட்டப் பாதைகளைப் பின்பற்றி தமிழ்க் கடலோடிகள் உலகம் முழுக்கச் சென்றனர் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர். ஒரிசாவிற்கும் தமிழ்நாட்டிற்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்தவர். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தைத் தொடங்கி தமிழரின் கடல்சார் மரபும், கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தமிழ் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் தீராத பற்று கொண்டிருந்த மாமனிதரை இழந்துவிட்டோம். அவருக்கு என் இதய அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
He carried upon his frail shoulders the hopes and dreams of an ancient civilisation, yearning to wake from its colonial slumber, by mobilising the innate craving for freedom that resides in every human being and turning it into a social force. Before Mohandas Karamchand Gandhi, for millennia, nations had known only one way of defeating each other - war. He changed the course of human history by defeating a superpower with Ahimsa and the will of the masses.
His truth was not spoken from a pulpit but was seen among the people and his principles were not preached in theory but practiced in his daily life. Gandhi Ji will be remembered by just and moral freemen for all of human history as long as peace and love reside in our hearts.
#gandhijayanti -
Kamal Haasan
@ikamalhaasan
பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை.
-
Kamal Haasan
@ikamalhaasan
குன்னூர் மலைச்சாலையில் நடந்திருக்கும் சுற்றுலாப் பேருந்து விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அதிக இழப்பின்றி விரைந்து குணமடைய வேண்டும். இறந்த சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் கண்ணீர் கலந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Deeply grieved by the passing away of Dr. M.S. Swaminathan, eminent agriculture scientist and the father of India’s green revolution. On gaining Independence the most challenging governance issue for the country was it’s ability to feed its population, a task which most of the world felt India would be incapable to accomplish. It was pioneers such as Dr. M.S Swaminathan who made India into a self-sustaining and food surplus nation. We are all indebted to his life’s work. A grateful nation will never forget your immense countributions.
#msswaminathan -
Kamal Haasan
@ikamalhaasan
My dearest Mr. Gundu rao, thank you for appearing in my life as my friend and mentor with a name Nagesh. Today is my Mr. Nagesh’s birthday.
-
Kamal Haasan
@ikamalhaasan
மலையாளத் திரையுலகின் புதிய அலை இயக்குனர்களுள் ஒருவரான கே.ஜி. ஜார்ஜ் மறைந்தார். இரகள், ஸ்வப்னாடனம், மற்றொராள், ஊழ்க்கடல், மேளா, யவனிகா உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களைத் தந்தவர். மலையாள சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் தலைவராகவும் பங்களிப்பாற்றினார்.
கே.ஜி. ஜார்ஜ் பெற்ற தேசிய விருதுகளும், மாநில விருதுகளும் அவரது திறமைக்குச் சான்று. இலக்கியத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த உயரிய விருதான முட்டத்துவர்க்கி விருது, ‘இரகள் திரைக்கதையும் ஓர் இலக்கிய வகைமையே’ எனும் குறிப்புடன் அவருக்கு வழங்கப்பட்டது.
தனித்துவம் மிக்க இயக்குனருக்கு எனது அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.
இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் @CMOTamilnadu முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.
இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்.
#organdonation #donatelife #organdonorheroes -
Kamal Haasan
@ikamalhaasan
மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் திரு. சிங்கிதம் சீநிவாசராவ்காரு.
அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீநிவாசராவ் அவர்களுக்கு என் மனமகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
விகடன் பிரசுரம் நடத்திய ‘கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu , விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா. சீனிவாசன், தி இந்து குழுமத்தின் இயக்குனர் @nramind மற்றும் தினமலர் நாளிதழின் அசோசியேட் எடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, விகடன் ஆசிரியர் தி. முருகன் ஆகியோருடன் கலந்துகொண்டேன்.
முதல்வர் @mkstalin அவர்களிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடனான எனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டேன். -
Kamal Haasan
@ikamalhaasan
A landmark day in the history of our Republic, as the seat of our democracy moved into its new home. I’m delighted that the first Bill tabled in this new Parliament corrects a longstanding injustice perpetrated against the largest minority in our nation, the women of India. I wholeheartedly applaud the Women Reservation Bill tabled yesterday. Nations that ensure gender equality will always prosper.
During the Parliamentary discussion on the Bill, I call upon all parties to address the following concerns:
- The Bill comes into effect only after the next census and delimitation exercise, both of which have been delayed in the past. This delayed implementation timeline risks making this momentous decision into mere lip service towards the subject and must be done away with.
- The Bill only applies to Lok Sabha and State Assemblies and must be extended to Rajya Sabha and State Legislative Councils.
I look forward to the day when women will have proportional representation in legislative bodies without the aid of any affirmative action.
#womenreservationbill -
Kamal Haasan
@ikamalhaasan
தம்பி @vijayantony மகளின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீராவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
I am deeply saddened to hear about the passing away of eminent writer Smt. Gita Mehta, sister of Hon. Chief Minister of Odisha, Shri Naveen Patnaik Ji. My thoughts go out to her family in their hour of grief.
@Naveen_Odisha -
Kamal Haasan
@ikamalhaasan
Heartiest birthday greetings to Honorable Prime Minister Shri Narendra Modi Ji! May you be bestowed with good health and prosperity.
@narendramodi -
Kamal Haasan
@ikamalhaasan
பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர்.
சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களை நினைவுகூர்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
பேச்சாற்றல் எழுத்தாற்றல் சிந்தனையாற்றல் என்ற மூன்று பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சிச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைத்த முன்னோடி.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற மூன்று சொற்களை மந்திரம் போல இளைஞர்களின் மனதுக்குப் பழக்கிய ஆசான்.
தன் கொள்கைப் பிடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை.
பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறான். அதில் முதன்மையானது ‘கேளடா மானிடவா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமை யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்’
மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.
தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.
‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்.
#worldsuicidepreventionday -
Kamal Haasan
@ikamalhaasan
தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன்.
ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
The hallmark of a true democracy is the ability of its citizens to disagree and engage in continued discussion. History has repeatedly taught us that asking the right questions has led to important answers and contributed to our development as a better society.
@Udhaystalin is entitled to his views on Sanatana. If you disagree with his viewpoint, it is important to engage in a discussion based on the merits of Sanatana instead of resorting to threats of violence or legal intimidation tactics, or distorting his words to evoke emotional responses for narrow political gains.
Tamil Nadu has always been a safe space for healthy debates, and it will continue to remain so. It is crucial to critically evaluate our traditions, ensuring inclusivity, equality, and progress. Let's embrace constructive discussions to foster a harmonious and inclusive society. -
Kamal Haasan
@ikamalhaasan
சமூக இருள் நீங்க
திரை ஒளி பாய்ச்சும்
தம்பி #hvinoth அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
தாய் நாட்டையும் தாய்த் தமிழையும் தன்னிரு கண்களாகக் கொண்டவர் வ.உ.சிதம்பரனார். ஆதிக்கத்தைத் துணிச்சலுடன் எதிர்த்து நின்ற கப்பலோட்டிய தமிழரின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு. தமிழ்ச் சமூகம் எழுந்து நின்றதிலும் எழுச்சி பெற்றதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம். நம் ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அவர்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகிறேன்.
#teachersday -
Kamal Haasan
@ikamalhaasan
Heartiest Congratulation @Tharman_S on being elected as the President of Singapore. This is a moment of pride for Tamil people around the world and the bond of friendship between our two nations will reach its zenith under your leadership.
-
Kamal Haasan
@ikamalhaasan
எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ഓണാശംസകൾ
Onam Ashamsakal to all my Malayali brothers and sisters in Kerala and around the world. May this year bring prosperity and happiness to you all.
#happyonam -
Kamal Haasan
@ikamalhaasan
ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி. -
Kamal Haasan
@ikamalhaasan
இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும்.
இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
#tnbreakfastscheme -
Kamal Haasan
@ikamalhaasan
#bbtamilseason7 #பிக்பாஸ்
@vijaytelevision @disneyplusHSTam -
Kamal Haasan
@ikamalhaasan
இன்று பிறந்தநாள் காணும் என் மனதிற்கினிய நண்பர், தேமுதிக தலைவர், புரட்சிக் கலைஞர் @iVijayakant அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
திருவனந்தபுரத்தில் சந்திரயான் தொடர்பான செய்தி சேகரித்துவிட்டு திரும்புகையில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சங்கரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர் நாராயணமூர்த்தி, நியூஸ்-7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் ஆகியோர் விரைவில் குணமடைய விழைகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான @MagnusCarlsen - ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் @rpragchess இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள்.
#fideworldcupfinal #praggnanandhaa #chessworldcup -
Kamal Haasan
@ikamalhaasan
புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் @ThisIsDSP அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!
#nationalfilmawards2023 -
Kamal Haasan
@ikamalhaasan
From carrying satellite parts on bicycles to landing on the moon - What a journey it has been! Team ISRO is the pride of the nation. A historic day which will forever be etched in our nation’s spacefaring odyssey. The day is not far when Indians will walk on the moon.
@isro
#vikram #chandrayaan3 #isro #proudindian -
Kamal Haasan
@ikamalhaasan
Bigg Boss Tamil Season 7
விரைவில்..
@vijaytelevision @disneyplusHSTam
#bbtamilseason7 #பிக்பாஸ் -
Kamal Haasan
@ikamalhaasan
Many more happy returns of this day, Dear Shankar ji.
@shankarshanmugh #indian2 -
Kamal Haasan
@ikamalhaasan
சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் @thirumaofficial அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் நீடூழி வாழ பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Arvind Kejriwalji, you are a true inspiration for all the youngsters who dare to challenge the status quo and tirelessly work for the rights of the common man. Your remarkable achievements are a testament to your exceptional administrative capabilities.
On your 55th birthday, I wholeheartedly wish that you continue to scale greater heights and play an even more significant role in shaping the governance of our beloved country in the years ahead. Happy birthday and many happy returns of the day!
@ArvindKejriwal -
Kamal Haasan
@ikamalhaasan
Today on our country's Independence Day, my ode to Bapu.
#heyram ➡️ youtu.be/R9YJOuQ6SX8
#independenceday
#mahatmagandhi
@ilaiyaraaja @iamsrk @RKFI -
Kamal Haasan
@ikamalhaasan
My editorial in today’s @the_hindu on our nation’s journey and my hopes for the future.
www.thehindu.com/opinion/op-ed/india-a-marvel-that-contin…
#independenceday #proudtobeindian -
Kamal Haasan
@ikamalhaasan
India’s journey has been one filled with highs and lows, pain and joy, love and hate. Yet, our tryst with destiny continues. Today, let us all vow to unite in purpose to make India the country Bapu envisioned.
An India where no child is born in poverty or goes to bed hungry. An India whose economic might is a beacon, attracting the world to our shores. An India whose culture and knowledge reign supreme in the global arena.
Fellow Indians, I humbly bow my head to this great land and its people - a tapestry of religious, ethnic, linguistic, and cultural diversity. Happy Independence Day to you all.
#independenceday #proudtobeindian #unityindiversity -
Kamal Haasan
@ikamalhaasan
சென்னையில் நடைபெற்ற #asianchampionstrophy ஹாக்கி தொடரின் இறுதிச் சுற்றில் மலேசியாவை வீழ்த்தி 4-வது தடவையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கும் #teamindia அணியை மனதார வாழ்த்துகிறேன்.
@TheHockeyIndia @IndiaSports @Udhaystalin @SportsTN_
#hact2023 -
Kamal Haasan
@ikamalhaasan
64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.
உங்கள்
நான் -
Kamal Haasan
@ikamalhaasan
நண்பர் #sathyaraj அவர்களின் தாயாரும், இளவல் @Sibi_Sathyaraj அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைநகர் சென்னையில் பொதுச்செயலாளர் @Arunachalam_Adv தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர் @MouryaMNM தலைமையிலும், கோயம்புத்தூரில் துணைத்தலைவர் @Thangavelukovai தலைமையிலும், மதுரையில் இளைஞரணி மாநிலச் செயலாளர் @KavingarSnekan தலைமையிலும்,சேலத்தில் மாநிலச் செயலாளர் @rtielango தலைமையிலும், நாகப்பட்டினத்தில் பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் @VaitheeswaranSR தலைமையிலும், திருநெல்வேலியில் நெல்லை மண்டலச் செயலாளர் மருத்துவர் D. பிரேம்நாத் தலைமையிலும், திட்டக்குடியில் விழுப்புரம் மண்டலச் செயலாளர் @Sripath95995662 தலைமையிலும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மய்ய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
#savemanipur -
Kamal Haasan
@ikamalhaasan
Rahulji,
Power should not exist if it cannot dispense Justice;
Justice can be dispensed only if there is truth and fairness;
Truth can be appreciated only if people rise up to the occasion;
The Hon’ble Supreme Court of India did so in your case, Rahulji!!
If power is wielded only to exhibit might, even the unaffected common people get outraged. When that happens, those in power shall realize that justice will prevail, no matter what!! The Hon’ble Supreme Court of India acknowledges the increasing outrage of the common man and ensures justice!!
@RahulGandhi
Satyameva Jayathe! -
Kamal Haasan
@ikamalhaasan
‘வீடென்று எதனைச் சொல்வீர்?’
நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். உறுதியற்ற இந்த அடுக்ககம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்கத் தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
youtu.be/LxpOrsUF3bg -
Kamal Haasan
@ikamalhaasan
வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர், சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்பட தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Breakdown of Constitutional machinery in Manipur. Clear case for President’s rule.
@rashtrapatibhvn @narendramodi
#manipur
The Indian Express
@IndianExpress
Speaking to #theindianexpress, the younger woman, one of two women that were paraded naked and sexually assaulted in #manipur, said: “The police were there with the mob which was attacking our village. The police picked us up from near home, and took us a little away from the village and left us on the road with the mob. We were given to them by police.”
Click on the 🔗 below to read the victim's ordeal 👇🏽
indianexpress.com/article/india/manipur-sexual-assault-mo…
#manipur #manipurviolence #manipurcrisis -
Kamal Haasan
@ikamalhaasan
தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
வாயுவில் சாடி ஒரு வானவெளிப் பயணம். நிலவை நோக்கி நீள்கிறது மனித எத்தனம். வெற்றிகரமாக விண்ணில் யாத்திரை தொடங்கியிருக்கிறது சந்திரயான் 3. இஸ்ரோவின் விடாமுயற்சிக்கும் விஞ்ஞானத்தின் வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்து.
#chandrayaan3 @isro -
Kamal Haasan
@ikamalhaasan
எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Congrats #projectk for being the first Indian film to attend @Comic_Con
See you there !
@SrBachchan #prabhas @deepikapadukone @nagashwin7 @AshwiniDuttCh @VyjayanthiFilms -
Kamal Haasan
@ikamalhaasan
And it begins…
#rkfi52 #kh233
#risetorule
#hvinoth #mahendran @RKFI @turmericmediaTM @magizhmandramThis media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
இல்லாதோருக்கு இயன்றதைக் கொடுங்களென வலியுறுத்தும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை.
என் கருத்திற்கு வலிமை சேர்க்கும்
மாமன்னனுக்கு வாழ்த்துகள்
@Udhaystalin @mari_selvaraj #maamannan
Udhay
@Udhaystalin
#maamannan திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@mari_selvaraj @KeerthyOfficial #vadivelu @arrahman #fahadhfaasil -
Kamal Haasan
@ikamalhaasan
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.
அன்பன்
கமல்ஹாசன்
@LycaProductions @RedGiantMovies_ #indian2 -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you for the love Amit Ji @SrBachchan
Looking forward to collaborating with #prabhas @AshwiniDuttCh @nagashwin7 @deepikapadukone @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms #projectk -
Kamal Haasan
@ikamalhaasan
I wish my friend @RahulGandhi a joyous birthday. You have faced adversity with a smile and responded to hate with love. May you have a long life with continued happiness and health.
-
Kamal Haasan
@ikamalhaasan
‘ரத்த தானம்’ எனும் சொல் நற்பணி நாயகர்களின் ரத்தநாளங்களில் ஓடுவது. ரத்த தானமும், பிளாஸ்மா தானமும் செய்வதன் வழியாக ஓர் உயிருக்கு வாழ்வைப் பரிசளிக்கிறீர்கள். இந்த அரும்பணியை சீரான இடைவெளியில் தவறாமல் தொடருங்கள். குருதிக் கொடை நல்கும் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரிய கதாநாயகர்கள். உதிரம் கொடுப்போர் உயர்ந்தோரென உலக ரத்ததான தினத்தில் வாழ்த்துகிறேன்.
#worldblooddonorday #blooddonation #kamalsbloodcommune -
Kamal Haasan
@ikamalhaasan
1962-ல் ஒரு சண்டைக் கலைஞராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா, 61 ஆண்டுகள் திரைத்துறையில் பங்களிப்பாற்றி, தனது 94-வது வயதில் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பொறுமை, விடாமுயற்சி, உழைப்பு, கலையார்வம், தொழில் நேர்த்தி, உடல் ஆரோக்யம் என அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன.
நாற்பது படங்களுக்கு மேல் என்னோடு பணியாற்றிய மாஸ்டரை வணங்கி வாழ்த்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம். -
Kamal Haasan
@ikamalhaasan
If one were to count life by the happiness that they create around them and if age is calculated by the friends around you, my dear #maniratnam you are going to be a much older man today! A doyen of Indian Cinema who has touched the hearts of millions through his art and one who transformed dialogues into a lovely visual experience.
You have constantly pushed the boundaries of cinema unmindful of the scale of challenge by constantly learning. Today you are a master inspiring the next generation of filmmakers through whom your legacy shall reverberate perpetually. From Nayakan to #kh234, our journey together has been personally rewarding and enriching for me. Many more happy returns of the day and more to come my friend!
#happybirthdaymaniratnam -
Kamal Haasan
@ikamalhaasan
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.
@ilaiyaraaja
#happybirthdayilaiyaraaja -
Kamal Haasan
@ikamalhaasan
My statement on the new Parliament building's inauguration. #newparliamentbuilding
-
Kamal Haasan
@ikamalhaasan
Heartiest Birthday greetings to my friend and comrade @pinarayivijayan. I join my Keralite brothers and sisters in wishing you many more years of happiness and prosperity and wish you success as you lead Kerala to further glories.
-
Kamal Haasan
@ikamalhaasan
நண்பர், மூத்தவர் கருமுத்து தி. கண்ணன் மறைந்துவிட்டார். தொழில், கல்வி, ஆன்மீகம் என பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர். ஆகச்சிறந்த புரவலராக மதுரை மக்களின் மனங்களை வென்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Today marks 1 month of protests by athletes of the wrestling fraternity. Instead of fighting for national glory, we have forced them to fight for personal safety.
Fellow Indians ,who deserves our attention, our national sporting icons or a politician with an extensive criminal history?
#istandwithmychampions #wrestlersprotest -
Kamal Haasan
@ikamalhaasan
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.
அவருக்கு என் அஞ்சலி.
#ripsarathbabu #sarathbabu -
Kamal Haasan
@ikamalhaasan
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர், இணையற்ற நடிகர், லாலேட்டன் என்று அனைவராலும் பிரியத்தோடு கொண்டாடப்படும் @Mohanlal அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். #happybirthdaymohanlal
-
Kamal Haasan
@ikamalhaasan
Yesterday, I conveyed my heartfelt wishes to @siddaramaiah on him swearing in as the 39th Chief Minister of the State of Karnataka today. I’m certain that the faith reposed by 6.5 crore people of Karnataka, in the leadership of @RahulGandhi, @kharge and @DKShivakumar will usher in a golden period of progress.
On my way to attend the Swearing-in Ceremony. -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.
இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி! #jallikattu -
Kamal Haasan
@ikamalhaasan
Shri @RahulGandhi ji, Heartiest Congratulations for this significant victory!
Just as Gandhiji, you walked your way into peoples hearts and as he did you demonstrated that in your gentle way you can shake the powers of the world -with love and humility. Your credible and creditable approach, without bravado or chest thumping has ushered a breath of fresh air for the people.
You trusted the people of Karnataka to reject divisiveness, who in turn have unitedly reciprocated by placing their faith in you. Kudos for not just the victory but also for the manner of victory! -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழில் இருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சில் இருந்து தமிழுக்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரும், இருமொழிகளையும் பலருக்கும் பயிற்றுவித்தவருமான எழுத்தாளர் ச. மதனகல்யாணி நேற்று காலமாகிவிட்டார் என்கிற செய்தி அறிந்தேன்.
கேம்யூஸ் எழுதிய கொள்ளை நோய், பால்சாக்கின் தந்தை கோரியோ உள்ளிட்ட புகழ்மிக்க நூல்கள் இவரது மொழியாக்கத்தால் தமிழுக்குக் கிடைத்தன. நமது சிலப்பதிகாரம், நாட்டுப்புறப் பாடல்கள், பாரதியார் பாடல்கள் தொடங்கி சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ வரை பல முக்கியமான ஆக்கங்களை பிரெஞ்சு சூழலுக்குக் கொண்டு சேர்த்தார். ஒபிசியே, செவாலியே உள்பட பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர்.
தமிழுக்குத் தொண்டு செய்து மறைந்த மதனகல்யாணி அவர்களைப் பணிந்து அஞ்சலி செலுத்துகிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
I applaud the Hon’ble SC for its landmark decision in reaffirming the supremacy of the will of the people and their elected governments. @ArvindKejriwal ji your long struggle has borne fruit and I wish you the best in serving the citizens of Delhi.
-
Kamal Haasan
@ikamalhaasan
‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புத் தம்பி @Udhaystalin அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக மக்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். களம் நமதாகட்டும்.
youtu.be/sqGLFf2IayA
@CMOTamilnadu @SportsTN_ @Udhaystalin -
Kamal Haasan
@ikamalhaasan
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்’ என்றார் பாவேந்தர். நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் நம்முடைய பொறுப்பு. உழைப்பால்தான் இந்த உலகம் உயர்ந்திருக்கிறது. உழைப்பாளிகளும் உயர்த்தப்பட வேண்டும்.
தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது இதயப்பூர்வமான மே தின வாழ்த்துகள். -
Kamal Haasan
@ikamalhaasan
இன்று 85ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழின் மகத்தான படைப்பாளி நீல.பத்மநாபன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள் என அழியாப் புகழ்மிக்க நாவல்களைத் தமிழுக்குத் தந்த நீல.பத்மநாபன், யதார்த்தவாத அழகியலின் முன்னத்தி ஏர்.
தனது மண்ணையும் மனிதர்களையும் உயிர்ப்புள்ள கதாபாத்திரங்களாக உலவச் செய்த நீல.பத்மநாபன்தான் மக்களின் புழங்கு மொழியை இலக்கியத்தில் வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தவர்.
நான் அவரது வாசகன். அவரது வீட்டிற்குச் சென்று பேட்டி கண்டிருக்கிறேன். லண்டன் குண்டு வெடிப்பு பற்றி நான் எழுதிய தமிழ்க் கவிதையை நீல.பத்மநாபன் மலையாளத்தில் மொழிபெயர்த்ததை ஆகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.
கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கி வரும் தன்னிகரற்ற தமிழ்ப் படைப்பாளி நீல.பத்மநாபன் நீண்ட ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன். அவரது மகத்தான படைப்புகளைத் தமிழர்கள் வாசிக்கவேண்டுமெனப் பரிந்துரைக்கிறேன். -
Kamal Haasan
@ikamalhaasan
தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். (1/3)
Kamal Haasan
@ikamalhaasan
யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். திரு @mkstalin அவர்களைப் பாராட்டுகிறேன். (2/3)
Kamal Haasan
@ikamalhaasan
12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(3/3)
-
Kamal Haasan
@ikamalhaasan
ஈகைத் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #eidmubarak
-
Kamal Haasan
@ikamalhaasan
Dear friend @mammukka ,
Heard of your mother’s demise. You are fortunate that your mother lived to see the heights you have reached . She must have left with great satisfaction. Only time will heal your pain . I share your grief . -
Kamal Haasan
@ikamalhaasan
எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பாகுபாடு, உயர்வு தாழ்வு கூடாது என்பதைத் தம் கொள்கைகளின் அடிநாதமாகக் கொண்டு அந்தக் குறிக்கோளை எட்டுவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கும் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் அன்னாரின் பாதையில் நடக்க உறுதியேற்போம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
உலகம் முழுக்கப் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மகிழ்வான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. www.newindianexpress.com/states/tamil-nadu/2023/mar/30/ro…
-
Kamal Haasan
@ikamalhaasan
தம்பி #ajithkumar அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Rahulji, I stand by you during these times! You have seen more testing times and unfair moments. Our Judicial system is robust enough to correct aberrations in dispensation of Justice. We are sure, you will get your justice on your appeal of the Surat Court’s decision! Satyameva Jayate!! @RahulGandhi #makkalneedhimaiam
-
Kamal Haasan
@ikamalhaasan
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்துச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும். (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துக்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 7வது ஆண்டு நினைவு நாள் இன்று.இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் இருந்து அவரது நினைவுகளை அசை போடுகிறேன்.அவரால் தமிழ் சினிமா பெற்றவை அதிகம். ஆனந்தன் செய்த ஆவணப்படுத்துதலை நாமும் தொடர்வதே அவருக்கான சிறந்த அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி @maiamofficial . புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட இரு ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
முதுமலை முகாமில் யானைகளைப் பராமரிக்கும் தம்பதியின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் #theelephantwhisperers , ஆவணப்பட பிரிவில் #oscar வென்றது பெருமைக்குரியது.இந்திய ஆவணப்பட வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்த இயக்குனர் @EarthSpectrum,தயாரிப்பாளர் @guneetm இருவருக்கும் என் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
My hearty congrats to Mr. Keeravaani, Mr. Rajamouli and the fabulous team of @RRRMovie . One more prestigious American recognition for our talented Indian artiste. #naatunaatu
@mmkeeravaani @ssrajamouli
RRR Movie
@RRRMovie
We’re blessed that #rrrmovie is the first feature film to bring INDIA's first ever #oscar in the Best Song Category with #naatunaatu! 💪🏻
No words can describe this surreal moment. 🙏🏻
Dedicating this to all our amazing fans across the world. THANK YOU!! ❤️❤️❤️
JAI HIND!🇮🇳 -
Kamal Haasan
@ikamalhaasan
நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.
@mmkeeravaani -க்கும் @ssrajamouli -க்கும் @RRRMovie அணியினருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். #oscar #naatunaatu
RRR Movie
@RRRMovie
We’re blessed that #rrrmovie is the first feature film to bring INDIA's first ever #oscar in the Best Song Category with #naatunaatu! 💪🏻
No words can describe this surreal moment. 🙏🏻
Dedicating this to all our amazing fans across the world. THANK YOU!! ❤️❤️❤️
JAI HIND!🇮🇳 -
Kamal Haasan
@ikamalhaasan
அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக என்னையும், என் படங்களையும் கொண்டாடும் ரசிகர்களில் சிலரை சந்தித்தேன். சோஷியல் மீடியா வலிமை மிக்க ஊடகம். அதை நல்ல வழிகளில் பயன்படுத்திக்கொள்வது எப்படியென கருத்துப்பரிமாற்றம் செய்துகொண்டோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் பிரதீப்குமார் ஒருங்கிணைப்பில் 210 மீனவர்கள் இன்று @maiamofficial -ல் இணைந்தனர். தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களுக்காக எங்கள் குரல் இன்றுபோல் என்றும் ஒலிக்கும் என அவர்களை வாழ்த்தி வரவேற்றேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான @EVKSElangovan அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான @SPK_TNCC அவர்களுடன் இன்று என்னை சந்தித்தார். (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
எனது ஈரோடு பரப்புரைக்காக நன்றி தெரிவித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் அவரது குரலுக்காகக் காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தினேன்.(2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_ @desingh_dp
#str48 #bloodandbattle #rkfi56_str48
#mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram -
Kamal Haasan
@ikamalhaasan
பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து.
-
Kamal Haasan
@ikamalhaasan
மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் @EVKSElangovan அவர்களுக்கும்,தோழமைக் கட்சிகளுக்கும்,தேசம் காக்க என்னோடு கைகோர்த்த மநீம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் முஸ்டாக் அலி (எ) ஆவடி பாபு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
மக்கள் பணியில் மிகுந்த ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட களப்பணியாளரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு @mkstalin அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு @PKSekarbabu ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தேன். (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
அரை நூற்றாண்டுத் தமிழக அரசியல் வரலாற்றில் தனித்தடம் பதித்த முதல்வரின் வாழ்க்கைப்பயணத்தை இன்றைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ள இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம். @Dayanidhi_Maran @PriyarajanDMK (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
இந்தியர்களின் சராசரி வயதிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரிது. இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி #mcc கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது.
This media couldn't be displayed. See it on the original post. -
Kamal Haasan
@ikamalhaasan
மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது #makkalneedhimaiam . ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்! #erodebyelection
-
Kamal Haasan
@ikamalhaasan
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் @EVKSElangovan அவர்களுக்காக வாக்குகள் சேகரிக்க இன்று மாலை ஈரோடு வருகிறேன். மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். #erodebyelection
-
Kamal Haasan
@ikamalhaasan
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #mayilsamy
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், ஐ.ஏ.எஸ் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். கொரோனா காலகட்டத்தில் ஈரோடு ஆட்சியராக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியவை. மனிதநேயமும், செயலூக்கமும் கொண்ட ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம். எனது அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் @EVKSElangovan அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். #erodebyelection
-
Kamal Haasan
@ikamalhaasan
சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
எந்த விஷயத்தையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர் இயக்குநர் திரு டிபி கஜேந்திரன். அவருக்கான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ் வளர்ச்சி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பேரறிஞர் அண்ணா. ஆதிக்கத்திற்கு எதிரான போரில் நம்மை வழிநடத்தும் குரல் அவருடையது. அரசியல் மாண்பும், அடிபணியா வீரமும் கொண்ட தலைவரின் நினைவுகளைப் போற்றுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Salute to a master .
-
Kamal Haasan
@ikamalhaasan
கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை. (1/3)
Kamal Haasan
@ikamalhaasan
நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை. (2/3)
Kamal Haasan
@ikamalhaasan
சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது.(3/3)
-
Kamal Haasan
@ikamalhaasan
The FIH award for Odisha CM’s secretary is well deserved. The CM of Odisha has thanked his people for another honour . The Guiness record. India admires people of Odisha for repeatedly choosing a people’s CM. (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
Indian Politiculture is truly changing for the better. What a team ! @Naveen_Odisha and Mr VK Pandian . Chak de India. (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் ஜமுனா. அவர் நடித்த படங்களுக்கு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறேன். பிற்பாடு பல படங்களில் அவர் எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஓர் அரசியல்வாதியாக மக்கள் பணியும் செய்தவர். ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
கடுமையான உழைப்பைக் கோரும் சண்டைப் பயிற்சியை உடல் வருத்தமாய்க் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் திரு ஜூடோ ரத்னம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் அளவில் 1500 படங்களில் பணியாற்றியவர். மறைந்துவிட்டார். அவர்க்கென் அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஒவ்வொரு மனிதரும் சமமாக நடத்தப்படும்போதுதான் குடியரசு அதன் முழுமையான அர்த்தத்தை எட்டுகிறது. நாட்டின் இறையாண்மை குடிமக்களிடமே நிலைகொண்டுள்ளது என்பதை உணர்த்திய முன்னோடிகளை வணங்கி சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம். குடியரசு தின நல்வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Hearing great reports about Pathan. Saket congratulates Pathan. Way to go brother @iamsrk
-
Kamal Haasan
@ikamalhaasan
ஒன்று கூடுவோம் @mkstalin வென்று காட்டுவோம் @EVKSElangovan #தமிழ்நாடு வாழ்க!
M.K.Stalin
@mkstalin
நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான திரு. @EVKSElangovan அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள @maiamofficial கட்சித் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழ்த் திரையுலகம் கண்டதிலேயே அதிக அளவு கேளிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்து பெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவரும், இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்து.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த ஜலந்தர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் @SSChaudharyMP அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவும் ஒரு வீரமரணம்தான். நீங்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவீர்கள் #santokhsingh
-
Kamal Haasan
@ikamalhaasan
Met a team of UPSC aspirants.They shared their thoughts on their future, which looks perilously bleak at the moment, following the impact of COVID 19. (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
A long standing demand to the GOI, seeking relaxation in age, among other practicalities, needs to reach a viable solution to ensure that they are gifted the future they truly merit. #upsccompensatoryattempt2023 (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
தேர்வுக்கான முன் தயாரிப்புகளில் உழைப்பையும், நேரத்தையும் செலவு செய்துவிட்டு காத்திருக்கும் திறமைமிக்க இளைஞர்களை இருளில் தள்ளுவது முறையல்ல. #upsccompensatoryattempt2023 (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. @ssrajamouli இயக்கிய #rrr படத்தின் #naatunaatu பாடலுக்காக #goldenglobes விருது வென்று தந்திருக்கிறார் @mmkeeravaani முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
#tamilnadu -ன் பெருமையை உலகறியச் செய்த இசைவாணர் @arrahman அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழிய பல்லாண்டு! #arrahman
-
Kamal Haasan
@ikamalhaasan
#தமிழ்நாடு வாழ்க
#തമിഴ്നാട് വിജയിക്കട്ടെ
#తమిళనాడు వర్ధిల్లాలి
#ತಮಿಳುನಾಡಿಗೆ ಜಯವಾಗಲಿ
#तमिलनाडु जयहो ।
Long live #tamilnadu
Long live #india -
Kamal Haasan
@ikamalhaasan
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான @EVKSElangovan மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான திருமகன் ஈ.வெ.ரா. இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் வேதனையளிக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அன்பு @SuVe4Madurai அவர்களே, உங்கள் தமிழ்த் தொண்டு தொடர வேண்டும். மேலும் நிறைய படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்.
Su Venkatesan MP
@SuVe4Madurai
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்தகப் பரிந்துரை பகுதியில் திரைக்கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான
திரு. கமல்ஹாசன் வேள்பாரியை பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
@ikamalhaasan -
Kamal Haasan
@ikamalhaasan
ஊடகவியலாளர் @RangarajPandeyR அவர்களின் தந்தையார் ரகுநாதாச்சாரியார் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
A conversation between two proud Indians. All other identities blur when it comes to the Nation . @rahulgandhi
Have a great united Indian new year.
youtu.be/IbvUUFUhD8Y -
Kamal Haasan
@ikamalhaasan
ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து. #newyear2023
-
Kamal Haasan
@ikamalhaasan
இலக்குதான் கோல், இல்லையா? தன் இலக்கை, ஆயிரத்துக்கும் அதிகமான தடவை எட்டியவர் என்று கால்பந்தாட்ட சூரர் பீலேயைச் சொல்லலாம். 22 ஆண்டுகள் ஓயாமல் வெற்றி ஈட்டி, எக்காலத்துக்குமான சிறந்த வீரராக ரசிகர்கள் மனதில் நிலைத்த அவருக்கு என் அஞ்சலி. #pele
-
Kamal Haasan
@ikamalhaasan
பாரதப் பிரதமர் @narendramodi அவர்களின் தாயார் #heerabenmodi மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்.
-
Kamal Haasan
@ikamalhaasan
இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ”
John Brittas
@JohnBrittas
ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா?
@mkstalin @ptrmadurai @Udhaystalin @KanimozhiDMK @dmk_raja @ikamalhaasan @arrahman
Kamal Haasan
@ikamalhaasan
தாய்மொழி எமது பிறப்புரிமை.பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல்.வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும்.ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்.திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
காலா பாணி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கும், யாத்வஷேம் நாவலை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது பெற்றிருக்கும் கே. நல்லதம்பிக்கும், (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
பெருமாள் முருகனின் பூநாச்சி நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது பெற்றிருக்கும் என். கல்யாணராமனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும். (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
மார்கழிக் குளிரில் டிசம்பர் ஜொலிக்க #christmas கொண்டாட்டத்தில் மனம் மின்னும் சகோதர சகோதரிகளுக்கு என் விழாக்கால வாழ்த்து சேர்க. வாழிய பாரத மணித்திரு நாடு!
-
Kamal Haasan
@ikamalhaasan
Walking to connect the legacy of our glorious past with our bright future @RahulGandhi @maiamofficial #bharatjodoyatra #makkalneedhimaiam
Kamal Haasan
@ikamalhaasan
நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன் @RahulGandhi @maiamofficial #bharatjodoyatra #makkalneedhimaiam
-
Kamal Haasan
@ikamalhaasan
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! #bharatjodoyatra
-
Kamal Haasan
@ikamalhaasan
பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளைப் பிரச்சாரம் செய்ததோடு, சமச்சமூகத்தில் பொன்னுலகம் உண்டு என்ற நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவுநாளில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பஞ்சதந்திரம் படத்தில் நீங்கள் பார்த்த கைகல சத்திய நாராயணா அவர்கள், 63 ஆண்டுகளாக சினிமாவைப் பிரியாதவர்.பல விதமான பாத்திரங்களை நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர். காலம் ஆகியிருக்கிறார். அவருக்கென் மனப்பூர்வ அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
For any democracy to thrive it is imperative for its citizens to participate in it. This is just such a moment for our country. I urge all citizens of the country to prevent the draconian attack on RTI Act via the Data Protection Bill. (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
Today is the last day for giving your feedback. I'm attaching my letter and the link where you can submit your opinion for your perusal. I urge all Indians to come together and save our democracy. #saverti
innovateindia.mygov.in/digital-data-protection/
(2/2) -
Kamal Haasan
@ikamalhaasan
I've written to Shri @AshwiniVaishnaw , IT Minister about the DPDPB, 2022 which has a draconian impact on the RTI Act converting it into Right to Deny Information Act! I'm forced to publically address the minister as the feedback process has been arbitrarily made secretive.(1/2)
Kamal Haasan
@ikamalhaasan
Sir, the Draft bill is only available online in English and hence prevents millions of Indians to give their feedback. I urge you to extend the deadline for submission of feedback and prevent this dilution of the Right to Information Act. @AshwiniVaishnaw #saverti (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
I salute the brave soldiers of Indian Army braving against odds in the freezing cold, giving a chilling reply to the uninvited guests. Wishing a speedy recovery to our injured soldiers. Jai Hind. @adgpi
-
Kamal Haasan
@ikamalhaasan
அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஆசிரியர் டொமினிக் லேப்பியருக்கு என் அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
கிடைக்கவிருக்கும் சுதந்திரத்திற்கு முன்கூட்டியே பள்ளு பாடிய தீர்க்கதரிசிக் கவிஞன் பாரதி.சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியா குறித்தும் கனவுகள் கண்டவன். அக்கனவுகள் நிறைவேற உழைப்போம் எனும் உறுதியை பாரதி பிறந்த நாளில் ஏற்போம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அருணாச்சலத்தின் வரவு நல்வரவாகட்டும்! மக்கள் நலனை முன்னிறுத்தி மாற்றத்திற்காக உழையுங்கள். @maiamofficial
#makkalneedhimaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
@maiamofficial
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிறுவனப் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் நமது தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களை நேரில் சந்தித்து இன்று நமது கட்சியில் மீண்டும் இணைந்தார்.
அவரை மனதார வாழ்த்தி வரவேற்போம்.
#makkalneedhimaiam #kamalhaasan #mnmtweets -
Kamal Haasan
@ikamalhaasan
Hearty Wishes on your birthday, Soniaji!! You have carried forward a great Nehru-Gandhi legacy to the next generation with aplomb!!
Many healthy years ahead!! -
Kamal Haasan
@ikamalhaasan
Congratulations to Hon. Prime Minister of India @narendramodi on assuming leadership of the #g20 high table.
This is a momentous occasion for our whole nation — “ JAI HIND” -
Kamal Haasan
@ikamalhaasan
நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே சிறப்பு. ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையுடையதே இந்தியா என்னும் சிந்தனையை விதைத்த பெருந்தகைமையாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரது லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம்.
-
Kamal Haasan
@ikamalhaasan
பல வெற்றிப்படங்களைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைந்துவிட்டார். அன்பே சிவம் நாட்களை நினைத்துக்கொள்கிறேன். அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
தடகள வீராங்கனை ’பையோளி எக்ஸ்ப்ரஸ்’ பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் அசோஸியேஷன் தலைவராக, முதல் பெண்ணாகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது பரந்த அனுபவம், வரவிருக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பல பொற்பதக்கங்களை ஈட்டித் தரும். வாழ்த்துகிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Among the great directors I have worked with Singeetham Srinivasa Rao is the youngest till date.Our endeavour called Pushpak is now older than us it is 35 years old.Sir we have to keep our art young can't allow it to age.I know you would chuckle,it is one of my favourite music.
-
Kamal Haasan
@ikamalhaasan
என்னுடைய இயக்குனர்களிலேயே இளமையானவர் சிங்கீதம் சீனிவாசராவ்தான். நாங்கள் உருவாக்கிய ‘புஷ்பக்’ இப்போது எங்களை விட மூத்துவிட்டது. அதற்கு 35 வயதாகிறது. (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
“சிங்கீதம் சார்...நாம் நமது கலையை மூப்படைய விடாதிருப்போம் சார்...” இதற்கும் நீங்கள் களுக்கென்று சிரிப்பீர்கள். அந்தச்சிரிப்புதான் இன்றும் எனக்குப் பிரியமான இசை. (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், @RedGiantMovies_ நிறுவனத்தின் தலைவரும், எங்கள் @RKFI நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
மேடையில் தொடங்கி,திரையில் தன் நடிப்புக் கலையை நிலைநிறுத்தியவர் விக்ரம் கோகலே. ஆளவந்தான்,ஹேராம் சந்தர்ப்பங்களில் அவரது திறனை ரசித்திருக்கிறேன்.உடல்நலிவால் மருத்துவமனைக்குச் சென்ற இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அவரது படம் வெளியாகும் அளவு நடிப்பை நேசித்தவர்.அவருக்கு என் அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
முதுபெரும் தமிழறிஞரும், தமிழாசிரியச் சேவையின் பல்வேறு நிலைகளில் இடையறாது பணியாற்றியவரும், எண்ணற்கரிய தமிழ் மாணாக்கர்களையும் முனைவர்களையும் உருவாக்கியவருமான பெரும்பேராசிரியர் ஔவை நடராசனாருக்கு என் துயர் தோய்ந்த இரங்கல்.
-
Kamal Haasan
@ikamalhaasan
ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும்கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.
-
Kamal Haasan
@ikamalhaasan
An icon of Telugu cinema Krishna gaaru is no more, an era ends with his demise. I wish to share the grief of brother @urstrulyMahesh who has to bear this third emotional trauma of losing a mother, brother and now his father. My deepest condolence dear Mahesh gaaru.
-
Kamal Haasan
@ikamalhaasan
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி @urstrulyMahesh துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருந்தால் அறுவர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும். (1/2)
Kamal Haasan
@ikamalhaasan
மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
Here we go again! #kh234
பயணத்தின் அடுத்த கட்டம்!
#maniratnam @Udhaystalin @arrahman #mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM -
Kamal Haasan
@ikamalhaasan
#100daysofvikram #vikramroaringsuccess
-
Kamal Haasan
@ikamalhaasan
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Glad my brother @Suriya_offl treads the ground of stars. In spite of gravity, which makes wings weak. We created angels and stars. Hence be proud brother to join the crowd of excellence.
-
Kamal Haasan
@ikamalhaasan
Styled by @amritharam2
HMU @MammooAltaf -
Kamal Haasan
@ikamalhaasan
Dear @Suriya_offl Thambi,
This was long overdue you know it. Love, you already had. Now increase that demography. All the very best for you my thambi , sorry Thambi Sir. 🙂🤗
Suriya Sivakumar
@Suriya_offl
Dearest @ikamalhaasan Anna எப்படி சொல்றது…!?
This is a dream come true to be on screen with you..!
Thank you for making this happen! @Dir_Lokesh Overwhelmed to see all the love!! #rolex #vikram -
Kamal Haasan
@ikamalhaasan
Thank you @RathnaveluDop. Keep your cylinders filled. We will soon do a movie together as planned.
Rathnavelu ISC
@RathnaveluDop
@ikamalhaasan sir fires all cylinders in a new Avatar #vikram🔥 Mindblowing new age action from @Dir_Lokesh 🔥@ikamalhaasan #fahadhfaasil @VijaySethuOffl @Suriya_offl at their best ! Kickass music @anirudhofficial @girishganges 🔥@anbariv 🔥@RKFI
-
Kamal Haasan
@ikamalhaasan
RED ALERT IN BLACK AND WHITE!!
In a custom made @MMalhotraworld for #vikramhitlist promotions #dubai
Styling @amritharam2
👟 @BALENCIAGA #space collection
📸 @kiransaphoto -
Kamal Haasan
@ikamalhaasan
All the while I was thinking about what a great lineage you belong to. From your great grandfather to YOU, what abundant talents and achievements in one family. You are truly living up to your family standards of excellence. More power to you my young friend.
Anirudh Ravichander
@anirudhofficial
Ulaganayagan @ikamalhaasan sir writes and sings #pathalapathala 🥳🥳🥳 What a session! Thank you sir 😃😃😃
#vikram first single from May 11th day after 🥁🥁🥁
@Dir_Lokesh ❤️❤️❤️ @RKFI -
Kamal Haasan
@ikamalhaasan
I am waiting with bated breath for our "Vikram" to release world over, in theatres on June 3rd 2022.
#vikramfromjune3
நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்.
youtu.be/jJf35tEkW9E -
Kamal Haasan
@ikamalhaasan
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Our weavers chance to loom large. Dear West, follow the thread it will reach you to our history. Bravo khaddar says KHHK !!
youtu.be/eWxkcprP0gU
#khhouseofkhaddar #bravokhaddarThis media couldn't be displayed. See it on the original post.
Kamal Haasan
@ikamalhaasan
@kh_khaddar @amritharam2 @nickspirations1 @deepikalogan #janaiyer Director & Photography #dap @RathnaveluDop
-
Kamal Haasan
@ikamalhaasan
Thank you @Nawazuddin_S ji.
Nawazuddin Siddiqui
@Nawazuddin_S
Happiest Birthday to the most experimental, the most daring and the Best Actor of Indian Cinema @ikamalhaasan Ji 💫
-
Kamal Haasan
@ikamalhaasan
#jaibhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Right from my childhood as a film fan and a patriot's son I resented the way Indian army was depicted in some of our Cinemas. Shershaah is that exception that makes my chest swell with pride for my soldiers.(1/2)
Kamal Haasan
@ikamalhaasan
Thanks @DharmaMovies for promoting a talented director like @vishnu_dir. Congrats @SidMalhotra and @advani_kiara , excellent work. (2/2)
-
Kamal Haasan
@ikamalhaasan
மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுடன் உரையாடினேன். தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க இந்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.
-
Kamal Haasan
@ikamalhaasan
திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Day one of VIKRAM. Felt like a High school reunion.
In the past 50 years this is the longest I have been away from film shootings. Many film makers have not seen action for nearly a year. (1/2)
youtu.be/abR1FGL2kGc -
Kamal Haasan
@ikamalhaasan
“Only valour should wear the crown “
I dare again to render before you the best of our talents.
Like before, grant us victory!!
Vikram ....விக்ரம்
#arambichitom @RKFI
@Dir_Lokesh @VijaySethuOffl #fahadfaasil @anirudhofficial -
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
Violence can never be the final solution to human disagreements. Ironic that the island that spawned the word serendipity is not able to find it. My deepest sympathies to those affected by the bombs in Srilanka. The government should be impartial and swift in rendering Justice.
-
Kamal Haasan
@ikamalhaasan
என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.
-
Kamal Haasan
@ikamalhaasan
Sarkar has been certified by CBFC. Yet Government dares to muffle the right of people to express. This is not democracy. Fascism was defeated before, will be done again. @ARMurugadoss
-
Kamal Haasan
@ikamalhaasan
#thugsofhindostan படத்தின் தமிழ் டிரைலர் உங்களுக்காக.....
youtu.be/unWwv107AlE
படத்தில் நடித்துள்ள திரு. @SrBachchan அவர்களுக்கும் , நண்பர் திரு. @aamir_khan அவர்களுக்கும்,
படக்குழுவினர் @yrf @TOHTheFilm #katrinakaif @fattysanashaikh அனைவருக்கும் வாழ்த்துக்கள். -
Kamal Haasan
@ikamalhaasan
-
Kamal Haasan
@ikamalhaasan
Have witnessed Sridevi's life from an adolescent teenager to the magnificeint lady she became. Her stardom was well deserved. Many happy moments with her flash through my mind including the last time I met her. Sadma's lullaby haunts me now. We'll miss her
-
Kamal Haasan
@ikamalhaasan
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக
-
Kamal Haasan
@ikamalhaasan
It is 12th morning here in US Many more happy returns of the day brother Rajini. Am here for VR2 final mix. All the best in everything you want to do
Yours
Kamal -
Kamal Haasan
@ikamalhaasan
Mersal was certified. Dont re-censor it . Counter criticism with logical response. Dont silence critics. India will shine when it speaks.




















































































































































































































































































































































































































































































































































































