இயற்கை தரும் பெரும் சவால்களை எதிர்கொண்டு, தங்களின் கடின உழைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உணவுப் பாதுகாப்பிற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலையும் கரையையும் மட்டுமே நம்பியிருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், உரிமைகள் உறுதி செய்யப்படவும், கடலில் பாதுகாப்பான மீன்பிடிச் சூழல் உருவாகவும், மீனவ சமுதாயக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
T. T. V. Dhinakaran
Thiruthuraipoondi Thiruvenkatam Vivekananda Dhinakaran (born 13 December 1963) is an Indian politician who popularly known as TTV is founding General Secretary of Amma Makkal Munnettra Kazagam. His cadres revered him as Makkal Selvar. In the past he was the Treasurer of the All India Anna Dravida Munnetra Kazhagam Party and served as the Member of Lok Sabha and Rajya Sabha. He was expelled from the AIADMK in August 2017. He also served as former Member of the 15th Tamil Nadu Assembly from Dr. Radhakrishnan Nagar (2017-2021). His aunt is V. K. Sasikala. He won the highly anticipated RK Nagar by-election in December 2017. On 15 March 2018 Dhinakaran launched his political party named Amma Makkal Munnettra Kazagam. More on Wikipedia
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா? Guidance TN அமைப்பில் என்ன நடக்கிறது? ஆந்திர அரசின் மீது 'ரீல்ஸ்' அமைச்சருக்கு விசுவாசம் என தமிழகத் தொழில்துறை மீது எழும் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் கலைப்பாரா முதலமைச்சர்?
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டுவருவதற்காகவும், முதலீட்டாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதற்காகவும் உருவாக்கப்பட்ட Guidance TN அமைப்பின் செயல்பாடுகள் குறித்துத் தற்போது வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்களின் ரகசியத் தகவல்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டதாகவும், இதனால் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணிச்சூழல் மோசமடைந்ததால் தாங்களாகவே பணியிலிருந்து விலகியதாகச் சம்பந்தப்பட்ட முன்னாள் ஊழியர்கள் தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கத் தவறிய தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குக் காரணம் தேடுவதற்காக வழிகாட்டி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயல்கிறதா? முதலீடுகளை ஈர்க்க வேண்டிய அரசே, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவிட்டு, தனது தோல்வியை மறைப்பதற்காகப் பிறர் மீது பழிபோடுகிறதா என்ற கேள்வி எழுவதோடு தற்போதைய தொழில்துறை அமைச்சர் கடந்த காலங்களில் ஆந்திர மாநில முதலமைச்சருக்காகத் தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுவதும், பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எழுப்புகிறது.
புதிய முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்கவோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், ரீல்ஸ்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றும் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறது. அந்த முதலீடுகள் எவை, அவற்றில் எத்தனை திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, நிர்வாக அலட்சியம் எனத் தொழில் தொடங்குவதற்குப் பாதகமான சூழலை உருவாக்கிவிட்டு, விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் தவெக அரசின் அணுகுமுறை தமிழகத்தின் தொழில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனையே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர முதலமைச்சர், “நீங்கள் மசாலாவை எதிர்பார்க்கிறீர்கள்; நாங்கள் ஆந்திராவின் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டிருப்பது, தற்போது கவனம் பெறுகிறது.
எனவே, Guidance TN அமைப்பில் பணியாற்றிய 15 ஊழியர்கள் தொடர்பான சர்ச்சையின் உண்மைத்தன்மை என்ன? அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்களா அல்லது தாங்களாகவே பணியிலிருந்து விலகினார்களா? தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் பிற மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டனவா? அவ்வாறு நடைபெற்றிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழலை மீட்டெடுக்கவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பன உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் வெளிப்படையான பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை காப்பாற்றுவதுதான் தவெக அரசின் கொள்கையா? - காவல்துறைக்குச் சுதந்திரம் அளித்துள்ளதாக முழங்கும் அமைச்சர்கள், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன்?
மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் மீது புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் புகாரைப் பெற காவல்துறையினர் மறுப்பதாகக் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை விசாரிப்பதற்கு முன்பே புகாரைப் பெற மறுப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய காவல்துறையே அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதும் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், சிறைக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் எனத் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளும் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றைச் சீரமைத்து மேம்படுத்த வேண்டிய அமைச்சரோ, காவல் நிலையத்திற்குள்ளேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குச் சென்று காவலர்களை மிரட்டி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து ரீல்ஸ் வெளியிடுவது; எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி அதிகாலை நேரத்தில் பொருளாதார வல்லுநர்களைக் கைது செய்யுமாறு காவலர்களை ஏவிவிடுவது; பாதிக்கப்பட்டவர்களின் புகாரைக்கூடப் பெறக்கூடாது எனக் காவல்துறையினரை மிரட்டுவது என அமைச்சர்களின் இத்தகைய அடாவடித்தனமான செயல்பாடுகளை பார்க்கும்போது, காவல்துறை உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுடன், இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்படும் மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், குற்றங்களைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களையே அமைச்சர்கள் தங்களது அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தடுக்க முடியாத முதலமைச்சரின் நிர்வாகத் தோல்வியால், ஒட்டுமொத்தத் தமிழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு அசாதாரணமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக மேடைகளிலும் மைக் முன்னாலும் நீட்டி முழங்கும் தவெக அமைச்சர்கள், உண்மையில் காவல்துறையைத் தங்களது அரசியல் ஆதாயங்களுக்கான கைப்பாவையாக மாற்றி வைத்திருப்பதே அம்பலமாகியுள்ளதொடு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடாமல் காவல்துறையினருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கும் அமைச்சர்களின் இரட்டை வேடம், அவர்களின் போலி நேர்மையையும் பசப்பு வார்த்தைகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளது!
எனவே, காவல்துறை என்பது அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இயங்கும் அரசியல் கருவி அல்ல; அது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய மிக முக்கியமான அரசியலமைப்பு அமைப்பு என்பதை உணர்ந்து காவல்துறையினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையில் முழுமையான சுதந்திரத்துடனும் நேர்மையுடனும் செயல்படுவதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முதல்வர் மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு - மருத்துவத்துறையில் நிலவும் பிரச்சனையை தீர்க்க கவனம் செலுத்தாமல் TASMAC கிடங்குகளைச் சீரமைப்பதில் தனிக் கவனம் செலுத்தும் தவெக அரசு – "வீடு தீப்பிடித்து எரியும்போது, கிணறு வெட்டப் போனானாம்" என்பதையே நினைவுபடுத்துகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கானஉயிர் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
உயிர்காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்படவில்லை, உரிய கொள்முதல் ஆணைகள் வழங்கப்படவில்லை, தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என முதல்வர் மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கும் பல்வேறு காரணங்களால், மருந்துகளை வாங்க வரும் பொதுமக்களும் நோயாளிகளும் கடந்த சில மாதங்களாக ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டால், தனியார் மருந்தகங்களில் கூடுதல் விலை கொடுத்து மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ள நிலையில் போதிய அளவில் மருந்துகள் இருப்பில் இல்லாததால் விற்பனை பாதிப்பு, வருவாய் இழப்பு என முதல்வர் மருந்தக உரிமையாளர்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மக்களுக்குத் தேவையான மருந்துகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மருத்துவத்துறை அமைச்சர் அவர்கள், முதல்வர் மருந்தகங்களில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைப் போக்குவதில் உரிய கவனம் செலுத்தாமல், டாஸ்மாக் மதுபானக் கிடங்குகளைச் சீரமைப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதோடு, அத்தகைய பணிகளை நியாயப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.
"வீடு தீப்பிடித்து எரியும்போது, கிணறு வெட்டப் போனானாம்" என்ற பழமொழிக்கேற்ப, நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் அவசரமான சூழலில்கூட, அதனைச் சரிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்காமல் டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதில் கவனம் செலுத்துவது தவெக அரசின் நிர்வாக அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது.
எனவே, மருந்துகள் என்பவை வெறும் விற்பனைப் பொருட்கள் அல்ல; அவை நோயாளிகளின் உயிரோடும், அன்றாட வாழ்க்கையோடும் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்கள் என்பதை உணர்ந்து, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து முதல்வர் மருந்தகங்களிலும் நோயாளிகளுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதையும், போதிய அளவில் இருப்பு வைக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும் என மருத்துவத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
திரு.வி.எஸ். பாபு அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
போதைப்பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவினரே அடுத்தடுத்து பறிமுதல் செய்யும் நிலையில், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது? “வெறும் வாயில் வடை சுடுவதையும், விளம்பர வெறியில் ரீல்ஸ் வெளியிடுவதையும்” நிறுத்திவிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்!
சென்னை மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான கொடிய வகை ஹெராயின் போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்து, அது தொடர்பாக இருவரைக் கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை இதே மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது தலைநகர் சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அடுத்தடுத்து பறிமுதல் செய்து வரும் நிலையில், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றபோது கையெழுத்திட்ட திட்டத்தின்படி அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடங்கி நாகப்பட்டினம் வரை போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பதுக்கலையும் கண்காணித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர்தான் அவற்றைப் பறிமுதல் செய்கிறார்கள் என்றால், 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 54 கோடி ரூபாய் செலவில் தலைமை அலுவலகம், 65 காவல் ஆய்வாளர்கள், 130 காவல் உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் எனப் பெரும் படையையே உருவாக்கியிருப்பதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எதற்காக அமைக்கப்பட்டது? மக்கள் வரிப்பணத்தில் இத்தனை கோடி ரூபாய் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவின் செயல்பாடுதான் என்ன? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.
போதை மாத்திரைகள், ஊசிகள், சாக்லெட்டுகள் எனப் பல்வேறு வடிவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பட்டதாரி இளைஞர்கள் வரை பலரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் இத்தகைய போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ள வக்கற்ற தவெக அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையையும், சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அடாவடித்தனங்களையும் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதும் செய்தி ஆசிரியர்களை, ‘Virtual Warriors’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கட்சியினரை ஏவிவிட்டு Abuse செய்து கொண்டிருப்பது கேவலமான செயலாகும்.
எனவே, போதை ஒழிப்புப் பேரணிகள் நடத்துவது, சாலையெங்கும் விழிப்புணர்வுப் பதாகைகளை வைப்பது போன்ற வெறும் வாயில் வடை சுடும் விளம்பர நடவடிக்கைகளால் போதைப்பொருட்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையே சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், கடத்தலையும், பதுக்கலையும் வேரோடு ஒழிக்க, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எல்லை மீறும் தவெக நிர்வாகிகளின் தற்குறித்தனம் – Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, எந்தவொரு அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதனை ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் ரீல்ஸ் வெறி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறப்பதற்கும், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு என்ற பெயரில் அங்குப் பணியிலிருந்த காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார்?
நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ் என ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்திலிருக்கும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட தவெகவில் உள்ள நிர்வாகிகளின் இதுபோன்ற செயல்பாடுகள், ரீல்ஸ் மோகம் அக்கட்சியினரின் ரத்தத்திலேயே எந்த அளவிற்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் வரை அதிகார வரம்பை மீறிப் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறிய அக்கட்சித் தலைமையின் அலட்சியத்தால் தான் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி, தண்ணீரைத் திறந்துவிடும் அளவிற்கான பொறுப்பற்ற செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.
எனவே, அரசு நிர்வாகம் என்பது அவரவர் நினைத்ததைச் செய்யும் சினிமா படப்பிடிப்புத் தளமல்ல என்பதையும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சமூக வலைதளங்களில் புகழ் தேடுவதற்கான மேடைகள் அல்ல என்பதையும் உணர்ந்து, இதுபோன்ற தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகச் சவால்விட்டு, இந்திய மண்ணில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி கப்பலை இயக்கிய விடுதலைப் போராட்ட வீரரும், சிறைத் துயரங்களையும் கொடுமைகளையும் அனுபவித்தபோதும் சுதந்திர வேட்கையைத் துறக்காத தியாகச் செம்மலுமான கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம் இன்று!
தனது சொத்துக்களையும், சுகபோக வாழ்க்கையையும் இழந்து, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்த செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் ஒப்பற்ற வீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் எஎந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசுப் பணியிடங்களை ஒழித்துவிட்டு ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு ஆட்சி நடத்துவதுதான் தவெக அரசின் நிர்வாகக் கொள்கையா? வனவிலங்குகளின் பாதுகாப்பிலும் இந்தத் தனியார்மய அணுகுமுறையைத் திணிப்பதா? – முதுமலை புலிகள் காப்பகத்தில் அவுட்சோர்சிங் பணியாளர் நியமன முயற்சியை உடனே கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டின் மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்றான முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை கோட்டத்தில், வரும் டிசம்பர் மாதம் முதல் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகளை வனத்துறை அறிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குதல், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற வாக்குறுதிகளை ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்தும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தவெக அரசு, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றின் வரிசையில் தற்போது வனத் துறையிலும் தனியார்மயத்தைப் புகுத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம் என்ற நோக்கில் அரசுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள தவெக அரசு, நாட்டின் இயற்கை வளங்களையும், வனவிலங்குகளின் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது .
புலிகள் உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளைப் பாதுகாத்தல், வேட்டையாடுதலைத் தடுத்தல், வனப்பகுதிகளைக் கண்காணித்தல், வனவிலங்கு - மனித மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட மிகுந்த பொறுப்பும், நிபுணத்துவமும் தேவைப்படும் பணிகளில், உரிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், வனவிலங்குகளின் உயிருக்கும், வனப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, ஒட்டுமொத்த முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என வன ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, முதுமலை புலிகள் காப்பகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு வனவிலங்குகள் பாதுகாப்பு, வேட்டையாடுதல் தடுப்பு மற்றும் வனப்பகுதிகளைக் கண்காணித்தல் போன்ற முக்கியப் பணிகளில் உரிய அனுபவமும், முறையான பயிற்சியும் பெற்ற தகுதியான பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை TNPSC மூலமாக மேற்கொள்ள வேண்டும் என வனத் துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
டாஸ்மாக்கின் மேம்பாட்டிற்கு மருத்துவத்துறையின் நிதியை பயன்படுத்துவதா? - நோயாளிகளுக்கான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தத் துப்பில்லாத தவெக அரசு, டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதில் மட்டும் இத்தனை அக்கறை காட்டுவது ஏன்?
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்துவரும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (TNMSC) மூலம், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்வது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது, மருந்துகளின் இருப்பைக் கண்காணிப்பது, உரிய நேரத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட மருத்துவப் பணிகள் கழகம், தற்போது டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை அமைப்பது, மழைநீர் கசிவைச் சரிசெய்வது போன்ற பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்துக் கொண்டிருப்பது, மக்கள் நலனைவிட டாஸ்மாக் விற்பனைக்கான கட்டமைப்பைப் பராமரிப்பதற்கே தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு, குடிநீர் முதல் கழிவறை வரையிலான அடிப்படை வசதிகளைக்கூடப் பெற முடியாத அவலநிலை என அரசு மருத்துவமனைகளின் தரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவே நோயாளிகளும் பொதுமக்களும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்து, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பையும் மருத்துவச் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், படிப்படியாக குறைக்கப்படவேண்டிய டாஸ்மாக்கை மேலும் மேம்படுத்தும் விதமாக அதன் கிடங்குகளுக்கான பராமரிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் பதவி வகிப்பது மருத்துவத்துறைக்கா அல்லது டாஸ்மாக் துறைக்கா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, மருத்துவத்துறைக்கென உருவாக்கப்பட்ட மருத்துவப் பணிகள் கழகம் போன்ற நிறுவனங்களின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகையில், டாஸ்மாக் உள்ளிட்ட பிற துறைகள் சார்ந்த பணிகளை அவற்றின் மூலம் மேற்கொள்ளச் செய்யும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட்டு, மருத்துவப் பணிகள் கழகம் தனது அடிப்படைப் பொறுப்புகளான மருந்துக் கொள்முதல், தரப் பரிசோதனை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் முழுமையான கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu @arunraajkg -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக, கடவுளுக்கு இணையாக முதலமைச்சரையும் அறநிலையத்துறை அமைச்சரையும் துதி பாடிய வர்ணனையாளர்கள் – உணர்வுபூர்வமான இந்நிகழ்வில் பக்தர்களின் மனதை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் திரு. குப்புசாமி மற்றும் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான திரு. வேல்முருகன் ஆகியோரின் செயல் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றிப் பாட வேண்டிய புனிதமான இடத்தில், தங்களுக்குப் பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, கடவுளுக்கு இணையாகத் தமிழக முதலமைச்சரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முருகப்பெருமானின் புனிதத்தையும், லட்சக்கணக்கான பக்தர்களின் இறைநம்பிக்கையையும் பலிகொடுப்பதா?
சாதி, மதம், அரசியல் கட்சி, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தையும் கடந்து நடைபெறும் புனிதமான நிகழ்வைத் தனிநபர் புகழ்ச்சிக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தியிருப்பது, தாங்கள் படும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட வந்திருந்த பக்தர்களின் நம்பிக்கையை ஏளனப்படுத்தி, அவர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, திருக்கோயில்களின் ஆன்மிகப் புனிதத்தையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்கத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும், சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற புனிதமான நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த தனிநபர் புகழ்ச்சிகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முதுமலை வனப்பகுதியில் புலியையே விரட்டிச் சென்றதா சிறுத்தை? – சமூகநீதிப் போராளிகளையும் விட்டுவைக்காத தற்குறிகளின் Reels மோகம்!
முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் திரு. வன்னியரசு அவர்களின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள், வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப்பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @thirumaofficial @VanniTamizhVCK -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கி, உண்மையின் குரலாக ஒலித்து, நாட்டு மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உடனுக்குடன் உலகறியச் செய்யும் உன்னதமான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அடிபணியாமல், உண்மையையும் நேர்மையையும் மட்டுமே தங்களின் அடையாளமாகக் கொண்டு களத்தில் நிற்கும் ஒவ்வொரு பத்திரிகையாளரின் மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியையும், அர்ப்பணிப்பு உணர்வையும் இந்நாளில் போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேகதாது விவகாரத்தில் முதலமைச்சரின் நீலிக்கண்ணீர் வடிக்கும் நாடகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்காது – காங்கிரஸ் உடனான கூட்டணியா அல்லது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமா என்பதை நாளை புதுடெல்லி செல்லும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் முடிவெடுக்க வேண்டும்!
"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்"
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவலனாக விளங்க வேண்டிய முதலமைச்சர் தனது ஆட்சி அதிகாரத்திற்காக சுயநலத்தோடு தன் கடமையிலிருந்து தவறி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்து வருவதே, கர்நாடக முதல்வர் திரு. சிவகுமார் அவர்கள் மேகதாது விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு அத்திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக முதலமைச்சர் பேசியிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, கடுமையான கண்டனத்திற்கும் உரியதாகும்.
காவிரி விவகாரத்தில் கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும், மேகதாது அணையைக் கட்டி காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தே தீருவோம் என்ற கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களின் பேச்சு ஆணவத்தின் உச்சம்.
மத்திய ஜல்சக்தி அமைச்சரைச் சந்திப்பது, மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்திற்கு வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுப்பது, அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனச் சவால்விடுவது என அடுத்தடுத்து அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களைக் குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட முடியாத அளவிற்கான ஒரு முதலமைச்சர் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பது சாபக்கேடு.
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையில் சட்டத்திற்குப் புறம்பாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில முதலமைச்சரின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான துணிவோ, திராணியோ இல்லாத தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள், "செங்கல்லை வைக்க விட மாட்டோம்; சிமெண்ட் பூச முடியாது" என வீர வசனம் பேசிக் கொண்டிருப்பது அரசியலின் அக்மார்க் கோமாளித்தனமாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களிடம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது அணை விவகாரம் குறித்து விரிவாகப் பேசுவார் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இவ்வளவு முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்கக் கிடைத்த வாய்ப்பைக்கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல், Reels content-க்காக விருந்து, Café எனப் பொழுதைக் கழித்து வீணடித்துவிட்டு, தற்போது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு மேகதாது அணைக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கடிதம் எழுதி நீலிக்கண்ணீர் வடிப்பது எந்த வகையில் நியாயம்?
எனவே, நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்காக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த முறையாவது காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாகக் கர்நாடக முதலமைச்சருக்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுத்து, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பையும் தனது ஆட்சி அதிகாரத்திற்காகத் தவறவிடுவாரேயானால், அது தமிழக விவசாயிகளுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகவே அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக ஆட்சியில் மேலும் ஒரு காவல் மரணம் – காவல் நிலையங்களே மரணக் கூடங்களாக மாறுகின்றனவா? அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு யார் பொறுப்பு?
மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய ஆறு-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களின் தொடர்ச்சியாகவே இச்சம்பவமும் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள், இம்மரணம் குறித்த உண்மை நிலையை விளக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள தவெக அரசின் ஏவல் துறையாகக் காவல்துறை மாறியுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய இம்மரணம் குறித்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியிருப்பதும், செக்கானூரணி காவல் நிலையக் காவல் ஆய்வாளரைப் பணியிடைநீக்கம் செய்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொதுமக்களை அவமதிக்கும் வகையில் பேசுவது, தரக்குறைவாக நடத்துவது, மிரட்டி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுமாறு அச்சுறுத்துவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது எனத் தங்களுக்கான பொறுப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் மறந்து, அரக்கத்தனமாகச் செயல்படும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்தக் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, செக்கானூரணி காவல் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடைபெற்றுள்ள மரணம் குறித்து விரிவான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வருவதோடு, புகார் அளிக்க வருபவர்களாக இருந்தாலும், விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களாக இருந்தாலும், அனைவரையும் மனித மாண்புடன் நடத்த வேண்டும் எனத் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம் – ஆறு மாத கால தவெக ஆட்சியின் ஆகப் பெரும் சாதனை இதுதானா? இந்த லட்சணத்தில், வளமிக்க தமிழகத்தை உருவாக்குவோம் என முதலமைச்சர் அறைகூவல் விடுப்பது வேடிக்கையானது!
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்"
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஆறு மாத காலத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைப் பலமுறை அமமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சுட்டிக்காட்டியபோதெல்லாம் அதனை ஏற்க மறுத்து, செயற்கையான விலை உயர்வு, மற்ற மாநிலங்களில் மட்டும் விலைவாசி குறைவா?, Social Status, மேற்காசிய நாடுகளின் போர், பருவமழை (Monsoon), ரூபாயின் மதிப்பு எனப் பொருளாதார நிபுணர்களைப் போலப் பல்வேறு காரணங்களைக் கூறி மழுப்பி வந்த தவெக அமைச்சர்கள், விலைவாசி உயர்வைக் கண்காணித்து உரிய நேரத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதன் விளைவாக, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 7.29 சதவிகிதமாக சில்லறை பணவீக்கம் உயர்ந்து, இந்தியாவிலேயே விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு, உண்மை நிலவரத்தை மூடி மறைப்பதிலேயே முனைப்பு காட்டிய தவெக அரசு, தற்போது அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்; பதுக்கலைத் தடுத்திருக்கிறோம் எனப் பெருமை பேசுவது, "உயிரோடு இருக்கும்போது உதவ மறுத்துவிட்டு, இறந்த பிறகு ஒப்பாரி வைப்பதைப் போல" உள்ளது.
நியாயவிலைக் கடைகளில் அமைச்சர்கள் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே தீர்ந்துபோன வெங்காய விற்பனை; கிலோ 30 ரூபாய்க்குத் தரமான சன்னரக அரிசி என்ற பெயரில், ரேஷன் அரிசியையே மீண்டும் பாலிஷ் செய்து வழங்கிய ஏமாற்று வேலை என, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் தங்களது நிர்வாகத் திறமையின்மையை ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்தி, தினந்தோறும் மக்களை ஏமாற்றி, இந்தியாவிலேயே விலைவாசி உயர்வில் தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு சென்றுள்ள இந்த அவலநிலைக்குத் தற்குறித்தனங்கள் நிறைந்த தவெக ஆட்சியே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
வேலையில்ல திண்டாட்டம், அண்டை மாநிலங்களை நாடி செல்லும் தொழில் நிறுவனங்கள், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ஒற்றை இலக்க சதவீதத்தில் இருக்கும் GST வரி வருவாய், மின் தட்டுப்பட்டால் முடங்கியுள்ள தொழில் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என கடந்த ஆறு மாத கால தவெக ஆட்சியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தை தனது திறனற்ற நிர்வாகத்தால் அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டு "வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்" என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எந்த நம்பிக்கையில் அறைகூவல் விடுகிறார்.
எனவே, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை என்றும், அவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை என்றும் Paid Virtual Warriors மூலமாகச் சமூக வலைதளங்களில் பொய்ப் பிரசாரம் செய்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அன்பின் மொழியால், மலரும் புன்னகையால் உலகை அழகாக்கும் குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வறுமை, பாகுபாடு, குழந்தைத் தொழிலாளர் முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அச்சுறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைப்பதை உறுதிசெய்ய இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
"தவெகவும் பாலியல் குற்றங்களும்" என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் என்ற அளவிற்கு நாள்தோறும் நடைபெறும் பாலியல் குற்றச் சம்பவங்கள் – All Is Well முதலமைச்சர் தவெகவினரிடமிருந்து பெண்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறார்?
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தவெக மாவட்டச் செயலாளர் தங்களிடம் தகாத முறையில் பேசுவதாகக் குற்றம்சாட்டி, அவரது அலுவலகத்தின் முன்பாகவே தவெக பெண் நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு போராட்டம்; கோவை மாவட்டம், காரமடை தவெக ஒன்றிய செயலாளர், ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் அழைத்து தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் என நாள்தோறும் தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கு No Compromise என சொன்ன தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இக்குற்றச்சாடுகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா அல்லது தற்போது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தவெகவினர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு All Is Well சொல்வாரா ?
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களை மேலும் ஊக்குவிப்பது போல் நடந்துகொள்வதும், ஆளுங்கட்சி என்ற மமதையில், தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை பெண்களுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக எழும் புகார்களைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் கட்சித் தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது.
இதற்கிடையில்,
· திருப்பூர் வீரபாண்டியில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை,
· விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகைக் கொள்ளை,
· தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் நிதி 22 கோடி டிஜிட்டல் திருட்டு,
· மதுரையில் பிரபல நகைக்கடையில் 500 பவுன் நகைத் திருட்டு,
· திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை,
· நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் ஏழு வீடுகளில் கொள்ளை முயற்சி,
· காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம் 1.5 கோடி கொள்ளை,
· செஞ்சியில் மாயமான சிறுமியை ஒரு மாதம் கடந்தும் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை,
என அடுத்தடுத்து அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும், அதனை கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையின் மெத்தனப்போக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிவை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? அது முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.
எனவே, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தனது சொந்தக் கட்சியினராகவே இருந்தாலும், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றிக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதே குற்றங்களைக் குறைக்கவும், எதிர்காலத்தில் அவை நிகழாமல் தடுக்கவும் உதவும் என்பதை இனியாவது உணர்ந்து, சீர்குலைந்துள்ள தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், இத்தகைய குற்றச்சம்பவங்களுக்குக் காரணமான தவெகவினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது கொள்கைத் தலைவரின் பெயரிலான திட்டத்திற்கே நிதிஒதுக்க மறுக்கும் தவெக அரசு - தவெக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியின் பெயரில் உள்ள "சமூகநீதி" நிதர்சனத்தில் எங்கே போனது?
தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாடுகளில் கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குப் போதிய நிதியை விடுவிக்காததால், அம்மாணவர்கள் பல மாதங்களாகக் கல்விக் கட்டணம் மற்றும் வீட்டு வாடகையைக்கூடச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை உரிய காலத்தில் சமர்ப்பித்த பின்னரும், அவற்றைச் சமூகநீதித் துறை சரிபார்ப்பதில் காட்டும் அலட்சியம் காரணமாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்ற தமிழக மாணவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளைக்கூடச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, தவெக அரசு அமைந்த பிறகு, 2026–2027 ஆம் கல்வியாண்டில் அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 365 பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைத் தேர்வு செய்துவிட்டு, அவர்களில் வெறும் 65 மாணவர்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கியிருப்பது, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீதான தவெக அரசின் பாரபட்ச மனப்பான்மை நிரூபணமாகியுள்ளதாக அம்மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, மாணவர் திரு. பாரதிதாசன் அவர்களின் விவகாரத்தில், முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை சட்டமன்றத்திலேயே பேசிய அத்துறை அமைச்சர், அம்மாணவருக்கு உரிய நேரத்தில் நிதியை விடுவிக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மாணவர் திரு பாரதிதாசன் ஆதாரங்களோடு காணொளி வெளியிட்ட பின்பும், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கணத்த குரல் எழுப்பிய பின்னரே நிதியை விடுவித்த தவெக அரசு, தற்போது அதே திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் நிதியை விடுவிக்க மறுப்பதன் மூலம், அரசின் உத்தரவாதத்தை நம்பி தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள், தற்போது கூடுதல் கடன் பெற்று பணம் அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசே, இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதியை முறையாக ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவது, அம்மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் அடியோடு சிதைக்கும் செயலாகும்.
தனது அமைச்சரைவையில் பட்டியலினத்தை சார்ந்த 7 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக பெருமிதம் கொண்டு "சமூக நீதியைக் காக்க வந்த ரட்சகர்" போல தன்னை காட்டிகொள்ளும் திரு ஜோசப் விஜய் அவர்கள், அச்சமூகத்தை சார்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய இத்திட்டத்தை புறக்கணிக்க முயல்வது ஏன் ?
எனவே, அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் அலட்சியத்துடன் தட்டிக்கழிக்காமல் அம்மாணவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட அனைத்து நிதியுதவிகளையும் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக விடுவித்திட வேண்டும் என சமூகநீதித் துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
"தனக்கு என்றால் புளிப்பு, பிறருக்கு என்றால் இனிப்பு" என்ற பழமொழிக்கு ஏற்ப இரட்டை நிலைப்பாடுடன் தமிழகத்தை ஆட்டிப்படைக்க முயற்சிக்கிறாரா முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் - ஆளுங்கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரச்சாரம் என்றால் அதனை முன்னெடுத்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாயாதது ஏன் ?
மக்கள் பிரச்சினைக்காக மனு அளிக்க வந்தவரை கண்மூடித்தனமாக அடித்து விரட்டியது, அவரது குடும்பத்தையே கொன்றுவிடுவேன் என மிரட்டியது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தவெக பெண் நிர்வாகி அளித்த புகார் என ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில் அதுகுறித்து இதுவரை முறையான முதற்கட்ட விசாரணைகூட மேற்கொள்ளாமல், அவர்களுக்கும் தீபாவளி பரிசு அளித்து மகிழ்வதற்கு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் வெட்கி தலைகுனியவேண்டும்.
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என வீராப்புப் பேசிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது மட்டும் மௌனம் காப்பது "தனக்கு என்றால் புளிப்பு, பிறருக்கு என்றால் இனிப்பு" என்ற பழமொழிக்கு ஏற்ப இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுகிறாரா?
தேர்தலின்போது 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர், 'உங்கள் பையன், உங்கள் தம்பி, உங்கள் அண்ணன் இந்த விஜய் தான்' என்று மக்கள் முன் பிரச்சாரம் செய்த திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அவரது பிம்பமாக கருதப்படும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்களுக்கு மட்டும் பொறுப்பேற்க மறுப்பது ஏன்?
தனது "மைனாரிட்டி ஆட்சியைக்" காப்பாற்றிக் கொள்வதற்காக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தட்டித்தூக்கத் தெரிந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் பதவியிலிருந்து தூக்க என்ன தயக்கம் ?
'குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட சொல்லக்கூடாது' என்ற திரைப்பட வசனத்தைப் போல, பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு உள்ளானதும், அடித்ததும், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அதைப் பற்றிப் பேசக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அண்மைக்கால லட்சியமா என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தயங்குவது, ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் எத்தகைய தவறுகளைச் செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை உருவாக்குவதோடு, ஆளுங்கட்சியினரின் அதிகாரத் திமிருக்கு முதலமைச்சரே அரசியல் அங்கீகாரம் வழங்குவதாகவும் அமையும்.
அதே நேரத்தில் இந்த குற்றசாட்டுகள் சமூகவலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பொய்ப்பிரச்சாரம் என அமைச்சர் திரு.நிர்மல் குமார் சொல்வது உண்மையென்றால், முதலமைச்சரையும், அரசையும் விமர்சிப்பவர்களை காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி தேடி தேடி கைது செய்துவரும் தவெக அரசு, இந்த பொய் பிரச்சாரத்தை முன்னேடுத்தவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை ?
எனவே, பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் வெளிவந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துணை சபாநாயகர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் மீது உரிய வழக்குகளைப் பதிவு செய்து, பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்க வேண்டிய கேக்குகள் (Cakes) கேட்பாரின்றி வாகனங்களிலேயே கிடப்பதாகப் புகார் – குழந்தைகளின் உடல்நலம் சார்ந்த இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், கேக்குகளை உரிய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்!
குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காகப் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகள், வெகுதொலைவிலிருந்து கொண்டுவரப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக வாகனங்களிலேயே முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து அவ்வப்போது பல்வேறு புகார்கள் எழுந்துவரும் நிலையில், குழந்தைகள் தினத்தன்று வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகளும் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், கேக்குகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையிலும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகள் பல நாட்களாகச் சாலை மார்க்கமாகக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும், அவற்றின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி, சேமித்து வைக்கப்பட்ட விதம் மற்றும் தரம் ஆகியவற்றை முறையாகப் பரிசோதிப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் தரமற்ற அல்லது கெட்டுப்போன கேக்குகள் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, நாளை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள கேக்குகளை, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மூலம் உரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் குழந்தைகளின் உடல்நலத்துடன் தொடர்புடைய இவ்விவகாரத்தில் அலட்சியம் கொள்ளாமல் தரமான மற்றும் பாதுகாப்பான கேக்குகள் மட்டுமே மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுவதைப் பள்ளிக்கல்வித்துறையும் தவெக அரசும் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மெகா தொடர் போல நீளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை - மக்களே முன்வந்து CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா? அல்லது இது தான் தவெகவின் ஆறுமாத கால ஆட்சியின் சாதனை என பெருமையாக மார்தட்டிக் கொள்வாரா?
ஒருபுறம் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை, மறுபுறம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் காவல்துறையினரால் கைது என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை அபிராமபுரம், காசிமேடு, செம்பியம் என நேற்று மட்டும் மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தீபாவளி தினத்தன்று நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களுடன் ஒப்பிட்டு பதிலளித்த பட்டிமன்ற அமைச்சர், இடைவெளியின்றி அடுத்தடுத்த நாட்களில் அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு எந்த ஆண்டின் புள்ளி விவரங்களை தேடிக் கொண்டிருக்கிறார்?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் திரைப்படங்களின் நாள் வசூல் கணக்கை பார்ப்பது போல, ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் கொலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.
தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அதிரடி காட்டி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக "BUILD UP" செய்தி வெளியிட்ட அதே நேரத்தில் சென்னையில் ரவுடிகள் கொலை என்ற செய்தியும் இணைந்து வருவதை பார்க்கும் போது, காவல்துறை மீதான அதீத நம்பிக்கை, சட்டம் ஒழுங்கை போலவே சீர்கெட்டு போயிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
அன்றாடம் அரங்கேறும் வெட்டு குத்து, பழிக்குப் பழி, போன்ற படுகொலைச் சம்பவங்களால் ரத்தக்களறியாகவும், ரண கொடூரமான மாநிலமாகவும் தமிழகத்தை மாற்றி, பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கியது தான் தவெகவின் ஆறு மாத கால ஆட்சியின் ஒரே சாதனையாக அமைந்திருக்கிறது.
எனவே, மக்களின் பாதுகாப்பு தான் அரசின் அடிப்படை கடமை அதனை பேணி காக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதை விடுத்து வெற்று அறிக்கைகளும், செய்திக் குறிப்புகளும் வெறும் ஏட்டு சுரைக்காய் தான் என்பதை உணர்ந்து சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக ஆட்சியில் நடைபெறும் கொலைகளை பட்டியலிட்டால் இது தொன்றுதொட்டு நடைபெறும் நிகழ்வு என ஏளனம் செய்வதா ? மாற்றத்தின் நாயகர்கள் கொண்டு வந்த மாற்றம் "தங்களது இயலாமையை மறைக்க மைக் முன்பு சப்பைக்கட்டு கட்டுவது மட்டுமே".
தீபாவளி தினத்தன்று நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்தும், கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தீபாவளி பண்டிகையன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறுவது புதியதல்ல என்று பதிலளித்திருப்தன் மூலம் தவெக ஆட்சியில் படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாகி விட்டதை ஒப்புக்கொள்கிறாரா?
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், படுகொலைச் சம்பவங்கள், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் என அரசை நோக்கி எழும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை ஒப்பிட்டுப் பேசி சப்பைக்கட்டு கட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கும் தவெக அரசு, தேர்தலுக்கு முன்பாக மூச்சுக்கு முந்நூறு முறை கூறிய ”மாற்றம்” இது தானா? என்று மக்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாடு "FUN AND ENTERTAINMENT" என்று சொன்னதோடு, காவலர்கள் உட்பட சாமானியர் வரை கொல்லப்படுவது தொன்று தொட்டு நடைபெறும் நிகழ்வு என அனைத்து குற்றங்களையும் "Normalize" செய்ய முயற்சிக்கும் தவெக அரசு, தேர்தல் நேரத்தில் "மாற்றம் மாற்றம்" என கொக்கரித்தது இதை தானா? என்ற கேள்வியையே கேட்கத் தோன்றுகிறது.
குற்றச்செயல்களையும், தமிழகத்தையும் பிரிக்கவே முடியாது என்ற நிலையை உருவாகியுள்ள தவெக அரசு, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் காவல்துறையின் செயல்பாடுகளை முடக்கி கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, குற்றச்சம்பவங்கள் நடைபெறும் முன்பாகவே அதனை கண்டறிந்து தடுத்துவந்த காவல்துறையை, முதலமைச்சரையும், தவெக அரசையும் விமர்சிப்பவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் ஏவல் துறையாக மாற்றியமைத்து, அதன் செயல்பாடுகளை நீதிமன்றங்களே அவ்வப்போது குட்டுவைத்து வருவது தவெக அரசின் நிதானமற்ற கொடுங்கோல் ஆட்சியை மக்களிடையே அம்பலப்படுத்துகிறது.
எனவே, எந்தக் காலகட்டத்திலும் ஆளும் அரசின் அலட்சியங்களையும், நிர்வாக சீர்கேட்டையும், சரிசெய்யப்பட வேண்டும் என எடுத்துரைப்பது எதிர்க்கட்சியினரின் கடமை என்பதை இனியாவது உணர்வதோடு, மாற்றத்தை தருகிறோம் என பாசாங்கு காட்டி ஆட்சிக்கு வந்து தமிழகத்தை சுடுகாடாக மாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க மற்றவர்களின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து ஓடாமல், படுகுழியில் தள்ளப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி, காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கி, குற்றச்சம்பவங்களை தடுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம் எல் ஏ மீது புகார் - கொடூர வில்லன்களின் கூடாரமா தவெக?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, அவரது இல்லத்திற்கே சென்று விரும்பத் தகாத முறையில் நடந்து கொண்டதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பள்ளி செல்லும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில் தொடங்கி, சொந்த கட்சி நிர்வாகியையே காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை என பெண்களை ஆபாச பொருட்களாக நினைக்கும் தவெக கட்சி நிர்வாகிகளின் மீது ஆளும்கட்சியாக இருந்தும் எந்தவித உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த தவெக தலைமையால், இன்று மாவட்டத்தின் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்க முயலும் அளவிற்கான சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.
மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம், மக்கள் பிரச்னையை புகாராக அளிக்க வந்த நபர் மீது தாக்குதல், மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை என மக்கள் பணி செய்வதற்காக தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்த எம்.எல்.ஏக்கள் செய்யும் கேவலமான செயல்கள், தவெக கட்சி என்பது திரையில் நாம் காணும் கற்பனை வில்லன்களை நிஜத்தில் பார்ப்பது போல் உள்ளதாக மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
மக்களுக்காக பணிசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே, ஒரு மாவட்டத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்கும் அளவிற்கான சூழல் நிலவும் தமிழகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உட்பட தமிழகத்தின் அனைத்து மகளிருக்குமான பாதுகாப்பை வழங்குவது யார்? என்ற கேள்வியே தற்போது பிரதானமாக உள்ளது.
எனவே, மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் "NO COMPROMISE" என வெட்கமில்லாமல் பேசுவதற்கு முன்பாக தங்கள் கட்சியில் இருப்பவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை கண்மூடி வேடிக்கை பார்க்காமல், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்கே சென்று அருவருக்கத்தக்க வகையில் செயல்பட்டதாகவும் சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தொகுதியில் நிலவும் பிரச்னையை பற்றி கூற வந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்- இது மக்கள் ஆட்சி அல்ல தற்குறிகளின் ஆட்சி தான் என அடித்து நிரூபித்துள்ளார் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்!
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை திரு.ரவி சங்கர் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை திரு.விஜய் அவர்கள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.
மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?
எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் திரு.ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 படுகொலைச் சம்பவங்கள் – தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா இந்த தவெக அரசு?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இளைஞர் ஒருவரும், கல்லல் அருகே ரவுடியும் ஓட ஓட விரட்டிப் படுகொலை,
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் கட்டி வைத்து கொலை,
கடலூர் மாவட்டம் காட்டுப்பாளையம் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை,
சென்னை வியாசர்பாடியில் 18 வயது இளைஞர் கொடூர கொலை,
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை,
என நேற்றைய தீபாவளி திருநாள் கொலைச் சம்பவங்களின் சங்கமமாக உருவெடுத்திருக்கிறது.
அதிலும், தேனி மாவட்டம் சமதர்மபுரத்தில் சாலையில் வாகனங்களை வழிமறித்து பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில் அவர்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதும், கடலூர் அருகே கொலை குற்றவாளியை பிடிக்க சென்ற காவல்துறையினர் மீது நடைபெற்றிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதலும் கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் காவல்துறையினர் மீதே தொடரும் தாக்குதல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி மாவட்டங்கள் வரை படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் அளவிற்கு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதலமைச்சரையும், தீபாவளி சிறப்பு தின நிகழ்வுகளில் விருந்தினர்களாக பங்கேற்று கொண்டாடி மகிழும் அமைச்சர்களையும் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய அசுரர்களை, திருமால் அழித்து நன்மை அளித்த இத்திருநாளை கொண்டாடவேண்டிய மக்கள், தினம்தோறும் நடைபெறும் கொலை கொள்ளையை பார்க்கும் போது அசுரர்கள் இன்னும் வாழ்வதாகவும், அவர்களை அழிக்கவேண்டிய இந்த அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி என்பதை இனியாவது உணர்ந்து, அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
சகோதரர் திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @Seeman4TN -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டில் முரண்பாடுகள் - முழு உண்மையை வெளிக்கொண்டு வர மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலோ விசாரணை நடைபெறுவது தான் ஒரே தீர்வு !
கோவையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர்கள் மத்தியில் எழுந்திருக்கும் புகாருக்கு முழுமையான தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலகத்திற்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும், அதனை தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு பெருமாள் முருகன் அவர்களே நூல் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றிப்பதாக வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது பல்வேறு முரண்பட்ட சந்தேகங்களை எழுப்புகிறது.
நூலகக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்களுக்கே தெரியாமல் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதா? அல்லது அவர்களின் எதிர்ப்பையும் மீறி போலி நூல்கள் வாங்கப்பட்டதா ? இல்லாத பதிப்பகத்தின் பெயரில் நூல்கள் வாங்கப்பட்டுள்ளது என்றால், யாருடைய உத்தரவின் பெயரில் நூல்கள் பரிந்துரைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன? தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவுலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்களும், அதிகாரிகளும் நூல்கள் குறித்து ஆய்வு செய்யத் தவறியது ஏன்? என அடுத்தடுத்த கேள்விகள் எழுந்து கொண்டே செல்கின்றன.
நூல் பரிந்துரை, நூலகத் தேர்வுக் குழுவின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மற்றும் விலை பேச்சுவார்த்தை குழுவால் விலை இறுதி செய்யப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் நூல்கள் பெரியார் நூலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த பிப்ரவரி மாதமே பிறப்பித்ததற்கு ஆவணங்களே ஆதாரமாக உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் தேதியிட்ட போலி நூல்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வந்தது எப்படி ? எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது ? அறிவுலகத்திற்கு வந்திருக்கும் நூல்கள் பரிந்துரைத்த நூல்கள் தானா? என்பதை சீல் இடுவதற்கு முன் அதிகாரிகள் ஏன் பார்க்கவில்லை? அல்லது இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும் துணை போனார்களா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
அகல்விளக்கு எனும் பதிப்பகத்தின் பெயரில் திரிஷா விஜய், சங்கீதா விஜய், சுமேகா விஜய், விஜய் பாலு, விஜய் ஆதித்தன் என பெயர்களில் எழுதப்பட்டுள்ள நூல்கள் என்பதை தாண்டி, இந்த புத்தகங்கள் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாள் அன்று வந்திருப்பதும், பெரும்பாலான புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயர் விஜய் என்றே இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதோடு, இது யாரையோ சிக்கவைக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்க முயன்றுள்ளார்களா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
போலி நூல்கள் கொள்முதல் செய்ததற்கான ஆணை, அதற்கான உத்தரவு பிறப்பித்தவர்களின் விவரங்கள், செலவழிக்கப்பட்ட தொகை என அனைத்து விவரங்களையும் கணப்பொழுதில் வெளியிடும் அளவிற்கான நிர்வாக வசதியை கொண்டிருக்கும் தவெக அரசு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அமைச்சரை அனுப்பி புகார் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தான் ஏற்கனவே இருக்கும் சந்தேகங்களை இன்னமும் வலுவாக்குகின்றன.
எனவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் அறிவுத்திறனையும் உலக அரங்கில் கேள்விக்குறியாக்கும் வகையில் நடைபெற்றிருக்கும் இந்த போலி நூல் கொள்முதல் ஊழலில் முழு உண்மை வெளிவர வேண்டும் எனில் இந்த ஊழல் குற்றச்சாட்டில் பெரும்பங்கு வகிக்கும் புத்தகங்கள் தவெக அரசு அமைந்தவுடன் பெறப்பட்டுள்ளதால், இந்த ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு விசாரிக்காமல் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலோ விசாரணை நடைபெறுவது தான் சரியான தீர்வாக அமையும். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
அதிமுக நிர்வாகி திரு பி.எம்.மன்னன் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு – பொய் புகார், வழக்குப்பதிவு, கைது, தடுமாற்றம், விடுவிப்பு.. Repeat என்பது தான் தவெகவின் கொள்கையா ?
நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிவிட்டு இன்றே கைது செய்யப்பட்ட திரு பி.எம். மன்னன் அவர்களை சிறையில் அடைக்க மறுத்து அதிகார மமதையில் சுற்றித் திரியும் தவெக அரசுக்கு நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான திரு.கலையரசன் அவர்களின் புகைப்படம் இருந்த ஒரே காரணத்திற்காக எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் அதிரடியாக அதிகாலை நேரத்திற்குள் வீடுபுகுந்து கைது செய்து அலைக்கழித்த விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு தவறுக்கு பொறுப்பேற்பது தீர்வாக அமையாது என நீதிமன்றம் குட்டு வைத்த பின்னரும், தற்போது திரு பி.எம். மன்னன் அவர்களின் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் அளவிற்கு தவெக அரசுக்கு அதிகார வெறி தலைக்கேறிவிட்டதா?
காவல்துறை என்பது ஆளுங்கட்சியின் ஏவல் படையோ, அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமோ அல்ல என்பதற்கு நீதிமன்றம் வைத்திருக்கும் இந்த குட்டே சிறந்த உதாரணம் என்பதை தெளிவுபடுத்துவதோடு, தவெக ஆட்சியின் தற்குறித்தனமான மற்றும் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளுமே அதன் விழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைம் மீண்டும் ஒருமுறை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார் - அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு, இல்லாத பதிப்பகங்களின் பெயரில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
அறிவையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய நூலகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடை சாதாரணமாக கடந்து செல்லாமல், இல்லாத பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது எப்படி ? அதற்கான ஆணையை பிறப்பித்தது யார்? நூல்களை பரிசோதித்து அங்கீகாரம் வழங்கியது யார் ? என நூல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் தொடங்கி பணப்பரிவர்த்தனை வரை தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும்.
எனவே, பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகாரை தனி விசாரணைக் குழு அமைத்து உண்மைகளை வெளிக்கொண்டுவருவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு போலி நூல்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எதிர்க்கட்சியினர் மீதான புகார்களில் அசுர வேகத்தில் செயல்படும் காவல்துறை, ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் என்றால் ஆமை வேகத்தில் கூட செயல்படாதது ஏன்? – தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது பழிவாங்கும் ஆட்சியா?
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் பொதுக்கூட்டங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில்கூட விமர்சித்தால் உடனுக்குடன் வழக்குப்பதிவு, அடுத்தடுத்து விசாரணைகள், நள்ளிரவு நேரங்களில்கூட கைது எனப் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசும், அதன் காவல்துறையும், ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதான புகார்கள் என்றால் மட்டும் கள்ள மௌனம் காத்து, ஆமை வேகத்தில் கூட செயல்பட மறுப்பது ஏன் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
- அமமுக சட்டமன்ற உறுப்பினரை ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தின் மூலம் திருட்டுத்தனமாக கையெழுத்து வாங்கியது.
- விளையாட்டு மைதானத்தில் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்.
- பெண்ணைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடையயதாக சொல்லப்படும் ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர்.
- அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்காகச் சொந்தக் கட்சியினரிடையே பேரம் பேசியதாக நீதிமன்றத்தாலேயே கண்டிக்கப்பட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள்.
- பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்காகத் தானே லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட அமைச்சர்.
- இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெறுவதற்காக 5 கோடி ரூபாய் வரை தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக வாக்குமூலம் அளித்த அமைச்சர்.
என அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்குத் தவெகவின் சாதாரண நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் வரையில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இப்புகார்கள் மீது எந்தவிதமான முதற்கட்ட விசாரணையைக்கூடத் தொடங்காத தவெக அரசும் அதன் காவல்துறையும், எதிர்க்கட்சியினர் மீதான புகார்கள் என்றால் மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு கைது நடவடிக்கையில் இறங்குவது, தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது பொய்வழக்குகளைப் பதிவு செய்து பழிவாங்கும் ஆட்சியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட காவல்துறையை ஆளுங்கட்சியின் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, சட்டத்தைத் தனக்கேற்ற வகையில் வளைத்து, எதிர்க்கட்சியினரை மட்டுமே குறிவைத்து நடவடிக்கை எடுப்பதும், சொந்தக் கட்சியினர் மீதான புகார்களைக் கிடப்பில் போடுவதும் ஜனநாயகத்தின் மாண்பிற்கு எதிரானதாகும்.
எனவே, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை இனியாவது உணர்ந்து, ஆளுங்கட்சி என்றால் சலுகை, எதிர்க்கட்சி என்றால் கைது என்ற ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டும் வகையில், ஆளுங்கட்சியினர் மீதான புகார்களையும் முறையாகவும் முழுமையாகவும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா? – மாணவ, மாணவியர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசி , அதனை Normalize செய்ய முயல்வது தான் முதலமைச்சரின் வேலையா?
10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை அழைத்து, அவர்கள் மத்தியில், “லஞ்சம் ஊழல் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க, இந்த போதைப் பொருள் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க ஒரு Fun & Enjoyment இருக்கும் ஆனா எந்த தவறுக்கும்அடிமையாயிடாதீங்க ” என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே காற்றில் கலந்த விஷத்தைப் போலத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவி, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தையே சிதைத்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை, கொண்டாட்டப் பட்டியலில் (Fun & Enjoyment) சேர்த்து, அளவுடன் பயன்படுத்துங்கள் என்பது போல ஊக்குவிப்பதும், அவற்றின் பயன்பாட்டை Normalize செய்ய முயல்வதும் முதலமைச்சருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.
சமீபத்தில், 100 கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்த தவெக நிர்வாகியை மத்திய அரசின் விசாரணை அமைப்பு கைது செய்துள்ள நிலையில், தற்போது போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான முதலமைச்சரின் பேச்சைப் பார்க்கும்போது, பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
திரைப்படங்களின் மூலம் மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், அதை விற்பனை செய்வது போன்ற சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடித்தது போதாதென்று, தற்போது மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் இத்தகைய செயல்பாடுகளை Normalize செய்து பேசுவது, முதலமைச்சரே இளைஞர்களையும் மாணவர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, முதலமைச்சரே சொல்லிவிட்டார் என்பதற்காகச் சிறிதளவு போதைப் பொருட்களைப் பயன்படுத்தலாமே என்ற மனநிலைக்கு மாணவர்களும் இளைஞர்களும் சென்றுவிட்டால், அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பது யார்? அதற்கான சமூகப் பொறுப்பை ஏற்பது யார்? என்ற கேள்வியும் எழுகிறது.
எதற்கெடுத்தாலும் தன்னைப் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒப்பிட்டுப் பேசிக்கொள்ளும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், புரட்சித்தலைவர் தான் நடித்த திரைப்படங்களில் மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு சமூகச் சீர்கேட்டையும் ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகளில் நடிக்காமல், தனது திரைப்படங்கள் மக்களுக்கு நன்னடத்தையையும் , சமூக விழிப்புணர்வையும் எடுத்துரைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அதனால் தான் அவர் மக்களால் அன்போடு ‘வாத்தியார்’ என்று அழைக்கப்படுகிறார் என்பதை எண்ணிப்பார்த்து இனியாவது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்திக்கொள்வதோடு தான் அத்தகைய ஒப்பீட்டுக்குத் துளியும் தகுதியோ அருகதையோ இல்லாதவர் என்பதை உணர வேண்டும்!
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்த்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், ஒரு துளி விஷம் என்றாலும் அது விஷம் தான் என்பதை உணராமல் போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது அபத்தமானது.
எனவே, மாணவர்களுக்கு விருது வழங்கும் மேடையில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான விதைகளை விதைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விஷத்தை விதைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் முன்வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு, அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை திசைதிருப்பும் செயல் – “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி” என்பது போல தவெகவின் தற்குறித் தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
தமிழக அரசியலில் முதன்முறையாகக் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்தி, மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வரும் தவெக, தற்போது குதிரை பேரம் குறித்துப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு இணையானது.
தங்களது திறனற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைத் திசைதிருப்புவதற்காகவே இந்த குதிரைபேர நாடகத்தை பார்க்க வேண்டியுள்ளது.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத தவெக, ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, தவெக தலைவர் வருவார் பின்னே, சோபா வரும் முன்னே என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் சோபாவை அனுப்பி ஆதரவு கோரியதோடு, தவெகவுக்கு எதிராகப் போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை தட்டித்தூக்கி ராஜினாமா செய்யவைத்து, அதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு, தற்போது குதிரை பேரம் குறித்து ஒப்பாரி வைப்பது முரண்பாட்டின் உச்சகட்டமாகும்.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; மின்சாரக் கட்டணக் குளறுபடிகள்; அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்; அரசின் அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள்; அரசு நிர்வாகங்களில் ஆளுங்கட்சியினரின் தலையீடு; எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை அரசுப் பணிகளை ஒதுக்குவதற்காக லஞ்சம் கேட்பதாக எழும் புகார்கள்; பொருளாதார வீழ்ச்சி; அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லும் தொழில் முதலீடுகள் எனத் தவெக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் ஒட்டுமொத்த தமிழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், நாள்தோறும் அதிகரித்து வரும் தொடர் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள், சிறைக் கைதிகள் தப்பியோடும் நிகழ்வுகள், போதைப்பொருட்களைப் பதுக்கி வைக்கும் ஆளுங்கட்சியினர் என சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும், நிர்வாகத் தோல்விகளையும் திசைதிருப்பி மக்களை ஏமாற்றும் நோக்கில், ஆட்சிக்கு எதிராகக் குதிரை பேரம் நடப்பதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிக்க வெட்கமாக இல்லையா?
அடுத்தடுத்து வரவுள்ள இடைத்தேர்தல்களை நேர்மையாகச் சந்திக்கத் திராணியற்று, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு மட்டும் இப்போதே சென்று, நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் "ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்குச் ஸ்வீட் செய்வதும்", அப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளை மிரட்டி மாணவர்களை அழைத்து வந்து Road Show நடத்துவதும், கேவலத்திலும் கேவலமான அரசியலாகும்.
எனவே, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளும் அற்பத்தனமான இதுபோன்ற முயற்சிகளைக் கைவிட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் மக்களே வெகுண்டெழுந்து இந்த மைனாரிட்டி தவெக அரசுக்கு ஜனநாயக ரீதியில் முடிவுரை எழுதுவார்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் – ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன் பெறுவதற்காக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா?
சிவகங்கையில் VB-G RAM G திட்டத்தின் (125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) கீழ் ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை விதிமுறைகளை மீறி தவெக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்க முயற்சிப்பதாகவும், இவ்வொப்பந்தங்களை வழங்குவதற்காக ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும் சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி அவர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி சாதாரணக் கட்சி நிர்வாகிகள் வரை கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, கமிஷன் கேட்பது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது எனப் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மக்கள் நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதோடு, பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போயுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
"உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், இது உங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லி லஞ்சம் கொடுக்காதீர்கள்" என மக்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழும் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதன் விளைவாக, இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினரே 20 சதவீதம் வரை கமிஷன் என்ற பெயரில் 'சர்வீஸ் சார்ஜ்' கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
ஊழலை ஒழிப்போம், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம், அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனத் தேர்தல் நேரத்தில் வீராவேசமாகப் பஞ்ச் டயலாக்குகளைப் பேசிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் வரை பலர் மீது தொடர்ந்து எழுந்துவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வாரா? அல்லது எப்போதும் போல, மக்கள் எக்கேடு கெட்டாலும் தனக்கென்ன என்ற மனப்பான்மையுடன் மௌனமாகக் கடந்து செல்வாரா?
எனவே, தவெக ஆட்சி அமைந்தது முதல் போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அரசு பதவிகளைப் பெற 5 கோடி ரூபாய் வரை லஞ்சப் பேரம் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொடங்கி தவெக நிர்வாகிகள் மீது எழுந்த புகார்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகக் கடந்து சென்றதைப் போல, சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரையும் அலட்சியப்படுத்திவிடாமல், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அண்டை மாநிலங்களை நாடும் தொழில் நிறுவனங்கள் – தவெக அரசு தொழில்துறை முதலீடுகளை வரவேற்கிறதா? அல்லது வழியனுப்புகிறதா?
தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், தவெக அரசின் அலட்சியத்தால் தற்போது தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தம் செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஜூன் மாதம் தமிழகத் தொழில்துறை அமைச்சர் அவர்கள் தென்கொரியாவுக்குச் சென்று, இந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதமே தென்கொரியாவுக்குச் சென்ற ஆந்திர மாநில அமைச்சர் திரு. நர லோகேஷ் அவர்கள், அதே தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்வது ஏன்? தமிழகத்தில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன? அவற்றைக் களைய வேண்டிய தொழில்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேட வேண்டிய தொழில்துறை, வெறும் Reels போட்டே ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து விடலாம் என்ற பகல் கனவில் திளைத்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே தொழில் தொடங்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களின் முதலீடுகளையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அரசு நிர்வாகத்தின் கடமை என்ற அடிப்படைகூடத் தெரியாத தவெக அரசின் அலட்சியத்தால், தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்வதால், வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, கேமராக்களுக்கு முன் தோன்றி Reels எடுப்பதால் மட்டும் தமிழகம் எந்த வகையில் வளர்ச்சியடைந்து விடாது என்பதை இனியாவது உணர்ந்து, தமிழகத்தின் தொழில் முதலீடுகளை ஈர்த்து, அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆவின் பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதா தவெக அரசு? ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்களின் தலையில் மேலும் ஒரு பேரிடி!
ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பாலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
வீட்டு சமையலறையில் தொடங்கி தேநீர் கடைகள், உணவகங்கள் வரை பொதுமக்களால் அன்றாடம் உபயோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான பாலின் விலையை உயர்த்துவது மட்டுமல்ல அது குறித்து அரசு சிந்திப்பதே கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதனைச் சரிசெய்து ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்தி, பொதுமக்களுக்குத் தடையின்றிப் பால் கிடைக்கச் செய்வதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத தவெக அரசு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விண்ணைமுட்டும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மீது மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் பால் விலையை உயர்த்த ஆலோசிப்பது பொதுமக்களுக்கு தவெக அரசு இழைக்கும் துரோகமாகும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாலும், பண்டிகை நெருங்கும் நாட்களிலும் கூட மனசாட்சியற்ற முறையில் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்திய ஆவின் நிர்வாகம், தற்போது பால் விலையையும் உயர்த்தி பொதுமக்களின் அடிமடியிலேயே கைவைக்கத் துணிந்திருப்பது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியில் மனிதர்களையே கடிக்க முயன்ற கதையைத் தான் நினைவுபடுத்துகிறது.
மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்க நிறுவப்பட்ட ஆவின் நிறுவனம், தற்போது தனியார் பால் நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலை உயர்த்திக் கொண்டிருப்பதன் மூலம் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களையும் தனியார் நிறுவனத்தை நோக்கி விரட்டியடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதோ ? என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது.
எனவே, ஆவின் பால் விலையை உயர்த்தும் எண்ணம் இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துவதோடு, பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும் ஆவின் நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மா.இராமச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா? – அரசு பொறுப்பில் இருப்பது இடைத்தரகர் பணிக்கா?
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. லயோலா மணி அவர்களின் மூலம் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரே நேரடி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே Tough கொடுக்கும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் கலந்த தவெக ஆட்சியில், அரசுப் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதற்கும், இடைத்தரகர் வேலை பார்ப்பதற்கும்தான் திரு. லயோலா மணி அவர்களுக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோ என்ற கேள்வி பலரின் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேசப்பட்ட பேரம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணி என்ன எனப் பொதுமக்கள் மத்தியில் அடுத்தடுத்து எழும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களுக்கு உள்ளது.
ஒரு கோப்பைத் திறந்ததற்கே திமுக முன்னாள் அமைச்சர் சிறையில் இருக்கிறார்; அடுத்தடுத்த கோப்புகளைத் திறந்தால் என்னவெல்லாம் ஆகுமோ? எனப் பில்டப்பிலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படி இருந்திருந்தால், லஞ்சம் வாங்கியதாகச் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சருடன், லஞ்சம் கொடுத்ததாகச் சட்டமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த இந்நாள் நிதியமைச்சரும் சிறையில்தானே இருந்திருக்க வேண்டும்?
ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களில் எதிர்க்கட்சியினர் என்றால் கைது நடவடிக்கை; இடைத்தரகர் வேலை பார்த்தாலும் அவர் சொந்தக் கட்சியினராக இருந்தால் சலுகை என்ற தவெக அரசின் இரட்டை வேடத்தைப் பார்க்கும்போது, “உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்ற நகைச்சுவைக் காட்சிகளைத்தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
எனவே, இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளிப்படையாக வெளியிட்டு, அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, இடைத்தரகர் வேலை பார்த்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. லயோலா மணி அவர்கள் மீதும், இப்பேர விவரத்தை இதுநாள் வரை மறைத்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ராஜ் மோகன் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
போதையால் பறிபோகியுள்ள மேலும் சில உயிர்கள் - தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முனைகிறதா தவெக அரசு? - நீதிமன்றங்களை விரிவுபடுத்தும் அரசு, கரைபுரண்டுள்ள போதை வஸ்துகளின் நடமாட்டத்தை தடுப்பதற்கான வழிகளை தேட மறுப்பது ஏன்?
அரியலூர் அருகே ரோந்து பணியின் போது போதைக் கும்பலால் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான ஊர்க்காவலர் படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கழுத்தை நெறித்து ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட பெண் பலி, தூத்துக்குடி அருகே பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விசிக பிரமுகர் கொலை என அடுத்தடுத்து வெளியாகும் கொலைச் செய்திகள் தமிழக மக்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும், பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவலர்களே போதைக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்கான அசாதாரண நிலையை இந்த பொம்மலாட்ட தவெக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
தவெக ஆட்சியில் அன்றாடம் ஒலிக்கும் மரண ஓலங்களால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளிவரவே பயந்து ஒடுங்கிவரும் சூழலில், அவர்களின் கூக்குரல் அண்ணன், தம்பி, மாமன் என்று Reel's காக ரீல் விடும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் காதுகளுக்கு மட்டும் கேட்காமல் இருப்பதன் மூலம் தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் ஆட்சியா அல்லது அரக்கர்களின் ஆட்சியா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தவெக ஆட்சி அமைந்தவுடன் பட்டிதொட்டி எங்கும் போதை கலாச்சாரம் பரவி உள்ளதாக வாய்கிழிய பேசிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், அதனை வேர் வரை சென்று கிள்ளி எறியாமல், குற்றம் நடந்தபின்பு நீதி வழங்கும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை கூட்டுவது மூலம் தனக்கு கீழ் இயங்கும் காவல்துறை செயலற்ற நிலையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா?
எனவே, பட்டிதொட்டி எங்கும் புரையோடிப் போயிருக்கும் போதை பொருட்களின் தாராள நடமாட்டத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, போதைக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த ஊர்க்காவலர் படை வீரரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவியை உடனடியாக வழங்கிடுவதோடு, சட்டம் ஒழுங்கு என்பது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் வழங்கப்படும் அடிப்படை உத்தரவாதம் என்பதை இனியாவது உணர்ந்து அதனை சீரமைக்க கூடுதல் கவனத்தை செலுத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு எனும் தனித்துவமான மாநிலம் உருவான நாளை கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு என்ற அடையாளத்திற்காகவும், தமிழ் மொழியின் உரிமைக்காகவும் தங்களின் இன்னுயிரையும் துச்சமென கருதி போராடிய தியாகச் செம்மல்களை நன்றியுடன் நினைவுகூறும் இந்நாளில் தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பியோடுவது சர்வசாதாரணமாகி வருகிறது – காற்றில் பறக்கவிடப்பட்ட முதமைச்சரின் "கிடிக்குப்பிடி" உத்தரவு!
கோவை மத்திய சிறை வளாகத்திலிருந்து ஒரு விசாரணைக் கைதி, சென்னை கொளத்தூரில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் என முதலமைச்சர் சிறைத்துறைக்கு "கிடிக்குப்பிடி" உத்தரவு விடுத்த அடுத்த கணமே அடுத்தடுத்த கைதிகள் காவல் பாதுகாப்பிலிருந்து தப்பித்துள்ளனர்.
தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே சென்னை புழல், சேலம், தேனி என இதுவரை 50-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பியிருப்பதாக சொல்லப்படுவது, தவெக ஆட்சியில் சிறைத்துறை நிர்வாகம் சின்னாபின்னமாகியுள்ளதையே காட்டுகிறது.
குற்றவாளிகள் சிறைகளிலிருந்து தப்பிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், சிறைத்துறையில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்த பிறகும், அவற்றைச் சரிசெய்வதற்கு எந்தவொரு முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல் அலட்சியத்துடன் தவெக அரசு செயல்பட்டதே இச்சம்பவங்களுக்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சிறைக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறைத்துறை சீரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவு வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே பாதுகாப்பு அரணிலிருந்த கைதிகள் தப்பியிருப்பது, முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறையையும், "வாய்ச்சவடால் வீராசாமி" எனப் பெயரெடுத்துள்ள சிறைத்துறை அமைச்சரையும் யாரும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது.
எனவே, சிறைத்துறையின் மேம்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சம்பிரதாயத்திற்காகவும் "பரிகாரத்திற்காகவும்" சிறைச்சாலைகளை ஆய்வு செய்வதைத் தவிர்த்து, முறையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவை அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இருளில் மூழ்கடித்திருக்கும் மின்சாரத்துறைக்கு வெளிச்சம் வருவது எப்போது? – பழுது, பராமரிப்பு என பச்சைப் பொய்களைப் பேசுவதால் என்ன பயன்?
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தரிசனம் செய்யச் சென்றபோது ஏற்பட்டுள்ள மின்வெட்டு, மின்வாரியத்தின் அலட்சியத்தையும், நிர்வாக சீர்கேட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், மயானங்கள் என அனைத்து இடங்களிலும் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராடிய பின்பும், மின்தடையை ஒப்புக்கொள்ளாத மின்வாரியம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஏற்பட்ட மின்தடைக்கு முதலில் பராமரிப்பு என்றும், தற்போது பழுது என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிப்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.
அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம், மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுப் பின்னர் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதும் பின்வாங்கியது என, என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் எனத் தெரியாமலும், புரியாமலும் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு மின்வாரியம் அடுத்தடுத்த புகார்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களின் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டிய மின்சாரத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்' என்ற நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஏற்ப, அனைத்து பிரச்சினைகளிலும் தாமாக முன்வந்து மூக்கை நுழைத்து, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்பதன் மூலம், பிரச்சினை மின்சாரத்திலா அல்லது நிர்வாகத்திலா என்ற கேள்வியே எழுகிறது.
அதே நேரத்தில், கவனக்குறைவாகச் செயல்படுவோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், கடந்த ஐந்து மாதங்களாக மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கியும், தனது நிர்வாகத் திறனற்ற செயல்பாட்டால் மின்வாரியத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியும், அறிவிக்கப்படாத மின்வெட்டுக்குத் தினந்தோறும் புதுப்புதுக் கதைகளையும் பச்சைப் பொய்களையும் கூறி, முதலமைச்சர் தானே நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னரும், அத்துறையின் செயல்பாடுகளில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் எரிசக்திதுறை அமைச்சர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
எனவே, மக்களுக்குத் தேவை தடையற்ற மின்சாரமே தவிர, மின்வாரியத்தின் அற்பக் காரணங்கள் அல்ல என்பதை உணர்ந்து, தமிழகத்தில் சீரான மின்விநியோகத்தை உறுதிசெய்வதற்கான நிர்வாகச் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எரிசக்தித்துறையையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தருமபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகன் – போதையில்லாத் தமிழகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிய 'தூய சக்தி', தமிழகத்தை "போதையில் புதையும்" சக்தியாக மாற்றி வருவதுதான் மிச்சம்!
தருமபுரியில் செலவுக்குப் பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், சமூகத்தின் அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் அடியோடு சீர்குலைத்து வருவதோடு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் பணத்திற்காகக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவருகிறது.
பெற்ற தாயின் உயிரையே பறிக்கும் அளவிற்கு போதை வெறி தலைக்கேறியிருப்பது, தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் அரசு எந்த அளவிற்கு தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழகத்தின் தலைநகரம் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை அமைப்பதற்குத் தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாகக் கையெழுத்திட்டதாகப் பெருமை பேசிக்கொண்ட தூய சக்தி, இன்று கஞ்சா போதையால் நிகழ்ந்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ?
நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறது?
மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை அமைத்ததாகக் கூறிய தூயசக்தி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களையும், கடத்தல் பின்னணியில் செயல்படுவோரையும் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, ஒருபுறம் போதை ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுவதும், மறுபுறம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதும்தான் அவ்வப்போது பெருமையாகக் கூறிக்கொள்ளும் 'வெள்ளாவியில் வைத்துத் துவைக்கப்பட்ட தூய சக்தியின்' உண்மையான செயல்பாடா?
ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்களைக் கடந்த பின்னரும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோரையும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் முக்கியப் புள்ளிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே கட்சியில் பொறுப்புகளை வழங்கி அழகுபார்ப்பதன் விளைவாகவே போதைப் பொருட்களின் புழக்கமும், அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, அரசின் தவறான செயல்பாடுகளையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக்காட்டி, அதன் போலி முகத்திரையை ஜனநாயக ரீதியில் கிழித்தெறிந்து வருபவர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் ஏவல்துறையாகப் பயன்படுத்தி வரும் தூய சக்தி, தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, காவல்துறையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருந்தால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழகத்தில் இத்தனை குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை!
எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்து ரீல்ஸ் கண்டெண்டுகளுக்காக மாரத்தான் ஓடுவதால் மட்டும் போதைப் பொருட்களை ஒழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து, நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களின் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், அந்நியர்களால் பறிக்கப்பட்ட எளிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடி அதில் வெற்றி கண்டவரும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என மக்கள் மன்றங்களில் சிறப்புறப் பங்காற்றியவரும், தேசத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றியதோடு, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக ஒற்றுமையையும் சமத்துவத்தையும் நிலைநாட்டத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் தலைவருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் ஜெயந்தி விழா இன்று!
அச்சமற்ற வாழ்வுக்கும், அயராத போராட்டத்திற்கும், உறுதியான கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து, தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் அனைவரின் நினைவுகளிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும், தியாகங்களையும் என்றென்றும் போற்றி வணங்கிடுவோம்! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதா தவெக அரசு? – லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசு வேலைக் கனவை சிதைத்துள்ள தவெக அரசுக்கு கண்டனம்.
அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை (Outsourcing) மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான பணிகளைத் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நகராட்சி நிர்வாகத் துறை, மின்சார வாரியம் என ஒவ்வொரு துறையாக வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்கு எழுந்துவரும் எதிர்ப்புகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாறாக, ஒட்டுமொத்த அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தலுக்கு முன்பாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாகியும் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதற்கு மாறாக, அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்தி, வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயல்வது, தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதோடு, வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும், பணி நிரந்தரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
அரசுப் பணிகளில் நிரந்தர நியமனங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒப்பந்த முறையை அனைத்துத் துறைகளிலும் விரிவுபடுத்துவது ஊழியர்களின் பணிப் பாதுகாப்பைப் பறிப்பதுடன்,அரசுப் பணிகளுக்காகப் பல ஆண்டுகளாகத் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் லட்சக்கணாக்கான இளைஞர்களின் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும். இவ்வாறு அரசின் நிர்வாகப் பொறுப்புகளை வெளிமுகமையிடம் ஒப்படைத்து, நிரந்தர வேலைவாய்ப்புகளைச் சுருக்குவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் தனியாரிடம் அடகு வைக்கும் செயலாகும்.
எனவே, தமிழக அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாகக் கணக்கெடுத்து, அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்புகளை உரிய காலத்தில் வெளியிட்டு, தகுதியான நபர்களை வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் நிரந்தரமாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தவெக அரசு உடனடியாக மேற்கொள்வதோடு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாகத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேசவிரோதமா? – ஜனநாயகக் குரல்களை ஒடுக்கத் துடிக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும்!
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேசிய சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான திரு. கலையரசன் அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அலைக்களித்த காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
வழக்குப்பதிவு செய்யாமல், சம்மன் அனுப்பாமல், அதிகாலை 5 மணியளவில் சீருடைகூட அணியாத காவலர்களை வீட்டிற்குள் அனுப்பி அவரை விசாரணை எனும் பெயரில் அவரை மனதளவில் துன்புறுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்? பேராசிரியர் திரு. கலையரசன் அவர்கள் என்ன தீவிரவாதியா? அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசியது தேசவிரோதமா? மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதைப் பார்த்து, எங்கு தனது போலி பிம்பம் உடைந்து விடுமோ என்ற பதற்றத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இத்தகைய அடக்குமுறையைக் கையாளுகிறாரா?
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் மாயமான சிறுமியை 18 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் திறனற்ற தவெக அரசும், அதன் ஏவல்துறையாகச் செயல்படும் காவல்துறையும், மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசியதற்காக ஒரு பொருளாதார நிபுணரை மிரட்ட முயற்சித்திருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டமாகும்.
ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்பதும் ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமையாக உள்ள நிலையில், மக்களின் பிரச்சினைகளைப் பேசுபவர்களைக் கைது செய்வதன் மூலமாகவோ, விமர்சனக் குரல்களை ஒடுக்குவதன் மூலமாகவோ ஓர் அரசு தனது தோல்விகளை மறைத்துவிட முடியாது என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உணர வேண்டும்.
ஜனநாயகக் குரல்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதோடு, மக்களின் குரல்களை ஒடுக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு ஜனநாயகத்தின் வழியாகவே மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் "சோப்பு, ஷாம்புகள்தான் காரணம்" விஞ்ஞானமே வியக்கும் அமைச்சரின் வினோத விளக்கம் - கோமாளிகளின் கூடாரமான தமிழ்நாடு அமைச்சரவை !
திருப்பூர் மாவட்டம், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர், ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விஞ்ஞானமே வியக்கும் வினோதமான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
அரசியல் விபத்தால் முதலமைச்சரான திரு. ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே தெரியாமல் சில காலம் குழம்பிய அமைச்சர், தற்போது தனது துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதா? அல்லது ஆறுகளில் மாசு ஏற்பட்டு நுரை பொங்குவதற்கும் எதிர்க்கட்சிகளின் சதிதான் காரணம் எனக் கூறாமல் விட்டு விட்டாரே என்று மகிழ்ச்சியடைவதா? என்று தெரியவில்லை.
மேலும் ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அமைச்சர், பிரச்சினையின் தீவிரத்தை உணராமல் இத்தகைய விளக்கங்களை அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்த அரசு எந்த அளவிற்கு அக்கறையுடன் செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
காற்று வீசாததால் காற்றாலைகள் சுழலவில்லை; அதனால்தான் மின்தட்டுப்பாடு ஏற்பட்டது எனக் கூறிய எரிசக்தித் துறை அமைச்சர், டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முழுக்கைச் சட்டை அணிய வேண்டும் என சொல்லிய சுகாதாரத் துறை அமைச்சர், தற்போது ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விளக்கம் அளித்திருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என, ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிர்வாகத் திறனற்றவர்களாலும் கோமாளிகளாலும் நிறைந்திருப்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தெரிந்திருக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறாரா?
எனவே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அபத்தமான விளக்கங்களை அளிப்பதில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாகக் கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுத்து, ஆறுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையையும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக ஆட்சியில் இறந்தவர்களைத் தகனம் செய்ய மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வர வேண்டுமா? – உண்மையை மறைத்து, தகனத்திலும் விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் வெட்கக்கேடானது!
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தனது தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் தவித்த மகன், மின்வாரியத்தின் அலட்சியத்தால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலில், தனது சொந்தச் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தகனம் செய்ததாக வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி மனதை உலுக்குகிறது.
மின்தடை குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரியமும், சம்பந்தப்பட்ட அமைச்சரும், தாங்களே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்து இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்ததாகப் பொய்யான தகவலைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதைப் பாதிக்கப்பட்ட நபரே தனது காணொளி மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
மின்தடையைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்காமல், மின்வாரியமே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்ததாகப் பொய்யான தகவலைப் பரப்புவதற்கு எரிசக்தித் துறை அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா? மக்களின் துயரத்திலும் உண்மையை மறைத்து விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் அருவருக்கத்தக்கது.
தவெக ஆட்சி அமைந்தது முதலே, மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடங்கி, மின்கணக்கீட்டில் குளறுபடிகள், மறைமுக மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, குறிப்பாக, முதலமைச்சரின் தொகுதியிலேயே மின்வெட்டால் பொதுமக்கள் போராட்டம், மின் கொள்முதலில் தடுமாற்றம் என, தனது திறனற்ற நிர்வாகத்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான எரிசக்தித் துறையைப் படுகுழியில் தள்ளிவிட்டு, விளம்பரம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு வெறும் வாய்ச்சவடால் பேசி வரும் எரிசக்தித் துறை அமைச்சர் அவர்களிடம், சட்டத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளையும் ஒப்படைத்திருப்பது முதலமைச்சரின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது.
முக்கியத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய முதலமைச்சர், அவற்றையெல்லாம் கவனிக்காமல், துறை சார்ந்த பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றாத அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, எதுவுமே நடக்காததைப் போல வேடிக்கை பார்ப்பது, தனது பொறுப்பிலிருந்து நழுவி, நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணைபோவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத அமைச்சர்களைத் தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் வைத்திருப்பதன் மூலம், முதலமைச்சர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.
எனவே, மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காத வெட்டிப் பேச்சுகளுடன் வலம் வரும் எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள், இனியாவது தனது துறையின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, மின்தடையால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் தொடங்கி தொழில் நிறுவனங்கள் வரை நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள எரிசக்தித் துறையில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நேரடிக் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவரும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டவருமான கம்பம் திரு. கே. எம். அப்பாஸ் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
விளைநிலங்களைப் பாதுகாப்பது, நவீன வேளாண் கருவிகளைப் பயன்படுத்துவது, விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பது எனத் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த திரு. கே. எம். அப்பாஸ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆவின் நிர்வாகத்தின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் பன்மடங்கு உயர்வு – முதலமைச்சர் ஆய்வு செய்ததன் விளைவுதான் இந்த விலை உயர்வா?
ஆவின் நிர்வாகத்தின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் தயிர், நெய், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தவெக ஆட்சி அமைந்தது முதலே மின் கட்டணம் தொடங்கி அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வரை பல்வேறு சுமைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களது அன்றாடக் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது அவர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தயிர், நெய் போன்ற பால் பொருட்களின் விலைகளையும் உயர்த்துவதன் மூலம் அவர்களுக்குக் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக் கூடிய பண்டிகை நாட்களைக் குறிவைத்து வெறும் லாப நோக்கில் ஆவின் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியிருக்கும் தவெக அரசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மேலும், கடந்த மாதம் முதலமைச்சர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு செய்த பிறகு அதிகரித்து வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை, சிறைக்குச் சென்று ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, தற்போது கைதிகள் தப்பியோடிய சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனத்திற்குச் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்துவந்த நிலையில், தற்போது பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது, முதலமைச்சரின் ஆய்வுகள் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கா? அல்லது அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கான முன்னறிவிப்பா? என்ற அச்சத்தைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
முதலமைச்சரின் ஆய்வுகள் என்பது வெறும் ரீல்ஸ் விளம்பரத்திற்கான நிகழ்வுகளாக இல்லாமல், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக அமைய வேண்டும் என்பதை முதலமைச்சர் இனியாவது உணர்வாரா என்ற கேள்வியும் இதன் மூலம் எழுகிறது.
எனவே, நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளுக்கான விலை உயர்வு உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விலையிலேயே பால் பொருட்களை விற்பனை செய்திட வேண்டும் என ஆவின் நிர்வாகத்தையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் – தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்வது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவெக அரசின் கையாலாகாத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடிய நிலையில், அச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தவெக அரசின் சட்டத் துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர், அத்துறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல், தனது விளம்பர மோகத்திற்காகவும் தனது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவும் செலுத்தும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது தனது துறைகளின் செயல்பாடுகளில் காட்டியிருந்தால், தொடர் மின்வெட்டு முதல் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் வரை பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும்.
ஏற்கெனவே, தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடியிருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் உள்ளனரா? கண்காணிப்புக் கேமராக்கள் முழுமையாகச் செயல்படுகின்றனவா? கைதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கிறார்களா? இத்தகைய அடிப்படைக் கேள்விகள் எழுவதோடு சிறை நிர்வாகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, புழல் சிறையில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது அவரது ஆய்வின் நோக்கம் குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. உண்மையிலேயே சிறை நிர்வாகத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவதற்காக ஆய்வு மேற்கொண்டாரா? அல்லது சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல, ஜோதிடரின் அறிவுரைப்படி பரிகாரம் செய்வதற்காகச் சென்றாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எனவே, சிறைக் காவலர்களையே தாக்கிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் அளவிற்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், கண்காணிப்பில் நிலவும் அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இச்சூழலில், தப்பியோடிய கைதிகளால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பாக அவர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்வதோடு, மாநிலத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் எனச் சிறைத்துறையையும், இவ்விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவியை நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காலியாக வைத்திருப்பது ஏன்? – தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது!
காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு, தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும், உரிய நியமனத்தை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கெனவே, காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த பொறியாளர், கடந்த ஜூன் மாதமே தனது பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் அப்பதவிக்குத் தகுதியான நபரைத் தேர்வு செய்து நியமிக்க முடியாமல் இருப்பது, தவெக அரசின் நிர்வாகத் திறனை மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.
காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, பரம்பிக்குளம்–ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்களில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பெற்றுத்தருதல், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணித்தல், தொழில்நுட்பத் தரவுகளை ஆய்வு செய்தல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் பங்கேற்று தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வலுவான வாதங்களை முன்வைத்தல் எனப் பல்வேறு முக்கியப் பணிகளை மேற்கொள்வதில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவரின் பங்கு இன்றியமையாததாகும்.
காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியான நபரைத் தேர்வு செய்து நியமிப்பதிலேயே இத்தகைய மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கும் தவெக அரசு, தமிழகத்திற்கான உரிமை நீரைப் பெற்றுத்தருவதில் எந்த அளவுக்கு அக்கறையுடன் செயல்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நதிநீர் விவகாரங்களில் அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடனும், மாநிலத்தின் பாசனத் தேவைகளுடனும் நேரடியாகத் தொடர்புடைய சூழலில், காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவியை நிரப்பாமல் தொடர்ந்து காலியாக வைத்திருப்பது, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை தவெக அரசு உணர வேண்டும்.
எனவே, தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல், காலதாமதமின்றி காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே அப்பதவிக்கான நியமனம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதன் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் – ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த இத்திட்டத்தை முடக்கி வைத்துள்ள தவெக அரசுக்குக் கடும் கண்டனம்!
சென்னை மாநகர மக்களுக்குச் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்கும் உயரிய நோக்கில், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தற்போது செயல்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக நாளிதழ்களில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்நிலையங்கள் முடங்கியிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களின் அன்றாடக் குடிநீர்த் தேவைக்காகத் தனியார் நிறுவனங்களிடம் ரூ.40 வரை கொடுத்து ஒரு கேன் தண்ணீரை வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஏற்கெனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி வழங்குவதாக அறிவித்துவிட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் பாலிஷ் செய்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார்களும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் தோல்வியடைந்துள்ள தவெக அரசு, தற்போது இலவசக் குடிநீர் வழங்கி வந்த திட்டத்தையும் முடக்கி, மக்கள் தனியாரிடம் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலையை உருவாக்கியிருப்பது, தனியார் தாராளமயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசின் நோக்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது?
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதிலேயே மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் சூழலில், அவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முடங்கச் செய்திருப்பது தவெக அரசின் மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்து, அவற்றைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரும், அக்கலையின் பெருமையை உலகறியச் செய்து கின்னஸ் சாதனை படைத்தவருமான பத்மஸ்ரீ திரு. தாமு அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சமையலை ஒரு தொழிலாகக் கருதாமல், அதனை ஓர் உன்னதக் கலையாக உயர்த்திக் காட்டிய திரு. தாமு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக சமையல் கலை நிபுணர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, விடுதலை வேட்கைக்கு வித்திட்டு, தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி தியாகம் செய்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு தினமான இன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியைத் திறம்பட ஆட்சி செய்த மன்னரும், ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்களுக்கு அரணாகத் திகழ்ந்தவருமான தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஆங்கிலேய அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல், மண்ணின் மானத்தையும் மக்களின் உரிமையையும் காக்கத் தன் இறுதிமூச்சு வரை போரிட்ட வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, விடுதலை வேட்கைக்கு வித்திட்ட வீர வேங்கைகளும், தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி தியாகம் செய்த மாமன்னர்களுமான மருதுபாண்டியர்களின் நினைவுதினம் இன்று.
ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்தோடும், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தளராத போர்க்குணத்தோடும், மக்களின் உரிமைக்காக உயிரையும் அர்ப்பணித்த தென்னகத்தின் விடுதலைப் போராட்ட முன்னோடிகளான மருதுபாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும், ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சியும், தளராத தன்னம்பிக்கையும் இருந்தால் எத்தகைய சாதனையையும் படைக்கலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்து, ஹாட்ரிக் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சன்னரக அரிசி எனும் பெயரில் ரேஷன் அரிசியைக் கிலோ ₹30-க்கு விற்பனை செய்வதா? – இலவச அரிசியைச் சன்னரக அரிசி எனக் கூறி நூதனமான முறையில் மக்களை ஏமாற்றி விற்கும் தவெக அரசுக்குக் கண்டனம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமுதம் கூட்டுறவுக் கடைகள் மூலம் கிலோ ₹30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், அதன் விற்பனை மந்தமடைந்து, அரிசி மூட்டைகள் அதிகளவில் தேக்கமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிலும், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்த சன்னரக அரிசி விற்பனையில், ரேஷன் அரிசியையே கிலோ ₹30-க்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு, அதனைத் திருப்பி ஒப்படைத்த அவல நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமுதம் கூட்டுறவுக் கடைகளில் சன்னரக அரிசியைக் கிலோ ₹30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்திய அமைச்சர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசியின் தரத்தைப் பரிசோதித்தார்களா? அல்லது தங்களது Reels கண்டென்ட்காக சன்னரக அரிசி வழங்குவதாகக் காட்டிவிட்டு, இலவச ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து, சன்னரக அரிசி என மக்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து ஏமாற்ற முயல்கின்றனரா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, சன்னரக அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தரமான சன்னரக அரிசியைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க அனுமதி மறுப்பு – அரசாணை வெளியிடாமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் தவெக அரசுக்குக் கண்டனம்!
அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுடன் துணையாளர் ஒருவரையும் அனுமதிக்கக் கோரி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் திருநர்களைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்திருந்தும், இதுவரை உரிய அரசாணை பிறப்பிக்கப்படாததால், பேருந்து நடத்துநர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பயணிக்க அனுமதி மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அரசின் அறிவிப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான இந்த முரண்பாடு, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
வெறும் ரீல்ஸ் கன்டென்ட்டுக்காக அவசரகதியில் அறிவிப்புகளை வெளியிடுவதும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அரசாணைகளைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவதும் தவெக அரசின் வாடிக்கையாகிவிட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சீர்கெட்டு வருகிறது.
எனவே, சட்டமன்றத்தில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் துணையாளர் ஒருவரும் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதிக்கும் வகையில் உரிய அரசாணையை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் தனது நிர்வாகத் திறனால் உலகறியச் செய்தவரும் , ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி எழுப்பியவருமான மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா இன்று.
தலைசிறந்த போர்வீரர், கட்டடக் கலையின் முன்னோடி, கப்பற்படை வல்லுநர், மக்கள் நலனில் அக்கறை மிகுந்த ஆட்சியாளர் எனத் தமிழர் வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்ததோடு, வேளாண்மைக்கும், நீர்மேலாண்மைக்கும் முக்கியத்துவம் அளித்து, கடல் கடந்த வளர்ச்சிக்கு வழிவகுத்து உலகளவில் தமிழர் பண்பாட்டினை நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, அவருக்குப் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்படும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவித்திருந்த நிலையில், அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட மத்திய மாநில அரசுகளை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
My Heartfelt birthday wishes to the Hon’ble Union Home Minister Shri Amit Shah Ji.
His dedicated service to strengthening India’s internal security and safeguarding the nation’s unity and integrity is deeply appreciated. May he be blessed with good health, long life, and continued strength in his service to the people and the nation. @AmitShah -
TTV Dhinakaran
@TTVDhinakaran
செஞ்சி அருகே சிறுமி மாயமாகி பத்து நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்காமல் திணறும் தமிழ்நாடு காவல்துறை – குற்றங்களைக் கையாளுவதில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, தற்போது அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதற்கான ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா?
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டு நடுப்பட்டு பகுதியில் கடந்த 11ஆம் தேதி மாயமான 7 வயது சிறுமியைக் காவல்துறையினரால் பத்து நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
சிறுமி மாயமானது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் தேடியும் சிறிய அளவிலான துப்புகூடக் கிடைக்காமல் காவல்துறையினர் திணறிக்கொண்டிருப்பது, காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஏவல்துறையாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினர் மீதும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் தேவையற்ற வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் தவெக அரசால், தமிழகக் காவல்துறை படிப்படியாகச் செயலிழந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுமட்டுமல்லாது, விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமாகிப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் எனத் தமிழகத்தில் சிறுமிகள் தொடர்பான கடத்தல் மற்றும் மாயமாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இவற்றின் பின்னணியில் ஏதேனும் கும்பல்கள் செயல்படுகின்றனவா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறுமி மாயமானது தொடர்பான விசாரணையில் தமிழகக் காவல்துறை திணறி வருவதாலும், அடுத்தடுத்த சிறுமிகள் கடத்தல் தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையிலும், இவ்விசாரணைகளை சிபிசிஐடி (CBCID) அல்லது சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கடமையை உயிர்மூச்சாகக் கொண்டு, நாட்டின் அமைதியையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களின் அளப்பரிய பணியையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவுகூரும் காவலர் வீரவணக்க நாள் இன்று.
குடும்பத்தைப் பிரிந்து, உயிரைப் பணயம் வைத்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு, நாட்டிற்காகத் தங்களின் இன்னுயிரை நீத்த காவலர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் இந்நாளில், இக்கட்டான சூழல்களிலும் இரவு பகலாக உழைத்து, மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் காவல்துறையினரின் அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஏபிபி செய்திக் குழுமத்தின் (ABP Network) தமிழ் டிஜிட்டல் செய்திப் பிரிவான ABP நாடு, புதிதாகத் தொடங்கியிருக்கும் 24×7 செய்தித் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சவால்கள் மிகுந்த இணைய உலகில், புதுமையான மற்றும் தனித்துவமிக்க செய்திகளின் மூலம் வெற்றிமுத்திரை பதித்திருக்கும் ABP நாடு, உண்மைத்தன்மையுடன் கூடிய நடுநிலையான செய்திகளை வழங்கி, மென்மேலும் வளர்ச்சியடைய மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@abpnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 9 (Women’s Singles Class 9) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடாமுயற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திருமதி கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் கைது – எதிர்க்கட்சியினர் மீதான தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி கார்த்திகா, அவரது கணவர் உட்பட அக்கட்சியைச் சார்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் திருமதி கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, திருமதி கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் பூரண குணமடைந்து, விரைவில் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @draramadoss
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
கூட்டுறவு அமுதம் கடைகளில் சன்னரக அரிசி விற்பனை, அமைச்சர்கள் ரீல்ஸ் எடுத்து முடித்ததும் தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்கள் புகார் - நகர்ப்புற, கிராமப்புற மக்களைச் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் அமைச்சரின் அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது!
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஒரு மணி நேரத்திலேயே அரிசி தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள புகார், முதலமைச்சரைப் போலவே அமைச்சர்களும் ரீல்ஸ் எடுப்பதற்காகவே திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
“அரிசி விலை உயரவே இல்லை; அதற்கு நானே சாட்சி” என முதலில் கூறிய உணவுத்துறை அமைச்சர், அடுத்த நாள் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்களையும் கிராமப்புற மக்களையும் உணவுமுறை மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பிரித்துப் பார்க்கும் வகையில் பேசியதோடு, தற்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளதாலும், அரிசி பதுக்கப்படுவதாலும் விலை உயர்ந்துள்ளதாகக் கூறி, வேறு வழியின்றி மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், பதுக்கலைத் தடுத்தல், நியாயமான விலையில் விற்பனை செய்தல் என விலைவாசி உயர்வை முன்கூட்டியே கணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உணவுத்துறை அமைச்சர், விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, பொதுமக்கள் வீதிக்கு வந்து கேள்வி எழுப்பத் தொடங்கியதும், முன்னுக்குப் பின் முரணான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி மக்களைத் திசைதிருப்ப முயன்றிருப்பது தவெக அரசின் இயலாமையையே வெளிப்படுத்துகிறது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஆடு, மாடுகளுக்குப் பயன்படுத்தும் தரத்தில்தான் உள்ளது எனக் கூறியதும், தற்போது உணவுத்துறை அமைச்சர் தற்பெருமை பேசிக்கொண்டு, கிராமப்புற மக்கள் ரேஷன் அரிசியைத்தான் உண்கின்றனர் எனக் கூறுவதும், கிராமப்புற மக்களை ஏதோ வேற்றுக்கிரகவாசிகளைப் போலவும், அவர்களைப் பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைச்சர்கள் அணுகுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி மக்களைத் திசைதிருப்புவதைக் கைவிட்டுவிட்டு, விலைவாசி உயர்வால் மக்கள் அடைந்துவரும் பாதிப்புகளை உணர்ந்து, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கப்பட்டுள்ள கிலோ ரூ.30-க்கான சன்னரக அரிசியைப் போதுமான அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உழைப்பின் மேன்மையையும், அறிவின் ஆற்றலையும் போற்றி வணங்கும் ஆயுதபூஜை மற்றும் தீமைகளை வென்று நன்மை வெற்றி பெறுவதைக் குறிக்கும் விஜயதசமி திருநாள்களில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பே உயர்வு தரும் என்ற உயரிய சிந்தனையை மனதில் ஏந்தி, நாம் பயன்படுத்தும் கருவிகள் முதல் நாம் சார்ந்திருக்கும் தொழில்கள் வரை அனைத்தையும் மதித்து வணங்கிடும் திருநாளாம் ஆயுதபூஜையும், நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியையும் உழைப்பிற்கேற்ற பலனையும் வழங்கிடும் நன்னாளாம் விஜயதசமியும், தடைகளைத் தகர்த்திடும் மனவலிமையையும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணித்திடும் ஊக்கத்தையும் அளித்து, வாழ்வில் மென்மேலும் முன்னேற வழிவகுக்கட்டும்.
இத்தகைய சிறப்புமிக்க திருநாள்களில், மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், அன்பும், வளமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழகமெங்கும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தழைத்தோங்கிடவும் வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை – அடுத்தடுத்த மழைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறது தவெக அரசு?
சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதும் சென்னை மாநகராட்சி மற்றும் தவெக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், தேங்கியிருக்கும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாகவே, ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கண்காணிப்புப் பணிக்காக நியமித்ததோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், களப்பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே பொதுமக்களை மழை பாதிப்புகளிலிருந்து காக்கும் என்பதை இனியாவது உணர வேண்டும்.
எனவே, மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு, களப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையாலும், துள்ளல் மிகுந்த கானா பாடல்களாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றவரும், ஏழை, எளிய மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய இசையை அமைத்து, ‘தேனிசைத் தென்றல்’ என அனைவராலும் போற்றப்பட்டவருமான பிரபல இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரைப்பட இசையமைப்பாளராக மட்டுமல்லாது, தமிழ் இசை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்த கலைஞராகவும் திகழ்ந்த திரு. தேவா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாகப்பட்டினத்தில் சுமார் 100 கிலோ அளவிலான உயர்ரக போதைப்பொருள் பதுக்கல் – தவெக நிர்வாகி கைது! கட்சிக்குள்ளேயே போதைப்பொருள் கடத்துவோரை வைத்துக்கொண்டு, பொதுவெளியில் போதைக்கு எதிராக மாரத்தான் ஓடி நடிப்பதில் என்ன பயன்?
பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததாக, நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கத் தடுப்புப் படைகளை அமைத்து கண்காணிப்பதாகக் கூறிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலில் கண்காணிக்க வேண்டியது தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே என்பதைத் தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரைத் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, அவர்களுக்குப் பொறுப்புகளையும் வழங்கிவிட்டு, “போதையில்லாத தமிழகம்” என்ற பெயரில் மாரத்தான் ஓடுவதன் மூலம் போதைப்பொருளை ஒழித்துவிடலாம் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயலாகும்.
எனவே, ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பாக, தனது கட்சியில் உள்ளவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு , தமிழகம் முழுவதும் பரவியுள்ள போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-G RAM G) கீழ் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பணியாற்றும் இத்திட்டத்தில், வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டிய ஊதியம், பத்து வாரங்களைக் கடந்தும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால், தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே, அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உழைப்பிற்கான ஊதியத்தைக்கூட உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்வதால், அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகைக் காலங்கள் அவர்களுக்குச் சோதனை மிகுந்த காலங்களாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-G RAM G) தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையைப் பரிசீலித்து, அவர்களுக்கான ஊதியத்தை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சரும், எனது அன்பிற்குரிய சகோதரருமான திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண உடல்நலத்துடனும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@NainarBJP @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாலைமுரசு நாளிதழின் அதிபரும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கோலோச்சியவருமான திரு. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களின் நினைவுதினம் இன்று.
மாலைமுரசு நாளிதழின் வளர்ச்சிக்கும், தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னேற்றத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய திரு. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களின் தமிழ்ப் பணியையும் சமூகப் பற்றையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் பிறந்து, பாரதத்தின் விடுதலை வேட்கைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த மாமன்னரும், தமிழர்களின் வீரத்தைத் தலைமுறைகள் கடந்தும் பறைசாற்றும் சுதந்திரப் போராட்ட வீரருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமலும், அடக்குமுறைக்கு அடிபணியாமலும், மண்ணின் உரிமைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் துணிந்து நின்ற மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்கக் கடுமையாக உழையுங்கள் என்ற உயரிய சிந்தனையை இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தவரும், தனது அறிவாற்றல், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியில் மிகபெரிய பங்காற்றியவரும், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அறிவு, ஒழுக்கம், உழைப்பு, நேர்மை ஆகியவையே வெற்றிக்கான படிகள் என்பதைத் தனது வாழ்க்கையின் மூலம் உணர்த்தியதோடு, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் அதன் வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கிய போர்ப்படை தளபதிகளில் முதன்மையானவரும், அரசியல் பயணத்தில் தான் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு இறுதிவரை விஸ்வாசமாக இருந்தவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனது ஆருயிர் நண்பர் திரு.வெற்றிவேல் அவர்களின் நினைவு தினம் இன்று...
அரசியல் பயணத்தில் எத்தனையோ ஏற்ற, இறக்கங்களை கண்டாலும் தான் சார்ந்த இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பணியாற்றிய நண்பர் திரு.வெற்றிவேல். அவர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்புமிக்க உழைப்பும், இயக்கத்தின் மீது கொண்டிருந்த விஸ்வாசமும், அரசியலில் அவர் பதித்த தடங்களும் என்றென்றும் நம் நினைவில் வாழும் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நிர்வாகத் திறனற்ற தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் - காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில், தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியோடு தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் விவசாயப் பெருமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
காவிரியிலிருந்து பெற வேண்டிய நீரை பெற்றுத்தர முடியாத தவெக அரசை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்து தங்களது சொந்த செலவில் பம்பு செட்டுகளை அமைத்து நிலத்தடி நீரின் மூலம் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காமல் வஞ்சித்த அரசால் விதைத்தவர்களின் கண்முன்னே பயிர்கள் கருகும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது.
விவசாயிகளின் தோழன் என்றும், அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுவதாகவும் பிரச்சாரத்தின் போது வாய் முட்டப் புளுகிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தவெக அரசின் கையாலாகாத் தனத்தால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
தவெக கொடுத்த வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான பயிர் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றாமல் மாநிலம் முழுவதும் விவசாயிகளை போராட வைக்கும் தவெக அரசும், அதன் முதலமைச்சரும் தான் விவசாயிகளின் தோழனா? அடுத்த ஜென்மத்திலும் துரோகம் இழைப்பதற்காகத்தான் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறாரா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, அரசின் நிர்வாகத் திறமையின்மையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் உடனடியாக தள்ளுபடி செய்திடுவதோடு, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நிர்வாகத் திறனற்ற தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் - காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில், தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியோடு தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் விவசாயப் பெருமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
காவிரியிலிருந்து பெற வேண்டிய நீரை பெற்றுத்தர முடியாத தவெக அரசை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்து தங்களது சொந்த செலவில் பம்பு செட்டுகளை அமைத்து நிலத்தடி நீரின் மூலம் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காமல் வஞ்சித்த அரசால் விதைத்தவர்களின் கண்முன்னே பயிர்கள் கருகும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது.
விவசாயிகளின் தோழன் என்றும், அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுவதாகவும் பிரச்சாரத்தின் போது வாய் முட்டப் புளுகிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தவெக அரசின் கையாலாகாத் தனத்தால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
தவெக கொடுத்த வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான பயிர் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றாமல் மாநிலம் முழுவதும் விவசாயிகளை போராட வைக்கும் தவெக அரசும், அதன் முதலமைச்சரும் தான் விவசாயிகளின் தோழனா ? அடுத்த ஜென்மத்திலும் துரோகம் இழைப்பதற்காகத்தான் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறாரா ?என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, அரசின் நிர்வாகத் திறமையின்மையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் உடனடியாக தள்ளுபடி செய்திடுவதோடு, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ரூபாய் 35-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் – தவெகவின் இந்த ஒப்பந்தம், ”மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.
கடந்த ஆட்சியில் அதிக ஊழலுக்கு வழிவகுத்த குறுகிய கால மின்சாரக் கொள்முதலைக் குறைத்து, மாதத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுப் பேசிய எரிசக்தித்துறை அமைச்சர் திரு. நிர்மல்குமார் அவர்கள், அதே குறுகிய காலக் கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி, ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய் கொடுத்து அவசரகதியில் வாங்குவது, “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
தமிழகம் முழுவதும் அன்றாடம் அரங்கேறும் மின்வெட்டைக் கண்டித்து, முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதிக்கே வந்து போராடிய பின்னரும்கூட, மின் தட்டுப்பாடு இல்லை எனவும், எதிர்க்கட்சிகளின் சதிச்செயல் எனவும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்கள், தற்போது அவசரகதியில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்குவார்களா?
அதிகப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே மின்சாரம் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதாகத் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு அதே வெளிச்சந்தையில் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எனவே, தன் இயலாமையை மறைக்க, அவசரகதியில் வெளிச்சந்தையில் மக்கள் வரிப்பணத்தில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் செலுத்தும் கவனத்தைத் தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், தடையற்ற மின்சாரத்தை விநியோகம் செய்திடவும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் செலுத்திட வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு என்பது உருவாக்கப்பட்ட பிம்பமா ? – உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சரே பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை திசைதிருப்ப முயல்வதா?
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவைகளில் முதன்மையாக இருக்கும் அரிசியின் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரிசியின் விலை உயரவில்லை எனவும், உணவுப் பொருள் தட்டுப்பாடு என்பதும் உருவாக்கப்பட்ட பிம்பம் என உணவுத்துறை அமைச்சர் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ எடைகொண்ட சாதாரண புழுங்கல் அரிசி மூட்டை தற்போது 1800 ரூபாய்க்கும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் விலை மூட்டைக்கு 600 ரூபாய் உயர்ந்து 2000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அரசி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்படி எதுவும் இல்லையே என்ற தொணியில் உணவுத்துறை அமைச்சர் பதிலளித்திருப்பது அவரின் அறியாமையையும், அலட்சியத்தையுமே வெளிப்படுத்துகிறது.
அரிசி விலை உயர்வோடு, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய துறை சார்ந்த அமைச்சரே, இது பண்டிகை காலங்களில் நடைபெறும் விசயம் எனக்கூறி அப்பிரச்னையை திசை திருப்ப முயல்வது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் துளியளவும் பொருத்தமற்றதாகும்.
எனவே, சாதாரண நாட்களாக இருந்தாலும் பண்டிகை காலமாக இருந்தாலும் விலை உயர்வால் பாதிக்கப்படுவது மக்கள் தான் என்பதை உணர்வதோடு, உணவுத்துறைக்கு தான் அமைச்சர் என்பதையும், உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதையும் இனியாவது உணர்ந்து, இதுபோன்ற திசைதிருப்பும் செயல்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு சாமானிய மக்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியிருக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் அவர்களையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @AdvocateVenkatP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணிநிரந்தரம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீறி போராட வந்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது -
மக்களின் குரலை கேட்பது தான் மக்களாட்சி அவர்களின் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி.
பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுத்து அவர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் அடைத்து வைத்ததோடு, அதனை மீறி போராட வந்தவர்களை குண்டுக்கட்டாக கைதுசெய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான போராட்டத்தின் மூலமாக தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்ற பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை குற்றவாளிகளை போல சித்தரித்து அவர்களை வீட்டுக் காவலில் வைத்தும், கைது செய்திருப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.
தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்சாரத்துறை பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் தங்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பெருமை பேசிக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதிநிதிகளை வீட்டுக் காவலில் அடைப்பது, காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுவது என தவெக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்துமீறல்களும், அராஜகப் போக்குகளும் நாம் தமிழகத்தில் தான் வாழ்கிறோமோ அல்லது அடிமை நாட்டில் வாழ்கிறோமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என மருத்துவத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TNHealthDept @arunraajkg -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒவ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சியாகவும், ஒட்டுமொத்த உலகின் எதிர்கால நம்பிக்கையாகவும் திகழும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் உலக பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேற உறுதுணையாக இருக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற வரிகளுக்கு ஏற்ப, இன்று தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகளால் கேள்விக்குறியாகியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தாராளமான தனியார்மயமாக்கல், கொத்துக் கொத்தாக நடைபெறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் எனத் தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் அம்மாவின் தொண்டர்களால் வீழ்த்தப்பட்டு தமிழகத்தின் பொற்காலமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது உறுதி. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அமைதி மற்றும் சர்வதேசச் சட்டத்தை மேம்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினரான நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதி, சமத்துவம் மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய கொள்கைகளுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் நவநீதம் பிள்ளை அவர்களின் பொதுப்பணியும், அமைதியான உலகை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@draramadoss -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சாதியக் கொடுமைகளுக்கும், சமூக அநீதிகளுக்கும் எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டத் தன் வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்த இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது போராட்டத்தையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திண்டுக்கல் மாவட்டம் மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் – நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகமே புகாரை மூடி மறைக்க முயன்றது ஏன்?
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட மானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் அருந்தும் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டவுடன், அது குறித்து புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகமே, அவ்விவகாரத்தை இரண்டு நாட்களாக மூடி மறைக்க முயன்றிருப்பதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா? அல்லது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இவ்விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மானூர் தொடக்கப்பள்ளி உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் இருப்பதால், சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக அரசுப்பள்ளிகள் மாறிவருவதோடு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியமே இதுபோன்ற இழிச் செயல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இச்சம்பவம் குறித்து காவல்துறையின் உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி, இழிச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தனியாருக்குத் தாரைவார்க்கும் தவெக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு – அனைத்து பணிகளையும் தனியாரிடம் வழங்கிவிட்டு யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறது தவெக அரசு?
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 12 மண்டலங்களில் மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோகத் திட்டத்தின் மூலம் (Revamped Distribution Sector Scheme) ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்ற நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த அறிவிப்பை மின்சார வாரியமே செயல்படுத்த முன்வராமல், தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மின்சார வாரியத்தின் முடிவால், குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரமும், விவசாயம் மற்றும் நெசவுத் தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் நிறுத்தப்படும் அபாயம் உருவாகும் என்பதோடு, மின்சார வாரியத்தில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழல் ஏற்படும் என மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இதேபோன்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தி, ரீசார்ஜ் செய்யத் தவறினால் மின் துண்டிப்பு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக, அம்மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதோடு, தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் Prepaid திட்டமா அல்லது Postpaid திட்டமா? தமிழக மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகை தொடருமா? Peak Hour நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா? ஏற்கனவே உள்ள 3 கோடி மீட்டர்களின் நிலை என்ன? என மின் நுகர்வோரின் எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிக்காமல், மொட்டைக் கடுதாசி போல டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் தூய்மைப் பணிகள் தொடங்கி, குடிநீர் விநியோகம், அரசுப் பேருந்துகளுக்கான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம், பாதாளச் சாக்கடைத் திட்டம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் என தமிழகத்தின் அனைத்துப் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, தவெக அரசு யாருக்காக ஆட்சி நடத்தப்போகிறது என்ற கேள்விதான் ஒட்டுமொத்த மக்களின் மத்தியிலும் தற்போது எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கும் சென்னை உட்பட 12 மண்டலங்களில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் இருக்கும்போது, அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை சொற்ப எண்ணிக்கையில் வெளியிடுவதா? – அதிகப்படியான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்போர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 46 வகையிலான பணிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தேர்வர்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு வெறும் 6,574 காலிப்பணியிடங்களை அறிவித்திருப்பது, அரசுப் பணி கனவில் அத்தேர்வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இரவு பகலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுத் துறைகளில் நிலவும் அனைத்து காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக, லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிலவும் தமிழக அரசில் 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் அறிவிப்பாணையை வெளியிட்டிருப்பது, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தரப் பணி என வேலைவாய்ப்பு சம்பந்தமாக தவெக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற தற்போதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களையும் சொற்ப அளவிற்கு குறைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடும் வகையிலும், தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப்பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
I extend my heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi Ji, on completing 25 years of dedicated public service both as Chief Minister and the Prime Minister.
Through his 25 years of public life, the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji has set an example of dedication and hard work by working for the welfare of the poor and underprivileged, the well-being of farmers, the empowerment of women and youth, infrastructure development, economic growth, a self-reliant India, and remarkable achievements in space and technology, thereby enhancing India’s stature and influence on the global stage.
I am delighted to extend my best wishes for the continued success of the Hon’ble Prime Minister’s good governance and for his dedicated service to the nation in the years ahead.
@narendramodi @PMOIndia @BJP4India @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்துச் சென்று செவிலியர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் நேற்று இரவோடு இரவாக காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்களின் உரிமைகளுக்காகப் நியாயமான முறையில் போராடி வரும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி, போராட்டக் களத்தில் மின்சாரத்தைத் துண்டித்தும், பந்தல்களை அகற்றியும், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்குக் காயம் ஏற்படும் அளவிற்கு அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும் அராஜகப் போக்கில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
முறையான முன் அனுமதி பெற்று அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்துச் சென்று, அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தது செவிலியர்களுக்கு தவெக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகமாகும்.
தேர்தலுக்கு முன்பு போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்து, தங்களது தேர்தல் அறிக்கையில் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராடி வரும் செவிலியர்களைக் காவல்துறையை வைத்து அடக்கி ஒடுக்குவதும், போராட்டக் களத்தில் இருந்த செவிலியர்களைப் பார்த்து காவலர் ஒருவரே, “வேண்டாம், உங்க உயிர் முக்கியம்” என மிரட்டுவதும், சினிமாவில் தான் ஹீரோ; நிஜத்தில் தான் ஒரு வில்லன் என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தெரிவிக்க முற்படுகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்க முன்களத்தில் நின்று பணியாற்றிய செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி விலையும் உயர்வதால் பொதுமக்கள் பாதிப்பு – தொடர்ந்து அதிகரித்து வரும் விலை வாசி உயர்வை ஐந்து மாதங்களாக கண்மூடி வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருட்களில் ஒன்றான அரிசியின் சந்தை விலை, தவெக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளதாக வரும் செய்திகள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களோடு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது அரிசியின் விலையும் தொடர்ந்து 60% க்கு மேல் அதிகரித்திருப்பது ஏழை, எளிய சாமானிய மக்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தராத தவெக அரசால், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சாகுபடிப் பரப்பளவு குறைந்ததோடு, குறுவை சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதோடு, மக்களின் அடிப்படைத் தேவையான அரிசியின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால், ஒரு வேளை உணவிற்கே ஏழை, எளிய மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பயன்படுத்தலாம் என்றால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் சட்டசபையில் சொன்னதைப் போலவே நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி ஆடு, மாடுகளுக்கு வழங்கும் நிலையில் தரமற்றதாக இருப்பதால் அதனையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேநேரத்தில், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்கப்படும் எனப் பெரியளவில் அறிவித்திருந்தாலும், பெரும்பாலான நியாய விலைக் கடைகளுக்கு போதுமான அளவு வெங்காயம் வழங்கப்படாத காரணத்தால், ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையே நீடிக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, பால் தட்டுப்பாடு, மறைமுக மின் கட்டண உயர்வு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசிய விவகாரங்களிலும் தவெக அரசு மெத்தனமான மற்றும் அலட்சியமான போக்குடன் செயல்படுவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
எனவே, விளிம்புநிலை குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை நேரடியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அன்பும் இரக்கமும் நிறைந்த வாழ்வே இறைவனை அடையும் வழி எனப் போதித்த தத்துவஞானியும், மனிதநேயத்தின் மகத்தான ஒளிவிளக்காக விளங்கிய மகானுமான அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்கள் அவதரித்த தினம் இன்று.
பசியில்லாத சமுதாயம், சாதி பேதமற்ற மனிதநேயம், அனைத்து உயிர்களிடத்திலும் கருணை ஆகியவற்றையே லட்சியமாகக் கொண்டிருந்த வள்ளலார் வழங்கிய அருட்சிந்தனைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த தியாகச் செம்மலும், உயிர் பிரியும் தருணத்திலும் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த மாவீரருமான திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தேசப்பற்றின் அடையாளமாகவும், தியாகத்தின் இலக்கணமாகவும், இளைய தலைமுறையினருக்கு வீரத்தின் பாடமாகவும் திகழ்ந்த கொடிகாத்த குமரன் அவர்களின் தியாகத்தையும் துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்குவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பிய விடுதலைப் போராட்ட வீரரும், மக்களின் மனங்களில் சுதந்திர உணர்வை ஆழமாக வேரூன்றச் செய்தவருமான போராளி சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த நாள் இன்று.
சிறைக் கொடுமைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்ட போதிலும், நாட்டின் விடுதலைக்கான தனது பணியைத் தனது இறுதிமூச்சு வரை தொடர்ந்த தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா அவர்களின் தேசப்பணியை எந்நாளும் போற்றி வணங்குவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனர், மதிப்பிற்குரிய பழ. நெடுமாறன் அவர்களின் இளைய புதல்வரும், புத்த துறவியுமான திரு. மாணிக்கம் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
புதல்வரை இழந்து தவிக்கும் மதிப்பிற்குரிய பழ. நெடுமாறன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த பெருந்தலைவரும், அரசியல் அதிகாரத்தைத் தனக்காகப் பயன்படுத்தாமல், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும் அர்ப்பணித்தவருமான கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று.
எளிய குடும்பத்தில் பிறந்து, விடுதலைப் போராட்ட வீரராக வாழ்க்கையைத் தொடங்கி, தன்னலமற்ற உழைப்பாலும், தியாகத்தாலும் இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய உன்னதத் தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராடி, இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவரும், அகிம்சை எனும் மந்திரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் வரலாற்றையே புரட்டிப்போட்டவருமான தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று.
எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றோடு, சத்தியத்தை ஆயுதமாகவும், அகிம்சையைப் பாதையாகவும் கொண்டு, மானுட நலனுக்காகவும், உயர்வுக்காகவும் ஓயாமல் உழைத்த மகாத்மா காந்தியடிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஊதிய உயர்வு, தரமான சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம் - 630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக தாராபுரத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன பொய் அடுத்த நாளே அம்பலம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கும் உணவகங்கள், தரமான சமையல் உபகரணங்கள் இல்லாததால் உணவின் தரம் குறித்து அவ்வப்போது எழும் பல்வேறு விமர்சனங்கள் என அவலங்களுக்கு மத்தியில் அம்மா உணவகங்கள் இயங்கி வரும் நிலையிலும், இவை அனைத்தையும் சீர்செய்ய வலியுறுத்தி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலிலும், தவெக ஆட்சிக்கு வந்தபின்பு 630 அம்மா உணவகங்களைச் சீரமைத்து செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாகப் பச்சையாகப் பொய் சொல்வதற்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாய் கூசவில்லையா?
ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்களைச் சீரமைக்கவும், மக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தான் பிறப்பித்த உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை என்றாவது ஆய்வு செய்திருக்கிறாரா? அல்லது அதிகாரிகளிடம் தான் கேட்டறிந்திருக்கிறாரா? இவற்றில் எதையுமே செய்யாமல், அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாகப் பொய் பேசியிருப்பது ஏழை மக்களை வாக்கு அரசியலுக்காக ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, அங்கு உணவு அருந்த வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவினை வழங்கி, தேவையான அனைத்து விதமான வசதிகளையும் உண்மையாகச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்த் திரையுலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் முதன்மையானவரும், தமிழ் மொழியின் அழகையும் ஆழத்தையும் தனது கம்பீரமான குரலால் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான நடிகர் திலகம், செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வீரம், பாசம், கோபம், சோகம், காதல், தியாகம், கம்பீரம் என எந்தவொரு காட்சியாக இருந்தாலும், தனது உடல்மொழியாலும் உணர்ச்சிமிகுந்த உச்சரிப்பாலும் நடிப்புக்கே புதிய இலக்கணம் வகுத்த நடிப்புச் சக்கரவர்த்தியின் கலைத்திறனைச் சிறப்பிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என மத்திய அரசை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை மற்றும் நாகர்கோவிலில் மாநகராட்சி சார்பில் நடைபெறவேண்டிய பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி - தமிழகத்தில் நடப்பது தவெக ஆட்சியா? தனியார்களின் ஆட்சியா?
தமிழகத்தின் மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்திருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை அறிவித்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் நேரடியாக தொடர்புடைய பாதாள சாக்கடைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே அதனை தனியாருக்கு தாரை வார்க்க முனைவது கடும் கண்டனத்திற்குரியது
ஏற்கனவே மாநகராட்சிகளில் குடிநீர் தொடங்கி, தூய்மைப் பணிகள் வரை ஒன்றன் பின் ஒன்றாக தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பணிகளை தனியார் நிறுவனம் முறையாக செயல்படுத்தவில்லை என எழும் தொடர் குற்றசாட்டை கருத்தில்கொள்ளாமல், தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்தையும் தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம் தமிழகத்தில் நடப்பது தவெக ஆட்சியா ? அல்லது தனியார்களின் ஆட்சியா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் நலன்களுக்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் செயல்பட வேண்டுமே தவிர அனைத்து திட்டங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க அல்ல, என்பதை உணர்ந்து, மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 4*400 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணிக்கும் அதில் அங்கம் வகித்த தமிழகத்தைச் சார்ந்த வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெண்கலம், வெள்ளி ஆகியவற்றோடு தங்கப் பதக்கத்தையும் வென்று இந்தியாவின் தடகளப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கும் தமிழகத்தின் தங்க மங்கை வித்யா ராமராஜ் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேனி மாவட்ட மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து கடமலைகுண்டில் தொடரும் போராட்டம் - மதுரைக்கு திட்டங்களை தொடங்கி வைக்க சென்றுள்ள முதலமைச்சர், அருகில் உள்ள கடமலைக்குண்டில் வாழ்வாதாரத்திற்காக போராடும் மலைக்கிராம மக்களை நேரில் சந்திக்காமல் தவிர்ப்பது அவர்களுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துர் - மேகமலை புலிகள் காப்பகம் அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம் என 98-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்து தங்களின் நிலம், வீடு, தொழில் ஆகியவற்றோடு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதுரைக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்துள்ள முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் மட்டுமே உள்ள மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தும் கடமலைக்குண்டுவுக்கு சென்று அவர்களை சந்திக்காமல் தவிர்த்திருப்பது, நாளை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள வழக்கின் விசாரணையில் அரசு தங்களை கைவிட்டுவிடுமோ ? என்ற பதற்றமும் அச்சமும் அம்மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி தமிழக மக்கள் தான் என் சொந்தம், மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே தான் அரசியலுக்கு வந்ததாக வீரவசனம் பேசிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மலைகிராம மக்களுக்கு செய்யும் நன்றி கடன் இது தானா? என போராடும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, மலைக்கிராம மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை சென்றுள்ள முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அங்கிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள கடமலைக்குண்டுவுக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடுவதோடு, நாளை வரவுள்ள வழக்கில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலான வாதங்களை எடுத்துரைக்கவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சவிதா ஸ்ரீ, வெள்ளிப்பதக்கம் வென்ற குகேஷ், வெண்கலப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஓபன் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் விடாமுயற்சியின் மூலம் சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்திருக்கும் வீரர் அபய் சிங் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தினத்தந்தி நாளிதழை நிறுவி பத்திரிகைத் துறையின் ஜாம்பாவானாகத் திகழ்ந்தவரும், தமிழின் பெருமையையும், தமிழர்களின் உரிமையையும் உலகறியச் செய்த பெருமைக்குரியவருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று...
தமிழர்களின் முன்னேற்றத்தையும் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சியையுமே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்திட்ட சி.பா.ஆதித்தனார் அவர்களின் தமிழ்ப் பணியையும், சமூக அக்கறையையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு - பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சும் தவெக அரசால் எப்படி வெளிப்படையான ஆட்சியை வழங்க முடியும் ?
தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வரும் சமுதாய மற்றும் சாதிய மோதல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாணவர்கள், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான விவரங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் தாராளப்புழக்கத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்கும் அனைத்து தகவல்களும் Intelligence உடன் தொடர்புடையது என வகைப்படுத்தி மூடி மறைக்க முயல்வது தன் நிர்வாகத் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.
வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் அதிகார பயன்பாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களை மக்களின் பார்வைக்கு எட்டாத வகையில் மறைத்து வைப்பது எந்த வெளிப்படைத்தன்மையில் வருகிறது என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும்
ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் அரசின் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்க முயலும் தவெக அரசு, தனது ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை முழுமையாகத் துண்டித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசு நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகமாக இருக்கவே முடியாது என்பதை உணர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளிக்கும் அரசிதழை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கரூரில் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவு - நினைவு மட்டுமல்ல நீதியும் உண்மையும் தேவை
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோன முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று
என் நெஞ்சில் குடியிருக்கும் என தனது பேச்சைத் தொடங்கும் தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன்னை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தார்மீக பொறுப்பேற்காமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு தற்போது அப்பெருந்துயரத்தை ஒரு சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம் ?
உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரணமும், பணிப்பலன்களும் மட்டுமே தீர்வாக அமையாது என்பதோடு, தமிழக மக்களின் மனங்களில் அழியாத ரணமாக பதிந்திருக்கும் பெருந்துயரம் தொடர்பாக சி.பி.ஐ மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? - தூய்மைப் பணிகள் தொடங்கி விமான நிலையம் வரை தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் ?
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட போதே, மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி மின் கணக்கீட்டாளர் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகத் தனத்தை தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டிருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக, தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும், நடத்துனர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க தவெக இலக்கு நிர்ணயித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TANGEDCO_Offcl -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ( Squash ) விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் ( Squash ) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழக இளம் விளையாட்டு உந்து சக்தியாகத் திகழ்ந்திருக்கும் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோரின் வெற்றிப் பயணம் விளையாட்டு உலகின் உச்சத்தை தொட வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கம்பு ஊன்றி தாண்டுதல் (Pole Vault) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும்
தமிழகத்தைச் சார்ந்த வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் ஒவ்வொரு தடையையும் தாண்டி முன்னேறி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் பரணிகா இளங்கோவன் அவர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே பட்டப்பகலில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன.
அரசுப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறியிருக்கும் கொடூரச் சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டிய காவல்துறையோ, இவ்விவகாரத்தை வெளியே தெரியாமல் மூடி மறைக்க முயல்வதாக பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவ, மாணவியர்கள் கல்வி கற்க வேண்டிய அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதை விட, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம்தான் முக்கியம் என கருதும் திரு.ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் அரங்கேறும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அக்குற்றங்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் போலவே ரீல்ஸ் எடுப்பதில் முழுமையாக இறங்கிவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என தாம்பரம் மாநகர காவல்துறை அளித்திருக்கும் அரைகுறையான விளக்கம், ஏற்கனவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் வீரமணி தொடர்பான போக்ஸோ வழக்கைப் போலவே இவ்வழக்கையும் காவல்துறை மூடி மறைக்க முயல்கிறதோ என்ற கேள்வியும் அனைவரின் மத்தியில் இந்நேரத்தில் எழுப்பியுள்ளது.
எனவே, ஒட்டுமொத்த பள்ளி மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தை மூடி மறைக்க முயலும் நடவடிக்கையைக் கைவிட்டு, விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் கலப்பு அணிகளுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த வித்யா ராமராஜ் மற்றும் விஷால் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை, ஒருங்கிணைப்பும், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு உழைப்பின் மூலமாக வெள்ளிப்பதக்கம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையை சேர்த்திருக்கும் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவரும், மதிப்பிற்குரிய சகோதரருமான திரு. ஏ.சி. சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண உடல்நலத்துடனும் தங்களது மக்கள் பணியையும், கல்விப் பணியையும் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@DrACSofficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பிரபல தொழிலதிபர் வீரமணி தொடர்புடைய வழக்கில் அடுத்தடுத்து வெடிக்கும் பூகம்பங்கள் – நேர்மையான, முழுமையான விசாரணைக்காக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க தவெக அரசு முன்வர வேண்டும்!
பிரபல தொழிலதிபர் வீரமணி தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
2025 ஆம் ஆண்டில்தான் இவ்வழக்கு தொடர்பாக புகார் பெறப்பட்டதாகவும், போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வழக்கின் விசாரணையை முடித்துவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசியல் பிரமுகர் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
உரிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணை நடத்தாதது ஏன்? தீவிர விசாரணை நடைபெறுவதற்கு முன்பாகவே வழக்கை முடித்துவைக்க முயன்றது ஏன்? காவல்துறையின் விசாரணையில் அரசியல் ரீதியிலான அழுத்தம் இருந்ததா? குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு இவ்வளவு அலட்சியமாக கையாளப்பட்டது எப்படி? என அடுத்தடுத்து எழும் கேள்விகளின் பின்னணியில் மிகப்பெரிய வலையமைப்பு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இவ்வழக்கில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களின் பெயர்களும் அடிபடுவதால், வழக்கின் விசாரணை நேர்மையான, வெளிப்படையான மற்றும் முழுமையான முறையில் நடைபெற ஏதுவாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்கு ஆகும் செலவை விட அதை விளம்பரப்படுத்துவதற்கு அதிகம் செலவு செய்வதா? — தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்!
திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை அருந்திய 36 மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது அரசின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருப்பது, அரசுப் பள்ளிகளின் சமையலறைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்க வழங்கப்படும் காலை உணவு, தவெக அரசின் அலட்சியப் போக்காலும் அதீத விளம்பர மோகத்தாலும், மாணவர்களின் உடல்நலத்திற்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் நஞ்சாக மாறியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வரும் சமையல்கூடங்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவறைகள் என அரசுப் பள்ளிகளின் அவலநிலைகள் தொடர்கின்றன. ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ தேவையற்ற கதைகளையும் அடுக்குமொழி வசனங்களையும் பேசி வருவது, அவர் இன்னும் பட்டிமன்ற மேடையை விட்டு வெளியே வரவில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும், கடந்த 22ஆம் தேதி முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட செலவை விட, அந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மொழிகளில் நாளிதழ்களின் முதல் பக்கங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுதான் அதிகம் என்ற எழுந்திருக்கும் விமர்சனத்திற்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
எனவே, பல்லி விழுந்த உணவை அருந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கும், அதில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டின் மன்னார்குடியைச் சேர்ந்த வீரர் திரு. ஹரிஹரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் ஆசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்று, தமிழகத்தின் விளையாட்டு வரலாற்றில் பெருமைமிகு அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ள வீரர் ஹரிஹரன் அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் தனித்துவமிக்க நாளிதழான தினத்தந்தியின் அதிபரும், பத்திரிகை உலகில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்து தனி முத்திரை பதித்தவருமான பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பத்திரிகைத் துறையின் வளர்ச்சிக்கு புதிய பாதையை அமைத்து, கல்வி, விளையாட்டு, சமூக சேவை எனப் பல்வேறு துறைகளிலும் வெற்றிகண்ட சிவந்தி ஆதித்தனார் அவர்களின் அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ரீல்ஸ் வீடியோவுக்காக மக்களைப் பார்த்துக் கை அசைத்த முதலமைச்சர், மின்வாரிய அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களைச் சந்திக்காமல் சென்றது ஏன்?
தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக, மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, அதே மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் அருகே, காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குமாறும் போராடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எழுப்பும் குரல் கேட்கவில்லையா?
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தாமல், "நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்" என ரீல்ஸ் வீடியோக்களுக்காக மட்டுமே முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தனது மனம் போன போக்கில் சம்பிரதாயத்திற்கென ஆட்சியை நடத்தி வருவதாக அரசு ஊழியர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக, காற்று நின்றுவிட்டது, தண்ணீர் வற்றிவிட்டது, சோலார் மின்சாரத்தைச் சேமிக்க இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவிற்கு எரிசக்தித் துறை அமைச்சரும் சக அமைச்சர்களும் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்து வந்த நிலையில், பணியாளர்களின் பற்றாக்குறையும், பராமரிப்புப் பணிகள் நடைபெறாததும் தான் மின்வெட்டுக்கான காரணம் என்ற புதுக் கதையை எரிசக்தித் துறை அமைச்சர் இன்று வடிவமைத்துள்ளார்.
மின்சாரத் துறைக்குப் பொறுப்பு வகித்துக்கொண்டு, அந்தத் துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து பிரச்னைகளிலும் மூக்கை நுழைப்பதையும், அரைகுறை அறிவோடு "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்" போல் சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் எரிசக்தித் துறை அமைச்சர், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, தமிழகமே இருளில் மூழ்கிய பின்புதான் மின்வெட்டுக்கான காரணத்தையே கண்டறிந்திருக்கிறாரா?
எனவே, இனியும் புதுப்புதுக் கதைகளைச் சொல்லியும், தங்களது நிர்வாகத் திறமையின்மையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் மீது பழிபோட்டு மக்களைத் திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, மின்வெட்டுக்கான உண்மையான காரணங்களை அறிந்து, அதனை நிவர்த்தி செய்து, தடையற்ற மின்சாரம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என மின்சார வாரியத்தையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் – பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் “No compromise” என்று சொன்ன முதலமைச்சர், தனது கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் “Compromise” ஆகிவிடுகிறாரா?
சென்னை அசோக் நகரில் சாலையோர பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை என இருவேறு பாலியல் குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டதாகவும், அதிலும் எட்டயபுரம் அருகே நடைபெற்ற பாலியல் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகியைத் தட்டிக்கேட்ட பொதுமக்களை, காவலர்கள் முன்னிலையிலேயே தவெகவினர் மிரட்டும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சொல்லி தான் தவெக பெண் நிர்வாகிக்கு நடந்ததாக சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டு, அதே மாவட்டத்தில் தவெக மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு என பல்வேறு பாலியல் குற்றச்சம்பவங்களில் தவெகவினர் மீது உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தவெகவினர் சுதந்திரமாக இக்குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் “No compromise” என்று சொன்ன முதலமைச்சர், தவெகவினருக்காக மட்டும் “Compromise” செய்துகொள்கிறாரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக சட்டமன்றத்திலேயே சொன்ன முதலமைச்சர், தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் தவெக நிர்வாகிகள்தான் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணம், சமூகத்தில் வேரூன்றியுள்ள போதைப்பொருட்களின் பயன்பாடுதான் என்று சொல்லும் முதலமைச்சர், அதைத் தடுக்க தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒரு கையெழுத்தாகப் போட்டபோதிலும், இதுவரை அதை நடைமுறைக்குக் கொண்டு வராதது ஏன்?
அதேபோல், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு அமைச்சரே போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் மீது குறைந்தபட்ச விசாரணைகூட நடத்தாதது ஏன்?
ஆகமொத்தத்தில் போதைத் தடுப்பு நடவடிக்கைகளிலும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களிலும் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், “No compromise” என்று கூறுவது வெட்கக்கேடானது.
எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் புகாருக்குள்ளான தவெக நிர்வாகிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட தேவையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், அதில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு போட்டியிலும் தன்னம்பிக்கையுடன் விளையாடி, நெருக்கடியான தருணங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
@BCCIWomen #teamindia #asiangames -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு போட்டியிலும் புதிய இலக்குகளை நிர்ணயித்து, பதக்கங்களை வென்று தொடர்ச்சியாக சாதனை படைத்து வரும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களின் இந்த வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நார்வேயில் நடைபெற்ற Njord தன்னாட்சி கப்பல் சவால் 2026 போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் (IIT Madras)-இன் அரித்ரா அணி மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதையைக் கண்டறிதல், மோதல்களைத் தவிர்த்தல், தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிவாகை சூடிய இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் (IIT Madras)-இன் அரித்ரா அணி மாணவர்களின் இந்த வெற்றிப் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
@iitmadras -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் பார் உரிமையாளரால் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் காவல் நிலையம் அருகிலேயே சரவணன் என்ற நபர் ஓட ஓட வெட்டிக் கொலை, மதுரை மேலூர் அரசுப் பள்ளி அருகே செல்லத்துரை என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை, சென்னை புறநகர் குன்றத்தூர் அருகே தண்டலத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை, தாம்பரத்தில் வெல்டர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை, கரூரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் உள்ளிட்ட ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 8 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலும் ஏற்படும் காலதாமதமும், அலட்சியமுமே இதுபோன்ற அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டிய காவல்துறையினர் தங்களது அடிப்படைப் பொறுப்பை உணராமல் அலட்சியமாகச் செயல்படுகின்றனரா ? அல்லது அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேநேரத்தில், தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, பதற்றமான சூழலை அதிகரிக்கும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு புரிகிறதா? அல்லது புரிந்தும் தனது நிர்வாக திறமையின்மையால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாரா? என்ற கேள்வியம் எழுகிறது.
எனவே, தமிழகத்தில் தினம் தோறும் அரங்கேறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வதோடு, அரங்கேறிய படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, கடுமையான தண்டனை பெற்றுத் தருவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் வலுக்கட்டாயமாக கைது – குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய காவல்துறை, நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பழமலைநகர்–கொடிக்காடு கண்மாயில் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்துப் போராடிய உறவினர்களும், பொதுமக்களும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுரை மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து அடக்கி ஒடுக்கியுள்ளனர்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றமடையச் செய்யும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகாரத்தையும் நீதி கேட்டு போராடும் மக்கள் மீது ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தவெக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்தே கொலைச் சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தலைநகர் சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்கச் செய்வதோடு, பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதோடு, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, சட்டத்தை மதிக்காமல் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கு மாறாக, அக்குற்றங்கள் நடைபெறுவதற்கான பின்னணிக் காரணங்களை எடுத்துரைப்பதும், அன்றாடம் நடைபெறும் குற்றங்களுக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல பேசிக் கொண்டிருப்பதுமே, குற்றம் செய்வோருக்கு அறவே பயமில்லாத ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றங்களில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக குரல் எழுப்பியவரும், சமத்துவமும் சமூகநீதியும் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை இலக்காகக் கொண்டு போராடியவருமான இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
தனது எழுத்து, பேச்சு மற்றும் சமூகப் பணிகளின் மூலமாகச் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகத் தொடர்ந்து களமாடி, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 9 பேர் பலி – முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படும் மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கே உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
“முதலமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?” - முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவரும், சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளைத் தனது வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவருமான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான இன்று, சென்னை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சாதி ஆதிக்கம், மூடநம்பிக்கை, ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த புரட்சியாளரும், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி ஆகிய சிந்தனைகளை மக்கள் மனங்களில் ஆழமாக விதைத்த மாபெரும் சீர்திருத்தவாதியுமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அறிவை ஆயுதமாகக் கொண்டு அநீதிகளை எதிர்த்து, சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை செயல்படுத்த, அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
I extend my warmest and heartfelt birthday greetings to the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi Ji, on behalf of the Amma Makkal Munnettra Kazagam (AMMK).
With his continued commitment and dedicated leadership, the Hon’ble Prime Minister is working towards strengthening our nation’s progress, prosperity, and stature on the global stage.
I sincerely pray to the Almighty to bless the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji with good health, happiness, long life, and renewed strength to continue his dedicated service to the people and the nation. May this special day mark the beginning of another fulfilling and purposeful year in his journey of national service.
@PMOIndia @narendramodi @BJP4India @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விடுதலைப் போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவரும், எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக அரசியல் களத்தில் தொடர்ந்து போராடியவருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
விடுதலைப் போராட்ட வீரரும், சமூகத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து போராடியவருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என அரை நூற்றாண்டுகால பொதுவாழ்க்கையில் சமத்துவம், சமூகநீதி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு பாடுபட்ட எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் அரும்பெரும் பணிகளை இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran reposted
AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM
@ammkofficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.,... (1/3)
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பணிகள் — முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படும் இந்த முறைகேடு, அவர் கூறிய வெளிப்படையான ஆட்சியின் உண்மையான லட்சணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், பணிகளுக்கான டெண்டர் வழங்கும் செயல்முறையே இதுவரை நிறைவடையாத சூழலில், அந்தப் பணிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டன என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான இரண்டு பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டன? முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுவதோடு, டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பணிகள் நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டிருப்பது, வெளிப்படையான டெண்டர் நடைமுறைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் எதிரானது மட்டுமல்லாமல், மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில் நிறைவடைந்த பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பதும், போலி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதும் தான் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கூறும் நேர்மையான, வெளிப்படைத்தன்மையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகமா ? என்ற கேள்வியை பொதுமக்கள் ஒவ்வொருவரும் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
எனவே, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்ட இந்தப் பணிகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அந்த விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க தனியார் நிறுவனம் முயற்சி – கடல்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது.
மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் புதிதாக 5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி Hardy Exploration & Production India Limited என்ற நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் இயற்கை வளம் நிறைந்த கடல் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கே இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மீனவ மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டங்களை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்த முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே, கடல் வளத்தையும், மீன்வளத்தையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதோடு இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை உள்ளிட்ட எவ்வித அனுமதிகளையும் மாநில அரசு வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
@PMOIndia @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக அரும்பாடுபட்ட உன்னதத் தலைவரும், தமிழ் மொழி, தமிழர் உரிமை, சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றை அரசியல் களத்தின் முக்கியக் கோட்பாடுகளாக உயர்த்திய கொள்கைக் கோமானும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த தமிழ் தாயின் தலைமகன், ஏழை எளிய மக்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த மாபெரும் தலைவர், அறிவால் அரசியலையும் அன்பால் மக்களின் இதயங்களையும் வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனியிடத்தைப் பதித்த அரசியல் ஆசான், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று.
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற கொள்கையை வாழ்வின் நெறியாக ஏற்று, பேச்சில் நயம், எழுத்தில் வலிமை, செயல்பாட்டில் நேர்மை ஆகியவற்றைத் தனது அடையாளமாகக் கொண்டு, தமிழக அரசியலுக்கு புதிய பாதையை அமைத்து மக்கள் ஆட்சியை நிலைநாட்டிய மகத்துவமிக்க தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்த இந்நாளில், மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி நினைவுகூர்ந்து கொண்டாடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தந்தை பெரியார் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பதா? – அரசியலுக்காக பெரியாரை தங்களது கொள்கைத் தலைவர் என தவெக போடும் நாடகம் அம்பலம்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தும், பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்தும் அடக்குமுறையைக் கையாண்ட தவெக அரசு, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கும் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் எனப் பல்வேறு கொள்கைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சொந்த மண்ணிலேயே அவரது கொள்கைகளை வலியுறுத்தி நடத்தப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், பெரியாரை அரசியலுக்காக மட்டுமே தவெக தனது கொள்கைத் தலைவராக முன்வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழிப்புணர்வு பேரணிக்கு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
எனவே, பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்திருக்கும் தவெக, அவரையும் அவரது பெயரையும் வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட்டு, பெரியாரின் பிறந்தநாளன்று திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்கி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்று இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வினைதீர்க்கும் விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தடைகள் அனைத்தையும் தகர்த்து, வெற்றிப் பாதையை வகுத்துத் தரும் விக்னேஸ்வரனை வணங்கி தொடங்கும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் வெற்றி நிச்சயம் என்ற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஏற்ப, இத்திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நிம்மதியும், வளமும் பன்மடங்கு பெருக விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்.
வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை வழங்கும் வேழமுகத்தோனை பக்தியுடன் வணங்கும் இந்த புனித நாளில், அவரது அருளால் மக்கள் அனைவரின் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை, உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணிக்கான அறிவிப்பாணை வெளியீடு — ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசிற்கு கண்டனம்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் 4.75 லட்சம் செவிலியர்கள் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், அப்பிணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடு அவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பிறகும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக பணிக்கு எடுப்பவர்களையும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் பதிவுசெய்து காத்திருப்போரை கொண்டு நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண்கள் மீது தாக்குதல் - பெண்களை இழிவுபடுத்தினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரைத் தாக்கியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் காவல்துறையினர் தாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஒருபுறம், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசுகிறார். மறுபுறம், காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் அளித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு வரும் பெண்கள் மிரட்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு, தாக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள், தமிழகத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
பொதுமக்களின் குறைகளைக் களைய வேண்டிய காவல்துறையினரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு இடமளிப்பதும், அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமமாகும் என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உணர வேண்டும்.
எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பெண்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரை விரிவாக விசாரித்து, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக ஆட்சி அமைத்து 120 நாட்களைக் கடந்தும் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி – வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே தங்களின் தூக்கத்தைத் தொலைத்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும், காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, ஒட்டுமொத்த எரிசக்தி துறையையும் பாழாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல.
எனவே, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TANGEDCO_Offcl -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாட்டுச் செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - திட்டத்திற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.
பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துக்களால் பட்டிமன்றங்களை சிறப்பித்த திரு.சாலமன் பாப்பையா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவரும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அயராது பாடுபட்டவருமான திரு. இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினமான இன்று, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் மண்ணின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் தனது எழுத்தின் மூலம் உலகறியச் செய்த புரட்சியாளருமான மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுதினம் இன்று.
தேசவிடுதலை, மொழிப்பற்று, மனிதநேயம், சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மாற்றத்திற்கான விதைகளை விதைத்து, அழியாத வரலாற்றை உருவாக்கிய மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவரும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அயராது பாடுபட்டவருமான திரு. இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய பாகுபாடுகளையும், அநீதிகளையும் எதிர்த்து, அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்த திரு. இமானுவேல் சேகரனார் அவர்களின் அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன?
சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
“சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை என தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன?
எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்!
புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.
மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.
எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரையும் துச்சமெனக் கருதி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் அழித்து வீரமரணம் அடைந்த மாவீரருமான தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
தாய்நாட்டிற்காக தனது இன்னுயிரையே துச்சமென நினைத்து வாழ்ந்து மறைந்த மாவீரர் தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினத்தில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அறிவியல் மற்றும் மனிதநேயத்துடன், சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக சேவை மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வரும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களுக்கும் எனது பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவரின் வலியைக் குறைத்து, உடல் இயக்கத்தையும் அன்றாட செயல்பாடுகளையும் மேம்படுத்தி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் மீட்டெடுக்கும் பிசியோதெரபிஸ்ட்கள் அனைவரின் சேவையும், பணியும் மேன்மேலும் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவள்ளூரில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளை; சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை – தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் குன்றத்தூர்–ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சோமங்கலத்தில் உள்ள ஏடிஎம் என இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதே திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அருகே ஏடிஎம் இயந்திரத்தையே முழுமையாக கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொள்ளையடித்துச் செல்லும் வடமாநிலக் கும்பல்களைக் கண்காணித்து கைது செய்யத் தவறியதே, மூன்றாவது முறையாக ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடிக்கும் அளவுக்கு அக்கும்பலுக்கு துணிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏடிஎம் இயந்திரங்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் வெளிமாநிலக் கும்பல், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தொடர் கொலை கொள்ளைகளில் ஈடுபட்ட பவாரியா கும்பலோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அடுத்ததாகக் குடியிருப்புகளிலும் நுழைந்து தங்களது கைவரிசையைக் காட்டக்கூடும் என்பதால், அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்கக்கூட அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது.
அதோடு, சென்னை, அடையாறு அருகே தவெக நிர்வாகியும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கை கேள்விக்குறியாக்குவதோடு, குற்றவாளிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை என்ற அமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் ஏடிஎம் கொள்ளைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்திடுவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள சட்டம்–ஒழுங்கு நிலைமையில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கை வழியில் தேசிய உணர்வையும், தெய்வீக நெறியையும் உயர்த்திப் பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினமான இன்று,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கை வழியில் தேசிய உணர்வையும், தெய்வீக நெறியையும் உயர்த்திப் பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று.
பொதுவாழ்வில் நேர்மை, மக்களிடம் எளிமை என விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும், அவர்களின் உரிமைகளையும் பெற்றுத்தர அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது பாடுபட்ட திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு, தனது உணர்ச்சிமிக்க உரைகளின் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டிய ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
மாணவச் செல்வங்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்கிட வேண்டும் எனக் கூறி, ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து GSLV F-17 ராக்கெட்டின் மூலம் EOS-05 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
@isro -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் மனம் தளராமல், தர்மத்தின் பாதையில் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்பதோடு, அன்பு, பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் சமநிலை ஆகிய பண்புகளுடன் வாழ்ந்தால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
“தர்மத்தை நிலைநாட்டி, தீமையை அகற்றி, நன்மையைப் போற்றுவதே வாழ்வின் உயர்ந்த நெறி” என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் போதனையைப் பின்பற்றி, அவர் அவதரித்த இந்நாளில், அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திடட்டும் எனக் கூறி, மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் – Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்?
பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?
சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?
எனவே, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று, திருநெல்வேலி, நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய்மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுரியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்–ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் அவர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன்.
@JCDPrabhakar @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சகோதர, சகோதரிகளுக்கிடையே நிலவும் அன்பு, பாசம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் திருநாளை கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உறவுகளின் புனிதத்தையும், சகோதரத்துவத்தின் மகத்துவத்தையும் போற்றும் இந்நன்னாளில், பெண்களின் கண்ணியத்தையும், உரிமைகளையும் பாதுகாத்து, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சமூகத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபாரமான திறமையாலும், தளராத தன்னம்பிக்கையாலும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீரர் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
@rpraggnachess -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகம் முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளை – கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்!
திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் கும்பகோணத்திலிருந்து 50-க்கும் அதிகமான பயணிகள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியதில், அவர்களில் 37-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
நேபாளத்தில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் அதிகாரிகளும் இணைந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, விரைவில் தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@PMOIndia @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல் – லஞ்சத்திற்கு எதிரான முதலமைச்சரின் முழக்கம் நடைமுறைக்கு உதவாத வெறும் சினிமா வசனம் தானா?
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தங்களது வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, தவெக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளிகளாகியுள்ள விவசாயிகள், மேலும் கடன் பெற்று விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்த நிலையில், லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளோடு அவர்களின் உழைப்பையும் வீணாக்கிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பாகவே லஞ்சத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
இதே கடலூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் ஆய்வுக்கு வந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவது, தவெக அரசின் மீதான விவசாயிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.
எனவே, கடுமையான கண்காணிப்பும், உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி அனுமதி வழங்குவதில் தாமதம் – தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதா?
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா? அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பசித்த மக்களுக்கு உணவளிக்க வேண்டும், ஏழை, எளிய மக்களிடம் கருணை காட்ட வேண்டும், எண்ணத்திலும் நடத்தையிலும் தூய்மையாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழ வேண்டும் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திய போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
அன்பு, அமைதி, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை உலகிற்கு போதித்த அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் வழியைப் பின்பற்றி, ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கிடுவோம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மிலாது நபி வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து, தவெக அரசு மீதான குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மீது பத்தாவது அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவின் மீது மாண்புமிகு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடந்த 08.05.2026 அன்று குதிரை பேரம் தொடர்பாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தவறியமை ஆகியவற்றில், மேதகு ஆளுநர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு – தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்தியுள்ளது!
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்களைக் கடந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்துள்ள நிலையில், மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தொடர் கட்டண மற்றும் வரி உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.
இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.
மேலும், அடுத்தடுத்த பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக சர்க்கரையின் விலை 50 % வரையிலும், அரிசியின் விலை 40 % வரையிலும், எண்ணெயின் விலை 60 வ% வரையிலும் உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வோர் ஆண்டும் திருவோணத் திருநாளன்று மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் மகிழ்ச்சிக்குரிய நாளாக மட்டுமல்லாது, அன்பு, ஒற்றுமை, மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உயரிய செய்தியையும் நினைவூட்டும் பண்டிகையாக ஓணம் திருநாள் அமைந்துள்ளது.
திருவோணத் திருநாளான இந்நன்னாளில், இல்லங்கள் தோறும் அன்பும் அமைதியும் நிலவி, மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மழைநீர் வடிகால் பணிக்காகப் பள்ளங்கள் தோண்டப்படும்போது, அவற்றைச் சுற்றி உரிய தடுப்புச் சுவர்கள், எச்சரிக்கைப் பலகைகள் உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட முறையாகச் செய்யப்படாததே ஒரு உயிர் பறிபோகக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயல்படுத்தப்படும் மழைநீர் வடிகால் பணிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளின் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ‘மரண வடிகால்’ பணிகளாக மாறிவருவது வேதனைக்குரியது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகளால் பெண் ஒருவரின் உயிர் பறிபோன பின்னர் விசாரணை நடத்துவதும், அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்வதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதை தவெக அரசு இனியாவது உணர வேண்டும்.
எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்படாத வகையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? முதலமைச்சர் மூன்று சிலிண்டர்கள் அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கேள்விக்குறிதானா?
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கரூர் மாவட்டத்தில் சமூக நீதி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் - அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுகளும், கண்காணிப்பு குழுக்களும் வெற்று விளம்பரத்திற்குதானா?
கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையிலும், மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதாக வெளியாகியிருக்கும் காணொளி தவெக அரசின் சமூக நீதி கொள்கையையும், அக்கறையையும் தோலுரித்து காட்டியுள்ளது.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை, எளிய விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் சமூகநீதி விடுதியில் தரமான மற்றும் சுகாதாரமான உணவைக் கூட வழங்க முடியாத தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் நேரடியாக திடீரென ஆய்வு செய்து மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள சமூகநீதி விடுதிகளின் அவலநிலைகளை நேரடியாக ஆய்வு செய்வாரா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்தும் ஆய்வுகளும், அவர்கள் அமைக்கும் கண்காணிப்புக் குழுக்களும் வெற்று விளம்பரத்திற்காகவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே, ஆட்சியை சமூகவலைதளத்தில் நடத்தாமல், கொஞ்சம் களத்தில் மக்களுக்கு பயன்படும் படி நடத்தவேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதோடு,சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கும் விடுதி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களுக்கு தரமான உணவு, பாதுகாப்பான தங்குமிடம், சுகாதாரமான சூழல் ஆகியவற்றை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சமூகநீதித்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு அதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கேட்க ஒரு அமைச்சரைக் கூட அனுப்பாதது ஏன்?
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததன் காரணமே தூய்மைப் பணியாளர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியுள்ளது.
மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, காவல்துறையின் மூலம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களின் அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் தென்காசி மாவட்டம், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. தங்கராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் திருமதி. அமுதா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரின் கல்விப் பணியும் மேன்மேலும் சிறக்கட்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியாவின் பழமையான மற்றும் புகழ்பெற்ற மாநகரங்களில் ஒன்றாகவும், வரலாறு, பாரம்பரியம் மற்றும் நவீனத்தையும் தன்னகத்தே கொண்ட பெருமைமிகு அடையாளமாகவும் திகழும் சென்னை மாநகரம் உருவான இந்நாளில் சென்னையில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் எனது சென்னை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னை நாடி வந்தோர் அனைவரின் கனவுகளை வளர்த்து, வாழ்க்கைக்கு வழிகாட்டி, எதிர்காலத்தை வடிவமைத்து அன்பாலும் உழைப்பாலும் உயர்ந்து நிற்கும் சென்னை மாநகரத்தின் வளத்தையும், வளர்ச்சியையும் பெருக்க நாம் அனைவரும் இந்த சென்னை தின நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க பழம்பெரும் நடிகையும், திரைப்படத் துறையில் மட்டுமின்றி நாடகத் துறையிலும் கோலோச்சி, தனது முத்திரையைப் பதித்தவருமான பத்மஸ்ரீ திருமதி. சௌகார் ஜானகி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் தான் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பெருமை சேர்த்த திருமதி. சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இரண்டு மாதங்கள் கடந்தும் விவசாயிகளைச் சென்றடையாத குறுவைத் தொகுப்பு – சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்?
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பு இன்று வரை வந்துசேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறுவை சாகுபடி மற்றும் அதனையொட்டி நடைபெறும் பணிகளுக்காக வழங்க வேண்டிய குறுவைத் தொகுப்பு, குறுவை சாகுபடியே முடிவடைந்து அறுவடை செய்யும் தருவாயிலும் வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இயந்திரங்களின் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்தும், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பின் நோக்கத்தையே சிதைக்கும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே, வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியையும் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், சாகுபடிச் செலவு அதிகரிப்பு, இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, குறுவைத் தொகுப்பையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்தக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் அலட்சியம் காட்டாமல், அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு முழுமையாகவும், உடனடியாகவும் விவசாயிகளைச் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்றி, விவசாயிகளின் கடன் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமா? – தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்ப சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது.
சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.
தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின், மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் முன்னிலையிலேயே, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @AmitShah @AmitShahOffice -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் முன்னோடிகளில் ஒருவரும், நெற்கட்டாஞ்செவ்வலை ஆண்ட மன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகத் திகழ்ந்து, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்ட மாவீரருமான ஒண்டிவீரன் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திற்கு அடிபணியாமல், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தமிழினத்தின் பெருமையாகத் திகழ்ந்த மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொண்டு போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.
சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?
“மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதலமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்திலிருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசுப் பள்ளியில் பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு – மாணவ, மாணவியரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரைக் கூட உறுதி செய்ய முடியாத தவெக அரசு.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
மாணவ, மாணவியரின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய அரசுப் பள்ளியில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீரைக் கூட முறையாக வழங்க முடியாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட அரசு நிர்வாகத்தால் மாணவ, மாணவியரின் உடல் நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தனக்குச் சம்பந்தமே இல்லாத துறைகள் தொடர்பான கேள்விகளுக்குக்கூட தாமாக முன்வந்து அடுக்குமொழியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், இனியாவது தன் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிலவும் அவலநிலையைப் போக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது?
சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
அதேபோல சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும்.
ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா ? அதுவும் உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது ?
தேர்தலுக்கு முன்பாக தனியார்மயத்திற்கு எதிராக குரல் எழுப்பிய தவெக, ஆட்சிக்கு வந்தவுடன், அதே தனியார்மயமாக்கும் முறையை பின்பற்றியிருப்பதோடு, அந்த ஒப்பந்தத்தை உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க முன்வந்திருப்பது தான் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன மாற்றமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பல ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப துளியளவும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசு, அரசுப் பேருந்துகளுக்கு குத்தகை அடிப்படையில் நடத்துனர் நியமனம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது வேலைக்காக காத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய போக்குவரத்துத்துறையில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாத நிலையில், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் குத்தகை அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
எனவே, மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதற்கு உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, போக்குவரத்துத்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TamilanParthib1 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்பே தொடங்கிய பணிகள் - விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர்கள் தான் தவெக அரசு சொல்லும் வெளிப்படைத் தன்மையா?
சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் இருந்த முதலமைச்சரின் அறையை அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு மாற்றுவது தொடர்பாக பணிகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அப்பணிக்கான டெண்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் முதலமைச்சரின் அறை மாற்றப்படுவது அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்தியில், அப்பணிகளுக்கான அறிவிக்கப்பட்ட டெண்டரில் வெளிப்படைத்தன்மையின்றி பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி நாளிதழ்களில் டெண்டர் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டு நான்கு நாட்கள் கழித்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களிலும் பணிக்கான மொத்த மதிப்பை குறிப்பிடாமல் மறைத்திருப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மைமிக்க ஆட்சி என்று சொல்வதற்கான தகுதியை தவெக அரசு இழந்திருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கப்பட்டது எப்படி? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டன? எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்? பணிகள் தொடங்கிய பின் டெண்டர் கோரியது ஏன்? டெண்டர் அறிவித்த பின்பும் அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? என்ற மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் வைத்திருக்கும் பதில் தான் என்ன?
ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஊழலற்ற, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையான ஆட்சிதான் எங்களின் இலக்கு என வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், அவருக்கான புதிய அறை மாற்றம் தொடர்பான டெண்டர்களிலேயே நடைபெற்றிருக்கும் இவ்வாறான விதிமுறை மீறல்கள், மற்ற துறைகளில் டெண்டர்கள் எப்படி வெளிப்படைத்தன்மையாக நடைபெறும் என்ற ஐயத்தை எழுப்புகிறது.
எனவே, விளம்பரங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் வெளிப்படைத்தன்மை என்ற சொல்லை பெயரளவுக்கு பயன்படுத்தாமல், தன் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், நிதி நிர்வாகத்தை திறம்பட முன்னெடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @nsitharamanoffc @nsitharaman -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததாக புகார் – தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
மதுரை அனுப்பானடி அருகே பொது இடத்தை பயன்படுத்துவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு. பரமசிவம் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.
கடந்த ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் பரமசிவம் பலத்த காயமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், சட்டத்தின் மீது நம்பிக்கையையும் அளிக்க வேண்டிய காவல்நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறும் இதுபோன்ற காவல் மரணங்கள், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
எனவே, சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திடுவதோடு, தொடர்ந்து அதிகரிக்கும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக அரசின் 100 நாள் ஆட்சி –
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்
விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி !! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கர்நாடக மாநில வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்த அப்பாவி தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொலை – நீதி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கின்றன.
பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார் ? இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.
எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் புகார் – ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தவெக பெண் நிர்வாகி அளித்த புகாருக்கே நடவடிக்கை எடுக்காத தவெக, இந்தப் புகாருக்காவது நடவடிக்கை எடுக்குமா?
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், அதே கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் மற்றும் சில நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், அந்தப் புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மீண்டும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக அம்மாவட்டப் பொறுப்பு அமைச்சரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பாகவும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவெக பெண் நிர்வாகி ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அந்தப் புகாரில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீதும் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி காவல்துறையில் புகார் அளித்திருந்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே, மேலும் மேலும் தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அதே மாவட்டத்தில் மீண்டும் ஒரு பெண் நிர்வாகி தான் சார்ந்துள்ள கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளே தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் அளிக்கும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், “பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கிடையாது” என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையானது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி தற்போது அளித்துள்ள புகாரையும், ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தவெக பெண் நிர்வாகி அளித்திருந்த புகாரையும் உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை மாநகராட்சியில் திடீரென உயர்த்தப்பட்ட சொத்துவரி; பொதுமக்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு – நிதி நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா?
சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிக்க முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி, தற்போது சொத்துவரி உயர்வை நிறுத்திவைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, வரிவிதிப்பு நிலைக்குழுவின் வழிமுறைகளின்படி உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டது எப்படி? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்துவரியை உயர்த்துவதற்கான அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது?
ஏற்கனவே, மறைமுக மின்கட்டண உயர்வால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகரில் சாதாரண நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து, அவர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முயல்வது எந்த வகையில் நியாயம்?
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்திற்கு வந்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இதுபோன்ற மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு ஆகியவையும் அந்தத் தொகையில் அடங்குமா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, சொத்துவரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்திடவும், கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்ட அனைவருக்கும் அந்தத் தொகையை உடனடியாகத் திருப்பி வழங்கிடவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @chennaicorp -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அந்நியர்களின் அடிமை ஆட்சியிலிருந்து நம் தாய்த்திருநாடு விடுதலை பெற்ற வரலாற்றுப் பொன்னாளான இந்நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை விரட்டியடித்திட, சிறை, சித்ரவதை, துப்பாக்கிச் சூடு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டும், தாய்நாட்டின் விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு தங்களின் இன்னுயிரை ஈந்து நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்.
நமது முன்னோர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காத்திடும் இந்நாளில், சாதி, மதம், மொழி மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து, நாம் அனைவரும் “இந்தியர்” என்ற ஒற்றுமை உணர்வுடன் ஒன்றிணைந்து, உலக அரங்கில் நமது இந்தியத் திருநாட்டை முன்னணி நாடாகக் கொண்டு செல்ல உறுதியேற்போம் எனக் கூறி, நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பஞ்சாயத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மீறி மது அருந்தினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அது குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என ஊர்பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.
நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் "மதுவை ஒழிப்போம் மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன், இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குடும்பங்களின் நலனை உறுதி செய்யவும், மக்களின் பொது அமைதியைப் பேணவும் விழுந்தமாவடி பஞ்சாயத்து மக்கள் தாமாக முன்வந்து தொடங்கியுள்ள இந்த மதுவுக்கு எதிரான பிரசாரம் பாராட்டுக்குரியது.
விழுந்தமாவடியில் தொடங்கியுள்ள இந்த மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவி, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் வலிமையான சமூக இயக்கமாகவும் உருவெடுக்கட்டும். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அங்கன்வாடி மையங்கள் தொடங்கி அரசு உயர் மருத்துவமனைகள் வரை தொடரும் அலட்சியப்போக்கு - அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் சூழல் நீங்குவது எப்போது ?
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் ஊட்டச்சத்திற்காக வழங்க வேண்டிய முட்டைகளை அவர்களின் படுக்கையிலும், கால்களுக்கு அருகிலும் ஊழியர்கள் அலட்சியமாக வீசிச் செல்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையிலேயே, நோயாளிகளை இவ்வளவு மோசமான நிலையில் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
அதே போல, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் முட்டைகள் தொடங்கி, அரசு உயர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் வரை அனைத்தும் தரமற்றதாக இருப்பதோடு, அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கும், அரசின் மெத்தனமான செயல்பாடுகளும், அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன.
எனவே, அங்கன்வாடி மையங்களுக்குத் தரமற்ற முட்டைகளை வழங்கிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் திரு. அமுதனை சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் திரு. அமுதன் அவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும் மாணவர், சக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்கு தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் மாணவர்களின் முன்னிலையில் போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுப்பதில் எந்தவிதப் பயனுமில்லை.
போதைப் பொருள் குறித்து மாணவர் திரு. அமுதன் அவர்கள் தெரிவித்த தகவலை ரகசியம் காத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே அதனைக் கசிய விட்டதாக மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலே மாணவர் திரு. அமுதன் உயிரிழப்புக்கான காரணம் என அமைச்சரும் காவல்துறையினரும் பிரச்னையை மூடி மறைக்க முயல்கின்றனர் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாணவர் திரு. அமுதன் அவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, இளைய சமுதாயத்தினரின் உடல்நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!
நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, விவசாயிகள் பெற்ற முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.
தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்னைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் தொனியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு.அருண்ராஜ் அவர்கள் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்” என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த புதல்வரும் , மாலை முரசு நாளிதழின் அதிபருமான பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி, தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து இயங்கிய பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடங்கி நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு வரை அனைத்து அறிவிப்புகளுமே விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் வேலை - தேர்தல் வாக்குறுதியில் சொல்வது ஒன்று ஆட்சிக்கு வந்த பின்பு செய்வது வேறு என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2750 ரூபாயாகவும், பொதுரக நெல் 2600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 4000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4500 ரூபாயும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற மறுப்பது நம்பி வாக்களித்த விவசாயப் பெருமக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
ஏற்கனவே, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை முழுமையாக நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயப் பெருமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கும் இன்றைய அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறியா ? என்று கேட்கும் வகையில் அமைந்திருக்கிறது.
60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் 2500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் , வேலை தேடும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் இளைஞர் நல நிதி என தவெக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று கூட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத நிலையில், 110 விதியின் கீழான முதலமைச்சரின் இன்றைய அரைகுறையான அறிவிப்பு தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
எனவே, கொடுத்த வாக்குறுதியின் படி நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயாகவும், கரும்பு டன்னுக்கு 4500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடுவதோடு, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை அறைகுறையாக அறிவித்து மக்களை ஏமாற்றாமல் முழுமையாக நிறைவேற்றிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் - விவசாயிகளின் உழைப்பில் உற்பத்தியான நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.
இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதே, அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
விவசாயப் பெருமக்களின் உழைப்பை மதித்து அவர்களின் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லை எனக்கூறி விவசாயிகளை அலைக்கழித்து, நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
எனவே, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்திடுவதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் - மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் .
பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திரு.அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் திரு.ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல்
உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது.
எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @RameshOffcl @logintvk -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய திரு.ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ?
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய திரு. ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ?
எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @LalanSingh_1 @srinathtvk -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது - தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும்.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைத்தலைவரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. கோமுகி மணியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது.
பொன்மனச்செம்மல்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் முதல் ஆட்சியான 1977-ல், சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதோடு, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் தீவிர விசுவாசியாகவும், தன் இறுதி மூச்சுவரை கொள்கைபிடிப்போடும் வாழ்ந்த திரு.கோமுகிமணியன் அவர்களது மறைவு கழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
திரு.கோமுகிமணியன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.@ammkofficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள 2026–2027 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து உடனடியாக கருத்து கூறினால், அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் பொறாமை என்றும் ஆளுங்கட்சியினர் நினைக்கும் அணுகுமுறை தான்
தற்போது உள்ளது.
உண்மையான மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல, அது ஜனநாயகக் கடமை என்பதை தவெக அரசுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தவே
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளையும், தவெக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளால் அவர்கள் அடைந்த ஏமாற்றங்களையும் முழுமையாக கேட்டறிந்த பின்பே
இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன்.
தொழில் முதலீடுகளை ஈர்த்தல், அதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெருக்குதல், நீண்ட கால வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களை வகுத்தல் என ஒரு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அடிப்படை அம்சங்கள் கூட இல்லாமல்
அறைகுறையாக தயாரிக்கப்பட்டுள்ள தவெக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களை அதிருப்தியடையச் செய்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஜுன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை தற்போது வரை திறக்கப்படாத சூழல், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு மத்தியில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களையாவது தள்ளுபடி செய்வார்கள் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் காத்திருந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவோ, வேளாண்மையை வளப்படுத்தவோ எந்தவித முக்கியமான திட்டங்களும் இல்லாமல், தவெக அரசு தாக்கல் செய்திருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக கொடுத்திருக்கிறது.
கடந்த திராவிட ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தி, செயல்படுத்திய திட்டங்களை சிறிதளவு பெயருக்கு மேம்படுத்தி வெற்றி என்ற சொல் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருக்கிறதே தவிர, தவெக ஆட்சி கொண்டுவந்த, அறிமுகப்படுத்திய திட்டம் என்று ஒன்று கூட இந்த நிதிநிலை அறிக்கைகளில் இல்லை என்பதை மனசாட்சியுள்ள ஆட்சியாளர் ஒவ்வொருவரும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்
இறுதியாக, இந்த பட்ஜெட்டைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மக்களுக்கும், மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயன்படாத திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையையும், விவசாயப் பெருமக்களின் உண்மையான வலியைக் கூட உணராத வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தயாரித்தமைக்காக, தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தம்மைத் தாமே பெருமைப் படுத்திக் கொள்வதற்கு பதிலாக, பொதுமக்களின் எண்ணங்களை அறிந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுபானங்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பெறும் வசதி நாளை முதல் அறிமுகம் - மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே மது விற்பனையை எளிதாக்கலாமா ?
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து நேரில் சென்று வாங்கிக் கொள்ளும் நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, உணவகங்களுடன் கூடிய மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குதல் ஆகிய முடிவுகளை ஊடகங்களின் மூலம் கசியவிட்டு, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து பின்வாங்கிய தவெக அரசு, தற்போது ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் முன்பதிவு என்ற மேலும் ஒரு தவறான முடிவை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மது வாங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தி ஊக்குவிப்பதும் அதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க நினைப்பதும் சமூக நலனுக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கையாகும்.
எனவே, அரசு நிர்வாகத்திற்கு மதுபானங்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை விட மக்களின் நலனே முக்கியம் என்பதை உணர்ந்து, டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை உடனடியாக கைவிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி அவரசம் அவசரமாக காவல்துறையை வைத்து தமிழக அரசு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைதுசெய்துள்ள நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சை கண்டித்து தவெகவினர் ஒருபுறமும், தற்போது அவரின் கைதை கண்டித்து திமுகவினர் மறுபுறமும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மேகதாது அணை மற்றும் காவிரி நீர் பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளை மறந்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தனிப்பட்ட தாக்குதல்களையும், தரக்குறைவான விமர்சனங்களையும் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் முன்னேடுத்துக் கொண்டிருப்பது வருந்ததக்கது.
இதனிடையே நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்கட்சிகளின் குரல்வளையையும், ஜனநாயகத்தையும் நசுக்க முயலும் செயலாகவே திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கைதை பார்க்கவேண்டியுள்ளது. எந்த ஒரு பிரச்சனையாக இருப்பினும் சட்ட ரீதியாக சந்திப்பதை தவிர்த்து, காவல் துறையை ஏவி அதிகார துஷ்பிரயோகத்தை கையாளும் தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, அவரது கைதால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டும் என காவல்துறையையும், முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @Udhaystalin @arivalayam @mkstalin -
TTV Dhinakaran
@TTVDhinakaran
டெல்லிக்கு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு – தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதலமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மவுனம் காப்பாரா ?
காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி டெல்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது ?
கர்நாடக மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது.
எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரரும், தனது வீரத்தாலும் அசாத்தியமான போர்த் திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரருமான தீரன் சின்னமலை அவர்களின் நினைவுதினம் இன்று..
போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளால் வீழ்த்தவே முடியாத மாவீரராக வலம் வந்ததோடு , கொங்கு மண்ணின் பெருமையாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வல்வில் ஓரியின் பெருவிழா
சங்க கால கடையேழு வள்ளல்களில் ஒருவரும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மன்னருமான வல்வில் ஓரி அவர்களின் பெருவிழா இன்று…
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதோடு, தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டுப் பெருமையை உலகறியச் செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் துணிச்சலையும், கொடை மனப்பான்மையையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசியத் தலைவர் திரு கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த புதல்வர் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தனது புதல்வரை இழந்து வாடும் திரு கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் மும்முறை நீளம் தாண்டுதலில் (Triple Jump) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர், விவசாய உற்பத்தி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும்.
கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாக பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களை பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகியும், இசையுலகில் தனி முத்திரை பதித்தவருமான பாடகி கலைமாமணி ஜமுனா ராணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களின் மூலம் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும்
ஜமுனா ராணி அம்மையார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசின் முதலமைச்சரை தமிழக முதலமைச்சர் நேரில் சந்திப்பதில் எந்தவித பயனுமில்லை – தமிழக விவசாய சங்கங்கள் இந்த சந்திப்பு அவசியமற்றது என தெரிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் மேற்கொள்ளவுள்ள இந்த சந்திப்பு சம்பிரதாயமா? அல்லது சந்தர்ப்பவாதமா?
டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கடந்த ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீருக்கு 2.91 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே தந்த கர்நாடக அரசு, ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி. தண்ணீரில் 10 சதவீதத்தைக் கூட வழங்காமல் தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க முடியாது என நேற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் நிலையில், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கர்நாடகாவுக்குச் செல்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்று தமிழக விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளனர்.
உரிய நேரத்தில் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்த பின்னரும் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற முடியாத முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் நாளை தமிழகம் வர உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் திரு. ராகுல் காந்தி அவர்களை சந்தித்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடுவதற்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்க மறுக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் பங்கேற்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை திரு. ராகுல் காந்தி அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?
எனவே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து விவாதிக்க கர்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நிலையில், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை சட்டரீதியாக முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து விவாதிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை மீண்டும் ஓர் முறை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நீட் தேர்வையும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் (EWS) முழுமையாக ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் இன்று நடைபெறவிருந்த இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற உள்ளது என்பது குறித்த முழுமையான பட்டியலை முன்கூட்டியே காவல்துறையிடம் வழங்கப்பட்டு, அந்தந்த காவல்நிலையங்களில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறைத் தலைவர் திராவிடர் கழகத்தினருக்கு அறிவுறுத்திய நிலையில் , பிரச்சாரம் தொடங்கும் இன்று காலை அதற்கான அனுமதியை மறுத்திருப்பதோடு, பெரியார் திடலை காவல்துறையின் மூலம் முடக்கியிருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.
தந்தைப் பெரியாரை தன் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக முன்னிறுத்தி அரசியல் செய்யும் தவெக, பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு அவரின் வழியில் நிர்வகிக்கப்பட்டு வரும் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், தவெக ஆட்சி என்பது திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றும் ஆட்சி அல்ல என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அறவழிப் போராட்டம் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை மதித்துச் செயல்பட வேண்டிய தவெக அரசு, தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காவல்துறையிடம் அனுமதி கேட்டு அமைதியான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த திராவிடர் கழகத்தினரின் இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதியை மறுத்திருப்பது தவெக அரசின் சகிப்புத்தன்மையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு உடனடியாக அனுமதி வழக்கிடுவதோடு, இனிவரும் காலங்களில் அரசியல் பாகுபாடின்றி அனைவருக்கும் அமைதியான முறையில் பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நடத்திடுவதற்கான அனுமதியை வழங்கி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெல்லை மாவட்டம் காரையாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி வனப்பகுதிக்குள் தங்கி வழிபடுவதற்கான அனுமதியை வழங்குமாறு அப்பகுதி பக்தர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருநாளன்று ஆண்டுதோறும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வனப்பகுதிக்குள் தற்காலிக குடிசைகள் அமைத்துத் தங்கி வழிபடுவது முன்னோர்கள் காலத்திலிருந்து தொடரும் ஆன்மீகப் பாரம்பரியமாகும்.
கொரோனோ பரவல் தொற்று காலத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நடப்பாண்டில் தொடரும் நிலையில், அத்தகைய கட்டுப்பாடுகளை நீக்கி, வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்புமின்றி அப்பகுதி பக்தர்கள் தங்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையைத் தொடர அனுமதிக்குமாறு வனத்துறையிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.
எனவே, தலைமுறை, தலைமுறைகளாகத் தொடரும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையை நடப்பாண்டிலும் தொடரும் வகையில் அப்பகுதி பக்தர்கள் வனப்பகுதிக்குள் 10 நாட்கள் தங்கியிருந்து வழிபாடு நடத்துவதற்கான அனுமதியையும், காரையாறு மற்றும் சேர்வலாறு அணைப்பகுதிகளைப் பக்தர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியையும் வழங்கிடுமாறு வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்ற நிலையில் இருந்ததாகவும், ஆவடி மாநகராட்சியில் வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி இருந்ததாகவும் அடுத்தடுத்து ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு பல்வேறு மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டம் முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், ஒரு சில மாநகராட்சிகளில் வழங்கப்படும் உணவும் தரமற்றதாக இருப்பது தூய்மைப் பணியாளர்களின் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சாலைகள், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் என நகரத்தின் அனைத்து அசுத்தமான இடங்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருவேளை உணவைக் கூட தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் வழங்க முடியாத தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அரசு, மறுபுறம் தூய்மைப் பணியாளர்களுக்காக நல முகாம் நடத்துகிறோம் எனும் பெயரில் அவர்களை அமைச்சர்களும், அவரது உறவினர்களும் ரீல்ஸ் எடுக்கும் விளம்பரப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
எனவே, தூய்மைப் பணியாளர்களுக்குத் தரமற்ற உணவை வழங்கிய ஒப்பந்ததாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் தரமான, சுத்தமான, ஆரோக்கியமான உணவு தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் சுமார் 2500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கவும், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர தவெக அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாட்டிலுக்கு பத்து ரூபாய், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி சட்டவிரோத மது விற்பனை என தொடர் புகார்களுக்கு மத்தியில், தற்போது டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் தவெக அரசின் முடிவு, சட்டவிரோத மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைக்காது.
ஆட்சிக்கு வந்தவுடன் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 710 மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில், மீதமிருக்கும் மதுபானக்கடைகளை படிப்படியாக மூட வேண்டிய அரசு, மதுபானக்கடைகளை தனியார் வசம் ஒப்படைக்க முற்படுவது அதன் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
அதோடு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியார் மயமாக்கப்பட்டால், சுமார் 20 அண்டுகளுக்கும் மேலாக அக்கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் அபாயமும் எழுந்துள்ளது.
எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிடுவதோடு, மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதும், சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுப்பதும் தான் தவெகவின் அடிப்படை கொள்கையா? - மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தவெகவினர் அரங்கேற்றும் அத்துமீறல்களுக்கும் அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் கடை ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதோடு, அவர்களின் செல்போன்களை பறித்தும் அதில் பதிவான காட்சிகளை அழித்தும் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதே போல, தன்னுடைய அனுமதியின்றி தாசில்தாரிடம் கடிதம் வழங்கிய தன் சொந்த கட்சி நிர்வாகி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. ஜெகதீஸ்வரி அவர்களின் தொலைப்பேசி உரையாடலும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்த்துவைக்கும் பொறுப்புமிக்க பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய கடமைமிக்க அமைச்சர், தன் சொந்தக் கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுப்பதும் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறதா? அல்லது சட்டவிரோத ஆட்சி நடைபெறுகிறதா? என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அரசுப்பள்ளிகள், அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள் என அரசு அலுவலகங்களுக்குள் ஆய்வு எனும் பெயரில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் சோளிங்கரில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஜனநாயகத்திற்கு விரோதமானது ஆகும்.
எனவே, நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் தவெகவினரின் அத்துமீறல்களுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை என மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு. ராஜ்பூஷண் சவுத்ரி அவர்கள் அளித்திருக்கும் பதில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல், தமிழகத்திற்கான உரிய நீரை, உரிய நேரத்தில் வழங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தற்போது மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி பாலைவனமாகும் அபாயகரமான சூழல் உருவாகக்கூடும்.
ஏற்கனவே, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி விளைநிலங்களைப் பாலைவனமாக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என கர்நாடக காங்கிரஸ் அரசும், அதன் முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் தற்போது தெரிவித்திருக்கும் பதில் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுக் கூறியிருக்கும் 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே, அண்டை மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து செல்லும் நதியின் நீர், தேசிய சொத்தாகவே கருதப்பட வேண்டும் என்பதையும், அந்த நீரை எந்தவொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது எனவும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தின் சுமார் 25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்குப் பாசன வசதியாகவும், சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் காவிரியின் குறுக்கே அணையைக் கட்டத் துடிக்கும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு எந்தவகையிலும் துணை போகக்கூடாது என்பதோடு, நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக திகழும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் எந்தவிதமான சமரசமுமின்றி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும், விரைவில் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? - இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ?
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார்.
யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா?
தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும்.
எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரின் எழுச்சிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவரும், இளைஞர்களை கனவு காணச் சொன்னதோடு, அதனை நனைவாக்க உழைக்கவும் கற்றுத்தந்த மகத்தான மாமனிதருமான குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று.
எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாக உலகமே வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்ததோடு, குடியரசுத் தலைவர் எனும் உயரிய பதவிக்குச் சென்ற பின்பும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50க்கும் அதிகமான மலைக் கிராமங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கண்டித்து கடமலை – மயிலை ஒன்றியம் முழுவதும் முழு கடையடைப்பும், கடமலையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியும் , மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கை எடுக்காததன் விளைவே தற்போது வேறுவழியின்றி கவன ஈர்ப்பு முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியிருப்பதாக அக்கிராமங்களைச் சார்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, மேகமலை மலைக்கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற அரசு நல முகாமில் அமைச்சரின் சகோதரருக்கு என்ன வேலை? ஆளும் கட்சி என்பதால் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அதனை ரீல்ஸாக வெளியிட்டு சிலாகித்துக்கொள்வதும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நல முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, அதனை தனது ஆதரவாளர்களின் மூலம் பெருமிதமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் சகோதரரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, அரசு நிர்வாகத்தின் தலைமையகமான தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறை தொடங்கி முதலமைச்சரின் அறை வரை தவெகவினர் ரீல்ஸ் எடுக்கும் தளங்களாக மாறிவிட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட அரசு முகாமை தனது தனிப்பட்ட விளம்பரக் கூடமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தது யார்?
அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அத்துமீறி நுழைந்து ஆய்வு எனும் பெயரில் ரீல்ஸ் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் தவெகவினரை கண்டிக்கத் தவறிய அக்கட்சியின் தலைமையால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அரசு நிர்வாகத்தில் தவெகவினரின் தலையீடு முற்றிவரும் நிலையில், அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரியல் ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தவெக அரசையும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் அண்மைக்காலமாகவே மருத்துவக் கழிவுகள் திறந்த வெளிகளில் கொட்டப்படுதல், மருத்துவமனைகளிலேயே கழிவுகள் தேங்கி கிடத்தல், உரிய நேரத்தில் உரிய முறையில் அகற்றப்படாமல் இருத்தல் என அடுத்தடுத்து வெளியாகும் புகார்கள், தமிழகத்தின் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரத்தை பாதிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது.
உதாரணத்திற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கிலோ மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், குறிப்பிட்ட 5மாவட்டங்களுக்கும் சேர்த்து விருதுநகரில் செயல்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் நாள் ஒன்றுக்கு 2800 கிலோ கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்ற நிலையில் மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் எங்கே செல்கின்றன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு போதுமான அளவிற்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என்பதும்,
தற்போது இருக்கும் மிகக் குறைவான ஆலைகளிலும் மருத்துவக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் வசதிகள் இல்லாததுமே ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான பிரதான காரணம் என பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு உற்பத்தி ஆகிறதோ, அதற்கு ஏற்றவாறு அவை மேலாண்மை செய்யப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுநல ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு கூட உரிய பதிலை அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், காலம் தாழ்த்துவதும் ஏற்புடையதல்ல.
எனவே, பொதுமக்களின் உயிர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.
அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது.
மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா?
எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும்.
காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் முதன்மையானவராகத் திகழ்ந்தவரும், சிறைத் துன்பங்களையும், நோயின் வேதனைகளையும் தாங்கி நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவுதினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரராக, எழுச்சியூட்டும் படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராக, சொற்பொழிவாளராக எனப் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் மத்தியில் விடுதலைக்கான வேள்வியை விதைத்த போராளி சுப்பிரமணிய சிவா அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து – தமிழகத்தில் அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை, அதுவே டெல்லியில் அனுமதியின்றி போராடிய திரு.ராகுல்காந்தி அவர்களை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா ?
2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.
நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய திரு. ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?
தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேலூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினருமான திரு.பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்களின் மகன் திரு P.உலகாதிபதி அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மகனை இழந்துவாடும் திரு.பி.பெரியபுள்ளான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
@PPeriyapullan @AIADMKOfficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும்.
எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தமிழக விளைநிலங்களுக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வபோது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?
எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் - லஞ்சம் கேட்போரிடம் இது முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
நெல் கொள்முதல் செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 லஞ்சம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.
"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் திரு. விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் திரு. விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எங்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் மொழியின் அழகையும், அதன் உச்சரிப்பின் பெருமையையும் தனது கம்பீரமான குரலால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த மகா நடிகரும், உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த உன்னதக் கலைஞருமான செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுதினம் இன்று...
வீரம், தியாகம், பாசம், கோபம், சோகம், காதல் என மனித உணர்வுகளின் அனைத்து பரிமாணங்களையும் தனது அற்புதமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி காலம் கடந்தாலும் கம்பீரம் குறையாத கலைப் பேரரசராக மக்கள் மனங்களின் நிலைத்திருக்கும் சிவாஜி கணேசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும்.
பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், காலை - மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது.
எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CTR_Nirmalkumar @CMOTamilnadu @TANGEDCO_Offcl -
TTV Dhinakaran
@TTVDhinakaran
2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து அவ்விருதுகளுக்கு தேர்வாகியிருக்கும் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியிருக்கும் ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் திரு.தனுஷ் அவர்கள் உட்பட படக்குழுவினர், மகராஜா திரைப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகையாக தேர்வாகியிருக்கும் சஞ்சனா அவர்கள், சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதைப் பெறும் அனல் அரசு அவர்கள், அமரன் திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக தேர்வாகியிருக்கும் திரு.ராஜ்குமார் பெரியசாமி அவர்கள், சிறந்த பின்னணி இசைக்காக தேர்வாகியிருக்கும் திரு.ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்கள், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதைப் பெறும் திரு.கலைவாணன் அவர்கள், சிறந்த ஒலிக்கலவையாக ( Best Sound Mixing ) தேர்வாகியிருக்கும் மெய்யழகன் திரைப்படக் குழுவினர், தேசிய நலனை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினர் மற்றும், தமிழ் ஆவணப்படமான ப்ளூ படத்திற்கான சிறந்த ஒலி வடிவமைப்புக்காக தேர்வாகியிருக்கும் திரு ஹரிஹரசுதன் உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழ்நாட்டிற்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்த அனைவரின் திரைப்பயணமும் மென்மேலும் சிறக்கவும், விருதுகள் பல குவிக்கவும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடிய தமிழ் நிலத்தின் மாவீரரும், அடிமைப்பட்டு கிடந்த மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை தூண்டிய சுதந்திரப் போராட்ட தியாகியுமான அழகுமுத்துகோன் அவர்களின் நினைவுதினம் இன்று..
அஞ்சாமையை அடையாளமாகக் கொண்டு, ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தாய் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய மாவீரர் அழகுமுத்துகோனின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள்
தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்
சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும்.
கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும்.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணைக்காக காவல்துறையின் அழைப்பின் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் திரு.விஜயன் அவர்களிடம் விசாரணை எனும் பெயரில் காவலில் வைத்து அலைக்கழித்ததோடு, அவரின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்திருக்கும் காவல்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தவெக சட்டமன்ற உறுப்பினர் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காவல்துறை, கடந்த மே மாதம் இரவு 8 ஆம் தேதி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட போலிக் கடித விவகாரத்தில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன்?
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதோடு, புதுச்சேரியில் தங்கியிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்து, காரில் வைத்து கடிதம் ஒன்றில் அவர் கையெழுத்திடுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய முனைப்பு காட்டாத காவல்துறை, தற்போது, ஆளுங்கட்சி விவகாரம் என்பதால் விசாரணை எனும் பெயரில் ஊடகவியலாளர் திரு.விஜயன் அவர்களை அலைக்கழித்திருப்பது பத்திரிகை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும்.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப -
தவறான வழியில் ஆட்சியமைக்க தவெகவினர் செய்த தவறுகளே, அவர்களுக்கு விரைவில் தகுந்த பாடத்தை புகட்டப்போவது நிச்சயம். @pttv_tweets -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் காவலர்கள் தரக்குறைவாக பேசியதோடு, அப்புகாரை ஏற்க மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயத் தொழிலாளி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதில் முதல் நம்பிக்கையாக இருக்க வேண்டிய காவல்நிலையங்கள், புகாரை ஏற்க மறுத்து அலைக்கழிப்பதும், விசாரணை எனும் பெயரில் தரக்குறைவாக நடத்துவதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், சட்டத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளன.
நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சிறையில் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் கூறிய செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, சென்னை புழல் சிறையில் இருந்த மற்றொரு கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக பரவிவரும் தகவல் காவலர்கள் மற்றும் காவல்துறை மீது பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தையே ஏற்படுத்துகின்றது.
எனவே, திருத்துறைப்பூண்டி விவசாயி தற்கொலை வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, காவல்துறையினரின் செயல்பாடுகளில் மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் சட்டப்பூர்வமான கடமை ஆகியவை முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், காவல்துறை தலைவரையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழர்கள் கலப்படமற்ற தூயதமிழில் பேசவும், எழுதவும் தனித்தமிழ் இயக்கத்தை கண்டவரும், தமிழையே தன் உயிர் மூச்சாக கருதி அதன் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழறிஞருமான மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று...
தமிழ் மொழியின் பெருமையை பாதுகாத்ததோடு மக்கள் மத்தியில் தனித்தமிழ் உணர்வை ஆழமாக விதைத்திட்ட தமிழறிஞர் மறைமலை அடிகளார் அவர்களையும், அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ? எப்படி ஒழிக்கப் போகிறார் ?.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான திரு.வீராசாமி அவர்கள், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட திரு.வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோக் காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.D.மகாராஜன் அவர்களின் தாயார் திருமதி.D.மந்தையம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும், ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாபெரும் ஆளுமையும், அரசியலில் நேர்மைக்கும், எளிமைக்கும் தலைசிறந்த உதாரணமாக திகழ்ந்த கிங் மேக்கருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்புகளை பெருக்கிடும் மிகப்பெரிய தொழிற்சாலைகள், விவசாயிகள் பயன்பெற்றிட தடுப்பணைகள் என தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்து தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் முக்கியமானவராக திகழும் கர்மவீரர் காமராஜர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒருபுறம் அடக்குமுறை, மறுபுறம் கரிசனம் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் போடும் இரட்டை வேடம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது
நாகர்கோவில் அருகே குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை காவல்துறையினரே அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .
மறுபுறம், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை சமூக வலைத்தளத்தில் விமர்சித்ததாக கூறி, கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி இளைஞர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை இப்படி மோசமாக இருக்க, இன்று காலை சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, அவரின் இருக்கைக்கே சென்று பணி நியமன ஆணை வழங்கிவிட்டு ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாவலராக தன்னைத் தானே முன்னிறுத்திக் கொள்ள முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அரங்கேற்றியிருக்கும் நாடகம் மக்கள் மத்தியில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் மத்தியில் இனி எடுபடாது.
எனவே, மாற்றுத்திறனாளி இளைஞர் மரணத்தில் முழுமையான விசாரணையை மேற்கொள்வதோடு, மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர் எனும் போர்வையில் அவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் சர்வாதிகாரப்போக்கை உடனடியாக கைவிட்டு, ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து விமர்சனங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் மூலம் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது வரை மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை தவெக அரசு மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது
மணல் குவாரிகளின் கட்டுப்பாடற்ற, விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஏற்படும் பாதிப்பை மறந்துவிட்டு, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மணல் தட்டுப்பாட்டை போக்கவே மீண்டும் மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையால் காவிரி டெல்டா பகுதிகளின் நிலை மேலும் மோசமடையும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
அதோடு, மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதை தாண்டி, உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல், தடுக்க நினைப்போர் மீது தாக்குதல் என சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் அடிப்படைக் காரணமாகவும் அமைந்த அவலச் சம்பவங்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிக்கு பொதுமக்கள் தர்மஅடி - பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா ?
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்களே பிடித்து நையப்புடைந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்குமேடை வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார் ?
தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்களை தடுத்து
நிறுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக் கேடானது.
எனவே, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே அடுத்து அக்குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதோடு, இனியாவது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் திரு.சரத்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.சரத்குமார் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தனது கலை மற்றும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @realsarathkumar -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @tnhrcedept @RameshOffcl -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும்.
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் (09.02.2026 அன்று) ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தற்போது அத்தொகை 1038 கோடி ரூபாயாக திருத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? - அதேபோல, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை சூயஸ் (SUEZ) நிறுவனத்துடன் ஜுன் 19 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து ஜுலை 8 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ?
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளின் படி சேலம் மாநகர மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 19ஆம் தேதியே திருத்தப்பட்ட தொகையோடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படும் நிலையில், இந்த அவசர ஒப்பந்தம் பொது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படும் அரசு உயர்பதவி நியமனங்களும், இதுபோன்ற தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும், பொதுமக்களுக்கு தெரியவந்து அதற்கு கேள்வி எழுப்பிய பிறகே, அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடுவதை பார்க்கும் போது, குளறுபடிகளும், குழப்பங்களும் நிறைந்திருக்கும் அரசு நிர்வாகத்தில், முதலமைச்சர் கூறிய வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவுள்ளது.
எனவே, சூயஸ் (SUEZ) நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை விளக்குவதுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப்பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உயரிய சிகிச்சைகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளருமான திரு.பூமணி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
மக்களின் வாழ்வியலையும், சமூகத்தின் உண்மை நிலைகளையும் தனது படைப்புகளின் மூலம் ஆழமாக பதிவு செய்து, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த எழுத்தாளர் திரு.பூமணி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணை எடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம் இரவு, பகலாக மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQThis media couldn't be displayed. See it on the original post. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், இசையின் இனிமையை தனது குரலால் தலைமுறைகள் தாண்டி உயிர்ப்பித்து தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் (Nightingale) என அன்போடு அழைக்கப்படுபவருமான எஸ். ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத தடத்தைப் பதித்துச் சென்றிருக்கும் பாடகி எஸ்.ஜானகி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலாப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும், தமிழக அரசிடமிருந்து நீர் திறந்திடக் கோரி எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, மாநிலங்களின் ஒருமைப்பாட்டிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது.
கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க இயலாது, காவிரி மேலாண்மை வாரியமும் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை, மேலும் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது, காவிரி நீரையே குடிநீர் மற்றும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக நம்பியிருக்கும் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களிடமும், காவிரி படுகை விவசாயிகளிடமும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கேட்கவில்லை; கர்நாடக அரசு வழங்க முடியாது என்ற பொறுப்பற்ற பேச்சு சட்டவிதிமுறைகளை அவமதிப்பதாகும்.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 32 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதப்படுத்தி வரும் கர்நாடக அரசு, தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சியைத் தக்கவைக்கப் பெரும்பான்மை வேண்டி, திமுக கூட்டணியில் தவெகவிற்கு எதிராகப் பதிவான வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக அமைச்சரவையில் இணைத்ததுபோல், பெரும்பான்மை இல்லாத ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் அடகு வைக்க தவெக அரசு முனைந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. “எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்” என்ற முதலமைச்சரின் வசனத்தின் படி டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் சரியான முறையில் பேசி காவேரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் மேகதாது பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னும் “மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட நட்டுவைக்க அனுமதிக்க மாட்டோம்” எனறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் விதமாக அறைகூவல் விடுவதை விட்டுவிட்டு தங்களது டெல்லி காங்கிரஸ் தலைமை மூலம் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
எனவே, தவெக அரசு வழக்கம் போல் அமைதியாகவும் தந்திரமாகவும் இருந்து தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்ளாமல் சட்ட ரீதியான துரித நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதோடு தமிழகத்தின் நீர்வள உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ள மேகதாது அணைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவரும், போர்க்களத்தில் எதிரிகளால் எளிதில் வீழ்த்த முடியாத போர் வீரருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்து தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி உயிர்நீத்த அழகுமுத்துகோன் அவர்களின் தியாகத்தையும், அஞ்சாத துணிச்சலையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் பூரண உடல்நலத்தோடு, நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@rajnathsingh -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.
முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.
மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற நியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை – ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் இந்தப் போக்கைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், மாநில ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 650 மருத்துவ இடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், மாநில ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்கள் மேலும் குறைவதுடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிலும் சுமார் 50 இடங்கள் குறையும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் ₹4 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியவுடன், ஆண்டுக் கல்விக் கட்டணம் ₹20 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை உயரக்கூடும். இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவு முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே அதிக கட்டணம் வசூலிக்கும் நீட் பயிற்சி மையங்கள், தேர்வு முறைகேடுகள், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதும், அதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மேலும் உயர்வதும், மருத்துவக் கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றும் என கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள எந்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறுவதற்கான தடையின்மைச் சான்றிதழை (No Objection Certificate) எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்காத நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய அங்கீகாரங்களை வழங்கியிருப்பது மாநில உரிமைகளையும், மாணவர்களின் நலனையும் பாதிக்கும் நடவடிக்கையாகும்.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திய முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நடவடிக்கைகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது, ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பது, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆகியவற்றில் தமிழக அரசு உடனடியாக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நெல் மூட்டைகள் சேதம் – தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தீயில் கருகி வீணாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாதக் கணக்கில் இடைவிடாமல் உழைத்து விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் அனைத்தும் தீயில் கருகி வீணாகும் அளவிற்கு அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டிருப்பதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெல் குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதற்கான காரணத்தை முழுமையாகக் கண்டறிவதோடு, இதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பதையும் அரசு தீவிரமாக ஆராய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
எனவே, இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நெல் சேமிப்புக் கிடங்குகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை கே கே நகர் கன்னிகாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடியை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
சேலம் தலைவாசல் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த திமுக நிர்வாகி கொலை, சென்னை வால்டாக்ஸ் சாலையில் இளைஞர் குத்திக் கொலை, விருதுநகர் அருகே சிறுமி மீது காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி, தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி என தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், ரீல்ஸ் கண்டெண்டை தேற்றுவதிலும், பொய் செய்திகளை வித விதமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதிலுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால், சமூக விரோதிகள் எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாகச் சுற்றித்திரியும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
எனவே, காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ரவுடி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறைக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கி அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்திட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குடியிருப்புகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், புகழ்பெற்ற திருக்கோயில்களுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு அருகே அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, தஞ்சாவூர் மாநகரின் மையப்பகுதியிலிருந்து நிலம், நீரோடு, காற்றையும் மாசுபடுத்தும் இக்குப்பைக் கிடங்கை உடனடியாக இடமாற்றம் செய்வதோடு, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்குகளை அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்றும் வகையில் செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இடைவிடாது ஒலித்து அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமத்துவம், மனிதநேயம் மற்றும் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூகநீதி போராட்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை விதைத்த தீண்டாமை ஒழிப்பு போராளி இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்கள் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திற்குள் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் வராத நிலையில், அரைகுறை அறிவு ஜீவிகள் வழங்கிய ஆலோசனையின் படி அவசரகதியில் தவெக அரசு எடுத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய தவறான முடிவால் இன்று விவசாயி ஒருவரின் உயிர் பறிபோய் அவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆளுநர் உரைக்கு பின் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் உரையில், விவசாயிகளுக்காக இந்த அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சிலரின் தூண்டுதலால் தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்ற கருத்தை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் ஏற்ற இறக்கத்துடன் பதிவு செய்தார். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, அதை "மற்றவர்களின் தூண்டுதல்" என்ற போர்வைக்குள் அடக்கிப் பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உடனடியாக அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளை வெட்டி, ஒட்டி ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசு, எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாகப் பார்க்காமல் அவர்கள் முன்வைக்கும் கருத்துகளையும், சுட்டிக்காட்டும் பிரச்சினைகளையும் சரியான பார்வையில் அணுகி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க இனியாவது முன்வர வேண்டும்.
எனவே, மக்களை ஏமாற்றியே ஆட்சியை நடத்திவிடலாம் என்ற தங்களின் அதிமேதாவித் தனத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதோடு, உயிரிழந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டை உடனடியாக வழங்கவும், தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
எந்தவித தடையுமின்றி சுலபமாகவும், சுதந்திரமாகவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பார்க்கும் போது, தமிழக அரசு அறிவித்தது போதைப் பொருள் தடுப்பு படையா? அல்லது போதைப் பொருளைத் தடுக்க முடியாத படையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதோடு பள்ளி சென்று கல்வி பயில வேண்டிய மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழக்கும் அபாயகரமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே, தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், அறிவித்த நாள் முதல் காகித அளவிலேயே இருக்கும் போதைப் பொருள் தடுப்பு படையை முழு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியதாக தமிழக விவசாயிகள் புகார் – சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராகச் செயல்படுவதோடு, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தர தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமானப் பணிகளின் மூலம் மேகதாது அணையைக் கட்டும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் காட்டும் தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் இனியாவது உணர வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒருபுறம் White Powder புகழ் அமைச்சர், மறுபுறம் பொய்சொல்வதையே தன் தொழிலாக கொண்டு நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக சொல்லபடும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்காக சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகாருக்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர் – ஊழலை ஒழிப்போம் என கொக்கரித்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா?
தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தையே சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டார்களோ என்று எண்ணும் அளவிற்கு, சினிமா வசனங்களை ஒரே டேக்கில் அள்ளிவிட்ட முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான White Powder புகழ் அமைச்சர் மீது இதுவரை விசாரணை கூட நடத்த முன்வராரது ஏன்?
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதி மன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையின் மூலமாக பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரையும், அவர்கள் ஆற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த்துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத் தனத்தை உண்மையான முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன ?
வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்துபுகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூயசக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதன் மூலம், ஏற்கனவே தங்களால் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தவெக அரசும், அதன் முதலமைச்சரும் பாதுகாக்க முனைகிறார்களோஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தவெக ஆட்சியில் புகாருக்கு உள்ளாகியிருக்கும் இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
ஆகவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை கலைந்து, வெளிப்படையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு தகுதியுடைய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த நியமனத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நம் நாட்டின் கலாச்சார, பண்பாட்டு, ஆன்மீகப் பெருமைகளை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவரும், துணிச்சலின் உருவமாகவும், ஆன்மீகத்தின் உயிர் வடிவமாகவும் திகழ்ந்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் தன்னம்பிகையை ஊட்டியவருமான வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இன்று…
”நீ எதுவாக நினைக்கிறாயோ? அதுவாக நீ ஆவாய் “ என்ற ஆழமான தத்துவத்தின் மூலம் இன்றைய கால இளைஞர்களுக்கு உந்து சக்தியாக விளங்கி வரும் சுவாமி விவேகானந்தர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சாகித்யா அகாடமி விருதை இருமுறை பெற்ற தலைசிறந்த நூலாசிரியருமான முதுபெரும் கவிஞர் திரு.புவியரசு அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ் படைப்பாளிகள் பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த முதுபெரும் கவிஞர் திரு.புவியரசு அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கால அவகாசத்தை நீட்டி தவெக அரசு அரசாணை பிறப்பிப்பதா – மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதப்படும் இத்திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் .
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை அரசாணை பிறப்பித்திருப்பதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிள்ளியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமைவதாக இருந்த இத்திட்டம் அமையப்பெற்றால், சுற்றுசூழல் பாதிப்படைந்து அதனால் கொடிய நோய்கள் ஏற்படுவதோடு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசம் முடிவடையும் நாளில் மக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்க்காமல், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதே திட்டத்தைச் சுட்டிக்காட்டி நாசகார, நச்சுத் திட்டங்களை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய தவெக, ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் அத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கன்னியாகுமரி மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமன்றி, தவெக அரசு மக்களுக்கான அரசு அல்ல என்பதையும் புரியவைத்துள்ளது.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் நிலம் ஒதுக்கிய ஆணையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @drtkprabhu_TVK @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத பணியை தங்களின் கடமையாக மட்டுமல்லாது, மனிதநேய சேவையாகவும் கருதி பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணை, மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டு பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவரின் தன்னலமற்ற சேவையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பொது விநியோக பயன்பாட்டிற்கான ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவதா? - மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.தங்கப்பாண்டி அவர்களின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா ? அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா ? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? - மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் இடமான பள்ளிகளில், மாணவர்களின் அடையாள அட்டையில் அவரவர் சாதி சார்ந்த விவரங்களைக் குறிப்பிட முனைவது பள்ளி வளாகங்களுக்குள்ளாகவே சாதிய அடையாளங்களை வலுப்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சியாகும்.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் சாதிய பகுபாடை போக்க வேண்டிய அரசு, அவர்களின் மனதில் சாதிய அடையாளத்தை ஆழமாக விதைப்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானது ஆகும்.
எனவே, அரசுப்பள்ளிகள் என்பது மாணவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சாதியின் பெயரில் பிரிக்கும் கருவியாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து, மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி திரைக்கதைகளின் மன்னராக வலம் வந்தவரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தவருமான திரு கே.பாக்கியராஜ் அவர்கள் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.
துணை இயக்குநராக திரையுலகில் அடியெடுத்துவைத்து இயக்குநராக, கதாசிரியராக நடிகராக என அரை நூற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த திரு கே.பாக்கியராஜ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.
தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் மொழியின் அழகையும், இனிமையையும் தன் கவிதைகள் மூலமாக உலகறியச் செய்தவரும், தமிழ் திரையிசை உலகிற்கு அழியாப் பொக்கிஷங்களை வழங்கிய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
காதல், தத்துவம், ஆன்மீகம், மனிதநேயம் என வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் தனது பாடல் மற்றும் கவிதைகளின் மூலமாக மக்களின் உள்ளங்களை தலைமுறை கடந்தும் ஆட்கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தமிழ் மற்றும் இலக்கியப் பணிகளை இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது!
சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் பத்திரிகைத் துறையின் மூத்த பத்திரிகையாளர் திரு பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சுதேசமித்திரன் பத்திரிகை தொடங்கி பல்வேறு பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் திறம்பட பணியாற்றிய திரு.பெரியசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்டு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
துயர சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பூரண உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் அப்பகுதி மக்கள் மேலும் பாதிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் அரவைக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்ட தாமதமே தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யாத வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள், மழையில் நனைந்து வீணான பின்பு ஆய்வு எனும் பெயரில் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருப்பது அவரின் பொறுப்பற்ற செயலையே வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே, மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நெற்பயிர்களும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பது விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் நிலைகுலையச் செய்திருப்பதோடு அரசுக்கும் கணிசமான நிதியிழப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகிப் போன நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, அனைத்து திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களிலும் பல மாதங்களாக தேங்கியிருக்கும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒட்டுமொத்த குடும்பத்தை தாங்கி சுமக்கும் அடிப்படை தூணாகவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் சமூக பொறுப்புணர்வை கற்றுத்தரும் முதல் ஆசானாகவும் விளங்கும் தந்தையர்கள் அனைவருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது சொந்த விருப்பங்களை விட குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்து, குழந்தைகளின் கனவுகளை நனைவாக்குவதற்காக எண்ணற்ற தியாகங்களை சத்தமின்றி செய்துவரும் தந்தையர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அளப்பரிய உழைப்பையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்?
தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது.
சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும்.
எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றன.
மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல, எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் உணர்ந்து மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதேசமயம், தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மாணவர்கள் மீது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@NTA_Exams @EduMinOfIndia @PMOIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்களின் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@rashtrapatibhvn -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழகத்தின் நீர்வளத்தை பாதிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்த தமிழக அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மேலும், இவ்விவகாரத்தில் பிரத்தியேக நடுவர் நீதிமன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த கருத்தை ஏற்று, அதனைத் தீர்மானத்தில் திருத்தமாக இணைத்த முதலமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசினர் தீர்மானத்திற்கு கொள்கை அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதேவேளையில், தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், டெல்டா மாவட்டங்களின் நீர்வளப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான்
தவெக அரசு தயாரித்த ஆளுநரின் இன்றைய உரை! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், எளிமை, நேர்மை மற்றும் உண்மையை தன் அடிப்படை குணங்களாக கொண்டிருந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான ஐயா கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று
தன்னுடைய அசாத்திய திறமையாலும், அளப்பரிய உழைப்பாலும் கிடைத்த பல்வேறு பதவிகளின் மூலம் அரசியல் உலகின் உச்சத்தை அடைந்தாலும் தன் உயிர் பிரியும் நிலையிலும் எளிமையை மட்டுமே அடையாளமாகக் கொண்டிருந்த ஐயா கக்கன் அவர்கள் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன அறிக்கையே!
தமிழக அரசின் நிதிநிலை குறித்து "வெள்ளை அறிக்கை" வெளியிடுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது, இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மந்தமடைந்திருப்பது போன்ற தமிழக மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்துள்ள உண்மைகளுக்கு புதிய அட்டை போட்டு மீண்டும் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது.
தமிழகத்தின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரிசெய்யப் போகிறார்கள், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன, வருவாயைப் பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?
தவெக ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன?
வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான செயல் திட்டங்கள் என்ன?
மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்க என்ன புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன?
இப்படி செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் அளித்த ஒரே பதில் "it will take some time" தான்.
வருவாயைப் பெருக்குவதற்கான புதிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், அரசுத் துறைகளில் உள்ள leakage-களைத் தடுக்க வேண்டும் என்பதையே பிரதான தீர்வாக முன்வைத்திருப்பது, எதிர்காலத்தில் வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தும் பாதையை தவெக அரசு தேர்வு செய்துள்ளதோ என்ற அச்சத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வெள்ளை அறிக்கை என்பது பிரச்சினைகளைப் பட்டியலிடுவதோடு நிற்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும், காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். ஆனால், தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெளிவான தொலைநோக்குப் பார்வையும் இல்லை; நம்பிக்கையூட்டும் செயல்திட்டங்களும் இல்லை; காலவரையறையுடன் கூடிய உறுதிமொழிகளும் இல்லை.
எனவே, தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல; ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன உண்மைகளையே புதிய அட்டையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், மக்களை அடிமைப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற மாவீரருமான வாஞ்சிநாதன் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக தமிழகத்தில் உருவான தேசிய புரட்சிகர இயக்கத்தின் நாயகர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்து, தாய் திருநாட்டின் விடுதலைக்காக தன் உயிரையும் அர்ப்பணித்திட்ட வாஞ்சிநாதன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டணம் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்ற எரிசக்தி துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களின் பேச்சு பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் அமைய வேண்டும்.
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்துக் கொண்டிருந்த எரிசக்தி துறை அமைச்சரின் தற்போதைய பேச்சு, கடந்த ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட குடியிருப்புகளுக்கான வருடாந்திர கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்த முடிவு செய்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே வணிக நிறுவனங்களுக்குப் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் ஆயிரக்கணக்கான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, அதில் பணியாற்றி வந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை மின்கட்டண உயர்வு ஏற்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் முடங்கும் அபாயம் ஏற்படும்.
அதோடு, குடியிருப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தாமல் வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்தினாலும், அந்நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வானது நேரடியாக பொதுமக்களின் மீதே சுமையாக ஏறும் என்பதை அரசு உணர வேண்டும்.
எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிடுவதே மின்கட்டண உயர்விலிருந்தும், விலைவாசி உயர்விலிருந்தும் பொதுமக்களை காக்கும் ஒரே வழியாக அமையும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும்.
முன்னதாக, RBI வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நிதிநிலையை காரணம் காட்டி ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய வலுவான எதிர்ப்பின் காரணமாகவே தற்போது அந்த வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது.
காலநிலை மாற்றம், எதிர்பாராத இயற்கை பாதிப்புகள், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்றுள்ள பயிர்க்கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிக்குப் பிறகும் மீதமுள்ள தொகையை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தற்போதுள்ள பயிர்க்கடனை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே புதிய பயிர்க்கடன் கிடைக்கும் என்ற சூழல் நிலவுவதால் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலை உருவாகி, விவசாய உற்பத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது.
மிக முக்கியமாக, தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெளிவாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் தள்ளுபடி வரம்பை சிறிது சிறிதாக உயர்த்துவது, விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.
போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்ற நிலை தொடருமானால், "மாற்றம்" கொண்டு வருவதாக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? மக்களின் நலனுக்காக ஆட்சி செயல்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு கோரிக்கைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது.
எனவே, தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரைப்பட நடிகர் திரு. வாகை சந்திரசேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு.வாகை சந்திரசேகர் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம் - தமிழகத்தில் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை தவிர்க்கவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
தகுதித்தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் முறைப்படி தேர்வாகி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கேங்மேன் பணியில் இணைந்த பணியாளர்கள் கள உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி பல மாதங்கள் கடந்தும் செயல்பாட்டிற்கு வராமல் இருப்பதே அவர்களை குடும்பத்துடன் போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக காலியாக இருக்கும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், அத்தகைய காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கேங்மேன் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, ஒப்பந்தப் பணியில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமித்து தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் உறுதி செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள்?
சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர்
சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை
என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது.
பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும் ?
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது.
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்கி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ?
எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், மதிப்பிற்குரிய நண்பருமான திரு பியூஷ் கோயல் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் மற்றும் தேசப் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@PiyushGoyal @PiyushGoyalOffc -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குறித்து மேடையில் பாடமெடுத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவார் ? அவர்களிடம் இருந்து எப்படி பெண்களைப் பாதுகாக்கப் போகிறார் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விழிப்புணர்வு எனும் பெயரில் ரீல்ஸ் போட முடியுமே தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு தடுக்க முடியாது என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கிறது.
எனவே, ஆலந்தூர் பகுதியில் பெண்ணின் வீடு புகுந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அத்துமீறல்களில் ஈடுபடும் தவெகவினர் மட்டுமின்றி பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில், 18 மணி நேரம் தடையில்லா மின்சார விநியோகம் உள்ளிட்ட 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
மின்சாரம் எப்போது வருகிறது? எப்போது போகிறது? என்பதைக்கூட கணிக்க முடியாத அளவுக்கு, நாள்தோறும் பலமுறை அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டும், மின் அழுத்தக் குறைபாடும் நிலவி வருவதால் மோட்டார் பம்புகளை இயக்க முடியாமலும், நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமலும் பயிர்கள் கருகி வருகின்றன.
இந்த அவல நிலையை விவசாயிகள் பலமுறை சுட்டிக்காட்டி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தற்போது அறிவித்துள்ள 18 மணி நேர தடையில்லா மின்சார வழங்கல் அறிவிப்பை மட்டும் எவ்வாறு நம்புவது என்று விவசாயிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்.
ஆட்சிக்கு வந்தவுடன் குறு மற்றும் சிறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகள், மாநிலத்தின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக, தவெகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருக்கும் சூழலில், இனியும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது.
எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவற்றை இனியும் புறக்கணிக்காமல், எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கடலூர் அருகே கடற்பகுதி எல்லைக்குள் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் – கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை எந்தவகையிலும் அனுமதிக்கக் கூடாது.
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதி எல்லைக்குள் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால் அதே இடத்தில் மேலும் நான்கு கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வாழ் உயிரினங்களும், இயற்கை வளங்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மேலும் 4 கிணறுகளை அதே இடத்தில் அமைக்க முற்படுவது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது கடல் சார்ந்து வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின் போது எழும்பும் வெடிச் சத்தமும், அதிலிருந்து கசியும் ரசாயனக் கழிவுகளும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்து போகும் அபாயம் ஏற்படும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முடிவு செய்து தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மன்னார்குடி அருகே காரக்கோட்டையில் கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
மாணவர்களை இழந்துவாடும் அவரவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
I extend my heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi Ji, on creating a new historic milestone by serving 4,399 consecutive days as the Prime Minister of India.
Having been elected by the people of India for a third consecutive term, the Hon'ble Prime Minister has attained this remarkable position in the history of Indian democracy through his unwavering commitment to public welfare, administrative excellence, and dedicated service. This achievement stands as a testament to the immense affection and trust that he has earned from the people of the nation.
Under the leadership of the Hon'ble Prime Minister, India has made significant strides in economic growth, infrastructure development, technological advancement, and enhancing the country’s global standing. The Hon'ble Prime Minister’s efforts in the direction of transforming India into a prosperous, strong, and developed nation, continue to inspire millions across the country.
I once again convey my warmest congratulations and best wishes to the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, and wish him to continue success in his journey of leading India towards greater progress and achievement.
@narendramodi @PMOIndia @BJP4India @BJP4TamilNadu @NainarBJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை மாவட்டம் பாகனேரியை தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மன்னரும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் மருது சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தவருமான தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த தினம் இன்று.
போர்க்களத்தில் எத்தகைய எதிரிகளையும் வீழ்த்தக் கூடிய சக்தி படைத்த போர் வீரராக வலம் வந்ததோடு, கம்பீரத்தின் மறு உருவமாகவே போற்றப்பட்ட மாமன்னர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழர்களின் வாழ்வியலைத் திரைப்படமாக எடுத்து திரையுலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும், தலைமுறைகள் கடந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவருமான இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.
நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @offBharathiraja -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@polimernews @NewsTamilTV24x7 @TamilJanamNews
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் ஊடக உலகில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாலை முரசு செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், அதன் அனைத்து நிலையிலான ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சவால்கள் மிகுந்த ஊடக உலகில் உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடுவதிலும், மக்கள் பிரச்சினைகளை அரசு நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனுக்குடன் தீர்வு காண்பதிலும் தனித்துவமிக்கதாக திகழும் மாலை முரசு செய்தி தொலைக்காட்சியின் வளர்ச்சியும் வெற்றிப் பயணமும் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். @MalaimurasuTv -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் சட்டமன்றத் தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இத்தகைய அறிவிக்கப்படாத மின்வெட்டு அவர்களை வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டாலும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினையாலும், குழந்தைகளும் முதியவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாவதோடு, வீட்டில் உள்ள மின்சாதப் பொருட்களும் பழுதாகி வருவதும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சார்ந்த தவெக நிர்வாகிகள் இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் அவர்களின் ஆதரவாளர்கள் தன்னை தொடர்பு கொண்டு காவல்துறையில் அளித்த புகாரைத் திரும்பப்பெறவேண்டும் என மிரட்டியதாகவும், தன்னைப் போலவே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கும் பேட்டியைக் கேட்கும் போதே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
மருத்துவமனைகளில் ஆய்வு, அம்மா உணவகத்தில் சோதனை எனும் பெயரில் தவெக நிர்வாகிகள் அரங்கேற்றிய அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, இன்று ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டும் அளவிற்கான துணிச்சலை தவெகவினருக்கு கொடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சருக்கு இணையாக தவெகவின் மாவட்டச் செயலாளருக்கு இருக்கை அமைத்து அமரவைப்பதும், குன்னூரில் நகராட்சி ஆணையரை தவெக நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக மிரட்டுவதும் தான் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு ஏற்பட்ட ஒரே மாற்றமாக இருக்கிறது.
தமிழகத்தில் கொத்து கொத்தாக அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் கண்டு, துளியளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் தன்மீது வேண்டுமென்றே பழியைத் தூக்கிப் போடுவதாகக் கொக்கரித்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், இவ்விவகாரத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் தன் தோழமைக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு பெ.சண்முகம் அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
நீண்ட இழுபறிக்குப் பின் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால், இன்று தொடங்கி வைக்கப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகப் பெண்களை, முதலில் தவெகவினரிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் விமர்சனம் தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, இனியும் தமிழகத்தில் சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கிற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்றாமல், தமிழகத்தில் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்குப் படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள் – தொழில் வளத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டாத தவெக அரசால் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி உயரும்?
தூத்துக்குடியில் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையைத் தருகிறது.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதாக INSTA வில் REELS கள் வருகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவோ, அதனால் எந்தவித முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவானதாகவோ இதுவரை தெரியவில்லை.
தொழில்நுட்ப ரீதியிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில், தொழிலைத் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திடீரென அண்டை மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் தவெக அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளதாக இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, ஏற்கனவே தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு திட்டமிட்ட படி தமிழகத்தில் தொழில் தொடங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சமூக வலைத்தளங்களில் அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூர் திரு மாரிதாஸ் அவர்களை கைது செய்திருக்கும் தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்பாடுகளை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@MaridhasAnswers @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை – மாற்று ஏற்பாடுகளை தவெக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்
காவிரி டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாக இருப்பதால் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கான தண்ணீர் ஜூன் 12 ஆம் தேதி திறக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் குறுவை சாகுபடியே கேள்விக்குறியாகியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருக்கும் முக்கிய அணைகளில் நீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால் விவசாயம் மட்டுமல்லாது அதனையே நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தவெக என்பது புதிய அதிமுக என்று பேசும் தவெக அமைச்சர்கள், இதுபோன்ற இயற்கை இடர்பாடுகள் நிறைந்த சூழல் நிலவும் போது இதயதெய்வம் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்போடு, நிலத்தடி நீரின் மூலமாகக் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்வரும் விவசாயப் பெருமக்களுக்கு மும்முனை மின்சாரத்தையும் தடையின்றி வழங்கிட முன்வர வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடையால், மின் மோட்டார்கள் பழுதடைவதும், போதிய நீர் பாய்ச்ச முடியாமல் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் காய்ந்து வீணாவதாலும் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், டெல்டா பகுதியைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் தொகையும் நிலுவையில் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெகவின் தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்கள், விரைவில் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விடுமாறு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு.DK.சிவக்குமார் அவர்களுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கைவிடும் உத்தரவாதத்தையும் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் திரு முத்து ரமேஷ் நாடார் அவர்களின் தந்தை திரு முத்துலிங்க நாடார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தந்தையை இழந்துவாடும் திரு முத்து ரமேஷ் நாடார் அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி. வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தன்னுடைய மக்கள் பணியை தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.@VanathiBJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை படைத்திருக்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர்ந்து செஸ் விளையாட்டு உலகில் உச்சம் தொட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். @rpraggnachess -
TTV Dhinakaran reposted
AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM
@ammkofficial
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் தேவை குறித்தான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக துணைப்பொதுச்செயலாளரும், தென் சென்னை மாவட்டக் கழக செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான செல்வி.CR.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன் ஆகியோர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர்.
தலைமைக் கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இஸ்லாமிய சமுதாயத்தின் ஈடு இணையற்ற தலைவராக விளங்கியவரும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தவருமான பெரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய் நாட்டின் நலனே தனது நலனாகக் கருதி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்ததோடு, அநீதிக்கும், அடக்குமுறைக்கும் ஆளான மக்களின் பிரதிநிதியாக நின்று அவர்களின் மேம்பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் - முதலமைச்சரின் முதல் கையெழுத்தான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கிவைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா ?
பெண் குழந்தைகளையும், மகளிரையும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என தேர்தலுக்கு முன்பு முழங்கிய திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு தன் ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்?
தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் புரையோடிக் கிடக்கும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து தான் தடுக்க வேண்டும் என்றால், அது வரை பெண்கள் யாரும் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
தட்டுத் தடுமாறி அல்லு சில்லுகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெக அரசில், நாள்தோறும் நடைபெறும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதற்குப் போட்டி, பொறாமை, பதற்றம் என புதுப்புது அர்த்தத்தைப் புகுத்தி, விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியில்லாமலும், அவற்றை சரி செய்ய முனைப்புக் காட்டாமலும், எதற்கு கால அவகாசம் கேட்க வேண்டும் என்பது புரியாமலும் போர்க்கால அடிப்படையில் (Emergency Issues) தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கும், கால அவகாசம் கோருவது எந்த விதத்தில் நியாயம் என்பதே எங்களின் கேள்வி.
ஏற்கனவே காவல்துறையில் நடைமுறையிலுள்ள திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயரை மாற்றி, புதிதாக எந்த ஒரு பணி நியமனமும் ஏற்படுத்தாமல், ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் பணியிலுள்ள காவலர்களையே வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைக் கூட தொடங்கி வைக்கக் காலம் நேரம் பார்க்கும் நிலையில் தான் தற்போதைய தவெக அரசு உள்ளது என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு மெல்ல மெல்ல வெளியே வரும் சமூக விரோதிகள், இம்முறை புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சுதந்திரமாக செயல்படுவதும், குற்றச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுவதும் தவெக அரசின் மீது அவர்களுக்கு துளியளவும் அச்சமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.
அதோடு போதைப் பொருட்களின் புழக்கத்தை கடந்த ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன்னிடம் இருக்கும் காவல்துறையை பயன்படுத்தி இதுவரை எத்தனை கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்துள்ளார் ? திறமையான காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயங்குவது ஏன் ?
எனவே, பெண்களின் பாதுகாப்பில் எந்த வித சமரசமுமின்றி செயலாற்ற வேண்டியது முதலமைச்சரின் முதல் கடமை என்பதை உணர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்திடுவதோடு கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் புழக்கத்தை அடியோடு கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @annamalai_k -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து - ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது.
@TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான மதிப்பிற்குரிய சகோதரி திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@DrTamilisai4BJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாகவும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை தன் உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்கொண்டிருப்பவருமான இசைஞானி திரு. இளையராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று.
கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய இசை வரை தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சி, காலம் கடந்தும் நிற்கும் காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள, இளைஞர்களிடையே ஊடுருவியிருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழிப்பதற்கு, அவர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பினால் மட்டுமே உரிய தீர்வை அடைய முடியும் என்ற அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்களின் கருத்து முழுமை பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
தமிழக முதலமைச்சராக திரு. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற நாளில் கையெழுத்திடப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையையே இதுவரை தொடங்கி வைக்க முடியாத தவெக அரசால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
எனவே, இளம்பெண் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூடுவதோடு, அங்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AadhavArjuna -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிப்பது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் கூட இல்லாமல் இருப்பதும், தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உரிய ஆய்வு மேற்கொண்டு, அங்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த போர்ப்படை தளபதிகளில் ஒருவரும், ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக போரிட்ட மாவீரர்களில் முதன்மையானவருமான வல்லநாடு பகதூர் வெள்ளையத் தேவர் அவர்களின் பிறந்த நாள் இன்று..
மண்ணையும், மக்களையும் காக்க தன் உயிர் பிரியும் வரை துணிச்சலுடன் போராடி தமிழ் மண்ணின் வீரப்பெருமையை உலகறியச் செய்த வரலாற்று நாயகர் மாவீரர் வல்லநாடு பகதூர் வெள்ளையத் தேவர் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @tnhrcedept -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் தவெக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது.
தங்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய துறை சார்ந்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் வராமல் காவல்துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்கே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
எனவே, பயனாளிகளுக்கான வீடுகள் விரைந்து ஒதுக்கீடு செய்யப்படுவதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், தவெக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை, வேலூரில் செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல், தாம்பரம் அருகே கூலித் தொழிலாளியிடம் இலவசமாக செங்கல் ஜல்லி கேட்டு தாக்குதல், செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை என கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இந்த நான்கு சம்பவங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள் என்பது தான்.
இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் தான் தவெகவில் நிறைந்திருக்கிறார்களா ? அல்லது ஆளுங்கட்சி என்ற மமதையில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா ? என்பதை தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், அது குறித்து கேள்வி எழுப்புவதும் ஊடகங்களின் அடிப்படை கடமை. மக்களின் குரலாக ஒலிக்கும் அத்தகைய ஊடகங்களை முடக்க நினைப்பதும், அரசு கேபிளில் இருந்து இருட்டடிப்பு செய்வதும் சர்வாதிகாரப்போக்கின் உச்சம்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உடனான சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கூட செய்தியாளர்களை சந்தித்து விளக்க முடியாத முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசில், ஊடகங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்கள் தான் தவெக சொன்ன மாற்றமா ? @pttv_tweets -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சரும், மதிப்பிற்குரிய சகோதரருமான திரு எல் முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு எல் முருகன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.@DrLMurugan -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத திரு ஜோசப் விஜய் அவர்கள் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் ? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு ? @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது - குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் ?
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKPartyHQ @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்:
தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கருதி, தன் வாழ்நாள் முழுவதும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்ந்ததோடு, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தன் மகனையும் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நாம் அனைவரும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி - மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம்.
இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது.
@TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் - மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி - குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ?
எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தினத்தந்தி நாளிதழைத் தோற்றுவித்து பத்திரிகை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பத்திரிகைத் துறையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பேரவைத் தலைவராக என பல்வேறு வழிகளில் தமிழர்களின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த தன்னுடைய எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு - தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே கொரோனா கால பாதிப்புகளாலும், மின் கட்டண உயர்வாலும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக அரங்கேறும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டுப் பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார்.
எனவே, தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என மின்சாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முன்னாள் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திரு.M.ரெங்கசாமி அவர்களின் தாயார் திருமதி.ம.ஜெயலெட்சுமி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு நிதின் நபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கும் திரு நிதின் நபின் அவர்கள் பூரண உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@NitinNabin @BJP4India @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாகப் புகார் - முறையான விசாரணை நடைபெறுவதை மருத்துவத்துறை உறுதி செய்ய வேண்டும்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், சக மாணவர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட மூக்கு அறுவை சிகிச்சையின் போது அதிகளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று சக மாணவிகளே குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்களால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மருத்துவர்களில் ஒரு சிலரின் அலட்சியமும், பொறுப்பின்மையும் ஒட்டுமொத்த மருத்துவத்துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, மாணவி உயிரிழப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை – மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன.
எனவே,கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? - கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதல்வர் திரு டி கே சிவக்குமார் அவர்களின் ஆணவமிக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை எனவும், அணைக் கட்டுமான பணிக்கான திருத்தப்பட்ட விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்போம் எனவும் கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்பதில் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசும், அதன் துணை முதல்வரும் தற்போது அணைக்கான பூமி பூஜை வரை பேசியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதனால் பயன்பெறும் மாநிலங்களின் அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை அறிவுறுத்தியும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியை முடக்குவதில் வேகம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, ஆட்சி அதிகாரத்தை விட மாநிலத்தின் உரிமையும், விவசாயிகளின் நலனுமே முக்கியம் என்பதை உணர்ந்து காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் முயற்சியை அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் மகளின் கால் பாதம் பறிபோனதாகப் போராடும் தலைமைக் காவலர் - ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ?
அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்கள் சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்களைக் கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தலைமைக் காவலர் திரு.கோதண்டபாணி அவர்களின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கால் பாதத்தை இழந்த அவரின் மகளுக்கு மேல் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சோழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் ஆவணங்களில் ஒன்றான 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆனைமங்கல செப்பேடுகளை நெதர்லாந்திருந்து மீட்டு தாய்நாட்டிற்குக் கொண்டுவரும் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சோழப்பேரரசின் தலைசிறந்த ராஜ்ஜியத்தையும், பண்டைய காலத் தமிழர்களின் மகத்தான வரலாற்றையும் பறைசாற்றும் இந்த செப்பேடுகள் மத்திய அரசின் தொடர் முயற்சியால் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்டிருப்பது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப் படக்கூடிய நிகழ்வாகும்.
@PMOIndia @narendramodi -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.
எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றான பிரிட்டன் ராயல்டி சொசைட்டி அமைப்பின் உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் வேளாண் விஞ்ஞானி திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் புதல்வி விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவியல்,சுகாதாரம் மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை ஆகியவற்றைத் திறம்படக் கையாண்டு பொது சுகாதாரத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ராயல் சொசைட்டி அமைப்பின் மூலம் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் மக்களின் கல்வி உரிமைகளுக்காகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவரும், மக்கள் அனைவராலும் தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுபவருமான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்த தினம் இன்று
சித்த மருத்துவராக, சிறந்த சிந்தனையாளராக கல்வியாளராக, பத்திரிகையாளராக என பல்வேறு வழிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் பிரதிநிதித்துவ உரிமையைப் பெறுவதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இன்று வெளியாகியிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்கள் அனைவரும் தங்களின் மேல்நிலைக் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துணைத் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் – குரூர மனம் படைத்த கயவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் காட்சிகள் மாறாமல் அடிக்கடி அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வராமல் பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனையை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் தொடரும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வசித்துவரும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு ஹாஜா முகைதீன் அவர்களின் இல்லத்திற்குள் புகுந்த போதைக் கும்பல் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் போதைக் கும்பல் நள்ளிரவு நேரத்தில் செய்தியாளர் ஒருவரின் இல்லத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழல் தவெக அரசின் மீது குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
கடந்த ஐந்தாண்டுக்கால திமுக ஆட்சியின் போது, உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடும் செய்தி நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஆளுங்கட்சியினர் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் தவெக ஆட்சியிலும் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய போதைக் கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, செய்தியாளர்கள் தங்களின் பணியில் சுதந்திரமாக ஈடுபடுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @NewsJTamil -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது – அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்து தரமான உணவு தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிடவும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனமார வரவேற்கிறேன்.
மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமானதாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கியதை எவராலும் மறுக்க முடியாது.
ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த அம்மா உணவகங்கள், இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் சந்திக்காத சிரமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவை தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு - பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெகவும் தோல்வியடையக் கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை,
தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.
எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும்.
உலகளவிலான சந்தையில் கச்சா எண்ணெயின் தொடர் விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளன.
வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் ஏற்பட்ட தடங்கலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுப் போக்குவரத்திற்கான செலவோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து அவர்களுக்கு பல்வேறு விதமான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ @TVKPartyHQ @EPSTamilNadu @Udhaystalin @mkstalin @PremallathaDmdk -
TTV Dhinakaran
@TTVDhinakaran
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
மருத்துவமனையின் இன்றியமையாத பணியாளர்களாகவும், மனிதநேயத்தின் உயிர்நாடியாகவும் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, தியாகம், பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் தன்னலமற்ற பணியில் ஈடுபட்டுவரும் செவிலியர்களின் சேவை மனப்பான்மையை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியிருக்கும் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களுக்கும் துணைத் தலைவராகத் தேர்வாகியிருக்கும் திரு.ரவிசங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் உயரிய இடமான சட்டமன்றத்தின் மரபுகளை முழுமையாகப் பின்பற்றி அதன் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் பாதுகாத்து, அவையை நடுநிலையோடு நடத்திடுவதை உறுதிசெய்ய வேண்டும் என பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களையும், துணைத் தலைவர் திரு. ரவிசங்கர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @EPSTamilNadu @AIADMKOfficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை - கொலைக்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் இரவுநேரத்தில் மது போதையிலிருந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்து அதனை வீடியோவாக எடுத்து மகிழ்ந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தார்களே தவிர, அதனைக் கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமயமாகி, அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் பன்மடங்கு பெருகின.
எனவே, தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கப் பிரத்தியேக தடுப்புப் படையை அமைத்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu @TVKPartyHQ @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் மக்கள் முன் வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் உரிய நேரத்தில் நிறைவேற்றும் எனவும் நம்புகிறேன். @CMOTamilnadu
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின் மறு உருவமாகவும் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை அடித்தளமாக, அளவிட முடியாத அன்பு கொண்டவராக, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் ஆசிரியராகத் திகழும் தாய்மார்களின் அன்பும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி கொண்டாடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சவால்கள் நிறைந்த சூழலில் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தான் கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்பணித்திட்ட ஆருயிர் சகோதரர் செயல்வீரர் மேலூர் திரு ஆர். சாமி அவர்களின் நினைவு தினம் இன்று.
சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, மேலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் மத்தியில் மட்டுமில்லாது, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் என்னுடன் இணைந்து பணியாற்றி அனைத்து தரப்பு கழகத்தினரின் அளப்பரிய அன்பையும் பெற்று, போர்ப்படைத் தளபதியாக தொண்டர்களின் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் சகோதரர் மேலூர் ஆர். சாமி அவர்களின் நினைவுநாளில் அவர் கண்ட இலக்குகளை விரைந்து அடைந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இன்று வெளியாகியிருக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் உயர்ந்த இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறவும், தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் மனம் தளராமல் அடுத்து வரவிருக்கும் துணைத்தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் திரு S.காமராஜ் அவர்கள் வெற்றி சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், சிறந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவருமான திரு ஆர்.பி சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு. ஆர்.பி.சவுத்ரி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தனது அயராத உழைப்பால் பதிவு செய்திருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்குச் சான்றாகக் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் வலுவான அடித்தளமாக அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். @BJP4India @narendramodi
@AmitShah @BJP4Assam @BJP4Bengal @BJP4TamilNadu @NainarBJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவணங்கி ஏற்கிறது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்கள், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் அன்பு தம்பி திரு S.காமராஜ் அவர்கள், பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது உழைத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், எங்களின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன். @EPSTamilNadu @Sowmiyanbumani @draramadoss @AIADMKOfficial @BJP4TamilNadu @NainarBJP @BJP4India @narendramodi @AmitShah -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள், நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @CPR_VP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மறைந்த உயர்திரு அண்ணாமலை செட்டியார் அவர்களின் பேத்தியும், மறைந்த குமாரராஜா திரு எம்.ஏ.எம் முத்தையா செட்டியார் அவர்களின் மனைவியுமான குமார ராணி முனைவர் திருமதி மீனா முத்தையா அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. (1/3)
TTV Dhinakaran
@TTVDhinakaran
கல்வித்துறையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டு இளம் தலைமுறையினரைப் பொறுப்புணர்வோடு உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய திருமதி மீனா முத்தையா அம்மையார் அவர்களை இழந்துவாடும் ... (2/3
TTV Dhinakaran
@TTVDhinakaran
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். (3/3)
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் உரிமைகளை வென்றெடுத்து உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திய மே தினமான இந்நாளில் உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள், தங்களின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடி அவற்றை மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான இன்று, நாம் கண்டிருக்கும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், முதுகெலும்பான உழைப்பாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றி நினைவு கூறுவோம்.
“உழைப்பே உயர்வு தரும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன், தினமும் தங்களது உழைப்பால் உலகை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்களின் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
”எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வீர வரிகளின் மூலம் மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டியவரும், தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவருமான புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று...
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என உரக்க முழங்கி தமிழாசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக என பல்வேறு வழிகளில் தமிழ் மொழியின் இனிமையை எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்ப் பணியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் - தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னரே கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி நதிநீரில் தொடர்புடைய நான்கு மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து மீதமுள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகாத நிலையில், அதிகாரிகளை வைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டுவதும், அதில் நதிநீர் விவகாரம் குறித்து விவாதிப்பதும் ஏற்புடையதல்ல.
அதிலும், குறிப்பாக தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அம்மாநிலத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைப்பதோடு, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் அமைந்த பின்னரே இக்கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - அராஜகப்போக்கில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற நடைபெற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவினரின் பண பலமும், படை பலமும் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயற்சித்திருக்கும் திமுக குண்டர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவினர் அரங்கேற்றும் இந்த அடாவடித்தனங்கள் அனைத்தும் அக்கட்சிக்குக் கிடைக்கப் போகும் வரலாற்றுத் தோல்வியையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்றதோடு, அதனைத் தடுத்து நிறுத்த முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். @ECISVEEP @TNelectionsCEO -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மக்கள் விரோத திமுகவை வீழ்த்தி தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திடுவோம்!
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்!!
திமுகவின் வீழ்ச்சி... தமிழகத்தின் எழுச்சி!
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - சட்ட விரோதிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் ?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுப நிகழ்வில் பங்கேற்க வந்த 15 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவோ, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் நிகழ்ச்சியை நடத்தி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுகவின் அலட்சியத்தை அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களே தோலுரித்துக் காட்டுகின்றன.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற தமிழகம், திமுகவின் கடந்த ஐந்தாண்டுக்கால இருண்ட ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக மாறியிருக்கிறது.
எனவே, கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குரூர மனம் படைத்த அனைவரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த தீ காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
பட்டாசு ஆலைகளை அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்த வேண்டும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த ஐந்தாண்டுகளாக நிராகரித்துக் கொண்டே வந்த திமுக அரசால் தற்போது உயிரிழந்தோருடன் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளமான தினத்தந்தி நாளிதழை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தவரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
பத்திரிகைத் துறை மட்டுமல்லாது கல்வி, தொழில், விளையாட்டு மற்றும் ஆன்மீகம் என தான் தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சி பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நற்பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று ஆழியார் அருகே உள்ள மலைப்பாதையில் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன.
கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தன்னுடைய வீரத்தாலும், அசாத்திய திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை அதிரச் செய்தவருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்டு, தன் தனித்துவ உத்திகளால் வெற்றிமேல் வெற்றி கண்டு, பிறந்த மண்ணின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் வீரர் தீரன் சின்னமலை அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் (Paphos) நகரில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் (FIDE Candidates 2026 tournament ) பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகியிருக்கும் செல்வி.வைஷாலி அவர்கள் அதிலும் வெற்றிவாகை சூடி ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித்தந்திட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை - தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்குவதில் ஏற்பட்ட வாய்த் தகறாரில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.
தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய திமுக வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதியை மடைமாற்றும் வகையிலும், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையிலும் தற்போது அதன் மாதிரியைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று திமுகவினர் விநியோகம் செய்து வருவது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது.
எனவே, பெண் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
@TNelectionsCEO @ECISVEEP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மீஞ்சூர் அருகே வீட்டிலிருந்த கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்திய போதைக் கும்பல் - திமுக ஆட்சியில் கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் உறுதியாக மீட்டெடுக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனது வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கண்மூடித்தனமான தாக்குதலையும் அரங்கேற்றியதில் அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு புரையோடிப் போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், விமானங்களை தொடர்ந்து தன்னுடைய சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, அந்த கொடிய வகைப் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களால் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் அடையாளமாக தமிழகத்தை மாற்றிவிட்டன.
எனவே, கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்து மலரப்போகும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தை மக்களிடம் அளிக்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புத்தாண்டு தினத்தை விஷு திருநாளாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழும் இடங்கள் அனைத்திலும் தங்களுடைய பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிப் பாதுகாக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் எல்லா வளங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதை, சமுதாயத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
பரந்த படிப்பும், ஆழ்ந்த அறிவும், வியக்கத்தக்க நெஞ்சுரம் கொண்டிருந்து, நாடு முழுவதும் சமதர்ம சமூகநீதி தத்துவங்களை வேரூன்றச் செய்த மாபெரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பிரபல யூடியூபர் திரு சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி கமலா அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தாயாரை இழந்துவாடும் திரு சவுக்கு சங்கர் அவர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @SavukkuOfficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்:
சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரியமிக்க பழமையிலும், தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையற்ற பண்பாட்டுப் பெருமைமிக்க தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வரவேற்கும் இந்த தமிழ்ப்புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும், புதிய ஏற்றங்களையும் தரும் ஆண்டாக அமையட்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மலரும் தமிழ்ப்புத்தாண்டு தமிழக மக்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைவதோடு, அனைவரின் வாழ்விலும் வளம் பெருகி, வசந்தம் மலர்ந்து, அன்பு மேலோங்கி, அமைதி நிலவும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தேன்.
திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று தனது தேர்தல் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு தேர்போகி V பாண்டி அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை.
நாள் - 10.04.2026
இடம் - தியாகிகள் பூங்கா, தேவகோட்டை.
www.youtube.com/live/AnDNI9mtHk0 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு தேர்போகி V பாண்டி அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை.
நாள் - 10.04.2026
இடம் - MGR சிலை, காரைக்குடி.
www.youtube.com/live/jOXWihEzemE -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நிலத்தை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும், ரசாயன உரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இயற்கை விவசாயத்தை இயக்கமாக முன்னெடுத்துச் சென்ற ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில் தொடர்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய தேசத்திலும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் இன்று.
வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை அடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கும், பாஜகவின் தேசிய தலைவர் திரு நிதின் நபின் அவர்களுக்கும் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@BJP4India @BJP4TamilNadu @narendramodi @AmitShah @NitinNabin -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு மற்றும் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்து போதித்த தியாகம், சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகிய உயரிய குணங்களை பின்பற்றி சமூக மற்றும் சமுதாய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
பகைவர்களிடமும் அன்பு செலுத்துங்கள் என போதித்து மனிதகுலத்தின் நல்வழிகாட்டியாக திகழும் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்நாளில், மக்கள் அனைவரிடமும் மனிதநேயமும் சகோதரத்துவமும் மென்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் வழியில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் உயர்த்திப்பிடித்தவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவருமான உறங்காப்புலி கல்வி வள்ளல் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்ததினம் இன்று.
மாணவப் பருவத்திலிருந்தே தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டு நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாகச் செயல்பட்ட தேவர் தந்த தேவர் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகளவில் இயற்றப்பட்ட கொடூரமான சட்டங்களில் ஒன்றான குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து கிளர்த்தெழுந்த போராட்டத்தில் ஆங்கிலேயப்படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூரைச் சேர்ந்த மாயக்காள் உட்பட 17 தியாகிகளின் நினைவு தினமான இன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
This media couldn't be displayed. See it on the original post. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் நிரந்தர விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்க இயேசு கிறிஸ்து அவர்கள் தன்னை சிலுவையில் அர்ப்பணித்ததை நினைவு கூறும் புனித வெள்ளி திருநாள் இன்று.
மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக இயேசுபிரான் அவர்கள் செய்த தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றி வணங்கிடும் இந்நாளில் அவர் போதித்த கருணை, இரக்கம் ஆகியவற்றைப் பின்பற்றி அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகளவில் இயற்றப்பட்ட கொடூரமான சட்டங்களில் ஒன்றான குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து கிளர்த்தெழுந்த போராட்டத்தில் ஆங்கிலேயப்படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூரைச் சேர்ந்த மாயக்காள் உட்பட 17 தியாகிகளின் நினைவு தினம் இன்று.
பிறப்பின் அடிப்படையில் தங்களைக் குற்றவாளி என தீர்மானிக்கும் மக்கள் விரோத குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் தியாகத்தை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாரா பேட்மிண்டன் தொடரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தின் தங்க மங்கை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் முயற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையின் மூலம் பதக்கங்களைக் குவித்து ஒட்டுமொத்த தாய் திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் துளசிமதி முருகேசனின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொல்லாமையும், பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமையுமே உண்மையான அறம் என்பதை எடுத்துரைத்ததோடு, தன் சுக வாழ்க்கையைத் துறந்து, அகிம்சையைப் பின்பற்றி, இயற்கை சக்திகளோடு இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று போதித்த பகவான் மகாவீரர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
அறநெறியினையும், ஆன்மீக நெறியினையும் தவறாது பின்பற்றி அதன் மாண்பை உலகிற்கே பறைசாற்றிய மகாவீரர் பிறந்த இந்த நாளில், அவரது போதனைகளைப் பின்பற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனும் இல்லை, கதாநாயகியும் இல்லை: தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றிவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த பரமக்குடியைச் சார்ந்த திரு செல்வம் அவர்கள் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.செல்வம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். @PMOIndia @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் – 2026
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை
TTV Dhinakaran
@TTVDhinakaran
TTV Dhinakaran
@TTVDhinakaran
TTV Dhinakaran
@TTVDhinakaran
TTV Dhinakaran
@TTVDhinakaran
TTV Dhinakaran
@TTVDhinakaran
Post not available here, view on X
TTV Dhinakaran
@TTVDhinakaran
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக்குழுவின் பரிந்துரையின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக கீழ்காண்பவர்கள் கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறார்கள்.
Post not available here, view on X
TTV Dhinakaran
@TTVDhinakaran
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு – பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் திடமான முடிவு வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட 13 ரூபாய் கலால் வரியை 3 ரூபாயாகக் குறைத்ததோடு, டீசலுக்கு வசூலிக்கப்பட்ட 10 ரூபாய் கலால் வரியை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பது இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும், எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை நாட்டு மக்கள் மீது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வைத்திருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
இந்திய நாட்டின் பொருளாதாரத்தோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்திலிருந்து பொதுமக்களையும் பாதுகாத்திடும் வகையிலான திடமான முடிவை எடுத்து அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@PMOIndia @HMOIndia @PetroleumMin @narendramodi @AmitShah @BJP4India @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் - ஏற்கனவே தமிழகத்தை உலுக்கிய பாலியல் புகாரில் தொடர்புடைய அந்த "சார்" கைது செய்யப்படாததன் விளைவா ?
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர், அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் மாணவியின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாக எழுந்திருக்கும் புகார் அங்கு பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ”சார்” இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தற்போதைய பாலியல் புகாரின் பின்னணியிலும் அதே ”சார்” இருப்பாரோ ? என்ற சந்தேகம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, உலக அளவில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டு மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, பேராசிரியர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தும் நேரத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசியல் விமர்சகரும், மதிப்பிற்குரிய சகோதரருமான திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தந்தை திரு ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தந்தையை இழந்து வாடும் சகோதரர் திரு.ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை திருமங்கலம் அருகே ஐந்து ஆண்டுகளாக 13 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக திமுக நிர்வாகி கைது - திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம்.
சென்னை திருமங்கலம் அருகே 13வயது சிறுமியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பள்ளிக்கூடம் தொடங்கி பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அக்கட்சியின் தலைமை கண்டும் காணாதது போலக் கடந்து சென்றதன் விளைவே அத்தகைய செயல்களில் திமுகவினர் தொடர்ந்து ஈடுபடக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகளிர் பாதுகாப்பிலும், பெண்கள் அதிகளவு வேலைக்குச் செல்வதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
எனவே, பச்சிளம் குழந்தை தொடங்கி வீட்டில் தனியாக இருக்கும் முதியவர் வரை அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலின் மூலம் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கையில் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் நெறியாளர் மீது திமுகவினர் தாக்குதல் – அராஜகத்தையும் அட்டூழியத்தையும் அடையாளமாகக் கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக வரும் தேர்தலில் அப்புறப்படுத்தப்படுவது உறுதி.
சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களும், நெறியாளரும் திமுகவின் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திமுகவின் கடந்த ஐந்தாண்டுகால கொடுங்கோல் ஆட்சி குறித்தும், அதனால் மக்கள் பட்ட துயரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பேச்சாளர்கள் பட்டியலிட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், விவாத நிகழ்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கில் அங்குக் கூடியிருந்தவர்கள் மீது திமுகவின் குண்டர்கள் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
அநியாயம், அக்கிரமம், அராஜகம் மற்றும் அட்டூழியத்திற்கும் அடையாளமாகிப்போன மக்கள் விரோத திமுகவும் அதன் நிர்வாகிகளும், மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பலையைத் திசை திருப்பவும், தோல்வி பயத்தை மறைக்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதன் கையாலாகத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.
எனவே, நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் நெறியாளர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் நேரத்தில், அராஜகத்தையும் அட்டூழியத்தையும் அடையாளமாக கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக வரும் தேர்தலில் அடியோடு அப்புறப்படுத்தப்படுவது உறுதி என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன். @NewsTamilTV24x7 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு - விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, இதே திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமான குவாரியில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் நடைபெற்றிருக்கும் இந்த சந்தேக மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை இலக்காகவும், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதையே கொள்கையாகவும் ,நிர்ணயித்து ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
@narendramodi @BJP4India -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சகோதரர் திரு சுதாகர் ரெட்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர திரு.சுதாகர் ரெட்டி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @ReddySudhakar21 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புனித ரமலான் நல்வாழ்த்துகள்:
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுங்கள், துன்புற்றவர்களுக்கு உறுதுணையாக இருங்கள், அயலார்களிடம் அன்பு செலுத்துங்கள் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு ரமலான் நோன்பு இருந்த இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவரின் எண்ணங்களும் விருப்பங்களும் ஈடேரற்றும் என இந்நாளில் பிரார்த்திப்போம்.
ரமலான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தீர்ந்து உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு கம்மா நாயுடு மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு.கெங்குசாமி நாயுடு அவர்களின் மனைவி திருமதி.ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
திருமதி.ராஜலட்சுமி அம்மையார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை வெவ்வேறானதாக இருந்தாலும், வாழும் இடம் தமிழ்நாடு தான் என்ற உணர்வோடு, பலநூறு ஆண்டுகள் கடந்தும் தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் நல்ல உறவைப் பேணி, நட்புறவு கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவது வேற்றுமையில் ஒற்றுமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தை வழங்குவதோடு, அவர்களுக்கும் தமிழக மக்களுக்குமான நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது – சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீரழித்து, அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்கள் விரோத திமுகவிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்கப்போகிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தின் தலைவராக (2026-2029 ) மீண்டும் தேர்வாகியிருக்கும் அன்பு சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தையும், அதன் நிர்வாகிகளையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதோடு, தான் சார்ந்திருக்கும் திரையுலகில் மேன்மேலும் பல்வேறு சாதனைகள் புரிய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் எனும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு ச.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையான நடையிலும் மொழியிலும் சிறுகதைகளை எழுதுவதில் தனித்துவமிக்கவராக திகழும் எழுத்தாளர் திரு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் எழுத்துப் பயணம் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை புதூர் பகுதியில் பெண் காவலர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் காவல் உயர் அதிகாரி கைது – காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியமாகும் ?
கோவை புதூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே சக பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரை தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, கடந்த காலங்களை ஒப்பிடும் போது குற்றங்களைக் குறைந்துவிட்டதாக அரசு உயர் அதிகாரிகளை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் வெட்கக்கேடானது.
எனவே, தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அவர்களை சுதந்திரமாக நடமாடவே முடியாத அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கிய திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பப் போகின்ற நாள், இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அன்று அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் திரு.பெ.ஜான் பாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @JohnPandianTMMK
John Pandian
@JohnPandianTMMK
9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணத்தை தொடங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், சகோதரர் திரு.TTV தினகரன் அவர்களுக்கும், அதன் தொண்டர்களுக்கும், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சி தலைவி அம்மையார் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் கொள்கை கோட்பாட்டை முன்வைத்து உருவாக்கிய இந்த இயக்கம் தொடர்ந்து மக்கள் நலனில் சிறந்த விளங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மென்மேலும் வளர்ச்சி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TTVDhinakaran @AMMKoffice -
TTV Dhinakaran
@TTVDhinakaran
9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @annamalai_k
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அன்புச் சகோதரர் தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் அளப்பறிய களப்பணியாற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோரின் நல்லாட்சியை அமைத்திடுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன். @NainarBJP @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடம் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானபீடம் விருதின் மூலம் உலக இலக்கிய அரங்கில் தாய்மொழி தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். @Vairamuthu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
“ஒப்பில்லா ஒன்பதாம் ஆண்டில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!”
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூலம் இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட தீவிர களப்பணியாற்றி வெற்றிவாகை சூடிடுவோம்!
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
மறைந்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மனைவி திருமதி. மாலதி ஆதித்தனார் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
திருமதி. மாலதி ஆதித்தனார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1, 000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும் நாடகங்களுக்கு, வரும் சட்டமன்றத்தேர்தலில் தமிழக பெண்கள் நடத்தப் போகும் மௌனப் புரட்சியே பதில் சொல்லும்.
கல்வி தொடர்பான பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான சூழல் உருவாகியிருப்பதை பார்க்கும் போது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது பச்சிளம் குழந்தையில் தொடங்கி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என கடந்த சில நாட்களில் அன்றாடம் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்துகிறது.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து, இதுவரை இல்லாத நடைமுறையாக கோடை கால சிறப்பு உதவித் தொகை வழங்கி பெண்களை ஏமாற்றிவிட்டால், இதுபோன்று தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சகித்துக் கொண்டு மீண்டும் அவர்கள் தங்களுக்கே வாக்களிப்பாளர்கள் என்ற திமுகவின் தீய எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் துளியளவும் இடமளிக்காத வகையில் தமிழக மகளிர் அனைவரும் வரும் தேர்தலில் மௌனப் புரட்சியை ஏற்படுத்தப் போவது உறுதி.
எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மகளிர் அனைவரும் ஒன்றிணைந்து,
பெண்கள் பாதுகாப்பில் துளியளவும் அக்கறையின்றி, முழு நாளும் விளம்பர மோகத்திலேயே மூழ்கிக் கிடக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதும் நிச்சயம்!
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என வரவேற்று மகிழ்கிறேன். @rajendraarlekar @lokbhavan_tn @HMOIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோகதரர் திரு@kcthirumaran அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு@kcthirumaran அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரக் கொலை – பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 14வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது விளாத்திக்குளம் அருகே அரங்கேறியிருக்கும் இச்சம்பவத்தை நினைத்துப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது.
அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் தமிழகத்தை பொதுமக்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னைத் தானே தமிழகத்தின் அப்பா என தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
எனவே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறப்போகும் வெற்றியின் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களோடு, தீயசக்தி திமுகவின் அத்தியாயமும் முடிந்து போகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா ?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் சாலைகளில், வீடுகளில், தலைவர்களின் நினைவாலயங்களில் சமூக விரோதிகளால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்களை கண்டும் காணாதது போல இருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே, திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எனவே, திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க முடியாத அளவிற்கு தமிழகத்தின் சட்டத்தையும், ஒழுங்கையும் சந்தி சிரிக்கும் அளவிற்கு சீரழித்த திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் அடியோடு துடைத்தெறிவது நிச்சயம் என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்நிலைக் கல்விக்கான படிப்புகளை தீர்மானிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எந்தவித பயமும், பதட்டமுமின்றி எதிர்கொண்டு மாணவ, மாணவியர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத கும்பலால் 14வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – திமுக ஆட்சியை அகற்றும் வரை பெண்கள் அனைவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தான் ஒரே தீர்வு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திறனற்ற திமுக ஆட்சியில், பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி செல்லும் சிறுமிகள், கல்லூரி செல்லும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் என அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்புமே கேள்விக்குறியாகும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒரு ஆட்சி நிர்வாகம் எப்படி எல்லாம் நடைபெறக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக கொடூர கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவால் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் சர்வசாதாரணமாகி வருகின்றன.
வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவதே அரிதாகிவிட்ட தமிழகத்தில், எதுவுமே நடக்காதது போல ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” எனும் தலைப்பில் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து வீண் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக பெற்றது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, பச்சிளம் குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக ஆட்சியை அகற்றுவதற்கான காலமும், நேரமும் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும் வரை பெண்கள் அனைவரும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்திருக்கும் மத்திய அமைச்சரவைக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மீகம், சுற்றுலா மற்றும் பண்டையகால வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கிய மதுரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் வகையிலும் தென் தமிழகத்தின் பொருளாதாரத்தை பெருக்கும் வகையிலும் மதுரை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கும் ஒப்புதலை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
@narendramodi @PMOIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழல் காரணமாக தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாதாரண தேநீர் கடைகளில் தொடங்கி பெரிய விடுதிகள் வரை அனைத்து வகையான உணவகங்களுக்கும் அடிப்படை தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் கிராமப்புறங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உணவுத் தேவை பாதிக்கப்படுவதோடு, அந்த உணவகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்திடுவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியிருக்கும் அஇஅதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.தம்பிதுரை அவர்களுக்கும், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்ட இருவரும் தமிழகத்தின் உரிமை மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
@draramadoss @AIADMKOfficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் மாவட்டம் மேச்சேரியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதில் திமுக நிர்வாகிகளிடையே போட்டி - சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாகச் செயல்படுவதா?
சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்தின் அருகிலேயே திமுக நிர்வாகிகளும், அவர்களது ஆதரவாளர்களும் பெட்டிக் கடையின் மூலம் போட்டிப் போட்டு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே மேச்சேரி பேருந்து நிலையத்தின் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜாமீனில் வெளிவந்து காவல்துறையினரின் ஆதரவோடு மீண்டும் அதே சட்டவிரோத மதுவிற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் நடைபெறும் மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாக இருப்பதும், பொதுமக்கள் புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்க மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் மற்றும் காவல்நிலையம் அருகே சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுத்து நிறுத்திடுவதோடு, அத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதரபுரம் ஆகிய தென்மாவட்ட மக்களின் பாசனத் தேவையையும், குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் தன் சொந்த செலவில் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய வள்ளல், மனிதநேயமிக்க பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று.
வறண்டு கிடந்த தென்மாவட்டங்கள் வளம்பெற, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் இந்த நினைவு தினத்தில், மக்களின் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவில் கொண்டு போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். @BCCI #t20worldcup -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி - பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பெண் இனத்தின் காவலர் வேஷம் போடுவது வெட்கக் கேடானது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல்லில் ஏழு வயது சிறுமிக்கு நடந்தேறியிருக்கும் இந்த கொடுமையான நிகழ்வு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் என எங்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கிவிட்டு, பெண்ணுரிமை பேசுவதும், பெண் இனத்தின் காவலர் போல முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது வெட்கக் கேடானது.
எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட குரூர மனம் கொண்டவன் மீது எடுக்கும் நடவடிக்கை இனி இதுபோன்று எவரும் சிந்திக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறையினரின் சித்ரவதையால் கைதி உயிரிழப்பு எனப் புகார் – கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேற்கு வங்கத்தில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திட்டமிட்டு அவமதிப்பு – அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவரை அரசியல் காரணங்களுக்காக அவமதித்திருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
மேற்குவங்கம் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டு அவமதித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் எந்தவொரு மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சரோ, அமைச்சரோ நேரில் வந்து வரவேற்க வேண்டும் என்ற நெறிமுறைகளை மீறியதோடு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின் இடத்தையும் இறுதி நேரத்தில் மாற்றியமைத்து, அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பழங்குடியின சமுதாயத்திலிருந்து இந்தியாவின் உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, பழங்குடியினர் சார்ந்த நிகழ்விலேயே அவமதிக்கும் நோக்கில் பல்வேறு தடைகளை மேற்குவங்க அரசு ஏற்படுத்தியிருப்பது ஒட்டுமொத்த பழங்குடியினர் சமூகத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
எனவே, மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். @rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @MamataOfficial @PiyushGoyal @annamalai_k @NainarBJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மகளிர் தின நல்வாழ்த்துகள்:
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மகளிருக்கான சமத்துவம் மற்றும் சம உரிமை வழங்கப்படுவதன் அவசியத்தை உணர்த்தும் இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்மையைப் போற்றி கொண்டாடும் இந்நாளில் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாயின் முதலெழுத்தைக் குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல் என மகளிர் நலன் பயக்கும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தி பெண் இனத்தின் பெருமையாகத் திகழும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நினைவில் கொள்வோம்.
தாயாக, சேயாக, தமக்கையாக, தாரமாக என அனைத்திலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சம உரிமையோடு, அவர்களுக்கான பாதுகாப்பு முழுமையாக கிடைத்திடுவதையும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதி செய்திடுவோம்.
மகளிரின் அர்ப்பணிப்பு உணர்வை உலகிற்கு உணர்த்தும் இந்நாளில், தடைகளைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்திட, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு அடைந்திட அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை ராயப்பேட்டையில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் காவலர் கைது - தன் துறை சார்ந்த காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும்?
சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறைக்கென தலைவர் ( DGP ) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திய திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் இதற்கான ஒரே தீர்வு என்பதை உணர்ந்திருக்கும் தமிழக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் அதனைப் பிரதிபலிப்பார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூரில் அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் கேரள அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – கூட்டணி தர்மத்திற்காக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்தது போல எல்லைப் பகுதியையும் பறி கொடுப்பதற்கு பெயர் தான் திராவிட மாடலா?
தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாளூரில் கேரளத்தை வரவேற்கும் வகையிலான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்தின் ஒரு எல்லைப் பகுதியாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தின் தாளூருக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து, தங்களது எல்லை என கேரளம் உரிமை கொண்டாடுவதும், அதனைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசின் மௌனமும் கடும் கண்டனத்திற்குரியது.
நீலகிரி மாவட்டத்தில் கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை தமிழகத்தின் மற்ற எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதோடு அவர்களின் நில உரிமையும் பறிபோகும் அளவிற்கு அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும் உயிர் நாடியாகவும் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக அங்குள்ள மரங்களைக் கூட வெட்ட அனுமதிக்காத கேரள அரசு, தமிழகத்திற்குள் நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் அளவிற்குத் துணிந்திருப்பதை கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்திருக்கும் சவாலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதில் தீவிரம் காட்டுவதும், தமிழகத்தின் எல்லைப் பகுதியை கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமிக்க முயல்வதையும் பார்க்கும் போது, திமுக அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து தான் தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ( UPSC ) தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே அவர்களுக்கும், ஏழாவது இடத்தை பிடித்திருக்கும் ராஜா முகைதீன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடா முயற்சி மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் அரசுத்துறைகளின் மிக உயரிய பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரும், அவரவர் பணியில் சிறந்து விளங்கிடவும், மேன்மேலும் பல சாதனைகள் படைத்திடவும் மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது - காவிரி விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா ?
கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை வெற்றியாகக் கருதுவதாகவும் விரைவில் மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியான இரு தினங்களில், கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்திருக்கும் தனது நிதிநிலை அறிக்கையில் மேகதாது அணை குறித்த இத்தகைய அறிவிப்பு இடம்பெற்றிருப்பது, கூட்டணி நலனுக்காக திமுக தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்க முடிவெடுத்துவிட்டதோ ? என்ற ஐயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் ஆரம்பம் முதலே தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுக, தன்னுடைய கட்சி நலனுக்காகவும், கூட்டணி நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, நானும் டெல்டா காரன் தான் என வாய் சவடால் விடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகளைப் பாலை வனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக மட்டுமின்றி, தன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுத்துத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் - குற்றச் சம்பவங்களின் தலைநகராகவும், குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக வரும் தேர்தலில் வீழ்வது உறுதி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது அரங்கேறியிருக்கும் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப ஐந்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது ஊருக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கான துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.
எனவே, மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், மக்கள் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு அடுத்த தேர்தலுக்கான விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டிவரும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கும், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் புதிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிக்கும் கடும் எதிர்ப்பு - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பானதாக இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி நடைபெறும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் விளைநிலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காவுக்கு அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருகவாழ்ந்தான் பகுதியில் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வெப்பநிலை மதிப்பீடு, நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் கிராம சபை ஒப்புதல் என எந்தவித முறையான அனுமதியுமின்றி இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விளை நிலங்களோடு விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இந்த சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமைதியான முறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்திருப்பது சர்வதிகாரப் போக்கின் உச்சபட்சமாகும்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும், முறையான அனுமதி இன்றியும் அவசரகதியில் நடைபெறும் இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டமும், சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் நடவடிக்கையும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பசுமைப் பரப்பு வெகுவாக குறையும் என்பதோடு உணவு உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெற்று வரும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தையும், ஆலங்கோட்டை கிராமத்தில் அடிக்கல் நாட்டியிருக்கும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்திடுவதோடு, வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் – இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் ”கர்தவ்ய த்வார்” என இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாள்தோறும் தமிழக மக்களும், ஏராளமான ரயில் பயணிகளும் வந்து செல்லும் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டிய பெயர்ப் பலகையை இந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
எனவே, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் தமிழில் பெயர் வைக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே துறையையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
2025 ஆம் ஆண்டிற்கான ”மாயா கோனே” சமூக ஊடகர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தின் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. சமஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த கருவியாக இதழியலைத் துணிச்சலுடன் கையாண்டதன் அடிப்படையில் இவ்விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. சமஸ் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
@writersamas @PttvNewsX -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆதிக்க வர்க்கத்திற்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்தவரும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கத் தொடர்ந்து பாடுபட்டவருமான அன்பின் திருவுருவம் அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த திருநாள் இன்று.
"நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றார்” எனப் போதித்து மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவர்கள் என்பதை எடுத்துரைத்த அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த இந்நாளில் அவர் காட்டிய வழியில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வசந்தகாலத்தை வரவேற்கும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமையோடு, சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும், வசந்தத்தையும் வழங்கும் நாளாக அமையவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர் கைது – வானில் பறக்கும் விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் திமுகவின் சாதனைகளின் நீட்சி...
விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் விமானத்தில் அரங்கேறியிருக்கும் மற்றுமொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் திமுகவினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான திமுகவினர் தான் என்பது தெரியுமா ? தெரியாதது போல நடிக்கிறாரா ?
எனவே, பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஒடுக்கத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சம்பட்டி அடி கொடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் எடுபடாது – திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து தமிழக மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.
தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் மற்றும் உதவித் தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 322வது வாக்குறுதியான முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சி நிறைவடையும் தறுவாயிலும் நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது சிறப்பு நிதி எனும் பெயரில் 2000 ரூபாய் வழங்கியிருப்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும்.
அண்டை மாநிலங்களைப் போல மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜனநாயக ரீதியில் போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறைக்கு உள்ளாக்கிய திமுக அரசு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் நலனுக்கான நிரந்தர தீர்வை எட்டுவதை விட்டுவிட்டு அவர்களை வெறும் தேர்தல் நேர வாக்குவங்கியாக மட்டுமே பார்ப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, கடந்த ஐந்தாண்டுக் கால இருண்ட ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்துவிட்டு தற்போது திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் இதுபோன்ற தேர்தல்கால சித்து விளையாட்டுக்களை நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதோடு, வரும் தேர்தலில் திமுவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்க மாட்டார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு - பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய கஞ்சா மாடல் திமுக அரசை வரும் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே போதையிலிருந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, அவ்வழியே பயணிப்போர் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இதே திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு பீடத்தில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தற்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது.
எனவே, இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் இத்தேர்வுகளை மாணவ, மாணவியர்கள் அனைவரும் எந்தவித அச்சமும், பதற்றமுமின்றி எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான மதிப்பிற்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@PonnaarrBJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த திமுக நிர்வாகி கைது – பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லாத திமுக அரசை வரும் தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்திருப்பதாக திமுகவின் இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பச்சிளம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் வசிக்கும் வயதான முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனப் பெருமை பேசுவதும், பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வதும் வெட்கக் கேடானது.
கஞ்சா விற்பனையில் தொடங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகளைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே, தற்போது அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் எனப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குரூர மனம் படைத்த திமுக நிர்வாகிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தும் இந்நேரத்தில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ, வரும் தேர்தலில் திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றிபெற்று பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகப் பதவி வகித்தவருமான திரு.வெள்ளூர் வீராசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.வெள்ளூர் வீராசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா இரா.நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும்.
ஐயா இரா.நல்லகண்ணு அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய தேர்வர்கள் கைது - அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது.
கூட்டுறவுத்துறையில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடக் கோரி சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக போராடிய தேர்வர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை தற்போது வரை வெளியிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, அத்தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி ஜனநாயக ரீதியில் போராடிய தேர்வர்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 185வது வாக்குறுதியாக ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 187வது வாக்குறுதியாக அரசுத்துறைகளில் நிலவும் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதியாக கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில், அரசுத்தேர்வுகளை முறையாக நடத்த முடியாமலும், முடிந்த தேர்வுகளுக்கான முடிவுகளைக் கூட வெளியிட முடியாமலும் திணறிக் கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி கனவு கானல் நீராகவே மாறும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தேர்வர்களை எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, கூட்டுறவு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என கூட்டுறவுத்துறையையும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கும் விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஐயா நல்லகண்ணு அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்பவும், இடைவிடாத தனது மக்கள் பணியை தொடர வேண்டும் எனவும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கிருஷ்ணகிரி அருகே அரசு அதிகாரியைக் காரை ஏற்றி கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் – ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபடும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடத்தைப் புகட்டுவது உறுதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் உதவி தொழில் ஆய்வாளர் திரு. சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு சீனிவாசன் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
எளிதில் பேசி தீர்க்க வேண்டிய வாகன நிறுத்தம் தொடர்பான சிறிய வாக்குவாதத்தை, வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கி, ஆளுங்கட்சி நிர்வாகியின் மகன் என்ற அதிகாரப்போக்கில் அரசு அதிகாரி என்றும் பாராமல் திரு.சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்திருப்பது தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திரு.சிவமூர்த்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்த பின்பும், திமுக நிர்வாகியின் மகன் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமலும், விசாரணையைத் தீவிரப்படுத்தாமலும் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடுகளும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உதவி தொழில் ஆய்வாளர் திரு.சிவமூர்த்தி அவர்களைக் கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இதே நேரத்தில், ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது – மக்கள் பாதுகாப்பில் தோல்வியடைந்த திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி திருப்பூரில் பதுங்கியிருந்த 6 வங்கதேசத்தினரை டெல்லியிலிருந்து வந்த காவல்துறை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டோடு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மக்கள் பாதுகாப்பில் திமுக தோல்வியடைந்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாகத் திசைதிருப்பி, மக்களை ஏமாற்ற முயன்ற திமுக அரசு, தற்போது டெல்லி காவல்துறையால் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருப்பதை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?
திருப்பூரில் தங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை டெல்லியிலிருந்து வந்த காவல்துறையினர் கைது செய்யும் வரையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழக தீவிரவாத தடுப்புப் படை தூங்கிக் கொண்டிருந்ததா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் மையமாக மாற்றியதோடு, தற்போது தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் நடமாடும் மாநிலமாகவும் மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் இணைந்து முடிவு கட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மக்கள் விரோத திமுகவின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம் – தமிழக மக்கள் விரும்பும் புரட்சித் தலைவர் அவர்களின் அரசியல் வாரிசு இதய தெய்வம் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம்!
வரும் 24.02.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடைபெறும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்!
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் – இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற அத்துமீறலில் இறங்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் தொடங்கி அனைத்து துறைகளும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வரும் நிலையில், அதற்கு நேர் மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப் போல கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இந்திய நாட்டின் மீதான அக்கட்சியின் தேச விரோத எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஐநா சபையின் பிரதிநிதிகள் தொடங்கி பல்வேறு வளர்ந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை ஒன்று திரண்டு பங்கேற்ற இந்த பெருமைமிக்க மாநாட்டில், காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியிருக்கும் இந்த நாடகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியையும் சீர்குலைக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற அநாகரீகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@PMOIndia @narendramodi @AmitShah @AmitShahOffice @INCIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பேங்காங்கில் நடைபெற்ற ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி உட்பட 5 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்திருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி செல்வி.மரியவின்சியா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியால் ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்கும் தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் செல்வி. மரியவின்சியா அவர்கள், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைப் பயணத்தை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
"தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப நம் உயிர்மூச்சுக்கு இணையான தாய்மொழியாம் தமிழ் மொழியைப் போற்றி கொண்டாடிடும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.
ஏனைய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ் இனத்தின் நாகரீகமாக, ஏராளமான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் உள்ளடக்கிய உலகின் தொன்மையான மொழியாகப் போற்றப்படும் நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஈகைத் திருநாளுக்கான புனித ரமலான் நோன்பைத் தொடங்கியிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்திடுவதோடு, இறைவனை அடைவதற்கான வாழ்வியல் நெறியாகக் கருதப்படும் இந்த புனித நோன்பு காலம் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடும் மாதமாக அமையட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவரும், தமிழ்ப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டவருமான தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சங்கநூல்கள் தொடங்கி திருவிளையாடற் புராணம் வரை பல்வேறு ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து, நூலாக வெளியிட்டதோடு, தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
கோவை மாவட்ட மக்கள், அருகில் இருக்கும் ஊர் அனைத்தையும் கெடுப்பவர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன் அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன.
தமிழகத்தில் லட்சக் கணக்கானோருக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி, தலைசிறந்த தொழில் நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் கோவையை உருவாக்கிய கோவை மக்களைப் பற்றிய திரு.தயாநிதி மாறன் அவர்களின் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அதிகார மமதையில் சுற்றித் திரியும் திமுகவினருக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் கோவை மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @Dayanidhi_Maran -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா? – அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளைப் பேருந்தில் ஏற்றி இரவு முழுவதும் அலைக்கழித்ததோடு அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு கே.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவருமான திருமதி ஜான்சிராணி உட்பட பலர் காயமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மிகக்குறைவான உதவித் தொகையை வழங்கி வஞ்சித்து வரும் திமுக அரசு, தற்போது அதனை உயர்த்தி வழங்கக் கோரி போராடும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் சித்ரவதை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.
தங்களின் வாழ்வாதார கோரிக்கையை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டிய திமுக அரசு, தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கிடுவதோடு, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சட்டமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை எனும் பெயரில் திமுக அரசு தாக்கல் செய்த “ஏமாற்று மாடல் அறிக்கை”
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக – தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் சாலை, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்காக கடந்த 15 தினங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் டெண்டர்களும், ஒரே நேரத்தில் 50க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கு ஏலமும் அவசரகதியில் அறிவிக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் அரசுத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வந்த திமுக அரசு, சட்டமன்ற தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், ஒரே நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசி அரசு கஜானாவை காலியாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு டெண்டர்களையும், ஏல அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கும் திமுக அரசு, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்துவித பணிகளையும் இறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதன் மூலம், தேர்தல் செலவுக்காக நிதி ஆதாரங்களை பெருக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, ஆட்சிக்காலத்தின் இறுதி நேரத்தில் கிடைத்தவரை லாபம் என அரசின் கஜானாவை முழுமையாக காலியாக்கத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில், இனி எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வரவே முடியாத அளவிற்கு தமிழக மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உலகக் கோப்பை ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டிருக்கும் இந்திய அணி, அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
#t20worldcup2026 @BCCI -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் புதல்வரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.வீ.தமிழ் அழகன் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
திரு.வீ.தமிழ் அழகன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.
தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும்.
12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, 25லட்ச ரூபாய் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,700 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியிருக்கும் நிலையில், அதில் பாதியளவு கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அதிகாரப்போக்கே, பாடம் கற்பிக்கும் பணியைப் புறக்கணித்துப் போராடும் அளவிற்கான நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களும் பயனளிக்காத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க வேறுவழியின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம் - உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியாற்றிவந்த 328 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியர்கள்,கடந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் பணி நீட்டிப்பு செய்யப்படாததால், மாத ஊதியம் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 153வதாக இடம்பெற்றிருந்த அரசுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த மற்றும் தற்காலிக பணி அடிப்படையில் பணிபுரிவோர் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய பரிசீலிக்கப்படும் என்ற வாக்குறுதியை, இதுவரை நிறைவேற்றாத திமுக, தற்போது அதற்கு நேர்மாறாக தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பணிநீக்கம் செய்யப்பட்ட 328 உதவிப் பேராசிரியர்களையும், உடனடியாக பணிநிரந்தரம் செய்திடுவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மாற்றுத் திறனாளிகளை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதா?
மாதாந்திர உதவித் தொகையை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகத் திகழும் அரசின் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு அதிகார போக்குடன் காவல் துறையை ஏவிப் போராடியவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், புதுச்சேரியில் 4 ஆயிரம் முதல் 5,700 ரூபாய் வரையிலும் உதவித் தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் 1,500 ரூபாய் முதல் 2000 வரையிலான உதவித்தொகையை மட்டுமே வழங்குவது ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.
எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உதவித் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்குவதோடு கைது செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளை எந்த வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமென முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கேத்தனூரிலும், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்திலும் விஷ ஜந்துகள் கடித்ததில் அரசுப்பள்ளி மாணவர், மாணவி உயிரிழப்பு - அரசுப்பள்ளிகளை விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
திருவாரூர் மாவட்டம் கேத்தனூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவர் ஒருவரும், நாமக்கல் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவரும் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதியின்மை, தரமற்ற காலை மற்றும் மதிய உணவு, பாழடைந்த நிலையிலான வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளுக்குள் பாம்பு, விஷப்பூச்சி போன்ற விஷ ஜந்துக்களும் நுழைந்திருப்பது அப்பள்ளிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அங்கு பயிலும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் பெயரில் திரைப்பட பிரபலங்களையும் அண்டை மாநில அரசியல்வாதிகளையும் அழைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருப்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, விஷப்பூச்சி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவ, மாணவியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை அருகே திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் - திமுக அரசின் இலங்கைத் தமிழர்கள் மீதான போலிப் பாசம் கடும் கண்டனத்திற்குரியது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், போதுமான வசதியின்மை காரணமாக தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 31 ஆம் தேதி முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் குடியிருப்பு தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே இருப்பது அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்புகளைக் கூட முறையாகக் கட்டிக் கொடுக்க முடியாத திமுக அரசும், அதன் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களும், இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையும், அவர்களின் உரிமையை மீட்கவும் குரல் கொடுப்பது என்பது வெட்கக்கேடானது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதோடு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வு ஒத்தி வைப்பு – லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
இன்று நடைபெறவிருந்த சார்பதிவாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், ஹால்டிக்கெட் வழங்கியதிலும் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப்பணி எனும் கனவை நினைவாக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு,பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், முறையான திட்டமிடலின்றியும், சரியான ஏற்பாடுகளின்றியும் தேர்வை நடத்த முயற்சித்திருக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மீதான செயல்பாடு தேர்வர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் 187வது வாக்குறுதியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.50 லட்சம் இளைஞர்கள் நிரப்பப்படுவார்கள் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் அப்பணிகளுக்கான தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாமல் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, குரூப்2, குரூப்2ஏ தேர்வில் குளறுபடிகள் ஏற்படும் அளவிற்கு அலட்சியமாக இருந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து விதமான ஏற்பாடுகளோடு இத்தேர்வை மீண்டும் நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் (Under19) தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
6வது முறையாக உலகக் கோப்பையை வென்று தாய்நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கும் இந்திய இளையோர் கிரிக்கெட் அணி வீரர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
#under19worldcup #teamindia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது தான் ஒரே தீர்வு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாமநத்தம் அருகே அதிமுகவின் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் திரு.தனசேகர பாண்டியன் என்ற செந்தில் அவர்கள் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இதே மதுரையில் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாகச் சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தனது தேநீர் கடையின் முன்பு மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை கொலை நகரமாக மாற்றயதோடு சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மதுரை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு, எஞ்சிய நாட்களிலாவது தமிழக மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணிநிரந்தரம் தொடர்பாக அமைச்சருடன் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு திட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் திரு முத்துச்சாமி அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஏற்கனவே நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்காத டாஸ்மாக் நிர்வாகம், தற்போது மதுபான காலி பாட்டில்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற பணிச்சுமையையும் ஏற்றியிருப்பது டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைவான ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விவசாயப் பெருமக்களின் நலனுக்காக இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவியவரும், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவருமான உழவர் பெருந்தலைவர் திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த தினம் இன்று.
இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு நியாயமானவிலை என விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளை மாபெரும் போராட்டங்களின் மூலம் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வெற்றியும் கண்ட விவசாயிகளின் விடிவெள்ளி திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அடிப்படை வசதிகள் கூட இல்லாத கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை அவசர கதியில் திறப்பது ஏன் ? - கூட்டணிக் கட்சிகளே ஒன்று திரண்டு போராடும் அளவிற்கு அவலமிக்க ஆட்சியை நடத்துவது தான் முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அம்மருத்துவமனையில் பணியாற்ற போதுமான மருத்துவர்களும், அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனைக்கு அடிப்படைத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு நியமிக்கப்படாத அரசு மருத்துவமனையை அவசரகதியில் திறக்கும் திமுக அரசின் முடிவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நடத்தியிருக்கும் இந்த போராட்டம் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம் என ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித அடிப்படை வசதியுமில்லாத மருத்துவமனைகளைத் திறந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, நாளை நடைபெறவிருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கான திறப்பு விழாவை உடனடியாக ஒத்திவைப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அதனைத் திறக்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அன்பிற்குரிய சகோதரருமான திரு.ஓ.பி.ரவீந்திரநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. ஓ.பி.ரவீந்திரநாத் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை வியாசர்பாடியில் கஞ்சா பொட்டலத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர் – இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் எடுத்து வந்திருந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிய திமுக அரசின் காவல்துறையால், கல்வி பயிலும் பள்ளிக்கே மாணவர்கள் கஞ்சா பொட்டலத்தை எடுத்து வரும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது.
கல்வி நிலையங்களில் தொடங்கி பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் வரை நடைபெறும் மோதல் சம்பவங்களுக்கும், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கும் அடிப்படை காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை மென்மேலும் ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ?
எனவே, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் கும்பலையும் கண்டறிந்து, அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இளம் தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தாய்த்தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடென்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன்; சாமானியரும் சரித்திரம் படைக்க முடியும் என்று நிரூபித்த கொள்கைக் கோமான்; தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று.
ஆழ்ந்த அரசியல் ஞானம், சமூக மாற்றத்திற்கான சிந்தனை, மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளும் மன தத்துவத்துடன், சாதி, மத பேதமற்ற சமுதாயத்தை காண விரும்பிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் வழியில் பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க உதவும் மத்திய பட்ஜெட்!
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தலை சிறந்த மன்னர்களில் ஒருவரும், அந்நிய படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகள் பல கண்டவருமான மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தமிழர்களின் பண்பாட்டைத் தனது கட்டட கலை மற்றும் கோவில் திருப்பணிகளின் மூலம் சிறப்பித்து, ஜாதி - மத பேதங்களைக் கடந்து மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் மகத்தானவராகத் திகழ்ந்த திருமலை நாயக்கர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
யாமிருக்க பயமேன் என்ற அருள் வாக்கை வழங்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாகத் திகழும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருநாள் இன்று.
இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நம்மைக் காத்தருளும் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் கிடைக்க வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இறைவன் ஒளி வடிவமானவர் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க சத்திய ஞான சபையை நிறுவியவரும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்குவதே ஆகச்சிறந்த இறைப்பணி என்பதில் உறுதியாக இருந்தவருமான அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் ஜோதி வடிவான தினம் இன்று.
தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு ஆண்டவரை அடையும் அருளியலை வழங்குவதோடு, தேனினும் இனிய திருவருட்பாக்களின் மூலம் மனித குலம் நீடூழி வாழ்வதற்கான ஒழுக்க நெறிமுறைகளையும் போதித்த வள்ளலார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நேர்மையான மற்றும் தூய்மையான ஆட்சியை வழங்கியவருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களோடு, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்களையும் இயற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய மாமனிதர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.
எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். @thirumaofficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் அன்பு நண்பருமான திரு H. ராஜா அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @HRajaBJP
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா ? – திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குவாரியில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் மீது கொடூரத் தாக்கல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தனக்குச் சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தியதற்காக 50க்கும் அதிகமான குண்டர்களை ஏவி நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா ?
கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, சட்டவிரோத குவாரியை நடத்தியதோடு, அதனைச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உரிய சிகிச்சை வழங்கிடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @NewsTamilTV24x7 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சத்தியாகிரகம் எனும் அறவழிப் போராட்டத்தின் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தவரும், அகிம்சை எனும் வன்முறையற்ற தாரகமந்திரத்தை உலகத்திற்கே போதித்த உன்னதமிக்க மாமனிதருமான தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று.
எளிமை, கொள்கைத் தெளிவு, நேர்மையான பார்வை ஆகியவற்றோடு, ஜாதி, மத, பேதமற்ற சமுதாயத்திற்காகவும், மானுட நலனுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்திட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவை எந்நாளும் போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை அரசு கலைக்கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல என்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சென்னை தரமணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை மீண்டும், மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் நாட்களிலாவது பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னையில் ஒரு குடும்பத்தையே கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்துத் தூக்கி வீசும் அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - கொலையாளிகளும், கொள்ளையர்களும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் எப்படிப் பாதுகாப்பாக வாழ முடியும் ?
சென்னை தரமணி அருகே, தன்னுடைய மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பலைத் தட்டிக் கேட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், அவரின் மனைவி, குழந்தை என குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கொலையான கணவர் மற்றும் குழந்தையின் உடல் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பெருங்குடியில் வீசப்பட்ட மனைவியின் உடலை இரண்டாவது நாளாகக் கண்டறிய முடியாமல் திணறிக் கொண்டிருப்பதன் மூலம் தமிழகக் காவல்துறை எந்தளவிற்குச் செயலிழந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அதைத் தட்டிக் கேட்கச் சென்ற நபர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டி ஆங்காங்கே வீசப்படும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தை எட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொலை, கொள்ளை குற்றவாளிகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குரூர மனம் படைத்தவர்களும், போதைப் பொருட்களை விற்பனை செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் சமூக விரோதிகளும் அச்சமின்றி சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இத்தகையச் செயல்களில் ஈடுபட்டுள்ள கொடூர மனம் படைத்தவர்கள் அனைவரையும் கைது செய்து, இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத அளவிற்கான கடுமையான தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பல்நோக்கு மருத்துவம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் மருத்துவ சேவைகள் பாதிப்பு – பேச்சுவார்த்தையின் மூலம் சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
பணிநிரந்தரம் கோரி பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களும், ஊதிய உயர்வு கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராமப்புற சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, தொற்றுநோய் கண்காணிப்பு, குடும்ப நலச் சேவைகள், சுகாதார விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை பணிநிரந்தரம் செய்வதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதைப் போலவே, 2 மணி நேரம் மட்டுமே வேலை எனக்கூறி பணியமர்த்தப்பட்டு பல்வேறு பணிச்சுமைகளுக்கு உள்ளாக்கியதோடு, ஊதிய உயர்வு கோரி போராடும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களை காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, போதுமான உட்கட்டமைப்பு வசதியின்மை என ஒட்டுமொத்த அவலத்தின் உருவமாக அரசு மருத்துவமனைகள் மாறி வரும் நிலையில், தற்போது பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சாவூரில் முதலமைச்சரைக் கருப்புக் கொடியுடன் சந்திக்க முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாகக் கைது - பலமுறை தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளைச் சந்திக்க மறுப்பது ஏன் ?
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்து வாங்கிய கடனை கேட்டு விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுத்தும் பயனளிக்காத நிலையில், இன்று முதலமைச்சருக்குக் கருப்புக் கொடி காட்டும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் பெயரில் மோசடியாக வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதோடு, தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்காமல் ஆலையை மூடிய தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூருக்கு வருகை தந்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது.
கடந்த வருடம் ஜூன் மாதம் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்த போதும், இதே கோரிக்கையை வலியுறுத்திய கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளைக் கைதுசெய்த காவல்துறை, இம்முறையும் முதலமைச்சரைச் சந்திக்க விடாமல் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளான மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன் தள்ளுபடி மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் பலியானதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திரு.அஜித் பவார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @AjitPawarSpeaks -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு சுதந்திரமடைந்த பின் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமலுக்கு வந்த இந்நாளை குடியரசு தினமாகக் கொண்டாடி மகிழும் வேளையில், ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் நாட்டை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தியாகிகள் அனைவரையும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
நாட்டு மக்கள் அனைவரும் மனமுவந்து கொண்டாடும் இந்த குடியரசுத் திருநாளில் சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும், இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பேணிக்காத்திடவும் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம் எனக்கூறி மீண்டும் ஒருமுறை குடியரசு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பத்மபூஷன் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மருத்துவர் திரு.கே.ஆர் பழனிசாமி, தொழிலதிபரும் சமூக சேவகருமான திரு. எஸ்.கே.எம். மயிலானந்தம் அவர்கள், விளையாட்டு வீரர் திரு. விஜய் அமிர்த ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல, பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் திரு.ஹெச்.வி. ஹண்டே அவர்கள், சென்னை ஐஐடி இயக்குநர் திரு.காமகோடி அவர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி திரு. விஜயகுமார் அவர்கள், இசைக்கலைஞர்கள் திருமதி. காயத்ரி பலசுப்பிரமணியன்& திருமதி. ரஞ்சனி பாலசுப்பிரமணியன் அவர்கள், நடிகர் திரு. மாதவன் அவர்கள், கல்வியாளர் திரு. ராமசாமி அவர்கள், கல்வியாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன்.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும், அவரவர் துறைகளில் மேன்மேலும் சிறந்து விளங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருநெல்வேலி அருகே ஒரே இடத்தில் 20 கல்குவாரிகளை அமைத்து கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் – கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசு அதனை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் அடுத்தடுத்து செயல்படும் 20 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திற்கு வெடிவைத்துத் தகர்த்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் கல்குவாரிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கடத்தும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதிகளின் விளைநிலங்களோடு, நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சட்டவிரோத குவாரிகளோடு, உரிமம் பெற்ற குவாரிகளிலிருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசு நிர்வாகத்துறைகளோ, பல்வேறு புகார்கள் குவிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதன் மூலம், ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தனது பங்கிற்குக் கனிமவளக் கொள்ளையை ஊக்குவிக்கிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தென் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, இருக்கன்துறையில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இந்த 20 குவாரிகளில் உடனடி ஆய்வை மேற்கொண்டு கனிமவளம் கடத்தப்பட்டிருப்பது உறுதியானால் தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் திரு.புண்ணியமூர்த்தி நடேசன் அவர்கள், ஓதுவார் திருத்தணி திரு. சுவாமிநாதன் அவர்கள், குரும்பா ஓவியர் திரு ஆர். கிருஷ்ணன் அவர்கள், சிற்பக் கலைஞர் திரு. காளியப்ப கவுண்டர் அவர்கள், மிருதங்க கலைஞர் திரு. பக்தவத்சலம் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் அதிகரிக்கும் சட்டவிரோதச் செயல்களால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் பாதுகாப்பு – அண்டை நாடுகளுக்குக் கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக திமுக நிர்வாகி ஒருவர் கைதாகியிருக்கும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையும், எந்தவித தடங்கலுமின்றி தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்தும் அளவிற்கான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் தான் திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களிலும், சட்டவிரோதச் செயல்களிலும் ஏதேனும் ஒருவகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பதும், அவர்களின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை தயங்குவதும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அடியோடு சிதைக்கச் செய்திருக்கிறது.
எனவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எப்படி வருகிறது? அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பதைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்திடுவதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அன்னைத் தமிழைக் காக்கவும், தமிழ் இனத்தின் உரிமையை மீட்கவும் தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திடும் தினம் இன்று.
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்ட மொழிப்போரில் பங்கேற்று தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பெரம்பலூர் அருகே காவலர் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பெரம்பலூர் அருகே வழக்கு விசாரணைக்காக ரவுடியை அழைத்துச் சென்ற காவலர்கள் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் நான்கு காவலர்கள் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் தாரளப்புழக்கம், கள்ளத்துப்பாக்கி பயன்பாடு வரிசையில் தற்போது நாட்டு வெடிகுண்டு கலாச்சாரமும் இணைந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்கவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச்சம்பவங்களின் பின்னணியிலும் ஏதேனும் ஒருவகையில் திமுகவினருக்குத் தொடர்பிருப்பதாகவும், குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் சட்டத்தின் மீது துளியளவும் குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.
எனவே, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்தியிருக்கும் இந்த நாட்டு வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கு உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தைப் போராட்டக் களமாக்கியதும், ஊழலில் திளைக்கச் செய்ததுமே திமுகவின் சாதனை; திமுக இழைத்த அநீதிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த தலைசிறந்த தேசியவாதியுமான வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் படை திரட்டி போராடிய வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்திருக்கும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்திகளில் நடுநிலைத் தன்மை, மக்கள் பிரச்னையில் கூடுதல் கவனம் என தமிழ்ச் செய்தி ஊடகங்களில் தனித்துவமிக்கதாக திகழும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். @NewsTamilTV24x7 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
S.P. Velumani
@SPVelumanicbe
மக்கள் விரோத, விடியா திமுக அரசுக்கு எதிராக, தமிழக மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. @TTVDhinakaran அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில், அனைவரும் ஒன்றாக இணைந்து, தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் அரசை மீண்டும் அமைப்போம்.
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
@EPSTamilNadu @AIADMKOfficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
I sincerely thank the Hon’ble Union Home Minister, Shri Amit Shah Ji, for welcoming and congratulating the Amma Makkal Munnettra Kazagam on joining the NDA.
On behalf of the NDA, I assure that we will work together with full dedication to defeat the corrupt DMK and remove it from power. @AmitShah @BJP4India @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
KC THIRUMARAN JI
@kcthirumaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பாசமிகு அண்ணன் மதிப்புக்குரிய திரு டிடி வி. தினகரன் அவர்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இணைந்ததற்கு தென் இந்திய பார்வர்டு பிளாக் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் வெற்றி நிச்சயம் வெல்வதும் நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Dr.L.Murugan
@DrLMurugan
நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, அண்ணன் திரு. @TTVDhinakaran அவர்கள் தனது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினை, மாண்புமிகு மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான திரு. @PiyushGoyal ஜி அவர்களின் முன்னிலையில் NDA கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.
தமிழக மக்களின் நலனுக்கெதிரான போக்கை கடைபிடித்து வரும் திமுக-வை, வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் வீழ்த்தவிருக்கும் நமது கூட்டணிக்கு, தனது பங்களிப்பை வழங்கியிருக்கும் அண்ணன் திரு. டிடிவி தினகரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்நிகழ்வில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. @NainarBJP அவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள், குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ஆர். காந்தி அவர்கள், தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டார்கள். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Vinoj P Selvam
@VinojBJP
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
தீயசக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொது நோக்கம் வெற்றி பெற வேண்டும்.
போதைப்பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மகளிருக்கு பாதுகாப்பின்மை, தலைக்கு மீறிய கடன் சுமை போன்ற மோசமான ஆட்சி நிர்வாகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு விடுதலை கிடைக்க வேண்டும்!!
@BJP4TamilNadu @NainarBJP
@AIADMKOfficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
K.Annamalai
@annamalai_k
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் திரு @TTVDhinakaran அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @TTVDhinakaran அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
H Raja
@HRajaBJP
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து, இறையாண்மையை காக்க தேசிய சக்திகளின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும், தீயசக்தி திமுக கூட்டணியை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தவும் முன்வந்துள்ள திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அவரது தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@ThamaraiTVTamil @ThanthiTV @PttvNewsX @polimernews @News18TamilNadu @news7tamil @TamilJanamNews @ibctamilmedia @tnnews24air @IBharatham @TamilTheHindu @thatsTamil @oreynaadunews @dinamalarweb @DinamaniDaily @MaalaimalarNews @ChanakyaaTv -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Dr Tamilisai Soundararajan
@DrTamilisai4BJP
வாழ்த்துகள்...
மகிழ்ச்சி...
இணைந்து
பணியாற்றுவோம்...
வெற்றி பெறுவோம்...
@BJP4India @blsanthosh @TTVDhinakaran -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்று இணைந்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வாழ்த்தி வரவேற்ற மத்திய அமைச்சரும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளருமான மாண்புமிகு திரு.பியூஸ் கோயல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். @PiyushGoyal @BJP4TamilNadu @BJP4India
Piyush Goyal
@PiyushGoyal
எனது இனிய நண்பரும், மூத்த தலைவருமான திரு.@TTVDhinakaran அவர்கள் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குடும்பத்திற்குத் திரும்ப முடிவு செய்திருப்பது எனக்குப் பெருமையையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
தமிழக மக்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழரின் பெருமைக்கும் எதிராகச் செயல்படும் ஊழல் மலிந்த, திறனற்ற திமுக ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நாம் அனைவரும் உறுதியேற்றுள்ளோம். திமுகவின் ஊழல்களை மக்கள் முன் தோலுரித்துக் காட்டுவதுடன், எமது சகோதரிகள் மற்றும் மகள்களின் நலன் காக்கும் சிறந்த தலைமையையும், நல்லாட்சியையும் எமது கூட்டணி வழங்கும். தமிழக இளைஞர்களுக்கு நல்வாய்ப்புகளையும், பிரகாசமான எதிர்காலத்தையும் உறுதி செய்வோம்
I am honoured, delighted, and personally very happy that my good friend and senior leader Thiru @TTVDhinakaran ji, has decided to return to the NDA family.
All of us in the NDA are committed to removing the corrupt, incompetent DMK government that is attacking the people of Tamil Nadu, Tamil culture and Tamil pride.
We will ensure that the corruption of the DMK is exposed, and the NDA alliance will provide good leadership, governance, and social welfare for our sisters and daughters, as well as good opportunities and a bright future for the youth of Tamil Nadu.This media couldn't be displayed. See it on the original post. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்
மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்! @EPSTamilNadu @BJP4TamilNadu @AIADMKOfficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மக்களுக்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய ஆளுநர் உரை திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது - நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையின் மரபுகளை மாற்றக்கோரும் ஆளுநர் அவர்களின் செயல்பாடு ஏற்புடையதல்ல.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.நிதின் நபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் வயதில் மிகப்பெரிய பொறுப்புக்குத் தேர்வாகியிருக்கும் திரு.நிதின் நபின் அவர்களின் தேசப் பணியும், மக்கள் பணியும் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன். @BJP4India @NitinNabin @BJP4TamilNadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வேளச்சேரியில் போதைக் கும்பலால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான உணவு டெலிவரி செய்யும் ஊழியர் – பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போதைக் கும்பல்களின் அட்டூழியத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.
சென்னை வேளச்சேரி அருகே போதையில் சுற்றித்திரிந்த கும்பல், அப்பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக வந்த ஊழியர் ஒருவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
பேருந்து, ரயில், மற்றும் விமானநிலையங்கள் என பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சுற்றித் திரியும் போதைக் கும்பலைக் கண்காணிக்கவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இதுபோன்று தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்து கொள்வதால் பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் போதைக் கும்பல்களைப் பிடித்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் தலைநகர் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை அடியோடு ஒழித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூன்களில் காற்று நிரப்பப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முதலமைச்சர் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை கழிவறையில் வைத்து வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது - பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மற்ற பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் ?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் கழிவறை பயன்படுத்திய போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு நடைபெற்றிருக்கும் இந்த அவலச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே சக பெண் காவலரை போகப் பொருளாக பார்த்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, பெண் காவலரை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல் சிறப்பு ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு வரும் பெண் காவலர்களோடு, அனைத்து பெண் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை – இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று கற்களை வீசி இருவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அதோடு, திருத்தணி அருகே இருளர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு கஞ்சா போதையில் இருந்த கும்பல், அங்கிருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நினைத்துப் பார்க்கும் போதே மனதை உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிவிட்டதோடு, போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என விளம்பர வீடியோ வெளியிட்டதன் மூலம் தனது கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் தமிழகத்தில் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ முற்றிலும் செயலிழந்திருப்பதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.
எனவே, திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன் ?
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர்.
எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனி, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கோடிக்கணக்கான மக்களின் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும் திகழ்ந்த ஆகச்சிறந்த ஆளுமை பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று…
மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக அயராது உழைத்து, நாடுபோற்றும் நல்லபல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் இதயக் கோயிலில் மக்கள் திலகமாய், மன்னாதி மன்னராய் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.This media couldn't be displayed. See it on the original post. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மனிதகுலம் முழுமைக்குமான வாழ்வியலை வகுத்துக் கொடுத்திருக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய வள்ளுவப்பெருந்தகையை போற்றிக் கொண்டாடும் திருவள்ளுவர் தினம் இன்று.
சாதி, மதம், இனம் கடந்து உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றிடும் இந்திய நாட்டின் ஈடு இணையற்ற தேசிய இலக்கியமாக திகழும் திருக்குறளை படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக திமுக நிர்வாகி கைது – சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் திமுகவினரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வீட்டிற்குள் கள்ளத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக திமுகவின் பொறியாளர் அணியைச் சார்ந்த நிர்வாகி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு அரக்கோணத்தில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக மற்றொரு திமுக நிர்வாகி கைதாகியிருப்பதன் மூலம் தமிழகத்தில் திமுகவால் தான் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கஞ்சா விற்பனையில் தொடங்கி கொடியவகை போதைப் பொருட்கள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை என தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளிலும் திமுக நிர்வாகிகளுக்கும் தொடர்பிருப்பதை இச்சம்பவம் மேலும் உறுதிபடுத்தியுள்ளது.
எனவே, கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக கைதாகியிருக்கும் திமுக நிர்வாகியை தீர விசாரித்து இதன் பின்னணியில் செயல்படுவோரையும் எந்தவித பாரபட்சமுமின்றி கைது செய்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென் தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையை கட்டி வறண்டு கிடந்த பூமியை வளமான விளைநிலங்களாக மாற்றியதோடு, மக்கள் மத்தியில் நிலவிய உணவுப் பஞ்சத்தையும் போக்கிய மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த தினம் இன்று..
கடுமையான மழை, காட்டாற்று வெள்ளம் என பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் சொந்த நிதியை செலவழித்து அணையை கட்டி முடித்து தென் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜான் பென்னிகுவிக் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு - தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது.
பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வதாக இடம்பெற்றிருந்த பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு அரசு செவி சாய்க்காததன் விளைவே ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மண்டபங்களில் அடைத்து வைப்பதும், அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கான தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது.
எனவே, உயிரிழந்த திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, பணிநிரந்தரம் என்ற பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் @OfficeOfOPS -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், உழவுத் தொழிலே சிறந்தது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, உலகத் தொழில் அனைத்திற்கும் அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலையும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர் பெருமக்களின் நலனையும் பேணிக்காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விலும் வளமும், நலமும், பெருகி அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும் என மனதார வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பொங்கல் திருநாளையொட்டி பன்மடங்கு உயர்ந்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தால் பயணிகள் பாதிப்பு – ஆண்டுதவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பன்மடங்கு அதிகரித்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 700 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1400 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும் உயர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
பொங்கல் திருநாள் மட்டுமல்ல ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் திட்டமிட்டு பன்மடங்கு உயர்த்தப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கண்டுகொள்ளாத போக்குவரத்துத் துறையால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, சிலர் தங்களின் பயணங்களை ரத்து செய்யும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் இதுபோன்ற கட்டணக் கொள்ளை நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி என புகார் –அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு அனைவருக்கும் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
திருவள்ளூர், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு முழுமையாக விநியோகம் செய்யப்படாததே, நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதோடு, டோக்கன் வழங்குவதில் குளறுபடி, ஊழியர்கள் பற்றாக்குறை, கைரேகை சரி பார்க்கும் இயந்திரத்தில் பழுது என நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளால், குடும்ப அட்டை தாரர்கள் பொங்கல் பரிசை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதோடு, பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் முழுமையாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை – சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியைப் பார்க்க வந்த ரவுடி ஒருவர், மருத்துவமனைக்குள்ளாகவே அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் அங்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை, அலட்சியப் போக்குடன் செயல்படுவதே, தற்போது அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.
எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து படுகொலை செய்த கும்பலைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இளைஞர்களால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்ததோடு, நாட்டு மக்கள் மனதில் சுதந்திர மற்றும் தேசிய உணர்வைத் தூண்டிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆன்மீகத்தைக் கடந்து உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத்திறன் மேம்பாடு என இளைஞர்களுக்கு பல்வேறு விதமான நற்குணங்களைப் போதித்ததோடு, அவர்களின் நம்பிக்கை வழிகாட்டியாகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை கண்ணகி நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி கைது - கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை முறையாகக் கண்காணிக்கத் தவறியதே அப்பெண் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக் காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை எனக்கூறிய மருத்துவத்துறை அமைச்சருடனே, கஞ்சா விற்றதாகக் கைது செய்யப்பட்ட பெண் எடுத்த புகைப்படத்தோடு, அவர் திமுகவின் நிர்வாகி எனப் பரவும் தகவல் தமிழகத்தில் திமுக தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களால் உயிர்போகும் அளவிற்குத் தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் மிதந்த போதிலும் தன் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த தேசம் போற்றும் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுதினம் இன்று.
சிறு வயது முதலே தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்களிடம் சுதேசி சிந்தனைகளை ஆழமாக விதைத்ததோடு, இந்திய சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடி தன்னுயிர் நீத்த கொடிகாத்த குமரன் அவர்களின் தேசப்பற்றையும், தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான திரு.செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும்,பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் திரு. கணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.கணேசன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊதியம் பிடித்தம் செய்யும் நடைமுறைக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு – திமுகவின் தேர்தல் வாக்குறுதியான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை ரத்து செய்திட வேண்டும், பணி ஓய்வின் போது 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தினை தொகுத்து வழங்க வேண்டும், பொது வருங்கால வைப்பு நிதித் தொகையின் அசலை வட்டியுடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை, பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் ஒப்பிடும் சவலைக் குழந்தையாக இருப்பதாக விமர்சித்திருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதோடு, புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்பட்ட நாளில் தொடங்கி தற்போது வரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு பேராசிரியடமிருந்தும் பிடித்தம் செய்துள்ள சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான தொகையை திருப்பித் தரவில்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பல்வேறு குறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகளிடையே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை - மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே வெள்ளிரிக்காடு கிராமத்தில் கள்ளச்சாரயம் விற்பனை செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் இதே கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக நடைபெற்ற கள்ளச்சாராயத்தால் 60 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான உயிர்களை பறித்த கள்ளச்சாராயத்தின் விற்பனையையையும், அதற்கு உடந்தையாக செயல்படுவோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலைதூக்க காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு கைதான நபரிடம் முழுமையான விசாரணை மேற்கொண்டு, அதன் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தியாகியுமான திரு.எல் கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு எல்.கணேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டமா ? - விரிவான விசாரணை நடத்தி காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் கடந்த 31 ஆம் தேதி அசைவ உணவுகளுடன் கூடிய மதுவிருந்து கொண்டாட்டம் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கல்லல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்றிருக்கும் மதுவிருந்துடன் கூடிய இந்த புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகத்தில் போதைக் கலாச்சாரம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கஞ்சா செடிகள் வளரும் மையங்களாகவும், மது அருந்தும் கூடங்களாகவும் அரசு மருத்துவமனைகளே மாறிவரும் நிலையில், தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடர்ந்து பேசி வருவது கேலிக்கூத்தானது.
எனவே, செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, மக்கள் அதிகளவு வந்து செல்லும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மருத்துவத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் பெண் போராளியும், ஆங்கிலேயப் படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சிவகங்கையை மீட்டெடுத்துத் திறம்பட ஆட்சி செய்த வீரமங்கையுமான வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று
வீரமும், விவேகமும் நிறைந்த போர்ப்படை தளபதியாக, மக்கள் நலனில் அதீத கவனம் செலுத்திய ராணியாக, ஆங்கிலேயப் படைகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த தென்னாட்டு அரசி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த மாவீரரும், பாஞ்சாலங்குறிச்சியை திறம்பட ஆட்சி செய்த பாளையக்கார மன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, பிற மன்னர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததோடு, தன் இறுதி மூச்சு வரை தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் அரண்போல காத்திட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும் புகைப்படமும் நீக்கம் – தமிழுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவரின் பெயரை மறைக்க முற்படுவது அற்பத்தனமானது.
தாய்மொழியாம் தமிழுக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் என்ற தமிழறிஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், அவருடைய பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ் மாநாடு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத் தமிழர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் நீக்கி அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும்.
எனவே, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுவதை தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதிய புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும், புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்களின் மனைவி திருமதி பிரேமகுமாரி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
மனைவியை இழந்துவாடும் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக மக்கள் அனைவரும் அமைதியான சூழலில் வளமான வாழ்வை வாழ்ந்திடவும், சமூகப் பொருளாதார நிலையில் அவரவர் விரும்பிய உயர்ந்த நிலையை அடைந்திடவும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.
புதிய தொடக்கத்தோடு புத்துணர்வையும் அளிக்கும் இப்புத்தாண்டு, நம் அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியையும், குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும் எனக்கூறி, மீண்டும் ஒருமுறை எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகம் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி திரு அஸ்ரா கார்க் அவர்களும் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாக அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கூறியிருக்கும் தகவல் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாக அமைந்துள்ளது.
திருத்தணி ரயில்நிலையம் அருகே கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையிலிருந்த சிறுவர்கள் சிலர், வடமாநில இளைஞர் ஒருவர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலின் தாக்கம் அடங்குவதற்கு முன்பாகவே, திருப்பூர் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை, போதை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவம், தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கத் தவறியதன் விளைவே, சக மனிதர்களையே பட்டாக் கத்தியால் தாக்கி, துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பும் அளவிற்கான கொடூரமான மனநிலையை உருவாக்கியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுவதோடு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஆலய பூசாரி திரு.ராமகிருஷ்ண தேவர் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு. ராமகிருஷ்ண தேவர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இயற்கை விவசாயத்தின் மூலம் அறிவுப்புரட்சியை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானியும், நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்யவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பசுமைப் போராளியுமான நம்மாழ்வார் அவர்களின் நினைவுதினம் இன்று.
இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றோடு பாரம்பரியமிக்க நெல் ரகங்களையும் மீட்டெடுத்து தன் வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த விவசாயியாக வாழ்ந்து மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழியை நாளும் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நாகப்பட்டினம் முன்னாள் மாவட்டக் கழக செயலாளரும், நாகப்பட்டினம் நகர் மன்ற முன்னாள் தலைவர் திரு.R.சந்திரமோகன் அவர்களின் மனைவியுமான திருமதி.மஞ்சுளா சந்திர மோகன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
திருமதி.மஞ்சுளா சந்திர மோகன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவில் வைத்துப் போற்றுவோம்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சமநிலைக்குச் சம ஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது - அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதைக் கைவிட்டு, தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமநிலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக மனு கொடுக்கும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் என, ஜனநாயகம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பதும் அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனியும் கால தாமதம் ஏற்படுத்தாமல், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அளவிடவே முடியாத அளவிற்கான உடைமைகளையும் பறித்துச் சென்றதோடு, தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று.
காலத்தால் மறக்க முடியாத அளவிற்கு வலியைத் தந்ததோடு, பாதிப்பிலிருந்து மீளவே முடியாத அளவிற்குப் பேரழிவையும், பேரிழப்பையும் ஏற்படுத்திய சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பொதுவுடைமை கொள்கை வாதி ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய விடுதலைக்காக, விவசாயிகளுக்கு ஆதரவாக, தீண்டாமைக்கு எதிராக என தன் வாழ்நாளின் ஒரு பகுதியைச் சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி ஐயா நல்லகண்ணு அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் போராளியும், சிவகங்கை சீமையைத் திறம்பட ஆட்சி செய்த முதல் ராணியுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவுதினம் இன்று.
போர்க்களத்தில் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட படைத்தளபதியாகவும், தனது குடிமக்களிடம் அளவு கடந்த அன்பு கொண்டு நல்லாட்சி வழங்கிய ஆட்சியாளராகவும் திகழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு என்ற ஒன்றையே வாழ்வின் நெறியாகக் கொண்டு, அனைத்து உயிர்களையும் நேசி, பகைவர்களிடத்திலும் அன்பு காட்டு, தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய், போன்ற மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் இயேசுபிரானின் போதனைகளைப் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான் பிறந்த இந்த நன்னாளில், அவர் விரும்பிய அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம், மற்றும் மதநல்லிணக்கம் மேன்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சாதியக் கொடுமைகள் மற்றும் சமுதாய பேதங்களோடு, பெண்ணடிமைத் தனத்தையும், மனிதர்களைத் தாழ்த்தும் மூட நம்பிக்கைகளையும் வேரோடு களையத் தொடர்ந்து போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழக மக்களிடையே பகுத்தறிவு சிந்தனையை மேலோங்கச் செய்ததோடு, பொதுநலத் தொண்டையே தன் உயிர் மூச்செனக் கருதி இறுதிவரை போராடிய சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பெரும் தொண்டுகளை நினைவில் வைத்து வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து, எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு, தனது பேச்சாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப மேன்மைமிக்க உழவுத் தொழிலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களை கொண்டாடி மகிழும் தேசிய விவசாயிகள் தினம் இன்று.
மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களையும், எண்ணற்ற சவால்களையும் எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகளான விவசாயிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும், அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், எளிமை மற்றும் நேர்மையைத் தனது அடிப்படைக் குணங்களாகக் கொண்டிருந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான தியாகி கக்கன் அவர்களின் நினைவுதினம் இன்று.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், பல்வேறு துறைகளுக்கு அமைச்சர் எனப் பொதுவாழ்வில் தனக்குக் கிடைத்த அனைத்து விதமான வாய்ப்புகளையும் பொதுமக்களின் நலனுக்காகவே பயன்படுத்திய மாமனிதர் கக்கன் அவர்களின் தியாக உணர்வையும், மக்கள் தொண்டையும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – அரசு இயந்திரத்தின் அச்சாணியாகத் திகழும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதால் திட்டமிட்டபடி ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டோ ஜியோ ( FOTA - GEO ) அறிவித்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையின் 187வது வாக்குறுதியான அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புதல், 309வது வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், 311வது வாக்குறுதியான சமநிலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, தங்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் அரசுத் தரப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் வழங்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யக் குழுக்களை அமைத்து காலதாமதம் ஏற்படுத்துவதையே அரசு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தங்களுக்குக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை – வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பணி வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு உள்ளான சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 50வது வார்டு பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் திரு ரவிக்குமார் அவர்கள் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தூய்மைப் பணியாளர் ஒருவர் மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்திலும், கொரோனோ போன்ற பெருந்தொற்று காலத்திலும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரையும், மாநகரின் சுகாதாரத்தையும் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல் ஏற்றுக் கொள்ளமுடியாதது .
எனவே, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உரிய ஊதியமின்றியும், வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகம் சார்பாகப் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் சகோதரர் திரு.ஆர்.எம். செல்வம் அவர்களின் புதல்வன் திரு.புகழ் அவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும், புதல்வி செல்வி. இன்பா அவர்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கும் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கும் இருவரும், அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் விளையாட்டு உலகின் உச்சம் தொட்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க மனதார வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (SIR) அடிப்படையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டம் மற்றும் தொகுதிவாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தங்களின் பெயர்களை மீண்டும் இணைக்க, புதிய வாக்காளர்களைச் சேர்க்க, திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரவர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாகப் பெற்று, தங்களின் பகுதிகளில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எவரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் அனைத்து விதமான உதவிகளையும் உடனிருந்து செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டம் - வாழ்வாதாரத்திற்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தம் சாலையில் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான செவிலியர்களை உரிய நேரத்தில் பணி நிரந்தரம் செய்யத்தவறிய சுகாதாரத்துறையின் அலட்சியமே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னரும் விடிய, விடியப் போராட வேண்டிய சூழலுக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும், தங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததோடு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் என செவிலியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் செவிலியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு – விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள சின்னகாளி பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இடுவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், சாலைமறியல், கடையடைப்பு ஆகியவற்றோடு கிராமசபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், அப்பணிகளைத் தொடர்வதும், எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் மக்களைக் கைது செய்து அடக்குமுறையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குப்பதிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு - அடிக்கடி அரங்கேறும் விபத்துக்களைத் தடுக்க அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.
அங்கன்வாடி மையங்கள் தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைக் கட்டடங்களின் அவலநிலை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது மாணவர் ஒருவரின் உயிர் பறிபோகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று அடிக்கடி இடிந்து விழும் கட்டடங்களால் ஒட்டுமொத்த மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருப்பதோடு , ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
எனவே, மாணவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதோடு, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாத வகையில் அனைத்து அரசுப்பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நேற்று எனது பிறந்தநாளையொட்டி தங்களது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தொலைப்பேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்னிந்தியத் திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற செயற்குழு உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாநகர மாவட்டக் கழக செயலாளர் அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்கள் திருச்சபையின் மூலம் தன்னுடைய சமூக சேவையை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் சதித்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்திட 30 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நதிநீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதோடு, கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலின்றி எந்தவொரு அணையையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமையுள்ள பங்கைப் பெறுவதற்கே ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய சூழலில், மேகதாது அணையைக் கர்நாடக அரசு திட்டமிட்டபடி கட்டி முடித்தால், காவிரிப் பாசனப் பகுதிகள் முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழகத்தின் உயிர்நாடியான காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மேற்கொண்டு காவிரிப் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் சுமார் 95 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்காமல் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கல்விப் பணிக்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்பு அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடிப்பதும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழங்க மறுப்பதும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அவலநிலையை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
ஏற்கனவே, கடுமையான நிதி நெருக்கடி, மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை வழங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் படிப்படியாக அதன் தனித்தன்மையை இழந்துவருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்தியாவின் பழமையும், பெருமையுமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக விடுவிப்பதோடு, சிறப்பு நிதியை உருவாக்கி அப்பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியை சீரமைத்திட வேண்டும் என உயர் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் தனது உணர்ச்சிக்குக் கவிதைகளின் மூலம் நாட்டு மக்கள் மனதில் விடுதலை உணர்வை மேலோங்கச் செய்தவர், தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ்த் தொண்டுக்காக அர்ப்பணித்திட்ட புரட்சிக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
கவிஞராக, கட்டுரையாளராக, இதழியலாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக, சுதந்திரப் போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங்களிலும் தாய்மொழியாம் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது - ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லாது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருப்பதே தொடக்கக்கல்வி ஆசிரியர்களைத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களின் துயர நிலை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் நடைபெற்ற போராட்டத்தை காவல்துறையினரைக் கொண்டு அடக்க முற்படுவதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவ நினைப்பதும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இல்லாத நிலையில், பயிரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், வேறுவழியின்றியும் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் விவசாயிகளிடம், யூரியாவுடன் மற்ற உரங்களையும் சேர்த்து வாங்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
காவிரி டெல்டா உட்பட நடப்பாண்டுக்கான தமிழகத்தின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பளவைக் கணக்கிட்டு அதற்குத் தேவையான உரங்களை போதுமான அளவிற்கு முன்கூட்டியே இருப்பு வைக்கத் தவறியதே தற்போதைய உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் என பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் உடனடியாக விநியோகிக்கப்படுவதையும், தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஸ்வயம் (Swayam) தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு – தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும்.
டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் (Swayam) தேர்வு நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அம்மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான சான்றிதழ்களைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பெறமுடியும் என்ற சூழலில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உளவியல் ரீதியிலும் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். @NTA_Exams @PMOIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தேசப்பாதுகாப்பு பணியின் போது பயங்கரவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மூளையாக விளங்கியவரும், சமுதாய அமைப்பிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சம வாய்ப்பு மற்றும் அதிகாரம் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடியவருமான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம் இன்று.
சட்டத்துறை மட்டுமல்லாது அரசியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த வல்லுநராகத் திகழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran reposted
AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM
@ammkofficial
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக மக்கள் தான் என் குடும்பம்... தமிழக மக்களின் நலனே எனது நலன் என சூளுரைத்து, மக்களின் நல்வாழ்வுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் ஆளுமை, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டிய உன்னதத் தாய், அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய நமது இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...
எதுவரினும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு, இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாய் வலம் வந்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணித்து, அவரது லட்சியத்தையும், கொள்கைகளையும் மீட்டெடுத்து மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுதினம் (05.12.2025) – உறுதிமொழி
TTV Dhinakaran
@TTVDhinakaran
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகியோரின் அன்பைப் பெற்றவருமான திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திறமைமிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை தமிழ்சினிமாவுக்கு அடையாளப் படுத்திய திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தமிழகத்தில் அமைத்திட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் உறுதியேற்றிடுவோம்:
துரோகத்தின் மறு உருவத்திற்கு முடிவுரை எழுதிடுவோம்! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்கள் அனைவரும் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று.
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் அனைத்தும் களையப்படுவதோடு, அவர்களும் சமூகத்தில் சமவாய்ப்புகள் பெற்று உயர்நிலையை அடைந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், அன்பிற்குரிய சகோதரரும் நண்பருமான திரு.ஜான்பாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சகோதரர் திரு.ஜான்பாண்டியன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @JohnPandianTMMK -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மழைநீரில் மூழ்கி வீணாகியிருக்கும் பயிர்சேத கணக்கிடும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும் – பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
டிட்வா புயலின் காரணமாகக் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்சாகுபாடி முழுமையாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கக் காலத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்றுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது டிட்வா புயலின் தாக்கத்தினால் வயல் வெளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரும், அதில் மூழ்கியிருக்கும் நெற்பயிர்களும் காவிரி டெல்டா விவசாயிகள் மீளவே முடியாத அளவிற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
டிட்வா புயலின் தாக்கத்தினால் வழக்கத்திற்கு மாறாகப் பெருமழை பொழிந்து வரும் நிலையில், நாளையுடன் நிறைவடைய இருக்கும் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அனைத்து தரப்பு விவசாயிகளின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.
எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து அதற்கான உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நாளையுடன் நிறைவடையும் இருக்கும் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார் - விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வரும் நிலையில், வார இறுதி நாட்களில் உணவை சமைக்க மறுப்பதும், கட்டாயமாக வெளியேறச் சொல்வதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றப்பட்டாலும் மாணவர்களுக்கான உரிமைகள், உதவிகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைக்கும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் உறுதியளித்த போதிலும், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைக் கூட முறையாக வழங்க மறுப்பது ஆதிதிராவிடர் நலத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
எனவே, தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் சமூக நீதி விடுதிகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு தங்கி கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
குவைத் நாட்டில் பணிபுரிந்துவந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக்கா பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.வேல்முருகன் அவர்களை கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டு காவல்துறை கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குவைத் நாட்டில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த திரு.வேல்முருகன் அவர்கள் திடீரென கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் குடும்பத்தினரும், உறவினர்களும் தவித்து வருகின்றனர்.
எனவே, இந்திய தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டு குவைத் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு வேல்முருகன் அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @DrSJaishankar -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தோடு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையையும், கடமையையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினம் இன்று…
வேற்றுமையில் ஒற்றுமை எனும் உன்னத கோட்பாட்டை பின்பற்றி தொலைநோக்கு பார்வையுடன் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் உட்பட சிந்தனையாளர்கள் அனைவரின் பங்களிப்பையும் போற்றி வணங்குவதோடு, அதில் இடம்பெற்றிருக்கும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முழுமையாக பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அதே நேரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய பாரா நீச்சல் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 34 தங்கம், 40 வெள்ளி உட்பட 88 பதக்கங்களைக் குவித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை
ஏற்படுத்துகிறது.
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கும் வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை உயர்த்த மத்திய அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் - தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திட வேண்டும்.
டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை முறையாகவும், முழுமையாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்ற புகார் எழுந்த நிலையிலும், கொள்முதல் நிலையங்களிலும் போதுமான இடவசதியின்றி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் தொடர் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் அளித்திருக்கும் பரிந்துரையின் படி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவு அதிகரிக்கும் என நம்பியிருந்த தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்த முடிவு வேதனையுடன் கூடிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.
எனவே, வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். @PMOIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த வருவாய்த்துறை ஊழியர்கள் - பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பொதுமக்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பணிச்சுமை அதிகளவில் இருப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வருவாய்த் துறை சங்கங்களும் முழுமையாக புறக்கணித்துள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பல்வேறுகட்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கைகையும் தமிழக அரசு மேற்கொள்ளாததே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருப்பதாக ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல, உரிய திட்டமிடல் மற்றும் போதிய பயிற்சியில்லாமல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் விடுமுறை தினத்தன்றும் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதால் பணிச்சுமையோடு மன உளைச்சலும் அதிகரித்திருப்பதாக வருவாய்த் துறை ஊழியர்கள் தங்களின் வேதனையையும், ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
கிராம உதவியாளர்கள் தொடங்கி, நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், வாட்டாட்சியர்கள் வரை அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் தங்களின் பணிகளை புறக்கணித்திருக்கும் நிலையில், மறுபுறம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளோடு அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, அவர்களுடைய பணிச்சுமையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் – நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மா பாளையத்தில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா வளாகத்தில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாவட்டத்தின் வளர்ச்சியோடு, உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால் ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை வரவேற்ற அப்பகுதி மக்களுக்கு, தற்போது நடைபெற்றுவரும் ஆபத்து நிறைந்த சாயப்பட்டறை ஆலை அமைக்கும் பணி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நீர்நிலைகள் மட்டுமல்லாது நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சேலத்தில் அமையும் இந்த சாயப்பட்டறை ஆலைகளால் அம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த நீர் ஆதாரமும் மாசடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டம் மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாடும், நாட்டு மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்காக சுதேசியத்தைக் கட்டியெழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதருமான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
வழக்கறிஞராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையையும், அவர்கள் கொண்டுவந்த கொடூரமான சட்டங்களையும் எதிர்த்து இறுதிவரை போராடி உயிர்நீத்த தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் பன்முக ஆற்றலையும் தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தெலுங்கானா மாநிலத்திலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் பயணித்த பேருந்து மதீனா நகரின் அருகே விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 42 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
புனிதப் பயணத்தின் போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக போற்றப்படும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு எனது மனமார்ந்த தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை மற்றும் நடுநிலைத்தன்மையை அடிப்படையாக கொண்டு ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் பெரும்பங்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினரின் அரும்பெரும் பணிகள் மென்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு – தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி அனைத்து வகையிலும் தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு தயாரித்து சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராக செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வஞ்சித்து வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் அம்மாநில அரசு தன் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
ஏற்கனவே, காவிரியின் அடிமடைப்பகுதியில் பல அணைகளை கட்டியிருக்கும் கர்நாடக அரசு, தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் பட்சத்தில் கடைமடை பகுதியான தமிழகத்தின் விவசாயிகளுக்கு காவிரி நீர் என்பது காணல் நீராக மாறிவிடும் என்ற அபாயத்தை உருவாக்கியுள்ளது.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்வதோடு, வலுவான வாதங்களை முன்வைத்து, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அன்பின் வடிவமாக, மகிழ்ச்சியின் ஊற்றாக, கள்ளங்கபடமற்ற உள்ளங்களாக, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் இன்று.
குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், சமச்சீரான வளர்ச்சிக்கும் இடையூறுகளாக இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, அன்பு மற்றும் அரவணைப்போடு, அவர்களின் எதிர்காலம் சிறக்க அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா ? தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
சென்னை மாநகராட்சி தொடங்கி, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, வெள்ளம், புயல் என அத்துனை இயற்கை பேரிடர்களையும் எதிர்கொண்டு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெல் உள்ளிட்ட பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை – 15 ஆம் தேதியுடன் நிறைவடையும் கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் உள்ளிட்ட 11 வகையிலான பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் 15 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தீபாவளி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறையின் காரணத்தாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையாலும் ஏராளமான விவசாயிகள் தங்களின் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பயிர்காப்பீடு செய்வதற்கான அடங்கல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்க வேண்டிய வருவாய் நிர்வாக அலுவலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்களையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @PMOIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு தேர்வாகியிருக்கும் பிரபல கலை இயக்குநர் திரு. தோட்டா தரணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மட்டுமல்லாது பிரெஞ்சு, இத்தாலியப் படங்களிலும் தன்னுடைய கலைத் திறனால் அளப்பரிய பங்காற்றிய திரு. தோட்டா தரணி அவர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
டெல்லி செங்கோட்டை அருகே கார்வெடிப்பு ஏற்பட்ட சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இத்தகைய கோர சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்பது தொடர்பாக விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.@CMOTamilnadu @AmitShahOffice @HMOIndia @DefenceMinIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கேரள போக்குவரத்துத்துறையின் சாலைவரி விதிப்பு மற்றும் அபராத நடவடிக்கையால் ஆம்னி பேருந்து உரிமையாளகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு – பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரள மாநிலத்திற்கு சென்ற தமிழ்நாடு பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் அம்மாநில போக்குவரத்து துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, 70 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலச் சாலைவரிகளை செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக கூறி கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த திடீர் நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவையை முழுமையாக முடக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.
சுவாமி ஐயப்பனை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளத்தை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆம்னிபேருந்துகள் வேலைநிறுத்தம் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு என தனி வகையிலான பெர்மிட் (Permit) இல்லாத காரணத்தினால் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகளை இயக்குவதிலும், விபத்துக்கள் ஏற்படும் போது இன்சூரன்ஸ் கோரி விண்ணப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருப்பதாக ஆம்னிபேருந்து உரிமையாளர்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மற்றும், அதனால் பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் விடுத்திருக்கும் தனி பெர்மிட் (Permit) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும் மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @Seeman4TN -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் – தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஆண்நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் பெண்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அடியோடு கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, காவல்துறை என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வியைப் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது.
எனவே, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, காவல்துறையின் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு நச்சு ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமல்லாது பொதுமக்களின் உயிருக்கும், உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான உயிரி மருத்துவக் கழிவு ஆலையை அமைக்கும் தமிழக அரசின் முடிவு அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு, கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எனப் பொதுமக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறியும் மருத்துவக் கழிவு ஆலையை அமைக்க முயற்சிப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
எனவே, பிசானத்தூர் பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் அவர்களின் ஜெயந்தி விழாவை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய சீக்கிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, இரக்கம், உண்மை, சகோதரத்துவம் ஆகியவற்றோடு மனிதக்குலத்திற்கும் வழிகாட்டும் ஒளியாகத் திகழும் குருநானக் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வளமும் ஒற்றுமையும் நிறைந்த சமத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தீவிர பற்றாளரும் எனது நீண்டகால நண்பரும் ஒரு மூத்த சகோதரராக பல்வேறு கால சூழல்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஓய்வு பெற்ற அரசு கூடுதல் செயலாளரும் வழக்கறிஞருமான திரு.இசக்கி முத்து அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
திரு.இசக்கி முத்து அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி - கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது ஆண் நண்பர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பெரும் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளைக் கடுமையாக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும், இதுபோன்ற கொடூரச் செயல்கள் தொடர்வது, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்கச் செய்திருக்கிறது.
எனவே, அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது நண்பருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் - அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலியில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் அதிர்வு, சரிந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் காற்று மாசு குறித்து கருத்து தெரிவிக்க நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அக்கூட்டத்தைக் கலைக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, கருத்துக் கேட்புக் கூட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் அத்துமீறி நடந்து கொண்ட நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @Arappor -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும், மக்களுக்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியும், சாதனையும் மேன்மேலும் தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழ்நாடு தமிழருக்கே என்ற தொடர் முழக்கம் மற்றும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு உட்பட மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் இன்று.
சாதி, மத, இன வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு பாடுபட்டு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயமிக்க வரலாற்றுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய மாமன்னரும், தனது பொற்கால ஆட்சியின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா இன்று.
சோழநாட்டுப் பகுதியைச் செழுமையாகவும், வலிமையாகவும் உருவாக்கியதோடு, ஆட்சிமுறை, இராணுவம், கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மலைக்க வைக்கும் சாதனைகள் புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் வீரத்தையும், ஆளுமைத் திறனையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
அதே நேரத்தில், வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும் தஞ்சை சோழர் அருங்காட்சியகப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, தமிழ் வளர்த்த மாமன்னன் ராஜராஜசோழனின் பெயரைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார் - விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் சுமார் 160 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல டன் ஒன்றுக்கு 598 ரூபாயை வாடகை கட்டணமாகத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்கள் 186 ரூபாய் மட்டுமே தங்களுக்கு வழங்குவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு, நெல் கொள்முதல் செய்யப்பட்ட 48 மணிநேரங்களில் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், 30 முதல் 40 நாட்களாகக் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தின் மீது எழுந்திருக்கும் முறைகேடு புகாரை விசாரிப்பதோடு, விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran reposted
AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM
@ammkofficial
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கிய தேசியத்தலைவருமான தென்னாட்டு போஸ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை இன்று.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் – பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
விதை நெல்லில் தொடங்கி உரம் தெளித்தல், வாடகை இயந்திரங்கள் என ஒரு ஏக்கருக்கு சுமார் 36 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், அரசு வழக்கமாக அறிவிக்கும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதோடு, நடப்பாண்டில் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் எனக் காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடை வழங்குவதோடு, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி பயிர்க்காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரை முன்னின்று நடத்தியவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கிய தேசியத்தலைவருமான தென்னாட்டு போஸ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை இன்று.
தமிழகம் உயர, தமிழ்ச் சமூகம் வளர தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, சுயவாழ்விலும், பொதுவாழ்விலும் தூய்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்த அப்பழுக்கற்ற மாமனிதர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் மக்களுக்கு ஆற்றிய சேவையைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் - தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது.
எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைக்கான முதல் போரை மக்கள் பங்களிப்போடு முன்னெடுத்த மாமன்னர்களும், சிவகங்கை சீமையை மீட்டெடுக்க வீரமங்கை வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்த விசுவாசமிக்க போர்ப்படைத் தளபதிகளுமான மாவீரர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை இன்று.
தென்னிந்தியாவில் தங்களை எதிர்க்க யாருமில்லை எனக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த சிவகங்கை சீமையின் வேங்கைகளான மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பெரும்பாக்கம் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியிருப்பதாகப் புகார் - விரிவான விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் தனியார் நிறுவனத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அனுமதி சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரம் மிகுந்த சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் ராம்சார் நிலங்களாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கான அனுமதியை வனம், சுற்றுச்சூழல் மற்றும் சென்னை பெருநகர கட்டுமான குழுமம் வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை தொடரும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் சென்னை பெரும்பாக்கம் பகுதி மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வரும் நிலையில், தற்போது அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும் பட்சத்தில் வரும் காலங்களில் வெள்ள பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈர நிலங்களான ராம்சார் நிலங்களில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது எனச் சட்டமும், பசுமை தீர்ப்பாயமும் தெளிவு படுத்திய நிலையிலும், தற்போது சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ராம்சார் சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து விரிவான விசாரணை நடத்தி, அது உறுதியாகும் பட்சத்தில் அந்த அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இவ்விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கபடி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய கபடி அணியின் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த வீரர் அபினேஷ் அவர்களும், மகளிர் பிரிவில் சென்னை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா அவர்களும் இடம்பெற்றிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த தாய்நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் இந்தியக் கபடி அணியின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டிலிருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவு தினமான இன்று, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
This media couldn't be displayed. See it on the original post. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தவரும், சிவகங்கை பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயப் படைகளின் அடக்குமுறைக்குத் துளியளவும் அஞ்சாமல், தீரத்துடன் எதிர்த்து நின்று இறுதிவரை போரிட்டதோடு, தாய் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டிலிருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவுதினம் இன்று.
மக்களோடு, மக்களாக வாழ்ந்து மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஆட்சியை வழங்கியதோடு, தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் காத்திட தங்களின் இறுதி மூச்சு வரை போராடி ஆங்கிலேயப் படைகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் - காவிரி டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி நெல் அதிகளவில் விளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல் சாகுபடி மட்டுமல்லாது, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் என பல லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நெல் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில், நெல்லை முழுமையாக கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தவறியதே, பல லட்சம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரவு, பகலாக அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியிருப்பதோடு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் மழைநீரில் முழுமையாக மூழ்கியிருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யும் பணியை தொடங்குவதோடு, விளைநிலங்களிலேயே மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
I extend my heartfelt birthday greetings to the Honourable Home Minister Shri Amit Shah Ji.
May the Almighty bless him with a long life, sound health, and continued strength to serve the people and the nation with wisdom and dedication.@AmitShah @AmitShahOffice -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – உச்சநீதிமன்றத்தில் உரிய அதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசின் உதவியுடன் கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற பொதுநல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம் என்பதோடு புதிய அணைகட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வரும் கேரள அரசும், அம்மாநிலத்தின் சில அமைப்புகளும் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
முல்லைப்பெரியாறு அணை வலுவோடும், உறுதித் தன்மையோடும் இருப்பதாக ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்குழு தெரிவித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வழக்குகளை தொடர்வதோடு, பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் வதந்திகளையும் பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதோடு, பேபி அணை மற்றும் சுற்றிய பகுதிகளை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்ற பின்பும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு விஷமத்தனமானது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு, தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாடு முழுவதும் மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இன்னுயிர் நீத்த காவலர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதிலும், முன்னின்று தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த காவலர்களின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக பெய்துவரும் கனமழையாலும், முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்காலும் பல்வேறு கிராமங்களுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு, வீடுகளுக்கும் மழைநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர்,நாகை மட்டுமல்லாது தேனி மாவட்டத்திலும் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான நெற்பயிர்கள் உட்பட காய்கறிகளும் மழை, வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்திருப்பதோடு, கனமழையால் தங்களின் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் உயிரிழந்திருப்பதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, தொடர்மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் ஆற்றங்கரையோரம் வசிப்போரையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, மழை, வெள்ள பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
#cmotamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மாணவ சமுதாயத்தின் நலன் மற்றும் உயர்கல்வியை மேம்படுத்துவதாக கூறி, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை முழுமையாக தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என்பதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயரும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.
மேலும், அறநோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்லூரிகள் வியாபாரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதோடு, தங்களின் பணிபாதுகாப்பு, உரிய நேரத்தில் ஊதியம், ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் அறவே ஒழிக்கப்படும் என அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர்.
எனவே, அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கடலூர் மாவட்டத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசின் சார்பாக உரிய நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலை முரசு நாளிதழின் அதிபருமான மறைந்த திரு ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையின் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் உரிமைக்காகவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடுபட்ட திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக பாஜக தலைவரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணியைத் தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @NainarBJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவரும், பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு நல்லாட்சி தந்த மாமன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுதினம் இன்று.
தூக்கு மேடையில் நின்ற போதும் என் தாய்மண்ணைக் காக்கவே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியதாகக் கம்பீரமாக முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் - விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியின்மை காரணமாக லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி டெல்டா பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்குச் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விளைவித்த நெற்பயிர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்து தர தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட வேண்டிய சூழலுக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மகசூலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களைத் திறக்காததும், ஏற்கனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியை ஏற்படுத்தித் தராததுமே லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைய முக்கிய காரணம் என டெல்டா பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இயற்கை பேரிடர்களையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு விளைவித்த நெற்பயிர்கள் உரிய நேரத்தில் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படாததும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதும் காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, தற்காலிக கொள்முதல் நிலையங்களை அமைத்துத் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முழுமையாகக் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கவும், தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஏவுகணை நாயகர் குடியரசு முன்னாள் தலைவர் பாரத ரத்னா திரு ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அவர்களின் பிறந்த தினம் இன்று.
கனவு காணுங்கள் என இந்திய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததோடு, எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தன் திறமையால் ஏற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து நாட்டு மக்களின் இதயங்களில் சிகரமாகக் குடியிருக்கும் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் தேசப்பற்றையும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கழகத்தின் மீதிருந்த அளப்பரிய பற்றால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதனைத் திறம்பட எதிர்கொண்டு, தான் சார்ந்த கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனது ஆருயிர் நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினம் இன்று.
துரோகத்திற்கு எதிரான போரில் முதன்மை படைத் தளபதியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்பு நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினத்தில், நம் லட்சியப் பயணத்தின் இலக்கை அடைய நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாகக் கிடைக்கும் வரை நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என முழங்கிய புரட்சியாளர் சே குவேரா அவர்களின் நினைவுதினம் இன்று.
அநீதி எங்கே கண்டாலும் எதிர்த்து குரல் எழுப்பும் புரட்சியாளராக, விடுதலை உணர்வின் அடையாளமாக, எதற்கும் தலைவணங்காத தலைவராகப் போற்றப்படும் சே குவேரா அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக முழங்கியவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம்பெற அர்ப்பணித்த திரு இமானுவேல் சேகரனார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரே நாள் இரவில் 47 தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது.
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டியதாகக் கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாள் இரவில் மட்டும் 47 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டுவதாகக் கூறி கைது செய்வதையும், சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதார மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அமையும் என்ற குரல் பரவலாக எழுந்திருக்கும் நிலையிலும், அதனை மீட்பதற்கான எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் பேச்சளவில் மட்டுமே இருப்பதே, தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக மீனவர்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @PMOIndia @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @draramadoss -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன் ? – புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்க மறுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வுத் தேதியைத் தள்ளிவைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்கிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனத் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைப்பதோடு, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
I extend my heartfelt congratulations and best wishes to the Honourable Prime Minister of India, Shri Narendra Modi Ji, as he steps into his 25th year of dedicated leadership in public administration.
With unwavering commitment to the welfare of the people, the security of the nation, and the growth of the economy, Shri Narendra Modi Ji has made an invaluable contribution to the progress of our country.
I take this moment to wish for the continued success in his service to the nation. May his dedicated efforts lead India to greater heights. @PMOIndia @narendramodi -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி @PttvNewsX முடக்கமா ? - அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிளில் புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஐந்து நாட்களாக முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அன்றாட நிகழ்வுகளை எழுத்து வடிவமாகவும், ஒளி & ஒலி வடிவமாகவும் வழங்கி அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலங்களாகச் செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை முடக்க முனைவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதோடு, ஜனநாயகத்திற்கும் விரோதமானது ஆகும்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்கள், அதன் பணியில் சுதந்திரமாக ஈடுபட அனுமதிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப அரசு கேபிள் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகத் துணிச்சலுடன் ஆயுதம் ஏந்தி போராடிய பெண் போராளியும், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் படைத்தளபதியுமான வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவுதினம் இன்று
சிவகங்கையை மீட்க வீரமங்கை வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்ததோடு, தானே மனித வெடிகுண்டாக மாறி ஆங்கிலேயப் படைகளின் ஆயுதங்கிடங்குகளை அழித்தொழித்த வீரத்தாய் குயிலி அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் – மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் அலைக்கழிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி தனியார்ப் பள்ளிகளில் இலவச சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசால், ஏராளமான பெற்றோர்கள் தங்களின் சொந்த செலவிலேயே குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் பதிவு செய்து சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற அரசின் விதிமுறைகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றாமல் தங்களைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்காக இதுவரை பெற்றோர்களே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்துவந்த நிலையில், நடப்பாண்டில் தனியார்ப் பள்ளிகளின் மூலமாகவே சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவதோடு, ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெறும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் திருமதி அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தாயாரை இழந்துவாடும் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த், சகோதரர் L K சுதீஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@PremallathaDmdk @lksudhish -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவச் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக, ஏழைப் பங்காளராக, எளியோரின் நண்பராக, உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழராகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்துவதால் அவருடைய புகழும், பெருமையும் துளியளவும் ஒருநாளும் குறையப்போவதில்லை.
கோடான கோடி மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் செயல்படுத்திய சாதனைகளும், அமல்படுத்திய நலத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும்.
எனவே, இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா திரு ராமதாஸ் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பி மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் – மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் மீது நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்துவிதமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தபின்பும் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையால் அதிருப்தியடைந்த பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பேரிடர் காலங்களில் தொடங்கி பெருந்தொற்று காலம் வரை தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த மருத்துவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அனைத்து உயிர்களையும் தம் உயிரைப் போல எண்ண வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்து, சாதி, மத, பேத வேறுபாடுகளைக் களைந்து சமரச சன்மார்க்கத்தை நிறுவியவருமான திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தருமச்சாலையை நிறுவி ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கியதோடு, தன்னை நாடி வருவோருக்கு ஆண்டவனை அடையும் அருளியலை மட்டும் போதிக்காமல், ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க உபதேசித்த வள்ளலார் அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கப்பலோட்டிய தமிழர் வ.உ சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் உற்ற தோழரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தீரத்துடன் எதிர்த்துப் போராடிய விடுதலை போராட்ட வீரருமான சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று.
இலக்கியவாதி, இதழியலாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்க போராளி என பல்வேறு நிலைகளில் சாதி, மத, பேதங்களைக் கடந்து அனைவரின் மத்தியிலும் விடுதலை வேட்கையை விதைத்த வீரமுரசு சுப்பிரமணிய சிவா அவர்களின் துணிச்சலையும், தேசப்பற்றையும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், உயிர் பிரியும் நிலையிலும் தேசியக் கொடியைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்த தேசப்பற்று மிக்கவருமான கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆதிக்கம் நிறைந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக இளைஞர் படையைத் துணிச்சலுடன் வழிநடத்திச் சென்றதோடு, நாட்டின் சுதந்திரத்திற்காக இளம் வயதிலேயே தன்னுயிர் நீத்திட்ட உன்னதமிக்க விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் தியாகத்தை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வூதியக் குழு, தன்னுடைய கால அவகாசம் முடிந்த பின்பும் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருப்பதை கண்டித்து அக்டோபர் 6 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் தங்களின் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் ஓய்வூதியக் குழுவிடம் வழங்கிய நிலையிலும், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது எந்தவகையிலும் ஏற்க முடியாதது.
காலநீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை நேரடியாக கேட்காமல், இடைக்கால அறிக்கை எனும் பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஓய்வூதியக் குழு அடியோடு சீர்குலையைச் செய்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
எனவே, அரசு அமைத்த ஓய்வூதியக்குழுவின் முழு அறிக்கையை உடனடியாக பெறுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கிய கோரிக்கை மட்டுமல்லாது, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர், நேர்மைக்கும் எளிமைக்கும் தலைசிறந்த அடையாளமாகத் திகழ்ந்த மாமனிதர் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவுதினம் இன்று.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய கடுமையான உழைப்பாலும், நாட்டின் மீது கொண்டிருந்த அளப்பரிய பற்றாலும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த கிங் மேக்கர் காமராஜர் அவரின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மக்களை ஒன்று திரட்டி, அகிம்சை வழியில் சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் நடத்தி வெற்றிகண்ட தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று.
உலக அரங்கில் இந்தியர்களை சுயமரியாதையோடு தலைநிமிரச் செய்த சீர்திருத்தச் செம்மல் மகாத்மா காந்தி அவர்கள் கண்ட ஜாதி, மத பேதமற்ற லட்சிய இந்தியாவை உருவாக்கும் பயணத்தைத் தொடர நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிக்கான சாரம் சரிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திரையுலகமே வியக்கும் அளவிற்கு நடிப்பு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தனித்துவமிக்க உடல் மொழியாலும், உணர்ச்சிப்பூர்வ வசனத்தாலும் அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் திரையுலகை ஆண்டதோடு, காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை கலையுலகத்திற்கு விட்டுச் சென்ற கலைத்தாயின் தவப்புதல்வன் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் - ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில் இளம்பெண் ஒருவரை அவரது சகோதரியின் கண் முன்னரே காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் ஏற்கனவே குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த குரூரச் சம்பவம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்களால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் அடியோடு இழக்கச் செய்திருக்கிறது.
எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆயுதபூஜை - விஜயதசமி நல்வாழ்த்துகள் !
ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்யும் தொழிலையே தெய்வமாகப் போற்றிடும் வகையில் அவரவரது தொழிலுக்கு ஆதாரமாக விளங்கிடும் தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி அவற்றை வழிபடும் நன்னாளே ஆயுத பூஜை திருநாளாகும்.
அன்னை மகா சக்தியை வணங்கித் தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் கல்வி, கலை, தொழில் போன்றவற்றைத் தொடங்கிடும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.
ஊக்கத்துடன் கூடிய உழைப்பே வறுமையைப் போக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் இந்நாட்களில், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு பெற்றிட வேண்டும் என வேண்டி மீண்டும் ஒருமுறை எனது ஆயுதபூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக பா.ஜ.க வின் மூத்த தலைவரும், அன்பிற்குரிய சகோதரருமான திரு.H.ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.H.ராஜா அவர்கள் பூரண உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @HRajaBJP -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டநெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், அறிவார்ந்த செய்திகளின் மூலம் தமிழ் பத்திரிகை உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, சட்டப்பேரவைத் தலைவராக என பல்வேறு நிலைகளில் தமிழ் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சி.பா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான திரு சீமான் அவர்களின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த இருபெரும் ஆளுமைகளான பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழர் வாழ வேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும்பெரும் குறிக்கோள் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்தும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்தும் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிவார்ந்த கொள்கையின் மூலம் புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைகளாக திகழ்ந்த இருபெரும் தலைவர்களும் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாலும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும், அமல்படுத்திய திட்டங்களும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்து இன்றளவும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
எனவே, யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த மாபெரும் தலைவர்கள் மீது நாகரீகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள திரு சீமான் அவர்கள் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின் படி வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பதாகப் புகார் - பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே பதிவு செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழக அரசு நிர்ணயித்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைவிட 30 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கு மாறாக 30 சதவிகிதம் வரை வழிகாட்டி மதிப்பை வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரப்படி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவிடமிருந்தோ, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
எனவே, வாய்மொழி உத்தரவு எனும் பெயரில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் வழிகாட்டி மதிப்பு உயர்வை உடனடியாக நிறுத்தி வைப்பதோடு, ஏற்கனவே பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவரும், அன்பிற்குரிய நண்பருமான திரு ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு ஏ.சி. சண்முகம் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணி மற்றும் கல்விப் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @DrACSofficial -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி பீலா வெங்கடேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
கொரோனோ பரவல் காலத்தில் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராகத் திறம்பட பணியாற்றிய திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக அதிகாரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாரம்பரியமிக்க தினத்தந்தி நாளிதழின் அதிபரும் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிய பெருமைக்குரியவருமான பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
பத்திரிகையாளராக, தொழிலதிபராக, கல்வியாளராக, விளையாட்டு வீரராக என தான் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து துறைகளிலும் பெரும் சாதனையாளராக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் ஆற்றிய பணிகளை போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட நெல் கொள்முதல் – விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 நாட்களாக எவ்வித முன்னறிவிப்பின்றியும் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க போதிய இட வசதியில்லாத காரணத்தினாலும், அரசிடம் இருந்து நிதி கிடைப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தாலும் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மழையில் நனைந்து நெற்பயிர்கள் வீணாவதைத் தடுக்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனடியாக சீர்செய்து, விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாடு முழுவதும் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரிக்குறைப்பு ஆவின் நிர்வாகத்தில் மட்டும் இன்னும் அமலுக்கு வராதது ஏன் ? – ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்கப்படும் பால் பொருட்கள் முந்தைய வரிவிதிப்பின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் நெய் கிலோ ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் வரையிலும், வெண்ணெய் சுமார் 40 ரூபாய் வரையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் பால் சார்ந்த பொருட்கள் விலைகுறைப்பின்றி விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தில் காலதாமதமாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது
எனவே, ஜி எஸ் டி வரிக்குப்பை தமிழகத்தில் அமல்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பொதுமக்களுக்கு எந்தவித கால தாமதமுமின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஜி எஸ் டி வரிக்குறைப்பு இன்று முதல் அமல் – மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.
ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமைந்திருக்கும் மத்திய அரசின் ஜி எஸ் டி வரிக்குறைப்பு நடைமுறை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
உயிர்காக்கும் மருந்துகள், தனி நபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு முழுமையான வரி விலக்கு, சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கல்வி சார்ந்த உபகரணங்களுக்கு வரிக்குறைப்பு நான்கு அடுக்குகளாக இருந்த வரிவிதிப்பு நடைமுறை இரண்டு அடுக்குகளாக மாற்றம் உள்ளிட்ட ஜி எஸ் டி வரிவிதிப்பில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் தீபாவளிப் பரிசாக ஜி எஸ் டி வரி குறைப்பில் புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@narendramodi @PMOIndia @nsitharaman @nsitharamanoffc -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை - குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றிய கழக முன்னாள் இணைச்செயலாளர் மறைந்த திரு.இராம.சேகரன் அவர்களின் புதல்வர் திரு ராம்பிரகாஷ் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இந்த படுகொலைச் சம்பவம் அப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரு ராம்பிரகாஷ் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உறவினர்களும் பொதுமக்களும் பல்வேறுகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சீர்காழி அரசு தாய் சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு – கர்ப்பிணிப் பெண்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும், பிரசவித்த தாய்மார்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி ஊசியால் அவர்களுக்கு திடீர் காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் உடல்நலக்குறைவிற்குக் காரணமாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு மருந்தை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் அம்மருந்து விநியோகிக்கப் பட்டிருந்தால் அவற்றின் பயன்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதைத் தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உரிய மேல் சிகிச்சை வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு தாய் சேய் நல மையங்களில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு ரோபோ சங்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராகத் திகழ்ந்த திரு ரோபோ சங்கர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தீண்டாமை எனும் கொடிய நோயை ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவும், பொருளாதாரம் மேம்படவும் அயராது பாடுபட்டவருமான திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலை கிடைக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து அரும்பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பிரபஞ்சத்தின் தெய்வீக கட்டமைப்பாளராக வணங்கப்படும் பகவான் விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழாவைப் பக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் விஸ்வகுல மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கைவினைஞர்கள், கட்டடக் கலைஞர்கள், இயந்திர வல்லுநர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் என பல்வேறு கைவினை கலைஞர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ ஓம் விராட் விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழா, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது.
கலைத்திறன், திறமை மற்றும் படைப்பு உணர்வின் கொண்டாட்டமாகக் கருதப்படும் விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழா, தொழிலாளர்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும் விழாவாக அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டி, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமை, சாதியக் கொடுமைகள், சமுதாய பேதங்கள், பெண் அடிமைத் தனம் ஆகியவற்றை வேரோடு களைய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுயமரியாதை சுடரொளி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
நேபாள கலவரத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பாதுகாத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு செந்தில் தொண்டைமான் அவர்களின் மனிதநேயமிக்க செயல்பாடு மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
நேபாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கலவரமாக உருவெடுத்த நிலையில், தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்களை தன் உயிரைப் பணயம் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு செந்தில் தொண்டைமான் அவர்கள் காப்பாற்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வன்முறை வெறியாட்டத்தால் ராணுவக் கட்டுப்பாட்டையும் இழந்த நேபாளத்தில் வசிக்கும் மக்களும் நம்மில் ஒருவரே என்ற எண்ணத்தில் பொதுநலத்துடன் செயல்பட்ட திரு செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். @S_Thondaman -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சாதியக் கொடுமைகளை, சமுதாய பேதங்களை, பெண் அடிமைத் தனத்தை வேரோடு களைய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
On behalf of Amma Makkal Munnettra Kazagam (AMMK), I most respectfully extend my heartfelt birthday greetings to the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji.
Having taken charge as the Prime Minister for the third consecutive term, the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji is tirelessly striving to elevate our great nation to the stature of a global superpower.
I earnestly pray to the Almighty that the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, be blessed with abundant health, long life, and the strength to continue his dedicated service to the people of India.
@narendramodi @PMOIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய இளம் வீராங்கனை செல்வி வைஷாலி ரமேஷ் பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் (Candidates ) தொடருக்கு தேர்வாகியுள்ள கிராண்ட் மாஸ்டர் செல்வி வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் மென்மேலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட இந்நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். @chessvaishali -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு செலுத்தியதோடு, சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருந்து விளிம்பு நிலை மக்களுக்காக தொண்டாற்றிய திரு எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் அரும்பெரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், மக்கள் நல அரசுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆளுமை, தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த தென்னாட்டின் பெர்னாட்ஷா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று.
நாடக ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பத்திரிகையாளராக தன் ஈடு இணையற்ற எழுத்தாலும், உணர்ச்சி பொங்கும் பேச்சாலும் மக்கள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி, மனித சமுதாயத்தின் ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகத் திகழ்ந்த தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கும் தோழர் திரு மு.வீரபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் தமிழக மக்கள் நலன் சார்ந்த அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்திட திரு மு.வீரபாண்டியன் அவர்களை இந்நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா? - குறைவான விலையில் தரமான பருப்பு கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் தமிழகத்திற்குத் துவரம்பருப்பு கிலோ ஒன்று ரூ88.50க்கு வழங்க முன்வந்திருக்கும் பருப்பு நிறுவனங்கள் குஜராத்திற்கு ரூ.81க்கு வழங்குவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்திற்கு ரூ.81க்கு துவரம் பருப்பை வழங்கும் நிறுவனங்கள் தமிழகத்திற்கு மட்டும் அதே துவரம்பருப்பை அதைவிட கிலோ ஒன்றுக்கு ரூ.7.50 கூடுதலாக வைத்து ரூ.88.50க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
60 ஆயிரம் டன் அளவிற்கான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பருப்பு நிறுவனங்கள் கூறியிருக்கும் தொகைக்குப் பருப்பைக் கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பருப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி குஜராத் மாநிலத்திற்கு வழங்கும் அதே விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, தரமான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சமூக தீண்டாமையை அடியோடு அகற்றப் பாடுபட்டவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினமான இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனத் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை உலகமெங்கும் பறை சாற்றிய கவிஞரும், தன் எழுத்துக்களின் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வைத் தூண்டிய சுதந்திரப் போராட்ட வீரருமான மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுதினம் இன்று.
கவிஞராக, மொழிப் பற்றாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல்வேறு பரிமாணங்களிலும் தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை ஆகியவற்றை முன்னிறுத்தி காலத்தால் அழியாத புரட்சி கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சமூக தீண்டாமையை அடியோடு அகற்றப் பாடுபட்டவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனி இயக்கத்தைத் தொடங்கி, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய மாண்புமிகு திரு.சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்திய திருநாட்டின் வளர்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். @CPRGuv -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பீகாரில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய கோப்பை வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்களின் சாதனைப் பயணம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடரிலும் நீடிக்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முன்னாள் அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் அவர்களின் தாயார் திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தாயாரை இழந்துவாடும் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், இந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைகளை அழித்தொழித்த மாவீரருமான சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
போர்க்களத்தில் ஆங்கிலேய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததோடு, தாய் மண்ணையும், மக்களையும் காத்திட தன் உயிரையும் துறந்து வீரமரணமடைந்த தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் – தொடர்புடையவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை காவல்துறை தலைமையக வாயிலில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தியின் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவோ எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், அங்கு காவல் பணியில் இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்திற்குரியது.
காவல்துறையின் தலைமையகம் முன்பாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம், தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறைக்குமான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, திரு. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
"நியாயத்திற்கு ஒரு மூக்கையா" என பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்டவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராக மக்கள் பணியாற்றியவருமான உறங்காப்புலி திரு.P.K மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று...
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, தென் தமிழக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டதோடு, நீதிக்கும் நேர்மைக்கும் சிறந்த அடையாளமாக திகழ்ந்த திரு P.K மூக்கையா தேவர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம்.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.This media couldn't be displayed. See it on the original post. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அழிவில்லா செல்வமாம் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த இந்நாளில் கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொது அறிவு ஆகியவற்றையும் சேர்த்து போதித்து, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களின் சமுதாய மேம்பாட்டிற்கென இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணியை இந்நாளில் போற்றி கொண்டாடிவோம்.
#teachersday #teachersday2025 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று…
எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், தமிழறிஞர், அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதிமூச்சு வரை போராடிய செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்
பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் இந்த திருநாளில், மக்கள் அனைவரின் இல்லங்களில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் எனக்கூறி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மிலாது நபி வாழ்த்துகள்
அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை மிலாது நபியாக கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறருக்கு உதவும் உயர்குணம், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்று வாழ வேண்டும் போன்ற நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி உலகெங்கிலும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினமான இன்று, நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வு – ஏழை, எளிய மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @NHAI_Official -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு அகற்றும் வகையில் தமிழக மக்கள் மத்தியில் சுதந்திர வேள்வியை விதைத்த மாவீரர் பூலித்தேவர் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் கோலோச்சிய ஆளுமைமிக்கத் தலைவரும், பொதுவாழ்க்கையில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
ஜாதி, மத, இன பேதமின்றி மக்கள் நலனுக்காகவும், பொதுச்சேவைக்காகவும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்கள் மக்களுக்கும், நாட்டிற்கும் ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்து நிற்கும். @GK__Vasan -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் – சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் மட்டும் நிலவும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், சுமார் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதோடு மழலைக் குழந்தைகளின் ஆரம்பகால கல்வியும் ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்துவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்ற திமுகவின் 313வது தேர்தல் வாக்குறுதி இனியும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நிர்வாகத் திறனின்றி காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கால தாமதம் ஏற்படுத்துவதோடு, ஏற்கனவே அரசின் பல்வேறு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதோடு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேனி அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் படுகொலை – சட்டவிரோதச் செயல்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் சன்மானம் மரணம் தானா?
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையத்தில் கனிம வளக்கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தேனி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளை குறித்து பலமுறை தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியமே திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைக்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது.
மணல் கடத்தல் மற்றும் கனிமவளக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு புகார் அளிப்பவர்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையோ, திமுக அரசின் முழுநேர ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தலையும், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படும் கனிமவளங்களையும் தடுத்து நிறுத்தவோ, அது குறித்து புகார் அளித்தாலோ அதற்கான சன்மானம் மரணம் தான் என்பதையே அடுத்தடுத்து நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் தங்குதடையில்லாத வெற்றி நிச்சயம் என்பதோடு, துன்பங்களுக்குக் காரணமான வினைகள் நீங்கி, அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்க்கை அமையும் என்பது மக்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை ஆகும்.
வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானை போற்றி வணங்கிடும் இந்நாளில் அனைத்து மக்களின் சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் அடியோடு நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அன்பு மற்றும் கருணையின் உருவாய், ஏழை, எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவுவதையே அடிப்படைக் குணமாகக் கொண்ட மனிதம் போற்றும் புனிதர் அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே பிறந்து, தனது வாழ்நாள் முழுவதும் ஆதரவற்றவர்களை அரவணைத்து அன்பு செலுத்திய அன்னை தெரசா அவர்களின் சேவை மனப்பான்மையையும், தியாக உணர்வையும் அவர் பிறந்த இந்த நன்னாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.முதுநிலை தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ரேவதி ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பணியில் கடமை உணர்வுடன் ஈடுபட்டு தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரும் தங்களது கல்விப் பணியை மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் பத்மபூஷன் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்ததினம் இன்று.
திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துரைத்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம்.
@PremallathaDmdk @iVijayakant @dmdkparty2005 -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதா ? – விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் திமுக அரசின் திரைமறைவு தில்லுமுல்லு வேலைகள் கடும் கண்டனத்திற்குரியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கும் அனுமதியின் படி ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், கீழ்செல்வனூர், பூக்குளம், வல்லக்குளம், அரியக்குடி உள்ளிட்ட 20 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்கும் பணிக்கு அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைப்பதற்காக கடந்த மார்ச் மாதமே அனுமதி வழங்கிவிட்டு, அதனை மத்திய அரசின் புதிய அதிகாரப்பூர்வ சுற்றுச்சூழல்துறை இணையத்தில் பதிவேற்றாமல் பயன்பாட்டில் இல்லாத பழைய இணையதளத்தில் பதிவேற்றியிருப்பதன் மூலம் திமுக அரசின் தில்லுமுல்லு வேலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனவும், விவசாய பெருங்குடிகளையும், காவிரி படுகையையும் கண்ணை இமை காப்பது போல காப்போம் என வீரவசனம் பேசிவிட்டு திரை மறைவில் அதற்கான அனுமதியை கொடுத்திருப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆராய்ந்த பேராசிரியர் திரு சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழு, தன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்து மூன்று ஆண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை பொதுவெளியில் வெளியிடாமல் மூடி மறைப்பதும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் இனி எந்த விவசாயப் பகுதிகளிலும் இதுபோன்ற பணிகள் நடைபெறாத வகையில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய திரு.பாரிவேந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையான குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக தன்வாழ்க்கையை தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வியை உலகத்தரத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் திரு. பாரிவேந்தர் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தனது கல்விப் பணியையும், சமூகப் பணியையும் தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @PaarivendharTR -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 10 ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தளராத தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்தியாவின் தங்கமகள் இளவேனில் வாலறிவன் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை கண்ணகி நகர் அருகே மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு.
சென்னை கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
கண்ணகி நகர் மட்டுமல்ல எழில்நகர், பெரும்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் சேதமடைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தூய்மைப் பணியாளர் உயிரிழக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு என்ற கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி போராட்டத்தை கலைத்த திமுக அரசு, தற்போது தன் நிர்வாக அலட்சியத்தால் பறிபோன இந்த உயிருக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறது?
மேலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்ந்து, மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாதா ? – மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது.
விருதுநகர் அருகே மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களிடம் காது, மூக்கில் தங்கம் அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என வருவாய்த்துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள் ஏளனமாகப் பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, தன்னிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் ஒருவரிடம், அம்மனுவை வாங்கி அவரின் தலையிலேயே அடித்த புகாருக்குள்ளான அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள், மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களைத் தரக்குறைவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தற்போது காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கிடையாது என அமைச்சரின் மூலம் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என வாக்குறுதியளித்துவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், இலவச பேருந்து என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரைத் தரக் குறைவாக விமர்சிப்பதும், மனு அளிக்க வருவோரை மதிக்காமல் அவமதிப்பதும் திமுகவின் அடிப்படை குணமான ஆணவப் போக்கையும், அதிகாரத் திமிரையுமே வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழக மகளிரைத் தொடர்ந்து அவமதிப்பதையும், தரக்குறைவாக விமர்சிப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுகவினரை, ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போவது உறுதி என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – மீனவர்கள் தானே என்ற அலட்சியம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது நிச்சயம்.
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 60க்கும் அதிகமான மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதோடு, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வைத்திருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகத்தால் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, மீன்பிடி தொழிலும் அடியோடு முடங்கியிருக்கும் நிலையில், மீனவர்களின் போராட்டம் தானே என்ற அலட்சியப் போக்குடன் திமுக அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியாவின் முதல் நகராட்சி, உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி, தமிழகத்தின் தலைநகரம் எனப் பன்முக பெருமைகளோடு ஒட்டுமொத்த உலகையும் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுச் சிறப்புகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய சென்னை உருவான தினம் இன்று.
படிப்பிற்காகவோ, பணிக்காகவோ தன்னை நாடி வரும் அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையாக, ஏராளமான இளைஞர்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, தொழில் முனைவோர்களின் தொடக்கப்புள்ளியாகத் திகழும் சென்னை உருவான இந்நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் போற்றிக் கொண்டாடுவோம்.
#chennaiday -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தின் 21 அதிபரான கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாகப் போற்றி பழமையும், பெருமைமிக்க காசி மடத்தின் 21வது அதிபராக ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் சமூக மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்திருக்கும். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் கிளர்த்தெழுந்த முதல் சுதந்திரப் போரின் தளபதி, ஆங்கிலேயப் படைகளை தனியொருவராகச் சென்று வீழ்த்திய மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்த மாமன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத மாவீரராகவும் திகழ்ந்த ஒண்டிவீரனின் வீரத்தையும் துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கக்கோரிப் போராடிய போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
15வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் தற்போது வரை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் வேறு வழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 152வது தேர்தல் வாக்குறுதியான போக்குவரத்துப் பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றாத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஓட்டுநர், நடத்துநர் ஆட்சேர்ப்பு தொடங்கி அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு வரை போக்குவரத்துக் கழகங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, வாழ்நாளின் பெரும்பகுதியை போக்குவரத்துத்துறையில் பணியாற்றியே கழித்த ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்து பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தற்போதுவரை அவற்றை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே போராடிக் கொண்டிருப்பது திமுக அரசு நிர்வாகத்தின் படுதோல்வியையே வெளிப்படுத்துகிறது.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் மீது வன்முறையை ஏவிக் கலைத்துவிட்டு, உடனடி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிட்டு திமுக அரசு நடத்திய நாடகத்தை மதுரையிலும் அரங்கேற்ற நினைத்தால் அதற்கான எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையே இலக்காக நிர்ணயித்து இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @nsitharaman @nsitharamanoffc -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் மாண்புமிகு திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் குடியரசு துணைத் தலைவராகத் தேர்வாகி மக்கள் பணியைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CPRGuv -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களின் சிற்றன்னை திருமதி.செல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
சிற்றன்னையை இழந்துவாடும் சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @thirumaofficial -
TTV Dhinakaran reposted
Thol. Thirumavalavan
@thirumaofficial
எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார்என்பது
பெருந்துயரமளிக்கிறது.
பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.
அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை.
அம்மாவுக்கு எனது வீரவணக்கம்! -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு இல.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
கண்ணியமிக்கத் தலைவராகத் திகழ்ந்த மாண்புமிகு திரு.இல கணேசன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான், எனது என்ற பற்றை நீக்கி இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுவதோடு, கடமைகளைச் சரிவரச் செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் என்ற கீத உபதேசத்தை மனதில் நிலைநிறுத்தி மனிதகுலம் மேம்பட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
உலகம் போற்றும் ஒப்பற்ற நூலான பகவத்கீதையை அருளிய கிருஷ்ண பகவான் பிறந்த இந்நாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதிக்கக் கொடுமையிலிருந்தும் அந்நிய பிடியிலிருந்தும் இந்தியத் திருநாட்டை விடுவிப்பதற்காகவும், மக்களின் பிறப்புரிமையாம் சுதந்திரத்தை அடைவதற்கும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாட்டுப்பற்றையும், தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
நம் முன்னோர்கள் நமக்காகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதோடு, சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட இந்நாளில் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தீர்வு எட்டப்படாமலே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கிய திமுக அரசின் ஈவு இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக நடத்தி வந்த அறவழி தொடர் போராட்டம் தீர்வு காணப்படாமலேயே திமுக அரசின் காவல்துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
சென்னை மாநகரின் தூய்மையைப் பேணிக்காப்பதிலும், மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதிலும் பெரும்பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற திமுகவின் 285வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை ரிப்பன் மாளிகையின் வாயிலில் வாழ்வாதாரத்திற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவைத் தடுத்து நிறுத்தியதோடு, மாநகராட்சியின் கழிவறைகளைக் கூட பயன்படுத்த அனுமதி மறுத்த திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது ஆணவப்போக்கின் உச்சபட்சமாகும்.
அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கட்டாயப் படுத்தியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தேர்தலுக்கு முன்பாக வழங்கிய 285வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபூர்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது.
திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதோடு அவர் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். @rajinikanth -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உசிலம்பட்டி 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் – வைகை அணையிலிருந்து நிரந்தரமாகத் தண்ணீர் திறப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், வழக்கறிஞர்கள் என ஒட்டுமொத்த மக்களும் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் கால் நூற்றாண்டு காலம் போராடிப் பெற்ற 58 கால்வாய் திட்டத்தின் கீழ் வைகை அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பாதிக்கப்பட்டிருப்பதோடு, நிலத்தடி நீர் சரிந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தால் மட்டுமே 58 கால்வாய் மதகு பகுதியைத் திறக்க முடியும் என்ற நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவால் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்குத் தேவையான நீரைப் பெற பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, உசிலம்பட்டி விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் வைகை அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறப்பதோடு, ஆண்டுதோறும் உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பதற்கான அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து சாலை பராமரிப்பு பணிகளையும் தனியார் மயமாக்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, சாலைப் பணியாளர்களில் உயிர்நீத்தோர் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக எடுத்துக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து மேல்முறையீடு செய்து தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனில்லாத நிலையில், வேறு வழியின்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து பத்து நாட்களுக்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், மறுபுறம் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும்.
எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து எங்களது முழு ஆதரவைத் தெரிவித்தோம்.
12 நாட்களைக் கடந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, மேலும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnaduThis media couldn't be displayed. See it on the original post. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நிதி நெருக்கடியை காரணம் காட்டி அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பாடநூல்களை நிறுத்துவதா? – தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்று கடும் கண்டனத்திற்குரியது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு வருடந்தோறும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த தமிழ்ப் பாடநூல்கள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிதி நெருக்கடி எனக் கூறி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவால் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் நடத்தி வரும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழ் ஆட்சிக்காலம் நடைபெற்று வருவதாக மேடைதோறும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை கூட விலையில்லாமல் வழங்க மறுத்திருப்பது தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
முதலமைச்சரின் புகழ்பாடவும், அவர் செல்லும் இடங்கள் எல்லாம் விளம்பரம் செய்யவும் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்யும் போதெல்லாம் ஏற்படாத நிதி நெருக்கடி, அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் போது மட்டும் ஏற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் தொய்வை ஏற்படுத்தியிருக்கும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வழக்கம் போல அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தமிழ்ப் பாடநூல்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலைமுரசு நிறுவனருமான திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று.
தந்தையின் வழித்தடத்தைப் பின்பற்றி தமிழ் மீதும் தமிழக மக்களின் மீது அளப்பரிய அன்பு கொண்டு பத்திரிகை உலகின் ஜாம்பாவானாக திகழ்ந்த திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாக நீடிக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் – பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை வாயில் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் பத்தாவது நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் தூய்மையையும், மக்களின் சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, ஜனநாயக ரீதியில் நடைபெறும் அவர்களின் அறப்போராட்டத்தை பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி கலைக்க முயற்சிப்பதாக தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனோ பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, புயல், வெள்ளம் என அத்துனை பேரிடர்கள் காலத்திலும், தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் மக்களை காக்கும் மகத்தான பணியில் முன்களப்பணியாளர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது.
வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் தனியார் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு.இல.கணேசன் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @RajBhavanKohima @LaGanesan
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
பசுமைப் புரட்சியின் சிற்பி எனப் போற்றப்படக்கூடியவரும், உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்தவருமான வேளாண் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நாட்டின் முதுகெலும்பான வேளாண் உற்பத்தியிலும், ஆராய்ச்சியிலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்த விஞ்ஞானி திரு.எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களின் அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவா ? – சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை திடீரென குறைக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பல்கலைக்கழக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவர்களின் உயர்கல்விக்காகவும், எதிர்கால நலனுக்காகவும் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றும் பேராசிரியர்களும் அலுவலர்களும் தங்களுக்கான ஊதியத்தையே உரிய நேரத்தில் பெறமுடியாமல் ஒவ்வொரு மாதமும் போராடி வரும் நிலையில், தற்போது அந்த ஊதியத்தையும் குறைக்க முடிவு செய்திருப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கான பணப்பலன்களையும் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் ஒருபுறம் ஊதிய உயர்வு கேட்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வரும் நிலையில், மறுபுறம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, அப்பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு நிதியை ஒதுக்கி அங்கு நிலவிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சிக்கல்களைக் களையத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை - தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?
கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்த நபர், அங்குள்ள காவலர்கள் யாருக்குமே தெரியாமல் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மறைந்து கொண்டதாகவும், யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அளித்திருக்கும் விளக்கம் திரைப்படத்தில் வரும் கதைகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது.
காவல்நிலையங்களை நாடிவரும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவதும், விசாரணை எனும் பெயரில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளால் காவல்துறை தன் மீதான நற்பெயரை படிப்படியாக இழந்து வரும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட நபர் காவல்நிலையத்தில் வந்து தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? காவல் உதவி ஆய்வாளர் அறையில் தற்கொலை நடைபெறும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதோடு, காவல்நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே, காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதோடு, தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை – தன் துறையைச் சார்ந்த காவல் உதவி ஆய்வாளரைப் பாதுகாக்க முடியாத முதலமைச்சரால் பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும்?
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் மாந்தோப்பு காவலாளி படுகொலை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இளைஞர் வெட்டிக் கொலை எனக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புவதோடு, திமுக அரசின் மீதும் அதன் காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
எனவே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்களின் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவால் கேள்விக்குறியாகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் – தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை உள்ளிட்டவை கிடைக்காமலும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெற முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது, தூய்மைப் பணியை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கான பணி பாதுகாப்பும், ஊதியமும் கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 281 முதல் 285 வரையில் வாரம் ஒரு நாள் விடுமுறை, பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய திமுக, தற்போது தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் இளைக்கும் அநீதியாகும்.
வருடத்திற்கு ஒருமுறை அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போலப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்களுக்கு, வாழ்வாதாரத்திற்காக வருடந்தோறும் நடைபெறும் தங்களின் போராட்டம் தெரியவில்லையா எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தேசத்தின் விடுதலைக்காக இளம் வயதிலேயே போர் வீரராக உருவெடுத்து தன் இறுதி மூச்சு வரை ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாமன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுதினமான இன்று, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
சங்க காலத்தில் கொடையில் சிறந்து விளங்கிய கடையேழு வள்ளல்களில் ஒருவரும், கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான வல்வில் ஓரியின் பெருவிழா இன்று.
தனது வில் ஆற்றலாலும், ஈடு இணையற்ற கொடைத் தன்மையாலும் வரலாற்றில் எந்நாளும் நிலைத்து நிற்கும் வள்ளல் வல்வில் ஓரியின் புகழையும், பெருமையையும் போற்றிக் கொண்டாடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விடுதலைப் போரில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கிப் போராடிய மாவீரரும், சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை எனப் போற்றப்பட்ட மாமன்னருமான தீரன் சின்னமலை அவர்களின் நினைவுதினம் இன்று.
தேசத்தின் விடுதலைக்காக இளம் வயதிலேயே போர் வீரராக உருவெடுத்து தன் இறுதி மூச்சு வரை ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரத் தமிழர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் இந்நாளில் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகிய ஆளுமைகளின் பேரன்பிற்குரியவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் புதல்வர் திரு.மதிவாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.மதிவாணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின விவசாயி மர்ம மரணம் - விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு?
வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.மாரிமுத்து அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த ஜூலை 29ஆம் தேதி புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.மாரிமுத்து அவர்கள், குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் அறிவித்த வனத்துறை, தற்போது வனச்சரகர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருப்பது முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ளது.
மன தைரியமிக்க திரு.மாரிமுத்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும், விசாரணை எனும் பெயரில் வனத்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்திருக்கலாம் எனக்கூறி மலைக்கிராம பழங்குடி மக்களும், பல்வேறு அமைப்பினர்களும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்புவனம் அருகே கோயில் காவலாளி திரு.அஜித்குமார் அவர்கள் காவல் விசாரணை எனும் பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, உடுமலை அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, திரு.மாரிமுத்து அவர்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் பார்க்கிங் திரைப்பட குழுவினருக்கும், அத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த உறுதுணை நடிகர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், வாத்தி திரைப்படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு.ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட தேசிய விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களின் திரைப்பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
@gvprakash @ImRamkumar_B @sinish_s @Sudhans2017 @PassionStudios_ @SoldiersFactory -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரிப்பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் – விரிவான விசாரணையின் மூலம் மாணவர்களின் மரணங்களில் மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் இயங்கி வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
கடந்த ஜூன் மாதம் இதே அரசு மாதிரிப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு மாணவரும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் சந்தேகத்தை வரவழைக்கிறது.
கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற இரு மர்ம மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பள்ளி நிர்வாகமோ, அது குறித்து எந்தவித விசாரணையையும் நடத்தாமல் மாணவர்களின் அடுத்தடுத்த மர்ம மரணங்களைத் தற்கொலை எனக்கூறி மூடிமறைக்க முயல்வதாகப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சொந்த தொகுதியில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அதிநவீன வசதிகளுடன் கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்ட மாதிரிப் பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களையும் பதற்றமடையச் செய்திருக்கிறது.
எனவே, துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர்களின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, மறைந்திருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதோடு, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலம் – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் நிரப்பி பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வரை கடைமடைப் பகுதிக்கு வரவில்லை எனத் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களின் வேதனையைப் பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் 50 நாட்களைக் கடந்தும் கடைமடைக்கு வராமல் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், கடைமடை பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையைத் திறக்கும் முன்பு காவிரி டெல்டா பகுதிகளின் கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் முறையாகத் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிர்வாகத் திறனற்ற திமுக அரசால், நடப்பாண்டிலும் டெல்டா பாசன விவசாயிகள் முழு அளவிலான சாகுபடி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, காவிரி டெல்டா கிளை ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துவதோடு, வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு,குளங்களில் சேமித்து பாசனத்திற்குத் திருப்பி விடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்க முடியாத திமுக அரசு, மக்களைத் தேடி சிகிச்சை அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையானது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிக்க அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கும் நிசார் செயற்கைக் கோள் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விதமான தரவுகளை வழங்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன். @isro
#nisar #gslvf16 #isro #nasa -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கள்ளர் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு - கள்ளர் சமூக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.
கள்ளர் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி விடுதி எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் முன்னாள் மாணவர் சங்கத்தினர், கள்ளர் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கள்ளர் சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், எதிர்கால நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதும், விடுதிகளை சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்வதும் அதன் தனித்துவத்தை இழக்கும் என்பதோடு அவர்களின் வாழ்வியல் நடைமுறையை மாற்றும் நடவடிக்கையாக அமையும் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நூற்றுக்கும் அதிகமான அரசு கள்ளர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர முன்வராத திமுக அரசு, அவற்றின் பெயரை மாற்றத் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்திருப்பது அச்சமூக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேதமடைந்த கட்டடங்கள், தரமற்ற உணவு, சுகாதாரமற்ற இருப்பிடம் என அவலமாகக் காட்சியளிக்கும் விடுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாத திமுக அரசு, விடுதிகளின் பெயர்களை மட்டும் சமூகநீதி விடுதிகள் என மாற்றுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என மாணவ, மாணவியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, கள்ளர் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குவதோடு, அவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் (FIDE) ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அவர்களுக்கும் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் கோனேரு ஹம்பி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் உலக செஸ் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை படைத்திருக்கும் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
@DivyaDeshmukh05
@humpy_koneru -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான சோழப் பேரரசர்களுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் – வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்ததோடு, மாமன்னர்கள் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எதிர்கொண்ட போர்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடிய மாமன்னர் ராஜராஜசோழன், இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான பேரரசர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் பெருமையையும், புகழையும் போற்றிக் கொண்டாடும் வகையில் சிலை அமைக்க வேண்டும் என்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நீண்ட கால கோரிக்கையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பின் மூலம் நிறைவேறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய குடியரசு முன்னாள் தலைவரும், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஆகிய முப்பெரும் துறைகளில் முத்திரை பதித்த விஞ்ஞானியுமான பாரத ரத்னா ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே இலக்காக நிர்ணயித்து தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதோடு, இளைஞர்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் நாட்டு மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு - காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ?
சென்னை எழும்பூரில் கடந்த 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத போதைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு .ராஜாராமன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜாராமன் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், குற்றவாளிகளை இதுவரை கண்டறிய முடியாத காவல்துறையால், தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பட்டப் பகலில், வீடுகளில், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், காவல்நிலையங்களுக்கு அருகிலேயே அன்றாடம் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.
எனவே, காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜாராமன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, தமிழகத்தின் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனை, கூலிப்படைகளின் அராஜகம் ஆகியவற்றை அடியோடு ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது வாகனம் ஏற்றி கொலை முயற்சி – திருட்டுகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவருவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தான் திராவிட மாடலா ?
ராமநாதபுரம் மாவட்டம் செட்டியத் தெருவில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது அடையாளம் தெரியாத கும்பல் வாகனத்தை ஏற்றி கொலை முயற்சி செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினருக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மட்டுமல்லாது, மணல் திருட்டுகளும், கனிமவளக் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாகிவிட்ட தமிழகத்தில் அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகிவருகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு தொடர்பாக 2023 ஆம் ஆண்டு 7,576 வழக்குகளையும், 2024 ஆம் ஆண்டு 11,085 வழக்குகளையும் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வின் மூலம் பதிவு செய்திருக்கும் திமுக அரசு, அதனை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான அசாதாரண சூழலையை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற சட்டவிரோத சிறுநீரகத் திருட்டை தடுக்க முடியாத திமுக அரசு, அதனை முறைகேடு எனக்கூறி சமாளித்ததை போல, பொதுவிநியோகத் திட்டத்தில் நடைபெற்றிருக்கும் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு ஏதேனும் வினோத விளக்கத்தை அளிக்கப்போகிறதா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, ரேஷன் அரிசி திருட்டை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்காக விநியோகிக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு சம்பவத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசமின்றி அரசியல் களத்தில் பயணிக்கும் மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @drramadoss -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா ? – பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கி வரும் உழவர் சந்தையின் கழிவறை ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்யும் நியாயவிலைக்கடைகளில் நிலவும் இடவசதியின்மையைக் காரணம் காட்டி கழிவறையில் அரிசி மூட்டைகளை அடுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, தரமற்ற பொருட்கள் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் நியாயவிலைக்கடைகள் மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழக்கச் செய்திருக்கிறது.
திமுக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், துளியளவும் சுகாதாரமற்ற கழிவறையில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் இருக்கும் அரிசியைச் சமைத்து உண்பார்களா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? என்ற அடுக்கடுக்கான கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.
எனவே, ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்குச் சுகாதாரமான பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும் தலைசிறந்த கண் சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ திரு.நம்பெருமாள் சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
மதுரையில் எளிமையாகத் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையை உலகளவில் சிறந்த மருத்துவமனையாக மாற்றியதில் அளப்பரிய பங்காற்றிய மருத்துவர் திரு. நம்பெருமாள் சாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் 309வது வாக்குறுதியாக வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
கவன ஈர்ப்பு, அடையாளம், பணி புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், சாலைமறியல் என அனைத்துவிதமான போராட்டங்கள் நடத்தியும், செவிசாய்க்காத திமுக அரசால், வேறுவழியின்றி 72 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அக்குழு ஆலோசனை நடத்தியதாகவோ, அரசு ஊழியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது போலத் தமிழக அரசு நாடகமாடி வருவது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.
எனவே, இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் எனக் காரணங்களை அடுக்கி காலத்தைத் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்பவும், மக்கள் பணியைத் தொடரவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @CMOTamilnadu @mkstalin
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான திரு.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
திரு.அச்சுதானந்தன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் சக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்தியத் திரையுலகின் பல்கலைக்கழகமாக விளங்கியவரும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்தவருமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுதினம் இன்று.
தனது உடல்மொழியாலும், உணர்வுப்பூர்வமான வசன உச்சரிப்பாலும் நாட்டு மக்கள் மனதில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளின் வாயிலில் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதா? - திமுகவின் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகத்திற்கு மக்கள் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைப்பது உறுதி.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவரணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை மாணவர்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
உறுப்பினர் சேர்க்கை எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? இலவச பேருந்தில் தானே பயணம் செய்கிறீர்கள்? என மிரட்டி ஆதார் மற்றும் தொலைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்ட திமுகவினர், தற்போது கல்லூரிகளின் வாயிலில் நின்று மாணவர்களிடம் துண்டறிக்கை விநியோகிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
உதவிப் பேராசிரியர்கள் தொடங்கி முதல்வர்கள் வரை கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பிடவும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திடவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கை விநியோகிப்பதும், அவர்களை திமுகவில் இணைக்க முயற்சிப்பதும் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
கட்சிக் கொடியுடன் கல்லூரி வாயில்களை மறித்து கும்பலாக நிற்கும் திமுகவினரைக் கடந்து செல்லவே அச்சப்படுவதாக மாணவ, மாணவியர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவினரின் இத்தகைய செயல்பாடுகள் கல்விக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பது முதலமைச்சருக்குத் தெரியவில்லையா ?
ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று மிரட்டினாலும், கல்லூரி வாயிலில் நின்று கூவிக்கூவி துண்டறிக்கை வழங்கினாலும் திமுக ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக மக்கள் அதற்கான பாடத்தை வரவிருக்கும் தேர்தலில் புகட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் கூறிக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்களின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரருமான திரு.மு.க.முத்து அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி வருத்தமளிக்கிறது.
திரு.மு.க.முத்து அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்?
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.
எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நேர்மையாகப் பணியாற்றுவதால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகார் - காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசுதான் இந்த நெருக்கடியா?
காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றுவதால் தாங்க முடியாத அளவிற்கு நெருக்கடிக் கொடுப்பதாக உயர் அதிகாரிகள் மீது மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தெரிவித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறையின் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கு நடைபெற்ற சட்டவிரோத மதுவிற்பனைகளைத் தடுத்து நிறுத்தியதோடு, அச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைத்த நேர்மையான அதிகாரியின் வாகனத்தைப் பறித்து அவருக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பந்தோபஸ்து எனும் பெயரில் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அலைக்கழித்திருப்பதோடு, தான் பயன்படுத்தி வந்த வாகனத்தையும் திட்டமிட்டுப் பறித்ததில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி அரசின் உளவுத்துறை உயர் அதிகாரிகள் வரை தொடர்பிருப்பதாகத் திரு.சுந்தரேசன் அவர்கள் தனக்கு துறைரீதியாக ஏற்பட்ட அழுத்தங்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் மகத்தான பணியைச் செய்யும் காவல்துறையில் உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படும் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தும், அதற்கு நேர்மாறாக பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயலும் அதிகாரிகளையும் உயர் அதிகாரிகளின் வழியாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் திமுக அரசு சமூக விரோதிகளுக்கான அரசு என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வகையில், காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாகப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – போராடுவோரை அடக்கி ஒடுக்குவதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தைத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செலுத்த வேண்டும்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பத்தாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத திமுக அரசால், சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாத திமுக அரசு, அதற்காகப் போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதோடு வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் மூலம் வாக்குறுதியை அளித்த திமுக அரசு, ஆட்சி நிறைவடையும் தருவாயிலும் அவர்களை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த பணிநிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களைப் புகழ்வதாகக் கருதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவுபடுத்துவதா? – கர்ம வீரர் காமராஜர் அவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பொதுவாழ்வில் தூய்மைக்கும், அரசியலில் நேர்மைக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, எளிமையின் சின்னமாகவே வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, குளிர்சாதன வசதியின்றி தூங்க மாட்டார் என திமுக துணைப் பொதுச்செயலாளர் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதோடு, உயிர் பிரியும் நேரத்தில் மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களின் கையைப் பற்றிக் கொண்டு நாட்டையும், ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனப் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கூறியதாகத் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது வழக்கமாக திமுக அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளின் உச்சபட்சமாகும்.
யாருக்கும் தலை வணங்காமல், யாரையும் தலைவணங்க விடாமல் தன் இறுதி மூச்சு வரை தனித்தன்மையுடன் வாழ்ந்த மாபெரும் தலைவரை, மாற்றுக்கட்சியினரையும் மதிக்கும் பண்பாட்டைக் கற்றுத்தந்த தனிப்பெரும் ஆளுமையை, சிறுமைப்படுத்தும் திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தமிழக மக்கள் எவரும் ஏற்க மாட்டார்கள்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மக்களின் மத்தியில் வீரத்தையும், உறுதியையும் விதைத்து அவர்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் காமராஜர் அவர்கள் குறித்த அநாகரீகமான பேச்சுக்கு, வருத்தமோ மன்னிப்போ கேட்காமல், விவாதப்பொருளாக்காமல் கடந்து செல்ல வேண்டும் எனத் திரு. திருச்சி சிவா அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுகவினரின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழகத்தில் தன் கால்தடம் படியாத இடமே இருக்க முடியாது எனச் சொல்லும் அளவிற்குப் பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து, காடு, மேடு எனக் கிடைக்கும் இடங்களில் படுத்து உறங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பத்து வயது சிறுமி – புகார் வழங்கி ஐந்து நாட்கள் கடந்தும் குற்றவாளியைக் கைது செய்ய முடியாதது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாட்களே இல்லை என்ற நிலையில் குற்றச்சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொள்ளும் திமுக அரசால், தற்போது பட்டப்பகலில் மேலும் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் கொடுமை அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய திமுக அரசும், அதன் காவல்துறையும் முற்றிலும் செயலிழந்து இருப்பதன் விளைவே, குற்றம் அரங்கேறி ஐந்து நாட்களைக் கடந்தும், பள்ளிச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளியைக் கண்டறிய முடியாத சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கொடூர மனம் படைத்தவர்களும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில், நாள்தோறும் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் பதுங்கி பதுங்கி வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு திமுக அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
எனவே, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபரைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் – நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கிழிந்த நிலையில் இருக்கும் மெத்தைகளால் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் மலைபோல குவிந்திருக்கும் மருத்துவக் கழிவுகளால் நிலவும் சுகாதார சீர்கேட்டால், அம்மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் புதுவகை நோய்களுடன் திரும்பிச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிகளவிலான பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழக்கூடிய கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையின் தற்போதைய அவல நிலை அங்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப்பணியாளர்கள், மருந்துகள் தட்டுப்பாட்டால் தனியார் மருந்தகங்களை நாடும் பொதுமக்கள், போதிய படுக்கைகள் இல்லாததால் தரையில் படுக்கும் நோயாளிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள், தமிழக சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
எனவே, சுகாதாரத்துறையில் முன்னணி மாநிலம் தமிழகம் என்ற வெற்று விளம்பரத்தை இனியாவது ஓரங்கட்டி வைத்துவிட்டு, மருத்துவமனைகளின் அவல நிலையை உணர்ந்து அங்கு நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தட்டுப்பாட்டையும், அடிப்படை வசதிகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TNDPHPM -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினமான இன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும் SRM குழுமத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. ரவி பச்சமுத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி மற்றும் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வரும் திரு.ரவி பச்சமுத்து அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண நலத்தோடும் கல்வி மற்றும் மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @iRaviPachamuthu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தாய்மொழியாம் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தமிழ் மொழிதான் தமிழர்களின் அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்து, தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி பேராசிரியராக, சமய சொற்பொழிவாளராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல்வேறு நிலைகளில் தமிழுக்காகவே வாழ்ந்த மறைமலை அடிகளாரையும், அவர் கொண்டிருந்த தமிழ்ப்பற்றையும் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்து, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திரைப்பட நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அருமை நண்பர் திரு.சரத்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.சரத்குமார் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது கலைப்பணி மற்றும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @realsarathkumar -
TTV Dhinakaran
@TTVDhinakaran
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி தாக்கியதில் சிறை தலைமைக் காவலர் படுகாயம் - புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், அங்குக் கண்காணிப்பு பணியிலிருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே புழல் சிறையில் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எழுந்த புகாரைக் கண்டுகொள்ளாத சிறைத்துறையால் தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருக்கும் அபரிவிதமான சலுகைகளே இதற்குக் காரணம் எனச் சிறைக்காவலர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.
பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி அதற்கான தண்டனையை அனுபவிக்கப் புழல் சிறைக்கு வரும் கைதிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாகச் சுற்றித் திரிவதால், அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நாங்கள் கைதிகள் போல அடைக்கப்பட்டிருப்பதாகச் சிறைக்காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சிறைத்துறை மீது எழுந்திருக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு – தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மும்பைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சரக்கு ரயிலில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகை திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட ரயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @RailMinIndia @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதல்வன் திரு.லட்சுமணன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய பாரா கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடின பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் திரு.லட்சுமணன் அவர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசுப்பள்ளி மாணவர்களை மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதியின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக புகார் எழுந்துள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து கல்வி பயில்வதை பார்க்கும் போது ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அடிப்படை வசதிகள் தொடங்கி ஆசிரியர்கள் பற்றாக்குறை வரை அரசுப்பள்ளிகளில் நிலவும் அவல நிலையில் மாணவர்கள் ஒருபுறம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித்துறை விளம்பரம் செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
எனவே, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அரசுப்பள்ளிகளின் உண்மை நிலையை அறிந்து, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்த்து போராடி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வீரரும், காட்டாலங்குளத்து மாமன்னருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்ததினம் இன்று.
தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடி வீரமரணமடைந்த மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
TTV Dhinakaran
@TTVDhinakaran
தலைமைக் கழக செய்தி வெளியீடு: வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் - கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய பகுதிநேர ஆசிரியர் வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் மரணம் - குடும்பத் தலைவரை இழந்து நிர்கதியில் நிற்கும் ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியது திமுக அரசின் கடமை.
பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சாலை விபத்தில் மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஆசிரியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ், ஊக்கத்தொகை, மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவித சலுகையுமின்றி பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்ற தொடர்ந்து மறுத்துவருவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி, தையல், கணினி அறிவியல் என பல்வேறு பாடங்களை கற்பித்து மாணவர்களின் தரத்தை உயர்த்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால், தொடர் போராட்டங்களையும், ஆசிரியர் ஒருவரின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம் என சக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், பணி நிரந்தரம் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காத காரணத்தினால், தற்போது உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் மறைவுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும், பணப்பலன்களும் இன்றி அவரது குடும்பம் நிர்கதியில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
எனவே, சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை மனசாட்சியோடு அணுகி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழகத்தில் தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும் - நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏழை, எளிய, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட நியாயவிலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவோ, ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பது விளம்பரத்திற்காக உதவுமே தவிர மக்களுக்கு முழுமையான பயனை தராது.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 236வது வாக்குறுதியான பல துறைகளின் கீழ் உள்ள நியாய விலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும், 239வது வாக்குறுதியான மானிய விலையில் மூன்று LED பல்புகள் விநியோகம் செய்யப்படும், 240 வது வாக்குறுதியான சர்க்கரையின் அளவு உயர்த்தப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் போன்றவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் தற்போது வீடுவீடாக ரேசன் பொருட்கள் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் தலைப்பில் ஊர் ஊராக பெட்டி வைத்து பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்களின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில், தற்போது அடுத்த தேர்தலை மையமாக வைத்து ”உங்களுடன் ஸ்டாலின்” எனும் பெயரில் பெறப்படும் மனுக்களுக்கு மட்டும் எப்படி தீர்வு கிடைக்கும் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, இனியும் நாள்தோறும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதையும், அதற்கென பலகோடி ரூபாய் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதையும் நிறுத்திவிட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 60 சதவிகிதம் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
பாடப்புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை பாதிப்பதோடு, வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்பிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் தொடங்கி பேராசிரியர்கள் வரை நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, காலியாக இருக்கும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பணி நிரந்தரம் கோரி ஜனநாயக ரீதியில் போராடும் பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதா? – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், இசை, உடற்கல்வி மற்றும் கணினி பாடங்களை பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் ஏதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்த பின்பும் அவற்றை நிறைவேற்ற மறுப்பதும், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதும் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.
தேர்தலுக்கு முன்பாக ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் தலைப்பில் பரப்புரை மேற்கொண்டு, அங்கு பெறப்படும் மனுக்களுக்கு நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்ற தற்போதைய முதலமைச்சரின் பொய்யான வாக்குறுதியை நம்பி மனு அளித்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் பூரண உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கேட் கீப்பரின் கவனக்குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்திருக்கும் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்தி இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறையை வலியுறுத்துகிறேன். @RailMinIndia -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திமுக அரசின் அலட்சியப்போக்கால் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்திருக்கும் மா விவசாயிகள் – பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்குவதோடு மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை திமுக அரசு நிர்ணயிக்க வேண்டும்.
தமிழகத்தில் மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டில் நியாயமான விலை கிடைக்காததாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிவடைந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களாலும் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டை சந்தித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகம் திரும்பிய பின்னரும் மா பிரச்னைக்கு தீர்வு காணப்படாதது விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து அம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அறிவித்திருக்கும் நிலையில், திமுக அரசும், அதன் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் மா உற்பத்தியை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆயிரக்கணக்கான மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றம், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மா விவசாயத்தை பாதுகாக்கவோ, உரிய இழப்பீடு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கால் நடப்பாண்டில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை பின்பற்றி தமிழகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக அறிவிப்பதோடு, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலைக்காக எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வழக்கறிஞராக, அரசியல்வாதியாக, சமூக சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக பன்முகத்தன்மை கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஆற்றிய அரும்பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனரும் மூத்த தமிழறிஞருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழுணர்வை உலகம் முழுவதும் பரப்ப அரும்பாடுபட்ட செந்தமிழ்க் கவிமணி வா.மு.சேதுராமன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஊழியர்கள் பற்றாக்குறையால் நடப்பாண்டில் மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடல் - மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவையை கேள்விக்குறியாக்கிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களால் நடப்பாண்டில் மட்டும் சென்னை, கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
குழந்தைகளின் முன்பருவக்கல்வியோடு அவர்களின் முழுமையான வளர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 28 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல அங்கன்வாடி மையங்களில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் உணவு தயாரிப்பது, கர்ப்பிணி பெண்களின் கையேடுகளை பராமரிப்பது என அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு குழந்தைகளின் முன்பருவக்கல்வியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையையும் உருவாக்கியுள்ளது.
எனவே, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் நிலவும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மற்றும் தரமான ஊட்டச்சத்து உணவு அங்கன்வாடி மையங்களில் முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய தேசத்தின் தலைசிறந்த ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவரும், மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை எத்தகைய நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியவருமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இன்று.
அளவு கடந்த அறிவையும், மன வலிமையையும் கொண்டு, ஈகை குணத்திற்கும் தலைமைப் பண்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் விரும்பிய ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சிப்காட் விரிவாக்க திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
திருவண்ணாமலையில் விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நில எடுப்பு அலுவலகத்தில் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, மணிப்புரம் என 12 கிராமங்களை உள்ளடக்கிய விளைநிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறுத்தி காவல்துறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.
தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 43வது வாக்குறுதியாக, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படாது என உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு உயிரை விட்டாலும் விடுவோம் எங்களின் விளைநிலத்தை விட்டுத்தரமாட்டோம் எனக்கூறும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை ஏவியிருப்பது அவர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் ஆகும்.
எனவே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சேலம் அருகே செம்மண் கடத்தலை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி, வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24*7 (@NewsTamilTV24x7) செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் சேலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் சர்வசாதாரணமாக நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை மணல் கடத்தல் கும்பல் தாக்கும் அளவிற்கான துணிச்சலை உருவாக்கியுள்ளது.
சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க முயலும் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி போராடிய பொதுமக்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி அரங்கேறும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதன் மூலம் பறிபோகும் அப்பாவி உயிர்களையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி போராடும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே, பொதுமக்களை பார்த்து ”ஒழுங்காக இருந்துக்கோ இல்லைனா வேறு மாதிரி ஆகிவிடும்” என மிரட்டும் தொனியில் பேசியிருப்பது தமிழகத்தில் சமூக விரோதிகள் மட்டுமல்ல காவல்துறையினரையும் பார்த்து பொதுமக்கள் அச்சப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திடும் என நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிடும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஒருவரே பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்கிட வேண்டும் எனவும், பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் தங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட தேவையான அறிவுரையை வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தலைமைக் கழக அறிவிப்பு:
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்புவனம் கோயில் காவலாளி திரு.அஜித்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும், விசாரணை எனும் பெயரில் காவல்நிலையங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 04.07.2025 வெள்ளிகிழமையன்று மாலை 4 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- தலைமைக்கழகம்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு – டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்கிறதா திராவிட மாடல் திமுக அரசு?
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கிவிட்டதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.சிவக்குமார் அவர்கள் தெரிவித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எங்களின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என திமுக அரசு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான நிலம் கணக்கீட்டு பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது.
கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி எந்த ஒரு இடத்திலும் புதிய அணையை கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்திய பின்னரும் சட்டவிரோதமாக மேகதாது அணையை கட்டியேத் திருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப்பெற முடியாத திமுக அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.
கர்நாடக மாநில முதலமைச்சரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஓடோடிச் செல்லும் முதலமைச்சர், தமிழகத்திற்கு வருகை தரும் கர்நாடக மாநில துணைமுதலமைச்சரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதலமைச்சர், தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார்? என்ற கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்பதோடு, அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தமிழக தொழில்துறை கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு - தொழில் நிறுவனங்களையும் அதனை சார்ந்திருக்கும் தொழிலாளர்களையும் முடக்கும் மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் பெரிய கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 3.16 சதவிகிதத்திற்கு குறையாமல் உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை, போர்க்கால அடிப்படையில் தடையற்ற மின்சாரம், மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு என தேர்தலுக்கு முன்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வால் மட்டும் ஏராளமான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது தொழில்துறையை முற்றிலும் முடக்கும் செயலாகும்.
அண்டை மாநிலங்கள் அனைத்தும் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், தமிழக அரசோ மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி தொழில்முனைவோரை தமிழகத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டிருப்பதாக தொழில்துறை கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுவதன் மூலம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மென்மேலும் உயர்ந்து சாமானிய பொதுமக்களை கூடுதல் சிரமத்திற்கு உள்ளாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தொழில்துறையினரை நேரடியாகவும், பொதுமக்களை மறைமுகமாகவும் பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும் என மின்சாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் 7 பேர் பலி – பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனிக்குழுவை ஏற்படுத்தி விபத்துக்களை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தனியார் தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிப்பதற்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுமே அடுத்தடுத்த விபத்துகளுக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கும் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய மாவட்ட நிர்வாகமும், திமுக அரசும் அதற்கான எந்தவித முயற்சியையும் முன்னெடுக்காததன் விளைவு தற்போது 7 அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராத வகையில் தனி கண்காணிப்புக்குழுவை உருவாக்கி பட்டாசு ஆலைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்வதோடு, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எல்லை தாண்டியதாகக் கூறி கடந்த இரு தினங்களில் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது – இலங்கை கடற்படையினரின் தொடர் அராஜகத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு .
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை மன்னார் வடக்கு கடற்பரப்பு அருகே எல்லை தாண்டியதாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் படகையும் பறிமுதல் செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று முன் தினம் இதே ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 7 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் ஒருபுறம் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாவதும், மறுபுறம் கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு கைது சம்பவத்தின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதோடு தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் எந்தவித தீர்வும் கிடைக்காது என்ற மனநிலைக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இனியும் இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடராத வகையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கும், அராஜகத்திற்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @MVenkaiahNaidu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணிக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நோயாளிகளின் நல்வாழ்வுக்காக நேரம், காலம் பார்க்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தகுதிக்கேற்ப ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், மருத்துவமனைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நடப்பாண்டிலாவது நிறைவேற்றித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பின் மூலம் ஏறக்குறைய ரூ.200 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் – விதிகளை மீறிய அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக்குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
நீதிமன்றம் மூலமாகவோ, மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமாகவோ குறைக்கப்படும் வரியை, தன்னிச்சையாக குறைத்திருப்பதோடு, வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் கடவுச் சொற்களும் (Password) முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனைத்து வரிவிதிப்புகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெற்றிருக்கும் இந்த வரிக்குறைப்பு முறைகேடு திமுகவின் அடிப்படை குணமான விஞ்ஞான ஊழலை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகியுள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் – திரைப்படங்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் தன் ஆட்சியில் தொடரும் காவல் மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய காவல்துறை, விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டு மிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வதே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ?
ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு இல்லை என்றாலும், காவலர்கள் பற்றாக்குறை, அளவுக்கு அதிகமான பணிச்சுமை, தீராத மன அழுத்தம் ஆகியவை காவலர்களுக்கு உட்பட்ட அதிகாரத்தை மீறுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என மேடையில் பேசுவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதாமல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு உணவு உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
நாடு முழுவதும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவிற்கு ஏற்ப வரி விதிக்கும் முறையை செயல்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் மத்திய நீர்வளத்துறையின் அறிவிப்புக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
திமுக அரசின் கூட்டணி தர்மத்தால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தடி நீரின் அருமையையும், அவசியத்தையும் மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயியும் நன்றாக அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தி வரும் நிலையில், நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.
ஏற்கனவே, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து இன்னல்களை சமாளிக்க முடியாமல் தமிழக விவசாயிகள் தவித்து வரும் நிலையில், தற்போது நிலத்தடி நீருக்கும் வரி என்பது அவர்களை விவசாயத்தை விட்டே வெளியேற்றக் கூடிய ஆபத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உணவு உற்பத்தி எனும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நீர்வளத்துறையை வலியுறுத்துகிறேன்.
@DoWRRDGR_MoJS @CRPaatil -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தனி உதவியாளராக பணியாற்றிய திரு.மகாலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.மகாலிங்கம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சை வடக்கு வீதியில் இயங்கிவரும் குடோனில் இருந்து 15 டன் போலி உரம் பறிமுதல் - விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை.
தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வீதியில் இயங்கிவந்த குடோனில் இருந்து 15 டன் போலி உரம் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் போலி உர விற்பனை விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்லில் தொடங்கி பூச்சிமருந்து, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வரை நிலவும் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்தியே தனியார் நிறுவனங்கள் போலி உரங்களை தயாரித்து விற்பனை செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே, மழை,புயல், வெள்ளம்,வறட்சி, விளைச்சல் பாதிப்பு என பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலும், தூர்வாரப்படாத வாய்க்கால்கள், கடைமடை வரை வந்து சேராத தண்ணீர் போன்ற அரசு நிர்வாகத்தின் அலட்சியங்களுக்கு மத்தியிலும் குறுவை சாகுபடியை தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது அவ்விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்திலும் முறைகேடு கண்டறியப்பட்டிருப்பது விளைச்சலை பாதிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, தஞ்சாவூரில் போலி உரம் தயாரித்து விற்பனை செய்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட அளவில் குழு அமைத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் உரத்தின் தரத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் - பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
திருப்பூர் மாவட்டம் உடுமைலையை அடுத்துள்ள காரத்தொழுவில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் இரவு, பகலாக சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையையும், பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசால், அரசுப்பள்ளிகள் மதுபானக்கூடங்களாக மாறிவருவதோடு, அதனை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதன் உச்சபட்சத்தை அடையும் என்பதற்கு நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களே சாட்சியாக இருக்கும் நிலையில், தற்போது அரசுப்பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அளவிற்கு மெத்தனப்போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பெட்ரோல் ஊற்றி தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியருக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வதோடு, பள்ளி வளாகத்தில் மது அருந்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்காசியில் மாதிரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் – பெற்றோர்கள் புகாருக்கு பின்பும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.
தென்காசி மாவட்டம் அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழுகிய முட்டைகளும், தரமற்ற உணவும் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ வேண்டிய அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற உணவை விநியோகித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதோடு, அவை தயாரிக்கும் முறையும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் தட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, என அடுக்கடுக்கான புகார்களுக்கு உள்ளாகி வரும் அரசுப்பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது அப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்குவதோடு, அவர்கள் பயிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பதவி உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பாதுகாப்பு கோரி நடைபெறும் வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு – வருவாய்த்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.
பதவி உயர்வு, பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நில உடமையில் தொடங்கி சமூக பாதுகாப்பு, பல்வேறு விதமான சான்றிதழ் என நாள்தோறும் நாடக்கூடிய வருவாய்த்துறையின் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு வேண்டிய பல்வேறுவிதமான சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மணல் கொள்ளையில் தொடங்கி பல்வேறு வகைகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயல்களை தடுக்க முற்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான தொடர் கொலைவெறித்தாக்குதல் சம்பவங்களுக்கு தீர்வு காண முடியாத திமுக அரசால், தற்போது தங்களுக்கென பணி பாதுகாப்புச் சட்டம் கோரி அரசு ஊழியர்களே போராடும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என வருவாய்த்துறை கூட்டமைப்பினர் அறிவித்திருக்கும் நிலையில், பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுவதோடு, அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பூரில் கடைமடைக்கு நீர் வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
பரம்பிகுளம் – ஆழியாறு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வழங்க வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதியில் கடைமடையாக உள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததன் விளைவே, கால்நடைகளோடும், விவசாய உபகரணங்களோடும் விவசாயிகள் மறியலில் ஈடுபடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும், கடைமடை பாசனத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகளின் மீது காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் நலனை காக்கிறோம் எனும் பெயரில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளின் அனுமதியின்றி விளைநிலங்களை கையகப்படுத்துவதையும், தடுக்க முற்படும் விவசாயிகளின் மீது அடக்குமுறையை ஏவுவதையுமே வாடிக்கையாக கொண்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தேவையான தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திமுக ஆட்சியமைந்த பின்பு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் சரிவு – திமுக ஆட்சியின் சமூக நீதி நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திமுக ஆட்சியமைந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 சதவிகிதம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, அப்பள்ளிகளுக்கு தேவையான குறைந்தபட்ச ஆசிரியர்களை கூட நியமிக்கத் தவறியதே மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் என்ற புகார் எழுந்திருக்கிறது.
தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என ஆதிதிராவிட பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்ட 6, 240 பணியிடங்களில் 1, 177 பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் பல பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆதிதிராவிட மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதிகளில் நவீன உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக திமுக அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் அப்பள்ளிகளில் இருந்து வேறுபள்ளிக்கு மாற வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தோற்றுவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு. அமுல் கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு. அமுல் கந்தசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் வால்பாறை தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@actorvijay @TVKVijayHQ -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று விழுந்து விபத்து – அரசுப்பேருந்துகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
மதுரை - குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஒடிக் கொண்டிருக்கும் போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @rashtrapatibhvn -
TTV Dhinakaran
@TTVDhinakaran
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் 389வது வாக்குறுதியாக இடம்பெற்றிருந்த காவலர்களுக்கு இருபது ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அனைத்து காவலர்களுக்கும் வாரவிடுப்பு, மாவட்ட அளவில் காவலர்கள் குறைதீர்க்கும் அமைப்பு என அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு, அறிவிக்காத வாக்குறுதியாக பதவி உயர்வை தடுத்திருப்பது காவலர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
ஏற்கனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு, காவலர்கள் பற்றாக்குறை, பணிச்சுமை அதிகரிப்பு, பெருகிவரும் குற்றச்சம்பவங்கள் ஆகியவற்றால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் காவலர்களுக்கு திமுக அரசு பிறப்பித்திருக்கும் இந்த புதிய அரசாணை கூடுதல் மன உளைச்சலை அளித்திருப்பதோடு, அவர்களின் பணித்திறனை மேலும் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, 2002 முதல் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக இருவர் கைது – தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பு உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக அக்கல்லூரியின் முதல்வர் உட்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தேசிய புலனாய்வு முகமையால் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதன் மூலம், அச்சம்பவத்தை சாதாரண விபத்து எனக்கூறி மூடி மறைக்க முயன்ற திமுக அரசின் உண்மையான முகம் அம்பலப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தின் போது நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய துயரம் இன்றும் நீங்காத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரின் புதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றிருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்குகிறதா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற நிலையில், காவல்துறையை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பதாக எண்ணத் தோன்றும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசு, தற்போது, தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க தவறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஆட்சி நிறைவடையும் தருவாயிலாவது விழிப்புடன் செயல்பட்டு தீவிரவாத செயல்கள் வேரூன்றாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் அலட்சியம் இனியும் தொடருமேயானால் 2001 ஆம் ஆண்டு மக்களே வெகுண்டெழுந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை மக்களே ஏற்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நான்கு நாட்களில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் – தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே போல, சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாமக்கல் அருகே மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசலுக்குள்ளான செய்தியில் தொடங்கி, அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசுப்பள்ளி வகுப்பறைகள், கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களில் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம் வரை தொடர்ந்து ஏற்படும் விபத்துகளும், விரிசல்களும் திமுகவின் திராவிட மாடல் அரசின் கட்டுமான லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
கட்டுமானப் பணிகளின் போது அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக எப்போது திறப்பு விழா நடத்தலாம் ? எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் ? என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அதோடு, கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கட்டடங்களும், பாலங்களும் விபத்துக்குள்ளாவதும், அதனை சீரமைக்கிறோம் எனும் பெயரில் மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவதன் மூலம் தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசுப்பள்ளி வகுப்பறைகள் தொடங்கி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை நடைபெறும் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசு கள்ளர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு – காலிப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன முறையை திமுக அரசு அமல்படுத்த வேண்டும்.
தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமலே இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மதுரை தும்மக்குண்டு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையிலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க முன்வராத திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வின் மூலமாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு அரசு கள்ளர் பள்ளிகளில் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக புகாரும் எழுந்திருக்கிறது.
கள்ளர் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்த நிர்பந்திப்பது அவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனும் பாதிக்கப்படுகிறது.
எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி கற்பிப்பதில் சுணக்கம் என பல்வேறு காரணங்களால் அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னையில் நான் முதல்வன் திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் – மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை கோட்டூர்புரத்தில் நான் முதல்வன் திட்ட பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவை உண்டு 10க்கும் அதிகமான பேராசிரியர்கள் மயக்கமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்த திமுக அரசு, அவர்களுக்கான உணவை கூட தரமான முறையில் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை படிப்படியாக இழக்கச் செய்திருக்கிறது.
இதற்கிடையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது பேராசிரியர்களுக்கான உணவையும் தரமற்ற முறையில் விநியோகித்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் தொடர் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஒற்றைச் சிறகு ஓவியா எனும் நாவலுக்காக 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும், கூத்தொன்று கூடிற்று எனும் சிறுகதைக்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறார் இலக்கிய படைப்புகளில் தனித்துவமிக்கவராக திகழும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் சிறுகதை எழுதுவதில் தனி பாணியை கடைபிடித்துவரும் திரு.லட்சுமிஹர் ஆகிய இருவரின் எழுத்துப் பயணமும் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திமுக அரசின் அலட்சியப் போக்கால் விவசாயத்தை விட்டு வெளியேறும் மா விவசாயிகள் – ஆந்திர மாநிலத்தை பின்பற்றி மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டு நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் காலம் காலமாக வளர்த்த மாமரங்களை வெட்டி அழிக்கும் சூழலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி விவசாயிகளும் தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
அதே போல, தமிழக மாங்காய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதால் அதிருப்தியடைந்த மா விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு பழச்சாறு தொழிற்சாலைகளை மட்டுமே நம்பி ஏராளமான விவசாயிகள் மா சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்திருக்கும் மாங்காய் உற்பத்தியை காரணம் காட்டி தமிழக மாம்பழங்களை வாங்க மறுத்திருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல், விளைச்சல் பாதிப்பு என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியிலும் மா விவசாயத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மீளவே முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.
மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பதோடு கூடுதலாக 4 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கும் நிலையில், தொடர் போராட்டத்திற்கு பின்பும் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசால் மா மரங்களை வெட்டி அழிக்க வேண்டிய சூழலுக்கும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கும் மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஆந்திர மாநில அரசைப் போலவே தமிழகத்திலும் மாம்பழங்களுக்கு மானியத்துடன் கூடிய உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, மா சாகுபடி அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் மாம்பழ கூழ் தொழிற்சாலையை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், பொதுவாழ்க்கையை புனிதமாக கருதி தன் வாழ்நாள் முழுவதும் எளிமைக்கும், நேர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவருமான தியாகி கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் நலனை மட்டுமே மையமாக வைத்து செயல்பட்ட அப்பழுக்கற்ற தியாகி கக்கன் அவர்களின் அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையை நோக்கி பாதயாத்திரை – அரசு மருத்துவமனைகளின் அவல நிலைக்கு திமுக அரசும் அதன் முதலமைச்சரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் திரு.விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வழங்கிய வாக்குறுதிகளை, முதலமைச்சரான பின்பு நிறைவேற்ற மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்துவித போராட்டங்களுக்கும் துளியளவும் செவிசாய்க்காத திமுக அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தும் சூழலுக்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு வி.கே.முத்துசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.வி.கே முத்துசாமி அவர்களை இழந்துவாடும் அவரது புதல்வரும் உச்ச நீதிமன்ற நீதியரசருமான மாண்புமிகு திரு எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு – விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பாக கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலத்தின் தேவனஹந்தி வரை நடைபெறும் IDPL (Irugur-Devangonthi Pipeline) எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, கொச்சி –கோவை – கரூர் வழித்தடத்தில் பதிக்கப்பட்ட பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு இதுவரை வழங்கப்படாத நிலையில், மேலும் ஒரு ராட்சத குழாயை விளைநிலங்களில் பதிக்க பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோலிய நிறுவனத்தின் ராட்சத குழாய்களை விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படாமல் சாலைகளின் ஓரமாக அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிராகரித்திருப்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணியை தொடங்கியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அத்திட்டத்தை விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதோடு , ஏற்கனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களுக்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சாவூர் அருகே முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – அடக்குமுறையையும், ஆணவப்போக்கையுமே கொள்கையாக கொண்டிருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளின் பெயரில் தனியார் ஆலை வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அது தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயிகளை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திக்க மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளும், தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 34-வது வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதும், கடந்த 2023 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்போது தஞ்சை வந்த முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு கிடப்பில் போடப்பட்டிருப்பதுமே, தற்போது முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்புக்கொடி ஏந்தி போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாய பெருமக்களின் நலன் காக்கவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வீரவசனம் பேசி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதன் மூலம் விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எனவே, கருப்புக் கொடி காட்ட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆலை நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு வழங்கத் வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியும், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவருமான நெல்லை திரு.சு. முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்த நெல்லை திரு.சு. முத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் நியமனங்களில் திமுக அரசு காட்டும் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை எதிர்கொண்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற நிலையில், காலிப்பணியிட அறிவிப்புக்கு ஏற்ப 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்திருப்பதோடு, அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கூட நிரப்ப மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நியமன போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை – திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்ட கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பது எப்போது?
பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான திரு.சக்கரவர்த்தி அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திரு.சக்கரவர்த்தி அவர்கள் கடந்த 11 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது.
அரசியல் கட்சியின் முக்கிய தலைவராகவும் பிரபல வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்த திரு.சக்கரவர்த்தி அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சதித்திட்டம் தீட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ராணிப்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக திமுகவின் கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதில் தொடங்கி திரு.சக்கரவர்த்தி அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது வரையிலான செய்திகளை பார்க்கும் போது தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் மேலோங்கியிருப்பதையே நம்மால் உணர முடிகிறது.
எனவே, பாமக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு கள்ளத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பதையும் விரிவாக விசாரித்து வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தன்னலமற்ற அன்பின் அடையாளமாக திகழும் அப்பாக்களை போற்றிக் கொண்டாடும் தந்தையர் தினம் இன்று.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதோடு, அளப்பரிய அன்பு மற்றும் கனிவான கண்டிப்போடு உணர்வுப்பூர்வமிக்க உறவாக திகழும் தந்தையர் ஒவ்வொருவரையும் இந்நாளில் போற்றிக் கொண்டாடிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருவாரூர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை – மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா திமுக அரசு?
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த சில தினங்களில் மட்டும் வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி, கன்னியாகுமரியில் டியூசன் சென்ற மாணவி, திருச்செந்தூரில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி என பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வெளியாகும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையான பின்பும், அக்குற்றங்கள் தொடந்து அதிகரித்து வருவது அச்சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் காவல்துறையால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
எனவே, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்நிலையத்திற்குள் புகுந்து தலைமைக் காவலர் மீது கொடூரத் தாக்குதல் – சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்து தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான சூழலை உறுதி செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பேணிக்காணிப்பதிலும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் திமுக அரசின் அவல நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் மீது அடுத்தடுத்து அரங்கேறும் தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியாததன் விளைவே தற்போது காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
குற்றச்சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தை அமைதிப்பூங்கா என புகழ்ந்ததற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொய் கூறியதற்கும், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
எனவே, காவல் நிலையத்திற்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கும் புதுப்புது கதைகளை தேடி நேரத்தை வீணடிக்காமல், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாட்டுப்புற பாடலுக்காகவும் தனது நடிப்பாற்றலுக்காகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
எண்ணூர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிப்பு – பொதுமக்களின் புகார் மீது விரிவான ஆய்வு நடத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.
சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்பட்ட தூசி மாதிரிகளில் யுரேனியம், காட்மியம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் அதிகளவு கலந்திருப்பதாக வெளியாகியிருக்கும் பகுப்பாய்வு குறித்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
குடியிருப்புகளுக்குள் காணப்படும் மாசுக்கள் தொடர்பாக மாசுக்கட்டு வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பொதுமக்களே மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எண்ணூர் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து கடந்த பல வாரங்களாக வெளியேறிக் கொண்டிருக்கும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் இருமல், கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு இதே எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவை விட மிகவும் ஆபத்து மிக்கதாக கருதப்படும் இந்த உலோக நச்சுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் கலந்திருக்கும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதோடு, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கோவையில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாயக்க மறுக்கும் திமுக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாணை 62ன் படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்ற வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உட்பட பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண நலத்துடன் விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி, மக்கள் அனைவராலும் குமரித்தந்தை என போற்றப்படும் மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இளம் வயதிலேயே போராடத் தொடங்கியதோடு, மக்கள் நலனில் அதிக ஆர்வம் கொண்டு ஆசிரியராக, வழக்கறிஞராக, அரசியல்வாதியாக மார்ஷல் நேசமணி அவர்கள் ஆற்றிய அரும்பெரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறி இழிவு படுத்துவதா? - தாய்மார்களை அவமதிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சமுதாயக் கூடத்தை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.மகாராஜன் அவர்கள், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, தாய்மார்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிர் மீதான அக்கட்சியினரின் எண்ணம் துளியளவும் குறையவில்லை என்பதையே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்களின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது.
மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மறைமுகமாக பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதையும், பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுகவினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்துவதையும், அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுகவிற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி படுகொலை – மேற்கு மண்டலத்தை கொலைக்களமாக மாற்றி வரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளக்கோவில் சேனாதிபாளையம் அருகே ஆடு மேயக்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மேற்கு மாவட்டங்களில் தோட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்கவோ, குற்றச்சம்பவங்களை குறைக்கவோ துளியளவும் கவனம் செலுத்தாத திமுக அரசால் தமிழகத்தில் வசிக்கும் முதியவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கை விரிவாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சிவகங்கை மாவட்டம் பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னரும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போரில் முன்வரிசையில் நின்ற துணிச்சல்மிக்க மாவீரருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த தினம் இன்று.
மாமன்னர்கள் மருது சகோதரர்களின் போர்ப்படை தளபதியாகவும், நாட்டு மக்களை காக்கும் அரணாகவும் திகழ்ந்து அனைவராலும் தென்பாண்டிச் சிங்கம் என போற்றப்பட்ட மன்னர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாமக்கல் அருகே தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அடித்துக் கொலை - காவல்துறையை செயலற்ற நிலையில் வைத்திருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த குளத்துப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் என மேற்கு மாவட்டங்களில் தோட்டத்து இல்லங்களில் வசிக்கும் வயதான முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதும், அவரவர் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் திருட்டு போவதும் தொடர்கதையாகி வருவது காவல்துறையின் செயலற்ற திறனையும், அலட்சியப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.
திருப்பூர் மற்றும் ஈரோடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கைதானவர்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளை தாங்களே அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்?, விசாரணை அதிகாரி திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கே இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் நாமக்கல் அருகே அரங்கேறியிருக்கும் சம்பவம், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் தானா? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் இச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, மூதாட்டி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு இதுபோன்ற திட்டமிட்ட குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
சென்னை தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை – பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறதா தமிழகம்?
சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசால், அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவிற்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தின் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலாளியே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது, அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனையை கடுமையாக்கி சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது திமுக அரசின் மீதும் அதன் காவல்துறை மீதும் குற்றவாளிகளுக்கு சிறிதளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, அரசு சேவை இல்லத்தில் மாணவியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க உள்ளூர் மக்களுக்கு கட்டணம் விதிப்பதா ? உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரான செயலை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த தரிசன வழியை மூடிவிட்டு கட்டணம் வசூலிக்கும் வழியில் செல்ல கோயில் நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
காலம் காலமாக பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன பாதையை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என அறிவுறுத்தியிருப்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரான செயலாகும்.
மேலும், பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்திருப்பதால் வரும் 17 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு உள்ளூர் பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, உலகளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்றி, அவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சிறப்பு தரிசன பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தைவான் நாட்டில் நடைபெற்றுவரும் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை செல்வி.வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வாரம் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது தைவான் தடகளப் போட்டியில் தங்கம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை தேடி தந்திருக்கும் செல்வி.வித்யா ராம்ராஜ் அவர்களின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திரு.ரத்தினம்பிள்ளை அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அனைவராலும் போற்றப்பட்ட திரு.ரத்தினம்பிள்ளை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தியாகத்தை போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்க்கையின் உண்மையான நெறி என்பதை உலகிற்கு பறைசாற்றும் இந்நாளில் ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், தவறிழைப்போரை மன்னித்தல், பகமையை நீக்குதல், தானம் தர்மம் செய்தல் போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை பின்பற்றி, ஒற்றுமையோடும், சகோதரத்துவத்தோடும் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் இப்புனித திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரி அவர்களின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் அச்சத்துடன் பணியாற்றுவதாக பெண் ஊழியர்கள் புகார் – புகாரை விசாரிக்க வேண்டிய விசாரணைக் குழுவே அப்புகாரை வெளியில் கசிய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சக உயர் அதிகாரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
போக்குவரத்துக் கழகத்தில் தனக்கு தொந்தரவு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணியிடமாற்றம் செய்திருப்பதோடு, அவருக்கான வருகைப்பதிவையும் பதிவு செய்யாமல் அலைக்கழித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதே போல, பெண்கள் அளிக்கும் புகாரை ரகசியமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விசாரணைக் குழுவே, அப்புகாரை பொதுவெளியில் வெளியிட்டிருப்பதாகவும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருவதாகவும் பெண் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகள் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலேயே பெண் ஒருவர் பாதிக்கப்படும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் தொந்தரவு இருப்பதாக பெண்கள் அளித்திருக்கும் புகாரை விரிவாக விசாரணை செய்வதோடு, புகாரின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் ஒருசேர முன்னிறுத்தி தேசிய ஒருமைப்பாட்டையும், இந்திய துணைக்கண்டத்தின் இறையாண்மையையும் பாதுகாக்க பாடுபட்ட கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களின் பிறந்த தினம் இன்று.
இஸ்லாமிய சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராகவும், தமிழர் சமுதாயத்தின் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்ந்து வரலாறு படைத்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை போற்றி வணங்கிடுவோம். -
TTV Dhinakaran
@TTVDhinakaran
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெஞ்சுரத்தோடு எதையும் எதிர்கொள்ளும் திறன் படைத்த அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்கள் பூரண உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @annamalai_k @BJP4TamilNadu @BJP4India -
TTV Dhinakaran
@TTVDhinakaran
ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் – உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விளம்பரம் செய்வதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தை பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலை குறைப்பதில் செலுத்த வேண்டும்.
மே மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள்ளாகவே கடந்த நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இன்று ஊதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என மாநிலத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் தாயாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதும், மாநில அரசு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதாலும் அங்கு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்திறனும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பின்பு மே மாதத்திற்கான ஊதியம் வழங்குவதாக அரசு உறுதியளித்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தொடர் போராட்டம் நடத்திதான் பெற வேண்டுமா ? என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் அலுவலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட நிதிச் சிக்கலில் தவிக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவைப்படக்கூடிய நிதியை உடனடியாக விடுவித்து அப்பல்கலைக்கழகங்கள் எவ்வித சிக்கலுமின்றி தொடர்ந்து இயங்கிடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu -
TTV Dhinakaran
@TTVDhinakaran
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 24 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
4*400 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை செல்வி சுபா வெங்கடேசன் அவர்கள், 4*100 தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற செல்வி. அபிநயா நடராஜன் அவர்கள், கால் வீக்கத்தையும் பொருட்படுத்தாமல் 400 மீட்டர் தடை தாண்டுதலில் பங்கேற்று வெண்கலம் வென்ற செல்வி. வித்யா ராமராஜ் அவர்கள் உட்பட, பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.


























































































































































































































































































































































































































































































